Tuesday, July 14, 2009

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் பெந்தகொஸ்தே மினிஸ்டர் கென்னத் L.ஜெர்கின்ஸ்!

முன்னுரை:
ஒரு முன்னாள் மினிஸ்டர் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களின் மூத்த உறுப்பினர் என்ற முறையில் இருள்களில் நடந்து செல்பவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது என் மீது கடமையாக இருக்கிறது. நான் இஸ்லாத்தைத் தழுவிய பிறகு சத்திய இஸ்லாத்தின் ஒளியை அனுபவிப்பதற்கு பாக்கியம் இல்லாதவர்களுக்கு உதவ வேண்டிய அத்தியாவசிய தேவையிருப்பதை உணர்ந்தேன்.

முஹம்மது (ஸல்) அவர்களும் மற்றும் நேர்வழி பெற்ற அவருடைய வழிவந்தவர்களான சத்திய சஹாபாக்கள் போதித்தவாறும் அழகிய மார்க்கமான இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்கும் என் மீது கருனை புரிந்த வல்ல இறைவனுக்கு நான் நன்றி கூற மிகவும் கடமைப்பட்டுள்ளேன். நாம் உண்மையான நேர்வழியை அடைவதும், இம்மை மறுமை வெற்றிக்கு வழிவகுக்கும் அந்த நேர்வழியைப் பின்பற்றுவதற்குரிய ஆற்றலை அடைவதும் இறைவனின் கருனையினாலேயன்றி வேறில்லை.

நான் இஸ்லாத்தை தழுவும் போது அஷ்செய்க் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் பாஸ் அவர்கள் என் மீது அன்புகாட்டியதற்காக நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். ஒவ்வொரு தடவையும் அவரை சந்திக்கும் போது நான் அவரிடமிருந்து கற்ற கல்வியை மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்வதில் ஆசைப்படுகிறேன். இவர் தவிர இன்னும் அநேகர் எனக்கு ஆர்வமுட்டி மார்க்க அறிவைப் பெறுவதில் உதவினார்கள். அவர்களின் பெயர்களில் யாரையேனும் நான் விட்டுவேனோ என்ற அச்சத்தின் காரணமாக அவர்களின் பெயரை நான் பட்டியலிடவில்லை. எனவே நான் ஒரு உண்மையான முஸ்லிமாக மாறுவதற்காக ஒவ்வொரு சகோதர, சகோதரிகளையும் எனக்கு எல்லாவகையிலும் உதவி செய்ய வைத்த அல்லாஹ்விற்கு நான் நன்றி செலுத்தினால் போதும் என எண்ணுகிறேன்.
இந்த சிறிய முயற்சி அனைவருக்கும் பயனளிக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன். கிறிஸ்தவ உலகில் பெருவாரியாகக் காணப்படும் மனம் போன போக்கில் வாழும் வாழ்க்கைக்கு ஒருவிடிவு காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையை கிறிஸ்தவர்கள் பெறுவார்கள் என்று நம்புகிறேன். கிறிஸ்தவர்களின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தீர்வு கிறிஸ்தவர்களிடம் கிடையாது. ஏனென்றால் அந்தப் பிரச்சனைகளுக்கு மூலகாரணமாக விளங்குவதே அவர்கள் தான். மாறாக, கிறிஸ்தவ உலகை செல்லரித்துக் கொண்டிருக்கின்ற பிரச்சனைகளுக்கும் மற்றும் உலகில் காணப்படும் மற்ற எல்லா மார்க்கங்களிலும் உள்ள பிரச்சனைகளுக்குமான ஒரே தீர்வு இஸ்லாம் தான். இறைவன் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டி நமது எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் எற்ற சிறந்த நற்கூலியை வழங்குவானாகவும்.
அப்துல்லாஹ் முஹம்மது அல்-ஃபாரூக்கீ அத்தாயிஃப், சவுதி அரேபியா.
அறிமுகம்!
சிறு வயது முதலே கடவுள் பக்தி உள்ளவனாக வளர்கப்பட்டேன். என்னுடைய பாதி வாழ்க்கையை தீவிர பெந்தகோஸ்தே கிறிஸ்தவதத்தைப் பின்பற்றுகின்ற என் பாட்டியிடம் நான் வளர்ந்ததால் சிறுவயது முதலே கிறிஸ்தவ தேவாலயம் எனது வாழ்க்கையின் முக்கிய அம்சமாகி விட்டது. நான் ஆறு வயதை அடைந்தபோது, “ஒரு நல்ல சிறுவனாக இருப்பதற்காக பரலோகத்தில் எனக்காக நல்ல வெகுமதிகள் காத்திருக்கின்றது; அடம்பிடிக்கும் மற்ற சிறுவர்களுக்காக தண்டனைகள் காத்திருக்கிறது” எனவும் நம்பினேன். “பொய்யர்கள் அனைவரும் இழிவுபடுத்தப்பட்டு நரகத்திற்கு செல்வார்கள்; அங்கே அவர்கள் நிரந்தரமாக உரிக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார்கள்” என்றும் எனது பாட்டி எனக்கு போதித்து வந்தார்கள்.

என்னுடைய தாயார் இரண்டு முழு நேரப் பணிகள் செய்து வந்தார். மேலும் அவர் தன்னுடைய தாயார் (எனது பாட்டி) எனக்கு போதித்தவற்றையும் நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார். என்னுடைய பாட்டியின் பரலோகத்தைப் பற்றிய எச்சரிக்கைகளைப் பற்றி நான் சிரத்தை எடுத்துக் கொண்டது போல என்னுடைய இளைய சகோதரரும் மூத்த சகோதரியும் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, சிறு வயதில் முழு நிலவை செந்நிறத்தில் காணும் போது நான் அழ ஆரம்பித்து விடுவேன். காரணம் என்னவெனில் உலக அழிவு நாளின் அடையாளங்களில் ஒன்று தான் நிலவு இரத்தத்தைப் போன்று சிவப்பு நிறமாகிவிடுவது என்று போதிக்கப்பட்டிருந்தேன்.

எனக்கு எட்டு வயதாகும் போது இவ்வுலகிலும் ஆகாயத்திலும் காணப்படும் உலக அழிவு நாளுக்கான அடையாளங்களாக நான் நினைத்தவற்றின் காரணமாக எனக்குள் பயம் வளரத் தொடங்கியது. அதன் காரணமாக நியாயத் தீர்ப்பு நாள் இப்படித்தான் இருக்கும் என்று எனக்கு கணவுகள் தோன்றியது. என்னுடைய வீடு இரயில் தண்டவாளத்திற்கு அருகில் இருந்தது. அந்த தண்டவாளத்தின் வழியே அடிக்கடி இரயில் சென்று கொண்டிருந்தது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, இரயில் எஞ்சினின் ஊதல் சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டு விழித்து, ‘நான் இறந்து விட்டேன்; இப்போது சூர் ஊதல் மூலமாக மீண்டும் உயிர்பிக்கப்படுகின்றோம்’ என்று எண்ணிக் கொள்வேன். சிறுவர் சிறுமியர்களுக்கான பைபிளின் கதைகள் மற்றும் வாய்மொழி போதனைகளின் காரணமாக இத்தகைய எண்ணங்கள் என் பிஞ்சு மனதிலே ஆழமாக பதிந்திருந்தன.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நல்ல உடைகளை உடுத்திக் கொண்டு தேவாலயங்களுக்குச் செல்வோம். என்னுடைய தாத்தா தான் எங்களை எல்லாம் அழைத்துச் செல்வார். நாங்கள் காலை பதினோரு மணிக்கு தேவாலயத்திற்குச் சென்றால் மதியம் மூன்று மணி வரை அங்கேயே இருப்போம். பல நேரங்களில் என் பாட்டியின் காலில் படுத்து உறங்கிய நினைவிருக்கிறது. சில நேரங்களில் நானும் என்னுடைய சகோதரரும் ஞாயிறு வகுப்பு மற்றும் காலை நேர பிரார்த்தனைக்கு இடைப்பட்ட வேளையில் தேவாலயத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதுண்டு. அப்பொழுது எங்கள் தாத்தாவுடன் இரயிலடியில் அமர்ந்துக் கொண்டு போகின்ற வருகின்ற இரயில்களை வேடிக்கைப் பார்ப்பதுண்டு. என் தாத்தா தேவாலயத்திற்குச் செல்வதில்லை. சிறிது காலத்திற்குப் பிறகு என் தாத்தா வாத நோயால் பாதிக்கப்பட்டு பகுதியாக செயலிழந்தார். அதன் காரணமாக நாங்கள் தொடர்ந்தார் போல் தேவாலயத்திற்கு செல்ல இயலாமல் போனது. இந்தக் காலக் கட்டம் என்னுடைய வாழ்க்கையின் மிக முக்கியமானதாக இருந்தது.

தேவாலயத்திற்கு செல்ல இயலாததால் நிம்மதியாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் போது நானாகவே செல்ல வேண்டிய அவசியம் உணர்ந்தேன். எனக்கு பதினாறு வயதாக இருக்கும் போது என்னுடைய நன்பரின் தந்தை பாதிரியாராக இருக்கும் தேவாலயத்திற்கு செல்ல ஆரம்பித்தேன். அது மிகச் சிறிய கட்டிடமாக இருந்தது. அதில் என்னுடைய நன்பரின் குடும்பத்தினர், நான் மற்றும் என்னுடைய மற்றொரு பள்ளி நன்பன் ஆகியோர் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தோம். இது அந்த தேவாலயம் மூடப்படும் வரை பல மாதங்கள் நீடித்தது. பிறகு நான் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு பல்கலைகழகத்தில் சேர்ந்த போது நான் என்னுடைய மார்க்கத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகளை மீண்டும் உணர ஆரம்பித்தேன். ஆகவே பெந்தகோஸ்தே போதனைகளின் பால் நான் என்னை முழுவதுமாக இணைத்துக் கொண்டேன். எனக்கு “ஞானஸ்நானம்” செய்விக்கப்பட்டு “பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டதாக” கூறப்பட்டேன். ஒரு கல்லூரி மானவன் என்ற முறையில் தேவாலயத்தைக் கொண்டு பெருமிதம் அடைந்தேன். ஒவ்வொருவரிடமும் என்னிடமிருந்து நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தது. எனவே நான் “பாவமீட்சிக்கான பாதையில்” இருப்பதாக உணர்ந்து மகிழ்ச்சி அடைந்தேன்.

நான் தேவாலயத்திற்குச் செல்லும் போதெல்லாம் அதன் கதவுகள் எனக்காகத் திறக்கப்பட்டது. நான் நாள் கணக்காக, வாரக்கணக்காக பைபிளை இடைவிடாது படித்துக் கொண்டிருப்பேன். அப்போது கிறிஸ்தவ அறிஞர்களின் பேச்சுக்களைக் கேட்டு என்னுடைய 20 வயதில் மினிஸ்ட்ரியோடு என்னை இணைத்துக் கொண்டேன். அதன் பிறகு நான் மார்க்க பிரசங்கம் செய்ய ஆரம்பித்து அதன் மூலம் மக்களிடைய நன்றாக அறிமுகம் ஆனேன். நான் இருக்கும் தேவாலயத்தைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தவிர மற்ற எவரும் பாவமீட்சி அடையமுடியாது என்று நான் உறுதியாக நம்பினேன். நான் கடவுளை எப்படி நம்பினேனோ அவ்வாறு கடவுளை நம்பாதவர்களை எல்லாம் கடுமையாக விமர்சித்தேன்.

மேலும் ‘இயேசு நாதரும் இறைவனும் ஒன்று தான்’ என்று நினைத்திருந்தேன். நம்முடைய தேவாலயம் திரித்துவத்தில் நம்பிக்கையில்லாதது என்றும், ஆனால் இயேசு நாதரே (அலை) பிதாவும், மகனும் பரிசுத்த ஆவியுமாவார் என்றும் நான் பயிற்றுவிக்கப்பட்டேன். நான் எனக்குள் அவற்றைப் புரிந்துக் கொள்வதற்கு முயற்சி செய்தேன். ஆனால் நான் உண்மையைக் கூற வேண்டும், என்னால் அதை முழுவதுமாக புரிந்துக் கொள்ள இயலவில்லை. என்னைப் பொறுத்தவரை அதன் சித்தாந்தம் எனக்கு அறிவுப்பூர்வமாகப்பட்டது. பெண்களின் புனித ஆடைகளுக்கும் ஆண்களின் இறை பக்திக்கும் நான் மரியாதை அளித்தேன். தங்களை முழுமையாக மறைத்துக் கொண்டு, முகங்களில் மேக்அப் சாதனங்களை போடாமல், தங்களை இயேசு கிறிஸ்துவின் தூதர்களாக கருதுகின்ற பெண்களையுடைய கிறிஸ்த சித்தாந்தத்தை நான் போதிக்கிறேன் என்று எனக்குள் மகிழ்ந்து பெருமிதம் அடைந்தேன். பரலோக வெற்றிக்கான உண்மையான வழியை நான் கண்டு கொண்டாதாக சிறிது கூட சந்தேக நிழலில்லாமல் என்னில் நானே திருப்தியடைந்துக் கொண்டேன். மற்ற தேவாலயங்களில் இருப்பவர்களுடனும் மற்ற கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களுடனும் எனக்கிருக்கும் பைபிளின் அறிவைக் கொண்டு விவாதம் செய்து அவர்களை மௌனமாக்குவேன். நூற்றுக் கணக்கான பைபிளின் வசனங்களை மனனம் செய்திருந்தேன். இதுவே என்னுடைய மத போதனைகளுக்கு ஒரு முக்கிய விளம்பரமாக இருந்தது. ஆயினும், நான் சரியான பாதையில் இருப்பதாக எனக்குள் உணர்ந்தாலும் என்னுடைய மற்றொரு பகுதி உண்மையைத் தேடிக் கொண்டிருந்தது. இதைத் தவிர உயர்வான உண்மை வேறெங்காவது இருக்க வேண்டும் என நான் உணர்ந்தேன்.

நான் தனிமையில் இருக்கும் போது தியானத்தில் ஈடுபட்டு, ‘நான் தவறான செயல்களைச் செய்து கொண்டிருந்தால் என்னை மன்னித்து எனக்கு சரியான பாதையைக் காட்டுமாறு இறைவனிடம் வேண்டிக் கொண்டிருப்பேன். அந்த சமயங்களில் நான் ஒரு முஸ்லிமைக் கூட சந்தித்ததில்லை. நான் அறிந்தவரையில், எலிஜா முஹம்மது என்பவரைப் பின்பற்றுபவர்கள் தான் “நாங்கள் இஸ்லாமியர்கள்” என்று கூறிக்கொண்டிருந்தனர். அவர்கள் “கறுப்பு முஸ்லிம்கள்” என்றும் அழைக்கப்படுவதுண்டு. எழுபதுகளின் பிற்பகுதியில் அமைச்சர் லூயிஸ் ஃபராக்கான் ‘நேசன் ஆஃப் இஸ்லாம்’ என்ற அமைப்பிற்குப் புத்துயிர் அளித்து புதுப்பித்துக் கொண்டிருக்கின்ற வேளை அது!
ஒருமுறை நான் என்னுடைய சக ஊழியரின் அழைப்பின் பேரில் அமைச்சர் ஃபராக்கானின் பேச்சைக் கேட்பதற்காக சென்றேன். அந்தப் பேச்சு என் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவல்ல ஒரு அனுபவமாக உணர்ந்தேன். இதற்கு முன்பு வேறு எந்த கறுப்பு இன மனிதரும் இவர் பேசியது போன்று பேசி நான் கேட்டதில்லை. உடனே அவருடனான ஒரு சந்திப்பை ஏற்படுத்தி அவரை என்னுடைய மத நம்பிக்கைக்கு மாற்றலாம் என விரும்பினேன். வழிதவறியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பைபிளை போதித்து மதமாற்றம் செய்வதில் மிகுந்த ஆர்வமுடன் இருந்தேன்.
கல்லூரி படிப்பை முடித்த பிறகு நான் முழு நேரப் பணியில் ஈடுபட்டேன். நான் மினிஸ்ட்ரிக்கு தகுதியான பொழுது எலிஜா முஹம்மதுவை பின்பற்றுபவர்களின் தொடர்பு எனக்கு அதிகமானது. கறுப்பு இனத்தவர்களின் தீமைகளைக் களைவதற்குப் பாடுபடும் அவர்களுடைய முயற்சியை நான் பாராட்டினேன். அவர்களுடைய ஆக்கங்களை நான் வாங்குவது அவர்களுடனான கலந்துரையாடல் போன்றவற்றின் மூலம் அவர்களுக்கு நான் ஆதரவு அளித்தேன். அவர்கள் எதைத் தான் நம்புகிறார்கள் என்று அறிந்துக் கொள்வதற்காக அவர்கள் கல்வி கற்கும் இடங்களுக்கே சென்று பயில ஆரம்பித்தேன். அவர்களுடைய சில கொள்கைகளை நிலை நிறுத்துவதற்காக பைபிளின் ஆதாரங்களை பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. நான் பைபிளைப் பற்றி நன்றாக அறிந்திருந்ததால் அவர்கள் பைபிளை தவறாக புரிந்து அதற்கு வேறு அர்த்தம் கொடுக்கிறார்கள் என்பது என்னை வருத்தத்திற்குள்ளாக்கியது. மேலும் நான் அங்கேயுள்ள பைபிளின் போதனை வகுப்புகளுக்குச் சென்று பைபிளின் பாடம் பயின்று பைபிளின் பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்றேன்.

அதற்குப் பிறகு ஆறு வருடங்கள் கழித்து நான் டெக்ஸாஸ் என்ற பகுதிக்குச் சென்று அங்கேயுள்ள இரண்டு தேவாலயங்களில் என்னை இணைத்துக் கொண்டேன். முதலாவது தேவாலயத்தின் மிக இளமையான தலைவர் பைபிளின் கல்வியறிவிலும் அனுபத்திலும் குறைவானவராக இருந்தார். இந்த நேரத்தில் என்னுடைய பைபிளின் அறிவு சராசரியை விட அதிகமாக இருந்தது. பைபிளைப் போதிப்பது என்பது எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. நான் வேதாகமங்களை மிக ஆழமாக உற்று நோக்கினேன். அதன் காரணமாக தற்போதைய தேவாலயத்தின் தற்போதைய தலைவரை விட நான் அதிகமாக அறிந்திருப்பதாக உணர்ந்தேன். ஆனால் மரியாதையின் நிமித்தமாக நான் அந்த தேவாலயத்திலிருந்து விடுபட்டு மற்றொரு நகரத்திலுள்ள தேவாலயத்தில் சேர்ந்தேன். அங்கு இன்னும் நிறைய கற்றுக் கொள்ளலாம் என எனக்குத் தோன்றியது. அந்த தேவாலயத்தின் தலைமைப் பாதிரியார் நன்கு கற்றறிந்த அறிஞராக இருந்தார். அவர் ஒரு சிறந்த மத போதகராக இருந்தார். ஆனால் அவருடைய சில எண்ணங்கள், செயல்பாடுகள் தேவாலயத்தின் விதிமுறைகளுக்கு மாற்றமானதாக இருந்தது. அவர் சற்று சுதந்திரமான கருத்துக்களையுடையவராக இருந்தார். இருப்பினும் அவருடைய போதனைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போது என்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் மிக முக்கியமான பாடம் ஒன்றைக் கற்கும் வாய்ப்புக் கிட்டியது. அதாவது ‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்ற பாடமாகும். வெளிப்பார்வைக்கு வேறு விதமாகத் தோன்றினாலும் நான் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு தேவாலயத்தினுள் நிறைய தீமைகள் நடந்தது. தேவாலயத்தினுள் நடைபெற்றுக் கொண்டிருந்த இத்தகைய தீமைகள் என்னுள் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. நான் மிகத் தீவிரமாக போதித்து வந்த கொள்கைகளைப் பற்றி எனக்குள் கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன்.

கிறிஸ்த மினிஸ்ட்டிரியின் உயர் மட்டத்தல் மிகுந்த போட்டியும் பொறாமையும் நிலவுவதை நான் குறுகிய காலத்தில் உணர்ந்தேன். எனக்கு நன்கு பரிச்சயமாகியிருந்த பழக்க வழக்கங்களில் இருந்து நிறைய மாற்றங்கள் தென்பட்டது. நான் அநாகரிகமானது என்று கருதியிருந்த ஆடைகளை பெண்கள் அணிந்தார்கள். அநேக மக்கள் எதிர்பாலரைக் கவரக் கூடிய வகையில் ஆடைகளை அணிந்தார்கள். மேலும் பேராசையும் பணமும் தேவலாயத்தின் நிர்வாகத்தில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று நான் கண்டு கொண்டேன். சிறிய அளவிலான தேவாலயங்கள் மிகுந்த பொருளாதாரச் சிக்கலில் தவித்துக் கொண்டிருந்தது. அவர்கள் எங்களிடம் போதனைக் கூட்டங்களை நடத்தி அதன் மூலம் அந்த தேவாலயங்களுக்கு வருமானம் தேடித்தருமாறு வேண்டிக் கொண்டிருந்தார்கள். அந்த சிறிய தேவாலயங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு குறைவானதாக இருப்பின் என்னுடைய நேரத்தை அவர்களுக்கு போதனை செய்வதில் வீணாக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டேன். ஏனென்றால், அந்த தேவாலயங்களின் மூலம் எனக்கு அதிகமாக வருமானம் கிடைக்காது என்பதாகும். அப்போது நான் அவர்களிடம், நான் பொருளாதாரத்தைப் பெருக்குவதின் பின்னால் இல்லை என்றும் அந்த சிறிய தேவாலயங்கள் ஒரே ஒரு உறுப்பினரைக் கொண்டதாக இருப்பினும் அங்கே சென்று போதனை செய்வேன் என்றும் மேலும் அதை நான் இலவசமாகவும் செய்வேன் என்றும் கூறினேன். இது அங்கே மிகுந்த சஞ்சலப்பை ஏற்படுத்தியது. யாரை நான் சிறந்த அறிஞர் என்று கருதியிருந்தேனோ அவர்களிடமே “அவர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்களா என்பதை அறிவதற்காக” கேள்விகள் கேட்கத் துவங்கினேன்.

பைபிளைப் பற்றிய உண்மைகளைப் பற்றி போதிப்பதை விட பணம், பதவி, அதிகாரம் இவற்றுக்குத் தான் மிக முக்கியத்துவம் அங்கு இருப்பதை அறிந்துக் கொண்டேன். பைபிளைப் படிப்பவன் என்ற முறையில் அதில் நிறைய தவறுகளும், முரண்பாடுகளும், பொய்யான கற்பனை ஊடுருவல்களும் இருப்பதை நான் அறிவேன். பைபிளைப் பற்றிய உண்மையான தகவல்களை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என எண்ணினேன். ஆனால் பைபிளின் உண்மைகளை மக்களின் வெளிச்சத்திற்கு எடுத்துச் செல்வதை சாத்தானின் செயலாகக் கருதினர். ஆனால், நான் பைபிளின் போதனை வகுப்புகளின் போது வெளிப்படையாகவே போதகர்களிடம் கேள்விகள் கேட்கத் துவங்கினேன். ஆனால் ஒருவரால் கூட பதில் அளிக்க இயலவில்லை.’இயேசு நாதர் என்பர் எப்படி கடவுளாகவும் அதே நேரத்தில் பிதா, தேவகுமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவரையும் உள்ளடக்கிய ஒருவராகவும் இருக்கிறார்? ஆனால் எப்படி அவர் திரித்துவக் கொள்கைக்கு மாற்றமாகவும் இருக்கிறார்?’ என்ற என்னுடைய கேள்விக்கு ஒருவர் கூட பதில் அளிக்க முடியவில்லை. பல மதபோதகர்கள் “இவை பற்றி எங்களுக்குப் புரியவில்லை! ஆனால் நாங்கள் இவைகளை நம்புகிறோம்! அவ்வளவுதான்” என்று கூறுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை!

திருமணத்திற்கு முன்பே கற்பை இழப்பதும், விபச்சாரமும் தண்டணைகளுக்குரிய குற்றமாக கருதப்படவில்லை! சில மத போதகர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி தங்களின் வாழ்க்கையை அழித்துக் கொண்டதோடல்லாமல் தங்களின்குடும்பங்களையும் சீரழித்தார்கள். சில தேவாலயங்களின் தலைவர்கள் ஓரிணச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களாக இருந்தார்கள். மேலும் சில பேராயர்கள் மற்ற தேவலாயத்தின் உறுப்பினர்களுடைய மகள்களுடன் விபச்சாரம் செய்த குற்றமுடையவர்களாக இருந்தார்கள். இவைகள் அனைத்தும் மற்றும் நான் நியாயமான கேள்விகள் என்று கருதி கேட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்காதமையும் என்னை வேறு ஒரு மாற்றத்தை தேட வைத்தது. நான் சவூதி அரேபியாவில் ஒரு வேலையை ஏற்றுக் கொண்ட போது அந்த மாற்றம் வந்தது.

புதிய ஆரம்பம்!
நான் சவூதி அரேபியா வந்தவுடனே முஸ்லிம்களின் ஒரு வித்தியாசமான புதிய வாழ்க்கை முறையை பார்த்தேன். சவூதி ஆரெபியாவில் உள்ளவர்கள், நான் பார்த்திருந்த எலிஜா முஹம்மது மற்றும் லூயிஸ் ஃபராக்கான் ஆகியோர்களைப் பின்பற்றுபவர்களை விட வித்தியாசமானவர்களாக இருந்ததார்கள். இங்கு, அனைத்து நாடுகள், நிறங்கள் மற்றும் மொழிகளையுடையவர்களும் இருந்தார்கள். உடனே இந்த வித்தியாசமான புதிய மதத்தைப் பற்றிப் படிக்க வேண்டும் என்ற ஆவல் எனக்குள் தோன்றியது. தீர்க்கதரிசி முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை அளித்தது. அதனால் நான் மேலும் அறிந்து கொள்ள ஆர்வமானேன். இஸ்லாத்தின் பால் அழைத்துக் கொண்டிருக்கும் ஒரு முஸ்லிம் சகோதரரிடமிருந்து நான் சில புத்தகங்களைக் கேட்டேன். அவர் எனக்குத் தேவையான அனைத்துப் புத்தகங்களையும் கொண்டு வந்துக் கொடுத்தார். அவைகள் ஒவ்வொன்றையும் நான் மிக கவனமாகப் படித்தேன். அதன் பிறகு எனக்கு புனித குர்ஆன் கொடுக்கப்பட்டது. அதை நான் நான்கு மாதங்களுக்குள் பலமுறை படித்துவிட்டேன். நான் கேள்வி மேல் கேள்விகளாக அவர்களிடம் கேட்டேன். நான் கேட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் எனக்கு திருப்தியளிக்கின்ற வகையில் பதில்களும் கிடைத்தது.

அந்த முஸ்லிம் சகோதரர்கள் என்னை சமாதான படுத்துவதற்காக தங்களுக்குத் தெரிந்த அறிவை வைத்து முயற்சிக்காதது என்னை மிகுந்த வியப்பில் ஆழ்த்தியது. ஒரு சகோதரருக்கு நான் கேட்ட கேள்விக்கான பதில் தெரியவில்லை என்றால் அவர்கள் ‘எனக்கு அதற்கான விடை தெரியவில்லை என்றும் தெரிந்தவரிடம் கேட்க வேண்டும்’ என்று கூறிவிடுவார். மறுநாள், நான் கேட்ட கேள்விக்கான விடையோடு அவர் வருவார். மத்திய கிழக்கில் வாழும் இந்த அற்புதமான மனிதர்களின் பணிவை நான் உணர்ந்து வியந்தேன்.

பெண்கள் முகம் முதல் கால் வரை முழுவதுமாக மறைத்திருப்பது கண்டு மிகவும் வியந்துப் போனேன். மத தலைவர் என்று குறிப்பிட்ட எவரும் காணப்படவில்லை. மத தலைமைப் பதவியை அடைவதற்காக எவரும் போட்டி போடுவதில்லை!

இவைகள் அனைத்தும் மிக அற்புதமானவைகளாக எனக்குத் தென்பட்டது. ஆனால் நான் சிறு வயது முதல் பின்பற்றி வந்த போதனைகளை கைவிடுவது பற்றிய சிந்தனைகளை நான் எப்படி என்னுள் அனுமதிக்க முடியும்? பைபிளின் போதனைகளை கைவிடுவதா? பைபிள் எண்ணற்ற முறைகள் மாற்றத்திற்கு உள்ளாகி புதுப்பிக்கப்பட்டிருப்பினும் அதில் சில உண்மைகள் இருக்கிறது என்று எனக்குத் தெரியும். அப்போது எனக்கு அஷ்ஷெயக் அஹமது தீதாத் மற்றும் ரெவரென்ட் ஜிம்மி ஸ்வா(g)க்கத் ஆகியோர்களுக்கிடையே நடைபெற்ற ஒரு விவாத வீடியோ கேசட் ஒன்று வழங்கப்பட்டது. அந்த விவாதத்தைப் பார்த்த உடஃனேயே நான் முஸ்லிமாகி விட்டேன்.

நான் முறையாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்கான அறிவிப்பு செய்வதற்காக ஷெய்க் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் பாஸ் அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கே நான் இனிவரும் காலங்களில் கடந்து செல்ல வேண்டிய பாதைகளைப் பற்றியும் அதற்காக நான் என்னை எவ்வாறு தயார் படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டேன்.
நிச்சயமாக இது இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வந்த ஒரு பிறப்பாகும். அப்போது நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது குறித்து என்னுடைய தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள் அறிந்துக் கொண்டால் அவர்கள் என்ன பற்றி நினைப்பார்கள் என்று சிந்திக்கலானேன். அதற்கு நீண்ட காலம் படிக்கவில்லை. விடுமுறையில் அமெரிக்காவுக்குத் திரும்பியவுடன், ‘நான் நம்பிக்கையில் குறைவனானவன்’ என்று மகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டேன். துரோகி, முட்டாள் போன்ற பல பெயர்கள் எனக்குச் சூட்டப்பட்டது. தேவாலயங்களின் தலைவர்கள் என்று கூறப்படக் கூடியவர்கள் மக்களிடம் ‘அவர்களின் பிரார்த்தனைகளின் போது என்னை நினைவு கூறவேண்டாம்’ என்று கூறினார்கள். ஆனால் விந்தையானது என்னவென்றால் நான் அவைகளைப் பற்றி சிறிதும் பொருட்படுத்தவில்லை. அல்லாஹ் என்னைத் தேர்ந்தெடுத்து நேர்வழி காட்டியதற்காக நான் மிகுந்த சந்தோசமாக இருந்தேன். அதனால் அவர்களின் இந்த செயல்கள் எனக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

முன்பு நான் கிறிஸ்தவனாக இருந்தபோது எந்த அளவிற்கு ஒரு பற்றுள்ள கிறிஸ்தவனாக இருந்தேனோ அதே மாதிரி இப்போது ஒரு மிகப் பற்றுள்ள முஸ்லிமாக இருக்க விரும்பினேன். நிச்சயமாக இதற்கு நிறைய படிக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். இஸ்லாத்தைப் பொறுத்தவரை ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் அறிவை வளர்த்துக் கொண்டே போகலாம் என்பதை உணர்ந்துக் கொண்டேன். இஸ்லாத்தில் கல்வி கற்பது என்பது ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டும் சொந்தமானது அன்று! யார் வேண்டுமானாலும் கல்வி கற்பதற்குரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு கல்வியை கற்பதற்கு முழு சுதந்திரம் இருக்கிறது. என்னுடைய குர்ஆன் போதகர் ஸஹீஹ் முஸ்லிம் (ஹதீது கிரந்தம்) தொகுப்பு ஒன்றை எனக்கு பரிசாக வழங்கினார். அப்போது தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகள், அவர்களின் சொல், செயல்கள் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். நான் ஆங்கிலத்தில் இருக்கும் பெருவாரியான ஹதீது நூல்களை வாங்கிப் படித்தேன். இவற்றைப் படிக்கும் போது என்னுடைய பைபிள் ஞானம் கிறிஸ்தவ பின்னணியில் உள்ள நிகழ்வுகளைப் பற்றி அறிந்துக் கொள்வதற்கு எனக்கு பேருதவியாக இருந்தது.
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு எனக்கு என்னுடைய வாழ்க்கையே ஒரு முற்றிலும் புதிய வாழ்க்கையாக மாறியது. குறிப்பிடத்தக்க ஒரு பெரிய மாற்றம் என்னவெனில், மறுவுலக வாழ்க்கைக்கு தேவையானவற்றை தயார் செய்வதிலேயே தான் நாம் இந்த உலக வாழ்க்கையை செலவிட வேண்டும் என்பதை அறிந்த போது எனக்குள் ஏற்பட்ட மாற்றத்தைக் கூறலாம்.

மேலும் இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் நம்முடைய நல்ல எண்ணங்களுக்குக் கூட நற்கூலி வழங்கப்படுவோம் என்பதை அறியும் போது புதிய அனுபவமாக இருந்தது. நீங்கள் ஒரு நற்காரியத்தைச் செய்ய விரும்பினாலேயே அதற்கும் நற்கூலி கிடைக்கும். இது தேவாலயங்களின் போதனைகளுக்கு சற்று வித்தியாசமானது. அதாவது ‘நல்ல எண்ணங்கள் நரகத்திற்கான பாதையை வழிவகுக்கிறது’ என்பதாகும். வெற்றி பெறுவதற்கு வழியே இல்லை. நீங்கள் விபச்சாரம் போன்ற பெரிய தவறிழைத்திருந்தால் பாதியாருக்கு முன்னிலையில் பாவ மன்னிப்பு கோரவேண்டும். உங்கள் செயல்களைப் போறுத்தே நீங்கள் நீதி வழங்கப்படுவீர்கள்.

தற்போதைய மற்றும் எதிர்கால் செயல்கள்!
அல்-மதீனா பத்திரிக்கையின் நேர் முக காணலுக்குப் பிறகு என்னுடைய தற்போதைய மற்றும் எதிர்கால் செயல்கள் குறித்து என்னிடம் கேட்கப்பட்டது. என்னுடைய தற்போதைய குறிக்கோள் என்னவெனில் அரபியைக் கற்றுணர்ந்து இஸ்லாத்தைப் பற்றி மென்மேலும் படித்து இஸ்லாமிய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். மேலும் தற்போது நான் இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். கிறிஸ்தவ பின்னணியில் இருந்து வருவபவர்களிடம் உரை நிகழ்த்துவதற்கு அழைக்கப்படுகின்றேன். இறைவன் எனக்கு ஆயுளை நீட்டித்தால் மதங்களைப் பற்றிய ஒப்பாய்வு நூல்களை எழுத வேண்டும் என விரும்புகிறேன். உலகில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாத்தை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். பைபிளை நீண்ட நாட்களாக போதித்து வந்த ஆசான் என்ற முறையில் பல மில்லியன் மக்களால் நம்பப்படுகின்ற பைபிளில் காணப்படும் தவறுகளையும், முரண்பாடுகளையும் கற்பனையில் புனையப்பட்டு அதில் புகுத்தப்பட்டவைகளையும் எடுத்துக் கூறி அவர்களுக்கு உண்மையை உணர்த்த வேண்டுமென்பது என்னுடைய தலையாய கடமை என்பதை உணர்கிறேன்.

சந்தோசமான விசயம் என்னவென்றால் கிறிஸ்தவர்களிடையே நான் மிகப்பெரிய வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டிய அவசியம் ஏதுமில்லை. ஏனென்றால் நான், அவர்கள் பயன்படுத்துகின்ற வாக்குவாத் திறமையை போதித்த ஆசானாவேன். மேலும் நான் எப்படி பைபிளைக் கொண்டு திறமையாக வாதிட்டு கிறிஸ்தவத்தைப் பாதுகாப்பது என்று கற்றறிந்திருந்தேன். மேலும் அதே நேரத்தல் மினிஸ்டர்களாகிய எங்களுக்கு தேவலாயத்தின் தலைவர்களால் வெளிப்படையாக பேசுவதற்கோ அல்லது விவாதிப்பதற்கோ தடைவிதிக்கப்பட்டிருந்த ஒவ்வொரு வாதத்திற்கும் உரிய எதிர்வாதங்களைப் பற்றியும் நான் அறிந்து வைத்திருந்தேன்.

இறைவன் நம் அனைவருடைய அறியாமையை மன்னித்து சுவர்கத்திற்கு இட்டுச் செல்கின்ற நேரான வழியைக் காட்டுமாறு நான் பிரார்த்திக்கின்றேன். அனைத்துப் புகழும் இறைவனுக்கே உரித்தானது. இறைவன் அவனது இறுதித் துதர் முஹம்மது (ஸல்) அவர்கள், அவருடைய குடும்பத்தார்கள், அவரைப் பின்பற்றிய தோழர்கள் மற்றும் அவரைப் பின்பற்றியவர்களுக்கு அருள் புரிவானாகவும்.
நன்றி : http://www.islamreligion.com/

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் பெந்தகொஸ்தே மினிஸ்டர் கென்னத் L.ஜெர்கின்ஸ்!

முன்னுரை:
ஒரு முன்னாள் மினிஸ்டர் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களின் மூத்த உறுப்பினர் என்ற முறையில் இருள்களில் நடந்து செல்பவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது என் மீது கடமையாக இருக்கிறது. நான் இஸ்லாத்தைத் தழுவிய பிறகு சத்திய இஸ்லாத்தின் ஒளியை அனுபவிப்பதற்கு பாக்கியம் இல்லாதவர்களுக்கு உதவ வேண்டிய அத்தியாவசிய தேவையிருப்பதை உணர்ந்தேன்.

முஹம்மது (ஸல்) அவர்களும் மற்றும் நேர்வழி பெற்ற அவருடைய வழிவந்தவர்களான சத்திய சஹாபாக்கள் போதித்தவாறும் அழகிய மார்க்கமான இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்கும் என் மீது கருனை புரிந்த வல்ல இறைவனுக்கு நான் நன்றி கூற மிகவும் கடமைப்பட்டுள்ளேன். நாம் உண்மையான நேர்வழியை அடைவதும், இம்மை மறுமை வெற்றிக்கு வழிவகுக்கும் அந்த நேர்வழியைப் பின்பற்றுவதற்குரிய ஆற்றலை அடைவதும் இறைவனின் கருனையினாலேயன்றி வேறில்லை.

நான் இஸ்லாத்தை தழுவும் போது அஷ்செய்க் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் பாஸ் அவர்கள் என் மீது அன்புகாட்டியதற்காக நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். ஒவ்வொரு தடவையும் அவரை சந்திக்கும் போது நான் அவரிடமிருந்து கற்ற கல்வியை மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்வதில் ஆசைப்படுகிறேன். இவர் தவிர இன்னும் அநேகர் எனக்கு ஆர்வமுட்டி மார்க்க அறிவைப் பெறுவதில் உதவினார்கள். அவர்களின் பெயர்களில் யாரையேனும் நான் விட்டுவேனோ என்ற அச்சத்தின் காரணமாக அவர்களின் பெயரை நான் பட்டியலிடவில்லை. எனவே நான் ஒரு உண்மையான முஸ்லிமாக மாறுவதற்காக ஒவ்வொரு சகோதர, சகோதரிகளையும் எனக்கு எல்லாவகையிலும் உதவி செய்ய வைத்த அல்லாஹ்விற்கு நான் நன்றி செலுத்தினால் போதும் என எண்ணுகிறேன்.

இந்த சிறிய முயற்சி அனைவருக்கும் பயனளிக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன். கிறிஸ்தவ உலகில் பெருவாரியாகக் காணப்படும் மனம் போன போக்கில் வாழும் வாழ்க்கைக்கு ஒருவிடிவு காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையை கிறிஸ்தவர்கள் பெறுவார்கள் என்று நம்புகிறேன். கிறிஸ்தவர்களின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தீர்வு கிறிஸ்தவர்களிடம் கிடையாது. ஏனென்றால் அந்தப் பிரச்சனைகளுக்கு மூலகாரணமாக விளங்குவதே அவர்கள் தான். மாறாக, கிறிஸ்தவ உலகை செல்லரித்துக் கொண்டிருக்கின்ற பிரச்சனைகளுக்கும் மற்றும் உலகில் காணப்படும் மற்ற எல்லா மார்க்கங்களிலும் உள்ள பிரச்சனைகளுக்குமான ஒரே தீர்வு இஸ்லாம் தான். இறைவன் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டி நமது எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் எற்ற சிறந்த நற்கூலியை வழங்குவானாகவும்.

அப்துல்லாஹ் முஹம்மது அல்-ஃபாரூக்கீ அத்தாயிஃப், சவுதி அரேபியா.

அறிமுகம்!
சிறு வயது முதலே கடவுள் பக்தி உள்ளவனாக வளர்கப்பட்டேன். என்னுடைய பாதி வாழ்க்கையை தீவிர பெந்தகோஸ்தே கிறிஸ்தவதத்தைப் பின்பற்றுகின்ற என் பாட்டியிடம் நான் வளர்ந்ததால் சிறுவயது முதலே கிறிஸ்தவ தேவாலயம் எனது வாழ்க்கையின் முக்கிய அம்சமாகி விட்டது. நான் ஆறு வயதை அடைந்தபோது, “ஒரு நல்ல சிறுவனாக இருப்பதற்காக பரலோகத்தில் எனக்காக நல்ல வெகுமதிகள் காத்திருக்கின்றது; அடம்பிடிக்கும் மற்ற சிறுவர்களுக்காக தண்டனைகள் காத்திருக்கிறது” எனவும் நம்பினேன். “பொய்யர்கள் அனைவரும் இழிவுபடுத்தப்பட்டு நரகத்திற்கு செல்வார்கள்; அங்கே அவர்கள் நிரந்தரமாக உரிக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார்கள்” என்றும் எனது பாட்டி எனக்கு போதித்து வந்தார்கள்.

என்னுடைய தாயார் இரண்டு முழு நேரப் பணிகள் செய்து வந்தார். மேலும் அவர் தன்னுடைய தாயார் (எனது பாட்டி) எனக்கு போதித்தவற்றையும் நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார். என்னுடைய பாட்டியின் பரலோகத்தைப் பற்றிய எச்சரிக்கைகளைப் பற்றி நான் சிரத்தை எடுத்துக் கொண்டது போல என்னுடைய இளைய சகோதரரும் மூத்த சகோதரியும் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, சிறு வயதில் முழு நிலவை செந்நிறத்தில் காணும் போது நான் அழ ஆரம்பித்து விடுவேன். காரணம் என்னவெனில் உலக அழிவு நாளின் அடையாளங்களில் ஒன்று தான் நிலவு இரத்தத்தைப் போன்று சிவப்பு நிறமாகிவிடுவது என்று போதிக்கப்பட்டிருந்தேன்.

எனக்கு எட்டு வயதாகும் போது இவ்வுலகிலும் ஆகாயத்திலும் காணப்படும் உலக அழிவு நாளுக்கான அடையாளங்களாக நான் நினைத்தவற்றின் காரணமாக எனக்குள் பயம் வளரத் தொடங்கியது. அதன் காரணமாக நியாயத் தீர்ப்பு நாள் இப்படித்தான் இருக்கும் என்று எனக்கு கணவுகள் தோன்றியது. என்னுடைய வீடு இரயில் தண்டவாளத்திற்கு அருகில் இருந்தது. அந்த தண்டவாளத்தின் வழியே அடிக்கடி இரயில் சென்று கொண்டிருந்தது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, இரயில் எஞ்சினின் ஊதல் சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டு விழித்து, ‘நான் இறந்து விட்டேன்; இப்போது சூர் ஊதல் மூலமாக மீண்டும் உயிர்பிக்கப்படுகின்றோம்’ என்று எண்ணிக் கொள்வேன். சிறுவர் சிறுமியர்களுக்கான பைபிளின் கதைகள் மற்றும் வாய்மொழி போதனைகளின் காரணமாக இத்தகைய எண்ணங்கள் என் பிஞ்சு மனதிலே ஆழமாக பதிந்திருந்தன.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நல்ல உடைகளை உடுத்திக் கொண்டு தேவாலயங்களுக்குச் செல்வோம். என்னுடைய தாத்தா தான் எங்களை எல்லாம் அழைத்துச் செல்வார். நாங்கள் காலை பதினோரு மணிக்கு தேவாலயத்திற்குச் சென்றால் மதியம் மூன்று மணி வரை அங்கேயே இருப்போம். பல நேரங்களில் என் பாட்டியின் காலில் படுத்து உறங்கிய நினைவிருக்கிறது. சில நேரங்களில் நானும் என்னுடைய சகோதரரும் ஞாயிறு வகுப்பு மற்றும் காலை நேர பிரார்த்தனைக்கு இடைப்பட்ட வேளையில் தேவாலயத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதுண்டு. அப்பொழுது எங்கள் தாத்தாவுடன் இரயிலடியில் அமர்ந்துக் கொண்டு போகின்ற வருகின்ற இரயில்களை வேடிக்கைப் பார்ப்பதுண்டு. என் தாத்தா தேவாலயத்திற்குச் செல்வதில்லை. சிறிது காலத்திற்குப் பிறகு என் தாத்தா வாத நோயால் பாதிக்கப்பட்டு பகுதியாக செயலிழந்தார். அதன் காரணமாக நாங்கள் தொடர்ந்தார் போல் தேவாலயத்திற்கு செல்ல இயலாமல் போனது. இந்தக் காலக் கட்டம் என்னுடைய வாழ்க்கையின் மிக முக்கியமானதாக இருந்தது.

தேவாலயத்திற்கு செல்ல இயலாததால் நிம்மதியாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் போது நானாகவே செல்ல வேண்டிய அவசியம் உணர்ந்தேன். எனக்கு பதினாறு வயதாக இருக்கும் போது என்னுடைய நன்பரின் தந்தை பாதிரியாராக இருக்கும் தேவாலயத்திற்கு செல்ல ஆரம்பித்தேன். அது மிகச் சிறிய கட்டிடமாக இருந்தது. அதில் என்னுடைய நன்பரின் குடும்பத்தினர், நான் மற்றும் என்னுடைய மற்றொரு பள்ளி நன்பன் ஆகியோர் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தோம். இது அந்த தேவாலயம் மூடப்படும் வரை பல மாதங்கள் நீடித்தது. பிறகு நான் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு பல்கலைகழகத்தில் சேர்ந்த போது நான் என்னுடைய மார்க்கத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகளை மீண்டும் உணர ஆரம்பித்தேன். ஆகவே பெந்தகோஸ்தே போதனைகளின் பால் நான் என்னை முழுவதுமாக இணைத்துக் கொண்டேன். எனக்கு “ஞானஸ்நானம்” செய்விக்கப்பட்டு “பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டதாக” கூறப்பட்டேன். ஒரு கல்லூரி மானவன் என்ற முறையில் தேவாலயத்தைக் கொண்டு பெருமிதம் அடைந்தேன். ஒவ்வொருவரிடமும் என்னிடமிருந்து நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தது. எனவே நான் “பாவமீட்சிக்கான பாதையில்” இருப்பதாக உணர்ந்து மகிழ்ச்சி அடைந்தேன்.

நான் தேவாலயத்திற்குச் செல்லும் போதெல்லாம் அதன் கதவுகள் எனக்காகத் திறக்கப்பட்டது. நான் நாள் கணக்காக, வாரக்கணக்காக பைபிளை இடைவிடாது படித்துக் கொண்டிருப்பேன். அப்போது கிறிஸ்தவ அறிஞர்களின் பேச்சுக்களைக் கேட்டு என்னுடைய 20 வயதில் மினிஸ்ட்ரியோடு என்னை இணைத்துக் கொண்டேன். அதன் பிறகு நான் மார்க்க பிரசங்கம் செய்ய ஆரம்பித்து அதன் மூலம் மக்களிடைய நன்றாக அறிமுகம் ஆனேன். நான் இருக்கும் தேவாலயத்தைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தவிர மற்ற எவரும் பாவமீட்சி அடையமுடியாது என்று நான் உறுதியாக நம்பினேன். நான் கடவுளை எப்படி நம்பினேனோ அவ்வாறு கடவுளை நம்பாதவர்களை எல்லாம் கடுமையாக விமர்சித்தேன்.

மேலும் ‘இயேசு நாதரும் இறைவனும் ஒன்று தான்’ என்று நினைத்திருந்தேன். நம்முடைய தேவாலயம் திரித்துவத்தில் நம்பிக்கையில்லாதது என்றும், ஆனால் இயேசு நாதரே (அலை) பிதாவும், மகனும் பரிசுத்த ஆவியுமாவார் என்றும் நான் பயிற்றுவிக்கப்பட்டேன். நான் எனக்குள் அவற்றைப் புரிந்துக் கொள்வதற்கு முயற்சி செய்தேன். ஆனால் நான் உண்மையைக் கூற வேண்டும், என்னால் அதை முழுவதுமாக புரிந்துக் கொள்ள இயலவில்லை. என்னைப் பொறுத்தவரை அதன் சித்தாந்தம் எனக்கு அறிவுப்பூர்வமாகப்பட்டது. பெண்களின் புனித ஆடைகளுக்கும் ஆண்களின் இறை பக்திக்கும் நான் மரியாதை அளித்தேன். தங்களை முழுமையாக மறைத்துக் கொண்டு, முகங்களில் மேக்அப் சாதனங்களை போடாமல், தங்களை இயேசு கிறிஸ்துவின் தூதர்களாக கருதுகின்ற பெண்களையுடைய கிறிஸ்த சித்தாந்தத்தை நான் போதிக்கிறேன் என்று எனக்குள் மகிழ்ந்து பெருமிதம் அடைந்தேன். பரலோக வெற்றிக்கான உண்மையான வழியை நான் கண்டு கொண்டாதாக சிறிது கூட சந்தேக நிழலில்லாமல் என்னில் நானே திருப்தியடைந்துக் கொண்டேன். மற்ற தேவாலயங்களில் இருப்பவர்களுடனும் மற்ற கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களுடனும் எனக்கிருக்கும் பைபிளின் அறிவைக் கொண்டு விவாதம் செய்து அவர்களை மௌனமாக்குவேன். நூற்றுக் கணக்கான பைபிளின் வசனங்களை மனனம் செய்திருந்தேன். இதுவே என்னுடைய மத போதனைகளுக்கு ஒரு முக்கிய விளம்பரமாக இருந்தது. ஆயினும், நான் சரியான பாதையில் இருப்பதாக எனக்குள் உணர்ந்தாலும் என்னுடைய மற்றொரு பகுதி உண்மையைத் தேடிக் கொண்டிருந்தது. இதைத் தவிர உயர்வான உண்மை வேறெங்காவது இருக்க வேண்டும் என நான் உணர்ந்தேன்.

நான் தனிமையில் இருக்கும் போது தியானத்தில் ஈடுபட்டு, ‘நான் தவறான செயல்களைச் செய்து கொண்டிருந்தால் என்னை மன்னித்து எனக்கு சரியான பாதையைக் காட்டுமாறு இறைவனிடம் வேண்டிக் கொண்டிருப்பேன். அந்த சமயங்களில் நான் ஒரு முஸ்லிமைக் கூட சந்தித்ததில்லை. நான் அறிந்தவரையில், எலிஜா முஹம்மது என்பவரைப் பின்பற்றுபவர்கள் தான் “நாங்கள் இஸ்லாமியர்கள்” என்று கூறிக்கொண்டிருந்தனர். அவர்கள் “கறுப்பு முஸ்லிம்கள்” என்றும் அழைக்கப்படுவதுண்டு.
எழுபதுகளின் பிற்பகுதியில் அமைச்சர் லூயிஸ் ஃபராக்கான் ‘நேசன் ஆஃப் இஸ்லாம்’ என்ற அமைப்பிற்குப் புத்துயிர் அளித்து புதுப்பித்துக் கொண்டிருக்கின்ற வேளை அது! ஒருமுறை நான் என்னுடைய சக ஊழியரின் அழைப்பின் பேரில் அமைச்சர் ஃபராக்கானின் பேச்சைக் கேட்பதற்காக சென்றேன். அந்தப் பேச்சு என் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவல்ல ஒரு அனுபவமாக உணர்ந்தேன். இதற்கு முன்பு வேறு எந்த கறுப்பு இன மனிதரும் இவர் பேசியது போன்று பேசி நான் கேட்டதில்லை. உடனே அவருடனான ஒரு சந்திப்பை ஏற்படுத்தி அவரை என்னுடைய மத நம்பிக்கைக்கு மாற்றலாம் என விரும்பினேன். வழிதவறியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பைபிளை போதித்து மதமாற்றம் செய்வதில் மிகுந்த ஆர்வமுடன் இருந்தேன்.

கல்லூரி படிப்பை முடித்த பிறகு நான் முழு நேரப் பணியில் ஈடுபட்டேன். நான் மினிஸ்ட்ரிக்கு தகுதியான பொழுது எலிஜா முஹம்மதுவை பின்பற்றுபவர்களின் தொடர்பு எனக்கு அதிகமானது. கறுப்பு இனத்தவர்களின் தீமைகளைக் களைவதற்குப் பாடுபடும் அவர்களுடைய முயற்சியை நான் பாராட்டினேன். அவர்களுடைய ஆக்கங்களை நான் வாங்குவது அவர்களுடனான கலந்துரையாடல் போன்றவற்றின் மூலம் அவர்களுக்கு நான் ஆதரவு அளித்தேன். அவர்கள் எதைத் தான் நம்புகிறார்கள் என்று அறிந்துக் கொள்வதற்காக அவர்கள் கல்வி கற்கும் இடங்களுக்கே சென்று பயில ஆரம்பித்தேன். அவர்களுடைய சில கொள்கைகளை நிலை நிறுத்துவதற்காக பைபிளின் ஆதாரங்களை பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. நான் பைபிளைப் பற்றி நன்றாக அறிந்திருந்ததால் அவர்கள் பைபிளை தவறாக புரிந்து அதற்கு வேறு அர்த்தம் கொடுக்கிறார்கள் என்பது என்னை வருத்தத்திற்குள்ளாக்கியது. மேலும் நான் அங்கேயுள்ள பைபிளின் போதனை வகுப்புகளுக்குச் சென்று பைபிளின் பாடம் பயின்று பைபிளின் பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்றேன்.

அதற்குப் பிறகு ஆறு வருடங்கள் கழித்து நான் டெக்ஸாஸ் என்ற பகுதிக்குச் சென்று அங்கேயுள்ள இரண்டு தேவாலயங்களில் என்னை இணைத்துக் கொண்டேன். முதலாவது தேவாலயத்தின் மிக இளமையான தலைவர் பைபிளின் கல்வியறிவிலும் அனுபத்திலும் குறைவானவராக இருந்தார். இந்த நேரத்தில் என்னுடைய பைபிளின் அறிவு சராசரியை விட அதிகமாக இருந்தது. பைபிளைப் போதிப்பது என்பது எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. நான் வேதாகமங்களை மிக ஆழமாக உற்று நோக்கினேன். அதன் காரணமாக தற்போதைய தேவாலயத்தின் தற்போதைய தலைவரை விட நான் அதிகமாக அறிந்திருப்பதாக உணர்ந்தேன். ஆனால் மரியாதையின் நிமித்தமாக நான் அந்த தேவாலயத்திலிருந்து விடுபட்டு மற்றொரு நகரத்திலுள்ள தேவாலயத்தில் சேர்ந்தேன். அங்கு இன்னும் நிறைய கற்றுக் கொள்ளலாம் என எனக்குத் தோன்றியது. அந்த தேவாலயத்தின் தலைமைப் பாதிரியார் நன்கு கற்றறிந்த அறிஞராக இருந்தார். அவர் ஒரு சிறந்த மத போதகராக இருந்தார். ஆனால் அவருடைய சில எண்ணங்கள், செயல்பாடுகள் தேவாலயத்தின் விதிமுறைகளுக்கு மாற்றமானதாக இருந்தது. அவர் சற்று சுதந்திரமான கருத்துக்களையுடையவராக இருந்தார். இருப்பினும் அவருடைய போதனைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அப்போது என்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் மிக முக்கியமான பாடம் ஒன்றைக் கற்கும் வாய்ப்புக் கிட்டியது. அதாவது ‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்ற பாடமாகும். வெளிப்பார்வைக்கு வேறு விதமாகத் தோன்றினாலும் நான் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு தேவாலயத்தினுள் நிறைய தீமைகள் நடந்தது. தேவாலயத்தினுள் நடைபெற்றுக் கொண்டிருந்த இத்தகைய தீமைகள் என்னுள் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. நான் மிகத் தீவிரமாக போதித்து வந்த கொள்கைகளைப் பற்றி எனக்குள் கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன்.

கிறிஸ்த மினிஸ்ட்டிரியின் உயர் மட்டத்தல் மிகுந்த போட்டியும் பொறாமையும் நிலவுவதை நான் குறுகிய காலத்தில் உணர்ந்தேன். எனக்கு நன்கு பரிச்சயமாகியிருந்த பழக்க வழக்கங்களில் இருந்து நிறைய மாற்றங்கள் தென்பட்டது. நான் அநாகரிகமானது என்று கருதியிருந்த ஆடைகளை பெண்கள் அணிந்தார்கள். அநேக மக்கள் எதிர்பாலரைக் கவரக் கூடிய வகையில் ஆடைகளை அணிந்தார்கள். மேலும் பேராசையும் பணமும் தேவலாயத்தின் நிர்வாகத்தில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று நான் கண்டு கொண்டேன். சிறிய அளவிலான தேவாலயங்கள் மிகுந்த பொருளாதாரச் சிக்கலில் தவித்துக் கொண்டிருந்தது. அவர்கள் எங்களிடம் போதனைக் கூட்டங்களை நடத்தி அதன் மூலம் அந்த தேவாலயங்களுக்கு வருமானம் தேடித்தருமாறு வேண்டிக் கொண்டிருந்தார்கள். அந்த சிறிய தேவாலயங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு குறைவானதாக இருப்பின் என்னுடைய நேரத்தை அவர்களுக்கு போதனை செய்வதில் வீணாக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டேன். ஏனென்றால், அந்த தேவாலயங்களின் மூலம் எனக்கு அதிகமாக வருமானம் கிடைக்காது என்பதாகும். அப்போது நான் அவர்களிடம், நான் பொருளாதாரத்தைப் பெருக்குவதின் பின்னால் இல்லை என்றும் அந்த சிறிய தேவாலயங்கள் ஒரே ஒரு உறுப்பினரைக் கொண்டதாக இருப்பினும் அங்கே சென்று போதனை செய்வேன் என்றும் மேலும் அதை நான் இலவசமாகவும் செய்வேன் என்றும் கூறினேன். இது அங்கே மிகுந்த சஞ்சலப்பை ஏற்படுத்தியது. யாரை நான் சிறந்த அறிஞர் என்று கருதியிருந்தேனோ அவர்களிடமே “அவர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்களா என்பதை அறிவதற்காக” கேள்விகள் கேட்கத் துவங்கினேன்.

பைபிளைப் பற்றிய உண்மைகளைப் பற்றி போதிப்பதை விட பணம், பதவி, அதிகாரம் இவற்றுக்குத் தான் மிக முக்கியத்துவம் அங்கு இருப்பதை அறிந்துக் கொண்டேன். பைபிளைப் படிப்பவன் என்ற முறையில் அதில் நிறைய தவறுகளும், முரண்பாடுகளும், பொய்யான கற்பனை ஊடுருவல்களும் இருப்பதை நான் அறிவேன். பைபிளைப் பற்றிய உண்மையான தகவல்களை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என எண்ணினேன். ஆனால் பைபிளின் உண்மைகளை மக்களின் வெளிச்சத்திற்கு எடுத்துச் செல்வதை சாத்தானின் செயலாகக் கருதினர். ஆனால், நான் பைபிளின் போதனை வகுப்புகளின் போது வெளிப்படையாகவே போதகர்களிடம் கேள்விகள் கேட்கத் துவங்கினேன். ஆனால் ஒருவரால் கூட பதில் அளிக்க இயலவில்லை.’இயேசு நாதர் என்பர் எப்படி கடவுளாகவும் அதே நேரத்தில் பிதா, தேவகுமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவரையும் உள்ளடக்கிய ஒருவராகவும் இருக்கிறார்? ஆனால் எப்படி அவர் திரித்துவக் கொள்கைக்கு மாற்றமாகவும் இருக்கிறார்?’ என்ற என்னுடைய கேள்விக்கு ஒருவர் கூட பதில் அளிக்க முடியவில்லை. பல மதபோதகர்கள் “இவை பற்றி எங்களுக்குப் புரியவில்லை! ஆனால் நாங்கள் இவைகளை நம்புகிறோம்! அவ்வளவுதான்” என்று கூறுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை!

திருமணத்திற்கு முன்பே கற்பை இழப்பதும், விபச்சாரமும் தண்டணைகளுக்குரிய குற்றமாக கருதப்படவில்லை! சில மத போதகர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி தங்களின் வாழ்க்கையை அழித்துக் கொண்டதோடல்லாமல் தங்களின் குடும்பங்களையும் சீரழித்தார்கள். சில தேவாலயங்களின் தலைவர்கள் ஓரிணச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களாக இருந்தார்கள். மேலும் சில பேராயர்கள் மற்ற தேவலாயத்தின் உறுப்பினர்களுடைய மகள்களுடன் விபச்சாரம் செய்த குற்றமுடையவர்களாக இருந்தார்கள். இவைகள் அனைத்தும் மற்றும் நான் நியாயமான கேள்விகள் என்று கருதி கேட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்காதமையும் என்னை வேறு ஒரு மாற்றத்தை தேட வைத்தது. நான் சவூதி அரேபியாவில் ஒரு வேலையை ஏற்றுக் கொண்ட போது அந்த மாற்றம் வந்தது.

புதிய ஆரம்பம்!
நான் சவூதி அரேபியா வந்தவுடனே முஸ்லிம்களின் ஒரு வித்தியாசமான புதிய வாழ்க்கை முறையை பார்த்தேன். சவூதி ஆரெபியாவில் உள்ளவர்கள், நான் பார்த்திருந்த எலிஜா முஹம்மது மற்றும் லூயிஸ் ஃபராக்கான் ஆகியோர்களைப் பின்பற்றுபவர்களை விட வித்தியாசமானவர்களாக இருந்ததார்கள். இங்கு, அனைத்து நாடுகள், நிறங்கள் மற்றும் மொழிகளையுடையவர்களும் இருந்தார்கள். உடனே இந்த வித்தியாசமான புதிய மதத்தைப் பற்றிப் படிக்க வேண்டும் என்ற ஆவல் எனக்குள் தோன்றியது. தீர்க்கதரிசி முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை அளித்தது. அதனால் நான் மேலும் அறிந்து கொள்ள ஆர்வமானேன். இஸ்லாத்தின் பால் அழைத்துக் கொண்டிருக்கும் ஒரு முஸ்லிம் சகோதரரிடமிருந்து நான் சில புத்தகங்களைக் கேட்டேன். அவர் எனக்குத் தேவையான அனைத்துப் புத்தகங்களையும் கொண்டு வந்துக் கொடுத்தார். அவைகள் ஒவ்வொன்றையும் நான் மிக கவனமாகப் படித்தேன். அதன் பிறகு எனக்கு புனித குர்ஆன் கொடுக்கப்பட்டது. அதை நான் நான்கு மாதங்களுக்குள் பலமுறை படித்துவிட்டேன். நான் கேள்வி மேல் கேள்விகளாக அவர்களிடம் கேட்டேன். நான் கேட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் எனக்கு திருப்தியளிக்கின்ற வகையில் பதில்களும் கிடைத்தது.

அந்த முஸ்லிம் சகோதரர்கள் என்னை சமாதான படுத்துவதற்காக தங்களுக்குத் தெரிந்த அறிவை வைத்து முயற்சிக்காதது என்னை மிகுந்த வியப்பில் ஆழ்த்தியது. ஒரு சகோதரருக்கு நான் கேட்ட கேள்விக்கான பதில் தெரியவில்லை என்றால் அவர்கள் ‘எனக்கு அதற்கான விடை தெரியவில்லை என்றும் தெரிந்தவரிடம் கேட்க வேண்டும்’ என்று கூறிவிடுவார். மறுநாள், நான் கேட்ட கேள்விக்கான விடையோடு அவர் வருவார். மத்திய கிழக்கில் வாழும் இந்த அற்புதமான மனிதர்களின் பணிவை நான் உணர்ந்து வியந்தேன்.

பெண்கள் முகம் முதல் கால் வரை முழுவதுமாக மறைத்திருப்பது கண்டு மிகவும் வியந்துப் போனேன். மத தலைவர் என்று குறிப்பிட்ட எவரும் காணப்படவில்லை. மத தலைமைப் பதவியை அடைவதற்காக எவரும் போட்டி போடுவதில்லை!

இவைகள் அனைத்தும் மிக அற்புதமானவைகளாக எனக்குத் தென்பட்டது. ஆனால் நான் சிறு வயது முதல் பின்பற்றி வந்த போதனைகளை கைவிடுவது பற்றிய சிந்தனைகளை நான் எப்படி என்னுள் அனுமதிக்க முடியும்? பைபிளின் போதனைகளை கைவிடுவதா? பைபிள் எண்ணற்ற முறைகள் மாற்றத்திற்கு உள்ளாகி புதுப்பிக்கப்பட்டிருப்பினும் அதில் சில உண்மைகள் இருக்கிறது என்று எனக்குத் தெரியும். அப்போது எனக்கு அஷ்ஷெயக் அஹமது தீதாத் மற்றும் ரெவரென்ட் ஜிம்மி ஸ்வா(g)க்கத் ஆகியோர்களுக்கிடையே நடைபெற்ற ஒரு விவாத வீடியோ கேசட் ஒன்று வழங்கப்பட்டது. அந்த விவாதத்தைப் பார்த்த உடஃனேயே நான் முஸ்லிமாகி விட்டேன்.

நான் முறையாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்கான அறிவிப்பு செய்வதற்காக ஷெய்க் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் பாஸ் அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கே நான் இனிவரும் காலங்களில் கடந்து செல்ல வேண்டிய பாதைகளைப் பற்றியும் அதற்காக நான் என்னை எவ்வாறு தயார் படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டேன். நிச்சயமாக இது இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வந்த ஒரு பிறப்பாகும்.அப்போது நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது குறித்து என்னுடைய தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள் அறிந்துக் கொண்டால் அவர்கள் என்ன பற்றி நினைப்பார்கள் என்று சிந்திக்கலானேன். அதற்கு நீண்ட காலம் படிக்கவில்லை. விடுமுறையில் அமெரிக்காவுக்குத் திரும்பியவுடன், ‘நான் நம்பிக்கையில் குறைவனானவன்’ என்று மகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டேன். துரோகி, முட்டாள் போன்ற பல பெயர்கள் எனக்குச் சூட்டப்பட்டது. தேவாலயங்களின் தலைவர்கள் என்று கூறப்படக் கூடியவர்கள் மக்களிடம் ‘அவர்களின் பிரார்த்தனைகளின் போது என்னை நினைவு கூறவேண்டாம்’ என்று கூறினார்கள். ஆனால் விந்தையானது என்னவென்றால் நான் அவைகளைப் பற்றி சிறிதும் பொருட்படுத்தவில்லை. அல்லாஹ் என்னைத் தேர்ந்தெடுத்து நேர்வழி காட்டியதற்காக நான் மிகுந்த சந்தோசமாக இருந்தேன். அதனால் அவர்களின் இந்த செயல்கள் எனக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

முன்பு நான் கிறிஸ்தவனாக இருந்தபோது எந்த அளவிற்கு ஒரு பற்றுள்ள கிறிஸ்தவனாக இருந்தேனோ அதே மாதிரி இப்போது ஒரு மிகப் பற்றுள்ள முஸ்லிமாக இருக்க விரும்பினேன். நிச்சயமாக இதற்கு நிறைய படிக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். இஸ்லாத்தைப் பொறுத்தவரை ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் அறிவை வளர்த்துக் கொண்டே போகலாம் என்பதை உணர்ந்துக் கொண்டேன். இஸ்லாத்தில் கல்வி கற்பது என்பது ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டும் சொந்தமானது அன்று! யார் வேண்டுமானாலும் கல்வி கற்பதற்குரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு கல்வியை கற்பதற்கு முழு சுதந்திரம் இருக்கிறது. என்னுடைய குர்ஆன் போதகர் ஸஹீஹ் முஸ்லிம் (ஹதீது கிரந்தம்) தொகுப்பு ஒன்றை எனக்கு பரிசாக வழங்கினார். அப்போது தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகள், அவர்களின் சொல், செயல்கள் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். நான் ஆங்கிலத்தில் இருக்கும் பெருவாரியான ஹதீது நூல்களை வாங்கிப் படித்தேன். இவற்றைப் படிக்கும் போது என்னுடைய பைபிள் ஞானம் கிறிஸ்தவ பின்னணியில் உள்ள நிகழ்வுகளைப் பற்றி அறிந்துக் கொள்வதற்கு எனக்கு பேருதவியாக இருந்தது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு எனக்கு என்னுடைய வாழ்க்கையே ஒரு முற்றிலும் புதிய வாழ்க்கையாக மாறியது. குறிப்பிடத்தக்க ஒரு பெரிய மாற்றம் என்னவெனில், மறுவுலக வாழ்க்கைக்கு தேவையானவற்றை தயார் செய்வதிலேயே தான் நாம் இந்த உலக வாழ்க்கையை செலவிட வேண்டும் என்பதை அறிந்த போது எனக்குள் ஏற்பட்ட மாற்றத்தைக் கூறலாம்.

மேலும் இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் நம்முடைய நல்ல எண்ணங்களுக்குக் கூட நற்கூலி வழங்கப்படுவோம் என்பதை அறியும் போது புதிய அனுபவமாக இருந்தது. நீங்கள் ஒரு நற்காரியத்தைச் செய்ய விரும்பினாலேயே அதற்கும் நற்கூலி கிடைக்கும். இது தேவாலயங்களின் போதனைகளுக்கு சற்று வித்தியாசமானது. அதாவது ‘நல்ல எண்ணங்கள் நரகத்திற்கான பாதையை வழிவகுக்கிறது’ என்பதாகும். வெற்றி பெறுவதற்கு வழியே இல்லை. நீங்கள் விபச்சாரம் போன்ற பெரிய தவறிழைத்திருந்தால் பாதியாருக்கு முன்னிலையில் பாவ மன்னிப்பு கோரவேண்டும். உங்கள் செயல்களைப் போறுத்தே நீங்கள் நீதி வழங்கப்படுவீர்கள்.

தற்போதைய மற்றும் எதிர்கால் செயல்கள்!
அல்-மதீனா பத்திரிக்கையின் நேர் முக காணலுக்குப் பிறகு என்னுடைய தற்போதைய மற்றும் எதிர்கால் செயல்கள் குறித்து என்னிடம் கேட்கப்பட்டது. என்னுடைய தற்போதைய குறிக்கோள் என்னவெனில் அரபியைக் கற்றுணர்ந்து இஸ்லாத்தைப் பற்றி மென்மேலும் படித்து இஸ்லாமிய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். மேலும் தற்போது நான் இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். கிறிஸ்தவ பின்னணியில் இருந்து வருவபவர்களிடம் உரை நிகழ்த்துவதற்கு அழைக்கப்படுகின்றேன். இறைவன் எனக்கு ஆயுளை நீட்டித்தால் மதங்களைப் பற்றிய ஒப்பாய்வு நூல்களை எழுத வேண்டும் என விரும்புகிறேன். உலகில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாத்தை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். பைபிளை நீண்ட நாட்களாக போதித்து வந்த ஆசான் என்ற முறையில் பல மில்லியன் மக்களால் நம்பப்படுகின்ற பைபிளில் காணப்படும் தவறுகளையும், முரண்பாடுகளையும் கற்பனையில் புனையப்பட்டு அதில் புகுத்தப்பட்டவைகளையும் எடுத்துக் கூறி அவர்களுக்கு உண்மையை உணர்த்த வேண்டுமென்பது என்னுடைய தலையாய கடமை என்பதை உணர்கிறேன்.

சந்தோசமான விசயம் என்னவென்றால் கிறிஸ்தவர்களிடையே நான் மிகப்பெரிய வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டிய அவசியம் ஏதுமில்லை. ஏனென்றால் நான், அவர்கள் பயன்படுத்துகின்ற வாக்குவாத் திறமையை போதித்த ஆசானாவேன். மேலும் நான் எப்படி பைபிளைக் கொண்டு திறமையாக வாதிட்டு கிறிஸ்தவத்தைப் பாதுகாப்பது என்று கற்றறிந்திருந்தேன். மேலும் அதே நேரத்தல் மினிஸ்டர்களாகிய எங்களுக்கு தேவலாயத்தின் தலைவர்களால் வெளிப்படையாக பேசுவதற்கோ அல்லது விவாதிப்பதற்கோ தடைவிதிக்கப்பட்டிருந்த ஒவ்வொரு வாதத்திற்கும் உரிய எதிர்வாதங்களைப் பற்றியும் நான் அறிந்து வைத்திருந்தேன்.

இறைவன் நம் அனைவருடைய அறியாமையை மன்னித்து சுவர்கத்திற்கு இட்டுச் செல்கின்ற நேரான வழியைக் காட்டுமாறு நான் பிரார்த்திக்கின்றேன். அனைத்துப் புகழும் இறைவனுக்கே உரித்தானது. இறைவன் அவனது இறுதித் துதர் முஹம்மது (ஸல்) அவர்கள், அவருடைய குடும்பத்தார்கள், அவரைப் பின்பற்றிய தோழர்கள் மற்றும் அவரைப் பின்பற்றியவர்களுக்கு அருள் புரிவானாகவும்.

இஸ்லாம் மயமாகும் ஐரோப்பா கண்டம்! - Part 2

இறைவனின் பேரருளால் இன்று இஸ்லாம் மேற்கத்திய உலக மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாய் அமைந்துள்ளது. குடும்பப் பாசப் பிணைப்பு, சமூகக் கட்டுப்பாடு, சமூகப் பரீஷ்காரம், முதலியவைகள் இல்லாத முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டடுள்ள அந்நாடுகளில் உள்ள மக்கள் இஸ்லாத்தில் இணைய விரும்பினால் அதைத் தடுக்க அவர்களின் குடும்பத்தினரோ, அந்நாட்டு அரசுகளோ முனைவதில்லை. அந்நாட்டு மக்கள் இஸ்லாத்தை நன்கு அறிந்து, உணர்ந்து ஏற்றுக் கொள்கிறார்கள். அம்மக்களில் ஐந்து பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் அவர்களில் நான்கு பேர் பெண்களாக இருக்கிறார்கள். பெண்களுக்கு உண்மையான மதிப்பும், கவுரவமும், பல உரிமைகளும் இஸ்லாத்தில் மட்டும் தான் உண்டு என்று தெரிந்து வருகிறார்கள். கிறிஸ்தவ ரோமன் கத்தோலிக்கர்களின் திருச்சபையின் அறிக்கையின்படி, இன்னும் சில ஆண்டுகளில் இஸ்லாம் உலகின் பெரும்பான்மை மார்க்கமாக அமையும்.

இத்தகைய வேகமான இஸ்லாமிய வளர்ச்சியை மேற்குலகம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா? மேற்குலகத்தின் ஆட்சியாளர்களும் அறிவு ஜீவிகளும், உலகின் மிகப் பெரிய ஊடககங்கள், செய்தித்தாள்கள், டெலிவிஷன் சாட்டிலைட் சேனல்கள் இவைகளில் பெரும்பான்மையானவற்றைத் தம் கைகளில் வைத்துக் கொண்டு ‘பொய் கருத்துருவாக்கம்’ செய்து கொண்டும், இஸ்லாமியர்களுக்கு, ‘பயங்கரவாதிகள்’, ‘தீவிரவாதிகள்’, என்ற இழிவுப் பெயர்களை சூட்டியும், தமது மக்களை நம்ப வைத்தும் வருகின்றனர். ஆனால் இவைகள் எல்லாம் ‘கோயபல்ஸ்’ தத்துவம் - அதாவது “பொய்யை திரும்ப திரும்ப ஆயிரம் முறை கூறினால் அது உண்மையைப் போல் தோற்றமளிக்கும்” - என்றாலும், இஸ்லாத்தின் உண்மை நிலையை - சாந்தி மார்க்கத்தை - மறைத்துவிட முடியவில்லை!

‘எவர்கள் நேரிய வழி தங்களுக்குத் தெளிவாகிவிட்ட பிறகு நிராகரிக்கவும், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுக்கவும், தூதரைக் கடுமையாக எதிர்க்கவும் செய்தார்களோ, அவர்களால் உண்மையில் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் இழைத்திட முடியாது. மாறாக, அல்லாஹ் அவர்களுடைய செயல்கள் அனைத்தையும் பாழாக்கிவிடுவான்’ (அல்-குர்ஆன் 47:32)

‘நாகரீகம்’ என்ற போர்வையிலும், பெண் விடுதலை என்ற மாயையிலும் அந்நாட்டு நிராகரிக்கும் பெண்களை கெடுத்து, அவர்களை போகப் பொருளாக மட்டும் மதித்து, அவர்களைக் கொச்சைப்படுத்தி தம் இச்சைகளைத் தீர்த்துக் கொள்ளும் மேற்கத்திய நிராகரிக்கும் ஆண் வர்க்கம் இஸ்லாத்தை இழித்துக் கூறுவதில் வியப்பில்லை தான்! ஏனெனில் இஸ்லாம் அங்கு முழுமையாகப் பரவி விடுமானால், அவர்களின் காமக் களியாட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும். இளம் கன்னிப் பெண்கள் எவனோ ஒருவனிடம் உயிரினும் மேலான தன்னுடைய கற்பையும், மானத்தையும் இழந்துவிட்டு வேறொருவனை வெட்கமின்றி திருமணம் செய்யமாட்டார்கள்! நிமிடத்திற்கு ஒரு கற்பழிப்பு, பலாத்காரம் என்று பெண்ணினத்தை அழிப்பவனுக்கு மரண தண்டனை அளிக்கப்படும்! பெண்கள் பர்தா அணிந்து கண்ணியமாய் வெளியில் தோற்றமளிப்பர். மதுக் கூடங்களும், டிஸ்கோ நடனங்களும், நீச்சல் குளங்களும் இன்னும் ஆண்-பெண் தகாத உறவுக்கு வழிவகுக்கும் அத்துனைக் கூடங்களும் மூடப்படும்! மேலும் சூதாட்டக் கேஸினோக்களும், லாட்டரி சீட்டு சுரண்டல்களும், அடியோடு ஒழிக்கப்படும்! இன்னும் கருப்பு பொருளாதாரத்திற்கு (Black Economy) ஆதாரமான எல்லா நடவடிக்கைகளும், அவைகளை ஊக்குவிக்கும் சமுதாய ஒட்டுண்ணிகளும் (Social Parasites) கூண்டோடு களையெடுக்கப்படுவார்கள்! சமுதாயமும் நாடும் சுபிட்ச நிலையை அடையும்!

இவைகள் எல்லாம் இஸ்லாமிய ஆட்சி வந்துவிட்டால் ஒரு நாட்டில் சாத்தியப்படுமா என்றால் - அந்நாட்டின் ஆட்சியாளர்கள் தூய்மையான இஸ்லாத்தை, இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கொண்டுவந்த குர்ஆன் - நபிவழி இவ்விரண்டையும் பலமாக பற்றிப் பிடித்து தன சுயவிருப்பு, வெறுப்புக்கு ஆட்படாதவராகவும் ஆட்சி செய்தால் சாத்தியப்படும். ஆனால் தற்போது மேற்கத்திய ஆட்சியாளர்களாய் இருப்பவர்கள் ஒரு தூய இஸ்லாமிய சுய நிர்ணய மக்கள் ஆட்சியை - மக்களின் பிரதிநிதியான கலீபா - ஆட்சியை உலகில் எந்த நாட்டிலும் கொண்டு வர அனுமதிக்க மாட்டார்கள். அப்படி ஒரு மாதிரி இஸ்லாமிய ஆட்சி (Model Islamic Government) ஒன்று தோன்றிவிடுமானால், அதன் குடிமக்கள் தூய இஸ்லாமிய நெறியினை பின்பற்றுவார்களானால் - அதன் வேகமும், வளர்ச்சியும், மிகவும் ஆச்சர்யப்படத்தக்கதாகவும், வரலாற்றில் 1400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது திரும்ப நிகழ்வது போல இருக்கும்.
ஆம்! நமது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உலகில் மீண்டும் தோற்றுவித்த இஸ்லாம், அவர்களின் 23 வருட தூதுத்துவ வாழ்க்கையில் அன்றைய அரேபிய தீபகற்பம் முழுவதும் பரவியது. தோன்றிய 50 வருடங்களுக்குள் பக்கத்திலுள்ள ஆப்ரிக்கா, ஐரோப்பியா கண்டங்களில் விரிந்தது. தூய இஸ்லாமிய ஆட்சி மேலோங்குமானால் இச்சரித்திரம் திரும்பவும் நிகழும் என்பது மேற்கத்திய அறிவு ஜீவிகளின் உள்மன பயம்! ஆகவேதான், இத்தகைய அதிரடி உலக மாற்றங்களை சாத்தியப்படுத்தும் இஸ்லாம் வேகமாக பரவாமலிருக்க எந்தந்த வகையில் தடுக்க முடியுமோ அவ்வகையிலெல்லாம் அவ்வரசுகள் தடுத்து வருகின்றன. தற்சமயம், பிரான்ஸ் நாட்டு அதிபர் நிகோலஸ் சர்கோஸி தம் நாட்டிலுள்ள முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியதும் இது போன்ற ஒன்றே!
இனி ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் பல நாடுகளில் மனிதவளம் எந்நிலையில் உள்ளது என்று பார்ப்போம். பெண் கருவுறுந்தன்மையை அட்டவனையில் நோக்கினால் நைஜர் என்னும் நாடு முதல் இடத்தைப் பிடித்து ஒரு பெண்ணுக்கு 7.19 குழந்தைகள் என்ற விகிதத்தில் உள்ளது. மற்ற ஆப்பிரிக்க நாடுகளான புரூண்டி, காங்கோ குடியரசு, மாலி, அங்கோலா, சோமாலியா, நைஜீரியா, எத்தியோப்பியா, கென்யா, சூடான் ஆகிய நாடுகள் முறையே இரண்டாவது இடத்திலிருந்து பத்தாவது இடம் வரை பிடித்திருக்கின்றன. ஆப்பிரிக்க நாடுகளில் பெண் கருவுறுந்தன்மை மிகுதமாக இருப்பதற்கு காரணம் அந்நாடுகள் பின்தங்கிய ஏழை நாடுகளாய் இருப்பதே! மேலும் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது விவசாய வேலைகள் மற்றும் ஆடு மாடு வளர்ப்பு ஆகிய தொழில்களில் ஈடுபடும் குடும்பங்களுக்கு உதவியாக உள்ளது. கடின உழைப்பு மிக்க பெண்கள், குழந்தைகள் பெற்றுக்கொள்வதை ஒரு சுமையாகவே நினைப்பதில்லை. குழந்தை இறப்பு விகிதம் அதிகமாய் இருக்கும் இந்நாடுகளில் அதை ஈடு செய்யும் பொருட்டு அதிக அளவில் குழந்தைகள் பெற்றுக்கொள்வது பொதுவாக நடைபெறுகிறது. முஸ்லிம்கள் அதிகமில்லாத ஆப்ரிக்க நாடுகளிலும் இஸ்லாம் இப்பொழுது பரவிவருகிறது.

ஆசிய நாடுகளில், குறிப்பாக இந்தியாவையும், பாகிஸ்தானையும் எடுத்துக் கொண்டால் பெண் கருவுறுந்தன்மை முறையே 2.81 மற்றும் 3.52 ஆக உள்ளன. இவைகள் குறைந்த அளவான ஒரு பெண்ணுக்கு 2.11 குழந்தைகள் என்ற அளவை விட அதிகமாக இருப்பதால் இந்நாடுகளுக்கு ஆபத்தில்லை. குடும்பக் கட்டுப்பாடு கோஷங்களான ‘நாம் இருவர் நமக்கிருவர்’ மற்றும் ‘ஒரு குழந்தை போதுமே!’ என்பதெல்லாம் இந்தியாவில் தற்போது மறைந்து விட்டது அல்லது மறைந்துக் கொண்டு வருகிறது.

ஆனால் சீனா மற்றும் ரஷ்ய நாடுகளில் பெண் கருவுறுந்தன்மை முறையே 1.73 மற்றும் 1.34 ஆக உள்ளன. இவைகள் குறைந்த பட்ச அளவைவிட மிகக் குறைவாக இருப்பதால் இந்நாடுகள் பயப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் சீன அரசின் ‘ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை’ என்னும் குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கையால் அந்நாடு பெரும்பாதிப்பை சந்தித்திருக்கிறது. ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை மடடுமே பெற்றுக்கொள்ள அனுமதி என்ற கொள்கையால், ஒவ்வொரு குடும்பமும் தனக்குப் பிறகு பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாகவே இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். கருவுற்ற சீனப் பெண்கள், ஸ்கேன் மூலம் தன் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று தெரிந்துக் கொண்டவுடன், ஆண் குழந்தையாக இருந்தால் குழந்தையைப் பெற்றுக் கொள்கிறார்கள். மாறாக பெண் குழந்தையாக இருந்தால் கருவைக் கலைத்து விடுகின்றனர். இதனால் ஆண், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் சமமாக இல்லாமல் ஆண் விகிதம் மட்டும் அதிகமாகி விட்டது.

1970 ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்படும் ‘ஒரு குழந்தை’ குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டம், பெண்கள் சதவிகிதம் குறைவதற்கு காரணமாகி விட்டது. ஒரு சமுதாயத்தில் ஆண்களைவிட பெண்கள் குறைவாக இருந்தால் அச்சமுதாயத்தில் குழந்தைப் பிறப்பும் குறைவாகவே இருக்கும். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்னால் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ‘இவ்வொரு குழந்தைச் சட்டத்தால்’ தற்சமயம் திருமண வயதை அடைந்த ஆண்களில் அநேகருக்கு பெண்கள் கிடைக்காது அல்லாடுகின்றனர். இதனால் அண்டை நாடுகளான தென் கொரியா, மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து பெண்களை மணமுடித்து தம் சீன நாட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர்.

ஐரோப்பா கண்டத்தில் உள்ள ‘ஒருங்கினைந்த ஐரோப்பா’வில் (Europian Union) 31 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அவைகளில் தற்கால நிலைமையையும், எதிர்காலத்தில் என்ன மாறுதல்கள் ஏற்படப்போகின்றன என்பதையும் சற்று ஆராய்வோம்! ஐரோப்பாவின் ஒரு முக்கிய நாடான பிரான்ஸில் இஸ்லாம் வேகமாக பரவி வருகிறது. பிரான்ஸின் தெற்குப் பகுதியில் முஸ்லிம்களின் பள்ளிவாயில்கள் கிறிஸ்தவ மாதா கோவில்களையும் விட அதிகமாக உள்ளன. தற்போது உள்ள மக்கட்தொகையில் பொதுவாக பிரான்ஸில் 20 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களும், சிறுவர்களும், குழந்தைகளும் 30 சவிகிதம் பேர் உள்ளனர். இன்னும் நைஸ், மர்ஸில்ஸ், பாரிஸ் போன்ற நகரங்களில் இவ்வெண்ணிக்கை 40 சதவிகிதம் ஆக உள்ளது. ஆராய்ச்சியாளர்களின் கணக்குப்படி, 2027-ல் பிரான்ஸில் உள்ள மக்களில் ஐந்தில் ஒருவர் முஸ்லிமாக இருப்பார். மேலும் 39 வருடங்களுக்குப் பிறகு பிரான்ஸ் ஒரு இஸ்லாமிய நாடாக மாறும்!

இனி ஐக்கிய இராஜ்ஜயத்தை (United Kingdom) எடுத்துக்கொள்வோம். கடந்த 30 வருடங்களில் ஐக்கிய இராஜ்ஜியத்தின் முஸ்லிம்களின் மக்கள் தொகை 82,000 ல் இருந்து 2.5 மில்லியன்கள் ஆகியிருக்கிறது. இது 30 மடங்கு அதிகரித்திருக்கிறது என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அந்நாட்டில் ஓராயிரத்திற்கு அதிகமான பள்ளிவாசல்கள் தற்போது உள்ளன. அதில் பல பள்ளிவாசல்கள் முன்னர் கிறிஸ்தவ கோயிலாக இருந்தவை!

அடுத்து நெதர்லாந்தில் தற்போது புதிதாகப் பிறக்கக்கூடிய குழந்தைகளில் 50 சதவிகிதம் முஸ்லிம்களுக்கே பிறக்கின்றன. மேலும் இன்னும் 15 ஆண்டுகளில் அந்நாட்டின் பாதிப்பேர் முஸ்லிம்களாக இருப்பர்.

இன்றைய ரஷ்யாவில் மொத்தம் 23 மில்லியன் (2.3 கோடி) முஸ்லிம்கள் உள்ளனர். இது 5 ரஷ்யர்களில் ஒருவர் முஸ்லிம் என்ற விகிதத்தில் உள்ளது. மேலும் இன்னும் சில வருடங்களில் 40 சதவிகிதம் ரஷ்ய படைவீரர்கள் முஸ்லிம்களாக இருப்பர்.

தற்போதைய பெல்ஜியத்தில் மொத்த மக்கள் தொகையில் 25 சதவிகித மக்கள் முஸ்லிம்களாக உள்ளனர். இன்னும் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளில் 50 சதவிகிதத்தினர் முஸ்லிம் குடும்பத்திலேயே பிறக்கின்றன. பெல்ஜியம் அரசின் கூற்றின்படி, இன்னும் 17 வருடங்களில், ஐரோப்பாவில் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் முஸ்லிம் குடும்பத்திலேயே பிறப்பார்கள்.

ஜெர்மனி அரசின் அறிவிப்பின்படி, அந்நாட்டின் மக்கட்தொகை சுருக்கத்தை இனி ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது! மேலும் கீழ் நோக்கி இறங்கும் சுருள் போன்று (downward spiral) மக்கட்தொகையை இனி அதிகப்படுத்தவே முடியாது என்கிறது அவ்வரசு. இனிவரும் 2050 ஆம் ஆண்டில் ஜெர்மனி ஒரு இஸ்லாமிய நாடாக பரிணமிக்கும்.

லிபியா நாட்டின் அதிபர் மாமுர் அல்கடாபி பின்வருமாறு கூறுகிறார்: -
‘ஐரோப்பாவில், வாளின்றி, துப்பாக்கியின்றி, போரின்றி அல்லாஹ் இஸ்லாத்திற்கு வெற்றியைத் தருவான் என்ற அத்தாட்சிகள் தெரியத் தொடங்கிவிட்டன. எங்களுக்கு பயங்கரவாதிகள் தேவையில்லை; குண்டு வைத்துத் தகர்க்கும் தற்கொலைப் படையினர் தேவையில்லை; தற்போது ஐரோப்பாவில் உள்ள 50 மில்லியனுக்கும் (5 கோடி) அதிகமான முஸ்லிம்கள் இன்னும் ஓரிரு பத்தாண்டுகளுக்குள் (decades) ஐரோப்பாவை ஒரு முஸ்லிம் கண்டமாக மாற்றி விடுவார்கள்!’

ஐரோப்பாவில் தற்போது 52 மில்லியன் (5.2 கோடி) முஸ்லிம்கள் வசிக்கின்றனர். மேலும் ஜெர்மனி அரசின் கூற்றின்படி, இந்த மக்கட்தொகை இரட்டிப்பாகி 104 மில்லியன் (10.4 கோடி)களாக இன்னும் அடுத்த இருபது ஆண்டுகளில் ஆகிவிடும்.

கனடா நாட்டின் பெண் கருவுறுந்தன்மை விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.53 குழந்தைகள் ஆகும். இது குறைந்தபட்ச தேவையான கருவுறுந்தன்மை விகிதமான 2.11 க்கு 0.58 குறைவாகவே உள்ளது. இந்நாட்டில் இஸ்லாம் மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. 2001-2006 க்கு இடையில் கனடாவின் மக்கட்தொகை 1.6 மில்லியன் அதிகரித்து, அதில் 1.2 மில்லயன் பேர்கள் குடியேற்றப்பட்டார்கள்.

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (United States of America) உள்ள குடிமக்களின் பெண் கருவுறுந்தன்னை விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.6 குழந்தைகள் ஆகும். இவ்விகிதம் இலத்தீன் அமெரிக்கர்களின் குடியேற்றத்தால் 2.11 ஆக அதிகரித்திருக்கிறது. 1970 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 100,000 முஸ்லிம்களே இருந்தனர். ஆனால் இன்று முஸ்லிம்களின் மக்கட்தொகை 9 மில்லியன்களுக்கும் மேல் அதிகரித்து விட்டது.

மேற்கூறப்பட்ட தற்கால நிகழ்வுகளும் எதிர்கால கணிப்புகளும் ஒரு பேருண்மையை நமக்குத் தெள்ளத் தெளிவாக அறிவிக்கின்றன.

அல்லாஹ் கூறுகிறான்:
‘மனிதர்களே! நீங்கள் தாம் அல்லாஹ்விடம் தேவையுடையவர்களாக இருக்கிறீர்கள்; ஆனால் அல்லாஹ்வோ தேவைகள் அற்றவனும், மாபெரும் புகழுக்குரியவனும் ஆவான்! அவன் நாடினால் உங்களை அகற்றிவிட்டு உங்களுக்குப் பதிலாக ஏதேனும் புதிய படைப்பைக் கொண்டு வந்துவிடுவான். இவ்வாறு செய்வது அல்லாஹ்வைப் பொறுத்துச் சிறிதும் சிரமமானதன்று’ (அல்-குர்ஆன் 25:15-17)

இம்மாமறை வசனத்தின்படி, நிராகரிக்கும் போக்குடைய மேற்குலக ஆட்சியாளர்களையும், அவர்களுக்கு ஆதரவாய் இருக்கும் மேற்குலகில் உள்ள குறிப்பாக ஐரோப்பா கண்டத்தில் உள்ள நிராகரிக்கும் மக்களையும் முற்றாக மாற்றி அகற்றிவிட்டு பிறிதொரு சமுதாயத்தை, தனக்கும் தன் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் கீழ்படிந்த முஸ்லிம் சமுதாயத்தை மேலோங்கச் செய்வதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை (Initial Stage) வல்ல அல்லாஹ் துவக்கிவிட்டான். இனிவரும் காலங்களில் அல்லாஹ்வின் வலிமையையும் அவனது ‘சொல்லின்’ (அல்-குர்ஆன்) உண்மையையும் மேற்குலகம் காணத்தான் போகிறது. ஆனால் அம்மாறுதல்களை முழுவதற்கும் காண முடியாமல் அந்நிராகரிப்போர் - அவர்களே காணாமல் போய்விடுவார்கள்.

‘எவர்கள் நிராகரிப்பவர்களாகவும், இறைவழியிலிருந்து தடுக்கக்கூடியவர்களாகவும் இருக்கிறார்களோ, மேலும் நிராகரிப்பிலேயே பிடிவாதமாக இருந்து அதே நிலையில் மரணமும் அடைகிறார்களோ அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கமாட்டான்’ (அல்-குர்ஆன் 47:34)

நிராகரிக்கும் மக்களாக முஸ்லிம் அல்லாத மக்களும், இறைவழியிலிருந்து தடுக்கக் கூடியவர்களாக அந்நாட்டின் ஆட்சியாளர்களும் இருப்பதால் மேற்கண்ட இவ்வசனம் இவர்களுக்குச் சாலப்பொருந்தும். இந்நிராகிர்போர் இவ்வுலகிலும் இழிவடைந்து, மறுமையிலும் மன்னிக்கப்படாது நரகினைச் சென்றடைவார்கள்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
முற்றும்.
எழுதியவர்/உரை:அபூ ரிஸ்வான்

Monday, July 13, 2009

இஸ்லாம் மயமாகும் ஐரோப்பிய கண்டம்! - Part 1

இஸ்லாம் நோக்கி இறைவனின் திருப்பெயரால் …‘

நாடு என்பது நாடா வளத்தைப் பெற்றிருக்க வேண்டும்’ என்பது ஆன்றோர் மொழி! இம்முதுமொழி நம் இந்தியத்திருநாட்டில் உலாவந்தாலும் மற்றுமுள்ள எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். ஒரு நாடு பெற்றிருக்க வேண்டிய வளங்களை பட்டியல் இட்டாலும் அது நீளும். அதில் முக்கியமானவைகளை மட்டும் கூறினால் - மனிதவளம், இயற்கைவளம், தொழில்வளம், அறிவுவளம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவற்றில் மனிதவளம் என்பது தலையான ஒன்று.

இன்று நம் அண்டை நாடான சீனா மற்றும் நாம் வாழும் இந்தியா இவையிரண்டும் மனித வளத்தில் உலகிலேயே முதல், இரண்டாம் இடத்தில் உள்ளன. இதுவே இவ்விரு நாடுகளும் வேகமாக வளர்ச்சியடைவதற்கு காரணமாக உள்ளது.ஆனால் உலகிலேயே நாகரீகத்தின் உச்சியில்(?) இருந்து கொண்டிருக்கிறோம் என்று பெருமைபட்டுக் கொள்ளும் மேற்கத்திய உலகில் இம்மனிதவளம் மிகவும் குன்றிய நிலையிலேயே காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக இன்றைய 31 நாடுகள் அடங்கிய ஐரோப்பா கண்டத்தை எடுத்துக் கொண்டால் அதன் சராசரி மொத்த கருவுருந்தன்மை விகிதம் (Total Fertility Rate) ஒரு பெண்ணுக்கு 1.38 குழந்தைகள் தான்!இனி மொத்த கருவுருந்தன்மை விகிதம் (Total Fertility Rate) என்றால் என்னவென்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒரு ஊரில் குழந்தை பெறும் வயதுடைய பெண்கள் (15 வயதிலிருந்து 44 வயது வரை) 100 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இவர்கள் 100 பேரும் பெற்றெடுத்த மொத்தக் குழந்தைகள் 200 என்றால் இவ்வூரின் மொத்தக் கருவுறுந்தன்மை விகிதம் இரண்டு (2) குழந்தைகள் ஆகும். அதாவது சராசரியாக ஒரு பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் ஆகும். சில பெண்களுக்கு குழந்தையே இல்லாமல் இருக்கலாம்! மேலும் சிலர் நான்கு அல்லது ஐந்து குழந்தைகளைக் கூட பெற்றிருக்கலாம். இந்தக் கணக்குப்படி 100 பெண்களும் பெற்றெடுத்த மொத்தக் குழந்தைகள் இந்த ஆண்டில் எவ்வளவு உள்ளது என்பது தான்!கருவுறுந்தன்மையைப் பற்றி ஆய்வு செய்த விஞ்ஞானிகள் ஒரு மிகப்பெரும் விஞ்ஞான உண்மையைக் கண்டறிந்திருக்கிறார்கள். இதன்படி ஒரு சமுதாயம் (அல்லது ஒரு நாடு) நிலைத்திருக்க வேண்டுமெனில் அந்தச் சமுதாயத்தில் (அந்நாட்டில்) உள்ள பெண்களின் கருவுறுந்தன்மை விகிதம் (Total Fertility Rate) ஒரு பெண்ணிற்கு 2.11 குழந்தைகள் அல்லது அதற்கு மேலும் இருக்க வேண்டும். அதற்கு குறைவான கருவுறுந்தன்மை விகிதம் தொடர்ச்சியாக இருக்குமேயானால் காலப் போக்கில் அந்நாட்டின் மக்கள் தொகை படிப்படியாகக் குறைந்து முடிவில் அழிந்துவிடும். மேலும் இந்தப் பெண்களின் கருவுறுந்தன்மை விகிதம் 1.9 குழந்தைகள் என இருக்கும் நாட்டில் அதை சரிசெய்து கருவுறுந்தன்மையைக் கூடுதலாக்குவது என்பது மிகவும் கடினமான காரியமாகும். ஆனால் கருவுறுந்தன்மை விகிதம் 1.3 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள நாட்டில் அதை சரிசெய்து கூட்டுவதற்கு 80 முதல் 100 ஆண்டுகள் வரை கூட ஆகலாம். ஆனால் அவ்வளவு நீண்ட காலத்திற்கு மக்கள் பற்றாக் குறைவால் அந்நாடு மிகவும் பாதிப்புக்குள்ளாகி அழிவின் விழம்பிற்கே சென்றுவிடும். அச்சமுதாயத்தை காப்பாற்ற யாராலும் முடியாது- இறைவன் ஒருவனைத் தவிர!

பெண்களின் கருவுறுந்தன்மை நாட்டுக்கு நாடு வேறுபடும். வைக்கிபீடியா (Vikipedia) என்னும் வலைத்தளத்தின் கலைக்களஞ்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளின் பெண்கள் கருவுறுந்தன்மை விகிதங்களில் முக்கியமான ஐரோப்பிய நாடுகளின் விகிதமும், மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளின் விகிதமும், மேலும் சில ஆசிய நாடுகளின் விகிதங்களையும் உள்ள பட்டியலில் தந்துள்ளேன்.

இவ்வட்டவனையை சற்று உற்று நோக்கும் போது ஐரோப்பிய நாடுகளின் பெண் கருவுறுந்தன்மை விகிதம், விஞ்ஞானிகள் கூறியுள்ள குறைந்தபட்ச அளவான - ஒரு பெண்ணுக்கு 2.11 குழந்தைகளை விட மிகவும் குறைந்ததாகவே உள்ளது. ஆகையால் இன்னும் 50 அல்லது 100 வருடங்களில் மனித சஞ்சாரமே இல்லாத காடுகளாகத் தான் மாறிவிடுமா இந்நாடுகள்? இல்லை! அப்படி ஆகிவிடாது என்கின்றனர் சமூகவியலாளர்கள் (Social Scientists).மனித வளம் குன்றிய, அதாவது பெண் கருவுறுந்தன்மை 2.11 குழந்தைகளுக்கு கீழ் உள்ள ஒவ்வொரு நாடும் சில சட்டங்களை இயற்றி, சில திட்டங்களைத் தீட்டி, அதிகமாகக் குழந்தைகளைப் பெறும் குடும்பங்களுக்கு பல சலுகைகளை வழங்கி மனித வளத்தை ஒரு சிறிய அளவாவது பெருக்கிக் கொள்ள முயல்கின்றன.
சில நாடுகளில் மூன்று அல்லது அதற்கு அதிகமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் குடும்பத்தினர்களுக்கு வருமான வரிச்சலுகை, குழந்தைக் கல்வி, வளர்ப்புக்கு நிதியுதவி மேலும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை போன்றவைகளை அளித்து அவர்களை ஊக்குவிக்கின்றன. ஆனால் இவையெல்லாம் கடலில் கரைத்த பெருங்காயமாகத் தான் போய்விடுகின்றன். இச்சலுகைகளால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை!
மேற்கூறிய மனிதவளம் பெருக்குந்திட்டம் போதிய பலன் தராததால், சில நாடுகள் பிரிதொரு முயற்சியில் இறங்கியுள்ளன. அதுதான் வெளிநாட்டிலிருந்து குடியேற்றுதல்! இக்குடியேற்றத்திற்குப் பல நிபந்தனைகளை விதித்து ஒவ்வொரு நாடும் கட்டுப்படுத்துகின்றது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு யார் வேண்டுமானாலும் குடியேறிவிட முடியாது. என்று ஆங்கிலத்தில் கூறக்கூடிய ‘மூளை மிகிதப்படுத்துல்’ என்ற கொள்கையை வலுவாகப் பற்றிப்பிடித்து அதை முழுமையாக நடைமுறைப்படுத்துகின்றன. இக்கொள்கையின்படி ஐரோப்பிய நாடுகளுக்கும், மேலும் அமெரிக்க நாடுகளுக்கும் மேற்படிப்பிற்காகச் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை போன்றவைகளை வழங்கி அவர்களின் மேற்படிப்பு முடிந்தவுடன் அவர்களுக்கு தகுந்த வேலையையும் வழங்கி சில ஆண்டுகள் அங்கு தங்கியிருந்த பின்பு குடியுரிமையும் வழங்குகின்றார்கள். மேலும் மிக அதிக பொருளாதார வளம் உள்ளவர்களுக்கு தன் நாட்டில் தொழில் மற்றும் வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்கி அவர்களுக்கு குடியுரிமையும் வழங்குகின்றன.
சரி, இவைகளால் மனிதவளத்தை அதிகரிக்க முடிகின்றதா என்றால் இல்லை என்றே கூறலாம்!இவ்விரண்டு திட்டங்களையும் அன்றி வேறொரு வகையிலும் குடியேற்றம் மிகுதியாய் நடைபெறுகிறது. அதுவே உறவினர்கள், இரத்தபந்தங்களை குடியேற அனுமதிப்பது. இவ்வகையில் ஐரோப்பிய நாடுகளில் குடியேறிய முஸ்லிம்கள் மிகவும் அதிகம். இப்படி குடியேறிய முஸ்லிம்களின் குடும்பத்தில் பிறப்பு விகிதம் அங்கு வசிக்கும் மாற்று மதத்தினரைவிட அதிகமாக உள்ளது.ஐரோப்பிய நாடுகளில் பிறப்பு விகிதம் (Birth Rate) குறைவாக ஆனதற்குரிய காரணங்களை ஆராய்வோம். இரண்டாம் உலகப்போருக்கு முன்புவரை கிழகத்திய காடுகளில் இருப்பதைப் போன்றே ஆண்-பெண் ஒருக்கங்கள், மணவாழ்க்கை, குழந்தை பிறப்பு எல்லாம் சராசரியாக ஐரோப்பிய நாடுகளிலும் இருந்தன.
இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட இராணுவ வீரர்களிலும் மற்றும் குண்டு வீச்சு, நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட சாராரண மக்களுமாகச் சேர்ந்து மொத்தம் 120 மில்லியன் மக்கள் (73+43=120) இறந்தனர். (ஆதாரம் : வைக்கிபீடியா - World War Casualities).இப்படி இறந்த மக்களில் ஆண்களே மிகப்பெரும்பாண்மையினர். கணவனை இழந்து இளம் பெண்களும், நடுத்தரவயது பெண்களும் விதவைகளாக்கப்பட்டனர். மேலும் விதவைகளாக்கப்பட்ட மில்லியன் கணக்கான பெண்களுக்கு மறுமணம் செய்யவோ அல்லது மறுவாழ்வு பெறவோ முடியவில்லை. காரணம், போர் முடிந்து வீடுகளுக்குத் திரும்பி வந்த ஆண்கள் மிகக் குறைவானவர்களே! வேறு திருமணம் மூலம் மறுவாழ்வு கிடைக்காதுபோன இளம் பெண்களால் சமூகத்தின் கட்டுக்கோப்புக் குலைந்து ஒழுக்கமின்மை தலைதூக்கியது. ஆண்களுக்கு ஒரு மனைவி வீட்டிலும், பல பெண்கள் வெளியில் உல்லாசத்திற்கும் கிடைத்தார்கள். இதுபோன்ற ஒழுக்கக் கேடுகள் ஒரு பெரிய தீமையாகவே கருதப்படவில்லை! நாட்டில் உள்ள ஆட்சியாளர்களும் இத்தீமைகளை கண்டும் காணாமல் விட்டனர். இச்சமூக ஒழுக்கமின்மை எந்த அளவுக்கு மலிந்துக் காணப்பட்டதென்றால், வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, ஐரோப்பியாவில் கனவனை இழந்து தனியே வாழ்ந்த இளம் பெண்களின் வீட்டு வாசல்களில் ஒரு தொங்கும். அதில் - ‘இவ்வீட்டில் இரவு தங்கும் ஆண்களுக்கு உல்லாசம் இலவசம்’ என்று எழுதப்பட்டிருக்கும்.
இத்தகைய ஒழுக்கக் கேட்டை வாழ்க்கை முறையாக எடுத்துக் கொண்ட பல மில்லியன் ஐரோப்பிய பெண்கள் - மேலும் மேலும் கெட்டு அதள பாதாளத்திற்றுச் சென்றார்கள். திருமணம், குழந்தைப் பேறு இவைகள் எல்லாம் பழங்கால பழக்கவழக்கங்கள்! - எனவே இவைகளில் நாம் ஈடுபடத் தேவையில்லை! என்று ஒரு கூட்டம்! ‘பெண் விடுதலை’ (women liberation) என்ற கோஷத்தைப் போட்டுக் கொண்டு திருமணம் என்ற பந்தம் இல்லாமலேயே வயது வந்த ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழத்தலைப்பட்டனர். இப்படிப்பட்ட தகாத உறவுகளில் குழந்தைகள் என்பது ஒரு சுமையாகவே கருதப்படுகிறது!மேலும் மிகவும் இளம் பருவத்திலேயே இளைஞர்களும், இளைஞிகளும் பாலியல் உறவுகொள்ள ஆரம்பித்துவிடுகின்றனர். சில புள்ளிவிபரங்களின்படி 15 வயதைத் தாண்டுவதற்கு முன்பே மேற்கத்திய நாடுகளில் ஆண்களும், பெண்களும் பாலியல் உறவு கொள்கிறார்கள். இத்தைகைய முறைகேடுகளால் ஆண்களுக்கு விந்து எண்ணிக்கை குறைவும், பெண்களுக்கு கருமுட்டை உற்பத்திக் குறைவும் ஏற்படுகின்றது என்று கூறப்படுகின்றது.
இத்தகைய பல காரணங்களால் மேற்குலகின் நாடுகளில் பலவற்றில் பெண் கருவுறுந்தன்மை மிகக்குறைவாகவே கருதப்படுகின்றது. அல்லாஹ் மனித குலத்தின் வாழ்விற்கு ஏற்படுத்திய இயற்கை வாழ்க்கை முறையை நிராகரித்து மனிதக் கற்பனையில் தோன்றிய அனைத்து ஒழுகேடுகளையும் சுதந்திரம் என்ற மூடத்தத்துவத்தால் சரி என்று ஏற்றுக் கொண்டமையால் இந்நாடுகளின் - இச்சமுதாயங்களின் அழவை யாராலும் தடுக்க முடியாது.எச்சமுதாயம் படைத்த இறைவனை ஏற்றுக் கொண்டு, அவனது கட்டளைகளுக்கு கீழ்படியவில்லையோ அச்சமுதாயம் இவ்வுலகத்தை விட்டும் அழித்தொழிக்கப்படும் என்பது நிதர்சனமாக நிரூபிக்கப்பட்டு வருகின்றது.
ஏக இறைவனை நிராகரித்த முற்கால சமுதாயங்களை இறைவன் பலவகையான பேரழிவைக் கொண்டு அழித்து நம்பிக்கைக் கொண்டவர்களை காப்பாற்றினான். நிராகரித்த சமுதாயங்களில் சிலதை பெருவெள்ளம் மூலமும், சூரைக் காற்று மூலமும், சிலதை நெருப்புக்கற்களால் ஆன மழையைக் கொண்டும், சிலதை மிகப் பெரிய சத்தத்தின் மூலமாகவும் அழித்து ஒழித்தான் இறைவன். ஆனால் தற்காலத்தில் நாகரீகத்தின் உச்சியில் இருக்கும் மனிதன் இப்படிப்பட்ட இயற்கைச் சீற்றங்களுக்கு ஆட்படாமல் தற்காத்துக் கொள்ள பல வகைகளில் ஆற்றல் பெற்றவனாக உள்ளான். ஆகவே பேரறிவாளாகிய அல்லாஹ் (சுப்), வெளியிலிருந்து தன்னை நிராகரித்தவனுக்கு அழிவைக் கொண்டுவராமல், அவனைத் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும்படி அமைத்து விட்டான்.‘அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான்; சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் சிறந்த சூழ்ச்சி செய்பவன் அல்லாஹ்வேயாவான்’ (அல்-குர்ஆன் 3:54)இன்றைக்கு மேற்குலகத்தின், குறிப்பாக ஐரோப்பாவில் வசிக்கும் நிராகரிக்கும் சமுதாயம் மனிதவளக் குறைவால் - அதை பெருக்குவதற்கு அவர்கள் - செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததன் விளைவால் - தன்னைத் தானே அழித்துக் கொண்டு வருகிறது என்ற பேருண்மை வியப்பைத் தருகிறது அல்லவா?
Article taken from சுவனத்தென்றல் - http://suvanathendral.com/portal

ஜெர்மனில் தலைவிரித்தாடும் இஸ்லாமோஃபோபியா!

இஸ்லாத்தின் மீதான காழ்ப்புணர்வும் அதீத பயமும் உலகில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இஸ்லாமிய அடையாளங்களுடன் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ சுதந்திரமாக வெளியே நடமாட முடியாத அளவுக்கு இந்த இஸ்லாமோஃபோபியா எல்லையைத் தொட்டு நிற்கிறது. அதிலும் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் எனும் பர்தா, நாகரீகம் என்ற பெயரில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் அரை-குறை ஆடை அணிந்து வலம் வருபவர்களிடையே மிகுந்த எரிச்சலைத் தோற்றுவித்து வருகிறது.
சமீபத்தில் பிரெஞ்சு அதிபர் சார்கோஸி, பர்தாவின் மீதான தன் அதீத காழ்ப்புணர்வைக் கொட்டியதும் அதனைத் தொடர்ந்து, இந்திய உச்சநீதிமன்றத்தாலேயே மோசமானவர் என பட்டம் வழங்கப்பட்ட பால்தாக்கரே தன் வெறுப்பை உமிழ்ந்ததும் உலகம் கண்டது.இந்த வரிசையில் வெறுப்பின் உச்சகட்டமாக, ஹிஜாப் அணிந்த ஒரே காரணத்திற்காக 31 வயதான மர்வா ஷெர்பினி என்ற முஸ்லிம் சகோதரி ஒருவர் ஜெர்மனியில் பொது இடத்தில் பலர் முன்னிலையில் கொடூரமான முறையில் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். மனதை உலுக்கும் கொடூரமான இச்சம்பவம் ஜெர்மனியின் ட்ரெஸ்டன் நகரில் நடந்துள்ளது.
இந்தக் கொடூரக் கொலையைச் செய்த ஆக்ஸெல் என்பவரை போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நீதிமன்றத்தில் நீதிபதிகளும் மேலும் பலரும் கூடி இருந்த போது அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கொடூர சம்பவத்தில் தனது மனைவியைக் காக்கப் போராடிய மர்வாவின் கணவரான எல்வி ஒகஸ்-வும் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். ஜெர்மனியின் செய்தி ஊடகங்கள் தரும் தகவலின் படி, ஷெர்பினியின் கணவரான ஒகஸ் கொலைகாரனால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் இதனைத் தடுப்பதற்காக முன் வந்த போலிஸ்காரர் ஒருவரின் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து அவர் படுகாயம் அடைந்தார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2008ம் வருடத்தில், தான் ஹிஜாப் அணிவதைக் கண்டு தன்னைப் "பெண் தீவிரவாதி" என ஆக்ஸெல் என்பவர் தொடர்ந்து கூறித் தொல்லை கொடுத்து வந்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார் ஷெர்பினி. இந்த வழக்கு ஏற்கனவே எகிப்து மற்றும் ஜெர்மனி மட்டுமின்றி சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.இச்சூழலில் வழக்கின் முடிவு வெளியானது. அதில் ஷெர்பினியை அவமதித்த குற்றத்திற்காக 750 யூரோக்கள் ($1,050) அபராதமாகச் செலுத்தும்படி ஆக்ஸெலுக்கு ஜெர்மனி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆக்ஸெல், இது தொடர்பாக அபராதம் செலுத்த நீதிமன்றம் வந்தபோது ஆத்திரம் தலைக்கேறி பலர் முன்னிலையில் ஷெர்பினியை குத்திக் கொலை செய்தார். தொடர்ந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு மருத்துவர்கள் கடுமையாகப் போராடியும் ஷெர்பினியின் உயிரைக் காக்க முடியவில்லை. இவர் படுகொலை செய்யப்படும்போது மூன்று மாத கருவைத் தன் கருப்பையில் சுமந்தவராக இருந்தார் என்பதும் ஏற்கனவே மூன்று வயதுள்ள ஒரு குழந்தைக்குத் தாய் என்ற உருக்கமான செய்தியும் வெளியாகியுள்ளது. நீதிமன்றத்திலேயே அதுவும் தனது மூன்று வயது மகனின் கண்ணெதிரேயே இவர் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.
கொலைகாரனான 28 வயதான ஆக்ஸெல், ஜெர்மனியில் உள்ள முஸ்லிம்கள் மீது கடுமையான காழ்ப்புணர்ச்சி கொண்டவராவார் என்று ஜெர்மன் குற்றவியல் வழக்கறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இச்செய்தி எகிப்து துவங்கி உலகம் முழுவதும் தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிஜாப் அணிந்த ஒரே காரணத்திற்காக அநியாயமாக ஒரு பெண்ணின் மீது அவதூறு/ பழி சுமத்திய ஒருவரை ஜெர்மனிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, அவர் மீது வழக்குத் தொடர்ந்து வெற்றி பெற்ற ஒரு பெண் இவ்வாறு கொலை செய்யப் பட்டிருப்பது மிகவும் அநீதியான செயல் என்று இதனைக் கண்டித்து கண்டனங்கள் உலகம் முழுவதும் எழுந்துள்ளது.
இஸ்லாத்தில் இறைவனின் கட்டளையை ஏற்று ஹிஜாப் அணிந்து பேணுதலான முறையில் வாழ்ந்த ஒரே காரணத்திற்காக இப்பெண் படுகொலை செய்யப் பட்டிருப்பதால் இவர் வீரமரணம் அடைந்த வீராங்கனை என்று எகிப்திய மக்கள் அழைக்கின்றனர். அத்துடன் ஜெர்மனியில் தலைவிரித்தாடும் இஸ்லாமோஃபோபியா தொடர்பான செயல்களை எதிர்த்துத் தமது கண்டனங்களைப் பரவலாக தெரிவித்து வருகின்றனர். "கொலைகாரனான ஆக்ஸெல் ஏற்கனவே ஷெர்பினியை அடிக்கடி சீண்டி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார் என்றும் அவரது ஹிஜாபை வலுக்கட்டாயமாக பறித்து அதனைக் கிழிக்க முயற்சிகள் செய்தார் என்றும் ஷெர்பினியின் தங்கையான அதாரிக் அல் ஷெர்பினி எகிப்திய செய்தி ஊடகங்களில் தெரிவித்துள்ளார். மேலும் ஷெர்பினியின் கணவர் இத்தொல்லைகள் தொடர்பாக ஜெர்மனியின் உள்ளூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் கொடுத்திருந்ததையும் சுட்டிக்காட்டினார். "ஷெர்பினி ஹிஜாப் அணிவதால் அவருக்குப் பிரச்னைகள் ஏற்படும் என்றும் இதன் மூலம் அவரது உயிருக்கு ஆபத்துகள் வரும் என்றும் பல கொலை மிரட்டல்கள் ஏற்கனவே வந்துள்ள போதிலும் அதனை அலட்சியப் படுத்தி தொடர்ந்து அணிந்து வந்தார்" என ஷெர்பினியின் குடும்ப நண்பரும் அலெக்ஸாண்டரியா பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறைப் பேராசிரியரானருமான ஹிஷாம் அல் அஸ்ஹரி தெரிவித்தார்.
மேலும் "இஸ்லாத்தைப் பின்பற்றுவதால் தன் உயிரை இழக்க நேரிடலாம்!" என்பதை ஷெர்பினி அறிந்து வைத்திருந்தார் என்றார் பேராசிரியர் ஹிஷாம். கடந்த 5-7-2009 இல் படுகொலை செய்யப்பட்ட ஷெர்பினி மர்வாவின் ஜனாஸா(உடல்) அவரது சொந்த நாடான எகிப்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது என்பதை பெர்லினில் உள்ள எகிப்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. 35 இலட்சம் முஸ்லிம்கள் வசிக்கும் ஜெர்மனியில் ஹிஜாப் தொடர்பான இத்தகைய நிகழ்வுகள் அடிக்கடி நடந்து கொண்டிருக்கின்றன என்பதும் ஜெர்மனின் பல மாநிலங்களின் பள்ளிகள் தம் ஆசிரியைகள் ஹிஜாப் அணியத் தடை விதித்துள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனியில் இஸ்லாமோஃபோபியா தலை விரித்தாடுகிறது என்பது மீண்டுமொரு முறை சகோதரி மர்வாவின் வீரமரணத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது என்பது கவலைக்குரிய உண்மையாகும். தீவிரவாதம், பயங்கரவாதம் என்ற பெயரில் ஏற்கெனவே உலகம் முழுவதும் முஸ்லிம்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், தான் விரும்பும் ஆடையை அணிவதற்குக் கூட முஸ்லிம் பெண்களுக்குச் சுதந்திரமில்லை என்ற ரீதியில் இஸ்லாமோஃபோபியா எனும் நோய் பரவி வருவது அதிர்ச்சியளிக்கக் கூடியதாகும். இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் தொடர்ந்து வரும் இஸ்லாமோஃபோபியாவினால் விளைந்த இத்தகைய வன்முறை தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை, உலக முஸ்லிம்கள் உடனடியாக ஒன்றிணைந்து எடுக்க வேண்டியது கட்டாயமாகும்.
Thanks: tafareg