Sunday, July 1, 2012

சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா (தொடர்-03)

எழுதியவர்: மௌலவி அபூ நதா M.J.M.ரிஸ்வான் மதனி

சுவனத்து ஸலாம் பற்றிய தெளிவு
ஏற்கெனவே நாம் சுட்டிக்காட்டிய சுவனவாசிகளின் முகமன் பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்:

“அவர்கள் சந்திக்கும் அந்த நாளின் காணிக்கை “ஸலாம்” என்பதாகும்.” (அல்அஹ்ஸாப்: வச:44)
“அவர்களின் காணிக்கை ஸலாம் என்பதாகும்” (இப்ராஹீம்: வசனம்: 23) என இடம் பெறும் வசன அமைப்பினை ஆதாரமாகக் கொண்டு சிலர் “ஸலாம்” என்றும் கூறலாம் என வாதிடுகின்றனர்.

அந்த வசனத்தை மேலோட்டமாகப் பார்க்கின்றபோது இந்த வாதம் சரியானது போன்று தோன்றினாலும் அது வசன அமைப்பின் முறைதான், ஸலாம் கூறும் முறையல்ல என்பதை பின்வரும் வசனங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
وَلَقَدْ جَاءَتْ رُسُلُنَا إِبْرَاهِيمَ بِالْبُشْرَى قَالُوا سَلَامًا قَالَ سَلَامٌ

”நமது (வானவ) தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தியைக் கொண்டு வந்த போது அவர்கள் (அவரைநோக்கி) ஸலாமா- என்று கூற, அவர் ஸலாம் என்று கூறினார்.” (ஹுத். வசனம்: 69)
إِذْ دَخَلُوا عَلَيْهِ فَقَالُوا سَلَامًا قَالَ إِنَّا مِنْكُمْ وَجِلُونَ

“அவர்கள் (அவரிடம்) பிரவேசித்தபோது (அவரை நோக்கி) ஸலாமா- என்று கூறினார்கள்.” (அல்ஹிஜ்ர். வசனம்: 52)
إِذْ دَخَلُوا عَلَيْهِ فَقَالُوا سَلَامًا قَالَ سَلَامٌ قَوْمٌ مُنْكَرُونَ
“அவர்கள் (அவரிடம்) பிரவேசித்தபோது (அவரை நோக்கி) ஸலாமா- என்று கூறினார்கள். அவர், ஸலாமுன் என (பதில்) கூறினார்.” (அத்தாரியாத். வசனம்: 25)
لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا إِلَّا سَلَامًا
”அங்கு அவர்கள் (சுவனவாசிகள்) எந்த வீண் கேழிக்கைகளையும் செவியுறமாட்டார்கள். ஸலாமா என்ற வார்த்தையைத் தவிர.” (மர்யம், வசனம்: 62)
إِلَّا قِيلًا سَلَامًا سَلَامًا
“அங்கு அவர்கள் (சுவனவாசிகள்) எந்த வீண் கேழிக்கைகளையும் செவியுறமாட்டார்கள். ஸலாமா என்ற கூற்றைத் தவிர.” (அல்வாகிஆ. வசனம்: 26)
وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا
”அர்ரஹ்மானது அடியார்கள் பூமியின் மேல் பணிவாக நடப்பார்கள், அறிவீலிகள் அவர்களுடன் பேசினால் ஸலாமா எனக் கூறுவார்கள்.” (அல்ஃபுர்கான். வசனம்:63)
أُولَئِكَ يُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوا وَيُلَقَّوْنَ فِيهَا تَحِيَّةً وَسَلَامًا

”இன்னும் (சுவனவாசிகளான) அவர்கள் எங்கள் இரட்சகனே! எங்கள் மனைவியர் மூலமும், எமது சந்திகள் மூலமும் எமக்கு கண்குளிர்ச்சியை வழங்குவாயாக! இன்னும், எம்மை இறையச்சமுடையோருக்கு தலைவர்களாகவும் ஆக்கிடுவாயாக! என்றும் கூறுவர்கள். இவர்கள் தாம் பொறுமை செய்ததற்காக அறைகளை கூலியாக வழங்கப்படுவார்கள், அங்கு அவர்கள் காணிக்கை மூலமும், ஸலாமாவையும் கொண்டு வரவேற்கப்படுவார்கள். (அல்ஃபுர்கான். வசனம். 74-75)

இந்த வசனங்களில் ஸலாமா, ஸலாம் என்ற சொற்பிரயோகங்கள் இலக்கண நடைக்கு அமைவாக இடம் பெற்றுள்ளது.
அரபு இலக்கணத்தில் பயனிலைச் சொல்லின் இறுதியில் ளம்மதைன் (ரஃப்வு)க் குறியீடு இடம் பெறும். அதற்காகவே ஸலாமுன், ஸலாம் என்று இடம் பெற்றுள்ளது.

அதே வேளை வசனத்தின் அமைப்பு செயப்படுபொருளாக இருப்பின், அதன் இறுதி ‘ஃபத்ஹ்” செய்யப்பட்டதாக இருக்கும். அந்த அடிப்படையில்தான் “ஸலாமா” என இடம் பெற்றுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்ண்டும்.

ஆகவே “அஸ்ஸலாமு அலைக்கும் என்பற்குப் பதிலாக” “ஸலாம்” அல்லது ஸலாமா என ஒருவரிடம் கூறலாம் என்று விளங்குவதும், விளக்குவதும் அரபு இலக்கண நடைகளைப் புரியாத குழப்பம் என்றுதான் சொல்ல வேண்டும்.
இது தக்பீர், தஸ்பீஹ், தஹ்லீல், தஹ்மீத் போன்ற சொற்பிரயோகங்களை ஒத்தது என்று சுருக்கமாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

சுவர்க்கத்தில் ஆதம் நபி கூறிய ஸலாம்


ஆதம் நபி (அலை) அவர்கள் எங்கோ ஒரு தோட்டத்தில் குடியிருக்கவில்லை, மாறாக அவர்கள் சுவனத்தில்தான் குடியிருந்தார்கள். அங்கிருந்துதான் இந்த பூமிக்கு அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். வானவர்களுக்கு அவர்கள் அங்கு கூறிய காணிக்கை அஸ்ஸலாமு அலைக்கும் என்பதாகும் என்பது பற்றி பின்வரும் செய்தி விளக்குகின்றது.
عن أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَلَقَ اللَّهُ آدَمَ وَطُولُهُ سِتُّونَ ذِرَاعًا ثُمَّ قَالَ اذْهَبْ فَسَلِّمْ عَلَى أُولَئِكَ مِنْ الْمَلَائِكَةِ فَاسْتَمِعْ مَا يُحَيُّونَكَ تَحِيَّتُكَ وَتَحِيَّةُ ذُرِّيَّتِكَ فَقَالَ السَّلَامُ عَلَيْكُمْ فَقَالُوا السَّلَامُ عَلَيْكَ وَرَحْمَةُ اللَّهِ فَزَادُوهُ وَرَحْمَةُ اللَّهِ فَكُلُّ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ عَلَى صُورَةِ آدَمَ فَلَمْ يَزَلْ الْخَلْقُ يَنْقُصُ حَتَّى الْآنَ

அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை அறுபது முளத்தில் படைத்தான். பின்னர் அந்த வானவர்கள் மீது ஸலாம் கூறு, அவர்கள் என்ன (காணிக்கை) பதில் தருகின்றார்கள் என்பதை செவிமடுத்துக் கேள், அதுதான் உம்முடையதும், உமது சந்ததியுடையதும் காணிக்கையாகும். அவர் அவர்களை நோக்கி அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறினார், அவர்கள் அதற்குப் பதில் அளித்து, அஸ்ஸலாமு அலைக்க வரஹ்மத்துல்லாஹ் என்று கூறி, வரஹ்மத்துல்லாஹ்வை அதிகரித்தனர். சுவனத்தில் நுழையுவோர் அனைவரும் ஆதம் நபியின் தோற்றத்தில் இருப்பர். இன்றுவரையும் படைப்புக்கள் (உருவத்தில்) குறைந்து கொண்டே இருப்பார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி).

ஆதம் நபி (அலை) அவர்கள் குடியிருந்த சுவனம் எது?
மரணத்தின் பின் நடைபெறும் கேள்விகணக்கின் பின்னர் முஃமின்கள் எந்த நிரந்தர சுவனத்தில் குடியமர்த்தப்பட இருக்கின்றனரோ அங்குதான் ஆதம் நபி (அலை) அவர்கள் முதலில் குடியிருந்தார்கள். அங்கிருந்துதான் வெளியேற்றவும் பட்டார்கள் என்பதை மேற்படி ஹதீஸ் இருந்து விளங்கிக் கொள்ளலாம். பின்வரும் ஹதீஸ் இதை இன்னும் தெளிவுபடுத்துகின்றது.

يَجْمَعُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى النَّاسَ فَيَقُومُ الْمُؤْمِنُونَ حَتَّى تُزْلَفَ لَهُمْ الْجَنَّةُ فَيَأْتُونَ آدَمَ فَيَقُولُونَ يَا أَبَانَا اسْتَفْتِحْ لَنَا الْجَنَّةَ فَيَقُولُ وَهَلْ أَخْرَجَكُمْ مِنْ الْجَنَّةِ إِلَّا خَطِيئَةُ أَبِيكُمْ آدَمَ
மறுமையில் உயர்ந்தவனும், மகத்துவமும் மிக்க அல்லாஹ் மனிதர்களை ஒன்றுதிரட்டுவான். அவ்வேளை முஃமின்கள் எழுந்து நிற்பார்கள். சுவனம் அவர்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவரப்படும். ஆதம் (அலை) அவர்களிடம் வந்து, எங்கள் தந்தையே! சுவனத்தை எமக்காத் திறக்கும்படி (அல்லாஹ்விடம்) வேண்டுங்கள் எனக் கூறுவார்கள். அதற்கு அவர்கள், இந்த சுவனத்தில் இருந்து (ஏற்கனவே) உங்கள் தந்தை ஆதத்தை வெளியேற்றியது அவரது தவறைத் தவிர வேறு என்ன என்று” கேட்பார்கள். (முஸ்லிம்)

சுவன வாசிகளின் தோற்ற அமைப்பு
فَكُلُّ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ عَلَى صُورَةِ آدَمَ فَلَمْ يَزَلْ الْخَلْقُ يَنْقُصُ حَتَّى الْآنَ
சுவனத்தில் நுழையுவோர் அனைவரும் ஆதம் நபியின் தோற்றத்தில் இருப்பர். இன்றுவரையும் படைப்புக்கள் (உருவத்தில்) குறைந்து கொண்டே இருப்பார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி).

சுவனத்தில் திருமணமாகாதவர் கிடையாதுசுவனம் ஆண்களுக்கு மாத்திரமல்ல, பெண்களுக்கும் சொந்தமான அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் நிறைந்த நிரந்தர இல்லமாகும். அதில் முஸ்லிமான ஆண்கள், பெண்கள், ஜின்கள் அனைவரும் பிரவேசிப்பர்.

ஆண், பெண் இரு சாராரில் எவர் நல்லறம் செய்கின்றாரோ அவரை நிச்சயமாக நாம் மணமான வாழ்வுக்கு உரித்தாக்குவோம். அவர்கள் செய்ததற்கான கூலியை மிகவும் சிறந்ததாக வழங்குவோம் (அந்நஹ்ல். வசனம்:97). என்ற அல்லாஹ்வின் கூற்றின் மூலம் இதை அறிந்து கொள்ளலாம்.

சுவனவாதிகளில் ஒவ்வொருவருக்கும் இரு மனைவியர் இருப்பர். (அழகின் காரணமாக) அவர்களின் இரு பாதங்களினதும் மஜ்ஜை தோலின் வெளிப்புறமாகத் தெரியும். சுவனத்தில் திருமணம் முடிக்காத யாரும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

ஹுருல் ஈன் என்ற கன்னியர்களைக் கொண்டு அவர்களுக்கு நாம் மணம் முடித்து வைப்போம் என ஆண்களைப் பற்றி மாத்திரம் அல்குர்ஆன் எடுத்துக் கூறுவதை வைத்து பெண்கள் கவலைப்பட வேண்டியதில்லை. சுவனவாதிகளான ஆண், பெண் இருபாலரும் நிச்சயம் மணம் முடித்து வைக்கப்படுவர் என்பதை இந்த ஹதீஸின் மூலம் விளங்கலாம்.

சுவனத்துக் கன்னியர்ஹுருல் ஈன் என்ற கட்டழகு மங்கையர்களைத்தான் சுவனத்துக் கன்னியர் என்று கூறப்படும். சுவனவாதிகளுக்கு அல்லாஹ்வினால் படைத்து வைக்கப்பட்டுள்ள விஷேடமான படைப்பாகும். இவர்கள் பற்றி அல்குர்ஆன் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கலாம்.

(சுவனத்தில்) ஹுருன் ஈன் என்ற கன்னியர்களும் உள்ளனர். (அல்வாகிஆ. வசனம்: 22),
அவர்களுக்காக கண்பார்வைகளைத் தாழ்த்திக் கொண்டிருக்கும் (பெண்கள்) உள்ளனர். அவர்கள் மறைக்கப்பட்;ட முத்துக்களைப் போன்றவர்கள். (அஸ்ஸாஃப்பாத்: 48-49),

(சுவனவாதிகளான) அவர்கள் அடுக்குக் கட்டில்களில் சாய்ந்தவர்களாக இருப்பார்கள். ஹுருன் ஈன்களை நாம் அவர்களுக்கு மணம் முடித்து வைப்போம். (அத்தூர், வசனம்:20),

அவர்களை இதற்கு முன்னர் மனிதர்களோ, ஜன்களோ தீண்டியதில்லை. (அர்ரஹ்மான்.வசனம்: 70- 74).
மேலதிக விபரங்களுக்கு பார்க்க: (அல்பகரா- 25), (ஆலுஇம்ரான்- 15), அந்நிஸா- 57), (அத்துஹ்ஹான். 54), ( அர்ரஹ்மான்- 70, 71,72), (அல்வாகிஆ- 35-37), (அந்நபஃ- 33)

சுவனத்தில் வீண் பேச்சு இல்லை
لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا إِلَّا سَلَامًا وَلَهُمْ رِزْقُهُمْ فِيهَا بُكْرَةً وَعَشِيًّا
تِلْكَ الْجَنَّةُ الَّتِي نُورِثُ مِنْ عِبَادِنَا مَنْ كَانَ تَقِيًّا

அங்கு (சுவனவாசிகளான) அவர்கள் எந்த வீண் கேழிக்கைகளையும் செவியுறமாட்டார்கள். ஸலாமா என்ற வார்த்தையைத் தவிர, அங்கு அவர்கள் காலையும், மாலையும் ஆகாரம் வழங்கப்படுவார்கள், அந்த சுவனத்தை நமது அடியார்களில் யார் பயபக்தியுடையோராக இருந்தார்களோ அதை அவர்களுக்கு நாம் உரித்தாக்குவோம். (மர்யம்-63,62)

சுவனவாதிகள் ஒருவரை ஒருவர் சந்திந்து அளவளாவிக் கொள்வர், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்பாக்கியம் பற்றி அவனைத் துதித்து புழ்ந்து கொள்வர், அல்லாஹ்வே! அந்த சுவனத்து மக்களாக நம்மையும் மாற்றுவாயாக!

சுவனவாதிகளின் பலம். (சக்தி)சுவனவாதிகள் உலக அமைப்பில் இருந்து எல்லாவிதத்திலும் வித்தியாசப்பட்டவர்கள். அதில் சுவனவாதிகள் சக்தியும் ஒன்றாகும். குர்ஆனில் இருந்தும், ஹதீஸில் இருந்தும் நாம் தரும் தகவல்களின் அடிப்படையை வைத்து இதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

சுவர்க்கவாதிகளில் ஒரு மனிதர் உண்ணுவது, குடிப்பது, இன்பம் அனுபவிப்பது, உடல் உறவு கொள்வது ஆகியவற்றில் நூறு மனிதர்களின் சக்தி கொடுக்கப்படுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத், தாரமி).

சுவனவாதிகளின் முதலாவது உணவு.

சுவனவாதிகள் சுவனத்தில் நுழைந்த பின்னர் வகைவகையான உணவுகளை உண்ணுவார்கள் என்பதை நாம் அறிவோம். அவர்கள் சுவனத்தில் நுழைந்ததும் முதலாவது உண்ணும் உணவு மீனுடைய ஈரல் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்).

பானம்சுவனவாதிகள் பருகும் பானங்கள் பல்சுவை நிறைந்தவை. அவற்றின் வகைகள் பற்றி அல்குர்ஆன் தனியாகப் பிரித்துக் கூறி இருக்கின்றது. ” அவர்கள் அதில் ஸல்ஸபீல் எனப்படும் நீருற்றில் இருந்து இஞ்சி கலந்த பானம் புகட்டப்படுவார்கள். (அத்தஹ்ர்: வசனம்:17, 18).

நல்லவர்கள் நிச்சயமாக கற்பூரம் கலந்த பானத்தைக் குவலைகளில் இருந்து அருந்துவார்கள். (அத்தஹ்ர்: வசனம்: 5).
அவர்கள் முத்திரை பதிக்கப்பட்ட ரஹீக் எனும் பானத்தை அருந்துவார்கள், அதன் இறுதி கஸ்தூரியாகும்… அதன் கலவை தஸ்னீம் என்ற நீரூற்றில் இருந்தும் உள்ளதாகும். (அல்முதஃப்பிபீன். வசனம்: 24- 28).

அவர்களின் இரட்சகன் அவர்களுக்கு தூய்மையான பானத்தை அவர்களுக்குப் புகட்டுவான். (அத்தஹ்ர்: 21).
உலகில் மனிதன் அருந்தும் நீரால் அவனது உடல் நலத்திற்குக் கூட கேடுகள் வருவதைப் பார்க்கின்றோம். ஆனால் அவ்வாறானதொரு நிலை சுவனத்துப் பானங்களுக்கு இருக்கவே இருக்காது.

சுவனவாதிகளின் பாத்திரம்சுவனத்தில் தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை இவ்வுலகில் சுவனத்தை நம்பாத இறை மறுப்பாளர்கள்தாம் பாவிப்பார்கள். தங்கப்பல் கட்டுதல், உடைந்த பாத்திரத்தை தங்கத்தால் அடைத்தல் போன்ற சிறியளவு பாவனை மார்க்கதில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஹுதைஃபா (ரழி) அவர்கள் மதாயின் (ஈராக்கில் ஒரு நகரம்) நகரத்தில் இருக்கும் வேளை “தஹ்கான்” என்பவர் வெள்ளிப்பாத்திரம் ஒன்றைக் கொண்டு வந்தார். அதனை உடனே வீசி எறிந்த ஹுதைஃபா (ரழி) அவர்கள், நான் அதைப்பாவிக்க வேண்டாம் என்று தடுத்தேன். அதை அவர் தவிர்ந்து கொள்ளாததற்காகவே வீசினேன் எனக் கூறிவிட்டு மெல்லிய பட்டு, கோடிடப்பட்ட பட்டு ஆடை அணிவது, தங்கம், வெள்ளிப் பாத்திரங்களில் பருகுவது ஆகியவற்றைத் தடை செய்த நபி (ஸல்) அவர்கள் இவை அவர்களுக்கு (இறைமறுப்பாளர்களுக்கு) இவ்வுலகிலும், மறுமையில் உங்களுக்கும் என்று கூறியதாக அறிவித்தார்கள் (புகாரி, முஸ்லிம், திர்மிதி).

புகாரியில் வரும் அறிவிப்பில் அவ்விரண்டிலும் உண்ணவோ, குடிக்கவோ வேண்டாம் என இடம் பெற்றுள்ளதைப் பார்க்கின்றோம். மேலதிக விபரங்களுக்கு பார்க்க: (சுக்ருஃப் 71), (அத்தஹ்ர்: 15,16,21), (அல்காஷியா:14).

சுவனவாதிகளின் காப்புக்கள்
சுவர்க்கவாதிகளான முஃமின்கள் சுவனம் சென்ற பின்னர் தங்க வழையல்கள் (காப்புக்கள்) அணிவிக்கப்படுவார்கள். இதை அல்குர்ஆனில் காணலாம். “அதிலே அவர்கள் தங்கம், வைடூரியத்தினாலான வழையல்கள் அணிவிக்கப்படுவார்கள். அதில் அவர்களது ஆடை பட்டாகும் (ஃபாதிர்: 33)
அதே போன்றதொரு வசனத்தை அல்ஹஜ் வசனம் 23ல் காணலாம்.
“அவர்கள் வெள்ளியிலான வழையல்கள் அணிவிக்கப்படுவார்கள்” (அத்தஹ்ர்: 21)

சுவனத்துக் கூடாரம்சுவனத்தில் முத்துக்களால் துளை (துவாரம்) இடப்பட்ட ஒரு கூடாரம் உண்டு. அதன் அகலமும், (மற்றொரு அறிவிப்பில், அதன் உயரம், அகலம் சராசரி) அறுபது முழங்களாகும். (புகாரி, முஸ்லிம்).

நான்கு வகை நதிகள்.இவை சுவனவாதிகள் பருகுவதற்காக அல்லாஹ் தயார் செய்து வைத்துள்ள நான்கு வகை நதிகளாகும். அல்குர்ஆனிலும். ஹதீஸ்களிலும் ஆறுகள் என்று பன்மையாக வந்திருப்பதையும் கவனத்தில் கொண்டு நான்கு நதிகள் என்று புரியாமல் நான்கு வகை நதிகள் என்று புரிந்து கொள்ளவும். சுவனவாதிகள் பருகும் பானங்களுடன் இணைத்து விளங்கிக் கொள்ளவும்.
அதிலே கலங்காத (நீர் கெட்டுவிடாத) ஆறுகள், சுவை கெட்டுவிடாத பாலாறுகள், குடிப்பவர்களுக்கு இன்ப சுவையைத் தரும் மது ஆறுகள், தூய்மையான தேனாறுகள் உண்டு (முஹம்மத்: வசனம்: 15).

நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் சென்ற போது நான்கு நதிகளைக் கண்டதாகவும் அதில் இரண்டு ஸித்ரத்துல் முன்தஹா பக்கம் சுவனத்தில் உள்ள இரு நதிகள் என்று விளக்கினார்கள். (புகாரி, முஸ்லிம்).

No comments: