தாக்கப்பட்ட
கல் விகாரை வீதி பள்ளிவாசல் தொடர்பாக தெஹிவளை மாநகர சபையில் நாளை விசேட
கூட்டம்
தெஹிவளை,
கல் விகாரை வீதியிலுள்ள பள்ளிவாசல் தொடர்பிலான விசேட கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை
மாலை தெஹிவளை – கல்கிஸ்சை மேயர் தனசிறி அமரதுங்க தலைமையில் மாநகர சபையில்
இடம்பெறவுள்ளது. குறித்த இடம் குர்ஆன் மத்ரஸா என பதிவுசெய்யப்பட்டு, பல வருடங்களாக
தொழுகை இடம்பெற்று வருகின்ற நிலையில், இதனை மூடுமாறு கோரி பௌத்த பிக்குகள்
தலைமையிலான ஒரு குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்தே, தெஹிவளை – கல்கிஸ்சை மேயர் தலைமையில் விசேட கூட்டமொன்று நாளை
இடம்பெறும் என தெஹிவளை பொலிஸார் அறிவித்துள்ளனர். மஸ்ஜித் ரஹ்மான் எனும் பெயரில்
இயங்கும் இப்பள்ளிவாசலினுள், மாடுகள் அறுக்கப்படுவதுடன் மாடறுக்கும் மடுவமாக
இப்பள்ளிவாசல் செயற்படுவதாகவும் தெரிவித்தே பௌத்த பிக்குகள் தலைமையிலான
குழுவினாரால் பள்ளிவாசலிற்கு முன்னால் குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இதன்போது, குறித்த பள்ளிவாசல் மீது கல் வீச்சு தாக்குதலும் நடைபெற்றுள்ளது.
எவ்வாறாயினும் இப்பள்ளிவாசலினுள் ஐவேளை தொழுகை மாத்திரமே நடைபெற்று வருகின்றதே தவிர
உயிரினங்கள் எதுவும் அறுக்கப்படவில்லை என குறித்த பள்ளிவாசல் நிர்வாகத்தினர்
தெரிவித்தனர்.
நன்றி:: http://www.thenee.com/
No comments:
Post a Comment