Thursday, May 31, 2012

டீன் ஏஜ்!!

டீன் ஏஜ் என்று சொல்லப்படும் பருவத்தில் நுழையும் குழந்தைகளிடம், பெற்றோர் மிக ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. என் குழந்தைகளிடம் நான் மிகச் சிறிய வயதிலேயே என்னை அவர்கள் ஃப்ரெண்டாக நினைத்துக் கொள்ளச் சொன்னேன். பலனையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்! – சமயத்தில் என்னைப் பேரைச் சொல்லிக் கூப்பிடுவார்கள் – கேட்டால், நீ என் ஃப்ரெண்ட் தானே என்று பதிலும் வரும்!!

நான் இங்கு சொல்ல வந்தது என் குடும்பக் கதையை அல்ல! எனக்குத் தெரிந்த குடும்பத்துப் பெண்ணின் கதை! அந்தப் பெண் மேல்நிலைப் படிப்பு முடிக்கும் வரை உள்ளூரிலேயே படித்தாள். கல்லூரி செல்வதற்கு பேருந்தில் 30 நிமிடம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. கல்லூரியில் நன்றாகப் படித்துக் கொண்டிருக்கிறாள் என்றே எண்ணிக் கொண்டிருந்தனர் அனைவரும். 3 வருடங்களில் பட்டப்படிப்பு முடிந்த சமயம், பட்டம் வாங்குவதற்கு கான்வகேஷனுக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்ற விளம்பரத்தைக் கண்டு, அவள் ஏன் இன்னும் விண்ணப்பிக்கவில்லை என்று அவள் உறவினர் கேட்ட போது தான், கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையானது.

முதலில் தான் விண்ணப்பம் செய்ததாகச் சொன்னாள். பின் மாற்றிப் பேசினாள். அவளது பரீட்சை நுழைவு எண்ணை வாங்கி, பல்கலைக்கழக வலைத்தளத்தில் பார்த்த போது, அவள் பரீட்சையே எழுதியிருக்கவில்லை! மேலும் இரண்டாம் வருடத்தில் ஒரு பேப்பர் அரியர்ஸ்! காரணம் என்னவென்று யூகித்து விட்டீர்களா? கல்லூரியில் இரண்டாம் வருடத்தில் கிடைத்த கூடா நட்பும், அதன் மூலம் அறிமுகமான இண்டர்நெட் சாட்டிங்கும் தான்! இதில் சாட்டிங்கில் கிடைத்த ஒரு பையனுடன் காதலாம்! கல்லூரிக்குப் போகாமல் இந்த இரண்டு வேலைகளையும் ‘ஒழுங்காக’ச் செய்ததில், மூன்றாம் வருடம் அட்டெண்டன்ஸ் போதாததால் பரிட்சைகள் எழுத இயலவில்லை! பெற்றோர் பார்க்கக் கூடாதென்று இரண்டாம் வருட மதிப்பெண் பட்டியலில் இருந்து எல்லாவற்றையும் கிழித்துப் போட்டிருக்கிறாள்! அவர்கள் இருந்த அபார்ட்மெண்டில் மாலை தபால்கள் வீட்டுக்கு எடுத்து வருவது அவள் வேலை; அதனால், கல்லூரியிலிருந்து வந்த கடிதங்கள் அத்தனையையும் அவளே அழித்தும் விட்டாள்! பெற்றோருக்கே தெரியாமல் இன்னொரு கைப்பேசி வைத்திருந்தாள் – அந்தக் காதலனின் பரிசு! அவளது மின்னஞ்சல் முகவரி, மற்ற விவரங்கள் வாங்கி எல்லா விவரங்களையும் தெரிந்து கொண்டனர் பெற்றோர். மின்னஞ்சலின் பாஸ்வேர்ட் அந்தக் காதலனுக்கும் தெரியுமாம்!! தகவலை எப்படியெல்லாம் பகிர்ந்து கொள்கின்றனர்! டெக்னாலஜி ஹாஸ் இம்ப்ரூவ்ட் ஸோ மச்!
பெற்றோருடைய நிலைமையை நினைத்துப் பாருங்கள். ஒருவழியாக காதலுக்கும் இன்ஃபாச்சுவேஷனுக்கும் உள்ள வித்தியாசங்களைப் புரிய வைத்து, வாழ்க்கையை விளையாட்டாக எண்ணக் கூடாதென்ற பாடத்தையும் அவளுக்குத் தெரிய வைத்தனர். பின்னர் அந்தப் பெண் திருந்தி, ஒழுங்காகத் தன் படிப்பை முடித்தாள்! என்ன கேட்கிறீர்கள் – காதலன் என்ன ஆனான் என்றா? மின்னஞ்சலில் பாஸ்வேர்ட் மாறியவுடன் அவன் அலர்ட் ஆகிவிட்டான்! இவள் பெற்றோருக்குத் தெரிந்து விட்டது எனத் தெரிந்ததும் அவன் ஜூட்! செல்ஃபோனை அவனிடமே திருப்பித் தந்தாகி விட்டது! அந்தக் கால திரைப்பட பாணியில் சொல்ல வேண்டுமானால், முள்ளில் விழ இருந்த சேலையை சேதாரமில்லாமல் காப்பாற்றியாகி விட்டது!
இங்கே பெண் வலையில் வீழ்ந்தாள் – ஆனால், பெண்களும் இப்போது ஆண் பிள்ளைகளை ஏமாற்றுகிறார்கள். குழந்தை ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, தம் குழந்தைகளைச் சரியான வாழ்க்கைப் பாதையில் செலுத்துவது பெற்றோரின் கடனே. மாறி வரும் காலத்தோடு மாற வேண்டியது பெற்றோரும் தான். அவர்கள் தம் குழந்தைகளோடு ‘க்வாலிட்டி டைம்’ செலவழிக்க வேண்டும். அவர்கள் அன்றாட வாழ்வில் என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள், என்னென்ன விஷயங்களில் சந்தோஷப்பட்டார்கள் (அவை பெரியவர்களுக்கு எவ்வளவு சின்னதாகத் தெரிந்தாலும் சரி) என்று தினம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்! குட் டச், பேட் டச் சொல்லித் தருவதோடு மட்டுமன்றி, காதலுக்கும் இன்ஃபாச்சுவேஷனுக்கும் வித்தியாசத்தையும் சொல்ல வேண்டும்!

இந்த விடலைப் பருவம் தான், ‘என் அப்பா/அம்மா மாதிரி உண்டா?’ என்று குழந்தைகள் அதிசயித்து பார்த்ததிலிருந்து, ‘என் அப்பா/அம்மாவிற்கு ஒன்றும் தெரியாது’ என்று நினைக்க ஆரம்பிக்கும் பருவம்! எதை எடுத்தாலும் எதிர்த்துப் பேச ஆரம்பிக்கும் பருவம்! இந்தப் பருவத்தை பெற்றோரும் தாண்டி வந்ததினால், விவேகத்துடன், விடலைக் குழந்தைகளை அரவணைத்துச் செல்ல வேண்டும்.

கணிணி மூலம் அறிவைப் பெருக்கிக் கொள்ளும் இக்காலத்தில், குழந்தைகளை கணிணியைத் தொடாமல் தவிர்க்கக் கூடாது/ முடியாது; இதற்கு வேண்டாத சில வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் சாஃப்ட்வேரைப் பயன்படுத்தலாம். முக்கியமாக, பெற்றோர் தம் குழந்தைகள் பார்க்கக்கூடாத வலைத்தளங்களைத் தாமும் பார்க்காமல் இருக்க வேண்டும்!!

ஃபேஸ்புக் – மூலம் பள்ளி மாணவ மாணவிகள் நண்பர்கள் ஆகும் கலாச்சாரமும் பெருகி வருகிறது. நான் படித்த ஒரு செய்தியில், ஒரு பள்ளியைச் சேர்ந்த குழந்தைகள் முகப்புத்தகத்தில் தம் தலைமையாசிரியரைக் குறித்துக் கிண்டல் செய்து செய்திகள் வெளியிட்டதில் இருந்து, அந்தப் பள்ளியின் விளையாட்டு ஆசிரியருக்கும் மாரல் ஸயின்ஸ் ஆசிரியருக்கும் இன்னொரு வேலையும் சேர்ந்து விட்டது…. – மாற்றுப் பெயரில் தானும் இவர்களுடன் சேர்ந்து, இந்தக் குழந்தைகள் எழுதுவதைக் கண்காணிக்கும் பணி!! தங்கள் அலுவலக வேலைக்காக கணிணி கற்றுக் கொள்ளும் பெற்றோர், தம் குழந்தைகளின் முகப்புத்தக நண்பரும் ஆகலாமே!

நேரமின்மை என்பது ஒரு மாயை – விரும்பிய வேலைகளுக்கு எப்படியாவது நேரம் ஒதுக்குகிறோம் அல்லவா.. – - குழந்தைகள் வளரும் பருவத்தில் சிறிது நேரத்தை அவர்களுக்காக ஒதுக்கி, அவர்களை நேர்வழியில் அவனியில் முந்தியிருப்பச் செய்தால், பெற்றோருக்கு வயதான காலத்தில் அவர்கள் அசை போட அருமையான நினைவுகளும் இருக்கும், அந்தச் சமயம் வளர்ந்து பெரியவர்களான அவர்கள் குழந்தைகளும், ‘என் அப்பா/அம்மா ரொம்ப அண்டர்ஸ்டாண்டிங் – அவர்கள் என்னை வளர்த்த மாதிரி தான் நான் உங்களிடம் நடக்க முயற்சி செய்கிறேன்’ என்று தம் மக்களிடம் சொல்லிக் கொண்டிருப்பார்கள்!!

மிடில் கிளாஸ் மாதவி

ஆறாவது அறிவை வெல்லும் ரோபோக்கள்

     













மனிதன் குரங்கில் இருந்து தோன்றியிருக்கலாம் என்ற கருத்து உலவிக் கொண்டிருக்கிறது. ஆனால் மனிதன் விலங்கில் இருந்து மேம்பட்டவன் என்பது மட்டும் உண்மை. பகுத்தறியும் அறிவாகிய ஆறாவது அறிவு மனிதனுக்கு மட்டுமே உள்ளது. இதனைக் கொண்டு நல்லது, கெட்டதை ஆராயும் தன்மையை மனிதன் பெற்றிருக்கிறான். அறிவியலின் மகத்துவத்தை உணர்ந்து கொண்ட பின்பு தனது வாழ்க்கையை எளிமையாக்க எத்தனையோ கருவிகளைக் கண்டுபிடித்தான். இப்போது உலகில் உள்ள மற்ற உயிரினங்களை அடக்கி ஆள்வது மட்டுமல்லாமல், வேறு கிரகத்தை ஆக்கிரமிக்கும் பணிக்கும் ராக்கெட்டுகளையும் செயற்கை கோள்களையும் விண்வெளிக்கு அனுப்பி வருகிறான். இதற்கெல்லாம் ஆறாவது அறிவு என்கிற வரப்பிரசாதம் தான் காரணம்.

உயிரனங்களில் மேலான அறிவைப்பெற்றிருக்கும் மனிதன், இயற்கையின், கடவுளின் பிரதிநிதியாக வர்ணிக்கப்படுகிறான். எல்லா வேதங்களிலும் மனிதனை உயர்ந்த ஒப்பற்ற படைப்பு எனவும், அவனுடைய அறிவே இயற்கையின் படைப்புகளையும், உண்மைகளையும் அறியக்கூடியதாய் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. என்றாலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் நிறைந்த இன்றைய மனித நாகரீகம் ஒரு பக்கம் நன்மையைத் தந்து கொண்டிருக்க மறுபக்கம் அச்சுறுத்துகின்றது. காரணம் நாடுகளுக்கிடையே, இனங்களுக்கிடையே போர், தீவிரவாதம், குற்றம், களவு என்று மனித பாதிப்புகளின் எல்லை நீண்டுக் கொண்டே செல்கிறது. இதற்கும் அறிவியல் துணை புரிகிறது என்பதை மறுக்க முடியாது.

இது மட்டுமல்லாமல் இயற்கையும் மனித இனத்தை அவ்வப் போது ஒரு கை பார்த்துவிடுகிறது. பூகம்பம், சூறாவளி, புயல், மழை என்று அவ்வப்போது வந்து மக்களின் வாழ்க்கை சுழற்சியை ஒரு முறை ஆட்டிப் பார்க்கிறது. இயற்கையின் கொதிப்பை அடக்கவும் மனிதன் ஆறாவது அறிவைப் பயன்படுத்தி வருகிறான். இதற்காக சில இயந்திரங்களும் கண்டுபிடிக்கப்படுகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை படையெடுப்பை முன் அறிவிக்கும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அதே போல் இயற்கையின் மற்ற ஆபத்துகளை தடுக்கவும் அறிவியல் ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வுகள் வெற்றி பெற்றால் மனிதன் இயற்கையை வெல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

ஆனாலும் மேற்கண்டவைகளிலிருந்து (போர், தீவிரவாதம், குற்றம் களவு, இயற்கைப் பேரழிவு) தன்னை தற்காத்துக்கொள்ள வேண்டிய கட்டாய சூழலில் இன்றைய மனிதன் இருக்கின்றான். இதற்கான ஆய்வில் உருவானதுதான் நாம் இப்பொழுது பார்க்கப்போகும் ரோபோக்கள். கண், காது, மூக்கு மற்றும் கை, காலுடன் நடமாட்டம் உள்ள இயந்திர ரோபோக்கள் இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பணிகளுக்கான ரோபோ:

ராணுவ நடவடிக்கைகளில், இது போன்ற ரோபோக்களின் செயல்பாடுகள் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மறைந்திருக்கும் பொருட்களை கண்டிபிடித்தல், வெடிகுண்டுகளை செயலிழக்கச்செய்தல், பதுங்கியிருக்கும் தீவிரவாத குழுக்களின் நடவடிக்கைகளை ஆராய்தல் என பலதரப்பட்ட ராணுவ மற்றும் புலனாய்வுத்துறைகளில் இவ்வகை ரோபோக்கள் ஒரு வரப்பிரசாதமாகவே கருதப்படுகின்றது.














ஆனால், இவ்வகை ரோபோக்கள் முழுவதுமாக தங்களின் பணிகளை செய்கிறதா? என்றால், இல்லை என்றுதான் கூறமுடியும். காரணம், ரோபோக்களின் வடிவமைப்புகள், மற்றும் செயல்பாடுகளில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்றே கூறமுடியும்.

உதாரணமாக, ஆப்கனில், தாலிபான் பதுங்கி வசிக்கும், மலைக்குகைப் பகுதிகளில் இவ்வகை ரோபோ அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த ரோபோவின் பாதையில் ஏணிகளை வைத்து அந்த ரோபோவை கீழே விழச்செய்துவிட்டனர் தாலிபான்கள். ஏணிப்படிகளுக்கிடையே உள்ள இடைவெளியில் இந்த ரோபோ கீழே விழ நேரிட்டது.

இந்த அதிநவீன ரோபோக்கள் செல்லும் பொழுது, இடையில் ஏற்படும் தடைகளில், சுவர்களில் முட்டி மோதிக்கொண்டு நின்று விடுகின்றன, மேலும், தரைவழியாக செல்லும் ரோபோக்கள், குப்பைகள், பாலிதீன் பைகள் போன்றவைகளில் சிக்குண்டு நகர முடியாமல் நின்று விடுகின்றன, பள்ளங்களில் விழுந்து விடுகின்றன. பறந்து செல்லக்கூடிய ரோபோக்கள், இடையில் உள்ள மின்கம்பம், விளம்பரப்பலகை போன்றவைகளில் மோதிவிடுகின்றன.

ரோபோக்களின் இதுபோன்ற செயல்கள் விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது என்றே கூறலாம். இதனின் அடுத்த கட்ட வளர்ச்சியாக, சுவர்களில். கூரைகளில் செங்குத்தாக ஏறக்கூடிய ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வில் வெற்றியும் கண்டுள்ளனர் விஞ்ஞானிகள்.தேசிய தர மற்றும் தொழில்நுட்ப கழகம், கெய்தஸ்பர்க், மாரிலாண்டில் இந்த சோதனையினை மேற்கொண்டனர். ஆனால் இதில் பங்கேற்ற 16 ரோபோக்களில் 8 ரோபோக்கள் சரியான இலக்கை சென்றடைந்து தகவல்களை அனுப்பவில்லை. இதற்கான காரணம், ஒரு குறிப்பிட்ட இடத்தில் அனைத்து ரோபோக்களையும் சோதனையில் ஈடுபடுத்தியதால், அதனுடைய ரேடியோ அலைகளில் ஏற்பட்ட இடையுறுகளின் காரணமாக இந்த சோதனை முழுமையாக வெற்றிபெறவில்லை என்று ஆராய்ச்சி வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்த குறையினை சரிசெய்ய இன்னும் முழுமூச்சாக விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால் தனித்தனியாக ஒவ்வொரு ரோபோக்களின் செயல்பாடுகளை ஆராயும் பணியில் இறங்க தீர்மானித்துள்ளனர்.

ஈராக்கில் அவ்வப்போது குண்டுகள் வெடித்து பலநூறு உயிர்கள் பலியாகின்றன. இதனால் ஈராக்கிற்கு இந்த ரோபோக்கள் அனுப்பப்பட்டது. சந்தேகம் உள்ள பல இடங்களில் ஆய்வு கொண்ட நவீன ரோபோக்கள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகளை கண்டிபிடித்தது. உடனடியாக வெடிகுண்டுகள் அனைத்தும் செயலிழக்கச் செய்யப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இவ்வகை ரோபோக்கள் காப்பாற்றியிருக்கின்றன என்று ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்.















இவ்வகை ரோபோக்கள், வீட்டுவேலைகளை கவனிக்கும் ரோபோக்கள் போன்றோ, மக்களை வரவேற்கும் ரோபோக்கள் போன்றோ அல்ல. வரக்கூடிய ஆபத்துகளை முன்கூட்டியே அறிவிக்கக்கூடிய திறன் பெற்ற அதிநவீன ரோபோக்கள் ஆகும். இந்த ரோபோக்கள் பல உருவங்களில் உருவாக்கப்படுகின்றது. இடம், சூழல், சுற்றுப்புற அமைப்பு போன்றவைகளுக்கு ஏற்றவாறு இதன் உருவங்கள் வடிவமைக்கப்படுகின்றன. போலீஸ் வேட்டை நாய்கள் எப்படி மோப்பம் பிடித்து குற்றங்களை கண்டிபிடிக்க உதவுகின்றனவோ, அந்த அளவிற்கு ரோபோக்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன, என்று ஆராய்ய்சியாளர் ஜேஹேப் கூறுகின்றார்.

சமீபத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட காத்ரினா, ரீட்டா போன்ற புயல் சூறாவளி இடிபாடுகளில் சிக்கித்தவித்த மனிதர்களை கண்டுபிடிக்க உதவியதில் மோப்ப நாய்களின் பங்கு மிகச்சிறப்பானது. அதே போன்ற பங்களிப்பினை ரோபோக்களும் செய்ய வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பு. அதற்கான காலமும் வெகு தொலைவில் இருக்காது என்பதும் ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை.

பெட்டி ரோபோ

மனிதன் மற்றும் நாய் போன்ற உயிரினங்கள் புக முடியாத இடங்களில் கூட பாம்பு வடிவிலான ரோபோக்கள் அனுப்பப்படுகின்றன. இந்த ரோபோவின் தலையில் கேமரா பொருத்தப்பட்டு அதன் மூலம் புகைப்படங்கள், மற்றும் தகவல்களை பெறப்படுகிறது. இதில் எங்களுக்கு முழுமையான வெற்றி கிடைத்தது என்று சார்லஸ் என்கிற விஞ்ஞானி கூறுகிறார். தற்பொழுது ஈராக்கில், வாகனங்களை நிறுத்தி சோதனைச் செய்யும்பொழுது, வெடிகுண்டுகள் இயக்கப்பட்டு அதன் மூலம் பல உயிர் சேதங்கள் ஏற்படுவதை நாம் அறிவோம். இந்த உயிர்சேதத்தை தடுப்பதற்காக ஈராக் மட்டுமல்லாமல், மற்ற நாடுகளிலும் இது போன்ற சந்தேகத்திற்கு இடமான வாகனங்களை சோதனை செய்வதற்கும் பெட்டி வகை ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.



















இவ்வகை ரோபோக்கள் காரினை நிறுத்தி தன்னிடம் உள்ள கண்டுபிடிக்கும் கருவி மூலம், காரின் உள்ளே இருக்கும் பொருள்களை கண்டுபிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்களை அனுப்புகின்றன. மேலும் நாடுகளுக்கிடையேயான எல்லைகள், ராணுவத்தின் ரகசிய இடங்கள் போன்றவைகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஆளே இல்லாமல் இந்த ரோபோக்கள் இயக்கப்பட்டு, இதன் மூலம் செய்திகளை உரிய இடத்தில் பெறுகின்றனர். இந்த வகை ரோபோக்களில் உள்ள குறைபாடுகளை களைந்து, இன்னும் உத்வேகமான ரோபோக்களை உருவாக்கும் முயற்சி ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, மற்றொரு கணினி புரட்சியாக, தனி நபர் ரோபோவினையும் விஞ்ஞானிகள் உருவாக்கிக்கொண்டுள்ளனர்.

தனி நபர் ரோபோ

இவ்வகை ரோபோக்கள் மனிதர்களுக்கு உடல் ரீதியாக உதவும், உறவாடும் என்று கூறுகின்றார் ஹென்றிக் கிரிஸ்டன் என்கிற ரோபோ ஆராய்ச்சியாளர். இவர் அட்லாண்டாவில் உள்ள ஜார்ஜியா தொழில் நுட்ப கழகத்தைச் சேர்ந்தவராவார். வீட்டைச் சுத்தம் செய்தல், நீச்சல் குளங்களை சுத்தம் செய்தல், காபி தயார் செய்தல் போன்ற செயல்களோடு, குறிப்பிட்ட நேரத்தில் ஒரு அதிகாரியை ஆயத்தப் படுத்துவது, சொல்வதை புரிந்து கொண்டு அதனை கணினியில் பதிவு செய்தல், வயதானவர்களை கைப்பிடித்து அழைத்துச்செல்லுதல், இதோடு மட்டுமில்லாமல், கிமி மூலமாக சில விஷயங்களுக்கு ஆலோசனைகளை கூறுதல் போன்ற செயல்களையும் இந்த தனி நபர் ரோபோ செய்யும்.

திரைப்படங்களில் மனிதர்களைப் போலவே செயல்படக்கூடிய ரோபோக்களைக் காண்பிக்கின்றனர். ஆனால் அவைகள் எல்லாம் எதிர்கால கற்பனைகளேயொழிய, அது போன்ற ரோபோக்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை என்று கூறும் கிரிஸ்டன், அது போன்ற ரோபோக்களை உருவாக்க எல்லாவிதமான ஆய்வுகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று கூறுகிறார். இந்த புதிய வகை ரோபோக்கள், இயந்திரம் போல இல்லாமல், மிகவும் இயல்பாக மனித தன்மைகள் கொண்டதாகவும் புத்தி கூர்மையுடனும் இருக்கவேண்டும் என்று தான் விரும்புவதாகவும், இதற்காக ரோபோ விஞ்ஞானிகள் பாடுபடுவதாகவும் ஜேம்ஸ் காண்டர்ஸன் என்ற தென்வீர் காமா-2 என்ற மென்பொருள் பல்கலைக்கழக அதிகாரி கூறுகிறார். இன்றைய நவீன விஞ்ஞான இயந்திர உலகத்திற்கு ரோபோக்கள் அவசியம்தான்! அவை நாம் எதிர்பார்ப்பது போல் கற்பனையில் ஹாலிவுட் திரைப்படங்களில் காண்பிக்கப்படுவது போல் உருவாகுமா? அதற்கு ரோபோ விஞ்ஞானிகள் தங்களை தயார் படுத்திக்கொண்டுள்ளனரா? என்று கேட்கும் கிரிஸ்டன், இன்னும் அடுத்தடுத்த ஆண்டுகளில் கனவுகள், கற்பனைகள் நிஜமாகும் என்கிறார்! பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
தொடரும்...

எம்.ஜே.எம்.இக்பால்
நன்றி: http://www.chittarkottai.com/mjmiqbal/adisayam45.htm

Wednesday, May 30, 2012

After 12th STD என்ன படிக்கலாம்?

வேலைகள் பல்வேறு துறைகளில் உள்ளன. பிளஸ் 2 முடித்த மாணவரிகள் முதலில் அந்தத்துறைகளை கண்டுகொள்ள வேண்டும். அந்தத்துறை பற்றிய விரிவான தகவல்களை சேகரிக்க வேண்டும். சேகரித்த தகவல்கள் சரியானது தானா? ஏன தகுந்த கல்வியாளரிகளிடம் அல்லது கல்வி வல்லுனர்களிடம் கலந்துரையாடி தெரிந்துகொள்ள வேண்டும். தனக்கு ஏற்ற துறையை தேர்ந்தெடுத்த பின்பு அதற்குத் தகுந்த படிப்பில் சேர முயற்சி செய்வதே சிறந்த செயலாகும்.http://speedsays.blogspot.in

வேலைகள் வழங்கும் பல்வேறு துறைகள் விவரம்..http://speedsays.blogspot.in

1. விண்வெளி பொறியியல் (Aerospace Engineering)
 2. வங்கி மற்றும் காப்பீடு (Banking and Insurance)
 3. பயோ டெக்னாலஜி (Bio Technology)
 4. பி-பார்ம் (B – Pharmacy.)
 5. பி.பி.ஓ இன்டஸ்ட்ரி (BPO   Industry.)
 6. கணினி மற்றும் மென்பொருள் (Computer / Software).
 7. நிகழ்ச்சி மேலாண்மை (Event Management)
 8. பேசன் மேனேஜ்மென்ட் (Fashion Management).
 9. மனித உரிமைகள் (Human Rights.)
 10. விருந்தோம்பல் மேலாண்மை (Hospitality Management.)
 11. உடல்நலம் மற்றும் மருத்துவ தொழில்நுட்பம் (Health Care/ Medical Tech.,)
 12. தகவல்துறைத் தொழில்நுட்பம் (Information Technology.)
 13. தொழிற்ச்சாலை உறவுகள் (Industrial Relations)
 14. பன்னாட்டு வாணிபம் (International Trade.)
 15. மேலாண்மை மற்றும் வணிக நிர்வாகம் (Management/Business Administration.)
 16. ஊடகம் மற்றும் இதழியல் (Media / Journalism.)
 17. பொருள் மேலாண்மை (Material Management.)
 18. உற்பத்தி மேலாண்மை (Production Management)
 19. பணியாளர் மேலாண்மை (Personnel Management.)
 20. கிராம மேலாண்மை (Rural Management.)
 21. போக்குவரத்து மற்றும் சுற்றுலா (Travel / Tourism.)
 22. சில்லறை வியாபார மேலாண்மை (Retail Management.)
 23. செலவு மற்றும் மேலாண்மை கணக்குப்பதிவு (Cost and Management Accountancy)
 24. மண்ணியல் (Geology.)
 25. தோட்டக்கலை (Horticulture.)
 26. விளம்பர மேலாண்மை (Advertising Management).

மாணவரிகள் தங்களின் உயர்நிலைக் கல்வியை தேர்வுசெய்ய உதவும் வகையில் உயர்நிலைக் கல்வி பல வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை
  • கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவு எடுத்து படித்த மாணவரிகளுக்கான உயரி படிப்புகள்.
  • இயற்பியல், வேதியியல், உயிரியல் பிரிவு எடுத்து படித்த மாணவரிகளுக்கான உயர் படிப்புகள்.
  • பொருளாதாரம், கணக்குப்பதிவு, வணிகவியல, செயலாளரிபயிற்சி, கணிதம் மற்றும் கணினி அறிவியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயரி படிப்புகள்..http://speedsays.blogspot.in
  • உயர்நிலைக்கல்விக்கு பின்னர் அனைத்து பிரிவு மாணவருக்கும் அனைத்து பிரிவு மாணவர்களுக்கு தேர்ந்தெடுக்கக்கூடிய பாடங்கள்:
  • போட்டித் தேர்வுகள்
இவை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்

I கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவு எடுத்து படித்த மாணவரிகளுக்கான உயரி படிப்புகள்.
இந்தப் பிரிவை
1) நுழைவுத் தேரிவுகள்
2) பட்டபப்டிப்புகள்
3) டிப்ளமோ படிப்புகள்
4) சான்றிதழ் படிப்புகள்

என 4 பிரிவுகளாகப் பிரித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.
1) நுழைவுத் தேர்வுகள்.http://speedsays.blogspot.in
1. ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாமினேசன் (ஐ.ஐ.டி) (IIT)
 2. ஆல் இந்தியா என்ஜினியரிங் எக்ஸாமினேசன் (AIEE)
 3. ஐ.ஐ.டி. இந்திய தகவல்துறைத் தொழில்நுட்பத்திறன் நுழைவுத் தேர்வு
 4. கம்பைண்டு என்ட்ரன்ஸ் என்ஸாமினேசன் (நேவிகேசன் கோர்ஸ்)
 5. இந்திய மாநிலங்களில் நடத்தப்படும் பலவிதமான நுழைவுத்தேர்வுகள்
 6. என்.ஐ.டி. நுழைவுத்தேர்வு ( நேஷ்னல் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி)
 7. பி.டெக். இன்டெஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி நுழைவுத் தேர்வு
 8. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு
 9. சென்ட்ரல் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசசுச் இன்ஸ்ட்டியூட் (பி.டெக் எலக்ட்ரோ கெமிக்கல் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி)

2) பட்டபடிப்புகள் பி.இ.பி.டெக். படிப்பகள்
1. வான்ஊர்திப் பொறியியல் (Aeronautical  Engineering)
 2. கட்டிடக்கலை (Architecture)
 3. தான்னியங்கிப் பொறியியல் (Automobile Engineering)
 4. பயோ இன்பரிமேட்டிக்ஸ் (Bio – Informatics)
 5. பயோ மெடிக்கல் இன்ஸ்ட்ரூமென்டேசன் என்ஜினியரிங் (Bio – Medical Instrumentation        Engineering)
 6. பயோ டெக்னாலஜி (Bio Technology)
 7. கட்டிடக்கலைப் பொறியியல் (Civil engineering)
 8. வேதிப் பொறியியல் (Chemical Engineering)
 9. தீயணைப்பு பொறியியல் (Fire Engineering)
 10. கணினி அறிவியல் பொறியியல் (Computer Science Engineering)
 11. கம்ட்டரி சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் (Computer Software & Hardware)
 12. மின்னியல் மற்றும் மின்னனு வேதியியல் (Electrical and Electroics Chemical)
 13. மின்னியல் மற்றும் தகவல்தொடர்பு (Electronics and Communication)
 14. மின்னியல் மற்றும் கருவியியல் (Electronics and Instrumentation)
 15. தொழிற்ச்சாலைப் பொறியியல் (Industrial Engineering)
 16. சுற்றுப்புற பொறியியல் புவித்தகவல்கள் (Environment Engineering – Geo – Informatics)
 17. தகவல்துறைத் தொழில்நுட்பம் (Information Technology)
 18. கருவியியல் பொறியியல் (Instrumentation Engineering)
 19. தோல்ப்பொருள் தொழில்நுட்பம் (Leather Technology)
 20. உற்பத்திப் பொறியியல் (ManufacturingEngineering)
 21. மெரைன் இன்ஜினியங் (Marine Engineering)
 22. மெக்கட்ரானிக்ஸ் (Mechatronics)
 23. மெட்டலர்ஜிக்கல் என்ஜினியரிங் (Mettallurgical Engineering)
 24. சுரங்கப் பொறியியல் (Mining Engineering)
 25. எரிபொருள் வேதிப்பொறியில் (Petro – Chemical Technology)
 26. பாலிமர் என்ஜினியரிங் (Polymer Engineering)
 27. உற்பத்திப் பொறியியல் (Production Engineering)
 28. அச்சுப்பொறியியல் (Printing Technology)
 29. ரப்பர் டெக்னாலஜி (Rubber Technology)
 30. டெக்ஸ்டைல் என்ஜினியரிங் (Textile Engineering)

3) டிப்ளமோ படிப்புகள்.http://speedsays.blogspot.in
1. கட்டிடப் பொறியியல்
 2. மின்சாரப் பொறியியல்
 3. மின்னணுப் பொறியியல்
 4. எந்திரவியல் பொறியியல்
 5. உற்பத்திப் பொறியியல்
 6. வேளாண்மைப் பொறியியல்
 7. கணினி அறிவியல் பொறியியல்
 8. மின்னணு மற்றும் தொலைத்தொடரிபு
 9. கட்டிக்கலை மற்றும் கிராமப்புற பொறியியல்
 10. வேதிப்பொறியியல்
 11. தோல்ப்பொருள் தொழில்நுட்பம்
 12. வேதித்தொழில்நுட்பம்
 13. பாலிமர் தொழில்நுட்பம்
 14. பல்ப் பேப்பர் தொழில்நுட்பம்
 15. மென்;பொருள் தொழில்நுட்பம்
 16. மீன்வளத் தொழில்நுட்பம்
 17. கைத்தறி; தொழில்நுட்பம்
 18. அச்சுத்தொழில்நுட்பம்
 19. பிளாஸ்டிக் டெக்னாலஜி
 20. சரிக்கரைத் தொழில்நுட்பம்
 21. டெக்ஸ்டைல் டெக்னாலஜி
 22. கணினித் தொழில்நுட்பம்
 23. கார்மெண்ட் டெக்னாலஜி
 24. மரத் தொழில்நுட்பம்
 25. வனத்துறைத் தொழில்நுட்பம்
 26. காலணிகள்த் தொழில்நுட்பம்
 27. போர்மேன் டெக்னாலஜி
 28. ஆடை வடிவமைப்பு மற்றும் ஆடை உருவாக்குதல்
 29. ரெப்ரிஜ்ரேசன் மற்றம் ஏலீ; கப்டி`னிங்
 30. விற்பனைத் துறை
 31. காஸ்மெட்டாலஜி

4) சான்றிதழ் படிப்புகள் http://speedsays.blogspot.in
1. பிளாக்ஸ்மித்
 2. தச்சுத்தொழில்
 3. மோல்டர்
 4. பெயிண்டர்
 5. `டீட் மெட்டல் ஒலீ;க்கர்
 6. கட்டடம் கட்டுபவர்
 7. பேட்டரின் மேக்கர்
 8. மெக்கானிக் டீசல்
 9. பிளம்பர்
 10. மெக்கானிக் கிரெய்ண்டர்
 11. மெக்கானிக் மோட்டார்
 12. கடிகாரம் மற்றும் கைக்கடிகாரம் உருவாக்கல்
 13. வெல்டரி கேஸ் மற்றும் மின்சாரம்
 14. மெக்கானிக் மோட்டார் வாகனங்கள்
 15. ஒயர்மேன்
 16. டர்னர்
 17; மெக்கானிஸ்ட்
 18. பிட்டசு
 19. எலக்ட்ரோ பிளேட்டர்
 20. ஒயர்லெஸ் ஆப்பரேட்டர்
 21. சர்வேயர்
 22. இன்ட்ரூமென்ட் மெக்கானிக்
 23. எலக்ட்ரீ சியன்
 24. மெக்கானிக் ரெப்ரிஜ்ரே`ன் மற்றும் ஏர் கண்டிசனிங்
 25. கருவி வடிவமைப்பாளர்
 26. டிராட்ஸ்மேன் சிவில்
 27. டிராட்ஸ்மேன் மெக்கானிக்
 28. மெக்கானிக் ரேடியோ மற்றும் தொலைக்காட்சி
 29. மெக்கானிக் ஜெனரல்
 30. பிழைத்திருத்தல்
 31. சுருக்கெழுத்து ஆங்கிலம்
 32. ஹேண்ட் ஒயரிங் ஆப் பேண்சி அண்ட் பர்னிஸ்சிங் பேப்ரிக்ஸ்
 33. எம்பர்யாடரி அன்ட் டெய்லரிங்
 34. கட்டிங் அண்ட் டெய்லரிங்
 35. காலணிகள் உருவாக்குதல்
 36. சூட்கேஸ் மற்றும் லெதர் பொருள் உற்பத்தி

II இயற்பியல், வேதியியல், உயிரியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயர் படிப்புகள்.

இந்த பிரிவை http://speedsays.blogspot.in
1) மருத்துவ நுழைவுத்தேர்வுகள்
 2) மருத்துவம் பட்டப்படிப்பு ஃடிப்ளமோஃ சான்றிதழ் தகுதி
 3) வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல்
 4) உயிரியல் அறிவியல் மற்றம் துணைப்பாடம்
 5) மனை அறிவியல்
 6) பொதுப்பாடங்கள்

 என 6 பிரிவுகளாகப் பிரித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.

1) மருத்துவ நுழைவுத்தேர்வு
1. ஆர்ம்டு போர்ஸஸ் மெடிக்கல் காலேஜ் – பூனே
 2. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் – உ.பி
 3. ஆல் இந்தியா பிரிமெடிக்கல் ஃ பிரிடெண்டல் என்ட்ரன்ஸ் எக்சாமினேசன் கண்டெக்டட் பை சென்ட்ரல் போர்டு ஆப் செகரட்ரி எஜூகேசன்
 4. ஜவஹர்லால் மருத்துவம் மற்றும் ஆய்வுப்பிரிவின் பட்டமேற்படிப்புக்கான நிறுவனம் – புதுச்சேரி
 5. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் – உ.பி
 6. கிரிஸ்ட்டியன் மருத்துவக் கல்லூரி – வெள்ளுர்
 7. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் – (புதுடெல்லி)
மருத்துவம் – பட்டப்படிப்பு = டிப்ளமோ / சான்றிதழ் தகுதி

பட்டப்படிப்புக்கான மருத்துவ பாடங்கள் http://speedsays.blogspot.in
 1. எம்.பி.பி.எஸ்.
 2. பி.டி.எஸ்.
 3. பி.ஹெச்.எம்.எஸ்
 4. பி.ஏ.எம்.எஸ்
 5. பி.எஸ்.எம்.எஸ்
 6. பி.பார்ம்
 7. பி.பி.டி.
 8. பி.எஸ்.சி (நர்சிங்)
 9. பி.ஒ.டி.

மருத்துவப்பாடங்கள் = டிப்ளமோ / சான்றிதழ்த்தகுதி
1. மருத்துவத் தொழில்நுட்பம்
 2. லெப்ரோசி இன்ஸ்பெக்டர் கோர்ஸ்
 3. லேப் டெக்னீசியன்
 4. இ.சி.ஜி டெக்னீசியன்
 5. டெண்டல் மெகனிக்
 6. ஆண்தால்மிக் அசிஸ்டெண்ட் கோர்ஸ்
 7. ஹெல்த் வொர்க்கரி டிரெய்னிங்
 8. கோர்ஸ் இன் ஆண்டோமெட்ரி
 9. ஆர்தோபிஸ்ட் கோர்ஸ்
 10. மெடிக்கல் ரேடியேசன் டெக்னாலஜி
 11. டிப்ளமோ இன் டயாலிசிஸ்
 12. மருத்துவமனை நிர்வாகத்தில் டிப்ளமோ
 13. மருத்துவ நுன்னுயிறியல்
 14. டிப்ளமோ இன் புரோஸ்தெடிக்ஸ் அன்ட் ஆர்தோட்டிக்ஸ்
 15. பெரிபுயூசன் டெக்னாலஜி
 16. பிசியோதெரபி
 17. ஸ்பீச் தெரபி
 18. நர்சிங்

வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல்

1. வேளாண்மை அறிவியல் பி.எஸ்.சி. அக்ரி
 2. பால்ப்பொருள் அறிவியல் பி.எஸ்.சி (டி.டி)
 3. கால்நடை அறிவியல் பி.வி.எஸ். ஏ. ஹெச்
உயிரியல் அறிவியல் மற்றம் துணைப்பாடம்
1. விலங்கியல் – பி.எஸ்.சி
 2. மீன்வளம் – பி.எஸ்.சி
 3. எம்.எஸ்.சி. மரெயின் சயின்ஸ் மற்றும் உயிரியல்
 4. எம்.எஸ்.சி. மரெயின் பயோடெக்
 5. அக்குவாடிக் பயோலஜி மற்றும் மீன்வளம் எம்.எஸ்.சி
 6. நுன்னுயிரியல் – பி.எஸ்.சி எம்.எஸ்.சி

மனை அறிவியல்

1. மனை மேலாண்மை
 2. உணவு மற்றும் ஊட்டச்சத்து
 3. குழந்தை வளர்ச்சி
 4. ஆடை மற்றும் டெக்ஸ்டைல்ஸ்
 5. உணவு சேவை மேலாண்மை
 6. டெக்ஸ்டைல்ஸ் வடிவமைப்பு
 7. டெக்ஸ்டைல்ஸ் கிராண்ட்
 8. உணவுத்தொழில்நுட்பம்
 9. மனித ஊட்டச்சத்து
 10. உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து
 11. உணவு உற்பத்தி
 12. பயண்பாடு மற்றும் கழிவுப்பொருள் மறுசுழற்சி

பொதுப்பாடம்

1. இயற்பியல்
 2. வேதியியல்
 3. தாவரவியல்
 4. விலங்கியல்
 5. பயன்பாட்டு புள்ளியல்
 6. பயன்பாட்டு கணிதம்

III பொருளாதாரம், கணக்குப்பதிவு, வணிகவியல், செயலாளர்பயிற்சி, கணிதம் மற்றும் கணினி அறிவியல் மாணவர்களுக்கான உயர் படிப்புகள்.

1. சாட்டர்டு அக்கவுண்டன்சி
 2. வங்கியியல்
 3. சட்டப்படிப்பு – பி.எல்
 4. மேலாண்மை – பி.பி.ஏ
 5. பொருளாதாரம் – பி.ஏ
 6. வணிகவியல்
 7. டீச்சிங்
 8. உலக அறிவியல்
 9. உளவியல்
 10. வரலாறு
 11. புவியியல்
 12. ஆங்கிலம்
 13. மொழி
 14. இசை
 15. நிதி
 16. ஊடகம்
 17. தகவல் தொடர்பு
 18. காஸ்ட்அக்கவுண்டன்சி

IV உயர்நிலைக்கல்விக்கு பின்னர் அனைத்து பிரிவு மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடங்கள்:

1. உடற்கல்வி
 2. சட்டப்படிப்பு
 3. ஏவியேசன் – விமானப்பணிண்பெண்
 4. பாஸ்மெட்டாலஜி
 5. பேஷன் டெக்னாலஜி
 6. காப்பீடு
 7. கடல்சாரபடிப்பு
 8. போக்குவரத்து மற்றும் சுற்றுலா
 9. புகைப்படம் பற்றிய படிப்பு
 10. கலை/பயன்பாட்டுக் கலை
 11. நகை வடிவமைப்பு
 12. பேஷன் மாடலிங்
 14. இதழியல் மற்றும் அச்சு ஊடகம்
 15. பிலிம் மற்றும் பிராட்காஸ்டிங் (டி.வி/ரேடியோ)
 16. கலையரங்கம் மற்றும் நடிப்பு
 17. விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு
 18. நடிப்பு
 19. ஆடியோ மற்றும் வீடியோ உற்பத்தி
 20 சின்மாட்மோகிராபி
 21. இயக்கம்
 22. டைரக்சன் சுரரி பிளே ரைட்டிங்
 23. வீடியோகிராபி
 24. பிலிம் எடிட்டிங்
 25. நாடகக்கலை
 26. பிலிம் டைரக்டிங்
 27. சினிமா நடிப்பு
 28. ஆடியோகிராபி மற்றும் எடிட்டிங்
 29. பிலிம் எடிட்டிங்
 30. படத் தயாரிப்பு
 31. பிலிம் பிராசசிங்
 32. பிலிம் ஸ்டடிஸ்
 33. கலையரங்கம் மற்றும் டி.வி. தொழில்நுட்பம்
 34. பிரிஹேன்ட் அணிமே`ன்
 35. பப்டமென்டல் அன்ட் ஆடியோ விசூவல் எஜூகேசன்
 36. மோசன் பிக்சரி போட்டோகிராபி
 37. நிகழ்ச்சி மேலாண்மை
 38. விசூவல் கம்யூனிகேசன்
 39. புத்தக பதிப்பு
 40. அரசியல் அறிவியல்
 41. குற்றவியல்
 42. விக்டிமாலஜி
 43. நடனம்
 44. ஜெம்மாலஜி
 45. தொழிற்ச்சாலை வடிவமைப்பு
 46. பூமி பற்றிய அறிவியல்
 47. நகரத் திட்டமிடல்
 48. மண்ணியல்
 49. சமூகவியல்

V போட்டித் தேர்வுகள் http://speedsays.blogspot.in

புடிப்பை முடித்த பின்னர் போட்டித்தேர்வுகள் எழுதுவதன்மூலம் பலருக்கு வேலைகள் எளிதில் கிடைக்கும். தகுதியான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும்பலவகையான போட்டித்தேர்வுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
போட்டித்தேர்வுகளை:
1. அறிவியல் மற்றும் கணிதப்பிரிவு படித்தவரிகளுக்கான போட்டித்தேர்வுகள்.
2. வணிகவியல் பிரிவு படித்தவரிகளுக்கான போட்டித்தேர்வுகள் என இருவகையாகப் பிரிக்கலாம்.

1.அறிவியல் மற்றும் கணிதம் பிரிவு படித்தவரிகளுக்கான போட்டித்தேர்வுகள்:

1. பொறியியல்த்துறைத் தேர்வுகள்
 2. வங்கித் தேர்வுகள்
 3. இந்திய வனத்துறைத் தேர்வகள்
 4. மண்ணியல்த்துறைத் தேர்வுகள்
 5. கம்பைண்டு மருத்துவத்துறை தேர்வுகள்
 6. இந்திய பொருளாதாரம் புள்ளியல் துறை தேர்வுகள்
 7. சிவில் சரிவீஸஸ் தேர்வு
 8. எஸ்.எஸ்.சி நடத்தும் தேர்வுகள்
 9. ரெயில்வே வேலைவாய்ப்புத்துறை நடத்தும் தேர்வுகள்

2. வணிகவியல் பிரிவு படித்தவர்களுக்கான போட்டித்தேர்வுகள்

1. சிவில் சரிவீஸஸ் தேர்வுகள்
 2. வருமானத்துறைத் தேரிவகள்
 3. எஃசைஸ் மற்றும் வருமானவரித்துறைத் தேர்வுகள்
 4. இந்திய பொருளாதாரத்துறைத்தேர்வு
 5. இந்திய ராணுவம் விமானத்துறைத் தேர்வு
 6. இந்திய புள்ளியல்துறைத் தேர்வு
 7. கம்பைன்டு டிபன்ஸ் சர்வீஸஸ்

வேலைவாய்ப்பு பற்றிய பட்டியல் இத்துடன் முடியவில்லை இது ஒரு முன்னோட்டம் தான் ஒவ்வொரு நபரும் தனது ஆளுமைத்தன்மைக்கு தகுந்தத் துறையைத் தேர்வு செய்து திட்டமிட வேண்டும். ஒரு தொழிலைத் தேர்வுசெய்வது வாழ்க்கைத் தொழில் செயல்பாடுகளில் ஒன்றாகும். ஒரு வேலையைப் பெறுவது அந்த வேலையில் வளர்வது, வாழ்க்கைத்தொழிலை மாற்றுவது, ஓய்வு பெறுவது என வாழ்நாள் முழுவதும் வரும் செயல்கள் ஆகும். வாழ்க்கையின் இலக்கு நிர்ணயம் செய்வது முதல் வாழ்க்கைத்தொழில்மாற்றம் செய்வதுவரை பல வகைகளில் “வாழ்க்கைத்தொழில் திட்டமிடல்” உதவும். வாழ்க்கைத்தொழிலை ஒருவர்சரியாக திட்டமிடுவது மூலம் ஒருவர் தனது வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெறலாம்.

தற்போதைய வாழ்க்கைத்தொழில் ஒரு தொடர் செயல்பாடாக கருதப்படுகின்றது. ஏனெனில் வேலையைப் பெறுவது மட்டும் அல்லாமல், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள், வாழ்க்கைத்தொழிலை மாற்றுதல், ஓய்வு பெரும் வாய்ப்புகள் ஆகியவை இதில் அடங்கிஉள்ளது. குறிப்பிட்ட சில இடைவெளிகளில் வாழ்க்கையில்தொழில் வளரிச்சியினை பற்றி திட்டமிடல் நல்ல பயனளிக்கும் அதுவே வெற்றிகரமான
 வாழ்க்கைகு வழிவகுக்கும். http://speedsays.blogspot.in

- Dr.எஸ். நாராயணராஜன் M.B.A. Ph.D., (நெல்லை கவிநேசன்) ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர்
நன்றி:-தினத்தந்தி

Amazing Medical Facts of the Body

  • A childs ability to learn can increase or decrease by 25 % or more depending on whether the child grows up in a stimulating environment.
  • On an average a persons head has 100, 000 to 150, 000 hair.
  • A single hair has the ability to support up to 100 grams of weight and the whole hair has the ability to support up to 12 tones of weight.
  •  The pigment of human hair is produced in the shaft of hair beneath the skin.
  • In lifetime, the human heart pumps about 1 million barrels of blood, which is enough to fill more than three tankers.
  • The width of an average human brain is 140 mm.
  • It takes 5- 30 seconds to chew food.
  • Swallowing of the food takes about 10 seconds.
  • The enzyme in the stomach that breaks down alcohol is produced less in men than women.
  • In a year on an average person sleeps for 122 days out of 365 days.
  • There are around 9,000 taste buds present on the tongue.
  • Capillaries are so small that it would take ten of them to equal the thickness of a human hair.
  • It is impossible to tickle our selves.
  • In a human body, the small intestine is 21 feet and the large intestine is 6 feet long.
  • For every 24 hours, in a healthy adult, more than a gallon of water containing over an ounce of salt is absorbed from the intestine.
  • The right side of the human brain is responsible for self-recognition.
  • Men listen with the left side of the brain and women use both sides of the brain.
  • In a lifetime, the human kidneys clean over 1 million gallons of blood.
  • Identical twins have identical DNA but not identical fingerprints.
  • Babies recognize sounds while in mothers womb.
Thanks: Engr.Sulthan

முன்னேறுவதற்கான வழி என்ன?

மனிதர்களாய் பிறந்த ஒவ்வொருவருக்குமே, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு இருக்கும். சிலருக்கு, கடைசி மூச்சு வரை கூட, இந்த எண்ணம் இருக்கும். முன்னேறுவதற்கான வழிகளைக் கற்றுக் கொடுக்க ஏராளமான புத்தகங்கள், வகுப்புகள், தனி படிப்புகள் இருந்தாலும், எல்லாருக்குமே அவை பொருந்துமா என்பது கேள்விக்குறியே.

"பிரைடே' என்ற துபாய் பத்திரிகையில், எலிசபெத் என்ற எழுத்தாளர், 10 வழிமுறைகளை எழுதியுள்ளார். அவை:

1. உயர் பதவியை அடைய, போட்டி மனப்பான்மை தேவை.  போட்டி என்பது, மற்றவர்களை "போட்டுக் கொடுத்து' முன்னுக்கு வருவது அல்ல. உங்கள் திறமையை அதிகரித்து, தொடர்ந்து அதை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில், உங்கள் திறமை இவ்வளவு தான் என்ற தீர்மானத்திற்கு வர வேண்டிய நிலை ஏற்படும். அது தான் உங்கள் எல்லைக் கோடு. அது என்ன என்பதை கண்டுபிடிக்கும் வரை, தொடர்ந்து உழைக்க வேண்டும்.

2.  உயர் பதவியை அடைய வேண்டும் என்ற வேகத்தில், நான்கு கால் பாய்ச்சல், எட்டு கால் பாய்ச்சலில் செல்வதை விட, ஒவ்வொரு வேலையையும் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். இப்படிச் செய்தால், அனைத்து வேலைகளிலும் நீங்கள் அத்துப்படி ஆகி விடுவீர்கள். உச்சப் பதவியில் அமரும் போது, உங்கள் கீழ் பணியாற்றும் யாரும் உங்களை எளிதில் ஏமாற்றி விட முடியாது.

3. ஒரு வேலையை முழுதுமாகக் கற்று முடிக்கும்போது, உங்கள் தன்னம்பிக்கை உயரும். தொடர்ந்து அதே பணியைச் செய்தபடி இருந்தால், அந்தப் பணியை வேகமாகச் செய்து முடித்து, "அடுத்து என்ன வேலை செய்யலாம்?' என்று சிந்திக்கத் துவங்கி விடுவீர்கள். இதுவே முன்னேற்றத்துக்கான அடிப்படை.

4. உங்கள் வீட்டை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்களோ, அந்த அளவு அலுவலகத்தையும் நேசிக்க வேண்டும். உங்கள் வீட்டின் மூலை முடுக்குகளை நீங்கள் அறிந்து வைத்துள்ளது போல், அலுவலகத்தையும் அறிய வேண்டும். அலுவலகத்தை உங்கள் வீடாக நினைத்துக் கொண்டால்,  வீட்டை அழகாக நிர்வகிப்பது போல, அலுவலகத்தையும் அழகாக நிர்வகிப்பீர்கள்.

5. அனைத்தையும் அறிந்து கொண்டு, நடுநிலையுடன் செயல்பட்டு, நீண்ட நேரம் அலுவலகத்தில் அமரும் பழக்கம் உள்ளவராக இருந்தால், நீங்கள் நினைத்தபடி வேலைகள் நடக்கும்; அலுவலகக் கட்டுப்பாடுகள் கூட உங்களிடம் மண்டி இடும்.

6. நீங்கள் தற்போது பணியாற்றும் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள, நிறைய பொறுமை, சகிப்புத் தன்மை தேவை. இதைக் கைகொண்டால், உங்களை அனைவரும் மதிப்பர்; உங்களை நம்பி வேலைகள் தானாக வந்து சேரும்.

7. எங்கு பணி புரிந்தாலும், நீங்கள் நீங்களாகவே இருங்கள். அப்போது தான் உங்கள் தனித்துவம் வெளிப்படும்.

8.  "இந்த வேலை போரடிக்கிறது; வேறு வேலை பார்க்கலாமா...' என்று, நிலையற்ற வகையில் சிந்திக்காதீர்கள். உங்களால் செய்ய முடிந்த பணியைத் தான் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் திறமைக்கு மீறிய வேலையை நீங்கள் செய்யவில்லை. போரடிக்கும் வேலையை வேகமாகச் செய்து முடித்தால், அடுத்த வேலை தானாகவே உங்கள் மடியில் வந்து விழும்.

9. "இது முடிஞ்சாச்சு... அடுத்து என்ன...' என்று பரபரப்பாக, வேகமாக ஓடியபடியே இருந்தாலும், ஒரு நாள், மீண்டும் பழைய இடத்திற்கே தான் வரவேண்டி இருக்கும். இதற்கு ஏன் வாழ்க்கையை அனாவசியமாக "டென்ஷன்' படுத்திக் கொள்கிறீர்கள்? நிதானமாக, கவனத்துடன் தற்போதைய பணியைச் செய்து கொண்டே இருந்தால், நிலையான முன்னேற்றம் ஏற்படும்.

10. மற்றவர்கள், "டென்ஷனுடன்' ஓடுவதைப் பார்த்து ரசித்தபடி அமர்ந்திருங்கள். நீங்கள் "ரிலாக்ஸ்' ஆகி விடுவீர்கள்.
 நீங்கள்  உயர் பதவி வகிப்பவரா? எப்படி முன்னேறினீர்கள்? எடுங்கள் பேனாவை,
 --
இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (Al-Quran, The Last Testament from ur God)

Regards,
Meera Kamal

Tuesday, May 29, 2012

என்ன சாப்பிடலாம்? What to Eat?

உடல் ஆரோக்கியத்தில் உணவு, உடற்பயிற்சி, ஓய்வு மற்றும் அமைதியான வாழ்க்கை முறை ஆகியவை முக்கியப் பங்காற்றுகின்றன. இருப்பினும் இதில் உணவுக்குச் சிறப்பிடம் உண்டு. சத்தான உணவை முறையாகச் சாப்பிட்டால் பல நோய்களைத் தவிர்க்கலாம்.
ரசாயன உரங்கள் இட்டு அதிக மகசூல் பெற்று வியாபார நோக்கத்தில் உருவாக்கப்படும் உணவுகள்,சுற்றுச் சூழல் மாசு. மன அழுத்தம், ஓய்வின்மை போன்றவற்றால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. நாமெல்லாம் நாக்கு ருசிக்கு அடிமையாகி உடல்ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதில்லை. வயிறும் நிரம்பிவிடும். ஆனால் உடலுக்குத் தேவையான எல்லாச் சத்துக்களும் கிடைக்கிறதா என்று நாம் யோசிப்பதே இல்லை.

சமச்சீர் உணவு:

உடலும், மனமும் ஆராக்கியமாக இருக்க சத்தான - சமச்சீரான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். உடலின் தேவையின் அடிப்படையில் ஊட்டச் சத்துகள் இரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை பெரிய ஊட்டச்சத்துகள் (Macro nutrients),. சிறிய ஊட்டச்சத்துகள் (Micro Nutrients).

கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து), புரதம், கொழுப்பு ஆகியவை பெரிய ஊட்டச்சத்துகளாகும். பெரிய ஊட்டச் சத்துகள் உடலுக்கு அதிக அளவில் தேவைப்படுகிறது. உடல் இயக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் எரிசக்தியாக இவை செயல்படுகின்றன. வைட்டமின் மற்றும் தாதுப்பொருள்கள் சிறியஊட்டச்சத்துகள் ஆகும். இவை உடலுக்குச் சிறிதளவே தேவை என்றாலும் உடல் இயக்கத்துக்கும் அதனை பாதுகாக்கவும் மிக மிகஅவசியமானது.

நமது உணவில் ஊட்டச்சத்துகள் அல்லாத பிற பொருள்களை வாசனை, ருசி, செரிமானத்துக்காகச் சேர்க்கிறோம். பூண்டு, சீரகம், வெந்தயம் போன்ற பொருள்கள் ஊட்டச்சத்துகள் ஆகாது. ஆனால்இப் பொருள்களில் வாசனை மட்டுமின்றி சில மருத்துவக் குணங்களும் உள்ளன.புரத சத்து (Protein):

ஊட்டச்சத்துகளில்
முதலாவது விளங்குவது புரத சத்து.இது உடல் வளர்ச்சிக்குத் தேவையானது. இதுஉடலில் நோய்த் தொற்றை எதிர்க்கஉதவும். எதிர் உயிரிகளை உருவாக்கப் பயன்படும். ரத்தம், தசை நார்கள், திசுக்களை வலுப்படுத்தும்.
பால், பாலாடைக் கட்டி,பருப்பு,பயறு வகைகள், வேர்கடலை, இறைச்சி, மீன், பேரீத்தம் பழம்,அத்திப்பழம்,திராட்சைப் பழம்,மாதுளம் பழம்,நேத்திரம் பழம் ,வாதம் பருப்பு , எண்ணெய் வித்துக்கள், உணவுத் தானியங்கள், சோயாபீன்ஸ், முட்டை, கீரை வகைகளில் அதிகம் கிடைக்கிறது.முதல் தர புரத சத்து பாலில் தான் கிடைக்கிறது.

மாவுச்சத்து (Carbohydrate) மற்றும் கொழுப்புச் சத்து (Fat)உள்ள உணவுகள் உடலுக்கு சக்தி அளிக்கின்றன.

மாவுச்சத்து (Carbohydrate)
அரிசி, கோதுமை, மக்காச் சோளம், கேப்பை, கம்பு, தினை உள்ளிட்ட தானிய வகைகள், சர்க்கரை, தேன்,வெல்லம்,உருளைக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றில் மாவுச்சத்து அதிகமாக உள்ளது.இது உடலுக்கு ஆற்றலை அளிக்கும்

கொழுப்புச் சத்து (Fat)


வெண்ணெய், நெய், முட்டையின் மஞ்சள்கரு, எண்ணெய் வித்துக்கள், மீன், ஈரல் போன்றவற்றில் கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது. இது ஆற்றலை அளிக்கும். உயிர்ச் சத்துகள் கரைய உதவும்.

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்:(Vitamins and Minerals):
வைட்டமின்கள், தாதுப் பொருள் அடங்கியஉணவுகள் உடலைப் பாதுகாத்து பராமரிக்கின்றன.

வைட்டமின் :





பால், தயிர், வெண்ணெய், நெய், கேரட், பப்பாளி, கீரைகள், மஞ்சள் நிறக் காய்கள், மாம்பழம், மீன் எண்ணெய், ஈரல். ஆகியவற்றில் உள்ளது.


மாலைக் கண் வராமல் தடுக்கும்.கண்களுக்கு நல்லது. உடல் செல்களைப் புதுப்பிக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும். தோல் காக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும்.

வைட்டமின் பி:நரம்பு தொடர்பான நோய்கள், ரத்தக் குழாய் தொடர்பான நோய்கள், நாள்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. உடல் நலிவு, எரிச்சல் அடையும் தன்மை, தூக்கமின்மை ஆகியவற்றைப் போக்க வல்லது.
வைட்டமின் பி1 (தயமின்):


பருப்புகள், பயறு வகைகள், முளை கட்டிய தானியங்கள், புழுங்கல் ரிசி, முட்டை, ஈரல் ஆகியவற்றில் உள்ளது. ஜீரணத்துக்கு உதவும். நன்கு பசி எடுக்கும். நரம்பு மண்டலம் வலுப்படும்.

வைட்டமின் பி2 (ரிபோஃப்ளேவின்):




பால், வெண்ணெய் எடுக்கப்பட்ட பால், பாலாடைக் கட்டி, முழுத் தானிய வகைகள், பருப்பு வகைகள், கீரைகள், முட்டை ஆகியவற்றில் உள்ளது. வாய்ப் புண் வராது. தோலில் வெடிப்பு வராமல் தடுக்கும். பார்வை தெளிவாக இருக்கும்.




வைட்டமின் பி3 (நியாசின்):
மீன்,பருப்புகள், பயறுகள், முழு உணவுத் தானியங்கள், இறைச்சி, ரல் ஆகியவற்றில் உள்ளது.


வயிறு, குடல், தோல், நரம்பு மண்டலம் ஆகியவற்றின் ஆரோக்கியம் காக்கும்.

வைட்டமின் பி6:


வைட்டமின் பி9:


Pregnant women who are thinking of becoming pregnant or who are pregnant often require additional supplementation of folic acid. Adequate folic acid is important for pregnant women because it has been shown to prevent some kinds of birth defects, including neural tube defects such as spina bifida. Many foods are now fortified with folic acid to help prevent these kinds of serious birth defects.


வைட்டமின் பி12:


வைட்டமின் சி:





கொய்யாப் பழம், நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு,திராட்சை, மாம்பழம், தக்காளி, முளை கட்டிய பயறுகள், வெங்காயம், கீரை வகைகள் உருளைக் கிழங்கு ஆகியவற்றில் உள்ளது.



காயம் விரைவில் ஆற உதவும்.எலும்பு முறிவுகள் விரைவில் குணமாகும். இயல்புக்கு மாறான எலும்பு வளர்ச்சியைத் தடுக்கிறது. நோய்த் தொற்றைத் தடுக்கும். ரத்த நாளங்களை வலுப்படுத்தும்.ரத்த அழுத்த அளவைக் குறைக்கும்.இச் சத்து குறைந்தால் ஈறுகள் வீக்கம் அடைந்து ரத்தம் கசியும்.

வைட்டமின் டி :



சூரிய ஒளி, பால், முட்டையின் மஞ்சள் கரு, வெண்ணெய், நெய், பாலாடைக் கட்டி, மீன் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.

உடலில் சுண்ணாம்புச் சத்தை கிரகிக்கும். எலும்பு, பற்கள் வலுப்பட உதவும். குழந்தை பிறந்த பிறகு தினமும் சிறிது நேரம் வெயிலில் காண்பிப்பது எலும்புகள் வலுப்பட உதவும்.

வைட்டமின் :

கோதுமை, முளைதானிய வகைகள், எண்ணெய்,பருத்திக் கொட்டைகள் ஆகியவற்றில் உள்ளது.


ரத்த சிவப்பு அணுக்களின் ஆயுளை அதிகரிக்கிறது. இனப் பெருக்கத்துக்கு உதவும்

வைட்டமின் கே :




முட்டைக் கோஸ், காலி ஃபிளவர், கீரை, கோதுமை, தவிடு, சோயாபீன்ஸ், முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றில் உள்ளது.


ரத்தம் உறைதலுக்கு இது அவசியம் தேவை.இச்சத்து இல்லேயேல் ரத்தப் போக்கு ஏற்படும்

கால்ஷியம் (சுண்ணாம்புச் சத்து):


பால், பால் பொருள்கள், கீரைகள், பீன்ஸ்,முட்டை, பட்டாணி, பச்சைக் காய்கறிகள், மீன்,கேழ்வரகு ஆகியவற்றில் உள்ளது.



எலும்பு, பற்கள் வலுப்பட உதவும். நரம்புகள், வைட்டமின் டி-யை கிரகித்து தசைகள் இயல்பாகச் சுருங்கி விரிய உதவுவது கால்ஷியம் சத்து கொண்ட உணவுப் பொருள்களே. கர்ப்பிணிகள், முதியோருக்கு இச் சத்து மிகவும் அவசியம். ரத்த அழுத்தத்தைக் குறைத்தல், நரம்புகளின் செயல்பாட்டுக்கும் கால்ஷியம் உதவுகிறது.

இரும்புச் சத்து :

தேன்,சுண்டைக்காய், கீரைகள், முழுத்தானியங்கள், பேரீச்சை உள்ளிட்ட பழங்கள், வெல்லச் சர்க்கரை, புளி, முட்டை, ஈரல் ஆகியவற்றில் உள்ளது
புரதத்துடன் சேர்ந்து உயிர் அணுக்களுக்கு ஆக்சிஜன் கொடுக்கும். ரத்த சோகை ஏற்படாமல் தடுப்பதில் இரும்புச் சத்து பெரும் பங்கு வகிக்கிறது. ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து உறுதுணையாக இருந்து, ரத்தம் மூலம் ஆக்ஸிஜன் செல்வதற்கு உதவி செய்கிறது.
பாஸ்பரஸ்:
உடலில் கால்ஷியம் பாஸ்பேட்டாக கால்ஷியம் சேமிக்கப்படுகிறது. எலும்பு, பற்களில் இவ்வாறு அது சேமிக்கப்படுகிறது.
பொட்டாஷியம்:
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கவும் பொட்டாஷியம் உதவுகிறது. சீரான இதயத் துடிப்பு, சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுத்தல் ஆகியவற்றுக்கும் பொட்டாஷியச் சத்து உதவுகிறது.
அயோடின் :
அயோடின் கலந்த உப்பை தினமும் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். காய்கறிகளிலும் இச் சத்து உள்ளது.
குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு உதவும். இதன் குறைபாட்டால் முன் கழுத்துக் கழலை நோய் வரும். தைராய்டு சுரப்பிகள் சரிவர இயங்க இது தேவை.
பிற சத்துக்கள்:
பீட்டா கேரடீன்-கீரைகள்.இஸாபிளேவோன்ஸ்-சோயா
லைக்கோபீன்-தக்காளி
கர்க்குமின்-மஞ்சள் தூள்.

நார்ச்சத்து:

தானிய வகைகளில் காணப்படுகிறது.இதுஇரைப்பை-குடலின் இயல்பான செயல்தன்மைக்கு வழி வகுத்து மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்கிறது. மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. ரத்த சர்க்கரை அளவைக் குறைத்து சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது.
காய்கறிகளை இரும்புச் சத்து - நார்ச்சத்தைக் கொடுக்கக்கூடிய கீரை வகைகள், மாவுச் சத்தை அளிக்கக்கூடிய உருளை - சர்க்கரைவள்ளி உள்ளிட்ட கிழங்கு வகைகள், நார்ச் சத்தை அளிக்கக்கூடிய பீன்ஸ், முட்டைக்கோஸ் எனப் பிரித்துக் கொள்ளலாம். எனவே எந்தக் காயையும் உணவில் ஒதுக்கக்கூடாது.
வெண்ணெய், நெய், டால்டா, தாவர எண்ணெய்களிலிருந்து கொழுப்புச் சத்து மட்டுமின்றி ஃபோலிக் அமிலம், வைட்டமின் சத்தும் கிடைக்கிறது.

ஆன்ட்டி ஆக்சிடென்ட்:
நம் உடலில் சத்துகள் உறிஞ்சப்பட்டு உயிர் வேதியியல் மாற்றங்கள் நடக்கும் போது ‘‘free radicals’’ என்பவை உடலில் சேருகின்றன. இதை Oxidative Stress என்கிறோம். இந்த ப்ரீ ரேடிகல்ஸ் சர்க்கரை நோய், இதய நோய், கண் புரை, புற்று நோய் போன்ற நிலைகளில் அதிகம் காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவு வகைகளைச் சாப்பிடுவது அவசியம். பச்சைக் காய்கறிகள், பழங்களில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ளது.


நீர் சத்து:


நீர்ச் சத்தை அளிக்கக்கூடிய குடிநீர், இளநீர், மோர் ஆகியவற்றையும் மறந்து விடாதீர்கள்.நன்கு காய்ச்சி வடிகட்டப்பட்ட குடிநீரும் உடலுக்குத் தேவை. அதாவது நாள் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் 3 லிட்டர் (8 முதல் 10 டம்ளர்) தண்ணீர் தேவை.யாருக்கு என்ன சாப்பிடலாம்?
பொதுவாக இந்தியர்களுக்குக் கூடுதலாகத் தேவைப்படும் சத்துகள்:
1.
வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்
2.
ஆன்டிஆக்ஸிடெண்ட் வைட்டமின்கள் - வைட்டமின் சி, , மற்றும் பீட்டாகரோட்டின்.
3.
ஆன்டிஆக்ஸிடெண்ட் தாதுக்கள் - துத்தநாகம், செலினியம்.
4.
இரும்பு, கால்ஷியம்.
5.
இபிடி, டிஎச்ஏ, ஜிஎல்ஏ போன்ற முக்கிய ஃபேட்டி அமிலங்கள்.
6.
நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் சத்துகள்.

அசைவ உணவில் தாவரங்களில் இருந்து கிடைக்கும் கரோட்டின் சத்துகள் முழுமையாகக் கிடைப்பதில்லை. சைவ உணவிலும் முழுமையாகச் சத்துக்கள் கி்டைப்பதில்லை. முக்கியமான ஃபேட்டி அமிலங்கள் மீனிலிருந்துதான் கிடைக்கின்றன. எனவே இரு வகை உணவையும் கலந்து உண்பது தான் எல்லா சத்துக்களையும் பெறும் வழி.
Healthy diet
முதல் தர புரதத்துடன் அனைத்து விதமான ஊட்டசத்தும் பாலில் உள்ளதால், குழந்தைகள்,இளம் பருவத்தினர் யாவரும் பால் சாப்பிடுவது மிக முக்கியம். குறிப்பாக இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு கோப்பை பால் அருந்துவது நல்லது. குழந்தை பிறந்து ஓர் ஆண்டு வரை பால் கொடுப்பது நல்லது.அதிலும் குழந்தை பிறந்த உடன் சீம்பால் கொடுக்கத் தவறக் கூடாது. மிகுந்த அளவு நோயெதிர்ப்பு சக்தி சீம்பாலில் உள்ளது. உடல் பருமன், சர்கரை நோயுள்ளவர்கள் சர்க்கரை இல்லாமல் ஆடை நீக்கிய பாலை அருந்தலாம். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி பால் சாப்பிடலாம்.

தினமும் ஏதாவது ஒரு வேளை அந்தந்த சீசனுக்கு ஏற்ற பழத்தைச் சிறிது அளவாவது சாப்பிடுங்கள். நோய் பிரச்னை ஏதும் இல்லாதவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிடலாம். ஏனெனில் நார்ச்சத்து, தாதுச் சத்து, வைட்டமின்கள் என நோய் எதிர்ப்புச் சக்தியை உள்ளடக்கிய இயற்கை "டானிக்' பழங்கள்தான். வாழைப்பழம், பப்பாளி, ஆரஞ்சு, மாம்பழம், திராட்சை ஆகியவை நல்லது. பச்சைக் காய்கறிகளில்,பழங்களில் தாதுச் சத்துகளும் வைட்டமின்களும் உள்ளன.

வெள்ளைப் பூண்டு இதய நோய் வராமல் தடுக்கவும், வாழைத்தண்டு சிறுநீரக நோய் வராமல் தடுக்கவும், முருங்கைக் கீரை உயர் ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்தவும், வெந்தயம், ஓட்ஸ் போன்றவை ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவுகின்றன.தினசரி உணவு
உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் தேவையான விகிதத்தில் கிடைக்கும் வகையில் நமதுஅன்றாட சாப்பாடு அமைய வேண்டும்.

காலை உணவு: காலை எழுந்தவுடன் பால் குடிப்பது மிகவும் நல்லது. பொதுவாக தென்னிந்தியர்களின் பழக்கத்துக்கு ஏற்ப காலையில் இட்லி, தோசை, உப்புமா, கிச்சடி இப்படி ஏதாவது ஒன்றைச் சாப்பிடுகிறோம். உடல் வளர்ச்சிக்குப் புரதச்சத்து மிக அவசியம். எனவே காலை உணவில் புரதச் சத்து அதிகம் உள்ள பருப்பு வகைகளைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். இட்லிக்கு, சட்னியுடன் சாம்பாரும் சேர்க்கப் படவேண்டும், ஏதாவது ஒன்று மட்டும் போதாது. சாம்பாரில் புரதச் சத்து கிடைக்கும். சட்னியைப் பொருத்தவரை புதினா, கொத்துமல்லி, கருவேப்பிலை, தக்காளிசட்னிகளில் வைட்டமின் சத்து கிடைக்கும்.சாம்பாரில் பருப்பு இருப்பதோடு காய்கறிகளும் சேர்க்கப்பட்டால் இன்னும் நல்லது. இட்லி, பொங்கல், தோசை போன்வற்றில் ஏற்கெனவே பருப்பு சேர்க்கப்பட்டாலும் சம்பாரும் அவசியம். சப்பாத்திக்கு "டால்' சேர்த்துக் கொள்ளலாம். ரொட்டி என்றால் வெறும் ரொட்டி மட்டும் சாப்பிடாமல் காய்களைத்துண்டுகளாக ("சான்ட்விச்' ) வெட்டிச் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.காலை 11 மணி: மோர் அல்லது இளநீர் சாப்பிடலாம். காய்கள் கலந்து சூப் அல்லது பழச் சாறு இதில் ஏதாவது ஒன்று குடிக்கலாம். ஆனால் கண்டிப்பாக காபி, டீ சாப்பிடக் கூடாது.மதிய உணவு: மதிய உணவும் ஊட்டச் சத்து நிறைந்ததாக இருப்பது நல்லது. சாதம், காய்கறிகள் கலந்த சாம்பார், பொரியல், தயிர் ஆகியவையே சரிசமவிகித ஊட்டச் சத்தைக் கொடுக்கும். வற்றல் குழம்பு என்றால் பருப்பு சேர்க்கப்பட்ட கூட்டு அவசியம். ஏனெனில் சாம்பாருக்குப் பதிலாக கூட்டில் பருப்பு, காய்கறிகள் சேர்க்கப்படுவதால் வற்றல் குழம்புக்குக் கூட்டு அவசியம். தயிர் கண்டிப்பாக இருக்கவேண்டும்.

சிப்ஸ், வடாம், அப்பளம் வேண்டாம்: இதனால்உடலுக்கு எந்த நன்மையும் இல்லை. மதிய உணவில் மேற்சொன்ன காய் பொரியலுடன் வேண்டுமானால் அப்பளம் தொட்டுக் கொள்ளலாம். ஆனால் காய்களுக்குப் பதிலாக அப்பளம், வடாம், சிப்ஸ் போன்றவற்றை மட்டுமே தொட்டுக் கொண்டு சாப்பிடுவது எவ்விதப் பலனையும் தராது. ரசத்தில் போதிய ஊட்டச்சத்துகள் கிடையாது. எனவே பருப்பு துவையல் வைத்துக்கொள்ளலாம். அதோடு காய்கறிகளை (கேரட், வெள்ளிக்காய், வெங்காயம்) பச்சையாக நறுக்கிச் சாப்பிடலாம்.தேநீர் நேரம்: தேநீர் நேரத்தில் (மாலை 4 மணி முதல் 5-க்குள்) தேநீருடன் ஏதாவது சுண்டல், வேர்க்கடலை, முளைகட்டிய பயறு சாப்பிடலாம். முடிந்தால் அந்தந்த சீசனில் மலிவாகக் கிடைக்கும் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவதும் நல்லது. எண்ணெய்யில் தயாரிக்கப்பட்ட பஜ்ஜி, போண்டா போன்றவற்றை முடிந்தளவு தவிர்ப்பது நல்லது.இரவு உணவு: இரவு உணவு மதியச் சாப்பாடு போல இருக்கலாம் அல்லது டிபன் சாப்பிடலாம். இரவு சாப்பாத்தி சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள பருப்பு கலந்த கூட்டு அவசியம். எல்லாச் சத்துகளும் அடங்கிய உணவை என்றோ ஒரு நாள் மட்டும் சாப்பிட்டால் போதாது. தினமும் சமவிகித ஊட்டச் சத்து அடங்கிய உணவில் அக்கறை செலுத்தவேண்டும். அவரவர் வசதிக்கு ஏற்ப கிடைக்கும் உணவு வகையைச் சாப்பிடலாம்.ரத்த சோகை உள்ளவர்கள் என்ன சாப்பிடலாம்?

இன்று சிறு குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களிடம் ரத்த சோகை 60 முதல் 78 சதவீதம் வரை காணப்படுகிறது. கர்ப்ப காலத்தில் ரத்த சோகை ஏற்பட்டால் கருக் கலைந்து விடுதல், போதிய வளர்ச்சி இல்லாத சிறு குழந்தை, குறைப் பிரசவம், நஞ்சுக்கொடி இடம் மாறியிருத்தல், பிரசவத்தின் போது தாய் இறத்தல், குறிப்பிட்ட நாளுக்கு முன்பே பொய்யாக பிரசவ வலி ஆகிய விளைவுகள் ஏற்படும்.மேலும் கருவில் வளரும் குழந்தையின் முதுகு எலும்பு வளர்ச்சிக்கும் நச்சுக் கொடி உருவாவதற்கும் ஃபோலிக் அமிலச் சத்து (இரும்புச் சத்து) அவசியம்.


ரத்த சோகை ஏற்படாமல் தடுத்துக் கொள்ள இரும்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை சாப்பிட வேண்டும். அவல், அருகம்புல் சாறு, வெல்லம், பேரீச்சம் பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.கர்ப்பம் தரித்த உடனேயே காபி, டீ குடிப்பதை கர்ப்பிணிகள் நிறுத்திவிட வேண்டும். ஏனெனில் உணவில் இருக்கும் இரும்புச் சத்தை கிரகிக்க முடியாமல் காபி - டீ-யும் தடுத்து விடுகின்றன. பால் குடியுங்கள்.
மிக முக்கியமான உறுப்பான மூளைக்கும் ரத்த ஓட்டம்இருந்தால்தான் செயலாற்ற முடியும். மூளை இருப்பது முக்கியமல்ல, அதை உபயோகிப்பதுதான் முக்கியம் என்பது தெரிந்தாலும், சரியான முறையில் சிந்தனையைச் செலுத்துவதும் ஆரோக்கியத்துக்கு உறுதுணையாக இருக்கும். நல்லதையே நினைத்து, நம்பிக்கையை வளர்த்துக் கொள்பவன் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பான் என்பதில் சந்தேகமில்லை.படபடப்பு, எரிச்சல், சோர்வு, ஏமாற்றம் - இவையெல்லாம் வாழ்க்கையின் தத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளாததால் நிகழும் கேடு. ஆசையை தவிர்த்தால்நாமே கேட்டு வாங்கும் பல துன்பங்கள் வராது.தூக்கமின்மை, ரத்த அழுத்தம், இதயக் கோளாறு, மூட்டு வலி, தோல் நோய் சில வகையான புற்று நோய், சிறுநீரகக் கோளாறு, ஆஸ்துமா, பால்வினை நோய்களுக்கு ஆசைதான் வித்து என்பதை மறந்து விடாதீர்கள்.
Thanks: Engr.Sulthan