Monday, June 30, 2008

சகோதரத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக ஒரு அசாதாரண நிகழ்ச்சி!

எழுதியவர் :M. அன்வர்தீன்
யர்மூக் யுத்தத்தின் போது நான் என்னுடைய உறவினர் ஒருவரை கண்டுபிடிப்பதற்காகச் சென்றேன். என்னுடன் ஒரு தோல் பையில் தண்ணீர் மட்டும் இருந்தது. என்னுடைய உறவினர் உயிருடன் இருந்தால் இந்த தண்ணீரைக் கொண்டு அவருடைய தாகத்தைத் தனிக்கலாம் என்றும் மேலும் அவருடைய முகத்தில் உள்ள புழுதியைக் கழுவலாம் என்றும் நான் எனக்குள் நினைத்துக் கொண்டேன்.

அப்போது திடீரென நான் அவரை கண்டுகொண்டேன். அந்த சமயத்தில் அவர் சுய நினைவை இழந்தவராகவும் பின்னர் சுய நினைவை மீண்டவராகவும் இருந்தார். நான் உங்களுக்கு தண்ணீர் புகட்டட்டுமா? என்று அவரிடம் கேட்ட போது அவர் தலையை ஆட்டினார். திடீரென வேறு ஒருவர் தன்னுடைய காயத்தின் காரணமாக வலியினால் கூப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது வலியால் துடித்துக்கொண்டிருந்த என் உறவினர் மற்றவரை கவனிக்குமாறு எனக்கு சைகை காட்டினார். நான் அவரிடம் சென்றபோது அவர் அம்ர் பின் ஆஸின் சகோதரர் ஹிஸாம் என்பதை பார்த்தேன். நான் உங்களுக்கு தண்ணீர் புகட்டட்டுமா என்று கேட்டேன். அப்போது திடீரென்று வேறு ஒருவர் அவருடைய காயத்தின் வலியின் காரணமாக கூப்பிட்டுக் கொண்டிருந்ததை நாங்கள் கேட்டோம். ஆகையால் அவரை சென்று கவனிக்குமாறு அவர் என்னிடம் சைகை செய்தார்.

நான் அவரிடம் சென்ற போது அவர் இறந்திருந்தார். நான் ஹிஸாமிடம் திரும்பிச் சென்ற போது அவரும் இறந்திருந்தார். பின்னர் நான் என் உறவினரிடம் சென்ற போது அவரும் இறந்திருந்ததைப் பார்த்தேன்.
ஆகையால் அனைவருமே ஒருவர் மற்றவரின் மேல் உள்ள அன்பின் காரணமாக தன்னுடைய தாகத்தை தணிக்காமலேயே மரணமடைந்து விட்டனர். இது தான் மனித வரலாற்றில் ஓர் ஈடு இணையற்ற தியாகம் மற்றும் சகோதரத்துவத்தின் ஆதாரமாக இருக்கிறது.

இந்த அற்புத சரித்திர நிகழ்ச்சி இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களின் ‘அல்-இஸாபாஹ்’ என்ற நூலிலும், இப்னு அல்-முபாரக் (ரஹ்) அவர்களின் ‘அல்-ஜிஹாத்’ என்ற நூலிலும், அப்துல்லா பின் அல்-முபாரக் (ரஹ்) அவர்களின் ‘அஜ்-ஜூஹத்’ என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளர்கள் அனைவருமே நம்பகமானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.
நன்றி : www.turntoislam.com & suvanathendral.com

Sunday, June 8, 2008

புதிய யாகம்!

ஆயுதக் கலாச்சாரம்
இரத்தக் குளியல் நடாத்தும் போதெல்லாம்,
மனித மண்டையோடுகள் காணிக்கையாக்கப் படுகின்றன!
இப்போதெல்லாம் உலகில் மலிந்து விட்ட ஒரே பொருள் - அதுதான்!

மழையால் வெள்ளம் வந்ததோ இல்லையோ
ஆயுத மழையால் இரத்த வெள்ளம் எல்லா இடங்களிலும்!
பாதனியற்று யாரும் நடக்க வேண்டாம்
பாசிச ராணுவத்தின் இரத்தக் கறைகளாவது தப்பித் தவறி நம் காலில் ஒட்டிக் கொள்ளும் - கவணம்!
பாசிசத்தின் யாகம் முடிவடைய
இன்னும் எத்தனை நறைபலி தேவைப்படுமோ? காலம் பதில் கூறட்டும்!
ஆடோ, மாடோ பலி கொடுக்கும் போது அவற்றுக்கு பல நிபந்தனைகள் வேண்டும் என்பர்!
ஆனால் பாசிசத்தின் பலிக்கடாவுக்கு இருப்பது ஒரே ஒரு நிபந்தனை மட்டும் தான்,
அது முஸ்லிமாக இருக்க வேண்டும்!!
சந்தனம் தெளித்து, சாம்பிராணிப் புகையிட்டு
பலி கொடுக்கும் மடமை நீங்கி, இப்போதெல்லாம் இரத்தம் தெளித்து,
இனத்தை அழித்துத்தான் அவை அரங்கேருகின்றன!!
இந்த நவீன மாற்றத்தை ஏற்படுத்தியது வேறுயாரும் அல்ல,
உஷ்ஷ்ஷ் என்று உலகை அடக்கப் பார்க்கும் பசுத்தோல் போர்த்திய புலி.
ஆம் மேற்கத்தேயப் புலி!
அவரின் சீடர்கள் யார் தெறியுமா?
போனி வேடம் பூண்ட போலி நேயரும்,
இழுத்து இழுத்துச் சாகும் நிலை மறந்த மாற்றானும் தான்!!
இவர்கள் உருவாக்கிய தேசத்தில்
இன்னும் பல பயங்கர பாசிச வாதிகளும்,
பளே கயவர்களும் உருவாகின்றனர்.
ஆச்சரியமல்ல, ஏனன்றால் கள்ளிமரத்தில் கள்ளிதானே பூக்கும்.
ரோசா பூக்குமா?
- ஆக்கம்: நிர்வாகி
ஆயுதக் கலாச்சாரம் இரத்தக் குளியல் நடாத்தும் போதெல்லாம், மனித மண்டையோடுகள் காணிக்கையாக்கப் படுகின்றன! இப்போதெல்லாம் உலகில் மலிந்து விட்ட ஒரே பொருள் அதுதான்!

மழையால் வெள்ளம் வந்ததோ இல்லையோ ஆயுத மழையால் இரத்த வெள்ளம் எல்லா இடங்களிலும்! பாதனியற்று யாரும் நடக்க வேண்டாம் பாசிச ராணுவத்தின் இரத்தக் கறைகளாவது தப்பித் தவறி நம் காலில் ஒட்டிக் கொள்ளும் - கவணம்!

பாசிசத்தின் யாகம் முடிவடைய இன்னும் எத்தனை நறைபலி தேவைப்படுமோ? காலம் பதில் கூறட்டும்!

ஆடோ, மாடோ பலி கொடுக்கும் போது அவற்றுக்கு பல நிபந்தனைகள் வேண்டும் என்பர்! ஆனால் பாசிசத்தின் பலிக்கடாவுக்கு இருப்பது ஒரே ஒரு நிபந்தனை மட்டும் தான், அது முஸ்லிமாக இருக்க வேண்டும்!!

சந்தனம் தெளித்து, சாம்பிராணிப் புகையிட்டு பலி கொடுக்கும் மடமை நீங்கி, இப்போதெல்லாம் இரத்தம் தெளித்து, இனத்தை அழித்துத்தான் அவை அரங்கேருகின்றன!!

இந்த நவீன மாற்றத்தை ஏற்படுத்தியது வேறுயாரும் அல்ல, உஷ்ஷ்ஷ் என்று உலகை அடக்கப் பார்க்கும் பசுத்தோல் போர்த்திய புலி. ஆம் மேற்கத்தேயப் புலி!

அவரின் சீடர்கள் யார் தெறியுமா? போனி வேடம் பூண்ட போலி நேயரும், இழுத்து இழுத்துச் சாகும் நிலை மறந்த மாற்றானும் தான்!!

இவர்கள் உருவாக்கிய தேசத்தில் இன்னும் பல பயங்கர பாசிச வாதிகளும், பளே கயவர்களும் உருவாகின்றனர். ஆச்சரியமல்ல, ஏனன்றால் கள்ளிமரத்தில் கள்ளிதானே பூக்கும். ரோசா பூக்குமா?
- ஆக்கம்: நிர்வாகி

Wednesday, May 28, 2008

குழந்தைகளும் தொலைக்காட்சியும்

தாருல்ஸஃபாவிலிருந்து சாதிக்.
பெற்றோர்களே!
உண்மையில் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது அக்கறையுள்ளவர்களா ? … படியுங்கள். குழந்தையிடம் தொலைக்காட்சியின் ஆதிக்கம் மற்றும் விபரீதம் பற்றிய ஒரு ஆய்வு புகழ்பெற்ற மிச்சிங்காம் பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்டது. மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்களை அது வெளியிட்டுள்ளது.
1. சாதாரணக் குழந்தை பள்ளியில் செலவழிக்கும் நேரத்தைக் காட்டிலும் தொலைக்காட்சியில் அதிக நேரம் செலவழிக்கிறது.
2. சராசரியாக ஒருவாரத்திற்கு 20 மணிநேரம் தொலைகாட்சியில் செலவழிக்கிறது. இது மற்ற எல்லா செயல்களைக் காட்டிலும் அதிகமாகும். ( தூங்குவதைத்தவிர ).
3. சராசரியாக 70 வயது நிரம்பிய மனிதன் 7 முதல் 10 ஆண்டுகள் வரை நேரத்தை தொலைக்காட்சியில் செலவு செய்கிறான்.
4. விளம்பரங்கள் குழந்தைகளை இலக்காக வைத்து தயாரிக்கப்படுகின்றன. மாதந்தோறும் ஆயிரக்கணக்கான வியாபார விளம்பரங்கள் தயார் செய்யப்படுகின்றன.
5. ஒருவருடத்திற்கு 1000 முதல் 2000 வரையிலான போதை சம்பந்தப்பட்ட விளம்பரங்களை குழந்தைகள் பார்க்கின்றன.
குழந்தைகளின் வாழ்வும் தொலைக்காட்சியும்:
1. தொலைக்காட்சி மூளை வளர்ச்சியை பாதிக்கிறது.
2. பெற்றோர் நினைப்பது போல் குழந்தை நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பதில்லை. அவை விளம்பர நோக்கத்திற்காகத் தயார் செய்யப்படுகின்றன.
3. தொலைக்காட்சி பார்ப்பது குழந்தைகளின் மற்ற செயல்களை அதாவது விளையாடுவது, பழகுவது, வீட்டுப்பாடம் படிப்பது, பெற்றோருடன் நேரத்தை செலவிடுவது, சுகாதாரமான காற்றோட்டத்தை சுவாசிப்பது போன்றவற்றை நிர்மூலமாக்குகிறது.
4. குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதினால் பசியின்மை, தூக்கமின்மை, மந்தபுத்த, சகவாசமின்மை, முரட்டுத்தனம், பார்வைப் பாதிப்பு ஆகிய பின்விளைவுகளைப் பெறுகின்றன.
வன்முறையும் தொலைக்காட்சியும் குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளில் ஐந்து முதல் ஆறு மடங்கு பெரியவர்களுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளைக் காட்டிலும் வன்முறை நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படுகின்றன.
சனி, ஞாயிறுகளில் 20 முதல் 25 வரை வன்முறைக்காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.

8000 கொலைகளை பள்ளிப்படிப்பை முடிக்குமுன் குழந்தைகள் பார்க்கின்றன.
10,000 கற்பழிப்புகள், அடிதடிகள், கொலைகள் ஓவ்வொருவருடமும் பார்க்கின்றன. அவற்றைப் பார்த்தது போல் வன்முறையில் ஈடுபட முனைகின்றன.
பள்ளியில் சேருமுனனரே (Adults) பார்க்கும் நிகழ்ச்சிகள் குழந்தைகளை மிகவும் பாதிக்கின்றன.
லைக்காட்சி நிகழ்ச்சிகள் மிகக் கெட்ட நடத்தைகளை வளர்க்கின்றன.
நினைப்பதை அடைய வன்முறை தான் தீர்வு என்று காண்பிக்கப்படுகின்றன.
நிறைய நிகழ்ச்சிகள் வன்முறை நிகழ்ச்சிகளுக்கு தண்டனையில்லாமல் காண்பிக்கப்படுகின்றன அவை கேலிக்குரியதாகவும் காண்பிக்கப்டுகின்றன.
நல்வர்கள் கெட்டவர்களை அடிப்பது நல்லது போலவும் அது சாதாரணமானது போலவும் சித்தரிக்கப்படுகிறது. விளையாட்டுகளில் இது போன்று நிரூபிக்க குழந்தைகள் முயலுகின்றன.
தொலைக்காட்சியில் வரும் (Fast food )உணவு, இனிப்பு பதார்த்தங்களில் மட்டுமே ஆரோக்யமும் சத்தும் இருப்பது போல் குழந்தைகள் நினைக்கின்றன. ஆனால், உண்மையில் அவ்வாறில்லை.
தொலைக்காட்சி பார்க்கும் நேரங்களை எப்படித் தீர்மானிப்பது ?:
எந்த நேரத்தில் பார்க்க அனுமதிப்பது ? எந்த நேரத்தில் அனுமதிக்க கூடாது என்று வரையரை செய்யுங்கள். அதாவது வீட்டுப் பாடம் படிக்கும் முன், எழுதும் நேரத்திற்கு முன, சாப்பிடும் நேரம், பெற்றோர் அருகாமையில் இல்லாத நேரம் ஆகியவற்றில் கண்டிப்பாய் அனுமதிக்கக்கூடாது.
ஒரு நாளைக்கு ஒன்று அல்லது அதிக பட்சம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அனுமதிக்கக்கூடாது.
பள்ளி நாட்களில் இரவில் ஒரு மணிநேரமும், வார நாட்களில் 3 மணிநேரமும் அனுமதிக்கலாம்.
அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகளை சில நேரங்கள் அதிகமாக அனுமதிக்கலாம்.
படிப்பில் குறைவாக உள்ள குழந்தைகளை ஒரு நாளைக்கு அரை மணிநேரம் மட்டுமே அனுமதிக்கவேண்டும் அல்லது முற்றிலும் தவிர்க்கலாம். வார நாட்களில் 2 மணிநேரம் அனுமதிக்கலாம்.
வீட்டுப் பாடம் (Home work) இருக்கும் போது கண்டிப்பாய் டிவி பார்க்க அனுமதிக்காதீர்கள். குழந்தையின் விரும்பிய நிகழ்ச்சியாயிருப்பின் பதிவு செய்து பிறகு காண்பிக்கலாம்.
வார நாட்களில் டிவியை உபயோகிக்காமல் இருப்பதும் வார இறுதி நாட்களில் குறிப்பிட்ட அளவு பார்ப்பதும் மிகவும் நன்று. இது வீட்டுப் பாடம் படிக்க வேகப்படுத்துவதை தடுக்கும். குடும்பத்திலுள்ளவர்களுடன் உறவாட உதவும்.
டிவிமுன் நிறுத்திவிட்டு சமையல் செய்வதைக்காட்டிலும் சமையலுக்கு உதவ குழந்தையைத் தூண்டவேண்டும். இந்தியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெண்களை கீழ்த்தரமாகவும், கொச்சைப் படுத்தியும் டிவி தொடர்கள் காண்பிக்கப்படுகின்றன என்று கூறுகிறது.
'குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் (குழந்தைகளின் ) மழலைச் சொல் கேளாதார் ' என்கிறார் வள்ளுவர். வருடக்கணக்கில் டிவி தொடர்கள் பார்ப்பதை விடுத்து குழந்தையுடன் கொஞ்சி விளையாடுங்கள் தொலைக்காட்சிகளில் பொழுதைக் கழித்து குழந்தைகளின் பாசத்தை இழந்து விடாதீர்கள் ! ஆபத்து! ஆபத்து!! மிகவும் ஆபத்து!!! உஷார் ! பெற்றோர்களே ! உங்கள் குழந்தைகளை அழித்து விடாதீர்கள் !இரண்டு மூன்று வயதுடைய குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பது மிகவும் ஆபத்தாகும். அந்த வயதில் தான் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அடைகிறது. அப்போது தொலைக் காட்சி பார்ப்பதால் மூளை வளர்ச்சி பாதிப்பு அடையும். நாலாபுறமும் பார்க்க வேண்டிய கண்கள் ஒரே இடத்தில் நிலை குத்தி நின்று விடுவதே இதற்குக் காரணம். மூளை வளர்ச்சி பாதிக்கப்படுவதால், பள்ளிக்குச் செல்லும் போது பாடத்தில் கவனம் இருப்பதில்லை. சிந்தனை ஆற்றல் குறைகிறது. செயலாற்றலும் பாதிக்கப்படுகிறது.
சுறுசுறுப்பாக ஓடி ஆடி விளையாடவேண்டிய வயதில் வயோதிகர்களைப் போல் இயக்கமில்லாமல் இருப்பார்கள். ஓடியாடாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து தொலைக் காட்சி பார்ப்பதால் குழந்தைகளின் உடலில் கொழுப்புச் சத்து சேருகிறது. இது எதிர்காலத்தில் குழந்தையின் உடல் நலனைப் பாதிக்கும். அதோடு இக்குழந்தைகள் முரட்டுக் குழந்தையாகளாகவும் இருப்பார்கள். அமெரிக்காவில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் இத்தனையும் தெரிய வந்திருக்கிறது. (ரீடர்ஸ் டைஜஸ்ட்லிருந்து) பெற்றோர்களே! உஷார்!! பெற்றோர்களே !
இன்று நமது பிள்ளைகளின் நிலையைப் பார்த்தீர்களா? சதாவும் தொலைக் காட்சிப் பெட்டியின் முன்னால் தான் உட்கார்ந் திருக்கிறார்கள். சன் டிவியின் ' சுட்டி ' போன்ற சேனல்கள்; வந்த பிறகு பிள்ளைகள் எங்கும் செல்வதில்லை. விளையாடுவதற்குக் கூட வெளியே போவதில்லை. பக்கத்து வீடுகளுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ அழைத்தால் கூட போவதில்லை. ஏன் வீட்டைவிட்டே வெளியே வருவதில்லை. சிலைகளாக பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் உடையைக்கூட மாற்றாமல் அதன் முன் சிலைகளாக அமர்ந்துவிடுகிறார்கள். தேனீர், சாப்பாடு எல்லாம் அதன் முன்னால் தான். உட்கார்ந்து உட்கார்ந்து அவர்கள் களைத்துப் போய் படுத்துக் கொண்டே தொலைக்காட்சியை இமை கொட்டாது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். விளைவு? அவர்களின் உடல் ஆரோக்கியம் குன்றி வலுவிழந்து விடுகிறார்கள். கண்பார்வை போய் முதியவர்களை விட கனமான கண் கண்ணாடிகளை அணியவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டி ருக்கிறார்கள். நடக்கவும் ஓடவும் செய்யாமல் சற்று தூரத்திற்கு நடப்பதற்கே இயலாது கால் வலிக்கிறது என்று கூறுகிறார்கள். குழந்தைகளின் நிலைமை எங்கோ சென்று விட்டது பார்த்தீர்களா? குழந்தைகளின் எதிர்காலம்? இப்படிப் போனால் குழந்தைகளின் எதிர்காலம் என்னாவது? என்று சற்றேனும் சிந்தித்தீர்களா? அவர்களைப்பற்றி நீங்கள் கவலைப்படவில்லையா? உடல் வலுவிழந்து, மூளைத்திறன் குன்றி, சிந்திக்கும் ஆற்றல் இன்றி, செயலாற்றும் அனைத்து அபார ஆற்றல்களையும் இழந்து பரிதவிக்கும் நிலைக்கு படுவேகமாக அதல பாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
எதிர்காலத்தில் இவர்களெல்லாம் பொறியியல், மருத்துவம், தொழில் நுட்பம், அறிவியல் போன்ற உயர்தரப் படிப்பிற்குரிய எவ்விதத் தகுதியையும் பெறாது போய் விடுவார்கள். அப்படிப்பட்ட நிலைக்கு ஆளாகிவிடாது இப்போதே குழந்தைகளைப் பேணி வளர்க்கவேண்டியதும், அதற்கான ஆவனைகள் செய்து அவர்களின் உடலும், உள்ளமும் வலுவும் ஆரோக்கியம் பெற்று கல்வியிலும் ஒழுக்கத்திலும் மேம்பட்டு உயாந்தோங்குவதற்கும் ஒவ்வொரு பெற்றோரும் விழிப்போடு செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அலட்சியம் காட்டாதீர்! இதிலே அலட்சியம் காட்டும் பெற்றோர் எதிர்காலத்தில் ஒளிவீச வேண்டிய தமது ஆற்றல் மிக்க சந்ததிகளை இப்போதே கண்களைக் கட்டி இருட்டிலே விட்டு அவர்களின் வாழ்வைப் பாழாக்குகிறார்கள் என்பது தான் பொருள்.
எனவே! பேற்றோர்களே! குழந்தைகளை கருத்தூன்றி கண்காணியுங்கள். தொலைக்காட்சிப் பெட்டிகளை சிறிதுமூடிவையுங்கள். அவர்களுக்குரிய பயனுள்ள நிகழ்ச்சிகளை குறித்த நேரங்களில் பார்ப்பதற்கு ஆவனை செய்யுங்கள். கண்ட நேரங்களிலெல்லாம் டி. வி நிகழ்ச்சிகளையும், தொடர்களையும், சினிமா படங்களையும் நீங்களும் பார்க்காமல் அவர்களுக்காக தியாகம் செய்யுங்கள்.அவர்களை தொலை நோக்காகக் கொண்டே உங்கள் எல்லாச் செயல்களும் அமையவேண்டும். இது தான் அறிவார்ந்த பெற்றோர்கள் செய்யவேண்டிய கடமை. இதுவே அவர்களுக்கு அழகு. குழந்தைகளை தூங்கவைப்பதற்கும், உணவூட்டுவதற்கும், நாம் ஓய்வெடுப்பதற்கும் அவர்களை தொலைக்காட்சி முன் உட்கார வைத்து தாலாட்டி விட்டு நீங்கள் ஒதுங்கி விடாதீர்கள். அது அவர்களை பாழாக்கும் செயல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இறைவன் நமது சமுதாயத்தை காத்தருள்வானாக!
- நன்றி: சித்தார்கோட்டை.காம்

Monday, May 26, 2008

இஸ்லாத்தில் பெண்களுக்கு அநீதியா?!

வல்லோனின் திரு நாமம் போற்றி
கடந்த கால சமூகங்களில் பெண்களின் நிலை பற்றி ஒரு மேலோட்டம்:
அ. கிரேக்கர்கள்:
இவர்கள் பெண்களை வியாபாரப் பொருட்களாகவே கருதினர். அவர்களுக்கென எந்த உரிமையும் கிடையாது. சொத்துரிடை, கொடுக்கல், வாங்கள் போன்ற அனைத்தும் நிராகரிக்கப்பட்டிருந்தது. உரிமைகள் அனைத்திற்கும் ஆண்களே சொந்தக் காரர்கள் என்றனர். அவர்களில் பிரபலமான தத்துவஞானியான சாக்ரடீஸ் என்பவன், உலகின் வீழ்ச்சிக்கு பெண்கள்தான் மூல காரணம் எனும் கூற்றை முன்வைத்தவன்! மேலும் பெண்கள் விஷமரத்திற்கு ஒப்பானவர்கள். அம்மரத்தின் புறத் தோற்றம் அழகானது. ஆனால் அதன் கனிகளை சிட்டுக் குருவிகள் தின்றவுடனேயே இறந்து விடுகின்றன என்று கூறினான்! (அவனது தாயும் ஒரு பெண் என்பதையும், அப்பெண் அவனை ஈன்றெடுக்க வில்லை என்றால் இவ்வுலகையே அவனால் கண்டிருக்க முடியாது என்பதையும் மறந்து விட்டான் போலும்).
ஆ. ரோமானியர்கள்:
இவர்கள் பெண்களை உயிரற்ற ஒரு பொருளாகவே கருதி வந்துள்ளனர். அவர்களிடன் பெண்களுக்கு எந்த மதிப்பும் உரிமையும் இருந்ததில்லை. பெண்கள் உயிரற்ற பிண்டமாக கருதப்பட்டதால்தான் அவர்களைக் கொதிக்கும் எண்ணெயை ஊற்றியும், தூண்களில் கட்டியும் வேதனை செய்திருக்கிறார்கள். அதுமட்டுமன்று குற்றமற்ற பெண்களைக் கூட குதிரையின் வால்களில் கட்டி அவர்கள் மரணித்து போகின்ற அளவிற்கு மிக விரைவாக ஓட்டிவிடுவார்கள்!

இ. இந்தியர்கள்:
இந்தியர்களும் பெண்கள் விடயத்தில் கொடூரமான முறையைத்தான் கடைப்பிடித்துள்ளனர். சுடங்கு சம்பிரதாயங்கள் என்று மூடநம்பிக்கையில் மூழ்கியது மட்டுமல்லாமல் பெண்கள் விடயத்தில் ஒருபடி அதிகமாகவும் இருந்துள்ளனர். அதனால் கணவன் இறந்து விட்டால், மனைவியையும் உடன்கட்டை ஏற்றி அவனது சிதையும் அவளையும் எரித்து விடுபவர்களாக இருந்துள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கூட வலுக்கட்டாயமாக ஒரு பெண்னை உடன்கட்டை ஏற்றி இருக்கிறார்கள். இன்றளவிலும் இந்தியாவில் நறை பலி கொடுக்கப்படுபவர்களில் பெண் குழந்தைகள் தான் அதிகமானவர்கள் என்பது கவணத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும்.

. சீனர்கள்:
இவர்கள் பெண்களை நற்பாக்கியத்தையும், செல்வங்களையும் அழித்துவிடக் கூடிய வெள்ளத்திற்கு ஒப்பானவர்கள் எனக் கருதினர். அவர்கள் தம் மனைவியரை உயிரோடு புதைப்பதற்கும், விற்று விடுவதற்கும் தகுதி பெற்றிருந்தனர்.
உ. யூதர்கள்:
பெண்கள் சாபத்திற்கு உரியவர்கள் என இவர்கள் கருதுகின்றனர். ஏனனெனில் அவள் தான் ஆதம் (அலை) அவர்களை வழிகெடுத்து மரக்கனியை சாப்பிடச் செய்தவள் என்பது அவர்களது நம்பிக்கை. மேலும் பெண்ணுக்கு மாதவிடாய் வந்துவிட்டால் அவள் அசுத்தமானவள், வீட்டையும் அவள் தொடும் பொருளையும் அசுத்தப்படுத்தி விடக் கூடியவள் எனவும் கருதினர். பெண்ணுக்கு சகோதரர்கள் இருந்தாள் அவள் தன் தந்தையின் சொத்திலிருந்து சிறிதும் உரிமை பெறத் தகுதியற்றவள் எனக் கருதுகின்றனர்.
ஊ. கிறிஸ்தவர்கள்:
பெண்கள் ஷைத்தான் வாயில்கள் என இவர்கள் கருதுகின்றனர். கிறிஸ்தவ அறிஞர்களில் ஒருவர் பெண் மனித இனத்தைச் சார்ந்தவள் அல்ல எனக் கூறினார். இன்னும் பூனபெஃன்தூரா என்பவன், 'நீங்கள் பெண்களைக் கண்டால் அவளை மனித இனத்தைச் சார்ந்தவள் எனக் கருதிவிடாதீர்கள். அது மட்டுமல்ல அவளை ஒரு உயிருள்ள ஜீவனாகக் கூட கருதாதீர்கள். மாறாக நீங்கள் காண்பது நிச்சயமாக ஷைத்தானின் உருவத்தைத்தான். இன்னும் நீங்கள் செவியேற்கும் அவளது சப்தம் பாம்பின் சீற்றம் போன்றது' எனக் கூறினான்.
எ. ஆங்கிலேயர்கள்:
கடந்த (19 ஆம்) நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஆங்கிலேய பொதுச் சட்டப்படி பெண்கள் பிரஜா உரிமை கொடுக்கப்படாதவர்களாகவே இருந்துள்ளனர். இதேபோல் பெண்களுக்கென எந்த உரிமையும் இருந்ததில்லை. எந்தளவுக் கென்றால் அவள் அணியும் ஆடையைக் கூட சொந்தப்படுத்திக் கொள்ள அவளுக்கு உரிமை இருந்ததில்லை. அதேபோல் எட்டாவது ஹென்றியின் காலத்தில் ஆங்கிலேயப் பாராளுமன்றம் பெண்கள் அசுத்தமானவர்கள் என்பதால் இன்ஜீலைப் படிக்கக் கூடாதென சட்டம் இயற்றியது. 1805 ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயரின் சட்டத்தில் ஒரு கணவன் தனது மனைவியை விற்பது கூடுமென்றே இருந்துள்ளது. மனைவியின் விலை ஆறு பெனி (அரை ஷிலிங்) என நிர்ணயமும் செய்யப்பட்டது. (Pநnலெஇ ளுஉhடைடiபெ என்பது ஆங்கிலேய நாணயத்தின் பெயர்கள்).

. ஸ்காட்லாண்டினர்:
1567 ஆம் ஆண்டு ஸ்காட்லாண்ட் பாராளுமன்றம் பெண்களுக்கு எந்த அதிகாரமும் கொடுக்கப்படக் கூடாதென சட்டம் இயற்றியது.
ஐ. பிரஞ்சுக்காரர்கள்:
பிரஞ்சுக்காரர்கள் 586 ஆம் ஆண்டில் பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்களா? இல்லையா? என அய்வு செய்த முடிவெடக்;க ஒரு சபையை அமைத்தனர். ஆச்சபை பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்கள்தான். எனினும் அவர்கள் ஆண்களுக்குப் பணிவிடை செய்வதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என முடிவு செய்தது!
. அரேபியர்:
இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர், அரேபியரிடத்தில் பெண்கள் இழிபிறவிகளாகவே கருதப்பட்டனர். அவர்களுக்கு சொத்துரிமை முதற் கொண்டு எந்த உரிமையும் வழங்கப்பட்டிருக்கவில்லை. பெண் என்பவள் ஒரு பன்டமாகத்தான் கருதப்பட்டிருக்கிறாள். அதுமட்டுமல்லாது அவர்களில் பெரும்பாலானோர் தமது பெண் மக்களை துர்ச் சகுணமாகக் கருதி உயிருடன் புதைப்பவர்களாக இருந்துள்ளனர்.
இவ்வாறு வரலாற்றை பின்னோக்கினால் ஒவ்வொரு சமூகமும் பெண்கள் விடயத்தில் கீழ்த்தரமான சட்டங்களைத்தான் இயற்றி அவற்றைக் கடைப்பிடித்து வந்துள்ளது. உலக வரலாற்றில் பெண்களுக்கு ஏற்பட்டிருந்த கலங்கத்தைத் துடைத்து, அவர்களுக்கும் ஆண்களைப் போலவே எல்லா விடயங்களிலும் சம அந்தஸ்தும், உரிமையும் இருக்கின்றது என்பதை உலகுக்கு உணர்த்தவே இஸ்லாம் உதித்தது என்றால் அது மிகையாகாது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
- தொகுப்பு/ஆக்கம்: நிர்வாகி