படித்து பாருங்கள், நீங்கள் மனவருத்ததில் இருக்கும் போது, 90/10 கோட்பாட்டை பயன் படுத்துங்கள்.
An EXCELLENT, simple principle.
அடிப்படை என்ன ?
நம் வாழ்க்கை நடப்பவற்றில் 10 % மட்டுமே தானாக நடப்பதாகும்
மீதமுள்ள 90 % நாம் எப்படி ரீயாக்ட் செய்கிறொம் என்பதை பொறுத்தே அமைகின்றன.
அப்படியென்றால் , அந்த 10 % த்தை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் 90 % நம்மால் கண்டிப்பாக மாற்ற முடியும்.
எப்படி ....
உதாரணமாக . ..
ஒரு ரோடு சிக்னல் சிகப்பாவதை நம்மால் தடுக்க முடியாது
ஆனால் நம்முடைய ரீயாக்ஷனை நாம் கட்டுப்படுத்தலாம்
ஒரு நிகழ்ச்சியை உதாரணமாக எடுத்துக் கொள்வோம்..
நீங்கள் உங்கள் குடும்பத்தினருடம் அமர்ந்து காலையில் பசியாறிக்கொண்டிருக்கும் வேளையில்
உங்கள் மகள் காஃபியை உங்கள் ஆஃபிஸ் செல்லும் சட்டயில் கொட்டி விட்டாள்.
நடந்து விட்டதை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.
இதற்கு பின் நடக்கப் போவது உங்கள் ரீயாக்ஷனை பொருத்தே அமைகிறது.
உங்கள் மகளை நன்றாக ஏசுகிறீர்கள். அவளுடைய கண்களில் கண்ணிர்....
பின்னர் உங்கள் மனைவியிடம் பாய்கிறீர்கள்.. காஃபி கப்பை டேபில் ஓரத்தில் வைத்ததுக்காக...
சிறிய வாக்குவாதம் வெடிக்கிறது
மாடிக்கு ஓடிச்சென்று சட்டையை மாற்றிக் கொண்டு
மீண்டும் கீழேவந்து பார்த்தால் உங்கள் செல்ல மகள் இன்னும் அழுகையை நிறுத்திய பாடில்லை. ப்ரேக் ஃபாஸ்ட் லேட்டானாதால் ஸ்சூல் பஸ் போய்விட்டது.
உங்கள் மகளை ஏற்றிக் கொண்டு ஸ்கூலுக்கு விரைகிறீர்கள்
உங்கள் அலுவலகுத்துக்கு லேட் ஆனதால், 30 கிமி ஸ்பீட் லிமிட் உள்ள ஏரியாவில் 40 கிமி ஸ்பீட் போனதால் 60 டாலர் ஃபைன் வேறு
உங்கள் மகள் உங்களிடம் பை சொல்லாமலேயே ஸ்கூலுக்குள் ஓடி விடுகிறாள்
நீங்கள் ஆஃபிஸ் வந்து சேரும்போது 20 நிமிடம் லேட். அதற்கு பிறகு ஆஃபிஸ் பிரீஃப் கேஸ் எடுத்து வரவில்லை என்று ஞாபகம் வருகிறது.
அய்யகோ , உங்கள் நாள் ஆரம்பதில் இருந்து கொடுமைக்கு மேல் கொடுமை.... பேசாமல் வீட்டுக்கு திரும்பிச் செல்லலாம் போல் உள்ளது.
வீட்டிற்கு வந்தால் காலையில் போட்ட சண்டையின் எஃபெக்ட் உங்கள் மனைவி முகத்தில்.....
........ஏன் இதெல்லாம்.. ..........?
ஏனென்றால், காலையில் உங்கள் ரீயாக்ஷன் தான் எல்லாவற்றிகும் முதல் காரணம்.
யார் காரணம்
1. காஃபியா ?
2. மகளா ?
3. மனைவியா?
4. ஃபைன் போட்ட போலீஸா ?
5. நீங்களா ?
இதற்கான பதில் 5.. உங்கள் ரீயாக்ஷன் என்பதே ஆகும்
எப்படி ...??
90/10 அடிப்படை படி
உங்கள் மேல் காஃபி கொட்டியதை உங்களால் தடுக்க முடியாது (10 %)
ஆனால் உங்கள் ரியக்ஷனில் ஏற்பட்ட விழைவுகளை ( 90 % ) கண்டிப்பாக மாற்றமுடியும்
பின்வருமாறு நடந்து இருந்தால்
காபி உங்கள் மீது கொட்டுகிறது.
நீங்கள் மகளிடம் “ பரவாயில்லடா என் செல்லம், அடுத்த முறை கவனமாக இருக்கனும் ஓகேவா ?
கூலாக ஒரு டவலை எடுத்துகொண்டு மாடிக்கு சென்று சட்டையை மாற்றிக் கொண்டு, ஆஃபிஸ் ப்ரீஃப் கேஸை எடுத்துக் கொண்டு .. ஜன்னல் வழியாக வெளியே பார்க்கும் போது உங்கள் மகள் பஸ்ஸில் ஏறிக் கொண்டு உங்களை பார்த்து டாடா சொல்கிறாள்
5 நிமிடம் முன்பாகவே ஆஃபிஸ் வந்து விட்டீர்கள்.
வித்தியாசத்தை உணர்ந்தீர்களா ?
ஆனால் முற்றிலும் வேறு விதமாக முடிகிறது.
ஏன் ...? எப்படி ?
காரணம் உங்களின் ரியாக்ஷன் தான்.
உங்கள் வாழ்க்கையில் நிகழும் 90 % விஷயங்கள் நாம் எப்படி ரீயாக்ட் செய்கிறொம் என்பதை பொறுத்தே அமைகின்றன.
Have a great 90/10 day!!
No comments:
Post a Comment