Showing posts with label சிந்தனைக் கவிதை. Show all posts
Showing posts with label சிந்தனைக் கவிதை. Show all posts

Wednesday, June 27, 2012

من السجن إلى العرش!


الأمس قد ذهب باكياً وحزيناً
                                 لكي يبتسمَ المستقبلُ في التاريخِ!

ها هي أشعةٌ تُضيعُ النيلَ بياضاً
                              وتخرق ظلام مصر كالصاروخِ!
فإذا قد ظهر فارسُ القومِ مبتسماً
                              ليزرعَ السلامَ ولو من المريخِ !

وقد كان التاريخُ ممزقاً ومخرماً
                                 لكي يُكتب في صفحات الغد بالسلامِ!
أنت ... وأنا ... وهو حُجيراتٌ في الصحراء
                               ولكن سنبني مستقبل العرب بالإسلامِ!

هل تعرفون "الكرسي" لم يكن راضياً للجلوس عليه
                              حتى يأتي الـ"مرسي" قائداً لأم الدنيا من الإخوان!!

                                      -محمد ظافر (أبو أريج)
 

ஒரு கனவு நனவாகிறது!


Ø  ஒரு தேசத்தின் மகுடம்!
Ø  வரலாறு கிழித்த கோடு!
Ø  சிறையிலிருந்து
        சிம்மாசனம் வரை!

ஓர் உதய சூரியனின்
தார்மீகப் புறப்பாடு!
அங்கலாய்க்கும்
அரபு தேசங்களை
ஒளிக் கற்றைகளால்
ஓர் கற்றையாக்கட்டும்!

ஆட்சி மோகத்தில்
வரலாற்றைத் தொலைத்த
வரலாறுகளைத்தான்
கடந்த நூற்றாண்டுகள்
பதிந்து வைத்துள்ளன!

இன்றோ - ஓர்
வரலாறு படைக்கவே
இஹ்வானிய தூதன்
ஆட்சியேறுகிறான்!

பாரான் தேசத்தில்
பதிவிரங்கிய வைரஸ் கொல்லி
ஃபிஅவ்னிய சித்தாந்தத்தின்
சீர்திருத்த நாயகன்!

அரை நூற்றாண்டு
அடம்பிடிக்க - இன்று
வரலாற்றில்
இடம்பிடித்த
தவம் பெற்ற தாசன்!

சத்தியம் கோலோச்ச
சர்வாதிகாரத்தின் சரனடைவு!

கேள்விகளெல்லாம்
வேள்விகளாகிப் போன
இருட்டறைச் சங்கதி வரலாற்றில்
புலர்ந்த விடிவெள்ளி!

உலக சந்தையில்
காலாவதியாகிப்போன
சமூகப் பண்டங்களுக்கு
கிராக்கி அதிகரிக்க
இன்னும் நாட்கள்
தொலைவிலில்லை!!

ஹஸனுல் 'பன்னா'வின் கனவு
நனவாகும் இன்னாள்
நபியின் சுன்னாவும்
மேடையேற இருக்கமாய்
இறையை இறைஞ்சுகிறோம்!

பல ஈமானிய உள்ளங்களின்
ஏக்கம் தோய்ந்த வேண்டுதல்
பலனற்றுப் போகவில்லை!!
                 - அபூ அரீஜ்

Monday, May 28, 2012

'சிறியா' இனியும் சிரியா!!!



சிறியா தேசத்தில்
சிதறிய தேகங்கள்!
காலான்களைப் போல்
காலூன்றும் சோகம்!

பினந்திண்ணித்
தலைமைபீடத்தின்
நாற்காலிமோகம்
நாளாந்த இனஒழிப்பின்
இருக்கை!

ஓலங்களின் ஒன்று கூடல்
மயானத்தை வென்று - பின்
நிசப்தங்களால் மாத்திரம்
ஜெபிக்கப்படும்
மந்திர கோலமாய்
வெளுத்துப் போனது!

நீதி தேவதையின்
கண்கள் கபோதியாகிப்போனது
உலகத்திற்குத் தெறியாது
ஏனன்றால்
உலகத்தாரின் கண்கள்தான்
கருப்புத் துனியால் கட்டப்பட்டுக்
கிடக்கின்றதே!
 
அந்த மகுடத்தின்
அக்கினிச் சுவாலையால்
சுவாசத்தைத் தொலைத்த
சுதந்திரம்- இன்று
அஸ்தமனமாகிக் கொண்டிருக்கின்றது
அப்பாவி உள்ளங்களோடு!
 
குருதிச் சாயத்தின்
குபீர் வாடையை மறைக்க
குள்ள நரிகளின் கபடநாடகம்
அவ்வப்போது
மேடைபோடுகின்றன
ஊடக மண்டபத்தில்!
 
ஆர்ப்பாட்டக் காரர்களின்
அணிவகுப்பு!
நிசப்தம் தொலைத்த
மனித ஓலங்கள்!
மனக்குமுறல்களால்
மழுங்கிப் போன நாளை!
எரிமலையோவென
ஏக்கப் பெருமூச்சு!
இதுதான் அத்தேசத்தின்
நிகழ்ப்பிரதி!
 
உலக ரணங்கள் - இன்று
செய்தியாய் மட்டும்
வாசிக்கப்பட
தகவலுக்காய் மட்டும் - நாம்
காத்துக் கிடக்கின்றோம்
தொலைநகர்த்திக்கு முன்னால்!
 
செவிப்பறை கிழிந்து
சொட்டு இரத்தம்
கசிந்தாற் போல் - வலித்தது மனம்
என்னதான் செய்ய.......?!
வீரம் கொதித்து
விடையின்றி அஸ்தமனமாகும்!
 
நான் மட்டும்
ஆமையைப்போல்
பிரார்த்தனைகளைப்
புதைத்துக் கொண்டிருக்கின்றேன்
நாளைய விடியலில்
புதிய ஜனனங்களாய் ஜனிக்கட்டும்
மீண்டும் ஓர்
புலர்வை நோக்கி!

'சிறியா' இனியும் சிரியா!!!

                            - அபூ அரீஜ் (280512)

Wednesday, March 9, 2011

சுதந்திரமா, பெண்ணுக்கா?

உலகத்தின் பெண்சுதந்திரம்

உலகமும், இந்தியாவும்

கண்ட பெண் சுதந்திரம்

என்ன சுதந்திரமாம்?

கண்ணும் , மனதும் கூசும்

பள்ளியிலே ஆரம்பிக்கிறது

பெண் குழந்தைகளின்

சுதந்திரம், அருவருப்பான

பாடலுக்கு ஒரு ஆட்டம்

கேட்டால் பள்ளி இறுதி

கொண்டாட்டம்!


மாநிலத்தில் அழகி போட்டி!

உலகளவில் ஒரு அழகி போட்டி!

பெண்ணின் அங்கங்களை அளந்து

ஒரு பூனை நடை!

ஒரு எலி நடை!

பெண்களின் உடலை மதிப்பிட்டு

மதிப்பெண் அளித்து தேர்ந்தெடுக்க

வக்கிரம் கொண்ட ஆண்கள்

புடை சூழ - தாராளமாக

வந்த பெண்ணிற்கு

உலக அழகி (அருவருப்பு)பட்டம்!


உலக சந்தையின் பணம் (பிணம்) திண்ணும்

கழுகுகளுக்கு கிடைத்ததோ

ஒரு அழகி(அருவருப்பு)போட்டி!

அரைகுறை உடையுடன் நடக்க வைத்து

பண முதலைகளின் பொருள்களை விற்க

பெண்களை சந்தைப்படுத்தி

உலக அழகி (சுதந்திர) அடிமை பட்டம்!

கார் விளம்பரமா?

ஆண்கள் பயன்படுத்தும்

பொருள்களின் விளம்பரமா?

இழுத்து வா பெண்ணை

அரைகுறை ஆடையுடன்

நிற்க வை! ஆணுடன்!

கல்லூரியா? ஆணுடன்

பெண்ணையும்

கலந்து படிக்க வை!


பாய் - பிரண்ட்

கேர்ள் - பிரண்ட்

இரண்டும் இல்லையென்றால்

நீ ஒரு பைத்தியம்

இந்த உலகில்!


சிவப்பு விளக்கு

என்ற ஒரு தெரு!

அரசே அங்கீகாரம்

கொடுத்து நடத்தும்

அசிங்கங்கள்!


அசிங்கத்திற்கே

மரியாதை கொடுக்கும்

உலகத்தின் அரசாங்கங்கள்!

வக்கிரம் படைத்தவர்களுக்கு

பெண் என்றால் எல்லாவற்றையும்

துறந்து அலைய வேண்டும்!


வேஷ்டியோடு அலையும்

ஊரில் பேண்ட் போட்டுக்கொண்டு

நடந்தால் ஆச்சர்யம்!


தலைவிரி கோலத்துடன்

செய்தி வாசிக்கும் பெண்!

ஐந்துவயது பெண் குழந்தையின்

ஆடையுடன் தொலைக்காட்சி

நிகழ்ச்சிகள் நடத்தும் பெண்!


இறுக்கமான ஆடை அணிந்து

ஹாய், பாய் - காலேஜ் பெண்!

பெண்ணையே திருமணம்

செய்து கொள்ளும் பெண்!

யாரோடும் வாழ்வேன் - யாரும்

என் சுதந்திரத்தில் தலையிடாதே

நவீன நரகல் பெண்கள்!


இப்படிப்பட்ட கண்ணியமற்ற

சுதந்திரம்(?) பெண்களுக்கு வேண்டுமாம்!


உலகத்தில் உள்ள வக்கிரம்

படைத்தவர்கள் கதறுகிறார்கள்!!!

நாங்கள் கொடுத்த சுதந்திரம்

ஏன் இஸ்லாத்தில் இல்லை?


எரிச்சலில் - அவதூறு

இஸ்லாத்தில் பெண் சுதந்திரம் இல்லையாம்!


இஸ்லாம் வழங்கிய

சுதந்திரத்தை பார்த்து

எங்கள் பெண்கள் போல்

நீங்களும் வந்தால்தான்

நாங்கள் பார்க்கமுடியும்!

இப்படி புர்க்காவோடு வந்தால்

எப்படி? - பற்றி எறிகிறது

அவர்களின் வயிறு!


அந்த கலக்கத்தில்

கீழ்ப்பாக்கத்தில்

இருப்பதற்கு தகுதி படைத்த

உலக அறிவிலிகள் கதறுகிறார்கள்!

இஸ்லாத்தில் பெண் சுதந்திரம்

இல்லை என்று!


1432 வருடத்திற்கு முன்பே

இஸ்லாம் வழங்கிய சுதந்திரம்!

வாழ்வதற்கே சுதந்திரம்

பிற மதங்களில் இல்லை!

ஆனால் இஸ்லாத்தில்

வாழ, பேச, படிக்க

வியாபாரம் செய்ய

சொத்துக்களை தன்

பெயரில் வைத்துக்கொள்ள

சுதந்திரம்!


பிடித்த மணமகனை

தேர்வு செய்ய சுதந்திரம்!

கல்லானாலும் கணவன்

புல்லானாலும் புருஷன்

என்ற தத்துவத்தை உடைத்தெறிந்து

பிடிக்கவில்லை என்றால் நீ புல்லுதான்!

என்று விவாகரத்து செய்ய சுதந்திரம்!


திருமணத்தில் மஹர் என்ற உரிமை!

தந்தை சொத்தில் உரிமை!

கணவன் சொத்தில் உரிமை!

மகன் சொத்தில் உரிமை!

இஸ்லாம் பெண்களுக்கு

வழங்கியுள்ள சுதந்திரம் ஏராளம்!


உலகில் பெண்ணுக்கு

மனிதன் வழங்கிய சுதந்திரம்

கண்ணியமற்ற அலங்கோலம்!

உலகை படைத்த அல்லாஹ்

வழங்கிய பெண் சுதந்திரம்

கண்ணியமிக்க அந்தஸ்து!


நபியே! உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை ொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன் : 33:59)


தமது பார்வைகளத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் : 24:31)


... தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்! (அல்குர்ஆன் : 24:31)


Thanks: அலாவுதீன். S.

Source : http://adirainirubar.blogspot.com/2010/12/blog-post_26.html