Showing posts with label தீய சக்திகள். Show all posts
Showing posts with label தீய சக்திகள். Show all posts

Saturday, June 29, 2013

The Face Of Buddhist Terror: Sri Lanka To Ban Time Magazine

http://www.colombotelegraph.com/index.php/the-face-of-buddhist-terror-sri-lanka-to-ban-time-magazine/

The Face Of Buddhist Terror: Sri Lanka To Ban Time Magazine


The Sri Lankan Government is likely to ban the latest edition of the Time Magazine after political Buddhist groups have taken offence at an article appearing on the news magazine’s cover, Colombo Telegraph learns.
The Bodu Bala Sena Group has lobbied the Media Ministry and Secretary to the Ministry of Defence Gotabhaya Rajapaksato ensure the offending issue never reaches the news stands in Sri Lanka, Media Ministry sources said.
The cover story on the July 1 issue of Time Magazine is entitled ‘The Face of Buddhist Terror and features Myanmar’s extremist monk Wirathu, who has been accused of stoking anti-Muslim sentiments with his 969 movement, launched in February, which calls on Buddhists to boycott Muslim shops and businesses. There have been at least three anti-Muslim riots this year in central and northern Myanmar, leaving thousands homeless. In June 2012, Buddhist communities in the Rakhine State attacked Rohingya Muslims, leaving 167 people dead and 125,000 people homeless.
Media Ministry SecretaryCharitha Herath is reportedly consulting with Media Minister Keheliya Rambukwella about how to approach the issue.
According to Ministry sources, the BBS is demanding that Herath consult with the Defence Secretary to tear off the cover story in the magazine before it is allowed on the newsstands in Sri Lanka. If the ban goes ahead, this will be the first time an international magazine is banned in Sri Lanka for a story that has nothing to do with Sri Lanka directly. Sources said the Government is planning to ban the online version of the story as well. The Colombo Telegraph has been unable to reach Charitha Herath for comment.
The Myanmar government has already banned the issue. ”The article entitled ‘The Face of Buddhist Terror’ in Time magazine July 1 issue is prohibited from being produced, sold or and distributed in original copy or photocopy in order to prevent further racial and religious conflicts,” Myanmar government spokesman Ye Htut posted on his Facebook page.

Sunday, March 31, 2013

பொதுபல சேனா, சிங்கள ராவய, ரவாணா பலய அமைப்புக்களை தடை செய்யுங்கள்


http://www.jaffnamuslim.com/2013/03/blog-post_1794.html



பொதுபல சேனா அமைப்பைத் தடை செய்யுமாறு ஆளும் கட்சி அமைச்சர் ஒருவர் கோரிக்கை விடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது, இனவாத மதவாத நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் கடும்போக்குவாத அமைப்புக்களை தடை செய்ய வேண்டுமென தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுக்க உள்ளார்.

பொதுபல சேனா, சிங்கள ராவய மற்றும் ரவாணா பலய போன்ற அமைப்புக்களை தடை செய்யுமாறு கோரி அமைச்சர் நாணயக்கார விசேட அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்க உள்ளார்.

அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான அமைப்பை தடை செய்யக் கூடிய வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டுமென கோரியுள்ளார்.

பகிரங்கமாக இன மத குரோதக் கருத்துக்களை வெளியிட்டு குழப்பங்களில் ஈடுபடுவோரை காவல்துறையினர் கைது செய்யத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டின் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் குரோதப் பிரச்சாரங்கள் குறித்து ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் எவரும் எந்த மதத்தையும் பின்பற்ற முடியும் ஏதேனும் அச்சறுத்தல்கள் ஏற்பட்டால் அது குறித்து காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரலாற்றுத் துரோகிகள் என்பதற்கான அடையாளம்?


எழுதியவர்: மௌலவி M.S. M. இம்தியாஸ் ஸலஃபி


இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டங்களை இனவாதிகள் வெளிப்படையாகவே மேற்கொண்டு வருகிறார்கள். “பள்ளிவாசல்களை உடைத்தல், தகர்த்தல், அப்புறப்படுத்தல்” என்ற பணியுடன் இவர்களுடைய போராட்டம் ஆரம்பமானது. தற்போது இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் கலாசார பண்புகளையும் கொச்சைப்படுத்தி, விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்கள். “அல்லாஹ்” என்ற கடவுள் பொய்யானது என்றும் பத்திரிகையில் விமர்சித்துள்ளார்கள். தனியார் சட்டங்களை நீக்கிக்கொள்ளுமாறும் கூறுகிறார்கள்.

ஹலால் பிரச்சினையைக் காரணம் காட்டி, முஸ்லிம்கள் குறித்து மிக அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். ஹலால் சான்றிதழ் வழங்கி, அதன் மூலம் உலமா சபை பெற்றுக்கொள்ளும் பணம் அல் காயிதாவுக்கு வழங்கப்படுவதாகவும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாகவும் ஆயுதப் பயிற்சி பெற்ற 12,000 பேர் நாட்டுக்குள் வந்துள்ளதாகவும், பள்ளிவாசல்களில் “பங்கர்கள்” கட்டப்படுவதாகவும் பிரச்சாரம் செய்தார்கள். இது மட்டுமன்றி இஸ்லாமிய கலாசாரங்களை கீழ்த்தரமாக விமர்சிக்கிறார்கள். தற்போது சிங்கள முஸ்லிம் மக்களுக்கிடையில் அவநம்பிக்கை உருவாகி சந்தேகத்துடன் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த பொது பல சேனாவுக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கணக்கிலிருந்து பணம் கொடுக்கப்படுவதாகவும் உறுதியான ஆதாரங்களுடன் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியிருக்கிறார்.

இனவாதிகளின் செயற்பாடுகள் பெரியதோர் கலகத்திற்கு இட்டுச் செல்லுமோ என மக்கள் அஞ்சிக் கொண்டிருக்கும் வேளையில், எமது அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து பகிரங்கமான எந்தவொரு கண்டன அறிக்கையும் பாராளுமன்றத்தில் முன்வைக்காதது பெரும் கவலையான விடயமாகும். கடைசியாக கிழக்கு மாகாணத்தில் நடந்த தேர்தலின்போது “முஸ்லிம்களுடைய பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். அது குறித்து எந்தவொரு முஸ்லிம் அமைச்சரும் என்னிடம் கூறியதில்லை” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியதை கேட்டு முஸ்லிம் சமூகம் கவலைப்பட்டது. தலைகுனிந்தது. தம்புள்ளையில் அமைந்துள்ள பள்ளிவாசல் இனவாதிகளால் தகர்க்கப்பட்ட காட்சிகளும் செய்திகளும் முழு உலகிற்கும் தெரிந்திருந்த செய்தி. அது ஜனாதிபதிக்குத் தெரியாமல் போயுள்ளது. முஸ்லிம் அமைச்சர்கள் இது குறித்துக் கூறவில்லை என்பத சந்தேகத்திற்குரியது. ஆச்சரியமானது. (இதனை முஸ்லிம்கள் நம்பப் போவதில்லை.)

தற்போது நடைபெற்று வரும் நிகழ்ச்சிகள் குறித்தும் ஜனாதிபதி இன்னுமொரு தேர்தல் மேடையில், இன்னுமொரு முறையில் மறுத்துக் கூறலாம். முஸ்லிம் அமைச்சர்கள் இதிலிருந்து படிப்பினை பெற வேண்டிய செய்தி என்னவென்றால், முஸ்லிம் சமூகத்திற்காக பாராளுமன்றம் போன்றவர்கள் என்ற அடிப்படையில் சமூக நலனுக்காகக் குரல் கொடுப்போம் அநீதிகளை தட்டிக் கேட்போம். அதற்காக பாராளுமன்றத்தைப் பயன்படுத்துவோம். எமது சமூக நிலைப்பாட்டை அறிக்கைகளாக முன்வைப்போம். எதிர்கால சமூகம் உண்மைகளைப் புரிந்தகொள்ள உரிய நடவடிக்கைகளை எடுப்போம். பட்டம் பதவிகளுக்குப் பின்னால் குளிர்காயாமல், அரசுக்கு அஞ்சி வாய் மூடி மௌனிகளாக இருக்காமல், அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவன் தந்த அமானிதத்தை (பதவியை) சரியான முறையில் பயன்படுத்துவோம் என்பதேயாகும்.

சிஹல உறுமய கட்சி ஆட்சியில் பங்காளியாக இருந்து கொண்டு முஸ்லிம்களுக்கெதிராக கூட்டங்கள் மற்றும் ஊடக மாநாடுகள் நடாத்தி பாராளுமன்றத்தற்குள்ளும் இனத்துவேஷத்துடன் பேசமுடியுமென்றால் எங்கள் நியாயங்களை ஏன் முன்வைக்கக்கூடாது.

19 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை இலங்கை வரலாற்றில் வந்ததில்லை. இப்படியிருக்கும் காலத்திலேயே முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதப் போராட்டத்தைக் கண்டித்துப் பேச முடியவில்லை என்றால் எப்போது பேசுவது?

50 வருடங்களுக்குப் பின்னால் போய் பாராளுமன்ற நிலவரத்தைப் பார்த்தால் ஓரிரு அங்கத்தினர்கள் இருந்து கொண்டு முஸ்லிம் சமூகத்திற்காக எல்லா வழிகளிலும் குரல் கொடுத்து பாராளுமன்றத்தில் பேசினார்கள். இன்றும் அத்தகைய தலைவர்கள் (மர்ஹூம் ரீ.பி. ஜாயா, சேர். ராஸிக் பரீத், போன்றவர்கள்) எமது சமூகம் நன்றியுடன் நினைவூட்டுகிறது என்றால் அதற்கான காரணத்தை இன்றைய தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

துருக்கித் தொப்பி எமது வரலாற்றில் அத்தியாயமாகும். ஆங்கில ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்திற்கு தொப்பி போட்டு வர வேண்டாம் என கூறியதை கண்டித்தே மருதானை பள்ளிவாசல் முற்றத்தில் அகிம்சை போராட்டம் துவங்கப்பட்டது. அது பிரித்தானியாவையே நடுங்கச் செய்தது. எமது போராட்டம் வெற்றி பெற்றது. தலைவர்களின் பணி மகத்தானது. இன்றுள்ள தலைவர்களின் நிலவரம் என்ன? பார்க்கவும் கேட்கவும் வெட்கமாக இருக்கிறது. பதவிகளுக்காக அணி மாறுவதும் பிறகு வசைபாடுவதும் காட்டிக் கொடுப்பதும் என்பது அசிங்கமாகத் தெரிகிறது. அரசாங்கத்தில் பங்காளிகளாக இருக்கும் சிஹல உறுமய கட்சியினர் முஸ்லிம்களுக்கு எதிராக பகிரங்கமாக பேச முடியுமானால், அதற்கெதிராக எங்கள் தலைவர்களால் எங்கள் தரப்பு நியாயங்களை முன்வைக்காமல் போவது ஏன்?

பொதுபல சேனா அமைப்பினர்கள் அதிரடியாக முஸ்லிம்களுக்கு எதிராக வீதியில் இறங்கிய நேரம் ஜே.வி.பி. கட்சி மட்டுமே இனவாதத்திற்கும் மதவாதத்திற்கு எதிராகவும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு, பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றியது. முஸ்லிம் அமைச்சர்கள் கூட இதுவரை இப்படியொரு அறிக்கையை சமர்ப்பித்தது இல்லை. அதன் பின்பு மற்ற கட்சி உறுப்பினர்களும் பகிரங்கமாக பேசத் தொடங்கினர்.

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதியுடனோ அல்லது அரசாங்கத்துடனோ ரகசியமாக பேசியிருக்கலாம். ஆனால், அதனை சமூகம் நம்பாது. இரகசியமாகப் பேசுவதற்கு கணவன்-மனைவி பிரச்சினைகள் அல்லவே. அரசியலில் பகிரங்கமான இராஜதந்திர முறையே தேவை. சிஹல உறுமய கட்சிக்கு பேச முடியுமானால் ஏன் முஸ்லிம் காங்கிரஸுக்கோ அல்லது ஏனைய முஸ்லிம் தலைவர்களுக்கோ பேச முடியாது.

பேசினால் பட்டங்கள், பதவிகள் பறிபோகலாம் என்று பயப்படலாம். ஆனால், சோரம் போனவர்கள் துரோகிகள் என்று சமூகம் சூட்டும் பதவிகள் உங்களை விட்டும் வரலாற்றை விட்டும் ஒருபோதும் மறைந்து போகாது என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள். எதிர்க்கட்சியில் இருக்கும்போது ஆக்ரோஷமாகப் பேசுவதும் வாக்குகளை எதிர்பார்த்துப் பேசுவதும் அரசாட்சியில் அங்கம் பெற்றவுடன் அடங்கிப் போவதும் அனுபவித்துக் கொண்டிருப்பதும் சுயநலமாகும். எங்களுக்காக எங்கள் பிரச்சினைகளை பேசக் கூடிய எங்கள் உரிமைகளை கேட்கக் கூடிய தலைவர்களையே நாம் தெரிவுசெய்ய வேண்டும் என்பதை முஸ்லிம்கள் புரிந்து செயற்படாதவரை இந்நிலைமையை மாற்ற முடியாது.

எமது முஸ்லிம் தலைவர்கள் பேச மாட்டார்கள் என்று புரிந்தால், எங்களுக்காக பேசக் கூடிய உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்காக முஸ்லிம்கள் மீள்பரிசீலனை செய்ய வேண்டும். இளம் வாலிபர்களை -இஸ்லாமிய உணர்வுடன்- பண்படுத்தித் தயார்படுத்த வேண்டும். கையேந்தி தயவை வேண்டி நிற்கும் சமூகமாக மாற முடியாது.
சலுகைகள் எமக்குத் தேவையில்லை. உரிமைகளே எங்களுக்குத் தேவை. உரிமைகளைக் கேட்கவும் அனுபவிக்கவும் தகுதிபடைத்த சமூகம் நாம். சகவாழ்வுடனும் நல்லிணக்கத்துடனும் எங்கள் பயணத்தைத் தொடர்வதற்கு வழிகாண வேண்டும்.

Monday, March 18, 2013

எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள்!

 -எம். ரிஷான் ஷெரீப்

இலங்கையில் இன்னுமொரு இனக் கலவரத்தைத் தூண்டக் கூடிய, பிரிவினை வாத சக்திகளின் சூழ்ச்சிகள் சிறிது சிறிதாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. இந்த இனக் கலவரம், இஸ்லாமியர்களையும் அவர்களது வளர்ச்சியையும் குறி வைத்திருக்கிறது. இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந் நிலை தொடருமானால், இன்னும் சில தசாப்த காலங்களுக்குள் இலங்கையில் பெரும்பான்மையானோராக முஸ்லிம்கள் ஆகிவிடுவார்கள் என்ற அச்சம் இனவாத சக்திகளை பெருமளவில் அச்சுருத்தியிருக்கிறது. இந் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், முஸ்லிம்களை அடக்கி வைக்கவும் பல்வேறு விதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன.
 
முஸ்லிம்களுக்கு எதிராக இனத் துவேஷத்தைக் கிளப்பும் பற்பல நடவடிக்கைகள் காலம் காலமாக இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த போதிலும், அண்மையில் பங்களாதேஷில் பௌத்தர்களுக்கு எதிராக நிகழ்ந்த சில வன்முறைகள், இலங்கையிலுள்ள முஸ்லிம்களையும் பகிரங்கமாக எதிர்ப்பதற்கு ஏதுவாக அமைந்தன. இலங்கையில், பங்களாதேஷ் வன்முறைகளுக்கான எதிர்ப்பு நடவடிக்கைகள் ‘பொது பல சேனா இயக்கம்’ எனும் பௌத்த அடிப்படைவாத அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டன. இந்த இயக்கத்தின் தலைவராகவும் உறுப்பினர்களாகவும் அதிகளவில் பௌத்த பிக்குகளே உள்ளனர்.
 
ஒவ்வொரு மாதத்தினதும் பௌர்ணமி தினமானது, போயா எனப்படும் பௌத்தர்களின் புனித தினமாகும். இத் தினத்தில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் ஆணும், பெண்ணுமாக பௌத்த விகாரைகளில் நடைபெறும் மதப் போதனை நிகழ்வுகளில் வெண்ணிற ஆடையுடன் கலந்துகொள்வர். பௌத்த பிக்குகளால் நிகழ்த்தப்படும் போதனைகளுக்குள் முஸ்லிம் இன வெறுப்பை ஏற்படுத்தும்படியான பல விடயங்கள் பெரும்பான்மையான சிங்கள மக்களிடையே சிறிது சிறிதாக ஊட்டப்படுகின்றன. இவ்வாறாக விதைக்கப்படும் நச்சு விதைகள், எதிர்காலத்தில் பெருவிருட்சங்களாக மாறி, வெகுவிரைவில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இனக்கலவரங்கள் ஏற்பட அவை காரணமாக அமையும்.
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இலங்கை குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் ‘கொழும்பு நகரத்தில் வசிக்கும் மக்கள் தொகையில் அதிகளவானோர் சிங்களவர்கள் என்ற போதிலும் அந்த எண்ணிக்கை 24% வீதமாகக் குறைந்துள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2012.12.11 ஆம் திகதி வெளியான திவயின எனும் சிங்கள நாளிதழில் ’2012 இன் குடிசன மதிப்பீட்டு அறிக்கைக்கு இணங்க கொழும்பு நகர மக்கள் தொகையில் 24% சிங்களவர்களாகவும், 33% தமிழர்களாகவும், 40% முஸ்லிம்களாகவும் உள்ளனர்’ என பிரசுரிக்கப்பட்டிருந்தது.
 
இவ்வாறாக இலங்கையில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, பௌத்த அடிப்படைவாத அமைப்பினைப் பின்பற்றுவோருக்கு பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. எதிர்வரும் காலங்களில், இந்த எண்ணிக்கை அதிகரித்துச் சென்று இஸ்லாமியர்கள் பெரும்பான்மை இனத்தவர்களாக ஆகி விடுவார்களோ என்ற எண்ணம் அவர்களைத் தடுமாற்றமடையச் செய்துள்ளது. ஒப்பீட்டளவில் பார்க்கும்போது முஸ்லிம்களின் குடும்பங்களைப் பொறுத்த வரையில், அவர்கள் பெற்றுக் கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கையானது இலங்கையில் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிங்கள மக்கள், குடும்ப பொருளாதார நிலைமையைக் கருத்திற்கொண்டு ஒரு தம்பதியினர் ஓரிரு குழந்தைகளோடு நிறுத்திக் கொள்கையில், இஸ்லாமியர் மாத்திரம் எந்தக் கட்டுப்பாடுகளுமின்றி தமது இன விகிதாசாரத்தைக் கூட்டிச் செல்வது, அந்த அமைப்பினைப் பின்பற்றுவோரை பாரிய அளவில் சிந்திக்கச் செய்துள்ளது. இந் நிலைமையை பிரதிபலிக்கும் விதமாக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும், ‘கொழும்பில் சிங்களவர்கள் சிறுபான்மையினராகி முஸ்லிம், தமிழ் சமூகங்கள் பெரும்பான்மையாகியுள்ளதை நான் வலியுறுத்த வேண்டிய நிலை உள்ளது’ என அவரது அமைச்சு காரியாலயத்தில் நடைபெற்ற முஸ்லிம் பிரமுகர்களினுடனான சந்திப்பின் போது தெரிவித்தமை இதனைத் தெளிவுபடுத்துகிறது.
 
“பாதுகாப்பை பற்றி முஸ்லிம்கள் அச்சப்பட தேவையில்லை. முஸ்லிம்களுக்கு எதிராக ஒட்டப்படும் போஸ்டர்களை உடனடியாக அகற்றுவதற்கு நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். அதேவேளை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் ஆர்ப்பாட்ட பேரணிகளையோ ஊர்வலங்களையோ தடுக்க முடியாது. அவ்வாறு தடுப்பது ஜனநாயக விரோத செயற்பாடாக உள்ளதால் அரசாங்கத்தை அது நெருக்கடிக்கு உள்ளாக்கும். முஸ்லிம்களாகிய நீங்கள் உங்கள் தரப்பு நியாயங்களை எம்மிடம் முன் வைப்பது போல் ‘பொது பல சேனா’ எனும் அமைப்பும் ‘வெளிநாடுகளில் முஸ்லிம்களுக்கு பர்தா அணிந்து முகம்மூடி செல்வதற்கு அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் அதற்கு அனுமதி அளித்துள்ளீர்கள். முன்பு பல்கலைக்கழகங்களில் முகம் திறந்து பர்தா அணியாமல் வந்தவர்கள் இப்போது அவ்வாறு வருகின்றார்கள்.ஆகவே அதை தடுங்கள்’ என்பது போன்ற பல விடயங்களை சுட்டிக்காட்டி எமக்கு பல அழுத்தங்களை பிரயோகிக்கின்றார்கள்” எனும் பாதுகாப்புச் செயலாளரது தொடர்ச்சியான கருத்து, சில எதிர்வுகூறல்களை முன்வைப்பதாக அமைகிறது.
 
இவ்வாறான முஸ்லிம் எதிர்ப்பு சக்திகள், பர்தா விவகாரத்தைப் போலவே முஸ்லிம்களுக்கு எதிராகக் கிளப்பிவிட்டிருக்கும் இன்னும் இரண்டு பிரதான விடயங்கள், முஸ்லிம்களது கல்வியும், வர்த்தக ரீதியில் அவர்கள் பயன்படுத்தும் ஹலால் நடைமுறைகளும் ஆகும். கல்வி நடவடிக்கைகளில் மிகவும் முன்னிலையில் முஸ்லிம்கள் இருப்பது இத் தீய சக்திகளை உசுப்பி விட்டிருக்கிறது. அண்மைக் காலத்தில் நடைபெற்ற சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சையில் முஸ்லிம் மாணவர்கள் அதிகூடிய அளவில் சித்தி பெற்றிருப்பது பல ஆர்ப்பாட்டங்களைக் கிளப்பிவிட போதுமானதாக அமைந்திருக்கிறது. அவ்வாறே இலங்கை முஸ்லிம்கள் ஹலால் சான்றிதழ் வழங்கப்படும் பொருட்களை மாத்திரமே கொள்வனவு செய்வதானது, சிங்களவர்களது வர்த்தகத்தைப் பாதிக்கிறது எனும் கருத்தினை பரப்பி வருகிறது இந்த அமைப்பு. இதனால் எவ்வளவுதான் அவசரத் தேவைகள் ஏற்பட்டாலும் கூட, முஸ்லிம்களால் நடத்தப்படும் எந்தவொரு வர்த்தக நிலையத்திலும் எந்தப் பொருட்களையும் கொள்வனவு செய்ய வேண்டாமெனக் கட்டளையிடப்பட்டுள்ளது.
 
2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியன்று இலங்கையிலிருந்து வெளிவரும் ‘திவயின’ நாளிதழின் முன்பக்க செய்தியானது இந் நடைமுறையின் ஒரு பகுதியைப் பிரதிபலிக்கிறது. ‘வர்த்தகப் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணங்கள் சர்வதேச தீவிரவாத இயக்கங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது’ என டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, ‘பொது பல சேனா’ இயக்கம் தெரிவித்துள்ள கருத்தினை அந் நாளிதழ் தனது பிரதான செய்திகளிலொன்றாக தந்திருந்தது. ‘அல்கைதா’, ‘ஹமாஸ்’ போன்ற இஸ்லாமிய இயக்கங்களை நடத்திச் செல்வதற்கே இந்தக் கட்டணங்கள் செல்வதாகவும், இதனை ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளரும் உடனடியாகக் கவனத்தில் கொண்டு, ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை தடை செய்ய வேண்டுமெனவும் அந்த இயக்கம் தெரிவித்த கருத்தின் மூலமாக வலியுருத்தியுள்ளது. அவ்வாறு நடைபெற சாத்தியமா? சர்வதேச இயக்கங்களான அவை, இலங்கையிலிருந்து அனுப்பப்படும் மிகவும் சொற்பமான பணத் தொகையிலா இயங்கும்? என்பது போன்ற எந்த சிந்தனையுமில்லாது அந்த அமைப்பு கூறுவதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் சிங்கள மக்கள் பெருகி வருகிறார்கள்.
 
2013 ஆம் ஆண்டுக்காக இலங்கை அரசு வெளியிட்டிருக்கும் காலண்டர் கூட, இந்த அமைப்பை மேலும் உசுப்பி விட்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் அரசால் வழங்கப்படும் காலண்டரில், மாதந்தோறும் பௌர்ணமி நாட்களில் வரும் பௌத்தர்களின் புனித தினமான போயா தினத்தை அரச, வங்கி, வர்த்தக விடுமுறை தினமாக அரசு அறிவித்திருக்கும். ஆனால் இந்த வருடம் வெளியிடப்பட்டுள்ள காலண்டரில், மாதந்தோறும் வரும் பௌர்ணமி போயா தினங்கள் அரச, வங்கி விடுமுறை தினங்களாக மாத்திரமே அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் கொந்தளிப்புற்ற ‘பொது பல சேனா’ அமைப்பானது, ‘முஸ்லிம்களது பெருநாட்களை அரச, வங்கி, வர்த்தக விடுமுறை தினமாக அறிவிக்க முடியுமானால், ஏன் பௌத்தர்களின் புனித தினங்களை அவ்வாறு அறிவிக்க முடியாது?’ என இதிலும் இஸ்லாமியர்களை வம்புக்கிழுத்திருப்பதைக் காணக் கூடியதாக உள்ளது.
 
இலங்கையில் பெரும்பான்மையான சிங்கள மக்களும் முஸ்லிம்களைப் போலவே விலைவாசி, வரிக்கட்டணங்களின் அதிகரிப்பால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். என்றபோதிலும் முஸ்லிம் மக்களை விடவும் சிங்கள மக்களில் இதன் தாக்கம் அதிகமாகவே உள்ளது. காரணம் அவர்கள் சார்ந்திருக்கும் பல்வேறு விதமான கடன் சுமைகளாகும். கல்வி, வீடு, திருமணம், வாகனம், மருத்துவம் என அனைத்து பிரதான அம்சங்களுக்குமாக வங்கிகளையும், கடன் கொடுக்கும் நிறுவனங்களையும் அணுகி கடன்களைப் பெற்றுக் கொள்ளும் இவர்கள் தவணை முறையில் வட்டியுடன் அவற்றைச் செலுத்திச் செலுத்தியே சோர்ந்து போகிறார்கள். கடன்களுக்கான வட்டிகளில் தங்கியிராத இஸ்லாமியரின் வாழ்க்கை நெறிமுறை சிங்கள இனத்தவர்களுக்கு வியப்பினை ஏற்படுத்தியுள்ளதோடு, பொறாமையையும், இஸ்லாமியரின் வர்த்தக முறைமையில் சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது. இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ள ‘பொது பல சேனா அமைப்பு’ பல்வேறு விதமான விஷமப் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 
கடந்த சில மாதங்களாக இலங்கையின் பிரதான நகரங்கள் பலவற்றில் இந்த இயக்கத்தின் தலைவரான கலகொட அத்தே ஞானஸார ஹிமியினால் பல கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான சுவரொட்டிகள் நகரெங்கிலும் ஒட்டப்பட்டிருக்கின்றமையைக் காணக் கூடியதாக உள்ளது. இவ்வாறான கூட்டங்களில் ஒன்றாக, கடந்த நவம்பர் மாதம் முப்பதாம் திகதி மஹரகம நகரத்தில் நடைபெற்ற கூட்டத்திற்காக பகிரப்பட்ட சுவரொட்டியில் இடம்பெற்றிருந்த கருத்துக்கள் விஷமத்தனமானவையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. அவை இவ்வாறு சிங்களமொழியில் அமைந்திருந்தன.
 
‘எனது தாய்நாடு! இன்று எனக்குரியது, நாளை உங்களுக்குரியது. சிங்களவர்களே! சிங்கள சமூகத்தின் அழிவு காலம் தொடங்கிவிட்டது. ஏனென்றால், சிங்கள சமூகத்திற்கும், பௌத்த மதத்திற்க்கும் பல சவால்கள் இருக்கும்போது சிங்கள பௌத்தர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில், முஸ்லிம் தீவிரவாதிகள் புராதன சின்னங்களையும், பாரம்பரியங்களையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த செயல்கள், எந்தவித முடிவும் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் அதே நிலையில், நாட்டின் மற்ற பாகங்களுக்கும் இவை பரவிக்கொண்டிருக்கின்றன. இந்தக் கயவர்கள் இத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்புக்களையும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சவால்கள் இத்தோடு நின்றுவிடவில்லை. கிறிஸ்தவர்கள், அவர்களின் பிரச்சார வேலைகளையும் ஆரம்பித்துள்ளார்கள். இந்தக் கயவர்களின் செயல்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மைகளை, 30 நவம்பர் அன்று உங்களுக்கு தெளிவுபடுத்த முடியும் என நாம் நம்புகின்றோம். உங்கள் நாட்டையும், இனத்தையும், மதத்தையும், பாதுகாக்க விரைந்து வாருங்கள்!’
இந்தக் கூட்டத்தில் இந்த இயக்கத்தின் தலைவரான கலகொட அத்தே ஞானஸார ஹிமியினால் நிகழ்த்தப்பட்ட உரையும், இஸ்லாமியர் மீதான அவர்களது கோபத்தையும், சூழ்ச்சிகளையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தன. உதாரணத்துக்கு அவரது உரையிலிருந்து சில பகுதிகளை இங்கு தருவதன் மூலம் இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளின் தீவிரத்தை உணரலாம்.
 
‘சிங்கள சமூகத்தை பாதுகாப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பள்ளிவாயலுக்கு கல் எறிவதனால் எதையும் சாதித்துவிட முடியாது. ஒரு முஸ்லிமுக்கு வீதியில் அடிப்பதன் மூலம் எதையும் நாம் அடைந்துவிட முடியாது. நாங்கள் மிகச் சிறந்த முறையில் திட்டமிட்டு, அவர்களின் ஆக்கிரமிப்பை நிரந்தரமாக தடுத்து நிறுத்த முயற்சிக்க வேண்டும். இன்று இலங்கையில், நான்கு ஆயுதம் தாங்கிய குழுக்களைச் சேர்ந்த, 12000 ஆயுதம் தாங்கிய ஜிஹாதிகள் உள்ளனர். அவர்கள் மிக விரைவில் இலங்கைத் தீவை அதிகாரத்தின் மூலம் கைப்பற்றி விடுவார்கள். இந்த அச்சுறுத்தலை எதிர் நோக்குவதற்கு இங்கு உள்ள அனைவரும், 24000 சிங்கள வாலிபர்களைக் கொண்ட ஒரு இராணுவத்தை உருவாக்க வெளிக் கிளம்ப வேண்டும். நாம் அவர்களின் வழியில் சென்றுதான், அவர்களை தோற்கடிக்க வேண்டும். ஆசியாவில் உள்ள அனைத்து முஸ்லிம் தலைவர்களின் மாநாடொன்று அண்மையில் மாலைதீவில் நடைபெற்றது.
 
இலங்கையைச் சேர்ந்த மூன்று நபர்கள் இதில் கலந்து கொண்டனர். அதில் அவர்கள், இலங்கை 2050 ஆம் ஆண்டளவில் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக்கொண்ட ஒரு நாடாக இருக்குமென்று வாக்குறுதியளித்தனர். தம்பியாக்கள் எங்களுக்கெதிராக திட்டமிட்ட முறையில் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக வேண்டும்.” என அவர் குறிப்பிட்டிருக்கும் கருத்துக்களும், சிங்களவர்கள், இஸ்லாமியர்களைத் திட்டுவதற்குப் பயன்படுத்தும் சொல்லான ‘தம்பியா’ எனும் சொல்லை பகிரங்கமாகக் கூறி சாடியிருப்பதுவும் முஸ்லிம்கள் எதிர்காலத்தில் சந்திக்கவிருக்கும் இனக் கலவரங்களுக்கான எதிர்வு கூறல்கள் என்பதனைத் தெளிவுபடுத்துகின்றன. இவ்வாறான விஷமப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் கூட்டங்களில் கலந்துகொள்ளும் சிங்கள இனத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதைப் போலவே இம் மோசமான கருத்துக்களை ஆதரிக்கும் பௌத்தர்களது இணையத்தளங்களும், சமூக வலைத்தளங்களும் தம் பக்கம் மக்களைச் சேர்த்துக் கொண்டே வருகின்றன.
 
இலங்கையின் முதலாவது சிங்கள – முஸ்லிம் இனக் கலவரமானது, 1915 ஆம் ஆண்டில் கம்பளை நகரில் வர்த்தகத்தை மையமாகக் கொண்டு நடைபெற்றுள்ளது. அதன்பிறகு நாடெங்கிலும் இவ்வாறான பல அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெற்றுள்ள போதிலும் இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், 2001 ஆம் ஆண்டு மாவனல்லை நகரில் இஸ்லாமியர்களின் வர்த்தகத்தை மையமாகக் கொண்டு இடம்பெற்ற இனக் கலவரம் பிரதானமானது. அவ்வாறான ஒரு கலவரத்தை, இலங்கையின் முதல் இனக் கலவரத்தின் 100 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, எதிர்வரும் 2015 ஆம் ஆண்டும் ஏற்படுத்தி, கலவரத்தின் போது முஸ்லிம்களின் எண்ணிக்கையைக் குறைப்பது இவ்வாறான முஸ்லிம் எதிர்ப்பு அமைப்புக்களின் நோக்கமாக உள்ளது என்பது சிங்கள சமூக நல ஆய்வாளர்களது கருத்துக்களாக அமைந்துள்ளன. பரவலான முறையில் நடைபெறப் போகும் இக் கலவரங்களுக்காக சிங்கள இனவாத அமைப்புக்களுக்கு ஆள் திரட்டும் நடவடிக்கைகளே கிராமங்கள், நகரங்கள் ரீதியாகவும், இணையத்தளங்கள் வாயிலாகவும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.
 
பௌத்த மதப் போதனைகளோடு இவ்வாறு பரப்பப்படும் தீய கருத்துக்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கு பெரும் அச்சுருத்தலாக அமைந்துள்ளமையை இஸ்லாமியர்கள் அனைவரும் உணரவேண்டும். மறைந்திருப்பவை விஷப் பற்கள் அகற்றப்பட்ட பாம்புகள் அல்ல. எந் நேரத்திலும் வெடித்து, தீயாய்ப் பரவி, எரித்து விடக் கூடிய எரிமலைகள். எப்பொழுதும் அவை வெடிக்கலாம். இலங்கையின் சிங்கள இனவாதிகள் சிலரால் கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரங்கள், இன்னுமொரு சிறுபான்மை இனமான தமிழின மக்களுடனான யுத்தத்துக்கு எவ்வாறு வழிகோலியது என்பதனை கடந்த காலங்களில் மிகவும் அதிகமாகக் காண முடிந்தது. அவ்வாறான நிலைமை முஸ்லிம் மக்களுக்கும் வரக் கூடும். முஸ்லிம்கள் எப்பொழுதும் அந்நிய மதத்தவரோடு ஒற்றுமையோடு இருப்பதனாலும், சிறு சிறு கலவரங்களின் போது விட்டுக் கொடுத்து நடந்து, பொறுமையுடன் நடந்து கொள்வதன் மூலமுமே இவ்வாறான பெரிய கலவரங்களை ஆரம்பத்திலேயே அடக்கி விடக் கூடியதாக இருக்கும். எனவே இஸ்லாமியர்கள் எல்லோரும் கூர்மையான அவதானத்துடனும், சமூக நல்லுறவுடனும், ஒற்றுமையுடனும், இறை நம்பிக்கையுடனும் இருப்பதன் மூலம் மாத்திரமே இவ்வாறான சக்திகளைத் தோற்கடிக்க முடியும் என்பதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
- எம். ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை

Saturday, November 17, 2012

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்

Gasa konflict
 
இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் வியாழக்கிழமை நடத்திய வான்வழி தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, கடந்த 2 நாள்களில் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காஸா பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவான எஜடைன் அல்-காஸம் பிரிகேட்ஸ் மீது இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை தாக்குதல் நடத்தியது.

இதில் காஸா சிட்டியில் காரில் சென்று கொண்டிருந்த அந்த அமைப்பின் கமாண்டர் அஹமது ஜாபரி மற்றும் அவரது பாதுகாவலர் முஹமது அல்-ஹம்ஸ் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து நடத்திய தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் சுகாதார அமைச்சர் முஃபுத் முக்காலாலாதி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

புதன்கிழமை மட்டும் 60 முறை தாக்குதல் நடத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என தகவல் வெளியானதால் அங்குள்ள மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதனால் காஸா பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

முன்னதாக, ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள ஜேவிஷ் மாகாணம் மீது 120க்கும் மேற்பட்ட ராக்கெட் தாக்குதல்களை நடத்தினர். இதில் 7 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

காஸா பகுதியைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பை அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது.

ஒபாமா ஆதரவு: காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் எகிப்து அதிபர் முகமது மோர்ஸி ஆகியோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி உள்ளார்.

இந்த உரையாடலின்போது, காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஒபாமா கண்டனம் தெரிவித்ததாகவும், இஸ்ரேல் ராணுவம் தற்காத்துக் கொள்ளும் வகையில், காஸா மீது தாக்குதல் நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. அதேநேரம் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.

ரிசர்வ் படையை அழைக்க ஒப்புதல்: காஸா பகுதியிலிருந்து நடத்தப்படும் தாக்குதலை சமாளிப்பதற்கு தேவைக்கேற்ப ரிசர்வ் படையை அழைத்துக்கொள்ள இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சரவை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

சிரியா கண்டனம்: காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தாக்குதலுக்கு சிரியா அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இத்தகைய தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சர்வதேச சமுதாயம் இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் என்றும் சிரியா கேட்டுக் கொண்டுள்ளது.

தூதரை வாபஸ் பெற்றது எகிப்து :

இஸ்ரேல் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், அந்நாட்டுக்கான தனது தூதரை வாபஸ் பெறுவதாக எகிப்து அதிபர் மோர்ஸி கூறியுள்ளார். மேலும், கெய்ரோவில் உள்ள எகிப்துக்கான இஸ்ரேல் தூதருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்குமாறு வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளார். தவிர, எகிப்தில் உள்ள அரபு ஒன்றியத்தைச் சேர்ந்த தூதர்கள் தங்கள் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டி இதுகுறித்து விவாதிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அமைதியை நிலைநாட்ட ஐ.நா. வேண்டுகோள்: வன்முறையைத் தவிர்த்து அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுக்கு ஐ.நா.சபை பொதுச் செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தி உள்ளார்.

காஸா பகுதியைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதற்கு பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேநேரம், பதிலுக்கு இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அப்பாவி மக்கள் பலியாகக் கூடும் என்பதால், வன்முறையைத் தவிர்க்க வேண்டும் என்று பெஞ்சமினிடம் தெரிவித்ததாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் மார்டின் நெசிர்கி தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்னை குறித்து எகிப்து அதிபர் முகமது மோர்ஸியுடன் பான் பேசி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Sunday, November 11, 2012

பாபர் மசூதி முதல் சார்மினார் வரை தொடரும் அவலங்கள்!

பழைய ஹைதராபாத் நகரில் உள்ள முஸ்லிம்களின் வரலாற்று சின்னமான 400 ஆண்டு பழமையான "சார்மினார்" வளாகத்தை ஆக்கிரமித்து அதில் கோவில் கட்ட ஹிந்துதுவாவினருக்கு உதவியாக இருந்தனர் காவல்துறை காவிகள்.

இதற்க்கு உடந்தையாக இருந்தவர்கள் சாதாரண காவலர்கள் இல்லை, 33 போலீஸ் உயர் அதிகாரிகள். ஹைதராபாத் பகுதியை சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும் போது முஸ்லிம்களுக்கு எதிராக அறிவிக்கப்படாத ஒரு போர் நடத்தப்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் பக்ரீத் திருநாளின் போது "குர்பானி" கொடுக்கும் பிராணிகள் விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ்.,விஷ்வ ஹிந்து பரிஷத், அகில பாரத வித்யாதி பரிஷத், மற்றும் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து கொண்டு போலீசார் செயல்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் "சப்சி மண்டி" பகுதியில் முஸ்லிம் கடைகளை சேதப்படுத்தி கோடிக்கணக்கான சொத்துக்களை சூறையாடிய விஷயத்திலும் போலீசுக்கு பங்குண்டு.

இந்த "சதி" திட்டத்துக்காக திருமண மண்டபம் ஒன்றில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது இதுவெல்லாம் உளவுத்துறைக்கு தெரிந்தே நடந்திருக்கிறது. சார்மினாரை பாதுகாக்க ஹைதராபாத் மாமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள், "ஆக்கிரமிப்பு கோவில்" கட்டுமானத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளனர். .

சிந்திக்கவும்: குறிப்பிட்ட ஒரு மதத்தவரின் வழிபாட்டு தளங்களை ஹிந்துத்துவா குறிவைத்து தாக்குவதும், அதை உரிமை கொண்டாடுவதும் பாபரி மஸ்ஜித் தொடங்கி காசி, மதுரா, இப்போது குதுமினார் வரை நீள்கிறது. ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு நமது முன்னோர்கள் கோவிலுக்கு அருகாமையில் மசூதிகளும், மசூதிகளுக்கு அருகாமையில் கோவில்களையும் கட்டி ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்.

இவர்கள் வீட்டு திருமண வைபவங்களில் அவர்கள் கலந்து கொள்வதும், தீபாவளிக்கு, பொங்கலுக்கு முஸ்லிம்கள் சாமிக்கு படைத்ததை சாப்பிட மாட்டார்கள் என்பதற்காக உணவு பண்டங்களை தயாரித்ததும் சாமிக்கு படைப்பதற்கு முன் தனியாக எடுத்து வைத்து விடுவார்கள் நமது இந்து பெருந்தகை மக்கள்.

பதிலுக்கு முஸ்லிம்கள் ரமலான், பக்ரீத் போன்ற பண்டிகைகளில், விருந்துகளில் மாட்டிறைச்சி முக்கிய உணவாக இருந்தாலும் இந்து பெருமக்கள் கலந்து கொள்வார்கள் அவர்களுக்கு என்று தனியா ஆட்டிறைச்சி சமைத்து அவர்களை உபசரிப்பதும், சைவம் சாப்பிடும் இந்துக்களுக்காக தனியாக சைவ உணவு படைப்பதுமாக ஒருவருக்கொருவர் கொஞ்சி குலாவி மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.

ஒருவரது நம்பிக்கையை மற்றவர்கள் அவமதிக்காது மதிபளித்தார்கள். ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்கபரிவார் இயக்கங்கள் இந்த ஒற்றுமையில் மண்ணை அள்ளி போட்டார்கள். மதத்தை வைத்து அரசியல் நடத்தி ஆட்சியை பிடிக்கும் இவர்களது மலிவான யுக்திக்கு பலியாவது என்னவோ அப்பாவி மக்களே. மதத்தை வைத்து அரசியல், மதத்தை வைத்து வியாபாரம் என்று கிளம்பிய இந்த கூட்டத்தால் மக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர்.
சார்மினார் Sultan Muhammad Quli Qutb Shah மன்னரால் 1591 ல் கட்டப்பட்டது.

ஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றனர்? (Part-10)


சரி. மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு வருவோம். கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதமாற்றம் அதிகமாக உள்ள இந்தியா போன்ற நாடுகளில் அது தேவைதானே?
இந்து மதத்திலிருந்து ஏன் மக்கள் வெளியேற நேர்கிறது என்பதைப் பற்றிச் சிந்திப்பதற்கு இந்துத்துவவாதிகளுக்கு நேர்மையும் தைரியமும் இல்லை. இங்குள்ள சாதிக் கொடுமை,தீண்டாமை ஆகியவற்றின் விளைவாகவே மக்கள் மதம் மாற நேர்கிறது. இன்றுவரை அவற்றை ஒழிப்பதற்கான காத்திரமான முயற்சிகள் எதையும் சங்கராச்சாரியோ யாருமோ மேற்கொள்ள வில்லை. சமீபத்தில் காஞ்சிபுரம் அருகே உள்ள கூத்திரம்பாக்கம் கிராமத்திலுள்ள தலித் மக்கள் தமது வீதிக்குச் சாமி ஊர்வலம் வேண்டும் எனப் போராடிய கதையைப் பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். பலமுறை போராடி,இறுதியில் தமது கோரிக்கைக்குத் தீர்வில்லை எனில் தாம் மதம் மாறப் போவதாக அவர்கள் அறிவித்தனர்.

அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோருடன் சங்கராச்சாரியும் ஓடோடி வந்தார். நீங்கள் சுத்தமாக இல்லை. உங்கள் தெருவுக்கு ஊர்வலம் வராதுஎன்றுதான் சங்கராச்சாரி சொன்னாரே ஒழிய ஊர்வலம் வருவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக மதம் மாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வரவேண்டுமென்றார். மத மாற்றச் சட்டமும் அறிவிக்கப்பட்டது. இன்று அங்கே தலித் மக்கள் தாக்கப்பட்டுள்னர். வன்முறைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். சங்கராச்சாரி இப்போது அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. தம்மிடம் இருந்த ஒரே ஆயுதமாகிய மதமாற்றம்என்பதையும் இழந்ததால் இன்று பேச இயலாமல் அந்த தலித் மக்கள் ஊமையாகிப் போயுள்ளனர். இன்றும் அவர்களின் வீதிக்குச் சாமி வந்தபாடில்லை. ஒரு சோற்றுப் பதமாக இந்த உதாரணம். எல்லா இடங்களிலும் இதே கதைதான்.

இந்திய அளவில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவர ஏற்கனவே இரு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1955ல் கொண்டுவரப்பட்டற மசோதாவைப் பாராளுமன்றம் நிராகரித்தது. 1978 ஜனதா ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற ஒரு மசோதாவை கொண்டுவர ஜனசங்கத்தினர் தீவிரமாக முயற்சித்தனர். அப்போது பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் அதை ஏற்கவில்லை. அரசியல் சட்டம் வழங்கியுள்ள மதம் பரப்பும் உரிமையை நீக்குவதற்கு இதுவரை பாராளுமன்றம் துணியவில்லை.

மதம் மாற்றுவதற்காக முஸ்லிம்களுக்குப் பெரிய அளவில் வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்றொரு பொய்ப் பிரச்சாரத்தை இந்துத்துவவாதிகள் செய்து வருகின்றனர். இது அப்பட்டமான பொய் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்து. மீனாட்சிபுர மதமாற்றத்தின் போதே இப்படிச் சொல்லப்பட்டது. இந்திய அரசின் நேரடி விசாரணையில் இது பொய் என்பது வெளிவந்தது. அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையே இதை ஏற்றுக் கொண்டுள்ளது.

கிறிஸ்தவர்களைப் பொருத்தமட்டில் அவர்களது எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவருவதுதான் உண்மை. இந்தியக் கிறிஸ்தவம் அமெரிக்கக் கிறிஸ்தவத்தைக் காட்டிலும் பழமையானது. கிறிஸ்துவின் சீடர் தாமஸ் மேற்குக் கடற்கரை வழியாக இங்கு வந்தபோது மயிலாப்பூர் பார்ப்பனர்களால் கொல்லப்பட்டார் என்றொரு கதை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இன்றளவும் மயிலாப்பூர் சாந்தோம் மாதா கோயிலில் தாமசுக்கு ஒரு கல்லறை உண்டு. கிறிஸ்தவம் இத்தனை பழமையானதாயினும் இன்றும் கூட அவர்கள் மொத்த இந்திய சனத்தொகையில் இரண்டரை சதத்துக்கும் குறைவாகவே உள்ளனர். அதுவும்கூட படிப்படியாகக் குறைந்து வருவதை மக்கள் தொகைக் கணக்கீடுகள் நிறுவியுள்ளன. 1971ல் 2.60 சதமாக இருந்த கிறிஸ்தவ மக்கள் தொகை 1989ல் 2.45 சதமாகவும் 1991ல் 2.32 சதமாகவும் குறைந்துள்ளது.

இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இந்துத்துவ வாதிகள் வனவாசி கல்யாண் மஞ்ச்போன்ற அமைப்புகள் மூலம் பெரிய அளவில் கிறிஸ்தவப் பழங்குடியினரையும் தலித்துகளையும் இந்துக்களாக மாற்றி வருகின்றனர். இதற்காகப் பல ஆயிரம் கோடி ரூபாய்களை அவர்கள் ஆண்டுதோறும் செலவிடுகின்றனர். கிறிஸ்தவ தலித்துகளுக்கு தலித்கள் என்கிற அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடையாது என்பது அரசியல் சட்டத்தில் இழைக்கப்பட்டுள்ள ஒரு பெரும் அநீதி. இதை வைத்துக் கொண்டு கிறிஸ்தவ தலித்துகளை ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் இந்துவாக மதம் மாற்றி வருகின்றனர்.

கிறிஸ்தவ தலித்துகளுக்கு இடஒதுக்கீடு இல்லை என்பது அரசியல் சட்ட ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மதமாற்றத் தடைச் சட்டமாக உள்ளதை நாம் கவனிக்க வேண்டும். தவிரவும் நமது அரசியல் சட்டத்தில் மதம் பரப்பும் உரிமை என்பது பிற அடிப்படை உரிமைகளைப் போல நிபந்தனையற்ற உரிமையாக இல்லை. பொது அமைதிக்குக் குந்தகம் வராத அளவில்மதம் பரப்பலாம் என்றே உள்ளது. பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுகிறது என்கிற அடிப்படையில்தான் மாநிலங்கள் இத்தகைய சட்டங்களை இயற்றி வருகின்றன. இது போன்ற காரணங்களால்தான் அம்பேத்கரும், பெரியாரும் நமது அரசியல் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தனர்.
மதமாற்றத்திற்குப் பெயர் மாற்றம் ஒரு ஈடாகுமா?
அம்பேத்கரோ, பெரியாரோ அப்படிச் சொல்லவில்லை. மதமாற்றம் என்பது குழந்தை விளையாட்டல்ல. மனித வாழ்வை எவ்வாறு வெற்றிகரமாக்குவது என்பதோடு தொடர்புடையது அது. தீண்டாமை இழிவிலிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழி இந்து மத விலங்குகளை உடைத்தெறிவதே. சாதியத்தையும் தீண்டாமையையும் ஒழிக்க ஒரே வழி மதமாற்றம்என்று அம்பேத்கர் கூறியுள்ளார். பெரியாரும் அதையே வற்புறுத்தியுள்ளார். இன இழிவு நீங்க இஸ்லாம் ஒன்றே நன்மருந்துஎன்பது அவர் கூற்று. இன்று பெரிய அளவில் பெயர் மாற்ற நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் கூட பெயர் மாற்றம் என்பதை மதமாற்றத்திற்கு ஒரு மாற்றாகச் சொல்லவில்லை (பார்க்க சமரசம், சனவரி 2004).இந்து மத எதிர்ப்பின் அடையாளமாகவே அதைச் செய்வதாகச் சொல்கிறார். தவிரவும் மதமாற்றத்தால் விடுதலை உண்டா இல்லையா என்பதல்ல பிரச்சினை. மதமாற்றம் என்பதும் ஒருவரது மதத்திற்கு மற்றொருவரை அழைப்பதும் ஒருவரது பிறப்புரிமை. இதில் தலையிட அரசுக்கு என்ன உரிமை என்பதே நமது கேள்வி.
முஸ்லிம்களுக்குத் தமிழ்ப் பற்று இல்லை. ஓதுவதைக் கூட அவர்கள் அரபியில்தான் செய்கிறார்கள் என்றொரு குற்றச்சாட்டு உள்ளதே?
அபத்தம். நமது தமிழ்ப்பற்றாளர்கள் கூட அப்படி ஏதும் சொல்லியதாகத் தெரியவில்லை. அப்படி சொன்னால் அது அவர்களுக்குள் ஒளிந்துள்ள இந்துத்துவ மனத்தின் வெளிப்பாடாகவே இருக்க முடீயும். குரானைத் தமிழில் பெயர்த்துள்ளது தவிர ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் அது தமிழ் மக்களால் வாங்கி வாசிக்கப்படுகிறது. இஸ்லாமியர் ஆற்றிய தமிழ்த் தொண்டு குறித்து அறிஞர் உவைஸ் எழுதிய நூல் ஆறு தொகுதிகளாக மதுரைக் காமராசர் பல்லைக் கழகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மசூதியில் நடைபெறுகிற தொழுகையில் பெரும்பாலானவைத் தமிழில் தான் நடைபெறுகின்றன. தொழுகை அழைப்பு என்பது உலகிலுள்ள எல்லா முஸ்லிம்களுக்குமான ஒரு பொதுவான அழைப்பு. ஒரு தனித்துவ அடையாளம். அது தவிர அவர்களது அனைத்து நடைமுறைகளும் தமிழில் தான் உள்ளன. திருமண ஒப்பந்தத்திலும் கூடப் பாருங்கள். சபையில் தமிழில்தான் கேள்விகள், சம்மதம் முதலியவை கேட்கப்படுகின்றன. பதிலும் தரப்படுகின்றன. இதை எல்லாம் பார்க்காமல் தொழுகை அழைப்பையும் கூடத் தமிழில்தான் செய்ய வேண்டும் என வற்புறுத்தவது எப்படிச் சரியாக இருக்கும்?

நமது நிகழ்வுகளில் தலித்கள், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோரை எந்த அளவிற்கு இடம் பெறச் செய்திருக்கிறோம் என்கிற கேள்வியை நாம் எல்லோரும் கேட்டுக் கொள்வது நல்லது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் நடைபெற்ற ஒரு தமிழ் வணிகர் மாநாட்டில்ஒரு முஸ்லிம் வணிகர் கூட அழைக்கப்படாதது என் நினைவுக்கு வருகிறது.இத்தகைய போக்குகளை மதச்சார்பற்ற, சனநாயக, இடதுசாரி சக்திகள் தவிர்க்க வேண்டும். சொல்லப்போனால் தலித்துகள், சிறுபான்மையினர் பிரச்சினைகள் குறித்து அக்கறையோடு பிரத்தியோகமாக மாநாடுகள், பொதுக் கூட்டங்கள், கோரிக்கைகள் முதலியவற்றை வைக்க வேண்டும். முஸ்லிம்கள் நடத்தக்கூடிய மாநாடுகள், பத்திரிகைகளில் முழங்குவதோடு நிறுத்திவிடக் கூடாது.
நன்றி :
அ.மார்க்ஸ்
amarx.org

ஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றனர்? (Part-09)


பாபர் மசூதிதான் இடிக்கப்பட்டுவிட்டதே. போனது போகட்டும் என இஸ்லாமியர் இதனை ஏற்றுக் கொண்டால் இனி பிரச்சினை இல்லைதானே?
இனிமேல்தான் பிரச்சினையே. மதுராவில் ‘’இட்காமசூதியை இடித்துவிட்டுக் கிருஷ்ண ஜன்ம பூமிகட்ட வேண்டுமெனவும், அஞ்சனியில் கிறிஸ்தவக் கோயிலை இடித்துவிட்டு ‘’னுமான் ஜன்ம பூமிÕ அமைக்க வேண்டுமெனவும் இந்து வெறியர்கள் பேசத் தொடங்கிவிட்டனர். வருணாசிரம அடிப்படையிலான இந்து ராஜ்யம்தானே அவர்களின் இறுதிக் குறிக்கோள்!
முஸ்லிம்களின் மனநிலை எப்படி இருக்கிறது?
மிகவும் பாதுகாப்பற்ற மனநிலையிலுள்ளனர். இரண்டாம் தரக் குடிமக்களாக உணர்ந்து வெட்கிப் போயுள்ளனர். தங்களின் அடையாளத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற நிலையில் இஸ்லாம் தனிநபர் சட்டம், ருதுமொழிக்கு நியாயம் வழங்குதல்’, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்குச் சிறுபான்மை உரிமை வழஙகுதல், பாடப்புத்தகங்களில் இஸ்லாமியர் பற்றிய பொய்ச் செய்திகளை நீக்குதல் போன்ற கோரிக்கைகளை முன் வைக்கின்றனர். கலவரங்களில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களைப் பேட்டி காணும்போது தங்களது பாதிப்புகளைச் சொல்லக்கூடப் பயந்து சாகின்றனர். (எ.பொ.வீ. 10-11-90). இழந்தது இழந்ததாக இருக்கட்டும். இனி இழப்புகள் தொடராதிருக்கட்டும்.குறைந்தபட்ச அமைதியான வாழ்க்கை போதும் என்பதுதான் அச்சம் கலந்த அவர்களது இன்றைய மனநிலை, எனினும் மசூதி இடிப்புக்குப் பினபு முஸ்லிம்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அரசியல் விழிப்புணர்வு பாராட்டத்தக்கது.
நீங்கள் செல்வதெல்லாம் சரியாகவும் நியாயமாகவுந்தான் தோன்றுகின்றன. எல்லாவற்றையும் நான் யோசித்துப் பார்க்கிறேன். இந்து வகுப்புவாதம் என்பது நம்மை உடனடியாக எதிர்கொண்டுள்ள ஆபத்தான சூழல் என்பது விளங்குகிறது. இந்நிலையில் நம்முடைய பங்கு என்ன?
பெரும்பான்மையினரின் பெயரிலான பாசிசத்திற்கு எதிராகச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது இந்த நாட்டிலுள்ள சனநாயகச் சக்திகளின் கடமை. பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகு இந்து மதவெறியைக் கண்டிப்பதற்கே அரசு அனுமதி வழங்க மறுக்கிறது. கண்டிப்பவர்களும் கூட வெளிப்படையாக இந்துமதப் பாசிசத்தைக் கண்டிக்காமல் சமய ஒற்றமைஎன்கிற பெயரில்தான் கருத்துப் பிரச்சாரம் செய்கின்றனர். ஏதோ இரண்டு சமயங்களுமே முரண்டு பிடித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு நிற்பது போன்ற அர்த்தத்தை இது ஏற்படுத்திவிடுகிறது.

ஆனால் நிலைமை அதுவல்ல. இந்துமத வெறியர்களும் இந்துமயமான அரசும் தாக்குகின்றனர். முஸ்லிம்கள் தாக்கப்படுகின்றனர்; எனவே இந்து மதவெறியைக் கண்டிக்கிறேன் என்று சொல்லாமல் மத ஒற்றுமை பேசுவதெல்லாம் சும்மா பம்மாத்துத்தான். இந்த நிலையில் இந்துமத வெறிக்கு எதிராக மக்களைத் திரட்டுவது சனநாயகச் சக்திகளின் கடமை. அதில் ஓர் அங்கம்தான் முஸ்லிம்கள் பற்றிய கட்டுக்கதைகளைத் தகர்ப்பது. கட்டுக் கதைகள் முன் வைக்கப்படும்போது அவற்றைத் தோலுரிப்பதும், அம்பலப்படுத்துவதும், முன்வைக்கும் சக்திகளை எதிர்த்துப் போராடுவதும் சிறுபான்மையினரின் உயிர், உரிமை, உடைமை எல்லாவற்றையும் பாதுகாப்பதும் நமது கடமை.

அது மட்டுமல்ல. இன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்டுவது என்கிற அடிப்படையில் சங்கராச்சாரி போன்ற இந்துத்துவ மனநிலையிலுள்ள மதத் தலைவர்களும் இந்துத்துவ அரசியல் சக்திகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் மசூதியைத்தான் கட்டிக் கொடுக்கவேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைப்பது நம் கடமையாக உள்ளது. 91ம் ஆண்டு இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி 1947ல் வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்தனவோ அப்படியேதான் இன்றும் இருக்க வேண்டும். அந்தச் சட்டப்படியும், பொதுவான மனித அறங்களின்படியும், மசூதி இடிக்கப்பட்ட அன்று அன்றைய பிரதமர் நரசிம்மராவ் அளித்த வாக்குறுதியின் படியும் பாபர் மசூதி இடிக்கப் பட்ட இடத்தில் மீண்டும் மசூதியே கட்டிக் கொடுக்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கையை நாமும் வைக்க வேண்டும். இதர இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற அரசியல் சக்திகளையும் முன் வைக்குமாறு வலியுறுத்தவுனம் வேண்டும்.
பின்னிணைப்பாய்ச் சில கேள்விகள்
இந்திய முஸ்லிம்களின் நிலைமையில் ஏதேனும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதா?
நிச்சயமாக இல்லை. இன்னும் மோசமாக ஒதுக்கப்படக் கூடிய நிலைக்கே முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக அவர்கள் மீதான வெறுப்புப் பிரச்சாரமும் தாக்குதல்களும் அதிகமாகியயுள்ளன. இந்தப் பத்தாண்டுகளில் மத்தியிலும் பல மாநிலங்களிலும் பா.ஜ.க.,வும் அவர்களது கூட்டணியிரும் ஆட்சிக்கு வந்துள்ளனர். மதச் சார்பற்ற அறிஞர்கள், கல்வியாளர்களை எல்லம் நிறுவனங்களில் இருந்து நீக்கியுள்ளனர். மதச்சார்பற்ற பாட நூற்களை நீக்கிவிட்டு அந்த இடங்களில் முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைக்கும் மோசமான கருத்துக்களைப் பாடங்களாகஎழுதி மாணவர்களுக்குப் புகட்டுகின்றனர். முஸ்லிம்கள் நடத்தக்கூடிய மதரசா பள்ளிகள் தீவிரவாதிகளை உருவாக்கும் மய்யங்கள் என்கிற பிரச்சாரத்தை அத்வானி முதலானோர் தெடார்ந்து செய்து வருகின்றனர். அந்த அடிப்படையில் மதரசாக்கள் மீதும் அலிகார் பல்கலைக்கழகத்தின் மீது பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மதமாற்றத் தடைச் சட்டத்தைத் தமிழக அரசு முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் குறி வைத்து இயற்றியதும் பின்னர் அது முடக்கி வைக்கப் பட்டதும் நினைவிருக்கலாம்.. இன்று பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்துள்ள ம.பி., சட்டிஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இச்சட்டம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் மூலம் முஸ்லிம் கல்வி நிறுவனங்களும் இதர அமைப்புகளும் மிரட்டப்படுகின்றன.

இந்நூல் பத்தாண்டுகளுக்கு முந்தியதாயினும் ஆங்காங்கே தேவையான இடங்களில் சில புதிய குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.

புள்ளி விவரங்களைப் பொறுத்தமட்டில், உதாரணமாக அரசு மற்றும் இராணுவத்தில் இடம் பெற்றுள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை அல்லது அரசு கடன் உதவி பெற்றுள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை என்று பார்த்தால் அவை குறைந்துள்ளன என்பதுதான் உண்மை.

அதே சமயத்தில் முஸலிம்களின் மீதான தாக்குதல்கள், கொலைகள், கொள்ளைகள் பெரிய அளவில் அதிகரித்துள்ன. கோயமுத்தூரும், குஜராத்தும் இதற்கு எடுத்துக்காட்டுகள் பெரிய அளவில் முஸ்லிம்களின் சொத்துக்கள் கோவையில் அழிக்கப் பட்டதை பி.யூ.சி.எல். போன்ற அமைப்புகள் வெளிப்படுத்தியுள்ளன. கோட்டைமேடு போன்ற பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் நிரந்தரக் குற்றவாளிகளாகக் கண்காணிப்புக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர். குஜராத்தில் 2000 பேருக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 1,70,000 முஸ்லிம்கள் அகதிகள் ஆக்கப்பட்டனர். இன்றளவும் முஸ்லிம்களில் பெரும்பான்மையோர் வீடு திரும்ப முடியவில்லை.

குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்படவில்லை. அமைச்சர்களாகவும், சட்டமன்ற உறுப்பினர்களாகவும், அரசுப் பதவிகளில் அமோகமாக உலவுகின்றனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்களோ எவ்வித நியாயமான நிவாரணமும் இன்றி அஞ்சி நிற்கின்றனர். குற்றவாளிகள் தண்டனை இன்றித் திரிதல், பாதிக்கப்பட்டவர்கள் உரிய நீதியும், நிவாரணமும் இன்றி அவதியுறுதல். இது ஒரு சனநாயக நாடா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. உபேந்திர பக்சி போன்ற உலகப் புகழ் பெற்ற சட்டவியல் அறிஞர்கள் இந்த அடிப்படையில் குஜராத்தை ஒரு கிரிமினல் அரசுஎனக் கூட வரையறுத்துள்ளனர்.

மொத்தத்தில் இந்திய முஸ்லிம்களின் நிலைமை மேலும் ஆபத்துக்குள்ளாகியுள்ளது. சீரழிந்துள்ளது என்பதே உண்மை.
ஊடகங்களில் முஸ்லிம்கள் பற்றிய சித்திரிப்புகளில் ஏதும் முன்னேற்றம் தென்படுகிறதா?
எந்த முன்னேற்றமும் இல்லை என்பது மட்டுமல்ல. செப்டம்பர் 11க்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது. முஸ்லிம்கள் அனைவரையும் தீவிரவாதியாக, தேசபக்தியற்றவர்களாக, சந்தேகத்துக்குரியவர்களாக,சித்திரிக்கும் நிலைமை அதிகமாகியுள்ளது. நமது தமிழ் சினிமாக்கள் இந்த அம்சத்தில் ரொம்ப மோசம். மணிரத்னம், கமல்ஹாசன் போன்றோர் இந்த வேலையை நுணுக்கமாகச் செய்கின்றார்கள் என்றால் விஜயகாந்த், அர்ஜூன் ஆகியோர் நடிக்கும் படங்கள் மிகவும் வெளிப்படையாக முஸலிம் வெறுப்பைக் கக்குகின்றன. எடுத்துக்காட்டாக ஒற்றன், நரசிம்மன் போன்ற படங்களைச் சொல்லலாம். குஜராத் படுகொலைகளின் போது ஆங்கில இதழ்கள் அந்தக் கொடுமைகளை வெளிக்கொணர்வதில் முக்கியப் பங்காற்றின என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அதிலும் கூட தேசிய அளவிலான ஆங்கில இதழ்களுக்கும் மாநில அளவிலான மாநில மொழி இதழ்களுக்கும் சில வேறுபாடுகளைச் சுட்ட முடியும். இந்திமொழி இதழ்கள் குஜராத் பிரச்சினையில் மிக மோசமாக முஸ்லிம் வெறுப்பை வெளிப்படுத்தியிருந்ததை பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். தமிழ் இதழ்களும் கூட அதேபோல் நடந்துகொண்டன, நடந்து கொண்டுவருகின்றன. தினமலர்பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. தினமணியைக் கட்டுப்படுத்துவது ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி. சமீபத்தில் வரலாற்றுப் பாடங்களில் பா.ஜ.க. அரசு செய்துள்ள புரட்டுகளை விளக்கி ஒரு முன்னாள் துணைவேந்தர் எழுதிய கட்டுரையொன்றை தமிழ் முனனணி நாளிதழ் ஒன்று வெளியிட மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அப்படியானால் எந்த நம்பிக்கைக் கீற்றையும் உங்களால் காண இயலவில்லையா?
அப்படி நான் கருதவில்லை. குறிப்பாக மசூதி இடிப்பிற்குப் பிறகு முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் ஒரு நல்ல அரசியல் விழிப்புணர்வு வந்துள்ளது. ஊடகங்கள், பத்திரிகைகள் ஆகிய துறைகளில் அவர்களின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கதாக உள்ளன.இத்தகைய அரசியல் விழிப்புணர்வு முஸ்லிம் சமூகத்தில் தற்காப்பை அதிகப்படுத்தும என்று நம்புவதற்கு வாய்ப்பிருக்கிறது.

மதச்சார்பின்மையோர், இடதுசாரிகள் மற்றும் இதர ஜனநாயக சக்திகள் ஆகியோர் சிறுபான்மையோர் பிரச்சினைகளில் காட்டக்கூடிய அக்கறையும் பாராட்டக் கூடியதாகவே உள்ளது. அறிவுத் துறையில் இந்துத்துவ சக்திகள் மேற்கொள்ளும் புரட்டு வேலைகளுக்கு இடதுசாரி அறிவுஜீவிகள் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிற ஆக்கப்பூர்வமான எதிர்ப்புகளும், தோலுரிப்புகளும் பாராட்டக்கூடியதாக உள்ளன.

அதே போல குஜராத்தில் மனித உரிமை அமைப்புகளின் செயற்பாடுகளும் குறிப்பிடத்தக்கதாக இருந்தன.

எனினும் அதிகரித்து வரும் இந்துத்துவ ஆபத்தை எதிர்கொள்ள இத்தகைய நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.பாசிஸ்டுகள் ஒரு செங்கல்லை வைத்து, ஒரு விநாயகர் சிலையை வைத்து, சிலை வணக்கம், பூஜை என்று ஏதோ ஒரு பெயரில் ஆயிரக்கணக்கில், லட்சக் கணக்கில் மக்களை அணி திரட்டுகின்றனர். அடித்தள மக்கள், பெண்கள் முதலியோரைப் பெரிய அளவில் திரட்டுகின்றனர். ஆனால் மதச்சார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி சக்திகளின் எதிர்வினைகள் ரொம்பவும் அடையாளச் செயற்பாடுகளாகவே முடங்கியிருக்கின்றன. ஒரு கண்டனக் கூட்டம், மனிதச் சங்கிலி என்கிற அளவில் முடிந்துவிடுகின்றன. வலதுசாரி மதவாத சக்திகள் மக்களைத் திரட்டுவதும் இடதுசாரி, சனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் அதற்கு ஈடுகொடாமல் இருப்பதும் நாட்டில் பாசிசம் வெற்றி கொள்வதின் அடையாளமாக அமையும்.

அரசியல் பிரச்சினைகளை அரசியற் களத்தில்தான் தீர்க்க வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பு வரட்டும் என்கிற ரீதியில் அரசியல் அமைப்புகள் சொல்லிவிட்டுச் சும்மா இருக்க இயலுமா?
மீபத்தில் ஒரு இதழில் படித்தேன்: ஷாபானு பிரச்சினையில்தான் முஸ்லிம்கள் முதன் முதலில் இந்திய அளவில் திரள ஆரம்பித்தார்களாமே? இது உண்மையா?
நானும் படித்தேன். முஸ்லிம்களிடம் சனநாயகம் இல்லை, சகிப்புத் தன்மை இல்லை என்றெல்லாம் அவ்வப்போது முஸ்லிம்களுக்கு எதிரான கட்டுக் கதைகளைப் பரப்பி வரும் இதழ் அது.ஷாபானு பிரச்சினையில்தான் இந்திய முஸ்லிம்கள் ஒன்றிணைகின்றனர் எனச் சொல்வதன் மூலம் முஸ்லிம்கள் பெண்களை ஒடுக்கியவர்கள், இந்துத்துவத்திற்கு எதிரானவர்கள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்றொரு பிம்பத்தை ஏற்படுத்தும் முயற்சி அது. திரைப்படங்கள், ஊடகங்கள் ஆகியவற்றில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பரப்பப்படும் தீவிரவாதப்பிரச்சாரத்தின் இன்னொரு தந்திரமான வடிவம் இது. ஆனால் உண்மை இதுவன்று. ஷாபானு பிரச்சினை மேலுக்கு வந்தது 1985ல் ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில், அதற்கு முன்பே முஸ்லிம்கள் இந்திய அளவில் திரண்டு தம் குரலை ஒலிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதுதான் உண்மை.

சுதந்திரத்திற்குப் பிந்திய இந்திய முஸ்லிம்களின் வரலாறு மிகவும் பரிதாபமானது. அநீதிகள் நிரம்பியது. பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டி படேல், ராஜேந்திர பிரசாத், சியாமா பிரசாத் முகர்ஜி, மாளவியலா முதலியோர் இங்குள்ள முஸ்லிம்களைப் பிணைக் கைதிகளாகவே கருதி நடத்தினர், முஸ்லிம்களுக்கு இருந்த ஒரே ஆறுதல் காந்தியும் நேருவும்தான். காந்தியையும் இந்துத்துவவாதிகள் சுட்டுக் கொன்றனர். முஸ்லிம் தலைவர்களனைவரும் பாகிஸ்தானுக்குச் சென்றனர். இந்திய அளவிலான ஒரே தலைவராககிய அபுல் கலாம் ஆசாத் முஸ்லிம்களுக்குத் தலைமை கொடுககத் தயாராக இல்லை.

அரசியல் சட்ட அவையில் முஸ்லிம்களுக்கு குறைந்தபட்சம் மூன்று அநீதிகள் இழைக்கப்பட்டன.1. உருது மொழி புறக்கணிக்கப்பட்டமை.
2.
பாராளுமன்றம், சட்டமன்றம், அரசு பதவிகள் ஆகியவற்றில் இடஒதுக்கீடும் இரட்டை வாக்குரிமையும் மறுக்கப்பட்டமை.
3.
பொதுசிவில் சட்டம் பற்றிய குறிப்பை வழிகாட்டு நெறிமுறைகளில் ஏற்றியமை.


இதே காலகட்டத்தில் பாபர் மசூதிக்குள் பாலராமர் சிலையை வைத்து வருங்காலக் கொடுமைகளுக்கு வித்திட்டது இந்துத்துவம்.

தலைமையும் வலுவான இயக்கமும் அற்ற முஸ்லிம் சமுதாயம் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டது. காந்தி முதற்கொண்டு அனைவரும் முஸ்லிம் லீக்கை கலைத்துவிடச் சொன்ன நேரம் அது. எப்படியேனும் இந்திய தேசத்தின் மீதானத் தங்களின் விசுவாசத்தை நிறுவுவதே அடுத்த பத்தாண்டுகளில் முஸ்லிம்களின் பணியாக இருந்தது. இந்நிலையில் 1960 வரை அகில இந்திய அளவில் முஸ்லிம் திரட்சி என்பது ஏற்படவே யில்லை.

1961
ல் தான் முதல் முறையாக டாக்டர் சையத் முகமத், மவுலானா ஹிஸ்புர் ரஹ்மான் ஆகியோரின் முயற்சியில் ஜூன் 10, 11 தேதிகளில் புதுடெல்லியில் இந்திய முஸ்லிம்களின் மாநாடு கூட்டப்பட்டது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி. இதற்குப் பின்புலமாக இருந்தது ஜபல்பூரிலும், பகல்பூரிலும் நடைபெற்ற மிகப் பெரிய வகுப்புக் கலவரங்கள். முஸ்லிம்களின் உயிர்களும் உடைமைகளும் பெருமளவில் அழிக்கப்பட்டன. 1964ல் ஜாம்ஷெட்பூரில் மிகப்பெரிய அளவில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டபோது ஆகஸ்ட் 8, 9 தேதிகளில் லக்னோவில் மவுலானா தயீப், சையத் முகமது ஆகியோரின் முயற்சியால் அகில இந்திய முஸ்லிம் மக்களின் மஜ்லிஸ் ஏ முஷாவரத் மாநாடு கூட்டப்பட்டது. ஜெயப்பிரகாஷ் நாராயணன், நவகிருஷ்ண சவுதரி, ஆனந்த சங்கரராய், சாரு சந்திர பந்தாரி முதலியோர் இந்துத்துவ சக்திகளைக் கடுமையாகக் கண்டித்தனர். 1964ல் தான் விசுவ இந்து பரிசத் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, கடுமையான வன்முறைகளையும் சொத்திழப்பையும் உயிரிழப்புகளையும் எதிர்கொண்ட போதும் எல்லாவற்றி லிருந்தும் தாம் ஒதுக்கப்படுவதாக உணர்ந்த போதும்தான் முஸ்லிம்கள் ஒன்றிணையக் கூடிய நிலை ஏற்பட்டது. 1961க்குப் பிறகு இது நிகழ்ந்தது. இதை மறைத்து ஷாபானு விவகாரத்தை ஒட்டித்தான் (1985) முஸ்லிம்கள் திரண்டதாகச் சொல்வது அப்பட்டமான இந்துத்துவத் தந்திரம். அடிப்படைவாத நோக்குடன்தான் முஸ்லிம்கள் திரண்டனர் என நிறுவ முயலும் குள்ளநரித்தனம்.
எல்லோருக்கும் பொதுவான சிவில் சட்டம் என்பது ஒரு நியாயமான கோரிக்கைதானே! அதை ஏன் முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள்?
மேலோட்டமாகப் பார்த்து இந்தப் பிரச்சினையை அணுக முடியாது. கிரிமினல் சட்டம், தண்டனைச் சட்டம் எல்லாம் இங்கே பொதுவாகத்தான் இருக்கிறது. சிவில் சட்டத்தில் விவாகரத்து, தத்து எடுத்தல்,சொத்துரிமை ஆகியவற்றில் மட்டும் சில வேறுபாடுகள் மத அடிப்படையில் இங்கே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஏதோ இந்திய முஸ்லிம்கள் அனைவருக்கும் அவர்களது ஷரியத் சட்டங்கள் எல்லாம் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளன என்பது போலச் சொல்வதும் தவறு. உதாரணமாக முஸ்லிம் நீதி முறையோ, தண்டனை முறையோ இங்கு நடைமுறையில் இல்லை. குற்றவாளிக்குத் தண்டனை என்பது இங்கே மத ரீதியில் வழங்கப்படுவதும் இல்லை. எல்லோருக்கும் பொதுவாகத்தான் தண்டனை வழங்கப்படுகிறது.

இந்தியா போன்ற பலவிதமான மொழி, பண்பாடு மதம், சாதி என வேறுபட்டு இருக்கும் மக்கள் குழுமங்களிடையே பொது சிவில் சட்டம் சாத்தியமல்ல. இந்துக்களிடையே கூட ஒரு சாதி மக்களின் வழமைகள் மற்றொரு சாதியுடன் முழுமையாக ஒத்துப் போவதில்லை. எடுத்துக்காட்டாக சில சாதியினர் மத்தியில் எளிதில் விவாகரத்தும் மறுமணமும் அனுமதிக்கப்படுகிறது. சில சாதிகளில் அது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்துச் சட்டம் இயற்றும்போது கூட மேற்குப் பஞ்சாபிய உயர்சாதிப் பார்ப்பனப் பண்பாடுகளின் அடிப்படையிலேயே அச்சட்டம் இயற்றப் பட்டது என்றும் அது பல பழங்குடி மக்களின் பண்பாடுகளுக்கு எதிரான வன்முறையாக இருக்கிறது என்றும் ஒரு விமர்சனமுண்டு. இது போன்ற சந்தர்ப்பங்களில் தல வழமைகளையும் கணக்கிலெடுத்துக் கொள்வதற்கும் நமது சட்டத்தில் வழிமுறைகள் உள்ளன.

இப்படி நிறைய உதாரணங்கள் சொல்ல முடியும். சிறீரங்கம் கோயில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா, தென்கலை நாமம் போடுவதா என்றொரு பிரச்சினை பல ஆண்டுகளக்கு முன்பு வந்தது. நீதிமன்றம் வரை சென்ற அந்தப் பிரச்சினையில் இறுதிவரை பொதுவான முடிவு ஏதும் எடுக்க முடியவில்லை. ஒருமாதம் வடகலை நாமம்,இன்னொரு மாதம் தென்கலை நாமம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது நினைவிருக்கலாம். இந்துமதத்திற்குள்ளேயே கூட இது சாத்தியமில்லை என்பதையே இது நிறுவுகிறது. இந்நிலையில் பல்வேறு மதங்களையும் உள்ளடக்கிய பொதுசிவில் சட்டம் என்பது முஸ்லிம்களக் குறிவைத்துச் செய்யப்படும் தாக்குதலின்றி வேறில்லை.

சென்ற ஜுலை 21 (2003) அன்று வழங்கிய தீர்ப்பொன்றில் வழக்கின் வாதங்களுக்கோ,தீர்ப்புகளுக்கோ எவ்விதத் தொடர்பும் இன்றி பொதுசிவில் சட்டம் நிறைவேற்றுமாறு தலைமை நீதிபதி காரே பாராளுமன்றத்திற்கு அறிவுறுத்தியுள்ளார். அதற்கு அவர் சொன்ன காரணம் பொதுசிவில் சட்டம் வந்தால் தேசிய ஒருமைப்பாடு காப்பப்படுமாம். இதற்கு முன்பே நீதிபதி குல்தீப் சிங், சந்திரசூட் போன்றவர்களும் இப்படிச் சொல்லியுள்ளனர். அரசியல் சட்ட அவை விவாதத்தின் போதும் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், எம்.ஆர்.மசானி போன்றோர் இதைச் சொல்லியுள்ளனர். இதில் சிலஅம்சங்களை நாம் கவனிக்க வேண்டும்.

1.
பாராளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் அரசியல் சட்டத்திற்குப் பொருத்தமாக உள்ளதா இல்லையா என ஆய்ந்து தீர்ப்பளிப்பதே நீதிமன்றங்களின் பணி. பாராளுமன்றம் என்ன மாதிரி சட்டங்களை இயற்ற வேண்டும் எனச் சொல்வதற்கோ, கட்டளையிடுவதற்கோ அதற்கு அதிகாரமில்லை.

2.
தேசிய ஒருமைப்பாடு குறித்த கவலையும் கூட நீதிமன்ற எல்லைக்கு அப்பாற்பட்டது. அது குறித்துப் பாராளுமன்றம், அரசியல் சட்டம் ஆகியவை கரிசனம் கொள்வதே பொருத்தம்.

3.
இந்த நாடு என்னுடையது; என்னுடைய அடிப்படையான, மத, பண்பாட்டு, மொழி உரிமைகள் எதுவும் புறக்கணிக்கப்படவில்லை; அந்த உரிமைகள் இந்த நாட்டின் சட்டத்தாலும், அரசாலும், நீதிமன்றங்களாலும் பாதுகாக்கப்படும் என்கிற உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும்/குடிமகளுக்கும் உறுதியாகும்போதே இந்த நாட்டின் மீதும், அதன் ஒருமைப்பாட்டின் மீதும் அவருக்கு நம்பிக்கை வரும். மாறாக பொதுசிவில் சட்டம் போன்றவற்றின் மூலம் அந்த உரிமைகள் மறுக்கப்படும்போது அவருக்கு இது நமது நாடுதானா என்கிற அய்யம்தான் ஏற்படும்.

முஸ்லிம் தனிநபர் சட்டத்தை ஒழிப்பது என்பது அவர்களின் மத உரிமையில் தலையிடுவதுதான். சொல்லப்போனால் தனிநபர்’, ‘சட்டம்என்கிற இரு சொற்களுமே இங்கே பொருத்தமின்றி கையாளப்படுகின்றன. தனிநபர்என்கிற மேலைத்தேய நவீனத்துவக் கருத்தாக்கம் இங்கே பொருந்தாது. முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் இந்தச் சட்டத்தின் கீழ் வருபவை தனிநபர் சார்ந்த உரிமைகள் அல்ல. அது அவர்களது தீனின்ஒரு பகுதி, மதக் கடமை. தவிரவும் தொகுத்துச் சட்ட ஏற்பு வழங்கப்பட்டவைகளையே சட்டம்என்கிறோம். சட்டமாகும்போது நீதிமன்றம் அதை சொல்லுக்குச் சொல் கடைபிடிக்க வேண்டும. மீற முடியாது. முஸ்லிம் தனிநபர் சட்டம்இவ்வாறு பண்ணப்பட்டதல்ல. அதனால்தான் ஷாபானு வழக்கிலும் வேறு பல வழக்குகளிலும் முஸ்லிம் தனிநபர் சட்டத்தையும் மீறித் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய வாய்ப்புகள் இருக்கும் போதும் பொதுசிவில் சட்டம் எனக் கூப்பாடு போடுவதன் அர்த்தமென்ன?

இந்த மாதிரியான பிரச்சினைகளில் சீர்திருத்தங்கள் கூடாது என்பதில்லை. அவை உள்ளிருந்து மேற்கொள்ளப்பட வேண்டும். வெளியிலிருந்து திணிக்கக்கூடாது. கிறிஸ்தவர்கள் தமது சட்டங்களில் சில மாற்றங்கள் வேண்டுமென்கிறார்கள். இதில் கருத்தொருமிப்பு இருந்தால் அதை ஏற்று தேவையான சட்டத் திருத்தம் செய்யலாம். அதே போல முஸ்லிம்கள் மத்தியிலும் ஏதோ ஒரு விசயத்தில் ஒரு கருத்தொருமிப்பு ஏற்பட்டு சட்டத் திருத்தம் என்கிற குரல் மேலுக்கு வந்தால் அது வேறு விஷயம்; அத்தகைய நிலை இல்லாதபோது வெளியிலிருந்து எதையும் திணிக்க முயல்வது எப்படிச் சரியாக இருக்க முடியும்?

சில விடயங்களில் ஒரே பிரச்சினை குறித்து இருவேறு சூழல்களில் இருவேறு கருத்துக்களைக் கூடப் பேச வேண்டி இருக்கலாம். இதுநாள் வரை பெண்களுக்குப் பர்தாவேண்டாமே என்று சொல்லிக் கொண்டிருந்த பெண்ணியவாதிகள் கூட இன்று பிரெஞ்சு அரசாங்கம் பர்தா அணியக் கூடாது என்றொரு நிலையை வன்முறையாகச் செயல்படுத்த முனையும் போது அதற்கெதிராக முஸ்லிம் பெண்களுடன் இணைந்து போராடவில்லையா?