Thursday, March 27, 2008

பகுத்தறிவுக்கு நேர்ந்த தென்ன?


ஓ மனிதா!
உனக்கொரு வினா! உன் பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன?

படைப்பினங்கள் பலவிருக்க உனக்கு மட்டும் பகுத்தறிவு!
நன்மை தீமை எதுவென்று எளிதாய்ப் பிறித்தறிய ஆறறிவு!
உண்மையை உணர்ந்து கொள்ள உரை கல்லாய் அவ்வறிவு!

ஒரு பேனா வாங்கப் போனால் கூட
பகுத்தறிவை சரியாகப் பயன் படுத்துகிறோம்.
அது எழுதுகிறதா? இல்லையா? கருப்பு நல்லதா? நீலமா?
அந்த நாட்டு உற்பத்தியா? இந்த நாடா? பல கேள்விகள்!

அங்கே எம் பகுத்தறிவுக்கு நாம் வேலை கொடுக்க மறப்பதில்லை!
ஆனால் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் நாம் கொண்ட கொள்கையில் மட்டும் அவ்வறிவுக்கு எள் முனையளவேனும் இடம் கொடுப்பதில்லையே!

கடந்துவிட்ட உன் வாழ்க்கை
உனக்கு ஒரு படிக்கட்டுகளாய் அமையட்டும்.
நாளைய பொழுதுகள் தேனாகட்டும்.

இந்துக்களே! விழிமின்! எழுமின்!


ஒன்றே குலம் என்று பாடுவோம், ஒருவனே தேவனென்று போற்றுவோம்.. .. ..நம் நாடுகளில் இந்த வரிகளை அடிக்கடி நம் காதுகளுக்கு வானொலி தூதனுப்பிக் கொண்டிருக்கும். அவ்வரிகளில் உண்மையொன்று புரையோடிக் கிடப்பதை உணர்ந்தும் உணராதவர்களாய் நாற்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்!

இந்தியா சுதந்திரமடைந்து 50 வருடங்களைக் கடந்தும் அங்கு கொத்தடிமை முறையிலிருந்து மக்கள் விடுபட இயலவில்லை. 10-05-1987 தேதியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் இப்படி ஓர் செய்தியைத் தருகின்றது: கொத்தடிமைகள் விடுதலை இயக்கத்தின் தலைவர் கூறுகிறார்:- பீகார் மாநிலத்தின் தென் மாவட்டங்களான சாம்பரான், கோபால் பஞ்ச் போன்றவற்றில் மட்டும் 20,000 ஹரிஜன மக்கள் கொத்தடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர்.

மனிதனை மனிதனாக மதிக்காதவன் மனிதனல்ல என்பது மனிதம் உள்ள அனைவரதும் கருத்தாகும். மிருகத்திலிருந்து பிறந்தான் மனிதன் என்கின்றது ஒரு சமூகம்! மனிதனை மிருகமாக நடாத்துகிறது இன்னொரு சமூகம்! இரண்டுமே மனிதனுக்குக் கொடுக்க வேண்டிய இடத்தைக் கொடுக்க மறந்துவிட்டன. தீண்டத் தகாதவர்கள் ஹிந்துக்கள் அல்ல - இப்படி பறை அறிவிக்கிறார் பூரி சங்கராச்சாரியார். இந்த சங்கராச்சாரியாரைத்தான் பிராமணர்கள் தங்களுடைய மிகப் பெரிய தலைவராக கொண்டாடுகிறார்கள்.
- Indian Exprs, Afpril 4,1989.
'மனு' என்ற ஹிந்து தர்ம சாஸ்திரம் கூறுகின்றது: சூத்திரன் - காகம், தவளை, நாய் இன்னும் இவை போன்ற மிருகங்களைப் போலாவான். இவற்றைப் போல் இவன் ஊனம் உள்ளவன். இவற்றிலுள்ள பலவீனங்கள் அனைத்தும் இவனுக்கு உண்டு!!
வேதமும் கீழ் ஜாதி மக்களும்:
பிராமணர்களைப் பற்றித் தீதாகப் பேசிய சூத்திரனின் நாக்கை அறுத்திட வேண்டும். முதல் மூன்று உயர் ஜாதியினரோடும் தன்னைச் சமமாக எண்ணும் அளவுக்கு எந்தக் கீழ் ஜாதிக் காரனும் நெஞ்சுரம் கொண்டால் அவனை சவுக்கால் அடிக்க வேண்டும்.
- (அப்பஸ்தம்பா - தர்ம சூத்திரம்: 110-10-26)
வேதம் ஓதுவதைக் காதால் கேட்டுவிட்டால் ஈயத்தைக் காய்ச்சி அவன் காதுகளில் ஊற்றிட வேண்டும். அவன் வேதத்தை உச்சரித்தால் அவனது நாக்கை அறுத்து துண்டாக்கிட வேண்டும். வேத நாதங்களை அவன் உள்ளத்தில் தேக்கி வைத்தால் அவனது உடலைக் கண்ட துண்டங்களாகத் துண்டாடிட வேண்டும் என மனுவின் விதி 167-272 கூறுகின்றது.
(டா.சாட்டர்ஜி M.A, Phd (usa) யின் இந்துக்களே! விழிமின்! எழுமின்! என்ற நூலிலிருந்து ஒரு சில தகவல்கள் மட்டுமே மேலே தரப்பட்டுள்ளன. மேலும் அறிந்து விடியலை நோக்கிப் புறப்பட நூலை வாங்கிப் படியுங்கள்.)
உலக மனிதர்கள் எல்லோரும் ஒரு ஆபிரிக்கப் பெண்ணிலிருந்து பிறந்தவர்கள் என இன்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்து அறிவித்துள்ளனர். ஆதாம் ஏவாள் எனும் ஒரே ஜோடியிலிருந்து தான் மனித குலம் தோன்றியதாக இஸ்லாம் நமக்கு பாடம் புகட்டுகின்றன. ஒரு தாயிக்குப் பிறந்த மனிதர்களில் பிறப்பால் எப்படி உயர்வு தாழ்வு ஏற்பட்டது?! உண்மையில் தீண்டாமையைக் கற்பித்தவர்களே தீண்டத்தகாதவர்கள்!! ஊனமுற்ற உள்ளங்களில் மனிதாபிமானம் பிறப்பதென்பது அத்தி பூப்பதற்குச் சமமாகும்! இறையச்சம் உடையவர்களே உயர்ந்தவர்கள். இறையச்சம் அற்றோரே தாழ்ந்தவர்கள். பிறப்பால் எவனும் உயர்ந்தவனாகவோ, தாழ்ந்தவனாகவோ முடியாது என்பதுதான் உண்மை.
இந்தியாவில் தாழ்த்தப்பட்ட இந்துக்கள் முதல் முஸ்லிம்கள் வரை அனைவரும் மதத்தின் பெயரால் நாராகக் கிழிக்கப் படுகிறார்கள். இதற்கு ஒரு முடிவு வேண்டாமா? மதத்தின் பெயரால் மனிதனை அடிமைப் படுத்துவதே வன்கொடுமை!
இந்துக்களே! அசத்தியத்திலிருந்து விழிமின்! சத்தியத்தை நோக்கி எழுமின்!
அஞ்சா நெஞ்சம் நமக்கு வேண்டுமென்றால் அறநெறி நமக்குத் தேவை. சத்திய மார்க்கம் நமக்கு வழிகாட்ட வேண்டும். தேடு நீயும் சத்தியத்தை. ஓயா வேட்கையோடு உலா வரட்டும் உன் சத்தியப் பயணம்.இந்துக்களே! விழிமின்! எழுமின்!

Tuesday, March 25, 2008

இறைவனுக்கும் உண்டோ இலக்கணம்!?

வல்லோனின் திருநாமம் போற்றி..

மதங்கள் என்பது இறைநம்பிக்கையை மையமாக வைத்தே தோற்றம் பெற்றுள்ளது. இன்று உலகில் கடவுள் நம்பிக்கையற்ற ஒரு மதத்தையேனும் காணமுடியவில்லை. ஒவ்வொரு மதத்தினரும் தத்தமது வேதநூல்களாகக் கருதும் அந்த மத வழிகாட்டிகளை வைத்தே கடவுள் நம்பிக்கையையும், கடவுளுக்கு இருக்க வேண்டிய பண்புகளையும் குறிப்பிட்ட அந்த மதத்தோடு பின்னிப் பினைந்துள்ளனர். இஸ்லாம் தவிர்ந்த இதர அனைத்து மதங்களும் பல தெய்வ வழிபாட்டையும், ஏக இறைவனுக்கு இணைகற்பிக்கும் மன்னிக்க முடியா குற்றத்தை தூண்டுவனவாகவே உள்ளன. நாம் இப்படிக் கூறும் போது சிலருக்குக் கோபம் வரலாம். இது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இருந்தாலும் நம்மை சத்தியத்தை விட்டும் தடுத்துக் கொண்டிருக்கும் அந்தக் கோபத்தை சிறிது நேரம் ஓரங்கட்டிவிட்டு நாம் கூறும் கருத்துக்களை சற்று சிந்தித்துப் பாருங்கள் உண்மையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

எல்லா மதங்களும் கடவுளின் தன்மையைப் பற்றி விளக்கினாலும் போதிய கடவுளின் இலக்கணங்கள், பண்பகள் பற்றி சரியாகக் குறிப்பிடாமைதான் சில மதங்களில் கோடிக்கணக்கான கடவுள் நம்பிக்கையும், வழிபாட்டு முறையும் தன்னகத்தே ஏற்படுத்தியுள்ளன. போதாமைக்கு நாளுக்கு நாள் இன்னும் பல கடவுளர்கள் புதிது புதிதாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தோன்றிக் கொண்டிருக்கின்றனர். அத்தோடு தாங்கள் கடவுளின் அவதாரம் என்று கூறிக் கொண்டு அப்பாவி மக்களை ஏமாற்றிக் கொண்டு வயிறு வளர்ப்பதையும் நாம் பார்க்கத்தான் செய்கின்றோம். அதேநேரம் தாம் கடவுளின் அவதாரம் என்று கூறி ஒரு அப்பாவி முஸ்லிமைக் கூட ஏமாற்ற முடிவதில்லை. ஏனென்றால் உடனே கடவுள் எப்படி மனிதரானார்? கடவுள் மனிதனாக மாறினால் கடவுளின் இடத்தில் தற்போது யார் இருக்கிறார்? போன்ற கேள்வியைக் கேட்டு போலித் தனத்தை தோலுறித்துக் காட்டிவிடுவர்.

இஸ்லாத்தின் இறுதி வேத நூலான அல்-குர்ஆனின் 112 வது அத்தியாயம் ஏனைய மதங்கள் விட்டுள்ள இடைவெளியைப் பூர்த்தி செய்து இறைவனுக்கு இருக்கவேண்டிய இலக்கணத்தை கச்சிதமாகக் கூறி பல தெய்வ வணக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கின்றது. இந்த அத்தியாயத்தின் சிறப்பம்சம் என்ன வென்றால், எல்லோருக்கும் புறியும் விதத்தில் அதன் வசனங்கள் உள்ளன. வெரும் நான்கே வசனங்கள். மற்றும் மிக எளிய நடையிலமைந்த சின்னச் சின்ன வசனங்கள் நம்மை வியக்க வைக்கின்றன!. அது மட்டுமல்ல இப்படி இரத்தினச் சுருக்கமாக ஒருக்காலும் மனிதனால் இறைவனுக்குறிய இலக்கணத்தைக் கூற முடியாது என்பது அல்-குர்ஆன் இறைவாக்கு என்பதற்கான ஒரு சான்றாகும். எனவேதான் அல்-குர்ஆன் மனிதனைச் சிந்திக்கத் தூண்டுகிறது. நிச்சயமாக சிந்திப்போருக்கு நிறைய சான்றுகளை பரிசாக வைத்திருக்கின்றது அல்-குர்ஆன்.

அல்-குர்ஆனின் 112 வது அத்தியாயம்:
(நபியே!) நீர் கூறுவீராக: அவன் – "அல்லாஹ்" ஒருவனே!
அல்லாஹ் (யாவற்றை விட்டும்) தேவையற்றவன் (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன).
அவன் (எவரையும்) பெறவில்லை, (எவராலும்) பெறப்படவுமில்லை.
மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை.

இந்த வசனங்களை ஒரு முறை ஆழ்ந்து கவணிப்போமானால் இந்த தன்மைகளுக்கு உட்பட்டவன் தான் உண்மையான கடவுளாக, வணங்குவதற்குத் தகுதியுள்ளவனாக இருக்க முடியும் என்பதனையும், உண்மையான கடவுளாகிய அல்லாஹ் தவிர்ந்த வணங்கப்படும் அனைத்தும் மதனிதக் கற்பனையில் உதித்த போலிக் கடவுள்கள் என்பதனையும் இலகுவில் புறிந்து கொள்ள முடியும்.

இதோ சத்தியத்தைத் தேடி ஒரு சலனமற்ற பயணம் தொடங்குகிறது.

மேற் கூறப்பட்டுள்ள அத்தியாயத்திலுள்ள வசனங்களை ஒவ்வொன்றாக அனுகுவோம்.

01. "(நபியே!) நீர் கூறுவீராக, அவன் – 'அல்லாஹ்' ஒருவனே!"

ஒரு விடயத்தை நாம் நன்கு தெறிந்து கொள்ள வேண்டும். அதாவது எல்லா மத்திலும் பல கடவுளர்கள் இருப்பது போல் 'அல்லாஹ்' என்பது முஸ்லிம்களின் கடவுள் எனக் கருதுவது தவறாகும். யாரை முஸ்லிம்களாகிய நாம் 'அல்லாஹ்' என்று வணங்கி வழிபடுகின்றோம் என்றால், இந்த உலகத்தைப் படைத்து பரிபாலிக்கின்ற வல்ல நாயனான அந்த ஏக சத்தனைத்தான். தவிர 'அல்லாஹ்' முஸ்லிம்களுக்கு மட்டுமுள்ள தனிக் கடவுள் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

இந்த வசனமானது கடவுள் என்பவன் நிச்சயமாக ஒருவனாகத் தான் இருக்க முடியும் என்பதனை அடித்துக் கூறுகின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட கடவுளர்கள் இருந்தால் என்ன நடக்கும் என்பதனை யூகித்துக் கொள்ளலாம். வேற்று மதப் புராணங்களில் கடவுளர்களுக்கிடையில் இடம் பெற்ற சமர்கள், சச்சரவுகள், இழிவான செயல்கள் என்பன எண்ணிலடங்காதவை. ஒரு சாதாரன சிறிய நாட்டைக் கூட ஆழுவதற்கு ஒரே ஒரு ஜனாதிபதி மட்டும் தான் இருக்க வேண்டும் என உலகமே ஏற்றுக் கொண்டுள்ள போது அகிலம் அனைத்தையும் அடக்கியாழ ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சியாளன் இருக்கவே முடியாது என்பதனைத்தான் இந்த வசனம் விளக்குகிறது.

02. "அல்லாஹ் (யாவற்றை விட்டும்) தேவையற்றவன் (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன)".
இறைவனானவன் அனைத்துத் தேவைகளை விட்டும் அப்பாற் பட்டவன். நம்மைப் போல தேவைகளுடையவன் இறைவனாகவே இருக்க முடியாது. மனிதனுக்கு எது எதுவெல்லாம் தேவைப்படுகிறதோ அவையனைத்தும் குறைகளே. எனவே இதே குறைகளை இறைவனுக்கும் கற்பிப்பது நாம் இறைவனை குறைத்து மதிப்பிடுகின்றோம் என்பதாக அமைந்துவிடும். அதுமட்டுமல்ல நமது தேவைகளை முறையிடுவதற்காக இறைவனிடம் கையேந்துகின்றோம். அவனே தேவையுள்ளவன் எனும் போது அவனிடம் நாம் எப்படி உதவி கோற முடியும்! பிச்சைக் காரனிடம் பிச்சை கேற்பது போன்றாகி விடும்.

இந்த இழுக்கை நீக்கும் விதமாகத்தான் அல்லாஹ் தனது திருமறையில் எவ்விதத் தேவையுமற்றவன் என்பது மூலம் தனக்கு மனிதர்கள் ஏற்படுத்திய பலவீத்தை அப்புறப்படுத்துகிறான்.

இறைவனானவன் எள்ளும் பிசகாமல் தன் படைப்பினங்கள் அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருப்பவன். அவனுக்கு நம்மைப்போன்றே ஆசா பாசங்கள் இருந்தால் அவற்றை நிறைவு செய்யும் நேரத்தில் உலகத்தாரின் கோறிக்கைகளை யாரிடம் முறையிடுவது? எல்லாம் வல்ல நாயனை எவ்விதக் குறைகளும் இன்றி வணங்கி வழிபடுவோமாக!

03. "அவன் (எவரையும்) பெறவில்லை, (எவராலும்) பெறப்படவுமில்லை".
இறைவனானவன் தனித்தவன் எனும் பொழுது அவனுக்கு பெற்றோர்களோ அல்லது குழந்தைகளோ இருக்க முடியாது. மனிதன் நினைப்பது போன்று இறைவனுக்கும் குடும்பம், கோத்திரம் இருக்குமானால் இறைவன் சமூகம் என்று ஒரு சமூகம் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அப்படியொரு சமூகத்தை யாரும் பார்த்ததும் கிடையாது. அதற்கு சாத்தியமும் இல்லை. அல்லது அப்படி ஆரம்பத்தில் இருந்தார்கள் என்று கூறினால் அவர்களை ஒரு குறிப்பிட்ட காலத்தோடு மறைத்தது யார்? அல்லது குறிப்பிட்டதோர் காலத்துடன் அனைவரும் இறந்து விட்டார்கள் என்றால், இறைவனுக்கு இறப்பு தகுமா? என்ற கேள்வி நம் சிந்தனையைக் குடைகின்றது. இன்று சிலைகளாக சித்தரிக்கப்பட்டுள்ள கடவுளர்கள் அனைத்தும் கற்பனையில் தோன்றியவைகள் என்பதை நடுநிலையோடு சிந்தித்தால் அவர்களே தெறிந்து கொள்வார்கள்.

கிறிஸ்தவர்கள் கூறுவது போன்று இயேசு இறைமகன் கிடையாது. ஏனன்றால் இறைவன் வாரிசு எனும் தேவையை விட்டும் அப்பாற்பட்டவன். போதாதற்கு பைபிளில் கூட இயேசு தன்னைப்பற்றிய வாக்கு மூலத்தில் தான் இறைவனின் மகன் என்று ஒரு இடத்தில் கூட கூறவில்லை. அப்படி தனது சீடர்களில் ஒருவர் கூட நம்பவுமில்லை. மாறாக பவுலின் கற்பனையில் உதித்த காவியமாகத் தான் இந்த நம்பிக்கையைக் கூற முடியும். அதற்கு பைபிளே சான்றாகவும் உள்ளது.

அடுத்தது கடவுள் மனிதனாக வரவேண்டிய அவசியம் தான் என்ன? முதலாவது கடவுள் மனிதவடிவில் வந்துதான் இவ்வுலக மாந்தருக்கு வழிகாட்ட வேண்டும் என்பது கிடையாது. கடவுள் கடவுளாக இருந்து கொண்டே தனது பனிகளைச் செய்வதுதான் கடவுளுக்குறிய பண்பாகும். உதாரணமாக, ஒரு நாட்டு ஜனாதிபதி தனது சட்டங்களை அமுல்படுத்த சாதாரன தொழிலாளியாக மாறித்தான் தொழிலாளிகள் சட்டங்களைக் கூற வேண்டும் என நினைப்பது தவறாகும்! அவ்வாறு யாராவது நினைத்தால் பைத்தியகாரத்தனம் என்போன். கடவுள் விடயத்தில் மட்டும் ஏன் இந்த நீதமான பார்வை இல்லாமற் போனது?! கவணத்திற் கொள்க!
அடுத்தது கடவுள் மனிதனாக இவ்வுலகிற்கு வந்தால் கடவுளுக்கு இருக்கும் எத்தனையோ பிரத்தியேகத் தன்மைகளை இழக்க வேண்டியேற்படும்.
இது போன்ற இன்னோரன்ன தத்துவங்களை உள்ளடக்கியதாக இந்த வசம் இடம் பெற்றுள்ளது.

04. "மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை".
இந்த வசனமானது ஒன்றே இறைவனது தனித்தன்மையை விளக்கப் போதுமானது. இறைவனுக் ஒப்பாக எதுவுமில்லை என்று அல்-குர்ஆன் மட்டுமல்ல எல்லா மத நூல்களும் கூறிக் கொண்டிருக்கும் போதே எத்தனையோ கடவுளர்களை உண்டாக்கியவன் மனிதன். இறைவனுக்கு யாராவது அல்லது எதாவதொன்று ஒப்பாக இருக்குமானால் தன்னிகரற்ற இறைவன் என்று சொல்ல முடியாது போய்விடும்.
இவ்வையகத்தில் இறைவனைக் கண்டவன் எவருமில்லை. இப்படியிருக்க யாரும் காணாத, காணமுடியாதவனுக்கு யாரை ஒப்பாக்கி சிலைகளை வடித்தார்கள்? புரியாத புதிர்!!

எனவே சுருக்கமாகக் கூறினால், இந்த நான்கு பண்புகளும் இறைவனின் இலக்கணங்களாகும். உண்மையான இறைவனைத் தேடுபவர்களுக்கு ஒரு(touch stone) உராய் கல்லாக எடுத்துக் கொள்ளலாம்.

படைத்தவனை விட்டுவிட்டு நாமேன் படைப்பினங்களை வணங்க வேண்டும். இதோ நீங்கள் தேடும் சத்தியப் பாதையில் ஓர் நிகரற்ற தோழனாக இந்த நான்கு வசனங்களும் இருக்கட்டும்..

Wednesday, March 19, 2008

மாற்றுக் கருத்துக்கிடமில்லா மறுமை வாழ்க்கை

வல்லோனின் திரு நாமம் போற்றி

மொழியியலில் எல்லாச் சொற்களுக்கும் எதிர் சொற்கள் இருக்கின்றன. இரவு-பகல், காலை-மாலை, இன்று-நாளை... இது போன்று 'இம்மை' எனும் சொல்லுக்கு எதிர்ப்பதம் 'மறுமை' என்பதாகும்.

இஸ்லாம் கூறும் 'மறுமை வாழ்க்கை' பற்றி உலக அரங்கில் காலம் நெடுகிலும் வாதப்பிரதி வாதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சத்தியமும் அசத்தியமும் மோதிக் கொள்ளும் பொழுது சத்தியத்தைத் தேடிக் கொண்டிருக்கும் சத்தியவாதிகளுக்கு பாலில் சக்கரை விழுந்ததைப் போன்றிருக்கும். ஏனென்றால் சத்தியம் பகுத்தறிவோடு ஒத்துப் போகக் கூடியது. அது எப்பொழுதும் ஆதாரங்களோடு அணிவகுத்து நிற்கும். தீமைப் புயலுக்கு முன்னும் நிலையாக நிற்கும் அதன் வலிமை உண்மையை உலகின் கண்களுக்கு உணர்த்த வல்லது.
தீமையை தீமை என்று தெறிந்து கொண்டும் அநேகர் அதைச் செய்வது போன்று அசத்தியத்தையும் ஏந்திப் பிடிக்கத்தான் செய்கின்றனர். அதேபோல் நன்மையான விடயங்கள் அநேகமிருக்க அவற்றை கண்டு கொள்ளாமல் இருப்பது போல், உண்மையை உணர்ந்திருந்தும் அவற்றை ஊதாசீனப்படுத்தும் தன்மையையும் காணமுடிகின்றது.

உண்மைதான் எப்போதும் ஜெயிக்கவல்லது. சத்தியம் நிச்சயம் தார்மீகத்தில் தலைத்து நிற்கும். இருந்தும் அந்த சத்தியத்தை ஏற்று வாழ்வோர் மிக மிகக் குறைந்தவர்களே! காரணம்;, எவருக்கு அல்லாஹ் நேர்வழியைக் காட்ட நாடுகிறானோ அவர்களுக்கு மட்டுமே நேர்வழியைப் பின்பற்றும் பாக்கியத்தையும் கொடுக்கின்றான்.

மறுமை உண்டா? என்ற ஐயத்திற்கு இரு கோணங்களில் பதில் காண்போம்.01. மறுமை நம்பிக்கையும் - பகுத்தறிவும்.02. மறுமை பற்றி இஸ்லாத்தின் மூலாதாரங்கள்.
இந்த நவீன காலத்தில் பகுத்தறிவின் செயற்பாடு அளப்பறியது. மனித நுகர்வுச் சந்தையில் பகுத்தறிவுதான் உரைகல்! முனிதனின் மட்டுப்படுத்தப்பட்ட பகுத்தறிவுக்குப் படாதவைகள் ஏறாளம். பெரும்பாலான விடயங்கள் பகுத்தறிவுக்குப் படவில்லை என்றுதான் ஓரங்கட்டப்படுகின்றன. இப்படி முஸ்லிமல்லாத சகோதரர்கள் ஓரங்கட்டிய ஒரு விடயம்தான் இஸ்லாம் கூறும் 'மறுமை' நம்பிக்கையாகும்.

மறுமை வாழ்க்கையை நம்புவது பகுத்தறிவுக்கு உற்பட்டதா? அல்லது மறுபிறவிக் கோட்பாட்டை ஏற்பது பகுத்தறிவுக்கு ஏற்றதா? விடை காணப்பட வேண்டிய அம்சங்கள். மறுபிறவிக் கோட்பாடு உண்மையில் பகுத்தறிவோடு எந்தளவுக்கு முரண்படுகின்றது என்பதனை இறுதியில் விளக்கியுள்ளோம்.

இறைவனின் படைப்புகளில் மனிதனுக்கு மட்டும்தான் சிந்தித்து செயலாற்றும் திறன் வழங்கப்பட்டுள்ளது. உங்கள் சிந்தனையைத் தூண்டும் சில கேள்விகளை உங்கள் மன்றத்தில் வைக்கிறோம் அவற்றிற்கு விடை காணுங்கள் இஸ்லாம் கூறும் மறுமை வாழ்க்கையின் உண்மை நிலையை அது உங்களுக்கு உணர்த்தும்.
1. 'இம்மை' எனும் சொல்லுக்கு எதிர்ப்பதம் 'மறுமை' என்றால் அதன் உண்மையான அர்த்தம் தான் என்ன?
2. மனிதன் வாழ நினைக்கிறான் ஆனால் வாழ்க்கையின் வசந்தங்கள் கைகூடு முன்னே அவன் வாழ்க்கை அஸ்தமமாகி விடுகின்றது. அழிவிலா வசந்தங்கள் இவ்வுலகில் கைகூடாத போது அது எங்குதான் சாத்தியம்?
3. நூறு சதவிகிதம் என்று எழுதிப் பார்த்திருக்கிறோம். காகிதங்களில் கண்டிருக்கிறோம். ஆனால் நூறு சதவிகிதம் என்பது அதிகமான விடயங்களில் ஏட்டுச் சுரக்காய்தான். இவ்வுலகில் சாத்தியப்படாத போது அது எவ்வுலகில் கிடைக்கும்?
4. மனிதனது தலை நறைக்கலாம். ஆனால் அவனது எண்ணங்களும், ஆசைகளும் நறைப்பது கிடையாது. அதனால்தான் வயது ஏற ஏற அநேகர் வாழ்க்கையின் வசந்தங்களையெல்லாம் கண்டுவிடத் துடிப்பது போன்று இன்னும் பல வருடங்கள் மரணமற்று வாழ விரும்புகின்றனர். ஆனால் மனித இயல்பூக்கமும், இறைவனின் நியதியும் அவற்றிற்கு இடம் கொடுப்பதில்லை. அப்படியாயின் நறைக்காத இளமையும், மரணமற்ற வாழ்க்கையும் எங்குதான் சாத்தியப்படும்?
5. இவ்வுலகில் அனைத்திற்கும் ஆரம்பம் இருப்பது போல் முடிவும் இருக்கின்றது. அப்படியானால் முடிவே அற்ற ஒன்றை எங்குதான் காண்பது?
6. நல்லவர்கள் பலர் துன்பத்தில் துவழுவது போல் கெட்டவர்கள் பலர் இன்பத்தில் மிதக்கின்றனர். இப்படியே அவர்களது வாழ்க்கையும் அஸ்தமித்து விடுகிறது. உலக வாழ்க்கையில் பலரால் உணரப்படாத இந்த விந்தைக்கு இவ்வுலகில் அர்த்தம் காணப்படாத போது எந்த உலகில்தான் விடை காணப்படும்?
7. சிறையில் வாடும் அனைவரும் குற்றவாளிகளும் அல்லர். சிறைக்கு வெளியே வாழும் அனைவரும் சுத்தவாளிகளும் அல்லர். இவ்வுலகில் இவர்களது நிஜம் உணரப்படாத போது எவ்வுலகில் அவர்களது சுயரூபம் வெளிக்காட்டப்படும்?
8. இந்த சடவாத உலக நீதிமன்றங்கள் எல்லாம் நீதி தேவதையின் இரு கண்களையும் கறுப்புத் துணியால் கட்டிவிட்டுத்தான் (போலி) நீதி வழங்குகின்றன! இப்படியே இவ்வுலகம் முடிவடைந்து விட்டால் அநீதியிழைக்கப்பட்டவர்களுக்கு எங்குதான் நீதி கிடைக்கும்?
9. சில குற்றங்களுக்கு எவ்வளவுதான் முயன்றாலும் முழுமையான தண்டனைகள் வழங்க முடியாது. அது இவ்வுலகில் சாத்தியமும் இல்லை. உதாரணமாக, ஒரு கொலை செய்தவனுக்கும், நூறு கொலை செய்தவனுக்கும் உயர்ந்த பட்ச தண்டனையாக தூக்குத் தண்டனைதான் வழங்க முடியும். அல்லது ஆயுல் தண்டனை கொடுக்கலாம். உண்மையில் இது ரொம்ப ரொம்ப அநியாயமாகும். இவ்விடயத்தில் இவ்வுலகில் சரியான நீதி செலுத்த முடியாத பட்சத்தில் அது எங்குதான் சாத்தியம்?
10. பிறப்பது வாழ்வதற்கே என்று சடவாத உலகம் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. அதேநேரம் பல குழந்தைகள் அம்மா என்று சொல்லப் பழகு முன்னரே இவ்வாழ்க்கைக்கு பிரியாவிடை கொடுத்து விடுகின்றது. இவர்களுக்கும் இயற்கைத் தத்துவத்தின் நீதி கிடைப்பதெங்கே?
11. உலகம் அழிவை நோக்கி புறப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று பொதுவாக மக்களும், உலகம் அழியும் தருணம் வெகு தொலைவில் இல்லை என்று விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் அண்மைக்காலமாக இஸ்லாத்தின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த ஆரம்பித்து விட்டன. உலகம் அழிக்கப்பட்டு விட்டால்....???

கேள்விகளே மனிதனின் ஐயங்களை நிவர்த்தி செய்ய வல்லது. அதனால்தான் அல்-குர்ஆன் கேள்வி கேட்டு உங்கள் ஐயங்களை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள் என பிரகடனப்படுத்துகின்றது. 'நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டுத் தெறிந்து கொள்ளுங்கள்'.

எனவே நாம் மேலே உதாரணத்திற்காக குறிப்பிட்டுள்ள கேள்விகள் போன்ற சிந்தனையைத் தூண்டக் கூடிய அம்சங்கள் நமக்கு மறுமை வாழ்க்கை நிச்சயம் உண்டு என்பதை அறிவுபூர்வமாக உணர்த்துகிறது.

சத்தியத்தை உணர்ந்து கொள்ள, சத்தியத்தை நிலைநாட்ட, சமாதானத்தை இவ்வுலகில் விதைக்க நம்மைப்படைத்த இறைவன் நமக்கு பகுத்தறிவைத் தந்தான். ஆனால் பலர் தமக்குக் கொடுக்கப்பட்ட அந்த பகுத்தறிவினாலேயே தாமும் கெட்டு பிறiரையும் கெடுத்துக் கொண்டிருக்கின்றனர். வெருமனே முன்பின் யோசிக்காமல், ஆதார பூர்வமாக எந்தவொரு விடயத்தையும் அனுகாமல், நான் என்ற அகங்காரத்தால் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள தனது பகுத்தறிவை வைத்துக் கொண்டு அனைத்திற்கும் தீர்வுகாண, முடிவெடுக்க நினைப்பது தவறு. ஏனென்றால் அனேகம் பேர் தமது பகுத்தறிவை மட்டும் நீதிபதியாக்கிக் கொண்டு சட்டம் வகுத்துக் கொள்கின்ற போது நினைத்ததற்குப் புறம்பாக பல விடயங்கள் நடந்து போகின்றன. அவர்கள் எந்த பகுத்தறிவை உதவிக்கழைக்கிறார்களோ அந்த பகுத்தறிவே அவர்களை படுகுழியில் தள்ளி விடுவதை நாளாந்தம் நாம் கண்டுகொண்டிருக்கின்றோம்.

மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கும் அனைத்துத் தன்மைகளும் மட்டுப்படுத்தப்பட்டவைகள்தாம். பார்வைப் புலன், கேள்வி, தொடுகை, நுகர்ச்சி போன்ற எதுவாக இருப்பினும் ஒரு எல்லை வரைதான் தனது பனியைச் செய்யும் அதற்கு மேல் வேறு துனைகளுடன்தான் தன் பனியைத் தொடரும். இதுதான் மனிதனின் நிலை. இதேபோன்றதுதான் நம் பகுத்தறிவும்.

பகுத்தறிவு தவிர்ந்த ஏனைய புலன்களின் பலவீனத் தன்மையை இலகுவில் புறிந்துகொள்ளும் மனிதன் தனது பகுத்தறிவின் யதார்த்த நிலையையும், அதன் பலவீனத்தன்மையையும் இலகுவில் புறிந்து கொள்வதில்லை. இந்த நிலையை நன்கறிந்த அல்லாஹ் காலத்தின் தேவைக்கேற்ப தனது தூதர்களை அனுப்பி வழிகாட்டியுள்ளான்.

இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாக்குகளும், அல்-குர்ஆனும் பல இடங்களில் இறுதி நாள் பற்றியும், மறுமை நாள் பற்றியும் வெள;வேறு அடைமொழிகளுடன் குறிப்பிடுகின்றன. அதேபோன்று அந்த நாள், அந்த நாளைத் தொடர்ந்து வரும் நிகழ்வுகள் அதேபோல் அதன் பின் இருக்கும் மறுமை நாள் பற்றியெல்லாம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்து கொண்டிருக்கின்றன. நிச்சயம் மனிதர்களான அனைவரும் அந்த நாளைப் பயந்து இறைவன் கூறிய பிரகாரம் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவது அவசியமான ஒன்றாகும்.

மறுமை பற்றி அல்-குர்ஆன்:-
1. (17:49-51), (29:20), (30:27), (31:28), (36:79) ஆகிய வசனங்கள் மனிதனை அல்லாஹ் அழித்து விட்டு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவான் என்பதனை ஐயமற விளக்குகின்றன. ஒன்றுமே இல்லாமல் இருந்த மனிதனை தன் வல்லமையினால் உண்டாக்கியவன், நம்மை அழித்துவிட்டு மீண்டும் எம்மை உயிப்பிப்பது ஒன்றும் அசாத்தியமான காரியம் கிடையாது.
மனிதனுக்குக் கூட ஒன்றை உருவாக்கி அதனை இல்லாமல் செய்து விட்டு அதே போன்ற ஒன்றை மீண்டும் உருவாக்குவது சிறமமான ஒன்றும் கிடையாது. ஒரு பொருளை முதலில் உருவாக்குவதுதான் கடினம். ஆனால் அல்லாஹ் ஆகு என்றால் ஆகிவிடும் சக்தி படைத்தவன். அப்படியான சக்தியுள்ளவன்தான் இறைவனாக இருக்க சாத்தியமானவன். மனிதனுக்கே சர்வசாதாரனமான இப்படியான விடயங்களில் சக்தியுள்ளபோது சர்வசக்தனான வல்லநாயன் விடயத்தில் ஐயம் கொள்வது தகுமா?!

2. (21:1), (21:97), (33:63), (42:17), (42:18), (54:1) போன்ற வசனங்கள் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்று கூறுவதன் மூலம் நாம் எந்நேரமும் அந்த நாளுக்காக தயாராக இருந்து கொள்ள வேண்டும் என்பதனை உணர்த்துகின்றது. அந்த நாள் நாம் கண்மூடித் திறப்பதற்குள் திடீரென ஏற்படும் என்பதையும் அல்-குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது. உதாரணமாக: (6:31), (7:187) போன்ற வசங்கள் அல்-குர்ஆனில் பல இடங்களில் காணப்படுகின்றன. (அல்-குர்ஆனைப் படிக்கவும்).

3. மறுமை நாள் மிகவும் கடுமையான நாள் என்பதனையும் எல்லோரும் அல்லாஹ்வின் முன் நிறுத்தப்படுவோம் என்பதனையும் பல வடிவங்களில் அல்-குர்ஆன் விவரிக்கின்றது.
அ. யாவரும் அல்லாஹ்வின் முன் நிறுத்தப்படும் நாள். (2:148), (2:281), (3:9)...
ஆ. தாம் விதைத்ததை அறுவடை செய்யும் நாள். (3:30), (3:115), (4:40)...
இ. தம் செல்வக் குழந்தைகள் கூட எமக்கு உதவ முடியாத நாள். (3:116), (26:88)...
ஈ. பாலூட்டும் தாய் கூட தம் குழந்தையை மறக்கும் நாள். (22:2)...
உ. எவரும் எவருக்கும் எள்ளலவும் உதவ முடியாத நாள். (2:48), (2:123), (2:254), (26:88)...

இறுதி நாள் பற்றியும் இறுதி நாளின் பின் ஏற்படும் மறுமை நிகழ்வுகள் பற்றியும் அல்-குர்ஆன் ஏறாழமான இடங்களில் பலவகையான அடைமொழிகளை உபயோகித்து எம் சிந்தனையைத் தூண்டிக் கொண்டிருக்கின்றது. அல்-குர்ஆன் கூறும் விடயங்கள் வெரும் புரான இதிகாசங்களைப் போன்றதன்று. மாறாக அனைத்தையும் படைத்தவனின் ஊர்ஜித வாக்குகளாகும். எனவே எந்தவொரு விடயத்தையும் தட்டிக்கழிக்காது நம்பி செயல்படுவோமாக.

மறுமை பற்றி அண்ணலாரின் பொன் மொழிகள்:

1. 'இறைநம்பிக்கை கொண்டு அதில் அக்கிரமத்தைக் கலக்காதவர்களுக்கே (இம்மையிலும் மறுமையிலும்) அச்சமற்ற நிலை உண்டு. மேலும் அவர்களே நேர்வழி பெற்றவர்களுமாவார்' (திருக்குர்ஆன் 06:82) என்ற இறைவசனம் அருளப்பட்டபோது நபித்தோழர்கள் 'நம்மில் யார் அக்கிரமம் செய்யாமலிருக்க முடியும்?' எனக் கேட்டனர். அப்போதுஇ 'நிச்சயமாக (அல்லாஹ்வுக்கு எவரையும்) இணையாக்குவதுதான் மிகப் பெரும் அக்கிரமம்' (திருக்குர்ஆன் 31:13) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்' என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.(புகாரி)

2. நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்கிடையில் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து 'ஈமான் என்றால் என்ன?' என்று கேட்டதற்கு 'ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவது. மேலும்இ மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது. மேலும்இ மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது' எனக் கூறினார்கள்... (புகாரி)

3. 'எனக்குப் பின்னர் வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத நபிமொழி ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன். 'கல்வி குறைந்து போய் விடுவதும் அறியாமை வெளிப்படுவதும் வெளிப்படையாய் விபச்சாரம் நடப்பதும் ஐம்பது பெண்களுக்கு அவர்களை நிர்வம்க்கும் ஒரே ஆண் என்ற நிலமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுதியாவதும் ஆண்கள் குறைந்து விடுவதும் மறுமை நாளின் சில அடையாளங்களாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) கூறக் கேட்டிருக்கிறேன்' என அனஸ்(ரலி) அறிவித்தார். (புகாரி)

4. 'ஓர் இரவில் தூக்கத்திலிருந்து எழுந்த நபி(ஸல்) அவர்கள் (அச்சரியமாக) 'அல்லாஹ் தூய்மையானவன்! இந்த இரவில்தான் எத்தனை சோதனைகள் இறக்கப்பட்டிருக்கின்றன. திறந்து விடப்பட்ட அருட்பேறுகள்தான் என்னென்ன?' என்று கூறிவிட்டுஇ 'தம் அறைகளில் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்களை (தம் மனைவிமார்களை இறை வணக்கத்திற்காக தூக்கத்iவிட்டும்) எழுப்புங்கள். ஏனெனில் இவ்வுலகில் ஆடை அணிந்தவர்களாகயிருக்கும் எத்தனையோ பெண்கள் மறுமையில் நிர்வாணமாக இருப்பார்கள்' என்று கூறினார்கள்' என உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

இவ்வாறு ஏறாளமான நபி மொழிகள் மறுமையில் நடை பெறக் கூடிய செய்திகளை நமக்கு கூறுவதிலிருந்து நிச்சயம் மறுமை நாள் என்ற ஒன்று இருக்கிறது என்பதனைத் தெளிவு படுத்துகின்றது.

மறுமை பற்றி நபி வாக்கிலிருந்து தெறிந்து கொள்ள ஆதாரபூர்வமான ஆயிரக்கணக்கான செய்திகள் இருக்கின்றன. ஆர்வத்தோடு தேடுங்கள்.... படியுங்கள்.... அல்லாஹ் நம் அனைவரது மறுமை வாழ்க்கையையும் சிறப்பாக ஆக்கி வைப்பானாக.

Friday, March 14, 2008

சுகமான சுமைகள்!


கடமை மறந்த மானிடா!
உன் - மடமையை ஒரு முறை அசைபோட்டுப் பார்
அடித்தளத்தை இடித்துவிட்டா
அடுக்கு மாடி கட்டப்பார்க்கிறாய்?!

சரிந்து கொண்டிருக்கிறது உன் எதிர்காலம்!
அதை சரிக்கட்டினால் உனக்குப் பொற்காலம்
வாழ்வதும் வீழ்வதும் உன் முடிவிலே..
முடிவெடு, இன்றே இனியதோர் விடைகொடு!

உன் வாழ்க்கையைச் செதுக்கிச் செப்பனிடு
ஊன், வினையற்று உருமாறு.
ஊருலகம் உனக்கு ஊன்று கோலன்று..
உண்மையே உனை உறுதியாக்கும்!

டீவியும், டிஷ் வாழ்க்கையும்
நீ உறவாடும் புதிய உறவுகள்!
உன் நிஜ உறவுகளை அவை சிதைக்காமலிருக்கட்டும்!

சிந்தித்து செயலாற்றும் திறன் உன் முடிவிலே!
நேற்றைய பொழுதுகள் வீணாக..
நாளைய பொழுதுகள் தேனாக..
இரண்டுக்கும் நடுவிலே போராட்டத்தைத் துவங்கு!

என் உள்ளம் பேசுகிறது:

விடியுமா என் பொழுதுகள் ?!
விடை தேடி அலைகிறேன்
சுகமானதோர் போராட்டம் துவங்குகிறது!

நான் திருந்த வேண்டும்..
மரணிக்குமுன் மனிதனாக வேண்டாமா?!
கடந்த காலத்தை வீணாக்கிவிட்டு
நறைத்த உணர்வுகள் என் வாழ்க்கையை ஏப்பம் விடுகின்றன!

நாளைய விடியலைத் தேடி ஒரு ஓயாப் பயணம்
கடந்துவிட்ட இருள்களுக்கு வெள்ளையடிக்கின்றேன்
நாளையாவது பளிச்சென்று விடியட்டும்.

சத்தியத்தைத் தேடி அலைகிறேன்
கடமையை உணர்த்துகிறது என் உள்ளம்.
தேடுகிறேன் சத்தியத்தை! தேளிவோடு ஏற்றுக்கொள்ள!

எதை ஏற்றுக் கொள்வது?
ஏக தெய்வமா? இல்லை யாவும் தெய்வமா?
அல்லது தெய்வமே இல்லையா?
எனக்குக் குழப்பமாயிருந்தது நேற்று!

என் பகுத்தறிவு எனக்கு விருந்தானது!
எதிலும் நடு நிலமை கொள்!
என்ற சான்றோர் வாக்கு எனை அழைத்தது.

சிந்தித்தேன்.. யதார்த்தத்தை சந்தித்தேன்!
இறைவனொன்றில்லை என்பதும் வேண்டாம்,
எல்லாமிறைவனென்பதும் வேண்டாம்.

நீதியின் தராசில் ஏக தெய்வத்திற்கே கணம் கூடிற்று!
ஏற்றுக் கொண்டேன் சத்தியமதை!
சத்தியத்தோடு என் வாழ்க்கை சங்கமமானது.

சாதிக்க வேண்டும் எனும் உணர்வு எனை உந்தியது
இப்போது..
இம்மையின் இன்னல்கள் துரும்பாக
சத்தியத்தில் என் பயணம் கரும்பாக
இதோ!
நிம்மதியின் சுகம் எனை அழுத்த
மறுமைக்காய் செதுக்குகிறேன் நாளையை!

சுகமான சுமைகளோடு
சுவீகரித்துக் கொண்டேன் சத்தியத்தை.
இப்போதுதான் சுவாசம் கூட இலகுவாக இருக்கிறது!

மனிதப்படைப்பின் நோக்கம்


மனிதனால் உருவாக்கப்படும் அனைத்து சாதனங்களுக்கும் அதன் நோக்கம் விலாவாரியாக பேசப்படுகின்றது. இன்றைய விஞ்ஞான உலகில் தினமும் ஒவ்வொரு புதிய பொருள் கண்டுபிடிக்கப்படுவதையும் அதன் நோக்கம் பற்றி பேசப்படுவதையும் தினசரி ஊடகங்கள் நம் சிந்தனைக்கு கொண்டு வரத்தான் செய்கின்றன. ஆனால் மனிதன் படைக்கப்பட்ட நோக்கம் பற்றி மட்டும் ஏன் தான் இந்த மனித இனம் சிந்திக்காமல் இருக்கின்றதோ நமக்குத் தெரியவில்லை!

இன்னும் ஒரு விடயம் என்னவென்றால், ஏதாவது ஒரு பொருள் உருவாக்கப்பட்டு அதன் எதிர்பார்ப்பு அல்லது நோக்கம் நிறைவேறாத போது அது ஓரங்கட்டப்படுவதையும் நாம் கண்டு கொண்டுதானிருக்கிறோம். எனவே நிச்சயமாக மனிதப்படைப்பிற்க்கு ஒரு உயர்ந்த நோக்கம் இருக்கத்தான் வேண்டும் என்பதனை உலக நடப்புக்களே நமக்கு உணர்த்துகின்றன.

உலக மதங்கள் மனிதப் படைப்பின் நோக்கம் பற்றி பல்வேறுபட்ட காரணங்களைக் கூறுகின்றன. உதாரணமாக சில மதங்களின் கோட்பாடுகள், கடவுள் விளையாடுவதற்காகத் தான் மனிதனைப் படைத்ததாகக் கூறுகின்றது. இதைத்தான் 'கடவுள் இரண்டு பொம்மையைச் செய்தான் தான் விளையாட; அவையிரண்டும் சேர்ந்தொரு பொம்மையைச் செய்தன தான் விளையாட' என்று ஒரு தமிழ்க் கவிஞர் பாடியிருக்கிறார். இவ்வாறு தான் ஒவ்வொரு மதமும், சித்தாந்தமும் பல்வேறுபட்ட கருத்துக்களைக் கூறிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இஸ்லாம் மட்டுமே மனிதன் ஏன் படைக்கப்பட்டான்? என்ற கேள்விக்கு பின் வரும் ஓர் உயர்ந்த நோக்கத்தைக் குறிப்பிடுகின்றது.

قال تعالى : وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56)
என மனிதனைப் படைத்த அல்லாஹ், மனிதன் படைக்கப்பட்ட நோக்கத்தை இவ்வாறு கூறுகிறான்.
ஒவ்வொரு மனிதனது சிந்தனையும், எண்ண ஓட்டங்களும் வேறு படுவதாலும், அடிக்கடி அவனது சிந்தனை மாறுபடுவதாலும், கால ஓட்டத்தினால் உலகில் பற்பல மாற்றங்கள் உருவாதலினாலும் மனிதனுக்கு ஒரு நடுநிலையான, தொடர்ச்சியான வழிகாட்டுதல் எப்போதும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதனால் மனிதனைப் படைத்த அல்லாஹ் அந்த மனிதன் வழி தவறாமல் இருப்பதற்காக எல்லாக் காலங்களிலும் தனது தூதர்களை அச்சமூகங்களில் இருந்து தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தனது இறைச் செய்திகளைக் கொடுத்து அனுப்பி நேர்வழி காட்டி இருக்கிறான்.

இந்த சங்கிலித் தொடரான வழிகாட்டுதல் இல்லாமல் போகின்ற போதுதான் மனிதன் மிருகத்தைவிட மோசமான நிலைக்குப் போவதையும், மிருகத்தை விட கீழ்த்தரமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதையும் பார்க்கின்றோம். இதனைக் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் கலாச்சாரம், நவீனம், புதுமை என்ற பெயர்களில் சில கூட்டத்தினரையும், அதே போன்று பிறந்தது போலவே வாழ்வோம் என்ற கொள்கையில் நிர்வாண கோலமாக வாழ்ந்து கொண்டு எயிட்ஸ் நோயைத் தோற்றுவிக்கும் HIV கிருமிகளை உலகுக்கு ஏற்றுமதி செய்து கொண்டு வாழ்வதையும் பார்க்கின்றோம். சகிக்க முடியாத இந்த வாழ்க்கை முறை சமூகத்தை சாக்கடைக்குக் கொண்டு செல்கின்றன. இது ஒரு எடுத்துக் காட்டு ஆகும்.

மனிதன் உலக வாழ்க்கையிலும் உயர்ந்த நிலையில் வாழ்ந்து மறுமையிலும் உயர்ந்த வாழ்க்கையாகிய சுவனச் சோலையைச் சுவீகரித்துக் கொண்டவனாக மாற வேண்டும் என்பதுதான் அல்லாஹ்வின் நோக்கமாகும்.

மனிதன் ஏன் படைக்கப்பட்டான்? என்ற கேள்வியை மக்கள் மன்றத்தில் வைத்தோமானால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பல்வேறுபட்ட கோணங்களில் பதில்களை முன் வைப்பார்கள்.

அதேபோன்று மனிதனுக்கு மட்டும் ஆறறிவு கொடுக்கப்பட்ட நோக்கம் என்ன? என்று கேட்டால் அதற்கும் பல்வேறுபட்ட காரணங்களையும் நோக்கங்களையும் மனிதன் கூறுவான். உதாரணமாக, இந்த உலகில் மிகவும் அழகாக வீடு, வாசல்களை உண்டாக்கி வாழ அல்லது வாழ்க்கை முடியும் வரைக்கும் நல்ல நல்ல உணவுகளைக் கண்டு பிடித்து உண்டு உயிர் வாழ அல்லது பற்பல சாதனைகளை நிகழ்த்த என்று அடுக்கிக் கொண்டே போவார்கள். உண்மையில் மனிதன் நிதானமாக, நடுநிலைத் தன்மையோடு சிந்தித்தால், இது போன்ற காரணங்கள் அனைத்தும் முழுமையற்ற, மேலோட்டமான காரணங்களாகும் என்பதனை உணர்ந்து கொள்வான். ஏனெனில் மேற்கூறப்பட்ட காரணங்களை உள்ளடக்கிய அனைத்துப் பணிகளையும் மனிதனல்லாத மிருகங்கள், பட்சிகள், ஊர்வன போன்ற அனைத்தும் தினமும் செய்து கொண்டுதான் இருக்கின்றன. இது போக சில படைப்பினங்கள் மனிதனை விடவும் மிக நேர்த்தியாக, பிறர் உதவியில்லாமல் தமது காரியங்களையும் முறையாக நிவர்த்தி செய்து கொள்வதையும் நாம் பார்க்கத்தான் செய்கின்றோம்.

உதாரணமாக, பறவைகளில் தூக்கனாங் குருவியைப் போல் நம்மால் மிகமிக நுற்பமாக கூடு கட்டவே முடியாது! அதன் கூடு மெல்லிய நாறுகளினால் பின்னப்பட்டது, காற்றில் ஆடியவாறே தொங்கிக் கொண்டிருக்கும். மழையில் கூட நனையாது! எத்தனை ஆரோக்கியமான அறைகள்! முட்டையிட்டு அடைகாப்பதற்கு ஏற்ற முறையில் ஒரு தனியறை, முன் வாயிலறை, ஆண் குருவிக்கு வேறு அறை! இது மட்டுமா இரவு நேரங்களில் சூடற்ற குளிர்ந்த மின்விளக்குகள்! மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து வந்து கூட்டினுல் ஒட்டி வைத்து விடும், அது இறந்து விட்டால் வேறொன்றைப் பிடித்து வந்து ஒட்டி வைத்து விட்டு இறந்து போன பூச்சியை அகற்றி விடும். மனிதன் கூட தற்போது தான் மின் விளக்குகளைக் கண்டுபிடித்தான்.
இவ்வாறு அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ்கின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன, பிறர் தேவையற்று தத்தமது தேவைகளை நிறை வேற்றுவனவாகத்தான் இருக்கின்றன. மனிதன் மட்டும் தான் மிகவும் பலவீனமுள்ளவனாகவும், பிறர் உதவியில் தங்கியிருப்பவனாகவும் காலத்தைக் கடத்துகின்றான். எனவே, நாம் கட்டாயம் சரியாகச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். உதாரணமாக, ஒரு சாதாரன பேனா வாங்கப் போனாலும் கூட நன்றாக நமது மூளையை உபயோகித்துத்தான் அந்தப் பேனாவை வாங்குகின்றோம். இந்தப் பேனா சிறந்ததா அல்லது மற்றதுவா?, இந்த நாட்டு உற்பத்தி சிறந்ததா அல்லது அந்நாட்டு உற்பத்தி சிறந்ததா?, கருப்பு நல்லதா நீலமா? என்று எத்தனை எத்தனை கேள்விகளைக் கேட்டு வியாபாரியைக் குடைகிறோம். அத்தோடு எழுதிப் பார்ப்பதற்கும் தவறுவதில்லை. சில நேரங்களில் அந்தப் பேனா எழுதாமல் போனால் கடைக்காரனை திட்டி விடுகிறோம்.

ஒரு பேனாவுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் கூட, நமக்கும் ஏக தெய்வத்திற்கும் இடையே இருக்கும் நிஜமான தொடர்பு பற்றித் தெறிந்து கொள்வதற்குக் கொடுப்பதில்லையே என்று நினைக்கும் போதுதான் வேதனையாக இருக்கின்றது.

நாம் சாதாரன ஒரு பொருள் வாங்குவதில் காட்டும் அக்கரையை விட பன்மடங்கு அக்கரையை நம் விடயத்திலும், நம் மதம் குறித்த விடயத்திலும், நாம் எதற்காப் படைக்கப் பட்டோம் என்ற கேள்விக்கு சரியான விடை காண்பதிலும் நாம் ஒவ்வொருவரும் ஆர்வம் காட்ட வேண்டும். இது ஒவ்வொரு புத்தி சுவாதீனமுள்ள ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும்.

நாம் மேலே குறிப்பிட்டுக் காட்டியுள்ள 'ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை' (51:56) என்ற அல்-குர்ஆன் வசனமானது மிகவும் ஆழமான கருத்தை உள்ளடக்கியுள்ளது.

மேலோட்டமாக இவ்வசனத்தை வாசிக்கும் ஒருவர், தொழுகை, நோம்பு, ஸகாத்து, ஹஜ் போன்ற இன்னும் இதர வணக்கங்களிலேயே நம் காலத்தைக் கடத்தினால் ஏனைய விடயங்களில் நாம் ஈடுபடுவதில்லையா? உழைக்க வேண்டாமா? உண்ண வேண்டாமா? உறங்க வேண்டாமா? குடும்பம் நடத்த முடியாதா? போன்ற கேள்விகளைக் கேற்கலாம். அப்படியானால் இவ்வசனத்தின் கருத்துத்தான் என்ன?

அதாவது வணக்கம் என்பதனை சுருங்கக் கூறின், அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களை கவனத்திற் கொண்டு நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதாகும். அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழி காட்டுதல்களுக்கமைய நம் ஐம்பெரும் கடமைகள் முதல் தினசரி வாழ்க்கை அம்சங்களும் அமையுமாக இருந்தால் அவையனைத்தும் வணக்கமாகவே கருதப்படும். எனவே ஒரு உண்மையான இறை அடியான் உறங்குவதும் வணக்கமே. ஏனெனில் அவன் தூங்கும் போதும் நபிகளாரின் நடை முறைகளைக் கவனத்தில் கொண்டு தான் உறங்குவான், அப்போது தூக்கமும் வணக்கமாக மாறி விடுகின்றன.ஆக, மனிதப்படைப்பின் முழு நோக்கம், அவன் பிறந்தது முதல் இறக்கும் வரை அனைத்து செயல்களிலும் இறை திருப்தியை மட்டும் கவனத்திற் கொண்டு, அண்ணலாரின் அடிச்சுவடுகளைப் பேணி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதேயாகும்.

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைக் பின்பற்றி வாழ்ந்து மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!
- ஆக்கம்: நிர்வாகி