Tuesday, February 16, 2010

நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா!

அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அவனே (நாம் அறிந்த, அறியாத) பேரண்டத்தின் அதிபதி. அவன் இறையச்சமுடையவர்களுக்கு நல்ல வெகுமதிகளையும், அவனுடைய வரம்பை மீறுபவர்களுக்கு பெரிய அழிவையும் தரக்கூடியவன். அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை, அவனுக்கு யாதொரு இணையுமில்லை. சர்வ வல்லமையும், அதிகாரமும் அவனுக்கே உரியது என்று நான் சாட்சி கூறுகிறேன். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், திருத்தூதருமாவார்கள். அவர்கள் நபி மார்களுக்கு எல்லாம் இறுதி முத்திரையாக இருக்கிறார்கள். மொத்த சமுதாயத்திற்கும் தலைவராக இருக்கிறார்கள் என்று நான் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மீதும், அவர்களுடைய தோழர்கள் மற்றும் அவர்களை இறுதி தீர்ப்பு நாள் வரை பின்பற்றக் கூடியவர்கள் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாவதாக.)
1- இஸ்லாம் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கம்:
அல்லாஹ் ஸுப்ஹானஹுவத்தஆலா, அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை, நேர்வழிகாட்டியுடனும், மனித குலத்திற்கு ஓர் அருளான சத்திய இஸ்லாமிய மார்க்கத்துடனும், நன்மைகளைப் புரிவோருக்கு ஓர் முன்மாதிரியாகவும் அனுப்பி வைத்தான். அல்லாஹ் மனித குலம் அனைத்திற்கும், அவர்கள் தங்களைச் சீர்திருத்திக் கொள்வதற்குத் தேவையான அனைத்து விஷயங்களையும், அதாவது மார்க்கம் மற்றும் அன்றாட அலுவல்களை இறை நம்பிக்கையுடன் நடத்திச் செல்வதற்கும், நல்ல நடத்தைகளையும், அழகிய முன்மாதிரிகளையும், போற்றத்தக்க நற்குணங்களையும், நம்முடைய நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாகவும், அவர்களுக்கு அருளிய குர்ஆன் மற்றும் அவர்களுடைய சுன்னத்தான வழிமுறைகளின் மூலமாகவும் காட்டிவிட்டான்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஸஹீஹான ஹதீஸ் கூறுகிறது: “நான் உங்களிடம் ஒரு ஒளிமயமான பாதையை விட்டுச் செல்கிறேன். அதில் இரவு கூட பகலின் ஒளியைப் போல் இருக்கிறது”.
அன்பான சகோதர சகோதரிகளே, இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மதமும் அதனுடைய ஆன்மீக நெறி என்பதைப் பற்றி மட்டும் போதித்துக்கொண்டிருக்கும் வேளையில் இஸ்லாம் மட்டுமே ஒருவருடைய பிறப்பு முதல் இறப்பு வரை நிகழக்கூடிய அனைத்து விஷயங்களில் ஏற்படக் கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதோடு மட்டுமல்லாமல் அந்தந்த சூழ்நிலைகளில் ஒரு முஸ்லிம் தான் என்ன செய்ய வேண்டும் எனவும் எதை செய்யக் கூடாது எனவும் போதிக்கிறது.குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஒரு மனிதருடைய குடும்ப வாழ்க்கை, கொடுக்கல் வாங்கல், வணக்க வழிபாடுகள், அரசியல், சந்தோசம், துக்கம் போன்ற எல்லாத் துறைகளிலும் அவனுக்கு தேவையான அறிவுரைகளையும் விழிமுறைகளையும் காட்டி முழுமையான மார்க்கமாகத் திகழ்கிறது.
இதையே அல்லாஹ் தன்னுடைய திருமறையில் தன்னுடைய மார்க்கத்தை தான் முழுமைப் படுத்தி விட்டதாகக் கூறுகிறான். “இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்” (அல-குர்ஆன் 5:3)2)
2- அல்லாஹ்வின் வேதத்தையும் அவனுடைய தூதரின் வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டியதன் அவசியம்:
முஸ்லிமான ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் வேதத்தையும் அவனுடைய தூதரின் விழிமுறைகளையும் தம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் பின்பற்றி வாழ வேண்டும் எனவும் அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களால் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் எவ்வித கூடுதல் அல்லது குறைவோ செய்யக் கூடாது எனவும் அல்குர்ஆன் நமக்கு வலியுறுத்துகிறது.
அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) நீர் கூறும்; “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான். மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 3:31)
(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள். அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள். நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள். (அல்-குர்ஆன் 7:3)
நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும். ஆகவே இதனையே பின்பற்றுங்கள் – இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் – அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும். நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான். . (அல்-குர்ஆன் 6:153)
நபி (ஸல்) அவர்கள் ஓரு சொற்பொழிவில் கண்கள் சிவக்க குரலை உயர்த்தி கூறினார்கள்: “…. செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் நேர்வழியாகும். விஷயங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது (பித்அத்) ஆகும். ஓவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்.” அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதாரம்: முஸ்லிம்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்". அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: புகாரி
எனவே சகோதர, சகோதரிகளே மேற்கூறிய வசனங்கள் மற்றும் நபிமொழிகள் அனைத்தும் அல்லாஹ்வின் வேதத்தையும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களையுமே நாம் பின்பற்றி வாழ வலியுறுத்துவதை அறிகிறோம்.
3- நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட ஒரு புதுமையான விஷயமே!
நபி (ஸல்) அவர்களின் மறைவிற்குப் பிறகு இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட பல வழிகேடுகளில், புதுமைகளில் மீலாது விழா என்றழைக்கபடக் கூடிய நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்களாகும். இந்த தினத்தை பல்வேறு பிரிவினர் பல்வேறு விதமாகக் கொண்டாடுகின்றனர்.
இன்றைய காலக்கட்டத்தில் தமிழகத்தில் பரவலாக காணப்படும் இந்த மீலாது விழாக்கொண்டாங்களும் அவற்றின் போதும் நடைபெறும் அனாச்சாரங்களும்: -ரபியுல் அவ்வல் பிறை 12 அல்லது அந்த மாதம் முழுவதும் விழா நடத்துகின்றனர்.தஞ்சை, நாகை, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் வீடுகளையும், தெருக்களையும் அலங்கரித்து கிறிஸ்தவர்கள் தங்களின் பண்டிகைகளின் போது தொங்கவிடும் நட்சத்திர விளக்குகளைப் போல் தொங்கவிடுகின்றனர்.
நபி (ஸல்) அவர்களைப் புகழ்வதாகக் கூறிக்கொண்டு கூலிக்கு ஆட்களை அமர்த்தி ஷிர்க் நிறைந்த மவ்லிது பாடல்களை பாடவிட்டு அவர்களுக்கும் அங்கு வந்திருக்கின்ற அனைவருக்கும் சீரணி மற்றும் நெய் சோறு வழங்குகின்றனர்.
மார்க்கம் அனுமதிக்காத வகையில் கூச்சலும் மேளதாளமும் முழங்க பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் போக்குவரத்துக்களை வேற்றுப்பாதைகளில் திருப்பிவிட்டு சாலைகளை அடைத்துக்கொண்டு ஊர்வலம் செல்கின்றனர். அவ்வாறு உர்வலம் செல்லும் போது சில சமூக விரோதிகள் அதன் மூலம் வகுப்புக் கலவரத்தைத் தூண்டி முஸ்லிம்களின் உயிர் மற்றும் பொருட்களுக்கு சேதத்தை ஏற்படுத்துவது.
பெரும் பொருட்செலவில் பிரமாண்டமான விழா மேடைகளையும் பந்தல்களையும் அமைத்து இறை நிராகரிப்பாளர்களை அழைத்து அந்த மேடையில் அமரவைத்து அவர்களை கவுரவித்து அவர்களை முஸ்லிம்களுக்கு உரையாற்ற வைப்பது.
சிலர் அந்த நாட்களில் நபி (ஸல்) அவர்களை வரம்பு மீறி புகழ்ந்து அவர்களிடம் நேரடியாக உதவி கோருவது.
இவ்வாறு இந்த அனாச்சாரங்களின் பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம்.
எந்த வகையில் இந்த நாட்களை கொண்டாடினாலும் எந்த நோக்கத்திற்காக கொண்டாடினாலும் இவைகள் அனைத்தும் இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட நூதன செயல்களேயாகும். இவற்றிற்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்புமில்லாதது மட்டுமல்லாமல் இவைகள் அனைத்துமே நிராகரிக்கப்பட வேண்டியவைகளாகும்.
4- நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா – சிறிய வரலாற்றுக் கண்ணோட்டம்:
நபி (ஸல்) அவர்களின் காலத்திலோ அல்லது நபி (ஸல்) அவர்களால் சிறந்த சமுதாயம் என போற்றப்பட்ட சஹாபாக்கள், தாயீன்கள் மற்றும் தபஅ தாயீன்களின் காலத்திலோ நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாட்கள் கொண்டாடப்பட வில்லை. இஸ்லாத்தின் உண்மையான கொள்கைகளைச் சிதைப்பதற்காக முதன் முதலில் ‘ஷியாக்களின் பாத்திமிட்’ ஆட்சிக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது தான் இந்த மீலாது விழாக்கள். உண்மையான முஃமின்களுக்கும் ஷியாக்களின் இந்த நூதன கண்டுபிடிப்புக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
வரலாற்று ஆசிரியர் இப்னு கல்கான் என்பவர் கூறுகிறார்: -ஃபாத்திமிட் ஆட்சியாளர்களுக்குப் பிறகு இதை விமர்சையாக முதன் முதலில் கொண்டாடியவர் ஈராக்கில் இர்பில் என்ற பகுதியை கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் அல்லது ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆட்சி செய்த மன்னர் அல்-முஜஃப்பார் அபூ சயீத் கவ்கபூரி என்பவராவார்.
மற்றொரு ஆய்வாளர் அபூ ஷாமா என்பவர் கூறுகிறார்: -ஈராக்கின் மோசுல் நகரில் ஷெய்ஹூ உமர் இப்னு முஹம்மது அல்-மலா என்பவர் தான் முதன் முதலில் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடினர். பின்னர் இர்பில் நகரின் ஆட்சியாளர்களும் மற்றவர்களும் அதைப் பின்பற்றினர்.
அல்-ஹாபிஸ் இப்னு கதீர் அவர்கள் தன்னுடைய ‘அல்-பிதாயா வல் நிகாயா’ என்ற நூலில் மன்னர் அபூ சயீத் கவ்கபூரி அவர்களின் சரிதையைப் பற்றிக் குறிப்பிடும் போது பின்வருமாறு கூறுகிறார்கள்: -‘அவர் ரபியுல் அவ்வல் மாதத்தில் மிகப்பெரிய விழாவை ஏற்பாடு செய்வார், முஜஃப்பரின் விருந்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் கூறினர், ‘அவர் அந்த விழாவில் கலந்துக் கொண்டவர்களுக்கு தீயில் சுடப்பட்ட ஐந்தாயிரம் ஆடுகளின் தலைகளையும் , பத்தாயிரம் கோழிகளையும், ஆயிரம் பெரிய பாத்திரங்களில் உணவுகளையும், முப்பது தட்டுகளில் இனிப்பு வகைகளையும் வழங்கியதாக கூறினர். மேலும் அந்த விழாக்களில் கலந்துக் கொண்ட சூஃபியாக்கள் லுகர் முதல் மறுநாள் விடியற்காலை பஜ்ர் வரையிலும் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்ததாகவும் மன்னரும் அந்த ஆட்டம் பாட்டத்தில் கலந்துக் கொண்டதாகவும் கூறினர்’.
வரலாற்று ஆசிரியர் இப்னு கல்தான் தன்னுடைய நூல் ‘வாஃபியாத் அல்-அய்யான்’ என்னும் நூலில் கூறுகிறார்: -‘ஸபர் மாதத்தின் ஆரம்பத்திலேயே அவர்கள் கோபுரங்களின் உச்சிகளை அலங்கரிக்கத் துவங்கிவிடுவர். கோபுரங்களின் உச்சியில் பாடகர்களும், இசையமைப்பவர்களும் மற்றும் நடனமாடுபவர்களும் அமர்ந்து ஆட்டம்பாட்டத்திலிருப்பர். ஒரு போபுரத்தைக் கூட இவ்வாறு அலங்கரிக்காமல் விடுவதில்லை. மக்கள் அந்த நாட்களில் வேலைக்குச் செல்லாமல் அந்த வேடிக்கைகளைக் கண்டு களித்துக் கொண்டிருப்பார்கள்’ இவ்வாறு தான் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா ஷியாக்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இஸ்லாத்தில் ஊடுருவ ஆரம்பித்தது. மார்க்கம் அறியா பாமர மக்களும் இவ்வாறு கொண்டாடுவது புனிதம் என்று கருதலாயினர். இதற்கு அல்லாஹ்வின் வேதத்திலோ அல்லது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலோ எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. எனவே இது இஸ்லாத்தில் தோற்றுவிக்கப்பட்ட பித்அத் என்னும் நூதன செயலேயாகும்.
ஒவ்வொரு உண்மையான முஸ்லிமும் இதிலிருந்து தவிர்ந்துக் கொள்வதோடு அல்லாமல் இத்தகைய தீய செயல்களை களைவதற்கு பாடுபட வேண்டும்.
5) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாக்களை ஏன் கொண்டாடக் கூடாது?
நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் கொண்டாடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி கிடையாது. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றது.
a) நபி (ஸல்) அவர்களோ அல்லது அவர்களைப் பின்தொடர்ந்த நேர்வழி பெற்ற கலிபாக்களோ அல்லது சஹாபாக்களோ அல்லது அவர்களுக்குப் பின் வந்த இரண்டு சிறந்த சமுதாயங்களோ நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாக்களைக் கொண்டாடவில்லை: -ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -“என்னுடைய வழிமுறைகளையும் நேர்வழி பெற்ற கலீபாக்களின் வழிமுறைகளையும் வலுவாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். இவைகளை உங்களின் முன்பற்களுக்கு இடையில் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். (இஸ்லாத்தில்) நுழைக்கப்படும் புதிய அமல்களைப்பற்றி எச்சரிக்கையாக இருங்கள். ஒவ்வொரு புதிய அமலும் பித்அத் ஆகும். ஓவ்வொரு பித்அத்தும் வழிகேடு ஆகும். ஓவ்வொரு வழிகேடும் நரகத்திற்குரியவை” என்று கூறினார்கள். (ஸஹீஹ் அல்-ஜாமிஅஸ் ஸகீர். ஹதீஸ் எண். 2549)
b) நாம் முன்னர் கூறியது போன்று இவ்வகையான விழாக்கள் ஷியாக்களான ‘பாத்திமிட்’ வம்ச மன்னர்களால் தோற்றுவிக்கப்பட்டு இஸ்லாத்தில் நுழைக்கப்பட்டது: -யாரேனும் ஒருவர் நான் அல்லாஹ்விடம் நெருக்கமாகுவதற்காக நபி (ஸல்) அவர்களோ அல்லது அவர்களைப் பின்பற்றிய நபித்தோழர்களோ செய்யாத இச்செயல்களைச் செய்கிறேன் என்று கூறினால் அவர் அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் மார்க்கத்தை முழுமையாக எங்களுக்குப் போதிக்க வில்லை, அதனால் மிகச்சிறந்த இந்தச் செயலை நான் செய்கிறேன் என்று கூறி அல்லாஹ் இறக்கியருளிய ‘இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்கா நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்’ (அல் குர்ஆன் 5:3) என்ற வசனத்தை நிராகரித்தது போலாகும். (இவ்வாறு எண்ணம் கொள்வதிலிருந்தும் அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாகவும்.) ஏனென்றால் இவர் அல்லாஹ்வோ அல்லது நபி (ஸல்) அவர்களோ போதிக்காத ஒன்றை, பிறர் மூலம் இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட ஒன்றை மார்க்கம் என்றும் அதை செய்வதால் நன்மை கிடைக்கும் என்று கருதி செயல்படுகிறார்.
c) நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடுவது கிறிஸதவர்களின் செயல்களைப் பின்பற்றுவது போலாகும்: -கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களின் பிறந்த நாள் என்று கருதி ஒரு தினத்தைக் கொண்டாடுகின்றனர். கிறிஸ்தவர்களைப் பின்பற்றுவது என்பது மார்க்கத்தில் முழுவதுமாக தடுக்கப்பட்ட (ஹராம்) ஒன்றாகும். ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் இறை நிராகரிப்பாளர்களைப் பின்பற்றக் கூடாது என்றும் நாம் அவர்களிலிருந்து வேறுபட்டு இருக்க வேண்டும் எனவும் நமக்குத் வலியுறுத்துகிறது.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -‘யார் பிறருக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே!’ ஆதாரம் அபூதாவுத்.
மேலும் கூறினார்கள்: ‘இறை நிராகரிப்பாளர்களிலிருந்து வேறுபட்டு இருங்கள்’ ஆதாரம் முஸ்லிம்.
எனவே நாம் இறைநிராகரிப்பாளர்களின் செயல்களைக் குறிப்பாக வணக்க வழிபாடுகளைப் பின்பற்றி நடக்கக் கூடாது.
d) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாக்களில் இஸ்லாம் அனுமதிக்காத வீண் ஆடம்பரச் செலவுகளும் கேளிக்கைகளும் நடைபெறுகிறது: -மீலாது விழாக்கள் என்ற பெயரில் தமிழகத்தில் நடைபெறும் கூட்டங்களில் வீண் ஆடம்பரத்திற்காக பெரும் பொருட்செலவில் பிரமாண்டமான விழா பந்தல் அமைத்து அதில் தோரணம் கட்டி அழகு படுத்துகின்றனர். மேலும் தஞ்சை,திருவாரூர், நாகை போன்ற மாவட்டங்களில் இவ்வகை விழாக்கள் நடைபெறும் போது கோயில் திருவிழாக்கள் தோற்றுவிடும் அளவிற்கு கடைகள் அமைக்கப்பட்டு ஆண் பெண்கள் குழுமுகின்றனர். அது பல்வேறு அனாச்சாரங்களுக்கு வழி வகுப்பதோடல்லாமல் இஸ்லாத்திற்கு முரணாகவும் உள்ளது.
e) இவ்வகை விழாக்களில் ஷிர்க் நிறைந்த மவ்லிது மற்றும் புர்தா போன்ற அரபி பாடல்களை பாடுகின்றனர்: -இவ்விழாக்களில் கஸீதத்துல் புர்தா, சுப்ஹான மவ்லிது போன்ற அரபிப் பாடல்களை இன்றைய கால சினிமாப்பாடல்களின் இராகத்திற்கேற்ப மெட்டு அமைத்து பாடுகின்றனர். இவ்வகை பாடல்களில் மூலம் நபி (ஸல்) அவர்களை வரம்பு மீறிப் புகழ்ந்து அவர்களை அழைத்து உதவியும் தேடுகின்றனர். இன்னும் சில ஊர்களில் ஒரு படி மேலே சென்று விழாவிற்கு வந்திருக்கும் அனைவரும் எழுந்து நின்று சுப்ஹான மவ்லிதில் வரும் ‘யா நபி’ பாடலை பாடுகின்றனர். இவ்வாறு பாடும்போது நபி (ஸல்) அவர்கள் அங்கே ஆஜர் ஆகிறார்கள் என்றும் நம்பிக்கைக் கொள்கின்றனர். இது வெளிப்படையான ஷிர்க் என்னும் இணைவைத்தவலாகும். நபி (ஸல்) அவர்கள் தம்மை வரம்பு மீறிப் புகழ்வது குறித்து எச்சரித்திருக்கிறார்கள்.‘கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸா (அலை) அவர்களை வரம்பு மீறிப் புகழ்ந்ததைப் போல் (என்னைப்) புகழாதீர்கள். நான் அவனுடைய அடிமையே. எனவே அல்லாஹ்வின் அடிமையும் அவனது தூதரும் ஆவார்கள் என்று கூறுங்கள்” ஆதாரம் : புகாரிஇவ்வாறாக பல்வேறு காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். விரிவுக்கு அஞ்சி இங்கே அனைத்தையும் குறிப்பிடவில்லை.
6- நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுபவர்களின் வாதங்கள்:
இந்த பித்அத்களைப் புரிவோர் தங்களுக்கு ஆதாரமாக பலவகையான வாதங்களை முன் வைக்கின்றனர். இவைகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற மிக பல வீனமானவைகளாகும். அவைகளை சற்று ஆராய்வோம்:
-6a) நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு மரியாதை செலுத்தி அவர்களை மதிக்கின்றோம் என கூறுகின்றனர்: -நபி (ஸல்) அவர்களை மதிப்பது என்பது, 1- அவர்கள் கட்டளையிட்டவற்றை ஏற்று அதன்படி நடப்பதும்,
2- அவர்கள் தடுத்தவற்றிலிருந்தும் விலகி இருப்பதும்,
3- மற்றும் அவர்கள் மீது அன்பு செலுத்துவதும் ஆகும்.
ஆனால் ஒருவர் நபி (ஸல்) அவர்கள் ஏவிய கட்டளைகளைப் பின்பற்றாதது மட்டுமல்லாமல் அவர்கள் தடுத்தவற்றைச் செய்து கொண்டே நான் நபி (ஸல்) அவர்களை மதிக்கிறேன் என்று கூறுவது எந்த வகையில் அறிவீனமானது என்று நாம் சற்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இதற்கு அனைவருக்கும் தெரிந்த தந்தை மகன் உதாரணம் ஒன்றைக் கூறலாம்:
-ஒருவர் தம்முடைய தந்தையை மிகவும் மதிப்பதாகக் கூறுகிறார். ஆனால் அவர் செய்வதெல்லாம் அந்த தந்தையின் கட்டளைக்கு நேர்மாற்றம். தந்தை எதையெல்லாம் செய்யக் கூடாது என கூறினாரே அதை மகன் விரும்பிச் செய்கின்றார். தந்தை எதைச் செய்ய வேண்டும் என சொன்னாரோ அதை மகன் கண்டுக்கொள்வதே இல்லை. மகனின் இந்தச் செயல் தந்தைக்கு மரியதை செலுத்தி கண்ணியப் படுத்தியக் கருதப்படுமா அல்லது தந்தையின் பேச்சைக் கேட்காதது மூலம் அவரை இழிவு படுத்தியதாக் கருதப்படுமா? சிந்தியுங்கள் எனதருமை சகோதர சகோதரிகளே!
மேலும் நபி (ஸல்) அவர்களை சஹாபாக்கள் மதித்தது போல் வேறு யாரும் மதிக்க முடியாது. ஆனால் சஹாபாக்களோ நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடவில்லை. இவ்வாறு பிறந்த தினங்களைக் கொண்டாட வேண்டும் என்று இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தால் சஹாபாக்கள் தான் முதலில் செய்திருப்பார்கள். அந்த அளவிற்கு நபி (ஸல்) அவர்களின் ஒவ்வொரு கட்டளையையும் பின்பற்றி நடப்பவர்களாகவும் நபி (ஸல்) அவர்களுடைய சுன்னத்தைப் பேணி நடப்பவர்களாகவும் சஹாபாக்கள் வாழ்ந்தனர். ஆனால் யாரும் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை விழாவாக கொண்டாடியதாக ஒரு சிறு ஆதாரம் கூட கிடையாது.இவர்கள் சஹாபாக்களை விட அதிகமாக நபி (ஸல்) அவர்களை மதிக்கிறார்களா? அல்லது இத்தகைய நல்ல அமல்கள் சஹாபாக்களுக்குத் தெரியாமல் போய்விட்டதா? எனவே இவர்களின் நாங்கள் நபி (ஸல்) அவர்களை இந்த விழாவின் மூலம் மதிக்கிறோம் என்ற வாதம் அர்த்தமற்றதும் அவர்களுக்கே எதிரானதும் ஆகும்.
6b) பெரும்பாண்மையான மக்கள் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனரே! அதனால் நாங்களும் கொண்டாடுகிறோம்: -நபி (ஸல்) அவர்களின் ‘(அமலில்) ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் வழிகேடு தான்: வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவை’ என்ற கூற்றுப்படி பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது பித்அத் என்றும் வழிகேடு என்று உறுதியான பிறகு எத்தனை நபர்கள் எத்தனை நாடுகளில் பின்பற்றினால் என்ன?
உலகில் உள்ள பெரும்பாண்மையான மக்கள் வழிகேட்டில் இருக்கிறார்கள் என்றும் அவர்களைப் பின்பற்றினால் வழி கெடுத்து விடுவார்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறானே:
"பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் – இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். (அல்-குர்ஆன் 6:116)
இன்னும் அநேக வசனங்களில் பெரும்பாலோரைப் பின்பற்றக் கூடாது என்றும் அதற்குரிய காரணத்தையும் அல்லாஹ் விளக்குகிறான்:-
  • பெரும்பாலோர் ஈமான் கொள்ள மாட்டார்கள். (2:100)
  • பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. (2:243)
  • பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.(5:32)
  • பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.(5:49)
  • பெரும்பாலோர் ஃபாஸிக்கு (பாவி)களாக இருக்கின்றீர்கள் (5:59)
  • பெரும்பாலோர் பாவத்திலும், அக்கிரமத்திலும் விலக்கப்பட்ட பொருள்களை உண்பதிலும் விரைந்து செயல்படுவதை (நபியே!) நீர் காண்பீர்.(5:62)
  • பெரும்பாலோர் செய்யும் காரியங்கள் மிகக் கெட்டவையாகும (5:66)
  • பெரும்பாலோர் நல்லறிவு பெறாதவர்களாகவே இருக்கின்றனர் (5:103)
  • பெரும்பாலோர் மூடர்களாகவே இருக்கின்றனர். (6:111)
  • பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (6:116)
  • பெரும்பாலோர், அறியாமையின் காரணமாகத் தங்களுடைய மன இச்சைகளின் பிரகாரம் (மனிதர்களை) வழி கெடுக்கிறார்கள் (6:119)
  • பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை (10:36)
  • பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.(7:117, 10:60)
  • பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்’ (10:92)
  • பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை (11:17)
  • பெரும்பாலோர் காஃபிர் (நன்றி கெட்டவர்)களாகவே இருக்கின்றனர். (16:83)
  • பெரும்பாலோர் சத்தியத்தை அறிந்து கொள்ளவில்லை; ஆகவே அவர்கள் (அதைப்) புறக்கணிக்கிறார்கள். (21:24)
  • பெரும்பாலோர் அந்த உண்மையையே வெறுக்கிறார்கள். (23:70)
  • பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள். (29:63)

எனவே பெரும்பாலானோரைப் பின்பற்றுவது என்பது மேற்கூறப்பட்ட வசனங்களுக்கு எதிரானதாகும்.

6c) மீலாது விழாக்கள் நபி (ஸல்) அவர்களை எப்போதும் நினைவில் இருத்திக்கொள்ள உதவும்: -நபி (ஸல்) அவர்களை மீலாது விழாக்களில் மட்டும்தான் நினைவுபடுத்த வேண்டுமா? மற்ற நாட்களில் நினைவு படுத்தக்கூடாதா? முஃமின்களுக்கு நபி (ஸல்) அவர்களிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருப்பதாக அல்லாஹ் கூறுகிறானே (அல்-குர்ஆன் 33:21)! அப்படியென்றால் வருடத்தில் ஒருமுறை நினைவுபடுத்தி அந்த அழகிய முன்மாதிரியைப் பின்பற்றி விட்டு மற்ற நாட்களில் நினைவு படுத்தத் தேவையில்லையா? இல்லை சகோதர சகோதரிகளே! இது முற்றிலும் தவறு.

உண்மையான முஸ்லிம்கள் எல்லாக் காலங்களிலும், எல்லா நேரங்களிலும் நபி (ஸல்) அவர்களை நினைவில் இருத்திக் கொண்டே இருப்பார். அதாவது,நபி (ஸல்) அவர்களின் பெயர் கூறப்படும் போதெல்லாம் அவர்கள் மீது சலவாத்து கூறுவார்கள்நபி (ஸல்) அவர்களின் பெயர் பாங்கு, இகாமத், குத்பா உரை மற்றும் தொழுகையின் போதும் நினைவு கூர்ந்து சலவாத்து கூறுவார்ஒவ்வொரு முறையும் நபி (ஸல்) அவர்கள் ஏவிய வாஜிபான, முஸதஹப்பான கடமைகளைச் செய்யும் போதும் நினைவு கூறுவார்நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த அன்றாடம் ஓத வேண்டிய துஆக்களை ஓதும் போதும் நினைவு கூறுவார்.

இவ்வாறாக ஒரு முஃமின் இரவு பகல் என பாராது, மீலாது விழா நாட்கள் என்றும் பாராமல் எந்நேரமும் நபி (ஸல்) அவர்கள் ஏவிய நன்மையான செயல்களைச் செய்வதன் மூலமும் நபி (ஸல்) அவர்கள் தடுத்த தீமையான காரியங்களைச் செய்வதிலிருந்தும் விலகியிருத்தல் மூலமும் எந்நேரமும் நபி (ஸல்)அவர்களை நினைவில் இருத்திக்கொண்டேயிருப்பார்.

ஆனால் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாட்களைக் கொண்டாடுவோர் நபி (ஸல்) அவர்கள் தடுத்த தீமையான செயலான பித்அத் என்னும் நூதன செயலைச் செய்வதன் மூலம் நபி (ஸல்) அவர்களிடமிருந்து விலகி தூரமாகச் செல்கின்றனர்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இந்த வகையான பித்அத்தான விழாக்கள் தேவையில்லை. ஏனென்றால் ஏற்கனவே அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை கண்ணியப்படுத்தி அவர்களின் அந்தஸ்தை உயர்த்தி விட்டான்.

அல்லாஹ் கூறுகிறான்: -மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம். (அல்-குர்ஆன் 94:4) மேலும் தினமும் ஐவேளை கூறக்கூடிய பாங்கு மற்றும் இகாமத் போன்றவற்றிலும், குத்பா பேருரைகளிலும், தொழுகையிலும் நபி (ஸல்) அவர்களின் பெயரும் குறிப்பிடப்படுகிறது. மேலும் திருமறையை ஓதும் ஒவ்வொரு முறையும் நபி (ஸல்) அவர்களை நினைவு கூராமலிருப்பதில்லை! இதுவே நபி (ஸல்) அவர்களைக் கண்ணியத்திற்கும், அவர்களின் மீது அன்பு செலுத்தி அவர்களைப் பற்றிய நினைவை புதுப்பித்துக் கொள்வதற்கும் அவர்களைப் பின்பற்றி வாழ்வதற்கான ஊக்கத்தை அதிகப்படுத்திக் கொள்வதற்கும் போதுமானதாகும்.

உண்மையான முஃமின் அனு தினமும் இஸ்லாத்தின் காரியங்களைச் செய்து வருவாராயின் அதன் மூலம் நபி (ஸல்) அவர்களை நிணைவு படுத்திக் கண்ணிப்படுத்தியவராகக் கருதப்படுவார். மாறாக பிறந்த நாள் விழா போன்ற பித்அத்தான செயல்களைச் செய்வதன் மூலம் நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்கு மாறு செய்பவர்கள் எவ்வாறு நபி (ஸல்) அவர்களை நினைபடுத்தி கண்ணியப்படுத்தியவராவார்? சிந்தியுங்கள் சகோதர சகோதரிகளே!

6d) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் இறைவனை நெருங்குவதற்காக கல்வியறிவுடைய சிறந்த மன்னரால் அறிமுகப்படுத்தப்பட்டது:

-பித்அத் அனைத்தும் வழிகேடுகள், அவைகள் நிராகரிக்கப்படவேண்டியவைகள் என்றிருக்கும் போது எவ்வளவு பெரிய அறிஞரால் கல்விமான்களால் அறிமுகப்படுத்தப்பட்டால் தான் என்ன?

6e) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது பித்அத்துல் ஹஸனா ஆகும்.

பித்அத்துகளில் நல்லவை கெட்டவை என்ற பாகுபாடே கிடையாது. அனைத்து பித்அத்துகளும் வழிகேடு என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -‘நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும’ அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்மேலும் கூறினார்கள்: -‘(அமலில்) ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் வழிகேடு தான்: வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவை தான் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்’ ஆதாரம்: அஹ்மத்எனவே அனைத்து பித்அத்களும் நரகத்திற்குரிய வழிகேடுகளேயன்றி வேறில்லை.நபி (ஸல்) அவர்களின் வார்த்தையான ‘அனைத்து பித்அத்களும் வழிகேடுகள்’ என்பது சுருக்கமான அதே நேரத்தில் அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய கட்டளையாகும். இது இஸ்லாத்தின் மிக முக்கியமான கொள்கையாகும்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -‘நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது (இறைவனால்) நிராகரிக்கப்படும்’ என்று நபி (ஸல்) கூறியதாக அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்” (புகாரி, முஸ்லிம் அஹ்மத்)

எனவே மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில், ஒருவர் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இஸ்லாத்தில் புதிதாக ஒன்றை உருவாக்கினால் நிச்சயமாக அது வழிகேடே ஆகும், எனவே அவைகள் நிராகரிக்கடவேண்டிய ஒன்றாகும். இந்த வகையில் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவும் சேரும்.

நபி (ஸல்) அவர்களுடைய பிறந்த தினங்களை கொண்டாடுவோருக்கு நம்முடைய கேள்விகள்:

-நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடி அதன் மூலம் அவர்களைக் கண்ணியப்படுத்துவதாக இருந்தால் இத்தகைய நல்லா செயல்களை ஏன் நபித்தோழர்களும், அவர்களுக்குப் பின் வந்த மூன்று தலைமுறையினரும் செய்யவில்லை. அவர்களுக்கு இத்தகைய நல்ல செயல்கள் தெரியவில்லை என்று பின் இந்த சஹாபாக்களுக்குப் பின்னர் வந்த சமுதாயத்தினர் கண்டுபிடித்தார்களா? இந்த புதுமையைக் கண்டு பிடித்தவர்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நேர்வழி பெற்ற கலீபாக்கள், சஹாபாக்கள் மற்றும் அடுத்து வந்த இரண்டு சமுதாயத்தவர்களான தாபியீன்கள் மற்றும் தபஅ தாபயீன்களை விடச் சிறந்தவர்களா? நிச்சயமாக இல்லை. பின்னர் அவர்களே செய்யாத புதுமையான ஒன்றை நாம் செய்ய வேண்டும்?6f) இஸ்லாம் நபி (ஸல்) அவர்களின் மீது அன்பு செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது. எனவே நாங்கள் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடி அவர்கள் மீது அன்பு செலுத்துகிறோம்.

-நபி (ஸல்) அவர்களின் மீது அன்பு செலுத்துவது முஸ்லிமான ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும். ஒருவர் தம்முடைய உயிர், பொருள், குடும்பம் மற்றும் பெற்றோர்கள் இவர்கள் அனைவரையும் விட நபி (ஸல்) அவர்களை அதிகம் நேசிக்காதவரை அவர் உண்மையான முஃமினாக மாட்டார். ஆனால் அதற்காக நபி (ஸல்) அவர்கள் ஏவிய நற்செயல்களைச் செய்வதை விட்டு விட்டு அவர்கள் தடுத்த பித்அத்தான செயல்களைச் செய்வது என்பது எவ்வாறு அறிவுப்பூர்வமானதாகும். ஒருவர் மீது அன்பு செலுத்துவது என்பது அவர் சொன்னதையெல்லாம் செய்வதும் அவர் தடுத்ததிலிருந்து விலகி கொள்வது தானே அவர் மீது மரியாதை செலுத்தி அன்பு செலுத்துவது ஆகும்?

நபி (ஸல்) அவர்கள் மீது அன்பு செலுத்துவது என்பது அவர்களின் சுன்னத்தான வழிமுறைகளை பின்பற்றி அவற்றை உறுதியாகப் பற்றிப் பிடித்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களின் சுன்னத்திற்கு மாற்றமான செயல்களைச் செய்வதிலிருந்தும் விலகியிருத்தல் ஆகும். நிச்சயமாக நபி (ஸல்) அவர்களின் சுன்னத்திற்கு மாற்றமான அனைத்தும் பித்அத் ஆவதோடல்லாமல் நபி (ஸல்) அவர்களுக்குக் கீழ் படிய மறுப்பதாகும். நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதும் இதில் அடங்கும். ஒருவரின் நல்ல எண்ணம் அவருக்கு இஸ்லாத்தில் பித்அத்தை செய்வதற்குரிய அனுமதி ஆகாது.

இஸ்லாம் என்பது இரண்டு முக்கியமான விஷயங்களில் அமைந்துள்ளது.

1. இக்லாஸ் என்னும் மனத்தூய்மை.

2. நபி (ஸல்) அவர்களின் வழி முறையைப் பின்பற்றுவது.

எனவே நபி (ஸல்) அவர்கள் மீது அன்பு செலுத்துவது என்பது நபி (ஸல்) அவர்களுடைய மற்றும் குர்ஆனுடைய கட்டளைகளை மீறி செயல்படுவது அல்ல! மாறாக நபி (ஸல்) அவர்களுடைய சொல் செயல் அங்கீகாரம் ஆகியவைகளை ப்பின்பற்றுவதன் மூலம் அவர்களை கண்ணியப்படுத்தி அன்பு செலுத்துவதாகும்.

6g) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் மூலம் நாம் அவர்களின் வரலாற்றைப் படித்து அதன் மூலம் மற்றவர்களை நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்ற ஊக்கப்படுத்துகிறோம்:

-நாம் இது வரை விளக்கியவைகளே இந்தக் இவர்களின் இந்தக் கேள்விக்கும் பதிலாக அமைகிறது. நபி (ஸல்) அவர்களின் வரலாற்றைப் படித்து அவர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறையைப் எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும், வருடம் முழுவதும் ஏன் தாம் மரணமடையும் வரையிலும் பின்பற்றி வாழ்வது ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமையாகும். ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும் அவ்வாறு செய்வது என்பது பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு ஆகும். மேலும் இவ்வாறு செய்வதன் மூலம் அவர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து வெகுதூரம் விலகிச் செல்கிறார்.7) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவது குற்றத்திற்குரிய பித்அத்தே!:

-எந்த வகையில் பார்த்தாலும் நபி (ஸல்) அவர்களுடைய பிறந்த நாளைக் கொண்டாடுவது என்பது குற்றத்திற்குரிய பித்அத் என்ற இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட நூதன செயலாகும்.ஒவ்வொரு முஸ்லிமும் இந்தச் செயல்களை தடுத்து நிறுத்த முடியுமானவரை முயற்சி எடுத்து நபி (ஸல்) அவர்களின் சுன்னாவை மேலோங்கச் செய்யப் பாடுபடவேண்டும்.

இந்த நூதன செயல்களைச் செய்பவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கவேண்டும். ஏனென்றால் இத்தகையவர்கள் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவைப் பின்பற்றுவதற்குப் பதிலாக புதிய அனாச்சாரங்களையும் பித்அத்களையுமே மார்க்கம் என்று கருதி செயல்படுவர்.

எத்தனை நபர்கள் இந்த நூதன செயல்களைச் செய்தாலும் ஒரு உண்மையான முஃமின் அவர்களைப் பின்பற்றக்கூடாது. மாறாக அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையை, அதை பின்பற்றுபவர்கள் வெகு சொற்பமாயினும் சரியே அதை மட்டுமே பின்பற்ற வேண்டும்.

சத்தியத்தின் அளவுகோல் எத்தனை நபர்கள் அதை செய்கிறார்கள் அல்லது பேசுகிறார்கள் என்பது அல்ல! மாறாக சத்தியத்தின் அளவு கோல் உண்மையே!8) கருத்து வேறுபாடு ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்?நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

-‘உங்களில் யாரேனும் (நீண்ட நாள்) வசிப்பீர்களானால் பல வேறுபாடுகளைக் காண்பீர்கள். என்னுடைய வழிமுறையையும் எனக்குப் பின்னால் வரக்கூடிய நேர்வழிபெற்ற கலிபாக்களின் வழிமுறைகளையும் பின்பற்றி நடக்க நான் உங்களை வலியுறுத்துகிறேன். அவைகளை வலுவாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். (மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்படுவதை விட்டும் எச்சரிக்கையாக இருங்கள்; ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்’ (ஆதாரம் அஹ்மத் மற்றும் திர்மிதி)

இந்த ஹதீஸில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் தோன்றக் கூடிய காலக்கட்டங்களில் நாம் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக விளக்கிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். புதிதாக தோன்றக் கூடியவைகள் அனைத்தும் வழிகேடுகள் என்றும் அவைகளை விட்டும் எச்சரிக்கையாக இருக்குமாறும் நமக்கு வலியுறுத்திக்கிறார்கள்.எனவே நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலோ அல்லது நேர்வழிபெற்ற கலிபாக்களின் வழிமுறைகளிலோ அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாததால் இது வழிகேட்டின் பால் இழுத்துச் செல்லும் ஒரு பித்ஆத் ஆகும். இதுவே மேற்கூறப்பட்ட ஹதீஸின் கருத்துப்படி உள்ள பொருளாகும்.

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: -நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் – இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (அல்குர்ஆன் 4:59)

இந்த வசனத்தில் அல்லாஹ்வுக்குக் கீழ் படியுங்கள் என்று கூறப்பட்டிருப்பதன் விளக்கமாவது அல்லாஹ்வின் கூற்றாகிய அல்-குர்ஆனுக்கு கீழ்படிவதாகும்.

அல்லாஹ்வின்தூதருக்கு கீழ்படியுங்கள் என்றால் அவர்களது மறைவிற்குப் பின்னர் அவர்களுடைய சுன்னாவைப் பின்பற்றுதல் என்பதாகும்.

ஏதேனும் பிணக்கு அல்லது கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அல்லாஹ்வுடைய வேதத்திலும் அவனுடைய தூதரின் சுன்னாவிலும் தான் தீர்வு காணவேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்.

எனவே குர்ஆனிலோ அல்லது சுன்னாவிலோ நபி (ஸல்) அவர்களின் பிறந்த நானைக் கொண்டாடுமாறு எங்கே கூறப்பட்டிருக்கிறது? யாரேனும் இந்தச் செயலைச் செய்தால் அல்லது நல்லது எனக் கருதினால் இதிலிருந்து அவர் உடனடியாக மீண்டு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்கவேண்டும். இதுவே உண்மையைத் தேடும் ஒரு முஃமினின் பண்பாகும். ஆனால் இந்த உண்மை தெள்ளத் தெளிவாக விளங்கிய பின்னரும் யாரேனும் பிடிவாதமாகவும் ஆணவமாகவும் இருந்தால் அவருடைய கணக்கு அல்லாஹ்விடமே உள்ளது.அல்லாஹ்வின் வேதமாகிய அல்-குர்ஆனையும் அவனுடைய இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் தெளிவான சீரிய வழிகாட்டுதல்களையும் நாம் அல்லாஹ்வை சந்திக்கும் வரையிலும் உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு அவற்றைப் பின்பற்றி வாழ வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவோம்.

நன்றி: http://www.islam-qa.com/ & http://suvanathendral.com/portal

Monday, February 15, 2010

மஃஷரில் மனிதனின் நிலை! – Audio/Video


ஷைத்தானின் சூழ்ச்சிகளும் அதை முறியடிப்பதற்கான தீர்வுகளும்! – Audio/Vide

http://suvanathendral.com/portal/?p=799


நபிமொழி

"மது அருந்தி போதையடைந்தவனின் நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் அருந்தினால் மறுமை நாளில் ரத்கத்துல் கப்பால் எனும் பானத்தை அல்லாஹ் அவனுக்கு புகட்டுவது கடமையாகிவிட்டது என்று நபி (ஸல்)அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களே! ரத்கத்துல் கப்பால் என்றால் என்ன? என்று கேட்டனர். அதற்கவர்கள், நரகவாசிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)

கிறிஸ்தவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் – திரித்துவம் (Trinity)!

நாம் சாதாரண கிறிஸ்தவர் ஒருவரைப் பார்த்து கடவுள் எத்தனைப் பேர் என்றால், ‘ஒருவர்’ தான் என்று உடனே பதில் வரும். சில விபரமறிந்த கிறிஸ்தவர்களிடம் கேட்டால், ‘கடவுள் ஒருவர் தான்! ஆனால் மூவரில் இருந்து செயல்படுகிறார்’ (Triune God) என்று கூறுவார்கள்.

கிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்ற ‘திரித்துவம்’ (Concept of Trinity) என்ற மூன்று கடவுள் கொள்கை பைபிளில் கூறப்படாத கடவுள் கொள்கையாகும். இது பைபிளின் பல்வேறு வசனங்களுக்கு முற்றிலும் முரண்பாடுடையதாக இருக்கிறது. மேலும் ஒரே ஒரு கடவுள் என்று கூறிக்கொண்டே கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்பது பல கிறிஸ்தவர்களுக்கு விசித்திரனமானதாகவும் அறிவுக்கு எட்டாததாகவும், புரியாத புதிராகவும் இருக்கிறது மேலும் பல கிறிஸ்தவர்கள் தங்களின் கொள்கையையே கைவிடுவதற்கும் காரணமாக இருக்கிறது.

குழப்பங்களின் மொத்த வடிவம் தான் கிறிஸ்தவர்களின் இந்த ‘திரித்துவக் கடவுள் கொள்கை’ என்றால் அது மிகையாகாது. ஏனெனில் எவ்வித லாஜிக்கும் இல்லாத இந்த திரித்துவக் கோட்பாடு பல கிறிஸ்தவர்களின் மனதிலே சிந்தனைகளாக, கேள்விகளாக உழன்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால் திரித்துவம் குறித்து கேள்விகள் கேட்காதே! இத்தகைய கேள்விகள் சாத்தானின் புறத்திலிருந்து வருகிறது. கேள்வி கேட்டால் நீ பெரும்பாவம் செய்த பாவியாகி விடுவாய்! என்ற பயமுறுத்தலின் காரணமாக பல கிறிஸ்தவர்கள் தங்களின் மனதிற்குள் இயற்கையாக எழக்கூடிய அறிவுப்பூர்வமான இத்தகைய சிந்தனைக் கேள்விகளை மனதிற்குள்ளேயே புதைத்துக் கொண்டு நமக்கேன் வம்பு என்று உண்மையை அறிந்து கொள்ளாமல் இருந்துவிடுகின்றனர்.

கடவுள் என்பவர்,
- ஆரம்பம் மற்றும் முடிவு அற்றவராக இருக்க வேண்டும்.
- எவரிடத்திலும் எத்தகைய தேவையுமற்றவராகவும், ஆனால் அவரால் சிருஷ்டிக்கப்பட்டவர்ககோ அவரது தேவையுடைவர்களாக இருக்கின்றனர்.
- கடவுளுக்கு ஓய்வோ அல்லது உறக்கமோ தேவையில்லை, ஏனென்றால் ஒரு கணநேரம் கூட தவறாது இந்த பிரபஞ்சத்தையும் அதில் உள்ளவர்களையும் பாதுகாத்து வருபவன்.
- மனிதனுக்கு இருக்கின்ற பலஹீனங்களான உணவு உண்ணுதல், இயற்கைத் தேவைகள் (மலம், ஜலம் கழித்தல்), உறக்கம், பிறப்பு, மரணம், நோய், பிறரை சார்ந்திருத்தல் போன்ற எத்தகைய பலஹீனங்களும் கடவுளுக்கு இல்லை,
- அவர் தனித்தவர், அவருடைய ஆட்சி, அதிகாரத்திற்கு யாருடைய உதவியும் தேவையுமில்லை,
- அவர் விரும்பியதை செய்கிறார், அவரைக் கேள்வி கேட்போர் யாருமில்லை,
- கடவுளின் கட்டுப்பாட்டை விட்டும் ஒரு நொடிப்பொழுதும் இந்த பிரபஞ்சத்தின் ஆட்சி அதிகாரம் அகன்று விடுவதில்லை.
- மனிதர்களின் பாவங்களை மன்னிப்பதற்கு கடவுளை வேறு எதுவும் நிர்பந்திப்பந்திப்பதில்லை. அவர் நாடியவர்களின் பாவங்களை மன்னிக்கிறார், நாடியவர்களை தண்டிக்கிறார்.

இந்த கட்டுரை யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல! மாறாக கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் சிந்தித்து தெளிவு பெற வேண்டுமென்பதே எமது அவா!

எனதருமை கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே! கடவுளின் இத்தகைய குணாதிசயங்களை மனதில் இருத்திக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடைகாண முன்வாருங்கள்! சிந்தித்து தெளிவு பெறுங்கள்! தவறுகள் இருந்து எங்களுக்கு ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினால் நன்றியறிதலுடன் திருத்திக் கொள்வோம்.

திரித்துவம் (Trinity) குறித்த சில சிந்தனைக் கேள்விகள்: -
Q 1. பெரும்பாலான கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில் தேவன், முழுமையான மனிதபிறவியெடுத்து முழுமனிதனாக (இயேசுவாக)வும் இருந்தார், அதே நேரத்தில் முழு முதற் தேவனாகவும் இருந்தார் என்பது நம்பிக்கையாகும்.
மனிதன் என்பவன் முடிவு உள்ளவன். தேவன் என்பவர் முடிவு அற்றவர். இந்நிலையில் எப்படி முடிவு உள்ளவரும் முடிவு அற்றவரும் ஒன்றாக முடியும்?

Q 2. தேவன் என்பவர் நிரந்தரமற்றவைகள் மற்றும் எத்தகைய தேவைகளிலிருந்தும் விலகியிருப்பவராகவும் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். முழுமனிதன் என்பது தேவனின் தன்மை இல்லாதவன் ஆவான்.
இந்நிலையில் இப்பூவுலகில் வாழும் போது தன்னுடைய தாய் மற்றும் பிறருடையதேவையுடையவராக வாழ்ந்த முழுமனிதரான இயேசு கிறிஸ்து எப்படி தேவனின் தன்மையுடையவரா ஆக முடியும்?

Q 3. விபரமுள்ள கிறிஸ்தவர்கள் சிலர் ‘திரித்துவத்திற்கு’ உவமைகள் கூற முற்படுவர். சிலர் ‘முட்டையை உதாரணம் கூறுவர், முட்டையில் ஓடு, வெள்ளை மற்றும் மஞ்சள் கரு என்ற மூன்றும் சேர்ந்து ஒரே முட்டைக்குள் இருப்பது போன்று ஒரு கடவுள் மூவரில் இருக்கிறார் என்பர்.
ஒரே முட்டையில் சில நேரங்களில் இரண்டு மஞ்சள் கரு கூட இருக்குமே அதனால் சில நேரங்களில் தேவன் நால்வரில் கூட இருப்பாரோ?

Q 4. இன்னும் சிலர், ஒரே ஆப்பிள் பழத்தில் அதன் தோல், கனி மற்றும் விதை என்று மூன்றும் ஒன்றில் இருப்பது போல் பிதா, தேவகுமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவரும் ஒருவராக இருக்கிறார்கள் என்பர்.
ஆப்பிள் பழத்தின் உள்ளே ஒன்றுக்கு மேற்பட்ட பல விதைகள் இருக்கின்றனவே அது போல் தேவன் பலரில் ஏன் இருக்கக் கூடாது?

Q 5. இன்னும் சிலர் ஒரு முக்கோனத்திற்கு மூன்று மூலைகள் இருப்பது போல் ஒரு கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்று கூறுவர்.
சதுரம் மற்றும் செவ்வகத்திற்கு நான்கு மூலைகள் இருக்கின்றனவே! அது போல் ஏன் ஒரு கடவுள் நான்கு பேரில் இருக்கக் கூடாது?

Q 6. இன்னும் சிலர் சற்று அறிவுப்பூர்வமாக விளக்கமளிப்பதாகக் நினைத்துக்கொண்டு, ஒருவர் சிலருக்கு தந்தையாகவும், இன்னும் சிலருக்கு சகோதரராகவும், அதே நேரத்தில் கல்லூரியில் முதல்வராகவும் இருப்பதில்லையா? அதே போல் ஒரே ஒரு கடவுள் மூவராக இருந்து செயல்படுகிறார் என்பர்.
இந்த மூவரில் தந்தையாகவும், சகோதரராகவும் மற்றும் கல்லூரியில் முதல்வராகவும் இருக்கக் கூடிய ஒருவர் மரணித்தால் தந்தை, சகோதரர் மற்றும் முதல்வர் ஆகிய மூவரும் தான் மரணமடைந்ததாகும்!. அது போல் இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டபோது பிதா மற்றும் பரிசுத்த ஆவியும் கொல்லப்பட்டனரா?

Q 7. இன்னும் சிலர், திரித்துவத்திற்கு அறிவியல் மூலமாக விளக்கம் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு, நீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் இருப்பதைப் போல் ஒரு கடவுள் மூவரில் இருக்கிறார் என்பர்.
நீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் இருந்தாலும் H2O என்ற அதன் மூலப்பொருள் (components) என்றுமே மாறாமல் எப்போதும் H2O ஆகவே இருக்கிறது! ஆனால் பிதா, தேவகுமாரன் மற்றும் பரிசுத்த ஆவி மூவரும் வெவ்வேறு மூலப்பொருட்களால் ஆனவரும் வெவ்வேறு தன்னை உடையவர்களும் ஆயிற்றே! முழு மனிதராகிய இயேசு கிறிஸ்து சதை மற்றும் எலும்புகளால் ஆனவர். ஆனால் மற்றவர்கள் ஆவியானவர்களாயிற்றே (made of sprit)? ஆவியானவர்களுக்கு கை, கால்கள் இருக்காதே! (பார்க்கவும் லூக்கா 24:36-40)

லூக்கா, 24 வது அதிகாரம், வசனங்கள் 36-40: இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்(தார்).

தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிற்கு உண்ண உணவும், உடுக்க உடையும் தேவைப்பட்டது. இயற்கை உபாதைகளை வெளியேற்ற வேண்டிய அவசியமேற்பட்டது. அத்தகைய அவசியங்கள் ஆவியானவர்களுக்கு தேவையில்லையே?

Q 8. (தேவ) குமாரன் என்பது தெய்வத் தன்மையை விட அந்தஸ்தில் குறைவானது. தேவன் என்பவர் யாருடைய மகனாக இருக்கவும், இருந்திருக்கவும் முடியாது. இந்நிலையில் இயேசு கிறிஸ்து அவர்கள் எப்படி ஒரே நேரத்தில் “மகன்” தன்மை உடையவராகவும் “தெய்வீகத்” தன்மை உடையவராகவும் இருக்கமுடியும் ?

Q 9. “என்னை கண்டவன் பிதாவைக் கண்டான்” (யோவான் 14:9) என்ற பைபிளின் வசனத்தைக் கிறிஸ்தவர்கள் குறிப்பிட்டு இந்த வசனத்தின் மூலம், “தாம் கடவுள்” என்று இயேசு கிறிஸ்து அவர்கள் கூறியதாக கூறுவார்கள்.
ஆனால் பைபிளின் அதே யோவான் (5:37) என்ற வசனத்தின் மூலம் இயேசு கிறிஸ்து,
“என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை” என்று கூறவில்லையா?

Q 10. இயேசு கிறிஸ்து “தேவகுமாரர்” என்றும் “மேசியா” என்றும் “இரட்சிப்பவர் அல்லது இரட்சகன்” (Saviour) என்றும் அழைக்கப்படுவதால் அவரை கிறிஸ்தவர்கள் கடவுள் என்கின்றனர். அமைதியை ஏற்படுத்துபவர்களை “தேவகுமாரர்கள்” என்று இயேசு கிறிஸ்து அவர்கள் குறிப்பிட்டதாக பைபிளில் காணமுடிகிறது. தேவனின் விருப்பங்களையும் திட்டங்களையும் பின்பற்றுகின்ற ஒருவனை யூதர்களின் வழக்குப்படி “தெய்வ மகன்” அல்லது “தேவகுமாரன்” என்று கூறப்படுவதுண்டு. பார்க்கவும் ஆதியாகமம் 6:2,4, யாத்திராகமம் 4:22, சங்கீதம் 2:7 மற்றும் ரோமர் 8:14.

தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள். (ஆதியாகமம் 6:2)

அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்ற போது, இவர்களும் பூர்வத்தில் பேர் பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள். (ஆதியாகமம் 6:4)

அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன். (யாத்திராகமம் 4:22)

தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்; (சங்கீதம் 2:7)

மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். (ரோமர் 8:14)

ஹிப்ரு மொழியில் “மேசியா” என்பதற்கு தேவனின் அருள் பெற்றவர் என்று கூறுவதுண்டு. “இரட்சகன்” (savior) என்ற வார்த்தை இயேசுவிற்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பயன் படுத்தப்பட்டிருப்பதை பைபிளில் காண்கிறோம்.

“கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஒரு ரட்சகனைக் கொடுத்ததினால், அவர்கள் சீரியருடைய கையின்கீழிருந்து நீங்கலானார்கள்; ஆதலால் இஸ்ரவேல் புத்திரர் முன்போல் தங்கள் கூடாரங்களிலே குடியிருந்தார்கள்” (II இராஜாக்கள் 13:5)
ஆகையால் “தேவகுமாரர்” (Son of God) அல்லது “இரட்சிப்பவர் அல்லது இரட்சகன்” (savior) போன்ற பெயர்கள் இயேசு கிறிஸ்துவிற்கு மட்டுமின்றி இன்னும் பலருக்கு பைபிளில் பயன்படுத்தப்பட்டிருப்பதால் இயேசு கிறிஸ்து தான் “தேவன்” அல்லது அவர் மட்டும் தான் “தேவனின் உண்மையான குமாரர்” என்பதற்கு இந்த பெயர்கள் அல்லது வார்த்தைகளைத் தவிர்த்து வேறு என்ன ஆதாரம் இருக்கிறது?

Q 11. நானும் பிதாவும் “ஒன்றாயிருக்கிறோம்” (யோவான் 10:30) என்ற வசனத்தின் மூலம் இயேசு கிறிஸ்து அவர்கள் தாமும் தேவனும் ஒன்று என்று கூறியதாக கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதே யோவான் அதிகாரம் 17,வசனம் 21-23 ல் இயேசு கிறிஸ்து அவர்கள் தம்மையும் தம் சீடர்களையும் மற்றும் தேவனையும் பற்றி குறிப்பிடுகையில் ஐந்து இடங்களில் “ஒன்றாயிருக்கிறது” பற்றிக் கூறுகிறார்கள். இந்நிலையில் “ஒன்றாயிருக்கிறது” என்று முன்னர் கூறிய வார்த்தைக்கு (யோவான் 10:30) ஒரு அர்த்ததையும் யோவான் 17:21-23ல் ஐந்து இடங்களில் கூறப்பட்டிருக்கின்ற “ஒன்றாயிருக்கிறது” என்ற வார்த்தைக்கு வேறு அர்தத்தையும் கொடுப்பது ஏன்?

Q 12. தேவன் என்பவர் மூவரில் ஒருவராகவும், ஒருவரில் மூவராகவும் ஓரே நேரத்தில் (at a time) இருக்கிறாரா? அல்லது ஒரு நேரத்தில் ஒருவராக (one at a time) மட்டும் தான் இருக்கிறாரா?

Q 13. தேவன் என்பவர் ஒருவராகவும் மற்றும் மூவராகவும் ஓரே நேரத்தில் (at a time) இருந்தால் அந்த மூவருமே முழுமையான தேவனாக (கடவுளாக) இருக்கமுடியாது. இந்நிலையில் இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்திருந்த நேரத்தில் அவர் முழுமையான கடவுளாக இருந்திருக்க முடியாது அல்லது பரலோகத்தில் பிதாவாக முழுமையான கடவுளாக இருந்திருக்க முடியாது .
இந்நிலையில், இயேசு கிறிஸ்து அடிக்கடி குறிப்பிட்ட “அவருடைய தேவன் நம்முடைய தேவன்” மற்றும் “அவருடைய கடவுள் நம்முடைய கடவுள்” என்பது ஒன்றுக்கொன்று முரண்பாடுகளாகத் தோன்றவில்லையா?
மேலும் இது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டிருந்த சமயத்திலும் உயிர்த்தெழுந்த நேரத்திலும் முழுமையான தேவனாக இருக்கவில்லை என்று ஆகாதா?

Q 14. தேவன் என்பவர் ஒரே நேரத்தில் (at a time) ஒருவராகவும், மூவராகவும் இருந்தால், இயேசு கிறிஸ்து பூமியில் தாயின் கருவறையில் இருந்த போதும், தனக்குத் தானே எதுவும் செய்து கொள்ள முடியாமல் தன் தாயின் உதவியை எதிர் பார்த்திருந்த பச்சிளம் குழந்தையாக இருந்த போதும், வளர்ந்து வாலிபராகி பூமியில் இருந்த போதும் பரலோகத்தில் தேவனாக இருந்து இந்த பிரபஞ்சத்தை ஆட்சி செய்து அதில் உள்ள கோடானு கோடி ஜீவராசிகளுக்கு உணவளித்துக் கொண்டிருந்தவர் யார்?

Q 15. தேவன் ஒருவராகவும் மூவராகவும் ஒரே நேரத்தில் (at a time) இருந்தால், இயேசு கிறிஸ்து யூதர்களால் சிறை பிடிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்ற போதும், சிலுவையில் அறையப் பட்டு கொல்லப்பட்டதிலிருந்து உயிர்த்தெலுதல் வரையிலுமான இடைப்பட்ட அந்த மூன்று இரவு மூன்று பகலின் போதும் பரலோகத்தில் தேவனாக இருந்து உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தவர் யார்?

அந்த நேரத்தில் பிதாவாகிய தேவன் இந்த பிரபஞ்சத்தை இரட்சித்துக் கொண்டிருந்தார் என்று கூறினால் உங்களுடைய திரித்துவம் தோற்றுவிடுகிறது. ஏனென்றால் பிதா வேறு, தேவ குமாரன் வேறு என்றாகி நீங்கள் பல தெய்வ வணக்கமுடையவராகிவிடுகிறீர்கள்.

இல்லை அப்போதும் தனக்குத் தானே உதவி செய்து கொள்ள இயலாமல் தன் தாயாரின் உதவியையும், மற்றவர்களின் உதவியையும் எதிர்பார்த்த நிலையிலிருந்த இயேசு கிறிஸ்து தான் அல்லது மரணித்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட அந்த இயேசு கிறிஸ்து தான் இந்த பிரபஞ்சத்தையும் இரட்சித்துக்கொண்டிருந்தார் என்று நீங்கள் கூறுவீர்களா?

மேலும் இந்த திரித்துவக் கொள்கை பரலோகத்தில் இருக்கும் பிதாவே தம்மை அனுப்பியதாக இயேசு கிறிஸ்து கூறுகின்ற பல வசனங்களுக்கு முரண்பாடாக இல்லையா?

Q 16. கிறிஸ்தவர்களின் கூற்றுப்படி: - பிதாவும் (Father) கடவுள் தேவகுமாரனாகிய இயேசுவும் (Son) கடவுள் பரிசுத்த ஆவிவும் (Holy Ghost) கடவுள்ஆனால்,
பிதா என்பவர் தேவகுமாரன் இல்லை, தேவகுமாரன் என்பவர் பரிசுத்த ஆவி இல்லை, பரிசுத்த ஆவி என்பது பிதா இல்லை.

எளிமையான கணக்குப்படி, G என்பது தேவனையும் (God), F என்பது பிதாவையும் (Father), S என்பது தேவகுமாரனையும் (Son), H என்பது பரிசுத்த ஆவியையும் (Holy Ghost) குறிக்கிறது என வைத்துக் கொள்வோம்.

இதன் படி,
F=G, S=G, மற்றும் H=G என்றிருந்தால்,
அதாவது
பிதா என்பவர் தேவன்! (F=G) தேவகுமாரன் என்பவர் தேவன்! (S=G) பரிசுத்த ஆவி என்பது தேவன்! (H=G)
என்றிருந்தால், F=S=H என்று ஆகிவிடும்.
ஆனால் மேற்கூறிய இரண்டாவது கருத்துப்படி F ≠ S ≠ H
அதாவது
பிதா என்பவர் தேவகுமாரன் இல்லை! (F ≠ S)தேவகுமாரன் என்பவர் பரிசுத்த ஆவி இல்லை! (S ≠ H)பரிசுத்த ஆவி என்பது பிதா இல்லை! (H ≠ F)
இது கிறிஸ்தவர்களின் திரித்துவத்தில் காணப்படுகின்ற மிகப் பெரிய முரண்பாடு அல்லவா?

Q 17. இயேசு கிறிஸ்து கடவுளாக இருந்திருந்தால் தன்னை good master என்றழைத்த நபரிடம் தன்னை God என்று அழைக்க வேண்டாம் என்றும் பரலோகத்தில் உள்ள தன்னுடைய தேவனைத் தவிர வேறுயாரும் God இல்லை என்று ஏன் கூறவேண்டும்?

Q 18. மாற்கு 2:29 ல் இயேசு கிறிஸ்து “நம்முடைய தேவன் ஒரே ஒரு தேவனே” என்று கூறியிருக்க கிறிஸ்தவர்கள் தேவன் மூவரில் ஒருவர், ஒருவரில் மூவர் என்று ஏன் கூறுகின்றனர்?

Q 19. ஒருவர் கிறிஸ்தவராக இருப்பதற்கு “திரித்துவம்” மிக முக்கியமானது என்றிருந்தால் ஏன் இயேசு கிறிஸ்து தம்முடைய வாழ்நாளில் இதை போதித்து வலியுறுத்திக் கூறவில்லை?
மேலும், திரித்துவம் என்றாலே என்ன என்று அறியாமலேயே இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் எப்படி கிறிஸ்தவர்களாக கருதப்பட்டார்கள் திரித்துவக் கோட்பாடு தான் கிறிஸ்தவத்தின் முதுகெலும்பு என்றிருந்தால் அதை இயேசு கிறிஸ்து பல்வேறு சந்தர்பங்களில் போதித்து அதை மிக மிக வலியுறுத்திக் கூறி மக்களுக்கு விளக்கியிருப்பார்களே!

Q 20. இயேசு கிறிஸ்துவும் பிதாவும் ஒன்று என்றிருந்தால், ஏன் இயேசு கிறிஸ்து பிதாவிடத்திலே பிரார்த்தனை செய்தார்?
அந்தச் சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். (மத்தேயு 11:25)
தெய்வம் தெய்வத்திடமே பிரார்த்தனை செய்து கொண்டதா?

Q 21. இயேசு கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியும், பிதாவும் ஒன்று என்றிருந்தால், ஏன் பிதா அறிந்திருக்கின்ற அனைத்தையும் இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவி அறிந்திருக்கவில்லை?
அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார். (மாற்கு 13:32) மற்றும் (மத்தேயு 24:36)

Q 22. இயேசு கிறிஸ்துவும் பிதாவும் ஒன்று என்றிருந்தால், ஏன் பிதாவுக்கு இருக்கும் ஆற்றல் போன்று இயேசு கிறிஸ்துவிற்கு இல்லை?
நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. (யோவான் 5:30) மற்றும் யோவான் 6:38.

சிந்தித்து தெளிவு பெறுங்கள் சகோதர, சகோதரிகளே!

Q & A

Masturbation is forbidden

Q- Is masturbation unlawful?
A – What is correct among the sayings of the scholars is that masturbation is unlawful. Allah Almighty says: “And those who guard their chastity. Except from their wives or (the slaves) that their right hands possess, for then, they are free from blame. But whoever seeks beyond that, then those are the transgressors.” (Qur’an, 23:5-7)
Here, Allah Almighty praised those who satisfy their sexual desire with only their wives or (lawful) slaves. He Almighty also ruled that those who seek other means of satisfying their desire are transgressors. – Permanent Committee for Islamic Research and Verdicts; Fatawa Islamiyah, vol. 8, p. 298


Blessings on Prophet

Q- If sending salutations of peace is a good innovation, then is it permissible to forbid the people from sending salutations of peace upon the noble Prophet (peace be upon him)?
A – Sending blessings and salutations of peace upon our Messenger, and upon his brothers, the Prophets, is not a good innovation, as the questioner says.
In fact they are both lawful, based upon sound evidences. Therefore, it is not permissible to forbid the people from doing so, unless it is done in a way which was not done during the time of the righteous Companions or the Tabi’een, such as the practice of saying it aloud after the Adhan, as if it were part of the Adhan, or such as at the gathering of people at specific times expressly for the purpose of sending prayers and salutations upon the Prophet (peace be upon him), since this has not been reported from our righteous predecessors. Performing them in this way is therefore the innovation which is detested and which has no basis (in the Sunnah). – Permanent Committee for Islamic Research and Verdicts; Fatawa Islamiyah, vol. 1, p. 285

From the lives of our pious predecessors

Salah is our connection with our Lord and the early Muslims were very keen on praying with full attentiveness. Abu Al-Darda (may Allah be pleased with him) said: “It is from a person’s knowledge and understanding that he sees to his needs first in order to turn to his prayer with a heart free of distractions.” – Ibn Al-Mubarak in Al-Zuhd wal-Raqa’iq, vol. 2, pg. 726

- Thanks to Bro. Shadhuly A. Hassan

Sunday, February 14, 2010

الأصول العلمية لفهم النصوص

இஸ்லாம் அல்லாஹ்விடமிருந்து வந்த மார்க்கம் என்பதால் அதன் அடிப்படை மூலாதாரங்களாக அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த வஹீயாக உள்ள அல்-குர்ஆனும் சுன்னாவுமே காணப்படுகின்றன. இதுபற்றி அல்-குர்ஆனும் சுன்னாவும் பல்வேறு இடங்களில் பேகின்றன.


நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள், இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும் உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள், உங்களில் ஏதாவது ஒரு விடயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள் – இது தான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (அல்-குர்ஆன் 4:59)


முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்கள் சொல்(வது) எல்லாம் ‘நாங்கள் செவியேற்றோம், (அதற்குக்) கீழ்ப்படிந்தோம்’ என்பது தான், இ(த்தகைய)வர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள். இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ – அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள். (அல்-குர்ஆன் 24:51-52)


மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோபெண்ணுக்கோ உரிமையில்லை, ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸுலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்-குர்ஆன் 33:36)


இதே கருத்தைப் பின்வரும் வசனங்களும் வலியுறுத்துகின்றன. (பார்க்கவும்: அல்-குர்ஆனின் வசனங்கள் 4:65, 28:50, 24:63 மற்றும் 49:1)


நபி (ஸல்) அவர்களும் இந்த அடிப்படையை வலியுறுத்திப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசியுள்ளார்கள்.


உதாரணமாகப் பின்வரும் ஹதீஸைக் குறிப்படலாம்.
(مسند أحمد – (28 / 410
… عنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ الْكِنْدِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَا إِنِّي أُوتِيتُ الْكِتَابَ وَمِثْلَهُ مَعَهُ أَلَا إِنِّي أُوتِيتُ الْقُرْآنَ وَمِثْلَهُ مَعَهُ
‘நான் அல்-குர்ஆனையும் அது போன்ற ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளேன்.’ (அஹ்மத்)


இவ்வடிப்படையை அதிகமான மக்கள் புரிந்து கொண்டாலும்கூட அல்-குர்ஆனையும் சுன்னாவையும் சரியான முறையில் புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுவதை அவதானிக்க முடிகின்றது. அவை இரண்டையும் சரியான முறையில் புரிந்து கொள்வதற்கான அடிப்படை அறிவு இல்லாமையே இதற்குக் காரணமாகும்.


இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான அல்-குர்ஆனையும் சுன்னாவையும் புரிந்து கொள்வதற்கான சில வழிகாட்டல்களை அல்-குர்ஆன் சுன்னா அடிப்படையில் ஆய்வு செய்த அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவை இங்கு தொகுத்துத் தரப்படுகின்றன.
1) நபித் தோழர்கள் சென்ற வழியில் (மன்ஹஜுஸ் ஸஹாபா) நின்று விளங்குதல்:
அல்-குர்ஆனையும் சுன்னாவையும் சரியான முறையில் விளங்கவும், வழிகேடுகளில் இருந்து நம்மைப் பாதுகாத்து கொள்ளவும் இது முக்கியமான ஓர் அம்சமாகும்.


இஸ்லாத்தில் நபித்தோழர்களுக்கு மிகச் சிறந்த அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது. அல்லாஹுத்தஆலா அவர்களைப் புகழ்ந்து அல்-குர்ஆனில் பல்வேறு இடங்களில் கூறியுள்ளான்.
இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக் கொண்டவர்களும், அவர்களை (எல்லா) நற்கருமங்களிலும் பின்தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான், அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள், அன்றியும் அவர்களுக்காக சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் – இதுவே மகத்தான வெற்றியாகும். (அல்-குர்ஆன் 9:100 )


முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றார், அவருடன் இருப்பவர்கள் காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்குக்கிடையே இரக்கம் மிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜுதுசெய்பவர்களாகவும், அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜுதுடைய அடையாளமிருக்கும், இதுவே தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும்; இன்ஜீலிலுள்ள அவர்கள் உதாரணமாவது: ஒரு பயிரைப் போன்றது; அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது; பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில் அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது; இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோபமூட்டுகிறான் – ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்’ (அல்-குர்ஆன் 48:29)


நபி (ஸல்) அவர்களும் தனது தோழர்களின் சிறப்பை எடுத்துக் கூறியுள்ளார்கள்:
النُّجُومُ أَمَنَةٌ لِلسَّمَاءِ فَإِذَا ذَهَبَتِ النُّجُومُ أَتَى السَّمَاءَ مَا تُوعَدُ وَأَنَا أَمَنَةٌ لأَصْحَابِى فَإِذَا ذَهَبْتُ أَتَى أَصْحَابِى مَا يُوعَدُونَ وَأَصْحَابِى أَمَنَةٌ لأُمَّتِى فَإِذَا ذَهَبَ أَصْحَابِى أَتَى أُمَّتِى مَا يُوعَدُونَ.
‘நட்சத்திரங்கள் வானத்திற்குப் பாதுகாப்பாகும். அவை சென்று விட்டால் வானத்திற்கு வாக்களிக்கப்பட்ட (அழிவு) வந்துவிடும். நான் எனது தோழர்களுக்கு பாதுகாப்பாவேன். நான் சென்று விட்டால் எனது தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (குழப்பங்கள்) வந்துவிடும். எனது தோழர்கள் எனது உம்மத்திற்குப் பாதுகாப்பாவார்கள். அவர்கள் சென்றுவிட்டால் எனது உம்மத்தினருக்க வாக்களிக்கப்பட்டவை வந்துவிடும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் )
இவ்வாறு அவர்களின் சிறப்புக்கள் பற்றிக் கூறுகின்ற ஏராளமான ஆதாரபூர்வமான ஹதீஸ்களைக் காண முடிகின்றது.


நபித் தோழர்கள், நபி (ஸல்) அவர்களுடன் ஒன்றாக வாழ்ந்தவர்கள். நபியவர்களுக்கு வஹீ அருளப்படுவதை நேரடியாகப் பார்த்தவர்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும் குர்ஆன் சுன்னா மூலம் எதை நாடுகிறார்கள் என்பதை நன்கறிந்தவர்கள். அவற்றை விளங்குவதில் சிக்கல்கள் வரும்போது அவற்றுக்கான விளக்கத்தை நேரடியாக நபியவர்களிடம் பெற்றுக் கொண்டவர்கள். எனவேதான் அல்-குர்ஆன் சுன்னாவை மிகச் சரியாக விளங்க வேண்டுமாக இருந்தால் நபித் தோழர்களின் விளக்கத்தின் ஒளியில் நின்று விளங்க முற்பட வேண்டும்.


இதுபற்றி இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்:
‘அகீதாவுடைய விடயத்தில் முஸ்லிம்கள் இரண்டு முக்கியமான அம்சங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அவற்றில் ஒன்று, அல்-குர்ஆன் சுன்னா வாசகங்கள் மூலம் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எதை நாடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளல். இதற்காக அல்-குர்ஆன் அருளப்பட்ட அரபு மொழியை அறிந்து கொள்வதுடன் ஸஹாபாக்களும், தாபியீன்களும், ஏனைய உலமாக்களும் குறிப்பிட்ட சொற்களுக்கு என்ன அர்த்தங்களைக் கூறியுள்ளார்கள் என்பதையும் அறிதல் வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அல்-குர்ஆனையும் சுன்னாவையும் நபித் தோழர்களுக்குப் போதித்தபோது அதன் மூலம் தான் நாடும் கருத்தையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள். இந்தவகையில் நபித் தோழர்கள் அல்-குர்ஆனை மனனமிட்டதைவிட அதன் கருத்துக்களைப் பூரணமாகப் புரிந்து கொண்டார்கள் எனலாம்’ (மஜ்மூஉல் பதாவா 17/353)
இமாம் சாத்திபீ (ரஹ்) அவர்கள் இதுபற்றி பின் வருமாறு கூறுகிறார்கள்:
‘ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள் (ஸஹாபாக்கள், தாபியீன்கள் , அவர்களைத் தொடர்ந்து வந்தோர்) அல்குர்ஆன் மற்றும் அதனுடன் தொடர்பான கலைகள் பற்றி மிக்க ஞானமுள்ளவர்களாக இருந்தனர் ‘ (அல்முவாஃபகாத் 2/79)


மேலும் இப்னு அப்தில் ஹாதீ (ரஹ்) அவர்கள் இந்த விடயம் தொடர்பாக பின்வருமாறு கூறுகிறார்கள்:
‘அல்-குர்ஆன் சுன்னாவுக்கு ஸலபுகளுடைய காலத்தில் இல்லாத விளக்கத்தைக் கொடுப்பது கூடாது. அவ்வாறு செய்தால் குறிப்பிட்ட விடயத்தில் அவர்கள் அறிவிலிகளாகவும், வழிகேடர்களாகவும் இருந்துள்ளனர் என்ற கருத்தையே அது கொடுக்கும்’ ( அஸ்ஸாரிமுல் முன்கீ, பக்கம்: 427)
இதே கருத்தைத்தான் குர்ஆன் சுன்னாவை ஆளமாகக் கற்ற அறிஞர்களில் அனேகமானவர்கள் கொண்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.


இவற்றிலிருந்து அல்-குர்ஆனையும் சுன்னாவையும் சரியான முறையில் விளங்கிக் கொள்ள ஸஹாபாக்களின் விளக்கத்தின் நிழலில் நின்று விளங்க முயற்சிக்க வேண்டுமென்பது தெளிவாகின்றது. குறிப்பாக இந்த அமசம் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை (அகீதா) விடயத்தில் மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.


ஏனெனில் அகீதாவுடன் தொடர்பான அல்-குர்ஆன் சுன்னாவை விளங்கும்போது ஸஹாபாக்களின் விளக்கத்தை ஒதுக்கி விட்டு தமது சுய சிந்தனையின் அடிப்படையில் விளங்க முற்பட்டபோதே இஸ்லாமிய வரலாற்றில் பல வழிகேடுகள் தோன்றின என்பது வரலாறு சொல்லும் உண்மையாகும்.


2) அரபு மொழி அறிவு:
அல்-குர்ஆனும் சுன்னாவும் தூய்மையான அரபு மொழியில் அமைந்தவையாகும். அவற்றை சரியாகப் புரிந்து கொள்ளவேண்டுமாக இருந்தால் அரபு மொழி அறிவு இன்றியமையாததாகும். அரபு மொழி தெரியாமல் அவற்றை அனுகும்போது அல்லாஹ்வும் அவனது தூதரும் நாடாத பல அர்த்தங்களை கூறுவதென்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். நிதானமாகச் சிந்திக்கின்ற எவரும் இதைப்புரிந்து கொள்ள முடியும். எனவேதான் இந்த சமுதாயத்தில் வந்த அனைத்து அறிஞர்களும் அரபு மொழி விடயத்தில் கூடிய கவனம் செலுத்தியுள்ளனர்.


அரபு மொழியின் விசாலமான அறிவு அற்ற ஒருவரால் அல்-குர்ஆனையும் ஹதீஸையும் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது என்று இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். (பார்க்க: அர்ரிஸாலா, பக்கம்: 50)


மேலும், இப்னு அப்தில் பர் (ரஹ்) அவர்கள் இதுபற்றிப் பின் வருமாறு கூறுகின்றார்:
அல்-குர்ஆனையும் ஹதீஸையும் விளங்குவதற்காக அரபு மொழியின் உதவி தேடப்படல் வேண்டும். உமர் (ரழி) அவர்கள், சுன்னா, பராயிழ் (வாரிசுரிமைக் கல்வி), அரபு இலக்கணம் போன்றவற்றைக் கற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தி வந்தார்கள். (பார்க்க: ஜாமிஉ பயானில் இல்ம் 2/1132)


அல்-குர்ஆன் தெளிவான அரபு மொழியில் அருளப்பட்டது என்பதை அல்-குர்ஆன் பல இடங்களில் குறிப்பிடுகின்றது. உதாரணமாக சூரா யூசுப்: 2, சுஅரா: 195, நஹ்ல்: 103 போன்ற வசனங்களைக் குறிப்பிடலாம்.


அவ்வாறே நபி (ஸல்) அவர்களும் தூய்மையான அரபு மொழியையே பயன்படுத்தினார்கள். எனவே, அல்-குர்ஆனையும் ஹதீஸையும் அவற்றின் உயிரோட்டம் பிசகாமல் பிற மொழிகளுக்கு வழங்குவதென்பது சாத்தியமற்ற ஒன்றாகும் என்பது அறிஞர்கள் அனைவரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும். எனவேதான் அல்-குர்ஆன் மொழிபெயர்ப்புகள், ஹதீஸ் மொழிபெயர்ப்பு நூல்களில் அதிகமாக அடைப்புக் குறிகள் (Brackets) பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. அத்துடன் அரபு மொழியறிவற்றவர்கள் அல்-குர்ஆன் சுன்னாவுக்கு ஆளமான விளக்கங்கள் சொல்ல முற்பட்டபோது சமுதாயத்தில் அதிகமான வழிகேடுகள் தோற்றம் பெற்றன.


3) ஒரே தலைப்பில் வந்துள்ள அல்-குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் தேடி ஒன்று சேர்த்தல்:
அல்-குர்ஆன் சுன்னாவைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கான மற்றுமொரு வழியாக இது உள்ளது. பொதுவாக அல்-குர்ஆனும் ஹதீஸும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவையாகவே காணப்படுகின்றன.
அவற்றுக்கிடையில் நிச்சயமாக முரண்பாடுகள் எதுவும் கிடையாது. எனவே, குறிப்பிட்ட ஒரு விடயம் தொடர்பான தெளிவைப் பெற விரும்பினால் அதனுடன் தொடர்பான அனைத்து வசனங்களையும் ஹதீஸ்களையும் ஒன்றுதிரட்டி, அவற்றின் நிழலிலேயே தீர்வைப் பெற முயற்சிக்க வேண்டும். மாறாக ஆளமான தேடல் இல்லாமல் எடுத்த எடுப்பில் தனக்குக் கிடைத்த ஒரு சில வசனங்களையும் ஹதீஸ்களையும் வைத்து முடிவெடுக்கும் போது வழிகேடுதான் உருவாகும்.


ஒரே தலைப்பில் வந்துள்ள அல்-குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் திரட்டி ஒன்று சேர்க்கும்போது சிலவேளை அவற்றுக்கிடையில் முரண்பாடுகள் இருப்பது போல் தோன்றலாம். அவ்வாறான வேளைகளில் அவற்றுக்கிடையில் இணக்கங்கண்டு தீர்வுகளைப் பெறுவதற்கான வழிமுறைகளைச் சட்ட அறிஞர்கள் விளக்கியுள்ளனர். அவற்றை அறிந்து கொள்வதும் அல்குர்ஆன் ஹதீஸ்களைச் சரியாக விளங்கிக் கொள்வதற்கு வழிவகுக்கும்.


4) ஷரீஆவின் நோக்கங்களை அறிந்து கொள்ளல்:
அல்-குர்ஆன் சுன்னாவைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு இதுவும் அவசியமாகும். நிச்சயமாக அல்லாஹ்வால் மார்க்கமாக்கப்பட்ட அனைத்தும் மனிதர்களின் இம்மை மறுமை நலன்களையே இலக்காகக் கொண்டுள்ளன.
‘ஷரீஆவின் அடிப்படை நோக்கம், நலவுகளை அடைந்து கொள்வதும் கெடுதிகளை அகற்றுவதுமாகும்’ என்று இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். எனவே, அல்-குர்ஆன் சுன்னாவைச் சரியாகப் புரிந்து கொள்ள விரும்புகின்ற ஒருவர் ஷரீஆவின் நோக்கங்களையும் இலக்குகளையும் மிகத் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகும். ஷரீஆவின் நோக்கங்களையும் இலக்குகளையும் அறிந்து கொள்ள முடியாத ஒருவரால் அல்-குர்ஆன் சுன்னாவைச் சரியாகப் புரிந்து கொள்வது சாத்தியமற்றதாகவே காணப்படும்.


ஆக, அல்-குர்ஆனையும் சுன்னாவையும் சரியான முறையில் புரிந்து கொள்வதன் மூலமே இஸ்லாத்தைப் பூரணமாக அதன் தூய்மையான வடிவில் புரிந்து பின்பற்ற முடியும். எனவே, அதற்கான சரியான வழிமுறைகளைப் பின்பற்றி அவற்றை சரியான முறையில் புரிந்து கொள்ள முயற்சிப்போமாக.


எம்.எல். முபாரக் ஸலபி, மதனீ M.A.
mubarakml@gmail.com

Q & A

Q- I have an old telephone bill, which I have not yet paid off. What should I do?
A – The amount on the bill which you have not paid is a debt which you are answerable with regard to. So it is obligatory upon you to hasten in paying it off, and remove yourself from any liability regarding it.
– Permanent Committee for Research and Verdicts; Fatawa Al-Lajnah Ad-Da’imah, vol. 23, no. 11938


Reciting the Qur’an

Q- Is it permissible for a woman to read the Qur’an silently? Or must she recite it out loud and slowly?
A – Reciting the Qur’an slowly is not compulsory – for male or female. But doing so is considered one of the etiquette of recitation. Among the best forms of recitation is that one would do so slowly, pondering over its meanings and trying to understand it. One can recite it quickly under the condition that none of the letters are skipped.
As for reading out loud or quietly, this depends on the person: if one feels more alert and can concentrate better by reading it out loud, he should read out loud, as long as he is not disturbing others. If he can concentrate better when reading quietly, then he should read quietly. And if both are the same for him, he may choose as he wishes.– Sheikh Bin Uthaymeen; Fatawa Islamiyah, vol. 7, p. 27


Sending salutations

Q- Did the Companions forbid people from standing when sending salutations of peace upon the Prophet (peace be upon him)?
A – It was never a practice of the Companions to stand when they sent salutations of peace upon the Prophet (peace be upon him) – neither when visiting his grave nor at any other time. Nor was it their custom to go to his grave for the purpose of sending salutations of peace upon him. Whenever they entered the Prophet’s Mosque, they would stand by it in order to send peace and blessings upon him.
But it has also been authentically reported that when Ibn Umar (may Allah be pleased with him) returned from a journey, he would enter the Prophet’s Mosque and once he had prayed, he would go to the grave of the Prophet (peace be upon him) and send salutations of peace upon him.– Permanent Committee for Islamic Research and Verdicts; Fatawa Islamiyah, vol. 1, p. 279


Changing name

Q- When a person accepts Islam, should he change his name? For example, from George or Joseph to something Islamic?
A – Unless a person’s name signifies him being a worshipper of other than Allah, it is not necessary for him to change his name. It is only good or better to do it. So it is good to change his foreign name to an Islamic name, but it is not obligatory.But if his name was Abdul Masih (the servant of the Messiah), or something similar, then he definitely has to change it. But in case of other names that do not signify servitude to other than Allah, like George and Paul, then it is not neccessary to change them, because these names are used by people other than Christians too. – Sheikh Bin Baz; Fatawa Islamiyah, vol. 8, p. 212

'காதலர் தினம்' - 14 பிப்ரவரி

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 15ஆம் நாளிதழ்களில் அதற்கு முதல் நாள் (14 பிப்ரவரி) 'காதலர் தினம்' கொண்டாட(?)ப் பட்டதும் அதில் ஏற்பட்ட ரசாபாசங்களும் அவமானங்களும் செய்திகளாக விரிந்திருக்கும். இன்று 'காதலர் தினம்' நாடு முழுதும் கொண்டாடப்பட்ட இலட்சணம் நாளைய நாளிதழ்களில் வெளியாகும். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இளம் தலைமுறை என்போர் மிகப் பெரிய சொத்தாவர். எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்க்கை சிறந்ததாக அமைய அவர்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள் உயர்ந்ததாக அமைவதில் கவனம் செலுத்த வேண்டியது பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் அரசுகளின் கடமையாகும். வளரும் பருவத்தில் அவர்களுக்கு அமைத்துக் கொடுக்கப்படும் பாதையே அவர்களின் எதிர்கால வாழ்க்கையின் தரத்தினை நிர்ணயிக்கிறது.

ஆனால், நாகரீகத்தின் உச்சியில் உள்ளதாகப் பெருமைப்பட்டுக் கொள்ளும் இக்காலத்தில் பிள்ளைகளின் வாலிபப் பருவம் என்பது அவர்களின் பெற்றோரைத் தீக்கணலில் நிற்க வைத்துள்ளது என்றால் அது மிகையாகாது. அறிவியலின் முன்னேற்றத்தால் கண்டுபிடிக்கப்பட்டப் பல நவீன உபகரணங்கள், புதிய தலைமுறையினரின் பொழுதுபோக்கு அம்சங்கள் என அனைத்திலும் இளம் தலைமுறையைச் சீரழிக்கும் அனைத்து அம்சங்களும் கலந்து காணப்படுகின்றன.

இவற்றில், இந்தப் பிப்ரவரி 14 ஆம் நாளைக் கொண்டாடுவதற்குச் சூட்டப்பட்ட நாமகரணமும் ஒன்று. ஆசிரியர்களைக் கவுரவிக்க 'ஆசிரியர் தினம்', தாய்மார்களைக் கவுரவிக்க 'அன்னையர் தினம்', சுற்றுப்புறச் சூழலின் முக்கியத்துவத்தை உணர்ந்த 'சுற்றுப்புறச் சூழல் தினம்' என ஓராண்டில் கிட்டத்தட்டப் பாதி நாட்களுக்கு ஒவ்வொரு பெயரிட்டு நினைவு கூர்வதற்கு இடையில், காதலர்களை மகிமைப் படுத்தக் 'காதலர் தின'மாம்!

பொதுமக்களுக்குத் தீமை விளைவிக்கக் கூடியது என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் "புகை பிடிப்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு!" முத்திரையுடன் புகைப்பொருட்களை விற்கவும் தனி மனிதனுக்கும் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் சாபக்கேடானது என நன்றாகத் தெரிந்திருந்தும் "பார் வசதியுடன் கூடிய மது விற்பனைச் சாலைகளை" அரசே நடத்த ஏற்பாடு செய்தும் சமூக வாழ்வையே சீர்குலைக்கக்கூடிய மிகப்பெரிய உயிர்க்கொல்லி வைரஸ் தொழிற்சாலை எனத் தெரிந்திருந்தும் 'ரெட் லைட் ஏரியா' என்ற பெயரில் லைசன்ஸ் கொடுத்து விபச்சாரம் செய்யவும் அனுமதி வழங்குகின்ற "மக்களைப் பாதுகாக்கும்(?) அரசு"கள்.

"என் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும்" என்ற எதிர்பார்ப்புடன் தன் பிள்ளைகளின் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்யும் பெற்றோர்கள்தாம் இவ்விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இஸ்லாமியக் கலாச்சாரத்திற்கு மட்டுமின்றி, பண்பாட்டைப் பேணுகின்ற எந்தக் கலாச்சாரத்துக்கும் எவ்வகையிலும் ஒவ்வாத இந்த ஆபாச தினச் சிந்தனையில் உள்ள தீமைகளைக் குறித்த போதிய அறிவு பெற்றோர்களுக்கு இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் பள்ளிப்பருவத்தையும் விட்டு வைக்காத இந்தக் கேடுகெட்ட கலாச்சாரச் சீரழிவில் விழுந்து விடாமல் வளரும் தலைமுறையைக் காக்க இயலும்.

பண்டைய ரோமர்கள் கொண்டாடிய ஒரு பண்டிகையின் மாற்று உருவே 'வாலண்டைன்" என்ற ஒருவரின் பெயரால் இன்று கொண்டாடப்படும் இந்த ஆபாச தினம்.

ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அவனுக்குக் கொண்டாடுவதற்கு இரு பண்டிகைகள் மட்டுமே உண்டு. இவையன்றி வேறு எதற்காகவும் எந்த ஒரு நாளையும் கொண்டாடுவது மார்க்கம் அனுமதிக்காத செயலே. மார்க்கம் அனுமதிக்காக ஒன்றைச் செய்பவன் அழிவை நோக்கிச் செல்கின்றான் என்பது தூதரது எச்சரிக்கையாகும்.

"மாற்றுமத கலாச்சாரத்தைப் பின்பற்றுபவன் என்னைச் சார்ந்தவன் அல்லன்" எனவும் "மாற்றுக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் அவர்களாகவே மாறி விடுகின்றனர்" எனவும் அறிவுறுத்திய தூதரின் சொற்களை மனதில் இருத்துபவர்கள், இத்தகைய மார்க்கம் காட்டாத மாற்றாரின் கலாச்சாரத்திலிருந்து விலகியே இருப்பர்.

"அலீயே!, அன்னியப் பெண்ணைப் பார்க்கும் (இயல்பான) உமது முதல் பார்வை உம்முடையதாகும்; (கூர்த்த) இரண்டாவது பார்வை ஷைத்தானுடையதாகும்" என அந்நியப் பெண்களைப் பார்ப்பதைக்கூட தூதர் தடை செய்திருக்கும் பொழுது, மனைவியர் அல்லாத மாற்றுப் பெண்களுடன் இத்தகைய ஆபாச தினக் கொண்டாட்டங்களைப் பூங்கொத்துக் கொடுத்தும் வாழ்த்து அனுப்பியும் கொண்டாடும் இளைய தலைமுறைகள், ஷைத்தானுடன் ஒப்பந்தம் செய்து நரகத்தை நோக்கித் தமது பயணங்களை அமைத்துக் கொள்கின்றனர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அந்நியப் பெண்களுக்கு முன்பாக, "முஃமினான ஆண்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்" என்பது படைத்தவனின் கட்டளையாகும். இத்தகைய உயர்ந்த, தூய்மையான வாழ்க்கை முறையைக் கற்பித்துத் தரும் இஸ்லாமிய மார்க்கத்தை வாழ்க்கை நெறியாகப் பின்பற்றும் முஸ்லிம்கள், அந்நியப் பெண்டிருடன் அனுமதியற்ற உறவுகளைக் கொள்ள வழிகோலும் இத்தகையக் கலாச்சாரச் சீரழிவுக் கொண்டாட்டங்களின் பக்கம் செல்லாமல் இருப்பதோடு, சமூகத்தைச் சீரழிக்கும் இத்தகைய அனுமதிகளுக்கு எதிராக போராடவும் முன்வரவேண்டும்.

"முஃமினான பெண்கள், அவர்களது தலை முந்தானைகளைக் கொண்டு மார்பை மறைத்துக் கொள்ளட்டும்", என்றும் "அவர்கள் கண்ணியமானவர்களாக அறியும் பொருட்டு, அவர்கள் (அவசியமின்றி) வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம்" எனறும் அல்லாஹ் அறிவுரை பகர்கின்றான்.

"உலகில் செல்வங்களிலேயே மிக உயர்ந்த செல்வமாக நல்லொழுக்கப் பெண்ணை" இஸ்லாம் காண்கின்றது.

இவ்வாறு ஆண்களையும் பெண்களையும் கண்ணியமான வாழ்க்கை வாழப் பணிக்கும் தத்துவங்களை உள்ளடக்கிய இஸ்லாம், உலகின் அமைதியான வாழ்வுக்கும் சுபிட்சமான சமூக கட்டமைப்பிற்கும் உத்தரவாதம் வழங்கும் ஒரே மார்க்கம் எனலாம்.
thanks for auther of this article