எழுதியவர்: மௌலவி அபூ நதா M.J.M.ரிஸ்வான் மதனி
நிவ்யோக் நகரத்தில் இருந்து தென்பகுதிவரை அட்லாண்டிக் கரையோரம் ஊடாக உலகப் பொலிஸ்மா அதிபரின் இல்லத்தை சேண்டிப் புயல் ஒருகை பார்த்துள்ளது. நியோக் தலை நகரில் இருந்து தென்பகுதியின் கடைசிக் கோடிவரை அதன் கோரம் பரவிக்காணப்பட்டது. நிலமைகளைச் சமாளிக்க முடியாதவாறு பொலிஸ்மா அதிபரின் அடியாட்கள் நிலைகுலைந்தனர்.
முஸ்லிம்களின் பெட்ரோலிய வளங்களை இரவு பகலாக கொள்ளை அடித்தும்இ இப்பமிட்டும் ஈராக்கில் அழிவுதரும் அணுஆயுதம் இருப்பதாகவும்இ ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளின் பதுங்குகுழிகள் இருப்பதாகவும் பொய்யுரைத்து அந்த மக்களை சீரழித்த அமெரிக்காவை சேண்டிப் புயல் சீண்டியுள்ளது.
பொருளாதார வர்த்தக நடவடிக்கைகள் முழுமையாக துண்டிக்கப்பட்ட நிலையில் 60 மில்லியன் அமெரிக்க குடிமக்களின் வாழ்வில் விழுந்துள்ள பேரடியாக அமைந்துள்ளது. இதன் பின்னர் எந்த நாடுகளைக் கொள்ளையடிக்கும் நிகழ்ச்சி நிரல் போடப்பட்டுள்ளதோ தெரியவில்லை.
சேண்டி ஆரம்பித்த சிலமணி நேரங்களில் வீதிகள்இ சாலைகள்இ தொழிற்சாலைகள்இ சுரங்கங்கள் என அனைத்து இடங்களும் நீரால் நிரம்பி வழிந்தன. பாரிய பனிப்புயல் அதன் வடபகுதியை அடித்து நொறுக்கியது. சேண்டியைக் கண்டு அதிர்ந்து போன அமெரிக்க கடல்படையினர் தமது போர் கப்பல்கள் தாங்கிய கப்பலை கரையோரமாக நிறுத்துவதைத் தவிர்த்து கடலில் தூரமாக நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
மின் இணைப்புக்கள் முழுமையாக துண்டிக்கப்பட்டுஇ தொலைத் தொடர்பு சாதனங்கள் செயலிழந்து வேற்றுக்கிரகவாசிகளைப் போல எவ்வித தொடர்புகளும் அற்றவர்களாக வாழும் நிலைக்கு பல மில்லியன் அமரிக்க மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இப்படி ஒரு மறுமையை உண்டாக்கிய சேண்டியால் முதல்கட்டமான நஷ்டமாக 30 பில்லியன் கோடி அமெரிக்க டொலர்களையும் தாண்டியது என மதிப்பிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு (2011ல்)வீசிய ஏரீன் என்ற புயலின் பாதிப்புக்கள் 10 கோடி அமரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டது. இது அiவிடப் பாரியளவு வித்தியாசமானது. இதன் மூலம் அமெரிக்கா 27 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளது.
No comments:
Post a Comment