Monday, April 28, 2008

அவர்கள் செய்த குற்றம்தான் என்ன?

மனிதாபிமாத்தின் சின்னங்களே!
இன்று இரவு பத்து மணி பி.பி.சி செய்தி பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் வலமை போல் பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலியர்கள் நடாத்தும் இன வெறியாட்டம் பற்றிய செய்தியும் இருந்தது. அதில் தங்களது வீட்டில் சந்தோஷமாக தனது மக்களுடன் உணவருந்திக் கொண்டிருந்த போது செல் விழுந்ததில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தாயும் தனது நான்கு சிறு குழந்தைகளும் அநியாயமாக கொள்ளப்பட்டனர். என்ற செய்தி எப்போதும் போல் பல கேள்விகளை மீண்டும் என் கன்னத்தில் அறைந்து கொண்டிருந்தன.

இந்த பயங்கரவாத வெறியாட்டத்தில் தினம் தினம் பாலஸ்தீன அப்பாவி மக்களின் உயிர்கள் பறிதாபமாகப் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நீதியற்ற நீதிமன்றத்தல் உள்ள நீதி தேவதையின் கண்கள்தான் கருப்புத் துணியால் கட்டப்பட்டுளன. ஆனால் உலகத்தாரின் கண்களை கருப்புத் துணியால் கட்டப்பட்டது எப்போது? எனக்குத் தெறியவில்லை.
மனிதத்திற்கு நடந்ததென்ன? இக்கேள்வியை யாரிடம் முன்வைப்பது? என்பதை இன்றுவரை சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்! இதற்கான பதிலை எப்போது என்னால் காண முடியும்? இது என்னைப் போல எத்தனையோ உள்ளங்களின் தேடல்.

அவர்கள் செய்த குற்றம்தான் என்ன? தயவுசெய்து யாராவது எனக்கு கூறுவீர்களா? ஏனிந்த கொடுமை? ஏன்? ஏதற்காக? மனிதர்களைக் கொன்றுவிட்டு எதை புதிதாய் படைக்கப் பார்க்கிறார்கள்?!

உங்களுக்கும் மனிதாபிமானம் கொஞ்சமேனும் இருந்தால் அவர்களின் நீதிக்காக, நிம்மதிக்காக சற்று சிந்தியுங்களேன்!ஒவ்வொருவரும் உருப்படியாக சிந்தித்தால் ஒரு நாள் பதில் கிடைக்கும். அதுவரைக்கும் காத்திருக்கிறேன்.
- ஆக்கம்: நிர்வாகி

Saturday, April 26, 2008

'சகுணம்' ஓர் அலசல்

அல்லாஹ்வின் திருப் பெயரால்
மனித வரலாற்றில் சகுணம் தொடர்ந்தேர்ச்சியான ஒரு தொற்று நோயாகவே காணப்படுகின்றது. அதனை வைத்து சிலர் வயிறு வளர்ப்பதையும் நாட்டு நடப்புக்கள் எமக்கு எடுத்துக் கூறுகின்றன. அறிவியல் வளர்ச்சியடைந்த இந்த நவீன யுகத்திலும் படித்தவர்கள், பாமரர்கள் என வேறுபாடின்றி அனைவரும் சாத்தானிய சகுணத்தின் சாக்கடை வெள்ளத்தில் அடிபட்டுச் செல்பவர்களாகவே இருக்கின்றனர்.
எனவே எமது சமூகத்தின் நன்மை கருதி சகுணத்தின் உண்மை நிலைப்பாட்டையும், அதனால் ஏற்படும் தீமைகளையும் உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம். படித்து பயன் பெற வேண்டும் என்பதே எங்கள் அவா!
'சகுணம்' என்பதற்கு அரபியில் 'ததய்யுர்' எனப்படும். இது 'தய்ர்' எனும் பெயர்ச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். புறவைக்கு அரபியில் 'தய்ர்' என்பர்.
இதற்கான காரணத்தை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்: அன்றைய அறியாமைக் கால மக்கள் ஒரு பிரயாணத்தை ஆரம்பிக்கும் போது பறவைகளை பறக்கச் செய்து அது பறக்கும் திசைக் கேற்ப அப்பிரயாணத்தின் முடிவைத் தீர்மானிப்பார்கள். அதாவது அப்பறவை வலப்புரம் பறந்தால் அதனை நற்சகுணமாகக் கருதி பிரயாணத்தைத் தொடர்பவர்களாகவும், அது இடப்புறம் பறந்தால் அது துர்ச்சகுணம் என்று ஆரம்பித்த பிரயாணத்தை நிறுத்தக் கூடியவர்களாகவும் இருந்தனர். எனவே அக்காலத்தில் பறவையை வைத்து சகுணம் பார்த்ததால் 'ததய்யுர்' என சகுணத்திற்கு பெயர் வந்தது.
இது அக்காலத்தில் வழக்கிலிருந்த சகுணமாகும். இன்று நமது நாட்டு மக்களைப் பொறுத்;த வரை பல முறைகளில் சகுணம் பார்க்கிறார்கள். உதாரணமாக:
 • பிரயாணத்தை ஆரம்பிக்கும் போது, பூனை, வெற்றுக் குடம் சுமந்த பெண், விதவைப் பெண், கூன் குருடு போன்றோர் குறுக்கருத்தால் இதனை கெட்ட சகுணமாக கருதி ஆரம்பித்த பயணத்தை நிறுத்தி விடுதல்.
 • இராக் காலங்களில் யாராவது வீட்டில் ஆந்தை கத்தினால் இது கெட்ட சகுணம் எனக் கருதி அதனை விரட்டி விடுவார்கள். அதை விரட்டுவதற்கு அவர்கள் கையாளும் முறை அவர்களது நம்பிக்கையை விட அபத்தமாக இருக்கும். சிலர் ஆந்தையை விரட்ட எரியும் அடுப்பில் உப்பை போடுவார்கள். சிலர் எரியும் அடுப்பில் அடுப்பூதும் குழலை சூடேற்றுவார்கள் அப்படிச் செய்தால் அது பறந்து விடும் என்பது அவர்களது ஐதீகம்!
 • சிலர் ஏதாவது ஒரு காரியத்தைச் செய்ய நாடும்போது பல்லி கத்திவிட்டால் இவ்விடயத்தில் ஏதோ தீங்கு இருக்கின்றது எனக் கருதி அதை கைவிட்டு விடுவார்கள். அதனால் தான் தமிழில் கூட பல்லி கத்தும் என்று கூறாமல், பல்லி சொல்லும் என்பர். சகுணம் தமிழ் மொழியைக் கூட விட்டுவைக்கவில்லை!- சிலரது வீட்டில் பகற் நேரங்களில் தொடராக காகம் கறைந்தால் யாரோ வீட்டிற்கு விருந்தாளிகள் வரப் போகிறார்கள் என்று எண்ணுதல். காகம் கூடக் கறையக் கூடாதா?
 • வீட்டில் வளர்க்கும் புறா பறந்து சென்றுவிட்டால், பறக்கத்தும் பறந்து போய்விடும் என்று நினைத்தல்!
 • சிட்டுக் குருவி – ஊர்க் குருவி வீட்டில் கூடு கட்டினால் பறகத் கொட்டும் என எண்ணுதல்!- பயணத்தின் போது ட்ரஃபிக் சிக்னல் தொடராக மூன்றும் சிகப்பில் காணப்பட்டால் பிரயாணத்தில் தடை இருப்பதாக நினைத்தல். பார்த்தீர்களா நவீன கண்டு பிடிப்புகளைக் கூட மூட நம்பிக்கையினால் பினைத்துப் போடுகிறார்கள்!
 • வீட்டிலோ, தொழில் நிறுவனங்களிலோ அசோக் மரம் நாட்டினால் துக்கம் சூழ்ந்து கொள்ளும் என நம்புதல். காரணம் அந்த மரத்தின் கிளைகள் எப்போதும் கீழ் நோக்கியே இருக்கும், அது சோகமாக காட்சி தருவது போன்று தெறிவதாக நினைத்து வீட்டிலும் சோகம் ஏற்படும் என்பது அவர்களது நம்பிக்கை!
 • சிலர் சில இலக்கங்களை ராசியான இலக்கங்களாகக் கருதுதல். உதாரணமாக: 13, 786 போன்றவற்றைக் கூறலாம்.
இப்படி நாட்டிற்க்கு ஏற்ப, இடத்திற்கு ஏற்ப, சமூகங்களுக்கு ஏற்ப சகுண முறைகளும், நம்பிக்கைகளும் வித்தியாசப்படுகின்றன. அதே போன்று சிலர் எந்த ஒன்றைச் செய்வதாக இருந்தாலும் நல்ல நேரம், சுப நேரம் பார்த்துத் தான் அதனை ஆரம்பிப்பார்கள்.

இந்துக்களால் வெளியிடப்படும் லீலா பஞ்சாங்க சித்திரக் கலண்டர், ராசி பலன் இவற்றையே நம்பி அவற்றில் மூழ்கி தமது வாழ்க்கையின் வளத்தை குழிதோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது வெரும் காலத்தைக் கடத்தும் ஒரு செயல். மற்றும் வெறும் போலித்தனமான செயல் என்பதற்கு நாம் நாளாந்தம் காணும் செய்திகள் ஒரு எடுத்துக் காட்டாகும். உதாரணமாக, இருவருக்கு திருமண ஒப்பந்தம் செய்யும் போது ராசி பலன், ஜாதகப் பொருத்தம், சனி கிரகம், செவ்வாய் கிரகம் போன்றன இருக்கிறதா? என்றெல்லாம் பார்த்து, தோஷங்கள் இருந்தால் அவற்றிற்கு பரிகாரமெல்லாம் செய்து, பல நல்;லோர்கள் என கருதப்படுபவர்களின் ஆசிர்வாதங்களோடு, கெட்டிமேளம் கொட்டி ஒரு திருமணம் சிறப்பாக நடந்தேரும். அடுத்த நாள் காலையில் தினப் பத்திரிக்கையைத் திறந்தால் நேற்று திருமண மண்டபத்திலிருந்து வீடு திரும்பிய புதுமணத் தம்பதிகள் வாகன விபத்தில் மரணம்! எனும் திடீர் தகவலை கொட்டெழுத்துக்களில் வெளியிட்டிருப்பார்கள். இது எதனைக் காட்டுகிறது. இது வரைக்கும் இவர்கள் செய்த சடங்கு சம்பிரதாயம், சகுணம் அனைத்தும் வெறும் போலி என்பதை இவர்கள் புறிந்து கொள்ளாத போது இறைவன் இப்படிச் சம்பவங்களை நிகழ்த்திக் காட்டுகிறான்.

இது இப்படியிருக்க காதலித்து கலப்பு திருமணம் செய்பவர்கள், ஓடிப் போய் பதிவுத் திருமணம் செய்து தம்பதியினராக வாழ்பவர்களுக்கு இந்த சடங்கு சமபிரதாயங்கள் பதில் கூறட்டும்.ஆக சகுணம் பார்த்தல், உலகில் மடமையை அதிகரிக்கச் செய்யும், மறுமையில் தண்டனையைத் தான் பெற்றுத் தரவல்லது. சுருங்கக் கூறின், சகுணம் இணைவைப்புக்கான வாயிலாகும்.

இமாம் இப்னுல் கையும் கூறுகிறார்கள்: 'சகுணமானது அதை நம்பக் கூடியவனையும் அதற்குப் பயப்படக் கூடியவனையும் தான் பாதிக்கும். ஆனால் யார் அதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லையோ அவனை ஒரு பொழுதும் பாதிக்காது'.


சகுணம் பார்த்து தமது முன்னேற்றத்தைத் தடுத்துக் கொள்வதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. வெரும் பித்தலாட்டம் மட்டும் தான்.

சகுணமாகக் கருதக் கூடிய ஒன்றைப் பார்க்க நேர்ந்தால் அல்லது கண்டால் என்ன கூற வேண்டும்?

(اللهم لا طير إلا طيرك ولا خير إلا خيرك ولا إله غيرك)

(اللهم لايأتي بالحسنات إلا أنت ولا يذهب بالسيئات إلا انت ولا حول ولا قوة إلا بك)

பொருள்: 'இறைவா! உனது சகுணத்தைத் தவிர வேறு சகுணம் கிடையாது. உன நலவைத் தவிர வேறு நலவு கிடையாது. உன்னைத் தவிர வேறு நாயனில்லை'. (ஆதாரம்: அஹ்மத்).

மேலும் 'இறைவா! உன்னைத் தவிர நன்மைகளைத் தருபவன் வேறுயாருமில்லை. தீமைகளைப் போக்குபவனும் உன்னைத் தவிர வேறு யாரும் கிடையாது. உன்னைத் தவிர வேறு எந்த சக்திகளும் எம்மைச் சூழ இல்லை' என்று கூறுமாறு நபியவர்கள் எம்மைப் பணித்துள்ளார்கள்.

சகுணம் பற்றிய சட்டம்:சகுணத்தை மையமாகக் கொண்டு பிரயாணத்தை விடுவது பெரும் பாவமாகும் என இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

'சகுணம் பார்ப்பது இணைவைப்பாகும், சகுணம் பார்ப்பது இணைவைப்பாகும்' என நபியவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரழி) கூறுகிறார்கள். (ஆதாரம்: திர்மிதி)

சகுணத்தை வெறுத்து ஒதுங்குவதனால் அது அவனை சுவனத்திற்கு இட்டுச் செல்லும் என்பது நபி மொழிகளில் இருந்து தெறிய வருகின்றது. நாளை மறுமையில் எந்த விதக் கேள்வி கணக்கோ, தண்டனையோ இன்றி சுவர்க்கம் நுளைபவர்கள் எழுபதுனாயிரம் பேர்களாவர். 'அவர்கள் யாரென்றால், மந்திரிக்காதவர்கள், மந்திரிக்குமாறு யாரையும் பனிக்காதவர்கள், சகுணம் பார்க்காதவர்கள் மற்றும் அல்லாஹ்வையே (எப்போதும்) சார்ந்திருப்பவர்கள்' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

தாவுஸ் என்ற அறிஞர் தனது தோழருடன் ஒரு பிரயாணத்தில் இருக்கும் போது ஒரு காகம் கறைந்து கொண்டு அவர்களைக் கடந்து சென்றது. அதற்கு தோழர், நல்லது நடக்கட்டும் என்றார். இதனைக் கேட்ட தாவுஸ் அவர்கள்: அதனிடத்தில் என்ன நலவு இருக்கிறது! அல்லாஹ் மீது சத்தியமாகச் சொல்கிறேன் என்னுடன் பயணத்தைத் தொடரவேண்டாம் என்றார்கள்.

சகுணம் பார்ப்பதால் ஏற்படும் தீமைகள்:சகுணம் பார்ப்பதால் ஏறாளமான தீமைகள் ஏற்படுகின்றன. அவற்றில் சிலதை மட்டும் இங்கு தருகிறோம்.

 1. எமது இறை விசுவாசத்திற்கு நேர் எதிரானது.
 2. தவக்குல் எனும் அல்லாஹ்வைச் சார்ந்திருத்தலை தடுக்கின்றது.
 3. ஒரு நன்மையை தரவோ அல்லது ஒரு தீமையைத் தடுக்கவோ முடியாதது.
 4. சிந்திக்கும் திறன் இல்லாமைக்கு சான்றாக அமைகிறது.
 5. மனக் குழப்பத்தை தொடர்ந்தும் உண்டாக்கவல்லது.
 6. வாழ்க்கையில் தோழ்வியை தரக் கூடியது.
 7. அறியாமைக் கால மக்களின் பண்புகளில் ஒன்று.
 8. நன்மையோ, தீமையோ அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கிறது எனும் விதியை நிராகரிக்க விடுக்கப்படும் ஒரு பகிரங்க அழைப்பு.
 9. நபிகளாரின் போதனைக்கு முரண்படுதல்.
 10. அடிப்படைகளற்ற விடயங்களை முற்படுத்தி அவற்றிற்கு அடிமைகளாக்குகின்றது!
சகுணம், சாத்திரம், சடங்கு, சம்பிரதாயம், ஜோதிடம், ராசி-பலன்... போன்ற மூட நம்பிக்கைகளில் தமது காலத்தை வீணடிக்கும் சமூகங்கள் இன்று வரைக்கும் முன்னேராமல் பின்தங்கியிருப்பதையும், இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளே தெறியாத மேற்கத்தியர் நன்றாக முன்னேறிக் கொண்டு செல்வதையும் பாருங்கள். இப்போதாவது சிந்திப்போமாக!

இது சகுணம் பற்றிய சுருக்கமான ஒரு அலசலாகும். இதன் பிறகும் கண்டதையெல்லாம் சகுணத்திற்கு உற்படுத்தி நம் வாழ்க்கையை பாழாக்கிக் கொள்ளாமல் இத்தீமையிலிருந்து விலகி நடக்க வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் அருள்பாலிப்பானாக!

- ஆக்கம்/தொகுப்பு: நிர்வாகி

Thursday, April 24, 2008

ஹாஜிகளே!

அல்லாஹ்வின் திரு நாமம் போற்றி...

இறைவனின் அழைப்புக்கு
இனிதே சிரம் சாய்த்த
உங்களைக் காணுகையில்
சந்தோஷமாய் உணருகிறேன்.

வாருங்கள் உங்கள் சொந்த இடம் சேர
வாருங்கள் புண்ணியத்தின் கொடைகளை
பூக்கொத்துக்களாய் கொய்து வாருங்கள்.

ஹஜ் செய்தவன்
கண்டுவரும் பாடங்கள் தான்
அவன் - கொண்டுவரும்
எதிர்கால வாழ்க்கையின் ஓடங்கள்!

சடவாத உலகத்தில்
சலைக்காமல் நடை போட்டவர்கள் நாங்கள்
அதனால்தான் - உலக நடப்புக்கள்
நம் நாளிகைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன!

ஹஜ்ஜூக்குப் பின் காத்துக் கிடக்கின்றது
சாத்தானின் சாகசங்கள்!!
சருக்கினால் போதும் வீழ்வது சாக்கடைதான்!

ஹஜ்ஜூக்கு முந்திய காலங்கள்
நீ – கடந்துவந்த கருப்பு நாட்களாகும்.
உன் அனாச்சாரங்கள் ஊமையாய் உறங்குகின்றன
மீண்டும் உணர்வூட்டி உசுப்பிவிடாதே!

வேண்டாத புதினங்களை
விலைக்குவாங்கும் காலத்தை மீண்டும்
உன் விடிந்த வாழ்க்கைக்குள் கலந்து விடாதே
ஒவ்வொரு நாளும் வெள்ளையாய் விடியட்டும்.

சகோதரா!
சந்தோஷ வாழ்க்கையில் சங்கமமாகு
சந்தோஷத்தின் வாடையை நிஜமாய் உணர்வாய்!

வேறுபாடுகளை வேறோடு களைய
வெல்லோட்டம் காணும் தத்ரூபக் காட்சி!!
மாற்றானின் மண்டையை
மறக்கவைக்கும் மங்களகரமான காட்சி!

சாதி வேண்டாம்
சச்சரவும் வேண்டாம்
சாத்தானிய சந்தையிலே சங்கமித்த
சர்வாதிகார சிந்தனையும் வேண்டாம்

உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி
உருவாதல் சாத்தியமோ?
ஊருலகம் போற்றும் வண்ணம்
ஹஜ்ஜில் கண்டோம் ஒற்றுமையை!
- ஆக்கம்: நிர்வாகி

அரக்கர்களின் ஆராக் காமம்!

அன்று தொட்டு இன்று வரை அரக்கர்களின் அராஜகம் உலகாழுகின்றது! உணர்வற்ற பிண்டங்களாய் நாம் காலத்தைக் கடத்தும் போதெல்லாம் என் உணர்வே என்னை எச்சரிக்கின்றன!

அரசியல் வேட்டையில் பாவம் மனிதம் மாட்டிக் கொண்டது. ஆதிக்க சக்திகளுக்கு அது இல்லாததால் மனிதன் வேண்டாப் பொருளாய் ஆனான்!
உலகாழும் உணர்வுகள் மேற்கத்திய மண்டைகளை மரணிக்கச் செய்துவிட்டன! அநியாயமும், அரக்கக் குணமும் அவர்களின் உயர்ந்த பண்புகள்! நடிப்பும், நாடகமும் அவர்களது கைதேர்ந்த கலைகள்!

மனிதம் பேசி, அமைதி தேடி போலி வேடம் போடும் சங்கதிகள் நாளாந்தம் அரங்கேற்றப்படும் நாடகங்கள்! இறுதியில் பின்னனி சக்தியின் பிர்அவ்னியத் தனமும், முன்னனி முரடர்களின் போலி வேஷமும் பிய்த்துக் கொண்டு புறப்பட்டு விடுகின்றன!

அரபுகள் என்றால் அரக்கர்களுக்குக் கொண்டாட்டம் தான்!அங்கேதான், குருதியும் எண்ணெயும் மலிவாய்க் கிடைக்கும்! ஈவிரக்கமற்ற ஈனர்களின் பணப்பேய் இரத்தத்திலும் எண்ணெய் வடித்துப் பார்க்கின்றது!!!

அரக்கர்களின் ஆராக் காமம் அரபைப் புணர்ந்து தொலைக்கின்றன! புணர்ந்த மறுகனமே புனித தேசங்கள் கூட மரணப் பிறசவம் நடத்தின!!
உலகின் இளைய தலைமுறையினர் இலகுவாய்ப் புறிந்து கொள்ள இன்றே புனையப் படுகிறது இந்த இரத்த ஓவியம்! பார்ப்போருக்கெல்லாம் பளிச்சென்று புறிந்துவிடும் அவர்களின் அந்தக் காலங்கள்!!

பாவமறியாப் பச்சிளங் குழந்தைகளும், தள்ளாடும் வயதிலே இறுதி நாற்களை சுவாசித்துக் கொண்டிருக்கும் கிளடுகளும் கூட அவர்களின் குறிக்குத் தவறவில்லை! அவர்களின் கதறலும், துடிதுடித்து மடியும் போது எழுந்து மூர்ச்சையாகும் மரண ஓலங்களும் அவர்களுக்கு உயிர் கொடுக்கின்கறதோ!

பச்சை பச்சையாய் மனித மாமிசம் புசிக்கும் கரடிகளே! மிச்சமேதும் வைக்காமல் மனிதனை அழிக்கப்பார்க்கிறீரோ? மனிதத்தை அறுத்து, உணர்வுகளை உறித்து மண்டை ஓடுகளால் ஓர் சரித்திரம் படைக்கின்றீர்!உலக வரலாறுகளில் உங்கள் படைப்பு மட்டும் முதலில் நிக்கும் பயப்படாதீர் அரக்கர்களின் பட்டியலில்!!

மனிதத்தைக் கொன்று மாமிசத்தைத் திண்று மட்டரகக் கலாச்சாரம் நடாத்தும் சக்தியே!
ஆங்காங்கு அமைதியாய்க் காலம் கடத்திய அபலைகளைக் கூட உறுக்கேற்றி உருமாற்றியிருக்கிறாய்! நாளை என்பது சிகப்பாய் விடியத்தான் போகின்றது!

அரக்கர்களின் தேசத்தைக் கண்டு பிடித்தவன் இன்றுமட்டும் உயிருடன் இருந்தால் நிச்சயம் கவளையில் துவண்டு விழுந்திருப்பான்! ஏன் தெறியுமா? அவர்களின் ஆக்கங்களை விட அவர்கள் நிகழ்த்திய அழிவுகளே அதிகம்!!

மனித அழிவில் மகிழும் சக்தியே!
உன் ஒவ்வொரு கண்டு பிடிப்புக்குப் பின்னும் ஓராயிரம் பரிதவிப்புக்கள் பதுங்கியிருக்கின்றன. அவை சந்தைக்கு வருமுன்னே ஆயிரமாயிரம் உயிர்களைக் குடித்தல்லவா விளம்பரமாகின்றது!!

என் சமுதாயம் உனக்கு என்ன துரோகம் தான் செய்துவிட்டது! உன் உயர்வுக்கு வித்திட்டது தவறா? இல்லை உன் வளர்ச்சிப் படிகளில் படிக்கட்டாய்த் தேய்ந்ததுதான் குற்றமா? உண்ட வீட்டுக்கே உபத்திரவம் செய்தல் தகுமா?!

என் சமுதாயத்தின் இரத்தக் கறை, சலவை செய்ய முடியாமல் தோய்ந்து கிடக்கிறது! அமைதியின் நிழலில் நாற்காலியிடும் அந்த நாட்களுக்காக ஒரு உணர்ச்சியின் கதரல் கீதமிது!

என் அமைதி எனைத் துறத்துகிறது. என்னைப் போல் ஆயிரம் ஆயிரம் பேர்களில் உறக்கத்தைத் திருடியிருக்கிறாய்!

நாளைய சந்ததியினர் உலக வரைபடத்தில் அயோக்கிய தேசத்தைக் காணும் போதெல்லாம் ஒப்பாரிவைத்து அழமுன், அராஜகத்தை அழித்துவிட்டு புதியதாய் ஒரு தேசத்தை உருவாக்குவோம்!

மனிதத் தோரனையில் அந்த சத்ருக்களை எனக்கும் பிடிக்கவில்லை! இரத்த வெறியும், ஈவிரக்கமற்ற தொனியும் அவர்களின் கண்களில் தெறிகின்றன!இரத்த வாடையில்லா தேசம் வேண்டாம் என அறிக்கை விடுகிறார்கள்!

உலகமே உன்னை நேசிக்கிறேன்! உன் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து சிந்தித்திருக்கிறாயா? பூமியே உன்னை நன்றாகவே புறிந்து கொண்டேன். ஏனன்றால் என்னைப் போலவே உனக்கும் அபெரிமித அராஜகம் பிடிக்கவில்லை! என்னைப் பற்றி மட்டும் நான் பட்டியலிட விரும்பவில்லை. உன் உணர்வுகளையும் உலகுக்கு உணர்த்த விரும்புகிறேன்:

அமெரிக்க அராஜகத்தை சகிக்காது பூமித் தாய் மெய் சிலிர்க்கின்றாள்- நிலநடுக்கம்!

அங்குள்ள அரக்கர்களின் ஓயாத ஒழுக்கக் கேட்டைப் பார்த்து மூச்சிறைக்கிறாள் - புயல்!

சில போது பொறுக்க முடியாமல் சற்று அதிகமாகவே - சூறாவளி!
தன் மேற்கத்தேயக் குழந்தைகளின் கொடூரம் கண்டு அவள் கண்கலங்கும் போதெல்லாம் மேகமும் சேர்ந்து அழும் - மழை!

பூமியிலே இத்துனை அராஜகமா? பக்கத்து வீட்டுக்காரனும் எரிந்து விழுகிறான்- இடி!

மனிதப் பேய்களின் இரத்த வேட்டை கண்டு இடிந்து போய் உற்கார்கிறாள் - நிலச்சரிவு!

அந்த வீணர்கள், வீண் வம்புகளை விலைக்கு வாங்கும் போதெல்லாம் வியர்த்துப் போடுகிறாள் - வெள்ளம்!

பச்சைப் பசேரென்ற அவள் பட்டுப் புடவையை பச்சக் கயவர்கள் கலைகின்றனர் - காடொழிப்பு!

சில போது அவளே தானாய்க் கலைந்து கொள்கிறாள் - இலையுதிர் காலம்!

இதைக் கண்ட வான்மகன் கண்ணடிக்கின்றான் போலும் - மின்னல்!

கயவன் செயல் கண்டு அவளுக்கே வயிற்றைக் கலக்குகிறது - எரிமலை!

பிரானியர்களின் பிழைகளும், பித்தலாட்டங்களும் அனல் மூட்டுகின்றது - உஷ்னம்!

இறக்காமல் இறந்து கொண்டிருக்கும் ஒருவனின் நச்சு அவள் தேகத்தில் ஊறு விளைவிக்கின்றது - அழிவு, நாசம்!

அரக்கர்கள் தேடும் நாளைய பூமியை அன்று முதலே ஒத்திகை பார்க்கிறாள் - பாலைவனம்!
- ஆக்கம்: நிர்வாகி

நிச்சயிக்கப்பட்ட மரணம்

கருத்து வேறுபாடற்ற ஒரே தலைப்பு, அது மரணம் என்பது மட்டுமே! இரண்டாம் கருத்துக்கு இடம்பாடுள்ள விடயங்களில் தலையைப் பிய்த்துக் கொள்ளும் நாம், நிச்சயிக்கப்பட்ட அந்த நாளிகையை மறந்து விட்டோமா? அல்லது உலக வாழ்க்கையும் சடவாதமும் நம்மை மறக்கடிக்கச் செய்து விட்டதா?
புரியாத புதிராய் நம் வாழ்க்கை நடை போட
நாட்டு நடப்புக்கள் நம் மண்டையை நறை போட
இறத்தக் களரிகள் இதயத்தைத் துளை போட
இங்கிதமற்ற வாழ்க்கை மட்டும் நமை இம்சைப் படுத்துகின்றது!

மனிதா நில்!
இன்றோ நாளையோ உன் உயிரின் கதை முடிந்து போகுமே!
இனிய பொழுதுகளும் சேர்ந்து போகுமே!
இல்லற வாழ்க்கையும் அதனோடே இனைந்து போகுமே!

உன் வாழ்க்கையின் வசந்தங்கள் எங்கே?
வாஞ்சை தந்த வனப்புக்கள் எங்கே?

மரணம் உனை அறவணைக்கு முன் முளங்காளிட்டு உனக்கு வணக்கம் செலுத்தியவன் கூட, நீ கட்டையாய்க் கிடக்கும் போது பிணத்தை இன்னுமா புதைக்கவில்லை எனக் கூறி பின்தள்ளி நின்றுவிடுவான். நாட்டு நடப்புக்கள் நமக்கு பாடம் சொல்கின்றன. நாம் தான் மரணத்தை மறந்து விட்டோமே!

கட்டு நோட்டுக்களும்
கடை வாசல்களும்,
காட்டு வாழ்க்கை போல் கசந்து விடு முன்னே
உன் கடந்த காலத்தை அசை போடு!
மீதி வாழ்க்கையை நிறை போடு!

உன் உடலுக்காய்த் தொழும் நாள் வருமுன்
நீயே – உனக்காய்த் தொழுது கொள்!
உதிர்ந்து போகும் உன் வாழ்க்கையை நினைந்து

உன் உதிரா வாழ்க்கைக்காய் உனை வார்த்துக் கொள்!

நாளைய பொழுதுகள் நமக்காய் காத்துக் கிடக்கின்றன
அது – சுட்டெரிக்கும் சுடு நொருப்பா?
இல்லை சுவனத்தின் சுகந்தங்களா?
யாவும் அறிந்தோன் வல்லோன் றஹ்மானே!!

உலக நெருப்பு நமக்குப் புதிதல்ல
உலகையே உருக்கிடும் நெருப்புத்தான் நமக்குப் புதிது!
உன் நிஜங்களை ஒரு முறை நிறுத்துக் கொள்!

போலிகளை அவ்வப்போது கலைந்து கொள்!

கடைசி நாளிகைகள் கண்சிமிட்டும் போது
கண்ணீர் மழைகளெல்லாம் அந்த நெருப்பை அனைக்கமாட்டா!
கபனும், கப்ரும் உனை அழைக்கு முன்

மீண்டும் ஒரு முறை அழுது கொள்!

மலக்குல் மெளத்தும் வரும் முன்னே
மண்ணறை வாழ்க்கைதனைப் பெறு முன்னே
மன நிலை மாற்றி மறுமைக்காய் வாழ்க்கையை வரைவோமே!!
-ஆக்கம்: நிர்வாகி

இரத்தக் குளியல்

ஆயுதக் கலாச்சாரம் இரத்தக் குளியல் நடாத்தும் போதெல்லாம், மனித மண்டையோடுகள் காணிக்கையாக்கப் படுகின்றன! இப்போதெல்லாம் உலகில் மலிந்து விட்ட ஒரே பொருள் அதுதான்!

மழையால் வெள்ளம் வந்ததோ இல்லையோ ஆயுத மழையால் இரத்த வெள்ளம் எல்லா இடங்களிலும்! பாதனியற்று யாரும் நடக்க வேண்டாம் பாசிச ராணுவத்தின் இரத்தக் கறைகளாவது தப்பித் தவறி நம் காலில் ஒட்டிக் கொள்ளும் - கவணம்!

பாசிசத்தின் யாகம் முடிவடைய இன்னும் எத்தனை நறைபலி தேவைப்படுமோ? காலம் பதில் கூறட்டும்!

ஆடோ, மாடோ பலி கொடுக்கும் போது அவற்றுக்கு பல நிபந்தனைகள் வேண்டும் என்பர்! ஆனால் பாசிசத்தின் பலிக்கடாவுக்கு இருப்பது ஒரே ஒரு நிபந்தனை மட்டும் தான், அது முஸ்லிமாக இருக்க வேண்டும்!!

சந்தனம் தெளித்து, சாம்பிராணிப் புகையிட்டு பலி கொடுக்கும் மடமை நீங்கி, இப்போதெல்லாம் இரத்தம் தெளித்து, இனத்தை அழித்துத்தான் அவை அரங்கேருகின்றன!!

இந்த நவீன மாற்றத்தை ஏற்படுத்தியது வேறுயாரும் அல்ல, உஷ்ஷ்ஷ் என்று உலகை அடக்கப் பார்க்கும் பசுத்தோல் போர்த்திய புலி. ஆம் மேற்கத்தேயப் புலி!

அவரின் சீடர்கள் யார் தெறியுமா? போனி வேடம் பூண்ட போலி நேயரும், இழுத்து இழுத்துச் சாகும் நிலை மறந்த மாற்றானும் தான்!!

இவர்கள் உருவாக்கிய தேசத்தில் இன்னும் பல பயங்கர பாசிச வாதிகளும், பளே கயவர்களும் உருவாகின்றனர். ஆச்சரியமல்ல, ஏனன்றால் கள்ளிமரத்தில் கள்ளிதானே பூக்கும். ரோசா பூக்குமா?
- ஆக்கம்: நிர்வாகி

இராக் மக்களின் இன்னல் துடைப்போம்

இராக் மக்களின் துயரம் துடைக்க போராட வேண்டியவர்கள் அவர்களின் சூட்டில் குளிர்காய நினைப்பது மனிதாபிமானத்தை இழந்து விட்ட செயலாய் நினைக்கத் தோன்றுகின்றது!

பிறந்த நாட்டில், வளர்ந்த மண்ணில் நிம்மதியைத் தொலைத்துவிட்டு அண்டை நாடுகளில் அடைக்கலம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். பிறந்த மண்ணில் உயிருக்கு ஆபத்து புடை சூழ, புகுந்த மண்ணில் கற்புக்கு ஆபத்து சிகப்புக் கொடி காட்டிக் கொண்டிருக்கிறது.

மீளாத் துன்பமும் அகலாத் துயரமும் அவர்களைத் தேடிவந்த புதிய உறவுகளாய் மாறிப் போயின. அவர்கள் செய்த தவறுதான் என்ன? கத்தை கத்தையாய் அறுபட்ட வேளான்மை வைக்கோலாய் மாறியது போன்று அவர்களும் கத்தை கத்தையாய் அறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

காட்டுமிராண்டித் தனத்தின் தத்ரூபக் காட்சி இராக்கிய மண்ணில் அரங்கேர, மக்கள் மன்றத்தில் மங்கா வடுக்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

பன்பட்ட உள்ளங்கள் இன்று புன்பட்ட உள்ளங்களாக மாறியதேன்? மனிதர்களின் உள்ளங்களில் மிருகத்தை விதைக்கலாமா? ஒரு சமூகம் இதனைச் செய்து கொண்டிருக்கிறது. இதுதான் கவளையை தினம் தினம் உள்மனதில் ஊன்றிக் கொண்டிருக்கின்றது!

பசுத்தோல் போர்த்திய புலிகளின் தோரனையில் மனிதம் வேட்டையாடப்படும் கோரக் காட்சிதான் இராக்கின் இன்றைய செய்தி!

என்னைப் போலவே நீங்களும் மன அழுத்தத்தை மென்று கொண்டிருப்பீர்கள். ஓயாப் புயல் ஓய்வதற்கு ஒரு வினாடியாவது சிந்தித்ததுண்டா? புயலில் சாய்ந்த மரங்களாய் அந்த மக்களின் பரிதவிப்புக்கள் தொடர்கின்றன. அவர்களின் இன்னல்கள் நீங்க எம்மால் என்னதான் செய்ய முடியும்?

எம்மால் முடிந்ததை நாம் செய்ய வேண்டும். எவருக்கு என்ன முடியும் என்பது யானறியேன். ஆனால் இரு கரமேந்தி அழுதழுது பிரார்த்தனை மட்டும் நம் எல்லோராலும் செய்ய முடியும். செய்வீர்களா?
- ஆக்கம்: நிர்வாகி

Monday, April 21, 2008

காதலர் தினம்

அல்லாஹ்வின் திருநாமம் போற்றி
காதலும் கல்யாணமும் போராட்டக் குணத்தைப் பாதிக்கும் விடயம் என ரோமானிய சக்கரவர்த்தியான இரண்டாம் குலோடியஸ் கருதினான். எனவே பாதிரியார்களால் திருமணங்கள் நடத்தி வைக்கப்படுவதை அவன் தடை செய்தான். ஆனால் வலன்டைன் பாதிரியார் இதற்கெதிராக போராடி காதலர்களுக்கு திருமணம் செய்து வைத்தமையினால் இரண்டாம் குலோடியஸினால் சிறை பிடிக்கப்பட்டு பின்னர் சிரச்சேதம் செய்யப்பட்டார்.
மூன்றாம் நூற்றாண்டில் காதலர்களுக்காக உயிர்துறந்த வலன்டைன் பாதிரியாரின் இறப்பு இன்று வலன்டைன் டே எனக் கொண்டாடப்படுகிறது!
வாழ்க்கையின் வரம்புகள் பேனப்படாத ஒரு சமூகத்தினால் இந்த காதலர் தினம் கொண்டாடப்படுவது ஆச்சரியமன்று. ஆனால் முஸ்லிம் சகோதர, சகோதரிகளும் இதில் ஆர்வம் காட்டுவது நிறுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.
காதல் என்பது ஒவ்வொரு நபரைப் பொருத்து அவர்களது உணர்வு மற்றும் தேவைக்கேற்ப வித்தியாசப்படும். சிலர் காதலிப்பது திருமணம் செய்து கொள்வதற்காக. இன்னும் சிலர் எல்லோருக்கும் ஒரு காதலர் இருப்பது போல் தனக்கும் இருக்க வேண்டும் இல்லையென்றால் சகாக்களின் நச்சரிப்புக்கள் தாங்க முடியவில்லை என்பதால் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால்...ஆனால், பலர் காதலிப்பது அவர்களது ஆசைகளையும், இச்சைகளையும் பூர்த்தி செய்து கொள்வதற்காகத் தான் என்பதை நான் கூறி நீங்கள் தெறிய வேண்டியதில்லை!
 • காதல் என்ற பெயரால் சமூக விழுமியங்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்.
 • காதல் என்ற பெயரால் ஒதுக்குப் புறங்களில் அரங்கேரும் அசிங்கங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
 • இறையச்சமுடைய குடும்பங்கள் உருவாக்கபடுவது தவிர்க்கபடுவது இந்த பாலாய்ப் போன காதலால்தான்.
 • கண்மூடித்தனமான காதலால் நடந்தேரிய திருமணங்கள் பல இறுதியில் அவஸ்தைப்படுவதை கண்டும் கானாதது போல் எம்மால் இருக்க முடியவில்லை.

நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை விட காதல் திருமணங்களில்தான் அதிக சச்சரவுகளும், பிரச்சினைகளும் நடக்கின்றன. அதிகம் விவாகரத்தாகும் தம்பதிகளில் காதல் திருமணத் தம்பதிகள்தான் விகிதாசார அடிப்படையில் அதிகம் என்பது கவணத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். காரணம் என்னவென்றால், காதலிக்கும் போது இருவரும் அபரிமிதமான அன்பை வெளிக்காட்டித்தான் களத்தில் இறங்குவார்கள். உனக்காக உயிரைக் கூட கொடுப்பேன் என காதல் அரங்கேரும். அதேபோன்று இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் அன்பை உறுதிப்படுத்த பல பொய்களைக் கூறுகிறார்கள். இப்படி பல போலித் தன்மைகளால் உண்டாகும் காதலில் இருவரிடமிருந்தும் எதிர்பார்ப்புகள் அதிகமாகின்றன. திருமணத்தின் பின் இருவரது நிஜமும் அம்பலமாகின்றது!

பெரும்பாலான காதலர்களது திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்படுவதற்கு இதுதான் காரணமாகும். திருமணத்திற்கு முன்பிருந்த அதே அம்சங்களை திருமணத்திற்குப் பிறகும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். எதிர்பார்ப்புகள் குறைகின்ற வேளையில் காதலிக்கும் போது இருந்த பாசம், அன்பு, காதல், விட்டுக் கொடக்கும் தன்மை போன்ற அனைத்தும் போலி என எண்ண ஆரம்பிக்கிறார்கள். அதுதான் உண்மையும் கூட!

ஆனால் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடாத்தி வைக்கப்படும் திருமணத்தம்பதியர் மத்தியில் எதிர்பார்ப்புகள் குறைவாகவே காணப்படும், நினைத்ததை விட நல்லவர்களாக இருவருமோ இருவரில் ஒருவரோ இருக்கும் பொழுது இறுக்கம், பற்று, பாசம், நேசம் போன்ற அம்சங்கள் அதிகமாகி அவர்களுக்கு மத்தியில் உண்மைக் காதல் வழுப்பெருகின்றது!

எனவேதான் இஸ்லாம் மார்க்கமானது இப்படிப்பட்ட போலிகளை மையமாக வைத்து கட்டியெழுப்பப்படும் தாம்பத்திய உறவுகளை நேர்த்தியாக்க விரும்புகிறது. ஒரு குடும்பம் இறையச்சத்தை மையமாக வைத்து கட்டியெழுப்பப்பட வேண்டும். ஆனால் காதலானது இவை அனைத்தையும் கடந்து காமத்தையும், இச்சையையும் மையமாக வைத்து உருவாகுவதால் இருவரும் நல்லவர்களா? கெட்டவர்களா? என்பது கூட கவணத்திற் கொள்ளப்படுவதில்லை. அதனால் சிறந்த குடும்பம் உருவாகுவதற்குப் பதிலாக சிதைந்த குடும்பமே உருவாக வாய்ப்புகள் அதிகமுள்ளன!!

பிறிதொரு கோணத்தில் நோக்கினால், வருடாவருடம் உலகெங்கும் கொண்டாடப்படும் இந்த காதலர் தின விழாவிற்கென பெருந்தொகைப் பணம் வீண்விரயமாக்கப் படுகின்றன. இந்த காதலர் தினமானது காதலர்களை ஊக்கு விக்கின்றது. புதிய புதிய காதலர்களை உருவாக்குகின்றது. போலிக் காதலர்கள் இத்தினத்தை முன்வைத்து அவர்களது நோக்கத்தை அடைந்து கொள்கிறார்கள்.

சில வர்த்தக முகவர்கள் இத்தினத்தை முன்னிட்டு அதிக இலாபமீட்டும் புதிய அசத்தலான உக்திகளை அறிமுகப்படுத்தி பணம் ஈட்ட முனைகின்றர். உதாரணமாகச் சொல்வதென்றால் 14-02-2008 அன்று வீரகேசரியில் வெளியான 'வர்த்தகமாகும் காதலர் தினம்' என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு செய்தியைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதி ஒன்று காதலர் தின கொண்டாட்டத்திற்காக 2000 அமெரிக்க டாலர் (214000 ரூபா) என விலை குறிப்பிட்டு புதியதொரு பெக்கேஜை விளம்பரப்படுத்தியிருந்தது. காதலர் தினத்தை வர்த்தக மயப்படுத்தியது அமெரிக்காவின் உத்திகளில் ஒன்று என்பதை எம்மவர்கள் புறிந்து கொள்ளட்டும்.

தனது காதலியுடன் ஒரு இரவைக் கழிப்பதற்காக இத்தனை பெரும் தொகைப் பணத்தை வீணடிக்க சில பணம் படைத்தவர்கள் தயங்குவதில்லை என்பதனை இது காட்டுகின்றது! ஒரு வாய்க் கஞ்சிக்குக் கூட திண்டாடும் பலர் இருக்க இப்படி ஒரே இரவில் பெருந் தொகைப்பணத்தை நாசமாக்கும் விதம் நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இலங்கையில் மட்டும் 90 சதவிகிதமானவர்கள் நாளாந்த வாழ்க்கைச் செலவீனங்களுக்கு கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது கவணத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும். பிறர் நலம் பேனும் விடயத்தில் கிஞ்சிற்றும் கவலையில்லாத போது சுயநலவாதிகளாக மட்டும் மனிதன் வாழ்கிறான்.

எனவே காதலர் தினமானது வரவேற்கப்பட வேண்டியதன்று நிச்சயம் பல சமூக இலாபங்களை கவணத்திற் கொண்டு எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றே!

- ஆக்கம்/தொகுப்பு: நிர்வாகி

Sunday, April 20, 2008

திருப்பித் தரும் வானம்


86:11 :قال تعالى: [والسماوات ذات الرجع]- الطارق
'திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக'.- 86:11

இந்த வசனத்தில் திருப்பித் தரும் வானம் என்று வானத்திற்கு ஒரு அற்புதமான அடைமொழியை அல்லாஹ் பயன்படுத்துகிறான். வானம் ஏராளமான விஷயங்களை நமக்குத் திருப்பித் தந்துகொண்டே இருக்கிறது. கடலிலிருந்தும், நீர் நிலைகளிலிருந்தும் உறிஞ்சுகின்ற தண்ணீரை மேலே எடுத்துச் சென்று மழையாக வானம் நமக்கு திருப்பித் தருகின்றது. இங்கிருந்து அனுப்புகிற ஒலி அலைகளை வானம் நமக்கே திருப்பி அனுப்புகின்றது.

வானம் திருப்பித் தரும் தன்மை பெற்றிருக்கும் காரணத்தினால்தான் இன்றைக்கு நாம் ரேடியோ, கைத்தொலைபேசி போன்ற வசதிகளை அனுபவிக்க முடிகின்றது. மேல்நோக்கி அனுப்பப்படும் செய்திகள் தாம் ஒரு இடத்தில் தடுக்கப்பட்டு திரும்பவும் கீழ்நோக்கி நமக்கே அனுப்பப்படுகின்றன. இன்றைக்கு செயற்கைக் கோள் மூலம் ஒளிபரப்பப்படும் காட்சிகள் நமக்கு இங்கே வந்து சேருகின்றன. இங்கிருந்து நாம் ஒளிபரப்ப நினைப்பதை வானத்திற்கு அனுப்பினால் உடனே நமக்கு திருப்பி அனுப்புகிறது.

யாருக்காவது 14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் வானத்திற்கு திருப்பித் தரும் வானம் என்று அடைமொழி கூற முடியுமா? இந்த மாபெரும் அறிவியல் உண்மையை எழுதப்படிக்கத் தெறியாத முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எப்படிக் கூற முடியும்? இது நிச்சயமாக வானத்தை இத்தன்மையோடு படைத்த இறைவனுக்கு மட்டுமே கூற முடியும்.
-ஆக்கம்/தொகுப்கு: நிர்வாகி

கருவறை சுருங்கி விரிதல்


'ஒவ்வொரு பெண்ணும் (கருவறையில்) சுமப்பதையும், கருவறைகள் சுருங்குவதையும், விரிவடைவதையும் அல்லாஹ் அறிகிறான்'.- 13:8

திருக்குர்ஆனில் இந்த வசனம் மிகப்பெரும் அறிவியல் உண்மையைக் கூறும் வசனமாகும்.

பொதுவாக மனித உடலுக்கென சில தனித் தன்மைகள் உள்ளன. தனக்குள் அன்னியப் பொருள் எதனையும் அது ஏற்றுக் கொள்ளாது என்பது அவற்றுள் ஒன்றாகும். இதற்கு உதாரணமாக கண்களைக் குறிப்பிடலாம். கண்களில் ஏதேனும் தூசுகள் விழுந்து விட்டால் அதை எப்படியாவது வெளியேற்றவே முயற்சிக்கும்.
இது போலவே பெண்களின் கருவறைகளும் அமைந்துள்ளன. ஆயினும் கருவறை அன்னிய உயிரைத் தனக்குள் ஏற்றுக் கொள்கிறது. பல மாதங்கள் வளர்ந்து திடீரென அதை வெளியேற்ற முயற்சிக்கிறது. இவ்வாறு முயற்சிக்கும் போது கருவறை சுருங்கி விரிகின்றது. இதன் காரணமாகவே பிரசவ வேதனை ஏற்படுகிறது. இதனைத்தான் இவ்வசனம் கூறுகிறது.

'ஒவ்வொரு பொருளும் குறிப்பிட்ட கால நிர்ணயப்படியே அவனிடத்தில் உள்ளன' என்ற சொற்றொடர் முக்கியமாகக் கவணிக்கப்பட வேண்டியதாகும். இயற்கைக்கு மாறாக அன்னியப் பொருளை ஏற்றுக் கொண்டிருந்த கருவறை ஒரு குறிப்பிட்ட நேரம் வந்ததும் வெளியேற்றுவதற்கு இன்றுவரை காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.
அன்னியப் பொருளை கருவறை பல மாதங்களாக ஏற்றுக் கொண்டது எப்படி? என்ற கேள்விக்கும் இதுவரை விடையில்லை.
இயற்கைக்கு மாறாக இறைவன் தனது வல்லமையினால் ஒரு காலக் கெடுவை நிர்ணயிக்கிறான். அந்த நிர்ணயத்தின் படியே நீண்ட காலம் அன்னியப் பொருளை கருவறை சுமந்து கொண்டிருக்கிறது. என இச்சொற்றொடர் விளக்குகின்றது.

அல்-குர்ஆன் ஒரு இறைவாக்கு என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும். அல்-குர்ஆனைப் படிப்போமாக அதன் வழி நடப்போமாக!
-ஆக்கம்/தொகுப்பு: நிர்வாகி

வெட்கம் பற்றி அண்ணலார் அவர்கள்

மனிதனுக்கு வெட்கம் இல்லாது போகின்ற போதுதான் கீழ்தரமான எல்லா விடயங்களையும் செய்ய தலைப்படுகிறான். கீழ்தரமான விடயங்கள் சமூக விழுமியங்களைத் தகர்க்க வல்லது. மற்றும் சமூகச் சீர்கேடுகளுக்கு சாலை அமைக்கவல்லது. எனவேதான் முஹம்மது (ஸல்) அவர்கள் இப்படி வெட்கம் பற்றி உணர்த்துகிறார்கள்.
இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''நபி(ஸல்) அவர்கள் அன்சாரித் தோழர்களில் ஒருவரை கடந்து சென்றார்கள். அவர் தன் சகோதரருக்கு, ''வெட்கப்படுதல்'' பற்றி உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ''அவரை விட்டு விடு! வெட்கம் என்பது, இறை நம்பிக்கையில் உள்ளதாகும்'' என்று கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 681)

இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'வெட்கம் என்பது, நல்லதைத்தவிர வேறொன்றைக் கொண்டு வராது என நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) ''வெட்கம் அனைத்தும் நல்லதே'' என்று முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் உள்ளது. (ரியாளுஸ்ஸாலிஹீன்: 682)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'இறைநம்பிக்கை (ஈமான்), எழுபது அல்லது அறுபது சில்லரை கிளைகளாகும். அவற்றில் மிக மேலானது, ''லாயிலாஹ இல்லல்லாஹ்'' என்று கூறுவதாகும். அவற்றில் மிகத் தாழ்வானது, பாதையில் உள்ள இடையூறு தரக்கூடியதை நீக்குவதாகும். மேலும் வெட்கம் கொள்வது, இறை நம்பிக்கையின் ஒரு கிளையாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) மற்றும் (ரியாளுஸ்ஸாலிஹீன்: 683)

அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'கன்னிப் பெண் தன் அறையில் வெட்கப்பட்டுக் கொண்டிருப்பதை விட மிகக் கடுமையாக வெட்கம் கொள்பவர்களாக நபி(ஸல்) இருந்தார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 684)

உணவு உண்ணும் போது கவணிக்க..

பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பார்கள். பறக்கப் பறக்க உண்டாலும் பக்குவமாக உண்ண வேண்டும். இதோ அண்ணலார் அவர்களின் அழகிய சில வழிகாட்டுதல்கள்:
உமய்யா (ரழி) அறிவிக்கின்றார்கள்:
'நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் 'பிஸ்மில்லாஹ்' கூறவே இல்லை. அவரின் உணவில் ஒரு கவளம் மட்டுமே இருந்த சமயம், தன் வாய் அருகே அதை உயர்த்திய போது, ''பிஸ்மில்லாஹி அவ்வலஹு வஆகிரஹு''என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் சிரித்தார்கள். பின்பு, ''இவருடன் ஷைத்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இவர் ''பிஸ்மில்லாஹ்'' 'கூறியதும் தன் வயிற்றில் உள்ளதை வாந்தி எடுத்து விட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். '' (அபூதாவூது, நஸயீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 732)

அபூஉமாமா(ரலி) அறிவிக்கின்றார்கள்:
''நபி(ஸல்) அவர்கள் (தான் சாப்பிட்டு முடித்து) தன் தட்டை உயர்த்துவார்களானால், ''அல்ஹம்துலில்லாஹி ஹம்தன் கதீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹா ஙைர மக்ஃபிய்யி வலா முவத்தஇன், வலாமுஸ்தஹ்னன் அன்ஹுரப்புனா '' என்று கூறுவார்கள். (புகாரி)

துஆவின் பொருள்:
அபிவிருத்தி மிக்க – தூய்மையான அதிகமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே! அப்புகழ், போதுமாக்கப்படமாட்டாது. அதை விட்டும் தேவையற்றதாகப்பட மாட்டாது. நீயே எங்களின் இறைவன்.(ரியாளுஸ்ஸாலிஹீன்: 734)


அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'நபி(ஸல்) அவர்கள் ஒருபோதும் உணவைக் குறை கூற மாட்டார்கள். அவர்கள் விரும்பினால் அந்த உணவைச் சாப்பிடுவார்கள். அந்த உணவை வெறுத்தால் சாப்பிடாமல் விட்டு விடுவார்கள்.'' (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 736)

அம்ரு இப்னு அபீ ஸலமா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''நபி(ஸல்) அவர்களின் வீட்டில் நான் சிறுவனாக இருந்தேன். (உணவுத்)தட்டில் இங்கும் அங்கும் என, என் கை அலைந்து கொண்டிருந்தது. அப்போது என்னிடம் நபி(ஸல்) அவர்கள், ''சிறுவரே! பிஸ்மில்லாஹ் கூறு! உனது வலது கையால் சாப்பிடு! உனக்கு அருகில் உள்ளவற்றில் சாப்பிடு என்று கூறினார்கள்.'' (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 740)

உஷார்! உஷார்!!

வல்லோனின் திருநாமம் போற்றி

ஊடகத் துறை வளர்ச்சியடைந்து உலகை பல்வேறு நிறங்களில் கோடுகிழித்துக் கொண்டிருக்கின்றது. இக்காலகட்டத்தில் நாம் கால ஓட்டத்தின் சருகுகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஊடகத் தகவல்களை மட்டும் நம்பி வாழும் மனிதர்களாக நாம் ஆக்கப்பட்டிருக்கிறோம் என்பதைக் கூட யாரும் மறுக்க முடியாது.

விரும்பியோ விரும்பாமலோ மனிதன் ஊடகங்களுக்கு அடிமைதான். ஏனன்றால் உலக நடப்புக்களை அறியத் துடிக்கும் அவன் தாகத்திற்கு சிறந்த தகவல் திறட்டியாக அவைகள் தான் திகழ்கின்றன. உருண்டு செல்லும் உலக உருண்டையின் மூலை முடுக்குகளில் எல்லாம் என்னதான் நடக்கின்றது என்பதனை எமது வீட்டின் அறைக்குள் கொண்டுவந்து தந்து கொண்டிருக்கும் மாபெரும் செயலை இந்த ஊடகங்கள்தான் தவறாது செய்து கொண்டிருக்கின்றன.

இந்த நவீன உலகில் இப்படிப்பட்ட தகவல் தொலைத் தொடர்பு சாதனங்கள் இல்லையென்றால், நாம் இன்னும் இருட்டுக்குள்தான் இருந்து கொண்டிருப்போம். இப்படி நற்தொண்டாற்றிக் கொண்டிருக்கும் அதேநேரம் சில மன்னிக்க முடியா மாபாதக குற்றங்களையும் நடாத்திவருகின்றன:

1. ஒழுக்க வீழ்ச்சியின் பக்கம் மனித சமூகத்தை கூவி அழைக்கின்றது.

2. பெண்களை வெரும் ஆபாசப் பொருளாகவும், போகப் பொருளாகவும் அறிமுகப்படுத்ததல்.

3. ஆதிக்க சக்திகளுக்கு துணை போவது மட்டுமல்லாமல் அவர்களது வளர்ச்சிக்கு ஊக்கமலித்தல்.

4. முஸ்லிம் சமூகத்தை மோசமானவர்களாக, பயங்கர வாதிகளாகச் சித்தரித்தல்.

5. இஸ்லாத்தில் பற்றற்ற ஒரு முஸ்லிம் ஏதாவது தவறிழைத்தாலும் அவனை பயங்கரவாதத்தோடும், இஸ்லாத்தோடும் தொடர்பு படுத்தல்.

6. சம்பந்தமில்லா விடயங்களோடு முஸ்லிம்களை தொடர்பு படுத்துதல்.

7. இஸ்லாத்தை தாறு மாறாக விமர்சித்தல்.

8. ஒரு பக்கச் சார்பாக நடந்து கொள்ளல்.

9. முஸ்லிம்களது ஆக்கங்களை அறிமுகப்படுத்துவதில் தாமதம் கொள்ளலும் இஸ்லாத்தின் எதிரிகளின் வாதங்களை விரைவு படுத்தலும்.

10. முஸ்லிம் சமூகத்தின் எங்காவது ஒரு மூலையில் தவறாக ஒரு நிகழ்வு நடந்தாலும் அதை பூதாகரப்படுத்தி அம்பலமாக்குதல்.

11. உலகுக்கு நன்மை செய்யும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தருனத்தில் தீமைகளைக் கண்டிக்காமல் மெளனமாகுதல்.

12. மேற்கத்தேய அட்டூழியங்களை நீதிக் கண்ணோட்டத்தில் அனுகாமை.

இப்படி ஊடக வன்முறைகள் தொடர்வது உண்மையில் கண்டிக்கத்தக்கதாகும். நாட்டு நடப்புக்களோடு கலக்காத மனிதர்களும், குறிப்பாக வீட்டிலேயே தங்கிவாழும் பெண்கள் மற்றும் வயோதிபர்கள் இந்த தகவல் ஊடகங்களை மட்டுமே தங்கி வாழ்கின்றனர். இப்படிப்பட்ட இத்தருனத்தில் அவர்களது எதிர்பார்ப்புக்கள் வீணடிக்கப்படுகின்றன. எதை நம்புவது எதை நம்பக் கூடாது என்ற முடிவுக்கு வருவதில் கடும் சிறமப்படுகின்றனர். எனவே இவர்களது தாகத்தையும், முஸ்லிம்களது எதிர்காலத்தையும் கவணத்திற் கொண்டு ஒவ்வொரு முஸ்லிமும் தமக்கு முடியுமான பங்களிப்பை நல்க கடமைப்பட்டிருக்கின்றனர்.

குறிப்பாக எம் சமூகத்தில் இருக்கம் ஆக்கத்திறன் கொண்டவர்கள், படைப்பாளிகள், ஊடக ஆர்வலர்கள், சமூக மேம்பாட்டுக்காக பாடுபடுபவர்கள் திட்டமிட்ட அடிப்படையில் இயங்க வேண்டும். இப்படி சமூக நலனுக்காகப் பாடுபடுபவர்களுக்கு தனவந்தர்கள் மூலதன உதவி நல்கி அவர்களது ஆக்கங்களை ஊக்குவிக்க வேண்டும்.

அதேபோல் இஸ்லாமியப் பற்றுள்ள அதிகமான ஊடகவியலாலர்களை உருவாக்குதல், ஊடகத்துறைகளை வளர்த்தல், வலைத் தளங்களை நிருவுதல் மற்றும் அதிகமாக ஆக்கங்களை தொடர்ந்தும் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். ஏனன்றால் தற்கால உலகானது சிந்தனா ரீதியான போராட்டத்தைத் துவங்கியுள்ளது. இதனை பேனா முனை கொண்டு மட்டுமே முறியடிக்க முடியும் என்பதை கவணத்திற் கொண்டு வரவேண்டும். வல்ல அல்லாஹ் நம் சமூகத்தை விடியலை நோக்கி நகர்த்துவானாக!

- ஆக்கம்: நிர்வாகி

Thursday, April 17, 2008

நோன்பாளியின் கவணத்திற்கு!

நோன்பு என்றால் என்ன?
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி உணவு, குடிபானம், உடலுறவு போன்றவற்றிலிருந்து விலகியிருத்தலாகும்.

நோன்பின் நேரம்: -சுப்ஹுக்கு அதான் சொன்னது முதல் சூரியன் மறையும் வரையாகும்.
நோன்பின் சட்டம்: -
ரமலான் நோன்பானது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்று என்பதால் புத்தி சுவாதீனமுள்ள, பருவமடைந்த, நோன்பு நோற்பதற்கு முடியுமான ஆண்-பெண் அனைவர் மீதும் கடமையாகும்.
நிய்யத்து வைத்தல்: -
எல்லாச் செயல்களும் எண்ணத்(நிய்யத்)தின் அடிப்படையிலே அமையும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புகாரி)
நிய்யத் என்றால் மனதால் எண்ணுதல் என்பது தான் பொருளாகும். இன்று மக்கள் செய்வது போன்று வாயால் மொழிவது கிடையாது.
நிய்யத் எப்போது வைக்க வேண்டும்?
கடமையான நோன்பு நோற்பவர், சுப்ஹுக்கு முன்பே இன்று நோன்பு நோற்கிறேன் என்று மனதில் உறுதி கொள்ள வேண்டும்.
நபிலான நோன்பாக இருந்தால் காலையில் தாமதித்துக் கூட நோன்பை மனதில் நினைத்து நோன்பிருக்க முடியும். அதற்கு ஹதீஸில் அனுமதி உள்ளது. அதே நேரம் சுப்ஹிலிருந்து ஏதும் உண்ணாமலோ, பருகாமலோ இருந்திருக்க வேண்டும்.
“ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் காலையில் என்னிடம் வந்து, உண்பதற்கு ஏதேனும் உள்ளதா? எனக் கேட்டார்கள். நாங்கள் இல்லை என்றோம். அப்படியாயின் நான் இன்று நோன்பு வைத்துக் கொள்கிறேன் எனக் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), ஆதாரம்: நஸயி
ஸஹர் உணவு: -
நீங்கள் ஸஹர் செய்யுங்கள், ஏனெனில் அந்நேரத்தில் பரக்கத் உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆதாரம்: புகாரி
ஸஹர் உணவை தாமதப்படுத்தி, நோன்பு திறப்பதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் இருக்கிறார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆதாரம்: அஹ்மத்
ஸஹர் செய்யும் விடயத்தில் நம் நாடுகளில் சில தவறுகள் நடக்கின்றன. உதாரணமாக, மூன்று மணிக்கே சாப்பிட்டு விட்டு சுப்ஹுத் தொழுகை கூட இல்லாமல் தூங்கி விடுகின்றனர். இது உண்மையில் மேலுள்ள சுன்னாவை விடுவதால் ஏற்படும் தவறாகும். ஏனென்றால் சுப்ஹுக்கு அதான் கூறப்படும் வரை உண்ணலாம் பருகலாம்.
அதே போல் நோன்பு திறப்பதற்கு 10 நிமிடங்கள் தாமதிப்பதும் சுன்னாவுக்கு முரணானதாகும்.
நோன்பு திறக்கும் போது: -
நோன்பு திறந்த பின்னர், “தஹபள்ளமஉ வப்தல்லதில் உரூகு வதபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்” என்று கூற வேண்டும்.
பொருள்: தாகம் தீர்ந்தது, நரம்புகள் குளிர்ந்தன அல்லாஹ் நாடினால் கூலி கிடைத்து விடும். ஆதாரம்: அபூதாவுத்.
நோன்பு திறக்கச் செய்தவருக்காக செய்யும் பிரார்த்தனை: -
“அஃப்தர இந்தகுமுஸ் ஸாயிமூன் வஅகல தஆமகுமுல் அப்ரார் வஸல்லத் அலைகுமுல் மலாயிகா”

பொருள்: உங்களிடம் நோன்பாளிகள் நோன்பு திறந்தனர், நல்லவர்கள் உங்கள் ஆகாரங்களை உண்டனர், மலக்குகள் உங்களுக்காக (அல்லாஹ்விடம்) பிரார்த்தித்தனர். ஆதாரம்: அபூதாவுத்.
நோன்பாளிகள் கவணத்திற்கு:
நமது நோன்புகள் ஏற்றுக்கொள்ளப்படவேண்டுமா?
பொய்யுரைப்பது, புறம் பேசுவது, கோள் சொல்வது, பழி சுமத்துவது… போன்ற அனைத்து தீமையான காரியங்களை விட்டும் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்.
யார் பொய்யான பேச்சுக்களையும், அவற்றை நடைமுறைபடுத்துவதையும் விட்டுவிடாமல் அவர் பசித்திருப்பதோ, அல்லது தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆதாரம்: புகாரி, அஹ்மத், திர்மிதி.
நாம் நல்லவர்களாக வாழ்வதற்காக அல்லாஹ் நமக்கு வருடா வருடம் தரும் ஒருமாத பயிற்சியாகும் இந்த ரமலான் மாதம். ரமலானைப் போலவே ஏனைய காலங்களிலும் பேணுதலுடன் வாழ அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் செய்வானாக!
நோன்பை விட அனுமதியுள்ளவர்கள்: -
1) தள்ளாத வயதுடையவர்.
2) தீராத நோயுள்ளவர்.

விடுபடும் ஒவ்வொரு நோன்புக்கும் பரிகாரமாக ஒரு ஏழை வீதம் உணவளிக்க வேண்டும்.
நோன்பை தற்காலிகமாக விட அனுமதியுள்ளவர்கள்: -
1) பயணிகள்.
2) மாதவிடாய் மற்றும் பிள்ளைப் பேற்று (நிபாஸ்) விலக்குடையோர்.
3) கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்.
4) தற்காலிக நோயாளிகள்.

இவர்களுக்கு நோன்பை விட அனுமதி உண்டு. இருந்தாலும் பின்னர் விடுபட்ட நோன்புகளைக் கணக்கிட்டு கழாச் செய்ய வேண்டும்.
நோன்பை முறிக்கக் கூடியவைகள்: -
1) வேண்டுமென்றே உண்ணுதல், பருகுதல்.
2) நோன்புடன் பகலில் உடலுறவு கொள்ளுதல் (இவர்களுடைய நோன்பு பாலாகிவிடும். குற்றப்பரிகாரமாக ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். முடியாத போது தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். இதுவும் முடியாத போது அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்).
3) மாதவிடாய் அல்லது மகப்பேறு இரத்தம் வெளியாகுதல்.
4) வேண்டுமென்றே வாந்தி எடுத்தல் (தானாக வெளியேறினால் நோன்பு முறிய மாட்டாது).
5) மதம் மாறுதல் (அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாகவும்).

கீழுள்ள விடயங்களால் நோன்பு முறியாது: -
1) மறந்த நிலையில் உண்ணுதல், பருகுதல் (புகாரி).
2) குளிப்பு கடமையான நிலையில் ஸஹர் செய்தல் (புகாரி).
3) கடுமையான வெப்பத்தில் குளித்தல் (அஹ்மத், அபூதாவுத்).
4) நறுமணம் வாசனை சோப்புகளை உபயோகித்தல்.
5) பற்பசை உபயோகித்து பல் துலக்குதல்.
6) வாய் மூக்கு வழியாக இரத்தம் வெளியாகுதல்.
7) இரத்தம் எடுத்தல், நோய் காரணமாக அவசியமேற்படின் ஊசி மருந்தேற்றல் போன்றவை. (சக்திக்காக ஊசி வழியாக ஏற்றப்படும் குளுகோஸ் போன்றவற்றினால் நோன்பு முறிந்து விடும்)
8)நோன்புடன் சுய நாட்டமின்றி ஸ்கலிதமாகுதல்.
9) தொண்டைக் குழியை அடையாதபடி உணவை ருசி பார்த்தல்.

இது போன்ற விடயங்களால் நோன்பு பாதிக்கப்படாது என்பதனை கவனத்தில் கொள்க.
பின்வரும் தினங்களில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்: -
1) ஷவ்வால் மாத ஆறு நாட்கள்.
2) ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழன்.
3) ஒவ்வொரு மாதமும் அய்யாமுத் தஷ்ரீக் எனப்படும் 13, 14, 15 ஆகிய நாட்கள்.
4) துல்-ஹஜ் மாதம் ஒன்பதாம் நாளாகிய அறபா தினம்.
5) முஹர்ரம் மாதம் 9, 10 ம் நாட்களில் நோற்கப்படும் ஆஷுரா எனப்படும் நோன்புகள்.

நோன்பு நோற்பதற்கு தடை செய்யப்பட்ட நாட்கள்: -
1) சந்தேகத்திற்குறிய நாள் (ஷஃபான் 30 ம் நாளன்று சந்தேகத்துடன் நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது).
2) நோன்பு, ஹஜ் பெருநாள் தினங்கள்.
3) அய்யாமுத் தஷ்ரீக் எனப்படும் 11, 12, 13 ம் நாட்கள் (தமத்துஃ மற்றும் கிரான் வகையான ஹஜ் செய்பவர்களுக்கு பிராணி அறுத்துப் பலியிட வசதியில்லாவிட்டால் இவர்கள் அத்தினத்தில் நோன்பு நோற்பர்).
4) வெள்ளிக்கிழமை தினத்தை மட்டும் குறிப்பாக்கி நோன்பு நோற்றல்.
5) பெண்கள் கணவனது அனுமதியின்றி நபிலான நோன்பு நோன்புகளை நோற்றல்.
ஆகிய சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்பது முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த பக்கங்களில் முக்கியமான சில செய்திகள் மட்டும் தொகுத்து தரப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்கள் தேவைப்படும் போது அறிந்தோர்களை அணுகி சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளுங்கள். அல்லது எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

யா அல்லாஹ்! உண்மையான விசுவாசத்தோடும், உன்னிடம் நன்மையை எதிர் பார்த்தவர்களாகவும் இந்த றமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று பாவக்கறைகளிலிருந்து நீங்கியவர்களாக மாறுவதற்கு நீயே எம் அனைவருக்கும் அருள் செய்வாயாக!!
-ஆக்கம்: நிர்வாகி

ஆஷூரா நோன்பின் அழகிய சிறப்புகள்

இஸ்லாமிய மார்க்கம் எப்போதுமே அதன் தனிச்சிறப்புக்களில் ஓங்கி உயர்ந்து நிற்கின்றது. மனித உள்ளத்தின் மேம்பாட்டிற்காக மறக்காமல் எப்போதுமே வழிகாட்டுகின்றது. இதோ வல்ல ரஹ்மான் வாரிவழங்கும் நன்மையும் சிறப்புக்களும் இந்த ஆஷுரா நோன்பில் அமைந்துக் கிடக்கின்றது.
ஆஷுரா என்பது ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமான முஹர்ரம் மாத்தின் பத்தாம் நாளைக் குறிக்கும்.
ஆஷுரா நோன்பின் சிறப்பு: -
நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது ஆஷுரா நாளில் யூதர்கள் நோன்பு நோற்றிருப்பதை அறிந்ததும் இது ஏன் என்று வினவினார்கள். அதற்கு யூதர்கள் “இது ஒரு சிறந்த நாளாகும், இன்றைய தினத்தில் தான் அல்லாஹ் இஸ்ரவேலர்களை எதிரிகளிடமிருந்து விடுவித்தான். எனவே அவர்கள் அந்நாளில் நோன்பு நோற்றார்கள்” என்று கூறினார்கள். “மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றுவதற்கு நான் உங்களை விட அதிக உரிமையுள்ளவன்” என்று கூறிவிட்டு அந்நாளில் நோன்பு நோற்குமாறு மக்களை ஏவினார்கள். (ஆதாரம்: புகாரி)
ஆஷுரா தினத்தன்று அண்ணலார் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதுடன் பிறரையும் நோற்குமாறு ஏவினார்கள். அப்போது தோழர்கள்: ‘அல்லாஹ்வின் தூதரே! இன்றைய தினத்தை யூத கிறிஸ்தவர்களும் கண்ணியப் படுத்துகின்றனரே’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அப்படியாயின் அடுத்த ஆண்டு அல்லாஹ் நாடினால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்போம்’ என்று கூறினார்கள்.
மற்றுமொரு அறிவிப்பின்படி, ‘அடுத்த ஆண்டு நான் உயிரோடு இருந்தால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்’ என்று கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு வரு முன்பே மரணத்தைத் தழுவி விட்டார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
ஆஷுரா நோன்பின் பலன்: -
ஆஷுரா தினத்தன்று நோன்பு நோற்பது, கடந்த ஆண்டு செய்த பாவங்களை அழித்து விடும் என்பது நபி மொழியாகும். (ஆதாரம்: முஸ்லிம்)
ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பதன் நோக்கமாவது, பத்தாம் நாள் மட்டும் நோன்பு நோற்கும் யூதர்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்பதுவே. பத்தாம் நாள் நோற்பதன் காரணம் அந்நாளில் நல்ல காரியங்கள் பல நடந்திருக்கின்றன. அதாவது அல்லாஹ் தன் நேசர்களான மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றியோரையும் காப்பாற்றி, அவர்களின் எதிரிகளான ஃபிர்அவ்னையும் அவனைச் சார்ந்தோரையும் கடலில் மூழ்கடித்தது இந்நாளில் தான்.
இந்த சிறப்புப் பொருந்திய நாளில் அறியாமையின் காரணமாக பல அனாச்சாரங்கள் நடைபெறுகின்றன. அவைகளை விட்டும் தவிர்ந்து நடப்பது அவசியமாகும். ஏனென்றால் நோன்பைத் தவிர வேறு எந்த விஷேச வணக்க வழிபாடும் நபி (ஸல்) அவர்களால் கற்றுத்தரபட வில்லை. ஆனால் மார்க்கத்தின் பெயரால் பல புதிய வணக்கங்களை சிலர் உருவாக்கியுள்ளனர்.
ஆஷுரா தினத்தன்று நடைபெறும் அனாச்சாரங்களில் சில: -
ஆஷுரா தினத்தன்று விஷேசப் பிரார்த்தனைகளை ஏற்படுத்தி, அதை ஓதுபவர்கள் அந்த வருடம் மரணிக்கமாட்டார்கள் என நம்புவது. சாம்பிராணி புகையிட்டு அது பொறாமை, துவேஷம், சூனியம், முதலியவற்றை முறித்து விடும் என எண்ணுவது.

மேலும் வழக்கத்திற்கு மாறாக விஷேச உணவு சமைத்தல், புத்தாடை அணிதல், ஆடம்பரமாக செலவழித்தல், விஷேச தொழுகை ஏற்படுத்துதல், துக்கம் அனுஷ்டித்தல், ஆடைகளைக் கிழித்தல், மண்ணறைகளையும் மஸ்ஜிதுகளையும் தரிசித்தல் போன்றன இந்நாளை மையமாக வைத்து மேற்கொள்ளப்படும் அநாச்சாரங்களாகும். இதுபோன்ற எவற்றிற்கும் மார்க்கத்தில் இடமில்லை என்பதால் முற்று முழுதாக இவற்றைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

சத்திய பாதையில் வாழ்ந்து சத்தியவான்களாக மரணிக்க வல்ல ரஹ்மான் நம்மனைவருக்கும் அருள்பாலிப்பானாக!
-ஆக்கம்: நிர்வாகி

சினிமாக்கள் உமிழ்ந்த எச்சங்கள் சில..

பொன்னான நேரம் மண்ணாய்ப் போகும் துயர்!
சமுதாய சீர்கேட்டிற்கு முதற் காரணியான காட்சி!
இஸ்லாமிய கலாச்சாரங்கள் சிதைவதற்கு வழிகோலுகின்றது!
மனிதனது உள்ளங்களிலே நயவஞ்சகத்தை உண்டாக்கும் விபரீதம்!
சில சமயங்களில் இன மோதல்களுக்குக் கூட வழிவகுக்கும் அபாயங்கள்!
சிறுவர்கள் மனங்களிலே சின்னச் சின்ன ஆசைகளை வளர்க்கின்றது!
வாலிப உள்ளங்களுக்கு வயாகரா ஏற்றி வேடிக்கைப் பார்க்கிறது இந்த சினிமா!
அந்திப்பட்டால் பாடங்களை மீட்டுவதில் ஆர்வம் காட்டிய மாணவர்கள் இன்று டி.வி.க்களுக்கு முன்னால் காட்சி தரும் சோகங்கள்!
நல்ல விஷயங்களை கேட்பது, படிப்பது போன்ற நல்லறங்களை விட்டும் நம்மைத் தடுக்கிறது.
குடிப்பழக்கம், புகைத்தல் போன்ற தீய பழக்க வழக்கங்களுக்குமிக விரைவில் மனிதனை அடிமையாக்கி வேடிக்கைப் பார்க்கின்றது இந்த சினிமாக்கள்!நாகரிகம், ஸ்டைல் என்ற பெயரில் சினிமா நடிகர்களால் இவைகள் ஊக்குவிக்கப்படுகின்றது!
நாகரீக மோகம் கொண்ட இளைஞர்களுக்கு நடிகர்கள் தானே ஆசிரியர்கள்!?
விபச்சாரத்தில் வழுக்கி விழ மனிதனை கூவி அழைக்கின்றது இந்த சினிமாக்கள்!
அரைகுறையாக காட்சி தரும் அழகு மங்கையர்களைக் கண்டு களிப்பதற்கென்றே ஒரு சமூகம் அலைமோதுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்!
இது தானே விபச்சார விபத்திற்கான முதல் எட்டு (படி)…!!

சமுதாய சீர் கேட்டிற்கு வித்திடும் இந்த சினிமாவைப் புறக்கணிப்போம் பொண்ணான நேரத்தை மண்ணாக்காது ஒவ்வொரு வினாடியையும் நல்ல விஷயங்களில் செலவு செய்வோம்.
நச்சுப் பாம்புக்குப் பெயர் தான் நல்லபாம்பு! சினிமாக்கள் எவ்வளவு தான் நல்ல தோல் போர்த்தினாலும் அது வடிகட்டிய அசிங்கம்… அசிங்கம்… அசிங்கம் தான்!

இந்த கேவலமான சினிமாக்களை புறக்கணித்து படிப்பு, வாசிப்பு போன்ற விஷயங்களில் கவணம் செலுத்துவதன் மூலம்காலத்தை வீணாக்காது காலத்தின் கண்ணியத்தைப் பேணுவோமாக!
-ஆக்கம்: நிர்வாகி

உங்கள் சிந்தனைக்கு

வல்லோனின் திருநாமம் போற்றி

இறைவனின் படைப்பில் அதிசயிக்கத்தக்க ஒரு படைப்புதான் மனித மூளையாகும். மிருகங்களுக்கும் மூளை இருக்கின்றன ஆனால் அவற்றினால் இவ்வுலகில் மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை. மனிதனது மூளை மட்டுமே தொடர்ந்தும் காலத்தைக் கடைந்து கச்சிதப்படுத்திக் கொண்டிருக்கின்றது!

உலகைக் கடைந்து உருவகப்படுத்தும் திறமையும் அதற்குண்டு, அதேநேரம் உலகை உருக்கி உருக்குலைக்கும் அபாய சக்தியும் அதற்குண்டு! எதிர்கால சமுதாயத்தைக் காக்க வல்ல றஹ்மானே போதுமானவன்.
மனித மூளையின் முழுமையான அவுட்புட் இன்னும் இவ்வுலக அரங்கிற்கு வராத போதே அதன் அட்டகாசம் இப்படி எனும் பொழுது எதிர்காலம் குறித்த அமைதியான அச்சம் நம்மைக் கவ்விக் கொள்கின்றது!
இன்றைய நவீன உலகத்தின் விஞ்ஞானப் புரட்சியானது வெறுமனே 'கண்டுபிடிப்பு' எனும் வேட்கையோடு மட்டும் சுருங்கியிருப்பதால், அதனால் ஏற்படும் நன்மை தீமைகள் அவ்வளவாக கவணத்தில் கொள்ளப் படுவதில்லை என்றே கூற வேண்டும். இக்கூற்றின் உண்மைத் தன்மையை இன்றைய உலக நடப்பு நமக்கு படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன.
கண்டுபிடிப்புக்கள் இவ்வுலக முன்னேற்றத்திற்கு இன்றியமையாத ஒன்றாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அதேநேரம் குறிப்பிட்ட அக்கண்டு பிடிப்புக்களால் தோற்றமெடுக்கும் அபாயகரமான தீமைகளும் அகற்றப்பட வேண்டும்.
அப்படியானால் அதற்கான தீர்வுதான் என்ன என்ற கேள்விக்கு இஸ்லாம் இருவிதமான அடிப்படைகளைக் கூறுகின்றது.
1- எவ்வகையான கண்டுபிடிப்பாகவிருந்தாலும் நன்மையை விடத் தீமை அதிகமாக இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட விடயத்தில் முயற்சியைக் கைவிடல்.
2- கண்டுபிடித்த விடயத்தை உலக சந்தையில் அறிமுகப்படுத்த முன்பு இலகுவில் மனித அழிவிற்கு காரணமாயிருக்கும் பாதைகளை அடைத்துவிட்டு சந்தைப்படுத்துதல்.

இவ்வகையான எதிர்காலம் குறித்த ஒரு நல்ல முன்னோக்கும் தன்மை வெறுமனே தோன்றுவதில்லை. மாறாக நாம் எதனைச் செய்தாலும் அதில் இறைதிருப்தியை மட்டும் கவணத்தில் கொண்டால் மட்டுமே அது சீராக அமையும். அமைதிக்கு வழி வகுக்கும்.
இந்த சிந்தனைப் புரட்சியின் பக்கவாட்டில் அல்-குர்ஆன் நம்மை அழைக்கின்றது. சிந்தனைக்கு விருந்து படைக்க சின்னச் சின்ன அல்-குர்ஆனிய வரிகள் சில்லரைகளாக சிதரிக்கிடக்கின்றன. நாளைய விஞ்ஞான யுக வியாபாரத்திற்கு அவைதான் இஸ்லாத்தின் மூலதனம்.
விஞ்ஞானம் வளர்ந்து உலகெங்கும் கடைவிரிக்கும் போது நிச்சயம் அல்-குர்ஆன் மட்டுமே அதனுடன் ஈடுகொடுக்கும் வல்லமையுடன் இருப்பதை மீதமிருக்கும் உலகும் கண்டுகொள்ளும். இப்போதே அல்-குர்ஆனை படிக்க ஆரம்பியுங்கள். ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் நோக்குங்கள்.
- ஆக்கம்: நிர்வாகி

பீரேங்கிளைத் துரத்தும் பிஞ்சுக் கரங்கள்!


பாலஸ்தீன மண்ணில்
பயங்கரவாதம் புடை சூழ
அதோகதியாய் ஆனது
அவர்களது எதிர்காலம்!

பசுமையாய் நினைக்கப்பட வேண்டிய
பச்சைப் பசேர் எதிர்காலம்
அவர்கள் உள்ளத்தில்
சிகப்பாய் காட்ச்சி தருகிறது!

அங்கோ - பறவைகள்
கிஞ்சிற்றும் கவளையற்று
தானியங்களைப்
பொருக்கிக் கொண்டிருக்க

சின்னஞ் சிருசுகளோ
கற்களைப் பொருக்கிக் கொண்டிருக்கின்றனர்
பீரேங்கிகளை எதிர் கொள்ள!!

குழந்தைகளின் அழுகைக் குரல் - அவள்
காதுகளை அடைந்ததோ இல்லையோ
பீரேங்கிகள் பிரசவிக்கும்
அதிர்வுகள் அவள் கண்களை நனைத்தது!

ஒரு தாய் பிரசவித்தால் - அங்கே
சந்தோஷ கணங்கள் ஜொலிக்கும்
ஒரு பீரேங்கி பிரசவித்தால் - அங்கே
கருமாரி ரணங்கள் அரங்கேரும்!!

மனிதனுக்கு மட்டும் ஏனிந்த வக்கிரப் புத்தி!?

ரணங்களை எரித்து சாம்பலாக்கி விட்டு
ரம்யத்தை மட்டும் விதைக்க வேண்டியவன்
மரணங்களை விதைத்து வில்லங்கம் செய்து
பிணங்களை அறுவடை செய்து கொண்டிருக்கிறான்!

விடியுமா அவர்கள் தேசம்?
ஏக்கத்தை மென்றவனாக
பிரயாணிக்கின்றேன் நாளையை நோக்கி
இளைய தலைமுறையாவது
தலைநிமிர்ந்து வாழட்டும் வழிவிடுங்கள்!

- ஆக்கம்: நிர்வாகி

Tuesday, April 15, 2008

இறைத் தூதர் இயேசு நாதர்

அன்பின் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளே!
உங்கள் வேத நூலான பைபிளின் வசனங்களை சற்று நிதானத்தோடும், பொறுமையோடும், ஆராய்ச்சிக் கண்னோட்டத்தோடும் வாசிப்பீர்களாக. அப்போது நாம் சொல்ல வருகின்ற விடயம் தெளிவாக உங்களுக்குப் புரியும். ஏனென்றால், திருச்சபைகளின் போதனைக்கும், கிறிஸ்தவர்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கும் பைபிள் முழுக்க முழுக்க மாறுபடுகின்றன என்பது ஆச்சரியமாய் இருக்கின்றது.
இறைவன் தனது தூதர்களில் சிலரை குறிப்பிட்ட சில சமூகத்தார்களுக்கு மட்டும் தூதர்களாக அனுப்பியுள்ளான். அதே தொடரில் இஸ்ரவேல் சமூகத்தாருக்கு மட்டும் அனுப்பப்பட்ட இறைத்தூதர்தான் இயேசு எனப்படும் ஈஸா நபி அவர்கள்: -
‘….இஸ்ராயீலின் மக்களுக்கு (இயேசுவை) ஒரு தூதராகவும் (அனுப்புவான் என்றும் கூறினான்)’- அல் குர்ஆன்(3:49)
இந்த அல் குர்ஆன் வசனத்தினை பின் வரும் பைபிள் வசனங்கள் தெள்ளத் தெளிவாக உண்மைப் படுத்துகின்றன. இதோ உங்கள் கவனத்திற்கு: -
‘காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல வென்றார்.’ - மத்தேயு (15:24)
‘இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.’ - மாற்கு (12:29)
அவ்வாறே மோசேயும் இஸ்ரவேலர்களுக்கு மாத்திரம் இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதரே என்பதற்கான சான்றுகள்: -
‘நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்,…’ - லேவியராகமம் (11:2)
‘நீ இஸ்ரவேல் வீட்டாரை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்,…’ -எசேக்கியேல் (24:21)
எனவே, இந்த வசனங்கள் அனைத்தும் இயேசு நாதர் இஸ்ரவேலர் சமுதாயத்திற்கு மட்டும் கர்த்தரால் அனுப்பப்பட்ட தூதர் என்பதை பறை சாற்றுகின்றது. அதே நேரம் கர்த்தராகிய அல்லாஹ்வின் இறுதித்தூதர் முஹம்மது நபியவர்கள் தான் முழுமனித மனித சமுதாயத்திற்கும் தூதராகவும், அருட்கொடையாகவும் அனுப்பப்பட்டார்கள் என்பது பின்வரும் வசனம் மூலம் தெளிவாகின்றது.
‘(நபியே), உம்மை அகிலத்தாருக்கு ஓர்அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை’ - அல் குர்ஆன்(21:107).
ஆக, இயேசு நாதர் கர்த்தரின் மகன் அல்ல, இறைத்தூரரே என்பதுதான் உண்மை. இயேசு பற்றி அல் குர்ஆன் கூறும் அனைத்து செய்திகளையும், அது உண்மைதானா என்பதனை உங்கள் பைபிளிடமே நீங்கள் கேட்டுத்தெறிந்து கொள்ளலாம். எனவே நீங்களே உண்மைக்கு சான்றாய் இருந்து கொண்டு, ஏன் சத்தியத்தைப் பின்பற்ற மறுக்கறீர்கள்? நிதானமாக சில வினாடிகள் சிந்தித்துப் பாருங்கள். சத்தியத்தை உணர உங்கள் சிந்தனைக்கு இடம் கொடுங்கள். மரணம் எமைத் துரத்துகின்றது. உடலை விட்டு நம் உயிர் பிரியுமுன் உண்மையை ஏற்றுக் கொள்வோம்.
சத்தியத்தை ஏற்க நாம் ஏன் மறுக்கிறோம் தெரியுமா? ஆம், நம் சமுதாயம். நம் குடும்பத்தினர் . எம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பது மட்டும் தான் விடையே தவிர வேறில்லை.
உண்மை எமையழைக்கின்றது - நாமோ, நம் குடும்பத்தைத் திரும்பிப் பார்க்கிறோம், நம் சமுதாயம் எமைத்தடுத்து நிறுத்துகிறது. ஆனால் அந்த சமுதாயத்தினால் நாளை மறுமையில் நமக்கு ஒரு துளியளவு நன்மையாவது செய்து விட முடியுமா? என்றால் நிச்சயமாக இல்லவே இல்லை.
ஆகவே அன்பானவர்களே! சத்தியம் தெளிவாகின்ற போது, அதனைத் தட்டிக் கழிக்காமல் உணர்ந்து ஏற்றுக் கொள்வதுதான் புத்திசாலித்தனமாகும்.
கர்த்தராகிய அல்லாஹ் இறுதி இறைவேதத்தில் கூறுகிறார்: -
‘சத்தியம் வந்தது, அசத்தியம் ஒழிந்தது, நிச்சம் அசத்தியம் ஒழிந்தே தீரும்’ (இறுதி வேதம் 17:81)

Sunday, April 13, 2008

சத்தியப் பாதை


பாதையிலும் சத்தியம் அசத்தியமுண்டா?
இது சிலரது கேள்வி!

சத்தியமும் அசத்தியமும்
சர்ச்சை செய்தால் தான்
சச்சரவற்ற வாழ்க்கை புலரும்!

சத்திய மார்க்கம்
சத்திய வழிசத்தியப் பாதை.. சகலமும்
சந்தோஷ முடிவைத் தேடும் சாலைகள்!

இரவைத் துரத்தும் பகல்
இது - இன்றியமையாப் பயணம்
நிழலைக் கலைக்கும் வெயில்
இது - இயற்கையின் விளையாட்டு!

சத்தியத்தைச் சரிய வைக்கும் அசத்தியம்
இது - பாதாளத்துக்கு பவனிதரும் பள்ளக்கு!

உண்மையை உருக்குலைத்து
ஊமைக் கதைகள் பேசி
சத்தியத்தை சாகடிக்கும் சாத்தானியர்கள்!

காலத்தைக் கடத்திவிட்டு
கலாச்சார மோசடி நடாத்திவிட்டு
கலங்கமற்ற சத்தியத்தை
கண்ணீரோடு தவழவிடலாமா?

என் கதி என்ன?

என்னை -உதறியது நம் சமூகம்!
வேண்டாதவனாய் வீழ்ந்து கிடக்கின்றேன்
வெட்கித் தலை குனிய எனக்கேது சொறனை!!

சலித்ததுவே என் வாழ்க்கை!
காலம் - மாற்றிடுமா என் போக்கை?!
தடை தாண்டிய பேச்சுக்கள் தான்
அறுத்துடுமோ என் நாக்கை?!

கல் நெஞ்சனாய் மாறுவேனா?
காடே கதியன்று போவேனா?
இல்லை -பாதியிலே எனையிழந்து
பரிதவித்துப் போவேனா?

புதிய வாழ்க்கை தனைப் புனைவேனா?
புத்தம் புதியன செய்வேனா?
இல்லை - பழமைதனைப் புதிதாய் முடிவேனா?

வாழ்க்கை என்பது பிழிந்தெடுத்த தேனா?
இல்லை- பூச்சிகளுக்கப்பால்
பதுங்கியிருப்பது தானா?

பாசம் என்பது வீணா?
அது போலி வேஷம் தானா?
இல்லை - போகப் போக மாறும் தானா?

அன்பு எனக்கு ஒளிவிளக்கு!
அனைவரிடமும் இருந்தால் - நலம் நமக்கு
அது இல்லாததால் தானே நாடே நாறிக் கிடக்கு!

போலிவாழ்க்கை ஒரு சுவரொட்டி!
பொய்ப் பிரச்சாரம் கண்டால் நில் எட்டி!
பசியென்றாலும் வாயில் தினித்துவிடாதே
அது சுடு ரொட்டி!

நிலைப்பது ஓரிரு நாட்களே!

சரித்திர நாயகி உம்மு ஸுலைம் (ரலி)

முஸ்லிம் பெண்களின் வரலாற்றில் இதுவரை யாரும் பெற்றிராத மஹரை பெற்ற உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள்! ஒவ்வொரு இஸ்லாமிய பெண்ணும் அவசியம் கேட்டு அறிவுரை பெறவேண்டிய அற்புத சரிதம்!

இணைப்பு: ஆடியோ/வீடியோ

சந்தோஷமாயிரு!அல்லாஹ்வின் நாமம் போற்றி...இறைவிசுவாசமும், நற் கருமங்களும் சிறந்த வாழ்க்கையின் சின்னங்கள். இரண்டையும் காலம் முழுவதும் கைவிடாதே! • கல்வியைக் கைக்கொள், வாசிப்பை வளப்படுத்து. அது உன் கவளையைப் போக்கும்.
 • பாவங்களுக்கு விடை கொடு, பாவமன்னிப்பைப் புதுப்பித்துக் கொள்.. அவை உன் வாழ்க்கைக்கு ஒளியூட்டும் ஊடகங்கள்!
 • அல்குர்ஆனின் வரிகளை ஆழ்ந்து கவணி. இறைஞாபகம் இறுதி விரை தொடரட்டும்!
 • மனிதர்களோடு மனம் மங்காது நடந்து கொள், உன் உள்ளம் அமைதி பெரும்!
 • வீரத்தை உன் நெஞ்சிலே விதைத்துக் கொள், கோழைத்தனம் உன்னைக் கொடுமைப்படுத்த வேண்டாம். வீரம் உள்ளத்தை வளப்படுத்தும்!
 • போட்டியும் பொறாமையும், நயவஞ்சகமும், நானென்ற அகங்காரமும் அகத்து நோய்கள். அவற்றை உள்ளத்திலிருந்து உறித்தெடுத்து விடு!
 • காயம் தரும் கவளையும், வாழ்க்கையின் வசந்தங்களை சாகடிக்கும் அதிருப்தியும் களையப்பட வேண்டிய களைகள். பயன் தரும் செயல்களில் கவணம் கொள்!
 • உனக்கு மேலே உள்ளவர்களை ஒரு போதும் பாராதே! உனக்குக் கீழே ஓராயிரம் பேருண்டு. அவர்களை நினைத்து அமைதி கொள்!
 • கீழ்த்தர உணர்வுகளுக்கும், கெட்ட சிந்தனைகளுக்கும் இடம் கொடாதே. மோசமான கற்பனைகளை முளையிலேயே கிள்ளிவிடு!
 • கோபப்படாதே! பொறுமையைக் கைக் கொள்! அந்தோ வாழ்க்கையின் இறுதி வினாடிகள் எம்மை அழைக்கின்றன!
 • நீங்கும் செல்வத்தை நினைத்து நிம்மதியாயிரு! ஏழ்மை வந்துவிடும் என ஒருபோதும் அஞ்சாதே. அல்லாஹ்வின் மீது தவக்குல் வை!
 • நீங்கும் பிரச்சினைகளுக்காய் நித்தமும் அழாதே! வாழ்க்கையின் வரம்புகளில் அவ்வப்போது முளைக்கும் துன்பங்களை துச்சமாய் மதி!
 • வாழ்க்கையை எளிமையாக்கு! உலக வாழ்க்கையின் வசந்தங்களைத் தேடித் தேடி ஒருபோதும் அலையாதே. அது உன்னை சிறுமைப் படுத்தும்!
 • படாடோபம் உன்னை பரிதவிக்க வைக்கும். உன் ஆன்மாவை அவதிக்குள்ளாக்கும்!
 • கடந்த காலத்தை நீதியின் தராசில் நிறுத்துப்பார். உன்னை நீயே அறிந்து கொள்வாய்!
 • கரைதட்டிய துன்பங்களோடு உன்னுடன் உறவாடும் அருட்கொடைகளை ஒப்பிட்டுப்பார். உன்வாழ்க்கையின் அஸ்தமனங்களை விட, விடியல்களே அதிகமாயிருக்கும்!
 • உன்னை நோக்கி வந்த சொல்லம்புகளை ஓரங்கட்டு. அவை சொந்தக் காரனைத்தானே சென்றடையும். உன்னை அது ஒருபோதும் ஊனப்படுத்தமாட்டாது.
 • உன் சிந்தனையைச் செழுமையாக்கு. அருளும், அறிவும், சீரும், சிறப்பும், வெற்றியும், வீரமும் உன் சிந்தனைக்கு விருந்தளிக்கட்டும்.
 • யாரிடமிருந்தும் நன்றியை எதிர்பார்க்காதே! பகட்டுப் பாராட்டுக்கள் உன்னை ஊனப்படுத்த வேண்டாம். அல்லாஹ்வின் அருள் வேண்டியே அமல்களனைத்தும் ஆர்முடுகளாகட்டும்!
 • நற்கருமங்களை நாற்படுத்தாதே. இன்றே செய்! நாளை என்பது நமக்கு வேண்டாம்!- உன் தகுதிக்கேற்ப காரியம் கொள். உன் சாந்திக்கு பச்சைக் கொடிகாட்டும் சங்கதிகளில் சங்கமமாகு!
 • அல்லாஹ்வின் அருட்கொடைகளை எண்ணிப்பார். நன்றி செலுத்து. நன்றிமறவா நாட்டம் கொள்!
 • அல்லாஹ் உனக்களந்த செல்வம், செழிப்பு, குடும்பம், குதூகழிப்பு, ஆரோக்கியம் அனைத்திலும் திருப்தி கொள்!
 • அறிந்தோர், அறியாதோர் அனைவரோடும் அன்புடன் நட. அக்கம் பக்கத்து வீட்டாரை அரவனைத்து நட. ஏழைகளின் பக்கம் கொஞ்சமேனும் திரும்பிப்பார்.உன் இருட்டு வாழ்க்கைக்கு விடை கொடு!

அந்தோ சந்தோஷம் சங்கமமாகும் சமயம் உனை அழைக்கின்றது. நாளைய திங்கள் சந்தோஷக் கதிர்களோடு உதிக்கட்டும். அவை உன் கறுப்புப் பக்கத்தைத் துடைத்து வென்மையாக்கும்!!

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என்பார்கள்! அஃதே பிறர் உள்ளத்தில் சந்தோஷத்தை விதை. உன் உள்ளத்தில் அது தனாய் ஊற்றெடுக்கும்!உலகில் சந்தோஷத்தையும், நிம்மதியையும் படைக்க நாமும் புறப்படுவோமா? நிச்சயமாக வல்ல றஹ்மான் நமக்குத் துணை நிற்பான்.

நீல தேசம்!!!


பச்சைப் பசேரென்ற உலகம்
அதை - அழியாமல் பாதுகாப்பது
அனைவருக்கும் கடமை.

கடமை மறந்து
கல்வியின் பயன் இழந்து
மனிதத்தை ஓங்கி உதைப்பதேன்?

மனித உணர்வுகளில் உணர்ச்சியூட்டி
மனித மரபுகளோடு களிசடை வாழ்க்கையை
அரங்கேற்ற அற்பர்ளின் அரங்கேற்றம்!

நம் பெருமை சீர்குழைய
நாமே கழமிறங்கிடின்
நாளை எப்போதும்
நரக வாழ்க்கைதான்!

காட்டெருமைக்குக் கூட
உண்டு கட்டுப்பாடு - ஆனால்
மேற்கத்தேயம் வளர்த்த
மனிதனுக்கு அது - தட்டுப்பாடு!

(லிங்கமும் யோனியும் சிலரால் வணங்கப்படுகிறதே! வணங்கும் போதும் கூட ஆபாசம் மறந்துவிடாமலிருக்கவோ?! கோயிலுக்குள்ளும் ஆயக் கலைகளாய் அறுவருக்கும் ஆபாசக் கலைகள்! மறைக்கப்பட வேண்டிய மர்ம உறுப்புக்களை தெய்வங்களே சந்தை போடலாகுமா?! ஆபாசமே தெய்வத்தின் தேடல் - தொடர்கிறது புராணங்கள்!!)

ஆபாசம்தான் அவன் வணங்கும் தெய்வம்!
ஆ! பாசம் என்பது வெறும் வேஷம்!

பச்சிளம் குழந்தையையும்
கழுகுக்கண்களால்..
பால் வடியும் முகங்களையும்
கரடிக் கரங்களால்..

கூடப்பிறந்த சகோதரிகளைக் கூட
குறிவைத்து குதருகின்றதே - ஒரு
உதவாக்கரைச் சமூகம்!
மேற்கத்தேய அழுக்குகள்
பிஞ்சு உள்ளங்களையும் அப்பிக் கொள்ள
பரிதவிப்புக்களோடு நாளைய விடியல்கள்..!

பச்சை பச்சையாய்
தளிர்த்திருந்த பொழுதுகள்
நம் வாழ்க்கைக்கு விடை கொடுக்க
பச்சை பச்சையாய் நீலச் செயல்கள்
பாதையெல்லாம் பயணம் நடாத்துகின்றன!

சதை வியாபாரம் சந்தைக்கு வர
சகதி விளம்பரங்கள் அரங்கேற்றப்படுகின்றன!
இதுதான் ஈனர்களின் மொழியில் நவீனம்!
அதுதான் அற்பர்களின் அகராதியில் நாகரீகம்!

புதியன தேடி புதுப் பயணம்!

இதோ சில முகவரிகள்...
குழந்தை முதல் குடுகுடு கிழடு வரை
பணப்பேயாடுகிறது அங்கே!

உடன் பிறந்த சகோதரிகளை
நோட்டுக்கள் நொண்டியாக்க
பிறந்த கோலத்தில் கூடப்பிறந்தவர்கள்!

பணம் பத்தும் செய்யும் என்பர்
ஆனால் - இதுவும் செய்யுமா?
அதோ பணத்துக்காய்
பந்தாடப்படும் அங்கங்கள்!

பண நோட்டுக்காய்
பாய்விரிக்கும் பச்சிளங்கள்!
மனிதா! முடிவுதான் என்ன?

மனிதம் விலை போனதால் - அங்கே
அப்பட்டமாய் ஆபாசம் ஆட்சி நடத்துகின்றது!

மேற்கத்தியக் காடுகளில்
நவீன மிருகங்களின்
நாறிப் போன கலாச்சாரங்கள்!!

பத்து வயதாகியும் கற்போடிருந்தால்
தோழிகளின் நச்சரிப்புக்கள்!
அனுபவிக்கத் தெறியாதவள் - இது
அவளுக்குக் கிடைக்கும் அன்பளிப்பு!

வீட்டறைக்குள் அமைதியாய்
ஆடிடும் ஆட்டங்களுக்கு
வீதி வீதியாய் விளம்பரங்கள்!
வீடு வீடாய் விலை போகின்றது
விபரீத அபலைங்கள்!

மஞ்சற் பத்திரிக்கை, நீலப்படம்..
கேள்விப்பட்டதுண்டு - ஆனால்
நீல நாடு, நீல தேசம் கண்டதுண்டா?

பச்சைப் பசேரென்ற
உலகை உருக்குலைத்து
வானத்தின் கலரோடு
கலந்து விடப்பார்க்கின்றது
வயாக்கிறா சமூகம்!

நீல தேசம் புனைகிறார்கள்
நீங்காத கவளையை விதைப்பதற்கு!
அப்போது அவனே முணுமுணுப்பான்
நிம்மதியைத் தொலைத்து விட்ட கவளையில்!

கோடை காலம்!

என் வாழ்க்கையே ஒரு கோடை காலம்!
வசந்தம் தேடி சவுதி வந்தேன்

வரண்ட கோடை எனைத் துறத்திற்று!
ஆறுதல் தேடி பக்கம் சென்றால்
அரேபியர் பார்வை அணல் மூட்டிற்று!

பாலை வனத்தில் குடிப்பதற்கே தண்ணீரில்லை!
ஆனால் - அடிக்கடி நான் குளித்துக் கொள்வேன்!
வியர்வையே! பாலைவனமெங்கும் நீ வாழ்க!

கானல் நீரையே கண்டு பழகியதால்
என் வாழ்க்கையே இருண்ட பாலைவனம்!

பாலைவனச் சோலைகளுக்காய்
பந்தாடும் வாழ்க்கையாய் - என்
வாழ்க்கை உருளுகின்றது.

பாலைவனத்திலும் மிருகங்களுக்கு
பசியகற்றும் இறைவன் - என்
வாழ்க்கையின் வசந்தத்திற்கும்
வழிசெய்வான் என்ற எதிர்பார்ப்போடு
நடக்கிறேன் நாளையை நோக்கி..

போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்!!

அல்லாஹ்வின் திருநாமம் போற்றி
உலக சமூகங்களில் எண்ணிக்கை அடிப்படையில் இன்று முஸ்லிம் சமூகம் இரண்டாம் இடம் வகிக்கின்றது. இந்த ஒப்பற்ற வளர்ச்சி உலக ஆதிக்க வக்கிரப் புத்தி கொண்ட சமூகங்களுக்கு பெரும் தலையிடியாக மாறியுள்ளது.
உலக மதங்களில் வயதினடிப்படையில் மிகவும் இளைய மதமாகத்தான் இஸ்லாம் கணிக்கப்படுகின்றது. அதன் துரித வளர்ச்சி, கட்டுக்கோப்பு, தளர்வற்ற தன்மை, பிற மதத்தினர்களை இலகுவில் கவரும் திறண் போன்றவற்றை மேற்கத்தேய நாடுகளும், கிறிஸ்தவ ஆதிக்க வர்க்கமும் சகித்துக் கொள்ள முடியாமல் திணறுவதை அவர்களது ஆக்கங்கள் அம்பலமாக்கிவிடுகின்றன!
'அவர்கள் தங்கள் வாய்களினால் (ஊதி) அல்லாஹ்வின் பிரகாசத்தை அணைத்து விட நாடுகின்றனர். இந்நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன்னுடைய பிரகாசத்தை பூர்த்தியாக்கி வைப்பதைத் தவிர (வேறெதையும்) நாடவில்லை'. – அல்-குர்ஆன் (9:32).
சத்தியத்தின் வளர்ச்சியை, உண்மையின் உயர்ச்சியை யார்தான் தடுக்க முடியும். சத்தியச் சூரியன் உதித்து விட்டால் சட்டென்று விலகிவிடும் இருட்டு. சூரியனுக்கு கருப்புச் சாயம் பூச நினைக்கின்றது ஒரு வக்கிறச் சமூகம்! சத்திய இஸ்லாத்தின் சர்ரென்ற வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாமல் சத்தியத்தை அசத்தியமாக்கும் முயற்சிகளில் பலர் களமிறங்கியிருக்கின்றனர்.
உலகத்தாருக்கு அருட்கொடையாக உதித்த எம் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களை கேலிச்சித்திரத்தின் மூலம் அவமதிக்க அண்மைக் காலமாக டென்மார்க் போன்ற நாடுகளால் கடும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் முன்னர் இருந்ததை விட முஸ்லிம்களிடத்திலும், முஸ்லிமல்லாதோரிடத்திலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது அந்தஸ்தும், மதிப்பும் அதிகரித்து வருவதை அவர்களே உணரத் தொடங்கியுள்ளனர்.
தறமான பொருட்கள் சந்தைகளில் அதிகம் கொள்வணவு செய்யப்படுவது அதன் சிறப்பை உணர்த்துகின்றது. தறமற்ற பொருட்கள் மற்றும் போலி உற்பத்திகளை சந்தைப்படுத்தும் வியாபாரிகளுக்கு தறமான பொருட்கள் அதிகம் விலைபோவதை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அதனால் தறமான பொருட்கள் விற்போரைத் தாக்குவதையும், அந்த இடத்திலிருந்து அவர்களது வணிகத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்குவதையும் நாம் நாளாந்தம் அங்காடி விற்பனைத் தளங்களில் காணும் காட்சிகளாக மாறிவிட்டது.
தறம் குறைந்த பொருட்களையும், போலி உற்பத்திகளையும் அதிகம் விக்கும் இடங்களில் தறமான பொருட்களை சந்தைப்படுத்துவோருக்கு இடம் கிடைப்பதில்லை. அதுமட்டுமல்லாமல் அந்த வியாபாரிகளைப் பற்றி அவதூருகளைப் பறப்புவதையும், குறிப்பிட்ட அப்பொருட்களைப் பற்றி கீழ்தறமாகப் பேசுவதையும் அவர்கள் ஒருபோதும் நிறுத்துவதில்லை. இதனால் போலி வார்த்தைகளில் மயங்குபவர்கள் மயங்கிக் கொண்டே இருக்கின்றார்கள். அவர்கள் ஏமாற்றமடைந்து போவது ஒரு புறம் கவளையாகவும் மறுபுறம் வேதனையாகவும் இருக்கின்றது.

போலிகள் கவணம்! போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்'.
இந்த நடவடிக்கையினால் தறமான பொருட்கள் தறம் குறைந்ததாக மாறிவிடாது. அதனை விற்கும் வியாபாரிகள் மோசமானவர்களாக இருப்பார்கள் என்பதும் தவறு. எனவேதான் நடுநிலையாளர்கள் நம் சிந்தனையைக் கிளரும் சிறந்த வரிகளைக் கற்றுத்தந்து விட்டு கறைசேர்ந்துள்ளனர்.

'கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய், தீரவிசாரித்து அறிந்ததே மெய்'.
இஸ்லாத்தை நோக்கி முஸ்லிமல்லாதோரின் படையெடுப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. எந்தப் பொருள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகின்றதோ அப்பொளைப் பற்றி அறிந்து கொள்ள மனிதர்கள் முற்படுவது இயற்கை. அதேபோன்றுதான் இன்று இஸ்லாமும், முஸ்லீம்களும் உலக மன்றத்தில் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாகும் ஒன்றாக மாறியுள்ளது. இஸ்லாம் எக்கோணங்களிலெல்லாம் அவமதிக்கப்பட வேண்டுமோ அக்கோணங்களில் எல்லாம் அவமதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அனைத்துமே வீண் பழியும், பொய்க் குற்றச் சாட்டுக்களுமாகும். இவற்றை மக்களிடையே கொண்டு செல்வதில் மேற்கத்தேய செய்தி ஊடகங்களும் சர்வதேச வலைப்பின்னல் தளங்களும் அதீத ஆர்வம் காட்டுகின்றன!

அரக்கர்களால் தூண்டப்பட்ட மக்கள் அல்-குர்ஆனைப் படிக்க ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர். பெருபேறு என்னவென்றால் அல்-குர்ஆன் அவர்களை ஈர்த்தது மட்டுமல்லாமல் இஸ்லாத்தில் நாளாந்தம் இனைந்து கொண்டிருக்கின்றனர். இது வெரும் போலிக் கூற்றன்று. http://www.youtubeislam.com/ வெப்தளத்தைப் பாருங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். இஸ்லாத்தை நோக்கி படையெடுப்போரின் பட்டியலை அங்கே காணலாம். அவர்களது சொந்த வாக்கு மூலம் அங்கே ஒளி ஒலி வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த உண்மையை பெய்படுத்தும் நடவடிக்கையில் கிறிஸ்தவ அமைப்புக்கள் விடமுயற்சி எடுத்துள்ளனர். உலக பிரசித்தி வாய்ந்தவர்களின் பெயர்களை இட்டு இன்னார் முஸ்லிமாகி விட்டார், இன்னார் இஸ்லாத்தை ஏற்று விட்டார் என்றெல்லாம் போலியாக அவர்களே பொய் விளம்பரம் கொடுத்து வருகின்றனர். மைக்கல் ஜெக்ஸன் முஸ்லிமாகி விட்டார், பிரதீபா வில்லியம்ஸ் முஸ்லிமாகி விட்டார் என்று சில கிறிஸ்தவர்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர். இதன் மூலமாக புதிதாக இஸ்லாத்தை ஏற்போரின் உண்மைச் செய்திகளை உலகின் கண்களுக்கு பொய்ப்பிக்க முனைகின்றனர்.

இப்படிப்பட்டவர்களை நினைக்கும் போது பாவமாக உள்ளது. பொன்னான நேரத்தை வீணடித்து தீமைகளை விலை கொடுத்து வாங்குகின்றனர்.

சகோதரர்களே! சத்தியத்தை ஏற்று ஏக தெய்வ விசுவாசியாக வாழுங்கள். அல்லது சத்தியத்தை ஏற்போருக்கு வழிவிடுங்கள்.

Sunday, April 6, 2008

இஸ்லாம் கூறும் அறிவியல்


அல்-குஆனும் அறிவியல் விஞ்ஞானமும்

(முஹம்மதாகிய) அடியாருக்கு நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஒரு அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்.உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! நிராகரிப்பாளர்களும், கற்களுமே அதன் எரிபொருட்களாகும். (ஏக இறைவனை) மறுப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது.' – 2:23-24.
இஸ்லாத்தில் பழமைகள்தானே ஊஞ்சலாடுகின்றன, அல்குர்ஆன் அறிவியல் பற்றிப் பேசுகின்றதா? என்ற சந்தேகங்கள் நம்மில் சிலருக்கும் முஸ்லிமல்லாதோர்களில் பலருக்கும் எழலாம். உண்மையில் இஸ்லாம் ஓர் அறிவு பூர்வமான மார்க்கமாகும். அதேபோன்று அல்குர்ஆனும், நபிமொழிகளும் உறைக்கும் அறிவியல் உண்மைகள் மற்றும் கருத்துக்கள் விஞ்ஞானத்தையே மிஞ்சி விடுவதையும் நடுநிலை ஆராய்ச்சியாளர்கள் காணத்தான் செய்கிறார்கள்.உண்மையில் உலகிலுள்ள மதங்களில் இஸ்லாம் எல்லாவற்றுக்கும் மேலே உயர்ந்து நிற்கின்றது. அதில் அல்குர்ஆன் பேசும் அறிவியல் காலத்துக்கு முந்தியவை. அது இறைவேதம் என்பதை பறைசாட்டுகின்றது.

1642 ல் பிறந்த ஐசக் நியூட்டன் என்ற விஞ்ஞானியே பிற்காலத்தில் உலகில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்திய அறிவியல் கோட்பாடுகளுக்கு அடித்தளமிட்டவர் என மேற்கத்திய வரலாறு கூறுகின்றது. ஆனால் இற்றைக்கு 1400 வருடங்களுக்கு முன்பே அறிவியல் விஞ்ஞானத்திற்கு அல்குர்ஆன் ஆக்கபூர்வமான உதாரணங்களைக் கூறியிருந்தும் அந்த மேற்கத்தேயம் அவைகளைக் கண்டுகொள்ளவே இல்லை!

அல்-குர்ஆன் கூறும் விஞ்ஞான அறிவியல் உண்மைகளை நாம் அறிந்து கொள்கின்ற போது எமது ஈமான் மென்மேலும் வலுவடையும் என்பதில் சந்தேகமில்லை. அல்-குர்ஆன் மனித வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியாக அருளப்பட்ட வேதம் என்பதை உலக முஸ்லீம்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ட ஒரு விடயமாகும். அதனால்தான் தமது ஆத்மீக விடயங்களுக்காக அல்-குர்ஆனையும், அண்ணலாரின் வாக்குகளையும் நாடிச் செல்கின்றோம். ஆனால், உலக முன்னேற்றத்திற்கான, அறிவியல் புறட்சிக்கான விடயங்களை அல்-குர்ஆன் தன்னகத்தே கொண்டுள்ளதை நாம் கண்டுகொள்ளவதில்லை.
அல்-குர்ஆன் விஞ்ஞானத்தை அலசுவது போன்று உலகில் எந்த வேதநூலும் நவீன விஞ்ஞானம் பற்றி பேசியது கிடையாது. போதாமைக்கு விஞ்ஞானத்திற்கு முறணான போதனைகளைத் தான் நாம் காணமுடிகின்றது.

அதேநேரம் அல்-குர்ஆன் ஒரு விஞ்ஞான நூல் அல்ல என்பதும் கவணிக்கத்தக்கது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

தொலைந்து போன இங்கிதம்!


மேகச்சரிகை பூமேனியை
புதிதாய் துவட்டும் போதெல்லாம்
புத்தம் புதிய சுவாசங்கள்
சுதந்திரத்தை உணர்த்தும்

சுதந்திரமாய் மனிதன் வாழ
சுருக்கமான வழியுண்டா?
சுத்திச் சுத்திப் பார்க்கிறேன்
சுள்ளென்று குத்துகின்றது
அமெரிக்க முள்!

வாழ விடுங்கள் மனிதனை
வழுக்கை விழ முன்னமே
கொஞ்சமேனும் சுவாசிக்கட்டும்
இழந்து போன சுகந்தங்களை!

படாத பாடுபட்டு
பக்குவமாய் வளர்த்து வந்த
பறவையொன்று வானிற் பறந்ததா?
இல்லை - பகைவர்கள் பையிலா?

இன்னல் பூத்த இவ்வுலகில்
இங்கிதம் தொலைந்து போனது!
மனிதனுக்கும்!
மற்றைய படைப்பிற்கும்!!

Friday, April 4, 2008

உயிருள்ள எழும்புக் கூடு!

பஞ்சம்
நான் நாளாந்தம் கண்டு கழிக்கும் சினிமா!
பட்டினி
நான் சந்திக்கவில்லை - அங்கோ
பலரின் உயிரைக் குடித்துக் கொண்டிருக்கின்றது!

பஞ்சமும் பட்டினியும் பட்டிமன்றம் நடாத்த
பரிதவித்த பொழுதுகள் வேடிக்கை பார்க்கின்றன!
அங்கே வெற்றி எப்போதும் மரணத்துக்குத்தான்!

ஒட்டிய வயிறும் உப்பிய தேகமும்
அவர்களோடு ஒட்டிப்பிறந்த வாழ்க்கைச் சரித்திரம்!
உப்பிய தேகம் தான் அவர்களது வாழ்க்கை வரலாறு!

ஒரு தாகித்த குரல்,

வாய்க்கு ருசியாய் எனக்குத் தேவையில்லை
வகைவகையாய் ஏதும் கேட்டிடவில்லை!
அதோ -ஒரு சொட்டுக்குக் கஞ்சிக்காய் உயிர் விடும் ஊனங்கள்!

எழும்பும் தோலும் தான் அவன் தேகம்!
உலகம் அவனைத் துறந்தது போல்
சதையும் சட்டென்று அவனை விலகிக் கொண்டது!

பசிக் கொடுமை அவன் உடலை அரிக்க அரிக்க
நடமாடும் குச்சியாய் அவன் தேய்ந்து போனான்
அந்தோ சரிந்து விடும் தோரணையில்
அவன் பொழுதுகள் நகர்கின்றன!

தாளாத பசி சதையைத் திண்றொழிக்க
எழும்பாவது எஞ்சட்டுமே என பாவப்பட்டு
எழும்பை மூடிக் கொண்டது தோல்!

ஆறடி மனிதன் அவன் - ஆனால்
அறைக்கிலோ மாமிசம் கூட தேறா தேகமது!

உயிருள்ள எழும்புக் கூடு!!
சுடுமணலில் காய்ந்த கருவாடாய்
உப்பிக் கிடக்கின்றது அவன் தேகம்!
கொசுக்குக் கூட குத்துவதற்கு இடமில்லை!

பஞ்சம் துரத்தித் துரத்தி அவனைக் கொல்ல
பட்டினி பாய்ந்து பாய்ந்து அவனைக் குதறிற்று!

பசி வெள்ளம் அவனை அடித்துச் செல்கிறது
பரிதாபமாய் அவனுயிர் போக – நம் சமூகமோ
கண்டும் காணாதது போல்..!!

உன் சகோதரனின் அவலக் குரல்!
அண்ணா..! தம்பி..! சகோதரா..!


கேட்கிறதா அவன் அவலக் குரல்?
அவனால் முணகத்தான் முடியும்.
பசிக்கொடுமை அவன் குரலையும்
கொஞ்சம் கொஞ்சமாய் குடித்து விட்டிருந்தது!

அண்ணா..!
என் அடிவயிராவது ஆறுதலடையட்டும்
அடிச் சட்டியின் தீய்ந்து போன சோறுகளாவது கிடைக்காதா?
- இது அவன் முணகலின் தேடல்!!

தம்பி..!
என் ஈரமற்றுப் போன நாக்கினை நனைத்துக் கொள்ள
எஞ்சிய எச்சில்களாவது கிடைக்காதா?
- இது அவன் விடும் பெரு மூச்சின் ஓசை!!

சகோதரா..!
ஒரு வாய்க் கஞ்சி ஊற்றினால்
ஒரு வாரம் எனக்குத் தெம்பூரும்.

நீ உண்ட தட்டின் ஓரங்களில்
ஒட்டியிருக்கும் உணவையாவது
பொறுக்கித் திண்ண எனக்கு வழி செய்வாயா?
- இது அவன் எதிர் பார்ப்பின் பாஷை!!

நான் உயிருள்ளதோர் எழும்புக் கூடு!
வாழ்க்கையின் எந்த சுகந்தமும்
எனை முத்தமிட்டது கிடையாது!

என் வாழ்க்கையில் வசந்தத்தை - நான்
கனவில் கூட கண்டது கிடையாது!
எல்லோருக்கும் போல் எனக்கும் ஆசையுண்டு

ஆனால் - எட்டாக் கனிக்கு கொட்டாவி விட்டடென்ன பயன்!

என் வாழ்க்கையே கானல் நீராய் ஆனபோது
எதிர்பார்ப்புக்கள் என்பதும் கானல் நீரே!

ஆனால் - ஒன்றை மட்டும் சொல்கிறேன்
உன் ஸகாத்தும், ஸதகாவும்
உன்னிடம் தேங்கிக் கிடக்கும் எம் எதிர்காலங்கள்!

உன் உதவியும், உத்தாசையும்
உயிர்வாழ நாம் கேட்கும் உயிர்ப்பிச்சை!

நீ - எமக்குச் செய்ய வேண்டிய கடமைகள்
கரையற்ற குளமாய்த் தேங்கிக் கிடக்கின்றன.

என் உயிர் பிரிய முன் உதவிக் கரம் கொடு!
உன் உயிர் பிரிய முன் உன் கடமையைச் செய்!!