Showing posts with label இஸ்லமிய அறிவியல். Show all posts
Showing posts with label இஸ்லமிய அறிவியல். Show all posts

Thursday, June 27, 2013

இலங்கையில் இஸ்லாமிய வங்கித்துறை எதிர்நோக்கும் சவால்கள் – அஷ்ஷெய்க் யூஸுப் முப்தி

yoosuf-mufthi[1]
இஸ்லாமி வங்கி முறை குறித்துப் பேசும்போது இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை குறித்தும் இந்த உலகுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. இன்றைய உலகில் இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கை உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அதன் யதார்த்தத்தை பலரும் ஏற்றுக் கொள்கின்றனர்.
மீள்பார்வை ஊடக மையத்தினால் வெளியிடப்பட்ட "இஸ்லாமிய வங்கி முறை ஓர் அறிமுகம்" எனும் நூல் வெளியீட்டு விழாவில் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றும்போது அஷ்ஷெய்க் யூசுப் முப்தி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இன்றைய உலகில் வேலையில்லாப் பிரச்சினை நிலவுகிறது. இதனை நிவர்த்திக்க வேண்டுமாக இருந்தால் உலகம் இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக் கொண்டாக வேண்டும். பணப்புழக்கம், கொடுக்கல் வாங்கல் குறித்து அல்குர்ஆன் பேசியிருக்கிறது. நபியவர்களின் காலத்திலும் அதற்கு முந்திய காலத்திலும் இந்த நடைமுறை இருந்திருக்கிறது. யூசுப் (அலை) அவர்களை பல திர்ஹம்களுக்கு விற்றது குறித்தும் குகைவாசிகள் பணத்தைக் கொண்டு பொருள் வாங்கியது குறித்தும் அது கூறுகின்றது.
இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின் உலகம் ஒரு மாற்றத்தை எதிர்கொள்கிறது. அழிவிலிருந்து மீள வேண்டிய தேவை உலகத்தில் ஏற்பட்டது. இதற்கு பலரது உதவியும் தேவைப்பட்டது. இந்த அடிப்படையில் 1940 – 1970 வரையில் இஸ்லாமிய பொருளாதாரம் குறித்த ஆய்வுகள் ஆங்காங்கே தனிநபர் முயற்சிகளாக நடை பெற்றன. 1970 களில்தான் முதன்முறையாக இஸ்லாமியப் பொருளாதாரம் குறித்த ஒரு மாநாடு கராச்சியில் நடைபெற்றிருக்கிறது. 70 வரைக்குமான காலத்தில் தனிநபர்கள் மூலம் இந்த சிந்தனை உலகிற்கு முன்வைக்கப் பட்டிருக்கின்றது. அல்லாஹ் அவர்களுக்கு அருள்பாளிக்க வேண்டும்.
இஸ்லாமிய பிக்ஹ் நூல்களை எடுத்து நோக்கும் போது இஸ்லாமிய வங்கிமுறை, பொருளாதாரம் என்பன குறித்து விரிவாகப் பேசா விட்டாலும் அதனுயை பகுதிகள் குறித்துப் பேசியிருப்பதனை நாம் காணலாம். ஆனால் இரண்டு உலமாக்கள் இது பற்றிப் பேசியிருக்கிறார்கள். ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமியா அவர்கள் இது குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார்கள்.
அப்பாஸியர் காலத்திலே இஸ்லாமிய பொருளாதாரம் எப்படி இருந்தது. எப்படி இருக்க வேண்டும் என்ற அறிவுரைகளை அவர்கள் வழங்கினார்கள். மற்றவர் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள். இவர் ஒரு சூபியாக இருந்தாலும் இஸ்லாமியப் பொருளாதாரம் குறித்து விரிவாகவும் அழகாகவும் பேசியிருக்கிறார்.
இஸ்லாமியப் பொருளாதாரம் குறித்து இப்படியெல்லாம் இருக்கின்ற நிலையில் எமக்கு அது பற்றி என்ன தெரியும் என்ற கேள்வி இங்கு எழுகிறது. எமது நாட்டிலும் இஸ்லாமிய வங்கி முயற்சியின் வரலாறு சுமார் 25 வருடங்களாக இருந்து வருகின்றது. இதனால் பல சாதனைகள் அடையப் பெற்றிருக்கின்றன. ஆனால் இதில் நாம் பல தவறுகளை விட்டிருக்கிறோம். விட்டுக் கொண்டிருக்கிறோம்.
அதனை நாம் இப்படி நோக்கலாம் இஸ்லாமிய வங்கி 4 முறைகளுக்கு மட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது, சுருக்கப்பட்டிருக்கிறது. இது விரிவாக்கப்பட வேண்டும். இங்கு எந்த இஸ்லாமிய வங்கி அலகை நோக்கினாலும் அங்கு முழாரபா. இஜாரா முராபஹா முஷாரகா காணப்பகிறது. இந்த நான்கையும்தவிர வேறு எதனையும் இங்கு நாம் காண முடியாது. மைக்ரோ பைனான்ஸ் எனும் நுண்கடன் திட்டம் எங்கே போனது? மைக்ரோ தகாபுல் எங்கே போனது? ஏழைகளுக்கு, வங்கிக்குப் போக முடியாதவர்களுக்கு இஸ்லாமிய வங்கியினூடாக என்ன செய்யலாம்? நுண் கடன் குறித்து அவசியம் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். மாநாடுகள் நடத்தப்பட வேண்டும். இஸ்லாமிய நுண்கடன் திட்டத்தை எப்படி இந்த நாட்டிலே அறி முகப்படுத்தலாம் என்று சிந்திக்க வேண்டும்.
பங்கலாதேஷைச் சார்ந்த கலாநிதி யூனுஸ் அவர்கள் பாரம்பரிய வங்கி முறையில் நுண்கடனை அறிமுகப்பத்தியதற்காக நோபல் பரிசு பெற்றார். நாம் இதனை இலங்கைக்கு அறிமுகப்பத்த வேண்டும். எமது வங்கிகளிடம் நான் இதனை எப்போதும் வலியுறுத்தி வருகிறேன். ஏழைகளுக்கு எப்படி உதவலாம் என்று நாங்கள் சிந்திக்க வேண்டும். ஏழைகளையும் கரை சேர்க்கத்தான் இந்த வங்கி இருக்கின்றது என்ற உணர்விலே இஸ்லாமிய நிதி நிறுவனங்கள் செயற்பட வேண்டும். அப்படி இருக்கின்றதா என்ற கேள்வியை நாம் கேட்டுக் கொள்ள வேண்டும்.
எனவே எமது நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் சுருக்கப் பட்டிருக்கின்றன. பணக்காரர்களுக்கு மட்டுமான ஒன்றாகவே இஸ்லாமிய வங்கித்துறை இந்த நாட்டிலே இன்று உருவெடுத்து வருகின்றது. இதனை யாரும் மறுக்கவோ நிராகரிக்கவோ முடியாது. ஹராமான முறையிலிருந்து ஹலாலுக்கு வந்திருக்கிருக்கிறோம் என்று திருப்திப்பட முடியும். ஆனால் இதனால் முஸ்லிம்களுக்கு, ஏனையவர்களுக்கு ஏழைகளுக்கு ஏதும் இலாபம் கிடைத்ததா என்று கேட்டால் இல்லை என்பதுதான் பதிலாகக் கிடைக்கும். இது இஸ்லாமிய வங்கித்துறையில் உள்ள முதலா வது சவாலாகும்.
இரண்டாவது சவால் என்ன வென்றால் இஸ்லாமிய வங்கித் துறையானது ஒரு குழப்பமாக மாறியிருக்கின்றது. இதைப்பற்றி வங்கியில் பணிபுரிகின்ற நிறையப் பேர் அறியாதவர்களாக இருக்கிறார்கள். நேற்று பாரம்பரிய வங்கி ஒன்றில் நிறைவேற்று அதிகாரியாக பணிபுரிந்தவர் இன்று காலையில் இஸ்லாமிய வங்கி ஒன்றில் நிறைவேற்று அதிகாரியாக மாறுகிறார். எப்படி மாறலாம்.?
இஸ்லாமியப் பொருளாதாரக் கோட்பாடு வஹியின் பின்புலத்திலிருந்து தோன்றுகின்றது. இதற்கு ஒரு ஆன்மீகம் இருக்கிறது. இது அல்லாஹ்வின் கட்டளை ஒன்றை நிறைவேற்றும் நோக்கிலே செய்யப்பட வேண்டிய ஒன்று. எனவே இது குறித்த அறிவு முக்கியமானதாகும்.
மூன்றாவது சவால் வங்கிக்கு வெளியே இருக்கின்றவர்களும் இதைப் பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள். இதைச் சொல்வதற்கு என்னை மன்னிக்க வேண்டும். இஸ்லாமியப் பொருளாதாரம் குறித்து உலமாக்களிடம் கேட்கின்ற போது கூட இதைப் பற்றி அவரிடம் கேளுங்கள். இவரிடம் கேளுங்கள் எனச் சொல்கிறார்கள்.
எனவே நாம் அனைவரையும் அறிவூட்டவேண்டிய தேவை இருக்கிறது. ஹலால் பிரச்சினையில் என்ன நடந்தது? நாங்கள் அறிவூட்டவில்லை. பிரச்சினை வந்த பிறகு அறிவூட்டிப் பயனில்லை. ஹலால் தொடர்பாக பிரச்சினை வந்த பிறகு செய்த மாநாடுகளையும், பத்திரிகை அறிக்கைகளையும் நாம் என்றோ செய்திருக்க வேண்டும். வங்கித் துறையும் இது குறித்து முஸ்லிம்களையும் பெரும்பான்மையினரையும் அறிவூட்ட தமது வருடாந்த நிதி ஒதுக்கீட்டிலே ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இந்த நாட்டின் தலைவர்களிடத்திலே சொல்ல வேண்டும். வட்டிக்கு எதிராக குரல் கொடுக்க வாருங்கள் என அழைக்க வேண்டும். வட்டி செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்ட 600 பேருடைய பைல்கள் எமது வங்கியிலே இருக்கின்றன என ஒரு வங்கியின் உரிமையாளரான கிறிஸ்தவர் ஒருவரை நாம் சந்தித்த பொழுது கவலையோடு சொன்னார்.
நாங்கள் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. எதனையோ செய்து கொண்டிருக்கிறோம். இஸ்லாமிய வங்கி என்ற எண்ணக்கருவை நாம் சரியாக மக்கள் மனதில் விதைக்க வேண்டும். இன்று அது கொச்சையாகப் பேசப்படுகிறது.
நான்காவது சவால்தான் இத்துறை வர்த்தகம் செய்பவர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. விவசாயத்துறையினருக்கு இங்கு எதுவும் இல்லை. ஆனால் இஸ்லாமிய வங்கிமுறை சூடானிலிருந்துதான் உலகுக்கு அறிமுகமானது. முஸாரஆ, முஹாபரா, முஸாகாத் போன்றவற்றை வைத்துத்தான் அது உருவானது. ஆனால் எங்கள் வங்கிகள் எங்கு பணம் அதிகம் இருக்கிறதோ அங்குதான் தமது கிளைகளை நிறுவுகின்றன.
எனவே இஸ்லாமியப் பொருளாதாரம், வங்கித்துறை குறித்து ஒவ்வொருவரும் அறிவை பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு ஒரு ஆரம்ப எட்டாக இந்த நூல் அமையும் என்று எதிர்பார்க்கிறேன். இது போன்ற புத்தகங்கள் சிங்கள மொழியில் வெளிவருவதும் கட்டாயமானது என்ற கருத்தோடு எனது உரையை நிறைவு செய்கிறேன்.
-Meelparvai-

Sunday, November 11, 2012

SEX: நல்ல உறவு வச்சிக்கிட்​டா HEART சிறப்பாக இயக்குமாம்

ஏக இறைவனின் திருப்பெயரால்...
 
அனுமதிக்கப்பட்ட (கணன்-மனைவி) (உடல்)உறவு உடலுக்கு புத்துணர்வை ஏற்படுத்தி ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கிறது என்று நிபணர்கள் கூறுகின்றனர்.
உடலின் ரத்த ஒட்டம் சீராகிறதாம். இதயம் தொடர்பான நோய்கள் குணமடைவதோடு உற்சாகம் அதிகரிக்கும் என்கின்றனர்
ரத்த ஓட்டம் சீராகும்
செக்ஸ் உறவின் உச்சக்கட்டத்தில் உணர்வுகளினால் உடலில் ரத்த ஓட்டம் சீராகப் பாய்கிறதாம். பிறப்பு உறுப்புகளில் மட்டுமல்லாது சருமத்தின் அனைத்து பகுதிகளிலும் ரத்த ஓட்டம் சீராவதோடு ஆரோக்கியான சருமத்தை ஏற்படுத்துகிறது என்கின்றார் ஜெனிபர் பெர்மன் என்ற பாலியல் நிபுணர்.
இதயநோய்கள் குணமடையும்
உச்சக்கட்ட உணர்வில் இதயத்துடிப்பு அதிகரிக்கும். உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ரத்த ஓட்டம் வேகமாக பாயும். அப்பொழுது சுரக்கும் ஹார்மோன் இதயம் தொடர்பான நோய்களை போக்கும் என்கிறார் பெர்மன். உடற்பயிற்சியின் மூலம் ஏற்படும் நன்மைகளை விட ஆர்கஸம் மூலம் இதயத்திற்கு பல நன்மைகள் ஏற்படுகிறது என்கிறார் இந்த பாலியல் நிபுணர்.
உற்சாகம் அதிகரிக்கும்
ஆர்கஸத்தின் போது எண்டோர்பின், டோபமைன், ஆக்ஸிடோசின் போன்ற ஹார்மோன்கள் உடலில் சுரக்கின்றன. இது உடலையும், மனதையும் உற்சாகப்படுத்தும்.
சீரான உறக்கம்
உடலும் உள்ளமும் அமைதியடைந்து உறக்கம் எளிதாக வரும் என்கின்றனர் நிபுணர்கள். தூக்ககுறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்த 1,800 பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உறவில் ஈடுபட்ட பின் நிம்மதியாகஉறங்க முடிந்ததாக தெரிவித்துள்ளனர்.
புத்திக்கூர்மை அதிகமாகும்
தாம்பத்ய உறவில் ஈடுபடும் பெண்களை விட உறவில் ஈடுபடாத பெண்களில் புத்திக்கூர்மையில் சில சிக்கல்கள் இருந்ததாக இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர் Logan Levkoff, Ph.D தெரிவித்துள்ளார். ஆர்கஸம் பெண்களின் தன்னம்பிக்கையை அதிகப்பதோடு, அவர்களின் முடிவெடுக்கும் திறன், புத்திக்கூர்மை போன்றவைகளை அதிகரிக்கிறது என்கின்றார் இந்த பாலியல் நிபுணர்.
மூளையின் ஆரோக்கியம்
ஆர்கஸம் மூலம் ரத்த ஓட்டம் விரைவாக பாய்வதால் மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது. எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்த போது இது நிரூபிக்கப்பட்டது. ஆர்கஸத்திற்குப்பின்னர் மூளை சுறுசுறுப்பாக செயல்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இயற்கை வலி நிவாரணி
உடல்வலியோ மன வலியோ இரண்டையும் போக்கும் இயற்கை வலி நிவாரணி செக்ஸ். ஆர்கஸம் மூலம் ரத்த ஓட்டம் வேகமாக பாயும் பொழுது உடலில் ஆங்காங்கே ரத்தம் தேங்கியிருந்தாலும் அவற்றை உடைத்துக் கொண்டு நன்மை செய்கிறதாம். சோர்வு, மன அழுத்தம் போன்றவைகள்ஏற்பட்டிருந்தாலும், தலைவலி இருந்தாலும் அவற்றை போக்கும் அருமருந்தாக செயல்படுகிறது ஆர்கஸத்தின் போது சுரக்கும் ஹார்மோன்கள் என்கிறார் பெர்மன்.



கள்ள உறவு வச்சிக்கிட்டா ஹார்ட் அட்டாக் வருமாம்!
அனுமதிக்கப்படாத (கணவன்-மனைவி அல்லாத) (கள்ள)உறவு உடலுக்கு பெரும் கேடு விளைவித்து இதயத்துடிப்பை நிருத்தி அகால மரணத்திற்கு இட்டுச் செல்வதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆபத்தானது
துணைக்குத் தெரியாமல் கள்ளத்தனமான உறவில் ஈடுபடுபவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. கள்ள உறவானது முதலில் சுவாரஸ்யமாகஇருந்தாலும் நாளடைவில் அதுவே உயிருக்கு ஆபத்தானதாகிவிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
கொலைகளுக்குக் காரணமாகிறது.
இன்றைக்கு ஊடகங்களில் சிறப்பு செய்திகளாக இடம்பெறுபவை கள்ளக்காதல் செய்திகள்தான். இதனால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. கணவன் மனைவியை கொல்வது, மனைவி கணவனை கொல்வது, குழந்தைகளை கொல்வது என பெரும்பாலான கள்ளத் தொடர்புகள் மரணத்தில்தான் முடிகின்றன. இந்த கள்ளத் தொடர்புகளைப் பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர்கள் தற்போது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது கள்ளத் தொடர்பில் ஈடுபடுபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் என்பதுதான் அது.
இது தொடர்பாக இத்தாலியில் உள்ள பிளாரன்ஸ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
மனைவி யை தவிர்த்து மற்றவர்களுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்பவர்களுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படுகிறது என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் கள்ளதொடர்பு வைத்திருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
3 மடங்கு மரணங்கள்
மனைவி க்கு தெரியாமல் கள்ளதொடர்பு வைத்திருப்பவர்களுக்கு மனரீதியாக குற்ற உணர்ச்சி ஏற்படும். இதனால் அவர்கள் எப்போதும் பதட்டத்துடன் காணப்படுவர். மேலும் செக்ஸ் உறவில் ஈடுபடும் போது ஏற்படும் அதிக பதட்டமும், ஆர்வமும் காரணமாக 3 மடங்கு அவர்களுக்கு மாரடைப்பை ஏற்படுத்துகிறது என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் குடித்து விட்டு உறவில் ஈடுபடுபவர்களை அதிக அளவில் மாரடைப்பு தாக்கும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
கள்ளக் காதல் செய்பவர்கள் எதற்கும் கொஞ்சம் யோசித்துக் கொள்வது நல்லது என்கின்றனர்ஆய்வாளர்கள்.



இறைவன் இருக்கிறான் அவனே இப்பிரபஞ்சத்தை படைத்து அவனே இயக்குகிறான் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்களை நாம் வாழும் காலங்களிலேயேக் கண்டு வருகிறோம்.
அதற்கு இதுவும் ஒரு உதராணமாகத் திகழ்கிறது ஒரே மாதிரியான உறவு தான் ஒன்று ஆரோக்கியத்தை ஏற்படுத்துகிறது மற்றொன்று ஆரோக்கியத்தை அழித்து விபரீதத்தை ஏற்படுத்துகிறது.
இதனால் உலகம் முழுவதும் பரவிய எய்ட்ஸ் கிருமிகளை அழிக்க முடியாமல் மனித சமுதாயம் திணறுவதிலிருந்து இறைவனை மறுப்பவர்களும், மறப்பவர்களும் புரிந்து கொள்வார்கள்.
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள்இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:1)
உங்களில் யார் பராமரிப்புச் செலவுக்குச் சக்தி பெற்றுள்ளாரோ அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் திருமணம் என்பது (பிறன்மனை நோக்குவதை விட்டும்) பார்வையைத் தடுக்கக் கூடியதாகவும் கற்பைக் காக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊது (ரலி) நூல்: புகாரி 1905, 5065, 5066
தகாத நடத்தையிலிருந்து ஒவ்வொருவரும் தன்னைக் காத்துக் கொள்வது திருமணமும் அதன் மூலம் ஏற்படும் நல்ல உறவும், ஆரோக்கியமும் நோக்கமாகும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.


-சமூக சேவகன்.
Note:
Islam prohibited Prostitution all the way,
Islam give Heavy punishment(Throw stone until Die) for both Male & Female who involve wrong sex(without Marriage). After death life, Punishment is Hell Fire.
Islam ordered women dress should be covered body & head fully. If women correctly covered her body & head, 95% sex problem solved.
Islam prohibitted co-education system.
You can cheat your wife or parents, but you can't cheat God, God is always with you, 24hrs watching you.
Always you've double tention, one is God is known about ur wrong sex, another one is wife/parents known about that.....so two tentions kill ur heart.....

Saturday, November 3, 2012

கண்டுபிடிக்கப்பட்ட ஏடு...(வரு முன் உரைத்த இஸ்லாம்)

PJ
'அந்தக் குகை மற்றும் அந்த ஏட்டுக்குரியோர் நமது சான்றுகளில் ஆச்சரியமானோர்' என்று நீர் நினைக்கிறீரா? சில இளைஞர்கள் குகையில் ஒதுங்கிய போது 'எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக!' என்றனர். எனவே அக்குகையில் பல வருடங்கள் அவர்களை உறங்கச் செய்தோம். திருக்குர்ஆன் 18:9,10,11
 
இந்த வசனத்தில் குகையில் தங்கியவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது குகைவாசிகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும். அத்துடன் ஏட்டுக்குரியவர்கள் (சுவடிக்கு உரியவர்கள்) என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

அப்படியானால் ஒரு சுவடி இவர்கள் வரலாற்றோடு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
 
ஏதோ ஓர் ஏட்டை அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதற்காக மட்டும் இவ்வாறு நிச்சயமாகக் கூறப்பட்டிருக்காது. 'அந்த ஏடு' என்று குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அது ஒரு முக்கியமான ஏடாக இருக்க வேண்டும்.
 
அந்த ஏடு ஒரு காலத்தில் கண்டெடுக்கப்பட்டு மக்களுக்கு அதில் உள்ள உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகவே 'அந்த ஏட்டுக்குரியவர்கள்' என்று அல்லாஹ் கூறியிருக்க முடியும். அந்த ஏடு யாருக்குமே கிடைக்காது என்றால் 'அந்த ஏடு' என்று முக்கியத்துவப்படுத்தி இறைவன் கூறியிருக்க முடியாது.
 
அது என்ன சுவடி? அது என்ன ஏடு? என்பதெல்லாம் பல வருடங்களாக உலகத்திற்குத் தெரியவில்லை. ஆனால் சமீப காலங்களில் அந்த ஏடுகளில் இருந்த செய்திகள் இப்போது அம்பலமாகியுள்ளன.
 
'சாவுக்கடல் சாசனச் சுருள்கள்' என்ற தலைப்பில் 1998 ஆம் ஆண்டு ஒரு மாதத்தில் பல தடவை பி.பி.சி.யில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு நிகழ்ச்சி ஒளி பரப்பப்பட்டது. அதில் சொல்லப்பட்ட செய்திகள் கேட்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தது.
 
இந்த நிகழ்ச்சியின் முதல் ஒளிபரப்பு 1993 ஆம் ஆண்டிலேயே காட்டப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. அதன் விபரங்கள்:
 
1947-ம் ஆண்டு ஒரு நாள் ஆடு மேய்க்கும் ஓர் அரபுச் சிறுவன், காணாமல் போன தனது ஆட்டுக் குட்டி ஒன்றைத் தேடி சாவுக்கடலை ஒட்டிய ஜோர்டான் நாட்டு மலைப் பகுதிகளில் தேடி அலைந்தான். அந்த மலைப்பகுதி கும்ரான்' மலைப்பகுதி என்று அழைக்கப்படுகிறது.
 
ஆட்டுக் குட்டியைத் தேடிய சிறுவன் அங்கிருந்த குகைக்குள் பார்த்த போது, மண் பாண்டங்களில் சுருட்டி நிரப்பி வைக்கப்பட்ட தோல் ஆவணங்களைக் கண்டிருக்கின்றான். அவைகளில் சிலவற்றை எடுத்து வந்து செருப்புத் தொழிலாளியான தன் தந்தையிடம் கொடுக்க, மறுநாள் தந்தையும், மகனும் சேர்ந்து குகைக்குள் இருந்த அனைத்துச் சுருள்களையும் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.
 
அந்தப் பழைய தோல்களைத் தமது செருப்புத் தொழிலுக்குப் பயன்படுத்த எண்ணிய அந்தச் சிறுவனின் தந்தை தோல்களில் ஹிப்ரு மொழியில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகளின் பொருள் புரியாமல், அதை அப்பொழுது ஜோர்டான் மன்னரின் ஆட்சியிலிருந்த கிழக்கு ஜெருஸலத்தைச் சேர்ந்த ஒரு பழைய புத்தகக் கடைக்காரரிடம் காண்பித்திருக்கிறார்.

ஓரளவு ஹிப்ரு மொழியறிந்த அந்தக் கடைக்காரர் அந்தச் சுருள்கள் பழங்காலச் செய்திகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதி, ஒரு சில தீனார்களுக்கு அத்தனை சுருள்களையும் அந்த செருப்புத் தொழிலாளியிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொண்டார்.
 
கிறித்தவரான அந்தப் புத்தகக் கடைக்காரர் அந்தச் சுருள்களை அந்நகரில் இருந்த கிறித்தவ ஆலயத்தில் ஒப்படைத்து விட்டார்.
 
இந்தச் சந்தர்ப்பத்தில் சுருள்கள் கண்டெடுக்கப்பட்ட விஷயம் வெளிப்பட்டது. அதில் உள்ள செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு யூதர்களும், முஸ்லிம்களும் ஆர்வம் காட்டினர்.
 
அப்போது ஜோர்டானை ஆட்சி செய்த மன்னர் ஹுசைன், 'அந்தச் சாசனச் சுருள்கள் முஸ்லிம், யூத, கிறித்தவர்கள் அடங்கிய ஒரு குழுவிடம் பொதுவாக ஒப்படைக்கப்பட்டு அவை ஆராயப்பட வேண்டும்' என்று விண்ணப்பித்தார்.
 
ஆனால் கிறித்தவப் பாதிரியார்கள், 'அது தனியார் சொத்து' என்று வாதிட்டு அதைப் பொதுவில் வைக்க மறுத்து விட்டனர். கிறித்தவர்களில் பல அறிஞர்களுக்கும் கூட அவற்றைப் படிப்பதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை.
 
இடைப்பட்ட ஐந்தாண்டு காலங்களில் ஜெருஸலத்தில் இருந்த பாதிரிமார்கள் சில குழுக்களை ஏற்படுத்தி கும்ரான்' மலைப் பகுதிகளில் இருந்த பொதுங்குகளில் தேடியலைந்து அங்கிருந்த சாசனச் சுருள்கள் அனைத்தையும் தங்கள் கைவசம் கொண்டு வந்து விட்டனர்.
 
1952-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்துச் சுருள்களும் கிறித்தவப் பாதிரிமார்கள் கையில் போய்ச் சேர்ந்து விட்டன. பதினைந்தாயிரம் ஙஹய்ன்ள்ஸ்ரீழ்ண்ல்ற்ள் (கையெழுத்துப் பிரதிகள்) இவ்வகையில் இருப்பதாகத் தற்பொழுது கணக்கிட்டுள்ளனர்.
 
கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேல் அந்தச் சாசனச் சுருள்களில் அடங்கிய செய்திகளைக் குறிப்பிட்ட கிறித்தவப் பாதிரிகள் அடங்கிய குழு இருட்டடிப்புச் செய்து வந்தது.
 
பல கிறித்தவ அறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும் அதைப் படிப்பதற்கு ஆர்வம் கொண்டு கேட்டபோதெல்லாம், அவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.

சாசனச் சுருள்களைக் கைவசம் கொண்ட குழுவில் ஒருவர் இறக்க நேரிட்டால் அவருக்குப் பதில் அக்குழுவில் உள்ள மற்றவர்களால் வேறொரு பாதிரியார் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு மட்டுமே அதைப் படிப்பதற்கு உரிமை வழங்கப்பட்டு வந்தது.
 
இவ்விதமாகவே இவ்வளவு காலமும் அந்தச் சாசனச் சுருள்களின் செய்திகள் ரகசியமாக வைக்கப்பட்டு வந்தன. இந்த இரகசியக் காப்பில் போப்பாண்டவரின் வாட்டிகன் சபை முன்னணியில் இருந்தது.
 
தோல் பதிந்த அந்தப் பழங்காலச் சாசனம் அழிந்து விடும் நிலையைக் கண்ட அதன் ரகசியக் காப்பாளர்கள் அச்சாசனங்களை ஙண்ஸ்ரீழ்ர்ச்ண்ப்ம் (நுண்ணிய படச்சுருள்) எடுத்தார்கள்.
 
அதன் ஒரு செட் போட்டோ காப்பிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருக்கும் ஒரு நூலகத்துக்கு பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
 
1990-ம் ஆண்டு அந்த நூலகத்துக்குத் தலைவராக ஐஸ்மேன் என்ற அறிஞர் நியமிக்கப்பட்டார். அவர் முன்பே அந்த சாசனச் சுருள்களைப் படிப்பதற்கு ஆர்வம் காட்டி, அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டவர்.
 
இப்போது தனது அதிகாரத்தில் உள்ள நூலகத்தில் இருந்து சாசனச் சுருள்களின் நுண்ணிய போட்டோக்களைப் பெரிய அளவில் போட்டோ எடுக்கச் செய்து அவற்றைப் படித்தார்.

அவற்றைப் படித்த போது தமக்கு வியப்பு ஏற்பட்டதாக வாக்குமூலம் அளிக்கின்றார். இத்தனை காலமும் கிறித்தவ சபை அந்த சாசனச் சுருள்களை மற்றவர்களுக்குக் காட்டாமல் இருந்ததன் உள் நோக்கம் என்ன என்பதையும் புரிந்து கொண்டதாகக் கூறுகின்றார்.
 
மைக்கேல் வைஸ் என்னும் சிகாகோ பல்கலைக் கழக ஹிப்ரு மொழிப் பேராசிரியர் ஒருவரின் உதவியைக் கொண்டு அந்தச் சாசனச் சுருள்களில் முக்கியமானது என்று அவர் கருதிய 100 ஙஹய்ன்ள்ஸ்ரீழ்ண்ல்ற்ள் (கையெழுத்துப் பிரதி)களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார்.
 
அந்தப் புத்தக வெளியீடு கிறித்தவ உலகத்தை உலுக்கியது என்றும், குறிப்பாக கிறித்தவ மத ஆலயங்கள் பேரதிர்ச்சியில் உறைந்து போயின என்றும் அந்த டாக்குமென்டரியின் செய்தியாளர் கூறுகின்றார்.
 
மேற்கத்திய மக்களின் மத நம்பிக்கையைத் தகர்ப்பதாக அந்தப் புத்தக வெளியீடு இருந்தது என்றும், ஆகவே அந்த இரு அறிஞர்களும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற அச்சம் இருந்தது என்றும் அதன் செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
 
அப்படி எது நடந்தாலும் அதைத் தாங்கள் எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாகவும், இதற்கு அஞ்சி ஒரு மிகப் பெரும் பேருண்மையை உலகத்திலிருந்து தாங்கள் மறைக்க விரும்பவில்லை என்றும், அவ்விரு அறிஞர்களும் வெளிப்படையாகக் கூறுவதையும் அந்தத் தொலைக்காட்சி டாக்குமெண்டரி பதிவு செய்து காட்டுகின்றது.
 
கிறித்தவ மத ஆலயங்களில் இப்போது ஏசுவின் பெயரால் செய்யப்படும் மதச் சடங்குகளும், வழிபாடுகளும் ஆரம்ப கிறித்தவர்களிடையே நடைபெறவில்லை என்பதையே சாசனச் சுருள்கள் நிரூபிக்கின்றன.
 
இந்தச் சடங்குகளுக்கும், ஏசுவின் பிரச்சாரத்திற்கும், கொள்கைக் கோட்பாடுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவை அனைத்தும் 'பவுல்' என்பவரால் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை.
 
மொத்தத்தில் இப்போது ஏசுவின் பெயரால் சொல்லப்படும் அனைத்துக் கிறித்தவக் கொள்கைகளும் பொய்யானவை. அவற்றை ஏசுவிற்கு அடுத்த தலை முறையில் வாழ்ந்த உண்மையாளர்களின் வாழ்வில் காண முடியவில்லை.
 
மேற்கண்டவாறு அறிஞர் ஐஸ்மேன் கூறி வரும் போது, ஒரு யூதரிடம் அவற்றைப் பற்றி வாதம் செய்யும் போது, ஒற் ஸ்ரீர்ய்ச்ண்ழ்ம்ள் ணன்ழ்ஹய்' அது குர்ஆனை உறுதிப்படுத்துகிறது என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார். அவ்விடத்தில் அந்த வாதம் நிறுத்தப்பட்டு மறு காட்சி காட்டப்படுகின்றது.

இதே முறையில் மைக்கேல் வைஸ் என்ற அறிஞர் பேசும் போது, ஒற் ஸ்ரீர்ய்ச்ண்ழ்ம்ள் ஒள்ப்ஹம்' அது இஸ்லாத்தை உறுதிப்படுத்துகின்றது என்று கூறுகின்றார். இங்கும் காட்சி மாற்றப்படுகின்றது.
 
ஆகவே இந்தச் சாசனச் சுருள்கள் எப்படி குர்ஆனையும், இஸ்லாத்தையும் உண்மைப்படுத்துகின்றன என்று அவர்கள் கூறுகின்றார்கள் என்பதைப் பார்வையாளர்கள் அறிய முடியவில்லை.
 
அந்தச் செய்தியிலிருந்து நாம் ஆச்சரியமான ஓர் உண்மையைத் தெரிந்து கொள்கிறோம்.
 
ஈஸா (அலை) அவர்களுக்கு இறைவன் இஞ்ஜீல் எனும் வேதத்தை வழங்கியதாகத் திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது. ஆனால் கிறித்தவ சமுதாயத்திடம் அந்த வேதம் நிச்சயமாக இல்லை எனலாம்.
 
ஏனெனில் பைபிளின் புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்குக் கடவுள் வழங்கியதன்று. மாறாக ஏசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதிய குறிப்புகள் தான் புதிய ஏற்பாடு.
 
பைபிளின் பல இடங்களில் 'ராஜ்ஜியத்தின் சுவிஷேசத்தை இயேசு பிரசங்கித்தார்' என்று கூறப்பட்டுள்ளது. எந்த இறை வேதத்தை மறைத்தார்களோ அதைத் தான் இயேசுவின் வழி வந்த நல்ல மனிதர்கள் தங்களுடன் எடுத்துச் சென்று குகையில் தங்கினார்கள் என்று முடிவு செய்யப் போதுமான காரணம் இருக்கிறது.

'குர்ஆனை ஒத்திருக்கின்றது' என்பது தான் அந்தச் சுருள்களைப் படித்த கிறித்தவ அறிஞர்களின் கருத்தாகும்.
 
இஞ்ஜீல் எனும் வேதத்தைத் திருக்குர்ஆன் மெய்ப்பிப்பதாக திருக்குர்ஆனும் பல இடங்களில் குறிப்பிடுகின்றது.
 
அதை வாசித்த பாதிரியார்கள் திட்டமிட்டு மறைத்ததும் இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகின்றது.
 
மனிதர்களால் எழுதப்பட்ட ஏட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்து இறைவன் கூறியிருக்க மாட்டான் என்பதும் இக்கருத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றது.