Monday, September 7, 2009

இறையச்சமே இலக்கு..

எழுதியவர்/பதிந்தவர்: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

‘ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆகலாம்’ (2:183).

நோன்பு இஸ்லாத்தின் பிரதான ஐந்து கடமைகளில் ஒன்றாகும். இது இறுதி தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் மூலமாக முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமன்றி முன்னுள்ள சமூகங்கள் மீதும் கடமையாக்கப்பட்டிருந்தது. நபி(ஸல்) அவர்கள் பிரசாரப் பணியைப் புரிவதற்கு முன்னரே, ஜாஹிலிய்யாக் கால மக்கள் நோன்பை அறிந்திருந்தனர். முஹர்ரம் மாதத்தில் நோன்பு நோற்றும் வந்தனர்.

‘உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது’ என்று இந்த வசனம் கூறுகின்றது.

இங்கே ‘உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போன்று’ என்பது, இதே அமைப்பில் கடமையானதைக் குறிப்பதாக இருக்காது. அவர்களுக்கும் கடமையாக இருந்தது; உங்களுக்கும் கடமை என்ற கருத்தைத் தான் தரும். ஏனெனில், இதற்கு முன்னர் ‘மௌன விரதம்’ மேற்கொள்ளும் பழக்கமும் முன்னைய சமூகங்களிடம் இருந்தது என்பதை,

‘ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், ‘மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலினால் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேசமாட்டேன்’ என்று கூறும்.
(19:26) என்ற வசனம் உணர்த்துகின்றது.

இவ்வாறே, நோன்பு நோற்பவர்கள் ‘ஸஹர்’ உணவு உண்பது அவசியமாகும். ஆனால், அவர்களுக்கு ‘ஸஹர்’ விதிக்கப் பட்டிருக்கவில்லை. இதை ‘நீங்கள் ஸஹர் உணவு உண்ணுங்கள்; ஏனெனில், ஸஹர் உணவு உண்பது எமக்கும் யூதர்களுக்கு மிடையில் உள்ள வேறுபாடாகும்’ என ஹதீஸ் கூறுகின்றது.

எனவே, எமக்குக் கடமையாக்கப்பட்ட அதே அமைப்பில் அவர்களுக்குக் கடமையாக் கப்பட்டிருக்கவில்லை என்பது புரிகிறது! எனவே, கடமை என்ற அம்சத்தில் அவர்கள் போன்றே உங்கள் மீதும் கடமை. ஆனால், அதை நிறை வேற்றும் ‘ஷரீஅத்’ வழிமுறை மாறுபட்டதாக இருக்கலாம் என்பதை இவ்வசனம் உணர்த்து கின்றது.

நோன்பு விதியாக்கப்பட்டதன் அடிப் படை இலக்குப் பற்றி இவ்வசனம் குறிப்பிடும் போது, ‘நீங்கள் பயபக்திடையுவர்களாகலாம்’ எனக் குறிப்பிடுகின்றது.

நோன்பு நோற்பவர்களிடம் ‘தக்வா’ என்ற இறையச்ச உணர்வு ஏற்பட வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும் என இவ்வசனம் கூறுகின்றது!

‘தக்வா’ என்றால் அல்லாஹ்வின் ஏவல்களை முடிந்தவரை எடுத்து நடத்தல், அவன் விலக்கியவற்றைவிட்டும் முற்றுமுழுதாக விலகிக்கொள்ளுதல் என்ற பக்குவத்தைக் குறிக்கும். இந்தப் பக்குவத்திற்கும் நோன்புக்கு மிடையில் என்ன தொடர்பு இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நோன்பு என்பது உண்ணல், பருகல், உடலுறவில் ஈடுபடுதல் என்பவற்றை ‘சுபஹ்’ முதல் ‘மஃரிப்’ வரை அல்லாஹ்வுக்காக தவிர்ந்திருப்பதைக் குறிக்கும். இந்த செயல்பாடுகள் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்டவைகளே! அதேவேளை, மனித வாழ்வுக்கு அத்தியாவசியமானவையும் கூட! அல்லாஹ்வுக்காக குறிப்பிட்ட நேரம் இவற்றைத் தவிர்த்துக்கொள்பவன், அல்லாஹ் தடுத்தவற்றை விட்டும் விலகிக்கொள் ளும் பக்குவத்தை அதிகரித்துக்கொள்ள முடியுமல்லவா?

அல்லாஹ்வின் கட்டளையை நிறைவு செய்வதற்காக சுமார் 14 மணி நேரங்கள் உண்ணாமல், பருகாமல் சிரமத்தைத் தாங்கிக் கொள்கின்றான்! அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்துவதற்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தை இதன் மூலம் பெறலாமல்லவா?

நோன்பு நோற்பவர் தனித்திருந்தாலும், பகிரங்கமாக இருந்தாலும், பசியும் தாகமும் வாட்டினாலும் இரகசியமாகக் கூட எதையும் உண்பதில்லை. ‘அல்லாஹ் பார்த்துக்கொண்டி ருக்கின்றான்’ என்ற உணர்வுதான் இதற்கு அடிப்படைக் காரணமாகும். இந்த உணர்வு அதிகரித்தால் அவன் தவறுகளிலிருந்து விலகி வாழும் பக்குவத்தைப் பெற்றுக்கொள்ள முடியுமல்லவா?

நோன்பாளி ‘ஸஹர்’ நேரத்தில் எழுந்து உண்கிறான். இது அவனது பழக்கவழக்கங்க ளுக்கும், உலக நடைமுறைக்கும் முரண்பட்ட நடவடிக்கையாகும். அதே வேளை, மக்கள் அனைவரும் உண்ணும் நேரத்தில் உணவைத் தவிர்த்து நடக்கின்றான். இது வித்தியாசமான நடைமுறையாகும். இப்படி பயிற்சி பெறும் ஒரு நோன்பாளி அல்லாஹ்வின் கட்டளை தனக்குச் சிரமமாக இருந்தாலும், தனது பழக்கவழக்கங்கள், நடைமுறைகளுக்கு முரண்பட்டதாக இருந் தாலும் நான் அதைச் செய்வேன்! அதற்காக சிரமமெடுப்பேன்! என்ற பக்குவத்தை வழங்குமல்லவா?

இது தான் நோன்பின் இலக்காகும். நோன்பாளி உண்ணல், பருகல், உடல் உறவில் ஈடுபடல் என்பவற்றைத் தவிர்த்துக் கொள்வதுதான் அடிப்படைக் கடமையாகும். ஆனால், இவற்றைத் தவிர்ப்பதுடன் கெட்ட நடத்தைகள், தேவையற்ற செயற்பாடுகள் என்பவற்றையும் அவன் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அது தான் உண்மையான நோன்பு என்பதை பல்வேறு ஹதீஸ்கள் உணர்த்துகின்றன.

‘எவர் பொய் பேசுவதையும், அதனடிப்படை யில் செயற்படுவதையும் விட்டுவிடவில் லையோ, அவர் தனது உணவையும், பானத்தையும் விட்டுவிடுவதில் அல்லாஹ் வுக்கு எந்தத் தேவையுமில்லை’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.

இந்நபிமொழி வெறுமனே பசித்திருப் பதும், தாகித்திருப்பதும் நோன்பின் இலக்கு அல்ல என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது.

‘நோன்பாளி தேவையற்ற பேச்சுக்கள், வீண் விளையாட்டுக்கள், கேளிக்கைகள் என்பவற்றைத் தவிர்ந்திருக்க வேண்டும். எத்தனையோ நோன்பாளிகளுக்கு அவர்களது நோன்பால் பசித்திருந்ததைத் தவிர எந்தப் பயனும் இருக்காது. எத்தனையோ தொழுகையாளிகளுக்கு அவர்களின் தொழுகை மூலம் கண் விழித்திருந்ததைத் தவிர வேறு பலன் கிடைக்காது’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
ஆதாரம் : இப்னுமாஜா, அஹ்மத்.

எனவே, பக்குவமற்ற விதத்தில் நோன்பு நோற்பவர்கள் வெறுமனே பசித்திருப்பவர்களே என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது.

‘நோன்பாளி பிற மனிதர்களுடன் பண்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால், அவர் வீண் பேச்சுக்களையும், கெட்ட நடத்தைகளையும் தவிர்ந்துகொள்ளட்டும். எவரேனும் அவருடன் சண்டைசெய்ய முற்பட்டால், ‘நான் நோன்பாளி’ எனக்கூறி, (பொறுமை காத்து)க்கொள்ளட்டும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

எனவே, எம்மிடம் பயபக்தியை ஏற்படுத் தும் வண்ணம் நோன்பை நோற்று வீணான நடத்தைகள், சர்ச்சைகளைத் தவிர்த்து உரிய முறையில் கடைபிடித்து உயரிய இறையச்சத்தை வளர்த்துக்கொள்ள முயற்சிப்போமாக!

உண்மை உதயம் மாதஇதழ் (2007)


யார் பெரும்பாவிகள்?

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் கூறுகிறான்:

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும்; இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்! நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்.

அன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்! ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான்; அத்தகையோர் தாம் ஃபாஸிக்குகள் - பெரும்பாவிகள் ஆவார்கள்.

நரக வாசிகளும், சுவர்க்கவாசிகளும் சமமாக மாட்டார்கள்; சுவர்க்கவாசிகளே பெரும் பாக்கியம் உடையோர்.

(நபியே!) நாம் ஒரு மலையின் மீது இந்த குர்ஆனை இறக்கியிருந்தோமானால், அல்லாஹ்வின் பயத்தால், அது நடுங்கிப் பிளந்து போவதாகக் கண்டிருப்பீர்! மேலும், மனிதர்கள் சிந்திக்கும் பொருட்டு இத்தகைய உதாரணங்களை நாம் அவர்களுக்கு விளக்குகிறோம்.

அவனே அல்லாஹ்; வணக்கத்திற்குரியவன்; அவனைத் தவிர வேறு நாயன் இல்லை; மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன்; அவனே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்.

அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.

அவன்தான் அல்லாஹ்; படைப்பவன்; ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன்; உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.

(அல்-குர்ஆன் 59:18-24)

இஸ்லாம் மயமாகும் ஐரோப்பா கண்டம்! - Part 4

ஆக்கம் : அபூ ரிஸ்வான்

சிலர் கேட்கலாம், ‘நான் நடுத்தர வர்க்கத்தில் (middle class) உள்ளவர்- நான் எப்படி அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்’ என்று. சிந்தித்துப் பாருங்கள்! நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுடன் வாழ்ந்த நபித்தோழர்களும், தோழியர்களும் பெரும் வசதியிலா வாழ்ந்தார்கள்? சாப்பிட மூன்று வேளை உணவுக்கே பெரிய திண்டாட்டம்! உடுத்த மாற்று உடைகள் இல்லை!! தங்கியிருப்பதற்கு ஈச்ச ஓலையினாலான கொட்டகைத்தான் வீடுகள்! இப்படித்தான் அவர்களின் முழு வாழ்க்கையும் இருந்தது. ஆனால் அவர்களெல்லாம் அதிகமாக குழந்தைப் பெற்றுக்கொள்ளவில்லையா? அதிகமாய் குழந்தைப் பெற்றுக்கொள்வதற்கு பெண்களுக்குத் தேவை மனவுறுதியும், ஆரொக்கியமும், தியாக மனப்பான்மையும், குழந்தைகளை இறைவன் அளிக்கும் மிகப்பெரும் செல்வம் என்று கருதும் மன நிலையும் தான். பணங்காசுகளோ, வசதிவாய்ப்புகளோ அல்ல!

ஒரு முஸ்லிம் தம்பதிகளுக்கு குழந்தைப் பிறக்காமல் இருந்தால், அவர்கள் திருமணம் முடிந்து 10 வருடங்கள் வரை குழந்தைக்காக முயற்சி செய்யலாம். 10 வருடங்களுக்குப் பின்னும் குழந்தைப் பிறக்கவில்லையெனில், அல்லாஹ் தங்களுக்கு விதித்த விதியை (destiny) ஏற்றுக்கொண்டு தம்பதிகள் இருவருக்குமோ அல்லது ஆணுக்கு மட்டுமோ எந்த உடற்குறையும் இல்லாத பட்சத்தில் முதல் மனைவியே தன் கணவருக்கு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து வைக்கலாம்.

இவ்வழக்கம் பெரும்பாலான இந்திய முஸ்லிம்களிடம் இல்லையென்றே கூறத்தோன்றுகிறது. பலதாரமணம் (polygyny) இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தும், அதனால் கன்னிப்பெண்களோடு, பல விதவைப் பெண்களும், விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களும் மறுவாழ்வு பெறுவார்கள் என்ற நிலை இருந்தும், முதல் மனைவி இருக்கும்போது இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்வது தவறான காரியத்தைப்போல நம்சமூகத்தில் சித்தரிக்கப்படுகிறது. இதனால் முதல் மனைவி மூலம் குழந்தைப் பெறமுடியாதவர்கள் மாற்றாக இருக்கும் வழியினை முற்றும் அடைத்து விடுகிறார்கள்.

நபிமார்களில், நபி (ஸல்) அவர்கள் உட்பட பலர் பலதார மணம் செய்தார்கள். நபித்தோழர்களில் பலர் பலதாரமணம் செய்தவர்களே! மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா நகர் சென்ற நபித்தோழர்களுக்கு மதீனா வாழ் அன்சாரிகள் தான் இரண்டு அல்லது அதற்கு மேல் மனைவியரை மணமுடித்தவராக இருந்தால் தன் மனைவிகளில் ஒருவரை விவாகரத்து செய்து மக்காவிலிருந்து குடிபெயர்ந்த தன் சகோதர முஸ்லிமுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். இந்நற்செயல்களை நோக்கும் போது அவர்களின் எல்லையில்லா தியாக மனப்பான்மையையும், அவர்களின் பலதார வாழ்க்கை முறையையும் நாம் அறியலாம். இவர்கள் எல்லாம் தவறான காரியத்தையா செய்துவிட்டார்கள்? (அப்படிப்பட்ட தீய சிந்தனையிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக)

அரேபிய நாடுகளில் பலதாரமணம் சர்வசாதாரணமான விசயம். அந்நாட்டுப் பெண்களும் தன் கணவன் இரண்டாம் திருமணம் செய்வதை தவறாக நினைப்பதில்லை. மாறாக தனது இல்லறக் கடமைகளில் இன்னொரு பெண்ணும் பங்குப் போட்டுக்கொண்டால் தனது பளு சற்றுக் குறையுமே என்று தான் நினைக்கிறார்கள். மேலும் இஸ்லாம் அனுமதித்த ஒரு செயலை தடுப்பது மிகப்பெரிய பாவம் என்றும் உணர்ந்திருக்கிறார்கள். இத்தோடு இரண்டாம் திருமணம் செய்ய முதல் மனைவியின் அனுமதி தேவையில்லை என்பதும் அவர்களுக்குத் தெரிந்து இருக்கிறது. அரேபியாவில் ஆண்கள் தமது நண்பர்களை வாழ்த்தும் போது ‘அல்லாஹ் உங்களுக்கு இன்னொரு அழகிய பெண்ணை மனைவியாகத் தருவானாக!’ என்று கூறுகின்றனர்.

குழந்தைப் பெறும் பாக்கியம் இல்லாத தம்பதியர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை இங்கே பார்ப்போம். மருத்துவபரிசோதனைகளுக்கும், கருவுறு சிகிச்சைகளுக்குப் பின்னும் ஆணுக்கு குறையிருப்பது தெரியவந்தாலும், அல்லது தம்பதிகள் இருவருக்கும் குறையிருப்பது தெரிய வந்தாலும், அத்தம்பதிகள் அனாதை குழந்தைகளையோ, தமது உறவினர்களிடமிருந்தோ மூன்றுக்கு குறையாமல் தத்து எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகளை தத்து எடுத்துக் கொள்வதற்கு இஸ்லாத்தில் பூரண அனுமதியுண்டு. அக்குழந்தைகளை மகனே என்றும் மகளே என்றும் அழைப்பதற்கும், அவர்களுக்கு சொத்தில் பெற்ற மகன் மகளுடைய பங்குகளைப்போல் பிரித்துக்கொடுப்பதற்கும் தான் அனுமதியில்லை. மேலும் தமது வளர்ப்பு குழந்தைகளுக்கு தனது சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை (1/3) வஸீய்யத் என்னும் உயில் எழுதிவைப்பதில் எந்த தவறும் இல்லை. அவ்வளர்ப்பு பெற்றோர் உயிருடன் இருக்கும் நாட்களில் தம் வளர்ப்பு குழந்தைகளுக்கு பரிசாக எதையும் கொடுப்பதற்கும் இஸ்லாம் அனுமதிக்கிறது.

பலதாரமணம் இந்தியாவைப் பொறுத்தவரை, முக்கியமாக பெண்களால், ஒரு வெறுக்கத்தக்க காரியமாகவே கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பல ஊர் ஜமாஅத்துகள், முதல் மனைவி உயிருடன் இருக்கும் நிலையில், இரண்டாம் திருமணத்திற்கு அனுமதி கொடுக்க மறுக்கின்றனர். காரணம் என்னவெனில் முதல் மனைவியின் குடும்பத்தினர் ஜமாஅத்தார்கள் மீது கோபம் அடைவார்கள் என்பதும், ஊரில் இருக்கும் இளைஞர்கள், கட்டுப்பாடற்ற முறையில் இரண்டு அல்லது மூன்று திருமணங்கள் செய்யதலைப்படுவார்கள் என்பதுதான். அப்படி ஒரு நிலைமை உருவானால் அதற்கு அடிப்படைக் காரணங்களை (root causes) ஆராயவேண்டுமேயல்லாது விளைவுகளைக் குறைக்கூறக்கூடாது. அல்லாஹ் (சுப்) அனுமதித்த பலதாரமணத்தை தடுப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை.

இஸ்லாமிய திருமணங்களில் பெண்ணுக்கு மஹர் (மணக்கொடை) கொடுத்து திருமணம் செய்ய வேண்டுமென்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. அந்த மஹரை பெண்ணே தனது தகுதிக்கும், அழகுக்கும், படிப்பிற்கும் தகுந்தவாறு பணமாகவோ அல்லது பொன்னாகவோ கேட்க அனுமதியளித்துள்ளது. ‘உங்கள் மனைவியருக்கு ஒரு பொற்குவியலே மஹராகக் கொடுத்திருப்பினும் அவற்றைத் திரும்ப பெறக்கூடாது’ என்ற திருமறைவசனம் மூலம் ஒரு பொற்குவியலே திருமணத்திற்கு மஹராக ஒரு பெண்ணுக்கு அளிக்கலாம் என்று இறைவன் அனுமதித்துள்ளான். நிலைமை அவ்வாறிருக்க, நம் ஊர் ஜமாத்தார்கள் பெண்களின் மஹர் தொகையாக ரூபாய் 501 ம், அல்லது ரூபாய் 1001 ம் நிர்ணயம் செய்வது எவ்வகையில் நியாயம்? மஹர் நிர்ணயம் செய்யும் காரியத்தை பெண் வீட்டாரிடமும் மாப்பிள்ளை வீட்டாரிடமும் விட்டுவிடுவதும், அவர்கள் கலந்தாலோசித்து எந்தத்தொகையை மஹராக ஏற்றுக்கொள்கிறார்களோ அதையே ஜமாத்தார்களும் ஏற்றுக்கொள்ளுதல் அல்லாஹ் காட்டிய வழியில் செல்வதாக இருக்கும் அல்லவா?

இன்னொரு சமூகக்கொடுமை நமது முஸ்லிம் சமுதாயத்தில் புரையோடிய புற்றுநோய் போல் காணப்படுவது பெண்வீட்டாரிடத்தில் மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் வரதட்சனை தான். இவ்வரதட்சனை பணமாக மட்டும் கேட்கப்படுவதில்லை. பணமும், அதோடு சேர்த்து தங்க நகைகளும், வீட்டுச் சாமான்களும், நூற்றுக்கணக்கான நபர்களுக்கு விருந்தும், மேலும் திண்பண்டப் பொருள்களும் இவற்றில் அடங்கும். இக்கொடுமை மாற்றுமதத்தார்களிடமிருந்து முஸ்லிம்கள் இறக்குமதி செய்தது. இஸ்லாத்தில் பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்கப்பட்டிருந்தும், வரதட்சனை கொடுமையால் பெண்ணைப் பெற்றவர்கள் படும்பாடு சொல்லிமாளாது. படிக்காத பெண்களுக்கு திருமணம் செய்வதற்குதான் வரதட்சனை கொடுக்கவேண்டும் என்றிருந்த காலம்போய், மேல்படிப்பு படித்து நல்ல உத்யோகத்தில் கைநிறைய சம்பளம் வாங்கும் பெண்ணிடமே வரதட்சனை கேட்கின்ற கொடுமையை என்னவென்று கூறுவது! வரதட்சனை முஸ்லிம் சமுதாயத்தில் முற்றாக ஒழிந்தால் பெண்களுக்கு விரைவிலேயே திருமணம் ஆகி அதிக குழந்தைகள் பெற வழி ஏற்படும்.

பொதுவாக திருமணத்தின் மிகமுக்கிய அம்சம் கணவன் மனைவி இருவரும் பிரியாமல் வாழ்வது தான். இன்று தமிழக மற்றும் கேரள முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் திருமணமான பெரும்பாண்மையினர் மனைவியை தன் ஊரிலேயே விட்டுவிட்டு வெளிநாடுகளில் - வளைகுடா நாடுகளில் - பணியாற்ற செல்வது ஒரு அடிப்படை தேவையாக மாறிவிட்டது. திருமணம் ஆகி தன் மனைவியுடன் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தங்கிவிட்டு அவளை பிரிந்து வெளிநாடு செல்லும் கணவன், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை திரும்பிவருவதில்லை. இதற்கிடையில் மனைவி கருவுற்றிருந்தால், பிள்ளை பிறந்து ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் கழித்து தான் மனைவியையும், தான் பெற்ற குழந்தையையும் நேரில் பார்க்கும் அவல நிலை நிலவுகிறது. இது இஸ்லாம் அனுமதிக்காத ஒரு வாழ்க்கை நிலைதான். இளமைக்காலங்களில் மனைவியை பிரிந்து வாழ்வதற்கு ஒரு வரம்பு உண்டு. அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் மனைவியோடு சேர்ந்து வாழுதல் இன்றியமையாதது.

இதுவரையில் குடும்பங்களில் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள எவ்வித வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்றும், அவ்வழிமுறைகளுக்கு தடைக்கல்லாய் இருக்கும் சமூகக்கொடுமைகளை களைவது பற்றியும் பார்த்தோம். இனி ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் இடையில் எவ்வளவு கால இடைவெளி இருக்கவேண்டுமென்பதை ஆராய்வோம். முதல் குழந்தை பிறந்த பிறகு அதன் பால்குடிக்கும் காலம் 24 மாதங்கள். ஆக அடுத்த குழந்தை கருவுறுவது 24 மாதங்களுக்கு தாமதப்படுத்த வேண்டும். இதுவே குர்ஆன் கூறும் வழிகாட்டுதல். ஆக ஒரு குழந்தையின் பிறப்பிற்கும், அடுத்த குழந்தையின் பிறப்பிற்கும் இடையே 2 வருடம் 9 மாதம் இடைவெளி ( அதாவது 3 வருடங்கள் முழு எண்ணாக) இருப்பது நலம். இக்கணக்குப்படி, ஒரு பெண் அதிகபட்சம், 8 முதல் 9 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள முடியும், அவளுடைய திருமண வயது 18 ஆகவும், மூன்றாண்டுக்கு ஒருமுறை ஒரு குழந்தை பெற்றுக்கொள்பவளாகவும் இருக்கும் பட்சத்தில்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

Saturday, September 5, 2009

விண்ணை முட்டும் உயரத்திற்கு கூடு கட்டும் கண் பார்வையற்ற கறையான்கள்

Islam - haroon yahya

எறும்புகளைப் போல கறையான்கள் உருவத்தில் சிறியதாக இருந்தாலும், திறமையில் சிறந்தவை. இந்த படத்தில் காணப்படும் உயர்ந்த கட்டிடத்தைப் போல கட்டப்பட்ட கறையான் புற்று இந்த சிறிய படைப்புகளால் கட்டப்பட்டது. ஆயினும் எந்தவித தவறுமின்றி இந்த புற்றுக்களை கறையான்கள் வகுக்கப்பட்ட ஒரு திட்டத்தின்படி கட்டுகின்றன.

நாம் படத்தில் காண்பது போன்று இந்த புற்று ஒன்றல்ல. பல. இளம்குஞ்சுகள் தங்குவதற்கு தனி அறை, கறையான்கள் உணவாக உட்கொள்ளும் காளான்களை உருவாக்குவதற்கு தனிக் கூடம், மற்றும் ராணியின் அறை என பல சிறிய மற்றும் பெரிய பிரிவுகளைக் கொண்டதுதான் கறையான் புற்று. புற்றுக்களில் முக்கியத்துவம் வாய்ந்தது அதன் உள்ளறைகளில் கறையான்கள் உருவாக்கும் பிரத்யேக குளிர்ந்த காற்றோட்ட வசதி (Ventilation). மிக மெல்லியத் தோல்களால் படைக்கப்பட்ட கறையான்கள் உயிர் வாழ குளிர்ந்த காற்று தேவை. எனவே கறையான்கள் தங்களது புற்றுக்களில் உள்ள அறைகளின் சீதோஷன நிலையை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு குளிர்ந்த நிலையில் வைத்துக் கொள்வது அவசியமாகிறது. அவ்வாறு இல்லையெனில் உஷ்ணத்தின் காரணமாக கறையான்கள் உயிரிழக்க நேரிடும். எனவே கறையான்கள் தங்களது புற்றுக்களிள் உட்புறம் காற்று புகும் வகையில் துளைகளை உருவாக்குகின்றன. புற்றுக்களின் தரைப்பகுதியைத் தோண்டி தண்ணீரை கசியச் செய்கின்றன. புற்றுக்களின் தரைப்பகுதியில் கசியும் தண்ணீரும், வெளியிலிருந்து வரும் காற்றும் கலந்து கறையான்களுக்குத் தேவையான குளிர்ந்த சீதோஷ்னநிலை உருவாகிறது. இந்த குளிர்ந்த காற்றின் மூலம் கறையான்கள் தங்கள் புற்றுகளில் அவைகள் உயிர்வாழ்வதற்குத் தேவையான ஈரப்பதத்தையும், வெப்ப நிலையையும் சம நிலையில் வைத்துக் கொள்கின்றன.

மேற்படி முறையில் கறையான்கள் தங்கள் புற்றுக்களில் உள்ள சீதோஷ்ன நிலையை கட்டுப்படுத்துவது எத்தனை கடினமான வேலை என்பதை சிந்தித்துப் பார்த்தீர்களா?. இத்தகைய கடினமான வேலையை செய்து முடிப்பதற்கு கறையான்கள் ஒரு குறிப்பிட்ட வரையரைக்குள் பல விஷயங்களை ஒன்றிணைத்து அவைகளை தங்களது கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். தவிர, கறையான்கள் செய்கின்ற எண்ணற்ற காரியங்களில் சுருக்கமாக ஒரு சிலவற்றைத்தான் நாம் இங்கே குறிப்பிட்டிருக்கிறோம். இங்கே குறிப்பிட்டிருக்கும் செயல்களோடு இன்னும் ஏராளமான செயல்களை கறையான்கள் செய்கின்றன.

கறையான்களின் குணநலன்களில் முக்கியமான மற்றொன்று யாதெனில், அவைகள் தங்கள் புற்றுக்களை பாதுகாக்கும் விதம். கறையான் புற்றுக்களிள் உயரம் ஏழு மீட்டர் வரை (21 அடி) இருக்கும். இந்த புற்றுக்களில் ஒரு சிறிய பழுது ஏற்பட்டுவிட்டாலும் உடனடியாக கரையான்கள் எச்சரிக்கையாகி விடுகின்றன. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் கறையான்கள் தங்களது தலைகளை புற்றுக்களின் சுவர்களில் மோதி மற்ற கறையான்களை விழிப்படையச் செய்கின்றன. எச்சரிக்கை செய்தி கிடைத்ததும் விழிப்புற்ற மற்ற கறையான்கள் குஞ்சுப் பருவத்தில் இருக்கும் கறையான் முட்டைகளை (Larve)பாதுகாப்பான மற்றொரு அறைக்கு எடுத்துச் செல்கின்றன. ராஜா மற்றும் ராணி கறையான்கள் இருக்கும் அறையின் வாயிற்பகுதி உடனடியாக கட்டப்படும் சுவர் மூலம் மூடப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதி முழுவதையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் கரையான்கள் சூழந்து கொள்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிக்கு சுவர் கட்டத் தேவையான பொருட்கள் யாவும் வேலைக்கார கறையான்களால் கொண்டு வரப்படுகின்றது. சில மணி நேரங்களில் பாதிக்கப்பட்ட பகுதியின் வெளிப்பகுதி, மற்றும் உட்பகுதி முழுவதும் சரிசெய்யப்படுகின்றது. இவ்வாறு பல பிரிவைச் சார்ந்த ஒவ்வொரு கறையான்களும் அவசர காலங்களில் மட்டுமின்றி சாதாரண வேளைகளிலும் ஒழுங்குற வகுக்கப்பட்ட ஒரு திட்டத்தின் கீழ் செயல்படுவது போல எந்தவித குழப்பமுமின்றி சிறப்புற செயல்படுகின்றன. இவ்வாறு அவகைள் ஒரு குறுகிய கால அவகாசத்தில் தங்களுக்கு இடப்பட்ட பணிகளை இத்தனை சிறப்பாக முடிப்பதிலிருந்து கறையான்களுக்கிடையே முறையாக தொடர்பு கொள்ளும் திறமை உண்டென தெளிவாக அறிய முடிகிறது. கறையான்கள் தங்களுக்கிடையே வேலையை முறையாக பகிர்ந்து கொள்கின்றன. பகிர்ந்து கொண்ட வேலைகளுக்கேற்ப எந்தவித குழப்பமுமின்றி வானளாவிய உயரத்திற்கு கூடுகள் கட்டுகின்றன. கட்டிய கூட்டினை பாதுகாப்பதற்கென முன்னெச்சரிக்கையான திட்டங்கள் தீட்டி அதன்படி செயல்படுகின்றன. இத்தனை வேலைகளையும் திறமையாக செய்து முடிக்கும் கறையான்கள் பார்வையற்றவை.

கறையான்கள் செய்கின்ற வேலைகள் எதனையும் கறையான்களால் பார்க்கமுடிவதில்லை. பார்வையற்ற கறையான்கள் எப்படி இத்தனை திறமைசாலிகளாக இருக்கின்றன?. எப்படி இத்தனை பெரிய திட்டங்கள் தீட்டி அதன்படி செயல்படுகின்றன?

இதுபோன்ற கேள்விகளுக்கு 'பரிணாம வளர்ச்சிக் கொள்கை'க்காரர்கள் அளிக்கும் பதில் என்ன தெரியுமா? கறையான்கள் கொண்டிருக்கும் இத்தனை திறமைகளும் அவைகளுக்கு 'எதேச்சையாக உருவாயின' என்பதுதான். எப்படி சிந்தித்தாலும் அவர்கள் கூறும் இந்த பதில் தவறானதே. ஏனென்றால் கறையான்களின் புற்றில் உள்ள ஒரு சிறிய பகுதி கூட - உதாரணத்திற்கு அவைகள் ஏற்படுத்தும் காற்றோட்ட வசதி எதேச்சையாக உருவானது இல்லை' என்பதற்கு உதாரணமாக எடுத்துக் கூற போதுமானதாகும். மேலும் கறையான்களுக்கு அவைகள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பற்றி கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதும் தெளிவு.

அருள்மறை குர்ஆனில் அல்லாஹ், தேனீக்களை சிந்திக்கும் மக்களுக்கு அத்தாட்சி என குறிப்பிடுகிறான். அத்தோடு அதனை நாம் அதனை அல்லாஹ்வின் அத்தாட்சியாகக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடுகிறான். அருள்மறை குர்ஆனின் 16வது அத்தியாயத்தில் தேனீக்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகின்றான். தேனீக்கள் நமக்காக தேனை உருவாக்குகின்றன என்பதும், அந்த தேனை உருவாக்குவது எப்படி என்று வல்ல அல்லாஹ் தேனீக்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறான் என்றும் மேற்படி வசனத்தில் வல்ல அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

'உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். 'நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள்' (என்றும்) 'பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச்செல் ' (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது , அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு, நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.'
(அருள்மறை குர்ஆனின்
16வது அத்தியாயம் ஸுரத்துன் நஹ்ல் -
68 மற்றும்
69வது வசனங்கள்).

எப்படி தேனை உருவாக்க வேண்டும் என்று தேனீக்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்தது பற்றி அருள்மறை குர்ஆனின் வசனத்தில் குறிப்பிட்டது போன்று கறையான்களுக்கும் அல்லாஹ்வே எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்திருக்கிறான். வல்ல அல்லாஹ்வே பார்வையற்ற இந்த உயிரினங்களுக்கு அவைகள் தொடர்பு கொள்ளக் கூடிய முறைகளை பற்றியும் அறிவித்து, லட்சக்கணக்காக கறையான்களில் ஒவ்வொன்றுக்கும் அவைகள், அவைகளின் கூடுகளில் செய்ய வேண்டிய அனைத்தையும் கற்றுக் கொடுத்திருக்கிறான் என்பதும் நாம் பெறும் தெளிவு.

அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான்:

'மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ்; வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள், வானத்திலும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்; வையன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை, அவ்வாறு இருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள். ' (அத்தியாயம்
35 ஸுரத்துல் ஃபாதிர் -
3வது வசனம்)

இஸ்லாம் மயமாகும் ஐரோப்பா கண்டம்! - Part 3

கட்டுரை ஆசிரியர் : அபூ ரிஸ்வான்

இறைவனின் திருப்பெயரால்…

இதுவரையில் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பல நாடுகளிலும், மற்றும் ஆசிய, அமெரிக்க கண்டங்களில் உள்ள சில நாடுகளிலும் தற்பொழுது நிலவிவரும் மனிதவள பற்றாக்குறை பற்றியும் அதனால் வரும்காலத்தில் ஏற்படப்போகும் விளைவுகள் பற்றிய கணிப்புகளையும் கண்டோம். இச்சூழ்நிலையில் உலக முஸ்லிம்கள் மேற்கண்ட நிகழ்வுகளைக் கொண்டு எவ்வாறு படிப்பினைப் பெறவேண்டும் என்பதை இப்பகுதியில் ஆராய்வோம்.

குழந்தைகளைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் பின்வருமாறு கூறுகின்றான்:

“அல்லாஹ், பூமி மற்றும் வானங்களுடைய ஆட்சியின் உரிமையாளனாவான். தான் நாடுகின்றவற்றைப் படைக்கின்றான். தான் நாடுவோருக்குப் பெண்மக்களை வழங்குகின்றான். தான் நாடுவோருக்கு ஆண் மக்களையும் வழங்குகின்றான். தான் நாடுவோருக்கு ஆண் மக்களையும் பெண் மக்களையும் சேர்த்து வழங்குகின்றான். தான் நாடுவோரை மலடுகளாகவும் ஆக்குகின்றான். திண்ணமாக, அனைத்தையும் அறிந்தவனும் யாவற்றின் மீதும் பேராற்றல் கொண்டவனும் ஆவான்” (அல்-குர்ஆன் 42:49-50)

மேற்கூறப்பட்ட இவ்வசனங்களிலிருந்து அல்லாஹ் (சுப்) ஒருவனே மக்கட்செல்வத்தைக் கொடுக்க முடியும்; மற்ற எந்த சக்தியாலும், அரசாட்சியாலும், மக்கட்தொகையை பெருக்கவோ, குழந்தைகளின் பிறப்பை அதிகரிக்கவோ ஒருகாலும் முடியாது. குழந்தைகள் என்பது சீனாவில் உற்பத்தியாகும் விளையாட்டு பொம்மைகள் அல்ல! அவைகைளை கோடிக்கணக்கில் ஓரிரு தொழிட்கூடங்களில் தானியங்கி எந்திரங்களைக் கொண்டு (Robatic Machinary) தயாரித்து விடுவதற்கு! சோதனைக் குழாய் (Test Tube) குழந்தைகள் என்று கூறப்படும் சோதனைக்குழாயில் கருவுறவைக்கப்படும் கருவை திரும்ப பெண்ணின் கருப்பையில் வைத்துத்தான் குழந்தை பூரண வளர்ச்சி அடைந்ததும் பிரசவிக்கச் செய்கிறார்கள். செயற்கை கருப்பையை (Artificial uterus) இதுவரை எந்த விஞ்ஞானிகளாலும் உருவாக்க முடியவில்லை! உருவாக்கவும் முடியாது!! இன்னும் ஒன்றையும் இங்கே குறிப்பிட வேண்டும். கோழி முட்டைகளை இன்குபேட்டரில் (Incubator) வைத்து விரைவாகவே குஞ்சுப்பொறிக்க வைப்பதைப்போல கருப்பையில் கருவளர்ச்சியை வேகப்படுத்தி ஒன்பது மாதத்திற்கு முன்பாக 7 மாதத்திலேயோ அல்லது 5 மாதத்திலேயோ குழந்தையை முழுவளர்ச்சி அடைவித்து பிரசவிக்க வைக்க ஒருகாலும் முடியாது!

எனவே குழந்தைகள் பிறப்பதை அதிகரிக்க வழி ஒன்றே ஒன்றுதான்! அதுவே இயற்கையான வழி! நம் முன்னோர்களால் காலம் காலமாகக் காட்டப்பட்ட வழி! இஸ்லாம் காட்டும் வழியும் அதுதான். வயது வந்த ஆண் பெண் இருபாலரும் திருமணம் முடித்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது தான். எத்தனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் வரம்பு எதுவும் விதிக்கவில்லை. இப்பொழுதுள்ள நடைமுறைப்படி, ஒருவரது பொருளாதார வசதிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் தகுந்தவாறு தம்பதிகள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். அதிலும் வெளியில் வேலைக்குப் போகும் பெண்கள் குறைவாகவே ஓரிரு குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்கின்றனர். பெண்கள் நாட்பட்டுத் திருமணம் செய்து கொள்வதும் குறைவாக குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கு ஒருகாரணம்.

இறைவன் தன் திருமறையில் அஷ்ஷூரா அத்தியாயத்தில் குழந்தைகளை தான் நாடுவோருக்கு கொடுப்பதாக கூறும் இடங்களில் ‘பெண் குழந்தைகளைக் கொடுப்பேன்; ஆண் குழந்தைகளைக் கொடுப்பேன்; இரண்டையும் கலந்துக் கொடுப்பேன், என்கிறான். இதில் உபயோகிக்கப்படும் அரபிச் சொற்களை பார்க்கும் பொழுது ஒரு உண்மை பளிச்சிடும்.

அரபி இலக்கணத்தில் ஒன்றைக் (Singular) குறிக்க ஒரு சொல்லும், இரண்டைக் (Dual) குறிக்க மற்றொரு சொல்லும், மூன்றையும் அதற்கு மேல் உள்ளவற்றைக் குறிக்க பிரிதொரு சொல்லும் பயன்படுத்தப் படுகின்றன. குர்ஆனில், இந்த வசனத்தில் பயன்படுத்தப்படும் பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகளுக்கான சொற்கள் மூன்றையோ அல்லது அதற்கு மேல் உள்ளவைகளையோ குறிக்கும் பன்மைச் சொற்கள்ஆகும். இதன் மூலம் சூசகமாக மூன்று குழந்தைகளையோ அல்லது அதற்கு மேலேயோ பெற்றுக்கொள்வதைத்தான் இறைவன் விரும்புகின்றான் என்று கூட நாம் பொருள் கொள்ளலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்.

நாம் இதற்கு முந்தைய பகுதிகளில் ஏற்கனவே விவரித்திருந்தபடி, ஒரு பெண் தன் கருவுறுங்காலத்தில் (15 முதல் 44 வயது வரை) குறைந்தபட்சமாக 2.11 குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால் தான் அச்சமுதாயம் நீடித்து வாழும் என்பது விஞ்ஞானிகளின் முடிவு. இவ்வெண் 2.11 யை முழு எண்ணாக மாற்றினால் 3 குழந்தைகள் ஆகும். ஆக, ஒரு பெண் முன்று அல்லது அதற்கு மேல் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால் தான் அச்சமுதாயம் (அல்லது நாடு) வளரும்; அபிவிருத்தியடையும். இதில் ஆண் குழந்தையாகப் பெறவேண்டுமா? அல்லது பெண் குழந்தையாகப் பெறவேண்டுமா? என்றெல்லாம் கவலைப்படத் தேவையில்லை. இறைவன் தனது திட்டப்படி ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது இரண்டும் கலந்தோ கொடுப்பான். குழந்தை இறப்பு (Infant Martality) விகிதம் அதிகம் உள்ள நாடுகளிலும், போர் மற்றும் இயற்கை அழிவுகளால் பாதிக்கப்படும் நாடுகளிலும் உள்ள மக்கள் குழந்தைப் பிறப்பு விகிதத்தை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் அங்குள்ள பெண்கள் நான்கோ அதற்கு மேலுமோ குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

மேலும் ஒரு முஸ்லிமுக்கு இரண்டு மனைவியர்கள் இருந்தால், அவர்கள் இருவருக்கும் சேர்ந்து மொத்தக் குழந்தைகள் 5 க்கும் குறையாமல் இருக்கவேண்டும். மூன்று மனைவிகள் இருந்தால் அம்மூவருக்கும் சேர்ந்து மொத்தக் குழந்தைகள் 7 க்கும் குறையாமல் இருக்கவேண்டும். ஒருகால் நான்கு மனைவிகள் இருந்தால் அந்நால்வருக்கும் சேர்ந்து மொத்தக் குழந்தைகள் 9 க்கும் குறையாமல் இருக்க வேண்டும். இது ஒரு குடும்பத்திட்டக் குறிப்புதான். முதல் மனைவி குழந்தையில்லாமல் இருந்து ஒருவர் இரண்டாவது மனைவியைத் திருமணம் செய்தால், தன் இரண்டாம் மனைவியடமிருந்து ஐந்து குழந்தைகளுக்கு குறையாமல் பெற்றுக் கொள்ளவேண்டும். ஆனால், ‘இதுவெல்லாம் நடக்கிற காரியமா?’ என்று எனது சகோதரர்கள் கேட்பார்கள் என்பது தெரியும். அதற்கும் சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அவை என்னவென்பதை அடுத்த பகுதியில் (Part 4) இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.