அப்போது
சாந்தியின் தென்றல்
சமாதானத்தை அள்ளிச் சென்று
உலகின் மூலைமுடுக்குகளிளெல்லாம்
அப்பி வைக்கட்டும்!
அறிந்தோர் அறியார்
அனைவருக்கும் என
இலவசக் காற்றைப்போல்
இனாமாகச் சொல்லிவைப்போம்!
சர்வதே வந்தனங்களை
சகலருமாய்ச் சேர்த்துப்
பிழிந்தாலும்
இஸ்லாத்தின் வந்தனத்தோடு
அதன் நொடியும் வந்துசேரா!
படித்தோர், படியார்
ஆண்டோர், அடியார்
உண்டோர், உடையின்றித் தவிப்போர்
இழந்தோர், இயல்புநிலையற்றோர்
ஏன்
அமொக்கன் முதல்
ஆசியன் வரை
தேடியலையும்
தெய்விகச் சொல்லல்லோ
'சாந்தியும் சமாதானமும் உண்டாகுக!'
அரபியில் அதன் தொனியே தனி!
வேண்டுமென்றால் ஒரு முறை
சொல்லிப் பார்:
'அஸ்ஸலாமு அலைக்கும்....'
'வணக்கம்'
'ஆயுபோவன்'
'குட்மோர்னிங்'
'போஞ்சூர்'
என எத்தனைதான்
எளில் கொண்டாலும்
எல்லா நேரத்துக்கும் தகுமா?
மரண வீட்டில்
மன்டியிட்டழும்
அம்மையைப் பார்த்து
'குட்மோர்னிங்'
(நல்ல காலைப்பொழுது)
என்று எங்கணம் உரைப்பது?!
வாழ்க்கையின்
மேடுபள்ளங்களில்
சருக்கி விழுந்து,
சந்நியாசியைப் போல்
மறையும் சூரியனோடு
தன் சோகங்களையும்
வழியனுப்பத் தயாராகும்
முதியவருக்கு
'குட் ஈவினிங்'
(நல்ல மாலைப் பொழுது)
என்றுரைத்தல் தகுமா?
அனைவர் வதனத்திலும்
அழகாய்ப் பூக்கட்டும்
வருவோர் செல்வோர் என
வருத்தமின்றி
கொய்து செல்லட்டும் ஸலாத்தை!
No comments:
Post a Comment