Friday, January 13, 2017

இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும் – 01

இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும் – 01

بسم الله الرحمن الرحيم
“ஹாதிஹீ தஃவதுனா வ அகீததுனா”
(“இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும்”)
அஷ்ஷேய்ஹ் முக்பில் இப்னு ஹாதி அல்வாதியீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள்
தமிழ் மொழியில்: அபூ அபதிர்ரஹ்மான் அப்துர்ரஸ்ஸாக் இப்னு முஹம்மத் நஸார் அஸ்ஸைலானீ
முன்னுரை
நிச்சயமாக புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குறியதாகும். அவனை நாம் புகழ்கின்றோம்; மேலும் அவனிடமே நாம் உதவி தேடுகின்றோம்; மேலும் அவனிடமே நாம் பாவமன்னிப்பும் தேடுகின்றோம்; மேலும் எமது ஆத்மாக்களின் தீங்குகளை விட்டும், எமது பாவச்செயல்களை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகின்றோம் . அல்லாஹ் எவருக்கு நேர்வழியை காட்டுகின்றானோ அவரே நேர்வழி பெற்றவராவார். மேலும் அவன் எவரை வழிகெடுத்து விடுகின்றானோ அவனுக்கு நேர்வழி காட்டுபவன் எவனும் இல்லை.
மேலும் அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு வேறு எவரும் இல்லை, அவன் தனித்தவன். அவனுக்கு எந்த ஒரு இணையுமில்லை என்று நான் சாட்சி கூறுகின்றேன்.
மேலும் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அவனுடைய அடியான் என்றும் மற்றும் அவனுடைய தூதர் என்றும் சாட்சி கூறுகின்றேன்.
(விசுவாசங் கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை பயப்பட வேண்டிய முறைப்படி பயப்படுங்கள்; மேலும் நிச்சயமாக முஸ்லிம்களாகவே அன்றி நீங்கள் மரணித்து விட வேண்டாம்.) – ஆலு இம்ரான்: 102
(மக்களே! நீங்கள் உங்கள் இரட்சகனைப் பயந்துக் கொள்ளுங்கள். அவன் எத்தகையவனென்றால், உங்களை ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான்; அதிலிருந்து அதற்குறிய ஜோடியையும் படைத்தான்; இன்னும் அவ்விருவரிலிருந்து அனேக ஆண்களையும், பெண்களையும் பரவச்செய்தான்; இன்னும் அல்லாஹ்வை  அவனைக் கொண்டு நீங்கள் ஒருவருக்கொருவர் (உரிமைகளை) கேட்டுக்கொள்கின்றீர்களே அத்தகையவனையும்; மேலும் இரத்த பந்த சொந்தங்களை (துண்டித்து வாழ்வதை )யும் நீங்கள் பயந்துக்கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களை அல்லாஹ் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.) – அந்நிஸா: 1
(விசுவாசங் கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வைப் பயந்துக்கொள்ளுங்கள், மேலும் நேர்மையான வார்த்தையையே கூறுங்கள். 71
(அவ்வாறு நீங்கள் செய்தால்) அவன் உங்களுடைய செயல்களை உங்களுக்கு சீர்படுத்தி வைப்பான்; மேலும் உங்களுடைய பாவங்களை உங்களுக்கு மன்னித்து விடுவான். மேலும் எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்படுகின்றாரோ அவர் திட்டமாக மகத்தான வெற்றியாக வெற்றி பெற்றுவிட்டார்.) – அல் அஹ்ஸாப்: 71, 72
இதற்குப் பின்னால்:
நிச்சயமாக பலதரப்பட்ட கொள்கைகள் அதிகரித்து மேலும் பலதரப்பட்ட அழைப்புப்பணிகள் பரவிய போது அந்த அழைபப்புப்பணிக்கு சொந்தக்காரர்களாக இருந்தவர்களின் நிலமை அல்லாஹ் ஸுப்ஹானஹூ வதஆலா கூறியதைப்போன்று ஆகிவிட்டது.
(பிறகு அவர்கள் தங்களின் அக்காரியத்தை அவர்களிடையே பல பிரிவுகளாகப் பிரித்து விட்டனர்; ஒவ்வொரு பிரிவினரும் தங்களிடம் இருப்பதைக்கொண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.) – அல் முஃமினூன்: 53
மேலும் அவர்களுடைய நிலமை ( அரபியிலே ) கூறப்பட்ட ஒரு கவிதையைப் போல் இருக்கின்றது:
“அனைவரும் லைலா என்பவளுடன் அவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக வாதிடுகின்றனர்.
ஆனால் லைலாவோ அதை அவர்களுக்கு ஏற்றுக் கொள்ளவில்லை.”
எந்த ஒரு அழைப்புப்பணியை செய்பவர்களாக இருந்தாலும் நிச்சயமாக அவர்களே நேரான பாதையில் இருப்பதாக வாதிடுபவர்களாகவே அன்றி நீ அவர்களை பெற்றுக்கொள்ள மாட்டாய்.
இதோ பிர்அவ்ன் கூறுகின்றான்: (நானே உங்களுடைய மிக உயர்ந்த இரட்சகனாவேன்.) – அந்நாஸிஆத்: 24
மேலும் அவனுடைய கூட்டத்திற்கு கூறுகின்றான்: ( நான் சரிகண்டதைத் தவிர (வேறொன்றையும்) நான் உங்களுக்கு அறிவிக்கவில்லை; நேரான வழியையைத் தவிர (மற்றெதனையும்) நான் உங்களுக்குக் காட்டவில்லை.) – அல் ஹாபிர்: 29
மேலும் அவன் அல்லாஹ்வின் நபியான மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் விடயத்தில் கூறினான்: ( என்னை விட்டுவிடுங்கள் மூஸாவை நான் கொலை செய்யப்போகிறேன் மேலும் அவர் தன்னை (பாதுகாத்துக்கொள்வதற்காக) தன் இரட்சகனை அழைக்கட்டும்.
அவர் உங்களுடைய மார்க்கத்தை மாற்றி விடுவார் அல்லது பூமியில் குழப்பத்தை வெளிப்படுத்துவார் என்று நிச்சயமாக நான் பயப்படுகின்றேன்.) – அல் ஹாபிர்: 26
மேலும் அவனும்; அவனுடைய கூட்டமும் மூஸா மற்றும் ஹாரூன் அலைஹிமஸ்ஸலாம் அவர்கள் இருவரின் விடயத்திலும் கூறினார்கள்: (நிச்சயமாக இவ்விருவரும் இரு சூனியக்காரர்களே! தங்களுடைய சூனியத்தால் உங்களை, உங்களுடைய பூமியை விட்டும் இவ்விருவரும் வெளியாக்கி விடவும்; உங்களுடைய மேலான பாதையை இவ்விருவரும் போக்கிவிடவும் நாடுகின்றனர்.) – தாஹா: 63
மேலும் அல்லாஹ் ஸுப்ஹானஹு வதஆலா நயவஞ்சகர்களின் பொய்யான வார்த்தையைப் பற்றி கூறுகின்றான்: (மேலும் அவர்களிடம், “நீங்கள் குழப்பம் செய்யாதீர்கள் “என்று கூறப்பட்டால், அவர்கள் “நிச்சயமாக நாங்கள் தான் சீர்த்திருத்தவாதிகள்” என்று கூறுவார்கள்.) – அல் பகறா: 11
அல்லாஹ் கூறுகின்றான்: ( அறிந்துக்கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பவாதிகள். என்றாலும் (அதை) உணர மாட்டார்கள். (12)
“மேலும் அவர்களிடம் மனிதர்கள் விசுவாசங்கொண்டது போன்று நீங்களும் விசுவாசங்கொள்ளுங்கள்” என்றுக் கூறப்பட்டால், அவர்கள் “மூடர்கள் விசுவாசங்கொண்டது போல் நாம் விசுவாங்கொள்வோமா? “என்று கூறுவார்கள். அறிந்துக்கொள்ளுங்கள் நிச்சயமாக அவர்களே மூடர்களாவர்; என்றாலும் (அதை)அவர்கள் அறிந்துக்கொள்ள மாட்டார்கள்.) – அல் பகறா: 12, 13
தொடரும் ….
நன்றி: Salaf.co and Islamkalvi

1 comment:

Ungal Blog said...

அஸ்ஸலாமு அழைக்கும். உங்கள் வலைதளம் "இஸ்லாமிய இணையங்களின் இணைப்பகம் (http://ungalwebs.blogspot.com)" என்ற இணைய தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

(உங்கள் தளத்தில் எங்களை இணைக்க, இந்த லிங்கை http://ungalwebs.blogspot.com/p/contact.html பார்க்கவும்)