Showing posts with label குழந்தை நலம். Show all posts
Showing posts with label குழந்தை நலம். Show all posts

Monday, August 5, 2013

முஸ்லிம்கள் மீதான ஹிந்துத்துவாவினரின் பொய்ப் பிரசாரங்களுக்கு பேரா.அ.மார்க்ஸ்-தி.மு.க. வழக்கறிஞர்.பிரசன்னா நெத்தியடி பதில்!


Inline image 1

சேலத்தை சேர்ந்த பா.ஜ க.பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலையை அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஒருமித்து கண்டித்துள்ளன.வ ன்முறை கூடாது என்பதுதான் இஸ்லாமிய அமைப்புகளின் நிலைபாடாக இருந்து வரும் நிலையில்,ரமேஷ் கொலையை அரசியலாக்கி ஆதாயம் அடையத் துடித்துக்கொண்டிருக்கும் பா.ஜ.க உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்புகள், ரமேஷ் மற்றும் கடந்த காலங்களில் தனிப்பட்ட
காரணங்களுக்காக கொல்லப்பட்ட ஹிந்துத்துவாவினரின் படுகொலை சம்பவங்களை முஸ்லிம்களோடு இணைத்து சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.

ஆடிட்டர் ரமேஷ் படுகொலை மீடியாக்களில் விவாதப்பொருளாக மாற்றப்பட்டு பரபரப்பை கிளப்பி வருகிறது.இன (25 ந் தேதி) கலைஞர் செய்திகள் தொலைகாட்சியில் பேரா.அ.மார்க்ஸ்,சமூக ஆர்வலரும் தி,மு.க வழக்கறிஞருமான பிரசன்னா,திருவாரூர் மாவட்ட பா.ஜ.க நிர்வாகி கருப்பு என்கிற முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்ட விவாதம் நடை பெற்றது. 'தமிழகமா? கொலைக்களமா? என்ற தலைப்பில்
நடந்த இந்த விவாதத்தில்,தமிழகம் கொலைக்களமாக மாறுகிறதா?கொலைகளுக்கு மதச் சாயம் பூசப்படுகிறதா என்கிற கருப்பொருளுடன் நடந்த இந்த விவாதத்தில்...ப.ஜ.க வின் கருப்பு பேசிய போது,

''இந்துதுவா வாதிகளை கொலை செய்வது முஸ்லிம்க தான்.கோவை குண்டுவெடிப்பை உதாரணமாக சொல்லலாம் '' என்றவுடன் கருப்பின் பேச்சை எதிர்கொண்ட பேரா.மார்க்ஸ்,''நீங்கள் கோவை குண்டு வெடிப்பை எடுத்தால்,அதன் முழு வரலாற்றையும் நான் சொல்லவேண்டி வரும்''என்றவர், தொடர்ந்து ''முதன் முதலில் அப்துல் ஹக்கீம் என்ற முஸ்லிமை கொலை செய்து (கொலை பட்டியலை)
துவக்கி வைத்தது.அதன் பிறகு இரு தரப்பிலும் மாறி மாறி கொலைகள் நிகழ்ந்தன. ஒரு கட்டத்தில் 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.இந்த படுகொலைகளை காவல்துறையும் ஹிந்துத்துவாவினரும் சேர்ந்து செய்தனர்.அதன் பின்னர் தான் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.'' என்றார்.

இதே போல, முத்துப்பேட்டை ஊர்வலம் குறித்த பேச்சு வந்த போதும்,''முத்துப் பேட்டை கலவரங்களைத் தொடர்ந்து 4 முறை நான் குழுவினருடன் உண்மை அறியும் குழுவாக சென்று சம்பவங்களை ஆய்வு செய்திருக்கிறேன. முத்துப்பேட்டையின் வீதிகள் குறுகலானவை.அந்த வழியாக ஊர்வலமாக செல்லும் ஹிந்துத்துவாவினர்,முஸ்லிம் பெண்களைப்  பார்த்து அசிங்கமாக பேசுவதும், ஆபாச செய்கைகளை செய்வதுமாக செல்வது பிரச்சனைக்கு காரணம்.ஒரு கலவரத்தில சுமார் 1 கோடி ரூபாய் வரை முஸ்லிம்களின்
சொத்துக்கள் இழப்பிற்குள்ளாயன.சென்னை உயர்நீதி மன்றத்தில் கொடுத்த எங்களது உண்மை அறியும் குழுவின் பரிந்துரைகளை (மாற்றுப்பாதையில் ஊர்வலம் கொண்டு செல்லப்படவேண்டும் என மாற்றுப் பாதை திட்டத்தை வரைந்து,

அதன்படி இந்திய தவ்ஹீத் ஜமாஅத்,உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது,பேரா.மார்க்ஸ் குழுவினரின் பரிந்துரைகளையும் மனுவில் இணைத்து சமர்பித்திருந்தது) நீதி மன்றம் மாற்றுப் பாதைக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவுக்கு பின் நடந்த ஊர்வலத்தை கண்காணிக்க எங்கள் குழுவினருடன் சென்றோம்.கம்யுனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மாடியிலிருந்து நாங்கள் கண்காணித்தோம்.

புதிய மாற்றுப் பாதையில் செல்ல மாட்டோம் என ஹிந்துத்துவாவினர் முரண்டு பிடித்தனர்.'' என பேரா.மார்க்ஸ் சொன்ன போது..''மார்க்ஸ தவறான செய்திகளை சொல்கிறார்'' என மறுத்தார் கருப்பு. ஆனால் பேரா.மார்க்ஸ் சொல்வது உண்மை என்பதற்கு நாம் உட்பட பலர் சாட்சி.அன்றைய தினம்,நமது மக்கள் ரிப்போர்ட்டின் நிருபர் குழுவினரான வேளச்சேரி சிராஜ்,கலிமுல்லா ஆகியோர் ஊர்வலம் குறித்த செய்தியை சேகரிக்க முத்துப்பேட்டையில் முகாமிட்டிருந்த னர்.அந்த செய்திகளை மக்கள் ரிப்போர்ட்டில்
வெளியிட்டிருந்தோம்.

புதிய மாற்றுப்பாதையில் போக மாட்டோம் என இதே கருப்பு,அப்போதைய திருவாரூர் மாவட்ட
காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன் குமார் அபிநபு வின் காவல் வாகனத்தின் மீது ஏறி நின்று கொண்டு ரகளையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவாதத்தில் பேசிய வழக்கறிஞர் பிரசன்னா..''ஹிந்துத்துவாவினரின படுகொலை சம்பவங்களுக்கு பல்வேறு தனிப்பட் காரணங்கள் இருக்கின்றன.ஆனால் முஸ்லிம்களை நோக்கி கை நீட்டுவது தவறான போக்கு.

இது காவல்துறையின் கையாலாகததனம்.கா வல்துறையும் கூலிப்படையும்,ஹிந்துத்துவாவினரும்
முஸ்லிம்களை நோக்கி கை நீட்டுவது அருவருப்படிட்டர் ரமேஷ் கொலை நீங்கலாக(குற்றவாளி இன்னும் கண்டுபிடிக்கப்ப டவில்லை.) படுகொலையான ஹிந்துத்துவாவினரை கொன்றவர்கள் யார்என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள்யாரும் முஸ்லிம்கள் இல்லை...'' என்றார்.

Saturday, December 15, 2012

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்

உறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,

ஹேய்.. அதைத் தொடாதே..! என்று கூறி விட்டு தந்தை உறவினரோடு பேசிக் கொண்டிருப்பதில் மும்முரமாகி விடுகின்றார்.

பின்னர் சற்று நேரம் கழித்துப் பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும் அந்த தட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் அதைத் தொடாதே.., எடுக்காதேன்னு சொல்றேன்ல..,

மீண்டும் தந்தை உறவினரோடு பேச்சைத் தொடர்கின்றார்.., சற்று நேரம் கழித்து திரும்பிப் பார்க்கின்றார்.., மீண்டும் அந்தக் குழந்தை அதையே தான் செய்து கொண்டிருக்கின்றது.

தந்தை அதனைப் பார்த்து எதுவுமே சொல்லாமல் மீண்டும் பேச்சில் மும்முரமாகி விடுகின்றார்.

இதுவே பல சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்..! குழந்தைகளுக்கு உத்தரவிட முடியும், அவர்கள் அதனைக் கேட்காத பொழுது, மீண்டும் அதே உத்தரவை இட்டுக் கொண்டே இராமல், குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.

இது மாதிரியான சூழ்நிலைகள் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

சிலர் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிலர் அடிக்க வேண்டும், சிலர் அது குழந்தை தானே என்று விட்டு விட வேண்டும், குழந்தையிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றும் கூறுவார்கள்.

உண்மையில் நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும், இதுவே சமூகத்;தின் எதிர்பார்ப்புமாகும்.

பெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும், குணாதிசயங்கள் இருக்கும். இருப்பினும், குழந்தைகளை இப்படித் தான் நடத்த வேண்டும் என்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது. அதனைப் பின்பற்றினால் ஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும். நாம் நினைத்தமாதியெல்லாம் குழந்தைகளை வளர்த்து விட முடியாது. திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை வழிநடத்தும் பொழுது, நல்லபல விளைவுகள் ஏற்படும்.

1. இளமையில் கல்வி

இந்த வயதில் அதற்கு என்ன தெரியும் என்று அங்கலாய்ப்பவர்களைக் காண முடியும், ஆனால் குழந்தைகளில் இளமைப் பருவம் தான் அவைகள் கற்றுக் கொள்ளக் கூடிய நல்லதொரு பருவமாகும், அவர்களை நல்லதொரு வழித்தடத்தின் கீழ் பயணிப்பது எப்படி என்பதை பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய தருணம், குழந்தைகளின் ஆரம்ப நாட்களாகும். ஒருமுறை அவர்களிடையே நல்லதொரு பண்பாட்டை பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி விட்டால், அது அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடரும், அதிலிருந்து அவர்கள் மாற மாட்டார்கள்.

2. கோபமான நிலையில் குழந்தைகளுக்கு உத்தரவிடாதீர்கள்

நீங்கள் உங்களது குழந்தையிடனோ அல்லது சாதாரணமாக எதற்காகவோ நீங்கள் கோபமான நிலையில் இருந்து கொண்டிருக்கின்றீர்கள். அப்பொழுது உங்களது குழந்தைகளைத் திருத்த நினைக்காதீர்கள். உங்களது குழந்தைக்கு நல்லதைத் தான் நாடுகின்றீர்கள். ஆனால் அதுவல்ல இப்போது பிரச்னை.., நீங்கள் எந்த நிலையில் அதனைச் சொல்கின்றீர்கள் என்பது தான் பிரச்னை. எனவே, கோபம் இல்லாத நிலையில் அதனைத் தொடருங்கள்.

3. பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல்படுங்கள்

குழந்தைகளை எவ்வாறு நெறிப்படுத்துவது என்பது குறித்த திட்டத்தை குடும்பத்தலைவியும், தலைவனும் இணைந்து தீர்மானிக்க வேண்டும். அதனை இருவரும் இணைந்து நிறைவேற்றுவதற்கு திட்டமிடல் வேண்டும். ஒருவர் கறாராகவும், இன்னொருவர் இலகுவாகவும் நடந்து கொண்டால், இருவருக்கு மத்தியில் குழந்தைகள் விளையாட ஆரம்பித்து விடும். பெற்றோர்களில் கறாரானவர் மறுக்கின்ற பொழுது, அடுத்தவரிடம் சென்று அனுமதி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இருவரும் ஒரு விசயத்தில் ஒத்த கருத்தில் இருந்தால் தான் குழந்தைகளை நெறிப்படுத்த முடியும். பெற்றோர்களில் ஒருவர் சம்மதித்து இன்னொருவர் சம்மதிக்கா விட்டால், பெற்றோரில் ஒருவரின் மீது குழந்தைகளுக்கு வெறுப்புணர்வு ஏற்படும். எனவே, இது விசயமாக நாங்கள் கலந்தோலசித்து முடிவு சொல்கின்றோம் என்று குழந்தைக்குக் கூறுங்கள். பின்னர், குழந்தைகள் இல்லாத சூழ்நிலைகளில் அந்த விவகாரத்தை கலந்தாலோசித்து முடிவெடுங்கள். குழந்தைகளை வைத்துக் கொண்டு கலந்தாலோசனையில் ஈடுபடாதீர்கள். எடுத்த முடிவில் இருவரும் உறுதியாக இருங்கள்.

4. உறுதியாக இருத்தல்

பெற்றோர்கள் தங்களது கொள்கைகளில் உறுதியைக் கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சட்ட திட்டங்களை மற்றும் எதிர்பார்ப்புகளை மாற்றிக் கொள்வது குழந்தைகளை குழப்பத்தில் ஆழ்த்தி விடும். உதாரணமாக, சுவரில் எழுதிக் கொண்டிருக்கின்ற குழந்தையை இன்றைக்கு தடுப்பது, நாளைக்கு தடுக்காது எழுதட்டும் என அனுமதிப்பது, இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இனிவரும் நாளில் நாம் சுவற்றில் எழுதினால் பெற்றோர்கள் கண்டிப்பார்களா, கோபப்படுவார்களா என்ற புரிந்துணர்வின்மை குழந்தைகளிடத்தில் தோன்றி விடும். உங்களது மனநிலைக்குத் தக்கவாறு உங்களது சட்ட திட்டங்களையும் மாற்றிக் கொள்வது நல்லதல்ல. இவ்வாறான நிலையில், எந்தக் காரியத்தையேனும் குழந்தை செய்ய ஆரம்பிக்கும் பொழுது, நீங்கள் அதனை அனுமதிப்பீர்களா மாட்டீர்களா, அதனால் கோபமடைவீர்களா என்று உங்களைப் பரிசோதனை செய்ய ஆரம்பித்து விடும். எனவே தான் கூறுகின்றோம்.., குழந்தைகளை ஒரு விசயத்தின் மீது அதனைச் செய்யாதே என்று தடுத்தால், அந்தத் தடை எப்பொழுதும் நீடிக்க வேண்டும். அப்பொழுது தான் ஓ.., இதைச் செய்வது நல்லதல்ல என்று அந்தக் குழந்தை உடனே கற்றுக் கொள்ளும்.

அப்படியென்றால் சமய சந்தர்ப்பங்களுக்குத் தக்கவாறு நம்மை மாற்றிக் கொள்ளக் கூடாதா என்றால், மாற்றிக் கொள்ளலாம்.., நீங்கள் ஏன் முதலில் அனுமதி மறுத்தீர்கள்.., பின்னர் இப்பொழுது ஏன் நீங்கள் அனுமதிக்கின்றீர்கள் என்பது குறித்து அந்தக் குழந்தைக்கு விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமாகும். இன்னும் அதனை அதன் ஆரம்ப கட்டத்திலேயே விளக்கி விடுவது புரிந்துணர்வுக்கு நல்லதாகும். பெற்றோர்களிடம் உறுதி இல்லை என்றால், அதுவே குழந்தைகளின் கட்டுப்பாடின்மைக்கான ஆணி வேராகும்.

5. குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்

பிள்ளைகளிடம் தப்பிப்பதற்காக வாய்ப்பாக பொய்யைப் பேசாதீர்கள், அவர்களிடம் வழங்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். நீங்கள் அடிக்கடி பொய் பேசக் கூடிய பெற்றோராக இருந்தால்.., அவர்கள் உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்க மாட்டார்கள், நீங்கள் உண்மையையே பேசினாலும் கூட அவர்கள் நம்ப மாட்டார்கள்.

உதாரணமாக, உயரமான அலமாரியில் உள்ள பொருள் ஒன்றை உங்களது குழந்தை எடுத்துக் கொண்டிருக்கின்றது. அதனை முறையாக எடுக்க அதனால் இயலாது.., எனும் பொழுது சற்று பொறு.. இதோ என்னுடைய வேலைகளை முடித்து விட்டு வந்து எடுத்துத் தருகின்றேன் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அவ்வாறு கூறி விட்டால் நீங்கள் உங்களது வேலைகளை உடனே முடித்துக் கொண்டு உங்களது குழந்தைக்கு உதவுங்கள்.

மறக்க வேண்டாம்..! நீங்கள் கூறியதை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லை என்றால் அந்தக் குழந்தை மீண்டும் அலமாரியில் உள்ள பொருளை எடுக்க முனையும். அதனால் இயலாத நிலையில், பொருட்கள் தவறிக் கீழே விழுந்த பின்பு அந்தக் குழந்தையை கோபித்துப் பயன் என்ன? ஒன்று, அதனை இப்பொழுது எடுக்க இயலாது. மற்ற வேலைகளைப் பாருங்கள், பின்பு எடுத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் கூறி இருந்தால், அந்தக் குழந்தை தன்னுடைய முயற்சியைக் கைவிட்டு விட்டு வேறு வேலையின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பி இருக்கும். ஆனால், சற்று பொறு.., என்று நீங்கள் கூறிய பின்பு.. சற்றுக் காத்திருந்து விட்டு நீங்கள் வரததால் அந்தக் குழந்தை முயற்சி செய்து பார்த்திருக்கின்றது.

தவறு உங்கள் மீது.., குழந்தையின் மீதல்ல. நீங்கள் அடிக்கடி இப்படி நடந்து கொள்பவர் என்றால் பின்பு நீங்கள் சீரியஸாக எதனைச் சொன்னாலும், அதனை ஒரு பொருட்டாகவே குழந்தை எடுத்துக் கொள்ளாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

பின்பு ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும் பொழுது உங்களது குணம் எவ்வாறு மாறும், கோபிப்பீர்களா, மாட்டீர்களா என்று உங்களையே பரிசோதிக்க ஆரம்பித்து விடும்.

6. அடம் பிடித்து அழுகின்றதா.., விட்டு விடுங்கள்

குழந்தை அடம் பிடித்து அழுகின்றதா.., அவை எதையோ உங்களிடம் எதிர்பார்க்கின்றன..! அவ்வாறு அழும் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு எதையும் கொடுத்து சமாதானப்படுத்தாதீர்கள். பின்னர் ஒவ்வொரு முறையும் அது விரும்புவதைப் பெறுவதற்கு அழ ஆரம்பித்து விடும். அழகையின் மூலமாக எதனையும் பெற முடியாது என்பதனை அது அறிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு தான் அழுதாலும்.. சரியே.., விட்டு விடுங்கள்.

அழத் தொடங்கி விட்டால் அனர்த்தம் தான் என்கிறீர்களா.., பொறுமை மிகவும் அவசியம். எப்பொழுது அந்தக் குழந்தை அழுகையினால் எதையும் சாதிக்க முடியாது என்பதைக் கற்றுக் கொண்டு விட்டதோ, வாழ்வே சந்தோஷம் தான். சில நாள் பொறுமை.., வாழ்வே இனிமை. தேர்வு உங்களது கையில்..!

7. தவறிழைத்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுங்கள்

தவறிழைக்கக் கூடியது மனிதனின் சுபாவம். தவறிழைப்பவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளையுமாகும், அது சக மனிதனுக்குச் செய்யக் கூடிய தவறாக இருப்பினும் சரி.., அல்லது இறைவனுக்கு மாறு செய்யக் கூடிய பாவங்களாக இருந்தாலும் சரியே..! மன்னிப்புக் கோர வேண்டும் என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ளும் பொழுது, தவறிழைக்க நேரும் பொழுது மன்னிப்புக் கோர வேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் மிகுந்து காணப்படும்.

8. மன்னித்து விடுங்கள்

குழந்தை தவறு செய்து விட்டது, அதனை உணர்ந்து தனது தவறுக்காக வருத்தம் தெரிவிக்கின்றது, உடனே அதனை மன்னித்து மறந்து விடுங்கள், மன்னித்து விட்டேன் என்பதை நேரடியாகவே குழந்தையிடம் சொல்லுங்கள், நீங்கள் செய்யும் தவறுகளை அல்லாஹ் மன்னிப்பதில்லையா.., அதனைப் போல தவறிழைத்த குழந்தை மன்னிப்புக் கேட்பதே அது சரியான பாதையில் பயணிக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அல்லாஹ் மன்னிப்போனாக இருக்கின்றான், மன்னிப்பை விரும்புகின்றான்.., எனவே நீங்களும் குழந்தை செய்யும் தவறுகளுக்காக உடனே பிரம்பைத் தூக்காதீர்கள். அவர்கள் மன்னிப்புக் கோரினால் மன்னித்து விடுங்கள், இன்னும் நான் உன்னை மிகவும் நேசிக்கின்றேன் என்பதை அடிக்கடி அவர்களிடம் கூறி வாருங்கள், அது உங்களது உள்ளத்தில் இருந்து வர வேண்டும். இதன் காரணமாக பெற்றோர் பிள்ளைகள் உறவு மேலும் வலுவடையும்.

9. உங்களது தவறுக்கும் மன்னிப்புக் கோருங்கள்

நீங்கள் தவறிழைத்து விட்டீர்கள், நான் பெற்றவன், பிள்ளைகளிடம் எப்படி மன்னிப்புக் கேட்பது என்று இறுமாப்புக் கொள்ளாதீர்கள். தவறிழைக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சரியே.., நம்முடைய குழந்தையாக இருந்தாலும் சரியே.., மன்னிப்புக் கோருங்கள், அதுவே நீதிக்குச் சாட்சியம் பகர்வதாகும். அவ்வாறு நீங்கள் மன்னிப்புக்கோரவில்லை என்றால், அதுவே அடக்குமுறையின் ஆரம்பமாகும்.

10. இளமையிலேயே இஸ்லாத்தை அறிமுகப்படுத்துங்கள்

சிறுபிராயத்திலிருந்து அவர்களுக்கு அல்லாஹ், இறைநம்பிக்கை, நபிமார்கள், நபித்தோழர்கள், நபித்தோழியர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள், மாபெரும் தலைவர்கள் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றை சிறு சிறு சம்பவங்களாக அவர்களுக்குச் சொல்லி வாருங்கள். அது போன்றதொரு உன்னத வாழ்க்கைக்கு ஆசைப்படும்படி அறிவுறுத்துங்கள்.

இறைத்தூதர் (ஸல்)அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உதுமான் (ரலி), அலி (ரலி) மற்றும் நேர்வழி பெற்ற நபித்தோழர்கள் பற்றிய சம்பங்கள் குழந்தைகளின் உள்ளத்தை பண்படுத்த வல்லது.

அவர்கள் வழிதவறும் பொழுதெல்லாம் மேற்கண்ட சம்பவங்கள் அவர்களை பண்படுத்தப் பயன்படும். இஸ்லாத்தில் உறுதியாக இருப்பதற்கு வழியமைக்கும்.

இன்றைக்கு நம் குழந்தைகள் சக்திமான், இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள் மற்றும் வரலாற்றுத் தொடர்களால் பாதிக்கப்படுகின்றன. அவர்களைப் போல அமானுஷ்யமான வாழ்க்கையை, பழக்க வழக்கங்களை பின்பற்றி வாழ வேண்டும் என்று கனவு காண்கின்றன. அதனால் தான் மாடியிலிருந்து குதித்து சக்திமான் போல சகாசம் செய்யப் பார்க்கின்றன. சக்திமான் வந்து காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கை தான் அவர்களை மாடியிலிருந்து குதிக்க வைக்கின்றது. இது போன்ற கதைகளை விட.., இஸ்லாமிய வரலாற்று நாயகர்களின் உண்மை வாழ்வு படிப்பினை மிக்கதாகும். இன்னும் நீங்களும் கூட அவர்களின் வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்றுக் கொள்ளலாம்.

11. நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொடுங்கள்

உங்களது குழந்தைகளுக்கு நல்லொழுக்க போதனைகள் அவசியம். ஒழுக்கம் சார்ந்த இஸ்லாமிய நூல்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றினை அவர்களுக்கு பரிசளியுங்கள்.

இப்பொழுது பள்ளி ஆண்டு விழாக்கள் என்று கூறிக் கொண்டு சினிமாப் பாடல்களுக்கு ஆடும் கலாச்சாரத்தைப் பள்ளிக் கூடங்களில் கற்றுக் கொடுக்கின்றார்கள். சினிமாக்களில் கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப்பிடித்து ஆடிப்பாடும் அசிங்கமான அங்க அசைவுகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து, இவ்வாறான விழாக்களில் ஆட வைத்து பெற்றவர்களும், மற்றவர்களும் ரசிக்கின்றார்கள்.

இதனை முஸ்லிம் பெற்றோர்கள் ஊக்கப்படுத்தக் கூடாது. அவ்வாறான போட்டிகள் தவிர்த்து ஏனைய கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் போன்றவற்றில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.

12. கீழ்ப்படிதல்

பெற்றோர்களுக்குக் கீழ்படிதல் என்பது இறைவன் குழந்தைகள் மீது கடமையாக்கியதொன்று. தாயும், தந்தையும் இணைந்து இதற்கான பயிற்சியை வழங்க வேண்டும். ஆனால் குடும்பங்களில் நடப்பது வேறு..!

தந்தையை கரடி போல பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்துவது.., அதாவது.., அப்பா வரட்டும்.., உன்னை என்ன செய்கிறேன் பார்.. என்று பிள்ளைகளை மிரட்டுவது தாய்மார்களது வாடிக்கை. இது தவறான வழிமுறை..!

முதலாவது, எப்பொழுது குழந்தை கீழ்ப்படியாமையைக் காட்டுகின்றதோ அப்பொழுதே கீழ்ப்படிவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். தாமதப்படுத்தக் கூடாது. தாமதப்படுத்தும் பொழுது ஒன்று அந்த சம்பவத்தையே குழந்தை மறந்திருக்கும் நிலையில், அவர்களைத் தண்டிக்கும் பொழுது தான் எதற்காக தண்டிக்கப்படுகின்றோம் என்பது அதற்கு விளங்காது.

இரண்டாவது, அந்தத் தவறை நிவர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பம் அதற்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், குழந்தையும் தவறை உணர்ந்து திருந்தியிருக்கும், குழந்தையைத் திருத்துவதற்கு தந்தை தான் வர வேண்டும் என்று தாய் காத்திருக்க வேண்டியதில்லை. இதன் மூலம் தாயோ அல்லது தந்தையோ குழந்தையின் தவறைத் திருத்த முனையும் பொழுது, இருவரது சொல்லுக்கும் அது கட்டுப்பட்டு நடக்கும் பழக்கம் அதனிடம் ஏற்படும்.

மூன்றாவதாக, பெற்றோர்களில் யாராவது ஒருவர் தான் குழந்தையின் தவறைக் கண்டிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பவர் என்ற நிலை வளர்ந்தால், தவறைக் கண்டிக்கும் பெற்றோரை குழந்தைகள் நேசிப்பதில்லை, மாறாக கண்டிக்கும் தாயையோ அல்லது தந்தையையோ அவர்கள் வில்லனாகப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதுவும் கூட குழந்தைகளிடம் கீழ்படியாமை வளர்வதற்குக் காரணமாகி விடும். பெற்றோர்களில் இருவரது சொல்லுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற நிலை அவர்களிடம் உருவாகாது. பெரும்பாலான குடும்பங்களில் இது போன்ற தவறுகள் தான் நிகழ்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.

நன்றி : தமிழ் இஸ்லாம்

Sunday, July 1, 2012

குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்

Posted by Sathik Ali
உறவுகளில் திருமணம் செய்து கொள்வது பிறக்கும் குழந்தைகள் குறையுடன் பிறக்கும் வாய்ப்பு அதிகம்.

கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின்றி கண்ட கண்ட மாத்திரைகள் சாப்பிடுவது கருவில் இருக்கும் குழந்தைக்கு நிச்சயம் பாதிப்பு உண்டாக்கும்.

சிகரெட், போதைப் பொருட்கள் தாய் உபயோகிப்பது கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கும்.

தாய் உண்ணும் உணவில் போதிய சத்துக்கள் குறைவு, மன அழுத்தம் வயிற்றிலிருக்கும் குழந்தையை பாதிக்கும்.

குழந்தகளின் பால் புட்டிகளை நிப்பிள்களை கொதிக்கும் நீரில் போட்டு கிருமி நீக்கம் செய்து பால் நிரப்பிக் கொடுக்கவும். வாரம் ஒரு முறை நிப்பிளை மாற்றவும்.

மீதம் வைத்த பாலை சிறிது நேரம் கழித்துக் கொடுக்கக் கூடாது. கொட்டி விடவும்.

குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கிப் போட்டு விளையாட்டுக் காட்டக் கூடாது.

சின்ன சின்னப் பொருட்கள் தரையில் கிடந்தால் உடனே அதை எடுத்து மாற்றி விடுங்கள். குழந்தைகள் அதை எடுத்து வாயிலோ மூக்கிலோ போட்டுக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

சுவர் விளிம்புகள், கதவு மேஜை விளிம்புகள் கூராக இல்லாமல் பார்த்து அமைக்கவும்.

குழந்தைகள் அறைக்குள் சென்று கதவை தாள் போட்டுக் கொள்ளா வண்ணம் உயரமாக தாள்பாளை அமைக்கவும்.

குழந்தைகளுக்கான மருந்து குப்பியில் வேறு எதையும் ஊற்றி வைக்காதீர்கள் அவசரத்தில் மருந்தென்று மறந்து கொடுத்து விடுவோம்.

கத்திகள், ஊசிகள், கத்திரிகள், மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

குழந்தைக்கு எட்டாத இடத்தில்தான் மண்ணெண்ணெய், பினாயில் போன்றவற்றை வைக்கவேண்டும். முக்கியமாக ஒன்றரையிலிருந்து இரண்டரை வயதுக் குழந்தை உள்ளவர்கள் வீட்டில் இந்த விஷயத்தில் மிகவும் முன்னெச்சரிக்கை தேவை.

கொசுவர்த்தி சுருள்கள் மூடிய அறைக்குள் மூச்சுத் திணறலை உண்டாக்கும். கொசு வலை தான் நல்லது. கொசுவிரட்டி மருந்துகள் குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

இரும்பு பீரோக்களைப் பற்றிப் பிடித்து குழந்தகள் ஏறும். அப்படியே பீரோ சரிந்து விழுந்து குழந்தையை நசுக்கி விடும். பீரோக்களை சுவருடன் அசையாமல் பிணைத்து வைக்கவும்.

ஜிப் வைத்த உடைகளை முடிந்த அளவுக்கு தவிர்க்கலாம். அல்லது உள்ளாடை அணிவித்த பிறகு அதுபோன்ற உடைகளை அணிவிக்க வேண்டும். (ஜிப்பை இழுக்கும்போது தோலோடு சிக்கிக் கொண்டுவிட்டால்?!)

தொட்டிகள் அல்லது பெரிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி திறந்து வைக்காதீர்கள் .குழந்தை உள்ளே விழ சான்ஸ் இருக்கிறது.

சமையலறையில் முடிந்தவரை குழந்தை செல்லாமல் தவிர்க்கப் பாருங்கள்.
இடுப்பில் குழந்தையைத் தூக்கிக்கொண்டே கொதிக்கும் ரசத்தை ஒரு அம்மா இறக்கி வைத்திருக்கிறார். அப்போது குழந்தை சற்றே திமிர, ரசம் குழந்தையின் காலில்பட்டு, அங்கு தோல் வழன்றுவிட்டது.

கதவை திறந்து குழந்தை சாலையில் சென்று விடாமல் இருக்க கதவு தாள்பாள் கைக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும்.

பெட் ரூமில் படுத்துக் கொண்டே சுவிட்ச் போட தாழ்வாக சுவிட்ச் போர்டுகளும் ப்ளக் பாயின்றுகளும் சில இடங்களில் இருக்கும். குழந்தைகள் பேனா அல்லது கம்பியை ப்ளக் பாயின்றுக்குள் செருகி மின்சாரத் தாக்குதலுக்கு ஆளாகலாம். அத்தகைய இடங்களில் பாதுகாப்பான விஷேச ப்ளக் பாயின்றுகள் உபயோகிக்கலாம் அல்லது அத்தகைய மின் இணைப்பைத் தவிர்க்கலாம்.

வீட்டில் உபயோகப்படுத்தும் எலெக்ட்ரானிக் பொருட்களின் மின் இணைப்புகள் குழந்தைகள் கை படாத வகையில் இருக்க வேண்டும்.

மிக்ஸி, கிரைண்டர் உபயோகம் முடிந்தால் சுவிட்சை அணைப்பதோடு ப்ளக்கையும் உருவிப் போடுவது நல்லது. சுவிட்ச் போட்டு விளையாடுவது குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்.

மொபைல் ,எலெக்ட்ரிக் ரேசர் போன்ற பொருட்களை குழந்தைகள் தண்ணீருக்குள் தூக்கிப் போட்டு விடலாம் அல்லது பிரித்து மேய்ந்து விடலாம் எனவே அதை விளையாடக் கொடுக்காதீர்கள்.

இஸ்திரி செய்து விட்டு இஸ்திரி பெட்டியை சூடாக குழந்தைகள் அருகே விட்டு செல்லக் கூடாது.

சுமார் ஒரு வயது வரை தரைமட்டத்தில் உள்ள பொருள்களைக் கையாளும் குழந்தை அதற்குப் பிறகு எதையாவது பிடித்துக் கொண்டு நிற்கவேண்டும், நடக்க வேண்டும் என முயற்சிக்கிறது. ஸ்டூலைப் பிடித்துக் கொண்டு நிற்பது, டைனிங் டேபிளில் உள்ள துணியை இழுப்பது போன்ற முயற்சிகளையெல்லாம் செய்யும் காலகட்டம் இது என்பதால் அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

சுமார் இரண்டு வயதில் ஸ்டூலின்மீது ஏறுவது மட்டுமல்ல. பிற சாகசங்களையும் செய்து பார்க்க முயற்சிக்கிறது. மேஜை டிராயரை இழுக்க முயற்சிக்கிறது. நம்மைப் போலவே காஸ் லைட்டரை அழுத்திப் பார்க்க ஆசைப்படுகிறது. சிகரெட் லைட்டர், காஸ் லைட்டர் ஆகியவற்றை குழந்தைகளுக்கு எட்டாத இடங்களில் வைத்திருப்பது மிக அவசியம்.
ஏணிப்படிகளில் ஏற குழந்தைகள் முயற்சிக்கும். சிறு குழந்தைகள் அவ்வாறு ஏறாமல் இருக்க மரத்தில் சின்ன தடுப்புக் கதவு ஒன்று போட்டு பூட்டி வைக்கலாம்.

சென்ட், ஷேவிங் லோஷன் போன்றவற்றை அப்பா ஸ்ப்ரே செய்து கொள்வதைப் பார்க்கும் குழந்தைக்குதானே அவற்றை முயற்சித்துப் பார்க்கும் ஆர்வம் பொங்கும். முக்கியமாக, ஷேவிங் ப்ளேடுகள் மற்றும் ரேஸர்களை மறந்தும்கூட குழந்தைக்கு எட்டும் இடத்தில் வைத்து விடவேண்டாம்.

வாயில் போட்டு விழுங்கும் அபாயமுள்ள விளையாட்டுப் பொருட்களை சிறு குழந்தைகளுக்குக் கொடுக்காதீர்கள்.

கீழே விழுந்த அல்லது கீழே கிடக்கும் எதையும் வாயில் போடக்கூடாது என அறிவுறுத்துங்கள்.

தரையில் குழந்தைகள் சிறு நீர் கழித்தால் உடனே அந்த ஈரத்தை துடைத்து விடவும். குழந்தை அதில் வழுக்கி விழ நேரும்.

சூடான எந்தப் பொருளையும் டைனிங் டேபிளின் முனைக்கருகே வைக்க வேண்டாம். அந்த மேஜைமீது விரிக்கப்படும் துணி, மேஜையின் எல்லையைத் தாண்டிக் கீழே தொங்கவேண்டாம்.

ஜன்னல்கள், பால்கனிகள் போன்றவற்றின் வழியாகக் குழந்தை கீழே விழுந்துவிடும் வாய்ப்பு உண்டு. போதிய தடுப்புக் கம்பிகளை உடனடியாகப் பொருத்துங்கள்.

கதவை மூடும்போது குழந்தை கையை நசுக்கிக் கொள்வது வெகு சகஜம். கவனம் தேவை.

எங்கேயாவது பைக்கில் போய் விட்டு வீட்டிற்கு வரும்போது பைக் சைலென்ஸர் சூடாக இருக்கும் . குழந்தைகள் அப்பா என்று ஓடி வந்து சைலன்ஸரில் பட்டுவிடலாம்.

வீட்டில் சைக்கிள், பைக் போன்ற வாகனங்களில் குழந்தைகள் ஏற முயற்சித்து விழுந்து ஆபத்து உண்டாக்கலாம். சைக்கிளில் செயின் கார்டு தேவை. பைக்கை மூடி வைக்கலாம்.

குழந்தைகளை ஒருபோதும் அதிகமான வெப்பத்துக்கு உட்படுத்த வேண்டாம். நீண்டதூரம் குழந்தையை அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் இருசக்கர வாகனங்களில் செல்வது சரியல்ல.

குழந்தைகளை ஷாப்பிங் போகும் போது கொண்டு செல்லதீர்கள்.

பண்டிகை நாட்களில் குழந்தைகள் நெருப்புக் காயம் படாமல் கண்காணிப்பாக இருங்கள்.

வீட்டில் அனாவசியமாக குப்பை போல் தேவையற்றப் பொருட்களை கொட்டி வைப்பது நல்லதல்ல. ஊர்வன மற்றும் விஷ ஜந்துக்கள் அதில் மறைந்திருக்கலாம்.

குழந்தைகள் மண்ணில் விளையாடுவதை அனுமதிக்காதீர்கள்.
துரு பிடித்த மற்றும் கிருமித் தொற்று ஏற்படுத்தும் பொருட்களை அப்புறப்படுத்தவும். டெட்டானஸ் போன்ற கொடிய கிருமிகள் அவற்றில் காணப்படலாம். அப்படிப் பட்ட பொருட்களால் காயம் பட்டால் உடனே தடுப்பூசி போடவும்.

தரையை அடிக்கடி டெட்டால் போன்ற கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தமாக வைத்திருக்கவும்.

குழந்தைகளது விளையாட்டுப் பொருட்களையும் அடிக்கடி கழுவி சுத்தமாக்கிக் கொடுக்கவும்.

குழந்தகளுக்கு உடைகள்,ஷூ போடும்போது நன்றாக உதறிய பின் போடவும்.
நாய் பூனை போன்ற செல்லப் பிராணிகளை குழந்தைகள் உள்ள வீட்டில் வளர்க்கதீர்கள்.அதன் உமிழ் நீர்,நகம்,முடி ஆகியவற்றில் நோயுண்டாக்கும் ஏராளம் கிருமிகள் உள்ளன.

வீடுகளில் தரைப்பகுதி அதிக ஏற்றத் தாழ்வுகள் இல்லாது சமமாக அமைக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு நல்ல ஆடையிட்டு அழகு பாருங்கள். தங்க நகைகள் வேண்டாம். திருடர்களை ஈர்க்கும்.

விருந்தினர் வீடுகளுக்குக் செல்லும்போது கவனம் தேவை. அங்கு பழக்கமில்லாத இடங்களில் புதிய ஆபத்துகள் காத்திருக்கலாம்.

Wednesday, June 6, 2012

மலராத மொட்டுக்கள்!


இரத்தக் கறைபடிந்த
நறைத்த சிங்கமொன்று
சிறியா தேசத்தை
வேட்டையாடும்
அகோரக் காட்சி!
 
உலுத்துப் போன
கதிரையின் கால்களை
மனிதக் குருதியூற்றி
ஸ்திரப்படுத்த
அமெரிக்கத் தொனியில்
ஆயுதப் பூஜை!
 
அகோரத் தாண்டவத்தின்
அராஜகத்தை
தாங்கமுடியா உயிர்கள் மட்டும்
தம் கூடுகளை விட்டும்
விரண்டோடிக் கொண்டிருந்தன!
 
தேகத்தைப் போல்
தம் தேசத்தையும் விட்டு
விடைபெரும் உயிரை
மனிதங்கள் மட்டும்
கண்ணீரில் குளிப்பாட்டி
வழியனுப்பிவைத்த
வரலாறு மறக்காத
சோகவடுக்கள்!!
 
வடித்த கண்ணீரும்
வடிந்த இரத்தமும்
புதிய தலைமுறையின்
வேர்களில் தஞ்சம் புக
கிளைவிரித்து வளரும்
நாளைய புருஷர்களின்
குருதியில் அமைதியை
நிலைநாட்டி நீடூடிகாலம்
'சாந்தி' ஊர்வலம் நடத்தட்டும்!
 
யுத்தம் கால்பதித்த
நாள் முதல்
மரண ஓலம் எழுப்பிய சத்தம்
அத்தேசத்தின்
பல சகாப்தங்களுக்கு
ஒலித்துக் கொண்டேயிருக்கும்!
 
பால்வடியும் பச்சிளம்
மலர்களில் மரணப்பயம்!
 
காகிதப் பூக்கள்
என்றெண்ணியா
அவர்களை - ரவைகள்
துளையிட்டுப்பார்த்தன!?
 
கிஞ்சிற்றும்
நெஞ்சமிருந்தால்
அதில் சொட்டேனம்
மனிதமிருந்தால்
மலராமலே வாடிப்போன
பிஞ்சு மொட்டுக்கள்
எத்தனை ரம்யத்தோடு
மலர்ந்திருக்கும்!
 
'சிறியா' நந்தவனப் பூக்கள்
இதழ்விரிக்கு முன்னே
இதழிதழாய்
உதிர்ந்து போன - அந்நாட்கள்
இரத்த வரிகளால் எழுதப்படட்டும்
இனியும் எழுதப்படாமலிருக்க!
 
               - அபூ அரீஜ்  (06.05.12)

Thursday, May 31, 2012

டீன் ஏஜ்!!

டீன் ஏஜ் என்று சொல்லப்படும் பருவத்தில் நுழையும் குழந்தைகளிடம், பெற்றோர் மிக ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. என் குழந்தைகளிடம் நான் மிகச் சிறிய வயதிலேயே என்னை அவர்கள் ஃப்ரெண்டாக நினைத்துக் கொள்ளச் சொன்னேன். பலனையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்! – சமயத்தில் என்னைப் பேரைச் சொல்லிக் கூப்பிடுவார்கள் – கேட்டால், நீ என் ஃப்ரெண்ட் தானே என்று பதிலும் வரும்!!

நான் இங்கு சொல்ல வந்தது என் குடும்பக் கதையை அல்ல! எனக்குத் தெரிந்த குடும்பத்துப் பெண்ணின் கதை! அந்தப் பெண் மேல்நிலைப் படிப்பு முடிக்கும் வரை உள்ளூரிலேயே படித்தாள். கல்லூரி செல்வதற்கு பேருந்தில் 30 நிமிடம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. கல்லூரியில் நன்றாகப் படித்துக் கொண்டிருக்கிறாள் என்றே எண்ணிக் கொண்டிருந்தனர் அனைவரும். 3 வருடங்களில் பட்டப்படிப்பு முடிந்த சமயம், பட்டம் வாங்குவதற்கு கான்வகேஷனுக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்ற விளம்பரத்தைக் கண்டு, அவள் ஏன் இன்னும் விண்ணப்பிக்கவில்லை என்று அவள் உறவினர் கேட்ட போது தான், கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையானது.

முதலில் தான் விண்ணப்பம் செய்ததாகச் சொன்னாள். பின் மாற்றிப் பேசினாள். அவளது பரீட்சை நுழைவு எண்ணை வாங்கி, பல்கலைக்கழக வலைத்தளத்தில் பார்த்த போது, அவள் பரீட்சையே எழுதியிருக்கவில்லை! மேலும் இரண்டாம் வருடத்தில் ஒரு பேப்பர் அரியர்ஸ்! காரணம் என்னவென்று யூகித்து விட்டீர்களா? கல்லூரியில் இரண்டாம் வருடத்தில் கிடைத்த கூடா நட்பும், அதன் மூலம் அறிமுகமான இண்டர்நெட் சாட்டிங்கும் தான்! இதில் சாட்டிங்கில் கிடைத்த ஒரு பையனுடன் காதலாம்! கல்லூரிக்குப் போகாமல் இந்த இரண்டு வேலைகளையும் ‘ஒழுங்காக’ச் செய்ததில், மூன்றாம் வருடம் அட்டெண்டன்ஸ் போதாததால் பரிட்சைகள் எழுத இயலவில்லை! பெற்றோர் பார்க்கக் கூடாதென்று இரண்டாம் வருட மதிப்பெண் பட்டியலில் இருந்து எல்லாவற்றையும் கிழித்துப் போட்டிருக்கிறாள்! அவர்கள் இருந்த அபார்ட்மெண்டில் மாலை தபால்கள் வீட்டுக்கு எடுத்து வருவது அவள் வேலை; அதனால், கல்லூரியிலிருந்து வந்த கடிதங்கள் அத்தனையையும் அவளே அழித்தும் விட்டாள்! பெற்றோருக்கே தெரியாமல் இன்னொரு கைப்பேசி வைத்திருந்தாள் – அந்தக் காதலனின் பரிசு! அவளது மின்னஞ்சல் முகவரி, மற்ற விவரங்கள் வாங்கி எல்லா விவரங்களையும் தெரிந்து கொண்டனர் பெற்றோர். மின்னஞ்சலின் பாஸ்வேர்ட் அந்தக் காதலனுக்கும் தெரியுமாம்!! தகவலை எப்படியெல்லாம் பகிர்ந்து கொள்கின்றனர்! டெக்னாலஜி ஹாஸ் இம்ப்ரூவ்ட் ஸோ மச்!
பெற்றோருடைய நிலைமையை நினைத்துப் பாருங்கள். ஒருவழியாக காதலுக்கும் இன்ஃபாச்சுவேஷனுக்கும் உள்ள வித்தியாசங்களைப் புரிய வைத்து, வாழ்க்கையை விளையாட்டாக எண்ணக் கூடாதென்ற பாடத்தையும் அவளுக்குத் தெரிய வைத்தனர். பின்னர் அந்தப் பெண் திருந்தி, ஒழுங்காகத் தன் படிப்பை முடித்தாள்! என்ன கேட்கிறீர்கள் – காதலன் என்ன ஆனான் என்றா? மின்னஞ்சலில் பாஸ்வேர்ட் மாறியவுடன் அவன் அலர்ட் ஆகிவிட்டான்! இவள் பெற்றோருக்குத் தெரிந்து விட்டது எனத் தெரிந்ததும் அவன் ஜூட்! செல்ஃபோனை அவனிடமே திருப்பித் தந்தாகி விட்டது! அந்தக் கால திரைப்பட பாணியில் சொல்ல வேண்டுமானால், முள்ளில் விழ இருந்த சேலையை சேதாரமில்லாமல் காப்பாற்றியாகி விட்டது!
இங்கே பெண் வலையில் வீழ்ந்தாள் – ஆனால், பெண்களும் இப்போது ஆண் பிள்ளைகளை ஏமாற்றுகிறார்கள். குழந்தை ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, தம் குழந்தைகளைச் சரியான வாழ்க்கைப் பாதையில் செலுத்துவது பெற்றோரின் கடனே. மாறி வரும் காலத்தோடு மாற வேண்டியது பெற்றோரும் தான். அவர்கள் தம் குழந்தைகளோடு ‘க்வாலிட்டி டைம்’ செலவழிக்க வேண்டும். அவர்கள் அன்றாட வாழ்வில் என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள், என்னென்ன விஷயங்களில் சந்தோஷப்பட்டார்கள் (அவை பெரியவர்களுக்கு எவ்வளவு சின்னதாகத் தெரிந்தாலும் சரி) என்று தினம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்! குட் டச், பேட் டச் சொல்லித் தருவதோடு மட்டுமன்றி, காதலுக்கும் இன்ஃபாச்சுவேஷனுக்கும் வித்தியாசத்தையும் சொல்ல வேண்டும்!

இந்த விடலைப் பருவம் தான், ‘என் அப்பா/அம்மா மாதிரி உண்டா?’ என்று குழந்தைகள் அதிசயித்து பார்த்ததிலிருந்து, ‘என் அப்பா/அம்மாவிற்கு ஒன்றும் தெரியாது’ என்று நினைக்க ஆரம்பிக்கும் பருவம்! எதை எடுத்தாலும் எதிர்த்துப் பேச ஆரம்பிக்கும் பருவம்! இந்தப் பருவத்தை பெற்றோரும் தாண்டி வந்ததினால், விவேகத்துடன், விடலைக் குழந்தைகளை அரவணைத்துச் செல்ல வேண்டும்.

கணிணி மூலம் அறிவைப் பெருக்கிக் கொள்ளும் இக்காலத்தில், குழந்தைகளை கணிணியைத் தொடாமல் தவிர்க்கக் கூடாது/ முடியாது; இதற்கு வேண்டாத சில வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் சாஃப்ட்வேரைப் பயன்படுத்தலாம். முக்கியமாக, பெற்றோர் தம் குழந்தைகள் பார்க்கக்கூடாத வலைத்தளங்களைத் தாமும் பார்க்காமல் இருக்க வேண்டும்!!

ஃபேஸ்புக் – மூலம் பள்ளி மாணவ மாணவிகள் நண்பர்கள் ஆகும் கலாச்சாரமும் பெருகி வருகிறது. நான் படித்த ஒரு செய்தியில், ஒரு பள்ளியைச் சேர்ந்த குழந்தைகள் முகப்புத்தகத்தில் தம் தலைமையாசிரியரைக் குறித்துக் கிண்டல் செய்து செய்திகள் வெளியிட்டதில் இருந்து, அந்தப் பள்ளியின் விளையாட்டு ஆசிரியருக்கும் மாரல் ஸயின்ஸ் ஆசிரியருக்கும் இன்னொரு வேலையும் சேர்ந்து விட்டது…. – மாற்றுப் பெயரில் தானும் இவர்களுடன் சேர்ந்து, இந்தக் குழந்தைகள் எழுதுவதைக் கண்காணிக்கும் பணி!! தங்கள் அலுவலக வேலைக்காக கணிணி கற்றுக் கொள்ளும் பெற்றோர், தம் குழந்தைகளின் முகப்புத்தக நண்பரும் ஆகலாமே!

நேரமின்மை என்பது ஒரு மாயை – விரும்பிய வேலைகளுக்கு எப்படியாவது நேரம் ஒதுக்குகிறோம் அல்லவா.. – - குழந்தைகள் வளரும் பருவத்தில் சிறிது நேரத்தை அவர்களுக்காக ஒதுக்கி, அவர்களை நேர்வழியில் அவனியில் முந்தியிருப்பச் செய்தால், பெற்றோருக்கு வயதான காலத்தில் அவர்கள் அசை போட அருமையான நினைவுகளும் இருக்கும், அந்தச் சமயம் வளர்ந்து பெரியவர்களான அவர்கள் குழந்தைகளும், ‘என் அப்பா/அம்மா ரொம்ப அண்டர்ஸ்டாண்டிங் – அவர்கள் என்னை வளர்த்த மாதிரி தான் நான் உங்களிடம் நடக்க முயற்சி செய்கிறேன்’ என்று தம் மக்களிடம் சொல்லிக் கொண்டிருப்பார்கள்!!

மிடில் கிளாஸ் மாதவி

Sunday, May 27, 2012

குழந்தைகளைப் பாதுகாப்போம்!

ஒரு காலத்தில் ஒரு டஜன் பிள்ளைகளைப் பெற்று ஒரு கவலையும் இல்லாமல் நமது முன்னோர்கள் வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைக்கு ஒன்றோ இரண்டோ குழந்தைகளை வைத்துக் கொண்டு நமது பெற்றோர்கள் படும் பாடு சொல்லி மாளாது! காரணம் சமூகத்தில் நிலவுகின்ற அச்சுறுத்தும் நிகழ்வுகள்.

“ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்” என்பதெல்லாம் பழைய மொழிகளாகிவிட்டன. இன்று பிள்ளைகளெல்லாம் கிரில் கேட்டுகளுக்கு உள்ளே கிரிமினல்களைப் போல அடைபட்டுக் கிடக்க வேண்டிய சூழல்.

குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக நிகழும் தொந்தரவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்தகைய அச்சுறுத்தல்களிடமிருந்து அவர்களைப் பாதுகாக்க பெற்றோர் அதிக விழிப்புடன் இருக்க வேண்டியிருக்கிறது! குழந்தைகளின் உடல் நலம் குறித்த பாதுகாப்பு உணர்வுகள் இன்னொரு பக்கம் பெற்றோர் முன்னால் வந்து நிற்கின்றன.

வீட்டுக்கு உள்ளேயும், வீட்டுக்கு வெளியேயும் குழந்தைகளுக்கு ஆபத்துகள் காத்திருக்கின்றன. அது மனிதர்கள், விலங்குகள், அஃறிணைகள் என எந்த வடிவத்திலும் வரலாம்!

குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி ?
வீட்டுக்கு வெளியே
வெளியே போகும் முன்
குழந்தைகளுடன் வெளியே போகிறீர்களா? ஒரு நிமிடம் நில்லுங்கள். அசம்பாவிதங்கள் நடக்கக் கூடாது என்பதே நமது விருப்பம். திருடர்களும், அசம்பாவிதங்களும் நம்மிடம் சொல்லிக் கொண்டு வருவதில்லை. எனவே வீட்டை விட்டுக் கிளம்பும் போதே உங்கள் குழந்தைகளிடம் அவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதைச் சொல்லுங்கள்.

வீட்டை விட்டுக் கிளம்பும் போது, உங்கள் மொபைல் கேமராவை எடுத்து உங்கள் குழந்தைகளைப் போட்டோ எடுங்கள். ஒருவேளை உங்கள் குழந்தை எங்கேனும் தவறிப் போனால் கண்டுபிடிக்க பேருதவியாய் இருக்கும். “ஒரு மாதிரி பிங்க் கலந்த வயலெட் கலர்ல ஒரு பிராக் மாதிரி கவுன்..“ என்றெல்லாம் பதட்டத்தில் உளறுவதை இந்த படம் தடுக்கும்.

படத்தைக் காமித்து “இதான் குழந்தை…“ என விசாரிக்க உதவியாய் இருக்கும். தொழில் நுட்பம் இன்றைக்கு வெகுவாக வளர்ச்சியடைந்திருக்கிறது. அவற்றை குழந்தைகள் பாதுகாப்புக்காய் பயன்படுத்துவதற்கு இது ஒரு சின்ன உதாரணம் !
அதே போல ஒரு வேளை தவறினால் எந்த இடத்தில் சந்தித்துக் கொள்வது ? என்பதைச் சொல்லிக் கொடுங்கள். குறிப்பாக பெரிய பார்க்கள், விழாக்கள், ஷாப்பிங் மால்களில் இது உதவும்.

ஒருவேளை தவறினால் உதவி கேட்பது யாரிடம் என்பதைக் குழந்தைக்குச் சொல்லிக் கொடுங்கள். உதாரணமாக காவலரிடம் உதவி கேட்கவேண்டுமெனில், உடையை மட்டும் சொல்லாமல் “பேட்ஜ்” அணிந்திருப்பார், இந்த “லோகோ” உடையில் இருக்கும் என்பன போன்ற விஷயங்களையும் சேர்த்தே சொல்லிக் கொடுங்கள் !

எங்கே இருக்காங்க குழந்தைகள் ?
உங்க குழந்தைங்க விளையாடப் போவதிலோ, நண்பர்களுடன் வெளியே போவதிலோ தவறில்லை. ஆனால் குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள் ? யாருடன் இருக்கிறார்கள் போன்ற விஷயங்களையெல்லாம் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

உதாரணமாக, “படத்துக்கு போறேன்” என்று உங்கள் பையன் சொன்னால், யாருடன் செல்கிறான். எங்கே செல்கிறான். எப்போ காட்சி துவங்கும், எப்போ முடியும் என அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

“வெளியே போறேன்னு சொன்னான், எங்கே போனான், யார் கூட போனான்னு தெரியலையே” என புலம்பும் நிலையை வைத்துக் கொள்ளாதீர்கள். பக்கத்து தெருவுக்குப் போனால் கூட சொல்லி விட்டுப் போகும் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு ஊட்டுங்கள்.

கொஞ்சம் பெரிய பிள்ளைகளெனில் அவர்களுடன் செல் போன் தொடர்பில் இருங்கள். அவர்கள் பாதுகாப்பற்ற இடத்தில் இருப்பதாய் தோன்றினால் கவனத்தை அதிகப்படுத்துங்கள்.

கடைவீதிகளில்..
கடைவீதிக்குப் போகும் போது குழந்தையைக் கூட்டிக் கொண்டு போனால் முதல் கவனம் குழந்தையின் மீது இருக்கட்டும். அழகான புடவையைப் பார்த்து குழந்தையை விட்டு விடாதீர்கள். பெற்றோரின் கவனம் சிதறும் நேரம் பார்த்து குழந்தையை யாரேனும் கடத்தில் செல்லும் வாய்ப்பு உண்டு.

யாரேனும் உங்கள் குழந்தையை உற்றுக் கவனிப்பதாய் தோன்றினால், அவர்களிடம் போய் சும்மா பேசுங்கள். முடிந்தால் உங்கள் செல்போன் கேமராவில் அவரை படம் எடுங்கள். நீங்கள் அவரைக் கவனித்தீர்கள், அவருடன் பேசினீர்கள் என்றாலே ‘அடையாளம் தெரிந்து விட்டது’ என அந்த நபர் விலகி விடுவார்.

“குழந்தை ரொம்ப கியூட் அதான் பாத்தேன்” என யாரேனும் சொன்னால், “நன்றி” என ஸ்நேகமாய் ஒரு புன்னகையைக் கொடுத்து விட்டு நடையைக் கட்டுங்கள். அவருடன் அமர்ந்து உங்கள் குழந்தையின் சாதனைகளையெல்லாம் பட்டியல் போடவேண்டாம் !

உங்கள் குழந்தையை யாராவது நெருங்குகிறார்கள், பேசுகிறார்களெனில் உடனே அந்த இடத்திற்குச் செல்லுங்கள். அந்த நபரைப் பற்றிய விவரங்களை கேளுங்கள்.

காரில் போகும்போது
“காரில் ஏறினதும் நீ பண்ண வேண்டிய முதல் வேலை என்ன ?”

“சீட் பெல்ட் போடறது மம்மி…”

நாலு நாள் இந்த உரையாடல் நீங்கள் காரில் ஏறியதும் நடந்தால், ஐந்தாவது நாளில் இருந்து குழந்தை தானாகவே சீட் பெல்ட் போடப் பழகிவிடும். அப்புறம் ஒருவேளை நீங்கள் சீட் பெல்ட் போடாவிட்டால் உங்களிடம் அதே கேள்வியை குழந்தையே கேட்கும் !

சீட் பெல்ட் போடுவது கார் பயணத்துக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். அது பக்கத்தில் இருக்கும் கோயிலுக்குப் போனாலும் சரி, தூரத்தில் இருக்கும் சொந்த ஊருக்குப் போனாலும் சரி. அலட்சியம் வேண்டாம்.

என்னதான் காரில் ஏர்பேக் போன்ற வசதிகள் இருந்தாலும் சீட் பெல்ட் போடாமல் பயணித்தால் பாதிப்பு பயங்கரமாக இருக்கும் என்பது நினைவில் கொள்ள வேண்டிய விஷயம். குழந்தை மீது அக்கறை இருக்கிறதா, சீட் பெல்ட் போடப் பழக்குங்கள்.
குழந்தையோடு பேசுகிறீர்களா ?
உங்கள் குழந்தையின் பாதுகாப்புக்கு முதல் தேவை என்ன தெரியுமா? உங்களிடம் உங்கள் குழந்தை பாதுகாப்பை உணர்வது தான். “என்ன பிரச்சினைன்னாலும் அம்மா பாத்துப்பாங்க, அப்பா பாத்துப்பாங்க” எனும் ஆழமான நம்பிக்கை குழந்தைகளுக்கு இருக்க வேண்டியது அவசியம்.

அதுக்கு முதல் தேவை குழந்தைங்க கூட போதுமான அளவு நேரம் செலவிடறது! குழந்தைகளோட மனநிலை எப்படி இருக்கு ? அவர்களுடைய நாள் எப்படிப் போச்சு? அவர்கள் என்ன பண்ணினாங்க? போன்ற எல்லா விஷயங்களையும் அன்புடன் கேட்டறியுங்கள். அவர்களுக்கு ஒரு நல்ல ஆறுதல் தோளாக இருக்க வேண்டியது அவசியம்.

குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள், பதின் வயதுப் பிள்ளைகளிடமெல்லாம் அதிக நேரம் உரையாடலில் செலவிடுங்கள். அவர்களுடைய வழிகளைச் செம்மைப் படுத்தவும், அச்சுறுத்தல்கள் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளவும் உங்கள் உரையாடல் உதவ வேண்டும். அவர்களுடைய பயங்கள், கவலைகள் எல்லாம் உங்களுக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும்.

“ஐயோ இதெல்லாம் நான் எப்படி அம்மா கிட்டே சொல்வது” என குழந்தை நினைக்கக் கூடாது. “எதுவா இருந்தாலும் மம்மி கிட்டே சொல்வேன்” என குழந்தை நினைக்குமளவுக்கு இயல்பாகப் பழகுங்கள்.

பள்ளி செல்லும் போது !…
பள்ளிக்கூடத்திற்குக் குழந்தைகள் நடந்து போகிறதென வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளோடு சிறிது நாட்கள் நீங்களும் கூடவே நடந்து செல்லுங்கள். சாலையில் எப்படி நடப்பது, எங்கெங்கே கவனமாக இருப்பது போன்ற விஷயங்களைச் சொல்லிக் கொடுங்கள். எந்த இடம் பாதுகாப்பானது, யாரிடம் உதவி கேட்கலாம் போன்ற விஷயங்களையும் அவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

ஒருவேளை பொது வாகனங்களில் பயணிக்கும் குழந்தையெனில் பஸ் ஸ்டான்ட் க்கு போய் குழந்தைக்கு எந்த பஸ், எங்கே ஏறுவது, எங்கே இறங்குவது, எப்படி ஏறி இறங்குவது போன்ற விஷயங்களை பழக்குங்கள். பஸ்பயணத்தில் அச்சுறுத்தலெனில் ஓட்டுநரை அணுக குழந்தைக்குச் சொல்லிக் கொடுங்கள்.

பயணத்தின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும், பாதுகாப்பு விஷயங்கள் என்னென்ன தெரிந்திருக்க வேண்டும் போன்றவையெல்லாம் குழந்தைகள் அறிந்து வைத்திருப்பது அவசியமானது !

தெரியாத நபர் “லிஃப்ட்” கொடுத்தால் மறுக்கப் பழக்குங்கள். ஒவ்வொரு முறையும் உங்களிடம் அனுமதி வாங்கச் சொல்லுங்கள் !

குழந்தைகள் பயணிக்கையில் எப்போதும் ஒன்றிரண்டு பேராய் நடப்பது, பஸ்ஸில் பயணிப்பது பாதுகாப்பானது. தனியே எங்கே செல்வதாக இருந்தாலும் உங்களுக்குத் தகவல் தெரிய வேண்டும் என்பது பால பாடம்.

வாகனங்கள் எச்சரிக்கை !
வாகனங்கள் குழந்தைகளின் மிகப்பெரிய எதிரிகள். அதுவும் சென்னை போன்ற நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் பத்து மடங்கு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இரண்டு விதமான ஆபத்துகள் வாகன விஷயத்தில் உண்டு.

ஒன்று விபத்து.
நிறுத்தப் பட்டிருக்கும் வாகனங்களின் பின்னாலோ, பக்கவாட்டிலோ குழந்தைகள் போகாமல் இருக்க வேண்டும். குறிப்பாக வாகன டயரின் அருகே நின்று பேசுவது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும். வாகனங்கள் வரும் சாலையில் குழந்தைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுங்கள்.

இரண்டாவது கடத்தல்!
குழந்தைகள் கடத்துபவர்கள் வாகனங்களையே பயன்படுத்துகிறார்கள். குழந்தைகளை வசீகரிக்கும் விதமாக சாக்லேட், பொம்மை போன்ற ஏதாவது பொருளைக் காட்டி அவர்கள் காரின் அருகே வந்ததும் சுருட்டிக் கொண்டு பறந்து விடுவது அவர்களுடைய பாப்புலர் திட்டம்.

தெரியாத நபர் இருக்கும் காரின் அருகே எக்காரணம் கொண்டும் போகவேண்டாம் என குழந்தைகளைப் பழக்குங்கள் !

போன் நம்பர் தெரியுமா ?
உங்க போன் நம்பர் உங்க குழந்தைக்குத் தெரியுமா? தெரியாவிட்டால் முதலில் அதைச் சொல்லிக் கொடுங்கள். குட்டிப் பிள்ளைகள் கூட ஒரு போன் நம்பரை எளிதில் கற்றுக் கொள்வார்கள். பள்ளி செல்லத் துவங்கிவிட்டால், வீட்டு விலாசத்தையும் கூடவே சொல்லிக் கொடுங்கள்.

பலரும் செய்யும் தப்புகளில் ஒன்று தங்கள் முழுப் பெயரைக் குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்காதது தான். உன்னோட அப்பா பேரென்ன என கேட்டால் “ராஜூ” என்று குழந்தை சொல்வதை விட “சுப்ரமணிய ராஜூ” என சொல்வது அதிக பயன் தரும். அப்பா, அம்மாவின் முழுப் பெயரை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சில முக்கிய அடையாளங்களையும் குழந்தைக்குச் சொல்லிக் கொடுங்கள். அவ்வப்போது வீட்டில் விளையாட்டாக குழந்தையிடம் திருடன் போலீஸ் விளையாட்டை விளையாடி போன் நம்பர், விலாசம் எல்லாம் கேட்டு பழக்கப்படுத்துங்கள்.

விளையாட்டாய் பழகும் விஷயங்கள் குழந்தையின் மனதில் எளிதில் பதியும் என்பது குழந்தை உளவியல் !

கையில் நம்பர்
குழந்தைகளின் கையில் போன் நம்பரை எளிதில் அழியாத பேனாவைக் கொண்டு எழுதி வைக்கலாம். வெளியிடங்களில் ஒருவேளை குழந்தை தவறிப் போனால் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும் என்பது சிலருடைய கருத்து. குறிப்பாக பேசத் தெரியாத குழந்தைகள் விஷயத்தில் இது ரொம்ப பயன் தரும். ஒரு வேளை குழந்தை பதட்டத்தில் எண்ணை மறந்து விட்டால் கூட இது உதவும் !

வெளியூரில் போய் ஏதாவது ஹோட்டலில் தங்குகிறீர்களெனில் அந்த ஹோட்டலின் பிஸினஸ் கார்ட்/விசிடிங் கார்ட் நான்கைந்து எடுத்து குழந்தையின் பாக்கெட்களில் போட்டு வைப்பது நல்லது. தவறிப்போனால் ஹோட்டல் பெயரும், தொடர்பு எண்களும் அவர்களிடம் இருக்கும் !

கைகளில் அழகிய அகலமான ரப்பர் பேன்ட் ஒன்றைப் போட்டு அதில் பெயரும் தொலைபேசி எண்ணும் எழுதி வைப்பது கூட நல்ல யோசனையே.

ஷாப்பிங், தீம்பார்க் போன்ற இடங்களுக்குப் போனால், எக்காரணம் கொண்டும் அந்த இடங்களை விட்டு வெளியே வரவேண்டாம் என சொல்லுங்கள். வெளியே வந்தால் ஆபத்து அதிகமேயன்றி குறைவில்லை! குழந்தை குட்டிகளுடன் நிற்கும் ஏதேனும் அம்மாக்களிடம் சென்று உதவி கேட்பது ரொம்ப நல்ல விஷயம் என்பதையும் சொல்லிக் கொடுங்கள் !

உடல் நலம் கவனம்
பொது இடங்களுக்குப் போகும் போது குழந்தைகளின் உடல் நலத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள். தண்ணீர் விளையாட்டெனில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா துணி மணிகள் கைவசம் இருக்கட்டும். வெயில் எனில் குடை தொப்பி போன்றவை நிச்சயம் தேவை.

தண்ணீர் எப்போதும் கையில் இருக்கட்டும். அடிக்கடி தண்ணீர் குடிப்பது சுற்றுலா, ஷாப்பிங், பார்க் போன்ற இடங்களில் ரொம்ப அவசியம். உடலில் தண்ணீர் பற்றாக்குறை நிலை வந்தால் சோர்வும், நோய்களும் வந்து விடும்.
குழந்தைகள் பெரும்பாலும் “தண்ணீர் கொடுங்கள்” என்று கேட்பதில்லை. எனவே பெரியவர்கள் தான் அதைக் கவனித்து அடிக்கடி தண்ணீர் கொடுக்க வேண்டும்.

நல்ல வசதியான செருப்பை அணிவது அவசியம். சிம்பிளாக காலை உறுத்தாத செருப்புகள் சிறப்பானவை. அதே போல நல்ல வசதியான ஆடைகள் அணிவியுங்கள். ஸ்டைலாக இருப்பதை விட வசதியாக இருப்பதே அதிக மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் என்பது மனதில் இருக்கட்டும் !
வீட்டுக்கு உள்ளே
குழந்தை தனியாய் இருக்கிறதா ?
வீட்டில் குழந்தையைத் தனியே விட்டுச் செல்ல வேண்டிய சூழ்நிலையெனில் பாதுகாப்பு விஷயங்களில் அதிக கவனம் எடுத்து சொல்லிக் கொடுங்கள்.

முக்கியமாக வீட்டுக் கதவுகளையெல்லாம் பத்திரமாகப் பூட்டி வைக்கச் சொல்லுங்கள். யாரேனும் வந்துக் கதவைத் தட்டினால் என்ன செய்ய வேண்டும்? தெரியாத நபர் எனில் என்ன செய்ய வேண்டும் போன்றவற்றையெல்லா தெளிவாகச் சொல்லுங்கள்.

வீட்டில் போன் அடித்தால் என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டியது முக்கியம். குறிப்பாக வீட்டில் குழந்தை தனியே இருப்பதைக் காட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது!. “நீங்க யாரு, டாடி கிட்டே என்ன சொல்லணும்..” என கேட்க குழந்தைகளைப் பழக்குங்கள்.

வீட்டுக்குப் போன் செய்து அடிக்கடி விசாரித்துக் கொள்ள வேண்டியது அவசியம். இன்னொரு முக்கியமான விஷயம், வீட்டில் குழந்தைகள் தனியே இருந்தால் அவர்கள் தண்ணீர், மின்சாரம், நெருப்பு போன்ற ஆபத்துகள் கூட நேரலாம். எனவே அது குறித்த பாதுகாப்பு அம்சங்களையும் சொல்லிக் கொடுங்கள் !

பக்கத்து வீடுகள்
உங்கள் பக்கத்து வீட்டு நபர்களின் வீடுகளுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். எந்தெந்த வீடுகள் பாதுகாப்பானவை. எவையெல்லாம் உங்கள் குழந்தை நம்பிக்கையுடன் செல்லலாம் என்பதை குழந்தைகளுக்கு விளக்குங்கள்.

தெரியாத வீடுகளுக்கு குழந்தைகள் செல்ல அனுமதிக்க வேண்டாம். தெரிந்த நபர்களின் வீடுகளுக்குக் கூட நீங்கள் கூடவே சென்று பழக்கப் படுத்துவதே நல்லது. நபர்கள் தெரிந்தவர்களாய் இருக்கிறார்கள் என்பதற்காக வீடு பாதுகாப்பாய் இருக்க வேண்டுமென்பதில்லை. அங்கே கவனிக்கப் படாத கிணறு இருக்கலாம், ஆபத்தான மாடி இருக்கலாம், அல்லது வேறு ஏதேனும் ஆபத்து ஒளிந்திருக்கலாம். எனவே நீங்கள் அந்த வீடுகளைப் பார்த்திருப்பது நல்லது !

பக்கத்து வீடுகளுக்குச் சென்றால் கூட, குழந்தை அந்த வீட்டை அடைந்து விட்டதா என்பதை போனில் விசாரித்து அறியுங்கள். அந்த வீட்டை விட்டுக் கிளம்பும் போதும் உங்களுக்குத் தகவல் சொல்லச் சொல்லுங்கள்.

நெருப்போடு கவனம் தேவை
தீ தொடர்பான ஆபத்துகள் குழந்தைகளுக்கு வருவதை பத்திரிகைகள் அவ்வப்போது துயரத்துடன் பதிவு செய்கின்றன. குழந்தைகளுக்கு நெருப்பு குறித்த ஆபத்துகளும், எச்சரிக்கை உணர்வுகளும் தெரிந்திருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம்.

தீப்பெட்டி, லைட்டர் போன்ற சமாச்சாரங்களை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைத்திருக்க வேண்டியது அவசியம். ஒரு வேளை வீட்டில் தீ பிடித்தால் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என சொல்லிக் கொடுங்கள். குழந்தைகள் பெரும்பாலும் வீட்டில் எங்கேயாவது ஒளிந்து கொள்ளவே முயலும் என்பது உளவியல் பாடம் !

உடையில் தீ பிடித்தால் ஓடக்கூடாது! தண்ணீர் ஊற்றவேண்டும், இல்லையேல் தரையில் புரளவேண்டும்! எரிந்து கொண்டிருக்கும் வீட்டுக்குள் எக்காரணம் கொண்டும் நுழையக் கூடாது, அப்போது மின் உபகரணங்கள் எதையும் தொடக் கூடாது. இப்படிப்பட்ட அடிப்படை விஷயங்களைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுன்கள்.

சுவாரஸ்யமாய் சீரியல் பார்த்துக் கொண்டே, “மூணு விசில் வந்துச்சுன்னு நெனைக்கிறேன். பாப்பா அந்த அடுப்பை அணைச்சு வை” என்றெல்லாம் சொல்லவே சொல்லாதீர்கள். சிரமம் பார்க்காமல் அத்தகைய வேலைகளை நீங்களே செய்யுங்கள். சமையலறை, கியாஸ் பக்கத்தில் குழந்தைகளை அனுமதிக்காமல் இருப்பது சாலச் சிறந்தது !

கொசு, பூச்சி மருந்துகள் !
வீட்டில் கொசு, பூச்சி, கரப்பான் போன்றவையெல்லாம் வராமல் இருப்பதற்காக நீங்கள் வாங்கி அடிப்பீர்களே ஹிட் போன்ற சமாச்சாரங்கள், அவை குழந்தைகளுக்கு ரொம்பவே டேஞ்சர் என்பது தெரியுமா ? பலருக்கும் தெரியாத விஷயங்களில் இதுவும் ஒன்று !

இத்தகைய ஸ்ப்ரேயை குழந்தைகள் தெரியாமல் முகத்தில் அடித்து உள்ளிழுத்தால் அவர்களுடைய மூளை நேரடியாகவே பாதிக்கப்படும். சுய நினைவு இல்லாமல் விழுந்து விடுவார்கள். எவ்வளவு சுவாசிக்கிறார்கள் என்பதற்கு ஏற்ப இந்த பாதிப்பு அதிகமாகும்.

எனவே ஹிட் போன்ற சமாச்சாரங்களை குழந்தைகளின் கண்களுக்கே எட்டாத இடத்தில் வைத்து விடுங்கள். அதே போல பாத்ரூம் கிளீனிங் பொருட்கள், பாத்திரம் கழுவும் பொருட்கள் போன்றவற்றையும் தூரமாகவே வையுங்கள்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் கெமிகல் பொருட்கள், நச்சுப் பொருட்கள் போன்ற சர்வ சங்கதிகளும் குழந்தைகளால் எடுக்க முடியாத இடத்தில் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம் !

விளையாட்டுப் பொருட்களில் கவனம்
குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் விளையாட்டுப் பொருட்களிலும் கவனம் தேவை. ரொம்பச் சின்னக் குழந்தைகளுக்கு சின்னச் சின்ன பாகங்கள் உடைய விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கக் கூடாது. குழந்தைகள் அவற்றை வாயில் போட்டு ஆபத்தை விலைக்கு வாங்கி விடலாம். அந்தந்த வயதினருக்கு ஏற்ற விளையாட்டுப் பொருட்களையே வாங்குங்கள் !

அதே போல தரம் குறைந்த விஷத் தன்மையுடைய பெயிண்டிங், மாலை போன்றவற்றை குழந்தைகளுக்கு வாங்கித் தராதீர்கள். அது அவர்களுக்கு அலர்ஜி போன்ற நோய்களைத் தந்து விடும்.

விளையாட்டுப் பொருட்கள் உடைந்து சுக்கு நூறானபின்னும் அதை ஒரு கோணியில் கட்டி வீட்டிலேயே வைத்திருக்கும் தவறைச் செய்யாதீர்கள். உடைந்த பொம்மைகளையும், விளையாட்டுப் பொருட்களையும் தூரப் போடுங்கள்.

குழந்தைகள் விளையாடும் இடத்தில் கூட அவர்களுக்குக் காயம் தரக்கூடிய கூர்மையான பொருட்கள் இருந்தால் அவற்றை அகற்றிவிடுங்கள். குழந்தைகளுக்கு அருகில் இருக்கும் பொருட்கள் மீதான கவனத்தை விட, விளையாட்டே பிரதானமாய் தெரியும். எனவே அவை ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

மின் உபகரணங்களில் கவனம்
குழந்தைகள் மின் உபகரணங்களைப் பயன்படுத்தும் போது ரொம்பவே கவனம் தேவை. என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக் கூடாது ? என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடுங்கள். அடிக்கடி அவற்றை குழந்தைகளுக்கு நினைவூட்டிக் கொண்டே இருங்கள். குறிப்பாக பிளக் பாயின்ட் போன்றவற்றுக்கு ஒரு கவர் வாங்கி மாட்டுங்கள் !

வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் அவன், ஃபிரிட்ஜ் போன்றவற்றையெல்லாம் குழந்தைகள் கையாள விடாதீர்கள். மின் பொருட்களில் எப்போதுமே ஆபத்து ஒளிந்திருக்கும். எனவே வெகு சில ஆபத்தற்ற மின் உபகரணங்களைத் தவிர வேறு எதையும் குழந்தைகள் தொட அனுமதிக்காதீர்கள்.

மின்சாரத்தில் இருக்கின்ற ஆபத்துகளைக் குழந்தைகளுக்கு சின்ன வயதிலேயே சொல்லிப் புரிய வைக்கலாம். லைட்டும், சுவிட்சும் விளையாட்டுப் பொருட்களல்ல என்பது அவர்களுக்கு மழலை வயதிலேயே புரிய வேண்டியது அவசியம்.
வீட்டுப் பொருட்களில் கவனம்
நமது வீடு குழந்தைக்குப் பாதுகாப்பாய் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டியது நமது கடமை. குறிப்பாக மாடிப் படிகள், பால்கனி, மொட்டை மாடி போன்ற இடங்கள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பாய் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். பாதுகாப்பு இல்லை என தோன்றினால் கிரில், கதவு, வலை என தேவையானவற்றைப் போட்டு பாதுகாப்பாக்கிக் கொள்ள வேண்டும்.

ஷேவிங் செட் போன்றவற்றை பத்திரமாய் வைத்திருப்பது, அயர்ன் பாக்ஸ் போன்றவற்றை பாதுகாப்பாய் வைப்பது, குப்பைகளை உடனுக்குடன் சுத்தம் செய்வது என வீட்டுப் பொருட்களில் கவனம் செலுத்த வேண்டும்.

டிவி, கனமான பொருட்கள், மிக்ஸி, கிரைண்டர் போன்றவை குழந்தை இழுத்துத் தள்ளாத வகையில் இருக்க வேண்டும். ஒரு மேஜை விரிப்பின் முனை கூட கீழே தொங்காமல் இருப்பது நலம். அப்படி இல்லையேல் மேஜை விரிப்பே இல்லாமல் இருப்பது நல்லது !

கத்தி, பிளேடு, அரிவாள் போன்ற விஷயங்களெல்லாம் கண்ணுக்கெட்டாத தூரத்தில் ரொம்ப ரொம்ப பாதுகாப்பான இடத்தில் இருக்கட்டும். தவறி விழாத இடத்தில், குழந்தையால் எடுக்க முடியாத இடத்தில் அவற்றை வையுங்கள். மாத்திரைகள், மருந்துகள் போன்ற சமாச்சாரங்களும் டிராக்களில் பூட்டப்பட்டே இருக்கட்டும் !

சின்னச் சின்ன இத்தகைய விஷயங்களில் பெரிய பெரிய ஆபத்துகள் ஒளிந்திருக்கின்றன.
மருந்துகளில் கவனம்
குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் விஷயத்தில் பலரும் டாக்டர்களாகி விடுவார்கள். அப்படி ஆகாமல் இருப்பது குழந்தைக்கும், நமக்கும் ரொம்ப நல்லது. சரியான நேரத்தில் டாக்டரிடம் போக வேண்டியதும், அவருடைய அறிவுரைப்படி நடக்க வேண்டியதும் ரொம்ப அவசியம். 50% பெற்றோரும் டாக்டர் சொல்வது பாதி புரியாமல் தான் டாக்டரின் அறையை விட்டு வெளியே வருகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. டாக்டர் சொல்வதை முதலில் தெளிவாய் கேளுங்கள்.

“கடைசி நாள்” அதாவது எக்ஸ்பயரி டேட் என்ன என்பதை கவனமாய் பாருங்கள். கவரிலும், பாட்டிலிலும் ஒரே நாள் இருக்கிறதா என்றும் பாருங்கள். பழைய மருந்துகளை வாங்கவே வாங்காதீர்கள். அது பழையதாகி விட்டது என மருந்து கடைக் காரரிடமும் சொல்லி விடுங்கள். காலாவதியான மருந்துகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் !
மருந்தை எவ்வளவு தடவை கொடுக்க வேண்டும், எந்த அளவு கொடுக்க வேண்டும் என்பதையெல்லாம் மருத்துவர் அறிவுரைப்படியே கேளுங்கள். அதிக காய்ச்சலா இருக்கு என ரெண்டு மாத்திரை எக்ஸ்ட்ராவாய்க் கொடுக்காதீர்கள். அது ஆபத்தானது !.

“இந்த மருந்து இல்லை, இதே மாதிரி இன்னொரு மருந்து இருக்கு” என கண்ணி வலை விரிக்கும் மருந்து கடைக்காரர்களிடம் ஏமாற வேண்டாம். நிறைய லாபம் பார்க்க விரும்பும் பலரும் சொல்லும் டயலாக் இது ! எந்த மருந்தை டாக்டர் சொல்கிறாரோ அதையே வாங்குங்கள் !

பழைய மருந்துகளை கொடுப்பது, ஒரு குழந்தைக்கு வாங்கிய மருந்தை இன்னொரு குழந்தைக்கும் கொடுப்பது இப்படியெல்லாம் நீங்களே டாக்டராய் மாறி குழந்தையின் வாழ்வோடு விளையாடாதீங்க !
தண்ணீரில் பாதுகாப்பு
தண்ணீர் இன்னொரு டேஞ்சர் விஷயம். குறிப்பாக சின்னப் பிள்ளைகள் உள்ள இடங்களில் தண்ணீர் ரொம்ப ஆபத்து. குழந்தைகளைத் தனியே எக்காரணம் கொண்டும் நீச்சல் குளம், குளம், குட்டை, ஏரி, கடல் போன்ற எந்த இடத்திலும் விடாதீர்கள். உங்கள் நேரடிப் பாதுகாப்பு நிச்சயம் தேவை.

வீடுகளிலும் ரொம்ப சின்னப் பிள்ளைகள் இருந்தால் கவனம் இரண்டு மடங்கு வேண்டும். பெரிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தால் குழந்தை அதைத் திறக்க முடியாதபடி வையுங்கள். அல்லது அந்த அறையைப் பூட்டியே வையுங்கள். முடிந்தவரை குடம் போன்ற வாய் குறுகலான பாத்திரங்களில் தண்ணீர் சேமித்து வையுங்கள்.

குழந்தைகள் தண்ணீரில் விளையாட அதிக ஆர்வம் காட்டும். ஆனால் தவழும் பிள்ளைகளுக்கு ஆபத்தை விளைவிக்க ஒரு பக்கெட் தண்ணீரே போதுமானது. எனவே கவனம் அவசியம்.

இணையத்தில் கவனம்
இப்போதெல்லாம் சின்ன வயதிலேயே சிறுவர் சிறுமியர் இன்டர்நெட் விஷயங்களைக் கற்றுத் தேர்ந்து விடுகிறார்கள். இணையம் அவர்களுக்கு நிறைய நல்ல விஷயங்களைச் சொல்லித் தரும். அதே நேரத்தில் தேவையற்ற பல விஷயங்களையும் அது கற்றுத் தரும். எனவே குழந்தைகளின் இணையப் பயன்பாட்டைக் கவனிப்பது, வரையறுப்பதும் பெற்றோரின் கடமையாகும்.

இணையத்தில் சொந்தப் புகைப்படமோ, குடும்பத்தினரின் புகைப்படமோ அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். உண்மையான தகவல்களை இணையப் பக்கங்களில் போட்டு வைக்க வேண்டாம். எக்காரணம் கொண்டும் இணைய நண்பர்களை தனியே நேரில் சந்திக்க வேண்டாம் எனும் அடிப்படை விஷயங்களைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

தவறான இணையப் பக்கங்கள், தேவையற்ற சேட் தளங்கள் போன்றவற்றை அனுமதிக்காமல் இருக்கலாம். குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் இணையத்துக்கு என ஒதுக்குங்கள். இரவு நேரத்தில் இணையத்தில் உலவுவதை தடை செய்யுங்கள். இப்போதெல்லாம் குழந்தையின் மனசையும், பாதுகாப்பையும் பலவீனப்படுத்துபவை இணையத்திலேயே உண்டு !
பாலியல் தொந்தரவுகளிலிருந்து பாதுகாக்க !
நல்ல தொடுதல் எது ?
சின்ன வயதுப் பெண்குழந்தைகளுக்கு ஏற்படும் மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்று பாலியல் ரீதியான தொந்தரவுகள். இதை “குட் டச், பேட் டச்” என்பார்கள். நல்ல தொடுதல் எது, மோசமான தொடுதல் எது என்று பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியது மிக மிக முக்கியம் !

குழந்தைகளைக் கொஞ்சுவது போல தொடுவது, விளையாட்டு எனும் போர்வையில் வக்கிரம் காட்டுவது இவையெல்லாம் எங்கும் நடக்கும் விஷயங்கள். 72.1 சதவீதம் குழந்தைகள் இதைப்பற்றி யாரிடமும் சொல்வதில்லை. காரணம் பல குழந்தைகளுக்கும் இது குறித்த விழிப்புணர்வு இல்லை. இரண்டாவது காரணம், இந்த தொல்லைகளையெல்லாம் தருவது 90% குழந்தைக்குத் தெரிந்த நபர்களே என்கின்றன புள்ளி விவரங்கள்.

வளரும்போ குழந்தைக்கு எல்லாம் புரியும் என்று விட்டு விடுவது ரொம்பவே ஆபத்தானது. ஒரு குழந்தை மூன்று வயதைத் தாண்டினாலே அதனிடம் மோசமான தொடுதல் பற்றிச் சொல்லிக் கொடுக்கலாம் ! மிக முக்கியமாக ஆண், பெண் என இரண்டு குழந்தைகளுக்குமே இதைச் சொல்லிக் கொடுங்கள் ! ஆபத்து இருவருக்குமே உண்டு !

நோ சொல்வது நல்லது !
யாராய் இருந்தாலும் சரி, புடிக்காத விஷயங்களுக்கு “நோ” சொல்லப் பழக்க வேண்டும். குழந்தைகள் நெருங்கிய சொந்தக்காரர்களிடம் “நோ” சொல்லத் தயங்கும். குறிப்பாக கொஞ்சம் வயதில் பெரியவர்களிடம் அவர்களுடைய தயக்கம் அதிகமாக இருக்கும். அதைப் போக்க வேண்டும். தப்பாக யாரேனும் தொட முயற்சி செய்தால் “தொடாதே..” என அழுத்தமாகவும், சத்தமாகவும் சொல்லப் பழக்க வேண்டும். குழந்தை சத்தமாகச் சொன்னால் அதன் பின்னர் அந்த நபரால் தொந்தரவு எற்படும் வாய்ப்பு ரொம்பக் கம்மி !

குழந்தைகளை நம்புங்க !
குழந்தைங்க சொல்வதை பெற்றோர் முழுமையாய் நம்ப வேண்டும். குழந்தைகள் பொய் சொல்ல மாட்டார்கள். அதுவும் பாலியல் விஷயங்களில் இட்டுக் கட்டி எதையும் சொல்லவே மாட்டார்கள். எனவே குழந்தைகள் சொல்வதைக் கவனமாய்க் கேளுங்கள். குழந்தை பேசி முடிக்கும் வரை இடை மறிக்காதீர்கள்.

“சே..சே.. அந்தத் தாத்தா அப்படியெல்லாம் பண்ண மாட்டாரு… “, “அந்த மாமா ரொம்ப நல்லவரு, அவரைப் பற்றி தப்பா நினைக்காதே” என்றெல்லாம் சொல்லவே சொல்லாதீர்கள். குழந்தை அசௌகரியமாய் உணரும் நபர்களிடம் குழந்தையை தனியே இருக்க விடாதீர்கள். அது ரொம்ப முக்கியம்.
குழந்தைகளிடம் கேளுங்க !
குழந்தைகள் கிட்டே நடந்த விஷயங்களையெல்லாம் தினமும் கேக்க வேண்டியது பெற்றோரின் கடமை. பள்ளியில் நடந்த விஷயங்களானாலும் சரி. சொந்தக்காரங்க வீட்டில் நடந்த விஷயமானாலும் சரி, எல்லாவற்றையும் கேளுங்கள். உங்கள் கள்ளம் கபடமற்ற மழலைகள் உண்மையைச் சொல்வார்கள்.

ஒருவேளை விரும்பத் தகாத நிகழ்வு நடந்திருந்தால் கூட பதட்டத்தை வெளிக்காட்டாமல் பேசுங்கள். எந்தத் தவறுக்கும் உங்கள் குழந்தை காரணமல்ல என்பது நினைவில் இருக்கட்டும்.

நம்பிக்கையை வளருங்க
எதுன்னாலும் மம்மி கிட்டே தயங்காம சொல்லலாம் எனும் நம்பிக்கை குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்கள் குழந்தையோடு இயல்பான அன்பை வைத்திருக்க வேண்டியது தான். எரிச்சல், கோபம் காட்டும் பெற்றோரிடம் குழந்தைகள் உண்மையை மறைக்கும்.

“மம்மி எனக்கு இந்த அங்கிளைப் புடிக்காது” என்று குழந்தை சொன்னால் அரவணைத்துக் கொள்ளுங்கள். எச்சரிக்கை உணர்வு கொள்ளுங்கள். ஏதேனும் சிக்கல் நடந்திருக்கலாம். எனவே குழந்தையின் விருப்பத்தை மதியுங்கள். அந்த நபரைக் கொஞ்சம் கவனியுங்கள் !

குழந்தையை மிரட்டினாங்களா ?
“மம்மி கிட்டே சொல்லாதே..” என்று யாராவது எதையாவது சொன்னார்களா என்பதை குழந்தைகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். பெரும்பாலும் தப்பான விஷயங்கள் தான் பெற்றோரின் காதுகளுக்குப் போகக் கூடாது என சில்மிஷவாதிகள் நினைப்பார்கள். அத்தகைய விஷயங்களை நீங்கள் நிச்சயம் அறிய வேண்டும். அது தான் உங்களை எச்சரிக்கையாய் வைத்திருக்க உதவும். உங்கள் குழந்தையைப் பாதுகாக்கவும் அது ரொம்ப அவசியம்.

“உன்னைப் பத்தி அம்மா கிட்டே சொல்லி அடி வாங்கி தருவேன்” போன்ற மிரட்டல்களில் ரொம்ப கவனம் தேவை. தொடர்ச்சியான பாலியல் தொந்தரவுகளுக்கு இது காரணமாகிவிடக் கூடும் !

யாராகவும் இருக்கலாம் !
பாலியல் தொந்தரவுகளைத் தருபவர்கள் இளைஞர்களாய் இருப்பார்கள் என்பது ஒரு தப்பான அபிப்பிராயம். வயசு வித்தியாசம், சாதி, மத, பண வித்தியாசம் இல்லாமல் யாருக்குள்ளும் இந்த நரி ஒளிந்திருக்கலாம். எனவே ஆள் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்.

குழந்தைக்கு யாராவது கிஃப்ட் வாங்கி குடுத்தாங்களா ? சாக்லேட் வாங்கி குடுத்தாங்களா ? அல்லது ஏதேனும் வாங்கித் தரேன்னு ஆசை காட்டினாங்களா என அறிந்து கொள்ளுங்கள். இவையெல்லாம் சிக்கல்கலுக்கான முன்னுரையாகக் கூட இருக்கலாம்.

குழந்தையின் உடல் மொழி !
குழந்தைக்கு விரும்பத் தகாத சம்பவங்கள் ஏதும் நடந்திருந்தால் குழந்தையின் முகமே சட்டென காட்டிக் கொடுத்துவிடும். அதைக் கவனித்து விசாரிக்க வேண்டியது மட்டுமே பெற்றோர் செய்ய வேண்டிய விஷயம். குழந்தை சோகமாய் இருந்தாலோ, பேசாமல் இருந்தாலோ கவனியுங்க ! குழந்தையின் உடலில் காயம் இருந்தல் உடனே கவனியுங்கள்.

குழந்தைகளை எக்காரணம் கொண்டும் பயமுறுத்தியோ, அதட்டியோ விஷயத்தைக் கேட்காதீர்கள். ரொம்ப ரொம்பப் பொறுமையாய் கேளுங்கள் !
திடீர்ப் பாசம் வருதா ?

குழந்தையிடம் உறவினர்கள் யாராச்சும் திடீரென பாசம் காட்டுகிறார்களா என கவனியுங்கள். குழந்தையை அடிக்கடி கொஞ்சுவது, தனியே மாடிக்கோ, பால்கனிக்கோ, தனிமையான அறைகளுக்கோ கூட்டிப் போவது போன்ற விஷயங்களில் கவனமாய் இருங்கள். குழந்தையைக் கூட்டிக் கொன்டு சினிமா போகிறேன் என்றெல்லாம் சொன்னால் மறுத்து விடுங்கள். பிறர் குழந்தையோடு பழகுவதெல்லாம் உங்கள் பார்வையில் படும் படி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

நோ போட்டோ !
குழந்தையை யாராச்சும் புகைபடம் எடுக்க வந்தால் “வேண்டாம்” என சொல்லப் பழக்குங்கள். நீங்கள் இல்லாத நேரத்தில் குழந்தையைப் புகைப்படம் எடுக்க அனுமதிக்க வேண்டாம். குழந்தையை யாரேனும் ஆபாசமாய்ப் படம் எடுக்கவும் வாய்ப்பு உண்டு.

அதே போல குழந்தையிடம் ஆபாசப் படங்கள் அடங்கிய புத்தகங்கள் யாராச்சும் காட்டுகிறார்களா போன்றவையும் கவனிக்க வேண்டிய விஷயம். குழந்தைகளின் மனதைக் கறையாக்கி அதில் குளிர்காயும் குறை மனசுக்காரர்களும் உண்டு !

கிராமத்திலும் உண்டு !
இதெல்லாம் நகரத்துச் சமாச்சாரங்கள். கிராமத்துல எதுவுமே கிடையாது என தயவு செய்து நினைத்து விடாதீர்கள். கிராமங்களோ நகரமோ எல்லா இடங்களிலும் இந்த பிரச்சினை நிச்சயம் உண்டு.

அதே போல குழந்தை கிட்டே ஒரு தடவை எல்லா எச்சரிகை உணர்வையும் சொல்லியாச்சுன்னும் விட்டுடாதீங்க. அடிக்கடி சொல்லிட்டே இருங்க. குழந்தைகள் மெல்லிய மனசுக்காரர்கள் அவர்களுக்கு அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியது அவசியம்.
நன்றி : தேவதை, மாத இதழ்.

Wednesday, May 23, 2012

இளசுகளைக் காப்பாற்றும் ஈஸியான சூத்திரங்கள்

                                                                                                                            - ம.மோகன்

"அன்பு என்பதே
காண அரிதான உலகில்
கொடூரம் அளப்பரியதாக உள்ளது!"
இன்று தற்கொலை, உதவி கேட்கும் ஓர் கூக்குரலாகவே மாறியிருக்கிறது. வரதட்சணைக் கொடுமை, பாலியல் தொந்தரவு, குடும்பத் தகராறு போன்ற காரணங்களையே பிரதானமாக வைத்து பெண்களை சூழ்ந்துவிடும் தற்கொலை, இன்றைக்கு வாழ்வின் முதல்பகுதியைக்கூட கடக்காத இளம் வயதினர்களின் பக்கம் சாய்ந்திருக்கிறது. அதிலும், அண்மை வாரங்களில் தமிழகத்தை ஆட்டிப் போட்டிருக்கிறது... பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் தற்கொலைகள்.

கடந்த ஆண்டில் மட்டும் இந்தியா முழுக்க 7,379 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்கிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகம். தென்னிந்தியாவில் மட்டும் 15 நிமிடங்களுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் இளம் வயதினரின் தற்கொலை நிகழ்வதாகவும் அறிக்கைகள் சொல்கின்றன.

இதில், சென்னையில் மட்டும் கடந்த 2011-ம் ஆண்டில் 84 மாணவ, மாணவிகள் உயிரை விட்டுள்ளனர். இவர்களில் 50 பேர் மாணவிகள். இதே சென்னைக்குள்... 2012 ஜனவரி ஆரம்பித்து மார்ச் முடிவதற்குள் 16 இளம் வயது தற்கொலைகள் அரங்கேறியுள்ளன.

'வீட்டில் கஷ்டமான சூழலில் என்னைப் படிக்க வைக்கிறார்கள். என்னால் சரிவர படிக்க முடியவில்லை. தேர்வில் தோல்வியைச் சந்திக்க நேரிடுவேனோ என்பதாலேயே பிரிந்து செல்கிறேன்...’

- கடந்த வாரத்தில் சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி தைரியலட்சுமியின் தற்கொலைக்கான காரணம், நம்மை வெகுவாகப் பாதிக்கிறது.

'என் உயிர்த் தோழி என்னிடம் பேசவில்லை’, 'வயிற்று வலியைப் பொறுக்க முடிய            வில்லை’, 'பெற்றோர்கள் திட்டித் தீர்க்காத நாளே இல்லை’, 'காதலன் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறான்’, 'படிப்பு சரியாக வரவில்லை’

- இப்படி இளம் வயதுப் பெண்கள் அடுக்கிக்கொண்டே போகிற காரணங்களுக்குப் பின் இருக்கும் சமூக உண்மை, தவறுதான் என்ன?! அவற்றையெல்லாம் களைந்து, தற்கொலைகளில் இருந்து அவர்களைக் காப்பாற்றும் சூத்திரங்கள்தான் என்னென்ன?

மிகுந்த சமூக அக்கறையோடு அவற்றை எல்லாம் இங்கே பகிர்ந்து கொள்கிறார்கள்... சமுதாயத்தின் பல தளங்களில் பல்வேறு பரிமாணங்களோடு பணியாற்றிவரும் சிலர்...

பலவீனப்படுத்தாதீர்... பயமுறுத்தாதீர் !

சங்கர் (சமூக ஆர்வலர்- சிநேகா தற்கொலைத் தடுப்பு மையம்): ''வாழ வேண்டும் என்பதற்குப் பத்துக் காரணங்கள் இருந்தாலும், சாக வேண்டும் என்று ஒரு முடிவு எடுத்துவிட்டால், மனம் அந்த ஒற்றை முடிவைத்தான் நோக்கும். இரட்டை மனநிலை, நொடிப்பொழுது முடிவு, வழி தேடாத குறுகிய பார்வை... இப்படியான சூழல்கள்தான் இந்த ஒற்றை முடிவைத் தீர்மானிக்கின்றன. இவற்றை இளம் பருவத்தினர் கடந்து போகக்கூடிய வாய்ப்பை, அவர்களைச் சார்ந்தவர்கள் விதைக்க வேண்டும்.

ஆண்களில் 30 - 45 வயதுக்குள்ளானவர்கள்தான் அதிகமாக தற்கொலைக்கு உட்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களுக்கு வருமானம், வேலை மாற்றம், குடும்பம், கடன் என தற்கொலைத் தூண்டுதலுக்கான சில பொதுவான காரணங்கள் அமைகின்றன. அதுவே, பெண்களில் 15 - 29 வயது வரையிலானவர்களே அதிகம். பருவ மாற்றம், படிப்பு, காதல், திருமணம், உறவுமுறை, குடும்பப் பொறுப்பு, குழந்தை வளர்ப்பு என்று அந்த இடைப்பட்ட வயதுக்குள் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் பொறுப்புகள் ஏராளம். தொடர் பரிணாமங்களால் அந்தச் சூழலில் ஒரு பெண் பகிர்வையும், அதன் வழியே தன்னை பலப்படுத்திக் கொள்ளவுமே முயற்சிக்க வேண்டியிருக்கும். இத்தகைய சூழலில்... அவர்களைப் பலவீனப்படுத்துவது, பயத்துக்கு ஆளாக்குவது போன்ற செய்கைகளில் யாரும் ஈடுபடக் கூடாது.''

பெற்றோர் - ஆசிரியர் உறுதிமொழி ஏற்க வேண்டும் !
இந்திரா ஜெயச்சந்திரன், (தமிழாசிரியை, பழனியப்பா உயர்நிலை பள்ளி, சோழபுரம், விருதுநகர் மாவட்டம்): ''பெரும்பாலும் பள்ளி, கல்லூரி வயதினர் பெற்றோர்களை விடவும், ஆசிரியர்களை விடவும், ஏன், கடவுளை விடவும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது... உடன் படிக்கும், பழகும் நண்பர்களுக்குத்தான். நண்பர்களுக்கு முன் தனக்கு எந்த அவமானமும் நிகழ்ந்து விடக்கூடாது என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அப்படி ஒரு சூழலில் அந்த சிநேகிதர்களுக்கு முன்பாகவே பெற்றோர்களோ, ஆசிரியர்களோ... ஏதோ ஒன்று குறித்து கண்டிக்கும்போது, அது அவமானம் என்கிற உச்சத்தைத் தொடும்போது, அவர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. இந்த விஷயத்தில் பெற்றோரும், ஆசிரியரும் மிக மிக கவனமாக இருந்தாலே, பெரும்பாலான தற்கொலைகளை தடுத்துவிடலாம். இதற்கான உறுதிமொழியை அவர்கள் ஏற்க வேண்டும்.

ஞான உபதேச படிப்பு முறைகள் கைவிடப்பட்டு, முழுவதுமே வேல்யூ படிப்பாக மாறிவிட்டதும் இத்தகைய நிலைக்கு ஒரு காரணம். இந்த விஷயத்தில் அவர்களுக்கான கவுன்சிலிங்கை பள்ளிகள் பரவலாக செய்யத் தொடங்கியாகிவிட்டது. இதன் பலனாக அவர்களிடம் மாறுதல்களைப் பார்க்க முடிகிறதா என்பதை, காலப்போக்கில்தான் கவனிக்க முடியும்.''

நரகமாக்கும் நகரமயம் !

நக்கீரன் (கவிஞர், சுற்றுச்சூழல் எழுத்தாளர்): ''உலகமயமாதலுக்கு நம்மை உட்படுத்திக்கொண்ட இந்த காலகட்டத்தில், முதலீடு செய்யும் நுகர்பொருளாகவே பிள்ளைகளை மாற்றிவிட்டோம். சிறு வயது முதல் பிள்ளைகளின் மீது செலுத்தப்படும் ஒவ்வொரு முதலீடும், பிற்காலத்தில் நமக்கு ஆதாயம் சேர்க்கும் என்கிற நம்பிக்கையே இதற்குப் பிரதான காரணம். அது படிப்பில் இருந்தே தொடங்குகிறது என்றும் சொல்லலாம்.

இப்படிப் பெற்றோர்களின் கனவுகளைச் சுமந்துகொண்டு கிராமங்களில் இருந்து பெரு நகரங்களுக்குப் பிழைப்புக்காக புறப்படும் இளைஞர்களில் 90 சதவிகிதத்தினர் தங்களை நகரமயமாதலுக்கு உட்படுத்திக்கொள்ளும் சூழலே நிலவுகிறது. 'குறைந்த ஊதியத்தை வாங்கிக்கொண்டு முதலாளிகளை திருப்திபடுத்தும் வேலையைத்தான் செய்கிறோம்' என்பதை கிராமம் சார்ந்த சூழலில் இருந்து நகரம் நோக்கி வருபவர்கள் உணர்வதில்லை. இதனால், முழு மனநிம்மதியையும் இழக்கிறார்கள். ஆகவே, தங்களின் எதிர்கால பயணத்தில் இருந்து விலகி நிற்கிற இந்த நிர்ப்பந்தம், ஒரு கட்டத்தில் தற்கொலை முடிவாகவும் மாறுகிறது.''

தேவை... நம்பிக்கை பயிற்சிகள் !

ஷெரின் (நிறுவனர் - 'வெளிச்சம்’ அமைப்பு): ''சமீபத்தில் ஒரு கல்லூரிக்குச் சென்றிருந்தபோது, கிராமத்தில் இருந்து வந்த ஒரு மாணவி... ஆடை மற்றும் தலைப்பின்னல் ஆகியவற்றை சக மாணவிகள் கேலி செய்ததால் தற்கொலைக்கு முயன்றதாக அறிந்து அதிர்ந்தேன். ரூரல் ஏரியா மாணவ, மாணவிகளுக்கு 10-ம் வகுப்பில் இருந்தே தன்னம்பிக்கை, தனித்துவம், ஆங்கிலம், பர்சனாலிட்டி டெவலப்மென்ட் என்று ஒவ்வொன்றிலும் நம்பிக்கை அளிக்கும் பயிற்சியை அளிக்க வேண்டும்.

ஒரு மாணவர் தனக்கான படிப்பை மதிப்பெண்களை மட்டுமே வைத்துத் தேர்ந்தெடுக்கும் சூழ்நிலைதான் இங்கு உள்ளது. அவரது ஆசை, விருப்பம், குறிப்பிட்ட துறையில் கொண்டுள்ள திறமை எல்லாம் புதைக்கப்படுகிறது. 1,085 மதிப்பெண்களோட தேர்ச்சி பெற்ற ஒரு பிளஸ் டூ மாணவிக்கு தமிழ்க் கவிதை புலமை அதிகமாக இருக்கிறது என்றால், அவரை தமிழ் சார்ந்த துறையில் சேர்த்து விடுவதுதானே நல்லது. 'இவ்ளோ மார்க் இருக்கே... இன்ஜினீயரிங் படி’ என்று நம் ஆசையை அவளிடம் திணிக்கிறோம்.

இன்னொரு பக்கம், குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவரையும் எப்படியாவது பணத்தைக் கட்டி பொறியியல் படிப்பில் சேர்த்துவிடும் பெற்றோர்கள் அறிவதில்லை... அவர்களின் விஷ§வல் மீடியா படிப்பு ஆசையை அவர்கள் கசக்கி எறிவதை! இதனால், ஆண்டொன்றில் வெளிவரும் சுமார் 2,50,000 பொறியியல் மாணவர்களில் ஒருவராக தானும் வெளிவந்து, வேலை தேடி நாளைக் கழிப்பவர்களில் ஒருவராக அவரும் இருக்கத்தானே செய்வார்?

'எனக்கு படிப்பு வேண்டாம். நான் ஒரு லேத் தொழிலாளியாக இருக்க விரும்புகிறேன்!’ என்று ஒரு பையனோ, தையல் தொழிலை பிரதானமாக்கிக் கொள்ள விரும்புகிற ஒரு பெண் பிள்ளையோ, வாழ்வில் ஜெயிக்கவே முடியாது என்கிற மனநிலையை அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு யார் கொடுத்தது?!''

தற்கொலைகளை தடுத்து நிறுத்தும் வகையில், பல தளங்களில் சேவையாற்றி வருவோர் தந்த கருத்துக்கள் மொத்தத்தையும் கேட்டுக் கொண்ட 'ஸ்கார்ஃப்’ மனநல மையத்தின், மனநல மருத்துவர் மங்களா, ''அனைவரும் மிக அற்புதமாக விஷயத்தை வலியுறுத்துயுள்ளனர். இனி தற்கொலைகள் இல்லை என்று சொல்வதற்கு இவையெல்லாம்தான் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய சூத்திரங்கள்'' என்று அழுத்தமாகக் குறிப்பிட்டவர்.

ப்ளீஸ், 30 நிமிடம் ஒதுக்குங்கள் !

''நாம் நம் தலைமுறைகளில் 5 வயதில் கற்றுக்கொண்ட படிப்பை, இப்போது குழந்தைகளிடம் இரண்டரை வயதிலேயே திணிக்கிறோம். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிற ரியாலிட்டி ஷோக்களின் தாக்கத்தால், குழந்தைகளுக்கு ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ... பாட்டு, டான்ஸ் கிளாஸ் என அவர்களின் பால்யத்தைப் பறிக்கிறோம். சக குழந்தைகளுடன் விளையாட அனுமதிக்காமல், சின்ன வயதிலிருந்து அவர்களை டி.வி-க்கு பலிகொடுத்துவிட்டு, பப்ளிக் எக்ஸாம் என திடீரென்று அவர்களை டி.வி-யில் இருந்து பிரிக்கிறோம். பிள்ளைகள் முன்பாக பேரிரைச்சலுடன் பெற்றோர் சண்டை போட்டுக் கொள்கிறோம்.

வாழ்வின் அறங்களை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டிய நாமே, சிக்னலில் நிற்காமல், பிளாக்கில் டிக்கெட் வாங்கி சினிமா பார்த்து, உறவினர்களைப் புறம் பேசி என தவறுகளையே செய்து காட்டுகிறோம். அதையே அவர்கள் நம்மிடமிருந்து கற்றுக்கொள்கிறார்கள். 'என் ரோல் மாடல் என் பேரன்ட்ஸ்’ என்று நம் குழந்தைகள் சொல்லும்படியான வாழ்க்கையை இங்கே எத்தனை பேர் வாழ்கிறோம்?

தினசரிப் பொழுதுகளில் குழந்தைகளுக்காக குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது ஒதுக்குங்கள். அவர்களைப் பேச விட்டுக் கேளுங்கள். பள்ளி, படிப்பு, நண்பர்கள், காதல், ஃபேஸ்புக் என்று எங்காவது அவர்கள் பிரச்னையில் சிக்கியிருக்கிறார்களா என்பதை கவனித்து உணருங்கள். அதிலிருந்து பக்குவமாக மீட்டெடுங்கள். 'என்ன பிரச்னைனே தெரியலையே... இப்படிப் பண்ணிக்கிட்டாளே...’ என்று தன் பிள்ளை தற்கொலை எனும் மிகப்பெரிய முடிவெடுத்ததற்கான காரணம்கூட அறியமுடியாமல் அழும் பெற்றோரின் கதறல், நமக்கு எச்சரிக்கை ஒலியே'' என்று தானும் எச்சரிக்கை செய்தார் மருத்துவர் மங்களா!

இனியாவது, விழித்துக் கொள்வோம்!