Thursday, September 10, 2009

links are all related to Debates and knowledgable information by World’s Famous Scholar Dr. Zakir Naik

Dear Brother & Sisters, ASSALAMU ALAIKUM.

This is to inform you all that this below links are all related to Debates and knowledgable information by World’s Famous Scholar Dr. Zakir Naik , I prefer every Muslim and Non- Muslim to go through these links which gives us a clear picture of who is God, who is Prophet, which book is Word of God. And also clear the misconception about islam .May Allah be please with all of us.

Note: Humble request to send to all our Muslim and Non- Muslim Brothers & Sisters.

Misconceptions About Islam - By Dr. Zakir Naik

Part 01: http://www.youtube.com/watch?v=GvHHYrdiXHE
Part 02:
http://www.youtube.com/watch?v=sCjiXeWM4pg
Part 03:
http://www.youtube.com/watch?v=oG00Zw-FvkA
Part 04:
http://www.youtube.com/watch?v=8zhxdW04pGo
Part 05:
http://www.youtube.com/watch?v=Y69bL-aPthc
Part 06:
http://www.youtube.com/watch?v=-E82qu7INdI
Part 07:
http://www.youtube.com/watch?v=nW3qnM2lDM4
Part 08:
http://www.youtube.com/watch?v=5q_Nu1XVWDY
Part 09:
http://www.youtube.com/watch?v=XxIRLeafh8I
Part 10:
http://www.youtube.com/watch?v=cxnhL6Bzc3A
Part 11:
http://www.youtube.com/watch?v=hHblgiBMcHo
Part 12:
http://www.youtube.com/watch?v=OUWKoN1dW-Q
Part 13:
http://www.youtube.com/watch?v=7NVKQeYoo2c
Part 14:
http://www.youtube.com/watch?v=TqFh1AM95fw
Part 15:
http://www.youtube.com/watch?v=mPmOeqU8CvE
Part 16:
http://www.youtube.com/watch?v=8t3GxVwsM9U
Part 17:
http://www.youtube.com/watch?v=Jn9K1QWfrCw
Part 18:
http://www.youtube.com/watch?v=kISMiOUMxQQ
Part 19:
http://www.youtube.com/watch?v=Ols0czWNdL4
Part 20:
http://www.youtube..com/watch?v=rsIgSe9Fg9c
Part 21:
http://www.youtube..com/watch?v=xBDdSLcmixc
Part 22:
http://www.youtube.com/watch?v=NBq6h7dc-5M
Part 23:
http://www.youtube.com/watch?v=SvhQodWQi38
Part 24:
http://www.youtube.com/watch?v=XCqHsTnJREA

The Qur'an and the Bible in the light of Science?
A debate between Christian scholar William Campbell and Muslim scholar Zakir Naik.
( A Great & Famous Debate )
Part 01: http://video.google.com/videoplay?docid=-6693125820690597622
Part 02:
http://video.google.com/videoplay?docid=-3772698787977185627
Part 03:
http://video.google.com/videoplay?docid=-7727650085009916595
Part 04:
http://video.google.com/videoplay?docid=-2840601180460198326

Similarities between Hinduism( Before COMMENTINGanything about this topic I request all Brother and sister to view the whole video then comment, in this Zakir Naik is pointing that there is only one God (Allah) and the last Prophet ie., Last Avatar (ie., Mohammed P.B.U.H) as per the books of Hinduism.With this concept he proofs that the Holy Quran is the Book of God.)
Part 01:
http://video.google.com/videoplay?docid=5463724505480326724
Part 02:
http://video.google.com/videoplay?docid=1334401470279399976
Part 03:
http://video.google.com/videoplay?docid=-6032776679880404825

Zakir Naik Debate -Was Jesus Really Crucified:
Part 01:
http://video.google.com/videoplay?docid=-2294876665735364519
Part 02:
http://video.google.com/videoplay?docid=-5283623989368520963

CONCEPT OF GOD in HINDUISM and ISLAM:
A debate "The Concept of God in Hinduism and Islam in the light of Sacred scriptures" between Dr. Zakir Naik (Islamic Research Foundation) & Sri Ravi Shankar (Art of Living):
Part 01:
http://video.google.com/videoplay?docid=2423829886745319361
Part 02:
http://video.google.com/videoplay?docid=6161351915241374974
Part 03:
http://video.google.com/videoplay?docid=-979033391704165036
Part 04:
http://video.google.com/videoplay?docid=-1724090453457058535


Zakir Naik - Is Non Vegetarian Food Permitted or Prohibited:
This debate clears a lot of misconceptions about our diet scientifically.
Part 01:
http://video.google.com/videoplay?docid=-3775022861563813322
Part 02:
http://video.google.com/videoplay?docid=-1719204291514655475

Is Religious fundamentalism a stumbling block:
Part 01: http://www.youtube.com/watch?v=9v_p2YvRFro
Part 02:
http://www.youtube.com/watch?v=YTlOcXc31FE
Part 03:
http://www.youtube.com/watch?v=MKnqvPBQfiM
Part 04:
http://www.youtube.com/watch?v=6-PY5h-7EdE
Part 05:
http://www.youtube.com/watch?v=hqlgBtrMckk
Part 06:
http://www.youtube.com/watch?v=HEKt2kKoD9I
Part 07:
http://www.youtube.com/watch?v=dItkeZmUQV4
Part 08:
http://www.youtube.com/watch?v=3gojBc_3e_o
Part 09:
http://www.youtube.com/watch?v=gaH_MeFMdZU
Part 10:
http://www.youtube.com/watch?v=RwnciGZzR88
Part 11:
http://www.youtube.com/watch?v=4Ge6p6xEqiA
Part 12:
http://www.youtube.com/watch?v=qcWDPcMkptE
Part 13:
http://www.youtube.com/watch?v=Pv-MeNW40fk

Women Rights in Islam by Zakir Naik
Part 01: http://video.google.com/videoplay?docid=-6252112331790749306
Part 02:
http://video.google.com/videoplay?docid=-2193587996061269852

Women right's in islam : Modernising or Outdated:
Part 01: http://www.youtube.com/watch?v=JdNnG1ZR7-g
Part 02:
http://www.youtube.com/watch?v=D7yyGt7zMYA

Dr Zakir Naik About - Terrorism and Jihad:
Part 01: http://video.google.com/videoplay?docid=1209138480560823039
Part 02:
http://video.google.com/videoplay?docid=-5071265718635364196

Zakir Naik - Questions and Answers in Urdu:
Part 01: http://video.google.com/videoplay?docid=7845384636809047368
Part 02:
http://video.google.com/videoplay?docid=1536229582215533067
Part 03:
http://video.google.com/videoplay?docid=-6764140312571143775
Part 04:
http://video.google.com/videoplay?docid=2355640483472559724
Part 05:
http://video.google.com/videoplay?docid=-5348912480272298122

Zakir Naik in Urdu( A brief decision on Dawah followed by Q & A )
Part 1: http://video.google.com/videoplay?docid=6279062323862554374
Part 2:
http://video.google.com/videoplay?docid=-2448635914694529444

Zakir Naik Public Talk:
Part 01: http://video.google.com/videoplay?docid=6263189981206172400
Part 02:
http://video.google.com/videoplay?docid=897052651225261032

Muhammad (P.B.U.H) In Various Religious Scriptures:
Part 01: http://video.google.com/videoplay?docid=8193366074778916455
Part 02:
http://video.google.com/videoplay?docid=8155519851893060905

Is the Quran Gods Word by Zakir Naik:
Part 01: http://video.google.com/videoplay?docid=8638113782795578224
Part 02:
http://video.google.com/videoplay?docid=3704081952251716668
Part 03:
http://video.google.com/videoplay?docid=4197242005069416437
Part 04:
http://video.google.com/videoplay?docid=2082152319210238622

Zakir Naik - If Label Shows Your Intent then Wear:
Part 01: http://video.google.com/videoplay?docid=3402909560042912123
Part 02:
Part 03:
http://video.google.com/videoplay?docid=-8873484637853056329


Zakir Naik - Kuran i Savremena nauka - Qur'an and modern science
http://video.google.com/videoplay?docid=9189456537478918098 (3hr 9min)

Quran Should it be read with understanding:
Part 01:
http://www.youtube.com/watch?v=q3q9_ksLAhk
Part 02:
http://www.youtube.com/watch?v=PmO9j7G9l9s
Part 03:
http://www.youtube.com/watch?v=MRf2jYTpSjo

ZAKIR NAIK (FOCUS ON ISLAM AND UNIVERSAL BROTHERHOOD)
Part 02: http://video.google.com/videoplay?docid=-563458337774447449 (google)
Part 03:
http://video.google.com/videoplay?docid=-6377675691622721340 (google)

Part 01:
http://www.youtube.com/watch?v=_wARGxdaB0s
Part 02:
http://www.youtube.com/watch?v=WU8RvlPHSUA
Part 03:
http://www.youtube.com/watch?v=89J7NL7St6w

Quran and Modern Science - Conflict or Conciliation:
Part 01: http://video.google.com/videoplay?docid=2260954296979594912
Part 02:
http://video.google.com/videoplay?docid=

Ahmed Deedat Amazing Answers to the Questions by Western people:
Link 01:
http://video.google.com/videoplay?docid=2287492988094559892 (about 4 wives in Islam)
Link 02:
http://www.youtube.com/watch?v=U0plMbcfVBE (Amazing Answer regarding Hijab or viel )
Link 04:
http://www.youtube.com/watch?v=utPstdChbt4

திருந்தினால் திரை விலகும்...!


ஆக்கம்: ஆர். நூர்ஜஹான் ரஹீம் (கல்லை)

தொழுதுவிட்டு சலாம் சொல்வதற்கும் டெலிபோன்மணி ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது. எடுத்துப்பேசிய ஜீனத்பாத்திமாவின் முகம் தாமரையாக மலர்ந்தது. மனைவியின் முகமலர்ச்சிக்கு காரணம் புரிந்தது ஜாபர்அலிக்கு.

"என்ன பாத்திமா, ஷாகிராவிடமிருந்து செய்தி வந்திருக்கா? என்ன சொல்றா உன் மக?"

"பேசியது நம்ம பொண்ணுதான்னு எப்படி கண்டு பிடிச்சீங்க!" கண்கள் மலர குழந்தைத் தனமாகக் கேட்டாள் பாத்திமா.

"இதென்ன பெரிய விஷயமா? ஷாகிராவை பெங்களூர் காலேஜ்லே சேர்த்ததிலிருந்து பார்த்துகிட்டு தானே இருக்கேன். மககிட்டே பேசும்போது உன் முகத்தில் காணும் சந்தோஷத்தை!"
இருக்காதாபின்னே! மூன்று பிள்ளைகளுக்குப் பிறகு பிறந்த ஒரே ஆசை மவளாச்சே. வருஷம் போனதே தெரியலைங்க.ஷாகிராவுக்கு எம்.சி.ஏ பரிட்சை ஆரம்பமாகப்போகுதாம்.முடிஞ்சதும் போன்செய்றாளாம்.. அழைத்துப்போக உங்களை வரச் சொன்னாள்."

"அதுக்கென்ன போயிட்டு வரேன். சரக்கு எடுக்க சீக்கிரமாக போகணும்.டிபன் எடுத்து வை".
இரவு படுக்கையில் மெல்ல பேச்செடுத்தாள் பாத்திமா. எந்தக் குடும்ப விஷயமாக இருந்தாலும் இரவு நேரத்தில்தான் ஜாபர் அலி ஓய்வாக செவி கொடுத்து கேட்பார். மற்ற நேரங்களில் டென்ஷன் பார்ட்டிதான். 45 வருடதாம்பத்யத்திய அனுபவம் பாத்திமாவிற்கு.

"என்னங்க நம்ம பொண்ணுக்கு படிப்பு முடிஞ்சிப்போச்சு. இனி நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்து கல்யாணம் நடத்திவிடுவதுதான் நல்லது. இப்போதே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிடுச்சிடுங்க. சரியா இருக்கும். "

"ஷாகிரா படிச்ச பொண்ணு. அவ படிப்புக்கு ஏற்ற மாப்பிள்ளையை நம்ப பிள்ளைங்கதான் பார்க்கணும். எனக்கு என்ன விபரம் தெரியும். அவங்க மூன்று பேரையும் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரச்சொல்லி போனில் சொல்லிடு."

அடுத்து பேசுவதற்குள் குறட்டைச் சத்தம்தான் அவரிடமிருந்து பதிலாக வந்தது. கணவருக்கு வியாபார அலைச்சல் அதிகம் என்று தனக்குத்தானே சமாதானம் செய்துக்கொண்டு உறங்க ஆரம்பித்தாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை...........
மூன்று மகன்களும் தொலைபேசி தொடர்பின் காரணமாக அவரவர்களுடைய விலையுர்ந்த கார்களில் முகமதியார்பேட்டை வந்து இறங்கினர். மகன்களை ஒருசேரக்கண்டதில் ஜாபர் அலிக்கு மட்டில்லா மகிழ்ச்சி. இருக்காதா பின்னே..........

படிப்பு, பதவி, பெரிய இடத்து மாப்பிள்ளைகள் என்ற அந்தஸ்த்து ஆகிய முகாந்திரம் எல்லாம் ஒரு சேரக்கண்டதில் பரம திருப்தி அவருக்கு.

மூத்த மகன் அப்துல் சலீம் பி.இ (சிவில்) படித்துவிட்டு சென்னையில் ரியல் எஸ்டேட் மற்றும் சலீம் கன்ஸ்ட்ரகஷன் தொழிலை நடத்திக்கொண்டு குடும்பத்துடன் சென்னையில் செட்டில் ஆகிவிட்டான்.
இரண்டாவது மகன் அப்துல் மாலிக் பி.காம் முடித்துவிட்டு மதுரைஅரசு பதிவுத்துறை அலுவகத்தில் சார்பதிவாளராக பணிபுரிகின்றான். மதுரைவாசியாகிவிட்டான்.

மூன்றாவது மகன் அப்துல் வஹாப் பி.எஸ்சி (கெமிஸ்ட்ரி) முடித்துவிட்டு திருச்சியிலுள்ள பால்வளத்துறை நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகின்றான். வீட்டு மாப்பிள்ளையாக இருக்கிறான்.

தங்கையின் திருமணப்பேச்சு சம்பந்தமான விவாதம் நடந்தது. எல்லோருடைய ஒட்டுமொத்தமான கருத்துக்களும் தங்களுடைய அந்தஸ்த்துக்கேற்ற பணக்கார மாப்பிள்ளையை தேடுவதில்தான் இருந்தது. ஜாபர் அலியின் விருப்பமும் அதுதான். தன் மகளுக்கு ஒழுக்க குணமுள்ள மாப்பிள்ளைதான் வேண்டும் என்ற ஜீனத் - பாத்திமாவின் வேண்டுகோள் எடுபடவில்லை. இறை நாட்டப்படி நடக்கட்டும் என்று அவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு தன்கைமணச்சுவையோடு வயிறார உணவு பறிமாறி மகன்களை அனுப்பி வைத்தாள் பாத்திமா.

படிப்பு முடித்துவிட்டு வந்த மகளுக்கு வாய்க்கு ருசியாக வித விதமாகச் சமைத்துப் போட்டு மகிழ்ந்தாள் பாத்திமா. அண்ணன்கள் வந்ததையும் மாப்பிள்ளையைப் பற்றிய அவர்களுடைய கருத்துக்களும் தலையசைக்கும் தந்தையைப்பற்றியும் கூறினாள் பாத்திமா. அதைக்கேட்ட ஷாகிராவின் முகம் வாடியது.

"ஏம்மா, எல்லோரும் தீன் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருக்காங்க. அவர்கள் மார்க்கக்கல்வி படிக்கலையா? வாப்பாவும் அவர்கள் வழி செல்கிறாரே?"

"என்னம்மா செய்யறது, உன்னை மதரஸாவில் சேர்த்து படிக்க வைத்தது போலத்தான் அண்ணன்களையும் படிக்க வச்சேன். நீ கருத்தாகப் படிச்சே, பட்டப்படிப்பையும் இஸ்லாமியக்கல்லூரியிலேயே சேர்ந்து படிச்சதாலே தீன் பற்று உனக்கு அதிகமா இருக்கு. ஆனா உன் அண்ணன்கள் சரியா படிக்கலன்னா ஹஜரத் தலையில் ஓங்கிக் கொட்டுவார்னு சாக்கு சொல்லி படிக்காம நின்னுட்டாங்க. ஹஜரத் கொஞ்சம் கண்டிப்பானவர். ஓதுறதுல அசிரத்தையா இருந்தா அவருக்குக் கோபம் வரும். நம்ம நல்லதுக்குத்தானே!. வாப்பாகிட்டேயும் சொல்லிப் பாத்துட்டேன். அவர் வியாபாரம் மூலம் பணம் சேர்ப்பதில்தான் குறியாக இருந்தார். உன் மனசு நோகக் கூடாதுன்னுதான் ஊறுகாய் தொட்டுக்கொள்வதைப்போல பள்ளிக்குப் போய் வருவார்."

(வாழ்க்கை) வசதிகள் அதிகமா இருப்பது செல்வமல்ல;மாறாக போதுமென்ற மனமே (உண்மையான)செல்வமாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), நூல்: புகாரி)

"அரபியில் ஓத வரலைன்னா என்னம்மா? நம்ம உம்மத்துக்களுக்கு மார்க்கம் எவ்வளவு எளிமைப்படுத்தி கொடுக்க முடியுமோ அப்படி கொடுத்துள்ளது. தமிழிலியே இஸ்லாமிய கருத்துக்களையும் மார்க்க நெறிமுறைகளையும் ஆய்வுகளையும் சூராக்களையும் படித்து கடைப்பிடிக்கலாமே! அண்ணிங்க கூடவா எடுத்து சொல்லமாட்டாங்க"

"அட போம்மா, பூவோட சேர்ந்த நாறும் மணம் வீசும் என்பாங்க". இவங்க பூவா இருந்தால்தானே!. இவர்கள் மறுமை வாழ்க்கைக்கு அமல் செய்வதை விட, இவ்வுலக நாகரீக மோகமும் பணம் சம்பாதிக்க கணவன்களுக்கு தவறான வழி காட்டுவதில்தான் ஆர்வமா இருக்காங்க. அவங்க பிள்ளைகளை ஆண்டவன் தான் காப்பாத்தணும்."

சந்திரனை மேகம் மறைத்தது போல பாத்திமாவின் முகத்தில் கவலையின் ரேகைகள் படிந்தன. மனவருத்தத்தை மறைத்துக்கொண்டு தாய்க்கு ஆறுதல் கூறினாள் ஷாகிரா.

ஓய்வு நேரத்தை பயனுள்ள விதத்தில் செலவிடவும் மார்க்கக் கல்வி பற்றிய செய்திகளை அதிகமா தெரிந்து கொள்ளவும் ஒரு கம்ப்யூட்டர் தேவையென வாப்பாவிடம் கூறினாள் ஷாகிரா. மகளின் வார்த்தைக்கு மறு வார்த்தை பேசாத ஜாபர் அலி அவள் விருப்பப்பத்தை நிறைவேற்றி வைத்தார். மகன்களிடம் இருந்து மாப்பிள்ளைகளின் விபரங்கள்,புகைப்படத்துடன் பதிவுத்தபாலில் வந்து சேர்ந்தன. ஜாபர் அலி மகளைக் கூப்பிட்டார்.

"ஷாகிரா,மாப்பிள்ளைகளின் பயோடேட்டா, போட்டோ எல்லாம் வந்திருக்கு. பெரிய இடம் போலிருக்கு, போட்டோவைப் பார்த்தாலே தெரியுது".

ஷாகிரா பயோடேட்டாவை மட்டும் வாங்கிப் பார்த்தாள். அதில் படித்த, அழகான, வசதியான பெண் வேண்டுமென்று குறிப்பிடப்பட்டிருந்தது.

"வாப்பா,எனக்கு இந்த மாப்பிள்ளைகள் பிடிக்கவில்லை"என்றாள் ஷாகிரா.

"என்னம்மா சொல்றே, எந்த போட்டோவையும் பார்க்காமலேயே எப்படிம்மா பிடிக்கலைன்னு சொல்றே?"

"பயோடேட்டாங்கிறது முகம் பார்க்கும் கண்ணாடி மாதிரி, மாப்பிள்ளைகளுடைய குணம், நோக்கம், எதிர்பார்ப்பு எல்லாம் அதிலேயே தெரிஞ்சுக்கலாம். எனக்கு மார்க்கப்பற்றுள்ள, படித்த, எளிமையான மாப்பிள்ளை போதும், வாப்பா; பணம், வசதி எல்லாம் வேண்டாம்".

"என்னம்மா, புரியாத பொண்ணா இருக்கியே! குணம் மட்டும் பத்தாது, பணம் தாம்மா நம்மை வாழவைக்கும்".

"வாப்பா, நீங்க புரிஞ்சிக்கிட்டது அவ்வளவுதான். நமக்கெல்லாம் வழிக்காட்டியாக விளங்கும் நாயகமும் அவர்களின் வழித்தோன்றல்களும் பெண்களுக்கெல்லாம் சிகரமாகத் திகழும் பாத்திமா நாயகமும் அவர்களின் எளிமையான வாழ்க்கை நெறிமுறைகளும் தான் இஸ்லாத்திற்கு பெருமையைச் சேர்க்கிறது. நீங்கள் நினைப்பதுபோல் இல்லே."

"நம்ம பொண்ணு சொல்றது சரிதாங்க. அவள் விருப்பப்படியே மாப்பிள்ளைப் பார்ப்போம்" என்று ஆதரவாகப் பேசினாள் பாத்திமா.

"சரிம்மா, நீ சொல்றமாதிரி பையனை எங்கேபோய் தேடுவது சொல்லு."

"ஒண்ணும் கஷ்டம் இல்லே வாப்பா, இன்டர்நெட்லே இல்லாத விஷயமே இல்லே. நீங்க அனுமதி கொடுத்தா தேடிப்பார்க்கிறேன்" என்றாள்.

"இதெல்லாம் கூட கம்ப்யூட்டர் செய்யுதா என்ன! புரோக்கருக்கு வேலையே இல்லைன்னு நினைக்கிறேன்."

தந்தையின் அனுமதி கிடைத்தது ஷாகிராவுக்கு.

"என் மனம் நாடும் மணாளனை மணம் முடித்து வை." என்று இறைவனிடம் துவா கேட்டாள். நாட்கள், வாரங்கள், மாதங்கள் நகர்ந்தன.

"தொழுகை தூக்கத்தை விட சிறந்தது" என்பதால் ஃபஜர் தொழுதுவிட்டு அம்மாவுக்குச் சமையலில் உதவி செய்த பின் கம்ப்யூட்டர் முன்அமர்ந்தாள். இஸ்லாமிய இணையதளம் ஒன்றில் அவள் பார்த்த மாப்பிள்ளையின் விவரம் அவளை வெகுவாகக் கவர்ந்தது. மார்க்கப்பறுள்ள, ஐவேளைதொழுகும் தன் பெற்றோர்களைப் பராமரிக்கும் பெண் தேவையென குறிப்பிட்டு இருந்தது.

"நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள். 1. செல்வத்திற்காக 2.குடும்ப வம்ச பாரம்பரியத்திற்காக 3.அழகிற்காக 4.மார்க்க நல்லொழுக்கத்திற்காக. எனவே மார்க்க நல்லொழுக்கத்திற்காக பெண்ணை மணந்து வெற்றி அடைந்துக்கொள். (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்." (அறிவிப்பாளர்: அபு ஹுரைரா(ரலி), நூல்: புகாரி. எண்; 5090)

மாப்பிள்ளையின் விவரங்களை ஷாகிரா பெற்றோர்களிடம் தெரிவித்தாள். அவள் முகத்தில் சந்தோஷத்தைக் காண தவறவில்லை ஜாபர்அலி. வாழப்போகும் மகளின் விருப்பம்தான் முக்கியம் எனக்கருதி மாப்பிள்ளையைப் பார்க்கப் புறப்பட்டார். ஊரிலிருந்து திரும்பிவந்த ஜாபர்அலியின் முகத்தில் மட்டில்லா மகிழ்ச்சியும் மனநிறையும் தென்பட்டது. சொல்லப்போகும் செய்தியைக் கேட்க பாத்திமா ஆவலுடன் கணவரின் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றாள்.

"பாத்திமா, நம்ம பொண்ணு தேர்வு செய்த மாப்பிள்ளை அவள் எதிர்ப்பார்த்த மாதிரியே இருக்கார். எளிமையான குடும்பமாக இருந்தாலும் நல்லபெயரைச் சம்பாதித்து வைத்துள்ளார். தொழுகையாளி, அடக்கம், சாந்தமான பேச்சு, பெற்றோர்கள் பழகும் விதம் எல்லாம் மனசு நிறைஞ்சு இருக்கு. நம்முடைய பணமும் அவர்களுடைய குணமும் நம்ம பொண்ணைச் சந்தோஷமாக வாழவைக்கும்!".

அவருடைய உள்மனம் ஒரு கணக்குப் போட்டது. தொலைபேசிமூலம் தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் மாப்பிள்ளை பற்றிய விவரங்களையும் தங்களுடய விருப்பத்தையும் தெரிவித்தார். மூவரும் குடும்பத்துடன் வந்து திருமண ஏற்பாடுகளைக் கவனிக்கும்படி சொல்லி முடித்தார். மூன்று குடும்பங்களும் வந்து இறங்கினார்கள் சுனாமிபோல் ஆவேசமாக. காரசாரமான விவாதங்கள் நடந்தன. தாங்கள் பார்த்த வரன்களை நிராகரித்ததன் காரணமாக தங்கள் கௌரவம், அந்தஸ்த்து எல்லாம் பஞ்சாக பறந்து விட்டது என ஆர்ப்பரித்தனர். அண்ணிகள் தங்கள் பங்குக்கு உபதேசம்செய்தனர். தன் நிலையிலிருந்து தளரவேயில்லை ஷாகிரா.

"அண்ணா, எனக்கு ஆடம்பரமான பணக்கார குடும்பம் வேண்டாம். சொத்துக்களோ, நகைநட்டோ வேண்டாம். மனசுக்கு நிறைந்த வாழ்க்கையே போதும். மூவரும் ஒன்று சேர்ந்து நடத்தி வைங்க" என்று உருக்கமாக வேண்டினாள்.

அவர்கள் மனம் இரும்பாக இருந்தால்தானே உருக வாய்ப்பிருக்கும்; அதுதான் கல்லாகி விட்டதே.! பிடிவாதமாக எல்லோரும் புறப்பட்டுச் சென்று விட்டனர். பலமுறை நேரில் அழைத்தும் வர மறுத்து விடவே உறவினர்கள், நண்பர்களை வைத்து படைத்தவன்மேல் பாரத்தைப் போட்டு திருமணத்தை முடித்து விட்டார் ஜாபர் அலி. மறுவீடு வந்த மருமகனிடம் மகளுடன் வீட்டோடு தங்கிவிடும்படி கேட்டார்.

அதற்குச் சாதிக், "மாமா, உங்களுக்குத் தெரியாதது ஒண்ணும் இல்லே. மகன்கள் இருக்கும்போது வீட்டு மாப்பிள்ளையாக இருப்பது உகந்தது இல்லே. அது முறையும் இல்லே. நான் என் சொந்த காலில் நிற்கவே ஆசைப்படுகிறேன். என் பெற்றோர்களைப் பராமரிக்கும் கடமையும் இருக்கு. மனைவி ஷாகிராவை மட்டும் என்னுடன் அனுப்பினால் போதும். வேறு எதுவும் வேண்டாம். தவறாக நினக்காதீங்க; அல்லாஹ் போதுமானவன்" என்று பதில் கூறினான்.

கணவரின் கருத்தையே ஆமோதிப்பதுப்போல் மகளும், "வாப்பா புகுந்த வீடுதான் பெண்களுக்கு சொர்க்கம். அவருக்கும் அவரைப்பெற்றவர்களுக்கும் பணிவிடை செய்யவே விரும்புகிறேன். ஆண்டவன் துணையும் உங்களின் துவா பரகத்தும் போதுமானது" என்றாள்.

பாசம் ஒன்றையே சீதனமாகக்கொண்டு விடைப்பெற்றுச் செல்லும் மகளையும் மருமகனையும் பெருமிதத்தோடுப் பார்த்துக்கொண்டு நின்றார் ஜாபர் அலி. ஜீனத் பாத்திமாவுக்கு கண்கள் குளமாயின. ஜாபர் அலியின் மனக்கணக்கு பொய்த்ததில் அவருக்கு வருத்தமே இல்லை.

பணக்கார வீட்டுப்பெண் என்ற சுவடு தெரியாமல் மன நிறைவோடு குடும்பம் நடத்தினாள் ஷாகிரா. அக்கம்பக்கத்துப் பிள்ளைகளுக்கு ஓதவும் தொழவும் கற்றுக் கொடுத்தாள். பெண்களைக்கூட்டி இஸ்லாமிய நெறிமுறைகளை எடுத்துக்கூறினாள். எல்லோருடைய மனதிலும் நிறைந்து நின்றாள். கணவனின் வேலைக்காக நாளிதழ்களைப் புரட்டவும் தவறுவதில்லை. எல்லா பட்டதாரிகளையும் போல சாதிக்கும் வேலை கிடக்காமல் அல்லாடினான். கணவனின் நிலை கண்டு கண்கலங்கிய ஷாகிராவின் பார்வை அன்றைய செய்தித்தாளில் நிலைத்தது. ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான விண்ணப்பம் ஒன்றை கண்டாள்.

"குருடனுக்குப் பார்வை கிடைத்ததைப்போல" மனம் துள்ளியது. தேர்வுக்கு விண்ணப்பிக்க கணவனை வற்புறுத்தினாள். "ஷாகிரா, இந்தத் தேர்வு எழுத நிறைய செலவாகும். நம் சக்திக்கு ஒத்து வராதும்மா" என்றான் சாதிக்.

இருவரும் பேசியதைக்கேட்ட அவனது பெற்றோர்கள், "சாதிக், கவலைப்படாதே, நம்முடைய பூர்வீக நிலம் கொஞ்சம் இருக்கு. அவசரத்துக்கு உதவும் என்று தான் வைத்துள்ளோம். அதை விற்று மருமகளின் ஆசையை நிறைவேற்றுப்பா" என்று கூறினார்கள்.

ஈடுபாட்டுடன் படித்து தேர்வு எழுதிய சாதிக் மாநிலத்தில் ஏழாவது இடத்தில் தேர்ச்சி பெற்றான். ஷாகிரா ஐவேளை தொழுகையிலும் துவா கேட்டதும் ஸலவாத்து ஓதியதும் மற்றவர்களுக்கு உதவியதும் வீண் போகவில்லை. மட்டுமின்றி, சாதிக்கின் தேர்வுக்குத் தேவையான விஷயங்களைச் சேகரித்துக் கொடுப்பதிலும் ஷாகிரா நிறைந்து நின்றாள். சாதிக் முகமதுவுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்தன. டேராடூனில் பயிற்சி முடிந்து திருச்சியில் கூடுதல் கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டான். பங்களாவில் தன் பெற்றோர்களுடன் குடியேறினான்.

மருமகனின் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் பதவியும் கண்டு ஷாகிராவின் பெற்றோர்கள் பூரித்துப் போனார்கள். மைத்துனரின் முன்னேற்றத்தைக் கண்ட ஷாகிராவின் சகோதரர்கள் மூவரும் பொறாமைப்பட்டார்கள்; எரிச்சலடைந்தார்கள். வாழ்க்கையில் வேகமாக முன்னேற வேண்டும் என்ற வெறி அதிகமாகியது. மனைவிகளின் தூண்டுதல்களின் பேரில் பதவியைப் பயன்படுத்தி தவறான பாதையில் செல்ல ஆரம்பித்து, பிடிபட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டனர். கேள்விப்பட்ட ஜாபர் அலியும் பாத்திமாவும் நிலைகுலைந்து போனார்கள்.

இறைவழி நின்று எல்லோருடைய பாராட்டுகளோடு உயர்ந்து வரும் மருமகன் ஒருபுறம்; பொறாமைத்தீயில் வெந்து, பதவியை இழந்து நிற்கும் பிள்ளைகள் ஒருபுறம். இஸ்லாத்தில் பிறந்து, ஐவேளை தொழுகையை மறந்து, செல்வத்தைச் சேர்ப்பதில் கவனமாக இருந்த தனக்கு அல்லாஹ் பாடம் புகட்டிவிட்டான் என்று எண்ணினார். முதன் முறையாக அவருடைய உடல் இறையச்சத்தால் நடுங்கியது; கண்கள் கலங்கியது. இரு கைகளையும் ஏந்தி அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட மூவரும் வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தனர். அண்ணன்களின் செய்தியறிந்து ஷாகிரா கணவருடன் தாய்வீடு வந்தாள். மூவருக்கும் ஆறுதல் கூறினார்கள்.

சாதிக் முகமது தன் மைத்துனர்களைப்பார்த்து, "நான் வயதில் உங்களை விட வயதில் சிறியவன். நான் சொல்லப்போவதை யாரும் தவறாக எண்ண வேண்டாம்; சொல்லுவதை என்னுடைய கடமையாக எண்ணுகின்றேன். நீங்கள் மூவரும் பதவியைப் பயன்படுத்தி லஞ்சம் வாங்கியது, கலப்படம் செய்தது, நம்பியவர்களை ஏமாற்றியது எனப் பல குற்றங்களை செய்துள்ளீர்கள். இதற்கெல்லாம் காரணம் மார்க்கத்தைப்பற்றிய அறிவும் இறையச்சமும் இல்லாததுதான்."

"நபிகள் நாயகம் கூறுகிறார்கள்: லஞ்சம் கொடுப்பவன் மீதும் வாங்குபவன் மீதும் அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டும்.(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி), நூல்: இப்னுமாஜா).

ஒவ்வொரு முஃமீனுக்கும் புனித குர்ஆனையும் முகமதுநபி(ஸல்) அவர்களின் போதனையையும் படித்து பின்பற்றுவது, மார்க்க அறிவைப்பெறுவது கடமையாக்கப்பட்டுள்ளது.

"எவன் தூய்மையான அச்சமுடையவனாக இருக்கிறானோ அவன்தான் அல்லாஹ்விடத்தில் கண்ணியமிக்கவன்" (அல் குர்ஆன் 49:13)

"பயபக்தி உடையவர்களுக்கு அருகில் சுவனபதி கொண்டு வரப்படும்; வழி தவறியவர்களுக்கு எதிரே நரகம் கொண்டு வரப்படும்" (அல் குர்ஆன் 29:90-91)

முதலில் மைத்துனருடைய அறிவுரைகளை அலட்சியப்படுத்தியவர்கள், பின்னர் அவருடைய பேச்சையும் குர்ஆன் வசனத்தையும் கேட்க ஆரம்பித்தப்பிறகு உண்மையிலேயே இறையச்சத்திற்கு ஆளானார்கள்; முகம் வியர்த்தது.

சாதிக் முகமது மேலும் தொடர்ந்தான்... "உங்களின் தவறான போக்குக்குக் காரணம் நீங்கள் மட்டுமல்ல; சரியான பாதையைக் காட்டத்தவறிய பெரியவர்களும்தான்."

ஜாபர் அலி தன் குற்ற உணர்வால் தலை நிமிரவே இல்லே.

"மச்சான் எங்களின் இந்நிலைக்கு முழுக்காரணமும் நாங்கள்தான். எங்களின் தங்கையைப்போலவே எங்கள் மனைவிகள் இருந்து இருந்தால் கூட இந்நிலை வந்திருக்காது." என வருந்தினார்கள்.

"இனி ஒருவர் மேல் ஒருவர் பழி சொல்லிப் பயனில்லை. நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக அமையட்டும்."

"எங்களை அல்லாஹ் மன்னிப்பானா?" மூவரின் குரல்களும் தழுதழுத்தது.

"உங்கள் தவறுகளை எப்போது உணர்ந்தீர்களோ, அப்போதே அல்லாஹ் உங்களை மன்னித்து விட்டான். இறையச்சம் உடையவர்களை அல்லாஹ் நேசிக்கிறான். கவலை வேண்டாம்."

மூவரின் இதயங்களின் இருள் திரை விலகி கரையைக்கடந்ததுப் போன்ற ஓர் தெளிவு பிறந்தது.

"முடிந்தவரை மூவரும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீர்வு காணுங்கள். தண்டனை காலம் முடிந்ததும் வேலைக்கு முயற்சி செய்கிறேன்." என்றான் சாதிக்.

"வேண்டாம் மச்சான். இனி எங்களுக்கு வேலைக்குப் போக விருப்பமில்லை. எங்களை நல்வழிப்படுத்தியதே போதும். இனி வாப்பாவுக்கு உதவியாக இருந்து, தீனுக்காக உழைக்கப்போகிறோம். எங்கள் ஊர் பள்ளிவாசலை பெரிதுபடுத்தி மார்க்கக்கல்வியை விரிவாக்குவோம். மறுமை வாழ்வுக்கு அமல்கள் செய்வோம்", மூவரும் மனநிறைவோடு கூறினார்கள்.

தன் பிள்ளைகளின் மாற்றங்களைக்கண்டு மகிழ்ந்த ஜாபர் அலி மருமகனின் கைகளை கண்களில் ஒற்றிக்கொண்டார். இதனைக் கண்ட ஷாகிராவின் கண்கள் பனித்தன. சாதிக் முகமதுவின் முகத்தில் நிறைவான புன்னகை தவழ்ந்தது.

"அனைத்திற்கும் ஆண்டவன் போதுமானவன்!"

"எவர்கள் நேர்வழியில் செல்லுகின்றார்களோ, அவர்களுடைய நேர் வழியை (இன்னும்)அதிகப்படுத்தி அவருக்கு தக்வாவை-பயபக்தியை(இறைவன்)அளிக்கிறான்". (அல் குர்ஆன் 47:17)

இஸ்லாம் மயமாகும் ஐரோப்பா கண்டம்! - Part 5

கட்டுரை ஆசிரியர் : அபூ ரிஸ்வான்.


திருமணம் செய்து அதிகமாக குழந்தைகள் பெற்றுக் கொள்வது ஒன்றே மனிதவளத்தை அதிகரிக்க வழி. அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் வல்ல அல்லாஹ் கொடுக்கின்ற அருட்கொடைகளில் மிகச்சிறந்த அருட்கொடையாகிய குழந்தைகளை அதிகமாகப் பெற்றுக்கொள்ளுதலே இறைவனின் உவப்பிற்கு உகந்தவழியாகும். அல்லாஹ் (சுப்), தனது திருமறையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

“பெண்கள், ஆண்மக்கள், பெருவாரியான தங்கம் மற்றும் வெள்ளிக்குவியல்கள், கண்கவர் குதிரைகள், கால்நடைகள், வேளான் நிலங்கள் உள்ளிட்ட ஆசைப்பொருள்களை விரும்புவது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. இவை(யாவும்) இவ்வுலக வாழ்வின் (அற்பமான) வசதிகளே. (ஆனால்), அழகிய உறைவிடம் அல்லாஹ்விடமே உள்ளது” (அல்-குர்ஆன் 3:14)

இவ்வசனத்தில் முதன்முதலில் பெண்மக்களையே வாழ்க்கையில் மனிதர்களுக்கு கவர்ச்சியாக, அழகாக்கப்பட்டுள்ளதாக கூறுகிறான். அதிலும் பெண்கள் என்று பன்மையில் கூறுகிறான். அடுத்து ஆண்மக்களைப் பெறுவதும் மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறான். ஆண்மக்கள் மூலம் தன் சந்ததிகளை உலகில் பெருக்குவதற்கு ஒவ்வொரு மனிதனும் விரும்புகின்றான்.

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் அழகும் குடும்பப்பாரம்பரியமும் உள்ள ஒரு பெண்ணைக் கண்டேன். ஆனால் அவளுக்கு குழந்தைப் பேறு இல்லை. அவளை நான் மணந்து கொள்ளலாமா?” என்று கேட்டார். இவ்வாறு அவர் பலமுறை கேட்டும் நபியவர்கள் வேண்டாம் என்று தடுத்தார்கள். பின்பு கூறினார்கள்: “குழந்தைப்பேறு அதிகமுள்ள பாசமிக்க பெண்ணை நீங்கள் மணந்து கொள்ளுங்கள். ஏனெனில் மறுமை நாளில் எல்லாச்சமுதாயத்தாரிலும் நீங்களே அதிக எண்ணிக்கை உள்ளவர்களாக இருக்கவேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்”. அறிவிப்பாளர் - மஅதில் பின் யசார் (ரலி); நூல் அபூதாவுத், நஸயீ

இந்நபிமொழியிலிருந்து குழந்தை பேறுள்ள விதவைப்பெண்ணையோ அல்லது விவாகரத்து பெற்ற பெண்ணையோ அல்லது குழந்தைப் பேறு அதிகம் உள்ள தாயின் மகளான கன்னிப்பெண்ணையோ மணந்து கொள்ளுதல் சிறந்ததாகும்.

நபிமார்கள் பலரும் பலதாரமணம் செய்தவர்களாகவும, அதிகமாக குழந்தைகள் பெற்றவர்களாகவும் இருந்தார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக, சுரா யூஸூஃப்பில் இறைவன் பின்வருமாறு கூறுகிறான்.

“இதனை நினைவு கூறுவீராக! யூஸூஃப் தன் தந்தையிடம், ‘ என் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் நான் கனவில் கண்டேன்; அக்கனவில் அவை என்முன் தாழ்ந்து பணிந்து கொண்டிருப்பதாகவும் கண்டேன்!’ என்று கூறினார்”. (அல்குர்ஆன் 12:4)

யூஸூஃப் (அலை) அவர்களுக்கு பதினோரு சகோதரர்கள் இருந்தார்கள். இவர்களில் பத்துபேர் மாற்றாந்தாய் சகோதரர்கள். ஒருவர் மட்டும் யூஸூஃப் (அலை) அவர்களைவிட இளையவராகவும், உடன்பிறந்தவராகவும் இருந்தார். கனவில் கண்ட பதினோரு நட்சத்திரங்கள், யூஸூஃப் (அலை) அவர்களின் பதினோரு சகோதரர்களையும், சூரியன் யஃகூப் (அலை) அவர்களையும், சந்திரன், யஃகூப் (அலை) அவர்களின் துனைவியாரை - யூஸூஃப் (அலை) அவர்களின் மாற்றாந்தாயையும் குறிக்கும்.

மேலும் பனூ இஸ்ராயில் அத்தியாயத்தில் பின்வருமாறு இறைவன் கூறுகின்றான்:

“இதன் பின்னர், அவர்களை வெற்றிக்கொள்ளும் வாய்ப்பினை உங்களுக்கு நாம் வழங்கினோம். மேலும் பொருட்செல்வங்கள், மக்கட்செல்வங்கள் மூலம் உங்களுக்கு உதவி செய்தோம். உங்கள் எண்ணிக்கையை முன்பைவிட பெருகச்செய்தோம்” (அல்-குர்ஆன் )

இந்த வசனத்தின் கருத்தாக, குர்ஆன் விரிவுரைகளில் கூறப்படுவது - பாபிலோனியர்கள் மற்றும் அஸூரியர்கள் ஆகியோர்களால் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு முதலில் ஒரு பயங்கர அழிவு ஏற்பட்டது. அதன் பின்னர், அல்லாஹ் (சுப்), இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு அவர்களை அழித்தவர்களை எதிர்த்து போரிட்டு வெல்ல தேவையான பொருட்செல்வம் மற்றும் மக்கட்செல்வங்களை வழங்கினான் என்பதாக குறிப்பிடுகின்றது. மேலும் மக்கள் எண்ணிக்கையை முன்பைவிட அதிகமாக பெருகச் செய்ததாகவும் இறைவன் கூறுகின்றான். இதிலிருந்து அல்லாஹ் நாடினால் ஒரு சமுதாய மக்களின் எண்ணிக்கையை பெருகச் செய்யமுடியும் என்றும், அல்லாஹ் நாடவில்லை என்றால் எத்துனை முயற்சிகள் செய்தாலும் மக்கட்தொகையை பெருக்கமுடியாது என்றும் விளங்கிக் கொள்ளமுடியும்.

அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்கு சில பயனுள்ள குறிப்புக்களை (useful tips) கீழே காண்போம்:

ஆண்களுக்கு:

11) திருமணத்தை தள்ளிப்போடாதீர்கள். நபி (ஸல்) அவர்கள் தமது 25 வது வயதில் கதீஜா (ரலி) அவர்களை முதல் திருமணம் செய்தது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. ஆக இளமையில் திருமணம் செய்வது குழந்தைகள் அதிகமாய் பெற வழிவகுக்கும்.

2) திருமணத்திற்கு பின்பு குழந்தைப் பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடாதீர்கள். எவ்வளவு வருடங்கள் தள்ளிப்போடுகறீர்களோ அவ்வளவுக்கு குழந்தைகள் குறைவாக பிறக்கக்கூடும். மேலும் இளம் வயதில் குழந்தைப் பேறுவதே அக்குழந்தையை நன்கு வளர்க்க பாடுபடமுடியும்.

3) குடும்பக்கட்டுப்பாடு என்ற ஆண்மை நீக்கம் அறவே செய்து கொள்ளாதீர்கள். இப்படி நிரந்தர ஆண்மை நீக்கம் செய்து கொள்ள இஸ்லாத்தில் அனுமதியில்லை. ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் இடையே, முன்பு நாம் குறிப்பிட்டபடி குறைந்தபட்சமாக மூன்று ஆண்டுகள் இருந்தாலே போதுமானது. அச்சமயங்களில் தற்காலிக கருத்தடை சாதனங்களை உபயோகிக்கலாம்.

4) நமது இந்திய திருநாட்டில் முன்பு இருந்ததைப்போல குடும்பக்கட்டுப்பாட்டை அரசாங்கம் இப்போது வலியுறுத்தவில்லை. ஏனெனில் மனிதவளம் இந்தியாவில் அதிகம் இருப்பதால் தான் இந்தியாவின் வளர்ச்சி முன்னைவிட அதிகமாய் இருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் நன்கு உணர்ந்து கொண்டுவிட்டார்கள். தற்பொழுது எல்லாக் குடும்பங்களுக்கும் அரசாங்கமே மருத்துவக் காப்பீடு (medical insurance ) அளிப்பதன் மூலம் குழந்தைகள் இறப்பு விகிதத்தையும் (infant martality) குறைக்கவும், பொது மக்களின் சுகாதார நல்வாழ்வுக்கு வழிசெய்யவும் முயற்சிக்கிறார்கள்.

5) நீங்கள் இரண்டாம் மனைவியை திருமணம் செய்ய விரும்பினால், முதல் மனைவியின் சம்மதத்தை கேட்க முயற்சிக்காதீர்கள். நூற்றில் ஒருபெண்கூட, தான் முதல் மனைவியாய் இருக்கும் பட்சத்தில் தனது கணவன் இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய அனுமதிக்க மாட்டாள். இவ்விசயத்தில் நீங்களே தீர்மானித்து நீங்களே தான் முயற்சி செய்யவேண்டும்.

6) இரண்டு மனைவியரோ அதற்கு மேலோ உள்ளவராக இருந்தால், உங்கள் நேரத்தை எல்லா மனைவியரோடும் சமமாக பங்கிடுங்கள்.

7) குழந்தைகளிடம் பாரபட்சம் காட்டாதீர்கள். ஆண்குழந்தையாக இருப்பினும் பெண்குழந்தையாக இருப்பினும் குடும்பத்தில் எதை வாங்கினாலும் சமமாக பங்கிட்டுக் கொடுங்கள்.

8.) அதேபோல் உலக கல்வியிலும், மார்க்க கல்வியிலும் ஆணுக்கோ, பெண்ணுக்கோ பாரபட்சம் காட்டாதீர்கள். எல்லாக் குழந்தைகளுக்கும் நிறைவாக கல்வி அறிவை அளியுங்கள்.

9) இரண்டாம் திருமணம் செய்தவர், திருமணம் செய்த அன்றிலிருந்து தான் முதல் மனைவிக்கு என்ன பொருள் வாங்கினாலும் அதே பொருளை தன் இரண்டாவது மனைவிக்கும் வாங்கி கொடுக்க வேண்டும். இரண்டாவது மனைவியை திருமணம் செய்வதற்கு முன்பு முதல் மனைவிக்கு பல பொருட்களை நீங்கள் கொடுத்திருக்கலாம். அதைப்போன்று இரண்டாம் மனைவிக்கும் வாங்கிக்கொடுக்கவேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. ஏனெனில் அச்சமயம் ஒரேஒரு மனைவி மட்டுமே இருந்தாள். ஆகையால் அவளுக்கு மட்டுமே கொடுத்தீர்கள்.

10) முதல் மனைவியின் இரகசியங்களை இரண்டாவது மனைவிக்கும், இரண்டாவது மனைவியின் இரகசியங்களை முதல் மனைவிக்கும் கூறாதீர்கள். இப்படி சொல்வது இஸ்லாத்தில் முழுமையாக தடைசெய்யப்பட்டிருக்கிறது.

11) இரண்டு மனைவிகள் உள்ளவர்கள், கூடியமட்டும் அவர்களை தனித்தனி வீடுகளில் குடியமர்த்துதல் நல்லது. அல்லது ஒரே வீட்டில் கீழ் வீட்டில் ஒருவரையும், மேல் வீட்டில் ஒருவரையும் வசிக்கச்செய்வது சிறந்தது. நபி (ஸல்) அவர்கள் தங்களது மனைவிமார்களுக்கு தனித்தனி குடில் அமைத்துக்கொடுத்தார்கள் என்பதை ஹதீதுகளின் மூலம் அறியலாம்.

12) உங்கள் மனைவியருக்கும், குழந்தைகளுக்கும் தூய இஸ்லாத்தை குர்ஆன் மற்றும் நபிவழி வாழ்க்கை முறையை துவக்கத்திலிருந்தே போதனை செய்யுங்கள். முதன் முதலில் நீங்களே ஒரு நல்ல எடுத்துக்காட்டாய் (role model) நபிவழியிலே வாழ்ந்து காட்டுங்கள்.

13) மனைவியருக்கு அவர்கள் கேட்கும் எல்லா பொருட்களையும் வாங்கிக் கொடுக்காதீர்கள். அவர்களுக்கு வாழ்க்கைக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பொருட்களை மட்டும் வாங்கிக் கொடுங்கள். வாழ்க்கைக்கு தேவையானவை எது, ஆசைப்படுவது எவை என்பதன் வித்தியாசத்தை புரியவையுங்கள். நமது தேவைகளைக் குறைத்துக்கொண்டால் அதிக குழந்தைகளைப் பெற்றாலும் மகிழ்ச்சியாக வாழலாம். (”வாழ்க்கையில் தேவைகளும் ஆசைகளும்” - என்பது பற்றிய இக்கட்டுரை ஆசிரியரின் இன்னொரு ஆக்கம் இன்ஷா அல்லாஹ் விரைவில் வர இருக்கிறது - நிர்வாகி)

14) குழந்தைப் பெறுவதில் மாற்றுமத கலாச்சாரத்தையோ, மேல்நாட்டுக் கலாச்சாரத்தையோ பின்பற்றி ஆசைக்கொரு பெண், ஆஸ்திக்கு ஒரு ஆண் போன்ற மூடத்தத்துவங்களைப் பின்பற்றாதீர்கள். உங்களால் முடிந்த அளவு அதிகமாய் குழந்தைகளைப் பெறமுயற்சி செய்யுங்கள். முயற்சி செய்பவர்களுக்கு இறைவன் பயன் அளிப்பதாகக் கூறுகிறான்.

15) இறுதியாக, ஒரு முஸ்லிமின் மரணத்திற்குப்பின் அவனுக்கு பயனளிக்கும் மூன்று செயல்களில் ஒன்றாக இறந்த தன் தந்தையருக்காக நல்லொழுக்கமுள்ள மகன் செய்யும் பிரார்த்தனை என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள். நீங்கள் அதிகமாய் குழந்தைகளைப் பெற்றால், அவர்களில் ஒரு குழந்தையாவது உங்கள் மரணத்திற்குப் பின் உங்களுக்காக பிரார்த்தனை செய்தால் அதன் பொருட்டு அல்லாஹ் (சுப்) உங்கள் பாவங்களை மன்னித்து சுவன வாழ்க்கையை அளிக்கலாம்.

இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்.

Thanks: http://suvanathendral.com