Saturday, June 30, 2012

ஈரான் உலக அமைதிக்கு அச்சுறுத்தலா?!

Iran-atomதொடரும் அமெரிக்கஇஸ்ரேலிய தீவிரவாத செயல்களும், அதிகரித்து வரும் தடைகளும் ஈரான் அரசு மீதும், அந்நாட்டு மக்கள் மீதும் பிரயோகிக்கப்படுகிறது. இந்நிலையில், எவ்வித எதிர்ப்பும் ஈரானின் புறத்திலிருந்து உருவாகாத நிலையில் தாக்குதல் மிரட்டல்களையும் ஈரான் சந்தித்து வருகிறது. நியூக்ளியர் ஆயுதங்களை தயாரிக்க ஈரான் பெரும் ஆர்வம் கொண்டுள்ளது. ஈரான் உலக அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது’ என்று தவறான பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

எல்லாவிதமான வெளிநாட்டு ஆக்கிரமிப்பையும் தடுக்கும் உரிமை ஈரானுக்கு சட்டரீதியாக உண்டு. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற பி.பி.சி., மர்டோக்கின் மீடியாக்கள், ஏ.பி.சி., நியூயார்க் டைம்ஸ், சி.என்.என். உள்பட முக்கிய சியோனிச ஊடகங்கள் வாயிலாக இப்பிரச்சாரம் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகிறது. பல வருடங்களாக ஈரானை குறித்த உண்மைகளை வளைத்து ஈரானை பயங்கரவாத நாடாக சித்தரிக்கும் போக்கு நேர்மறையற்ற, எதிரி மனப்பான்மையுடன் நடத்தப்படும் ஊடக பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இத்துடன் இஸ்லாத்தையும் பயங்கரவாதமாக சித்தரிக்க முற்படுகிறார்கள்.

ஈரானுக்கு எதிரான 2 வது கட்ட போர்தான் ஊடகங்களை உபயோகித்து நடத்தப்படும் PROPAGANDA WAR என்றழைக்கப்படும் பிரச்சார யுத்தம். அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பிற்கு முன்னரும் இந்த ககீOகஅஎஅNஈஅ ஙிஅகீ தீவிரமாக நடத்தப்பட்டது நினைவிருக்கலாம்.

அமெரிக்காவிலும், இஸ்ரேலிலும் அணு ஆயுதங்களை நிர்மாணிக்கும் மிகப்பெரிய ஆயுத தொழிற்சாலைகள் உள்ளன என்ற பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் உண்மை என்னவெனில் சாதாரண மக்கள் மீது ஜப்பானிலும், ஈராக்கிலும் அணு ஆயுதங்களையும், பேரழிவு ஆயுதங்களையும் உலகில் உபயோகித்த ஒரே நாடு அமெரிக்கா ஆகும்.

இஸ்ரேல் அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் (NUCLEAR NON PROLIFERATION TREATY) இது வரை கையெழுத்திடவில்லை. இஸ்ரேல் ரகசியமாக அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது. இஸ்ரேலின் அணு ஆயுதங்களை கண்டும் காணாதது போல் நடிக்கும் அமெரிக்கா ஈரானிடம் கூறுகிறது, நீங்கள் அணு ஆயுதத்தை வைத்துக் கொள்ள உரிமையில்லை என்று. மேற்கத்திய நாடுகளும், முக்கிய சியோனிச ஊடகங்களும் இஸ்ரேலின் விரிவான அணு ஆயுத திட்டங்களை குறித்து வேண்டுமென்றே மூடி மறைக்கின்றன. மத்திய கிழக்கில் மிகப்பெரிய ஆபத்தாக திகழும் இஸ்ரேலின் மீதான கவனத்தை திசை திருப்புவதே இதன் நோக்கமாகும். இந்த கபட நாடகத்தை காணும் சர்வதேச சமூகமும் அமைதியாகவே இருந்து வருகிறது.

ஈரான் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் என்பதே முற்றிலும் அவதூறான பிரச்சாரமாகும். ஈரான் ஏதேனும் நாட்டை தாக்கவோ, தாக்குவோம் என்று மிரட்டல் விடுக்கவோ செய்யவில்லை. ஆனால், உண்மை என்னவெனில் எதிரி நாடுகளாக மாறியுள்ள அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் மற்றும் இஸ்ரேலின் நியூக்ளியர் ஏவுகணைகள் மூலமாக அச்சுறுத்தலை ஈரான் சந்தித்து வருகிறது.

அமெரிக்காவில் வரி செலுத்தும் யூதர்கள் பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் உதவுகின்றனர். இஸ்ரேலுக்கு நவீன ராணுவமும், நூற்றுக்கணக்கான அணு குண்டுகளும் கைவசம் உள்ளன. நிபந்தனைகள் ஏதுமின்றி அமெரிக்கா அளிக்கும் ஆதரவின் பின்புலத்தில் இஸ்ரேல் பல தடவை அண்டை அரபு நாடுகளுக்கு மிரட்டல் விடுத்து, அந்நாடுகளை ஆக்கிரமித்தும் உள்ளது.
iran president
லெபனானில் 5 தடவை அத்துமீறி நுழைந்து தாக்குதலை நடத்தியது. ஃபலஸ்தீன் மக்களுக்கு கடுமையான தடைகளை விதித்து அவர்களின் அன்றாட வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கியது. அவர்களின் நிலங்களை பலப்பிரயோகம் மூலம் கைப்பற்றி Jewish Settlement என்று அழைக்கப்படும் யூத குடியிருப்புகளை கட்டும் பணியை சர்வதேச சட்டங்களையும், சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளையும் புறக்கணித்துவிட்டு தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது. இஸ்ரேல் விரும்புவது அமைதியை அல்ல, மாறம்க தொடர்ச்சியான போரையும், தாக்குதலையும் தான் என்பதை அதன் முன்னாள், இன்றைய தலைவர்கள் வெளிப்படையாக கூறியுள்ளனர்.

2008 டிசம்பரிலும், 2009 ஜனவரியிலும் 360 குழந்தைகள் உட்பட 1400 நிரபராதிகளான ஃபலஸ்தீன் மக்கள் காஸ்ஸாவில் கொல்லப்பட்டதை நாம் மறந்துவிட்டோமா? உலகிலேயே மிகவும் வன்முறை குணம் கொண்ட நேர்மறையற்ற அரசுதான் இஸ்ரேல். நாசிகளைப் போலவே இன அடிப்படையிலான கொள்கையை ராணுவ சக்தியின் மூலம் நடைமுறைப்படுத்தி ‘அகன்ற இஸ்ரேலை’ (GREATER ISRAEL) உருவாக்க இஸ்ரேல் முயற்சித்து வருகிறது.

அமெரிக்காவின் ஆதரவாளர்கள் ஆட்சி புரிந்த, ஆட்சி புரியும் எகிப்து, ஜோர்டான், லெபனான், சவூதி அரேபியா, யு.ஏ.இ. ஆகிய நாடுகளில் மேரிலாண்ட் பல்கலைக்கழகமும், ர்ஸாக்பி இண்டர்நேசனலும் இணைந்து அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்பில் ‘மிகவும் அச்சுறுத்தலான இரண்டு நாடுகளின் பெயர்களை’ எழுதுமாறு கேட்டுக்கொண்டார்கள். பதிலளித்தவர்களில் 88 சதவீதம் பேர் அமெரிக்காவை மிகவும் அச்சுறுத்தலான நாடாக குறிப்பிட்டனர். 77 சதவீதம் பேர் இஸ்ரேல் என்று பதிலளித்தனர். 9 சதவீதம் பேர் மட்டுமே ஈரானின் பெயரை எழுதினர்.

ஐரோப்பிய கமிஷனின் ஐரோப்பிய பாரோமீட்டர் சர்வேயின் முடிவுகளும், மனித குலத்திற்கும், உலக அமைதிக்கும் மிகவும் அச்சுறுத்தலான நாடு இஸ்ரேல் என்றே குறிப்பிடுகின்றன. ஆகையால், இஸ்ரேலிடம் தான் அணு ஆயுதங்களை கைவிட நிர்பந்தம் அளிக்க வேண்டும் மாறாக ஈரானிடம் அல்ல. இஸ்ரேலின் மீது தான் தடைகளை கடுமையாக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த ‘ஈரான் மிரட்டல்’ அமெரிக்காவிடமிருந்தும், மேற்கத்திய நாடுகளிலிருந்தும் புதிய ஆயுதங்களை வாங்கி குவிக்கவும், ஃபலஸ்தீன் மீது உலகில் உருவாகிவரும் கவனத்தை திசை திருப்புவதற்குமாகும். அண்மையில் ஐ.நா.வின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ (UNESCO) ஃபலஸ்தீனை உறுப்பினராக அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.

ஈரான் ரகசியமாக அணு ஆயுதங்களை தயாரிக்கிறது என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. நேஷனல் இண்டலிஜன்ஸ் எஸ்டிமேட்டின் ஆதரவுடன் பென்டகனும், 16 பிரபல அமெரிக்க ரகசிய உளவு ஏஜென்சிகளும் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கவில்லை என்றும், ஈரான் ராணுவ ரீதியான அச்சுறுத்தல் இல்லை என்றும் உறுதி செய்துள்ளன.

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள ஏகாதிபத்திய உபகரணமான சர்வதேச அணுசக்தி ஏஜென்சி கூட ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கிறது என்பதை நிரூபிக்க உறுதியான ஆதாரங்களை அளிப்பதில் தோல்வியையே தழுவியது. நியூயார்க்கர் மேகஸினில் ஸீமூர் ஹெர்ஷ் (SEYMOUR HERSH) கூறியது போல, ‘ஈரானுக்குள் பல வருடங்களாக ரகசியமாக இயங்கிய பிறகும், நவீன செயற்கை கோள் மூலம் புகைப்படங்கள் எடுக்கப்பட்ட பிறகும், ஈரானிகளான பலரை உளவாளிகளாக பயன்படுத்திய பிறகும், அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் ஈரான் ரகசியமாக அணு ஆயுதம் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளதாக உறுதி செய்யும் எவ்வித ஆதாரங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது தான் இங்கும் (அமெரிக்காவிலும்) வெளிநாடுகளிலும் உள்ள ரகசிய புலனாய்வு துறை மற்றும் தூதரக பிரதிநிதிகளின் கருத்தாகும்’. சுருக்கமாக கூறினால் ஈரானின் அனைத்து அணுசக்தி திட்டங்களும், மின்சாரம்மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் அமைதியான, அனுமதிக்கப்பட்ட முறைகளில் உபயோகிப்பதற்காகும்.

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் நிபந்தனைகளின் அடிப்படையில் ஈரானின் அணு சக்தி திட்டம் அமைதியான, சட்டத்திற்கு உட்பட்ட அவசியத் தேவைகளுக்கு மட்டுமே உரித்தானது என்ற ஆதாரங்கள் தங்கள் வசம் இருந்த பிறகும், ஈரான் தடைகளுக்கும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கும் இலக்காக மாறியுள்ளது.

முக்கிய பிரச்சனை ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கிறதா? இல்லையா? என்பது அல்ல. மாறாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தலைமையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தை முன்னேறவிடாமல் பிற்படுத்தப்பட்ட நிலையிலேயே தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்பதே திட்டமாகும்.

ஈரான் மக்கள் மீது போர் தொடுப்பதை நியாயப்படுத்தும் கொடூரமான பொய்தான் இந்த அணு ஆயுத தயாரிப்பு பிரச்சாரம். ஈராக் விவகாரத்தில் நடத்தியது போன்று அமெரிக்க குடிமக்களை ஈரானுக்கு எதிரான போருக்கு தயார்படுத்தும் முயற்சிதான் இந்த நாடகங்கள். ஈராக்கில் இல்லாத ‘பேரழிவு ஆயுதங்கள் (WMD)’ என்ற மிரட்டலுக்கு பதிலாக ஈரானின் “அணு ஆயுதங்களை” குறித்து மக்களை திசை திருப்பும் பிரச்சாரம் வேகமாக நடைபெற்றுவருகிறது.

பத்தாண்டுகளுக்கும் மேலாக ஈராக் மக்கள் அமெரிக்க, பிரிட்டன் அதன் கூட்டணி நாடுகளின் மிகக் கொடூரமான தடைகளுக்கும், கூட்டுப்படைகளுக்கும், குண்டு வீச்சுகளுக்கும் பலியானார்கள். ஐந்து வயதிற்கு கீழான ஆறு லட்சம் குழந்தைகள் உள்பட இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட நிரபராதிகளான ஈராக்கின் அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டார்கள்.

அமெரிக்க பிரதிநிதி ஒருவர், ஈராக்கின் பிஞ்சுக் குழந்தைகள் கொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தி இவ்வம்று கூறினார். “நாங்கள் சிந்திப்பது இது போதுமான விலைதான் (The Price we think is worth it)”. இது மனப்பூர்வமான கூட்டுப்படுகொலையாகும். சதாம் ஹுஸைனின் ஆட்சியின் கீழ் இருந்த ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகவும், அவை உலகிற்கு அச்சுறுத்தல் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

ஆக்கிரமிப்பின் மூலமாக ஈராக்கை கைப்பற்றுவதை நியாயப்படுத்த அமெரிக்காவும், இஸ்ரேலும், பிரிட்டனும் இணைந்து ஜோடித்த பொய்களும், அசத்தியங்களும் அடங்கியது தான் இந்த குற்றச்சாட்டு. முக்கிய சியோனிச மீடியாக்கள் கொடூரமான பங்கை வகித்த இந்த பொய்ப்பிரச்சாரம் ஈராக்கை பயங்கரவாத நாடாக சித்தரிக்கவும், இரத்தம் சிந்துதலை நியாயப்படுத்தவும், பொது மக்களின் அபிப்ராயத்தை மாற்றி யெடுப்பதற்கும் மேற்கொள்ளப்பட்டது.

ஒரு தேசம் என்ற நிலையில் ஈராக்கை தகர்த்து எறிவது தான் ஆரம்ப லட்சியமாகும். ஒன்பது ஆண்டுகாலமாக நடந்த மிகக்கொடூரமான ஆக்கிரமிப்பிற்கு பிறகும் இப்பொழுதும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் அவர்களின் கைப்பாவைகளால் ஆளப்படும் புதிய ஈராக் சீரழிந்த தேசமாகவே காட்சியளிக்கிறது. இதனை மேற்கத்திய கல்வியாளர்கள் ‘நவீனமயத்தில் இருந்து விடுதலை’ DEMODERNISATION என்று அழைக்கின்றனர்.

ராணுவமும், போலீசும் உள்பட அனைத்து ஈராக்கிய ஸ்தாபனங்களும் தகர்க்கப்பட்டன. சுகாதாரத் துறையும், கல்வித்துறையும் சீர்குலைக்கப்பட்டு தற்போதும் அதே நிலைமை தொடருகிறது. சாலைகளும், பாலங்களும், மின்சார நிலையங்களும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களும், அருங்காட்சியகங்களும், பள்ளிக்கூடங்களும் தகர்ந்து கிடக்கின்றன.

அது மட்டுல்ல அமெரிக்கா, பிரிவினை மற்றும் வன்முறையின் வித்துக்களை விதைத்துள்ளது. அமெரிக்கா மற்றும் சியோனிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் ஈராக்கை பிளவுப்படுத்துவதே திட்டமாகும். குழந்தைகளும், பெண்களும் உள்பட இருபது லட்சத்திற்கும் அதிகமான அப்பாவி ஈராக்கிய மக்கள் கொலை செய்யப்பட்டனர். ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அகதிகளாக மாற்றப்பட்டனர். முற்றிலும் நிராயுதபாணிகளான மக்கள் மீது முன் கூட்டியே திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கொடூர ஆக்கிரமிப்பு தான் ஈராக் மீதான தாக்குதல்.

முன்பு நாசி ஜெர்மனி மட்டுமே இத்தகைய கொடூரமான போர் குற்றங்களையும், ஆக்கிரமிப்பு போர்களையும் புரிந்துள்ளது. ஈராக்கிற்கு எதிராக ஆக்கிரமிப்பு போரை திட்டமிட்டு அதனை நடைமுறைப்படுத்திய அமெரிக்காவும், அமெரிக்காவின் சேவகர்களும் விசாரணை செய்யப்பட வேண்டும்.

ஈராக்கை கொடூரமாக தாக்கி அழித்த பிறகு அமெரிக்காவும், கூட்டணி நாடுகளும் மனித உரிமை மற்றும் ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாக வேடமிட்டு லிபியாவையும் தகர்த்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் நேட்டோ படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டார்கள். கத்தாஃபி மீதான பழைய பகையையும், லிபியாவின் எண்ணெய் வளத்தின் மீதான ஆர்வமும் அமெரிக்கா மற்றும் கூட்டணி படைகளின் லிபியா தாக்குதலுக்கு காரணமாகும். தாக்குதலின் விதையை விதைப்பதற்காக பிரிவினையை துருப்பு சீட்டாக அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் பயன்படுத்துவது வழக்கமாகும். அரபுலக சர்வாதிகாரிகளுக்கு நேசத்திற்குரிய நாடாக திகழ்ந்தது தான் அமெரிக்காவின் பாரம்பரியமாகும்.

இன்று, அந்த நாடுகளில் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் கோரி நடக்கும் போராட்டங்களை ஆதரிக்கிறோம் என்ற பெயரில் சூழ்ச்சிகளை அரங்கேற்றவே அமெரிக்கா முயலும். ஒரு நாள் அமெரிக்காவிலேயே அந்நாட்டு குடிமக்களாலேயே ஆயுதப் போராட்டங்கள் உருவாகலாம். அப்பொழுது அமெரிக்கா என்ன செய்யும்?

முஅம்மர் கத்தாஃபியின் ஆட்சியின் கீழ் இருந்த லிபியாவைப் போலவே ‘மனித உரிமை மீறல்களுக்காக’ சிரியாவை அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. இது சாத்தான் வேதம் ஒதுவது போல் உள்ளது. ‘மனித உரிமைகள்’ என்ற வார்த்தையை கூற கூட உபயோகிக்க ஒரு அமெரிக்க அரசியல்வாதி வெட்கப்பட வேண்டும். மனித உரிமை மீறல்களுக்கு பிரசித்திப் பெற்ற அமெரிக்கா, சித்திரவதை, சித்திரவதைகளை பார்த்து ரசித்தல், அரசு பயங்கரவாதம், பாரபட்சம், அநீதி, இனவெறி என மனித உரிமை மீறல்களின் ஒட்டுமொத்த உருவமாக உள்ளது. உலகமெங்கும் சர்வாதிகாரிகளை ஆதரிக்கும் பாரம்பரியம் அமெரிக்காவிற்கு சொந்தம். இதர நாடுகளை குறித்து விமர்சிக்கும் தார்மீக உரிமை கூட அமெரிக்காவிற்கு இல்லை.

சிரியா மக்கள் மீது அமெரிக்கா காட்டும் கரிசனம் போலியானது. சிரியாவின் மீது தொடரும் போர் என்பது ஈரானுக்கு எதிரான போருக்கு சமமானது. அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையில் இடம் பெற்றுள்ள நாடுகளின் பட்டியலில் சிரியாவும், ஈரானும் இடம் பெற்றுள்ளன. ஆகையால் சிரியாவுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அது ஈரானின் மீதான தாக்குதலாகும்.

பஸ்ஸாருல் ஆஸாதின் தலைமையிலான சிரியா அரசை பதவி விலகச் செய்வதன் மூலம் ஈரானை தனிமைப்படுத்தி இப்பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதிக்கத்தை வலுப்படுத்தி ஈரானின் மீதான தாக்குதலை வலுப்படுத்துவதே அமெரிக்காவின் திட்டம். பஸ்ஸாருல் ஆஸாத் சிரியா மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்து அமெரிக்கா சிரியாவின் மீது நடவடிக்கை எடுக்கும் என்று கருதினால் அந்த எண்ணமே தவறானது. அரபு நாடுகளில் இஸ்லாமியாவாதிகளின் கரங்களில் ஆட்சி செல்வதை அமெரிக்கா எப்பொழுதும் விரும்பாது. எகிப்திலும், துனீசியாவிலும் இஸ்லாமியவாதிகளின் வெற்றியை வேண்டா வெறுப்பாக ஆதரிக்கும் கட்டாயம் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா விரும்பும் புதிய மத்திய கிழக்கு என்பது அமெரிக்காவின் சித்தாந்த கிழவன் பெர்னார்ட் லெவிஸின் மூளையில் உதித்த கொள்கையாகும். (The Emergence of Modern Turkey) என்ற நூலில் முஸ்தஃபா கமால் பாஷா உருவாக்கிய துருக்கியை மேற்காசியா முழுமைக்கும் முன்மாதிரியாக உயர்த்திகாட்டியிருந்தார் லெவிஸ்) அந்த கொள்கையோ, முஸ்தபா கமால் பாஷா, துருக்கியில் கிலாஃபத்தை ஒழித்துவிட்டு நடைமுறைப்படுத்திய இஸ்லாத்திற்கு விரோதமான தீவிர மதச்சார்பற்ற கொள்கை. இந்த கொள்கையின் அடிப்படையிலான புதிய மத்திய கிழக்கை உருவாக்குவதே அமெரிக்காவின் கனவாகும்.

அமெரிக்காவிற்கும், அதன் மேற்கத்திய கூட்டணி நாடுகளுக்கும் அணு ஆயுதங்களை குறித்த கவலை இருந்தால், இஸ்ரேலும் அடங்கிய மத்திய கிழக்கை அணு ஆயுதம் இல்லாத பிராந்தியமாக மாற்றுவதற்கு ஆக்கப்பூர்வமாக முயற்சிக்க வேண்டும்.

மனித உரிமைகளை குறித்த கவலை உண்மையில் அமெரிக்காவிற்கும் அதன் கூட்டணி நாடுகளுக்கும் இருக்குமானால், ஆப்கானிலும், ஈராக்கிலும் நேரடி மறைமுக ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும். குவாண்டனாமோ உள்ளிட்ட அனைத்து சித்திரவதை கூடங்களையும் இழுத்து மூட வேண்டும். காஸ்ஸா மக்கள் மீதான இஸ்ரேலின் ராணுவ தடையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இதர நாடுகளின் உள்நாட்டு பிரச்சனைகளில் தலையிடுவதை நிறுத்த வேண்டும்.

அரச பயங்கரவாதம், ஆக்கிரமிப்பு, தாக்குதல் ஆகியவற்றின் மூலம் உலகை அடக்கி ஆள திட்டமிடும் அமெரிக்காவின் தலைமையிலான பலமான ராணுவ சக்தியின் அராஜகங்களை உலக நாடுகள் அமைதியாக கண்டு கொண்டிருக்கிறது. இந்த அராஜகங்கள் ஒரு நாள் நம் மீதும் நிகழ்த்தப்படும் என்பதை உலக நாடுகள் உணர வேண்டும். ஆகவே தன்னை பாதுகாக்க முயலும் ஈரானின் உரிமையை ஆதரிப்பதும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலை எதிர்ப்பதும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் கடமையாகும்.

Thanks to Popular Front of India

Wednesday, June 27, 2012

من السجن إلى العرش!


الأمس قد ذهب باكياً وحزيناً
                                 لكي يبتسمَ المستقبلُ في التاريخِ!

ها هي أشعةٌ تُضيعُ النيلَ بياضاً
                              وتخرق ظلام مصر كالصاروخِ!
فإذا قد ظهر فارسُ القومِ مبتسماً
                              ليزرعَ السلامَ ولو من المريخِ !

وقد كان التاريخُ ممزقاً ومخرماً
                                 لكي يُكتب في صفحات الغد بالسلامِ!
أنت ... وأنا ... وهو حُجيراتٌ في الصحراء
                               ولكن سنبني مستقبل العرب بالإسلامِ!

هل تعرفون "الكرسي" لم يكن راضياً للجلوس عليه
                              حتى يأتي الـ"مرسي" قائداً لأم الدنيا من الإخوان!!

                                      -محمد ظافر (أبو أريج)
 

ஒரு கனவு நனவாகிறது!


Ø  ஒரு தேசத்தின் மகுடம்!
Ø  வரலாறு கிழித்த கோடு!
Ø  சிறையிலிருந்து
        சிம்மாசனம் வரை!

ஓர் உதய சூரியனின்
தார்மீகப் புறப்பாடு!
அங்கலாய்க்கும்
அரபு தேசங்களை
ஒளிக் கற்றைகளால்
ஓர் கற்றையாக்கட்டும்!

ஆட்சி மோகத்தில்
வரலாற்றைத் தொலைத்த
வரலாறுகளைத்தான்
கடந்த நூற்றாண்டுகள்
பதிந்து வைத்துள்ளன!

இன்றோ - ஓர்
வரலாறு படைக்கவே
இஹ்வானிய தூதன்
ஆட்சியேறுகிறான்!

பாரான் தேசத்தில்
பதிவிரங்கிய வைரஸ் கொல்லி
ஃபிஅவ்னிய சித்தாந்தத்தின்
சீர்திருத்த நாயகன்!

அரை நூற்றாண்டு
அடம்பிடிக்க - இன்று
வரலாற்றில்
இடம்பிடித்த
தவம் பெற்ற தாசன்!

சத்தியம் கோலோச்ச
சர்வாதிகாரத்தின் சரனடைவு!

கேள்விகளெல்லாம்
வேள்விகளாகிப் போன
இருட்டறைச் சங்கதி வரலாற்றில்
புலர்ந்த விடிவெள்ளி!

உலக சந்தையில்
காலாவதியாகிப்போன
சமூகப் பண்டங்களுக்கு
கிராக்கி அதிகரிக்க
இன்னும் நாட்கள்
தொலைவிலில்லை!!

ஹஸனுல் 'பன்னா'வின் கனவு
நனவாகும் இன்னாள்
நபியின் சுன்னாவும்
மேடையேற இருக்கமாய்
இறையை இறைஞ்சுகிறோம்!

பல ஈமானிய உள்ளங்களின்
ஏக்கம் தோய்ந்த வேண்டுதல்
பலனற்றுப் போகவில்லை!!
                 - அபூ அரீஜ்

Monday, June 25, 2012

Plz don't forget to ask Duaa

Asslam alikum

It's Media

A Hadith

அஸ்ஸலாமுஅலைக்கும்

Love Your MOM

உண்மை வலம்

Positive Thinker

Share and Inspire Others ♥♥

(SHARELINK FOR MOBILE USERS): http://www.facebook.com/sharer/sharer.php?u=https%3A%2F%2Fwww.facebook.com%2Fphoto.php%3Ffbid=465047053521469&set=a.426999697326205.118131.426973860662122

La Ilaha Illallah!

»Like@share«

¤sm¤

யானைக்கு ஒரு காலம் என்றால் பூனைக்கும் ஒரு காலம் வரும்!

ஃபிர்அவ்ன்

Please Pray for Our Arkani Muslims

THIS IS THE MEDIA!!

Sunday, June 24, 2012

Talking Picture

முஸ்லிம்கள் திசையை வணங்குகிறார்களா?!

By: PJ
"ஒரே ஒரு கடவுளை மட்டும் வணங்குவதாகக் கூறிக்கொள்ளும்முஸ்லிம்கள் மற்ற மதத்தவர்களைப் போல பல கடவுள் வழிபாடு செய்பவர்களாகவே உள்ளனர்” என்பது மாற்று மதத்தவர்களின்விமர்சனங்களில் முக்கியமானதாகும்.”

இவ்வாறு விமர்சனம் செய்வதற்குச் சிலசான்றுகளையும் முன் வைக்கின்றனர். முஸ்லிம்கள் ஒரே கடவுளை வணங்குவதாகக்கூறிக் கொண்டாலும் உண்மையில் அவர்கள் மேற்குத் திசையைத் தான்வணங்குகின்றனர். எல்லாப்பள்ளிவாசல்களும் மேற்கு நோக்கித் தான் கட்டப்பட்டுள்ளன என்பது அவர்கள் எடுத்துக் காட்டும்சான்றுகளில் ஒன்றாகும்.

பாமர மக்கள் மட்டுமின்றிபண்டிதர்களும் கூட இவ்வாறு விமர்சனம் செய்துள்ளனர். பாரதியார் கூட முஸ்லிம்களைப் பற்றிக்குறிப்பிடும் போது ”திக்கை வணங்கும் துருக்கர்” எனப் பாடியுள்ளார்.

முஸ்லிம்கள் திசையை வணங்குவதாகக்கூறுவதே அடிப்படையில் தவறான வாதமாகும். மக்கா நகரில் கஃபா எனும் ஆலயம்இருக்கிறது. அந்தஆலயத்தை நோக்கித் தொழ வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் கட்டளை. மேற்குத் திசையை நோக்கித் தொழவேண்டும் என்று கட்டளையிடப்படவில்லை.

மக்காவில் அமைந்த கஃபா ஆலயம்இந்தியாவுக்கு மேற்கில் உள்ளதால் இந்திய முஸ்லிம்கள் மேற்கு நோக்கி ஏக இறைவனைவணங்குகின்றனர்.

உலக முஸ்லிம்கள் அனைவரும் மேற்குநோக்கித் தொழ மாட்டார்கள். தொழவும் கூடாது.
மக்காவிற்கு மேற்கில் உள்ளவர்கள்கிழக்குத் திசை நோக்கியும், மக்காவுக்கு வடக்கே உள்ளவர்கள் தெற்குத் திசை நோக்கியும்மக்காவுக்கு தெற்கே உள்ளவர்கள் வடக்குத் திசை நோக்கியும் தொழுகின்றனர்.

உலக முஸ்லிம்கள் அனைவரும் மேற்குத்திசை நோக்கித் தொழுதால் தான் முஸ்லிம்கள் திசையை வணங்குகிறார்கள் என்றவிமர்சனத்தில் உண்மை இருக்க முடியும்.

முஸ்லிம்கள் மேற்குத் திசையைவணங்குகிறார்கள் எனக் கூறுவது வேண்டுமானால் தவறாக இருக்கலாம். கஃபாவின் திசையை வணங்குகிறார்கள்என்று கருதலாம் அல்லவா? என்று மற்றொரு சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம்.

இதுவும் கூட தவறான எண்ணம் தான். ஒன்றை நோக்குவது அதை வணங்குவதாக ஆகும்என்பது அறிவுக்குப் பொருந்தாத வாதமாகும்.

மனிதர்கள் எல்லா நிலையிலும் ஏதேனும்ஒரு திசையை நோக்காமல் இருக்க முடியாது. ஒரு காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் ஒன்றுமே செய்யாமல்இருந்தாலும் ஏதேனும் ஒரு திசையை நோக்குவதைத் தவிர்க்கவே இயலாது. எனவே நோக்குவதையெல்லாம் வணக்கம் என்றுயாருமே கூற மாட்டார்கள். வணங்குவது வேறு, நோக்குவது வேறு. இவ்விரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொண்டால்இந்தச் சந்தேகம் விலகிவிடும்.

ஒரு பொருளை வணங்குவது என்றால் நமதுகுறைகளைத் தீர்க்கும் ஆற்றல் அதற்கு இருக்கிறது. நாம் தவறு செய்தால் நம்மைத்தண்டிக்கும் வலிமையும் அதற்கு இருக்கிறது என்று நம்பி அதையே கடவுளாகப் பாவித்தால்தான் அதை வணங்குகிறார்கள் எனக் கூற முடியும்.

கஃபா எனும் ஆலயத்தைப் பற்றிமுஸ்லிம்கள் இப்படி நம்புகிறார்களா? நிச்சயமாக இல்லை.

கஃபா ஆலயம் நம்மைப் பாக்காது. நமக்கு எந்த உதவியும் செய்யும் ஆற்றல்அதற்குக் கிடையாது. நாம்செய்யும் தவறுகளுக்காக அந்த ஆலயத்தால் நம்மைத் தண்டிக்க முடியாது. மற்ற பொருட்களெல்லாம் அழிந்து போகும்போது அந்த ஆலயம் கூட அழிந்து போய்விடும் என்று தான் முஸ்லிம்கள் நம்புகிறார்கள். அப்படித் தான்நம்ப வேண்டும்.

கஃபா ஆலயமே! நீ தான்எங்களின் துன்பங்களைத் துடைக்க வேண்டும் எங்கள் வாழ்வை வளப்படுத்த வேண்டும் என்றுஇஸ்லாத்தைப் பற்றி சிறிதளவு ஞானமுள்ள முஸ்லிம்கள் கூட நினைப்பதில்லை. நினைக்கவும் கூடாது.

கஃபா எனும் ஆலயத்தை நோக்கித் தொழுமாறுகட்டளையிடும் திருக்குர்ஆன் அக்கட்டளையுடன் முக்கிய அறிவுரையையும் சேர்த்துக்கூறுகிறது.

”நீங்கள் எத்திசையில் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின்திருமுகம் உள்ளது. (அல்குர்ஆன் 2 : 15) என்பது தான் அந்த அறிவுரை.

கஃபாவை நோக்கும் போது கஃபா தான்கடவுள் என்றோ கஃபாவுக்குள் தான் கடவுள் இருக்கிறான் என்றோ எண்ணி விடக் கூடாது. என்று தெளிவாக அறிவுறுத்திவிட்டுத்தான் கஃபாவை நோக்குமாறு குர்ஆன் கட்டளையிட்டுள்ளது.

எனவே முஸ்லிம்கள் மேற்கையும்வணங்கவில்லை. கஃபாவையும்வணங்கவில்லை. கஃபாஇருக்கும் திசையையும் வணங்கவில்லை. மாறாக கடவுளின் கட்டளைப்படி கஃபாவை நோக்கியவர்களாக அந்த ஒருகடவுளைத் தான் வணங்குகிறார்கள்.

கஃபாவை நோக்கி முஸ்லிம்கள்அல்லாஹ்வைத் தான் வணங்குகிறார்கள் என்பதை தொழுகையில் கூறப்படும்ஜெபங்களிலிருந்தும் உறுதி செய்யலாம்.

தொழுகையைத் துவக்கும் போது அல்லாஹ்பெரியவன் என்று தான் முஸ்லிம்கள் கூறுவார்கள். தொழுகையின் ஒரு நிலையிலிருந்துமற்றொரு நிலைக்கு மாறும் போதும் அல்லாஹ் பெரியவன் என்று தான் கூறுவார்கள். தொழுகைக்கு உள்ளேயும் அல்லாஹ்வைத் தான்புகழ்வார்கள்.

இந்த இடத்தில் மற்றொரு சந்தேகம்சிலருக்கு ஏற்படலாம். கடவுளை வணங்கும் போது நோக்குவதற்கு கஃபா ஆலயத்தைக்குறிப்பாக ஏன் தேர்வு செய்ய வேண்டும்? என்பது தான் அந்தச் சந்தேகம். இந்தச் சந்தேகத்திற்கும்திருக்குர்ஆன் தெளிவான விடையை வைத்திருக்கிறது.

இஸ்லாமிய நம்பிக்கையின்படி கடவுள் ஒரேஒரு ஜோடி மனிதர்களைத் தான் படைத்தான். அந்த ஒரே ஒரு ஜோடியின் மூலமாகத் தான்மனித குலம் பல்கி இன்று அறுநூறு கோடியைத் தாண்டியுள்ளது.

கடவுளால் முதன் முதலில் படைக்கப்பட்ட ஆதாம், இப்போது மக்கா நகரம் என்றழைக்கப்படும்பகுதியில் இப்போது கஃபா ஆலயம் இருக்கும் இடத்தில் ஒரே இறைவனை வணங்கவதற்காக ஒருஆலயத்தை எழுப்பினார்.

உலகில் ஒரே கடவுளை வணங்குவதற்காகமுதலில் எழுப்பப்பட்ட ஆலயம் என்பதால் அதை நோக்கித் தொழுகை நடத்துமாறு இஸ்லாம்கட்டளையிடுகிறது. கஃபா ஆலயத்தை நோக்குமாறு கட்டளையிட்டதற்கு இது தான்முக்கிய காரணம்.

மனித சமுதாயத்திற்கு (இறைவனை வணங்குவதற்காக) முதலில் அமைக்கப்பட்ட ஆலயம் பக்கா (எனும் மக்கா) வில் உள்ள ஆலயமாகும்.
(அல்குர்ஆன் 3 : 36)

முதன் மனிதரால் உலகின் முதல் ஆலயமாகஎழுப்பப்பட்ட ஆலயத்தை நோக்கி அந்த ஒரே இறைவனை வணங்குவது மிகவும் பொருத்தமானதாகவும்உள்ளது.

கஃபா ஆலயத்தை முஸ்லிம்கள்வணங்குவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள மற்றுமொரு சான்றையும் பார்க்கலாம்.

கஃபா ஆலயம் எத்திசையில் இருக்கிறதுஎன்று கண்டு பிடிக்க முடியாத நிலை ஒருவருக்கு ஏற்படுவதாக வைத்துக் கொள்வோம். அந்த நிலையில் இருப்பவர் எந்தத்திசையை நோக்கியும் தொழலாம். தொழுது முடித்த பின்னர் அவர் தொழுதது கஃபாவுக்கு எதிரானதிசை என்பது தெரிய வந்தால் ஏற்கனவே தொழுததை மீண்டும் தொழ வேண்டியதில்லை என்பதுஇஸ்லாத்தின் கோட்பாடு.

கஃபா ஆலயம் தான் வணங்கப்படுகிறதுஎன்றிருந்தால் கஃபா ஆலயம் இருக்கும் திசை தெரியாவிட்டால் தொழக் கூடாதுஎன்று கட்டளையிடப்பட்டிருக்கும். அல்லது தொழுத பின் கஃபா இருக்கும் திசையில் தொழவில்லைஎன்பது தெரிய வந்தால் மீண்டும் தொழ வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு கட்டளையிடப்படாததால்முஸ்லிம்கள் கஃபாவைக் கடவுளாகக் கருதுகிறார்கள் என்பதும், கஃபாவை வணங்குகிறார்கள் என்பதும்முற்றிலும் தவறானது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இந்த இடத்தில் சிலருக்கு மற்றொரு சந்தேகம்ஏற்படலாம்.
கஃபாவை நோக்கி கடவுளை வணங்குமாறுகூறாமல் அவரவர் விருப்பத்தின் பால் இதை விட்டு விடலாமே! என்பதே அந்தச் சந்தேகம்.

தொழுகை எனும் வணக்கத்தை முஸ்லிம்கள்ஓரிடத்தில் கூட்டாக நடத்த வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. பலரும் கூட்டாகக் குழுமி வணங்கும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையை நோக்கி நின்றால் அதில் கட்டுப்பாடோ ஒழுங்கோஇருக்காது. அனைவரும்ஒரே திசையை நோக்கியவர்களாக நின்றால் தான் அதில் ஒழுங்கு இருக்கும்.

ஒரு வீட்டில் ஒரு குடும்பத்தில்உள்ளவர்கள் தனித்தனியாக தொழும் போது கூட ஒழுங்கு அவசியமானது தான். ஒருவர் வடக்கு நோக்கியும் மற்றொருவர்தெற்கு நோக்கியும் இன்னொருவர் கிழக்கு நோக்கியும் வேறொருவர் மேற்கு நோக்கியும்தொழுதால் அதில் கூட ஒழுங்கின்மை தான் வெளிப்படும்.

இந்த ஒழுங்கை ஏற்படுத்துவதற்காகத் தான்ஏதாவது ஒரு திசையை நோக்குமாறு அனைவருக்கும் கட்டளையிட வேண்டி வருகிறது.

இதைப் புரிந்து கொண்டவர்கள்முஸ்லிம்கள் திசையையோ, கஃபா ஆலயத்தையோ வணங்குகிறார்கள் என்று கூறமாட்டார்கள்.

Saturday, June 23, 2012

விளக்கை நோக்கி வரும் ‘விட்டில் பூச்சிகள்’ போல

- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)

எனக்கும் உங்களுக்குமுள்ள உதாரணம் ஒரு மனிதனைப் போன்றதாகும். அவர் தீ மூட்டினால் அவரைச் சூழ அதிலிருந்து ஒளி வீசியபோது விட்டில் பூச்சிகளும் தீயில் விழும். இதர பூச்சிகளும் அதில் விழலாயின. அந்த மனிதரோ அவற்றைத் தீயில் விழாமல் தடுத்துக் கொண்டிருந்தார். எனினும், அவை அவரையும் மீறி நெருப்பில் விழுகின்றன.

‘இதனைப் போன்று (பாவங்களைப் புரிந்து) நரக நெருப்பில் நீங்கள் விழாமல் தடுக்க உங்கள் இடுப்புக்களைப் பிடித்து நான் இழுத்துக் கொண்டிருக்கிறேன். நரகைவிட்டும் வாருங்ககள்! நரகைவிட்டும் வாருங்கள்! எனக் கெஞ்சிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீங்களோ என்னையும் மீறி அந்த நரகப் படுகுழியில் விழுந்து கொண்டிருக்கிறீர்கள். என நபி(ச) அவர்கள் கூறினார்கள்’
(அறி: அபூ ஹுரைரா(ரழி) – ஆதா: முஸ்லிம்)

அழகிய உவமைகளையும், உதாரணங்களையும் கூறி கருத்துக்களைத் தெளிவுபடுத்தும் நபி(ச) அவர்கள் இங்கே தனக்கென ஒரு உதாரணத்தைக் கூறுகின்றார்கள்.

தன்னை தீ மூட்டிய ஒரு மனிதனாகச் சித்தரிக்கின்றார்கள். அவர் மூட்டிய தீ பற்றியெரியும் போது விட்டில் பூச்சிகள் அந்த நெருப்பில் போய் விழுகின்றன. இங்கே மக்கள் விட்டில் பூச்சிகளுக்கு ஒப்பிடப்படுகின்றனர். நெருப்பு நரக நெருப்புக்கும், தீமைக்கும் உவமானமாகக் கூறப்படுகின்றது. இந்த நல்ல மனிதரோ நெருப்பில் விழும் விட்டில் பூச்சிகளைத் தடுக்கின்றார். அந்த மனிதர் நெருப்பில் விழும் பூச்சிகள் மீது அன்பு கொள்கிறார். அவை நெருப்பின் கவர்ச்சியால் அதை நல்லது என எண்ணி ஏமாந்து அதில் விழுந்து வெந்து கருகுவதை வெறுக்கிறார். அவற்றை அந்த ஆபத்திலிருந்து காக்க அபார முயற்சி எடுக்கின்றார். அந்தத் தீ மூட்டிய மனிதனின் இந்த முயற்சியைத்தான் தனது பணியாக நபி(ச) அவர்கள் அறிவிக்கிறார்கள். பாவத்தில் இருக்கும் அற்ப இன்பத்திற்காகவும், நரகத்திற்கு இட்டுச் செல்லும் பாவ காரியங்களில் காணப்படும் வெளிப்படையான சுகத்தையும் கண்டு ஏமாந்து போய் நரகை நோக்கி விரையும் மக்கள் அந்த மனிதரின் முயற்சியையும் முறியடித்துவிட்டு நரகத்தில் விழும் விட்டில் பூச்சிகளுக்கு உவமிக்கப் படுகின்றார்கள்.

இந்த உதாரணத்தில் மனிதனின் இயல்பு, தீமையின் இயல்பு, நபியின் பணி என்பன அழகாகச் சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளன.

மனிதன் பலவீனமானவன், வெளிக்கவர்ச்சியில் ஏமாறும் இயல்பு கொண்டவன். நெருப்பு கொழுந்து விட்டு எரியும் போது பார்ப்பதற்குத் தங்கம் போல ஜொலிக்கலாம். அழகாகத் தான் காட்சியளிக்கும். இதைக் கண்டு ஏமாறும் விட்டில் பூச்சிகளின் பலவீனம் மனிதனுக்கு இருக்கின்றது.

எனவே, பாவங்களின் பக்கம் மனிதன் இயல்பாக சாய்ந்து விடுகின்றான். அதில் விழுந்து தன் வாழ்வை இழந்த பின்னர்தான் அவனுக்கு அதன் தீமை விளங்குகின்றது. ஆனால், அதன் பின் அவனே விரும்பினாலும் விழுந்த பாவக் கிடங்கிலிருந்து அவனால் மீண்டு வர முடியாமல் போய்விடுகின்றது. பாவத்திற்கு அடிமையாகிவிடுகின்றான். அதன் பின் அவனுக்கு எவ்வளவு போதனை செய்யப்பட்டாலும் தவறுகிறான், விடத்தான் வேண்டும் என்னால் விட முடியாமல் இருக்கின்றது என்று கூறும் நிலைக்கு ஆளாகிவிடுகின்றான்.
இந்த மனிதன் பலவீனமானவனாகப் படைக்கப்பட்டிருந்தாலும் அவனுக்குப் பகுத்தறிவை வழங்கி அவனை அல்லாஹ் பலப்படுத்தி இருக்கின்றான். அவனுக்கு மனச்சாட்சியை வழங்கி தீமை செய்யும் போது குறுகுறுக்கும் மனநிலையை வழங்கி பாதுகாப்புக்கான ஏற்பாட்டைச் செய்துள்ளான். நபிமார்கள், ரஸுல்மார்களை அனுப்பி அவர்கள் மூலமாக இது நன்மை, இது தீமை, இதைச் செய்யுங்கள், அதைச் செய்யாதீர்கள் என போதனை செய்துள்ளான். எனினும் மனிதன் இத்தனை தடைகளையும் தாண்டி தவறில் போய் விழுகின்றான்.

பாவத்தின் இயல்பு!
பாவங்களும், தீய காரியங்களும் மனிதனைக் கவரும் தன்மை கொண்டவை. விபச்சாரம், போதைப் பழக்கம், ஆபாசம், ஆடல், பாடல், இசை இவை எல்லாம் பார்ப்பதற்கு இன்பமாய்; இருக்கும். மனிதனை மயக்கும் தன்மை கொண்டதாய் இருக்கும். ஆனால், இவற்றில் விழுபவர்கள் உலகத்தில் சில வினாடிகள் இன்பத்தில் திழைத்துப் போனாலும் போகப் போக இதன் கொடூரத்தை உணர ஆரம்பிக்கின்றனர்.

ஆனால், நல்ல மனிதனோ தனக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் பகுத்தறிவைப் பயன் படுத்தி பாவத்தின் கவர்ச்சியில் மயங்காமல் இது தவறு என்பதை உணர்ந்து கொள்கின்றான். அல்லாஹ் வழங்கிய வஹி எனும் வழிகாட்டல் மூலம் ‘இது தவறு இதிலிருந்து நான் என்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்’ என்ற உணர்வைப் பெறுகின்றான். எனவே தவறை விட்டும் ஒதுங்கிவிடுகின்றான்.

பாவங்கள் கவர்ச்சியானவைதான். ஆனால் ஆபத்தானவை. ‘மின்னுவதெல்லாம் பொன்னல்லவே!’ தீமையின் கவர்ச்சியால் கட்டுண்டு ஏமாந்து அதில் போய் விழுபவர்கள் நெருப்பில் விழும் விட்டில் பூச்சிகளுக்கு ஒப்பிடப்படுகின்றனர்.

இந்த உவமையில் நபி(ச) அவர்கள் நெருப்பில் விழும் விட்டில் பூச்சிகளைத் தடுக்கும் மனிதனைப் போல் பாவங்களில் நீங்கள் விழுந்து அழிந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் உங்களது இடுப்பைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கின்றேன் என்று கூறுகின்றார்கள்.

நபி(ச) அவர்கள் இந்த மக்கள் மீது கொண்டிருக்கும் அன்பையும், அவர்களின் பாதுகாப்பு விடயத்தில் அவர்கள் எடுத்திருக்கும் அக்கறையையும் இந்த உதாரணம் எடுத்துக் காட்டுகின்றது.

நீங்கள் ஒரு தவறைச் செய்யும் போது இந்த உதாரணத்தை சற்று எண்ணிப் பாருங்கள்.

நீங்கள் வட்டி வாங்குவதற்காக ஒரு வங்கிப் படியில் ஏறப்போகின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த வங்கியை நெருப்புக் கிடங்காக எண்ணிக் கொள்ளுங்கள். நீங்கள் அதை நோக்கிப் போகின்ற போது நபி(ச) அவர்கள் உங்களது இடுப்பைப் பிடித்துக் கொண்டு ‘போக வேண்டாம்’ ‘போக வேண்டாம்’ என்று தடுக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நபி(ச) அவர்களின் கரங்களைத் தட்டிவிட்டு உள்ளே போகப் போகின்றீர்களா? அல்லது நபியின் அன்பான உபதேசத்தைக் கேட்டுப் பாவத்தைக் கைவிடப் போகின்றீர்களா? சற்று எண்ணிப் பாருங்கள்.

நபியவர்கள் தடுத்தவை எதுவாக இருந்தாலும் அது எம்மை நரகத்திற்குத் தான் இட்டுச் செல்லும். எனவே தான் உங்களுக்கு ஏவப்பட்டதை முடிந்தவரை எடுத்து நடவுங்கள். நான் தடுத்தவற்றை விட்டும் முற்று முழுதாகத் தவிர்ந்து நடந்து கொள்ளுங்கள் என நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபி(ச) அவர்கள் இன்று எம்மத்தியில் இல்லையென்றாலும் அவர்களது போதனை மறுமை வரையிலும் எம்முடன் இருந்து அவர்களது பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அவர்களது போதனைகள் எமது இடுப்புக்களைப் பிடித்து இழுத்துக்; கொண்டிருக்கின்றன.

பணியின் அவசியம்
பாவம் கவரும் ஆற்றல் கொண்டது. மனிதன் மயங்கும் பலகீனம் கொண்டவன். எனவே, பாவத்தைப் பற்றி எச்சரிக்கை தொடர்ச்சியாகச் செய்யப்பட வேண்டும். மயங்கும் தன்மை கொண்ட மனிதனின் மயக்கம் தெளியும் அளவுக்கு அவனுக்கு தீமையின் கொடூரமும், போலித் தன்மையும் எடுத்துச் சொல்லப்பட வேண்டும். நபி(ச) அவர்களது போதனை அவர்களது வாரிசுகளாகிய உலமாக்களாலும், நபியின் வழிமுறையைப் பின்பற்றுகின்ற முஸ்லிம்களாலும்; எடுத்துச் சொல்லப்பட வேண்டும். விளக்கில் விழும் விட்டில் பூச்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கான பணியைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் இந்த உதாரணம் உணர்த்துகின்றது.

நீங்கள் விட்டில் பூச்சிகளா? அல்லது தீயில் விழும் பூச்சிகளைத் தடுக்கும் பணிகளைச் செய்பவர்களா? என்பதைச் சிந்தித்து முடிவு செய்யுங்கள்.

மூன்று செய்திகள்

-முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி.
அல்லாஹ்வின் தூதர் மனித சமூகத்திற்கு வழங்கிய நற்போதனைகள் ஏராளம் ஏராளம். அவைகளில் மூன்று விடயங்களாக இடம்பெற்ற செய்திகளுல் சில செய்திகளை மாத்திரம் இங்கு தொகுத்துள்ளேன். இதிலுள்ள செய்திகளை அனைவரும் படித்து பயன்பெற வேண்டுமென்பதையே நான் வல்ல நாயனிடம் பிரார்த்திக்கின்றேன்.

ஈமானின் உண்மையான சுவையை கண்டுகொண்டவர்:
“எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை);
  1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது,
  2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது,
  3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), ஆதாரம்: புஹாரி).
இவரல்லவோ முஃமின்!
  1. எவர் அல்லாஹ்வையும், மறுமையையும் நம்புகின்றாரோ அவர் அண்டை வீட்டாரை நோவிக்காமல் இருக்கட்டும்.
  2. எவர் அல்லாஹ்வையும், மறுமையையும் நம்புகின்றாரோ அவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும்.
  3. எவர் அல்லாஹ்வையும், மறுமையையும் நம்புகின்றாரோ அவர் நல்லதை பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்.
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள், ஆதாரம்: புஹாரி).

மார்கக் கல்வியின் சபைகளை தேடிச் செல்வோம்:
“நபி(ஸல்) அவர்கள் மக்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் நபி(ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் சென்றார். அவ்விருவரும் நபி(ஸல்) அவர்களின் சபையில் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர்:
  1. வட்டமான அந்தச் சபையில் ஓர் இடைவெளியைக் கண்டபோது அதில் அமர்ந்தார்.
  2. மற்றவரோ சபையின் பின்னால் அமர்ந்து வெட்கப்பட்டு (கடைசியில் உட்கார்ந்து)விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டான்.
  3. மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்தினான்”.
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூவாகிதில்லைஸி (ரலி), ஆதாரம்: புஹாரி).

இரண்டு விதமான கூலிகளை பெறுபவர்கள்:
மூன்று மனிதர்களுக்கு (அல்லாஹ்விடம்) இரண்டு விதமான கூலிகள் உள்ளன.
  1. ஒருவர் வேதக்காரர்களில் உள்ளவர். இவர் தம் (சமூகத்திற்கு அனுப்பப்பட்ட) தூதரையும், முஹம்மதையும் நம்பியவர்.
  2. மற்றொருவர் தம் இறைவனின் கடமைகளையும், தம் எஜமானுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை.
  3. மூன்றாமவர் தம்மிடத்திலுள்ள ஓர் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்கு மார்க்கச் சட்டங்களைக் கற்பித்து, கற்றுத் தந்ததையும் அழகுறச் செய்து, பின்னர் அவளை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து அவளை மணந்தவர்.
இம்மூவருக்கும் இரண்டு விதக் கூலிகள் உண்டு” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார். (ஆதாரம்: புஹாரி).

நன்மையை நாடி பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட மஸ்ஜிதுகள் மூன்றாகும்:
  1. ‘மஸ்ஜிதுல் ஹராம் (மக்காவில் அமைந்துள்ளது).
  2. மஸ்ஜிதுன் நபவி (மதீனாவில் அமைந்துள்ளது).
  3. மஸ்ஜிதுல் அக்ஸா (பஃலஸ்தீனில் அமைந்துள்ளது) ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர நன்மையை எதிர்பார்த்துப் பயணம் மேற்கொள்ளக் கூடாது.
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், ஆதாரம்: புஹாரி).

உண்மையான இறைத்தூதர்:
நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) அவர்களுக்கு (அவர்கள் யூத மதத்திலிருந்தபோது) எட்டியது. உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, “தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைதூதர் மட்டுமே அறிவார்” என்று கறினார்கள். பிறகு:
  1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது?
  2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது?
  3. குழந்தை தன் தந்தையை (சாயலில்) ஒத்திருப்பது எதனால்?) அது (சாயலில்) தன் தாயின் சகோதரர்களை ஒத்திருப்பது எதனால்?”
என்று கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “சற்று முன்பு தான் (வானவர்) ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்” என்று கூறினார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி), “வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப் பகைவராயிற்றே!” என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள்,
  1. “இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடைளாயம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திரைசயில் ஒன்று திரட்டும்.
  2. சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும்.
  3. குழந்தையிடம் காணப்படும் (தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்கு காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனுடைய நீர் (விந்து உயிரணு) முந்தினால் குழந்தை அவனுடைய சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்தினால் குழந்தை அவளுடைய சாயலில் பிறக்கிறது” என்று பதிலளித்தார்கள்.
(உடனே) அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி), “தாங்கள் இறைத்தூதர் தாம் என நான் சாட்சி கூறுகிறேன்” என்று கூறினார்கள். பிறகு, “இறைத்தூதர் அவர்களே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்கும் முன்பாக, அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றதை அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு கற்பித்துத்) தங்களிடம் பொய்யுரைப்பார்கள்” என்று கூறினார்கள்.

அப்போது யூதர்கள் நபி(ஸல்) அவர்களிடம்) வந்தார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) வீட்டினுள் புகுந்(து மறைந்)தார்கள். இறைத்தூதர்(ஸல்) (யூதர்களிடம்), “உங்களில் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் எத்தைகைய மனிதர்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அவர் எங்களில் (மார்க்க) அறிவு மிக்கவரின் மகனும் ஆவார்; எங்களில் அனுபவமும் விவரமும் மிக்கவரும், அனுபவமும் விவரமும் மிக்கவரின் மகனும் ஆவார்” என்று பதிலளித்தார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ் இப்னு ஸலாம்) இஸ்லாத்தை ஏற்றார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!” என்று கூறினார்கள்.

உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக் கொண்டிருந்த) அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) வெளியே வந்து, “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று நான் சாட்சியம் கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரவார்கள் என்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்” என்று கூறினார்கள். உடனே யூதர்கள், “இவர் எங்களில் கெட்ட வரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்” என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) அவதூறு பேசலானார்கள்.
(அறிவிப்பவர்: அனஸ் (ரலி), ஆதாரம்: புஹாரி).

வஹியுடன் நேர்பட்ட மூன்று விடயங்கள்:
“மூன்று விஷயங்களில் இறைவன் என் கருத்துக்கேற்ப “வஹி” அருளியுள்ளான். அவை:

“இறைத்தூதர் அவர்களே! மகாமு இப்ராஹீம் என்ற இடத்தில் தொழுமிடத்தை நாம் ஆக்கிக் கொள்ளலாமே!” என்று நான் கூறியபோது, “மகாமு இப்ராஹீமில் நீங்கள் தொழுமிடத்தை ஆக்கிக் கொள்ளுங்கள்!” (திருக்குர்ஆன் 02:125) என்ற வசனம் அருளப்பட்டது.
  1. “இறைத்தூதர் அவர்களே! தங்களின் மனைவியருடன் உரையாட வருபவர்களில் நல்லவர்களும் கெட்டவர்களும் உள்ளனர். எனவே தங்களை அன்னிய ஆண்களிடமிருந்து மறைத்துக் கொள்ளுமாறு தங்களின் மனைவியருக்கு தாங்கள் உத்திரவிடலாமே!” என்றேன். அப்போது ஹிஜாப் (பர்தா) பற்றிய வசனம் அருளப்பட்டது.
  2. நபி (ஸல்) அவர்களின் மனைவியர் அனைவரும் சேர்ந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஆத்திரமூட்டும் விதமாக நடந்தபோது நபி(ஸல்) அவர்கள் “உங்களை விவாகரத்துச் செய்தால் உங்களை விடச் சிறந்த மனைவியரை உங்களுக்குப் பதிலாக இறைவன் அவர்களுக்கு ஆக்கிவிடுவான்” என்று கூறினேன். நான் கூறியவாறே (திருக்குர்ஆன் 66:05) வசனம் அருளப்பட்டது” என உமர்(ரலி) அறிவித்தார்.
மூன்று பெறும் பாவங்கள்:
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள்,
  1. அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது” என்று கூறினார்கள். நான், “நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்” என்று சொல்லிவிட்டு, “பிறகு எது?” என்று கேட்டேன்.
  2. “உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது” என்று கூறினார்கள். நான், “பிறகு எது?” என்று கேட்க, அவர்கள்,
  3. “உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் செய்வது” என்று கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னுமஸ்ஊத் (ரலி) முஸ்லிம்).

மூன்று விடயங்களில் மிகப் பெரிய பொய்யன்:
மஸ்ரூக் இப்னு அஜ்த (ரஹ்) அறிவித்தார், நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் “அன்னையே முஹம்மத்(ஸல்) அவர்கள் தம் இறைவனை (மிஅராஜ் – விண்ணுலகப் பயணத்தின்போது நேரில்) பார்த்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நீங்கள் சொன்னதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்துவிட்டது. மூன்று விஷயங்கள் (பற்றிய உண்மைகள்) உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயின?) அவற்றை உங்களிடம் தெரிவிக்கிறவர் பொய்யுரைத்துவிட்டார்.
  1. முஹம்மத்(ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் கூறுகிறவர் பொய் சொல்லிவிட்டார்” என்று கூறிவிட்டு, பிறகு (தம் கருத்திற்குச் சான்றாக), “கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது; அவனோ அனைத்தையும் பார்க்கிறான். அவன் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஆவான்” எனும் (திருக்குர்ஆன் 06:103 வது) வசனத்தையும், “எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும், வஹியின் (வேத அறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பிவைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகிறவற்றை அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை” எனும் (திருக்குர்ஆன் 42:51 வது) வசனத்தையும் ஒதினார்கள்.
  2. “உங்களிடம் முஹம்மது(ஸல்) அவர்கள் நாளை நடப்பவற்றையும் அறிவார்கள்” என்று சொல்கிறவரும் பொய்யே கூறினார்” என்று கூறிவிட்டு, பிறகு (தம் கருத்திற்குச் சான்றாக,) “எந்த மனிதனும் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்பதை அறிவதில்லை” எனும் (திருக்குர்ஆன் 31:34 வது) வசனத்தை ஓதினார்கள்.
  3. “உங்களிடம் முஹம்மத்(ஸல்) அவர்கள் (மக்களுக்கு எடுத்துரைத்துவிடுமாறு பணிக்கப்பட்ட ஒன்றை) மறைத்துவிட்டார்கள்” என்று சொன்னவரும் பொய்யே கூறினார்” என்று கூறிவிட்டு, பிறகு (தம் கருத்திற்குச் சான்றாக) “தூதரே! உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களின் மீது இறக்கி வைக்கப்பட்டவற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுங்கள்…” (எனும் 5:67 வது) வசனத்தை ஓதினார்கள். “மாறாக, முஹம்மத்(ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்களையே அவரின் (நிஜத்) தோற்றத்தில் இரண்டு முறை கண்டார்கள்” என்று கூறினார்கள். (ஆதாரம்: புஹாரி).
நிறைவான கூலியை பெறும் சமுதாயம்!:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்து உரையாற்றியபோது நீங்கள் (இவ்வுலகில்) வாழ்வது அஸ்ர் தொழுகைக்கும் சூரியன் மறைவதற்கும் இடையிலான (குறுகிய) கால அளவேயாகும்.
  1. “தவ்ராத்” வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பட்டது. அவர்கள் “நண்பகல் வரை அதன்படி செயல்பட்டார்கள்; பின்னர் சக்தி இழந்துவிட்டார்கள். (கூலியாக) ஒவ்வொருவருக்கும் ஒரு “கீராத்” வழங்கப்பெற்றது.
  2. பின்னர் “இன்ஜீல்” வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அவர்கள் அஸ்ர் தொழுகை வரை அதன்படி செயல்பட்டுவிட்டுப் பின்னர் சக்தி இழந்துவிட்டார்கள். (கூலியாக) அவர்களுக்கும் ஒவ்வொரு “கீராத்” வழங்கப்பெற்றது.
  3. நீங்கள் சூரியன் மறையும் வரை அதன்படி செயல்புரிந்தீர்கள். உங்களுக்கு இரண்டிரண்டு கீராத்துகள் (கூலியாக) வழங்கப்பட்டன.
(அப்போது) “தவ்ராத்” வேதக்காரர்கள் “எங்கள் இறைவா! இவர்கள் வேலை செய்தோ குறைந்த நேரம். கூலியோ அதிகம்!” என்றார்கள். அல்லாஹ், “நான் உங்களுக்குரிய கூலியில் சிறிதேனும் (குறைத்து) அநீதியிழைத்தேனா?” என்று கேட்க, அவர்கள் “இல்லை” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ் “அ(வ்வாறு முஸ்லிம்களுக்கு அதிகமாகக் கொடுத்த)து என் அருளாகும். நான் நாடியவர்களுக்கு அதைத் தருகிறேன்” என்று சொன்னான். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), புஹாரி).
மூவரின் பிரார்த்தனைகள் சந்தேகத்திற்கிடமின்றி அல்லாஹ்விடம் ஒப்புக்கொள்ளப்படுகின்றன:
  1. தந்தையின் பிரார்த்தனை,
  2. பிரயாணியின் பிரார்த்தனை,
  3. அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: அபூதாவுத்).

நமது ரப்பிடம் உறுதியுடன் பிரார்த்திப்போம்!
ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடம் கேட்கும் பிரார்த்தனையில் பாவமான விடயமோ, உறவுகளை துண்டிக்கும் விடயங்களோ இல்லாமல் இருக்கும் போது அவனது பிரார்த்தனைக்கு இம் மூன்றில் ஏதாவது ஒன்றை அல்லாஹ் வழங்காமல் இருக்கமாட்டான்:
  1. அவனது பிரார்த்தனையை ஏற்று அவன் கேட்டதையே வழங்கிவிடுவான்.
  2. அல்லது அவனது பிரார்த்தனையை பாதுகாத்து நாளை மறுமையில் அதற்கு கூலி வழங்குவான்.
  3. அல்லது அவனுக்கு வரவிருக்கும் ஏதவாது ஒரு துன்பத்தை தடுத்துவிடுவான்.
அப்போது நபித்தோழர்கள் அப்படியெனில் நாம் அதிகம் அதிகம் அல்லாஹ்வை பிரார்த்திப்போம் என கூறினர், அதற்கு அல்லாஹ்வின் தூதர் அல்லாஹ் அதை விட அதிகம் வழங்குபவனாகவே இருக்கின்றான் என்றார்கள்.
(அறிவிப்பவர்: அபூ ஸஈத் (ரலி), ஆதாரம்: அஹ்மத்).

ஈமான் எப்போது பயனளிக்காது!
மூன்று விடயங்கள் வெளிப்பட்டு விட்டால் எவரது ஈமானும் அதன் பின் பயனளிக்கமாட்டாது (ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது).
  1. சூரியன் மேற்கில் உதிக்க ஆரம்பித்துவிடல்.
  2. தஜ்ஜால் வெளிப்படுதல்.
  3. அதிசயப்பிரானி வெளிப்படுதல்.
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்).

தடுக்கப்பட்ட நேரங்கள்:
அல்லாஹ்வின் தூதர் மூன்று நேரங்களில் தொழுவதையும், ஜனாஸாக்களை அடக்குவதையும் எமக்கு தடை செய்தார்கள்:
  1. சூரியன் உதித்து அது உயரும் வரை,
  2. சூரியன் உச்சிக்கு வந்து அது சாயும் வரை,
  3. சூரியன் செம்மையடைந்து அது மரையும் வரை.
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: உக்பதிப்னு ஆமிருல் ஜுஹனி (ரலி), ஆதாரம்;: முஸ்லிம்).

மூன்று விடயங்களுக்காக பொய் சொல்பவன் பொய்யனாகக் கருதப்படமாட்டான்:
  1. மக்களிடம் நல்லினக்கத்தை ஏற்படுத்துவதற்காக பொய் சொன்னவன்.
  2. ஒரு கணவன், மனைவி தங்களுக்குள் பேசும் பேச்சுக்களில்.
  3. எதிரிகளுடன் நடைபெறும் போர்களத்தில்.
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: உக்பதிப்னு அபீ முஈத் (ரலி), ஆதாரம்: முஸ்லிம்).

உண்மையில் உமது பொருள் எது?
அடியான் எனது பொருள், எனது பொருள் என கூறுகின்றான். அவனது பொருள்:
  1. அவன் உண்டு கழித்தவைகளும்,
  2. அவன் உடுத்தி கிளித்தவைகளும்,
  3. அவன் முன் கூட்டி (அல்லாஹ்விற்காக) செய்த தர்மங்களும்.
அதைத் தவிர அவன் பாதுகாக்கும் மற்றவைகள் அனைத்தும் ஏனையவர்களுக்கு விட்டுச் செல்பவைகளே” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்).

இறுதி வரை தொடரும் ஒரே உறவு! :
மையித்தை மூன்று விடயங்கள் பின்தொடர்கின்றன. அவைகளில் இரண்டு மீண்டு விடுகின்றன. ஒன்று அவரோடு தங்கி விடுகின்றது. திரும்பி விடும் இரண்டு:
  • 1- அவரது குடும்பம்,
  • 2- அவரது சொத்து செல்வம்,
அவருடன் தங்கி விடுவது:
  • 3- அவர் செய்த நற்கிரியைகள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
(அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம்: புஹாரி).

மண்ணறை வாழ்விலும் தொடரும் நன்மைகள்!:
ஒரு மனிதன் மரணித்துவிடும் போது அவனது அனைத்து செயல்களும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. மூன்று காரியங்களைத் தவிர அவைகள்:
  1. அவன் செய்த நிலையான தர்மம்,
  2. அவனது கல்வியின் மூலம் பிறர் பயனடைந்தது,
  3. அவனது ஸாலிஹான குழந்தை அவனுக்காக கேட்கும் பிரார்த்தனை.
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)இ ஆதாரம்: முஸ்லிம்).

எண்ணங்களை தூய்மையாக்குவோம்!
  1. மக்களின் புகழை விரும்பி அல்லாஹ்வின் பாதையில் போர் செய்து உயிர் நீத்த ஷஹீத்.
  2. மக்களின் புகழை விரும்பி அல்லாஹ்வின் பாதையில் வாரி வழங்கிய கொடைவள்ளல்.
  3. மக்களின் புகழை விரும்பி பிறருக்கு மார்கத்தைப் போதித்த ஆலிம்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் எனது முழங்காலின் மீது அடித்தவர்களாக அபூஹுரைராவே! இந்த மூவரைக்கொண்டு தான் நரகம் எறிக்கப்பட ஆரம்பிக்கும் எனக்கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: திர்மிதி).

அன்பின் சிகரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்:
அல்லாஹ் உங்களை மூன்று விடயங்களை விட்டும் பாதுகாத்து இருக்கின்றான். அவைகள்:
  1. நீங்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக அழிக்கப்படுவதற்கு உங்கள் நபி உங்களுக்கெதிராக பிரார்த்திப்பதை விட்டும்,
  2. சத்தியவாதிகளை அசத்தியவாதிகள் (முழு வடிவில்) மேலோங்குவதை விட்டும்,
  3. நீங்கள் அனைவரும் வழிகேட்டில் ஒன்றுபடுவதை விட்டும்
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூ மாலிக் அல்அஷ்ரிய் (ரலி), ஆதாரம்: அபூதாவுத்).

எவர் மூன்று விடயங்களை விட்டு நீங்கியவராக மரணிக்கின்றாரோ அவர் சுவனம் நுழைந்துவிட்டார். அவைகள்:
  1. பெறுமை (ஆணவம்),
  2. திருட்டு (மோசடி),
  3. கடன்
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிபிட்டார்கள் (அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி), ஆதாரம்: திர்மிதி).

உறுதி மொழி வாங்கிய மூன்று காரியங்கள்!:
  1. தொழுகையை நிலை நாட்டுவதாகவும்,
  2. ஸகாத்தை கொடுத்து வருவதாகவும்,
  3. பிற முஸ்லிம்களுக்கு நன்மையை நாடுவதாகவும்
நான் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதி மொழி செய்து கொடுத்தேன்”
(அறிவிப்பவர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி), ஆதாரம்: புஹாரி).

அல்லாஹ் உங்களிடமிருந்து விரும்பும் மூன்று விடயங்கள்:
  1. அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காது அவனை மாத்திரிம் வணங்குவது.
  2. நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து அல்லாஹ்வின் கயிற்றை (அவனது மார்கத்தை) பலமாக பற்றிப்பிடித்துக்கொள்வது.
  3. உங்களுக்கு மத்தியில் பிழவு படாமல் இருப்பது.
அல்லாஹ் உங்களிடமிருந்து வெறுக்கும் மூன்று விடயங்கள்:
  1. அவர் சொன்னார், இப்படி சொல்லப்பட்டது என்று எந்த உறுதியுமில்லாமல் பேசுவது.
  2. அதிகம் கேள்வி கேட்பது.
  3. பணத்தை வீண் விரயம் செய்வது.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி).

உயரிய மூன்று உபதேசங்கள்!
அபூதர் (ரலி) அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் செய்த மூன்று உபதேசங்கள்:
  1. நீங்கள் எங்கிருந்த போதும் அல்லாஹ்வை பயந்து கொள்கொள்வீராக.
  2. நீர் ஒரு தவறை செய்துவிட்டால் உடனே ஒரு நன்மையை செய்துவிடுவீராக. அது அந்த பாவத்தை அழித்து விடும்.
  3. மக்களுடன் உயரிய பண்புடையவராக நடந்துகொள்வீராக
(அறிவிப்பவர்: அபூதர் (ரலி), ஆதாரம்: திர்மிதி).

உயரிய மூன்று உபதேசங்கள்!
அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் செய்த மூன்று உபதேசங்கள்:
  1. ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்புகள் நோற்று வாருங்கள்.
  2. இரண்டு ரக்அத் லுஹாவைத் தொழுது வருவீராக.
  3. இரவில் தூங்க செல்ல முன் வித்ரைத் தொழுது கொள்வீராக.
நான் மரணிக்கின்ற வரை ஊரில் இருக்கும் போதும், பிரயாணத்தில் இருக்கின்ற போதும் இந்த மூன்று விடயங்களை விடவே இல்லை.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி).

ஈடேற்றத்துடன் சுவர்க்கத்தில் நுழையும் காரியங்கள்!:
அல்லாஹ்வின் தூதர் வரலாற்று சிறப்பு மிக்க ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்டு மதீனா வந்தவுடன் மக்களை பார்த்து முதலில் செய்த மூன்று உபதேசங்கள்:
  1. உங்களுக்கு மத்தியில் அதிகம் ஸலாம் சொல்லுங்கள்.
  2. ஏழைகளுக்கு உணவளியுங்கள்.
  3. மக்கள் இரவில் உறக்கத்தில் இருக்கின்ற போது நீங்கள் எழுந்து அல்லாஹ்வைத் தொழுங்கள்.
நீங்கள் ஈடேற்றம் பெற்றவர்களாக சுவர்க்கம் நுழைவீர்கள்.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி), ஆதாரம்: திர்மிதி).

உறுதி மிக்க காரியங்கள்!:
ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் தனது தொழர்களிடம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுகின்ற (நாளை மறுமையில்) உங்கள் பதவிகள் உயர்த்தப்படுகின்ற விடயங்களை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? எனக்கேட்ட போது, அறிவியுங்கள் அல்லாஹ்வின் தூதரே! என்றனர்.
  1. குளிரான காலங்களில் வுழூவை நிறைவாக செய்வது.
  2. மஸ்ஜிதுக்கு அதிக எட்டுக்கள் எடுத்து வைத்து நடப்பது.
  3. ஒரு தொழுகையை நிறைவு செய்து மற்றொரு தொழுகையை எதிர்பார்த்து அமர்ந்திருப்பது.
இவைகள் உங்களை உறுதிப்படுத்துகின்ற காரியங்களாகும் என கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்).

இந்த சிறப்புகளை நழுவவிடுவதா?
  1. கூட்டுத் தொழுகைக்கு நேர காலத்துடன் சமூகளிப்பதின் சிறப்பை மக்கள் அறிந்து கொள்வார்களானால் அதற்கு போட்டி போட்டு கலந்து கொள்வார்கள்.
  2. பஃஜ்ர் மற்றும் இஷா தொழுகையின் சிறப்பை அறிந்துகொள்வார்களானால் அத்தொழுகைகளில் தவழ்ந்த நிலையிலாவது கலந்துகொள்வார்கள்.
  3. முன் வரிசையின் சிறப்பை அறிந்து கொள்வார்களானால் சீட்டுக் குலுக்கியே தவிர அந்த சந்தர்பத்தை பிறருக்கு விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி).

நாளை மறுமையில் இழிவடையும் மூவர்:
அல்லாஹ் மறுமைநாளில் மூன்று பேரிடம் பேசமாட்டான்; அவர்களை தூய்மைப் படுத்த மாட்டான். அவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான், அவர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு:
  1. முதிய வயதில் விபச்சராத்தில் ஈடுபட்டவர்.
  2. (நீதி செலுத்தாத) பொய்யான ஆட்சியாளன்.
  3. கர்வத்தோடு செயல்படும் ஏழை.
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்).
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் மறுமைநாளில் மூன்று பேரிடம் பேசமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்:
  1. ஒருவர் (தம்) விற்பனைப் பொருளுக்கு (அதைக் கொள்முதல் செய்தபோது உண்மையில்) தாம் கொடுத்த விலையை விட அதிக விலை கொடுத்ததாகப் பொய்ச் சத்தியம் செய்கிறார்.
  2. ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரிப்பதற்காக அஸ்ர் தொழுகைக்குப் பிறகு (மக்கள் ஒன்று கூடும் நேரத்தில்) பொய்ச் சத்தியம் செய்கிறார்.
  3. தம் தேவைக்குப் போக மிஞ்சிய தண்ணீரை (வழிப்போக்கருக்குத் தராமல்) தடுக்கிறார். (அவரிடம்) அல்லாஹ் மறுமைநாளில் “நீ தேடிச் சம்பாதிக்காத பெருளை (-நீரை) நீ தர மறுத்ததைப் போன்று இன்று என் அருளை உனக்கு வழங்க மறுக்கிறேன்” என்று கூறுவான்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி).
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மூன்று பேருடன் அல்லாஹ் நாளை மறுமையில் பேச மாட்டான், அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மேலும், அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு:
  1. மக்களின் பயணப்) பாதையில், தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பெற்றிருந்தும் வழிப்போக்கர்கள் அதைப் பயன்படுத்த விடாமல் தடுத்துவிட்டவன்.
  2. தன் (ஆட்சித்) தலைவரிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் செய்தவன்; அவர் கொடுத்தால் (மட்டுமே) திருப்தியடைந்து, கொடுக்காமல்விட்டால் கோபம் கொள்பவன்.
  3. அஸர் தொழுகைக்குப் பிறகு (மக்கள் கடைவீதியில் திரளும் போது) தன் வியாபாரப் பொருளைக் காட்டி, “எவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவனும் இல்லையோ அவன் மீது சத்தியமாக! இந்தப் பொருளுக்காக (இதைக் கொள்முதல் செய்யும்போது) நான் இன்ன (அதிக) விலையைத் தந்தேன். என்று கூறி, அதை ஒருவர் உண்மையென நம்பும்படி செய்வதன் (இப்படி வாடிக்கையாளரிடம் பொய் கூறி அவரை ஏமாற்றி, சொன்ன விலைக்கு அதை விற்றவன்) ஆவான்.
இதைக் கூறிவிட்டு, “அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகிறவர்கள்…” என்னும் இந்த (திருக்குர்ஆன் 03:77 ஆம்) இறைவசனத்தை ஓதினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி).

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மூன்று பேருடன் அல்லாஹ் நாளை மறுமையில் பேச மாட்டான், அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மேலும், அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு. இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் மூன்று முறை குறிப்பிட்ட போது, உறுதியாகவே அவர்கள் நஷ்டத்தையும், தோல்வியையும் அடைந்துவிட்டனர் என்று கூறிய அபூதர் (ரலி) அவர்கள், யார் அவர்கள்? அல்லாஹ்வின் தூதரே! என வினவினார்கள்.
  1. கரண்டைக்குக் கீழ் தனது ஆடையை தொங்கவிடுபவர்
  2. வழங்கிய தர்மத்தை சொல்லிக்காட்டுபவர்.
  3. பொய் சத்தியம் செய்து தனது பொருளை விற்றவர்
என நபிகள்ய நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி), ஆதாரம்: முஸ்லிம்).

நயவஞ்சகனின் அடையாளங்கள்:
“நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று:
  1. பேசினால் பொய்யே பேசுவான்,
  2. வாக்களித்தால் மீறுவான்,
  3. நம்பினால் துரோகம் செய்வான்.
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி).

ஷைத்தான் போடும் மூன்று முடிச்சுகள்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் உறங்கும்போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது, உறங்கு என்று கூறுகிறான்.
  1. அவர் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது.
  2. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது.
  3. அவர் தொழுதால் மற்றொரு முடிச்சும் அவிழ்கிறது.
அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை அடைகிறார்”. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி).

கொல்லப்படவேண்டிய மூவர்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவருமில்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்” என உறுதி மொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை.
(அவை:)
  1. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்கு பதிலாகக் கொலை செய்வது.
  2. திருமணமானவன் விபச்சாரம் செய்வது.
  3. “ஜமாஅத்” எனும் சமூகக் கூட்டமைப்பைக் கைவிட்டு, மார்க்கத்திலிருந்தே வெளியேறி விடுவது.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி), ஆதாரம்: புஹாரி).

பெரும் பாவங்கள்!:
அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்: (ஒரு முறை) “பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று நபி(ஸல்) அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், “ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)” என்றார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள்
  1. “அல்லாஹ்வுக்கு இணைவைப்பது,
  2. பெற்றோருக்குத் துன்பம் தருவதும் (தான் அவை)” என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, “அறிந்துக் கொள்ளுங்கள்;
  3. பொய் சாட்சியமும் (மிகப் பெரும்பாவம்) தான்” என்று கூறினார்கள். “நிறுத்திக் கொள்ளக் கூடாதா” என்று நாங்கள் சொல்கிற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டேயிருந்தார்கள்.
நாளை மறுமையில் மூவருக்கெதிராக வழக்குத்தொடரப்படும்!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்” என்று அல்லாஹ் கூறினான்.
  1. என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, அதில் மோசடி செய்தவன்,
  2. சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்,
  3. ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்!”
(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் . ஆதாரம்: புஹாரி)

Thursday, June 21, 2012

இந்துக்களைக் காபிர்கள் என்று இஸ்லாம் ஏசுகிறது.

PJ
முஸ்லிமல்லாதவர்களைப் பற்றித்திருக்குர்ஆன் கூறும் போது காபிர்கள் என்றும் முஷ்ரிக்குகள் என்றும்கூறப்பட்டுள்ளது.

இஸ்லாத்தைவிமர்சிப்பவர்கள் இதையும் தவறாக விமர்சனம் செய்கிறார்கள். அதாவது இந்துக்களைக் காபிர்கள் என்று திருக்குர்ஆன்ஏசுகிறது என்பதும் இவர்களின் விமர்சனமாகும்.

முஸ்லிமல்லாதவர்களைப் பற்றி காபிர்கள்என்று இஸ்லாம் கூறுவது உண்மை தான். இந்துக்களும் கூட இந்த அடிப்படையில் காபிர்கள் தாம் என்பது உண்மையே. ஆனால் காபிர்கள் என்றால் அது ஏசும்சொல் என்கிறார்களே அதில் தான் உண்மையில்லை.

காபிர் என்பதற்கு கிறுக்கன், பைத்தியக்காரன், முட்டாள் என்றெல்லாம் பொருள் இருந்தால் அதை ஏசுகின்ற சொல்லாகக் கருத முடியும். அப்படியெல்லாம் அந்தச் சொல்லுக்குப் பொருள் இல்லை.

காபிர் என்ற அரபுச் சொல்லின் நேரடிப்பொருள் மறுப்பவர், ஏற்காதவர் என்பது தான். இஸ்லாத்தை ஏற்றவர்களை முஸ்லிம்கள் (ஏற்றவர்கள்) என்று கூறும் திருக்குர்ஆன் ஏற்காதவர்களை ஏற்காதவர்கள் (காபிர்கள்) எனக் கூறுகிறது. ஏற்காதவர்களை ஏற்றவர்கள் என்று கூற முடியாது. ஏற்காதவர்கள் என்று தான்கூற முடியும். இதில்ஏசுவது ஒன்றுமே இல்லை.

இந்துக்களைப் பார்த்து உரை நிகழ்த்தும் போது முஸ்லிமல்லாத மக்களே என அழைத்தால் அதை ஏச்சாகயாரும் கருத மாட்டார்கள். இது போன்ற வார்த்தைப் பிரயோகமே காபிர் என்பது.

சில சமயங்களில் முஸ்லிமல்லாதவர்களில் ஒரு சாராரைக் கூறும் போது முஷ்ரிக்குகள் என்று குர்ஆன் கூறுகிறது. முஷ்ரீக் என்றால் ”பல கடவுள்களை நம்புபவர்கள்” என்பது பொருள். பல கடவுள்களை வழிபடும் மக்களைப்பற்றிக் குறிப்பிடும் போது இந்தச் சொல்லைத் திருக்குர்ஆன் பயன்படுத்துகிறது. பல கடவுள் நம்பிக்கையுடையவர்களை ஒரேஒரு கடவுளை மட்டும் நம்பும் மக்கள் என்று கூற முடியுமா? பல கடவுளை நம்பும் மக்கள் என்று கூறமுடியுமா? பலகடவுளை நம்பும் மக்கள் என்று தானே கூற முடியும்! இது எப்படி ஏச்சாக ஆகும்!

இந்துக்களையோ இன்ன பிற மக்களையோ வசைச்சொற்களால் குர்ஆன் ஏசவில்லை என்பது தான் உண்மை.

ஜிஸ்யா வரி
பெரும்பாலான முஸ்லிம்களாலும், முஸ்லிமல்லாதவர்களாலும் தவறாகப்புரிந்து கொள்ளப்பட்ட விஷயங்களில் ”ஜிஸ்யா வரி” என்பதும் ஒன்றாகும்.

”இஸ்லாமிய ஆட்சியில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது ஜிஸ்யாஎனும் வரி விதிக்கப்பட்டு வந்தது. அவுரங்கசீப் போன்ற முகலாய மன்னர்கள் இத்தகைய வரியை இந்துக்களுக்கு மட்டும் விதித்தனர்.” என்று பரவலாக விமர்சனம் செய்யப்படுகிறது. அரசாங்கத்தால்வெளியிடப்படும் பாடப் புத்தகங்களிலும் கூட இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது.

இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாடுகளில் முஸ்லிமல்லாதவர்களுக்கு மட்டும் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டு வந்ததும், அவ்வாறு விதிக்க வேண்டுமென இஸ்லாம் கட்டளையிடுவதும் உண்மையே. அதில் உள்ள நியாயத்தையும் முஸ்லிமல்லாதவர்களுக்கு அது எவ்வளவு நன்மை பயக்கக் கூடியது என்பதையும் உணர்ந்தால் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டதாக முஸ்லிமல்லாதவர்கள் குறை கூற மாட்டார்கள்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது இந்த வரி முஸ்லிமல்லாதவர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு இதில் இருந்து விலக்களிக்கப்பட்டது. பாரபட்சமாகவும், அநியாயமாகவும் தோன்றலாம். உண்மையில் வரிவிதிப்பில் பாரபட்சம் ஏதும் காட்டப்படவில்லை.

ஒரு அரசாங்கம் தனது குடிக்களின் நலன்களைக் காக்கக் கடமைப்பட்டுள்ளது. தனது குடிமக்களில் வறியவர்களுக்கு உதவி செய்யும் கடமை அரசாங்கத்திற்கு இருக்கின்றது. ஒருவரது உரிமையை இன்னொருவர் பறித்துவிடாமல் காப்பதற்காக காவலர்களை நியமித்து கண்காணிக்கும் கடமையும் அரசாங்கத்திற்கு இருக்கிறது. அன்னியப் படையெடுப்பின் போது தனது குடிமக்களைக் காப்பதற்காக இராணுவத்தை அமைக்கும் கடமையும் அரசுக்கு இருக்கின்றது. பொருளாதாரமின்றி, இந்தக் கடமைகளை எந்த அரசும் செய்யமுடியாது. மக்களிடமிருந்துவரி விதிப்பதன் மூலம் மட்டுமே அரசாங்கம் பொருள் திரட்டமுடியும்.

ஒரு இஸ்லாமிய ஆட்சியில் எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது? இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் மீது இஸ்லாம் ஜகாத் எனும் வரியைக் கடமையாக்கியுள்ளது. முஸ்லிம்கள் தங்களிடமுள்ள தங்கம், வெள்ளி மற்றும் கரன்சிகள், அவர்களிடமுள்ள வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகள், அவர்கள் விளைவிக்கும் தானியங்கள், மற்றும் பயறு வகைகள் ஆகிய அனைத்திலிருந்தும் அவர்கள் ஜகாத் எனும் வரி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

தங்கம், வெள்ளி மற்றும் கரன்சிகளில் இரண்டரை சதவீதமும், நீர்பாய்ச்சி விளைவிக்கப்படும் பொருட்களில் ஐந்து சதவீதமும், இயற்கையாக விளைவிக்கும் பொருட்களில் பத்து சதவீதமும் முஸ்லிம்கள் ஜகாத் எனும் வரி செலுத்தியாக வேண்டும். இது எவ்வளவு கணிசமான வரி என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒருவர் விரும்பினால் செய்யலாம், விரும்பாவிட்டால் தவிர்க்கலாம் என்ற அடிப்படையில் அமைந்த தர்மம் அல்ல இந்த ஜகாத். மாறாக, இஸ்லாமிய அரசால் கட்டாயமாகக் கணக்குப் பார்த்து வசூலிக்கப்பட வேண்டிய வரியாகும். ஜகாத் என்ற பெயரில் பெரும் தொகையை இஸ்லாமிய சமுதாயம் அரசுக்குச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.

ஏழைகள், பரம ஏழைகள், கடன்பட்டிருப்பவர்கள், அடிமைகள், அறப்போருக்காக தங்களை அர்பணித்துக்கொண்ட இராணுவ வீரர்கள், திக்கற்றோர் ஆகியோர் நலனுக்காக இந்த வரியை அரசாங்கம் செலவு செய்யும். சுருங்கச்சொன்னால், ஒரு அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளும் இந்த ஜகாத் எனும் வரியிலிருந்தே செய்யப்பட்டன.

மொத்த அரசாங்கமும், முஸ்லிம்களிடமிருந்து பெறப்படும் ஜகாத் வரியிலிருந்தே நடந்து வரும் போது அந்த நாட்டில் உள்ள முஸ்லிமல்லாதவர்கள் எந்த வரியும் செலுத்தாமலிருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.

முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்திக் கொண்டிருக்கும் போது முஸ்லிமல்லாதவர்கள் விஷயமாகக் கீழ்காணும் மூன்று வழிகளில் ஒன்றை நடைமுறைப்படுத்தியாக வேண்டும். முஸ்லிமல்லாதவர்கள் மீது எந்த வரியும்விதிக்காமலிருப்பது.

முஸ்லிம்களைப் போலவே முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஜகாத் வரி விதிப்பது. முஸ்லிமல்லாதவர்கள் மீது ஜகாத் அல்லாத வேறுவரி விதிப்பது. இதில் முதல் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை முதலில் அலசுவோம்.

முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்தும்போது முஸ்லிமல்லாதவர்கள் எந்த வித வரியும் செலுத்தாமல் அரசாங்கத்தின் நன்மைகளைப்பெற்று வந்தால் வரி செலுத்துவோர் கூடுதலான உரிமையை இயல்பாகவே எதிர் பார்க்கும்நிலை ஏற்படும். வரி ஏதும் செலுத்தாமல் அரசாங்கத்தின் பயன்களை அவர்கள் அனுபவிக்கக் கூடாது என்று எதிர்ப்புக் குரல் கேட்கும்.

முஸ்லிம் அல்லாதவர்கள் வரி ஏதும்செலுத்தாததால் அவர்களே கூட தங்கள் உரிமையைக் கேட்கத் தயங்குவர். மனோரீதியாக தாங்கள் இரண்டாம் தரக்குடிமக்கள் என்று எண்ணத் துவங்குவர்.

ஒரு சமுதாயத்திடம் மட்டும் வரி வாங்கி இன்னொரு சமுதாயத்திடம் வரி வாங்காவிட்டால் இதில் அவமானம் வரிவாங்கப்படாதவர்களுக்கே. வரி வாங்கப்படாதது சட்டப்படியாக அவர்களுக்கு உரிமை இல்லை என்பதற்கு அடையாளமாகும். ஆக, இந்த நிலையை நடைமுறைப்படுத்தும் போது இரு தரப்பிலும் எதிர்ப்பு கடுமையாகும்.

தங்களிடம் மட்டும் வரி வாங்கிவிட்டு மற்றவர்களுக்கு விலக்களிக்கப்படுவதை முஸ்லிம்களும் எதிர்ப்பார்கள். தங்களிடம் மட்டும் வரி  வாங்காததால் தங்களுக்குச் சட்டப்பூர்வ உரிமை வழங்கப்படவில்லை எனக் கருதி முஸ்லிமல்லாதாரும் இதை எதிர்ப்பார்கள். எனவேமுதல் வழி சாத்தியமாகாது.

இரண்டாம் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம். ஜகாத் என்பது ஒரு வரியாக இருந்தாலும், முஸ்லிம்களைப் பொறுத்தவரை தொழுகை, நோன்பு போன்ற மதக் கடமையாகவும் ஜகாத் அமைந்துள்ளது.


இந்த ஜகாத் வரியை முஸ்லிமல்லாதவர்கள் மீது திணிக்கும் போது இன்னொரு மதச் சட்டம் தங்கள் மீது திணிக்கப்படுவதாக அவர்களுக்குத் தோன்றும், இஸ்லாமியர்கள் செய்ய வேண்டிய கடமைகள் வணக்கங்கள் யாவும் தங்கள் மீதும் கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்படும். இது அவர்களுக்கு ஜீரணிக்க முடியாததாக அமைந்து விடும். இஸ்லாம், தன் மதச் சட்டங்களைப் பிற சமயத்தவர்கள் மீது திணித்தது என்ற குற்றச்சாட்டு எழும்.

முஸ்லிமல்லாதவர்களின் தனிப்பட்டஉரிமையில் தலையிடுவதாக அமையும் என்பதால் அவர்கள் மீது ஜகாத் எனும் வரியை விதிக்கமுடியாது. அப்படியே விதித்தாலும்அவர்களிடமிருந்து அதைப் பெற இயலாமல் போய் விடும் என்பது மற்றொரு விளைவாகும்.

ஜகாத் வரி என்பது அவரவர் சொத்துக்களை மதிப்பிட்டு வசூலிக்கப்பட வேண்டியதாகும். சம்பந்தப்பட்டவர்களும் சரியாகக் கணக்குக் காட்டி ஒத்துழைத்தால் மட்டுமே ஜகாத்தை முழுமையாக வசூலிக்க முடியும். முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு அது மதக் கடமையாகவும் உள்ளதால் இறைவனுக்கு அஞ்சி முறையாக அவர்கள் கணக்கு காட்டமுடியும்.

முஸ்லிமல்லாதவர்களைப் பொறுத்த வரை இது ஒரு வரியாக மட்டுமே கருதப்படும். இன்னொரு மதத்தின் கடமை என்பதால் அதில் அவர்கள் முழு ஒத்துழைப்புதர மாட்டார்கள். இயன்றவரை தவறாகக் கணக்குக் காட்டி குறைவான வரிசெலுத்தும் வழிகளையே தேடுவார்கள். இந்தக் காரணத்தினாலும் ஜகாத் என்ற வரியை இவர்கள் மீது விதிக்க முடியாது. வரி விதிக்காமலும் இருக்க முடியாது. முஸ்லிம்களுக்கு விதிப்பது போன்ற வரியையும் அவர்கள் மீது விதிக்க முடியாது. இப்போது மூன்றாவது வழியை நடைமுறைப்படுத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

”ஜகாத்” என்ற வகையில்லாத புதிய வரியை அவர்கள் மீது விதிப்பதன் மூலம் இந்தத் தீய விளைவுகளைத் தவிர்க்க முடியும். இந்த அடிப்படையிலேயே ”ஜிஸ்யா” எனும் வரி விதிக்கப்பட்டது. முஸ்லிம்கள் ஜகாத் என்ற பெயரால் ஜிஸ்யாவை விட பலமடங்கு அதிகமாக வரி செலுத்தினர். பாரபட்சம் காட்டப்பட்டு பாதிப்புக்கு ஆளானார்கள் என்று சொல்வதென்றால் முஸ்லிம்கள் தான் பாதிப்புக்கு ஆளானார்களே தவிரமுஸ்லிமல்லாதவர்கள் அல்ல. இதைப் புரிந்து கொள்ளாத காரணத்தினாலேயே ஜிஸ்யா வரி பற்றி தவறான விமர்சனம் செய்து வருகின்றனர்.

பேரரசுகள், சிற்றரசுகள் மீது கப்பம் விதிப்பதும், தான் கைப்பற்றிக் கொண்ட நாட்டு மக்கள்மீது அதிகப்படியான வரிகளைச் சுமத்துவதும் உலக வரலாற்றில் பரவலாக நடந்து வந்தது. இந்த அக்கிரமத்தையெல்லாம் ஜீரணித்துக் கொள்பவர்கள் மிகவும் நியாயமான முறையில் விதிக்கப்பட்ட ஜிஸ்யா வரியைக் குறை கூறுவதற்கு இஸ்லாத்தின் மீதுஅவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்வு தவிர வேறு காரணம் இருக்க முடியாது.

ஜிஸ்யா வரி விதிக்கும் போது கூட இஸ்லாம் நடந்து கொண்ட முறை நாகரீகமானதாக இருந்துள்ளது. பெண்கள், சிறுவர்கள், உழைக்க முடியாத முதிய வயதினர், பைத்தியக்காரர்கள் ஆகியோருக்கு இந்தவரியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தது. திடகாத்திரமான ஆண்கள் மீது மட்டுமே இந்த வரி விதிக்கப்ட்டிருந்தது. இவ்வாறு சலுகை காட்டுவது அவசியமில்லாதிருந்தும் இவ்வாறு சலுகை வழங்கப்பட்டது.

சகட்டு மேனிக்கு இந்த வரி விதிக்கப்படாமல் மக்களின் பொருளாதார வசதியும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. தனிநபர் வருவாய் அதிகமாக உள்ள சிரியாவாசிகள் மீது தலைக்கு ஆண்டுக்கு நான்கு தீனார்கள் எனவும் தனி நபர்வருவாய் குறைவாக உள்ள ஏமன் வாசிகளுக்கு தலைக்கு ஒரு தீனார் என்றும் நபியவர்களால் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது.

பத்து நாட்கள் ஆடு மேய்ப்பவர்களுக்கு ஒரு தீனார் கூலி கொடுக்கப்பட்டு வந்தது. இதிலிருந்து தீனார் என்பது எவ்வளவு அற்பமான தொகை என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த ஒரு தீனார் என்பது மிக மிக சாதாரண ஏழைக் குடிமகன் இந்தியாவில் செலுத்தும் வரியை விடபல மடங்கு குறைவானதாகும்.

சொத்துவரி, விற்பனைவரி, வருமானவரி, சாலைவரி, தண்ணீர் வரி, நுழைவு வரி, வீட்டு வரி என்று நேரடியாகவும் பத்துபைசா தீப்பெட்டி முதல் பத்தாயிரம் ரூபாய் தொலைக்காட்சிப் பெட்டிவரை எதை வாங்கினாலும் மறை(முகமாகவும்) இந்தியக் குடி மகன் இன்று வரி செலுத்துகிறான். இந்த வரியை விட பல மடங்கு குறைவானதே இஸ்லாம் விதித்த ஜிஸ்யா வரி.

செலுத்துவதற்கு எளிதான தொகையாகவும், செலுத்த இயலாதவர்களுக்கு விலக்களிக்கப்பட்டதாகவும் முஸ்லிம்கள் செலுத்தி வந்த வரியை விட மிகவும் குறைவானதாகவும்தான் இந்த ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது.

அந்த அற்பமான வரியைச் செலுத்துவதன் மூலம் அதிகம் வரி செலுத்தும் முஸ்லிம்கள் பெற்று வந்த அத்தனை உரிமைகளையும் அவர்கள் பெற முடிந்தது. அவர்களின் வழிபாட்டு உரிமைகள் காக்கப்பட்டன. அவர்களின் ஆலயங்கள் பாதுகாக்கப்பட்டன. அவர்களின் சொத்துரிமை பேணப்பட்டது. இது முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாமிய நாட்டில் பெற்று வந்த சலுகைகள். அவர்களின் சலுகைக்கு வழி வகுத்த ஜிஸ்யா வரியைக் குறை கூறுவது எந்த வகையிலும் நியாயமாகாது.

இந்த இடத்தில் எழக் கூடிய ஒரு நியாயமான சந்தேகத்தையும் நாம் நீக்கி கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள் மீது விதிக்கப்பட்ட ஜகாத் என்பது முஸ்லிம் செல்வந்தர்கள் மீதே விதிக்கப்பட்டு வந்தது. முஸ்லிம் ஏழைகள் அந்த வரியைச் செலுத்தவில்லை. எந்தவரியும் செலுத்தாமல் முஸ்லிம்களில் பெரும்பாலோர் இருந்துள்ளார்களே இது என்ன நியாயம்? என்ற என்பதே அந்த ஐயம். இரண்டு காரணங்களால் இந்தக் கேள்வி தவறாகும்.

நூறு முஸ்லிம்கள் இருக்கும் ஊரில் பத்துப் பேர் மட்டும் ஜகாத் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நூறு பேர் சார்பாக பத்து வசதியானவர்கள் கொடுக்கும் ஜகாத் வரி நூறு முஸ்லிமல்லாதவர்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஸ்யாவரியை விட அதிகமாகும்.

முஸ்லிம், முஸ்லிமல்லாதார் என்ற அடிப்படையில் கேள்வி எழுப்பப்படுவதால் இந்த அடிப்படையிலேயே இதை அணுக வேண்டும். ஒரு லட்சம் முஸ்லிமல்லாதவர்கள் அனைவரும் செலுத்தும் ஜிஸ்யா வரியைவிட ஒரு இலட்சம் முஸ்லிம்களில் பத்தாயிரம் பேர் செலுத்தும் ஜகாத் வரி அதிகமாகும்.

அடுத்து ஏழை முஸ்லிம்கள் வரி விலக்கு பெறுவது போலவே முஸ்லிமல்லாத ஏழைகளும் கூட சலுகை பெற்றிருந்தார்கள். முஸ்லிமல்லாத ஏழைகள் இஸ்லாமிய அரசுவிதிக்கும் குறைந்த பட்ச ஜிஸ்யா செலுத்தக் கூட விலக்கு பெறுவார். ”எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்” என்று குர்ஆன் கூறுகிறது. எனவே ஜிஸ்வே வரியைக் குறை கூற நியாயம் ஏதும் இல்லை. நியாய உணர்வு படைத்த மாற்று மதத்தினர் இதைக் குறை கூற மாட்டார்கள். முஸ்லிமல்லாதவர்கள் மீது ஜிஸ்யா வரிவிதித்ததன் மூலம் முஸ்லிமல்லாதவர்களை மதம் மாற்ற இஸ்லாம் முயன்றது என்ற குற்றச்சாட்டும் தவறானதே.

மிக மிகசொற்பமான இந்த வரியிலிருந்து தப்புவதற்காக பரம ஏழைகள், பெண்கள், பைத்தியங்கள், சிறுவர்கள், முதியவர்கள் விலக்களிக்கப்பட்டு திடகாத்திரமானவர்கள் மீது மட்டுமே விதிக்கப்பட்ட இந்த வரியில் இருந்து தப்புவதற்காக தங்கள் மதத்தையே மாற்றிக் கொண்டார்கள் என்பதை எந்த அறிவுடையவனும்ஏற்க முடியாது.

ஒரு மதத்தின் மீது கொண்ட நம்பிக்கை (அந்த மதம் எவ்வளவு பலவீனமானதாக இருந்தாலும்) சிறிய வரியிலிருந்து தப்புவதற்காக சிதறுண்டு விடும் என்று எவருமே கூற மாட்டார்கள்.

அவ்வாறு கூறுபவர்கள் அந்த மதத்தையும், அந்த மதத்தைச் சேர்ந்தவர்களையும் ஒரு சேர இழிவு செய்கிறார்கள் என்பதே அர்த்தமாகும்.

இதை விடக் கூடுதலாக முஸ்லிம்கள் வரி செலுத்திய நிலையில் இஸ்லாத்தில் சேருவதால் முஸ்லிமல்லாதவர்களுக்கு என்ன பொருளாதாரச் சலுகை கிடைத்து விடும்? இதைச் சிந்தித்தால் இவ்வாறெல்லாம் அபத்தமாக உளறமாட்டார்கள்.