Showing posts with label நபி மார்கள். Show all posts
Showing posts with label நபி மார்கள். Show all posts

Thursday, April 3, 2008

அல்-குர்ஆன் கூறும் நபிமார்கள்!

காலத்திற்கு காலம் மக்களை நல்வழிபடுத்த வல்ல நாயனால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டவர்களே நபிமார்களாவர். இந்த நபிமார்களைப் பொறுத்தவரை குறிப்பிட்ட சமுதாயத்தினருக்காகவும், குறிப்பிட்ட மொழியினருக்காகவும் ஏன் குறிப்பிட்ட சிலருக்காகவும் கூட அல்லாஹ் அவர்களை அனுப்பியிருக்கிறான். அதே நேரம் ஒட்டு மொத்த முழு மனித சமுதயத்திற்காகவும் அல்லாஹ்வால் அனுப்பட்டவர்களே எம்பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களாவார்கள்.

இந்த அடிப்படையில் பல நபிமார்களை அல்லாஹ் அனுப்பியிருந்தாலும் அவர்களில் இருபத்தைந்து நபிமார்களின் பெயர்களை மட்டுமே அல்குர்ஆனில் இடம் பெயரச் செய்திருக்கிறான்.

இந்த நபிமார்களின் பெயர்களை நாம் அறிந்து வைத்திருப்பது முக்கியமான ஒன்றாகும்.
1. ஆதம் நபி (அலை)
2. இத்ரீஸ் நபி (அலை)
3. நூஹ் நபி (அலை)
4. ஹூத் நபி (அலை)
5. ஸாலிஹ் (அலை)
6. இப்ராஹீம் நபி (அலை)
7. லூத் நபி (அலை)
8. இஸ்மாயில் நபி (அலை)
9. இஸ்ஹாக் நபி (அலை)
10. யஃகூக் நபி (அலை)
11. யூஸூப் நபி (அலை)
12. ஷூஐப் நபி (அலை)
13. மூஸா நபி (அலை)
14. ஹாரூன் நபி (அலை)
15. தாவூத் நபி (அலை)
16. சுலைமான் நபி (அலை)
17. ஐயூப் நபி (அலை)
18. துல்கிப்ல் நபி (அலை)
19. இல்யாஸ் நபி (அலை)
20. அல்யஸஃ நபி (அலை)
21. யூனுஸ் நபி (அலை)
22. ஸக்கரிய்யா நபி (அலை)
23. யஹ்யா நபி (அலை)
24. ஈஸா நபி (அலை)
25. முஹம்மது நபி (ஸல்)

'உலுல் அஸ்ம்' எனப்படும் உறுதி பூண்ட நபிமார்கள் பின்வருமாறு: -
1. நூஹ் நபி (அலை)
2. இப்ராஹீம் நபி (அலை)
3. மூஸா நபி (அலை)
4. ஈஸா நபி (அலை)
5. முஹம்மது நபி (ஸல்)