Wednesday, July 18, 2012

இலங்கையில் தொடரும் முஸ்லிம் இன/இட ஆக்கிரமிப்புக்கள்!!

கருமலையூற்று

ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு முஸ்லிம் கிராமம்

karumalaiuttuதிருகோணமலை மாவட்டத்தின் கொட்டியாரக்குடாவின் கரைகளை அலங்கரிக்கும் முஸ்லிம் கிராமங்களுள் கருமலையூற்றும் ஒன்று. பெரும்பாலும் மீன்பிடியை ஜீவனோபாயமாகக் கொண்ட 110குடும்பங்களைக் கொண்ட இக்கிராமம் அழகிய கடற்கரைக்கு பேர்போனது. ஆழ்கடலில் இருந்து சீறிச்சினந்து கொண்டு வரும் அலைகள் எல்லாம் கருமலையூற்றுக்கரையை அண்மித்ததும் அடங்கி அடக்க ஒடுக்கமாக வந்து கரைதடவிப்போயாக வேண்டும் என்ற பாங்கில் நெளிவு சுளிவுகளுடன் அமைந்துள்ளது அதன் அழகிய கரைகள்..

கரையில் இருந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் கடலுக்குள் தெரியும் வெண்மணல் பரப்பு. அதன் மேல் மனதையள்ளும் நீல வண்ண கடல் நீர். .கரைமுழுவதும் வெண்மணலும் அதன்மீது தென்னைகளும் ஆங்காங்கே பாறைகளும், அதன் மீது பற்றைகளும் என காண்போரைக் கவர்ந்திழுக்கும் வசீகரம் தான் இப்போது இம்முஸ்லிம் கிராமத்தின் இருப்புக்கு வினையாகிப்போனது.

கிராமத்தின் அழகு ஒருபங்கு என்றால் அதன் மறுபங்கு அங்கிருக்கின்ற ஒரு உலக அதிசயம் தான். அதாவது, இங்கு 1838ம் ஆண்டில் கட்டப்பட்ட கம்பீரத்தோற்றம் கொண்ட பள்ளிவாசல் ஒன்று உள்ளது. அப்பள்ளியின் ஹவுல் மண்டபத்துக்கான நீர் வினியோகமே இன்று எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றது. பள்ளிவாசல் வளாகத்திற்குள் இருக்கின்ற கற்பிளவொன்றிற்குள்ளேயிருந்து ஒரு நீர் ஊற்று காலாதிகாலமாக வந்து கொண்டிருக்கிறது. மிகவும் தெளிவான,சுவையான,துய்மையான தண்ணீராக அது விளங்குகிறது. அதன் மூலம் எதுவென்று இதுவரை அறிய முடியாதிருக்கின்றது. மட்டுமல்லாமல் அப்பள்ளிவாசலின் சுற்றாடலில் முஸ்லிம் பெரியார்கள் நால்வரின் அடக்கத்தலமும் அங்கே காணப்படுகிறது.

இந்திய சிற்பக்கலையை ஒத்த கட்டட அமைப்பில் உருவாக்கப்பபட்ட இப்பள்pவாசலில் தொழுதுகொண்டு, மீன் பிடியை தொழிலாக மேற்கொண்டு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த மக்களை உள்நாட்டுக்கலவரம் எதுவும் பெரிதாகத் தாக்கியது கிடையாது. காரணம், இப்பிரதேசம் முப்படைகளின் பாதுகாப்பை எப்போதும் பெற்றுக் கொண்டிருந்தமையாகும்.

உள்நாட்டுப்பாதுகாப்பு தரப்பினால் ஆபத்தேதும் அப்போது இல்லாதிருந்த மக்களுக்கு ஆபத்து வெளிநாட்டில் இருந்து வந்தது. 1988ல் இந்திய அமைதிகாக்கும் படையினர்(ஐPமுகு)இலங்கைக்கு வந்தபோது, கருமலையூற்றுக்கிராமத்திலும் அவர்கள் ஒரு முகாமமைத்தனர்.

இதனால் உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் ஒரு தொகுதி இருப்பிடங்களை இழந்த மக்கள் அகதியாக வெளியேற நிர்ப்பந்தித்ததுடன் மிகுதி மககளை பாலியல் சேஸ்டைகளை மேற்கொள்ள முற்பட்டு வெளியேற்றினர்;.

எனினும், இந்திய ராணுவத்தினரின் வெளியேற்றத்துடன் அம்மக்கள் தம் பூர்வீக தாயகத்தில் மீள்குடியேறி வாழ்ந்தனர் .இவ்வாறு ஒரு தொல்லை தீர மறுபுறம் 1994ம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையயினர் அங்கு வந்து ஒரு முகாமமைத்து, மீன்பிடியில் பாஸ் நடைமுறைகளைப்பிரயோகித்து ஜீவனோபாயத்தில் பல கெடு பிடிகளைக் கொண்டு வந்தனர்.

இவ்வாறு மிகுந்த கஸ்டங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கையில ;2004ல் ஏற்பட்ட சுணாமி தாக்குதலுக்கு முகங் கொடுக்கவேண்டி ஏற்பட்டது. இதில் இருபத்தைந்து குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.

இதற்கிடையில் பழமைவாய்ந்த கருமலையூற்றுப்பள்ளியை ஆக்கிரமித்த இந்த்pய ராணுவத்தினரிடமும், இலங்கைக் கடற்படையினரிடமும் ஒரு பொதுத்தன்மையை நாம் காணலாம். அதாவது, இரதரப்பினருமே அப்பள்ளியில் தொழுகை நடாத்த அனுமதிக்காத அதே நேரம் வருடாந்த கந்தூரியை நடாத்த அனுமதித்திருந்தனர். அன்றைய தினம் மாத்திரம் கம்பிவேலிகள் தற்காலிகமாக அகற்றப்பட்டு பள்ளியுள் சென்று; கந்தூரி நடைமுறைகள் எல்லாம் மேற்கொண்டு அவை முற்றுப் பெற்று பிற்பகல் நான்குமணிக்கு மக்கள் வெளியேற்றப்பட்டு விடுவார்கள். karumalaiuttu-1

நிலைமைகள் இவ்வாறு போய்க்கொண்டிருக்கையில், கருமலையூற்றுக் கிராமத்தை நிருவகித்துவரும் பள்ளிவாசல் பரிபாலனசபை, நிலைமைகளை ஜம்மியதுல் உலமாசபைக்கும், வக்புசபைக்கும் அவ்வப்போது எழுத்து மூலம் அறிவித்துக்கொண்டேயிருந்த அதேநேரம் உரிமைக்காவலர்களான அரசியல் வாதிகளுக்கும் அறிவித்துக் கொண்டேயிருந்தனர். அவர்களும் தவறாமல் வழமைபோல தட்டிக்கேட்போம். கட்டிக்காப்போம் என வாலாயமானவாக்குறுதிகளை இவர்களுக்கும் வழங்கத்தவறவில்லை.

ஆனால் புத்திசாலிகளான இம்மக்கள் அரசியல்வாதிகளிடம் கூறிவிட்டோம் அவர்கள் பேரம் பேசி சாதித்துவிடுவார்கள் என முட்டாள் தனமாக இருந்து விடாமல் கடற்படையினரோடு சந்திப்புக்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தம்வாழ்வை விடுவிக்கக் கோரிக் கொண்டே இருந்தனர்.

அத்தொடர்ச்சியான மக்கள் போராட்டத்தின் விளைவாக ‘02ம் திகதி முதலாம் மாதம் 2011ல் உங்கள் கிராமத்தை முழுமையாக தந்து விடுகின்றோம்’ என கடற்படையினர் வாக்குறுதி வழங்கியிருந்தனர். அவ்வாறே அந்நாளும் நெருங்கிவர மக்களும் எதிர்பார்ப்புகளோடும், கனவுகளோடும் காத்திருக்க எண்ணை திரளத் தாழி உடைந்த கதையாக கடற்படை போக இராணுவம் அங்கு வந்து சேர்ந்தது.

அவர்கள் அங்கு ஒரு முகாம் அமைக்க முற்பட்டபோது கடற்படை தாம் மக்களுக்களித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியுள்ளதால் ராணுவத்தினரின் முயற்சியை தடுத்தனர். மேலும், மக்களுக்கு கிராமத்தை வழங்குவதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்பே கடற்படையினர் கம்பிNலிகள் போன்ற தடைகளை நீக்கியிருந்தனர். ஆனால் எல்லாவற்றையும் மீறி ராணுவத்தினர், முன்பு கடற்படையினர் கம்பிவேலிகள் போட்டிருந்த அதேஅளவில் கம்பிவேலிகள் போட்டுள்ளனர்.

எனினும் சளைக்காத பள்ளிப்பரிபாலனத்தார், மீண்டும் தம் போராட்டத்தை உற்சாகத்துடன் ஆரம்பித்து ராணுவத்தினருடன் பேசிய போது ‘தாம் இப்பிரதேசத்தில் பத்து நாள் பயிற்சி முகாம் ஒன்றையே நடாத்தப்போவதாகவும் பின்பு புறப்பட்டுவிடுவதாகவும்’ கூறியுள்ளனர். ஆனால் இன்றுவரை ஆக்கிரமிப்புத்தொடர்ந்த வண்ணமேயுள்ளது. நாளுக்கு நாள் பிடிஇறுகிக் கொண்டேவருகிறது.

தற்போது கருமலையூற்றுக்கிராமத்தின் ஐம்பத்துநான்கு ஏக்கர்பரப்பை சுற்றி கம்பிவேலி போடப்பட்டுள்ளது. இதனால், பள்ளிவாசலை யாரும் அணுகவோ, சுத்தப்படுத்தவோ, தொழுகை நடாத்தவோ, பெரியார்களின் அடக்கத்தலங்களை சுத்தப்படுத்தவோ, கந்தூரி கொடுக்கவோ மீன்படிக்கவோ, சென்று தம் இருப்பிடங்களில் வாழவோ முடியாதபடி மக்களின் வாழ்க்கை பறிக்கப்பட்டுள்ளது. மட்டுமல்லாமல் தற்போது பொதுமக்களுடனான எந்தவொரு சந்திப்பையும் இராணுவம் தவிர்த்து வருகிறது.; அதற்கு ஒரு பின்னணி இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கருமலையூற்றுக்கிராமத்திற்கு வருகை தந்த ராணுத்தின் உச்சஅதிகாரம் பொருந்திய ஒருவரின் வருகையின் பின்பே இராணுவத்தின் இக்கடும்போக்கு அதிகரித்துள்ளதாக மக்கள் நம்புகின்றனர். மேலும் மக்களது இல்லிடங்களை அழித்து, ஜீவனோபாயமாகிய மீன்பிடியையும் தடுத்து இங்கு உல்லாச ஹோட்டல்கள் அமைத்து காசு சம்பாதிக்கும் பின்னணி இடம்பெறுவதாக மக்கள் கருதுகின்றனர்.

ஏனெனில், தற்போது ஆக்கிரமிக்கப்பட்டள்ள பகுதிக்குள் உள்ள வீடுகள் அனைத்தும் துஊடீ ஜேசிபி வாகனங்களால் அழிக்கப்படுகின்றன. மக்கள் கூட்டம் ஒன்று நூற்றாண்டு காலமாக வாழ்ந்ததுக்கான அடையாளம் எதுவும் தெரிந்து விடாதபடி வீடுகள் அழிக்கப்பட்டு, அதன்மிச்சம்மீதங்கள் அம்மக்களின் கண்முன்னாலேயே டெக்டர் வாகனங்களில் அள்ளிச்செல்லப்படுவதைக் கண்டு கேட்பார் பார்ப்பாரின்றிக் கண்ணீர்வடித்துக் கொண்டிருக்கின்றனர். இனி கருமலையூற்றுக்கிராமம் என்ற ஒன்று இல்லை எனும் அளவுக்கு காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆனாலும் இம்மக்கள் தம் மண்ணுக்கான போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை. கருமலையூற்றுக்கான பூர்வீக உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்களை அவர்கள் சேகரித்தவண்ணமுள்ளனர். அந்தவகையில் பின்வரும் ஆவணங்கள் அவர்களது கைவசமுள்ளன.

1.கருமலையூற்று முகவரியையுடைய ஆளடையாள அட்டைகள்,பிறப்பச்சாட்சிப்பத்திரங்கள்

2.வக்புசபையில் பள்ளிவாசல் பதிவு செய்யப்பட்டதற்கான கடிதம்

3வாக்காளர் இடாப்பு (2007)

4.காணி உறுதிப்பத்திரங்கள்

5.பள்ளிவாசலுக்கு வக்பு செய்யப்பபட்ட (தம்பலகாமத்திலுள்ள 4.5 ஏக்கர்) வயற்காணியின் உறுதிப்பத்திரம்

6. 1932ல் மேற்கொள்ளப்பட்ட (பள்ளிவாசல்,அடக்கத்தலங்கள்,குடியிருப்பக்கள் என்பனவற்றைக்காட்டும்) நில அளவை அறிக்கைகள்

7. முன்னாள் அமைச்சர் நஜீப் எ. மஜீட் அவர்கள் 2007ம் ஆண்டு திரகோணமலை மாவட்டத்துக்கான மிலாத் அபிவிருத்தியின் கீழ் இப்பள்ளிவாசலின் கூரையை செப்பனிட 5,80,000ருபா வழங்கிய அமைச்சின் உத்தியோகபூர்வ கடிதம். (தற்போது செப்பனிடப்பட்ட கூரையுடனேயே பள்ளிவாசல் காட்சியளிக்கிறது)

8. இராணுவத்தினரால் பள்ளிவாசல் ஆக்கிரமிக்கப்பட்டது தொடர்பாக ஜம்ம்pயதுல் உலமாசபை, வக்பு சபை என்பனவற்றுக்கு அறிவிக்கப்பட்ட கடிதங்கள்

9. மீனவர்களுக்கு கடற்படையினரால் வழங்கப்பட்ட பாஸ்கள்

10. ஆக்கிரமிப்பு குறித்து பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாடு.

ஆக,மிகப்பழைமை வாய்ந்த பள்ளிவாசலும் அதனோடினைந்த அதிசய நீருற்று, பெரியார்களின் அடக்கத்தலங்கள் உட்பட ஒரு கிராமமே அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனால், ‘இலங்கை எல்லோருக்குமானது. எல்லோரும் தம் கிராமங்களில் சுதந்திரமாக மீள் குடியேறிவாழலாம்’ என்ற அறைகூவல் நாளாந்தம் ஒலித்தக் கொண்டேயிருக்கிறது. அதேநேரம் உள்ளுர் உரிமைக்காவலர்கள் முதல் தேசிய மட்ட உரிமைக்காவலர்கள் வரை அறிக்கைகளுடனேயே அடங்கிப் போகும் கேவலமே இன்னும் தொடர்ந்த வண்ணமுள்ளது.

போருக்குப்பிந்திய இலங்கையில் முஸ்லிம்களின் இருப்பு நாளாந்தம்பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் ‘போரொழிந்தது. இனி எல்லாம் சுகமே…’என்ற சூழ்நிலை அல்லது எதிர்பார்ப்பு என்பது முஸ்லிம்களுக்கு மறுக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. ஆக, வெடியும் முழக்கங்களும் தான் ஓய்ந்திருக்கிறதே தவிர முஸ்லிம்களது மீள்குடியேற்றமானது, அச்சுறுத்தல் நிறைந்ததாகவே தொடர்கிறது.

karumalaiuttu-4கடந்த பயங்கரவாத காலத்தில் புலிகளின் கிழக்குமாகாண அரசியல்பிரிவு தலைவர் கரிகாலன் ஒரு முறை முஸ்லிம்விரோத கருத்தொன்றை வெளியிடுகையில் “நிலம் எங்களின்டது. முஸ்லிமாக்கள் இதில இருக்கிறதென்டால் வாடகை கட்டுங்கோ. இல்லெண்டால் வீடுகளத் தூக்கிக்கொண்ட ஹபறனைக்கங்கால போங்கோ” என்றார். கரிகாலனைப்பொறுத்தவரையில் (இப்போது ஏற்படுத்தப்பட்டுக் கொண்டுவரும் சூழ்நிலையோடு ஒப்பிடுகையில்) வாடகையளவிலாவது ஒரு கருணை நிலைப்பாட்டுக்கு வந்ததாக எண்ணவேண்டியிருக்கிறது. எனவே, தொடர்ந்தும் முஸ்லிம்கள் கைவிடப்படுவதும் நெருக்குவாரத்துக்கு உட்படுத்தப்படுவதும் தொடர்கதையாகக் கூடாது. அப்படியொரு கதை ஏற்கனவே முப்பதாண்டு காலமாகத்தொடர்ந்து தொலைந்து போனதே கடைசிப்பாடமாகட்டும்.

இவ்வாறிருக்கையில் இலங்கை முஸ்லிம்களது வாக்குப்பலம் என்ற அமானிதத்துக்கு என்ன நடக்கிறது? பேரம் பேசல்கள் என்ற போர்வைக்குள் உண்மையில் என்ன பேசப்படுகிறது? என்ற வினாவுக்கு விடை கேட்டாக வேண்டிய, விடை சொல்லியாக வேண்டிய காலம் வந்திருக்கின்றது

ஏனெனில், டம்புள்ளபள்ளிவாசல், அனுராதபுர சியாரம், தெஹிவளை பள்ளிவாசல், ஆரியசிங்களவத்தை மத்ரஸா, காலி முஸ்லிம்கடைகளில் மனித மலம்பூப்பட்டமை, மூதூர் முணாங்கட்டமலை புத்தர் சிலைவைப்பு (சிலை வைப்பு பணிகள் தங்கு தடையின்றி நாளொரு மிரட்டலும் பொழுதொரு அச்சுறுத்தலுமாக நடைபெற்றுக் கொண்டே போகிறது) போன்ற அதிகாரப்பலம் கொண்ட பௌத்த தீவிரவாதம் தொடர்ந்து கொண்டே செல்கையில் கருமலையூற்றுக்கிராமத்தின் கதையும் அவ்வரிசையில் இடம் பெற்றுவிடுமோ? தாம் வழங்கிய வாக்குப்பலமும்,பேரம்பேசும் பலமும் மற்றுமொரு தடவையும் விழலுக்கிறைத்த நீராகி வீணாகி விலையாகித்;தான் போய்விடுமோ என நம்பும் அளவுக்கு மக்கள் கைவிடப்பட்டுள்ளனர்!!!

எனவே எது பறிபோனாலும் எதிர்காலத்தில் வாக்குப்போட ஒரு மக்கள் கூட்டம் உயிர்வாழ்ந்தாக வேண்டும்.என்ற இலட்சியத்தினடிப்படையிலாவது முஸ்லிம் கிராமங்களை பாதுகாக்க அக்கறை கொண்டாலென்ன?

No comments: