Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Thursday, November 15, 2012

வெந்தயத்தில் மருத்துவம்.

அல்லாஹ்வின் திருப்பெயரால்...



வெந்தயத்தில் மருத்துவம்.
 
உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
 
எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும், வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம்.
 
இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவுசுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.
காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.
 
வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.
 
தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.
 
வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.
 
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.
வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு் குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம்பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்
.
மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால், வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிடமூட்டு வலி குறையும்.
எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும், வெந்தயப் பொடியையும், பெருங்காயப் பொடியையும் சேர்க்க, சுவை கூடுவதுடன், உடல் உபாதைகளையும் போக்கும்
.
இட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில், வெந்தயம் சேர்த்து அரைத்து சிறிது நேரம் ஊறிய பின் தோசையாக ஊற்றி சாப்பிட்டால், சுவை கூடுவதுடன் உடலுக்கும் ஏற்றதாக அமையும்.
மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.
 
வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்
.

1.
இலைகளை தணலில் வதக்கி இளஞ்சூட்டுல பத்துப் போட வீக்கம் தீப்புண் குணமாகும்
.

2.
வெந்தயத்த நல்லா காயவச்சுப் பொடியாக்கி காலை மாலை ஒரு தேக்கரண்டி தொடர்ந்து சாப்பிட்டு வர மதுமேகம்(சர்க்கரை நோய்) குறையும்
.

3.
வெந்தயம் 20 கிராம் எடுத்து 350 கிராம் பச்சரிசியுடன் சேர்த்து சமைச்சு சாப்பிட இரத்தம் ஊறும்
.

4.
கஞ்சியில் வெந்தயத்த சேர்த்துக் காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்
.

5.
வெந்தயத்த ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊறவச்சு நல்லா அரைச்சு தலைக்கு தேச்சு குளிக்கமுடி உதிராம நல்லா வளரும்
.

6. 5
கிராம் வெந்தயத்த நல்லா வேகவச்சுக் கடஞ்சு கொஞ்சம் தேன் சேர்த்துச் சாப்பிட தாய்ப்பால் பெருகும்
.

7.
வெந்தயம், கோதுமை ரெண்டும் சேர்த்து வறுத்து கஞ்சியாக்கி சாப்பிட உடல் வெப்பம் நீங்கும்
.

8.
வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் சமமா எடுத்து நெய் விட்டு வறுத்துப் பொடியாக்கி சாப்பிட்டில் கலந்து சாப்பிட வயிற்றுவலி, பொருமல், ஈரல வீக்கம் குறையும்
.

9.
வெந்தயம், வாதுமைப் பருப்பு, கசகசா, உடைத்த கோதுமை, நெய், பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட உடல் வன்மையாவும், வலுவாவும் இருக்கும். இடுப்பு வலி தீரும்
.

10.
வெந்தயத்த சீமை அத்திப்பழம் சேர்த்து அரைச்சு கட்டிகளுக்குப் பத்துபோட்டா கட்டி உடையும். படைகளுக்கும் பூசலாம்
.

11.
வெந்தயத்தையும் அரைச்சுத் தீப்புண்கள் மேலபூச எரிச்சல் குறையும்
.
பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பும் உப்பும் சேர்த்தரைத்து மோரில் கரைத்துக் கொடுக்க வயிற்றுப் போக்கு தீரும்
.
ஐந்து கிராம் வெந்தயத்தை நன்கு வேகவைத்துக் கடைந்து சிறிது தேன் கலந்து கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும்
.

வெந்தியத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சலி தணிந்து ஆறும்
.
வெந்தியப்பொடியை ஒரு தேக்கரண்டியாக்க் காலை மாலை நீடித்துச் சாப்பிட்டு வர மதுமேகம் குணமாகும்
.
வெந்தயத்துடன் சமன் சீமையத்திப் பழத்தைச் சேர்த்து அரைத்து நீரில் குழைத்துத் தணலில் களி போல் கிளறி கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும்
.
இரவு சிறிது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊரவைத்து, அதிகாலை வெரும் வயிற்றில் தண்ணீர் மட்டும் குடிக்க நீர்ழிவு நோய் சிறிது சிறிதாக வீரியம் குறையும்
.
தொடர்ந்து வெந்தயத்தைச் சாப்பிட்டால் சுலபத்தில் கருதரிக்காது
.முடி உதிர்வதைத் தடுக்க வெந்தயத்தை சீயக்காயோடுசெர்த்து அரைத்து சிறிது ஊர வைத்துத் தலை முழுகினால் பலன் கிட்டும்.
முகத்தில் பரு வந்தால் வெந்தயத்தை நன்கு அரைத்து முகத்தில் அப்பினால் எரிச்சல் குறையும் பருவும் குணமடையும்
.
வெந்தயக்கீரை
.
வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும்.
வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர் அறவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்
.
வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தாலகு உடல்சூடு தணிந்து சமப்படும். சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும்
.
வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒரு சட்டியுல் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து இதில் கொட்டி, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும். இந்த சமயம் அதே அளவு நெய்யையும் விட்டுச்சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்து, ஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்
.
வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிரு செர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது வாய்ங்குவேக்காடு வராது
.
வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும்
.வெந்தயக்கீரையில் வைட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும்,, பசியைப்போக்கவும் பயன்படுகிறது.
 
செக்ஸ் வாழ்க்கை முழு மகிழ்ச்சியுடன் இருக்க
பிரிஸ்பன் : வெந்தயம் , ஆண் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது . வத்தக்குழம்பில் ஆரம்பித்து ஊறுகாய் , மிளகாய் பொடி , மசாலா பொடி என பல வகையான இந்திய உணவுகளிலும் பயன்படுவது வெந்தயம் . சித்த மருத்துவத்தில் பல்வேறு வகையான நோய்களுக்கும் இது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது . உடல் சூடு , வயிற்று புண் , வாய்ப்புண் ஆகியவற்றை வெந்தயம் கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது . சர்க்கரை நோய் பாதிப்பை குறைக்கும் மருந்தாக வெந்தய பவுடர் பயன்படுத்தப்படுகிறது .
வெந்தயத்தின் மருத்துவ குணங்கள் , ஆண் ஹார்மோன் உற்பத்தியில் வெந்தயத்தின் பங்கு தொடர்பாக ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் உள்ள மருத்துவ ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது . நல்ல உடல்நலத்துடன் இருக்கும் 25&52 வயதினர் 60 பேர் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர் . தினமும் 2 வேளை என ஒன்றரை மாதத்துக்கு அவர்களுக்கு வெந்தய சாறு கொடுக்கப்பட்டது . அவர்களது ஹார்மோன் அளவு , செக்ஸ் ஆர்வத்தில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன . இன்னொரு குரூப்புக்கு டம்மி சாறு கொடுக்கப்பட்டது
.
வெந்தய சாறு கொடுத்தவர்களின் ஹார்மோன் அளவு 28 சதவீதம் உயர்ந்துள்ளது . வெந்தயத்தில் உள்ள சபோனின் பொருள் , ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கிறது . உணவில் போதுமான அளவு வெந்தயம் சேர்த்துக் கொண்டால் செக்ஸ் வாழ்க்கை முழு மகிழ்ச்சியுடன் இருக்கும் என்கிறது ஆய்வு

Saturday, January 14, 2012

What is Black Seed Oil?

Black seed oil is an oil derived by pressing the seeds of the Nigella Sativa plant. The seeds are also commonly referred to as black cumin. The nutrient-rich oil of black seed has been used for hundreds of years in the Middle East and South Asia as a natural remedy for a variety of ailments.
What are the Benefits of Black Seed Oil?
Studies have shown that black seed oil is an effective anti-oxidant, anti-bacterial, and anti-inflammatory remedy. As a result, it is often used to fight infections and strengthen the immune system, which is suitable for treating the following conditions:
headaches
toothaches
nasal congestion
colds and flus
digestive and gastrointestinal problems
hair and skin problems
allergies
diabetesBlack seed oil has also been found to be effective at promoting menstruation and increasing milk production. For most ailments, the recommended daily dosage is one teaspoon of black seed oil per day. The oil can be mixed in warm or cold drinks, or it can be added on top of many foods right before consuming. It can also be used topically as a chest rub for respiratory problems.

Uses of Black Seed Oil
AllergiesBlack Seed Oil acts as an antihistamine which helps to reduce the common symptoms of allergies (watery eyes, sneezing). Simply take half a teaspoon of oil twice a day when allergy symptoms begin to appear.

Flu and FeverBlack Seed Oil has been found to help reduce fever, by inducing perspiration which helps the body cool and stimulate the release of toxins. Take one teaspoon of Black Seed Oil once a day when flu/fever systems occur. Also be sure to drink plenty of fluids throughout the day.
Boils and CarbunclesStudies have shown that the anti-fungal properties of Black Seed Oil and its active component Thymoquinone help strengthen the immune system and cure many common skin infections including boils and carbuncles. Simply take half a teaspoon of Black Seed Oil twice daily (you can mix it into a hot or cold beverage).

Cough and Asthma ReliefThe anti-inflammatory and anti-bacterial properties of Black Seed Oil help treat the symptoms of acute asthma and coughs by relaxing bronchial muscles. For asthma, mix a teaspoon of Black Seed Oil in boiling water and inhale the vapor twice a day. For dry coughs, mix a teaspoon of Black Seed Oil into a cup of ginger tea and drink this twice a day. For other types of coughs, massage a small amount of the oil over the center of your chest.
DiarrheaBlack seed oil is also an effective natural remedy for diarrhea.

High Blood PressureThe active ingredients in black seed oil have been found to be effective in reducing high blood pressure.

InsomniaStudies have shown that Black Seed Oil can help eliminate sleep disorders. Simply mix a teaspoon of black seed oil into a hot drink one hour before bed time for a good night's sleep.
Muscle Cramps and SpasmsBlack Seed Oil has been found to contain strong anti-spasmodic and anti-inflammatory ingredients. Therefore, it is effective at preventing or easing muscle spasms and cramps. Simply massage Black Seed Oil onto the affected area once in the morning and once before going to bed. You can alternatively add one teaspoon of Black Seed Oil in a cup of chamomile tea and drink it at night.

Nausea and Upset StomachStudies have shown that Black Seed Oil acts as a wonderful remedy for stomach ailments by stimulating digestion and inducing the expulsion of gas. For nausea and upset stomachs, mix half a teaspoon of fresh ginger juice with half a teaspoon of Black Seed Oil and take this twice a day.

ToothachesBlack seed oil's anti-bacterial and anti-inflammatory properties are great for treating toothaches.
What are the Side Effects of Black Seed Oil?
There are no known side effects of Black Seed Oil if it is taken moderately. However, it is not recommended for use during pregnancy.

Where and How to Buy Black Seed Oil
Black seed oil is available at most health food stores, as well as through online shops. The oil should appear dark yellow or amber in colour. It can also be found in seed form or as capsules. தேங்க்ஸ்: http://www.homeremediesweb.com/black-seed-oil-health-benefits.php

Saturday, November 1, 2008

வாழைப்பழம்தானே என்று எண்ணிவிடாதீர்கள்!

அல்லாஹ்வின் அற்புதப் படைப்புகள் யாவுமே மனிதர்களுக்கு மிகப் பயனுள்ளது. அதில் நாவிற்கு இனிமையும், உடலுக்கு வலிமையும், முகத்திற்கு அழகையும் தரக்கூடிய புரதச் சத்துக்கள் நிறைந்த கனிவர்க்கங்கள் மனித இனத்திற்கு இறைவனால் அருளப்பட்ட வரப்பிரசாதமே.

நம்மில் பலர் விலையுயர்ந்த கனிவர்க்கங்களைப் பார்க்கும் விதத்தில், விலைகுறைந்த கனிவர்க்கங்களைப் பார்ப்பதில்லை. ஆனால் விலை குறைந்த பழவகைகளிலும் எல்லா சத்துக்களும் நிறைந்து கிடைக்கின்றன. அவ்வகையில் இந்த உலகத்தில் எல்லா பாகங்களிலும், எல்லா நேரங்களிலும் கிடைக்கும் ஒரே கனிவகை வாழைப்பழம் மட்டும்தான். வாழைப்பழம்தானே! என்று எண்ணிவிடாதீர்கள். அவற்றை சற்று அன்போடு, ஆர்வத்தோடு பாருங்கள். அதன் வடிவமைப்பு எவ்வளவு அழகாக இருக்கிறது. வாழைப்பழங்கள் பல நூறு வகைகள் இருந்தாலும் சாதாரணமாக கிடைக்கும் வாழைப்பழத்தின் நன்மையைப் பற்றி சற்று தெரிந்துக் கொள்வோம்.
இந்த கட்டுரையை படித்த பின்பு வாழைப்பழத்தை நீங்கள் பார்க்கும் விதம் முழுவதுமாக மாறியிருக்கும். இதற்கு பின்பு வாழைப்பழத்தை வாங்கி அதை நாளைக்குச் சாப்பிடலாம் என்று உங்கள் வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் சிறை வைக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது. வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் (Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) கொண்டுள்ளது. இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட
11/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மூளை வலிமை (Brain Power): மிடில் செக்ஸ் (Middle Sex)ல் உள்ள டிவிக்கென்ஹாம் (Twickenham) கல்வி நிலையத்தில் இவ்வருடம் 200 மாணவர்களுக்கு காலை, இடைவெளி மற்றும் மதிய உணவில் வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது அவர்களது மூளைத்திறன் அதிகரித்ததோடு, பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
மலச்சிக்கல் (Constipation):
ஒரு மனிதனுக்கு மலச்சிக்கல் வந்துவிட்டால் அவனது மனித குணமே மாறிவிடும். அதற்கு ஒரே வழி உங்கள் உணவில் தினமும் வாழைப்பழத்தைச் சேர்த்து சாப்பிடுங்கள். வாழைப்பழத்தில் அதிகமான பைபர் (Fiber) இருப்பதால் உங்கள் குடலை சுத்தமாக்கி மலம் இலகுவாக வெளியாவதற்கு வழிசெய்வதோடு மனத்தளர்ச்சியை சுத்தமாக போக்கிவிடுகிறது.
மந்தம் (Hangovers):
நம்மில் சிலர் சிறிது தூங்கிவிட்டு எழும்பிவிட்டால் கூட மந்தமாக இருப்பதாக அலுத்துக் கொள்வார்கள். உங்களுக்கு இதோ வாழைப்பழ மருந்து தயாராகவுள்ளது. வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் (Milk Shake) தயார் செய்து குடிக்கவும். வாழைப்பழம் தேனுடன் சேர்த்து வயிற்றை அமைதிப்படுத்தி இரத்தத்திலுள்ள இனிப்புச் சத்தை அதிகமாக்குகிறது. அத்துடன் இதில் பாலும் சேர்ப்பதால் பால், நீர் சத்தை சரியாக வைத்துக்கொள்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து மந்த நிலைக்கு டாட்டா காட்டிவிடுகிறது.
நெஞ்செரிப்பு (Heart Burn):
உங்களுக்கு நெஞ்செரிகிறதா? வாழைப்பழத்திற்கு இயற்கையாக அமில எதிர்ப்பு சக்தி இருப்பதால் வாழைப்பழத்தை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிப்பு நோய் இன்ஷா அல்லாஹ் உங்களை விட்டு பறந்துவிடும்.
உடற்பருமன் (Over Weight):
ஆஸ்திரியா (Austria)வில் உள்ள மனோதத்துவ நிறுவனத்திலுள்ள (Institute of Psychology) ஆராய்ச்சியாளர்கள் 5000 நோயாளிகளை சோதனை செய்து பார்த்ததில் அதிகமான உயர்ந்த மனஅழுத்த வேலைகளில் உள்ளவர்கள் தான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். இந்த அழுத்தத்தின் காரணத்தால் அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு சீராக இல்லாத காரணத்தால் உடற்பருமன் ஏற்படுகிறது. அவர்களுக்கும் வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்து அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை ஒரு ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வந்து உடற்பருமன் குறைவதாக அந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
குடற்புண் (Ulcers):
வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதி மென்மையாகி அதிகமான அமிலத்தன்மை ஏற்படுத்தாததினால் குடற்புண்ணை அழிப்பதுடன் குடற்புண் வராமல் காக்கிறது.
சீரான வெப்பநிலை (Temperature Control):
வாழைப்பழத்திற்கு குளிர்ந்த பழம் (Cooling Fruit) என்ற பெயரும் உண்டு. தாய்லாந்து நாட்டு மக்கள் அதிகமாக வாழைப்பழத்தை சாப்பிடுவதால் அவர்களது உடலின் தட்பவெப்ப நிலை சீராக உள்ளது.
காலநிலை மாற்றம் (Seasonal Affective Disorder):
வாழைப்பழம் சாப்பிடுவதால் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய ஒரு வித மந்த நிலையை இல்லாமல் ஆக்குகிறது.
புகைப்பிடிப்பது (Smoking):
புகைப்பிடிப்பவர்கள் அந்த கொடுமையிலிருந்து விடிவு பெற வாழைப்பழத்தை சாப்பிடலாம். வாழைப்பழத்தில் B6. B12 அதிகமாக இருப்பதால் புகைப்பிடிப்பதால் ஏற்படும் Nicotine ஐ கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதால் புகைப்பிடிப்பதிலிருந்து விடுபடலாம்.
மன அழுத்தம் (Stress):
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் அவை இதயத்துடிப்பை கட்டுக் கோப்புக்குள் வைத்துக் கொள்வதுடன் ஆக்ஸிஜைனை மூளைக்குச் செலுத்தி உடலின் தண்ணீரின் அளவை சமப்படுத்துகிறது. இதனால் மன அழுத்த நோய் நீங்கும்.
காலைத் தூக்கம் (Morning Sickness):
மூன்று நேர உணவு இடைவேளைக்குள்ளும் வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடம்பிலுள்ள இரத்தத்தில் உள்ள குளுகோஸ் (Blood Sugar) அளவு அதிகமாக்கப்பட்டு காலைத் தூக்க நோயிலிருந்து விடுபடலாம்.
நரம்பு நாளங்கள் (Nerve System):
இதில் B விட்டமீன்கள் அதிகமாக இருப்பதால் நரம்பு நாளங்கள் நன்றாக செயல்பட்டு நரம்புத் தளர்வை போக்குகிறது.
அழுத்தக் குறைவு (Depression):
'Mind' என்ற நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவாக ஒவ்வொரு உணவிற்குப் பின்பும் வாழைப்பழம் சாப்பிட்டால் அழுத்தக் குறைவு நோயை விரட்டலாம் என்று கூறுகிறது. ஏனெனில் மூளையிலிருந்து கசியக் கூடிய நீரை திட்டப்படி வெளியேற்றி மனிதனை மகிழ்ச்சியாக்குகிறது.
இரத்த சோகை (Anemia):
வாழைப்பழத்தில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் அதிக அளவு சிவப்பணுக்களை உண்டு பண்ணி இரத்தச் சோகை வராமல் தடுக்கிறது.
இரத்த அழுத்தம் (Blood Pressure):
குறைந்த அளவு உப்பும் அதிக அளவு பொட்டாசியமும் இருப்பதால் அதிக இரத்த அழுத்தத்தையும், வாதநோயையும் குறைக்க முடிமென்று அமெரிக்க அரசு உணவு நிறுவனம் கூறுவதோடு அதிக வாழை மரங்களை செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
The new England Journal of Medicines ஆராய்ச்சிப்படி நமது தினசரி உணவில் வாழைப்பழத்தையும் சேர்த்துக் கொண்டால் Stroke கினால் ஏற்படக்கூடிய மரணத்தின் விகிதத்தை 40% குறைக்கலாம் என்கிறது.
இவ்வளவு நன்மைகளை சுமந்து நிற்கும் வாழைப்பழத்தை பாதுகாக்கும். அந்த மஞ்சள் நிறத்தைக் கொண்டதால் தன்னால் இயன்ற உதவியை மனிதனுக்கு செய்ய மறக்கவில்லை. "மறு" என்று சொல்லக்கூடிய கருப்பு வடு உடம்பில் ஏற்பட்டால் வாழைப்பழத் தோலை சிறு துண்டாக வெட்டி உள் தோல் அந்த வடுவின் மேலும் மஞ்சள் தோல் வெளியில் தெரியும் படி வைத்து அதன் மீது சிறிது மருத்துவ டேப் ஒட்டி வைத்தால் நாள்பட அந்த மறு மறைந்துவிடும்.
கொசுக்கடிக்கு மருந்து தேவையா?
வாழைப்பழத்தோலின் உட்பகுதியை கொசுக் கடித்த இடத்தில் வைத்து அழுத்தி தேய்த்தால் கொசுக் கடியால் ஏற்பட்ட வேதனையும் தீரும். வீக்கமும் வற்றிவிடும். வாழைப்பழத்தைச் சாப்பிட்டு விட்டு அதன் தோலை குப்பைத் தொட்டியில் எறிவதற்கு முன் அதன் உள்தோலைக் கொண்டு உங்கள் காலணி (Shoe) யை பாலிஷ் செய்து வெள்ளைத் துணியால் துடைத்துப் பாருங்கள். உங்கள் Shoe மினு மினுக்கும். எல்லா விட்டமின்களையும் ஒரு பழத்தின் மூலம் தந்து நமது உடல் நலம் பேண வழி வகுத்த வல்லமை படைத்த நம் இறைவனுக்கே எல்லாப் புகழும்.
வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் தோலை தெருவிலே எறிந்து விடுவதால் அத்தோலின் மெல் கால் வைத்து வழுக்கி மரணம் வரை சென்றவர்கள் உண்டு. அவ்வாறு தூக்கி எறிவதை நாமும் தவிர்த்து மற்றவர்களையும் தடுக்க வேண்டும். வாழைப் பழத் தோலை மனிதர்கள் நடக்குமிடத்தில் கண்டால் அதை எடுத்து குப்பை தொட்டியில் போட்டு அதன் மூலம் நன்மையை தேடிக் கொள்ள முன் வரவேண்டும்.
தமிழாக்கம்: அபுல் அமான்