Showing posts with label மூடநம்பிக்கை. Show all posts
Showing posts with label மூடநம்பிக்கை. Show all posts

Monday, July 19, 2010

மதீனாவை தரிசிப்பவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்

- எம். றிஸ்கான் முஸ்தீன் ஸலபி
1) நபியவர்களிடம் பிராத்தித்தல் அல்லது தனது கஷ்டத்தை போக்குமாறு, தனது தேவையை நிறைவு செய்து தருமாறு உதவி தேடி வேண்டுதல் வைத்தல் ஆகிய அனைத்தும் அல்லாஹ்விடம் மாத்திரம் கேட்கப்பட வேண்டியவைகளாகும்। காரணம் பிரார்த்தனை எமது மார்க்கத்தில் ஒரு வணக்கமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை நபியவர்களே பின்வருமாறு கூறினார்கள் ‘ துஆ (பிரார்த்தனை) அது ஒரு வணக்கமாகும்.’ அபூதாவூத், திர்மிதி.

எனவே வணக்கம் என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்யப்பட வேண்டியதாகும்। இது அல்லாஹ்வுக்குக் கொடுக்கக் கூடிய உரிமை. இதனை யாராவது மற்றவர்களுக்கு கொடுத்து விடுவாரேயானால் அவர் அல்லாஹ்வின் உரிமையில் கை வைத்தவர் ஆகிவிடுவார். அதே வேலை இவ்வாறு அல்லாஹ் அல்லாதவரை அழைத்து பிராத்திக்கும்போது (அது நபியாக இருந்தாலும்) அல்லாஹ்வோடு நபியை இணையாக்கி விட்டோம் என்ற அல்லாஹ் மன்னிக்காத ஷிர்க் என்ற பாவத்தை செய்தவர்களாக கணிக்கப்பட்டு விடுவோம்.

நபியவர்கள் கூட எங்களைப் போன்று சாதாரணமாக தனது தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டிருக்கின்றார்கள்। பொதுவாக கப்ரிலே அடங்கப்பட்டிருக்கின்ற யாரிடமும் எமது தேவையை முன்வைக்க முடியாது. நபியவர்கள் கப்ரிலே ‘பர்ஸஹ்’ (திரையிடப்பட்ட வாழ்கையில்) இருக்கின்றார்கள். இவ்வாழ்கை எவ்வாறு இருக்கும் என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரமே தெரியும். இந்த ‘பர்ஸஹ்’; உலக வாழ்க்கைகும் நாம் அனைவரும் எழுப்படும் மறுமை வாழ்க்கைக்கும் இடைப்பட்ட ஒரு வித்தியாசமான வாழ்க்கையாகும்.

எனவே உயிரோடு நபியவர்கள் இருக்கும் போது ஸஹாபாக்கள் நபியவர்களிடம் சென்று யா ரஸுலுல்லாஹ் எனக்காக அல்லாஹ்விடம் பிராத்தியுங்கள் என்று கேட்டதை ஆதாரமாக கொண்டு நாமும் எமது தேவையை நபியவர்களிடம் சென்று கேட்க்க முடியாது। காரணம் இப்பொழுது நபியவர்கள் இருக்கும் வாழ்க்கையை நாம் யாருமே அறியமாட்டோம். அதே வேலை பிரார்த்தனை என்ற வணக்கத்தை அல்லாஹ் அல்லாதவரிடம் செய்ய முடியாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அதே வேலை மதீனாவில் இருக்கூடிய சில இடங்களை மக்கள் தாமாகவோ அல்லது தமது உலமாக்கள் மூலமாகவோ இது பாத்திமா (ரழி)யின் கபுரு, இது அலி (ரழி) யின் கப்ர், இது இன்ன ஸஹாபியின் கப்ர் என்று நினைத்துக் கொண்டு அந்த இடங்களுக்குச் சென்று அவர்களிடம் தமது தேவைகளை கடிதங்களில் எழுதி கட்டி வைப்பதும் அல்லது துனிகளில் வைத்து கட்டி வைப்பதையும் காண்கின்றோம்।

(மொழி பெயர்ப்பாளனின் அனுபவம்: 2009ம் ஆண்டு ஹஜ்ஜின் போது ‘ஹன்தக்’ பிரதேசத்தில் ஹாஜிகளுக்கு மொழிபெயர்பாலனாக கடமையாற்றிய போது அல்லாஹ்வை மறந்து ஸஹாபாக்களிடம் தமது தேவைகளான நோய், காதல் பிளவு போன்றவற்றை முறையிட்டு எழுதியிருந்த கடிதங்களை கண்கூடாக பார்க்கக் கிடைத்தது।) எனவே இது மிகப் பெரும் ஷிர்க் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

2) நபியவர்களின் கப்ர் இருக்கும் இடத்திற்கு செல்லும் போது இரண்டு கைகளையும் நெஞ்சிலே வைத்து தொழுகையில் நிற்பது போன்று நிற்பது கூடாது। அல்லாஹ்வின் முன்னிலையில் மாத்திரம் தான் இவ்வாரு சிறுமையாக பணிவை வெளிக்காட்டி தொழுகையில் நிற்க வேண்டும். நபியவர்களுடைய தோழர்கள் நபியவர்களுடைய கப்ரை தரிசிக்க வரும் போது இவ்வாறு இரு கைகளையும் நெஞ்சின் மீது வைத்துக் கொண்டு வரவில்லை. இச்செயலின் மூலம் நன்மை கிடைக்கும் என்றால் ஸஹாபாக்கள் நிச்சயமாக செய்திருப்பர். எனவே நாமும் இதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

3) நபியவர்களது கப்ரை சூழவுள்ள சுவரை அல்லது ஜன்னல்களை தடவுதல் முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒரு செயலாகும்। இவ்வாரான ஒரு வழிகாட்டலை நபியவர்கள் எமக்கு போதிக்கவில்லை. அதே வேலை எமக்கு முன்னிருந்தவர்கள் கூட இவ்வாறு தொட்டு முகர்ந்து கொள்ளவில்லை. மாறாக இது எம்மை ஷிர்க் எனும் இணைவைத்தலுக்கு அழைத்துச் சென்று விடும். இவ்வாறு செய்யக் கூடியவர்கள் நபியவர்கள் மீதுள்ள அன்பினால் நான் இவ்வாறு செய்கின்றேன் எனலாம். ஆனால் நபியவர்கள் மீதுள்ள அன்பு ஒவ்வொரு முஸ்லிமினதும் உள்ளத்தில் இருக்க வேண்டும். தனது பிள்ளைகள், பெற்றோரை விடவும் நபியவர்களை அன்பு வைக்க வேண்டும். ஆனால் அந்த அன்பை இவ்வாறு சுவரை, ஜன்னலை தொட்டு முகர்ந்து வெளிப்படுத்த முடியாது. அன்பை ஒரு முஸ்லிம் எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்றால் நபியவர்களை முழுமையாக பின்பற்றுவதன் மூலம் தான் அல்லாஹ்வின் அன்பைக் கூட பெறமுடிகின்றது.அல்லாஹ் இதனை பின்வருமாறு கூறுகின்றான்.

(நபியே!) நீர் கூறும், ‘நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின்பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நேசிப்பான், உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான், மேலும் அல்ல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்। (ஆல இம்ரான்-31)

நபியவர்களை நல்ல முறையில் பின்பற்றுவதன் மூலமாகத்தான் அவர்களது அன்பையும் அல்லாஹ்வின் அன்பையும் பெறமுடிகின்றது என்பதை மேற்படி வசனத்தின் மூலம் விளங்கலாம்। நபியவர்களின் மீது அன்பு வைத்தலைப் பற்றி பல ஹதீஸ்கள் வந்திருக்கின்றன. ‘யார் ஒருவர் தனது தந்தை, பெற்றோர், பிள்ளைகள் மற்றும் உலக மக்கள் அனைவரையும் விடவும் என்னை நேசிக்காதவரை முஃமினாக மாட்டார்.’ புகாரி, முஸ்லிம்.இதை விட ஒருபடி மேலேரி உமர் (ரழி) அவர்களுக்கு தனது உயிரை விட என்னை நேசிக்க வேண்டும் என்று நபியவர்கள் வழிகாட்டினார்கள். புகாரி.

காரணம் நாம் இன்று முஸ்லிமாக இருக்கின்றோம் என்றால் அதற்கு நபியவர்களைக் கொண்டுதான் அந்த பாக்கியத்தை அல்லாஹ் எமக்கு வழங்கியுள்ளான்। உலகில் இருக்கக்கூடிய மார்க்கங்களில் உண்மையான மார்க்கத்தை பின்பற்றுவது மிகப் பெறும் அருட்கொடையாகும். எனவே இந்த அருட்கொடையை நபியவர்களின் மூலமாக பெற்ற நாம் அவர்கள் காட்டித்தந்த மார்க்கத்தை தூயவடிவில் பின்பற்ற வேண்டும். எமது இபாதத்துக்களை அவர் சொல்லித்தந்த அமைப்பிலே மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் நபியை நேசிப்பவராக முடியும். ஒருவரை நேசிக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு அவருக்கு மாறு செய்யும் போது அது அவர் மீது வைத்துள்ள உண்மையான நேசமாக முடியாது. அவரை ஏமாற்றுவதாகத் தான் இருக்க முடியும்.

இஸ்லாத்திலே எந்த ஒரு செயலும் நல்ல அமல் என்ற அந்தஸ்தை அடைய வேண்டும் என்றால் மேலும் அது அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றால் அதற்கு இரு நிபந்தனைகள் இருக்கின்றன।

1) செய்யக் கூடிய செயல் அல்லாஹ்வுக்காக மட்டும் என்ற தூய எண்ணம் (இஹ்லாஸ்)2) குறித்த செயல் நபியவர்கள் காட்டித்தந்த அடிப்படையில் எந்த கூட்டல் குறைத்தலும் இல்லாமல் செய்தல் (முதாபஆ)

இவை இரண்டில் ஏதாவது ஒன்றில் குறை ஏற்படும் போது குறித்த செயலை எவ்வளவு பிரயத்தனங்களுக்கு மத்தியில் செய்திருந்தாலும் அதற்கு அல்லாஹ்விடத்திலே எந்த பெருமதியும் இல்லாது போய்விடும்।

ஆல இம்ரான் அத்தியாயத்தின் 31ம் வசனமாகிய
(நபியே!) நீர் கூறும், ‘நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின்பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நேசிப்பான், உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான், மேலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்।

இவ்வசனத்தை சில அறிஞர்கள் சோதனையான வசனம் என்கிறார்கள்। இமாம் ஹஸனுல் பஸரி அவர்கள் குறிப்பிடும் போது ‘சிலர் தான் அல்லாஹ்வை விரும்புவதாக சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் அல்லாஹ் அவர்களை இவ்வசனத்தின் மூலம் சோதிக்கின்றான்.’

இமாம் இப்னு கஸீர் அவர்கள் இவ்வசனத்திற்கு விளக்கம் அளிக்கும் போது ‘நபியவர்களின் வழியை பின்பற்றாது அல்லாஹ்வை விரும்புகின்றோம் என வாதிடுவோருக்கு இந்த கண்ணியமான வசனம் தீர்ப்பளிக்கின்றது। நபியவர்கள் கொண்டு வந்த அந்த உண்மையான மார்க்கத்தை தனது எல்லா சொல், செயலும் பின்பற்றாத வரை இவ்வாதம் பொய்பிக்கப்படுகின்றது. புகாரியிலே பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸிலே நபியவர்கள் கூறும்போது (யார் எமது விடயத்திலே (மார்க்கத்தில்) எமது அனுமதி இல்லாமல் ஒரு செயலை செய்கின்றாரோ அது நிராகரிக்கப்படும்.)

எனவே தான் மேற்படி வசனத்திற்கு விளக்கம் கூறும் சிலர் ‘நாம் ஒன்றை விரும்புவதை விட நம்மை (எவர் விரும்புகின்றாரோ அவரை) விரும்புவது முக்கியமாகும்’ எனவே அல்லாஹ்வை நாம் விரும்புகின்றோம் என வாதிடுவதை விட்டு விட்டு அல்லாஹ் எம்மை விரும்புவதற்கு காரணமாக இருக்கும் நபியவர்களை பின்பற்றுதல் எம்மில் வந்தாக வேண்டும்’ என்றார்।

நபியவர்களது கப்ரைச் சூழவுள்ள சுவர்களை தொட்டு முகர்வதைப் பற்றி இமாம் நவவி அவர்கள் கூறும் போது ‘ இது மார்க்கத்திற்கு முறனான கண்டிக்கத்தக்க செயலாகும்’ என தனது புத்தகமாகிய (அல்மஜ்மூஃ) இல் குறிப்பிடுகின்றார்।

நபியவர்கள் கூறினார்கள் ‘ யார் எமது மார்க்கத்தில் புதிதாக ஒரு கருமத்தை ஏற்படுத்துகின்றாரோ அது நிராகரிக்கப்படும்।’ புகாரி.

அதே வேலை அபூஹுரைரா (ரழி) அறிவிக்கும் மற்றும் ஒரு அறிவிப்பில் ‘ எனது கப்ரை பெருநாள் (கொண்டாடும் இடம்) போன்று ஆக்கி விடாதீர்கள்। என் மீது ஸலவாத்து சொல்லுங்கள் உங்கள் ஸலவாத்து நீங்கள் எங்கிருந்த போதிலும் என்னை வந்தடையும்.’ அபூதாவூத்.

இமாம் அல் புலைல் இப்னு இயால் (ரஹ்) இவ்ஹதீஸுக்கு விளக்கம் கூறும் போது ‘நேர் வழியை சொற்ப எண்ணிக்கையினர் பின்பற்றினாலும் அது உனக்கு தீங்கு தராது நீ நேர் வழியை பின்பற்று। அழிவின் பக்கம் (வழிகேட்டில்) பெரும்பான்மையினரான மக்கள் இருந்த போதிலும் வழிகேட்டை பின்பற்றுவதை விட்டும் உன்னை எச்சரிக்கின்றேன்’ என்றார்.

அறியாமையுடன் கப்ரைத் தொடுவது, முத்தமிடுவது என்பன பரக்கத்தை தந்துவிடாது। இச்செயல் வன்மையாக கண்டிக்கத் தக்கவையாகும். மேலும் பரக்கத்து என்பது மார்க்கத்திற்கு உடன்பாடான விடயங்களில் தான் இருக்க முடியும். சத்தியத்திற்கு மாற்றமாக செயற்பட்டு விட்டு பரக்கத்தை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? இதனை எந்த ஒரு பகுத்தறிவாளனும் ஏற்றுக் கொள்ளமாட்டான்.

4) நபியவர்களின் கப்ரைச் சுற்றி வலம் வருதல் தடை செய்யப்பட்டதாகும்
இச்செயல் மிகவும் கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளது। காரணம் அல்லாஹ் அவனது முதலாவது ஆலயமாகிய கஃபாவை மாத்திரம் தான் வலம் வருவதை (தவாப்) மார்க்கமாக்கியுள்ளான்.

அல்லாஹ் கூறுகின்றான், பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி நகம் வெட்டி குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி (அந்தப் புனிதமான) பூர்வீக ஆலயத்தை ‘தவாஃபும்’ செய்ய வேண்டும்। (அல் ஹஜ்-29)

இஸ்லாத்தில் தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற அமல்களை உலகின் எப்பகுதியில் இருந்தாலும் நிறைவேற்றிக் கொள்ளலாம்। ஆனால் இந்த தவாப் எனும் வணக்கத்தை மக்கா நகருக்கு செல்லாமல் நிறைவேற்ற முடியாது.

இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறும் போது ‘அல்லாஹ்வின் ஆலயமாகிய (கஃபாவைத்) தவிர பைத்துல் முகத்தஸிற்கு அருகில் உள்ள குப்பதுஸ் ஸஹ்ராவையோ அல்லது நபியவர்களது கப்ரையோ, அரபா மலையில் இருக்கும் அந்த அடையாளத்தையோ தவாப் செய்யமுடியாது என்பதில் முஸ்லிம் அறிஞர்கள் ஏகோபித்த கருத்தில் உள்ளனர்।’ என்கிறார்.

5) நபியவர்களது கப்ருக்கு அருகில் சத்ததை உயர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது
நபியவர்கள் உயிரோடு இருக்கும்போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒழுக்கத்தை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்।

முஃமின்களே! நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள், மேலும் உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப் போல் அவரிடம் நீங்கள் இரைந்து பேசாதீர்கள்। (இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்து போகும்.நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பு தங்களுடைய சப்தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்களோ அ(த்தகைய)வர்களின் இருதயங்களை அல்லாஹ் பயபக்திக்காகச் சோதனை செய்கிறான் -அவர்களுக்கு மன்னிப்பும் மகத்தான கூலியும் உண்டு. (ஹுஜ்ராத்-2,3)

இதிலிருந்து நபியவர்கள் உயிரோடு இருக்கும் போதும், மரணித்த பின்னரும் கண்ணியத்துக்குரியவர்கள் என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்।

6) பள்ளிக்கு வெளியிலோ, பள்ளிக்கு உள்ளேயோ தூரத்தில் இருந்த போதிலும் நபியவர்களது கப்ரை முன்னோக்கித்தான் அவர்கள் மீது ஸலாம் சொல்லியாக வேண்டும் என எண்ணுவது தவறு:

இது தொடர்பாக நூலாசிரியரின் ஆசான் ஆகிய அஷ்ஷெய்க் பின் பாஸ் (ரஹ்) கூறும் போது இச்செயல் ஒரு தூய்மையான நிலையில் இருந்து மிதமிஞ்சிய நிலைக்கு இட்டுச்செல்லும் என்கின்றார்।

அதே வேலை சில மக்கள் மதீனாவுக்கு வரும்போது அதிகமான மக்களின் ஸலாத்தை எத்திவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வருகின்றார்கள்। இச்செயலை அங்கிகரிக்கூடிய வகையில் எந்த ஒரு ஆதாரத்தையும் நபிவழியில் காணமுடியாது. இவ்வாறு யாரிடமாவது மக்கள் வந்து எனது ஸலாத்தை நபியவர்களுக்கு எத்திவையுங்கள் என்று கூறினால் அதற்கு கீழ்கண்டவாறு பதில் கூறலாம்.

‘நபி (ஸல்) அவர்கள் மீது அதிகம் அதிகம் ஸலவாத்தும், ஸலாமும் கூறுங்கள்। உங்கள் ஸலவாத்து நீங்கள் எங்கிருந்த போதிலும் அது மலக்குகளின் மூலமாக நபியவர்களுக்கு எத்திவைக்கப்படும் என்று கூறி அவ்வாறு சொல்லுபவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள் ‘நிச்சயமாக மலக்குகள் பறந்து கொண்டிருக்கின்றனர் எனது உம்மத்தினரின் ஸலாத்தை அவர்கள் எனக்கு எத்திவைப்பர்.’ நஸாயீலே பதியப்பட்ட நம்பகமான ஹதீஸாகும்.

மற்றும் ஒரு அறிவிப்பிலே ‘உங்கள் வீடுகளை கப்ருகளாக ஆக்கிவிடாதீர்கள்। எனது கப்ரை பெருநாள் கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள். என் மீது நீங்கள் ஸலவாத்து சொல்லுங்கள். நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களது ஸலவாத்து எனக்கு எத்திவைக்கப்படும்.’ அபூதாவூத்

அதே வேலை ஹஜ், உம்ராவுக்கும் மதீனா ஸியாரவுக்கும் சம்மந்தம் கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மதீனாவுக்கு வராமலே ஹஜ்ஜை முடித்துவிட்டு அல்லது உம்ராவை முடித்து விட்டு தனது ஊருக்கு திரும்பினால் கூட எந்தப் பிழையும் கிடையாது. அதே வேலை மதீனாவை ஸியாரத்<http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d> செய்ய நேரடியாக இங்கு வந்து ஹஜ், உம்ரா செய்யாமல் திரும்பினால் கூட அதற்குறிய நன்மை கிடைத்து விடும்।

ஆனால் ஹஜ், உம்ரா செய்பவர் நபியவர்களின் கப்ரை ஸியாரத்<http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d> செய்துதான் ஆக வேண்டும் என்பதற்கு சில ஹதீஸ்களை ஆதாரமாக கூறுவார்கள் ‘ யார் ஹஜ் செய்து விட்டு என்னை ஸியாரத்<http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d> செய்யவில்லையோ அவர் என்னை நோவினை செய்துவிட்டார்.’ மேலும் ‘நான் மரணித்த பின் யார் என்னை ஸியாரத்<http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d> செய்கின்றாரோ அவர் நான் உயிரோடு இருக்கும் போது ஸியாரத்<http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d> செய்ததற்கு சமனாகும்।’ மற்றும் ஒரு செய்தியில் ‘ யார் என்னையும் எனது தந்தை இப்ராஹீமையும் ஒரே வருடத்தில் தரிசிக்கின்றாரோ அல்லாஹ்விடம் அவருக்கு சுவர்க்கத்தை பெற்றுக் கொடுக்க உத்தரவாதம் அளிக்கின்றேன்.’ மேலும் ‘யார் எனது கப்ரை தரிசிக்கின்றாரோ அவருக்கு எனது பரிந்துரை கடமையாகி விட்டது.’

மேற்குறிப்பிட்ட எல்லா செய்திகளும் ஆதாரபூர்மற்ற இட்டுக்கட்டப்பட்ட செய்திகளாகும் என்பதனை மிகப்பெரும் அறிஞர்களான தாரகுத்னி, உகைலி, பைஹக்கி, இப்னு தைமிய்யா, இப்னு ஹஜர் (ரஹ்) ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்।

அதே வேலை சூரா நிஸாவின் 64-ம் வசனமாகிய பின்வரும் வசனத்தை ஆதாரமாக காட்டுகின்றனர்।

‘அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்ப்படிவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை। ஆகவே அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டு உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மன்னிப்பைக் கோரி அவர்களுக்காக (அல்லாஹ்வின்) தூதராகிய (நீரும்) மன்னிப்புக் கேட்டிருந்தால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்.’

இந்த வசனம் அநியாயம் செய்த ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து பாவமன்னிப்பு தேடுவதை குறிக்கவில்லை மாறாக நபியவர்கள் உயிரோடு இருக்கும் போது முனாபிகீன்கள் அவர்களிடம் வருவதை குறித்து நிற்கின்றது। காரணம் நபித்தோழர்கள் யாருமே நபியவர்களது கப்ருக்கு பாவமன்னிப்பு தேடி வந்தது கிடையாது.

உமர் (ரழி) அவர்களின் ஆட்சியில் வரட்சி ஏற்பட்டபோது நபியவர்களின் கப்ருக்குச் செல்லாமல் அப்பாஸ் (ரழி) அவர்களை முன்னிருத்தி துஆச் செய்தார்கள். ‘யா அல்லாஹ் நாம் முன்னர் வரட்சி ஏற்பட்டபோது நபியர்களைக் கொண்டு பிராத்தித்தோம். அப்போது நீ எமக்கு நீர் புகட்டினாய். இப்போது நமது நபியின் சிறிய தந்தையைக் கொண்டு உன்னிடம் பிராத்திக்கின்றோம். நீ எமக்கு நீர் புகட்டுவாயாக’ இந்த துஆவை ஏற்றுக் கொண்டு அல்லாஹ் அம்மக்களுக்கு மழையை இறக்கினான். ஆதாரம்: புகாரி.
உண்மையிலேயே நபியவர்களின் மரணத்திற்கு பின் அவர்களிடம் சென்று பிராத்திக்க முடியுமாக இருந்தால் உமர் (ரழி) அவர்கள் அதை செய்திருப்பார்கள்। அதே போன்று புகாரியிலே பதிவு செய்யப்பட்ட மற்றுமொரு அறிவிப்பிலே ஆயிஷா (ரழி) ஒருமுறை தலைவழி ஏற்பட்ட போது நபியவர்களிடம் முறையிட ‘ நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம் நான் உனக்காக பாவமன்னிப்பு தேடுவேன், மேலும் உனக்காக பிரார்திப்பேன்.’ ஆயிஷா (ரழி) இதைக் கேட்ட பின் நபியவர்களுக்கு முன் நானும் மரணிக்க வேண்டாமா? என்றார்கள். (ஹதீஸின் சுருக்கம்) புகாரி

நபியவர்களது துஆ அவர்களது மரணத்திற்கு பின்னரும் கிடைக்கும் என்றிருந்தால் நபியவர்கள்’ நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம்’ எனச் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது।

உதவி தேடும் நோக்கம் இல்லாமல் பொது மையவாடிகளை தரிசிப்பதை பற்றி ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன। ‘ கப்ருகளை தரிசியுங்கள், நிச்சயமாக அது மறுமையை நினைவு படுத்தும்.’ என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள். முஸ்லிம்.

என்றாலும் மையவாடியிலே நீண்ட நேரம் நின்றுகொண்டிருக்கக் கூடாது. அடிக்கடி ஸியாரத்<http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d> செய்யவும் கூடாது. காரணம் இச்செயல் அளவு கடந்த செயற்பாடுகளுக்கு இட்டுச்செல்லும்.
அவ்வாறே நபியவர்கள் மீது அதிகமாக ஸலவாத்து சொல்லுவதன் சிறப்பு நிறையவே கூறப்பட்டுள்ளன। இது நபியவர்களுக்கு மட்டும் பிரத்தியேகமானது. உம்மத்தினரின் கப்ருகளுக்கு அடிக்கடி செல்லுவதற்கு இதனை ஆதாரமாக கொள்ளக் கூடாது. நபியவர்களுக்கு ஸலவாத்து சொல்லும்போது அது மலக்குகள் வயிலாக எத்திவைக்கப்படும் என்கின்ற ஹதீஸ்களை நாம் ஆரம்பத்திலே அறிந்து கொண்டோம்.

அதே வேலை பகீஃ மற்றும் உஹத் ஷுஹதாக்களை ஸியாரத்<து">http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d>து செய்வது மார்க்க வரம்புக்குள் இருத்தல் வேண்டும்। மார்க்க வரம்பு மீறப்படுகின்ற போது அது பித்அத்தான செயலாகி விடும்.

கப்ருகளை தரிசிப்பது எந்த அடிப்படையில் இருக்க வேண்டும். அதன் பிரயோசனங்கள் என்ன (உயிரோடு இருப்போருக்கும், மரணித்தவருக்கும்) என்பதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் எமக்கு சுட்டிக் காட்டிள்ளார்கள்.
உயிரோடு இருக்கும் மனிதர் (தரிசிக்கப் போகின்றவர்) மூன்று பிரயோசனங்கள் அடைந்து கொள்வார்।

1) மரணத்தை ஞாபகப்படுத்திகின்றார்। நல்ல செயல்களைச் செய்து மரணத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளமுடிகின்றது. இதனை நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள் ‘கப்ருகளை தரிசியுங்கள் அது உங்களுக்கு மறுமையை ஞாபகப்படுத்தும்’ முஸ்லிம்.

2) இச்செயல் நபியவர்களின் ஸுன்னாவாக இருப்பதால் இதற்கு நன்மை பதியப்படும்।

3) மரணித்த முஸ்லிம்களுக்காக துஆச் செய்வதன் மூலம் அவர்களுக்கு நன்மை செய்ததாகி விடும்.
அதே வேலை மரணித்தவர் கப்ருகள் தரிசிக்கப்படுகின்ற போது உயிரோடு இருப்பவரின் பிரார்த்தனையை பெற்றுக் கொள்கின்றார்। இது மரணித்தவர் பெரும் பிரயோசனமாகும். ஏனெனின் மரணித்தோர் உயிரோடு இருப்போரின் துஆவின் மூலம் நன்மை அடைகின்றார்.

நபியவர்கள் காட்டித்தந்த அமைப்பிலே கப்ருகளில் இருப்போருக்காக நாம் பிராத்திக்க வேண்டும்। புரைதத் இப்னு ஹுஸைப் (ரழி) அறிவிக்கும் ஹதிஸில் நபியவர்கள் கப்ருகளுக்குச் சென்றால் பின்வரும் துஆவை ஒதக்கூடியவாக இருந்தார்கள் ‘முஃமின்களிலும், முஸ்லிம்களிலும் கப்ருகளில் இருக்க கூடியவர்களே உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும். மேலும் நிச்சியமாக நாங்களும் உங்களை சந்திக்க இருக்கின்றோம். எங்களுக்கும் உங்களுக்கும் அல்லாஹ்விடத்திலே மன்னிப்பை வேண்டுகின்றோம்.’ முஸ்லிம்.

கப்ருகளை தரிசிப்பது ஆண்களைப் பொருத்தவரையில் விரும்பத்தக்க ஒரு செயலாகும்। ஆனால் பெண்களைப் பொருத்தவரை அறிஞர்களுக்கு மத்தியிலே கருத்து வேறுபாடு நிலவுகின்றது. ஒருபிரிவினர் இதனை தடைசெய்கின்றனர். மற்றும் சிலர் இச்செயலை அனுமதிக்கின்றனர். என்றாலும் இவ்விரண்டு கருத்துக்களிலும் பெண்களுக்கு கப்ருகளை தரிசிப்பதை தடைசெய்யக்கூடிய கருத்து மிகவும் வழுவானது. காரணம் நபியவர்கள் கூறினார்கள் ‘கப்ருகளை தரிசிக்கும் பெண்களை அல்லாஹ் சபிக்கட்டும்.’ திர்மிதியிலே பதியப்பட்ட ஆதாரபூர்வமான ஹதீஸாகும்.

பெண்களுக்கு ஸியாரத்<தை">http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d>தை அனுமதிப்பவர்கள் கூறுவது போன்று அடிக்கடி ஸியாரத் செய்யக் கூடிய பெண்ணுக்குத்தான் அல்லாஹ்வின் சாபம் என சொல்ல முடியாது। கீழ்வரும் அல்குர்ஆனிய வசனத்திலும் அதிகமான அநியாயம் செய்பவன் என்று பொருள் கொள்ள முடியாது.

‘உமது இறைவன் அடியார்கள் மீது அனியாயம் செய்பவனாக இல்லை’ (சூரா புஸ்ஸிலத்-46)

எனவே பொதுவாகவே ஸியாரத் செய்யும் பெண்ணுக்குத் தான் அல்லாஹ்வின் சாபம் இருக்கின்றது என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும்। மேலும் பெண்கள் பலகீனமானவர்கள் என்பதாலும் அவ்வாரே அழுவது, ஒப்பாரி வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதனாலும் கப்ருகளை சியாரத் செய்வது தடைசெய்யப்ட்டுள்ளது எனலாம்.

அவ்வாரே பெண்கள் இதனை விட்டுவிட்டாலும் ஒரு விரும்பத்தக்க விடயத்தை விட்டாதாகவே கருதப்படுமே தவிர கடமையான செயலை விட்டதாகி விடாது। ஆனால் கப்ருகளை தரிசிக்கின்ற போது அல்லாஹ்வின் சாபத்திற்கு சொந்தக்காரியாகின்றாள்.

பித்அத்தான தரிசிப்பை பொறுத்தவரையில் இஸ்லாம் ஆகுமாக்காத செயல்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும்। கப்ருகளில் அடங்கப்பட்டிருப்பவரிடம் பிரார்த்தனை செய்வது, அவர்களிடம் உதவி தேடுவது, தமது தேவைதளை நிறைவேற்றுமாறு வேண்டுவது போன்ற பல இஸ்லாத்திற்கு முரணான விடயங்களை உதாரணத்திற்கு கூறலாம். பித்அத்தான தரிசிப்பின் மூலம் கப்ருகளிலே உள்ளவர்கள் பிரயோசனப்படப் போவதில்லை. அதே வேலை தரிசிக்கச் சென்றவரும் எந்த வித பிரயோசனங்களும் இல்லாமல் அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டு குறித்த இடத்தை விட்டு திரும்பிவர நேரிடும்.

இது தொடர்பாக அஷ்ஷெக் பின் பாஸ் (ரஹ்) அவர்கள் கூறும் போது ‘மேற்படி அடங்கப்பட்டவர்களிடம் உதவி தேடி தரிசிக்கச் செல்வது பித்அத்தான காரியமாகும்। அதே வேலை இஸ்லாம் இதனை தடை செய்துள்ளது. எமக்கு முன்னிருந்தவர்கள் யாருமே இவ்வாறு செய்தது கிடையாது. மாறாக நபியவர்கள் கூறியது போன்று ‘கப்ருகளை ஸியாரத்து செய்யுங்கள் மேலும் கெட்ட வார்த்தைகளை சொல்லாதீர்கள்’ முஸ்னத் அஹமத், முஅத்தா மாலிக்

எனவே இச்செயல் பித்அத்தாக இருந்த போதிலும் சில செயல்கள் பித்அத் என்ற அந்தஸ்திலும் மற்றும் சில செயல்கள் ஷிர்க் என்ற நிலையிலும் உள்ளன. அதே வேலை கப்ருகளிடம் சென்று அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது பித்அத்தான செயலாகுவதுடன், கப்ருகளில் உள்ளோரிடம் எமது தேவைகளைக் கேட்டுப் பிரார்த்திப்பது, உதவி தேடுவது இணைவைப்பாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் எங்களையும், இந்த மதீனாவிலே வாழக்கூடியவர்களையும், இங்கு தரிசிக்க வருபவர்களையும் பொருந்திக் கொண்டு புகழப்படக்கூடிய நல்ல முடிவை இவ்வுலகிலும், மறுமையிலும் தந்தருள்வானாக! இந்த கண்ணியமான பூமியிலே வசிக்கக்கூடிய பாக்கியத்தையும், நல்ல பண்பாடுகளையும் தந்தருள்வானாக! நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர், தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

நன்றி: ‘பல்லுல் மதீனா’ அஷ்ஷெய்க் அப்துல் முஹ்ஸின் அல்-அப்பாத்

Tuesday, February 16, 2010

நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா!

அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அவனே (நாம் அறிந்த, அறியாத) பேரண்டத்தின் அதிபதி. அவன் இறையச்சமுடையவர்களுக்கு நல்ல வெகுமதிகளையும், அவனுடைய வரம்பை மீறுபவர்களுக்கு பெரிய அழிவையும் தரக்கூடியவன். அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை, அவனுக்கு யாதொரு இணையுமில்லை. சர்வ வல்லமையும், அதிகாரமும் அவனுக்கே உரியது என்று நான் சாட்சி கூறுகிறேன். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், திருத்தூதருமாவார்கள். அவர்கள் நபி மார்களுக்கு எல்லாம் இறுதி முத்திரையாக இருக்கிறார்கள். மொத்த சமுதாயத்திற்கும் தலைவராக இருக்கிறார்கள் என்று நான் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மீதும், அவர்களுடைய தோழர்கள் மற்றும் அவர்களை இறுதி தீர்ப்பு நாள் வரை பின்பற்றக் கூடியவர்கள் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாவதாக.)
1- இஸ்லாம் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கம்:
அல்லாஹ் ஸுப்ஹானஹுவத்தஆலா, அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை, நேர்வழிகாட்டியுடனும், மனித குலத்திற்கு ஓர் அருளான சத்திய இஸ்லாமிய மார்க்கத்துடனும், நன்மைகளைப் புரிவோருக்கு ஓர் முன்மாதிரியாகவும் அனுப்பி வைத்தான். அல்லாஹ் மனித குலம் அனைத்திற்கும், அவர்கள் தங்களைச் சீர்திருத்திக் கொள்வதற்குத் தேவையான அனைத்து விஷயங்களையும், அதாவது மார்க்கம் மற்றும் அன்றாட அலுவல்களை இறை நம்பிக்கையுடன் நடத்திச் செல்வதற்கும், நல்ல நடத்தைகளையும், அழகிய முன்மாதிரிகளையும், போற்றத்தக்க நற்குணங்களையும், நம்முடைய நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாகவும், அவர்களுக்கு அருளிய குர்ஆன் மற்றும் அவர்களுடைய சுன்னத்தான வழிமுறைகளின் மூலமாகவும் காட்டிவிட்டான்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஸஹீஹான ஹதீஸ் கூறுகிறது: “நான் உங்களிடம் ஒரு ஒளிமயமான பாதையை விட்டுச் செல்கிறேன். அதில் இரவு கூட பகலின் ஒளியைப் போல் இருக்கிறது”.
அன்பான சகோதர சகோதரிகளே, இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மதமும் அதனுடைய ஆன்மீக நெறி என்பதைப் பற்றி மட்டும் போதித்துக்கொண்டிருக்கும் வேளையில் இஸ்லாம் மட்டுமே ஒருவருடைய பிறப்பு முதல் இறப்பு வரை நிகழக்கூடிய அனைத்து விஷயங்களில் ஏற்படக் கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதோடு மட்டுமல்லாமல் அந்தந்த சூழ்நிலைகளில் ஒரு முஸ்லிம் தான் என்ன செய்ய வேண்டும் எனவும் எதை செய்யக் கூடாது எனவும் போதிக்கிறது.குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஒரு மனிதருடைய குடும்ப வாழ்க்கை, கொடுக்கல் வாங்கல், வணக்க வழிபாடுகள், அரசியல், சந்தோசம், துக்கம் போன்ற எல்லாத் துறைகளிலும் அவனுக்கு தேவையான அறிவுரைகளையும் விழிமுறைகளையும் காட்டி முழுமையான மார்க்கமாகத் திகழ்கிறது.
இதையே அல்லாஹ் தன்னுடைய திருமறையில் தன்னுடைய மார்க்கத்தை தான் முழுமைப் படுத்தி விட்டதாகக் கூறுகிறான். “இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்” (அல-குர்ஆன் 5:3)2)
2- அல்லாஹ்வின் வேதத்தையும் அவனுடைய தூதரின் வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டியதன் அவசியம்:
முஸ்லிமான ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் வேதத்தையும் அவனுடைய தூதரின் விழிமுறைகளையும் தம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் பின்பற்றி வாழ வேண்டும் எனவும் அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களால் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் எவ்வித கூடுதல் அல்லது குறைவோ செய்யக் கூடாது எனவும் அல்குர்ஆன் நமக்கு வலியுறுத்துகிறது.
அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) நீர் கூறும்; “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான். மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 3:31)
(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள். அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள். நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள். (அல்-குர்ஆன் 7:3)
நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும். ஆகவே இதனையே பின்பற்றுங்கள் – இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் – அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும். நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான். . (அல்-குர்ஆன் 6:153)
நபி (ஸல்) அவர்கள் ஓரு சொற்பொழிவில் கண்கள் சிவக்க குரலை உயர்த்தி கூறினார்கள்: “…. செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் நேர்வழியாகும். விஷயங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது (பித்அத்) ஆகும். ஓவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்.” அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதாரம்: முஸ்லிம்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்". அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: புகாரி
எனவே சகோதர, சகோதரிகளே மேற்கூறிய வசனங்கள் மற்றும் நபிமொழிகள் அனைத்தும் அல்லாஹ்வின் வேதத்தையும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களையுமே நாம் பின்பற்றி வாழ வலியுறுத்துவதை அறிகிறோம்.
3- நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட ஒரு புதுமையான விஷயமே!
நபி (ஸல்) அவர்களின் மறைவிற்குப் பிறகு இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட பல வழிகேடுகளில், புதுமைகளில் மீலாது விழா என்றழைக்கபடக் கூடிய நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்களாகும். இந்த தினத்தை பல்வேறு பிரிவினர் பல்வேறு விதமாகக் கொண்டாடுகின்றனர்.
இன்றைய காலக்கட்டத்தில் தமிழகத்தில் பரவலாக காணப்படும் இந்த மீலாது விழாக்கொண்டாங்களும் அவற்றின் போதும் நடைபெறும் அனாச்சாரங்களும்: -ரபியுல் அவ்வல் பிறை 12 அல்லது அந்த மாதம் முழுவதும் விழா நடத்துகின்றனர்.தஞ்சை, நாகை, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் வீடுகளையும், தெருக்களையும் அலங்கரித்து கிறிஸ்தவர்கள் தங்களின் பண்டிகைகளின் போது தொங்கவிடும் நட்சத்திர விளக்குகளைப் போல் தொங்கவிடுகின்றனர்.
நபி (ஸல்) அவர்களைப் புகழ்வதாகக் கூறிக்கொண்டு கூலிக்கு ஆட்களை அமர்த்தி ஷிர்க் நிறைந்த மவ்லிது பாடல்களை பாடவிட்டு அவர்களுக்கும் அங்கு வந்திருக்கின்ற அனைவருக்கும் சீரணி மற்றும் நெய் சோறு வழங்குகின்றனர்.
மார்க்கம் அனுமதிக்காத வகையில் கூச்சலும் மேளதாளமும் முழங்க பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் போக்குவரத்துக்களை வேற்றுப்பாதைகளில் திருப்பிவிட்டு சாலைகளை அடைத்துக்கொண்டு ஊர்வலம் செல்கின்றனர். அவ்வாறு உர்வலம் செல்லும் போது சில சமூக விரோதிகள் அதன் மூலம் வகுப்புக் கலவரத்தைத் தூண்டி முஸ்லிம்களின் உயிர் மற்றும் பொருட்களுக்கு சேதத்தை ஏற்படுத்துவது.
பெரும் பொருட்செலவில் பிரமாண்டமான விழா மேடைகளையும் பந்தல்களையும் அமைத்து இறை நிராகரிப்பாளர்களை அழைத்து அந்த மேடையில் அமரவைத்து அவர்களை கவுரவித்து அவர்களை முஸ்லிம்களுக்கு உரையாற்ற வைப்பது.
சிலர் அந்த நாட்களில் நபி (ஸல்) அவர்களை வரம்பு மீறி புகழ்ந்து அவர்களிடம் நேரடியாக உதவி கோருவது.
இவ்வாறு இந்த அனாச்சாரங்களின் பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம்.
எந்த வகையில் இந்த நாட்களை கொண்டாடினாலும் எந்த நோக்கத்திற்காக கொண்டாடினாலும் இவைகள் அனைத்தும் இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட நூதன செயல்களேயாகும். இவற்றிற்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்புமில்லாதது மட்டுமல்லாமல் இவைகள் அனைத்துமே நிராகரிக்கப்பட வேண்டியவைகளாகும்.
4- நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா – சிறிய வரலாற்றுக் கண்ணோட்டம்:
நபி (ஸல்) அவர்களின் காலத்திலோ அல்லது நபி (ஸல்) அவர்களால் சிறந்த சமுதாயம் என போற்றப்பட்ட சஹாபாக்கள், தாயீன்கள் மற்றும் தபஅ தாயீன்களின் காலத்திலோ நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாட்கள் கொண்டாடப்பட வில்லை. இஸ்லாத்தின் உண்மையான கொள்கைகளைச் சிதைப்பதற்காக முதன் முதலில் ‘ஷியாக்களின் பாத்திமிட்’ ஆட்சிக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது தான் இந்த மீலாது விழாக்கள். உண்மையான முஃமின்களுக்கும் ஷியாக்களின் இந்த நூதன கண்டுபிடிப்புக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
வரலாற்று ஆசிரியர் இப்னு கல்கான் என்பவர் கூறுகிறார்: -ஃபாத்திமிட் ஆட்சியாளர்களுக்குப் பிறகு இதை விமர்சையாக முதன் முதலில் கொண்டாடியவர் ஈராக்கில் இர்பில் என்ற பகுதியை கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் அல்லது ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆட்சி செய்த மன்னர் அல்-முஜஃப்பார் அபூ சயீத் கவ்கபூரி என்பவராவார்.
மற்றொரு ஆய்வாளர் அபூ ஷாமா என்பவர் கூறுகிறார்: -ஈராக்கின் மோசுல் நகரில் ஷெய்ஹூ உமர் இப்னு முஹம்மது அல்-மலா என்பவர் தான் முதன் முதலில் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடினர். பின்னர் இர்பில் நகரின் ஆட்சியாளர்களும் மற்றவர்களும் அதைப் பின்பற்றினர்.
அல்-ஹாபிஸ் இப்னு கதீர் அவர்கள் தன்னுடைய ‘அல்-பிதாயா வல் நிகாயா’ என்ற நூலில் மன்னர் அபூ சயீத் கவ்கபூரி அவர்களின் சரிதையைப் பற்றிக் குறிப்பிடும் போது பின்வருமாறு கூறுகிறார்கள்: -‘அவர் ரபியுல் அவ்வல் மாதத்தில் மிகப்பெரிய விழாவை ஏற்பாடு செய்வார், முஜஃப்பரின் விருந்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் கூறினர், ‘அவர் அந்த விழாவில் கலந்துக் கொண்டவர்களுக்கு தீயில் சுடப்பட்ட ஐந்தாயிரம் ஆடுகளின் தலைகளையும் , பத்தாயிரம் கோழிகளையும், ஆயிரம் பெரிய பாத்திரங்களில் உணவுகளையும், முப்பது தட்டுகளில் இனிப்பு வகைகளையும் வழங்கியதாக கூறினர். மேலும் அந்த விழாக்களில் கலந்துக் கொண்ட சூஃபியாக்கள் லுகர் முதல் மறுநாள் விடியற்காலை பஜ்ர் வரையிலும் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்ததாகவும் மன்னரும் அந்த ஆட்டம் பாட்டத்தில் கலந்துக் கொண்டதாகவும் கூறினர்’.
வரலாற்று ஆசிரியர் இப்னு கல்தான் தன்னுடைய நூல் ‘வாஃபியாத் அல்-அய்யான்’ என்னும் நூலில் கூறுகிறார்: -‘ஸபர் மாதத்தின் ஆரம்பத்திலேயே அவர்கள் கோபுரங்களின் உச்சிகளை அலங்கரிக்கத் துவங்கிவிடுவர். கோபுரங்களின் உச்சியில் பாடகர்களும், இசையமைப்பவர்களும் மற்றும் நடனமாடுபவர்களும் அமர்ந்து ஆட்டம்பாட்டத்திலிருப்பர். ஒரு போபுரத்தைக் கூட இவ்வாறு அலங்கரிக்காமல் விடுவதில்லை. மக்கள் அந்த நாட்களில் வேலைக்குச் செல்லாமல் அந்த வேடிக்கைகளைக் கண்டு களித்துக் கொண்டிருப்பார்கள்’ இவ்வாறு தான் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா ஷியாக்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இஸ்லாத்தில் ஊடுருவ ஆரம்பித்தது. மார்க்கம் அறியா பாமர மக்களும் இவ்வாறு கொண்டாடுவது புனிதம் என்று கருதலாயினர். இதற்கு அல்லாஹ்வின் வேதத்திலோ அல்லது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலோ எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. எனவே இது இஸ்லாத்தில் தோற்றுவிக்கப்பட்ட பித்அத் என்னும் நூதன செயலேயாகும்.
ஒவ்வொரு உண்மையான முஸ்லிமும் இதிலிருந்து தவிர்ந்துக் கொள்வதோடு அல்லாமல் இத்தகைய தீய செயல்களை களைவதற்கு பாடுபட வேண்டும்.
5) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாக்களை ஏன் கொண்டாடக் கூடாது?
நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் கொண்டாடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி கிடையாது. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றது.
a) நபி (ஸல்) அவர்களோ அல்லது அவர்களைப் பின்தொடர்ந்த நேர்வழி பெற்ற கலிபாக்களோ அல்லது சஹாபாக்களோ அல்லது அவர்களுக்குப் பின் வந்த இரண்டு சிறந்த சமுதாயங்களோ நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாக்களைக் கொண்டாடவில்லை: -ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -“என்னுடைய வழிமுறைகளையும் நேர்வழி பெற்ற கலீபாக்களின் வழிமுறைகளையும் வலுவாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். இவைகளை உங்களின் முன்பற்களுக்கு இடையில் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். (இஸ்லாத்தில்) நுழைக்கப்படும் புதிய அமல்களைப்பற்றி எச்சரிக்கையாக இருங்கள். ஒவ்வொரு புதிய அமலும் பித்அத் ஆகும். ஓவ்வொரு பித்அத்தும் வழிகேடு ஆகும். ஓவ்வொரு வழிகேடும் நரகத்திற்குரியவை” என்று கூறினார்கள். (ஸஹீஹ் அல்-ஜாமிஅஸ் ஸகீர். ஹதீஸ் எண். 2549)
b) நாம் முன்னர் கூறியது போன்று இவ்வகையான விழாக்கள் ஷியாக்களான ‘பாத்திமிட்’ வம்ச மன்னர்களால் தோற்றுவிக்கப்பட்டு இஸ்லாத்தில் நுழைக்கப்பட்டது: -யாரேனும் ஒருவர் நான் அல்லாஹ்விடம் நெருக்கமாகுவதற்காக நபி (ஸல்) அவர்களோ அல்லது அவர்களைப் பின்பற்றிய நபித்தோழர்களோ செய்யாத இச்செயல்களைச் செய்கிறேன் என்று கூறினால் அவர் அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் மார்க்கத்தை முழுமையாக எங்களுக்குப் போதிக்க வில்லை, அதனால் மிகச்சிறந்த இந்தச் செயலை நான் செய்கிறேன் என்று கூறி அல்லாஹ் இறக்கியருளிய ‘இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்கா நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்’ (அல் குர்ஆன் 5:3) என்ற வசனத்தை நிராகரித்தது போலாகும். (இவ்வாறு எண்ணம் கொள்வதிலிருந்தும் அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாகவும்.) ஏனென்றால் இவர் அல்லாஹ்வோ அல்லது நபி (ஸல்) அவர்களோ போதிக்காத ஒன்றை, பிறர் மூலம் இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட ஒன்றை மார்க்கம் என்றும் அதை செய்வதால் நன்மை கிடைக்கும் என்று கருதி செயல்படுகிறார்.
c) நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடுவது கிறிஸதவர்களின் செயல்களைப் பின்பற்றுவது போலாகும்: -கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களின் பிறந்த நாள் என்று கருதி ஒரு தினத்தைக் கொண்டாடுகின்றனர். கிறிஸ்தவர்களைப் பின்பற்றுவது என்பது மார்க்கத்தில் முழுவதுமாக தடுக்கப்பட்ட (ஹராம்) ஒன்றாகும். ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் இறை நிராகரிப்பாளர்களைப் பின்பற்றக் கூடாது என்றும் நாம் அவர்களிலிருந்து வேறுபட்டு இருக்க வேண்டும் எனவும் நமக்குத் வலியுறுத்துகிறது.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -‘யார் பிறருக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே!’ ஆதாரம் அபூதாவுத்.
மேலும் கூறினார்கள்: ‘இறை நிராகரிப்பாளர்களிலிருந்து வேறுபட்டு இருங்கள்’ ஆதாரம் முஸ்லிம்.
எனவே நாம் இறைநிராகரிப்பாளர்களின் செயல்களைக் குறிப்பாக வணக்க வழிபாடுகளைப் பின்பற்றி நடக்கக் கூடாது.
d) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாக்களில் இஸ்லாம் அனுமதிக்காத வீண் ஆடம்பரச் செலவுகளும் கேளிக்கைகளும் நடைபெறுகிறது: -மீலாது விழாக்கள் என்ற பெயரில் தமிழகத்தில் நடைபெறும் கூட்டங்களில் வீண் ஆடம்பரத்திற்காக பெரும் பொருட்செலவில் பிரமாண்டமான விழா பந்தல் அமைத்து அதில் தோரணம் கட்டி அழகு படுத்துகின்றனர். மேலும் தஞ்சை,திருவாரூர், நாகை போன்ற மாவட்டங்களில் இவ்வகை விழாக்கள் நடைபெறும் போது கோயில் திருவிழாக்கள் தோற்றுவிடும் அளவிற்கு கடைகள் அமைக்கப்பட்டு ஆண் பெண்கள் குழுமுகின்றனர். அது பல்வேறு அனாச்சாரங்களுக்கு வழி வகுப்பதோடல்லாமல் இஸ்லாத்திற்கு முரணாகவும் உள்ளது.
e) இவ்வகை விழாக்களில் ஷிர்க் நிறைந்த மவ்லிது மற்றும் புர்தா போன்ற அரபி பாடல்களை பாடுகின்றனர்: -இவ்விழாக்களில் கஸீதத்துல் புர்தா, சுப்ஹான மவ்லிது போன்ற அரபிப் பாடல்களை இன்றைய கால சினிமாப்பாடல்களின் இராகத்திற்கேற்ப மெட்டு அமைத்து பாடுகின்றனர். இவ்வகை பாடல்களில் மூலம் நபி (ஸல்) அவர்களை வரம்பு மீறிப் புகழ்ந்து அவர்களை அழைத்து உதவியும் தேடுகின்றனர். இன்னும் சில ஊர்களில் ஒரு படி மேலே சென்று விழாவிற்கு வந்திருக்கும் அனைவரும் எழுந்து நின்று சுப்ஹான மவ்லிதில் வரும் ‘யா நபி’ பாடலை பாடுகின்றனர். இவ்வாறு பாடும்போது நபி (ஸல்) அவர்கள் அங்கே ஆஜர் ஆகிறார்கள் என்றும் நம்பிக்கைக் கொள்கின்றனர். இது வெளிப்படையான ஷிர்க் என்னும் இணைவைத்தவலாகும். நபி (ஸல்) அவர்கள் தம்மை வரம்பு மீறிப் புகழ்வது குறித்து எச்சரித்திருக்கிறார்கள்.‘கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸா (அலை) அவர்களை வரம்பு மீறிப் புகழ்ந்ததைப் போல் (என்னைப்) புகழாதீர்கள். நான் அவனுடைய அடிமையே. எனவே அல்லாஹ்வின் அடிமையும் அவனது தூதரும் ஆவார்கள் என்று கூறுங்கள்” ஆதாரம் : புகாரிஇவ்வாறாக பல்வேறு காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். விரிவுக்கு அஞ்சி இங்கே அனைத்தையும் குறிப்பிடவில்லை.
6- நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுபவர்களின் வாதங்கள்:
இந்த பித்அத்களைப் புரிவோர் தங்களுக்கு ஆதாரமாக பலவகையான வாதங்களை முன் வைக்கின்றனர். இவைகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற மிக பல வீனமானவைகளாகும். அவைகளை சற்று ஆராய்வோம்:
-6a) நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு மரியாதை செலுத்தி அவர்களை மதிக்கின்றோம் என கூறுகின்றனர்: -நபி (ஸல்) அவர்களை மதிப்பது என்பது, 1- அவர்கள் கட்டளையிட்டவற்றை ஏற்று அதன்படி நடப்பதும்,
2- அவர்கள் தடுத்தவற்றிலிருந்தும் விலகி இருப்பதும்,
3- மற்றும் அவர்கள் மீது அன்பு செலுத்துவதும் ஆகும்.
ஆனால் ஒருவர் நபி (ஸல்) அவர்கள் ஏவிய கட்டளைகளைப் பின்பற்றாதது மட்டுமல்லாமல் அவர்கள் தடுத்தவற்றைச் செய்து கொண்டே நான் நபி (ஸல்) அவர்களை மதிக்கிறேன் என்று கூறுவது எந்த வகையில் அறிவீனமானது என்று நாம் சற்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இதற்கு அனைவருக்கும் தெரிந்த தந்தை மகன் உதாரணம் ஒன்றைக் கூறலாம்:
-ஒருவர் தம்முடைய தந்தையை மிகவும் மதிப்பதாகக் கூறுகிறார். ஆனால் அவர் செய்வதெல்லாம் அந்த தந்தையின் கட்டளைக்கு நேர்மாற்றம். தந்தை எதையெல்லாம் செய்யக் கூடாது என கூறினாரே அதை மகன் விரும்பிச் செய்கின்றார். தந்தை எதைச் செய்ய வேண்டும் என சொன்னாரோ அதை மகன் கண்டுக்கொள்வதே இல்லை. மகனின் இந்தச் செயல் தந்தைக்கு மரியதை செலுத்தி கண்ணியப் படுத்தியக் கருதப்படுமா அல்லது தந்தையின் பேச்சைக் கேட்காதது மூலம் அவரை இழிவு படுத்தியதாக் கருதப்படுமா? சிந்தியுங்கள் எனதருமை சகோதர சகோதரிகளே!
மேலும் நபி (ஸல்) அவர்களை சஹாபாக்கள் மதித்தது போல் வேறு யாரும் மதிக்க முடியாது. ஆனால் சஹாபாக்களோ நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடவில்லை. இவ்வாறு பிறந்த தினங்களைக் கொண்டாட வேண்டும் என்று இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தால் சஹாபாக்கள் தான் முதலில் செய்திருப்பார்கள். அந்த அளவிற்கு நபி (ஸல்) அவர்களின் ஒவ்வொரு கட்டளையையும் பின்பற்றி நடப்பவர்களாகவும் நபி (ஸல்) அவர்களுடைய சுன்னத்தைப் பேணி நடப்பவர்களாகவும் சஹாபாக்கள் வாழ்ந்தனர். ஆனால் யாரும் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை விழாவாக கொண்டாடியதாக ஒரு சிறு ஆதாரம் கூட கிடையாது.இவர்கள் சஹாபாக்களை விட அதிகமாக நபி (ஸல்) அவர்களை மதிக்கிறார்களா? அல்லது இத்தகைய நல்ல அமல்கள் சஹாபாக்களுக்குத் தெரியாமல் போய்விட்டதா? எனவே இவர்களின் நாங்கள் நபி (ஸல்) அவர்களை இந்த விழாவின் மூலம் மதிக்கிறோம் என்ற வாதம் அர்த்தமற்றதும் அவர்களுக்கே எதிரானதும் ஆகும்.
6b) பெரும்பாண்மையான மக்கள் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனரே! அதனால் நாங்களும் கொண்டாடுகிறோம்: -நபி (ஸல்) அவர்களின் ‘(அமலில்) ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் வழிகேடு தான்: வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவை’ என்ற கூற்றுப்படி பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது பித்அத் என்றும் வழிகேடு என்று உறுதியான பிறகு எத்தனை நபர்கள் எத்தனை நாடுகளில் பின்பற்றினால் என்ன?
உலகில் உள்ள பெரும்பாண்மையான மக்கள் வழிகேட்டில் இருக்கிறார்கள் என்றும் அவர்களைப் பின்பற்றினால் வழி கெடுத்து விடுவார்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறானே:
"பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் – இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். (அல்-குர்ஆன் 6:116)
இன்னும் அநேக வசனங்களில் பெரும்பாலோரைப் பின்பற்றக் கூடாது என்றும் அதற்குரிய காரணத்தையும் அல்லாஹ் விளக்குகிறான்:-
  • பெரும்பாலோர் ஈமான் கொள்ள மாட்டார்கள். (2:100)
  • பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. (2:243)
  • பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.(5:32)
  • பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.(5:49)
  • பெரும்பாலோர் ஃபாஸிக்கு (பாவி)களாக இருக்கின்றீர்கள் (5:59)
  • பெரும்பாலோர் பாவத்திலும், அக்கிரமத்திலும் விலக்கப்பட்ட பொருள்களை உண்பதிலும் விரைந்து செயல்படுவதை (நபியே!) நீர் காண்பீர்.(5:62)
  • பெரும்பாலோர் செய்யும் காரியங்கள் மிகக் கெட்டவையாகும (5:66)
  • பெரும்பாலோர் நல்லறிவு பெறாதவர்களாகவே இருக்கின்றனர் (5:103)
  • பெரும்பாலோர் மூடர்களாகவே இருக்கின்றனர். (6:111)
  • பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (6:116)
  • பெரும்பாலோர், அறியாமையின் காரணமாகத் தங்களுடைய மன இச்சைகளின் பிரகாரம் (மனிதர்களை) வழி கெடுக்கிறார்கள் (6:119)
  • பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை (10:36)
  • பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.(7:117, 10:60)
  • பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்’ (10:92)
  • பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை (11:17)
  • பெரும்பாலோர் காஃபிர் (நன்றி கெட்டவர்)களாகவே இருக்கின்றனர். (16:83)
  • பெரும்பாலோர் சத்தியத்தை அறிந்து கொள்ளவில்லை; ஆகவே அவர்கள் (அதைப்) புறக்கணிக்கிறார்கள். (21:24)
  • பெரும்பாலோர் அந்த உண்மையையே வெறுக்கிறார்கள். (23:70)
  • பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள். (29:63)

எனவே பெரும்பாலானோரைப் பின்பற்றுவது என்பது மேற்கூறப்பட்ட வசனங்களுக்கு எதிரானதாகும்.

6c) மீலாது விழாக்கள் நபி (ஸல்) அவர்களை எப்போதும் நினைவில் இருத்திக்கொள்ள உதவும்: -நபி (ஸல்) அவர்களை மீலாது விழாக்களில் மட்டும்தான் நினைவுபடுத்த வேண்டுமா? மற்ற நாட்களில் நினைவு படுத்தக்கூடாதா? முஃமின்களுக்கு நபி (ஸல்) அவர்களிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருப்பதாக அல்லாஹ் கூறுகிறானே (அல்-குர்ஆன் 33:21)! அப்படியென்றால் வருடத்தில் ஒருமுறை நினைவுபடுத்தி அந்த அழகிய முன்மாதிரியைப் பின்பற்றி விட்டு மற்ற நாட்களில் நினைவு படுத்தத் தேவையில்லையா? இல்லை சகோதர சகோதரிகளே! இது முற்றிலும் தவறு.

உண்மையான முஸ்லிம்கள் எல்லாக் காலங்களிலும், எல்லா நேரங்களிலும் நபி (ஸல்) அவர்களை நினைவில் இருத்திக் கொண்டே இருப்பார். அதாவது,நபி (ஸல்) அவர்களின் பெயர் கூறப்படும் போதெல்லாம் அவர்கள் மீது சலவாத்து கூறுவார்கள்நபி (ஸல்) அவர்களின் பெயர் பாங்கு, இகாமத், குத்பா உரை மற்றும் தொழுகையின் போதும் நினைவு கூர்ந்து சலவாத்து கூறுவார்ஒவ்வொரு முறையும் நபி (ஸல்) அவர்கள் ஏவிய வாஜிபான, முஸதஹப்பான கடமைகளைச் செய்யும் போதும் நினைவு கூறுவார்நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த அன்றாடம் ஓத வேண்டிய துஆக்களை ஓதும் போதும் நினைவு கூறுவார்.

இவ்வாறாக ஒரு முஃமின் இரவு பகல் என பாராது, மீலாது விழா நாட்கள் என்றும் பாராமல் எந்நேரமும் நபி (ஸல்) அவர்கள் ஏவிய நன்மையான செயல்களைச் செய்வதன் மூலமும் நபி (ஸல்) அவர்கள் தடுத்த தீமையான காரியங்களைச் செய்வதிலிருந்தும் விலகியிருத்தல் மூலமும் எந்நேரமும் நபி (ஸல்)அவர்களை நினைவில் இருத்திக்கொண்டேயிருப்பார்.

ஆனால் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாட்களைக் கொண்டாடுவோர் நபி (ஸல்) அவர்கள் தடுத்த தீமையான செயலான பித்அத் என்னும் நூதன செயலைச் செய்வதன் மூலம் நபி (ஸல்) அவர்களிடமிருந்து விலகி தூரமாகச் செல்கின்றனர்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இந்த வகையான பித்அத்தான விழாக்கள் தேவையில்லை. ஏனென்றால் ஏற்கனவே அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை கண்ணியப்படுத்தி அவர்களின் அந்தஸ்தை உயர்த்தி விட்டான்.

அல்லாஹ் கூறுகிறான்: -மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம். (அல்-குர்ஆன் 94:4) மேலும் தினமும் ஐவேளை கூறக்கூடிய பாங்கு மற்றும் இகாமத் போன்றவற்றிலும், குத்பா பேருரைகளிலும், தொழுகையிலும் நபி (ஸல்) அவர்களின் பெயரும் குறிப்பிடப்படுகிறது. மேலும் திருமறையை ஓதும் ஒவ்வொரு முறையும் நபி (ஸல்) அவர்களை நினைவு கூராமலிருப்பதில்லை! இதுவே நபி (ஸல்) அவர்களைக் கண்ணியத்திற்கும், அவர்களின் மீது அன்பு செலுத்தி அவர்களைப் பற்றிய நினைவை புதுப்பித்துக் கொள்வதற்கும் அவர்களைப் பின்பற்றி வாழ்வதற்கான ஊக்கத்தை அதிகப்படுத்திக் கொள்வதற்கும் போதுமானதாகும்.

உண்மையான முஃமின் அனு தினமும் இஸ்லாத்தின் காரியங்களைச் செய்து வருவாராயின் அதன் மூலம் நபி (ஸல்) அவர்களை நிணைவு படுத்திக் கண்ணிப்படுத்தியவராகக் கருதப்படுவார். மாறாக பிறந்த நாள் விழா போன்ற பித்அத்தான செயல்களைச் செய்வதன் மூலம் நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்கு மாறு செய்பவர்கள் எவ்வாறு நபி (ஸல்) அவர்களை நினைபடுத்தி கண்ணியப்படுத்தியவராவார்? சிந்தியுங்கள் சகோதர சகோதரிகளே!

6d) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் இறைவனை நெருங்குவதற்காக கல்வியறிவுடைய சிறந்த மன்னரால் அறிமுகப்படுத்தப்பட்டது:

-பித்அத் அனைத்தும் வழிகேடுகள், அவைகள் நிராகரிக்கப்படவேண்டியவைகள் என்றிருக்கும் போது எவ்வளவு பெரிய அறிஞரால் கல்விமான்களால் அறிமுகப்படுத்தப்பட்டால் தான் என்ன?

6e) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது பித்அத்துல் ஹஸனா ஆகும்.

பித்அத்துகளில் நல்லவை கெட்டவை என்ற பாகுபாடே கிடையாது. அனைத்து பித்அத்துகளும் வழிகேடு என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -‘நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும’ அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்மேலும் கூறினார்கள்: -‘(அமலில்) ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் வழிகேடு தான்: வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவை தான் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்’ ஆதாரம்: அஹ்மத்எனவே அனைத்து பித்அத்களும் நரகத்திற்குரிய வழிகேடுகளேயன்றி வேறில்லை.நபி (ஸல்) அவர்களின் வார்த்தையான ‘அனைத்து பித்அத்களும் வழிகேடுகள்’ என்பது சுருக்கமான அதே நேரத்தில் அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய கட்டளையாகும். இது இஸ்லாத்தின் மிக முக்கியமான கொள்கையாகும்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -‘நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது (இறைவனால்) நிராகரிக்கப்படும்’ என்று நபி (ஸல்) கூறியதாக அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்” (புகாரி, முஸ்லிம் அஹ்மத்)

எனவே மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில், ஒருவர் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இஸ்லாத்தில் புதிதாக ஒன்றை உருவாக்கினால் நிச்சயமாக அது வழிகேடே ஆகும், எனவே அவைகள் நிராகரிக்கடவேண்டிய ஒன்றாகும். இந்த வகையில் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவும் சேரும்.

நபி (ஸல்) அவர்களுடைய பிறந்த தினங்களை கொண்டாடுவோருக்கு நம்முடைய கேள்விகள்:

-நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடி அதன் மூலம் அவர்களைக் கண்ணியப்படுத்துவதாக இருந்தால் இத்தகைய நல்லா செயல்களை ஏன் நபித்தோழர்களும், அவர்களுக்குப் பின் வந்த மூன்று தலைமுறையினரும் செய்யவில்லை. அவர்களுக்கு இத்தகைய நல்ல செயல்கள் தெரியவில்லை என்று பின் இந்த சஹாபாக்களுக்குப் பின்னர் வந்த சமுதாயத்தினர் கண்டுபிடித்தார்களா? இந்த புதுமையைக் கண்டு பிடித்தவர்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நேர்வழி பெற்ற கலீபாக்கள், சஹாபாக்கள் மற்றும் அடுத்து வந்த இரண்டு சமுதாயத்தவர்களான தாபியீன்கள் மற்றும் தபஅ தாபயீன்களை விடச் சிறந்தவர்களா? நிச்சயமாக இல்லை. பின்னர் அவர்களே செய்யாத புதுமையான ஒன்றை நாம் செய்ய வேண்டும்?6f) இஸ்லாம் நபி (ஸல்) அவர்களின் மீது அன்பு செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது. எனவே நாங்கள் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடி அவர்கள் மீது அன்பு செலுத்துகிறோம்.

-நபி (ஸல்) அவர்களின் மீது அன்பு செலுத்துவது முஸ்லிமான ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும். ஒருவர் தம்முடைய உயிர், பொருள், குடும்பம் மற்றும் பெற்றோர்கள் இவர்கள் அனைவரையும் விட நபி (ஸல்) அவர்களை அதிகம் நேசிக்காதவரை அவர் உண்மையான முஃமினாக மாட்டார். ஆனால் அதற்காக நபி (ஸல்) அவர்கள் ஏவிய நற்செயல்களைச் செய்வதை விட்டு விட்டு அவர்கள் தடுத்த பித்அத்தான செயல்களைச் செய்வது என்பது எவ்வாறு அறிவுப்பூர்வமானதாகும். ஒருவர் மீது அன்பு செலுத்துவது என்பது அவர் சொன்னதையெல்லாம் செய்வதும் அவர் தடுத்ததிலிருந்து விலகி கொள்வது தானே அவர் மீது மரியாதை செலுத்தி அன்பு செலுத்துவது ஆகும்?

நபி (ஸல்) அவர்கள் மீது அன்பு செலுத்துவது என்பது அவர்களின் சுன்னத்தான வழிமுறைகளை பின்பற்றி அவற்றை உறுதியாகப் பற்றிப் பிடித்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களின் சுன்னத்திற்கு மாற்றமான செயல்களைச் செய்வதிலிருந்தும் விலகியிருத்தல் ஆகும். நிச்சயமாக நபி (ஸல்) அவர்களின் சுன்னத்திற்கு மாற்றமான அனைத்தும் பித்அத் ஆவதோடல்லாமல் நபி (ஸல்) அவர்களுக்குக் கீழ் படிய மறுப்பதாகும். நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதும் இதில் அடங்கும். ஒருவரின் நல்ல எண்ணம் அவருக்கு இஸ்லாத்தில் பித்அத்தை செய்வதற்குரிய அனுமதி ஆகாது.

இஸ்லாம் என்பது இரண்டு முக்கியமான விஷயங்களில் அமைந்துள்ளது.

1. இக்லாஸ் என்னும் மனத்தூய்மை.

2. நபி (ஸல்) அவர்களின் வழி முறையைப் பின்பற்றுவது.

எனவே நபி (ஸல்) அவர்கள் மீது அன்பு செலுத்துவது என்பது நபி (ஸல்) அவர்களுடைய மற்றும் குர்ஆனுடைய கட்டளைகளை மீறி செயல்படுவது அல்ல! மாறாக நபி (ஸல்) அவர்களுடைய சொல் செயல் அங்கீகாரம் ஆகியவைகளை ப்பின்பற்றுவதன் மூலம் அவர்களை கண்ணியப்படுத்தி அன்பு செலுத்துவதாகும்.

6g) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் மூலம் நாம் அவர்களின் வரலாற்றைப் படித்து அதன் மூலம் மற்றவர்களை நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்ற ஊக்கப்படுத்துகிறோம்:

-நாம் இது வரை விளக்கியவைகளே இந்தக் இவர்களின் இந்தக் கேள்விக்கும் பதிலாக அமைகிறது. நபி (ஸல்) அவர்களின் வரலாற்றைப் படித்து அவர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறையைப் எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும், வருடம் முழுவதும் ஏன் தாம் மரணமடையும் வரையிலும் பின்பற்றி வாழ்வது ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமையாகும். ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும் அவ்வாறு செய்வது என்பது பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு ஆகும். மேலும் இவ்வாறு செய்வதன் மூலம் அவர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து வெகுதூரம் விலகிச் செல்கிறார்.7) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவது குற்றத்திற்குரிய பித்அத்தே!:

-எந்த வகையில் பார்த்தாலும் நபி (ஸல்) அவர்களுடைய பிறந்த நாளைக் கொண்டாடுவது என்பது குற்றத்திற்குரிய பித்அத் என்ற இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட நூதன செயலாகும்.ஒவ்வொரு முஸ்லிமும் இந்தச் செயல்களை தடுத்து நிறுத்த முடியுமானவரை முயற்சி எடுத்து நபி (ஸல்) அவர்களின் சுன்னாவை மேலோங்கச் செய்யப் பாடுபடவேண்டும்.

இந்த நூதன செயல்களைச் செய்பவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கவேண்டும். ஏனென்றால் இத்தகையவர்கள் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவைப் பின்பற்றுவதற்குப் பதிலாக புதிய அனாச்சாரங்களையும் பித்அத்களையுமே மார்க்கம் என்று கருதி செயல்படுவர்.

எத்தனை நபர்கள் இந்த நூதன செயல்களைச் செய்தாலும் ஒரு உண்மையான முஃமின் அவர்களைப் பின்பற்றக்கூடாது. மாறாக அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையை, அதை பின்பற்றுபவர்கள் வெகு சொற்பமாயினும் சரியே அதை மட்டுமே பின்பற்ற வேண்டும்.

சத்தியத்தின் அளவுகோல் எத்தனை நபர்கள் அதை செய்கிறார்கள் அல்லது பேசுகிறார்கள் என்பது அல்ல! மாறாக சத்தியத்தின் அளவு கோல் உண்மையே!8) கருத்து வேறுபாடு ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்?நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

-‘உங்களில் யாரேனும் (நீண்ட நாள்) வசிப்பீர்களானால் பல வேறுபாடுகளைக் காண்பீர்கள். என்னுடைய வழிமுறையையும் எனக்குப் பின்னால் வரக்கூடிய நேர்வழிபெற்ற கலிபாக்களின் வழிமுறைகளையும் பின்பற்றி நடக்க நான் உங்களை வலியுறுத்துகிறேன். அவைகளை வலுவாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். (மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்படுவதை விட்டும் எச்சரிக்கையாக இருங்கள்; ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்’ (ஆதாரம் அஹ்மத் மற்றும் திர்மிதி)

இந்த ஹதீஸில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் தோன்றக் கூடிய காலக்கட்டங்களில் நாம் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக விளக்கிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். புதிதாக தோன்றக் கூடியவைகள் அனைத்தும் வழிகேடுகள் என்றும் அவைகளை விட்டும் எச்சரிக்கையாக இருக்குமாறும் நமக்கு வலியுறுத்திக்கிறார்கள்.எனவே நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலோ அல்லது நேர்வழிபெற்ற கலிபாக்களின் வழிமுறைகளிலோ அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாததால் இது வழிகேட்டின் பால் இழுத்துச் செல்லும் ஒரு பித்ஆத் ஆகும். இதுவே மேற்கூறப்பட்ட ஹதீஸின் கருத்துப்படி உள்ள பொருளாகும்.

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: -நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் – இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (அல்குர்ஆன் 4:59)

இந்த வசனத்தில் அல்லாஹ்வுக்குக் கீழ் படியுங்கள் என்று கூறப்பட்டிருப்பதன் விளக்கமாவது அல்லாஹ்வின் கூற்றாகிய அல்-குர்ஆனுக்கு கீழ்படிவதாகும்.

அல்லாஹ்வின்தூதருக்கு கீழ்படியுங்கள் என்றால் அவர்களது மறைவிற்குப் பின்னர் அவர்களுடைய சுன்னாவைப் பின்பற்றுதல் என்பதாகும்.

ஏதேனும் பிணக்கு அல்லது கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அல்லாஹ்வுடைய வேதத்திலும் அவனுடைய தூதரின் சுன்னாவிலும் தான் தீர்வு காணவேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்.

எனவே குர்ஆனிலோ அல்லது சுன்னாவிலோ நபி (ஸல்) அவர்களின் பிறந்த நானைக் கொண்டாடுமாறு எங்கே கூறப்பட்டிருக்கிறது? யாரேனும் இந்தச் செயலைச் செய்தால் அல்லது நல்லது எனக் கருதினால் இதிலிருந்து அவர் உடனடியாக மீண்டு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்கவேண்டும். இதுவே உண்மையைத் தேடும் ஒரு முஃமினின் பண்பாகும். ஆனால் இந்த உண்மை தெள்ளத் தெளிவாக விளங்கிய பின்னரும் யாரேனும் பிடிவாதமாகவும் ஆணவமாகவும் இருந்தால் அவருடைய கணக்கு அல்லாஹ்விடமே உள்ளது.அல்லாஹ்வின் வேதமாகிய அல்-குர்ஆனையும் அவனுடைய இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் தெளிவான சீரிய வழிகாட்டுதல்களையும் நாம் அல்லாஹ்வை சந்திக்கும் வரையிலும் உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு அவற்றைப் பின்பற்றி வாழ வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவோம்.

நன்றி: http://www.islam-qa.com/ & http://suvanathendral.com/portal

Sunday, February 14, 2010

'காதலர் தினம்' - 14 பிப்ரவரி

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 15ஆம் நாளிதழ்களில் அதற்கு முதல் நாள் (14 பிப்ரவரி) 'காதலர் தினம்' கொண்டாட(?)ப் பட்டதும் அதில் ஏற்பட்ட ரசாபாசங்களும் அவமானங்களும் செய்திகளாக விரிந்திருக்கும். இன்று 'காதலர் தினம்' நாடு முழுதும் கொண்டாடப்பட்ட இலட்சணம் நாளைய நாளிதழ்களில் வெளியாகும். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இளம் தலைமுறை என்போர் மிகப் பெரிய சொத்தாவர். எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்க்கை சிறந்ததாக அமைய அவர்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள் உயர்ந்ததாக அமைவதில் கவனம் செலுத்த வேண்டியது பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் அரசுகளின் கடமையாகும். வளரும் பருவத்தில் அவர்களுக்கு அமைத்துக் கொடுக்கப்படும் பாதையே அவர்களின் எதிர்கால வாழ்க்கையின் தரத்தினை நிர்ணயிக்கிறது.

ஆனால், நாகரீகத்தின் உச்சியில் உள்ளதாகப் பெருமைப்பட்டுக் கொள்ளும் இக்காலத்தில் பிள்ளைகளின் வாலிபப் பருவம் என்பது அவர்களின் பெற்றோரைத் தீக்கணலில் நிற்க வைத்துள்ளது என்றால் அது மிகையாகாது. அறிவியலின் முன்னேற்றத்தால் கண்டுபிடிக்கப்பட்டப் பல நவீன உபகரணங்கள், புதிய தலைமுறையினரின் பொழுதுபோக்கு அம்சங்கள் என அனைத்திலும் இளம் தலைமுறையைச் சீரழிக்கும் அனைத்து அம்சங்களும் கலந்து காணப்படுகின்றன.

இவற்றில், இந்தப் பிப்ரவரி 14 ஆம் நாளைக் கொண்டாடுவதற்குச் சூட்டப்பட்ட நாமகரணமும் ஒன்று. ஆசிரியர்களைக் கவுரவிக்க 'ஆசிரியர் தினம்', தாய்மார்களைக் கவுரவிக்க 'அன்னையர் தினம்', சுற்றுப்புறச் சூழலின் முக்கியத்துவத்தை உணர்ந்த 'சுற்றுப்புறச் சூழல் தினம்' என ஓராண்டில் கிட்டத்தட்டப் பாதி நாட்களுக்கு ஒவ்வொரு பெயரிட்டு நினைவு கூர்வதற்கு இடையில், காதலர்களை மகிமைப் படுத்தக் 'காதலர் தின'மாம்!

பொதுமக்களுக்குத் தீமை விளைவிக்கக் கூடியது என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் "புகை பிடிப்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு!" முத்திரையுடன் புகைப்பொருட்களை விற்கவும் தனி மனிதனுக்கும் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் சாபக்கேடானது என நன்றாகத் தெரிந்திருந்தும் "பார் வசதியுடன் கூடிய மது விற்பனைச் சாலைகளை" அரசே நடத்த ஏற்பாடு செய்தும் சமூக வாழ்வையே சீர்குலைக்கக்கூடிய மிகப்பெரிய உயிர்க்கொல்லி வைரஸ் தொழிற்சாலை எனத் தெரிந்திருந்தும் 'ரெட் லைட் ஏரியா' என்ற பெயரில் லைசன்ஸ் கொடுத்து விபச்சாரம் செய்யவும் அனுமதி வழங்குகின்ற "மக்களைப் பாதுகாக்கும்(?) அரசு"கள்.

"என் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும்" என்ற எதிர்பார்ப்புடன் தன் பிள்ளைகளின் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்யும் பெற்றோர்கள்தாம் இவ்விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இஸ்லாமியக் கலாச்சாரத்திற்கு மட்டுமின்றி, பண்பாட்டைப் பேணுகின்ற எந்தக் கலாச்சாரத்துக்கும் எவ்வகையிலும் ஒவ்வாத இந்த ஆபாச தினச் சிந்தனையில் உள்ள தீமைகளைக் குறித்த போதிய அறிவு பெற்றோர்களுக்கு இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் பள்ளிப்பருவத்தையும் விட்டு வைக்காத இந்தக் கேடுகெட்ட கலாச்சாரச் சீரழிவில் விழுந்து விடாமல் வளரும் தலைமுறையைக் காக்க இயலும்.

பண்டைய ரோமர்கள் கொண்டாடிய ஒரு பண்டிகையின் மாற்று உருவே 'வாலண்டைன்" என்ற ஒருவரின் பெயரால் இன்று கொண்டாடப்படும் இந்த ஆபாச தினம்.

ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அவனுக்குக் கொண்டாடுவதற்கு இரு பண்டிகைகள் மட்டுமே உண்டு. இவையன்றி வேறு எதற்காகவும் எந்த ஒரு நாளையும் கொண்டாடுவது மார்க்கம் அனுமதிக்காத செயலே. மார்க்கம் அனுமதிக்காக ஒன்றைச் செய்பவன் அழிவை நோக்கிச் செல்கின்றான் என்பது தூதரது எச்சரிக்கையாகும்.

"மாற்றுமத கலாச்சாரத்தைப் பின்பற்றுபவன் என்னைச் சார்ந்தவன் அல்லன்" எனவும் "மாற்றுக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் அவர்களாகவே மாறி விடுகின்றனர்" எனவும் அறிவுறுத்திய தூதரின் சொற்களை மனதில் இருத்துபவர்கள், இத்தகைய மார்க்கம் காட்டாத மாற்றாரின் கலாச்சாரத்திலிருந்து விலகியே இருப்பர்.

"அலீயே!, அன்னியப் பெண்ணைப் பார்க்கும் (இயல்பான) உமது முதல் பார்வை உம்முடையதாகும்; (கூர்த்த) இரண்டாவது பார்வை ஷைத்தானுடையதாகும்" என அந்நியப் பெண்களைப் பார்ப்பதைக்கூட தூதர் தடை செய்திருக்கும் பொழுது, மனைவியர் அல்லாத மாற்றுப் பெண்களுடன் இத்தகைய ஆபாச தினக் கொண்டாட்டங்களைப் பூங்கொத்துக் கொடுத்தும் வாழ்த்து அனுப்பியும் கொண்டாடும் இளைய தலைமுறைகள், ஷைத்தானுடன் ஒப்பந்தம் செய்து நரகத்தை நோக்கித் தமது பயணங்களை அமைத்துக் கொள்கின்றனர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அந்நியப் பெண்களுக்கு முன்பாக, "முஃமினான ஆண்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்" என்பது படைத்தவனின் கட்டளையாகும். இத்தகைய உயர்ந்த, தூய்மையான வாழ்க்கை முறையைக் கற்பித்துத் தரும் இஸ்லாமிய மார்க்கத்தை வாழ்க்கை நெறியாகப் பின்பற்றும் முஸ்லிம்கள், அந்நியப் பெண்டிருடன் அனுமதியற்ற உறவுகளைக் கொள்ள வழிகோலும் இத்தகையக் கலாச்சாரச் சீரழிவுக் கொண்டாட்டங்களின் பக்கம் செல்லாமல் இருப்பதோடு, சமூகத்தைச் சீரழிக்கும் இத்தகைய அனுமதிகளுக்கு எதிராக போராடவும் முன்வரவேண்டும்.

"முஃமினான பெண்கள், அவர்களது தலை முந்தானைகளைக் கொண்டு மார்பை மறைத்துக் கொள்ளட்டும்", என்றும் "அவர்கள் கண்ணியமானவர்களாக அறியும் பொருட்டு, அவர்கள் (அவசியமின்றி) வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம்" எனறும் அல்லாஹ் அறிவுரை பகர்கின்றான்.

"உலகில் செல்வங்களிலேயே மிக உயர்ந்த செல்வமாக நல்லொழுக்கப் பெண்ணை" இஸ்லாம் காண்கின்றது.

இவ்வாறு ஆண்களையும் பெண்களையும் கண்ணியமான வாழ்க்கை வாழப் பணிக்கும் தத்துவங்களை உள்ளடக்கிய இஸ்லாம், உலகின் அமைதியான வாழ்வுக்கும் சுபிட்சமான சமூக கட்டமைப்பிற்கும் உத்தரவாதம் வழங்கும் ஒரே மார்க்கம் எனலாம்.
thanks for auther of this article

Saturday, April 26, 2008

'சகுணம்' ஓர் அலசல்

அல்லாஹ்வின் திருப் பெயரால்
மனித வரலாற்றில் சகுணம் தொடர்ந்தேர்ச்சியான ஒரு தொற்று நோயாகவே காணப்படுகின்றது. அதனை வைத்து சிலர் வயிறு வளர்ப்பதையும் நாட்டு நடப்புக்கள் எமக்கு எடுத்துக் கூறுகின்றன. அறிவியல் வளர்ச்சியடைந்த இந்த நவீன யுகத்திலும் படித்தவர்கள், பாமரர்கள் என வேறுபாடின்றி அனைவரும் சாத்தானிய சகுணத்தின் சாக்கடை வெள்ளத்தில் அடிபட்டுச் செல்பவர்களாகவே இருக்கின்றனர்.
எனவே எமது சமூகத்தின் நன்மை கருதி சகுணத்தின் உண்மை நிலைப்பாட்டையும், அதனால் ஏற்படும் தீமைகளையும் உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம். படித்து பயன் பெற வேண்டும் என்பதே எங்கள் அவா!
'சகுணம்' என்பதற்கு அரபியில் 'ததய்யுர்' எனப்படும். இது 'தய்ர்' எனும் பெயர்ச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். புறவைக்கு அரபியில் 'தய்ர்' என்பர்.
இதற்கான காரணத்தை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்: அன்றைய அறியாமைக் கால மக்கள் ஒரு பிரயாணத்தை ஆரம்பிக்கும் போது பறவைகளை பறக்கச் செய்து அது பறக்கும் திசைக் கேற்ப அப்பிரயாணத்தின் முடிவைத் தீர்மானிப்பார்கள். அதாவது அப்பறவை வலப்புரம் பறந்தால் அதனை நற்சகுணமாகக் கருதி பிரயாணத்தைத் தொடர்பவர்களாகவும், அது இடப்புறம் பறந்தால் அது துர்ச்சகுணம் என்று ஆரம்பித்த பிரயாணத்தை நிறுத்தக் கூடியவர்களாகவும் இருந்தனர். எனவே அக்காலத்தில் பறவையை வைத்து சகுணம் பார்த்ததால் 'ததய்யுர்' என சகுணத்திற்கு பெயர் வந்தது.
இது அக்காலத்தில் வழக்கிலிருந்த சகுணமாகும். இன்று நமது நாட்டு மக்களைப் பொறுத்;த வரை பல முறைகளில் சகுணம் பார்க்கிறார்கள். உதாரணமாக:
  • பிரயாணத்தை ஆரம்பிக்கும் போது, பூனை, வெற்றுக் குடம் சுமந்த பெண், விதவைப் பெண், கூன் குருடு போன்றோர் குறுக்கருத்தால் இதனை கெட்ட சகுணமாக கருதி ஆரம்பித்த பயணத்தை நிறுத்தி விடுதல்.
  • இராக் காலங்களில் யாராவது வீட்டில் ஆந்தை கத்தினால் இது கெட்ட சகுணம் எனக் கருதி அதனை விரட்டி விடுவார்கள். அதை விரட்டுவதற்கு அவர்கள் கையாளும் முறை அவர்களது நம்பிக்கையை விட அபத்தமாக இருக்கும். சிலர் ஆந்தையை விரட்ட எரியும் அடுப்பில் உப்பை போடுவார்கள். சிலர் எரியும் அடுப்பில் அடுப்பூதும் குழலை சூடேற்றுவார்கள் அப்படிச் செய்தால் அது பறந்து விடும் என்பது அவர்களது ஐதீகம்!
  • சிலர் ஏதாவது ஒரு காரியத்தைச் செய்ய நாடும்போது பல்லி கத்திவிட்டால் இவ்விடயத்தில் ஏதோ தீங்கு இருக்கின்றது எனக் கருதி அதை கைவிட்டு விடுவார்கள். அதனால் தான் தமிழில் கூட பல்லி கத்தும் என்று கூறாமல், பல்லி சொல்லும் என்பர். சகுணம் தமிழ் மொழியைக் கூட விட்டுவைக்கவில்லை!- சிலரது வீட்டில் பகற் நேரங்களில் தொடராக காகம் கறைந்தால் யாரோ வீட்டிற்கு விருந்தாளிகள் வரப் போகிறார்கள் என்று எண்ணுதல். காகம் கூடக் கறையக் கூடாதா?
  • வீட்டில் வளர்க்கும் புறா பறந்து சென்றுவிட்டால், பறக்கத்தும் பறந்து போய்விடும் என்று நினைத்தல்!
  • சிட்டுக் குருவி – ஊர்க் குருவி வீட்டில் கூடு கட்டினால் பறகத் கொட்டும் என எண்ணுதல்!- பயணத்தின் போது ட்ரஃபிக் சிக்னல் தொடராக மூன்றும் சிகப்பில் காணப்பட்டால் பிரயாணத்தில் தடை இருப்பதாக நினைத்தல். பார்த்தீர்களா நவீன கண்டு பிடிப்புகளைக் கூட மூட நம்பிக்கையினால் பினைத்துப் போடுகிறார்கள்!
  • வீட்டிலோ, தொழில் நிறுவனங்களிலோ அசோக் மரம் நாட்டினால் துக்கம் சூழ்ந்து கொள்ளும் என நம்புதல். காரணம் அந்த மரத்தின் கிளைகள் எப்போதும் கீழ் நோக்கியே இருக்கும், அது சோகமாக காட்சி தருவது போன்று தெறிவதாக நினைத்து வீட்டிலும் சோகம் ஏற்படும் என்பது அவர்களது நம்பிக்கை!
  • சிலர் சில இலக்கங்களை ராசியான இலக்கங்களாகக் கருதுதல். உதாரணமாக: 13, 786 போன்றவற்றைக் கூறலாம்.
இப்படி நாட்டிற்க்கு ஏற்ப, இடத்திற்கு ஏற்ப, சமூகங்களுக்கு ஏற்ப சகுண முறைகளும், நம்பிக்கைகளும் வித்தியாசப்படுகின்றன. அதே போன்று சிலர் எந்த ஒன்றைச் செய்வதாக இருந்தாலும் நல்ல நேரம், சுப நேரம் பார்த்துத் தான் அதனை ஆரம்பிப்பார்கள்.

இந்துக்களால் வெளியிடப்படும் லீலா பஞ்சாங்க சித்திரக் கலண்டர், ராசி பலன் இவற்றையே நம்பி அவற்றில் மூழ்கி தமது வாழ்க்கையின் வளத்தை குழிதோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது வெரும் காலத்தைக் கடத்தும் ஒரு செயல். மற்றும் வெறும் போலித்தனமான செயல் என்பதற்கு நாம் நாளாந்தம் காணும் செய்திகள் ஒரு எடுத்துக் காட்டாகும். உதாரணமாக, இருவருக்கு திருமண ஒப்பந்தம் செய்யும் போது ராசி பலன், ஜாதகப் பொருத்தம், சனி கிரகம், செவ்வாய் கிரகம் போன்றன இருக்கிறதா? என்றெல்லாம் பார்த்து, தோஷங்கள் இருந்தால் அவற்றிற்கு பரிகாரமெல்லாம் செய்து, பல நல்;லோர்கள் என கருதப்படுபவர்களின் ஆசிர்வாதங்களோடு, கெட்டிமேளம் கொட்டி ஒரு திருமணம் சிறப்பாக நடந்தேரும். அடுத்த நாள் காலையில் தினப் பத்திரிக்கையைத் திறந்தால் நேற்று திருமண மண்டபத்திலிருந்து வீடு திரும்பிய புதுமணத் தம்பதிகள் வாகன விபத்தில் மரணம்! எனும் திடீர் தகவலை கொட்டெழுத்துக்களில் வெளியிட்டிருப்பார்கள். இது எதனைக் காட்டுகிறது. இது வரைக்கும் இவர்கள் செய்த சடங்கு சம்பிரதாயம், சகுணம் அனைத்தும் வெறும் போலி என்பதை இவர்கள் புறிந்து கொள்ளாத போது இறைவன் இப்படிச் சம்பவங்களை நிகழ்த்திக் காட்டுகிறான்.

இது இப்படியிருக்க காதலித்து கலப்பு திருமணம் செய்பவர்கள், ஓடிப் போய் பதிவுத் திருமணம் செய்து தம்பதியினராக வாழ்பவர்களுக்கு இந்த சடங்கு சமபிரதாயங்கள் பதில் கூறட்டும்.ஆக சகுணம் பார்த்தல், உலகில் மடமையை அதிகரிக்கச் செய்யும், மறுமையில் தண்டனையைத் தான் பெற்றுத் தரவல்லது. சுருங்கக் கூறின், சகுணம் இணைவைப்புக்கான வாயிலாகும்.

இமாம் இப்னுல் கையும் கூறுகிறார்கள்: 'சகுணமானது அதை நம்பக் கூடியவனையும் அதற்குப் பயப்படக் கூடியவனையும் தான் பாதிக்கும். ஆனால் யார் அதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லையோ அவனை ஒரு பொழுதும் பாதிக்காது'.


சகுணம் பார்த்து தமது முன்னேற்றத்தைத் தடுத்துக் கொள்வதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. வெரும் பித்தலாட்டம் மட்டும் தான்.

சகுணமாகக் கருதக் கூடிய ஒன்றைப் பார்க்க நேர்ந்தால் அல்லது கண்டால் என்ன கூற வேண்டும்?

(اللهم لا طير إلا طيرك ولا خير إلا خيرك ولا إله غيرك)

(اللهم لايأتي بالحسنات إلا أنت ولا يذهب بالسيئات إلا انت ولا حول ولا قوة إلا بك)

பொருள்: 'இறைவா! உனது சகுணத்தைத் தவிர வேறு சகுணம் கிடையாது. உன நலவைத் தவிர வேறு நலவு கிடையாது. உன்னைத் தவிர வேறு நாயனில்லை'. (ஆதாரம்: அஹ்மத்).

மேலும் 'இறைவா! உன்னைத் தவிர நன்மைகளைத் தருபவன் வேறுயாருமில்லை. தீமைகளைப் போக்குபவனும் உன்னைத் தவிர வேறு யாரும் கிடையாது. உன்னைத் தவிர வேறு எந்த சக்திகளும் எம்மைச் சூழ இல்லை' என்று கூறுமாறு நபியவர்கள் எம்மைப் பணித்துள்ளார்கள்.

சகுணம் பற்றிய சட்டம்:சகுணத்தை மையமாகக் கொண்டு பிரயாணத்தை விடுவது பெரும் பாவமாகும் என இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

'சகுணம் பார்ப்பது இணைவைப்பாகும், சகுணம் பார்ப்பது இணைவைப்பாகும்' என நபியவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரழி) கூறுகிறார்கள். (ஆதாரம்: திர்மிதி)

சகுணத்தை வெறுத்து ஒதுங்குவதனால் அது அவனை சுவனத்திற்கு இட்டுச் செல்லும் என்பது நபி மொழிகளில் இருந்து தெறிய வருகின்றது. நாளை மறுமையில் எந்த விதக் கேள்வி கணக்கோ, தண்டனையோ இன்றி சுவர்க்கம் நுளைபவர்கள் எழுபதுனாயிரம் பேர்களாவர். 'அவர்கள் யாரென்றால், மந்திரிக்காதவர்கள், மந்திரிக்குமாறு யாரையும் பனிக்காதவர்கள், சகுணம் பார்க்காதவர்கள் மற்றும் அல்லாஹ்வையே (எப்போதும்) சார்ந்திருப்பவர்கள்' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

தாவுஸ் என்ற அறிஞர் தனது தோழருடன் ஒரு பிரயாணத்தில் இருக்கும் போது ஒரு காகம் கறைந்து கொண்டு அவர்களைக் கடந்து சென்றது. அதற்கு தோழர், நல்லது நடக்கட்டும் என்றார். இதனைக் கேட்ட தாவுஸ் அவர்கள்: அதனிடத்தில் என்ன நலவு இருக்கிறது! அல்லாஹ் மீது சத்தியமாகச் சொல்கிறேன் என்னுடன் பயணத்தைத் தொடரவேண்டாம் என்றார்கள்.

சகுணம் பார்ப்பதால் ஏற்படும் தீமைகள்:சகுணம் பார்ப்பதால் ஏறாளமான தீமைகள் ஏற்படுகின்றன. அவற்றில் சிலதை மட்டும் இங்கு தருகிறோம்.

  1. எமது இறை விசுவாசத்திற்கு நேர் எதிரானது.
  2. தவக்குல் எனும் அல்லாஹ்வைச் சார்ந்திருத்தலை தடுக்கின்றது.
  3. ஒரு நன்மையை தரவோ அல்லது ஒரு தீமையைத் தடுக்கவோ முடியாதது.
  4. சிந்திக்கும் திறன் இல்லாமைக்கு சான்றாக அமைகிறது.
  5. மனக் குழப்பத்தை தொடர்ந்தும் உண்டாக்கவல்லது.
  6. வாழ்க்கையில் தோழ்வியை தரக் கூடியது.
  7. அறியாமைக் கால மக்களின் பண்புகளில் ஒன்று.
  8. நன்மையோ, தீமையோ அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கிறது எனும் விதியை நிராகரிக்க விடுக்கப்படும் ஒரு பகிரங்க அழைப்பு.
  9. நபிகளாரின் போதனைக்கு முரண்படுதல்.
  10. அடிப்படைகளற்ற விடயங்களை முற்படுத்தி அவற்றிற்கு அடிமைகளாக்குகின்றது!
சகுணம், சாத்திரம், சடங்கு, சம்பிரதாயம், ஜோதிடம், ராசி-பலன்... போன்ற மூட நம்பிக்கைகளில் தமது காலத்தை வீணடிக்கும் சமூகங்கள் இன்று வரைக்கும் முன்னேராமல் பின்தங்கியிருப்பதையும், இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளே தெறியாத மேற்கத்தியர் நன்றாக முன்னேறிக் கொண்டு செல்வதையும் பாருங்கள். இப்போதாவது சிந்திப்போமாக!

இது சகுணம் பற்றிய சுருக்கமான ஒரு அலசலாகும். இதன் பிறகும் கண்டதையெல்லாம் சகுணத்திற்கு உற்படுத்தி நம் வாழ்க்கையை பாழாக்கிக் கொள்ளாமல் இத்தீமையிலிருந்து விலகி நடக்க வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் அருள்பாலிப்பானாக!

- ஆக்கம்/தொகுப்பு: நிர்வாகி