அதிகாலை:
பகல் இரவுக்கு வெள்ளையடிக்கும்
இன்பக் காட்சி!
சூரியோதயம்:
சுருண்டு படுத்துக் கொண்டிருந்த
பூமாதேவி - போர்வையை விலக்கும்
வில்லங்கக் காட்சி - அதை
எட்டிப்பார்க்கும் திங்கள்!
நற்பகல்:
சூரியன் பகலைக் கலைக்க
படாதாபடுபட்டுக் கொண்டிருந்தான்!
சூரியஸ்தமனம்:
இரவோடுனக்கு ஏனிந்த ஒவ்வாமை?
மலையிக்கிலே ஒலிந்து கொள்கிறாய்!
இரவு:
பகலைச் சுட்டுச் சுட்டு
கரிக்கட்மையாய் ஆக்கினான்
சூரியன்!
இரவு-பகல்:
கறுமையும் வெண்மையும்
துரத்தி விளையாடும் “மெகா”
தொடர்!
இதுதான் நம் ஆயுளின் ஊர்வலம்;
ஊர்ந்து செல்லும் மறுமைப்
பயணத்தில்
ஒவ்வொன்றாய் உதிர்ந்து கொண்டிருக்கிறன
நம் ஆயுளின் ஆரம்ப நாற்கள்!
- Abu Areej
No comments:
Post a Comment