Friday, January 13, 2017

இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும் – 01

இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும் – 01

بسم الله الرحمن الرحيم
“ஹாதிஹீ தஃவதுனா வ அகீததுனா”
(“இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும்”)
அஷ்ஷேய்ஹ் முக்பில் இப்னு ஹாதி அல்வாதியீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள்
தமிழ் மொழியில்: அபூ அபதிர்ரஹ்மான் அப்துர்ரஸ்ஸாக் இப்னு முஹம்மத் நஸார் அஸ்ஸைலானீ
முன்னுரை
நிச்சயமாக புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குறியதாகும். அவனை நாம் புகழ்கின்றோம்; மேலும் அவனிடமே நாம் உதவி தேடுகின்றோம்; மேலும் அவனிடமே நாம் பாவமன்னிப்பும் தேடுகின்றோம்; மேலும் எமது ஆத்மாக்களின் தீங்குகளை விட்டும், எமது பாவச்செயல்களை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகின்றோம் . அல்லாஹ் எவருக்கு நேர்வழியை காட்டுகின்றானோ அவரே நேர்வழி பெற்றவராவார். மேலும் அவன் எவரை வழிகெடுத்து விடுகின்றானோ அவனுக்கு நேர்வழி காட்டுபவன் எவனும் இல்லை.
மேலும் அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு வேறு எவரும் இல்லை, அவன் தனித்தவன். அவனுக்கு எந்த ஒரு இணையுமில்லை என்று நான் சாட்சி கூறுகின்றேன்.
மேலும் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அவனுடைய அடியான் என்றும் மற்றும் அவனுடைய தூதர் என்றும் சாட்சி கூறுகின்றேன்.
(விசுவாசங் கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை பயப்பட வேண்டிய முறைப்படி பயப்படுங்கள்; மேலும் நிச்சயமாக முஸ்லிம்களாகவே அன்றி நீங்கள் மரணித்து விட வேண்டாம்.) – ஆலு இம்ரான்: 102
(மக்களே! நீங்கள் உங்கள் இரட்சகனைப் பயந்துக் கொள்ளுங்கள். அவன் எத்தகையவனென்றால், உங்களை ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான்; அதிலிருந்து அதற்குறிய ஜோடியையும் படைத்தான்; இன்னும் அவ்விருவரிலிருந்து அனேக ஆண்களையும், பெண்களையும் பரவச்செய்தான்; இன்னும் அல்லாஹ்வை  அவனைக் கொண்டு நீங்கள் ஒருவருக்கொருவர் (உரிமைகளை) கேட்டுக்கொள்கின்றீர்களே அத்தகையவனையும்; மேலும் இரத்த பந்த சொந்தங்களை (துண்டித்து வாழ்வதை )யும் நீங்கள் பயந்துக்கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களை அல்லாஹ் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.) – அந்நிஸா: 1
(விசுவாசங் கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வைப் பயந்துக்கொள்ளுங்கள், மேலும் நேர்மையான வார்த்தையையே கூறுங்கள். 71
(அவ்வாறு நீங்கள் செய்தால்) அவன் உங்களுடைய செயல்களை உங்களுக்கு சீர்படுத்தி வைப்பான்; மேலும் உங்களுடைய பாவங்களை உங்களுக்கு மன்னித்து விடுவான். மேலும் எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்படுகின்றாரோ அவர் திட்டமாக மகத்தான வெற்றியாக வெற்றி பெற்றுவிட்டார்.) – அல் அஹ்ஸாப்: 71, 72
இதற்குப் பின்னால்:
நிச்சயமாக பலதரப்பட்ட கொள்கைகள் அதிகரித்து மேலும் பலதரப்பட்ட அழைப்புப்பணிகள் பரவிய போது அந்த அழைபப்புப்பணிக்கு சொந்தக்காரர்களாக இருந்தவர்களின் நிலமை அல்லாஹ் ஸுப்ஹானஹூ வதஆலா கூறியதைப்போன்று ஆகிவிட்டது.
(பிறகு அவர்கள் தங்களின் அக்காரியத்தை அவர்களிடையே பல பிரிவுகளாகப் பிரித்து விட்டனர்; ஒவ்வொரு பிரிவினரும் தங்களிடம் இருப்பதைக்கொண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.) – அல் முஃமினூன்: 53
மேலும் அவர்களுடைய நிலமை ( அரபியிலே ) கூறப்பட்ட ஒரு கவிதையைப் போல் இருக்கின்றது:
“அனைவரும் லைலா என்பவளுடன் அவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக வாதிடுகின்றனர்.
ஆனால் லைலாவோ அதை அவர்களுக்கு ஏற்றுக் கொள்ளவில்லை.”
எந்த ஒரு அழைப்புப்பணியை செய்பவர்களாக இருந்தாலும் நிச்சயமாக அவர்களே நேரான பாதையில் இருப்பதாக வாதிடுபவர்களாகவே அன்றி நீ அவர்களை பெற்றுக்கொள்ள மாட்டாய்.
இதோ பிர்அவ்ன் கூறுகின்றான்: (நானே உங்களுடைய மிக உயர்ந்த இரட்சகனாவேன்.) – அந்நாஸிஆத்: 24
மேலும் அவனுடைய கூட்டத்திற்கு கூறுகின்றான்: ( நான் சரிகண்டதைத் தவிர (வேறொன்றையும்) நான் உங்களுக்கு அறிவிக்கவில்லை; நேரான வழியையைத் தவிர (மற்றெதனையும்) நான் உங்களுக்குக் காட்டவில்லை.) – அல் ஹாபிர்: 29
மேலும் அவன் அல்லாஹ்வின் நபியான மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் விடயத்தில் கூறினான்: ( என்னை விட்டுவிடுங்கள் மூஸாவை நான் கொலை செய்யப்போகிறேன் மேலும் அவர் தன்னை (பாதுகாத்துக்கொள்வதற்காக) தன் இரட்சகனை அழைக்கட்டும்.
அவர் உங்களுடைய மார்க்கத்தை மாற்றி விடுவார் அல்லது பூமியில் குழப்பத்தை வெளிப்படுத்துவார் என்று நிச்சயமாக நான் பயப்படுகின்றேன்.) – அல் ஹாபிர்: 26
மேலும் அவனும்; அவனுடைய கூட்டமும் மூஸா மற்றும் ஹாரூன் அலைஹிமஸ்ஸலாம் அவர்கள் இருவரின் விடயத்திலும் கூறினார்கள்: (நிச்சயமாக இவ்விருவரும் இரு சூனியக்காரர்களே! தங்களுடைய சூனியத்தால் உங்களை, உங்களுடைய பூமியை விட்டும் இவ்விருவரும் வெளியாக்கி விடவும்; உங்களுடைய மேலான பாதையை இவ்விருவரும் போக்கிவிடவும் நாடுகின்றனர்.) – தாஹா: 63
மேலும் அல்லாஹ் ஸுப்ஹானஹு வதஆலா நயவஞ்சகர்களின் பொய்யான வார்த்தையைப் பற்றி கூறுகின்றான்: (மேலும் அவர்களிடம், “நீங்கள் குழப்பம் செய்யாதீர்கள் “என்று கூறப்பட்டால், அவர்கள் “நிச்சயமாக நாங்கள் தான் சீர்த்திருத்தவாதிகள்” என்று கூறுவார்கள்.) – அல் பகறா: 11
அல்லாஹ் கூறுகின்றான்: ( அறிந்துக்கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பவாதிகள். என்றாலும் (அதை) உணர மாட்டார்கள். (12)
“மேலும் அவர்களிடம் மனிதர்கள் விசுவாசங்கொண்டது போன்று நீங்களும் விசுவாசங்கொள்ளுங்கள்” என்றுக் கூறப்பட்டால், அவர்கள் “மூடர்கள் விசுவாசங்கொண்டது போல் நாம் விசுவாங்கொள்வோமா? “என்று கூறுவார்கள். அறிந்துக்கொள்ளுங்கள் நிச்சயமாக அவர்களே மூடர்களாவர்; என்றாலும் (அதை)அவர்கள் அறிந்துக்கொள்ள மாட்டார்கள்.) – அல் பகறா: 12, 13
தொடரும் ….
நன்றி: Salaf.co and Islamkalvi

Friday, June 19, 2015

10 Benefits of Fasting That Will Surprise You

Is it a good thing to ‘starve’ yourself each day, or a few days of the week? Well, a tonne of evidence indicates that timed periods of fasting are a good thing.
Fasting has become increasingly popular over the years, especially among the health community. Whilst most health practitioners are afraid to recommend eating less due to the stigma involved, it still doesn’t alleviate the incredible benefits of fasting when used sensibly.
In this article, we’ll explore 10 benefits of fasting that will surprise youand how you can incorporate them into your own life.

1. Fasting Helps Weight Loss

Fasting can be a safe way to lose weight as many studies have shown that intermittent fasting – fasting that is controlled within a set number of hours – allows the body to burn through fat cells more effectively than just regular dieting.
Intermittent fasting allows the body to use fat as it’s primary source of energy instead of sugar. Many athletes now use fasting as means to hitting low body fat percentages for competitions.

2. Fasting Improves Insulin Sensitivity

Fasting has shown to have a positive effect on insulin sensitivity, allowing you to tolerate carbohydrates (sugar) better than if you didn’t fast. A study showed that after periods of fasting, insulin becomes more effective in telling cells to take up glucose from blood.

3. Fasting Speeds Up The Metabolism

Intermittent fasting gives your digestive system a rest, and this can energise your metabolism to burn through calories more efficiently. If your digestion is poor, this can effect your ability to metabolise food and burn fat. Intermittent fasts can regulate your digestion and promote healthy bowel function, thus improving your metabolic function.

4. Fasting Promotes Longevity

Believe it or not, the less you eat the longer you will live. Studies have shown how the lifespan of people in certain cultures increased due to their diets. However, we don’t need to live amongst a foreign community to reap the benefits of fasting. One of the primary effects of ageing is a slower metabolism, the younger your body is, the faster and more efficient your metabolism. The less you eat, the less toll it takes on your digestive system.

5. Fasting Improves Hunger

Just think about this, can you actually experience real hunger if you eat a meal every 3-4 hours? Of course you can’t. In fact, to experience the true nature of hunger, this would take anything from 12 to even 24 hours.
Fasting helps to regulate the hormones in your body so that you experience what true hunger is. We know that obese individuals do not receive the correct signals to let them know they are full due excessive eating patterns.
Think of fasting as a reset button: the longer you fast, the more your body can regulate itself to release the correct hormones, so that you can experience what real hunger is. Not to mention, when your hormones are working correctly, you get full quicker.

6. Fasting Improves Your Eating Patterns

Fasting can be a helpful practice for those who suffer with binge eating disorders, and for those who find it difficult to establish a correct eating pattern due to work and other priorities.
With intermittent fasting going all afternoon without a meal is okay and it can allow you to eat at a set time that fits your lifestyle. Also, for anyone who wants to prevent binge eating, you can establish a set time in where you allow yourself to eat your daily amount of calories in one sitting, and then not eat till the following day.

7. Fasting Improves Your Brain Function

Fasting has shown to improve brain function, because it boosts the production of a protein called brain-derived neurotrophic factor (BDNF.)
BDNF activates brain stem cells to convert into new neurons, and triggers numerous other chemicals that promote neural health. This protein also protects your brain cells from changes associated with Alzheimer’s and Parkinson’s disease.

8. Fasting Improves Your Immune System

Intermittent fasting improves the immune system because it reduces free radical damage, regulates inflammatory conditions in the body and starves off cancer cell formation.
In nature, when animals get sick they stop eating and instead focus on resting. This is a primal instinct to reduce stress on their internal system so their body can fight off infection. We humans are the only species who look for food when we are ill, even when we do not need it.

9. Fasting Contributes To Self-Enlightenment

Fasting has helped many people feel more connected to life during the practices reading, meditation, yoga and martial arts etc. With no food in the digestive system, this makes room for more energy in the body – the digestive is one of the most energy absorbing systems in the body.
Fasting for self-enlightenment, allows us to feel better both consciously and physically. With a lighter body and a clearer mind we become more aware and grateful for the things around us.

10. Fasting Helps Clear The Skin And Prevent Acne

Fasting can help clear the skin because with the body temporarily freed from digestion, it’s able to focus its regenerative energies on other systems.
Not eating anything for just one day has shown to help the body clean up the toxins and regulate the functioning of other organs of the body like liver, kidneys and other parts.

Saturday, February 7, 2015

இஸ்லாம் பெண்ணுரிமையை காப்பாற்றிய மார்க்கம் .

எல்லாம் வல்ல அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து அவனது இறுதித் தூதர் நபிமுஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அன்னாரது வழிமுறைகளை பின்பற்றி வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற அத்தனை நல்லடியார்கள் மீதும் அல்லாஹ்வின் அருளும் அன்பும் மன்னிப்பும் என்றென்றும் உண்டாவதாக!

20-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஐரோப்பாவில் பெண்களின் உரிமைகள் பற்றி அதிகம் பேசப்பட்டு விவாதிக்கப்பட்டு, பெண்கள் மனிதப் பிறவிகளாக கணிக்கப்பட வேண்டும் என்ற கோஷம் எழுப்பப்பட்டது. பெண் ஆணுக்கு நிகரானவள், சமஉரிமை படைத்தவள், உரிமைகள் வழங்கப்பட வேண்டியவள் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.
இப்போராட்டம் ‘பெண்களின் விடுதலைப் போராட்டமாக’ சித்தரிக்கப்பட்டதனால். ஆணாதிக்கம், சமயக் கோட்பாடுகள் கட்டுப்பாடுகள் மற்றும் சமூக சம்பிரதாயங்களை தகர்த்தெறிந்து கொண்டு பெண்கள் வீதியில் இறங்கினார்கள், இறக்கப்பட்டார்கள்.
இதன் மூலம் ஆண்கள் அனுபவிக்கும் சகல உரிமைகளையும் அனுபவித்து சமபங்கு வகித்தார்கள். அடுப்பங்கரையிலிருந்து ஆட்சி பீடம்வரை சென்ற அவர்கள் விண்ணில் உலா வந்தார்கள். ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்தார்கள்.
அரசியல், சமூக, பொருளாதார வளர்ச்சிக்குப் பெண்களின் பங்களிப்பும் அவசியம், ஆண்களால் மட்டும் வளர்ச்சியைக் காணமுடியாது. ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றே ஆண் பெண் பங்களிப்பு சமூகத்திற்கு அவசியம் என்பதை வலியுறுத்தினார்கள்.
போராட்ட முழக்கம் எழுந்தது. சரிநிகர் சமத்துவ பயணம் தொடர்ந்தது. பிரபுத்துவ ஆட்சியில் அடக்கி வைக்கப்பட்டு அனுபவிக்கப்பட்டவள் முதலாளித்துவ பிடியில் அனுபவிககும் பண்டமாக ஆபாச சின்னமாக (Sex Symble) அவிழ்த்துபோட்டு நடமாடும் ராணியாக விளம்பர பலகையாக ஆக்கப்பட்டாள். ஆண்களின் நுகர்வோர் சந்தையில் விளையாட்டு பொம்மையாக வடிவமைக்கப்பட்டாள். இறுதியில் ஆண், பெண் இரு பாலாரின் தனிப்பட்ட வாழ்வும் குடும்ப வாழ்வும் சமூக வாழ்வும் வீழ்ந்தது. சூழல் மாற்றமடையத் தொடங்கியது. நிம்மதி தொலைந்தது. விரக்தி தொற்றிக் கொண்டது. சுகப்படுத்த முடியாத நோய் பரவ ஆரம்பித்தது. வரையறையற்ற வாழ்க்கை முறையினாலும், தெளிவற்ற உரிமைப் போராட்டத்தினாலும் உருவான விபரீதங்களைக் கண்டு உலகம் அஞ்சுகிறது. நாகரிகத்தின் பெயரால் நாதியற்றுப் போயிருக்கும் வாழ்வைச் சீர்படுத்துகின்ற சத்திர சிகிச்சையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது இன்றைய உலகம்.
‘சமபங்கு, சமஅந்தஸ்து, சம உரிமை’ என்பவை சரிவரப் புரிந்து கொள்ளப்படாததனாலும் ‘சமத்துவ பணிகள்’ சரியாக வழங்கப்படாமையினாலும் பொறுப்புக்கள் ஒழுங்குப்படுத்தப்படாமையினாலும் மனித வாழ்வு புரையோடிய புற்றுநோயாக தோற்றம் பெற்றுள்ளது. பெற்றோர் முதியோர் இல்லங்களிலும் பிள்ளைகள் பாதுகாப்பு மையங்களிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். பாசத்திற்காகவும் நேசத்திற்காகவும் குழந்தைகள் ஏங்கித் தவிக்கின்றன. அன்பையும் அரவனைப்பையும் வேண்டி பெற்றோர் கண்ணீர் வடிக்கின்றனர். பெற்றோரிடமிருந்து பிரிந்து வாழும் உரிமை கேட்டு பிள்ளைகள் வழக்குத் தொடுக்கின்றனர். கணவன் மனைவியின் மீதும் மனைவி கணவன் மீதும் சந்தேகம் கொண்டு பார்கின்றனர். பொதுவாக மேற்கத்திய உலகில் மூன்று W களை நம்பமாட்டார்கள். 1. Weather காலநிலை 2. Women பெண் 3. Work தொழில். இந்த மூன்றும் எந்த நேரத்திலும் மாறிபோயிடலாம் என்பதே அவர்களது வாழ்வாகும்.
இந்நிலையில் முஸ்லிம் பெண்களின் நிலை பற்றியும் அவர்களது உரிமைகள் பற்றியும் உண்மைக்குப் புறம்பான செய்திகளையும், விவரணங்களையும் இஸ்லாத்திற்கு முரணாக ஊடகங்கள் வெளியிடத் தொடங்கின.
சர்வதேசமட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் பலம் வாய்ந்த ஊடகங்களான BBC,CNN போன்றவை யூத கிறிஸ்தவர்களின் கைவசம் உள்ளதனால் முஸ்லிம்கள் பற்றியும் இஸ்லாம் பற்றியும் அவ்வப்போது தவறான செய்திகளைக் கொடுத்து இஸ்லாம் பற்றி அறியாத அப்பாவிகளை ஏமாற்றி வருகின்றன.
‘இஸ்லாம் பெண்களை கொடுமைப்படுத்துகின்றது பர்தா என்னும் ஆடையை அணிவித்து ஆயுட்காலக் கைதிகள் போல் வீட்டில் முடக்கி வைத்துள்ளது. கல்வியறிவு உட்பட அடிப்படை உரிமைகளைக்கூட வழங்குவதில்லை. முஸ்லிம் சமூகத்தில் ஆணாதிக்கம் மேலோங்கிக் காணப்படுவதால் பெண்கள் அடிமைகள் போல் அடங்கி வாழ்கிறார்கள்’ போன்ற செய்திகளை இந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேற்கத்தைய ஊடகங்களின் ஊதுகுழல்களாக செயற்படும் ஏனைய ஊடகங்களும் அவைகளை அப்படியே வாந்தியெடுத்து விடுகின்றன. நம் நாட்டின் ஊடகங்கள் அண்மைக்காலமாக இவ்வாறான செய்திகளைக் கொட்டுவதில் தீவிரம் காட்டி வருவதையும் கண்டு வருகிறோம். ‘சகல சமூகங்களிலுமுள்ள பெண்கள் சுதந்திரமாகவும் முன்னேற்றமாகவும் செயற்பட்டு வரும்போது முஸ்லிம் சமூகம் மட்டும் பெண்களைத் தன்னிச்சையாக செயற்படவிடாமல் மூலையில் முடக்கி வைத்துள்ளது’ போன்ற மாயையை இந்த மீடியாக்கள் மீட்டுகின்றன.
மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை மீடியாக்கள் விவரணப் படுத்தும்போது உலக மக்கள் இஸ்லாத்தைப் பற்றி தப்பும் தவறுமாகவே எண்ணுகிறார்கள். பேசுகிறார்கள். பெண்களுக்கு உரிமைகளே கொடுக்காத மார்க்கம் என்றால் அது இஸ்லாம் தான் என்று கருதக்கூடிய நிலைக்கு இந்த மீடியாக்கள் இட்டுச் செல்கின்றன.
தாங்கள் சார்ந்துள்ள மார்க்கங்களில், பின்பற்றக்கூடிய கொள்கைகளில் பெண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் உரிமைகள் எவை? மறுக்கப்பட்டிருக்கும் உரிமைகள் எவை? பெண்களுக்குரிய மரியாதை, கண்ணியம், கௌரவம் எவை? அவை எவ்வாறு போற்றப்படுகின்றன என்பதைச் சிந்தித்து ஆராய்ந்து குறைநிறைகளைக் கண்டு நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக முஸ்லிம் பெண்களைப் பார்த்து விமர்சன அம்புகளை ஏவி விடுகிறார்கள்.
இஸ்லாத்தையும் அதன் அடிப்படைக் கோட்பாடுகளையும் படித்து, அறிந்து, பெண்களின் நிலவரம் பற்றியும் அவர்களது உரிமைகள் பற்றியும் விமர்சனம் செய்திருந்தால் வரவேற்றிருக்கலாம். மாற்றமாக கருத்துக் குருடர்களாக இருந்து கொண்டு புத்திஜீவிகள் போல் பேசுவதுதான் அசிங்கமாகத் தெரிகிறது.
மீடியாக்களின் பொறுப்பற்ற தன்மையும் கருத்துக் குருடர்களின் நியாயமற்ற போக்கும் முஸ்லிம் பெண்கள் தவறாக சித்தரிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளன.
பொருத்தமான சில கட்டுப்பாடுகளுடன் முஸ்லிம் பெண்கள் வளர்க்கப்படுகிறார்கள் என்பது உண்மை! அதற்காக அவர்களது வாழ்வுரிமை மற்றும் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்பது அபத்தம்.
இஸ்லாத்தில் சில சட்டங்கள் ஆண் பெண் இருபாலாரையும் கட்டுப்படுத்துகிறது. இன்னும் சில சட்டங்கள் ஆண்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறது. வேறு சில சட்டங்களோ பெண்களின் உரிமைகளை உறுதி செய்து ஆண்களை கட்டுப்படுத்துகிறது.
பெண்களின் கற்பு மானம், மரியாதை, கண்ணியம் ஆகியவற்றை இஸ்லாமிய சட்டங்கள் கண்டிப்பாக காப்பாற்றுகின்றன, உத்தரவாதப்படுத்துகின்றன. கற்பு இருபாலாருக்கும் பொதுவானது என்று கூறி அதனை கௌரவப்படுத்தி மதிக்க வேண்டும், மலினப்படுத்தக் கூடாது என கட்டளையிடுகிறது. பெண் என்ற அந்தஸ்தையும் தாய் என்ற கௌரவத்தையும் கொடுத்து குடும்பத்தின் அஸ்திவாரத்தை பலப்படுத்தும் சமபங்காளியாக உயர்த்திக் காட்டுகிறது.
பெண்ணை பாதுகாப்பதும் பராமரிப்பதும் ஆணின் மீதுள்ள கடமை என்று கூறி பொருளாதாரச் சுமைகளை ஆணின் மீது சுமத்துகிறது. இஸ்லாத்திற்கும் மாற்றுமதக் கொள்கைகளுக்கு இடையிலுள்ள அடிப்படை வேறுபாடுகள் இவைதான்.
பெண்:
ஆன்மா இல்லாதவள்,
பிறப்பால் இழிவானவள்,
ஆண்களை வஞ்சிக்கும் குணமுடையவள்,
விவாகரத்து உரிமையற்றவள்,
மறுமணத்திற்கு தகுதியற்றவள்,
வாரிசு சொத்து தடுக்கப்பட்டவள்,
வேதம் படிக்க அருகதையற்றவள்,
மாதத்தீட்டால் பிரசவத்தீட்டால் அசிங்கமானவள்,
ஆணின் அதிகாரங்களுக்குள் அடங்கப்பட்டவள்.
இந்த உலகின் முதன்மை மதம் என்று சொல்லப்படக் கூடிய யூதகிறிஸ்தவ மதத்தின் வேதநூலான பைபிள் பெண்ணை இப்படித்தான் சித்தரிக்கிறது. ஆண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளின் உதிரிகள் தான் பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த உண்மையை எடுத்துக்காட்டுவதே இங்கே முக்கிய நோக்கமாகும். பெண்களின் உரிமைகளைப் பறித்து அடக்கியாளுகின்ற மதம் இஸ்லாமா? யூத கிறிஸ்தவமா? என்பதை வாசகர்கள் இதன்மூலம் புரிந்து கொள்ள முடியும்.
அதுமட்டுமல்லாமல் உலகையே ஆட்சி செய்து கொண்டிருக்கும் யூத கிறிஸ்தவர்களின் பிடியிலுள்ள மீடியாக்களும் ஏனைய மீடியாக்களும் முஸ்லிம் பெண்கள் சம்பந்தமாக விவரணப்படுத்துமுன் அவர்கள் சார்ந்துள்ள மதங்களில் அவர்களுடைய பெண்கள் எப்படி மதிக்கப்படுகின்றனர் எவ்வாறான உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து செயற் படமுடியும்.
ஏனைய மதங்களைச் சார்ந்த பெண்களும் தங்களுடைய உரிமைகளை இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்நூலின் மற்றுமொரு நோக்கமாகும்.
யூத கிறிஸ்தவ மக்களுக்கு அல்லாஹ் தவ்றாத் மற்றும் இன்ஜீல் வேதங்களை கொடுத்துள்ளான். அவைகள் கொடுக்கப்பட்ட அசல் வடிவில் அவர்களிடம் இல்லை. தவ்றாத்தையும் இன்ஜீலையும் உள்ளடக்கியதாகவே பைபிள் உள்ளதாக கூறினாலும் பைபிளை பொறுத்தமட்டில் அது முழுமையான இறை வேதமாக – பாதுகாக்கப்பட்ட வேதமாக இல்லை அதில் கூட்டல் குறைவுகள், திரிபுகள், முரண்பாடுகள், அசிங்கங்கள் மற்றும் அபத்தங்களும் உள்ளன.
இறைவார்த்தைகளுடன் மனித கையூட்டல்களும் கலந்துள்ளன. வேதத்திற்குரிய தரத்தில் பைபிள் இல்லை என்பதை இந்நூலின் ஆய்விலே கண்டுகொள்ள முடியும். இவர்கள் ஏற்படுத்திய முரண்பாடுகளையும் திரிவுகள் மற்றும் மறைவுகளை அல்குர்ஆன் முன்வைக்கிறது.
- M.S.M. இம்தியாஸ் யூசுப் ஸலபி

Sunday, September 28, 2014

ஏகத்துவ தந்தை இப்ராஹீம் நபி(அலை) அவர்களின் மார்க்கம்.

ஏகஇறைவனின் திருப்பெயரால்...


وَمَن يَرْغَبُ عَن مِّلَّةِ إِبْرَاهِيمَ إِلاَّ مَن سَفِهَ نَفْسَهُ وَلَقَدِ اصْطَفَيْنَاهُ فِي الدُّنْيَا وَإِنَّهُ فِي الآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ {130}

தன்னை அறிவிலியாக்கிக் கொண்டவனைத் தவிர வேறு யார் இப்ராஹீமின் மார்க்கத்தைப் புறக்கணிக்க முடியும்? அவரை இவ்வுலகில் நாம் தேர்வு செய்தோம். அவர் மறுமையில் நல்லோரில் இருப்பார்.அல்குர்ஆன். 2:130.



ஏகத்துவ தந்தை இப்ராஹீம் நபி(அலைஅவர்களின் மார்க்கம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

இஸ்லாமிய கட்டிடத்தின் ஐந்து தூண்களில் ஹஜ் ஓர் தூண் ஆகும்' வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல் ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். புகாரி.8/7.

இன்று நாம் நிலை கொண்டிருக்கின்ற ஏகத்துவ மார்க்கத்தை (ஓரிறைக்கொள்கையை) அன்று இப்ராஹீம் நபி(அலை) அவர்களே பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிலை நாட்டினார்கள்.

அல்லாஹ்வின் ஆற்றல் மீது அளப்பறிய நம்பிக்கை கொண்டிருந்த இப்ராஹீம் (அலை)அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தல் மிகப் பெரும் பாவச் செயல் என்பதை மக்களுக்கு விளக்குவதிலும், இவ்வுலகை படைத்து இயக்கும் அல்லாஹ் ஒருவனே ஆற்றலுடையவன் அவனுக்கு நிகராக உலகில் கற்பனை செய்யப்படும் அனைத்தும் ஆற்றலற்றவைகள் என்பதை விளக்குவதிலும் முழு மூச்சாக செயல் பட்டார்கள்.  

அல்லாஹ்வின் உதவியைத் தவிர வேறு யாருடைய உதவியும் அன்று அவர்களுக்கு இருக்கவில்லை, தனித்து நின்றே அனைவருடைய எதிர்ப்பையும் எதிர் கொண்டார்கள் எதிர்ப்புகளுக்கு பயந்து வளைந்து கொடுக்காமல் பிரச்சாரம் செய்தார்கள்.

முட்டாள்களைத் தவிர இப்ராஹீம் நபி(அலை) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை வேறு யாரும் புறக்கனிக்க மாட்டார்கள் என்று அல்லாஹ்வே திருமறையில் சிலாகித்துக் கூறும் அளவுக்கு ஏகத்துவத்தின் அடிப்படையில் மார்க்கத்தை நிறுவினார்கள்.

தன்னை அறிவிலியாக்கிக் கொண்டவனைத் தவிர வேறு யார் இப்ராஹீமின் மார்க்கத்தைப் புறக்கணிக்க முடியும்? அவரை இவ்வுலகில் நாம் தேர்வு செய்தோம். அவர் மறுமையில் நல்லோரில் இருப்பார். அல்குர்ஆன். 2:130.

வீட்டிலும் பகை, வெளியிலும் பகை.
இப்ராஹீம்(அலை) அவர்கள் சிலை வணக்கத்தை ஒழித்துக்கட்டி ஏகத்துவத்தை நிலைநாட்ட வந்தவர்கள் அவர்களுடைய தந்தையோ சிலை வணக்கத்தில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டு அதில் மூழ்கிக் கிடந்தார்கள். அந்த சிலைகளுக்கு சக்தி கிடையாது என்பதை பலமுறை தந்தை அவர்களுக்கு விளக்கிக் கூறி வந்ததால் தந்தையின் மூலம் வீட்டில் பகைஉருவானது, இனி ஏகத்துவத்தைப் பேசினால் கல்லால் எறிந்து கொல்வேன் என்றும், ஏகத்துவத்தைப் பேசுவதாக இருந்தால் என்னை விட்டு விலகிப் போய் விடு என்று விரட்டும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

இப்ராஹீமே எனது கடவுள்களையே நீ அலட்சியப்படுத்துகிறாயா ?. நீ விலகிக்கொள்ளாவிட்டால் உன்னைக் கல்லால் எறிந்து கொல்வேன். நீண்ட காலம் என்னை விட்டு விலகி விடு! என்று (தந்தை) கூறினார். அல்குர்ஆன் 19:46.

பெற்ற தந்தையின் மூலம் வீட்டுக்குள் இந்த நிலை என்றால் வெளியில் சொல்லவே வேண்டியதில்லை எனும் அளவுக்கு நாடாளும் மன்னன் முதல் சாதாரன குடி மக்கள் வரை இப்ராஹீம்(அலை) அவர்கள் மீது கடும் பகை கொண்டிருந்தனர். எத்தனை பகை கொண்டிருந்தாலும், ஏகத்துவத்தை எடுத்துச் சொல்வதிலிருந்து பின் வாங்குவதில்லை எனும் முடிவில் மன்னன் நம்ரூதுக்கும்  சத்தியத்தை எடுத்துச் சொன்னார்கள்.

ஒருநாள் நம்ரூதின் அரன்மனையில் இப்ராஹீம்(அலை) அவர்களுக்கும், மன்னன் நம்ரூதுக்கும் இடையில் அனல் பறந்தது விவாதம் இறுதியில் வாயடைத்துப் போனான் மன்னன் நம்ரூது.

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரதுஇறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? ''என் இறைவன்உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்'' என்று இப்ராஹீம் கூறிய போது, ''நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்'' என்று அவன் கூறினான். ''அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!'' என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை)மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். அல்குர்ஆன். 2: 258.

அறிவுப் பூர்வமான கருத்துக்களைக்கொண்டு ஏகத்துவ எதிர்ப்பாளர்களை, திணறச் செய்வதற்கும், திக்குமுக்காடச் செய்வதற்கும் பதில் பேச முடியாமல் வாயடைக்கச் செய்வதற்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களே.

மற்றுமொரு சம்பவத்தைப் பாருங்கள் ஒரு கிராமத்தில் சிறிய சிலைகள் உடைக்கப்பட்டு பெரிய சிலை ஒன்றின் கழுத்தில் கோடாரி மாட்டி விடப்பட்டிருந்தது.

அங்கே மக்கள் திரண்டனர் இப்ராஹீம்(அலை) அவர்களும் வரவழைக்கப்பட்டனர் குழுமி இருந்த மக்கள் ஆளாளுக்கும் கேள்விக்கு மேல் கேள்விகள் கேட்டனர். தனி ஒரு நபராக இருந்து கொண்டு அனைத்து கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான பதில்களை அசராமல் அளித்துக் கொண்டே இருந்தார்கள் இப்ராஹீம்(அலை) அவர்கள்.

திருப்பி அவர்களை நோக்கி இப்ராஹீம்(அலை) அவர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் அசத்தியத்தில் இருந்த காரணத்தால் அவர்களால் பதிலளிக்க முடியாமல் திணறினர். இறுதியில் அனைவரும் தலைகளை தொங்கவிட்டுக்கொண்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டதாக அல்லாஹ்வே கூறுகிறான். பார்க்க திருக்குர்ஆன் 21:58 முதல், 21:68 வரை.

இப்ராஹீம்(அலை) அவர்களுடைய இந்த யுக்தியால் மக்களுடைய மனங்களில் மாற்றம் எற்படுவதை அறிந்த ஊர் தலைமை கூடி அவர்களுக்கு நெருப்பில் பொசுக்கி தண்டனை கொடுப்பது என்ற மோசமான முடிவை எடுத்து தாமதமின்றி செயல்படவும் தொடங்கினர்.

இவ்வாறான தண்டனை கொடுப்பதன் மூலமாக இதுவரை செய்து வந்த பிரச்சாரம் உண்மை இல்லை என்றுக்கூறி நெருப்பிலிருந்து தப்பிக்க முயலலாம்.

அல்லது துணிந்து நெருப்பை ஏற்று எரிந்து பொசுங்கி விட்டால் அவரால் பிரச்சாரம் செய்யப்பட்ட கடவுள் அவரை காப்பாற்ற முடிய வில்லை. என்றுக் கூறி சிந்திக்க முனைந்த மக்களுடைய மூளையைக் கழுவி அதே இடத்தில் வைத்து விடலாம்.

இரண்டில் எது நடந்தாலும் நமக்கு லாபமே என்ற நரித்தனம் அந்த காலத்திலேயே இருந்திருக்கிறது என்றால் இந்த காலத்தில் உள்ள ஏகத்துவ எதிர்ப்பாளர்களுக்கு அவர்களை விட பல மடங்கு இருக்கத் தானே செய்யும்.

இந்த தண்டனை மூலமாக பல கடவுள் கொள்கையை நிலை நாட்ட இதை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்த எண்ணினர்.

நெருப்பின் அருகே நிருத்தப்பட்ட இப்ராஹீம் நபி (அலை) அவர்கள மனம் தளரவில்லை, தைரியத்தை விட்டு விட வில்லை, ஏகத்துவத்தை மறுத்து உயிரைக் காப்பாற்ற எண்ணவில்லை, மாறாக  ஏக இறைவன் என்னை காப்பாற்றப் போதுமானவன் என்ற நம்பிக்கையில் திடமாக இருந்தார்கள் ''ஹஸ்பி அல்லாஹூ வ நிஃமல் வக்கீல் (என் இறைவன் எனக்குப்போதுமானவன்) '' என்ற பிரார்த்தனையை ஓதுவதைத் தவிர வேறு மாதிரியான வார்த்தைகளை கூற மறுத்து விட்டது இறை நம்பிக்கையின் பிறப்பிடமாகிய இப்ராஹீம் (அலை) அவர்களுடைய நாவு. 

உலகம் முடியும் காலம்வரை முஸ்லீம்களுக்கு பல விஷயங்களில் முன்னோடியாகத் திகழ்ந்த இப்ராஹீம்(அலை) அவர்கள் இறைவனிடம் சடைவடையாமல் துஆ கேட்பதிலும் முன்னோடியாகத் திகழ்ந்தார்கள். 

இப்ராஹீம்(அலை) அவர்கள் நெருப்பில் எறியப்பட்டபோது 'எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்'' 

(ஹஸ்பியல்லாஹ் வநிமல் வக்கீல்) என்பதே அவர்களின்கடைசி வார்த்தையாக இருந்தது. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். புகாரி. 4564.

இப்ராஹீம்(அலை) அவர்களுடைய உறுதியான இறைநம்பிக்கையையும், நெருக்கடியான நேரத்தில் அல்லாஹ்வின் மீது பொறுப்பு சாட்டிய உயர் பண்பையும் அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கொழுந்து விட்டு எரிந்துக்கொண்டிருந்த நெருப்பைக் குளிர்ந்து அவர்களுக்கு பாதுகாப்பாக அமைந்துவிட நெருப்புக்கு உத்தரவிட்டு அவர்களைக் காப்பாற்றினான். ''நெருப்பே!இப்ராஹீமின் மீது குளிராகவும், பாதுகாப்பாகவும் ஆகி விடு'' என்று கூறினோம். திருக்குர்ஆன் 21:69.

இறை நம்பிக்கையாளர்களை வல்ல அல்லாஹ் ஒருபோதும் கை விட மாட்டான் என்பதற்கும், பிரார்த்தனையை செவிமடுத்து பிரார்த்தனையை நிறைவேற்றிக்கொடுப்பான் என்பதற்கும் இப்ராஹீம் நபி(அலை) அவர்களின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டதும் அவர்களில் வாழ்வில் நடந்த படிப்பினை மிக்க எடுத்துக்காட்டாகும்.
 

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவிதீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்

Wednesday, August 7, 2013

சூரா அத்தவ்பா விளக்கவுரை 9:113 - 9:114

ஜும்ஆ பேருரை - மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழி! By: Moulavi. Mubarak Madani

மரணம் தரும் படிப்பிணைகள் - Moulavi Mubarak Madani

இஸ்லாமும் இளைஞர்களும் - Moulvi Mubarak Madani

'உண்மை வலம்': நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்

'உண்மை வலம்'; தனது வாசகர்கள் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றது.

யா அல்லாஹ் எமது நோன்புகளையும் நல்லமல்களையும் ஏற்றுக் கொள்வாயாக!
யா அல்லாஹ் எம்மனைவரையும் நரத்திலிருந்து பாதுகாத்தருள்வாயாக!


(ஈத்) பெருநாள் தொழுகை விளக்கம் (சட்டங்கள்)

ஈத் பெருநாள் தொழுகை விளக்கம்
அல்குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் தொகுத்து இஸ்லாம்கல்வி.காம் வாசகர்களுக்காக வழங்குகின்றார் ஆசிரியர் ஹாபிழ் முஹம்மத் மன்சூர் மதனீ அவர்கள் (அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) – தம்மாம்)
Part-1
1) முஸ்லிம்களுக்கு எத்தனை பெருநாட்கள்?
2) எந்நேரத்தில் தக்பீர் கூறவேண்டும்?
3) எப்படி தக்பீர் சொல்வது?
4) பெருநாள் அன்று எதற்கு அனுமதி?
5) பெருநாளைக்கு குளிப்பது, புத்தாடை அணிவது தொடர்பாக..
6) பெருநாள் தினத்தில் வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்ளலாமா?
7) பெருநாள் தினத்தில் உணவு அருந்துவது தொடர்பாக
8) பெருநாள் தினம் ஜும்ஆ-வுடைய நாளாக இருந்துவிட்டால்?
Part-2
9) பெருநாள் தொழுகையை திடலில் தொழுவது தொடர்பாக
10) தொழுகைத் திடலுக்கு செல்லும் மற்றும் திரும்பும் வழிகள் தொடர்பாக..
11) தொழுகைத் திடலுக்கு நடந்து செல்வது தொடர்பாக..
12) தொழுகைத் திடலுக்கு பெண்கள்/இளம்பெண்கள் செல்ல வேண்டுமா?
13) தொழுகைத் திடலில் முன், பின் சுன்னத் தொழுகைகள் உண்டா? அல்லது வீட்டிற்கு திரும்பி உண்டா?
14) பெருநாள் தொழுகைக்கு பாங்கு மற்றும் இகாமத் கிடையாது..
15) நெருநாள் தொழுகை எப்படி தொழுவது? (அதிகப்படியான தக்பீர்கள் எத்தனை? எப்பொழுது?)
16) அதிகப்படியான தக்பீர்களுக்கு கைகளை உயர்த்த வேண்டுமா?
17) தொழுகையில் எந்த அத்தியாயங்களை நபியவர்கள் ஓதினார்கள்?
18) பெருநாள் தொழுகை எந்த நேரத்தில் தொழுவது?
19) பெருநாள் பிறை செய்தி மறுநாள் கிடைத்தால் என்ன செய்வது?
20) பெருநாள் தொழுகையை தவற விட்டுவிட்டால்?
21) பெருநாள் குத்பா செய்தி பெண்களுக்காக..
22) பெருநாளில் திக்ரு மஜ்லிஸ் போன்ற இதர வணக்கங்கள் உண்டா?
23) பெருநாள் நிகழ்ச்சிகளில் ஆண் பெண் கலப்பு ஏற்படுவதை தடுப்பது பற்றி..
24) பெருநாள் அன்று பிரத்யேகமாக கப்ரு ஜியாரத் செய்வது நபிவழியா?
25) பெருநாளில் வீண் விரயங்கள் தவிர்க்கப்பட வேண்டும்..
மேற்கண்ட அனைத்து கேள்விகளுக்குக்கும் விடையை அறிந்துகொள்ள இந்த வீடியோவை முழுமையாக பார்வையிடவும்

ஜகாத்துல் ஃபித்ர் – ஏன்? எதற்கு? எப்படி?

எழுதியவர்/பதிந்தவர்/உரை 
இஸ்லாம்கல்வி இணையதளம் வழங்கும் 1434 ரமழான் சிறப்பு நிகழ்ச்சி
ஜகாத்துல் ஃபித்ர் – ஏன்? எதற்கு? எப்படி? (முழுமையான சட்ட விளக்கம்)
அல்குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படை தொகுத்து இஸ்லாம்கல்வி.காம் வாசகர்களுக்காக வழங்குகின்றார் ஆசிரியர் ஹாபிழ் முஹம்மத் மன்சூர் மதனி அவர்கள் (அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) – தம்மாம்)
  • ஜகாத்துல் ஃபித்ர் கொடுக்க வேண்டியதன் அவசியம் மற்றும் நோக்கம் என்ன?
  • இதனை யாருக்கு வழங்க வேண்டும்?
  • ஜகாத்துல் ஃபித்ர் – பற்றி குர்ஆன் வசனத்தை மேற்கோள் காட்டிய அறிஞர்களின் கருத்து என்ன?
  • ஜகாத்துல் ஃபித்ர் – பற்றி ஹதீஸ்கள் என்ன கூறுகின்றது?
  • இதனை யார் வழங்க வேண்டும்? யாருகெல்லாம் கடமை?
  • ஜகாத்துல் ஃபித்ர் -ராக எதை வழங்க வேண்டும்?
  • தற்போதுள்ள நடைமுறையிலுள்ள எடை அளவின் அடிப்படையில் எத்தனை கிலோ வழங்க வேண்டும்?
  • சிசுக்களுக்கும் (வயிற்றிலுள்ள குழந்தைகளுக்கும்) ஸதகத்துல் ஃபித்ர் – வழங்க வேண்டுமா?
  • எந்த நேரத்தில் இதனை வழங்குவது சிறந்து? ஜகாத்துல் ஃபித்ர் கொடுப்பதற்கான ஆரம்ப நேரம் முடிவு நேரம் என்ன?
  • பெருநாளுக்கு ஓரிரு நாட்களுக்கு முன் இதனை வழங்கலாமா?
  • பெருநாள் தொழுகையை முடித்துவிட்ட வந்த பின் ஜகாத்துல் ஃபித்ர்-வை வழங்கலாமா? அப்படி வழங்கினால்; அதன் நிலை என்ன?
  • அறபு நாடுகளில் உள்ள ஹைரியாக்கள் அதுபோன்ற நிறுவனங்களில் 10 தினங்களுக்கு முன் இதனை வழங்கலாமா? ஜகாத்துல் ஃபித்ர் பணமாக கொடுக்கலாமா?
  • ‘ஸதக்கதுல் பதன்’ என்றால் என்ன்?
  • ‘ஜகாத்துல் ஃபித்ர்’ – நாம் வசிக்கும் பிரதேசங்களில் வழங்குவதா? அல்லது சொந்த நாடு – ஊரில் அங்கு வழங்குவதா? நமது நாட்டிற்க்கு பணமாக அனுப்பி அங்குள்ளவர்கள் பணத்தினை பெற்றுக்கொண்டு தானியங்களாக வழங்கலாமா?
  • சமைத்து உண்ணுவதற்க்கு ஏதுவாக எண்ணை மற்றும் இறைச்சி மளிகை பொருட்களுடன் வழங்கலாமா?
  • இயக்கங்கள், அமைப்புக்கள் ஜகாத்துல் ஃபித்ர் நிதியை வழங்கலாமா? அவர்கள் தாமாதமாக வினியோகித்தால் அது ஜகாத்துல் பித்ராவில் சேறுமா? ஜகாத்துல் ஃபித்ர் நிதியை இயக்கங்கள் மிச்சப்படுத்தி வேறுவகைகளுக்கு பயன்படுத்தலாமா?
மேற்கண்ட அனைத்து கேள்விகளுக்கு விடையை அறிந்துகொள்ள இந்த வீடியோவை முழுமையாக பார்வையிடவும்  (வீடியோவை பார்வையிட கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்):
ஒளிப்பதிவு: Islamkalvi.com Media Unit
படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்

ஜித்தா துறைமுகத்தில் நோன்புப் பெருநாள் தொழுகை (அழைப்பிதழ்)

ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பின் சிறப்புகள்

நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைகளில் ஒன்றுதான் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் நோற்பது. இந்நோன்பை நோற்பதினால் வருடமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும். 

”யார் ரமளான் மாதத்தின் நோன்பை நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடமெல்லாம் நோன்பு நோற்றதற்குச்சமம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

ஒருவர் ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று அதை அடுத்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்றால் அவர் வருடம் முழுவதும் நோன்பு நோற்றவராக அல்லாஹ்விடத்தில் கருதப்படுவார். அதாவது, அல்லாஹ்விடத்தில் ஒரு நற்செயலுக்கு குறைந்தது பத்து நன்மைகள் கிடைக்கும். இந்த அடிப்படையில் ரமளான் மாத முப்பது நோன்பிற்கு முன்னூறு நன்மைகளும் ஷவ்வால் மாத ஆறு நோன்பிற்கு அறுபது நன்மைகளும் கிடைக்கும். மொத்தம் முன்னூற்றி அறுபதாகும். இதுவே ஒரு வருட நாட்களின் கிட்டத்தட்ட எண்ணிக்கையாகும். அல்லாஹ் மிகவும் நன்கறிந்தவன்.

இப்படிப்பட்ட மிக சிறப்புமிக்க நோன்பை பலர் நோற்பதில்லை, ரமலான் மாதத்தின் 30 நோன்பை நோற்ற நமக்கு இந்த ஆறு நோன்புகளை நோற்பது சிரமமான ஒன்றல்ல. இந்த ஆறு நோன்புகளையும் தொடர்ந்து நோற்க முடியாதவர்கள் விட்டுவிட்டாவது நோற்கலாம். ஆனால் ஷவ்வால் மாதம் முடிவதற்குமுன் நோற்க வேண்டும். யார் ரமலான் மாத விடுபட்ட நோன்பை நோற்க இருக்கின்றார்களோ அவர்கள், அவர்களின் கடமையான ரமலான் மாதத்தின் நோன்பை நோற்ற பின்புதான் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பை நோற்க வேண்டும்.

*எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும்அல்லது நாங்கள் தவறு
செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீதுசுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்கமுடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப்பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணைபுரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (அல் குர்ஆன்-2:286)*

Monday, August 5, 2013

புன்முறுவலின் மகத்துவம் - படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!

அரபுலகில் பிரபலமான இஸ்லாமிய அழைப்பாளர்களில் ஒருவரான ‘அஷ்ஷைக் நபீலுல் அவலி’ தனது ஒரு தஃவா அனுபவத்தை இவ்வாறு நம்முடன் பகிர்ந்து கொள்கின்றார்:
நான் அமெரிக்காவில் ஒரு முறை ஓர் இஸ்லாமிய சொற்பொழிவை நிகழ்த்திக்கொண்டிருக்கும் போது திடீரென ஒருவர் எழுந்து அவரது பக்கத்தில் இருந்த ஒரு கிறிஸ்தவ அமேரிக்கருக்கு திருக்கலிமாவை சொல்லிக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். நான் ஆனந்தத்தில் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று கூறி, நீர் இஸ்லாத்தை நேசித்ததற்குரிய காரணம் என்ன? இஸ்லாத்தை உமது வாழக்கை நெறியாக தேர்ந்தெடுத்ததன் காரணம் என்ன? என்று அவரிடம் வினவினேன்.
அதற்கவர் அளித்த பதில்: “நான் ஒரு மிகப் பெரிய செல்வந்தன்; பல கம்பனிகளுக்கு சொந்தக்காரன்; உலக இன்பங்களில் எந்தக் குறையும் எனக்கில்லை; ஆனால் நான் எனக்குள் நிம்மதியற்றிருக்கின்றேன். என்னிடம் பணி புரியும் ஒரு முஸ்லிம் இந்தியர் மிகக்குறைந்த சம்பளத்தையே ஊதியமாக பெறுபவர்; அவரை நான் பார்க்கும் போதெல்லாம் மலர்ந்த முகத்துடன் தான் காட்சியளிப்பார். இது எனக்குள் மிகப் பெரிய வியப்பை தந்ததுடன் பல கேள்விகளையும் எனக்குள் தொடுத்தது. நான் மிகப் பெரிய செல்வந்தன்; ஒரு நாளாவது எனக்கு மலர்ந்த முகத்துடன் இருக்க முடியவில்லை; ஆனால் சாதாரன ஒரு ஊதியத்தை பெறுகின்ற ஒரு தொழிலாளி எந்நேரமும் மலர்ந்த முகத்துடன் இருக்கு முடிகிறது என்றால் இதன் பின்னனி என்ன?
ஒரு நாள் அவரிடம் சென்று, “நான் உன்னுடன் சற்று உட்கார வேண்டும்? எனக்கு உன்னிடம் கேட்பதற்கு ஒரு கேள்வி உள்ளது. நீ எந்நேரமும் புன்முறுவல் பூத்த நிலையில், மலர்ந்த முகத்துடன் இருக்கின்றாயே! அதெப்படி உன்னால் முடிகிறது?”
அதற்கவர் சொன்னது: “நான் ஒரு முஸ்லிம். ‘அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ்; வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்) என நான் நம்பியிருக்கின்றேன்”.
அதற்கு நான் அவரிடம், “அப்படியானால் ஒரு முஸ்லிமுக்கு வாழ்நாள் முழுவதும் மலர்ந்த முகத்துடன் இருக்க முடியுமா?” எனக் கேட்டேன்.
அதற்கவர், “ஆம்” என்று பதிலளித்தார்.
நான், “அதெப்படி?” என மறுபடியும் ஆச்சரியத்தில் கேட்டேன்.
அதற்கவர், “நமது தலைவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் நமக்கு இப்படி கூறியிருக்கின்றார்கள்: ‘இறை நம்பிக்கையாளனின் காரியம் வியப்பிற்குரியதாகும்; நிச்சயமாக அவனது வாழ்கையின் சகல காரியங்களும் அவனுக்கு நன்மையளிப்பதாகவே உள்ளது. அவன் தனது வாழ்நாளில் ஒரு துன்பத்தை சந்திக்கும் போது (அல்லாஹ்விற்காக) அதை சகித்துக்கொள்கின்றான்; அது அவனுக்கு நன்மையாகிவிடுகின்றது; அவன் தனது வாழ்நாளில் மகிழ்ச்சியான ஒன்றை சந்திக்கின்றான் அப்போது அவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகின்றான் அதுவும் அவனுக்கு நன்மையாகிவிடுகின்றது. இந்நிலை ஓர் இறை நம்பிக்கையாளனுக்குத் தவிர வேறு எவருக்கும் இல்லை’. எனவே எமது காரியங்கள் அனைத்தும் இன்பத்துக்கும், துன்பத்துக்கும் மத்தியில் தான் உள்ளது; துன்பமெனில் அதை அல்லாஹ்விற்காக ஏற்றுக்கொள்வோம்; இன்பமெனில் நன்றியுடன் அல்லாஹ்வைப் புகழ்வோம். எனவே எமது மொத்த வாழ்க்கையும் நிம்மதியாகும்; ஈடேற்றமாகும்; இன்பமாகும்” என அவர் பதிலளித்தார். இது தான் என்னை இஸ்லாத்தில் நுழைய வைத்தது.”
‘அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ்’
(வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்) என்று கூறி அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

الله أكبر الله أكبر الله أكبر

அல்லாஹ் மிகப்பெரியவன்
இந்நிகழ்வு நமது வாழக்கைக்கு வழங்கும் படிப்பினைகள் என்ன?
சிலர் தஃவா (அழைப்புப் பணி) என்ற உடன் ஏதோ மலையை உடைப்பது போன்று சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றனர். எனக்கு உரை நிகழ்த்த முடியாதே! எனக்கு எழுத முடியாதே! என்னிடம் தஃவாவிற்காக செலவிட வசதி இல்லையே. இவ்வாறு தன்னிடம் இல்லாததைப் பற்றி அங்கலாய்த்துக் கொள்ளும் இவர்கள். தன்னிடம் உள்ளதை வைத்து இப்பணியை செய்யத் தவறி விடுகின்றனர் என்பது தான் வேதனையான விடயம். இது நமது சமூகத்தின் அதிகமானவர்களின் இன்றைய நிலையாகும்.
புன்முறுவல் பூப்பதற்கு மலர்ந்த முகத்துடன் இருப்பதற்கு எந்த ஒரு பணமோ வசதியோ தேவை இல்லை. தஃவாவிற்காக செலவிடுவதற்கு வசிதி இல்லையே என்று எண்ணும் பலர். தன்னிடம் உள்ள இந்த மிகப்பெரிய ஆயுதத்தை தஃவாவிற்கு பயன்படுத்தாது இருப்பது மிகப் பெரிய வேதனையாகும்.
அல்லாஹ்வின் தூதர் காட்டித்தந்த ஒரு பண்பை தனது வாழக்கையின் அணிகலனாக்கிக் கொண்ட ஒரு சாதாரன ஊதியம் பெறும் தொழிலாளி. அவருக்கு பல ஆயிரங்களை பல லட்சங்களை அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக செலவிட முடியாமல் இருக்கலாம்; ஆனால் அவரின் உயரிய ஒரு பண்பினூடாக இஸ்லாத்தில் கவரப்பட்டாரே மிகப் பெரிய செல்வந்தர் அவர் இஸ்லாத்திற்காக செலவிடும் ஒவ்வொரு ரூபாவிலும், நன்மையில் அவருக்கும் பங்கிருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்களா?. இதற்கு அல்லாஹ் வைத்திருக்கும் வெகுமதியை பார்த்தீர்களா?. நமது வாழ்வில் நாம் அர்ப்பமாக கருதிக்கொண்டிருக்கும் பலவற்றுக்கு இருக்கும் ஆற்றலை நாம் அறியாமல் இருப்பதுதான் மிகப்பெரிய அறிவீனம்.
ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் போதே மலர்ந்த முகத்துடன் வரவேற்பது இருக்கின்றதே! இது பல மணி நேர உரை, பல கோடிகளை செலவளிப்பதை விட வலிமை மிக்கதாகும். முஸ்லம்களிடம் அல்லாஹ்வின் தூதரின் இந்த உயரிய முன்மாதிரி குடிகொண்டிருக்குமனால் ஏனைய சமூகங்கள் எப்படித் தெரியுமா பேசக்கொள்வார்கள். ‘முஸ்லிம்கள் என்றாலே மலர்ந்த முகத்துடன் வரவேற்பவர்கள்தான்’. எந்த ஒரு பைசாவும் செலவாகாத இதையே இஸ்லாத்திற்காக செய்ய முன்வராத இவர்கள் வேறு அர்ப்பணிப்புகளை செய்ய முன்வருவார்கள் என்று எதிர்பார்ப்பது வெறும் கர்ப்பணையே ஆகும்.
எங்கே அல்லாஹ்வின் தூதர் கற்றுத் தந்த முன்மாதிரிகள் நமது வாழ்வில்?
‘உங்களது சகோதரனை மலர்ந்த முகத்துடன் வரவேற்பது உற்பட எந்த ஒரு நன்மையான காரியத்தையும் அற்பமாகக் கருதாதீர்கள்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி), முஸ்லிம்).
‘நபி (ஸல்) அவர்களை விட அதிகம் புன்முறுவல் பூக்கும் ஓருவரை பார்த்தில்லை’ என அப்துல்லாஹ் இப்னுல் ஹாரிஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத்).
‘நான் இஸ்லாத்தை ஏற்ற நாள் முதல் அல்லாஹ்வின் தூதரை புன்முறுவல் பூத்த நிலையிலேயே தவிர பார்த்தில்லை’ என ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் (புஹாரி).
அபூதர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; ‘உன் சகோதரனது முகத்தைச் சிரித்த முகத்துடன் நோக்குவதும் தர்மமாகும்!‘ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, இப்னு ஹிப்பான்).
தூய இஸ்லாத்தின் உறுப்பினர்களாக இருக்கும் நாம், அல்லாஹ்வின் தூதரின் உயரிய முன்மாதிரகளை நமது வாழ்வில் செயல்படுத்துவதன் மூலம் இஸ்லாத்தின் அழகை உலகிற்கு எடுத்துச் சொல்வோம்.
தொகுப்பு: அஸ்ஹர் ஸீலானி