Wednesday, February 25, 2009

நபிமொழி

உக்பா இப்னு ஆமிர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''ஒரு மூஃமின், மற்றொரு மூஃமினுக்கு சகோதரர் ஆவார். ஒரு மூஃமினுக்கு, தன் சகோதரனின் வியாபாரத்தில் தலையிட்டு வியாபாரம் செய்திடவோ, தன் சகோதரன் பேசிய பெண்ணைப் பேசிடவோ அந்த சகோதரன் விட்டுத்தரும் வரை கூடாது'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''நிச்சயமாக அல்லாஹ் மூன்று காரியங்களை உங்களிடம் விரும்புகிறான். மூன்று காரியங்களை உங்களிடம் வெறுக்கிறான். அவனை நீங்கள் வணங்குவதையும், எதையும் அவனுக்கு நீங்கள் இணை வைக்காமல் இருப்பதையும், அல்லாஹ்வின் கயிற்றை நீங்கள் அனைவரும் சேர்ந்து பற்றிக் கொண்டு, நீங்கள் பிரிந்து விடாமல் இருப்பதையும் உங்களிடம் விரும்புகிறான். இவரால் கூறப்பட்டது, இவர் கூறினார் என்பதையும், அதிகக் கேள்வி கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் உங்களிடம் வெறுக்கிறான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''ஒருவர் தன் சகோதரரை ஆயுதம் மூலம் (மிரட்டிக்) காட்ட வேண்டாம். ஏன் எனில், ஷைத்தான் அவரின் கையை விட்டு நழுவி (வெட்டி) விடக் கூடும். இதனால் நரகின் படுகுழியில் அவர் விழ நேரிடும் என்பதை அவர் அறிய மாட்டார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''நபி(ஸல்) அவர்கள் நறுமணப் பொருட்களை பெற்றுக் கொள்ள மறுக்கமாட்டார்கள்". (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''ஒரு மனிதர், இன்னொரு மனிதரை புகழ்வதையும், புகழ்வதில் அவர் வரம்பு மீறுவதையும் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ''(அவரை) நீங்கள் அழித்து விட்டீர்கள் அல்லது அந்த மனிதரின் முதுகை ஒடித்து விட்டீர்கள்'' என்று கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபூபக்கர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''நபி(ஸல்) அவர்கள் முன் ஒரு மனிதர் பற்றி கூறப்பட்டது. அப்போது அவரை ஒருவர் புகழ்ந்து கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் உமக்கு கேடு உண்டாகட்டும்! உம் நண்பரின் கழுத்தை ஒடித்து விட்டீரே! என்று பலமுறை கூறிவிட்டு ஒருவர் ஒருவரைப் புகழத்தான் வேண்டும் என்றிருந்தால், ''இவ்வாறு, இவ்வாறு அவரை நான் கருதுகிறேன்'' என்று கூறட்டும். அவர் அவ்விதம் இருப்பதாகக் கருதினால், அவரை அல்லாஹ் கேள்வி கேட்பான். அல்லாஹ்விடம் எவரையும் தூய்மைப்படுத்திப் பேச வேண்டிய அவசியம் இல்லலை. (அவர் பற்றி அல்லாஹ் அறிவான்) என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
ஹம்மாம் இப்னு ஹாரிஸ் அறிவிக்கின்றார்கள்: ஒரு மனிதர், உஸ்மான் (ரலி) அவர்களைப் புகழ ஆரம்பித்தார். அப்போது மிக்தாத்(ரலி) அவர்கள் முழங்காலிட்டு அமர்ந்து, பொடிக்கற்களை (எடுத்து) அவரின் முகத்தில் வீசிட ஆரம்பித்தார்கள். என்ன காரியம் செய்கிறாய், என்று உஸ்மான் (ரலி) கேட்டார்கள். அப்போது மிக்தாத் (ரலி) அவர்கள் புகழ்பவர்களை நீங்கள் கண்டால் அவர்களின் முகங்களில் மண்ணை வீசுங்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள் என்று கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
Thanks: TAFAREG

எது இனிது?


மனிதன் தன் வாழ்நாளில் எது இனிது எது இனிது என்று தேடியே காலத்தை கடத்தி விடுகிறான்.

கவிஞர் மஞ்சை மயிலன், வாழ்க்கையில் இனியது எது என்று, இனிதாக உரைத்துள்ளார்.

எது இனிது?

ஆக்கிவைத்த உணவின்
அறு சுவையா இனிது?
தேக்கிவைத்த அன்பின்
திருவினையே இனிது!

படைத்துவைத்த காவியத்தை
படித்தலா இனிது?
படித்தவற்றை வாழ்வில்
கடைபிடித்தலே இனிது!

வடித்துவைத்த ஓவியத்தை
இரசித்தலா இனிது?
வடித்தவனின் கருத்தென்ன - அதைப்
பகுத்தறிதலே இனிது!

வாழ்ந்து மறைந்தவரை நாளும்
வாழ்த்தலா இனிது?
வாழ்ந்தவரைப் போல் நாமும்
வாழ்ந்து காட்டல் இனிது!

சொத்தைச் சேர்த்து வைத்துச்
சுவைத்தலா இனிது?
கொஞ்சமேனும் பிறருக்காகக்
கொடுத்து வாழ்தல் இனிது!

மது மங்கை இவை தரும்
மயக்கமா இனிது?
மனைவி மக்கள் மகிழ வீட்டில்
வாழும் வாழ்க்கையே இனிது!

கேட்டவுடன் பொருளையள்ளிக்
கொடுத்தலா இனிது?
கேட்கும் பாத்திரத்தின்
தன்மையறிதலே இனிது!

துயிலெனப் படுக்கையை
விரித்தலா இனிது?
விரித்த படுக்கையில் உடனே
விழி மூடிப் போதல் இனிது!

எல்லாம் அவன் செயல் - என
சொல்லலா இனிது?
ஏனிந்தக் கோலம் - என
எண்ணும் செயலே இனிது!

எண்ணம் சொன்ன செய்திகளை
ஏட்டில் எழுதலா இனிது?
அதை எடுத்துப் படிப்பவர் மனத்திரையில்
இடம்பிடித்தலே இனிது!

-நன்றி: திரு. பொ. ஆனந்த் பிர‌சாத்

Tuesday, February 24, 2009

வீட்டில் நுழையும் போது ஓதும் துஆ

اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلَجِ وَخَيْرَ الْمَخْرَجِ ، بِسْمِ اللهِ وَلَجْنَا ، وَبِسْمِ اللهِ خَرَجْناَ ، وَعَلىَ رَبِّناَ تَوَكَّلْناَ،
(அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக கைரல் மௌலஜி, வகைரல் மஃக்ரஜி, பிஸ்மில்லாஹி வலஜ்னா, வபிஸ்மில்லாஹி ஃகரஜ்னா, வஅலா ரப்பினா தவக்கல்னா.)
பொருள்: இறைவா! (இந்த வீட்டில்) நுழைவதின் நன்மையையும் புறப்படுவதின் நன்மையையும் உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வின் பெயரால் நுழைந்தோம். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே புறப்படுவோம். நம்முடைய இரட்சகனின் மீது (நம்முடைய காரியங்களை முழுமையாக ஒப்படைத்து) நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம். (நூல்: அபூதாவூத்).

நபிமொழி

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''(வாரம் முழுதும் உள்ள) இரவுகளில் ஜும்ஆ இரவை மட்டும் வணங்கிடத் தோந்தெடுக்காதீர்கள். மேலும் மற்ற நாட்கள் இருக்க வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு வைக்கத் தேர்ந்தெடுக்காதீர்கள். ஆனால், உங்களில் ஒருவர் தொடர்ந்து நோன்பு வைத்திருக்கும் போது அந்த நாள் வந்தால் குற்றமில்லை'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்).
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''ஒருவர் ஜும்ஆ நாளில் மட்டும் நோன்பு வைக்க வேண்டாம். ஆனால் அதற்கு முன் அல்லது அதற்கு பின் ஒரு நாள் (நோன்பு வைத்தாலே) தவிர'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்).
ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''கப்ரு பூசப்படுவதையும், அதன் மீது உட்காருவதற்கும், அதில் கட்டிடம் கட்டுவதற்கும் நபி (ஸல்) தடை செய்தார்கள்". (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்).
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''சாபத்தைத் தரும் இரண்டு காரியங்களைப் பயப்படுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ''சாபத்தை ஏற்படுத்தும் அந்த இரண்டு எது?'' என்று மக்கள் கேட்டனர். ''மக்கள் நடக்கும் பாதையில் மல – ஜலம் கழித்தல் மற்றும் மக்களுக்கு நிழல் தரும் மரத்தின் கீழ் மல – ஜலம் கழித்தல்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''தேங்கிக் கிடக்கும் தண்ணீர் (குளத்தில்) சிறுநீர் கழிக்கப்படுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்).

செல்வமும் வறுமையும்

إِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَّهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا ، وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا

'அவர்களில் அழகிய நல்லறம் செய்பவர் யார் எனச் சோதிப்பதற்காக இந்தப் பூமியின் மேல் உள்ளவைகளை அதற்கு அலங்காரமாக நிச்சயமாக நாம் ஆக்கியுள்ளோம். மேலும் அதன் மேல் உள்ளதை வறண்ட மண்ணாகவும் நாம் ஆக்கக் கூடியவர்களே!'. (அல்குர்ஆன் 18:07,08)
கடவுளை எல்லா மதத்தவர்களும் நம்புகின்றனர். ஆனால் மற்ற எந்தச் சமயத்தவர்களையும் விட முஸ்லிம்களின் கடவுள் நம்பிக்கை வலிமை மிக்கதாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது. பக்திமான்களாக இருந்தவர்கள் கூட தங்கள் வாழ்க்கையில் துன்பங்களைச் சந்திக்கும் போது நாத்திகர்களாகி விடுவதை மற்ற மதத்தவர்களிடம் சர்வ சாதாரணமாகக் காண்கிறோம். கடவுள் என இவர்கள் நம்புகின்ற கற்சிலைகளுக்கு முன்னால் நின்று கொண்டு அதைத் திட்டுகின்ற காட்சியையும் மண்ணை வாரி தூற்றுகின்ற காட்சியையும் பிற மதத்தவர்களிடம் சர்வ சாதாரணமாக காண் முடிகின்றது. 'கடவுளே! உனக்கு கண் இருக்கிறதா?' என்றெல்லாம் துன்பம் வரும் வேளையில் புலம்புகின்றவர்களையும் நாம் பார்க்கிறோம். கடவுளை நம்புகின்ற மற்ற மதத்தவர்களிடம் காணப்படும் இந்தக் கோளாறு முஸ்லிம்களிடம் காணப்படுவதில்லையே அது ஏன்? மற்ற மதத்தினர் தவறான அடிப்படையின் மீது தங்கள் நம்பிக்கை எனும் மாளிகைகளை எழுப்பிக் கொண்டது தான் இதற்குக் காரணம்.
இவ்வுலகில் வாழ்கின்ற மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியான செல்வச் செழிப்புடனும் வசதி வாய்ப்புகளுடனும் இருப்பதில்லை. சிலர் அதிகமான வசதிகளையும் பதவிகளையும் பெற்றுள்ளனர். பலர் இத்தகைய வாய்ப்பைப் பெற்றிருக்க வில்லை. இதற்குக் காரணம் என்ன என்பதை விளக்கும் போது மற்ற மதங்கள் செய்கின்ற தவறுகள் தான் அடிப்படைக் கோளாறு எனலாம். நீ கடவுள் மீது பக்தியுடன் இருந்தால் உனக்கு எண்ணற்ற வசதிகள் கிடைக்கும் என்று ஏழைகளிடம் அம்மதங்கள் பேசுகின்றன. சென்ற பிறவியில் நல்ல பக்திமானாக இல்லாததே நீ இப்போது ஏழையாக இருப்பதற்குக் காரணம் என்று அவனுக்கு அறிவுரை கூறுகின்றன. இது போல் வசதி வாய்ப்புகளுடன் உள்ளவனை நோக்கி, கடவுள் உன் மீது அன்பாய் இருக்கிறார். நீ நல்லவனாக இருப்பதால் தான் இந்த நிலையை அடைந்திருக்கிறாய் என்றும் சென்ற பிறவியில் நீ நல்லவனாக இருந்ததால் தான் இந்த உயர்ந்த நிலை கிடைத்தது என்றும் பேசுகின்றன. செழிப்பாய் இருந்தவனுக்கு ஒரு நட்டம் ஏற்பட்டால் இவன் என்னவோ செய்திருப்பான் என்று கூறுவதும் இதனால் இப்படி ஏற்பட்டது என்று பேசுவதும் இந்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான். கீழ் நிலையில் இருந்த ஒருவனுக்கு நல்ல நிலை ஏற்பட்டால் அவன் கொடுத்து வைத்திருக்கிறான். இவன் புண்ணியம் செய்திருப்பான் என்று காரணம் கூறுவதற்கும் இந்த நம்பிக்கை தான் காரணம்.
இந்த நம்பிக்கை ஆழமாக பதிந்த பிறகு ஒரு கேடுகெட்டவன் உயர்ந்த நிலையை அடைவதைப் பார்க்கும் போதும் ஒரு நல்லவன் சொல்லொனாத் துன்பத்தை அடையும் போதும் கடவுள் நம்பிக்கையே அவன் உள்ளத்திலிருந்து விலகி விடுகிறது. மதத்தை வளர்ப்பதற்காக பொய்யான காரணங்களைக் கூறி நம்மை ஏமாற்றி விட்டனர் என்று அவனுக்குக் கோபம் ஏற்படுகின்றது. இதனால் தான் கடவுள் (?) மீதே மண்ணை வாரித் தூற்ற முடிகின்றது. ஆனால் இஸ்லாம் பொய்யான காரணங்களைக் கூறி மக்களை ஏமாற்றவில்லை. பொய்யான வாக்குறுதிகள் எதனையும் அளிக்கவில்லை. எது உண்மையோ அதை மட்டுமே கூறுகின்றது.
இவ்வுலகில் உள்ள ஏழைகள் பலரை நாம் பார்க்கிறோம். அவர்கள் அனைவரும் கெட்டவர்களாக இருப்பதில்லை. அது போல் அனைவரும் நல்லவர்களாகவும் இருப்பதில்லை. அவர்களின் ஏழ்மை நிலைக்கும் அவர்களது பாவ புண்ணியத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பது கண்கூடாகத் தெரிகின்ற உண்மை. அது போல் செல்வந்தர்களிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே உள்ளனர். இவர்களின் செல்வ நிலைக்கும் பாவ புண்ணியத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லாமலிருப்பதைக் காண்கிறோம். இந்த நிதர்சனமான உண்மையை அப்படியே கூறுகின்ற ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே! இவ்வுலகில் நல்ல வசதி வாய்ப்புகளுடன் இருப்பதற்கும் நல்லவர்களாக இருப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த வசதிகளைப் பெற்ற பிறகும் நீங்கள் நல்லவர்களாக வாழ்கிறீர்களா என்று சோதித்துப் பார்க்கவே இவை வழங்கப்பட்டுள்ளன. வசதிகள் வந்த பின் அதன் காரணமாக ஆணவம் பிடித்து அலைந்தால் நீ கெட்டவனாவாய்! அதை மற்றவருக்கு வாரி வழங்கி நற்செயல்களில் உன்னை ஈடுபடுத்திக் கொண்டால் நல்லவனாவாய் என்று இஸ்லாம் கூறுகின்றது. அது போல் நீ வசதி வாய்ப்புகளைப் பெறவில்லை என்பதால் நீ கெட்டவன் இல்லை. இந்த வறுமையின் காரணமாக நீ தடம் மாறுகிறாயா அல்லது தடம் புரளாமல் உறுதியாக நிற்கிறாயா? என்று சோதித்துப் பார்க்கவே இந்த நிலை என்று இஸ்லாம் கூறுகின்றது.
செழிப்பு வறட்சி இரண்டுமே இரண்டு வகையான பரீட்சைகள் என்று இஸ்லாம் கூறுகின்ற காரணத்தினால் தான் முஸ்லிம்கள் எத்தகைய துன்பத்தை அடைய நேர்ந்தாலும் அவர்கள் அதைப் பொறுத்துக் கொள்கின்றனர். கடவுளே உனக்கு கண்ணில்லையா என்று கேட்பதில்லை. இரண்டு நிலையில் எது ஏற்பட்டாலும் இரண்டும் சோதனைதானே தவிர நம்மை நல்லவன் கெட்டவன் என்று வழங்கப்படும் தீர்ப்பு அல்ல. இனிமேல்தான் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. அங்கே நல்ல தீர்ப்பு பெறுவதற்காக வறட்சியிலும் செழிப்பிலும் நிலை குலையாமல் இருக்க வேண்டும் என்று உறுதியான அடிப்படையின் மீது முஸ்லிம்களின் நம்பிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
அல் கஹ்ஃப் அத்தியாயத்தின் ஏழாவது வசனமும் அந்த அடிப்படையைத் தான் சொல்லித் தருகின்றது. இப்பூமியில் உள்ள செழிப்புகள் யாவும் நீங்கள் நல்லவர்களாக நடக்கிறீர்களா என்று சோதித்துப் பார்ப்பதற்குத் தான் என்று கூறி முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பலமான அஸ்திவாரத்தின் மீது எழுப்புகின்றது.
பின்வரும் வசனங்களும் இந்த வசனத்தின் விளக்கவுரைகளாகத் திகழ்கின்றன.
'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பாலும் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (பொறுமையுடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது 'நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள்' ( அல்குர்ஆன் 2:155,156)
'(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும் உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப் படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும் இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடித் தரும்) தீர்மானத்திற்குரிய செயலாகும்'. ( அல்குர்ஆன் 3 : 186)
'ஒவ்வொர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும் நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர் நம்மிடமே நீங்கள் மீட்கப் படுவீர்கள்'. ( அல்குர்ஆன் 21:35)
'இன்னும்; மனிதர்களில் (ஓர் உறுதியுடன் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான். அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கின்றான். ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின் அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கின்றான். இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான். இது தான் தெளிவான நஷ்டமாகும்'. ( அல்குர்ஆன் 22:11)
'இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன் 'என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தியுள்ளான்' என்று கூறுகின்றான். எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து அவனை (இறைவன்) சோதித்தாலோ அவன், 'என் இறைவன் என்னைச் சிறுமைப்படுத்தி விட்டான்' என்று கூறுகின்றான்'. (அல்குர்ஆன் 89:15,16)
எனவே செல்வமும் வறுமையும் சோதனைக்குத் தான் என்பதை உணர்ந்து சோதனையில் தேறிட வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
Thanks: ADIRAI THAMEEM /TAFAREG

Sunday, February 22, 2009

இன்று வரை உலகம் கண்டிராத மாமனிதர்

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) கூறுகிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தோம். எனது ஒட்டகம் சண்டித்தனம் செய்து (மற்றவர்களை விட) என்னைப் பின் தள்ளியது. அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து 'ஜாபிரா' என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். '(பின் தங்கி வருவதற்கு) என்ன காரணம்?' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டனர். என் ஒட்டகம் சண்டித்தனம் செய்து என்னைப் பின் தள்ளி விட்டது. அதனால் பின் தங்கி விட்டேன் என்று நான் கூறினேன். உடனே நபி (ஸல்) அவர்கள் (தம் ஒட்டகத்திலிருந்து) இறங்கினார்கள். தமது வளைந்த குச்சியால் என் ஒட்டகத்தைக் குத்தி விட்டு 'ஏறுவீராக' என்றனர். நான் ஏறிக் கொண்டேன். நபி (ஸல்) அவர்களை விட முந்தி விடாதவாறு அதை இழுத்துப் பிடிக்க ஆரம்பித்தேன்.
'மணமுடித்து விட்டீரா?' என்று கேட்டனர். நான் 'ஆம்' என்றேன். 'கன்னியா? விதவையா?' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டனர். விதவையைத்தான் என்று நான் கூறினேன். 'கன்னியை மணந்திருக்கக் கூடாதா? நீர் அவளுடனும் அவள் உம்முடனும் இன்பமாக இருக்கலாமே' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். எனக்குச் (சிறிய வயதுடைய) சகோதரிகள் உள்ளனர். அவர்களைப் பராமரித்துத் தலைவாரி, நிர்வகிக்கும் ஒரு பெண்ணை மணக்க விரும்பினேன் எனக் கூறினேன். 'நீர் இப்போது ஊர் திரும்பப் போகிறீர்! ஊர் சென்றால் ஒரே இன்பம் தான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, 'உமது ஒட்டகத்தை எனக்கு விற்கிறீரா?' என்று கேட்டார்கள். நான் சரி எனக் கூறியதும் என்னிடமிருந்து ஒரு ஊகியா (தங்க நாணயத்தில் சிறிதள)வுக்கு விலைக்கு வாங்கிக் கொண்டனர். பின்னர் எனக்கு முன் அவர்கள் சென்று விட்டனர்.
நான் காலை நேரத்தில் (மதீனாவை) அடைந்தேன். நாங்கள் பள்ளிக்கு வந்ததும் பள்ளியில் வாசலில் நின்று கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் 'இப்போது தான் வருகிறீரா' என்று கேட்டனர். ஆம் என்றேன். 'உமது ஒட்டகத்தை விட்டுவிட்டுப் பள்ளிக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவீராக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் உள்ளே சென்று தொழுதேன். எனக்குறிய ஊகியாவை எடைபோட்டுத் தருமாறு பிலாலிடம் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். பிலால் எனக்கு எடை போட்டுத் தந்ததுடன் சற்று அதிகமாக தந்தார். நான் திரும்பிய போது 'ஜாபிரைக் கூப்பிடுங்கள்' என்றனர். அதற்குள் என் ஒட்டகத்தைத் திருப்பித் தரப் போகிறார்களோ! என்று நினைத்தேன். அவ்வாறு அவர்கள் திருப்பித் தந்தால் அதைவிட எனக்குப் பிடிக்காதது வேறெதுவும் இராது. அப்போது நபி (ஸல்) அவர்கள் 'உமது ஒட்டகத்தைப் பிடித்துக் கொள்வீராக! இதன் விலையும் உமக்குரியதே என்றார்கள்'.
விளக்கம்: நபி (ஸல்) அவர்கள் மதீனா சென்று ஆட்சித் தலைவரான பின் இந்த நிகழ்ச்சி நடந்திருக்கின்றது. 'போரிலிருந்து திரும்பி வரும்போது' என்ற வாசகத்திலிருந்து இதை நாம் விளங்க முடியும்.போர் செய்து விட்டு நபித்தோழர்கள் திரும்பி வரும்போது அனைவரையும் விடக் கடைசியாக ஜாபிர் வருகிறார். அவருக்கும் பின்னால் நபி (ஸல்) அவர்கள் வருகின்றனர். அதனால் கடைசியாகப் பின் தங்கி வந்த ஜாபிரை அவர்களால் சந்திக்க முடிந்தது.உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் மன்னர்கள் - போரில் வெற்றி பெற்ற மன்னர்கள் - களத்திலிருந்து எப்படித் திரும்பினார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். யானை மேல் ஆரோகணித்து, படைவீரர்கள் பராக் கூற, வழியெங்கும் அட்டகாசங்கள் செய்து ஆணவத்துடனும் திமிருடனும் செருக்குடனும் திரும்பியதை அறிந்திருக்கிறோம்.
ஆட்சித்தலைவரான நபி (ஸல்) அவர்கள் - படை நடத்திச் சென்று வெற்றி வீரராகத் திரும்பிய நபி (ஸல்) அவர்கள் - அனைவரையும் அனுப்பி விட்டுத் தன்னந்தனியாக அனைவரையும் கண்காணித்துக் கொண்டு கடைசியாக வருகிறார்கள்.
ஆட்சித்தலைவர் என்ற மமதையில்லை! போரில் வென்று விட்டோம் என்ற செருக்கு இல்லை! மதத்தலைவர் என்ற ஆணவம் இல்லை! எதிரிகள் பின்தொடர்ந்து வந்து தாக்கி விடுவார்களோ என்ற அச்சம் இல்லை!கருப்புப் பூனைகளின் பாதுகாப்புடன் - சிறுநீர் கழிக்கக்கூட பாதுகாவலர்கள் துணையுடன் - உலாவரும் வீரர்களையும் வீராங்கணைகளையும் பார்த்துப் பழகியவர்கள் இந்த அற்புத வரலாற்றை அறிந்து கொள்ளட்டும்.
உலகவரலாற்றில் இப்படி ஒரே ஒரு தலைவர், இவர் ஒருவர் மட்டுமே இருக்க முடியும் என்று கூறத்தக்க அளவில் அந்த மாமனிதரின் அற்புத வாழ்க்கை அமைந்திருந்தது.
நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்து ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்தில் ஆயிரக்கணக்கான தோழர்களைப் பெற்றார்கள். உலகில் ஆயிரக்கணக்கான தொண்டர்களைப் பெற்றவர்கள் தமக்கு மிகவும் நெருக்கமானவர்களை மட்டுமே பெயர் கூறி அழைக்கும் அளவுக்கு அறிந்திருப்பார்கள். சாதாரணமானவர்களை அறிந்திருக்க மாட்டார்கள். அறிந்திருந்தாலும் அதைக் காட்டி கொள்வது தம் கௌரவத்துக்கு இழுக்கு என்று நடந்து கொள்வார்கள். பல்லாயிரக்கணக்கான தோழர்களைப் பெற்றிருந்த நபி (ஸல்) அவர்கள் ஒரு சாதாரண நபித்தோழரைப் பெயர் கூறி அழைக்கும் அளவுக்கு அறிந்து வைத்திருந்ததால் - அவருடனும் நெருக்கமாகப் பழகியதால் ஜாபிரா? என்று கேட்கிறார்கள். இந்த ஜாபிர் நபி (ஸல்) அவர்களின் சமவயதினரோ, நீண்ட காலம் அவர்களுடன் பழகியவரோ அல்லர். உமக்குத் திருமணமாகி விட்டதா என்று அவரிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டதிலிருந்து திருமணம் செய்யக்கூடிய இளவயதுப் பருவத்தில் அவர் இருந்திருக்கிறார். அந்தச் சமயத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு ஐம்பது வயதுக்கு மேல். ஐம்பது வயதைக் கடந்த நபி (ஸல்) அவர்கள் சுமார் இருபது வயதுடையவரைப் பெயர் சொல்லி அழைத்தது மக்களுடன் அவர்கள் எந்த அளவுக்கு நெருக்கமாக இருந்தனர் என்பதற்குச் சான்று.மந்திரிகள்கூட சந்திக்க முடியாத தலைவர்களைப் பார்த்துப் பழகிய மக்கள் இந்த அற்புத வரலாற்றை அறிந்து கொள்ளட்டும்!பதவியும் அந்தஸ்தும் வந்த பின், நன்கு பழகியவர்களையே யாரெனக் கேட்கும் தலைவர்களைப் பார்த்திருக்கிறோம். அவர்களைச் சந்திக்க நேர்ந்தால் கண்டும் காணாதது போல் நடக்கும் தலைவர்களைப் பார்த்திருக்கிறோம்.
தம்மைவிட வயதில் குறைந்த நெடுநாள் பழக்கமில்லாத ஒரு தொண்டரைக் கண்டு அக்கறையுடன் அவரை விசாரித்து, அவருக்காகத் தமது ஒட்டகத்திலிருந்து இறங்கி, சண்டித்தனம் செய்த அவரது ஒட்டகத்தை எழுப்பி, அவரை ஒட்டகத்தில் ஏற்றிவிட்டு .. இப்படி ஒரு தலைவரை உலகம் இன்றுவரை கண்டதில்லை, இனியும் காணப்போவதில்லை.உமக்குத் திருமணம் ஆகிவிட்டதா? கன்னியை மணந்தீரா? விதவையையா? இளைஞரான நீர் கன்னிப் பெண்ணை மணந்திருக்கலாமே என்றெல்லாம் அக்கறையுடன் நபி (ஸல்) அவர்கள் விசாரித்ததையும் ஊர் சென்றால் ஜாலிதான் என்று அவர்கள் கூறியதையும் சிந்தித்தால் நபி (ஸல்) அவர்கள் தமக்கென எந்த ஒரு தனிப்பட்ட மதிப்பையும் விரும்பவில்லை, ஆட்சியாளர் என்ற முறையிலும் தனிமரியாதையைத் தேடவில்லை, மதத்தலைவர் என்ற முறையிலும் தனி மதிப்பை நாடவில்லை என்பதை ஐயமற அறிந்து கொள்ளலாம்.
சண்டித்தனம் செய்த ஒட்டகத்தை விலை பேசி வாங்கியதும் வாங்கிய பின் விற்றவரை அதில் ஏறிவர அனுமதித்ததும் முடிவில் அவரிடமே ஒட்டகத்தை இலவசமாக வழங்கியதும் அவர்களின் வள்ளல் தன்மைக்குச் சான்று.இறைவனின் தூதராக மட்டுமே தம்மை அவர்கள் கருதியதால் - தாம் உட்பட அனைவரும் இறைவனின் அடிமைகள் தாம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை அவர்களுக்கு இருந்ததால் - எந்த அல்லாஹ்வைப் பற்றி மக்களுக்கு அவர்கள் போதித்தார்களோ அந்த இறைவனை அதிகமதிகம் அஞ்சிய காரணத்தால் தான் அவர்களால் இப்படி நடந்து கொள்ள முடிந்தது.
(நூல்: புஹாரி, அத்தியாயம்: வியாபாரம், பாடம்: வாகனங்களை வாங்குதல்).

Thank: ADIRAI THAMEEM /[TAFAREG]

Saturday, February 21, 2009

உண்மையான தேசத் தலைவர்!

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது குடிமக்கள் நிலையை அறிவதற்காக நகர்வலம் செல்லும் வழக்கம் உடையவர்கள். அப்போது மதினா நகரெங்கும் பஞ்சம் நிலவி வந்தது. நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட அனனவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதில் உமர் (ரலி) அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள்.
ஒருநாள் இரவு நேரத்தில் கலிஃபா அவர்கள் தமது உதவியாளர் அஸ்லம் என்பாருடன் மதினாவின் புறநகர்ப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குடிசையிலிருந்து விளக்கு வெளிச்சமும் குழந்தைகளின் அழுகுரலும் வரக் கண்டார்கள். கலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது, அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள். கலிஃபா உமர் (ரலி) அவர்கள், அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று அவருக்கருகில் சென்றார்கள். அந்தப் பெண்மணி உமர் (ரலி) அவர்களை பார்த்ததில்லை என்பதால் வந்திருப்பவர் கலிஃபா என்பதை அறியவில்லை.
உமர் (ரலி): “குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன?”
பெண்மணி: “அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்”
உமர் (ரலி): “அடுப்பில் என்ன இருக்கிறது?”
பெண்மணி: “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன். இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத கலிஃபா உமர் அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”. அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலிஃபா உமர் (ரலி) அவர்களின் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக! உமது துன்பமான நிலைமையை உமர் எப்படி அறிவார்?” என்று வினவினார். “முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் உமர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.
கலிஃபா உமர் (ரலி) அவர்கள் விரைந்து நகருக்குத் திரும்பி உடனே பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும் எடுத்து வைத்தார்கள். கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டார்கள். சாக்குப்பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து, அதைத் தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள். அவர்களின் உதவியாளர் அஸ்லம் பதறியவாறு, “இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!” என்றார். உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான்தானே? அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும்!” அஸ்லம் மிகவும் தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார். அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் உமர் (ரலி) அவர்கள். அஸ்லமும் அவர்களை பின்தொடர்ந்து சென்றார். குடிசையை அடைந்த உமர் (ரலி) அவர்கள் மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள்.. அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அவர்களின் அடர்ந்த தாடிக்குள் புகை படிந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள். வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த உமர் (ரலி) அவர்களின் முகமும் மலர்ந்தது.
உமர் (ரலி) அவர்கள் அப்பெண்மணியிடம் ‘அக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா’ என வினவினார்கள். அந்தக் குழந்தைகளின் தந்தை இறந்து விட்டதாகவும் அவர்களுக்கு ஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார். வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப் போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக! உண்மையில் கலிஃபா பதவிக்கு உமரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்”. அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலிஃபா உமர் (ரலி) அவர்கள்தாம் என்பதை அம்மாது இன்னும் அறிந்து கொள்ளவில்லை! உமர் (ரலி) அவர்களும் ‘தாம் இன்னார்’ என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீர் கலிஃபாவை சந்திக்கும்போது அங்கே என்னை கண்டு கொள்வீர்” என்றார்கள்.
கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் அதன் பின்னர் மதினா திரும்பினார்கள். செல்லும் வழியில் தன் உதவியாளரிடம் சொன்னார்கள், “அஸ்லம், நான் ஏன் அங்கே அமர்ந்திருந்தேன் தெரியுமா? அக்குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்த நான் அவர்கள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடுவதையும் சிறிது நேரம் பார்க்க விரும்பினேன். அதனால்தான். ”வீரத்திற்குப் பெயர் பெற்ற உமர் (ரலி) அவர்கள், கருணையுள்ளம் உடையவராகவும் குடிமக்கள் மேல் அக்கறை கொண்ட பொறுப்பான தேசத் தலைவராகவும் விளங்கினார்கள்.

Thanks to: Peer Mohamed/[TAFAREG]

நபிமொழி

இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''வேட்டைக்காக அல்லது கால்நடை பாதுகாப்பிற்காக தவிர நாயை ஒருவர் வளர்த்தால், ஒவ்வொரு நாளும் அவரது கூலியில் இரண்டு 'கீராத்' குறைந்துவிடும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன். மற்றொரு அறிவிப்பில் ''ஒரு கீராத்'' என்று உள்ளது. குறிப்பு: ஒரு 'கீராத்' என்பது, ஒரு மலையளவு நன்மையாகும். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''நாயையும், சலங்கையையும் வைத்துள்ள பயணத்தில் மலக்குகள் தோழமை கொள்ள மாட்டார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''வெங்காயம் அல்லது பூண்டை ஒருவர் சாப்பிட்டால், நம்மிடம் அவர் விலகி இருக்கட்டும். அல்லது நம் பள்ளிவாசலை விட்டும் விலகி இருக்கட்டும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் (கீழ்கண்டவாறு) உள்ளது. ''வெங்காயம், பூண்டு ஆகியவற்றை ஒருவர் சாப்பிட்டால் நம் பள்ளிவாசலை அவர் நெருங்க வேண்டாம். நிச்சயமாக (துர்வாடையால்) வானவர்கள், மனிதர்கள் நோவினை பெறுவது போல் நோவினை பெறுகின்றார்கள்.'' (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''உங்கள் பெற்றோர்களின் பெயரால் நீங்கள் சத்தியம் செய்திட, அல்லாஹ் உங்களுக்கு தடை செய்து விட்டான். ஒருவர் சத்தியம் செய்தால், அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்யட்டும்! அல்லது மவுனமாக இருக்கட்டும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''நியாயமின்றி ஒரு முஸ்லிமின் சொத்தை அபகரிக்க, ஒருவர் சத்தியம் செய்தால், அவர் மீது கோபம் உள்ள நிலையில் அவர் அல்லாஹ்வை சந்திப்பார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்பு அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இதற்குச் சான்றாக எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் (பின்வரும்) வசனத்தை ஓதினார்கள். ''நிச்சயமாக அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கும், தங்களின் சத்தியங்களுக்கும் பதிலாக (உலகில்) அற்பப் பொருளை வாங்குகின்றவர்களுக்கு மறுமையில் எவ்வித பங்கும் கிடையாது. மேலும் அவர்களிடம் அல்லாஹ் பேசவும் மாட்டான். மறுமை நாளில் அவர்களைப் பார்க்கவும் மாட்டான். (பாவங்களை விட்டும்) அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் : 3:77) (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)

Tips For Life Gear!

- By Ibrahim Bowers
Although many Muslims may right now be in failing marriages and on a fast track to divorce and its terrible consequences, there are many ways to put their marriage back on the right track if the husband and wife are sincere in their desire to reconcile. The following principles can be used by Muslims whose marriages are already in trouble or by Muslims who would like to avoid trouble in their marriage.


Examples of Negative relationship of Husband & Wife
Many Muslim husbands and wives treat each other like adversaries rather than partners. The husband feels that he is the boss, and whatever he says goes. The wife feels that she must squeeze everything she can out of her husband. Some wives never show their husband that they are satisfied with anything he does or buys for them in order to trick him into doing and buying more. They make him feel like a failure if he does not give them the lifestyle that their friends and families enjoy. Some husbands speak very harshly to their wives, humiliate them, and even physically abuse them. Their wives have no voice or opinion in the family.

Marriage In The Eyes of Allah
It is very sad that this relationship which Allah (SWT) has established for the good has been made a source of contention, deception, trickery, tyranny, humiliation, and abuse. This is not the way marriage is supposed to be.

Allah (SWT) described marriage very differently in the Holy Quran: '. . . He created for you mates from among yourselves, that ye may dwell in tranquillity with them, and He has put love and mercy between your (hearts) . . . " (Holy Quran 30:21, Yusuf Ali Translation).

Do not be a Tyrant
Regardless of whether or not Islam has made the husband the head of the household, Muslims are not supposed to be dictators and tyrants. We are taught to treat our wives well. The Prophet Muhammad (sallallahu alaiyhi wasallam) was reported to have said: 'The most perfect Muslim in the matter of faith is one who has excellent behavior; and the best among you are those who behave best towards their wives" (From Mishkat al-Masabih, No. 0278(R) Transmitted by Tirmidhi).


Be Partners in the Decision Making Process.
Follow the principle of 'Shura," and make decisions as a family. There will be much more harmony in the family when decisions are not imposed and everyone feels that they had some part in making them.

Never be Emotionally
Never be emotionally, mentally, or physically abusive to your spouse. The Prophet (sallallahu alaiyhi wasallam) never mistreated his wives. He is reported to have said: 'How could they beat their women in daytime as slaves and then sleep with them in the night?"

Be Careful of Your Words
Be very careful what you say when you are upset. Sometimes you will say things that you would never say when you were not angry. If you are angry, wait until you calm down before continuing the conversation.

Show Affection
Show affection for your mate. Be kind, gentle, and loving.

Be Your Spouse's Friend
Show interest in your mate's life. Too often, we live in the same house but know nothing about each other's lives. It would be great if the husband and wife could work together for the same cause or on the same project. They could perhaps establish a husband/wife prison ministry, take care of orphans in their home, or lead an Islamic weekend class.

Show Appreciation
Show appreciation for what your spouse does for the family. Never make your husband feel that he is not doing good enough for the family or that you are not satisfied with his work or his efforts, unless, of course, he is truly lazy and not even trying to provide for the family. The Prophet (sallallahu alaiyhi wasallam) was reported to have said: 'On the Day of Judgment, God will not look upon the woman who has been ungrateful to her husband." (where is this hadith found) Show your wife that you appreciate her. If she takes care of the house and the children, don't take it for granted. It is hard work, and no one likes to feel unappreciated.

Work Together in the House
The Prophet (sallallahu alaiyhi wasallam) is known to have helped his wives in the house. And if the Prophet (sallallahu alaiyhi wasallam) was not above doing housework, modern Muslim husbands shouldn't feel that they are.

Communication is Important
Communication, Communication, Communication! This is the big word in counseling. And it should be. Husbands and wives need to talk to each other. It is better to deal with problems early and honestly than to let them pile up until an explosion occurs.

Forget Past Problems
Don't bring up past problems once they have been solved.

Live Simply
Don't be jealous of those who seem to be living a more luxurious life than your family. The 'rizq" is from Allah (SWT). In order to develop the quality of contentment, look at those people who have less than you, not those who have more. Thank Allah (SWT) for the many blessings in your life.

Give Your Spouse Time Alone
If your mate doesn't want to be with you all the time, it doesn't mean he or she doesn't love you. People need to be alone for various reasons. Sometimes they want to read, to think about their problems, or just to relax. Don't make them feel that they are committing a sin.

Admit Your Mistakes
When you make a mistake, admit it. When your mate makes a mistake, excuse him or her easily. If possible, never go to sleep angry with each other.

Physical Relationship is Important
Be available to your mate sexually, and don't let your sexual relationship be characterized by selfishness. The Prophet (sallallahu alaiyhi wasallam) was reported to have said: 'It is not appropriate that you fall upon your wives like a beast but you must send a message of love beforehand."

Have Meals Together
Try to eat together as a family when possible. Show the cook and the dishwasher, whether it is the husband or the wife, appreciation for his or her efforts. The Prophet (SAWS) did not complain about food that was put before him.

Be Mindful of Your discussion Topics
Never discuss with others things about your marriage that your spouse wouldn't like you to discuss, unless there is an Islamic reason to do so. Some husbands and wives, believe it or not, complain to others about their mate's physical appearance. This is a recipe for disaster.


Information about your intimate relations should be kept between you and your spouse.
Many of us treat our spouses in ways that we would never treat others. With others, we try to be polite, kind, and patient. With our spouses, we often do not show these courtesies. Of course, we are usually with our spouses at our worst times --- when we are tired and frustrated after a hard day. After a bad day at the office, husbands usually come home angry and on edge. The wife has probably also had a hard day with the children and the housework. Wives and husbands should discuss this potential time bomb so that if they are short-tempered with each other during these times, they will understand the reasons rather than automatically thinking that their spouse no longer loves them.

Good marriages require patience, kindness, humility, sacrifice, empathy, love, understanding, forgiveness, and hard work. Following these principles should help any marriage to improve. The essence of them all can be summed up in one sentence: Always treat your spouse the way you would like to be treated. If you follow this rule, your marriage will have a much greater chance for success. If you discard this rule, failure is just around the corner.


Thanks:-- Abu Humaidh/[TAFAREG]

வீட்டிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ

بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ ولاَ حَوْلَ وَلاَ قُوَّةَ اِلاَّ بِاللهِ
பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி வலா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்
பொருள்: அல்லாஹ்வின் பெயரால் (புறப்படுகிறேன், என் காரியங்களை முழுமையாக ஒப்படைத்து) அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து விட்டேன், மேலும் அல்லாஹ்வைக் கொண்டல்லாது (பாவத்திலிருந்து) திரும்புதலும், (நன்மையானவற்றைச் செய்வதற்கு) சக்தியுமில்லை.
(நூல்கள்: அபூதாவூது, திர்மிதி)
اَللَّهُمَّ إِنِّي اَعُوْذُ بِكَ اَنْ اَضِلَّ اَوْ اُضَلَّ اَوْ أَزِلَّ اَوْ أُزَلَّ اَوْ أَظْلِمَ اَوْ أُظْلَمَ اَوْ اَجْهَلَ اَوْ يُجْهَلَ عَلَيَّ
அல்லாஹும்ம இன்னி அஊது பிக அன் அளில்ல அவ் உளல்ல. அவ் அஜில்ல அவ் உஜல்ல. அவ் அழ்லிம அவ் உழ்லம. அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய.
பொருள்: யா அல்லாஹ்! நான் வழி தவறுதல் அல்லது (பிறரால்) நான் வழி தவறச் செய்யப்படல், அல்லது நான் பிசகிவிடுதல் அல்லது (பிறரால்) நான் பிசகச் செய்யப்படல் அல்லது நான் பிறருக்கு அநீதமிழைத்து விடல் அல்லது (பிறரால்) நான் அநீதமிழைக்கப்பட்டு விடல், அல்லது நான் அறிவீனனாக ஆகிவிடல் அல்லது (பிறரால்) அறிவீனம் என்மீது ஆக்கப்படல் ஆகியவற்றிலிருந்து உன்னைக் கொண்டு நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்.
(நூல்: அபூதாவூது)

Wednesday, February 18, 2009

நபிமொழி

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''காற்று அல்லாஹ்வின் கருணையில் உள்ளதாகும். அது நல்லதையும் தரும். (சில சமயம்) வேதனையையும் தரும். அதை (காற்று வீசுவதை) நீங்கள் கண்டால் அதை ஏசாதீர்கள். அல்லாஹ்விடம் அதில் நல்லதைக் கேளுங்கள். அதன் தீயதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள்'' என்று நபி(ஸல்) கூறக் கேட்டேன். (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''காற்று வீசினால், ''அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க ஃகய்ரஹா வஃகய்ரமா ஃபீஹா, வஃகய்ர மா உர்ஸிலத் பிஹி, வஊது பிக மின் ஷர்ரிஹா, வஷர்ரி மா ஃபீஹா, வஷர்ர மா உர்ஸிலத் பிஹி'' என்று நபி(ஸல்) கூறுவார்கள். (முஸ்லிம்)
பொருள் : இறைவா! இதில் நல்லதையும், இதில் ஏற்படும் நல்லதையும், இது அனுப்பட்டதின் நல்லதையும் உன்னிடம் நான் கேட்கிறேன். மேலும் இதில் தீயதையும், இதில் ஏற்படும் தீயதையும், இது அனுப்பப்பட்டதின் தீயதையும் விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். (ரியாளுஸ்ஸாலிஹீன்)
இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''காபிரே!'' என ஒருவர் தன் சகோதரனைக் கூறினால், இது அவர்களில் ஒருவரிடம் வந்து சேரும். இவர் கூறியது போல் அவர் இருந்தால் (அவரிடம் போய் சேரும்). இல்லையென்றால், கூறியவரிடமே திரும்பி விடும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபூதர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''காபிர் என ஒருவரை அழைத்தால், அல்லது 'அல்லாஹ்வின் பகைவரே! என்று கூறினால், (கூறப்பட்டவர் அவ்வாறு இல்லை எனில்) கூறியவரிடமே அது திரும்பாமல் இருப்பதில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''குத்திக் காட்டுபவனாக, சபிப்பவனாக, கெட்ட வார்த்தை பேசுபவனாக, தீய சொல் கூறுபவனாக ஒரு மூஃமின் இருக்கமாட்டான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''ஒரு விஷயத்தில் கெட்டபேச்சு இருப்பின், அது அச்செயலை கெடுக்காமல் இருப்பதில்லை. மேலும் ஒரு விஷயத்தில் வெட்கம் கொள்வது இருப்பின், அதை அது மெருகூட்டாமல் இருப்பதில்லை'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்)

அசந்துப் போகும் அதிசயம்

ஏகஇறைவனின் திருப்பெயரால்....
(أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ)
"ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?".
ஏகஇறைவன் தனது படைப்பினங்கள் பலவற்றில் (ஒன்றிலிருந்து மற்றொன்று பார்ப்பதற்கு ஒன்றுப் போலவே இருந்தாலும்) அதனுடைய உடலுக்குள் உள்ள உறுப்புகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடுவான். எத்தனை சுத்தமான தொழுவத்தில் உயர்தர உணவு வகைகள் கொடுத்து வளர்த்தாலும் பன்றியின் இறைச்சியில் இயற்கையாக வளரும் புழுக்களின் உற்பத்தியை தடுக்க முடிவதில்லை. அதேப்போன்று ஆடு, மாடு, கோழிப்போன்ற உண்ணுவதற்கு இறைவனால் அனுமதிக்கப்பட்ட கால்நடைகள் சில நேரங்களில் கழிவுகளை உண்டாலும் அதனுடைய இறைச்சியில் மாற்றங்கள் ஏற்படாமல் ப்யூர் மட்டனாக கிடைக்கிறது. இறைவன் படைத்தப் படைப்பினங்களின் அமைப்பில் மனிதன் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதற்கு மேலை நாட்டு கோக் மட்டன் பெரிய உதாரணமாகும்.
ஒட்டகத்தின் இறைச்சியும், அதனுடைய பாலும் உலகிலேயே கால்நடைகள் தரும் பாலில் அதிக சத்து நிறைந்துக் காணப்படுவது ஒட்டகப் பாலில் என்பதை நாம் அனைவரும் நன்கறிவோம். இத்தனை அபரிமிதமான சத்தை வழங்கக்கூடிய ஒட்டகத்தின் பிரதான உணவு என்னத்தெரியுமா? முட்செடிகளும், காய்ந்த சருகுகளுமாகும்!. முட்செடிகளையும் காய்ந்த சருகுகளையும் மேயந்து விட்டு இத்தனை அபரிமிதமான சத்துள்ள பாலை ஒட்டகம் தருகிறது என்றால் இறைவன் தனது ஆற்றலை மனிதர்கள் புரிந்து கொள்ளும் விதம் இதன் மூலமாகவும் வெளிப்படுத்துவதை கவனிக்க வேண்டும்.
பாலைவனத்தில் வாழ்க்கை நடத்திய அந்தக்கால மக்கள் உண்பதற்கே உணவு வகைகள் கிடைக்காத காலமது என்பதால் ஒட்டகத்திற்கு அவர்களால் எங்கிருந்து உயர்தர தீவணங்கள் கொண்டு வந்து கொடுக்க முடியும்? தாராளமாக கிடைத்தால் கொடுப்பதில் எவ்வித நஷ்டமுமில்லை காரணம் அதற்கு கொடுப்பதை வட அதனிடமிருந்து பயணடைவது அதிகம். அது இன்றைய காலத்தில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் போன்ற செல்லப்பிராணி அல்ல அந்த மக்களுக்கு அன்று ஒட்டகம் தவிர்க்க முடியாத பிராணி ஒட்டகமில்லாமல் அவர்களால் எங்கும் பயணிக்க முடியாத நிலை அதனால் எத்தனை உயர்தர தீவணங்கள் வேண்டுமானாலும் கொடுக்கலாம் அந்தளவுக்கு திருப்பி பலனலிக்கக் கூடியது ஒட்டகம். ஆனாலும் கொடுக்க முடியாது. அதற்கு காரணம் ஒன்று அவர்களது வறுமை, மற்றொன்று எளிதில் கிடைக்காது அதனால் அந்த சூழ்நிலைக்கொப்ப அங்கு எளிதில் கிடைபதைக் கொண்டு ஒட்டகம் தனது உணவை போதுமாக்கிக் கொள்வதற்காக பாலைவனத்தில் முளைக்கின்ற முட்செடிகளை அவற்றிற்கு உணவாக்கி அதை இலகுவாக உண்பதற்கு அவற்றின் உதடுகளை ரப்பர் போன்று இறைவன் வடிவமைத்தான். முட்செடிகளை உண்ணும்பொழுது அதனுடைய ரப்பர் போன்ற உதடுகளில் முட்கள் பட்டு நொறுங்கி விழுந்து இலைகள் மட்டுமே வாயிக்குள் செல்லும். அந்தளவுக்கு கைதேர்ந்தப் படைப்பாளன் ஏக இறைவன் மிக நேர்த்தியாக ஒட்டகத்தை வடிவமைத்தான்.
அவ்வாறான முட்செடிகளையும். காய்ந்த சருகுகளையும் உண்டு தரக்கூடிய ஒட்டகத்தின் பாலில் மனிதனின் உடல்நலத்திற்கு சிறந்த ஆரோக்கியத்தையும், நோய் நிவாரணிகளையும் ஏற்படுத்தினான் ஏக இறைவன். அந்தக் காலத்தில் அரேபியர்கள் மிகவும் திடகாத்திரமான உடலமைப்புடன் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் அரேபியர்கள் அந்தளவுக்கு ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு கீரை, காய்கறிகள், பழங்கள் போன்றவைகள் சாப்பிட வில்லை அவைகள் பாலைவனத்தில் முளைப்பதில்லை அவர்களுடைய உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும், ஆரோக்கியத்தையும் வழங்கிக் கொண்டிருந்ததற்கு அவர்கள் தினந்தோறும் அருந்தி வந்த ஒட்டகப்பால் முக்கிய காரணியாகத் திகழ்ந்தது. (இன்றைய அரேபியர்கள் அவ்வாறில்லை இவர்கள் பெப்ஸி கோலாவிலும். அஜினா மோட்டா உணவிலும் மூழ்கி உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றனர்).
காலம் கடந்தேனும் இன்றைய மக்கள மேல்படி ஒட்டகப் பாலில் மற்றப் பாலை விட எந்தளவுக்கு சத்துக் கூடுதலாக இருக்கிறது என்றும், அவைற்றினால் உடல் நலத்திற்கு என்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கின்றன என்றும், என்ன மாதிரியான நோய்களை எதிர்க்கும் ஆற்றல் இருக்கின்றன என்றும் விரிவான ஆய்வுகள் செய்து அறிவிக்கின்றனர். இந்தளவுக்கு உடல் ஆரோக்கியத்திற்கும், நோய்களை எதிர்க்கும் திறன் வாய்ந்த சத்தானப் பாலைத் தருகின்ற ஒட்டகம் உட்கொள்ளும் உணவு காய்ந்த சருகுகளும், முட்செடிகளும் தான் என்றால் வியப்பாக இல்லையா?
அது தான் உயிரிணங்களின் மீது இறைவன் ஏற்படுத்திய அமைப்பை யாரும் மாற்ற முடியாது. நோய் நிவாரணிகளும், உடல் ஆரோக்கியமும் ஒட்டகத்தின் பாலில் தனித்தன்மை வாய்ந்த இன்சுலின் உள்ளது இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது. பசும் பால் அலர்ஜி உள்ளவர்கள் ஒட்டகப்பாலை பயப்படாமல் குடிக்கலாம் ஏனென்றால் இதில் உள்ள புரோட்டீன்கள் வித்தியாசமானது மேலும் இதில் பாக்டிரியா, வைரஸ் எதிரப்பு சக்திகள் (Bactericidal, Virucidal) இயற்கையாகவே அமைந்துள்ளது. மேலும் விஞ்ஞான ஆராய்ச்சிகள் இது Sever skin condition, Auto immune diseases, Psoriasis, Multiple Sclerosis போன்ற நோய்களையும் குணப்படுத்தும். விட்டமின் பீ,சீ சத்துக்களை நிறையக் கொண்ட ஒட்டகப் பாலில், பசுப் பாலில் இருப்பதை விட பத்து மடங்கு அதிகமான இரும்புச் சத்து இருப்பதாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. பசும்பாலை விட இனிப்புக் குறைவான ஒட்டகப் பால், வளைகுடா நாடுகளெங்கும் அபரிதமாக அருந்தி வருகின்றார்கள். Harrods, Fortnum & Mason போன்ற பாரிய விற்பனை நிலையங்கள், பெட்டிகளில் அடைக்கப்பட்ட ஒட்டகப் பாலை விற்பனை செய்வதில் உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. விட்டமின் சத்துடையது என்பது மட்டுமல்ல, புற்றுநோய், எயிட்ஸ் போன்றவற்றை எதிர்க்கும் சக்தியையும் ஒட்டகப்பால் கொண்டிருக்கின்றது. ஆதாரம்: http://tamilcyber.com/home/index.php?option=com_content&task=view&id=80&Itemid=1
நம்மில் பலர் பசும் பால் அல்லது எருமைப் பாலை அருந்தியிருப்போம். ஏன், தமிழக கிராமங்களில் ஆட்டுப் பால் கூட குடித்திருப்பார்கள். ஆனால் ஒட்டகப் பால் பற்றி அறிந்திருக்கிறீர்களா? ஒட்டகப் பாலின் மருத்துவ குணங்கள் அளவிடற்கரியது. ஒட்டகப்பாலில் உள்ள மருத்துவ பலன்களில் ஆண்மையின்மையை போக்கும் பலனும் உள்ளது. இந்திய சந்தையில் ஒட்டகப் பாலுக்கு உள்ள வரவேற்பைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக ராஜஸ்தான் பால் சங்கம் (ஆர்எம்எஃப்) அண்மையில் ஒட்டகப் பால் பாக்கெட்டுகள் விற்பனையை அறிமுகப்படுத்தியது. தற்போது ஒட்டகப் பால் பாக்கெட்டுகள் ஜெய்ப்பூர், பிகானிர், புதுடெல்லி மற்றும் புதுடெல்லியில் உள்ள சராஸ் பால் கடைகளில் கிடைக்கின்றன.

ஒட்டகப் பாலில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் தவிர ஆண்மையின்மையை போக்கக்கூடிய திறனுடன் சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில், ஒட்டகப் பாலுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக ஆர்.எம்.எஃப். அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சர்க்கரை நோய்க்கு ஒட்டகப்பால் மிகவும் சிறந்தது என்றும், ஒட்டகப்பாலின் குணங்கள் பற்றி பல கட்டுரைகள் படித்திருப்பதாகவும், வி.பி.சர்மா என்ற நுகர்வோர் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். சர்க்கரை நோயாளிகள் ஒட்டகப் பாலை அருந்துமாறு தாம் கேட்டுக் கொள்வதாகவும், நோய் இல்லாதவர்களும் கூட இதனை தினமும் குடித்து வரலாம் என்றும் அவர் கூறினார். ராஜஸ்தானின் கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த வயதானோர் இதுபற்றிக் கூறுகையில், ஒட்டகப் பாலில் ஆண்மையை அதிகரிக்கும் மருத்துவ சக்தி உள்ளதாகக் கூறுகிறார்கள்.

ஒட்டகப் பால் பாக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மாதத்தில், நாளொன்றுக்கு ஆயிரம் லிட்டர் சராசரியாக விற்பனை செய்யப்படுகிறது. ராஜஸ்தான் முழுவதிலும் நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் லிட்டர் ஒட்டகப்பாலை பெறமுடியும் என்று ஆர்எம்எஃப் ஏற்கனவே மதிப்பீடு செய்துள்ளது.

ஆண்மையின்மை சமீப காலங்களில் அதிகரித்து வருவதும் ஒட்டகப்பால் நுகர்வை முக்கியப் படுத்தியிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. துவக்கத்தில் சர்க்கரை நோயாளிகளிடம் இருந்தும், நடுத்தர வயதுடைய நுகர்வோரிடம் இருந்தும் ஒட்டகப் பாலுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், சந்தையில் அதிக அளவில் ஒட்டகப்பால் கிடைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சராஸ் பால் பண்ணை நிர்வாக இயக்குனர் மதுக்கர் குப்தா தெரிவித்துள்ளார்.

ஒட்டகப் பாலில் லெனோலின் அமிலம் உட்பட 6 வகையான அமிலங்கள் காணப்படுவதாகவும் உடலின் சுருக்கங்களை போக்குவது உள்ளிட்ட தோல் தொடர்பான வியாதிகளையும் நிவர்த்தி செய்வதாக உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. எது எப்படியோ ஒட்டகப் பால் விரைவில் அனைத்து இடங்களிலும் கிடைக்கப் போவது உறுதி. ஆதாரம்: http://tamil.webdunia.com/miscellaneous/health/articles/0807/31/1080731054_1.htm
1400 வருடங்களுக்கு முன்னரே பெருமானார் (ஸல்) அவர்கள் ஒட்டகப் பாலில் நோய் நிவாரணி இருப்பதைக் கண்டறிந்துக் கூறினார்கள். அன்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறிய மருத்துவக் குறிப்புகள் அனைத்தையும் இன்றைய மருத்துவர்களின், இன்னும் வேறுப் பல ஆராய்ச்சியாளர்களின் விரிவான ஆய்வறிக்கைள் மெய்ப்படுத்தி வருகின்றன. (மதீனா வந்த 'உக்ல்' மற்றும் 'உரைனா' குலத்து) மக்கள் சிலருக்கு நோய் ஏற்பட்டது. அவர்கள் 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு அடைக்கலம் அளித்து உணவும் அளியுங்கள்'' என்று கேட்டனர். (அவ்வாறே அவர்களுக்கு அடைக்கலம் தந்து உணவும் அளிக்கப்பட்டது. பசிப் பிணி நீங்கி) அவர்கள் நலம் பெற்றபோது 'மதீனா(வின் தட்ப வெப்பநிலை) எங்களுக்கு ஒத்து வரவில்லை'' என்று கூறினர். அவர்களை நபி (ஸல்) அவர்கள் பாறைகள் நிறைந்த 'அல்ஹர்ரா' எனும் இடத்தில் தம் ஒட்டகங்கள் சிலவற்றுடன் தங்கச்செய்து 'இவற்றின் பாலை அருந்துங்கள்'' என்று கூறினார்கள். அவர்கள் குணமடைந்தபோது நபி(ஸல்) அவர்களின் (ஒட்டக) மேய்ப்பாளரைக் கொன்றுவிட்டு அவர்களின் ஒட்டகங்களை இழுத்துச்சென்றுவிட்டனர்... அனஸ்(ரலி) அவர்கள் கூறிய புகாரியின் ஹதீஸ் சுருக்கம்.
இந்தளவுக்கு மனித இனத்தின் ஆரோக்கியத்திற்காக அபரிமிதமான சத்தையும், நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தப் பாலை வழங்கக் கூடிய ஒட்டகம் பயணிகளை சுமந்து செல்வதால் எப்பொழுதாவது சோர்வடையும் நிலை ஏற்பட்டால் தனக்கு தேவையான சத்தை எங்கிருந்து பெறுகிறது தெரியுமா ? அதன் உடம்பில் புரோட்டீன் என்ற சத்து குறைய ஆரம்பித்ததும் சிறுநீரில் வெளியாகும் யூரியா என்ற கழிவின் அளவை குறைத்துக்கொண்டு அதை (Microbial Synthesis) புரோட்டீனோடு கலந்து சக்தியாக மாற்றிவிடுகிறது அதன் சிறுநீரகம்.
சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் தூயவன். ஏகஇறைவன் அல்லாஹ் கைதேர்நத படைப்பாளன் என்பதற்கு இதை விட ஒரு சான்றுத் தேவையா?
ஒட்டகத்திற்குள் இன்னும் ஏராளமான சான்றுகளை இறைவன் வைத்துப் படைத்திருக்கிறான். أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? 88:17.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்.
- அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

Monday, February 16, 2009

நபிமொழி

அபூஉமாமா என்ற இயாஸ் இப்னு ஃதஹ்லபா அல்ஹாரிஸி (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''தன் சத்தியத்தின் மூலம் ஒருவர் ஒரு முஸ்லிமின் உரிமையைப் பறித்தால், அல்லாஹ் அவருக்கு நரகத்தை அவசியமாக்கி விட்டான். மேலும் அவருக்கு சொர்க்கத்தை தடை செய்து விட்டான் என்று நபி(ஸல்) கூறினார்கள். இறைத்தூதர் அவர்களே! (அந்த உரிமை) சிறிய அளவிலாக இருந்தால்...? என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். ''அராக்'' எனும் கருவேல மரத்தின் ஒரு குச்சியாக இருந்தாலும் தான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அப்துல்லா இப்னு அம்ரு இப்னுல் ஆஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''பெரும் பாவங்கள் என்பது, அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், பெற்றோரை நோவினை செய்தல், கொலை செய்தல், பொய் சத்தியம் செய்தல் ஆகியவையாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
மற்றொரு அறிவிப்பில் (கீழ்கண்டவாறு) உள்ளது.
ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ''இறைத்தூதர் அவர்களே! பெரும் பாவங்கள் என்ன?'' என்று கேட்டார். ''அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்'' என்று நபி ( ஸல் ) கூறினார்கள். ''பின்பு எது?'' என்று கேட்டார் ''பொய் சத்தியம் செய்தல்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். ''பொய் சத்தியம் செய்வது என்றால் என்ன?'' என்று நான் கேட்டேன். ''ஒரு முஸ்லிமின் சொத்தை பொய் சத்தியம் செய்து அபகரித்தல்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபூகதாதா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''வியாபாரத்தில் அதிக அளவில் சத்தியம் செய்வதை உங்களுக்கு எச்சரிக்கிறேன். ஏன் எனில், பொருளை(விற்பனை) செல்லுபடியாக்கும். பின்பு அதனை அழித்து விடும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''அல்லாஹ்வின் பெயரால் ஒருவர் பாதுகாப்புக் கோரினால், அவருக்கு பாதுகாப்புக் கொடுங்கள். அல்லாஹ்வின் பெயரால் ஒருவர் கேட்டால், அவருக்குக் கொடுங்கள். உங்களை ஒருவர் அழைத்தால், அவருக்கு பதில் கூறுங்கள். உங்களுக்கு நல்லதை ஒருவர் செய்தால் அவருக்கு (நன்றி கூறும் முகமாக) பகரம் காட்டுங்கள். அவருக்கு நீங்கள் பகரம் செய்வதற்கு எதையும் நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், அவருக்குப் பரிகாரம் செய்து விட்டோம் என, நீங்கள் கருதும் வரை அவருக்காக துஆச் செய்யுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அபூதாவூது, நஸயீ)(ரியாளுஸ்ஸாலிஹீன்)
ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''உம்மு ஸாயிப் (ரலி) (அல்லது உம்முல் முஸய்யிப்(ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்த நபி(ஸல்) அவர்கள், ''உம்மு ஸாயிபே! உமக்கு என்ன? ஏன் துடிக்கிறீர்'' என்று கேட்டார்கள். ''காய்ச்சல்தான். அதிலே அல்லாஹ் பரக்கத் செய்யாதிருப்பானாக'' என்று உம்மு ஸாயிப் (ரலி) கூறினார். ''காய்ச்சலைத் திட்டாதே! நெருப்பு உலை, இரும்பின் துருவை நீக்குவது போல், காய்ச்சல் மனிதனின் குற்றங்களை நீக்கி விடும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)

Wednesday, February 11, 2009

மறுமையில் பிறந்த மேனியுடன் எழுப்பப்படுவார்கள்

'நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் (கியாமத்) நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்'. (அல்குர்ஆன்)
இரண்டாம் சூர் ஊதப்பட்டவுடன் மனிதர்கள் எவ்வாறு உயிர்பிக்கப்படுவார்கள்? அதைத் தொடர்ந்து நடைபெறுவது என்னவென்பதை இனி காண்போம். பூமியைப் பிளந்து வெளியேறுவர் - இரண்டாவது சூர் ஊதப்பட்டவுடன் எல்லா மனிதர்களும் பூமியைக் கிழித்துக் கொண்டு வெளிப்படுவார்கள்.
'பூமி பிளந்து அவர்கள் வேகமாக வரும் நாள் அது தான். யாவரையும் ஒன்று சேர்க்கும் நாள்! இது நமக்கு மிக எளிதானதேயாகும்'. (அல்குர்ஆன்)
'இலக்குகளை நோக்கி செல்வது போல் அவர்கள் மண்ணறைகளிலிருந்து வெளியேறுவார்கள்'. (அல்குர்ஆன்)
அழிவு நாளின் போது அழிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட அனைத்து மனிதர்களும் பூமிக்குள்ளிருந்தே உயிருடன் வெளிப்படுவார்கள். ஏதோ ஒரு இலக்கை நோக்கிச் செல்வது போல் வேகமாக விரைவார்கள் என்பதை இவ்வசனங்கள் கூறுகின்றன. மண்ணறைகளில் தங்கிய காலத்தை உணரமாட்டார்கள் பல்லாயிரம் ஆண்டுகள் மண்ணறைகளில் புதைந்து கிடந்தவர்கள் உட்பட எவருமே தாம் மண்ணறைகளில் தங்கியிருந்த கால அளவை உணரமாட்டார்கள். ஏதோ சற்று நேரம் உறங்கி விட்டு எழுந்திருப்பதாகவே அனைவரும் உணர்வார்கள். இதைப் பின்வரும் வசனங்கள் விளக்குகின்றன. 'இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை இவர்கள் பார்க்கும் நாளில் பகலில் சிறிது நேரம் தவிர (மண்ணறைகளில்) இருக்க வில்லை என்பது போல் அவர்களுக்குத் தோன்றும்'. (அல்குர்ஆன்)
'நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில் காலையிலோ, மாலையிலோ சொற்ப நேரமே தங்கியிருந்ததாக அவர்களுக்குத் தோன்றும்'. (அல்குர்ஆன் 79:46)
'அன்றியும் அந்த நாள் வரும்போது சற்று நேரமே தங்கியிருந்ததாக குற்றவாளிகள் சத்தியம் செய்து கூறுவார்கள்'. (அல்குர்ஆன்)
எங்களுக்கு ஏற்பட்ட துக்கமே (எங்கள் உறங்குமிடங்களிலிருந்து) எங்களை எழுப்பியவர்கள் யார்?' (அல்குர்ஆன்)
கப்ருகளில் வேதனை செய்யப்பட்டதும், பல்லாண்டு மண்ணறைகளில் கழித்ததும் அவர்களுக்குத் தெரியாது. உறங்கிய போது ஏற்பட்ட கனவாகவே அதை அவர்கள் நினைத்துக் கொள்வார்கள். எங்கள் உறக்கத்திலிருந்து எழுப்பியவர் யார் என்று அவர்கள் கேட்பது இதனால்தான். இந்த உணர்வுடன் எழுவோர் குற்றவாளிகள் தாம், நல்லடியார்கள் உலகில் வாழும் போதே மறுமை நாளை நம்பியவர்கள் இந்த நிகழ்ச்சிகள் ஏற்படும் என்பதை குர்ஆனிலிருந்து படித்து அறிந்த மக்கள் இவ்வாறு எண்ண மாட்டார்கள்.
30:55 வசனத்தில் 'குற்றவாளிகள்' என்று கூறப்படுவதிலிருந்து இதை அறியலாம். 30:56 வசனத்தில் நல்லடியார்கள் இவ்வாறு எண்ண மாட்டார்கள் என்பதைத் தெளிவாகவும் இறைவன் கூறுகிறான். 'ஆனால் எவர்களுக்கு கல்வியும் ஈமானும் கொடுக்கப்பட்டனவோ அவர்கள் 'அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி திரும்ப உயிர் கொடுத்து எழுப்பப்படும் நாள் வரையில் (மண்ணறையில்) தங்கியிருந்தீர்கள். உயிர் பெற்று எழும் நாள் இது தான். இதனை அறியாதவர்களாகவே நீங்கள் இருந்தீர்கள் என்று கூறுவார்கள்'. (அல்குர்ஆன்)
பிறந்த மேனியாக எழுப்பப்படுவார்கள் நபிமார்கள், நல்லவர்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் அனைவருமே நிர்வாணமாக எழுப்பப்படுவார்கள். எவருமே ஆடை யணிந்திருக்க மாட்டார்கள். மேலும் இவ்வுலகில் கத்னா செய்திருந்தவர்கள் உட்பட அனைவரும் கத்னா செய்யப்படாதவர்களாகவே எழுப்பப்படுவார்கள்.
'நிச்சயமாக நீங்கள் நிர்வாணமாகவும், செருப்பணியாமலும், கத்னா செய்யப்படாமலும் எழுப்பப்படுவீர்கள்' என்று நபி (ஸல்) கூறிவிட்டு 21:104 வசனத்தை ஓதிக்காட்டினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
'கியாமத் நாளில் மக்கள் செருப்பணியாமலும், நிர்வாணமாகவும், கத்னா செய்யப்படாமலும் எழுப்பப்படுவீர்கள்' என்று நபி (ஸல்) கூறிய போது 'அல்லாஹ்வின் திருத்தூதரே! ஆண்களும் பெண்களும் திரண்டிருக்கும் போது சிலர் சிலரைப் பார்ப்பார்களே? என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'ஆயிஷாவே! சிலர் சிலரைப் பார்த்துக் கொண்டிருப்பதை விட நிலமை மிகவும் கடுமையானதாக இருக்கும்' என்று விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
சிலர் குருடர்களாகவும், ஊமையர்களாகவும் எழுப்பப்படுவர்
எவ்வாறு பிறந்தார்களோ அவ்வாறே மறுமையில் எழுப்பப்படுவார்கள் என்றாலும் உலகில் வாழும் போது பார்வை, செவி, பேசும் திறனுடன் இருந்து தவறான வழியில் சென்றவர்கள் குருடர்களாகவும் ஊமையர்களாகவும் செவிடர்களாகவும் எழுப்பப்படுவார்கள்.
'யார் வழிகெட்டு விட்டார்களோ அவர்களுக்கு அவனையன்றி உதவிசெய்வோர் எவரையும் நீர் காண மாட்டீர்! மேலும் அவர்களைக் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் முகம் குப்புற (நடப்பவர்களாக) கியாமத் நாளில் எழுப்புவோம்'. (அல்குர்ஆன்)
'எவன் என்னுடைய போதனையைப் புறக்கணிக்கின்றானோ அவனுக்கு நிச்சயமாக நெருக்கடியான வாழ்க்கையே இருக்கிறது. மேலும் நாம் அவனைக் கியாமத் நாளில் குருடனாகவே எழுப்புவோம். (அப்போது அவன்) என் இறைவனே! நான் பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்? என்று கூறுவான். (அதற்கு இறைவன்) அவ்வாறு தான். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்த போது அவற்றை நீ மறந்து விட்டாய். அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய் என்று கூறுவான். ஆகவே எவன் தன் இறைவனுடைய வசனங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாமல் வரம்பு மீறி நடக்கின்றானோ அவனுக்கு இவ்வாறு தான் நாம் கூலி கொடுப்போம். (இதை விட) மறுமையின் வேதனை மிகவும் கடுமையானதும், நிலையானதுமாகும்'. (அல்குர்ஆன்)
இறைவனின் வேத வசனங்களை நம்பாத அனைவரும் குருடர்களாகவே எழுப்பப்படுவார்கள் என்பதை இவ்வசனங்கள் கூறுகின்றன.
முகம் கறுத்தவர்களாக எழுப்பப்படுவர்
விசாரணைக்குப் பின் கிடைக்கும் தண்டனை தனியாக இருக்க விசாரணைக்கு முன்பே குற்றவாளிகள் குருடர்களாகவும், செவிடர்களாகவும், ஊமைகளாகவும், தனி அடையாளத்துடன் எழுப்பப்படுவது போல், முகம் கறுத்தவர்களாகவும் எழுப்பப்படுவார்கள். நல்லவர்கள் உலகில் கறுப்பர்களாக இருந்தாலும் - வெண்மை முகத்தவர்களாகவும், தீயவர்கள் - உலகில் வெண்மை நிறத்தவர்களாக இருந்தாலும், முகம் கறுத்தவர்களாகவும் எழுப்பப்படுவர். இதைப் பின் வரும் வசனம் விளக்குகின்றது.
'அந்த நாளில் சில முகங்கள் வெண்மையாகவும், மற்றும் சில முகங்கள் கறுப்பாகவும் இருக்கும். எவரது முகங்கள் கறுப்பாக உள்ளனவோ அவர்களிடமும் 'நீங்கள் நம்பிக்கை கொண்டபின் நிராகரித்தீர்கள் அல்லவா? நீங்கள் நிராகரித்ததற்காக இந்த வேதனையைச் சுவையுங்கள் (என்று கூறப்படும்)''. (அல்குர்ஆன்)

Thanks: ADIRAI THAMEEM /TAFAREG

நபிமொழி

இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள்: '' கன்னங்களில் அடித்துக் கொள்பவரும், சட்டைகளைக் கிழித்துக் கொள்பவரும், அறியாமைக் கால வார்த்தைகளால் பிரார்த்தனை செய்பவரும் நம்மைச் சேர்ந்தவர் அல்லர்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''மக்களிடம் இரண்டு காரியங்கள் உள்ளன. அந்த இரண்டுமே அவர்களிடம் இறைமறுப்பை ஏற்படுத்தக் கூடியதாகும்.
1) பாரம்பரியத்தை குறை கூறிக் குத்திக் காட்டுவது
2) இறந்தவருக்காக ஒப்பாரி வைப்பது என நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபூதல்ஹா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''எந்த வீட்டில் நாயும், உருவப்படமும் உள்ளதோ, அந்த வீட்டில் வானவர் நுழைய மாட்டார்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபுல் ஹய்யாஜ் (என்ற) ஹய்யான் இப்னு ஹுஸைன் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''என்னிடம் அலீ (ரலி) அவர்கள், ''அறிந்து கொள்க! நபி(ஸல்) அவர்கள் என்னை அனுப்பிய பணிக்கே உம்மையும் அனுப்புகிறேன். எந்த உருவச்சிலையையும் அதை அழிக்காமல் விட்டு விடக் கூடாது. அத்துடன் உயரமாகக் கட்டப்பட்ட கப்ரையும் அதை சமப்படுத்தாமல் விடக்கூடாது என்பதே அப்பணியாகும்'' என்று கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)

நபிமொழி

அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கின்றார்கள்: '' பாதைகளில் உட்காருவதை உங்களிடம் எச்சரிக்கிறேன்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். இறைத்தூதர் அவர்களே! எங்களின் பேச்சுக்களை நாங்கள் அங்கே பேசிடும் அவசியம் எங்களுக்கு ஏற்படுகிறேதே? என்று கேட்டார்கள். அந்த இடத்தில் நீங்கள் உட்கார வேண்டியது ஏற்பட்டால், பாதைக்குரிய உரிமையை கொடுங்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். இறைத்தூதர் அவர்களே! பாதையின் உரிமை என்ன?'' என்று கேட்டார்கள். ''பார்வையைத் தாழ்த்துவது, நோவினையை கைவிடுவது, பதில் ஸலாம் கூறுவது, நல்லதை ஏவுவது, தீயதைத் தடுப்பது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''உங்களில் ஒருவர், ஒரு அந்நியப் பெண்ணிடம் (அவளுடன்) அவளுடைய (தந்தை, சகோதரர், மகன் போன்ற) உறவினர்கள் உடன் இல்லாமல் தனித்திருக்க வேண்டாம்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.(புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''உங்களில் ஒருவர் தனது இடது கையால் சாப்பிடவேண்டாம். குடிக்க வேண்டாம். நிச்சயமாக ஷைத்தான்தான், தனது இடது கையால் சாப்பிடுவான். குடிப்பான் ''. என்று நபி(ஸல்) கூறினார்கள்.(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''ஒருவர் ஒரு செருப்பில் நடக்க வேண்டாம். இரண்டையும் சேர்த்தே அணியட்டும்! அல்லது இரண்டையும் சேர்த்தே கழட்டி விடட்டும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.(புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''ஒருவரின் செருப்பு வார் அறுந்துவிட்டால், அதை சரி செய்யும்வரை, ஒரு செருப்புடன் நடக்க வேண்டாம்'' என்று நபி (ஸல்) கூற நான் கேட்டேன். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)

Tuesday, February 10, 2009

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள்

அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல்: -
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் இல்லத்தைச் சுட்டிக் காட்டியவாறு அபூ அம்ர் அஷ்ஷைபானீ (ரஹ்), ‘(இதோ!) இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) எனக்குத் தெரிவித்தார்கள்’ என்று கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘கண்ணியமும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?’ என்று கேட்டேன். அவர்கள் தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது’ என்றார்கள். ‘பிறகு எது?’ என்று கேட்டேன். ‘தாய் தந்தையருக்கு நன்மை செய்வது’ என்றார்கள். (நான் தொடர்ந்து) ‘பிறகு எது?’ என்றேன். அவர்கள், ‘இறைவழியில் அறப்போரிடுதல்’ என்று பதிலளித்தார்கள். இவற்றை (மட்டுமே) என்னிடம் நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். இன்னும் அதிகமாக (இது குறித்து) நான் அவர்களிடம் கேட்டிருந்தால் எனக்கு இன்னும் நிறைய பதிலளித்திருப்பார்கள்.
அறிவிப்பவர்: வலீத் இப்னு அய்ஸார் (ரஹ்), ஆதாரம்: புகாரி.
தாயின் மகிமை: -
இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘பிறகு, உன் தந்தை’ என்றார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

தம் தாய் தந்தையர் ஏசப்பட தாமே காரணம்?
‘ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?’ என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)’ என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) , ஆதாரம் : புகாரி.

அல்லாஹ் தடை செய்ததும் வெறுப்பதும்!
“அன்னையரைப் புண்படுத்தவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான். மேலும், (தேவையின்றி) அதிகமாகப் பேசுவது, அதிகமாகக் (கேள்வி, அல்லது யாசகம்) கேட்பது, செல்வத்தை வீணாக்குவது ஆகியவற்றை அல்லாஹ் வெறுத்துள்ளான்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :முஃகீரா இப்னு ஷுஅபா (ரலி), ஆதாரம் : புகாரி.

பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்கள்: -
(ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’ என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)’ என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்’ என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)’ என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் ‘அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?’ என்றேன்.
அறிவிப்பவர் :அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி), ஆதாரம் : புகாரி.

இணைவைக்கும் பெற்றோரையும் ஆதரிக்க வேண்டும்: -
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் என் தாயார் ஆசையாக என்னிடம் வந்தார். (அப்போது அவர் இணைவைப்பவராக இருந்தார்.) நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘(என் தாயார் வந்துள்ளார்.) அவருடன் உறவைப் பேணிக்கொள்ளட்டுமா?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று கூறினார்கள். ‘எனவே, அஸ்மாவின் தாயர் தொடர்பாக, ‘மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கிறான்’ எனும் (திருக்குர்ஆன்) வசனத்தை அல்லாஹ் அருளினான்’ என (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) கூறினார்.
அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி), ஆதாரம்: புகாரி.

உறவை முறிப்பவன் சுவனம் புகமாட்டான்: -
“உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :ஜுபைர் இப்னு முத்யிம் (ரலி), ஆதாரம் : புகாரி.

வாழ்வாதாரம் பெருக வேண்டுமா? ஆயுள் நீட்டிக்கபபட வேண்டுமா?
“தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

உறவை முறித்தால்?
உறவு (இறையருளின்) ஒரு கிளையாகும். எனவே, ‘அதனுடன் ஒட்டி வாழ்வோருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை முறித்துக் கொள்கிறவரை நானும் முறித்துக் கொள்வேன்’ (என்று உறவைப் படைத்தபோது இறைவன் சொன்னான்). என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி.

அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்: -
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹஸன் இப்னு அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ் அத்தமீமீ (ரலி), ‘எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை’ என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.
அல்லாஹ் அடியார்கள் மீது வைத்துள்ள அன்பு: -
(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள்). குழந்தை கிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது ‘எங்களிடம் நபி (ஸல்) அவர்கள், ‘இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!’ என்றார்கள். நாங்கள், ‘இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது’ என்று சொன்னோம். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் :உமர் இப்னு கத்தாப் (ரலி), ஆதாரம் : புகாரி.

பாவங்களிலேயே மிகப் பெரியது எது?
நான், ‘இறைத்தூதர் அவர்களே! பாவங்களிலேயே மிகப் பெரியது எது?’ என்று கேட்டேன். ‘உன்னைப் படைத்த, இறைவனுக்கே நீ இணைகற்பிப்பது ஆகும்’ என்று பதிலளித்தார்கள். ‘பிறகு எது?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீயே கொலை செய்வது’ என்று கூறினார்கள். நான், ‘பிறகு எது?’ என்றேன். ‘உன் அண்டை வீட்டுக்காரனின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவது’ என்றார்கள். நபி (ஸல்) அவர்களின் இக்கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், ‘அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைக்கமாட்டார்கள்’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 25:68 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அறிவிப்பவர் :அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி.

அநாதைகளை ஆதரிப்போரின் உன்னத நிலை!
‘நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்’ என்று கூறியபடி நபி (ஸல்) அவர்கள் தங்களின் சுட்டு விரலாலும் நபி (ஸல்) விரலாலும் (சற்றே இடைவெளிவிட்ட) சைகை செய்தார்கள். அறிவிப்பவர் :ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி), ஆதாரம் : புகாரி.

கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுபவரின் உன்னத நிலை!
கணவனை இழந்த கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர் ‘இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்’ அல்லது ‘இரவில் நின்று வணங்கி பகலில் நோன்பு நோற்பவர் போன்றவராவார். என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :ஸஃப்வான் இப்னு சுலைம் (ரஹ்), ஆதாரம் : புகாரி.

கருணை காட்டாதவர் கருணை காட்டப்படமாட்டார்: -
(படைப்பினங்களின் மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார். என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரலி), ஆதாரம் : புகாரி.

அண்டை வீட்டாரைப் பேணுவதின் முக்கியத்துவம்: -
“அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக்கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி.

அண்டை வீட்டாரை துண்புறுத்துபவன் இறை நம்பிக்கையாளரேயல்ல!
‘அல்லாஹ்வீன் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்’ என்று (மூன்று முறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அவன் யார்? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் :அபூ ஷுரைஹ் (ரலி), ஆதாரம்: புகாரி.

அண்டை வீட்டாரின் அன்பளிப்பை அற்பமாக கருதாதே!
‘முஸ்லிம் பெண்களே! (உங்களில்) எந்தப் பெண்ணும் தன் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் கால் குளம்பை (அன்பளிப்பாக) அளித்தாலும் அதை அற்பமாகக் கருத வேண்டாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

நான், ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர். அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இருவரில் யாருடைய வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி.

நல்லதைப் பேசு! அல்லது வாய் மூடி இரு!
“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.
Sorce: suvanathendral.com

மனநோயும் சிகிச்சையும்

கேள்வி: ஒரு முஃமின் மன நோய்க்கு உள்ளாக வாய்ப்பிருக்கிறதா? அவ்வாறு ஏற்பட்டால் சிகிச்சை செய்வது எவ்வாறு?

பதில்: ஒரு மனிதன் கடந்த காலத்தை எண்ணிக் கைசேதப்படுவதானாலும் எதிர்காலம் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதானாலும் மனநோய்க்கு உள்ளாகிறான். உடலில் ஏற்படுகின்ற நோய்களை விட உள நோய் அதிகம் பாதிப்பை உண்ணுபண்ணுகிறது. இதற்கு பௌதீக ரீதியான சிகிச்சைகளை விட ஆன்மீக ரீதியான சிகிச்சையே அதிகம வெற்றியளிக்கக் கூடியது.

கவலை, துக்கம், கைசேதம் போன்றவற்றிற்கு உள்ளாகும் ஒரு முஃமின் பின்வரும் துஆவை ஒதினால் அவையனைத்தும் அகன்று விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மது)

"அல்லாஹும்ம இன்னீ அப்துக்க, வப்னு அப்திக்க, வப்னு அமதிக்க, நாஸியத்தீ பிஎதிக, மாலின் பிய்ய ஹுக்முக்க, அதுலுன் பிய்ய கலாவுக்க, அஸ்அலுக்க பிகுல்லி இஸ்மின் ஹுவ லக, சம்மைத்த பிஹி நப்ஸக்க, அவ் அன்சல்தஹு பீ கிதாபிக அவ் அல்லம்தஹு அஹதன் மின் ஹல்கிக, அவ் இஸ்தஃதர்த்த பிஹி பீ இல்மில் கைபி இன்தக, அன் தஜ்அலல் குர்ஆனல் அலீம ரபீஅ கல்பீ, வநூர சத்ரீ, வஜலாஅ ஹுஸ்னீ, வதிஹாப ஹம்மீ வகம்மீ".

(பொருள்: யா அல்லாஹ்! நான் உன் அடிமை. உன் அடிமைகளான ஓர் ஆண் - ஒரு பெண்ணின் மகனாவேன். எனது குடும்பி உனது கையில் இருக்கிறது. என்னில் உனது கட்டளையே செல்லுபடியாகிறது. என் விஷயத்தில் உன் தீர்ப்பு நீதமானது. உனக்குச் சொந்தமான ஒவ்வொரு திருப்பெயர் கொண்டும் நான் உன்னிடம் யாசிக்கிறேன். அந்தப் பெயரை நீயே உனக்குச் சூட்டியிருப்பாய். அல்லது உனது வேதத்தில் அதை நீ அருளியிருப்பாய். அல்லது உனது படைப்புகளில் எவருக்கேனும் அதைக் கற்றுக் கொடுத்திருப்பாய். அல்லது மறைவானவை பற்றிய ஞானத்தில் உன்னிடத்தில் அதை வைத்திருப்பாய். (அவை அனைத்தைக் கொண்டும் உன்னிடம் கேட்கிறேன்.) அல்குர்ஆனை என் இதயத்தின் வசந்தமாக்குவாயாக! என் நெஞ்சத்தின் ஒளியாக்குவாயாக! எனது துயரத்தை நீக்கக்கூடியதாகவும் எனது கவலையை மறைக்கக் கூடியதாகவும் ஆக்குவாயாக!)

இது மனநோய்க்கான ஓர் ஆன்மீக மருந்தாகும். இது போன்ற இன்னும் பல துஆக்களை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருக்கிறாhகள். அவற்றை ஸஹீஹான துஆ புத்தகங்களில் காணலாம். எனினும் இன்று ஆன்மீக மருத்துவத்தை மக்கள் அலட்சியப்படுத்துவதற்கு ஈமான் பலவீனமடைந்ததே காரணமாகும். இதனால் பௌதீக மருத்துவத்தில் அதிகம் தங்கியிருக்க ஆரம்பித்து விட்டனர். ஈமான் உறுதியாக இருந்தால் ஆன்மீக ரீதியான மருத்துவம் அதிகம் தாக்கம் கொடுக்கக் கூடியதாகவும் விரைவில் சுகத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும்.

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் சில தோழர்களை ஒரு பயணம் அனுப்பி வைத்தார்கள். அத்தோழர்கள் செல்கிற வழியில் ஒரு கிராமத்தில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வேளை அந்த ஊர் மக்கள் இவர்களிடம் வந்து தமது தலைவருக்கு ஏதோ விஷஜந்து தீண்டி விட்டதாகவும் அதற்கு மந்திரிக்குமாறும் வேண்டிக் கொண்டனர். ஸஹாபாக்களில் ஒருவர் முன்வந்து சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி மந்திரித்தார். அவருக்கு உடனே குணம் கிடைத்தது. (ஹதீஸின் சுருக்கம் - புகாரி)

சூரத்துல் ஃபாதிஹாவை ஓதியவர் நிறைவான ஈமானிய உணர்வுடன் ஓதினார். பயன் கிடைத்தது. ஆனால் இன்று முஸ்லிம்களின் உள்ளங்களில் மார்க்கமும் ஈமானும் பலவீனமடைந்து விட்டது. மக்கள் வெளிப்படையான விஷயங்களில் மாத்திரம் தங்கியிருக்கிற நிலை தோன்றியுள்ளது. இதனால்தான் இத்தனை சோதனைகள்! அதே வேளை இந்தக் கூட்டத்திற்கு நேர் எதிராக ஒரு கூட்டம் உருவாகி மந்திரம் வைத்தியம் என்ற பெயரில் மனித மனங்களோடும் அவர்களது பொருளாதாரத்தோடும் விளையாடுவதைக் காண முடிகிறது. இவர்கள் உண்மையான மருத்துவர்களோ நபிவழியில் மந்திரிக்கக்கூடியவர்களோ அல்லர். மாறாக இவர்கள் மக்களின் பணத்தை அனியாயமாகச் சாப்பிடுபவர்கள். ஆக, ஆன்மீக மருத்துவத்தை ஒரு கூட்டம் ஒதுக்கித் தள்ள இன்னுமொரு கூட்டம் அதைவைத்து தொழில் செய்யவும் ஏமாற்றவும் செய்கிறது.

இந்த இரண்டு நிலைக்கும் நடுவே இருக்கக் கூடியவர்களே உண்மை முஸ்லிம்கள்.
Thanks: TAFAREG/ADIRAI THAMEEM

Hadeeth Qudsi

When a slave falls sick, reward will be recorded for him according to what he was doing in the state of health

(When a slave is sick, he gets reward to his credit according to the deeds he was doing when he was healthy)

Narrated Uqba bin Aamir (R.A.):
The Prophet (S.A.W.S.) said: "Every deed of a day is sealed up. When a believer falls ill, the angels say: O our Lord! Your slave so-and-so has fallen ill. The Lord, Azzawajal says: Note down to his credit the same deeds, he was doing before illness, until he heals up or dies.

(This Hadith is sound and reported by Ahmad in his Musnad)

மெளனங்கள்


முட்டைகளை
ஒத்திருக்கின்றன
மெளனங்கள்.

வெண்மையாலான ஓடு
வெளித்தெரியும்
சமாதானமாகவோ...சம்மதமாகவோ...!

உள்ளிருப்பு
தெரிவதில்லை
உடையும் வரை!

பொறுமை காத்து
பிரசவிக்கச் செய்யலாம்
புதிய பிறப்பை!

எனினும்..
உடைக்கப்பட்டே
உட்கொள்ளப்படுகின்றன
பெரும்பாலும்!

இன்னமும்
உடைக்கப்பட முடியாமலிருக்கும்
ஒற்றை முட்டையில்
உறைந்திருக்கலாம்
ஓர் மகா நிசப்தம்.


Thanks: பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)

Saturday, February 7, 2009

நபிமொழி

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''மறுமை நாளில் தீர்ப்பு கூறப்படும் மனிதர்களில் முதல் நபர், இறைவழியில் உயிரை தியாகம் செய்தவராவார். அவர் கொண்டு வரப்படுவார். தனது அருட்கொடையை அவரிடம் அல்லாஹ் எடுத்துக் கூறுவான். அவரும் அறிந்து கொள்வார். ''இது விஷயமாக நீ (உலகில்) என்ன செய்தாய்?'' என அல்லாஹ் கேட்பான். ''உனக்காகவே போரிட்டேன். இறுதியில் கொல்லப்பட்டேன்'' என்று கூறுவார். ''நீ பொய் கூறுகிறாய். ''பெரும் வீரர்'' என்று கூறப்படவே நீ போரிட்டாய். அவ்வாறே (மக்களால்) கூறப்பட்டது'' என்று அல்லாஹ் கூறுவான்.பின்பு முகம் குப்புற அவரை நரகில் போட கட்டளையிடப்படும். அடுத்தவர், கல்வியைக் கற்று, பிறருக்கும் கற்றுக் கொடுத்து, குர்ஆனை ஓதியவருமாவார். அவர் கொண்டு வரப்படுவார். அவரிடம் தன் அருட்கொடையை அல்லாஹ் எடுத்துக் கூறுவான். அவரும் அறிந்து கொள்வார். ''இது விஷயமாக (உலகில்) எப்படி நடந்து கொண்டாய்?'' என்று கேட்பான். ''நான் கல்வியைக் கற்றேன். பிறருக்கும் கற்றுக் கொடுத்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்'' என்று கூறுவார். ''நீ பொய் கூறுகிறாய். ''அறிஞர்'' என்று கூறப்பட வேண்டும் என்பதற்காக நீ கற்றுக் கொடுத்தாய். ''நன்கு ஓதுபவர்'' என்று கூறப்பட வேண்டும் என்பதற்காக குர்ஆனை நீ ஓதினாய். அவ்வாறே (மக்களால்) கூறப்பட்டது'' என்று அல்லாஹ் கூறுவான். பின்பு, ''அவரை முகம் குப்புற நரகில் போடுங்கள்'' என கட்டளையிடப்படும். அடுத்து, அல்லாஹ்விளனால் அனைத்து செல்வங்கள் பெற்ற வசதியானவரை கொண்டு வரப்படும். தன் அருட்கொடைகளை அவருக்கு அல்லாஹ் அறிவிப்பான். அதை அவரும் அறிந்து கொள்வார். ''இதிலே (உலகில்) எப்படி நடந்து கொண்டாய்?'' என அல்லாஹ் கேட்பான். ''எந்த வழியில் செய்யப்படுவதை நீ விரும்புவாயோ அந்த வழியில் உனக்காக நான் செலவு செய்தேன்!'' என்று கூறுவார். ''நீ பொய் கூறுகிறாhய் ''கொடையாளி'' என்று கூறப்பட வேண்டும் என்பதற்hக நீ இதைச் செய்தாய். இவ்வாறே (மக்களால்) கூறப்பட்டது'' என்று அல்லாஹ் கூறுவான். பின்பு நரகில் முகம் குப்புற அவரைப் போடுங்கள் என கட்டளையிடப்படும் என்று நபி (ஸல்) கூறினார்கள் முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)

Wednesday, February 4, 2009

இன்ஷா அல்லாஹ்

'நாளை நான் இதைச் செய்பவன் என்று எதைப் பற்றியும் கூறாதீர்! அல்லாஹ் நாடினால் தவிர, (முஹம்மதே!) நீர் மறந்து விடும் போது உமது இறைவனை நினைவு கூறுவீராக! எனது இறைவன் இதை விட குறைவான நேரத்தில் இதற்கு வழி காட்டிவிடக் கூடும் என்று கூறுவீராக!' (அல்குர்ஆன்)

குகை வாசிகளின் வரலாற்றுக்கிடையே மேற்கண்ட கட்டளையையும் இறைவன் பிறப்பிக்கிறான். நாளை செய்யப் போவதாகக் கூறும் எந்தக் காரியமானாலும் 'அல்லாஹ் நாடினால்' என்பதையும் சேர்த்துக் கூற வேண்டும் என்று இவ்விரு வசனங்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடுகின்றன.
இதில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய பல செய்திகள் உள்ளன. மனிதர்களிலேயே அல்லாஹ்வின் அன்புக்கு அதிகம் உரித்தானவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்பதை முஸ்லிம்கள் அறிந்து வைத்துள்ளோம். இவ்வளவு உயர்ந்த தகுதியில் உள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களேயானாலும் 'நாளை இதைச் செய்வேன்' என்று கூறக் கூடாது. அது மிகவும் அற்பமான காரியமானாலும் கூட அவ்வாறு கூறக் கூடாது என்று இவ்வசனம் அழுத்தமாகக் கூறுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட யாராக இருந்தாலும் அவர்கள் நினைத்ததைச் செய்து விட முடியாது. ஏகத்துவக் கொள்கையின் இரத்தினச் சுருக்கமான சான்றாக இது அமைகின்றது.

திருக்குர்ஆனைப் பற்றியோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறிவுரைகள் பற்றியோ எந்த அறிவும் இல்லாத ஒரு முஸ்லிம் இந்தச் சொற்றொடரை மட்டும் அறிந்திருந்தால் கூட அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பதிலிருந்து தப்பித்துக் கொள்வார். அல்லாஹ் நாடினால் தான் எதையும் செய்ய முடியும் என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நபிகள் நாயகம் (ஸல்) கூற வேண்டுமென்று கட்டளையிடப்பட்டு அவ்வாறு அவர்கள் கூறியும் இருக்கிறார்கள் என்றால் அவர்களின் கால் தூசுக்குச் சமமாகாத மகான்கள் மற்றும் பெரியவர்களுக்கு எள்ளளவும் எந்த அதிகாரமும் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம். இது முதலில் அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமின்றி முந்தைய நபிமார்களுக்கும் வழிமுறையாக்கப்பட்டிருந்தது என்பதை இந்த அத்தியாயத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

மூஸா நபியவர்களின் சம்பவம் பற்றி இந்த அத்தியாயத்தில் கூறும் போது அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள், என்று மூஸா நபி கூறியதாக அல்லாஹ் கூறுகிறான். முந்தைய நபிமார்களிடம் இந்த வழிமுறை இருந்தது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கூறப்பட்ட கட்டளையாக இது இருந்தாலும் இதை நாமும் கடைபிடித்தாக வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே அல்லாஹ்வின் நாட்டமின்றி எதையும் செய்ய முடியாது எனும் போது மற்றவர்கள் நிச்சயமாக செய்ய முடியாது என்பதிலிருந்து இதை அறியலாம்.
இதை முஸ்லிம்கள் அனைவரும் அறிந்து வைத்திருந்தாலும் இது பற்றி அவர்களிடம் சில அறியாமைகளும் நிலவுகின்றன. 'இன்ஷா அல்லாஹ் நீங்கள் இதைச் செய்யுங்கள்! இன்ஷா அல்லாஹ் சாப்பிடுங்கள்' என்பது போல் சிலர் இன்ஷா அல்லாஹ் என்பதைப் பயன்படுத்துகின்றனர். இது தவறாகும். ஏனெனில் 'நான் செய்வேன்' என்று தன்னைப் பற்றிக் கூறும் போது தான் இன்ஷா அல்லாஹ் கூறுமாறு இறைவன் கட்டளையிடுகிறான். கட்டளையிடும் போதோ பிறர் குறித்துப் பேசும் போதோ இன்ஷா அல்லாஹ் எனக் கூறுவது பொருளற்றதாகும்.
இன்னும் சிலர் உள்ளனர். இவர்கள் மிகப் பெரிய காரியங்களுக்கு மட்டும் இன்ஷா அல்லாஹ் கூறுவார்கள். சிறிய காரியங்களுக்குக் கூற மாட்டார்கள். 'நாளை பத்தாயிரம் தருகிறேன்' என்று கூறும் போது இன்ஷா அல்லாஹ் எனக் கூறும் இவர்கள் 'நாளை பத்து ரூபாய் தருகிறேன்' எனக் கூறும் போது இன்ஷா அல்லாஹ் எனக் கூறுவதில்லை. இது அடிப்படைக் கொள்கையைப் பாதிக்கின்ற மிகவும் மோசமான போக்காகும். பத்தாயிரம் தருவதற்குத் தான் அல்லாஹ்வின் நாட்டம் தேவை. பத்து ரூபாய் தருவதற்கு அவன் நாட்டம் தேவையில்லை. அவன் நாட்டமின்றியே என்னால் தந்து விட முடியும் என்ற எண்ணம் ஊடுறுவி இருப்பதால் தான் இவ்வாறு நடக்கின்றனர். இவ்வசனத்தில் இந்தப் போக்கு தடுக்கப்பட்டுள்ளது.

'லிஷையின்' 'எந்த காரியம் பற்றியும்' நாளை செய்வேன் எனக் கூறாதே என்ற கட்டளையில் பெரிய காரியம் மட்டுமின்றி சிறிய காரியமும் அடங்கும். அற்பமான காரியங்களும் இதனுள் அடங்க வேண்டும் என்பதற்காகவே இச்செயல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மூன்றாவதாக அறிந்து கொள்ள வேண்டியதாகும். எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் இவ்வாறு கூற நாம் மறந்து விடலாம். பொதுவாகவே மறதிக்காக இறைவன் குற்றம் பிடிக்க மாட்டான். ஆயினும் நாம் மறதியாக இன்ஷா அல்லாஹ்வைக் கூறாதிருந்து விட்டோமே என்று நினைவுக்கு வந்தால் அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதற்காக வழிமுறையையும் இவ்வசனங்கள் கூறுகின்றன.
ஆனால் நமக்குத் தெரிந்து உலகில் பெரும்பாலான முஸ்லிம்கள் இந்த வழிமுறையைக் கடைப் பிடிப்பதில்லை. 'ஒரு வாரத்தில் கடனைத் திருப்பித் தருகிறேன்' என்று நாம் கூறும் போது இன்ஷா அல்லாஹ் கூற நாம் மறந்து விட்டோம் என்று வைத்துக் கொள்வோம். சற்று நேரத்திலோ மறுநாளோ இது நமக்கு நினைவுக்கு வருகிறது. உடனே இறைவனை நினைவு கூர்ந்து இறைவன் ஒரு வாரத்தை விடக் குறைவான காலத்திலேயே கொடுக்கச் செய்யக் கூடும் என்று கூற வேண்டும். ஒரு நாளில் தருவதாகக் கூறும் போது இன்ஷா அல்லாஹ் கூறத் தவறிவிட்டு சற்று நேரத்தில் நினைவுக்கு வந்தால் உடனே அல்லாஹ்வை மனதில் நினைத்து 'என் இறைவன் ஒருநாளை விடவும் குறைவாகவே இதை நிறைவேற்றித் தரக் கூடும்' என்று கூற வேண்டும். இதை 24 வது வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். இவ்வாறு கூற வேண்டும் என்று இறைவன் கட்டளையே பிறப்பித்திருந்தாலும் குர்ஆன், ஹதீஸை பின்பற்றுபவர்கள் கூட இதை நடைமுறைப் படுத்தாமல் இருக்கிறார்கள். இது நான்காவதாக அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.
மறதிக்குப் பரிகாரமாக அல்லாஹ் நமக்குக் கற்றுத் தரும் வார்த்தையில் கூட அவன் நம்மீது கருணை மழை பொழிந்திருப்பது ஐந்தாவதாக நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.
ஒரு வாரத்தில் செய்வதாக ஒரு காரியத்தைப் பற்றி நாம் பேசி விட்டோம். இன்ஷா அல்லாஹ் கூறவில்லை என்று வைத்துக் கொள்வோம். நாம் வாக்களித்த அந்த நேரத்துக்குள் கொடுக்கலாம். அல்லது அந்த நேரம் கடந்த பின் கொடுக்கலாம். அல்லது அறவே கொடுக்க முடியாமல் போகலாம். அல்லது வாக்களித்ததை விடக் குறைவான நேரத்திலேயே அதைக் கொடுக்கலாம். இந்த நான்கில் ஒவ்வொருவரும் நான்காவதையே விரும்புவோம். தேர்வு செய்வோம். மறதியின் காரணமாக இன்ஷா அல்லாஹ் கூறாதவரை மற்ற மூன்று விஷயங்களைக் கூறுமாறு கட்டளையிடாமல் 'நான் வாக்களித்ததை விட குறைவான காலத்திலேயே என் இறைவனால் முடிக்க முடியும்' என்று கூறச் செய்கிறான். இதன் மூலம் அடியார்கள் மீது அவன் காட்டும் அளப்பரிய கருணையை அறியலாம்.