கிசுகிசு வெனப்பேசி-பின்
கலகலவெனச் சிரித்தாய்!
சலசலவென வார்த்தைகாய்
மளமளவெனச் சொறிந்தாய்!
என்று என்னுள்ளதுதோடு நானே கதைத்துக் கொள்கிறேன்
என்னுள் தொலைந்து போன நாட்களை நினைந்து.
திருதிருவென முழித்தேன்-கண்கள்
பலபலவென மிளிரகதகதவென என்னுள் தீயொன்று
திபுதிபுவென சுட்டெரித்ததுவே!
கடந்துவிட்ட கருப்பு நாட்களை நினைத்த போது இன்னும்
சூடாகவே இருக்கின்றது ஆற மறுத்த அந்த வடுக்கள்!
தரதரவென இழுத்தெறிந்த கொடுமை!
ஜலஜலவென இதயம் நொந்தொழுகமசமசப்பாய் மனமும் உவப்பிழந்ததுவே!
நாட்டமின்மை எப்போதும் தானாக உருவாவதில்லை,
தொடர் சறுக்களில் ஊனப்பட்டது
மனசுதான் கால்களல்ல!
தளதளவென்ற வனப்பு நாட்களில்
வலவலவென்று பேசியன-இன்றுகறகறவென்றென் தொண்டைக்குள்
வரவர-சிவந்ததோ கண்கள்தான்!
கடந்துவிட்ட நாட்களை; அறுந்துவிட்ட பட்டத்தைப் போல்
என்னாவிட்டால் இப்படித்தான் எண்ணிக் கொண்டே இருக்க வேண்டிவரும் எஞ்சிய நாட்களையும்!
- அபூ அரீஜ் (03.06.12)
No comments:
Post a Comment