Showing posts with label மரணம். Show all posts
Showing posts with label மரணம். Show all posts

Thursday, April 24, 2008

நிச்சயிக்கப்பட்ட மரணம்

கருத்து வேறுபாடற்ற ஒரே தலைப்பு, அது மரணம் என்பது மட்டுமே! இரண்டாம் கருத்துக்கு இடம்பாடுள்ள விடயங்களில் தலையைப் பிய்த்துக் கொள்ளும் நாம், நிச்சயிக்கப்பட்ட அந்த நாளிகையை மறந்து விட்டோமா? அல்லது உலக வாழ்க்கையும் சடவாதமும் நம்மை மறக்கடிக்கச் செய்து விட்டதா?
புரியாத புதிராய் நம் வாழ்க்கை நடை போட
நாட்டு நடப்புக்கள் நம் மண்டையை நறை போட
இறத்தக் களரிகள் இதயத்தைத் துளை போட
இங்கிதமற்ற வாழ்க்கை மட்டும் நமை இம்சைப் படுத்துகின்றது!

மனிதா நில்!
இன்றோ நாளையோ உன் உயிரின் கதை முடிந்து போகுமே!
இனிய பொழுதுகளும் சேர்ந்து போகுமே!
இல்லற வாழ்க்கையும் அதனோடே இனைந்து போகுமே!

உன் வாழ்க்கையின் வசந்தங்கள் எங்கே?
வாஞ்சை தந்த வனப்புக்கள் எங்கே?

மரணம் உனை அறவணைக்கு முன் முளங்காளிட்டு உனக்கு வணக்கம் செலுத்தியவன் கூட, நீ கட்டையாய்க் கிடக்கும் போது பிணத்தை இன்னுமா புதைக்கவில்லை எனக் கூறி பின்தள்ளி நின்றுவிடுவான். நாட்டு நடப்புக்கள் நமக்கு பாடம் சொல்கின்றன. நாம் தான் மரணத்தை மறந்து விட்டோமே!

கட்டு நோட்டுக்களும்
கடை வாசல்களும்,
காட்டு வாழ்க்கை போல் கசந்து விடு முன்னே
உன் கடந்த காலத்தை அசை போடு!
மீதி வாழ்க்கையை நிறை போடு!

உன் உடலுக்காய்த் தொழும் நாள் வருமுன்
நீயே – உனக்காய்த் தொழுது கொள்!
உதிர்ந்து போகும் உன் வாழ்க்கையை நினைந்து

உன் உதிரா வாழ்க்கைக்காய் உனை வார்த்துக் கொள்!

நாளைய பொழுதுகள் நமக்காய் காத்துக் கிடக்கின்றன
அது – சுட்டெரிக்கும் சுடு நொருப்பா?
இல்லை சுவனத்தின் சுகந்தங்களா?
யாவும் அறிந்தோன் வல்லோன் றஹ்மானே!!

உலக நெருப்பு நமக்குப் புதிதல்ல
உலகையே உருக்கிடும் நெருப்புத்தான் நமக்குப் புதிது!
உன் நிஜங்களை ஒரு முறை நிறுத்துக் கொள்!

போலிகளை அவ்வப்போது கலைந்து கொள்!

கடைசி நாளிகைகள் கண்சிமிட்டும் போது
கண்ணீர் மழைகளெல்லாம் அந்த நெருப்பை அனைக்கமாட்டா!
கபனும், கப்ரும் உனை அழைக்கு முன்

மீண்டும் ஒரு முறை அழுது கொள்!

மலக்குல் மெளத்தும் வரும் முன்னே
மண்ணறை வாழ்க்கைதனைப் பெறு முன்னே
மன நிலை மாற்றி மறுமைக்காய் வாழ்க்கையை வரைவோமே!!
-ஆக்கம்: நிர்வாகி

Thursday, April 3, 2008

ஓர் ஓசையற்ற பயணம்


காலம்: அனைத்து கிழமை நாட்களிலும்

பயணி பற்றிய விபரம்: -
தகுதியானோர் : ஆதமின் மகன்!
மூல உற்பத்தி : களிமண்!
விலாசம் : பூமியின் மேற்பகுதி!
பயணச் சீட்டு பற்றிய விபரம்: -
பயண வழி : ஒன்வே ஒன்லி (ஒற்றைப் பயணம் மட்டும், திரும்பும் சீட்டு கிடையாது)!
விலை : முற்றாக இலவசம்!
முற்பதிவு : ஏற்கனவே செய்யப்பட்டு விட்டது!

பொதி(சுமை) பற்றிய விபரம்: -
ஒவ்வொரு விமானத்திலும் ஒரு பயணி மட்டுமே அனுமதி! கூடுதலாக 5 மீட்டர் வெள்ளைத் துணியும் சிறிய அளவு காட்டனும் எடுத்துக் கொள்ளலாம்!

பெறுமதி வாய்ந்த பொதி பற்றிய விபரம்: -
மனத்தூய்மையுடன் நிறைவேற்றப்பட்ட தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ், தர்மங்கள், சத்தியத்திற்காக செய்த தியாகங்கள், குழந்தைகளை நல்லவர்களாக ஆக்க எடுத்துக் கொண்ட உண்மையான கரிசணைகள் மற்றும் இது போன்ற நற்காரியங்கள் மட்டும்.

பயணம் பற்றிய விபரம்: -
பயணத்தளம் : பூமியின் எந்தப் பகுதியுமாக இருக்கலாம்.
பயணிக்கும் நேரம் : மரணத்தைத் தொடர்ந்து!
இறங்கும் இடம் : மறு உலகம்.

குறிப்பு: பயணச் சீட்டு, கடவுச் சீட்டு, பிரயாண ஆவணங்கள் போன்ற எதுவும் தேவையில்லை. தயாராக மட்டும் இருந்து கொண்டால் போதுமானது!

தங்குமிட வசதி: -
தற்காலிகமாக மட்டும் ஏற்பாடு செய்யப்படும்!!
அறையின் அளவு : கிட்டத்தட்ட 2 அடி அகளமும் 6 அடி நீளமுமாகும்!
அறையின் சிறப்பம்சம் : வெரும் புழுதி மணலினாலும் சிறிய கற்களினாலும் அமைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது!
தங்குமிட வசதி பற்றிய விபரம் : பணக்காரனாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் ஒரே வகையான வசதி மட்டும்தான் ஏற்பாடு செய்யப்படும் என்பதை தயவு செய்து கவணத்திற் கொள்க!

கீழ்காணும் செளகரியங்கள் காணப்படும் :
குளிரூட்டி (ஏ.சி) : 0 டொன் !!!
நீர் விநியோகம் : கிடையாது !!!
மின் விநியோகம் : கிடையாது !!!
தொலை பேசி : கிடையாது !!!
டீ.வி மற்றும் சேனல்கள் : சுவனம் அல்லது நரகம் !!!
பத்திரிக்கைகள் அல்லது புத்தகஙகள் : கிடையாது !!!
ரூம் சர்விஸ் : அல்லாஹ்வுக்கு எந்தளவு கட்டுப்பட்டு நடந்தோம் என்பதைப் பொருத்து அமையும்!

முக்கிய கவணத்திற்கு :
அனைத்து பயணிகளும் மேற் கூறப்பட்ட விடயங்கள் அனைத்தையும் தயவு செய்து கவணத்திற் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்!
பயணச் சீட்டு ரத்துச் செய்யப்படுவதோ அல்லது பிறருக்கு மாற்றுவதோ முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது!எனவே, தயவு செய்து அனைவரும் (விதிவிலக்கு கிடையவே கிடையாது) பயணத்திற்கு தயாராக இருந்து கொள்ளும் படி கேட்டுக் கொள்கின்றோம்.
மெளத் எனப்படும் உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்தவுடன் பயணம் ஆரம்பமாகும் என்பதையும் அறியத்தருகின்றோம்!

மேலதிக தகவல்களுக்கு: -
உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அல்-குர்ஆன் மற்றும் ஸுன்னாவை படிக்கவும்.