சூட்சுமம் நிறைந்த
சூராவளி
சுமங்களியாய் கிடந்த
அமைதிப் பூங்காவை
கலைத்த தருணம்!
ஆர்முடுகல்
அமர்க்கலத்தில்
அங்குமிங்குமாய்
வேட்டை நடத்தும்
இலக்கற்ற கும்பலுக்கு
சோதனைச் சாவடி எதற்கு?!
பாதையோரப் பதாதைகள்
இன்னும் குறைந்தபாடில்லை
ஊடகங்களின்
உண்மைக் கலைப்பு
யூகங்களை மட்டுமே
விட்டுச் செல்கின்றன!
சர்வதேசப் பயங்கரவாதம்
சாக்கடைப் போக்கை
மாற்றாதவரை
அமைதியின் தாகத்திற்கு
தாயகம் கொடுப்பது அசாத்தியம்!
தங்கச் சங்கிலியென்று
விளங்கை மாட்டிக் கொண்ட
விலங்கின் மறுமுகமாய்
விளங்காச் சூடசுமங்கள்!
(ஆழ்ந்து நோக்கின் மட்டும்
கொஞ்சம் புலரும்).
மனித மண்டைகளில்
குடித்தனம் நடத்தும்
விலங்கியற் கோற்பாடுகளின்
அராஜக வேட்டைகளில்
செத்தல் தொடர்கிறது
மனிதம் விளிக்கும் வரை!
ஆயுதச் சந்தைகளில்
ஜடங்களின் ஆரவாரம்
இன்னும் ஓய்ந்தபாடில்லை!
யுகம் முடிந்தாலும் - போர்
தாகம் தனியா!
இரத்தம் முடிந்தாலும்
யுத்தம் முடியா!
உருளும் உலக
உருண்டையில்
விளங்கிடப்பட்ட
அமைதியை விடுவிக்க
திறவுகோள் செய்வதற்கு
ஒரு கொல்லனுக்கும்
திராணியில்லை!
- அபூ அரீஜ் (03.06.12)
No comments:
Post a Comment