Showing posts with label மனித நேயம். Show all posts
Showing posts with label மனித நேயம். Show all posts

Saturday, January 12, 2013

Indian forces let loose hell on Kashmir


kasmir01Created weeping widows and half widows
By Latheef Farook
KASHMIR'S beauty is the stuff of fables. Forested hillsides and lofty glacier-covered peaks of the mountain range surround the heavily populated central valley, which nestles picturesquely against the backdrop of the Himalayas. Over the ages, poets and writers have extolled its scenic splendour in superlative terms, bestowing on it appellations such as "Heaven on Earth". On the map of India, the State of Jammu and
Kashmir resembles a coronet.
However Kashmir's traditionally gentle and peaceful people remain a downtrodden and exploited lot for centuries.
Political manoeuvrings of the Central Government in Delhi, rigging of elections in 1987 and later in 1996, years of political frustrations, economic problems and poverty combined with many other factors led to the 1989 uprising which became a crucial turning point in the Kashmiri Muslims' struggle for freedom from India. With the Kashmiris intensifying their struggle for self-determination, Indian forces began unleashing atrocities to crush their freedom struggle.
Highlighting the atrocities the Weekend Guardian, London, reported as early as 4 August 1991 that "after a visit to Kashmir in 1991, the late Indian Prime Minister Rajiv Gandhi said at a press conference in New Delhi that 'the brutalities of the Indian army and the Central Reserve Police meant that India may have lost Kashmir'". Curfews preventing routine movements in the streets and even at homes and ruthless crackdowns had been two of the most deadly strategies adopted by India. It was often said that barbarism inflicted, often demonstrated the hatred and intolerance towards Kashmiri Muslims.
Jammu And Kashmir State Governor K. V. Krishna Rao admitted that Indian forces had been responsible for the massacre of the Kashmir people on several occasions and that he felt deeply for the victims of these human rights violations.
Summing up the situation one writer said "hell has been let loose on Kashmiris and what happens in Kashmir is not made known by national dailies and government owned media which distort events". Besides the common feeling of being betrayed by India of its promises to hold a plebiscite the arbitrary arrests, regular and systematic use of torture in interrogation camps, indiscriminate and extra judicial killings, brutal search operations, ransacking of homes and even raping women in the presence of family members and children added fuel to their anger.
Today, life in general remains paralysed with bomb attacks, reprisals, cross firing and curfew. The misery is worse for those living in and around areas known for freedom activities as they become targets for large-scale inhumane search operations. Once beautiful Srinagar is nowkasmir002 a dirty and dusty ghost city; with uncollected rubbish littering the roadsides. Life sputters in the lanes and by lanes, while streets, full of potholes, are deserted and the charred remains of many beautiful buildings speak volumes for the unfolding tragedy. Dal Lake is thick and stagnant with weeds.
Almost every Kashmiri has a tale to tell of a family member being grabbed by security forces, not to be seen again. Besides being subjected to crackdowns and cross firing, Kashmiris have also been deprived of their livelihood, as the on-going uprising and the atrocities of the armed forces resulted in the abrupt drop in the number of tourist arrivals. As a result, houseboat owners, the Hanjios, who for generations managed these houseboats, hotel owners and those who depend on tourism to sell their traditional handicrafts, trishaw wallahs, Tonga drivers, taxi drivers and hundreds of thousands of others, have lost their only source of income.
The present generation of Kashmiri Muslims grew up in the midst of unprecedented atrocities unleashed by Indian armed forces which ,according to figures released in the March 2010 issue of All Parties Hurriyat Conference Azad and Jammu Kashmir, killed 93,142, destroyed 105,832 houses and shops, orphaned 107,326, molested 9901 women and widowed 22,719.
Indian oppression also created more than 33,000 widows and half widows-those who do not know whether their husbands, arrested by Indian forces, were alive or dead.
According to a research study, of the 33,000 or so widows and half widows only 8.66 percent have remarried while others suffer unable to cope with immense problems. The plight of half widows is still worse. They find it difficult to get married because they do not know whether their husbands are dead or alive.
More than 90 per cent find it difficult to marry again because they already have children to take care of .They face misery after misery and most of them often leave their children in the custody of their grandparents.
They face financial difficulties, psychological downfall, emotional stress, denial of due inheritance rights, sexual harassment, physical insecurity and social undesirability. They are losing control over children, mismanagement of home affairs, social security and apathy, dead husbands' liabilities, dependence on relatives and others, harassment by in-laws, loneliness, over-burden with domestic and other works, inferiority complex as they are consciously isolated and discriminated,"
The situation is such even these women often had to do various domestic works to feed their children. The eternal uncertainty, anxiety and other psychological problems had even led to suicidal tendencies among these women "said noted psychiatrist Dr Mushtaq Ahmad Margoob.
Various organizations pleaded with successive governments to find out whether their husbands are alive or dead .All these pleas fell on deaf ears of the New Delhi's puppet administration in Kashmir to date.
These half widows, lone bread-earners for their families, have been waiting for their husbands to return for almost two decades. However there is no sign of their return or even information about their fate.
In a sit-in programme organized by the Association of Parents of Disappeared Persons (APDP) in Srinagar, the half widows also criticized Chief Minister Omar Abdullah and opposition leader Mehbooba Mufti for failing to fulfill the promises made to them in carrying out fair investigation in the disappearance cases.
"It is not just this National Conference government, even its predecessors led by the PDP only made futile promises. All kind of investigations which have been initiated failed to deliver somehow and were left incomplete. The more recent issue of mass graves and DNA sampling is just one more farce created to muzzle our voices. But we all know, none of the probes have been fair, "Parveena Ahanger, chairperson, APDP, said.
kasmir05kasmir06
kasmir07kashmirboys
Meanwhile, the APDP in its monthly sit-in programme urged the Indian government to ratify the International Convention for protection of all persons in enforced disappearances.
They said that the Indian government's refusal to officially recognize enforced disappearances in Kashmir has left families in perpetual limbo, promulgating stress and psychological trauma for parents, spouses and children But for the "half-widows" it is particularly difficult? Based on their insecure position of being "single", yet still legally married, the "half-widows" are unable to access the family estate or ration cards. Even the ex-gratia relief and compassionate appointment created by the Indian government can only be accessed with a death certificate and that too only if it is proven that the deceased had no link with militancy.
In rural Kashmir, with fewer economic opportunities, "half-widows" are at a greater risk of suffering manipulation by government officials and even community leaders. Adding to the confusion is the continued dispute over what is the minimum time needed to dissolve a marriage and allow a "half-widow" to move on with her life and possibly remarry according to Islamic law?
"Life has crushed me with a double tragedy," explains half-widow Haleema. "My husband has disappeared and I am all alone to look after my little children, especially their education."
It's been five years since Haleema's husband left for work in the morning never to return. Since then, she has received no news of her kasmir03husband. Not even an idea of what happened to him. Tired of tracing who she has named, 'my beloved,' she desperately wants to move ahead to take care of herself and her three children.
The primary concern of families, "...is to find their missing person. They move from one police station to another, from one army camp to another and so on. It takes months and years...," says a detailed report by award winning Kashmir based journalist, Mr. Haroon Marani.
During the years of conflict in Kashmir, it's not only the half-widows who have suffered. The half-orphans have also suffered heavily. As a child's self-esteem is wrapped in the identity of a missing father, a generation of children is now living through the confusion of broken dreams.
Though the world , including the so called Muslim countries, have forgotten the plight of Kashmiri Muslims, the situation even today is such that women lose a family member every day. A husband, son, brother, father, cousin, or uncle disappears. Kashmiri journalist Afsana Rashid captures the voices of these women in her heart-wrenching book, Widows & Half-Widows.
Based in Indian-administered Kashmir, Rashid has devoted her life to uncovering human rights abuses in her homeland. She writes, women and children are the worst sufferers...The suicide rate among women have increased.
Rashid's book reads like a saga. Every page is more horrifying than the last. More compelling. More disturbingly rich with details of the women who are learning to survive without a male guardian–the breadwinner.
A Kashmiri woman, detained tortured, raped and killed by Indian armed forces.
Women also disappear. Inside prison. I've met women charged for terrorism. They insist there is no evidence against them. Even without evidence, women serve at least five years, which is the longest (illegal) time a female suspect spends behind bars.
"My file was moved from one judge to another. The case was false to begin with. I knew I was innocent, but the Indian Court stalled the case. So I waited five years before they could release me," female political activist Fareeda Begum told me.
When they are finally released, women are determined to reenter the political fray. They protest. They join men on the streets. They create their own political parties–like Fareeda Begum, head of an all-male organization managed by her son. We met in her home when she was not hiding from the authorities and after her release for a terrorist attack in India's capital, New Delhi that she says she had nothing to do with.
Depressed faces of half widows suffering in Kashmir
While Fareeda Begum is a well-known political activist, Rashid's book highlights women who are "invisible," giving attention to the ordinary Kashmiri woman whose voice deserves to be heard.
Rashid's authentic stories of women in Kashmir remind of countless women in the valley. In every household, there is a story of trauma. Torture. Loss. Regret. But there is also hope. Despite their losses, women are taking a stand.
Women create change. They meet. They move. They make it possible for other women to live. Female leaders and members in an all-women's political group.
In yet another report on widows in Kashmir struggle to make a living ‎ columnist Shahana said that the conflict has changed almost all aspects of society which remains fractured in one or the other way.
There is broad agreement among civil society groups and most political parties, including major Kashmir-based parties, that draconian laws, including the Armed Forces Special Powers Act, must be withdrawn because when such laws are in place, it is the woman who is most affected. Indeed, this along with need to set up special fast track courts for speedy trial and justice to rape victims and punishment to security personnel and all others accused of rape and molestation topped the list of 10 demands made at a convention on Peace and Justice for Kashmiri Women organized by the Centre for Policy Analysis (CPA) on October 30 at the Kashmir University in Srinagar.
But there is no middle ground insofar as hardliner Syed Ali Shah Geelani of the Hurriyat Conference is concerned. The atrocities against women are taking place in Kashmir because of the presence of AFSPA and the "Indian occupation force of seven and a half lakhs", he alleged, dismissing all talk of a civilian government, deliverance of justice, development or role of militants in the atrocities as misplaced. His one point demand: locals be allowed to decide their future through a referendum; everything else will follow from that.
Orphans
Most of the children living in orphanages in Kashmir suffer from psychiatric and emotional disorders including depression as orphanages fail to provide adequate facilities and psychosocial support to these children.
A survey conducted by a social activist, Qurat-ul-Ain Masoodi, found among the orphans high prevalence of Separation Anxiety, Post Traumatic Stress Disorder (PTSD), Panic Disorder, Social Phobia and Conduct Disorder, Generalized Anxiety disorder and Dysthymia.
According to an independent study by UK-based 'Save The Children "there is a high rate of mental health problems, predominantly those of emotional nature among orphanage children.
In late March, Amnesty International released a report entitled A lawless law: Detentions under the Jammu and Kashmir Public Safety Act kashmirorph(PSA) that castigated Indian authorities over a law that allows police in the troubled state to detain suspects for up to two years without charge.
The report notes that the PSA "violates India's human rights legal obligations" by by-passing institutions in securing the long-term detention of political activists, suspected fighters and other individuals in a bid to keep them "out of circulation".
Strongly denouncing Indian double veteran Kashmiri leader Syed Ali Gilani said" The horrific crime that has been committed against our daughter, the gruesome gang rape of a college going girl in New Delhi, has broken our hearts, and understandably so, but if the Indian people have even an iota of conscience left in them, they should also raise their voice against the atrocities committed against Kashmiri women and press their government to bring the culprits to book,".

Thursday, November 15, 2012

அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தால் என் மகனை கொன்றவனுக்கு மன்னிப்பு: ஒரு சவூதி தந்தை

 

 
 
ஏ.அப்துல்லாஹ் : ஒரு சவூதி தந்தை தனது மகனை கொலைசெய்த கொலையாளியை கொலையாளி அல் குர்ஆனை முழுமையாக மனனம் செய்தால் கொலையாளியை மன்னிப்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக ‘அல் யவ்ம் சவூதி’ என்ற பத்திரிக்கை தெரிவித்துள்ள தகவலில் , ரபி அல் – துசரி என்ற தந்தை அவரின் அப்துல்லாஹ் என்ற இளம் மகனை பைசல் அல் அமீரி என்பவர் ஒரு தகராறின் போது கொலைசெய்தமைக்காக சவூதி நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு மரண தண்டனையும் உறுதியாகி மரண தண்டனையை எதிர்நோக்கியவராக இருக்கிறார்.
 
இந்த நிலையில் கொலையாளியை பெரும் தொகை பணத்தை பெற்றுகொண்டு மன்னிக்குமாறு கொலையாளியின் உறவினர்களும் அரச அதிகாரிகளும் கொலைசெய்யப்பட்டவரின் தந்தையை வேண்டியுள்ளனர் . பணத்தையோ பொருளையோ பெற்றுகொள்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அந்த கொலைசெய்யப்பட்டவரின் தந்தை. கொலையாளி அல் அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தால் அவரை மன்னிப்பதாக அறிவித்துள்ளார்.
 
அண்மையில் மகனை கொன்ற கொலையாளியை சிறைச்சாலை சென்று நேரில் சந்தித்த அந்த தந்தை கொலையாளியிடம் தனது மன்னிப்பையும் அதற்கான நிபந்தனையையும் தெரிவித்துள்ளார். இதன் போது கொலையாளியான பைசல் அல் அமீரி அதிர்ச்சியான மகிழ்ச்சி அடைந்துள்ளார். கொலையாளி தான் கொலை செய்யதவரின் தந்தையான ரபி அல் – துசரியை கட்டித் தழுவுவதை படத்தில் காணலாம்.
 
ஷரியா குற்றவியல் சட்டம் நடைமுறையில் இருக்கும் சவூதியில் கொலை குற்றம் புரிந்த ஒருவரை அவரின் முதல் இரத்த உறவினர் நஷ்ட ஈட்டை பெற்றுகொண்டு மன்னிக்க முடியும் என்பதும், அதேவேளை ஒரு கொலையாளியை மன்னிக்கும் அதிகாரத்தை நாட்டின் மன்னர் கூட பெற்றிருக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
 

Thursday, July 19, 2012

மியான்மர்: முஸ்லிம்கள் இன அழித்தொழிப்பு செய்ய சதி திட்டம்! ஸுல்ஹி!!

கெய்ரோ, july.17: கிட்டத்தட்ட 10 மில்லியன் முஸ்லிம்களை இன அழித்தொழிப்புச் செய்ய மியான்மரில் சதித்திட்டம் தீட்டப்பட்டு முயற்சிகள் நடப்பதாக அந்நாட்டைச் சார்ந்த முஸ்லிம் இளம் பெண்மணி ஆயிஷா ஸூல்ஹி கூறுகிறார். எகிப்தில் உள்ள ஷரீஆ கல்லூரியில் பயின்று வருகிறார் ஸூல்ஹி.

முஸ்லிம்களுக்கு எதிராக கொடூரங்களை குறித்து ஆயிஷா ஸூல்ஹி அல் வதனுல் மிஸரிய்யா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்  கூறியது: “பெளத்த மதத்தைச் சார்ந்த பயங்கரவாதிகள் அங்குள்ள முஸ்லிம்களுக்கு மதுபானம், பன்றி இறைச்சி அல்லது மரணம்- இதில் எதை தேர்ந்தெடுக்கப் போகின்றீர்கள் என்று சாய்ஸ் வழங்குகின்றனர். ஆனால், முஸ்லிம்கள் மரணத்தை தேர்ந்தெடுக்கின்றார்கள்.

மியான்மரில் முஸ்லிம்கள் அனுபவிக்கும் கொடுமைகளை கண்டும், கேட்டும் நான் நரக வேதனையை அனுபவிக்கிறேன். எனது நாட்டைச் சார்ந்தவர்கள் கூட்டாக கொலைச் செய்யப்படும் பொழுது எவ்வாறு நாம் மெளனமாக இருக்கமுடியும்?

மியான்மர் முஸ்லிம்கள் இரத்த சாட்சிகளை கொடையாக வழங்குகின்றார்கள் என்பதுதான் அபிமானத்திற்குரிய செய்தியாகும்.
  
பல தினங்களாக நான் எனது குடும்பத்தினரை தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன். ஆனால், பெளத்தர்களின் தாக்குதலில் அவர்களுடைய வீடுகள் தகர்க்கப்பட்டு பங்களாதேசுக்கு அகதிகளாக அவர்கள் சென்றுள்ளனர். எனது சில உறவினர்களும், நண்பர்களும் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டுள்ளனர். ஏராளமான பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடுமை இழைக்கப்படுகின்றனர்.” இவ்வாறு ஆயிஷா ஸூல்ஹி கூறியுள்ளார்.

*இச்சம்பவம் பற்றி எந்த வந்தேறி ஊடங்கங்களும் எழுதவில்லை.

Pls click the below link for petition for UN

Saturday, June 16, 2012

சமயம் உயரத்திலிருத்தலும் வாழ்வு துயரத்தில் வீழ்தலும்

இலங்கை வாழ் சிறுபான்மையினர் மீதான ஆக்கிரமிப்பின் தொடர் அழுகைக் குரலாகவே இக்கட்டுரையை நோக்க வேண்டியுள்ளது. முஸ்லிம் சமூகத்திலுள்ள துரைசார் ஆர்வலர்களும் உலமாக்களும் கடுமையாக சிந்தித்து செயல்பட வேண்டிய தேவையை இக்கட்டுரை உணர்த்துகின்றது. 'தேனீ' இனையத்தளத்தில் பிரசுரமான இக்கட்டுரையை தேவை நிமித்தம் கருதி நம் தளத்திலும் பதிவு செய்கிறோம்.

Muthur                                                                                      -மூதூர் முகம்மதலி ஜின்னாஹ்
போருக்குப்பிந்திய இலங்கையில் உள்நாட்டு மக்களிடமும், வெளிநாட்டு மக்களிடமும் சில பொதுவான நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புக்குளும் காணப்பட்டன. கோடிக்கணக்காண ரூபா பணத்தை விழுங்கிய யுத்தம் ஓய்ந்தது. இனி விலைகள் குறையப்போகின்றன. எவரும் எங்கும் எப்போதும் செல்லலாம். எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லாமல் சமய கலாசாரங்களைப்பேணி நிம்மதியாக வாழலாம் என்ற இலங்கைமக்களின் எதிர்பார்ப்புக்கள் முற்றிலும் நியாயமானவை.

ஏனெனில் வெள்ளைமுள்ளிவாய்க்காலோடு யுத்தம் மடிந்தகையோடு இது இலங்கைமக்களின் நாடு. இங்கு சிறுபான்மை பெரும்பான்மை என்ற பேதம்கிடையாது. உங்கள் அனைவருக்கும் சமத்துவமான வாழ்வு நிச்சயமாக உண்டு. என்று அன்று கூறத்தொடங்கிய ஜனாதிபதி இன்றளவும் சந்தர்ப்பம் வாய்;க்கும் போதெல்லாம் கூறிக்கொண்டுதான் இருக்கின்றார். மக்களும் ஜனாதிபதியின் தூய்மையான இந்த எதிர்பார்ப்பு நிறைவேற வேண்டுமே என மனதுக்குள் பிரார்த்தித்தவண்ணமே உள்ளனர்.இதே பிரார்த்தனை எல்லா முஸ்லிம்களுக்குப் போன்று மூதூர் முஸ்லிம்களுக்கும் பலமாக உண்டு. மூதூரின் வளத்தைக்காக்க, வாழ்வைக்காக்க, மக்களைக்காக்க வென மூதூருக்கு உள்ளும் வெளியிலும் எப்போதும் இப்பிரார்த்தனை கேட்கப்படுவதுண்டு.

2002.02.22 அன்று அரசு-புலி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தான போது இனியெல்லாம் சுகமே… என எதிர்பார்த்திருந்த முஸ்லிம்களுக்கு பிரச்சினை, சிலுவை வடிவில் வந்தது. மூதூர் ஜபல் நகரில் மூதூருக்கு அழகு சேர்க்கும் இயற்கையின் கொடை மூணாங்கட்ட மலையாகும். சமாதானம் எனச் சொல்லப்பட்ட காலத்தில் திடீரென ஒரு நாள் எல்லா மக்களுக்கும் பயன்பட்டுக்கொண்டிருந்த எல்லோருக்கும் பொதுவான இயற்கை வளமான மலையின் மீது கொங்றீட் சிலுவைகள் தோன்றின. சில விசமிகளின் இச்செயல் இயற்கைவளமொன்றின் மீது மத அடையாளத்தை இட்டு குறித்த சமயத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதோடல்லாமல் மக்களுக்கு மத்தியில் வீண் பதட்டத்தையும் தோற்றுவிக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டனர்.

அவ்வாறிருக்கையில் மலையில் தோற்றுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சிலுவைகள் திடீரென அகற்றப்பட்டமை தெரிய வந்த போது அது மூதூர் மூஸ்லிம்களால் தான் அகற்றப்பட்டதாக வீண்பழி ஒன்றை புலிப்பயங்கரவாதிகள் முன்வைத்தனர். மட்டுமல்லாமல் அதனைச்சாட்டாக வைத்து மிகப்பெரும் திட்டமிட்ட தாக்குதல் ஒன்றைப் புலிகளின் மறவர்படை மேற்கொண்டது. மல்லிகைத்தீவு ராசு, நாவலடி ரஞ்சன்(மூலப்பொட்டி) ஆகிய புலிகளின் மறவர்படை பிரதேசத்தலைவர்களால் பட்டப்பகலில் மூதூர் முஸ்லிம்களின் உயிர் உடமை மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. இதன் விளைவாக நான்கு முஸ்லிம்கள் கடத்திக் கொல்லப்பட்டதோடு அது ஒரு நோன்புகாலமாதலால் பேரீட்சைம்பழம் போன்ற நோன்புக்கான பொருட்களை ஏற்றிவந்த காஸிம் ஹாஜியாரின் லொறியை பச்சனூரில் வைத்து மறித்து தீயிட்டுக்; கொழுத்தினர்.

மேலும் அறுவடைக்குத்தயாராகவிருந்த முஸ்லிம்களின் வயல்களுக்குள் நீரைத் திறந்து விட்டதுடன் மாடாடுகளையும் வயலுக்குள் சாய்த்துவிட்டு மகிழ்ந்தனர். ஏன் இந்த கடந்தகால ஞாபகங்கள் என்றால், நியாயமற்ற வீம்புத்தனமான சமய அடையாள வெளிப்படுத்தல்கள், திணிப்புகள் என்பன சாதாரண மக்களது வாழ்வில் எவ்வாறு பாரிய தாக்கங்களுக்கு வழிசமைத்துக் கொடுக்கின்றது என்பதை இரைமீட்கத்தான்.

ஆக, ஏற்கனவே எல்லோருக்கும் பொதுவான இம்லையை ஒரு சமயஞ்சார் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கியதனால் ஏற்பட்ட பாரதூரமான விளைவுகள் முன் அனுபவமாக இருக்க, இப்பொழுது மீண்டும் மூணாங்கட்டமலை விவகாரம் உருவெடுத்து மூதூர் மக்களை அச்சத்துக்கும் பதட்டத்துக்கும் உட்படுத்தியுள்ளது.

அந்தவகையில், இம்முறை பௌத்த சமய அடையாளப்படுத்தல் தலைதூக்கியிருக்கிறது. அதனால் அச்சம் பன்மடங்காகியிருக்கின்றது. ஏனெனில் அண்மைக்காலமாக பௌத்தசமய தீவிரப்போக்குடைய சில பிக்குகள் குண்டர்கள் புடை சூழ அநுராதபுர சியாரம் உடைப்பு, டம்புள்ள புனிதப்பிரதேச பிரகடணம மற்றும்; மஸ்ஜிதுல் ஹைரியா பள்ளிமீதான தாக்குதல், ஆரிய சிங்கள மாவத்தை மத்ரசாவுக்கு விடப்படும் அச்சுறுத்தல், தெகிவளை பள்ளிவாசல் மீதான பிக்குகளின் தாக்குதல் போன்ற தாக்குதல்கள் இலங்கை முஸ்லிம்களின் சமய அடையாளங்கள் மீதும், சமயபின்பற்றல் குறித்த உரிமையின் மீதும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. ஆகவே இதன்பின்னணியாக அல்லது இத்தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே மூதூர் ஜபல்நகர்மூணாங்கட்ட விவகாரத்தைப்பர்க்கவேண்டியிருக்கிறது.

அதாவது இதுவரையிலான முஸ்லிம் சமய அடையாளங்கள் மீதான தாக்குதல்கள் அனைத்தம் பெரும்பாலும் சமய அனுட்டானத்துக்கு விடப்பட்ட சவாலாக இருக்க, மூணாங்கட்ட மலைப்பிரச்சினை சமய அனுட்டானத்துக்கும், வாழ்வாதாரத்துக்கும் சவால் விடுவதாக இருக்கிறது.

கடந்த 2008 ம் ஆண்டு சேருவிலை விகாரையைச் சேர்ந்த பிதம பிக்குவான சரணகீர்த்தி தேரோ அவர்கள், இம்மலையின் மீது பௌத்த சின்னங்கள் இருக்கின்றது எனக்கூறி சர்ச்சையை உண்டு பண்ணிய போது, அது பற்றி நேரில் கண்டு அறிவதற்காக மூதூர் சர்வமதக்குழுவினர் குறித்த பிக்குவுடன் சேர்ந்து மலையுச்சிக்கு ஏறினர். அங்கு பௌத்த புறாவஸ்த்து என பிக்கு சுட்டிக்காட்டிய அம்சத்தை அக்குழுவினர் ஆராய்ந்த போது அது 1989 ல் இந்திய அமைதிகாக்கும் படையினர்(ipமக)மலை மீது தொலைத்தொடர்புக்கோபுரம் அமைத்து பின் அகற்றியபின் பழைமையடைந்து போன சிமெந்துக்கட்டுத்தான் அது என அவ்விடத்திலேயே அது நிருபிக்கப்பட்டது. அதே நேரம் அம்மலையுச்சியில் இருக்கும் கிறவல் பாங்கான இடத்தில் கல்லில் வடிக்கப்பட்ட மிசான் கட்டைகள் நடப்பட்டடிருப்பது தெரிய வந்தது. அவ்விடயம் அப்போது பி.பி.சி.செய்தியிலும் ஒலிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

எனவே அத்தோடு அவ்விடயம் அப்பிக்குவால் தற்காலிக மாக கைவிடப்பட்டு இப்போது மூணாங்கட்டமலையில் புத்தர் சிலை வைக்கும் சர்ச்சை அதிகார பக்கதுணையுடன் பூதாகரமாக எழுந்துள்ளது.

மூதூரைப் பொறுத்தவரையில் 1965ம் ஆண்டிற்குப்பின்பே சிங்கள மக்கள் இங்கு குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்களுள் பல குடும்பத்தினர் தம் ஊரான கந்தளாய்க்கு திரும்பிச்சென்றிருக்கின்றனர். தற்போது மூதூர் பிரதேச செயலகத்துக்குள் 293அங்கத்தவர்களைக்கொண்ட 94 சிங்களக்குடும்பங்களே வாழ்ந்து வருகின்றனர்.இவர்களது மார்க்க அனுஸ்டானத்தக்கென தபாலகத்தக்கருகில் ஒரு பெரிய விகாரையும் உண்டு.

இவ்வாறிருக்கையில் கடந்த 01.06.2012 அன்று வெள்ளிக்கிழைமை சுமார் மதியம் 12.25 அணியளவில் சேருவில பிரதம பிக்குவான சரண கிர்த்தி தேரோ அவர்கள் இருபது சிங்கள இளைஞர்களுடன் ஜபல் நகர்மலையடிக்கு வந்து மலையுச்சியில் புத்தர் சிலை வைப்பதற்கான முன்னாயத்தங்களை மேற்கொண்டிருக்கின்றார். ஜபல் நகர் மலையானது, மூதூர் பிரதேசசiயின் ஆளுகைக்கும், பராமரிப்புக்கும் உட்ப்ட்ட ஒரு இயற்கைவளமாகும். எனவே சேருவில தேர்தல் தொகுதியைச்சேர்ந்த பிக்குவும் குழுவினரும் பிரதேசசபையின் அனுமதி எதனையும் பெறாது மலையை அணுகுவதும்,இயற்கை வளமொன்றை மத ஆளுகைக்கு உட்படுத்துவதும் சட்டவிரோதமானது என பொதுமக்கள் அப்பிக்குவிடம் தம் ஆட்சேபனையை தெரிவித்தபோது தான் உரிய ஏற்பாடுகளோடு வந்து வேலையைக் காட்டுகிறேன் என அபப்pக்கு கூறிச் சென்றுள்ளார்.

அவ்வாறு அவர் கூறிச் சென்றதன் பின்னர் சர்வமதக்குழுவினரோ,மக்கள் பிரதிநிதிகளோ குறித்த பிக்குவை அல்லது பௌத்தமதீpடத்தை அணுகி விடயங்களை விளக்கியிருக்கலாம் ஆனால் மக்கள் அப்பாவித்தனமாக அரசியல் தலைமைகள் அனைத்தையும் வென்று வருவார்கள் என வாளாவிருந்தனர்.

ஏற்கனவே அநுராதபுர சியாரம் உடைப்புக்கு எதிராக வழக்குத்தொடர்வேன் நீதி பெற்று வருவேன். அது நான் செய்தாக வேண்டிய என் கடமை என அரசியல் தரப்பில் இருந்து மக்களை சூடாக்க விடுக்கப்பட்ட வழக்கமான வாய்ச்சவடால் அது என்பதை இனங்காணாமல் இன்னமும் தம் வாக்குப்பலம் வென்று வரும் என மக்கள் நம்பினர்.

இந்நம்பிக்கையின் விளைவு 12.06.2012அன்று தெளிவாகியது. அன்றைய தினம் சேருவில தேரோ,தம்குழுவினருடன் வந்து மலையுச்சிக்கு செல்வதற்கான படிகள் அமைக்கும் கட்டுமானப்பண்களை அரம்பித்து வைக்கும் ஸ்தல ப+ஜா என்று சொல்லிக் கொண்டு சமய அனுஸ்டானத்துடன் பணிகளை ஆரம்பித்து வைத்தார். அதன் போது மூதூர் பிரதேச சபை தவிசாளரும் மாகாணசபை உறுப்பினரும் ஜபல்நகருக்குச் சென்று தேரோவை அனுகிய போது, தகாத வார்த்தைப்பியோகங்களுடாக தான் தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதி பெற்றிருப்பதாகவும் நாங்கள் இந்த நாட்டுக்கு 2500 வருடங்களுக்கு முன் வந்தவர்கள். நீங்கள் 500 வருடங்களுக்கு முன் வந்தவர்கள். என்னை தடுத்தால் அனைவரையும் ஊரைவிட்டே விரட்டியடித்துவிடுவேன் என்றும் அச்சுறுத்தியிருக்கின்றார்.

மூதூர் ஜபல் நகர்மலையைப்பொறுத்தவரை அது மூதூரின் மையப்பகுதியில் எழில் கொஞ்சும் ஒரு இயற்கை வளமாகும். மனித நாகரிகம் தோன்றியது முதல் மக்களது கருங்கற் தேவையை நிறைவேற்றிக் கொண்டு வருகிறது. அம்மலையைச் சூழவுள்ள பல்லாயிக்கணக்காண வயல்நிலங்கள் அனைத்தும் முஸ்லிம்களுக்கும், தமிழருக்கும் உரித்தானவை. மலைக்குச் செல்லும் வழியில் ஜபல்நகர் மஸ்ஜிதுன்னூர் என்ற பள்ளிவாசலும், மலையடிவாரத்தில் கல்லுடைக்கும் தொழிலாளர்கள் வணங்குவதற்கென ஒரு சிறு முருகன் கோவிலும் பண்ணெடுங்காலமாகக் காணப்படுகிறது. இச்சமயத்தலங்கள் எக்காலத்திலும் மலையின் மீது ஆதிக்கம் செலுத்தியது கிடையாது. மாறாக, மலையைச் சூழவுள்ள தம் விளை நிலங்களில் விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் தம் வணக்கவழிபாட்டை மேற்கொள்ளவே பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன.

யுதார்த்தம் இவ்வாறிருக்க வரலாற்றில் என்றுமே பௌத்த சமய அடையாளம் இல்லாத ப+ர்வீகமாக குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் (குடியேற்றினாலன்றி) பௌத்தர்கள் இல்லாத ஜபல்நகர் மலையின் மீது, இப்போது புத்தர் சிலை நிறுவும் பணி அதிகார பக்கபலத்துடன் 12.06.2012 முதல் நடை பெறுகின்றது. அதேவேளை ஏனைய சமய அடையாளம் இருப்பது போல அங்கு பௌத்த சமள அடையாளமும் இருந்து விட்டுப் போகட்டும் என ஒர் அபிப்பிராயமும் இங்கு முன்வைக்கப்படலாம். ஆனால் இங்கு மக்களது நியாயமான அச்சம் என்னவென்றால் , வரலாற்றில் சிறுபான்மை மக்கள் செறிவாக சுமுகமாக வாழும் பிரதேசங்களில் புத்தர் சிலை நிறுவிடும் போதெல்லாம் நடைபெற்றுவருவதை அனைவரும் அறிவர். ஏனெனில் ஒரு இந்து வழிபாட்டிடம் அமையப்பெற்று அல்லது இஸ்லாமிய வழிபாட்டிடம் அமையப்பெற்று அது நாளடைவில் அங்கிருக்கும் இயற்கைவளத்தில் ஆதிக்கம் செலுத்தி வரிகட்டச்செய்து புனிதப்பிரதேச பிரகடனம் செய்து பூர்வீகமாக வாழும் மக்களையும் அவர் தம் வழிபாட்டிடத்தையும் அசிங்கமானது எனக்குறி அனைத்தையும் வன்முறை மூலம் அகற்றுமாறு தாக்குதல் தொடுத்ததில்லை.

ஆனால் அறுபதுவருடப்பழமைவாய்ந்த தம்புள்ளப்பள்ளிவாசலும், காளிகோவிலும் இன்று பௌத்த தேரோக்களின் பார்வையில் அகற்றப்படவேண்டிய அசிங்கங்களாகத் தெரிகின்றன. இவ்வாறு ஒவ்வொரு சிறுபான்மைப்பிரதேசத்திலும் சுத்திகரிப்புத் தாக்குதல்கள் சட்டத்தால் கட்டுப்படுத்தமுடியாதளவுக்கு நடைபெற்றுவருவதை நாளாந்தம் கண்கூடாகக் கண்டு கொண்டிருக்கின்றோம்.

அந்த வகையில் தற்போது ஜபல் நகர் மலைமீதான புத்தர் சிலை நிறுவுதலானது, எல்லாவற்றையும் போன்ற ஒரு சமய அடையாளம் என்பதற்கு அப்பால் எல்லோருக்கும் பொதுவான இயற்கைவளம் மீதான ஒர் ஆக்கிரமிப்பு என உள்ளுர் மக்கள்அச்சம் கொள்வதில் உண்மையும்,; நியாயமும் இருக்கிறது.

தற்போது தம் முதற்கட்ட இருப்பை தக்க வைத்துக்கொள்ளும் வேலைகள் சரண கீர்த்தி தேரோவின் தலைமையில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் குறித்த தேரோ, அல்லது அவரது சீடர்கள் மலையில் கல்லுடைப்பதற்கு தடை விதிக்கலாம். (அப்போது 87 மைல்களுக்கு அப்பால் உள்ள கந்தளாயிலிருந்து பல்லாயிரம் ருபா செலுத்தி கல் இறக்குமதி செய்யவேண்டிவரும்) அல்லது விகாரைக்கு வரிகட்டி உடைக்குமாறு கட்டளை பிறப்பித்து கல்லின் கொள்விலையை அதிகரித்துக்கொண்டு போகலாம். அல்லது இவையாவற்றையும் வென்று அடுத்த சில ஆண்டுகளிலோ,எதிர்கால சந்ததியை நோக்கியோ புனிதப்பிரதேசப் பிரகடனம் புறப்பட்டு வரலாம். அப்போது கல்லுடைத்தலுடன் தொடர்புடைய ஜீவனோபயத்தை நம்பிவாழும், வாழப்போகும் மக்கள் (தற்போது கல்லுடைத்தலுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஜீவனோபாயத்தை உடைய குடும்பங்களின் எண்ணிக்கை; 488) பாதிக்கப்படுவார்கள். மேலும், மலையைச்சூழவுள்ள பல்லாயிரக்கணக்கான விளைநிலங்களை புனிதப்பிரதேசம் விழுங்கிவிடலாம். அப்போது மக்களின் ஜீவனோபாயம் வீதிக்கு வந்தவிடலாம். மொத்தத்தில் உள்ளுர் மக்களது வாழ்வும் வளமும் கேள்விக்குறியாவதற்கான சூழலே கட்டமைக்கப்படுகிறது. என நாட்டுநடப்பை கருத்திற் கொள்ளும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஏனெனி;ல் இக்கட்டுரையை வாசிக்கும் வாசகர்ஃகி யுத்தத்துக்கு முன்பும், பின்பும் திருகொணமலை கண்ணியாய் வெந்நீருற்றை தரிசித்தவராக இருப்பின், அங்கு உள்ளுர் மக்களது சமய அடையாளத்டதிற்கு நேர்ந்துள்ள கதியை நன்கறிவர். முனபு அங்கு இஸ்லாமியப்பெரியாரின் அடக்கத்தலம், பள்ளிவாசல், சிவன் கோவில் என்பன போன்றவற்றை மட்டுமே கண்டிருப்பர். எதுவித பௌத்த சமய அடையாளத்தையும் கண்டிரார். ஆனால், யுத்தத்திற்குப்பிந்திய கண்ணியாயில் பௌத்தசமய அடையாளத்தையன்றி வேறெதனையும் அங்குகாணார். இதுயுத்தத்துக்குப்பிந்திய இலங்கைவாழ் சிறுபான்மை மக்களது சமய, கலாசார,பண்பாட்டம்சத்துக்கு நேர்ந்துவரும் கதியின் ஒரு சோறுபதம்.

-மூதூர் முகம்மதலி ஜின்னாஹ்.

Monday, April 9, 2012

உள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள்!

முற்குறிப்பு:
இது ஒரு மாற்றுமத சகோதரருடைய ஆக்கமென்பதனால் இஸ்லாமிய வரையறைகளுடன் ஆக்கத்தை அனுகுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


1. உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்:.

நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர்.
நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கே பரிபூரணமான லாஜிக் என தமக்குத் தாமே நம்பிக்கொண்டு யாரெல்லாம் நமது சிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ அவர்களெல்லாம் கண்டிப்பாக விமர்சிக்கப்பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என நினைப்பதாலேயே இவ்வாறு நாம் மற்றவர்களின் பிரச்சனைகளில் அதிகப்படியாக மூக்கை நுழைக்கிறோம். இத்தகைய சிந்தனை தனித்துவத்தின் இருப்பை நிராகரிக்கின்றது. இதன் பயன், கடவுளின் இருப்பை மறைமுகமாக நிராகரிக்கிறது. ஏனெனில், கடவுள் ஒவ்வொருவரையும் அவரவருக்கான தனித்துவம்-தனித்தன்மையுடனே படைத்துள்ளார். மிகச் சரியாக ஒன்று போல் சிந்தித்து ஒன்று போல் செயல்படும் எந்த இரு மனிதர்களையும் காண இயலாது. அவ்வாறு ஆக்கவும் முடியாது. எல்லா ஆணும் பெண்ணும் அவரவர்களுக்கான வழிகளிலேயே செயல்படுகின்றனர்; ஏனெனில், ஒவ்வொருவரினுள்ளும் கடவுள் அவரவரின் வழியிலேயே செல்ல தூண்டுகிறார். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்!


2. மன்னியுங்கள்; மறந்து விடுங்கள்!

மன அமைதிக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாகும். சாதாரணமாக யாராவது நம்மை நோகடித்தாலோ அவமானப்படுத்தினாலோ நமக்குத் தீங்கு விளைவித்தாலோ அவர்கள் மீது தவறான எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்கிறோம். நாம் மனக்குறைப்பாட்டுக்கு நம் மனதை நம்மை அறியாமலே பயிற்றுவிக்கிறோம். இது தூக்கமின்மை, வயிற்று அல்சர் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை உருவாக காரணமாகிறது. இத்தகைய அவமானப்படுத்துதல் அல்லது ரணப்படுத்துதல் ஒரு முறை நிகழ்ந்தால், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்வதால் மற்றவர் மீதான மனக்குறைபாடு நிரந்தரமாகிறது. இந்தத் தவறான பழக்கத்துக்கு முடிவு கட்டுவோம். மிகக் குறுகிய இவ்வாழ்வில் எதற்காக இத்தகைய சிறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மறப்போம்; மன்னிப்போம்; முன் செல்வோம். மன்னிப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் அன்பை வளப்படுத்திக் கொள்வோம்.


3. அங்கீகாரத்திற்காக அலையாதீர்!

இவ்வுலகம் முழுக்க சுயநலவாதிகளே நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களின் சொந்தத் தேவைக்காகவே எப்போதாவது மற்றவர்களைப் பாராட்டுகின்றனர்-புகழ்கின்றனர். அவர்கள் ஒருவேளை இன்று உங்களைப் புகழலாம் - அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால். ஆனால், ஒருவேளை வெகு சீக்கிரத்திலேயே நீங்கள் ஒன்றுமில்லாதவராக ஆகலாம்; அப்போது, உங்களின் சாதனைகளை அவர்கள் மறப்பதோடு, உங்களிடம் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆரம்பிப்பார்கள். இத்தகையவர்களின் அங்கீகாரத்திற்காக கடுமையாக முயற்சி செய்து, உங்களை நீங்களே ஏன் சாகடிக்க வேண்டும்? அவர்களின் அங்கீகாரம் கேடு விளைவிப்பதை விட பெறுமதியானதல்ல! நேர்மையாகவும் நன்னோக்கத்தோடும் உங்கள் வேலையைச் செய்து கொண்டிருங்கள்; அதற்கான அங்கீகாரத்திற்காக ஏங்காதீர்கள்.


4. பொறாமை கொள்ளாதீர்!

வயிற்றெரிச்சல்(பொறாமை) கொள்வது நம் அமைதியான மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதில் நாம் அனைவருமே அனுபவம் உள்ளவர் தான்! உங்கள் அலுவலகத்தில் உடன் பணி செய்பவரை விட நீங்கள் கடின உழைப்பாளி என்பது உங்களுக்குத் தெரியும்; ஆனால், சிலவேளைகளில் அவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்; உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிய உங்கள் தொழிலில் உங்களுக்குக் கிடைத்த வெற்றியை விட பல மடங்கு, தொழில் துவங்கி ஒரு ஆண்டே ஆன உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிடைக்கலாம். இது போன்று நம் தினசரி வாழ்வில் பல உதாரணங்களைக் காணமுடியும். இவற்றுக்காக நீங்கள் பொறாமை-வயிற்றெரிச்சல் கொள்ளலாமா? கூடாது! நினைவில் கொள்ளுங்கள்: ஒருவரின் தினசரி வாழ்வு அவரின் விதியால் பரிணாமம் பெறுவதோடு, அதுவே அவரின் இப்போதைய நிஜமாகவும் ஆகிறது. நீங்கள் பணக்காரராக ஆகவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், இந்த உலகில் எதுவுமே அதனைத் தடுக்க முடியாது. நீங்கள் பணக்காரராக ஆவது விதிக்கப்பட்டிருக்கவில்லையேல், அவ்வாறு ஆவதற்கு எதுவுமே உதவவும் செய்யாது. உங்களின் பேறின்மைக்கு மற்றவர்களைப் பழிப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. பொறாமை-வயிற்றெரிச்சல் உங்களை எங்குமே கொண்டு சேர்க்காது; அது உங்களின் மன அமைதியைக் கெடுப்பது அல்லாமல்!


5. சூழலுக்குத் தகுந்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்!

உங்கள் சுற்றுப்புறத்தை நீங்கள் தனியாக மாற்ற முயற்சி செய்தால் நீங்கள் தான் தோற்றுப்போவீர்கள். அதற்கு மாற்றாக, உங்கள் சுற்றுப்புறத்துக்குத் தகுந்தாற் போல் வாழ உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால், உங்களுக்குத் தோழமையாக இல்லாத அந்தச் சுற்றுப்புறத்தில் கூட அதிசயகரமான மாற்றத்தையும் இனிமையான உங்களுக்கு ஒத்துப்போகும் நிலையையும் காண்பீர்கள்.


6. உங்களால் குணமாக்க முடியாததைச் பொறுத்துக் கொள்ளுங்கள்!

இது தீமையை நன்மையாக்குவதற்கான அருமையான வழியாகும். தினசரி நம் கட்டுப்பாட்டில் இல்லாத எண்ணற்ற தொல்லைகள், நோய்கள், எரிச்சல்கள் மற்றும் விபத்துகளை நாம் சந்திக்கின்றோம். நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ அல்லது அவற்றை மாற்ற இயலாமல் போனாலோ அவற்றை எதிர்கொள்வது எவ்வாறு என்று நாம் கண்டிப்பாக பயில வேண்டும். அவற்றை நாம் மலர்ச்சியாக சகித்துக் கொள்வதைப் பயில வேண்டும். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்; அது பொறுமை, உள்சக்தி மற்றும் மன உறுதியை உங்களுக்கு வழங்கும்.


7. சக்திக்கு மீறிய செயலைச் செய்யாதீர்!

இந்த முக்கியமான தேவையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்தல் நன்று. நாம் அடிக்கடி நம்மால் செய்ய இயலும் அளவுக்கு மீறிய அதிகப்படியான பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறோம். இது நமது தன்முனைப்பு-செருக்கைத் திருப்தி படுத்துகிறது. உங்களின் வரம்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதிகப்படியான கவலைகளை அளிக்கவல்ல அதிகச் சுமைகளை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? உங்களின் புறச்செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொள்வதால் மன அமைதியை அடையமாட்டீர்கள். உலகத்துடனான (பொருள்முதல்வாதத்துடனான) தொடர்பைக் குறைத்துக் கொண்டு, வணக்கங்கள், தியானம், தன்னிலை ஆய்வு போன்றவற்றில் அதிக நேரம் செலவழியுங்கள். இது ஓய்வற்ற உங்கள் மன எண்ணங்களைக் குறைக்கும். சுமைகள் குறைந்த மனம், அதிக மன அமைதியை உருவாக்கும்.


8. ஒழுங்காக தியானம் செய்வதைப் பழக்கமாக்குங்கள்

தியானம் - உள்மன ஆய்வு - மனதுக்கு அமைதி தருவதோடு, தொந்தரவு தரும் எண்ணங்களிலிருந்து விடுவிக்கவும் செய்கிறது. இது அமைதியான மனதின் அதிஉயர் நிலையாகும். தியானம் செய்வதற்குத் தன்னைத் தானே முயன்று பழகிக்கொள்ளுங்கள். தினசரி குறைந்தது அரைமணி நேரமாவது உள்ளார்ந்தமாக தியானம் செய்ய முடிந்தால், உங்கள் மனம் அடுத்த இருப்பத்து மூன்றரை மணி நேரத்துக்கு அமைதியடைவதற்கு உத்தரவாதமே வழங்கலாம். அத்தகைய ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், முன்பு உள்ளதைப் போன்று உங்கள் மனம் அவ்வளவு இலகுவாக தொந்தரவு அடையாது.சிறிது சிறிதாக தியானம் செய்வதன் அளவைத் தினசரி அதிகரித்துக் கொண்டால், அதன் பயனை அடைந்துக் கொள்ளலாம். ஒருவேளை இது உங்களின் தினசரி வேலைகளில் தலையிடுவதாக எண்ணலாம். அதற்கு மாறாக, இது உங்களின் திறமையை அதிகரிக்க வைப்பதோடு, மிகக் குறுகிய காலத்தில் நல்ல விளைவுகளை உருவாக்க உங்களால் முடியும்.


9. உள்ளத்தை வெற்றிடமாக ஒருபோதும் விடாதீர்கள்!

வெற்றிடமான மனம் சாத்தானின் பயிற்சிகளம்! எல்லா தீய பழக்கங்களும் வெற்றிடமான மனங்களிலிருந்தே உருவாகின்றன. உங்கள் உள்ளத்தைச் சில நேர்மறை எண்ணங்களாலும் பயனுள்ள விஷயங்களாலும் நிறைத்து வையுங்கள். சுறுசுறுப்பாக உங்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். உங்கள் விருப்பம் சார்ந்த விஷயத்தில் ஏதாவது செய்யுங்கள். பணமா? அல்லது அமைதியான உள்ளமா? இதில் எது உங்களிடம் அதிக பெறுமதியானது என்பதைக் கண்டிப்பாக நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். சமூகப்பணி அல்லது மதப்பணி போன்ற உங்களின் பொழுதுபோக்குகளில் பெரும்பாலும் நீங்கள் அதிகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால், நீங்கள் மனநிறைவையும் சாதித்த திருப்தியையும் அடைய முடியும். உடல் ஓய்வு எடுக்கும் நேரங்களில் கூட, ஆரோக்கியமான வாசிப்பிலும் கடவுளின் பெயரை உளப்பூர்வமாக கண்ணை மூடி உச்சரிப்பதிலும் உங்கள் உள்ளத்தை நிறைத்துக் கொள்ளலாம்.


10. தள்ளிப்போடாதே; எதற்கும் வருந்தாதே!

"இது என்னால் முடியுமா? முடியாதா?" என்று பெரிதாக எண்ணி காலம் கடத்தி நேரத்தை வீணாக்காதீர்கள். இத்தகைய பயனற்ற மனப்போராட்டங்களால் நாட்கள், வாரங்கள், மாதங்கள் சிலவேளை வருடங்கள் கூட வீணாகலாம். உங்களால் போதுமான முழு அளவுக்குத் திட்டமிட்டுக் கொள்ள முடியாது. ஏனெனில், எதிர்காலத்தில் நடப்பதை உங்களால் ஒருபோதும் முன்பே பூரணமாக உணர்ந்து கொள்ள முடியாது. உங்கள் நேரத்தின் மதிப்பை உணர்ந்து, முடிக்க வேண்டியவைகளை யோசித்துக் கொண்டிராமல் உடனடியாக செய்யத் துவங்குங்கள். முதல் முறை நீங்கள் தோல்வியடைவது விஷயமேயில்லை. நீங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் பயின்று அடுத்த முறை நீங்கள் பரிபூரணமான வெற்றியடையலாம். சாய்ந்து உட்கார்ந்து கவலை கொண்டிருப்பது எதற்கும் பயன் தராது - மன அமைதியைக் கெடுப்பதைத் தவிர. உங்களின் தவறுகளிலிருந்து பாடம் பயிலுங்கள்; ஆனால் ஒருபோதும் கடந்து போனதை நினைத்து வருந்தி ஏங்காதீர்கள். எதற்கும் வருத்தமடையாதீர்கள். எது நடந்ததோ அது நடப்பதற்குரிய விதியின் வழியில் நடந்து முடிந்தது. கிடைக்காத பாலுக்கு ஏன் அழ வேண்டும்?


- வாசகர்: இளைய வைகை

நன்றி : இந்நேரம்.காம்

Thursday, March 15, 2012

சொத்துப் பங்கீட்டில் பெண்களுக்கு குறைவாக கொடுக்கப்பட்டது ஏன்?


சொத்துப் பங்கீடு பற்றி பலரும் இஸ்லாத்தின்மீது விமர்சனங்களை வைக்கின்றார்கள். எனவே இது பற்றிய விபரத்தை நாம் தெளிவாக புரிந்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளோம்.


நபி முஹம்மத்(ஸல்)அவர்கள் வாழ்ந்த அன்றைய சமூக சூழலில் ஆண்கள் சகல விதங்களிலும் பெண்களை அடக்கியாண்டு உரிமைகளைப் பறித்துக் கொண்டிருந்தார்கள். “பலமுள்ளவன் தான் சரியானவன்” என்ற தத்துவத்தின் அடிப்படையில் தகப்பனோ சகோதரனோ விட்டுச் செல்லும் சொத்துக்களில் பெண்களுக்குரிய பங்கினை வழங்காது பலாத்காரமாகச் சூறையாடிக் கொண்டுமிருந்தார்கள்.


தந்தையைப் பறிகொடுத்து விட்டு தவிக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கும், கணவனை இழந்துவிட்டு கண்ணீரோடு வாழும் விதவைப் பெண்களுக்கும் அச்சொத்திலிருந்து எதுவும் கிடைக்க மாட்டாது. இவர்கள் அடுத்தவர்களிடத்தில் கையேந்தி மற்றவர்களின் தயவில் வாழக்கூடிய பரிதாபகரமான நிலை காணப்பட்டது. இந்நிலையில் இக்கொடுமைக்கு ஆரம்ப கட்டத் தீர்வாக அல்லாஹ் பின்வரும் வசனத்தை அருளினான்.


“உங்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கும் போது அவர் ஏதேனும் செல்வத்தை விட்டுச் செல்வாராயின் அவர் பெற்றோருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் நல்ல முறையில் (மரண சாசனம்) வஸீய்யத் செய்வது உங்கள் மீது விதியாக்கப்பட்டுள்ளது. பயபக்தியாளர்களுக்கு இது கடமையாகும்.


எவர் அ(ம்மரணசாசனத்)தை செவியேற்ற பின்பும் அதை மாற்றி விடுகின்றாரோ அதன் குற்றம் அதை மாற்றியவர்களையே சாறும். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவன் நன்கறிந்தவன்.


ஆனால் வஸீய்யத் செயபவரிடம் அநீதத்தையோ பாவத்தையோ எவரேனும் அஞ்சி (சம்பந்தப்பட்ட) அவர்களுக்கிடையே (வஸீய்யத்தை சீர்செய்து) சமாதானம் செய்தால் அவர் மீது குற்றமில்லை. நிச்சமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையவன். (அல்குர்ஆன் 2:180-182)


இதனடிப்படையில் சொத்துக்களை விட்டுச் செல்பவர் தன்னுடைய பெற்றோர் மனைவி பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு அச்சொத்திலிருந்து பங்குகிடைக்கக்கூடியதாக மரண சாசனம் செய்யவேண்டும். அதன் பத்திரமும் எழுதப்பட வேண்டும் என்ற சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. மரண சாசனத் தில் அநீதி காணப்படுமானால் அதனை சீர்படுத்துவதற்கும் உரிமை வழங்கப்பட்டது.


மரணசாசனம் தெரிவிக்க ஏதேனும் பொருளைப் பெற்றுள்ள எந்த முஸ்லிமுக்கும் அவர் தமது மரண சாசனத்தை எழுதி வைக்காமல் இரண்டு இரவுகளைக் கழிப்பதற்குக் கூட அனுமதியில்லை என நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்(ரழி) (நூல்:புகாரி)


இதன் மூலம் பெண்களுக்கும் நியாயமாக பங்கீடு கிடைக்க வழி காட்டப்பட்டது.


இச்சட்டம் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில் ஸஅத் இப்னு ரபீஃஆ(ரழி) என்பவரின் மனைவி தனது இரு பெண் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு நபி முஹம்மது (ஸல்) அவர் களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! இதோ இவ்விருவரும் ஸஃத் இப்னு ரபீஆவின் புதல்வியர்கள். இவர்களுடைய தந்தை உங்களுடன் உஹது யுத்தத்திலே பங்குகொண்டு கொல்லப்பட்டு விட்டார்.


இவர்களுடைய தந்தையின் சகோதரர் இவர்களுடைய முழுச் சொத்தையும் எடுத்துக் கொண்டார். இவர்களுக்காக எதையும் விட்டுச் செல்லவில்லை. இவர்களுக்கென சொத்து எதுவும் இல்லையென்றால் அவர்களைத் மணம் முடித்துக் கொடுக்கவும் முடியாது என்று முறையிட்டார்.


இந்த முறைப்பாட்டை செவியேற்ற நபி முஹம்மது(ஸல்) அவர்கள், நிச்சயமாக அல்லாஹ் இதற்கோர் தீர்வை வழங்குவான் எனக் கூறினார்கள். இச்சந்தர்ப்பத்தில் இப்பெண்மணியின் முறையீட்டிற்குப் பதில் கூறுமுகமாக பின்வரும் சட்டம் அருளப்பட்டது.


1) இரு பெண்களுக்குரிய பங்கு போன்றது ஒரு ஆணுக்குண்டு என உங்கள் பிள்ளைகள் விடயத்தில் அல்லாஹ் உங்களுக்கு (சொத்துப் பங்கிடும் முறைப்பற்றி) கட்டளையிடுகின்றான்.
- (இறந்தவர் விட்டுச்செல்லும் சொத்துக்கு ஆண்பிள்ளை இல்லாமல்) இரண்டு பெண்கள் அதற்கு மேற்பட்டவர்கள் இருந்தால் அவர் விட்டுச்சென்றதில் மூன்றில் இருபங்கு (2/3) அப் பெண்களுக்குண்டு.
- ஒரே ஒருபெண் மட்டும் இருந்தால் அவளுக்கு அதில் அரைவாசிப் (பங்கு) உரியது.


2) இறந்தவருக்குப் பிள்ளை இருப்பின் அவர் விட்டுச் சென்றதில் (அவருடைய) தாய், தந்தைக்கு ஆறில் ஒரு (1/6) பங்குண்டு.
- அவருக்கு பிள்ளை இல்லாமல் அவரது பெற்றோரே அவருக்கு வாரிசாக இருப்பின் அவரது தாய்க்கு மூன்றில் ஒரு (1/3)பங்குண்டு. (மீதி தந்தைக்குரியது)
- இறந்தவருக்கு (பிள்ளைகள் இல்லாமல்) சகோதரர்கள் இருப்பின் அவரது தாய்க்கு ஆறில் ஒரு (1/6)பங்குண்டு.
- (இவ்வாறு பங்கீடு செய்வது) அவர் செய்த மரணசாசனம் அல்லது அவரது கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்னரேயாகும்.
- (சொத்துப் பங்கீடு பெறுவதில்) உங்கள் பெற்றோர், மற்றும் பிள்ளைகளில் உங்களுக்கு அதிகமாக பயனளிப்பதில் மிக நெருக்கமானவர்கள் யார்? என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்.
“இவை அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டவையாகும். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:11)


3). (இறந்துபோன) உங்கள் மனைவியருக்கு பிள்ளை இல்லையெனில் அம்மனைவியர் விட்டுச் சென்றதில் (கணவராகிய) உங்களுக்கு அரைவாசி (1/2) உண்டு.
- அவர்களுக்கு பிள்ளை இருப்பின் அவர்கள் விட்டுச் சென்றதில் (கணவராகிய) உங்களுக்கு நாலில் ஒரு (1/4) பங்குண்டு. (இது) அவர்கள் செய்த மரணசாசனம் அல்லது கடன் என்பவற்றை நிறைவேற்றிய பின்னரேயாகும.
- உங்களுக்கு (கணவனாகிய நீங்கள் இறந்த பின்) பிள்ளை இல்லையெனில் நீங்கள் விட்டுச் சென்றதில் (மனைவியர்களான) அவர்களுக்கு நாலில் ஒரு (1/4)பங்குண்டு.
- உங்களுக்கு பிள்ளை இருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதில் (மனைவியர்களான) அவர்களுக்கு எட்டில் ஒரு (1/8) பங்குண்டு. (இது) நீங்கள் செய்த மரண சாசனம் அல்லது கடன் என்பவற்றை நிறைவேற்றிய பின்னரேயாகும்.


4. (பெற்றோர் பிள்ளைகள் ஆகிய) வாரிசுகள் இல்லாத ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ மரணித்து அவருக்கு ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு (1/6) பங்குண்டு. அவர்கள் இதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு (1/3) பங்கில் அவர்கள் பங்குதாரர்களாவார்கள். (இது) பாதிப்பு அற்றவிதத்தில் செய்யப்பட்ட மரணசாசனத்தையும் அல்லது கடனையும் நிறை வேற்றிய பின்னரேயாகும். இது அல்லாஹ்விடமிருந்துள்ள கட்டளையாகும். அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனும் சகிப்புத்தன்மையுடையவனு மாவான். (அல்குர்ஆன் 4:12)


இவ்வசனம் அருளப்பட்டதும் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் ஸஃத் இப்னு ரபீஃஆவின் சகோதரரை வரவழைத்து அவர் எடுத்துச் சென்ற சொத்தை பின்வருமாறு பங்கீடு செய்தார்கள்.


இரு பெண் பிள்ளைகளுக்கும் (தலா ஒருவருக்கு 1/3 என்ற பங்கு வீதத்தில்) 2/3 பங்குகளும், இவர்களின் தாய்க்கு எட்டில் ஒருபங்கும் (1/8) பங்கும் மீதியை ஸஃத் (ரழி) அவர்களின் சகோதரர்களுக்கும் கொடுத்தார்கள்.(நூல்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா)


தனக்கும் தனது பெண் பிள்ளைகளுக்கும் சொத்துரிமை விவகாரத்தில் உரியபங்கு கிடைக்கவில்லையென்று ஒரு பெண் மணி நீதி கேட்டு வந்தபோது அப்பெண் மணிக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கவே வாரிசுரிமைச் சட்டம் அருளப்பட்டது.


மகன், மகள், சகோதர சகோதரி, மனைவி, தாய் தந்தை ஆகியோருக்கு இச்சட்டத்தின் மூலம் சொத்துக்களில் பங்கு கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.


இதைவிட பெண்ணுக்குரிய அந்தஸ்த்தும் உரிமையும் வேறு எங்கும் எந்த மதத்திலும் கோட்பாட்டிலும் காண முடியாது.


இவ்வாரிசுரிமைச் சட்டம் அருளப்பட்டபின் மரண சாசனத்தின் மூலம் சொத்துக்கள் பங்கீடு செய்யும் சட்டம் ரத்துச் செய்யப்பட்டதோடு வாரிசுகளுக்கு சொத்துக்கள் சம்பந்தமாக மரணசாசனம் செய்யவோ எழுதவோ அல்லது சிபாரிசு செய்யவோ தடுக்கப்பட்டது. வாரிசுகளுக்கு எத்தனை வீதம்பங்கு கொடுக்க வேண்டும்; என்று அல்லாஹ் விபரித்துக் கூறியுள்ளானோ அதே அடிப்படையிலும் இத்திருமறைக் குர்ஆனுக்கு விளக்கவுரையாக நபி முஹம்மது (ஸல்) அவர்கள் எப்படிச் செயல்படுத்தி பங்குவைத்துக் காட்டினார்களோ அதே அடிப்படையிலும் தான் உலகம் அழியும் வரை பங்கீடு செய்யப்பட வேண்டும். இதில் எவரும் மாற்றம் செய்ய முடியாது.


வாரிசுகள் அல்லாத வேறு எவருக்கேனும் அல்லது நற்பணிகளுக்கேதும் சொத்தில் குறிப்பிட்ட ஓர்அளவு கொடுக்க வேண்டும் என்று விரும்பினால் அதுசம்பந்தமாக வஸீய்யத் செய்வது தடுக்கப்படவில்லை.


உதாரணமாக, சமுதாயத்தின் கல்வி அறிவு வளர்ச்சிக் காக மறுமலர்ச்சித் திட்டங்களுக்காக அல்லது ஏழை எளியவர்கள் அநாதைகள் விதவைகள் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோரின் நலன்களைக் கவனத்திற் கொண்டு அவர்களது மேம்பாட்டிற்காக ஒருவர் தனது சொத்தில் குறிப்பிட்ட ஒருபங்கை மரணசாசனம் செய்ய விரும்பினால் அவர் தாராளமாக செய்யலாம். ஆனால் மொத்த சொத்தையும் தர்மஸ்தாபனங்களுக்கோ பொது நிருவனங்களுக்கோ எழுதிவைத்து விட முடியாது. அவரது மரணசாசனம் மொத்தச் சொத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் (1/3) அதிகமில்லாமல் இருப்பதையே இஸ்லாம் விரும்புகின்றது.


ஸஃத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நான் (நபியவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது மக்காவில்) நோயுற்று விட்டேன். நபி(ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். அப்போது நான்அல்லாஹ்வின் தூதரே! என் செல்வம் அனைத்தையும் மரணசாசனம் செய்ய விரும்புகின்றேன். எனக்கு இருப்பதெல்லாம் ஒரு மகள்தான். (எனவே என்சொத்தில்) பாதிப் பாகத்தை மரணசாசனம் செய்யட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பாதி அதிகம்தான் என்றார்கள். அப்படி என்றால் மூன்றில் ஒரு பங்கு (1/3) என்று கேட்டேன். மூன்றில் ஒரு பங்கா? அதுவும் அதிகம்தான். நீங்கள் உங்கள் வாரிசுகளை தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வது அவர்களை மக்களிடம் கையேந்தும்படி ஏழைகளாக விட்டுச் செல்வதை விட நல்லதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்:புகாரி)


பெண் பிள்ளைகளுக்குரிய சொத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் தன்னிறைவுள்ளவர்களாக அவர்களை ஆக்குவதற்கும் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் உரிய கவனம் செலுத்தினார்கள்.


வாரிசுகளை நிர்ணயிப்பதில் ஒவ்வொரு சமுதாயத்திலும் வெவ்வேறான அளவுகோல்கள் இருப்பதைப் பார்க்கின்றோம். வாரிசுகள் என்போர் யார்? அவர்கள் எந்த அடிப்படையில் வாரிசுகளாகிறார்கள்? அவர்களில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டியவர்கள் யார்? அவர்களில் யாருக்கு எந்தளவு பங்கு கொடுக்கப் படவேண்டும் என்ற விபரங்களெல்லாம் இஸ்லாம் தெளிவுப் படுத்துகிறது.


சொத்துக்களுக்கு மனிதன் சொந்தக்காரனாக இருந்தாலும் அவனாக முடிவுசெய்து விரும்பிய விதத்தில் வாரிசுக்ளுக் கிடையில் பங்கிட முடியாது. இஸ்லாம் தயாரித்துத் தந்திருக்கின்ற பட்டியல் முறையில் தான் பங்கீடு செய்யவேண்டும். சொத்துக்கள் தலைமுறை தலைமுறையாக குடும்பத்திற்குள் மாறிவருவதல்ல முக்கியம். அச்சொத்துக்களால் பலபேருடைய வாழ்வும் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதே முக்கியம்.


எனவே, ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் மொத்த சொத்து களையும் வழங்கிடாமல் பெண்களுக்கும், பெற்றோருக்கும் உடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் உரிய முறையில் பங்குவைத்து பங்குதாரர்களாக ஆக்குவதன் மூலமே குடும்பம் சீர்குலையாமல் சீரழிவுக்குள்ளாகாமல் பாதுகாக்க முடியும். ஒருவரை ஒருவர் தாங்கி நிற்கக்கூடிய வகையில் சொத்தைப் பங்கிடுவதன் மூலமே பொருளாதார சுபீட்சத்தினையும் சந்தோசமான கட்டுக்கோப்பான குடும்ப வாழ்வையும் உருவாக்கிட முடியும். அதன் காரணமாகவே வாரிசுகள் என்போர் யார்? என்ற பட்டியலை இஸ்லாம் தயாரித்துத் தந்துள்ளது.


தந்தை மரணித்துவிட்டால் அக்குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்பு ஆண் பிள்ளையைச்சாரும். ஆண்பிள்ளை இல்லையென்றால் தந்தையின் சகோதரனைச் சாரும். அவர் அக்குடும்பத்திற்கு- பராமரிப்பாளராக- வாரிசுதாரராக ஆக்கப்படுகின்றார். அதனால் தான் தந்தை விட்டுச் செல்லும் சொத்துக்களை பங்கு வைக்கும் போது அச்சொத்தின் மீதிப் பங்கிற்கு இவர் பங்காளியாக ஆக்கப்படுகின்றார். இதன் மூலம் ஆண் துணையில்லாத குடும்பத்திற்கு இவர் மூலம் பாதுகாப்பு அரண் போடப்படுகின்றது.


இச்சிறப்பான சட்டத்தின் வாயிலாகவே பெண் சமுதாயம் பாதுகாக்கப்படுகின்றது. தங்களுடைய ஜீவனோபாயத்தை தாங்களே தேடிக்கொள்வதற்காக தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொள்வதற்காக தொழில் தேடிச்செல்லும் முஸ்லிம் அல்லாத பெண்களுக்குள்ள நிலை இஸ்லாமியப் பெண்ணுக்குவராது. வாரிசுரிமைச் சட்டத்தின் மூலம் அவள் பாதுகாக்கப்படுகின்றாள்.


முஸ்லிமான ஒருபெண்ணும் முஸ்லிம் அல்லாத ஒரு பெண்ணும் தொழிலுக்குச் செல்வதில் அடிப்படையில் வேற்றுமை உண்டு. முஸ்லிமல்லாத பெண்ணைப் பொறுத்தவரை அவள் அவளது வாழ்வை அமைத்துக் கொள்ள சம்பாதித்தேயாக வேண்டும். அவளைப் பொறுப்பேற்று வளர்ப்பதற்கு வாழ்வை அமைத்துக் கொடுப்பதற்கு எவரும் இல்லை. சொத்தில் ஒரு பங்குமில்லை. ஆகவே அவள் சார்ந்திருக்கும் மதவாதச் சிந்தனையும் சமூகக்கோட்பாடும் அவளுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ளதால் அவள் பருவ வயதை அடைந்த பின் வீட்டை விட்டு வெளியேறியாக வேண்டும். இஸ்லாமிய பெண்ணுடைய நிலை இதை விட முற்றிலும் மாறுபட்டுள்ளது.


அவளை பொறுத்தவரை அவள் வீட்டிலிருந்து கொண்டே சகல உரிமைகளையும் அனுபவிப்பதற்கு வழிகாட்டப்பட்டிருக்கிறாள். வறுமை மற்றும் தேவை அல்லது மேலதிக வருமானம் கருதி அவள் தொழிலைத் தேடிக்கொள்ள விரும்பினால் அதற்கு தடையேதும் இல்லை. தங்களது மார்க்க கொள்கை ஒழுக்கவியல் மற்றும் கற்பையும் பேணிக் கொள்ளும் வகையில் நடந்து கொள்ள முடியுமான சூழல் இருக்குமானால் தொழிலுக்குச் செல்லலாம் என்ற அனுமதி அவளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.


வாரிசுரிமைச் சட்டத்தின் இறுதிவசனத்தில் அல்லாஹ் கூறும் போது “உங்கள் சொத்துக்கு மிகவும் நெருக்கமானவர்கள் பயன் தரக்கூடியவர்கள் யார்? என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்று கூறுவதன் விளக்கம் எவ்வளவு அற்புதமானது என்பதனை இங்கே சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.


நாம் மேலே இலக்கமிட்டு வரிசைப்படுத்திக் காட்டிய வாரிசுரிமைச் சட்டத்தின் நான்காவது சட்டத்தினை மேலும் தெளிவுபடுத்தி இன்னுமொரு வசனமும் அருளப்பட்டது. இச் சட்டத்தில் ஒருவர் விட்டுச் செல்லும் சொத்துக்கு அதற்கு வாரிசுகளான தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள் ஆகியோர் இல்லாமல் சகோதர சகோதரிகள் மட்டும் இருந்தால் அவர்களிடையே எப்படி பங்கீடு செய்வது என்று பின்வருமாறு விளக்கப் பட்டது. (இச்சட்டத்திற்கு கலாலா எனப்படும்).


“நபியே! உம்மிடம் அவர்கள் “கலாலா”பற்றி மார்க்கத் தீர்ப்புக்கோருகின்றனர். கலாலா குறித்து அல்லாஹ் உங்க ளுக்குத் தீர்ப்பளிப்பான் எனக் கூறுவீராக.
பிள்ளை இல்லாத ஒருவன் தனக்கு ஒரு சகோதரி இருக்கும் நிலையில் மரணித்தால் அவன் விட்டுச் சென்றவற்றில் அரைவாசி அவளுக்குண்டு. (ஒரு பெண் மரணித்து) அவளுக்குப் பிள்ளை இல்லாமல் இருந்தால் (சகோதரனான) அவன் அவளுக்கு வாரிசாவான்.


அவர்கள் இரு பெண்களாக இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் மூன்றில் இருபங்கு (2ஷ3)அவ்விருவருக்குமுண்டு. அவர்கள் ஆண்கள் பெண்கள் என் சகோதரர்களாக இருப்பின் அவர்களில் இரு பெண்களுக்குரிய பங்கு போன்றது ஒரு ஆணுக் குண்டு;. நீங்கள் வழிதவறாது இருப்பதற்காக அல்லாஹ் இவ்வாறுஉங்களுக்குத் தெளிவுப்படுத்துகின்றான். அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனாவான். (அல்குர்ஆன் 4:176)


வாரிசுரிமை தொடர்பாக இறுதியாக இறங்கிய வசனம் இது என பராஉ(ரழி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.(நூல்: புகாரி 4605)
வாரிசுரிமைச் சட்டத்தின் அனைத்து விளக்கங்களையும் அல்லாஹ் விளக்கிக் கூறி விட்டு இச் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகின்றவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். நிரந்தரமான நரகில் இருப்பார்கள் என எச்சரிக்கின்றான்.


“இவை அல்லாஹ் விதித்த வரம்புகள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் வழிப்பட்டு நடக்கிறாரோ அவரை சுவர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும்.
யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுகின்றானோ அவனை நரகத்தில் அவன் நுழைவிப்பான். அவன் அதில் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனையுண்டு (அல்குர்ஆன் 4:13-14)


சொத்துக்களை ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் அல்லது பெண்பிள்ளைகளுக்கு மட்டும் கொடுக்கமுடியாது. சகல பிள்ளைகளுக்கும் வாரிசுதாரர்களுக்கும் உரிய முறையில் பங்குவைத்தாக வேண்டும். மாறு செய்பவர்கள் குற்றத்திற்குரியவர்களாகிவிடுவர்.


இறந்தவர் விட்டுச் செல்லும் சொத்தை பங்கு வைக்கமுன் அவருடைய கடனையும் மரணசாசனத்தையும் முதலில் நிறை வேற்றவேண்டும் என்பதும் முக்கிய நிபந்தனையாகும். பெற்றோர் தங்களது பிள்ளைகள் மீது அன்புகாட்டுவதை விட அல்லாஹ் தன்படைப்புக்கள் மீது அதிக அன்புள்ளவனாக உள்ளான் என்ப தை இச்சட்டங்கள் காட்டவில்லையா?


பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுத்த இஸ்லாம் ஆண்களை விடக் குறைவாக கொடுத்தது ஏன்? என்ற சந்தேகம் எழுவது இயற்கையே அதனைநிவர்த்தி செய்வது நல்லது என நிகைக்கிறேன்.
பொருளீட்டுவதானது ஆண்கள் மீது இஸ்லாம் சுமத்தியுள்ள கடமையாகும். பெண்கள் மீது அக்கடமை சுமத்தப்படவில்லை.


ஆண் சம்பாதித்து தன்னுடைய தாய் தந்தை சகோதர சகோதரிகள் மற்றும் மனைவி என்ற வட்டத்திற்குள் உள்ள அக்குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்புள்ளவனாக இருக்கிறான். அவனுடைய உழைப்பின் கீழேயே பெண் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறாள். அப்பெண்ணை மணம்முடித்து வைக்க வேண்டிய பொறுப்பும் செலவினங்களும் அவனையே சாரும். கணவனால் தலாக் சொல்லப்பட்டால் மீண்டும் அவளை பராமரிக்கும் பொறுப்பும் மணமுடித்;து வைக்கும் கடமையும் அவனை வந்தடைகிறது.


இவன் ஒரு பெண்ணை மணக்கும் போது அவளுக்குரிய மஹரை கொடுத்து வாழ்வதற்கான வசதிகளையும் செய்து கொடுத்து தன்னுடைய பிள்ளைகள் மற்றும் குடும்பத்தையும் பராமரிக்கக் கூடியவனாக இருக்கிறான்.மனைவி விவாகரத்தச் செய்யப்பட்டால் அப்போதும் அவளுக்கு ஏதேனும் வசதிகள் அல்லது உதவிகள் செய்திடவேண்டும்.


சொத்துப் பங்கீட்டின் போது தந்தை, சகோதரர்கள், பிள்ளைகள் போன்றோரிடமிருந்து இவளுக்குரிய பங்குகளை பெற்றுக் கொள்ளும் அதே வேளை மகளாக, மனைவியாக, தாயாக, சகோதரியாக இருக்கும் நிலைகளிலும் அவளுக்குரிய பங்குகள் வந்து சேர்கின்றன. சொத்தில் தனக்குரிய பங்குகளை பெறும் அதே வேளை கணவராக வருபவரிடத்திலிருந்தும் மஹராகவும் ஒரு பகுதியை பெற்றுக் கொள்ளும் உரிமை படைத்தவளாக திகழ்கிறாள்.


வெளிப்படையாக பாரக்கும் போது பெண் குறைவாகவும் ஆண் அதிகமாகவும் பெறுவதாகவே தோன்றும். இஸ்லாம் கூறும் காரணங்களை கவனித்தால் பெண் அனைத்து உரிமைகளையும் அதிகமாக அனுபவிப்பதை காணலாம்.
பொருளீட்டுவதற்கான உரிமை ஆண்களுக்குக் கொடுக்கப்பட்டடுள்ளது போல் பெண்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மனைவியுடைய சம்பாத்தியத்தை அவளுடைய அனுமதியில்லாமல் கணவன் தொடமுடியாது. அவளாக கணவனுக்குக் கொடுத்தால் அது தர்மம் செய்த நன்மை சாரும் என இஸ்லாம் கூறுகிறது.


பெண்களே! நீங்கள் தர்மம் செய்யுங்கள். உங்களின் நகைகளாக இருப்பினும் சரியே! தர்மம் செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதைக் கேட்ட நான் (என் கணவரான) அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்களிடம் வந்தேன். நீங்கள் வறுமையில் உள்ளீர்கள். நபி (ஸல்) அவர்கள் தர்மம் செய்யும்படி எங்களுக்கு ஏவினார்கள். எனவே, அவர்களிடம் நீங்கள் சென்று (என் தர்மத்தை நீங்கள்) பெறலாமா? எனக் கேட்டு வாருங்கள். அது சரியாக இருந்தால் என்னிடமிருந்து அதைக் கொடுப்பது போதுமாகும். இல்லையெனில் மற்றவருக்கு நான் அதைக் கொடுப்பேன் என்று கூறினேன். அப்போது அவர் நீ போய் கேட்டுவா என்று கூறினார்.


நான் நபி (ஸல்) அவர்களின் வீட்டுக்குச் சென்றேன். வீட்டு வாசலில் அன்ஸாரிப் பெண் ஒருவர் நினறு கொண்டிருந்தார். என் தேவையை போலவே அவர் தேவையும் இருந்தது. அப்போது எங்களிடம் பிலால் (ரழி) வந்தார்கள். நாங்கள் அவரிடம் நீங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இரு பெண்கள் வந்து தங்களிடம் உள்ள தர்மப் பொருளை தங்களின் கணவர்களுக்கோ, தங்கள் மடியில் வளரும் அனாதைகளுக்கோ கொடுக்க விரும்புவது கூடுமா? என்று உங்களிடம் கேட்பதற்காக வாசலில் நிற்கின்றோம் என்ற செய்தியை கூறுங்கள். நாங்கள் யார் என்ற விபரத்தை அவர்களிடம் கூறாதீர்கள் என்று கூறினோம்.


பிலால் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் சென்று இது பற்றிக் கேட்டார்கள். அப்போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரும் யார்? என்று கேட்டார்கள். “ஒருவர் அன்ஸாரிப் பெண் மற்றவர் ஸைனப் என்று பிலால் (ரழி) கூறினார்கள். எந்த ஸைனப் என்று நபி (ஸல்) கேட்க, அப்துல்லாஹ்வின் மனைவி என பிலால் (ரழி) கூறினார்கள். அப்போது நபியவர்கள், “உறவினரை ஆதரித்தல்,தர்மம் செய்தல் என இரண்டு வகைக் கூலிகள் அந்த இரண்டு பெண்களுக்கும் உண்டு” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸைனப் அத்தகபீ (ரழி), (நூல்:புகாரி-1466, முஸ்லிம்-1000)


நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் உருவாக்கி வளர்த்து விட்ட பெண் சமூகத்தின் சுதந்திரத்தை பாருங்கள். சட்டரீயாக சொத்துப் பங்கீட்டின் ஒழுங்குகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்ட பிறகும் அவள் சம்பாதிக்கும் உழைப்பில் இருந்து கணவனுக்கு கொடுக்க வேணடிய கட்டாயம் இல்லை. அவளாக விரும்பி கொடுத்தால் தர்மத்துடைய நன்மை கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.


பெண்களுக்கான உரிமைகளை வழங்கி அவர்களை வாழ வைத்த மார்க்கம் எது என்பதை இப்போதாவது உங்கள் மனசாட்சி பிரகாரம் கூறுங்கள்.

Monday, March 21, 2011

இல்லறம் - பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க!

திருமணம் என்பது மனிதர்கள் இழைப்பாற ஒதுங்கும் நந்தவனம் போன்றது, இன்னும் ஒவ்வொரு நாள் பொழுதினில் ஏற்படும் கஷ்டங்களையும், துன்பங்களையும் துடைத்து விடக் கூடிய ஆறுதல் அளிக்கும் தளமுமாகும்। இஸ்லாம் இந்தத் திருமணத்தின் மூலமாக மட்டுமே எதிர்எதிர் பாலியல் கொண்டவர்களை இணைக்கின்றது।

இஸ்லாம் இந்தத் திருமண பந்தத்தினை மிக அதிகமாகவே வலியுறுத்துவதோடு, அதில் பல அருட்கொடைகளும் உங்களுக்கு இருக்கின்றது என்று அறிவுறுத்துகின்றது."நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன."(அல்குர்ஆன் 30:21)

இஸ்லாம் வலியுறுத்தும் திருமணத்தின் நோக்கம் என்பது பல பயன்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. அது தனிமனிதர்களை தவறான கெட்ட நடத்தைகளிலிருந்தும், விபச்சாரத்தில் ஈடுபடுவதிலிருந்தும் பாதுகாக்கின்றது. இயற்கையிலேயே மனிதன் ஆசாபாசங்களில் தன்னை இழந்து விடக் கூடியவனாக இருக்கின்றான். இன்னும் ஷைத்தான் அவனது ஆசாபாசங்களைத் தூண்டி விட்டு, மனித இனம் வெட்கித்தலைகுனியக் கூடிய விபச்சாரத்தின் பக்கம் அழைத்துச் சென்று விடக் கூடியவனாகவும் இருக்கின்றான்.பெண் ஷைத்தானைப் போலவே (மனதை மயக்கும் விதத்தில்) அணுகுகின்றாள், இன்னும் ஷைத்தானால் பீடிக்கப்பட்ட (மனதை மயக்கும் விதத்தில்) நிலையிலேயே வெளியேறுகின்றாள். உங்களில் ஒருவர் மனதை மயக்கும் விதத்தில் ஒரு பெண்ணைப் பார்ப்பீர்கள் என்றால், அவன் அவளது மனைவியிடம் செல்லட்டும், ஏனென்றால், மற்ற பெண்களிடம் உள்ளது போலவே உங்கள் மனைவியிடம் உள்ளது. அவன் தனது இச்சையை ஆகுமான வழியில் தீர்த்து திருப்தி கொள்ளட்டும். (முஸ்லிம்)

இரண்டாவதாக, திருமணத்தின் மூலம் வாரிசுகள் உருவாகி, அதன் மூலம் இஸ்லாமிய சமுதாயம் வளர்வதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது। முறையான திருமண உறவு முறையின் மூலம் பெற்றெடுக்கின்ற மழலைச் செல்வங்களின் மூலம், இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் விருப்பத்தையும் நாம் நிறைவேற்றியவர்களாகின்றோம்.

அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், "திருமணம் செய்து கொள்ளுங்கள், ஏனென்றால் (மறுமை நாளில்) மற்ற சமுதாயங்களைக் காட்டிலும் என்னுடைய சமுதாயத்தவர்கள் அதிகமாக இருப்பதைக் காண நான் விரும்புகின்றேன்।" (பைஹகி).இவை தான் இஸ்லாம் வலியுறுத்தும் திருமணத்தின் நோக்கமெனினும், இன்னும் பல சிறப்பு அம்சங்கள் அதனுள் பொதிந்து கிடக்கின்றன.

அதாவது ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுவது, ஒருவர் மற்றவர் மீது கருணையோடும், இரக்கத்தோடும் நடந்து கொள்வது, இன்னும் ஒருவர் மற்றவரின் கெடுதல்களிலிருந்து பாதுகாப்புப் பெற்றுக்கொள்வது, அது மட்டுமல்ல இருவரும் இல்லறத்தை நல்லறமாக மாற்றுவதன் மூலம் நன்மையான பல காரியங்களை இணைந்து செய்வதற்கான சூழல் அங்கு நிலவ ஆரம்பிக்கின்றது, இருவருது அன்புப் பிணைப்பின் மூலமாக இஸ்லாமிய சமுதாயம் ஒரு பாதுகாக்கப்பட்ட சமுதாயமாக, பாதுகாப்புணர்வு கொண்ட சமுதாயமாக பரிணமிப்பதோடு, அங்கு பழக்க வழக்கங்களில் நன்னடத்தையும், சமூகம் மற்றும் உடல் ரீதியான ஆரோக்கியத்தையும் பெற்றுக் கொள்கின்றது।துரதிருஷ்டவசமாக, மற்ற சமுதாயங்களைப் போலவே இன்றைக்கு முஸ்லிம் சமுதாயத்திலும் மணவிலக்குகள் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது।இன்றைக்கு நீங்கள் வாழக் கூடிய சூழலில் இவ்வாறான மணவிலக்குகள் அதிகமில்லாதிருந்தாலும் கூட, மேலே நாம் சொன்ன திருமணத்தின் காரணமாக விளையக் கூடிய நன்மைகள் தானாக விளைந்து விடுவதில்லை। மாறாக, அன்பு, பண்பாடுகள், பழக்க வழக்கங்கள், முயற்சிகள், இன்னும் ஒருவர் மீது ஒருவர் அக்கறை கொள்ளுதல், இவை அனைத்தையும் விட அற்பணிப்பு மனப்பான்மையுடன் ஒருவர் மற்றவரிடம் நடந்து கொள்ளுதல் போன்றவற்றின் மூலமாகத் தான் அத்தகைய நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமே தவிர, தானாக எந்த நன்மையும் விளைந்து விடுவதில்லை। அனைத்திற்கும் நமது முயற்சி இன்றியமையாததொன்றாக இருக்கின்றது।

இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுவது போல, "உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்;" (அல்குர்ஆன் 30:21)கணவன் மனைவிக்கிடையே காதலும், கனிந்துருகச் செய்யும் விளையாட்டும் விடைபெற்று விடுமென்று சொன்னால், அதனை மீட்டிக் கொண்டு வருவதற்கு அங்கு கருணையும், சகிப்புத் தன்மையும், ஒருவர் மற்றவருக்கிடையே தொடர்புகள் நீடித்திருக்கச் செய்வதும் அவசியமானதாகும், இவை மூலம் விடைபெற்றுச் சென்ற காதலும், கனிந்துருகச் செய்யும் விளையாட்டுக்களும் அங்கு தலைத்தோங்க ஏதுவாகும்। ஊடலுக்குப் பின் கூடல் என்பதுதான் உறவை இருகச் செய்யும் சாதனமாகும்।தம்பதிகள் இருவரும் சந்தோஷமாக வாழ்வது என்பது அவர்களுக்கு மட்டும் நன்மை பயப்பதல்ல, மாறாக, அது உங்களது குழந்தைக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும் அம்சமாக இருக்கின்றது. நீங்கள் உங்களுக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அன்பு பாராட்டி, சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்ளும் பொழுது, அந்தச் சூழலில் வாழக் கூடிய உங்களது குழந்தைகளும் இத்தகைய நற்பழக்கங்களைக் கற்றுக் கொண்டு, தங்களது வாலிப நாட்களில் அதனைக் கடைபிடிப்பதற்கான முன்மாதிரிகளைப் பெற்றுக் கொள்வார்கள் என்பது ஆய்வுகள் கூறும் முடிவுகளாகும். இன்னும் அமைதியான சூழ்நிலைகள் நிலவக் கூடிய இல்லறத்தில், வாழ்வின் வசந்தங்கள் என்றென்றும் பூத்துக் குலுங்கிக் கொண்டே இருக்கும். இது ஒன்றும் கடிமான விஷமுமல்ல, இதற்கென நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டிய அவசியமுமில்லை, உங்களது பழக்கவழக்கங்களில் சற்று மாறுதல்களைக் காண்பித்தாலே போதும், இல்லறத்தில் நல்லறங்கள் பூக்க ஆரம்பித்து விடும்.

அவற்றில் சிலவற்றை இங்கு நாம் காண்போம் :
ஒருவர் மற்றவர் உரிமைகளை மதித்து நடப்பதுஉங்களது திருமணம் வெற்றிகரமான திருமணமாக பரிணமிக்க வேண்டுமென்றால், திருமணமான ஆண்-பெண் இருவரும், ஒருவர் மற்றவர் மீது என்னனென்ன உரிமைகள் இருக்கின்றன என்பதைப் பற்றித் தெளிவாக அறிந்து கொள்வதுடன், அவற்றை மதித்து நிறைவேற்ற கூடுதல் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.ஒரு கணவனின் மீது உள்ள உரிமைகள் என்னவென்றால், தன்னை நம்பி உள்ள குடும்பத்தினருக்கு தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள் போன்றவர்களுக்கான வாழ்வியல் தேவைகளை அதாவது, உடை, உணவு, உறையுள், கல்வி இன்னும் பல அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது, அதற்கான பொருளாதாரத்தைத் திரட்டிக் கொடுப்பது.இன்னும் குடும்பத் தலைவன் என்ற முறையில் குடும்பப் பராமரிப்பு அத்துடன் மார்க்க வழிகாட்டுதல்கள் மற்றும் குடும்பத்தினரிடையே ஒழுக்க மாண்புகளில் கவனம் செலுத்துதல் ஆகியவை கணவன் மீதுள்ள இன்றியமையாத கடமைகளாகும். இவை யாவும் அவன் மீதுள்ள தவிர்க்க முடியாத கடமைகளாகும்.

மனைவியைப் பொறுத்தவரையில், இறைவன் அனுமதித்துள்ள வரம்புகளைப் பேணுவதும், அதற்காக கணவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பதும், குடும்பப் பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு போன்றவற்றில் தனிக் கவனம் செலுத்துவதும் அவளது இன்றியமையாத கடமைகளில் ஒன்றாக இருக்கின்றது. இன்னும் பல பொறுப்புக்களை நிறைவேற்றக் கூடியவளாக அவள் இருந்தாலும், மேலே சொன்னவைகள் தான் அவளுக்குரிய அடிப்படைக் கடமைகள் என்பதை அவள் மறந்து விடக் கூடாது. இவற்றை அவள் நிறைவேற்றத் தவறுவாளாகில், அந்தக் கணத்திலிருந்து குடும்பத்தில் குழப்பங்கள் தலைதூக்க ஆரம்பித்து விடும், குடும்பச் சூழ்நிலை பாழ்பட ஆரம்பித்து விடும்.

குடும்பத்தில் அமைதி நீங்கி, புயல் வீச ஆரம்பித்து விடும். இத்தகைய சூழ்நிலைகளினால் அங்கு அன்பு அழிந்து, கருணையை இழந்து, ஒருவர் மற்றவரைப் பிணைக்கக் கூடிய நற்பண்புகளையும் இல்லாமலாக்கி விடும்.எனவே தான், கணவன் மனைவி இருவரும் தங்களுக்குரிய கடமைகள் என்னவென்பதை ஆராய்ந்து, அதனை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். ஒருவர் மற்றவர் மீது காட்டக் கூடிய அலாதியான அந்த அன்பு, அவர்களது இதயத்தைப் பிணைப்பதோடு, இறைவன் நாடினால் மேலும் மேலும் வசந்தம் வீசக் கூடிய தளமாக இல்லறம் மாறவும் வாய்ப்பு ஏற்படும்.

தனிமைச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்குதல்
இன்றைய உலகம் என்பது அவசர உலகம். அதனால் வாழ்க்கையை வாழ்வதற்குக் கூட நேரமில்லாமல் வாழக் கூடிய நிலைமையில் தான் இன்று நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். வாழ்வியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே இருக்கின்ற 24 மணி நேரம் போதவில்லை என்று அங்கலாய்ப்பவர்களைத் தான் நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் அந்த 24 மணி அலுவல்களுக்கிடையிலும் உங்கள் மனைவிக்காகவும் சில மணித்துளிகளை ஒதுக்குங்கள். அதில் அவளுடன் தனிமையைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மிகவும் அவசியமில்லாத முக்கியத்துவமில்லாத எத்தனையோ விஷயங்களுக்காக நாம் நம் நேரத்தையும், பணத்தையும் செலவழிக்கத் தயாராக இருக்கின்றோம். ஆனால் திருமணம் எனும் பந்தத்தில் நம்முடன் இணைந்த அவளுடன், வாழ்நாள் முழுவதும் நம்மையே நம்பி வாழ்ந்து வரக் கூடிய அவளுக்கென சில மணித்துளிகளை செவழிப்பதற்குத் தயங்குகின்றோம்.

சில குடும்பங்களில் கணவனும் மனைவியும் தனிமையில் சந்திப்பதே ஒரு சில நிமிடத்துளிகள் தான். எனக்கு நேரமில்லை, நேரமில்லை, காலையில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது, அடுத்து வேலைக்குச் செல்வது, மாலையில் வீட்டுக்கு வருவது, உடன் அடுத்தடுத்த பணிகளுக்கு நேரத்தை ஒதுக்குவது இப்படியாக காலத்தை நகர்த்தக் கூடிய நாம், மனைவிகளுக்காகவும், பிள்ளைகளுக்காகவும் எந்தளவு நேரத்தை ஒதுக்கினோம் என்பதைப் பற்றிச் சிந்திப்பது நல்லது.

இன்றைக்கு பணம் வாழ்க்கையின் அடிப்படைத் தேவையாக மாறி விட்டது. பணம் தான் எல்லாம் என்ற மனநிலை மக்கள் மனதில் நோயாக மாறிக் கொண்டிருக்கின்றது. மனிதர்களது உணர்வுகளை பணத்தைக் கொண்டு திருப்திபடுத்தி விட முடியாது என்பதைப் புரியாதவர்களாக மனிதர்கள் மாறி விட்டிருக்கின்றார்கள். இதிலிருந்து தவிர்ந்து வாழ்வதற்கு உங்களது நேரங்களைத் திட்டமிட்ட அமைத்துக் கொள்ளுங்கள். நேர முகாமைத்துவம் ஒவ்வொரு மனிதர்களுக்கும் அவசியம். அவசர கால ஓட்டத்தில் உங்கள் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் சில நேரத்துளிகளை ஒதுக்கித் தரும் பொழுது, பணம் தராத சுகத்தை உங்களது அருகாமை அவர்களுக்கு வழங்கும்.

அதிகாலை பஜ்ர் தொழுகைக்குப் பின் குடும்பத்தினர் அனைவருடனும் சிறிது நேரம் உட்கார்ந்திருப்பது, அல்லது இரவு சாப்பாட்டிற்குப் பின் சிறிது நேரம் குடும்பத்தினருடன் உட்கார்ந்திருப்பது ஆகியவற்றை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.நீங்கள் எந்தளவு பரபரப்பானவராக இருந்தாலும் சரி, குடும்பத்தினருக்காகவென ஒரு நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்வதன் மூலம் அவர்களது உணர்வுகளை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். அதன் மூலம் உங்களைப் பற்றி அவர்களும், அவர்களைப் பற்றி நீங்களும் அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றீர்கள் என்பதையும் உணர்த்த முடியும்.

உணர்வுகள் தான் மனிதனை உச்சத்திற்கும் கொண்டு செல்லும், அதே உணர்வுகள் தான் மனிதனை தாழ்நிலைக்கும் கொண்டு செல்லும்.கவனிப்பு அல்லது அக்கறைஉங்களது திருமண பந்தம் நிலைத்திருக்க வேண்டுமா?! அப்படியானால், ஒருவர் மற்றவர் மீது அக்கறை கொண்டவர் என்பதை, ஒருவர் மற்றவருக்கு உணர்த்தத் தவறக் கூடாது.உங்களது மனைவி சற்று தாகமெடுக்கின்றது என்று சொன்னால், உடனே சென்று ஒரு குவளைத் தண்ணீரைக் கொண்டு வந்து அவளுக்கு வழங்குங்கள். இல்லை, உங்களது கணவன் களைப்பாக இருக்கின்றது என்று சொன்னால், அவனது களைப்பு எதனால் ஏற்பட்டது என்று அறிந்து கொண்டு அதற்கான ஆறுதலைக் கூறுங்கள். எனவே, ஒருவர் மற்றவருக்கு இளைப்பாறும் தளமாக மாறிக் கொள்ளலாம். இன்னும் ஒருவர் மற்றவரது சுமைகளைத் தாங்கிக் கொள்ள முன்வர வேண்டும்.

குடும்ப அலுவல்களில் மனைவிக்கு உதவுவது கணவனின் உதவி என்றால், கணவனின் அலுவல்களுக்கு இடையூறாக இல்லாமல், அவனது சிரமங்களைப் புரிந்து கொண்டு, அந்த சிரமங்களைச் சமாளிப்பதற்குண்டான ஊக்கத்தை வழங்குவது மனைவி புரியக் கூடிய உதவியாக இருக்கும்.

ஒருவர் மற்றவரது அலுவல்களின் சுமைகளை இறக்கி வைப்பதன் மூலம், வேலைப் பளு குறைவதோடு, இணக்கமான சூழ்நிலையும் நிலவ ஆரம்பித்து விடும். இதுவே உங்களது பிணைப்பை உறவை வலுப்படுத்தும்.

அமைதியாகப் பேசுவது, கவனமாகச் செவிமடுப்பதுதம்பதிகளுக்கிடையே பிரச்னை உருவாகுவது என்பது இருவருக்குமிடையே புரிந்துணர்வு இல்லாததே காரணமாகும். அதாவது உங்கள் இருவருக்கிடையே பேச்சுவார்த்தையே கிடையாது என்பதல்ல, மாறாக, அர்த்தமுள்ள பேச்சுக்கள் குறைவாக இருப்பது தான் பிரச்னைக்கே காரணமாகும்.

நீங்கள் உங்களுக்கிடையே உரையாடும் பொழுது, நீங்கள் இருவரும் தம்பதிகளாக இருக்கின்றீர்கள், அவள் மனைவி, இவன் கணவன் என்ற உணர்வு மேலோங்க வேண்டும். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் பேசும் பொழுது சப்தமிட்டு, உரத்த குரலில் பேசுகின்றீர்களா? அல்லது மிக மெதுவாகப் பேசுகின்றீர்களா? ஒருவர் பேசும் பொழுது மற்றவர், அவர் என்ன சொல்ல வருகின்றார் என்பதை நிதானித்து கவனிக்கின்றீர்களா? அல்லது அவர் என்ன சொல்வது நான் என்ன கேட்பது? என்ற அலட்சியப் போக்கில் இருக்கின்றீர்களா? ஒருவர் மற்றவரிடம் பேச்சுக் கொடுக்க வரும் பொழுது, அவள் என் மனைவி, இவன் எனது கணவன், அவன் அல்லது அவள் என்னிடம் அர்த்தமுள்ள பேச்சைத் தான் பேச வருகின்றான் அல்லது வருகின்றாள் என்ற உணர்வுடன், ஒருவர் மற்றவரது பேச்சை அக்கறையுடன் செவிமடுக்க வேண்டும். அவள் அல்லது அவன் என்ன சொல்ல வருகின்றார் என்பதை நிதானத்துடன் கவனித்து, அதனை முழுவதுமாக கிரகித்து, அதற்கான பதிலை அல்லது ஆலோசனைகளை வழங்க வேண்டும். அந்த ஆலோசனைகள் கூட அறிவுறுத்தலாக இருக்க வேண்டுமே ஒழிய, கட்டளைத் தொணியில் இருக்கக் கூடாது. இதன் மூலம் வற்புறுத்தல் இல்லாத நிலை உருவாகுவதோடு, இருவருக்குமிடையே நல்லதொரு புரிந்துணர்வு ஏற்படும். புரிந்துணர்வே பல பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடும்.

இறைவனிடம் உதவி கேளுங்கள்
திருமணத்தின் மூலம் உங்கள் இருவரையும் கணவன் மனைவி என்ற அந்தஸ்திற்கு உயர்த்தியன், அல்லாஹ் தான், அவனே உங்கள் இருவருக்குமிடையே அன்பையும், பாசப் பிணைப்பையும் உருவாக்கி வைத்தான்.

இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் கூறினார்கள் : நிச்சயமாக அன்பு என்பது இறைவன் புறத்திலிருந்து உருவானது, வெறுப்பு என்பது ஷைத்தானிடமிருந்து வந்தது, அவன் தான் உங்களுக்கு அல்லாஹ் எதனை ஆகுமாக்கி வைத்திருக்கின்றானோ அதன் மீது வெறுப்பைத் திணிக்கின்றான்...எனவே, உங்கள் மனைவி மீதுள்ள அன்பு குறைகின்றதென்றால், நீங்கள் அல்லாஹ்வின் புறம் திரும்புங்கள், அவனே அனைத்து நல்லறங்களையும் வழங்கக் கூடியவன், அவனிடமே உதவி கேளுங்கள், உங்கள் மனைவி மீது அன்பாக இருப்பதற்காகவும்॥! இன்னும் அவளிடம் காணக் கூடிய கெட்ட நடத்தைகளின் பொழுது பாராமுகமாக இருப்பதற்காகவும்॥! உங்கள் இதயங்களை இணைப்பதற்காகவும், இன்னும் நீங்கள் எதனை விரும்புகின்றீர்களோ அத்தனையையும் கேளுங்கள், அவனே உங்களது தேவைகளை நிறைவேற்றக் கூடியவனாகவும், உங்களது கோரிக்கைகளுக்கு செவிமடுக்கக் கூடியவனாகவும் இருக்கின்றான், அவற்றுக்குப் பதிலளிக்கக் கூடியவனாகவும் இருக்கின்றான்.

திருமணம் என்பது இஸ்லாமிய சமுதாய வாழ்வில் தவிர்க்க முடியாத, இன்றியமையாத சாதனமாகும். ஒவ்வொரு நாள் சுமையிலிருந்தும், கஷ்டங்களிலிருந்தும் நீங்கள் ஓய்வெடுக்கக் கூடிய தளமாக திருமணம் எனும் பந்தம் இருக்க வேண்டும். அது குளிருக்குக் கதகதப்பானதாகவும், வெயிலுக்கு இதமான குளிர்ந்த தென்றலாகவும் திகழ வேண்டும். அதன் மூலம் அன்பும், பாசமும் தளைத்தோங்க வேண்டும். ஒருவரை ஒருவர் சரியான அளவில் புரிந்துணர்வு கொண்டு செயல்பட வேண்டும். அதன் மூலம் பாசப்பிணைப்பில் மேலும் இறுக்கம் ஏற்பட வேண்டும்.

உங்கள் குடும்பங்கள் புயல் வீசுகின்ற தளமாக இருக்குமென்றால், மேலே சொன்ன அறிவுரைகளைச் செயல்படுத்திப் பாருங்கள், உங்களுக்கிடையில் இருக்கின்ற தவறுகளைக் களைந்து, கருணை எனும் இறக்கையைத் தாழ்த்திப் பாருங்கள். வசந்தம் எனும் வானம்பாடி பாடித்திரியும் நந்தவனமாக, பாச மலர்க் கூட்டமாக உங்கள் இல்லம் திகழக் கூடும். இறைவன் நாடினால்॥!எல்லாவற்றுக்கும் மேலாக அவனிடமே கையேந்துங்கள். அவனே, இதயங்களைப் புரட்டக் கூடியவனாக இருக்கின்றான்.

Tuesday, March 15, 2011

பேரழிவுகளும் பாவமன்னிப்பும்

நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள் அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை -நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (திருக்குர்ஆன் 8 : 25)

Photo of evacuation sign


பேரழிவுகள் ஏன்?


அல்லாஹ்வை புறக்கணித்து, அவன் வல்லமையை மறந்து, பல பாவங்களையும் புரியும் நன்றிகெட்ட மனிதர்கள் இப்பூமியில் வாழும்போது, இயற்கை சீற்றங்களான புயல், சூறைக்காற்று, நில நடுக்கம், வெள்ளப் பெருக்கு, சுனாமி, எரிமழை தாக்குதல் போன்றவற்றால் அல்லாஹ்வின் கோபச் சோதனையை எதிர்பாருங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் செய்த முன்னறிவிப்பு

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்

பொதுச் சொத்து தன் சொத்தைப் போல பாவிக்கப்படும் போது,

போரில் கிடைக்கப்படும் அமானிதம் (கனீமத்) தன் பங்குப் பொளாகக் கருதப்படும் போது,

ஜகாத் கடன் கொடுப்பதைப் போன்று கடினமாகக் கருதப்படும் போது,

தீனுடைய நோக்கமின்றி கல்வி கற்பிக்கப்படும் போது,

கணவன் தன் மனைவிக்கு அடிபணிந்து வாழும் போது,

பெற்ற தாய் தன் மக்களால் வேதனை செய்யப்படும் போது,

தனது நண்பனை தனக்கு நெருக்கமாக்கி, பெற்றெடுத்த தந்தையை புறக்கணிக்கும் போது,

அல்லாஹ்வின் பள்ளிவாயில்களில் சப்தங்கள் உயர்த்தப்படும் போது,

ஒரு கூட்டத்தினருக்கு அவர்களில் உள்ள தீயவன் தலைவனாகும் போது,

ஒரு கூட்டத்திலுள்ள இழிவானவன் கண்ணியமானவனாகவும், கண்ணியமானவர் அவர்களில் மிக இழிவானவராகக் கருதப்படும்போது,

ஒரு மனிதனுடைய தீமைக்குப் பயந்து அவனுக்கு கண்ணியமளிக்கப்படும் போது

ஆடல் பாடல்களில் ஈடுபடும் பெண்களும், இசைக்கருவிகளும் அதிகரிக்கும் போது,

மதுபானங்கள் தாராளமாக அருந்தப்படும் போது,

இந்த உம்மத்தில் பின்னால் வருகிறவர் முன் சென்றவர்களைச் சபிக்கும் போது

இத்தகைய காரியங்களெல்லாம் ஏற்படுகிற காலத்தில் சிவந்த நிறமான காற்றையும், நில நடுக்கத்தையும், பூமிக்குள் அழுத்தப்படுவதையும், உருவமாற்றம் நிகழ்வதையும், கல்மாரி பொழிவதையும் நூலருந்த மணிகள்போல் ஒன்றன்பின் ஒன்றாக பல வேதனைகளை எதிர்பாருங்கள். அறிவிப்பவர் : அபூஹூரை (ரழி) நூல் : திர்மிதி

எனினும், இதன்பிறகு (இவர்களில்) எவரேனும் (தம் பாவங்களை உணர்ந்து) மன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொள்வார்களானால், (மன்னிப்புக் கிடைக்கக் கூடும்;) நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், அளப்பெருங் கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 3 : 89)

நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திக் கொண்டும், அவன் மீது நம்பிக்கை (ஈமான்) கொண்டும் இருந்தால், உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 4 : 147)


பாவமன்னிப்பு


தவ்பா (பாவமன்னிப்பு) செய்யும் போது தூய மனதுடன் இனி அத்தகைய பாவங்களில் ஈடுபடமாட்டேன் என்ற உறுதியான எண்ணத்துடன் அல்லாஹ்விடம் மட்டுமே பிராத்திக்க வேண்டும்.

நம் பாவமன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கையுடன் அல்லாஹ்விடம் மன்றாடும் போது நாம் அடையும் சோதனை மற்றும்

வேதனைகளிலிருந்தும் துன்ப துயரங்களிலிருந்தும் நாம் மீட்சி பெற இயலும்.


பாவமன்னிப்பு கோரல் பற்றி திருக்குர்ஆன்


ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழே ஆறகள் (சதா) ஓடிக் கொண்டே இருக்கும்; (தன்) நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான் (திருக்குர்ஆன் 66 : 8)

......''எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்'' என்று கூறினார்கள். (திருக்குர்ஆன் 7 : 23)

''எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! ....'' (திருக்குர்ஆன் 2 : 186)

மேலும், ''எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! ....'' (திருக்குர்ஆன் 3 : 147)

.... ''எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்'' (திருக்குர்ஆன் 23 : 109)


Source : http://www.ottrumai.net/TArticles/34-CalamitiesNSeekingPardon.htm