Sunday, February 14, 2010

'காதலர் தினம்' - 14 பிப்ரவரி

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 15ஆம் நாளிதழ்களில் அதற்கு முதல் நாள் (14 பிப்ரவரி) 'காதலர் தினம்' கொண்டாட(?)ப் பட்டதும் அதில் ஏற்பட்ட ரசாபாசங்களும் அவமானங்களும் செய்திகளாக விரிந்திருக்கும். இன்று 'காதலர் தினம்' நாடு முழுதும் கொண்டாடப்பட்ட இலட்சணம் நாளைய நாளிதழ்களில் வெளியாகும். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இளம் தலைமுறை என்போர் மிகப் பெரிய சொத்தாவர். எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்க்கை சிறந்ததாக அமைய அவர்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள் உயர்ந்ததாக அமைவதில் கவனம் செலுத்த வேண்டியது பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் அரசுகளின் கடமையாகும். வளரும் பருவத்தில் அவர்களுக்கு அமைத்துக் கொடுக்கப்படும் பாதையே அவர்களின் எதிர்கால வாழ்க்கையின் தரத்தினை நிர்ணயிக்கிறது.

ஆனால், நாகரீகத்தின் உச்சியில் உள்ளதாகப் பெருமைப்பட்டுக் கொள்ளும் இக்காலத்தில் பிள்ளைகளின் வாலிபப் பருவம் என்பது அவர்களின் பெற்றோரைத் தீக்கணலில் நிற்க வைத்துள்ளது என்றால் அது மிகையாகாது. அறிவியலின் முன்னேற்றத்தால் கண்டுபிடிக்கப்பட்டப் பல நவீன உபகரணங்கள், புதிய தலைமுறையினரின் பொழுதுபோக்கு அம்சங்கள் என அனைத்திலும் இளம் தலைமுறையைச் சீரழிக்கும் அனைத்து அம்சங்களும் கலந்து காணப்படுகின்றன.

இவற்றில், இந்தப் பிப்ரவரி 14 ஆம் நாளைக் கொண்டாடுவதற்குச் சூட்டப்பட்ட நாமகரணமும் ஒன்று. ஆசிரியர்களைக் கவுரவிக்க 'ஆசிரியர் தினம்', தாய்மார்களைக் கவுரவிக்க 'அன்னையர் தினம்', சுற்றுப்புறச் சூழலின் முக்கியத்துவத்தை உணர்ந்த 'சுற்றுப்புறச் சூழல் தினம்' என ஓராண்டில் கிட்டத்தட்டப் பாதி நாட்களுக்கு ஒவ்வொரு பெயரிட்டு நினைவு கூர்வதற்கு இடையில், காதலர்களை மகிமைப் படுத்தக் 'காதலர் தின'மாம்!

பொதுமக்களுக்குத் தீமை விளைவிக்கக் கூடியது என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் "புகை பிடிப்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு!" முத்திரையுடன் புகைப்பொருட்களை விற்கவும் தனி மனிதனுக்கும் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் சாபக்கேடானது என நன்றாகத் தெரிந்திருந்தும் "பார் வசதியுடன் கூடிய மது விற்பனைச் சாலைகளை" அரசே நடத்த ஏற்பாடு செய்தும் சமூக வாழ்வையே சீர்குலைக்கக்கூடிய மிகப்பெரிய உயிர்க்கொல்லி வைரஸ் தொழிற்சாலை எனத் தெரிந்திருந்தும் 'ரெட் லைட் ஏரியா' என்ற பெயரில் லைசன்ஸ் கொடுத்து விபச்சாரம் செய்யவும் அனுமதி வழங்குகின்ற "மக்களைப் பாதுகாக்கும்(?) அரசு"கள்.

"என் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும்" என்ற எதிர்பார்ப்புடன் தன் பிள்ளைகளின் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்யும் பெற்றோர்கள்தாம் இவ்விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இஸ்லாமியக் கலாச்சாரத்திற்கு மட்டுமின்றி, பண்பாட்டைப் பேணுகின்ற எந்தக் கலாச்சாரத்துக்கும் எவ்வகையிலும் ஒவ்வாத இந்த ஆபாச தினச் சிந்தனையில் உள்ள தீமைகளைக் குறித்த போதிய அறிவு பெற்றோர்களுக்கு இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் பள்ளிப்பருவத்தையும் விட்டு வைக்காத இந்தக் கேடுகெட்ட கலாச்சாரச் சீரழிவில் விழுந்து விடாமல் வளரும் தலைமுறையைக் காக்க இயலும்.

பண்டைய ரோமர்கள் கொண்டாடிய ஒரு பண்டிகையின் மாற்று உருவே 'வாலண்டைன்" என்ற ஒருவரின் பெயரால் இன்று கொண்டாடப்படும் இந்த ஆபாச தினம்.

ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அவனுக்குக் கொண்டாடுவதற்கு இரு பண்டிகைகள் மட்டுமே உண்டு. இவையன்றி வேறு எதற்காகவும் எந்த ஒரு நாளையும் கொண்டாடுவது மார்க்கம் அனுமதிக்காத செயலே. மார்க்கம் அனுமதிக்காக ஒன்றைச் செய்பவன் அழிவை நோக்கிச் செல்கின்றான் என்பது தூதரது எச்சரிக்கையாகும்.

"மாற்றுமத கலாச்சாரத்தைப் பின்பற்றுபவன் என்னைச் சார்ந்தவன் அல்லன்" எனவும் "மாற்றுக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் அவர்களாகவே மாறி விடுகின்றனர்" எனவும் அறிவுறுத்திய தூதரின் சொற்களை மனதில் இருத்துபவர்கள், இத்தகைய மார்க்கம் காட்டாத மாற்றாரின் கலாச்சாரத்திலிருந்து விலகியே இருப்பர்.

"அலீயே!, அன்னியப் பெண்ணைப் பார்க்கும் (இயல்பான) உமது முதல் பார்வை உம்முடையதாகும்; (கூர்த்த) இரண்டாவது பார்வை ஷைத்தானுடையதாகும்" என அந்நியப் பெண்களைப் பார்ப்பதைக்கூட தூதர் தடை செய்திருக்கும் பொழுது, மனைவியர் அல்லாத மாற்றுப் பெண்களுடன் இத்தகைய ஆபாச தினக் கொண்டாட்டங்களைப் பூங்கொத்துக் கொடுத்தும் வாழ்த்து அனுப்பியும் கொண்டாடும் இளைய தலைமுறைகள், ஷைத்தானுடன் ஒப்பந்தம் செய்து நரகத்தை நோக்கித் தமது பயணங்களை அமைத்துக் கொள்கின்றனர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அந்நியப் பெண்களுக்கு முன்பாக, "முஃமினான ஆண்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்" என்பது படைத்தவனின் கட்டளையாகும். இத்தகைய உயர்ந்த, தூய்மையான வாழ்க்கை முறையைக் கற்பித்துத் தரும் இஸ்லாமிய மார்க்கத்தை வாழ்க்கை நெறியாகப் பின்பற்றும் முஸ்லிம்கள், அந்நியப் பெண்டிருடன் அனுமதியற்ற உறவுகளைக் கொள்ள வழிகோலும் இத்தகையக் கலாச்சாரச் சீரழிவுக் கொண்டாட்டங்களின் பக்கம் செல்லாமல் இருப்பதோடு, சமூகத்தைச் சீரழிக்கும் இத்தகைய அனுமதிகளுக்கு எதிராக போராடவும் முன்வரவேண்டும்.

"முஃமினான பெண்கள், அவர்களது தலை முந்தானைகளைக் கொண்டு மார்பை மறைத்துக் கொள்ளட்டும்", என்றும் "அவர்கள் கண்ணியமானவர்களாக அறியும் பொருட்டு, அவர்கள் (அவசியமின்றி) வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம்" எனறும் அல்லாஹ் அறிவுரை பகர்கின்றான்.

"உலகில் செல்வங்களிலேயே மிக உயர்ந்த செல்வமாக நல்லொழுக்கப் பெண்ணை" இஸ்லாம் காண்கின்றது.

இவ்வாறு ஆண்களையும் பெண்களையும் கண்ணியமான வாழ்க்கை வாழப் பணிக்கும் தத்துவங்களை உள்ளடக்கிய இஸ்லாம், உலகின் அமைதியான வாழ்வுக்கும் சுபிட்சமான சமூக கட்டமைப்பிற்கும் உத்தரவாதம் வழங்கும் ஒரே மார்க்கம் எனலாம்.
thanks for auther of this article

Sunday, January 24, 2010

வரலாற்று வீரம்... வாரிசுகளின் பரிதாபம்!

அன்பு நெஞ்சங்களே!
முஸ்லிம்கள் உலகளாவிய மட்டத்தில் புரக்கணிக்கப் படுகிறார்கள் என்று நாம் அனைவரும் புலம்பகின்றோம். இலங்கையில் விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டு இன்று வரைக்கும் முகாம்களில் வேரூன்றிக் கிடப்பார் போன்று ஒரு பெரும் தொகை முஸ்லிம்களின் வாழ்க்கை அகதிப்பட்டியலில் அறையப்பட்டு கால் நூற்றாண்டுகளாகிவிட்டன. வெளிநாட்டு உதவிக்கரங்கள் அனைத்தும் அவர்களை மறந்துவிட்டு (முஸ்லிமல்லா) தமிழர்களை மட்டும்தான் அரவணைக்கின்றன.


இந்தியாவில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு முதல் அனைத்து அம்சங்களிலும் புறக்கணிப்பிற்கு அளவே இல்லாமலாகிவிட்டன. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தன்னுயிர் துறந்த ஒரு தியாகியின் வாரிசு இப்படி புறக்கனிக்கப்பட்டிருப்பது என் கண்களை ஈரமாக்கின. இப்புறக்கணிப்பிற்கு அளவே இல்லையா?


நான் படித்த கதையை நீங்களும் ஒருமுறை படிக்க வேண்டுகிறேன்:

வரலாற்று வீரம்... வாரிசுகளின் பரிதாபம்!''மருதநாயகம் என்பது என் பெயர்!''
கான்சாஹிபு வாரிசுகளின் வாக்குமூலம்

'வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டு மடிந்த மருதநாயகத்தின் வாரிசான நான் தியாகி பென் ஷனுக்காக 20 வருஷமா மனு போடுகிறேன். இன்னும் பென்ஷன் கிடைத்தபாடில்லை. இனி அலைவதற்கு உடம்பில் திராணி இல்லை. ஆகவே, நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துவிட்டோம்!' - மதுரையை ஆண்ட கான்சாஹிபு என்ற மருதநாயகத்தின் வாரிசுகளில் ஒருவரான பாபா சாஹிபுவிடமிருந்துதான் நமக்கு இப்படியரு கண்ணீர்க் கடிதம்!மருதநாயகம் என்கிற வித்தியாசமான மனிதரின் வீர வரலாற்றை நடிகர் கமல்ஹாசன் படமாக எடுப்பதற்கு மேற்கொண்ட முயற்சி களை நாடறியும். ஆனால், அந்த வீரருடைய வாரிசுகளின் பஞ்சடைந்த பரிதாப வாழ்க்கை யாருக்குத் தெரியும்?

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவிலில் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக வசிக்கும் பாபா சாஹிபுவை சந்திக்கச் சென்றோம். மண்ணால் கட்டப்பட்ட அந்த வீட்டுக்குக் கொஞ்சம் ஓலையும் கொஞ்சம் தகரமும் சேர்ந்து மேல் கூரையாக இருந்தது. வீட்டுக்குக் கதவுகள் இல்லை; கரன்ட் வசதியும்இல்லை.'ஜூ.வி-யிலிருந்து வந்திருக்கிறோம்...'' என்றதும் தட்டுத்தடுமாறி எழுந்து வணக்கம் சொன்ன பாபா சாஹிபு, தனது மனக்குறையை மளமளவெனக் கொட்ட ஆரம்பித்தார்.

'மொகலாயர்களின் ஆட்சி தென்னிந்தியாவில் ஏற்பட்டபோது, வரி வசூலிப்பதற்காக மதுரைக்கு அனுப்பப்பட்டவர் கான்சாஹிபு துரை. பிற்பாடு, 1759 முதல் 1764 வரை மதுரையை ஆண்டதால் அவருக்கு மதுரைநாயகம் என்ற பட்டப் பெயர் ஏற்பட்டு, காலப்போக்கில் மருதநாயகம் என்றாகிவிட்டது. வரி வசூலில் ஒரு பகுதியை ஆங்கிலேயர்களுக்குக் கப்பமாகச் செலுத்தும் முறை அப்போது இருந்தது. கான்சாஹிப் துரை அதை எதிர்த்து வெள்ளையர்களோடு போரிட்டார். கடைசியில், அவர்களாலேயே தூக்கிலிடப்பட்டார்.தங்களை எதிர்த்த கான்சாஹிபு போன்றவர்களைக் கொன்று சொத்துகள் அனைத்தையும் அபகரித்துக் கொண்டது வெள்ளையர் அரசாங்கம். கான்சாஹிப் துரையின் வாரிசுகளில் எஞ்சியிருப்பது நான் மட்டுமே. எனக்கு 71 வயதாகிறது. என் மனைவி மஹபூர் பியாரி நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறாள். நசீராபேகம், சுபேதாரனி என்ற மகள்களும், சிக்கந்தர் பாட்ஷா, ஹீரால்சேட் பாட்ஷா, திவான் பாட்ஷா ஆகிய மகன்களும் இருக்கிறார்கள். வறுமை காரணமாக இவர்களில் யாருக்குமே என்னால் திருமணம் செய்து வைக்க முடியவில்லை. 42 வயதாகும் என் மூத்த மகள் நசீராபேகம் இப்போது மனநோயாளியாகி விட்டாள். மூத்தவன் சிக்கந்தர் பாட்ஷா வீட்டை விட்டே ஓடிவிட்டான். நுட (எலும்பு) வைத்தியம் பார்த்துப் பிழைப்பு நடத்திய எனக்கும் இப்போது வலது கை விளங்காமல் போய்விட்டது.

ஏதோ என் பிள்ளைகளின் சொற்ப சம்பாத்தியத்தில் என் வாழ்க்கை ஓடுகிறது...' என்று சொல்லிப் பெருமூச்சு விட்டார் பாபா சாஹிபு.அவர் மகன் திவான் பாட்ஷா நம்மிடம், 'யாரையும் குறைத்து மதிப்பிட்டு நான் இதைச் சொல்லவில்லை. ஒரு ஒப்பீட்டுக்காகச் சொல்கிறேன். கட்டபொம்மன்,மருது சகோதரர்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆண்டு வெள்ளையரை எதிர்த்தவர்கள். கான்சாஹிப் துரையோ மதுரை மண்டலத்தையும் நெல்லை மண்டலத்தையும் சேர்த்து ஆண்டவர். அப்படிப்பட்டவரின் வாரிசை இந்த அரசு ஏன் இப்படி கேவலப்படுத்துகிறது என்றே புரியவில்லை. பென்ஷனுக்காக 1988-ம் ஆண்டிலிருந்து இது வரை கலெக்டர், முதல்வர், ஜனாதிபதி என அதிகாரம் படைத்த அத்தனை பேருக்கும் என் தந்தை மனுப் போட்டு ஓய்ந்து போய்விட்டார். அவற்றுக்கு வந்த பதில்கள் மட்டுமே ஒரு தகரப் பெட்டி நிறைய இருக்கிறது. 10-ம் வகுப்பு வரை படித்துள்ள என் அக்கா சுபேதாரனி ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 வருடமாக தினக்கூலியாக இருக்கிறார். சுதந்திரப் போராட்ட தியாகியின் வாரிசு என்ற அடிப்படையில் அவரை நிரந்தரம் செய்யக்கோரி ரெண்டு வருஷமா போராடுறேன். இதையெல்லாம் பார்த்து வெறுத்துப் போய்த்தான் கடைசியாக ஒரு கடிதத்தை ஜூ.வி-க்கு எழுதச் சொன்னார் அப்பா...'' என்றவர், ''இனிமேலும் எங்கள் கோரிக்கைகள் கவனிக்கப்படாவிட்டால், நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம். அதற்கு முன் தமிழக முதல்வரும், விருதுநகர் கலெக்டரும் எங்கள் பக்கம் பார்வையை திருப்புவார்களா?'' என்றபோது பாட்ஷாவின் குரல் உடைந்து போனது!

பென்ஷன் வழங்கும் பணிக்கு பொறுப்பான விருதுநகர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் வசந்தாவிடம் இது பற்றிக் கேட்டோம். சம்பந்தப்பட்ட செக்ஷன் கிளார்க்கை அழைத்து விவரங்களைத் தெரிந்துகொண்டு நம்மிடம் பேசியவர், 'நேரடியான தியாகிகள் பென்ஷன் என்றால், உரிய விசாரணைகள் மூலம் மாவட்ட நிர்வாகமே வழங்கலாம். சுதந்திரப் போராட்ட காலத்துக்கு முந்தைய வீரர்களின் வாரிசுகளுக்கு என்றால், தமிழக அரசு ஆணை பிறப்பித்தால்தான் ஓய்வூதியம் வழங்க முடியும். அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் மருது பாண்டியர்களின் வாரிசுகளுக்கு மட்டும்தான் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. உரிய கல்வித் தகுதியும், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவும் இருப்பதாகச் சொல்வதால் சுபேதாரனிக்கு அரசு வேலை வழங்க உடனடியாகப் பரிந்துரை செய்யத் தயாராக இருக்கிறோம்...'' என்றார்.

நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட பிறகும், இது போன்ற தியாகிகளின் வாரிசுகள் பென்ஷனுக்காக அலைக்கழிக்கப்படுவது யாருக்கு அசிங்கம்?
- கே.கே.மகேஷ்

Tuesday, January 19, 2010

புர்கா அணிவது பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையா?

ஏகஇறைவனின் திருப்பெயரால்....
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ كُونُواْ قَوَّامِينَ لِلّهِ شُهَدَاء بِالْقِسْطِ وَلاَ يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلاَّ تَعْدِلُواْ اعْدِلُواْ هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ 5: 85: 8.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமரிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்

புர்கா அணிவது பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையா? தடை என்றும் அதை காட்டுமிராண்டித்தனம் என்றும் கூறி வருகின்றனர்! யார் இதை அதிகமாகக் கூறுகின்றனர்? கண்ணியத்தைப் பேணக் கூடிய பொதுவான மக்கள் அல்ல, மாறாக பெண்களை மூலதனமாகக் கொண்டு தொழில் நடத்தும் கேளிக்கை நிருவனத்தார்கள் மட்டுமே பர்தா சம்மந்தமான சர்ச்சசைகள் உலகில் எங்காவது ஒரு மூளையில் புகையாக கிளம்பினால் கூட அதை ஊதி நெருப்பாக்கப் பார்ப்பார்கள்.
பத்திரிகையாளர்கள்:
எல்லாப் பெண்களும் புர்காவே பாதுகாப்பு என்றுக் கருதி இஸ்லாமிய பர்தா சட்டத்திற்கு சென்று விட்டால் தங்கள் பத்திரிகையின் முன்பக்கம், நடுப்பக்கம், கடைசிப்பக்கத்தில் கவர்ச்சி படங்களை இட்டு காசாக்குவதற்கு முடியாத நிலை ஏற்பட்டு விடும்.
தொலைகாட்சியாளர்கள்:
எல்லாப் பெண்களும் புர்காவே பாதுகாப்பு என்றுக் கருதி இஸ்லாமிய பர்தா சட்டத்திற்கு சென்று விட்டால் சினிமா, சீரியல், தலுக்கு குலுக்கு நடணங்கள், மானாட மயிலாடப் போன்ற (மயிர் கூச்செரியும்) இன்னும்பிற நிகழ்ச்சிகள் வரை ஆபாசங்களையும், அந்தரங்க சமாச்சாரங்களையும் அரங்கேற்றுவதற்கு கோடம்பாக்கம் வெறிச்சோடிப்போய் விட்டால் தங்களது தொலைகாட்சிகளை இயக்குவதற்கு முடியாத நிலை ஏற்பட்டு விடும்.
அழகிப் போட்டி நடத்தும் சேடிஷ்டுகள்:
எல்லாப் பெண்களும் புர்காவே பாதுகாப்பு என்றுக் கருதி இஸ்லாமிய பர்தா சட்டத்திற்கு சென்று விட்டால் அழகிப் போட்டிகள் நடத்தி அதன் மூலம் தேர்தெடுக்கப்படும் அழகி(?)களை விளம்பரங்களில் நடிக்கவைத்தும், அரசியல் பிரமுகர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் சப்ளை செய்து கோடிகளை உண்டாக்க முடியாத நிலை ஏற்படும்.
நட்சத்திர ஹோட்டல் குபேரர்கள்:
எல்லாப் பெண்களும் புர்காவே பாதுகாப்பு என்றுக் கருதி இஸ்லாமிய பர்தா சட்டத்திற்கு சென்று விட்டால் நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்காக வருகை தரும் விஐபி, மற்றும் தொழில் அதிபர்களுக்கு மஸாஜ் செய்து விட்டும், பார்களில் ஊற்றிக் கொடுத்தும், பிரம்மாண்டமான அரங்குகளில் ஆடிப்பாடி மகிழ்வித்து கத்தை கத்தையாக கரன்சிகளை கரக்கச் செய்வதற்கு பெண்கள் கிடைக்கா விட்டால் நட்சத்திர அந்தஸ்தை இழக்கும் நிலை ஏற்படும். அவ்வாறான ஒரு நிலை உருவானால் பெண்களை மூலதனமாகக் கொண்டு நடத்தப்படும் அவர்களது கேளிக்கை நிருவனங்களை அவர்களது குடும்பத்துப் பெண்களைக் கொண்டு தூக்கி நிருத்த முன் வர மாட்டார்கள். இந்த சேடிஷ்டுகள் ஊரான் பெற்றப்பிள்ளைகளைக் கொண்டு தான் அந்தரங்கங்களையும், ஆபாசங்களையும் கடைவிரித்து காசு பண்ணுவார்கள். அதனால் மேற்காணும் சதை வியாபாரிகளே அதிகபட்சம் பெண்களின் பாதுகாப்பு பர்தா சம்மந்தமான சர்ச்சைகள் உலகில் எங்காவது ஒரு மூளையில் புகைவதைக் கண்டால் வீறு கொண்டெழுந்து அதை ஊதி நெருப்பாக்கப் பார்ப்பார்கள்.
அதில் ஒன்று தான் சமீபத்திய விஜய் டிவி புர்கா அணிந்து பெண்கள் வெளியில் செல்வதை கொச்சைப் படுத்தும் விதமாக நடத்தவிருந்த நீயா? நானா? போட்டி. சரியான தருணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போராட்டம் அறிவித்ததால் நிகழ்ச்சியை ரத்து செய்தார்கள். இன்னும் சில கடவுள் மறுப்பாளர்களும், இஸ்லாமிய விரோதிகளும் நடத்தும் ஊடகத்திலும், இனையத்திலும் பர்தா சம்மந்தமான சர்ச்சைகைள் எழும்போது இது போன்ற போட்டோக்களை மட்டும் இட்டு மதவெறியையும், கடவுள் மறுப்பையும் வெளிப்படுத்தி குதூகலம் அடைவார்கள்.
ஹிஜாப் எங்கள் உரிமை எனறு வீதியில் இறங்கிப் போராடும் பெண்கள் முகம் திறந்த நிலையில் இருக்கிறது. இதுப் போன்ற போட்டோக்கள் எல்லாம் அவர்களுடைய மதவெறிப் பார்வையில் படாது உலகம் முழுவதிலும் முஸ்லிம் பெண்கள் இது மாதிரியே நடப்பது போன்றும் சித்திரிப்பார்கள். குறுகிய வட்டத்திற்குள் முடங்கி கிடக்கும் குறுமதியாளர்கள்.
நடந்தது என்ன?
ஃபிரான்ஸில் ஒருக் கல்லூரி நிர்வாகம் முகத்தை மறைத்துக் கொண்டு பள்ளிக்கு வரக்கூடாது என்று முஸ்லீம் பெண்களுக்கு தடை விதித்தார்கள். இதே புர்கா அணிந்து கொண்டு வரக் கூடாது என்ற தடையை விதித்திருந்தால் இது போன்ற பல தடைகளை அதே ஃபிரான்ஸிலும், இன்னும் பல நாடுகளிலும் அந்தந்த நாட்டில் இயங்கும் சிறுபான்மை முஸ்லீம் அமைப்புகள் ஜனநாயக ரீதியில் போராடி உடைத்தெறிந்திருக்கின்றன அதேப் போன்று இதையும் உடைத்தெறிய ஃப்ரான்ஸில் இயங்கும் முஸ்லீம் அமைப்புகள் போதுமானது.
பல சமுதாயத்தவர்களும் இணைந்துப் போராடி சுதந்திரம் பெற்ற இந்திய ஜனநாயக நாட்டில் இயங்கும் ஊடகங்கள் இதுமாதிரி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் மதம் சார்ந்த பிரச்சனைகள் எழும்போது அதில் நியாய, அநியாய அடிப்படையில் தங்களது ஊடகங்களில் பதிய வேண்டும், இல்லை என்றால் கோடம்பாக்கத்தையே உற்று நோக்கியவர்களாக இருக்க வேண்டும்.
கற்பழிப்புக்கான காரணம்?
கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றும் முன்னாலே உருவான காதல் அதிசயம் என்றான் சினிமாக் கவிஞன். கல் தோன்றி மண்தோன்றி கடல் தோன்றும் முன்னாலே உருவான கற்பழிப்பு அதிசயம் என்பதே உண்மை. இந்தியாவில் வெள்ளையர்களின் ஆட்சி காலத்தில் 1929ல் எட்டு வயதிற்குட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டமியிற்றினார்கள் எட்டு வயதிற்கு மேற்பட்ட பெண்களை கற்பழிப்பது குற்றமில்லை எனும் அளவுக்கு தொன்மை வாய்ந்தது இந்தியாவின் கற்பழிப்பு நிகழ்வுகள். சமீபத்தில் தலைநகர் டெல்லியை குலுக்கும் தொடர் கற்பழிப்புகள் என்று செய்தி வெளியிட்டிருந்தார்கள். இதனால் மற்ற மாநிலங்களில் கற்பழிப்புகள் இல்லை என்றோ, அல்லது குறைவு என்றோ கருதிடக்கூடாது. இந்தியாவில் 26 நிமிடத்திற்கு ஒரு பெண் மானபங்க படுத்தப் படுகிறாள் என்றும், 43 நிமிடத்திற்கு ஒரு பெண் கடத்தப் படுகிறாள் என்றும் போலீஸ் தகவல் அறிக்கைக் கூறுகிறது. பாராளுமன்றம் இயங்கும் தலைநகரில் லட்சனம் பாரீர் எனும் தொனியில் தலைப்புக் கொடுக்கப்பட்டு எழுதப்பட்டது அவ்வளவு தான்.
மேல்படி அத்து மீறல் இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்க, ஐரோப்பாவில் 6 நிமிடத்தறிகு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள். இதற்கு எது காரணம் என்றுக் கண்டறிய பல சமுதாயத் தொண்டு நிருவனங்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஆய்வு செய்த வகையில் சென்ற வருடம் அம்னஸ்டி அமைப்பு உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்களிடத்தில் நடத்திய கருத்து கணிப்பில் 25 க்கும் மேற்பட்ட சதவிகித இளைஞர்கள் பெண்கள் அணியும் செக்ஸியான உடையே காரணம் என்றும் இதையே அயர்லாந்தில் 40 சதவிகித இளைஞர்கள் வழி மொழிந்தனர் என்றும் அம்னஸ்டி உலகுக்கு அறிவித்தார்கள்.
மேற்காணும் அம்னஸ்டி அமைப்பினர் பெண்களைக் கொண்டு கேளிக்கை நிருவனங்கள் நடத்தக் கூடியவர்கள் அல்ல, மாறாக உலகம் முழுவதிலும் பாதிக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள். இவர்கள் ஆய்வு செய்து அறிவித்த தகவலை உலகம் ஏற்றுக் கொள்வதா? அல்லது பெண்களை போகப் பொருளாக்கி வயிற்றுப் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் கேளிக்கை நிருவனத்தார்கள் நடத்தும் பட்டிமன்றத் தகவலை ஏற்றுக் கொள்வதா?
புர்காவே பாதுகாப்பு என்பதற்கு இன்னும் ஆதாரங்கள்:
ஒருமுறை ஐ.ஏ.ஸ். பெண் அதிகாரி ரூபன் தியோல் அவர்கள் இறுக்கமான ஸ்கட் அணிந்திருந்ததால் அவரது பின்புறம் கவர்ச்சியாக தெரிந்ததைக் கண்ட டி.ஜி.பி கில் அவர்கள் உணர்ச்சி மேலீட்டால் அவரது பெட்டெக்ஸை தடவி விட்டு அது பெரிய சர்ச்சைக்குள்ளானது. அது பொதுவான இடம் என்பதால் அவரால் அத்துடன் நிருத்திக்கொள்ள முடிந்தது அதுவே தனிப்பட்ட இடமாக இருந்தால் வேறு விதமான அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்கலாம். (இன்று அவ்வாறே அதிகம் நிகழ்ந்து கொண்டிருப்பதை பார்த்து வருகிறோம்.)
மலேஷியாவில் வேலைக்குச் செல்லும் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர் என்பதால் அழகலங்காரத்தை முதலில் தடைசெய்தனர், இதையும் மீறி பலாத்காரங்கள் நடைபெறவேச் செய்தன இறுதியில் அவர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் இறுக்கமான உடைகள் அணிந்து வருவதே சக ஆண் ஊழியர்களுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்துவதாக அறிந்தவர்கள் உடம்பை மறைக்கும் புர்கா அணிந்து வர சட்டமியற்றினர்.
சிறகடித்துப் பறக்கும் பருவத்தில் அதன் சிறகொடித்து பூட்டியக் கூண்டுக்குள் அடைக்கப்பட்டப் பறவைப் போல் படித்துக் கொண்டிருக்க கூடிய 17 வயது பிஞ்சுப் பருவத்து இளம் மொட்டொன்று சமீபத்தில் காமுகன் ஒருவனால் கசக்கிப் பிழிந்து முதியோர் காப்பகத்தில் வீசி எறியப்பட்டதற்கு எது காரணம்? புர்கா அணிந்து கொண்டு கண்ணியமாக அமர்ந்து பாடம் படித்திருந்தால் காமுக ஆசிரியர்களின் பார்வை கண்ட இடங்களிலும் பட்டு இந்நிலை உருவாகி இருக்குமா?
பெண்களின் உடம்பில் எதாவது ஒரு இடம் தெரிந்தாலும் ஆண்களின் விரசப் பார்வைகள் அங்கு சென்று மேயாமல் திரும்புவதில்லை என்பதுவே யதார்த்த நிலை.
பெண்களின் கழுத்து மீது ஆண்கள் விடும் பெருமூச்சுகள், உரசல்கள் ஆபாச இழைவுகளிலிருந்து பெண் தன்னை காத்துக் கொள்வது பெரும் பாடாகிறது என்று தினமனி கதிரில் (4-4-99ல்) பெருமூச்சு விட்டிருந்தார் ஜோதிர் லதா கிரிஜா அவர்கள். ஆண், பெண் கலந்திருக்கும் இடங்களில் பெண் தன்னை மறைத்து நடப்பதுவே சிறந்ததென்று ஜோதிர் லதா கிரிஜாவின் கருத்தாக இருக்கிறது இஸ்லாமும் அவ்வாறேக் கூறுகிறது.
24:31. தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். 300
மேற்காணும் திருமறைக் குர்ஆனில் பெண்களுக்கு சொல்லப்பட்ட ரத்தின சுருக்கமான கட்டளைகளை அவர்கள் பேணிக் கொண்டால் கற்பழிப்புகள், மற்றும் கள்ளக் காதல்களின் வாசல் கதவுகள் நிரந்தரமாக இழுத்து தாழிடப்படும்.
அல்லாஹ்வின் கட்டளைப்படி நடப்பதுவே எங்களுக்கு பாதுகாப்பு அதனால் புர்கா அணிந்து கொண்டே வெளியில் செல்வோம், புர்கா அணிந்து கொண்டே கல்லூரிக்கு செல்வோம் எங்கள் உரிமையில் கை வைக்காதே என்று புர்கா அணியச் செய்வது முஸ்லீம் பெண்களின் மீது இழைக்கப்படும் அநீதி என்று ஓநாய்கள் அழுத பொழுது வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள் முஸ்லீம் பெண்கள்.
இந்தியாவில் தொன்று தொட்டு நடந்து வரும் கற்பழிப்புகளை கட்டுக்குள் கொண்டு வரமுடியாதக் காரணத்தால் இறுதியாக அத்வானி அவர்கள் கற்பழிப்புகளுக்கு (இஸ்லாமிய) மரண தண்டனையே சரியான தீர்வு என்று பாராளுமன்றத்தில் கோரிக்கை வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது இந்தியாவில் நாளுக்கு நாள் பெருகி வரும் கற்பழிப்புகள். கற்பழிக்கும் ஆண்களுக்கு மரண தன்டனையை தீர்ப்பாக்கிய இஸ்லாம் கற்பழிப்புகளுக்கு தூண்டும் அனைத்து அம்சங்களையும் பட்டியலிட்டுக் கூறி அவற்றை தடுத்துக் கொள்ளும் படி பெண்களுக்கும் கட்டளையிட்டது.
பெண்களை எப்படி வேண்டுமானாலும் வீதியில் நடந்து கொள்ளுங்கள் உங்கள் மீது கை வைக்கும் ஆண்களை கொல்வோம் என்றுக்கூறி ஒரு சாராருக்கு (ஆண் வர்க்கத்திற்கு) மட்டும் அநீதி இழைக்க வில்லை இஸ்லாம். ஒரு காலகட்டத்தில் பெண்களுக்கு ஆன்மா இருக்கிறதா? அவர்கள் மனித இனமா? என்ற ஆய்வை ஆணினம் மேற்கொண்ட பொழுது உனது ஆய்வை நிருத்திக்கொள் அவர்களும் உன்னைப் போன்ற மனித இனமே உன்னிலிருந்தே அவர்கள் படைக்கப்பட்டார்கள் என்றுக் கூறி அவர்களுடைய ஆய்விற்கு முற்றுப் புள்ளி வைத்தது இஸ்லாம்.
49:13. மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிரிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர்.
அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். படைப்பாளன் அல்லாஹ்வே என்பதற்கு அல்லாஹ்வின் வாக்குகள் அடங்கிய ஆண் பென் இரு சாராருக்கும் மத்தியில் பாரபட்சம் காட்டாத மேற்காணும் திருமறைக்குர்ஆனின்; வசங்கள் மிகப் பெரிய ஆதாரம். 5: 8.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமரிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
மேலும், நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து தடுப்பபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். 3:104
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

Monday, January 18, 2010

Holy Quran and the story of Pharaoh Ramses II (Firaun Mummy)

A miracle, by definition, is a supernatural event beyond the laws of science; it is fulfilled only by Allah's will and power. It has significance and can be confirmed only by those who directly witnessed the event in time.
When Francisco Mitra became the president of France in 1981, France requested from the Egyptian government to host the mummy of Pharaoh. For the purpose of running laboratory and archeological examinations on the mummy of the most notorious dictator ever lived on earth. Upon arrival, very royal attendants were there including the French president himself and all ministers who bowed in honor for the Firaun Mummy.
When the ceremony ended, the mummy was carried to a specially-designed section at the Archeology Centre of France. Were it started to be tested by the greatest French archeological and anatomical scientists in order to discover more about such a great Firaun Mummy.The scientists were headed by Professor Maurice Bucaille. The scientists were trying to restore the mummy while Professor Maurice Bucaille was mainly concerned with how did this mummy died? The final report of the scientists was released late at night which states that the remaining salt in the mummy is an overt evidence that it was drawn in the sea, and the body was rescued very shortly where it was immediately embalmed to be saved.
An amazing thing was still confusing Professor Maurice Bucaille is that how could this body possibly be safer than any other mummy despite being taken out of the sea up until this time. Professor Maurice Bucaille was writing his final report on what he thought would be a new discovery about saving Pharaoh's body immediately after his death and embalming it.
Note: The picture shown above is the dead body of Ramses II, the Egyptian King in the era of Prophet Moses (pbuh). Its age is approximately 3000 years old and it was found by the Red Sea, at the place called Jabalain, and is now on display in the Royal Mummies Chamber of the Egyptian Museum in Cairo.
And there, someone whispered to him that Muslims claim to know something about the drowning of this mummy. Yet Professor Maurice Bucaille firmly denied such thing saying that it's impossible to discover this without the development of science and without using his high-tech and complicated laboratories and computers.
To his surprise, he was told that Muslims believe in a book called "Holy Quran" and this Holy Quran narrates the story of Pharaoh's drowning and ensures the safety of his body after his death as to be a Sign to mankind.Professor Maurice Bucaille couldn't believe his own ears and started to wonder: How can a book existed 1400 years ago speak about the mummy that was only found 200 years ago, in 1898? How can that be possible while the ancient Egyptian heritage was discovered only a few decades ago and no one knew about it before?
Professor Maurice Bucaille sat down pondering on what he was told about the book of Muslims, Holy Quran while his Holy Book (The Bible) narrates only the drowning of Pharaoh without saying anything about his body."Is it possible that this mummy in front of me is the one who was chasing Prophet Moses?"
"Is it possible that Prophet Muhammad knew this 1400 years ago?
"Professor Maurice Bucaille couldn't sleep that night till they brought him the Old Testament where he read: "And the waters returned, and covered the chariots, and the horsemen, and all the host of Pharaoh that came into the sea after them; there remained not so much as one of them. (Exodus 14:28)
But overthrew Pharaoh and his host in the Red sea: for his mercy endureth for ever. (Psalm 136:15) For the horse of Pharaoh went in with his chariots and with his horsemen into the sea, and the LORD brought again the waters of the sea upon them; but the Children of Israel went on dry land in the midst of the sea. (Exodus 15:19)
"Professor Maurice Bucaille was surprised that the Holy Book (The Bible) didn't mention about the destiny of the body and that it will be saved.
When the scientists were done with the mummy, France retuned it to Egypt, but Professor Maurice Bucaille couldn't rest for a moment since he was told that Muslims know about the safety of the body from Holy Quran. So, he decided to travel and meet anatomy Muslim scientists and there he spoke about his discovery of the safety of the mummy after its death in the sea and so on.
One of the Muslim scientists stood up and simply opened Holy Quran and pointed to the Professor at one verse: "We brought the Children of Israel across the sea and Pharaoh and his troops pursued them out of tyranny and enmity. Then, when he was on the point of drowning, he (Pharaoh) said, I believe that there is no god but Him in whom the Children of Israel believe. I am of those who submit (to Allah in Islam). What! Now! And indeed you disobeyed before and you were of the mischief-makers. This day shall We save you in your body, that you may be a Sign to those who come after you! But verily, many among mankind are neglectful of Our Signs." (Holy Quran 10:90-92)
Professor Maurice Bucaille was struck when he read that and immediately stood in front of the crowd and said loudly: "I believe in Islam, I believe in Holy Quran."Then he went back to France with a different face he traveled with. In France, he dedicated 10 years investigating the scientific discoveries and comparing them with Holy Quran and trying to come up with one scientific contradiction with Holy Quran. Finally he quoted one verse from Holy Quran to be his conclusion:"No falsehood can approach it (this book) from before or behind it: it is sent down by One Full of Wisdom, Worthy of all praise." (Holy Quran 41:42)
As a result of all years of his research, Professor Maurice Bucaille wrote a book that shook all Europe, especially the scientists there "The Bible, the Quran and Science: The Holy Scriptures Examined in the light of Modern Knowledge.
"Ariel Sharon still brain dead (Neither Dead nor Alive)
Ariel Sharon is lying in coma since years, and no doctor is able to find the correct disease. No life - No death, this is the result of killing thousands of innocent people in Palestine. What we do in this world, we have to taste, before we leave this on our heavenly abode as well. This is what the whole World is watching the result of assault of innocent Muslim in Palestine.

Light of Muhammad (peace be upon him)

Q- Was the light of Muhammad (peace be upon him) from the Light of Allah, or from some other light?
A – The light of the Prophet (peace be upon him) is the light of the Message and the Guidance by which Allah guides whom He wills from among His creatures. Without doubt, the light of the Message and the light of guidance are from Allah.

Allah says:
“It is not given to any human being that Allah should speak to him unless (it be) by Inspiration or from behind a veil or (that) He sends a Messenger to reveal what He wills by His Leave. Verily, He is Most High, Most Wise. And thus We have sent to you, (O Muhammad, peace be upon him) Ruh (an Inspiration and a Mercy) of Our Command. You knew not what is the Book, nor what is faith, but We have made it (this Qur’an) a light therewith We guide whomsoever of Our worshippers We will. And verily, you (O Muhammad, peace be upon him) are indeed guiding (mankind) to the Straight Path. The path of Allah, to Whom belongs all that is in the heavens and the earth. Verily, all matters at the end go to Allah (for decision).” (Qur’an, 42:51-53)


But this light is not a part of the Seal of the Awliya, as some of the pantheists claim, for he was flesh, blood and bone. He was created from a father and a mother and he had no creation prior to his birth. As for the narrations which claim Allah created the light of the Prophet Muhammad (peace be upon him) or that Allah filled His Hand with Light from His Face and that this handful (of Light) was Muhammad (peace be upon him), or that he looked at it and then it became drops of Light, each of which them became the Prophets, or that He created all of creation from his light (peace be upon him), they all cannot be authentically attributed to the Prophet (peace be upon him). Refer to page 366 and after of the 18th volume of the book Majmoo’ Al-Fatawa by Ibn Taymiyah. – Permanent Committee for Islamic Research and Verdicts; Fatawa Islamiyah, vol. 1, pg. 286

How they lived From the lives of our pious predecessors It is narrated that Uthman Bin Affan (may Allah be pleased with him) said in a sermon: “Son of Adam! Know that the angel of death who has been assigned to you has not ceased to pass you and move on to others, ever since you have been in this world. But it is as if he is about to pass someone else and move on to target you, so be careful and prepare for him (by correcting your deeds). And do not forget him, for he does not forget you. And know o son of Adam, if you are heedless about yourself and do not prepare, no one else will prepare for you. You must meet Allah the Mighty and Majestic, so take for yourself and do not leave it to someone else. Peace be on you.”– Abu Bakr Al-Daynuri, Al-Mujalasah wa Jawahir Al-Ilm, 2:73-74