Showing posts with label இஸ்லாமிய உம்மத். Show all posts
Showing posts with label இஸ்லாமிய உம்மத். Show all posts

Saturday, February 7, 2015

இஸ்லாம் பெண்ணுரிமையை காப்பாற்றிய மார்க்கம் .

எல்லாம் வல்ல அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து அவனது இறுதித் தூதர் நபிமுஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அன்னாரது வழிமுறைகளை பின்பற்றி வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற அத்தனை நல்லடியார்கள் மீதும் அல்லாஹ்வின் அருளும் அன்பும் மன்னிப்பும் என்றென்றும் உண்டாவதாக!

20-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஐரோப்பாவில் பெண்களின் உரிமைகள் பற்றி அதிகம் பேசப்பட்டு விவாதிக்கப்பட்டு, பெண்கள் மனிதப் பிறவிகளாக கணிக்கப்பட வேண்டும் என்ற கோஷம் எழுப்பப்பட்டது. பெண் ஆணுக்கு நிகரானவள், சமஉரிமை படைத்தவள், உரிமைகள் வழங்கப்பட வேண்டியவள் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.
இப்போராட்டம் ‘பெண்களின் விடுதலைப் போராட்டமாக’ சித்தரிக்கப்பட்டதனால். ஆணாதிக்கம், சமயக் கோட்பாடுகள் கட்டுப்பாடுகள் மற்றும் சமூக சம்பிரதாயங்களை தகர்த்தெறிந்து கொண்டு பெண்கள் வீதியில் இறங்கினார்கள், இறக்கப்பட்டார்கள்.
இதன் மூலம் ஆண்கள் அனுபவிக்கும் சகல உரிமைகளையும் அனுபவித்து சமபங்கு வகித்தார்கள். அடுப்பங்கரையிலிருந்து ஆட்சி பீடம்வரை சென்ற அவர்கள் விண்ணில் உலா வந்தார்கள். ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்தார்கள்.
அரசியல், சமூக, பொருளாதார வளர்ச்சிக்குப் பெண்களின் பங்களிப்பும் அவசியம், ஆண்களால் மட்டும் வளர்ச்சியைக் காணமுடியாது. ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றே ஆண் பெண் பங்களிப்பு சமூகத்திற்கு அவசியம் என்பதை வலியுறுத்தினார்கள்.
போராட்ட முழக்கம் எழுந்தது. சரிநிகர் சமத்துவ பயணம் தொடர்ந்தது. பிரபுத்துவ ஆட்சியில் அடக்கி வைக்கப்பட்டு அனுபவிக்கப்பட்டவள் முதலாளித்துவ பிடியில் அனுபவிககும் பண்டமாக ஆபாச சின்னமாக (Sex Symble) அவிழ்த்துபோட்டு நடமாடும் ராணியாக விளம்பர பலகையாக ஆக்கப்பட்டாள். ஆண்களின் நுகர்வோர் சந்தையில் விளையாட்டு பொம்மையாக வடிவமைக்கப்பட்டாள். இறுதியில் ஆண், பெண் இரு பாலாரின் தனிப்பட்ட வாழ்வும் குடும்ப வாழ்வும் சமூக வாழ்வும் வீழ்ந்தது. சூழல் மாற்றமடையத் தொடங்கியது. நிம்மதி தொலைந்தது. விரக்தி தொற்றிக் கொண்டது. சுகப்படுத்த முடியாத நோய் பரவ ஆரம்பித்தது. வரையறையற்ற வாழ்க்கை முறையினாலும், தெளிவற்ற உரிமைப் போராட்டத்தினாலும் உருவான விபரீதங்களைக் கண்டு உலகம் அஞ்சுகிறது. நாகரிகத்தின் பெயரால் நாதியற்றுப் போயிருக்கும் வாழ்வைச் சீர்படுத்துகின்ற சத்திர சிகிச்சையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது இன்றைய உலகம்.
‘சமபங்கு, சமஅந்தஸ்து, சம உரிமை’ என்பவை சரிவரப் புரிந்து கொள்ளப்படாததனாலும் ‘சமத்துவ பணிகள்’ சரியாக வழங்கப்படாமையினாலும் பொறுப்புக்கள் ஒழுங்குப்படுத்தப்படாமையினாலும் மனித வாழ்வு புரையோடிய புற்றுநோயாக தோற்றம் பெற்றுள்ளது. பெற்றோர் முதியோர் இல்லங்களிலும் பிள்ளைகள் பாதுகாப்பு மையங்களிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். பாசத்திற்காகவும் நேசத்திற்காகவும் குழந்தைகள் ஏங்கித் தவிக்கின்றன. அன்பையும் அரவனைப்பையும் வேண்டி பெற்றோர் கண்ணீர் வடிக்கின்றனர். பெற்றோரிடமிருந்து பிரிந்து வாழும் உரிமை கேட்டு பிள்ளைகள் வழக்குத் தொடுக்கின்றனர். கணவன் மனைவியின் மீதும் மனைவி கணவன் மீதும் சந்தேகம் கொண்டு பார்கின்றனர். பொதுவாக மேற்கத்திய உலகில் மூன்று W களை நம்பமாட்டார்கள். 1. Weather காலநிலை 2. Women பெண் 3. Work தொழில். இந்த மூன்றும் எந்த நேரத்திலும் மாறிபோயிடலாம் என்பதே அவர்களது வாழ்வாகும்.
இந்நிலையில் முஸ்லிம் பெண்களின் நிலை பற்றியும் அவர்களது உரிமைகள் பற்றியும் உண்மைக்குப் புறம்பான செய்திகளையும், விவரணங்களையும் இஸ்லாத்திற்கு முரணாக ஊடகங்கள் வெளியிடத் தொடங்கின.
சர்வதேசமட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் பலம் வாய்ந்த ஊடகங்களான BBC,CNN போன்றவை யூத கிறிஸ்தவர்களின் கைவசம் உள்ளதனால் முஸ்லிம்கள் பற்றியும் இஸ்லாம் பற்றியும் அவ்வப்போது தவறான செய்திகளைக் கொடுத்து இஸ்லாம் பற்றி அறியாத அப்பாவிகளை ஏமாற்றி வருகின்றன.
‘இஸ்லாம் பெண்களை கொடுமைப்படுத்துகின்றது பர்தா என்னும் ஆடையை அணிவித்து ஆயுட்காலக் கைதிகள் போல் வீட்டில் முடக்கி வைத்துள்ளது. கல்வியறிவு உட்பட அடிப்படை உரிமைகளைக்கூட வழங்குவதில்லை. முஸ்லிம் சமூகத்தில் ஆணாதிக்கம் மேலோங்கிக் காணப்படுவதால் பெண்கள் அடிமைகள் போல் அடங்கி வாழ்கிறார்கள்’ போன்ற செய்திகளை இந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேற்கத்தைய ஊடகங்களின் ஊதுகுழல்களாக செயற்படும் ஏனைய ஊடகங்களும் அவைகளை அப்படியே வாந்தியெடுத்து விடுகின்றன. நம் நாட்டின் ஊடகங்கள் அண்மைக்காலமாக இவ்வாறான செய்திகளைக் கொட்டுவதில் தீவிரம் காட்டி வருவதையும் கண்டு வருகிறோம். ‘சகல சமூகங்களிலுமுள்ள பெண்கள் சுதந்திரமாகவும் முன்னேற்றமாகவும் செயற்பட்டு வரும்போது முஸ்லிம் சமூகம் மட்டும் பெண்களைத் தன்னிச்சையாக செயற்படவிடாமல் மூலையில் முடக்கி வைத்துள்ளது’ போன்ற மாயையை இந்த மீடியாக்கள் மீட்டுகின்றன.
மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை மீடியாக்கள் விவரணப் படுத்தும்போது உலக மக்கள் இஸ்லாத்தைப் பற்றி தப்பும் தவறுமாகவே எண்ணுகிறார்கள். பேசுகிறார்கள். பெண்களுக்கு உரிமைகளே கொடுக்காத மார்க்கம் என்றால் அது இஸ்லாம் தான் என்று கருதக்கூடிய நிலைக்கு இந்த மீடியாக்கள் இட்டுச் செல்கின்றன.
தாங்கள் சார்ந்துள்ள மார்க்கங்களில், பின்பற்றக்கூடிய கொள்கைகளில் பெண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் உரிமைகள் எவை? மறுக்கப்பட்டிருக்கும் உரிமைகள் எவை? பெண்களுக்குரிய மரியாதை, கண்ணியம், கௌரவம் எவை? அவை எவ்வாறு போற்றப்படுகின்றன என்பதைச் சிந்தித்து ஆராய்ந்து குறைநிறைகளைக் கண்டு நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக முஸ்லிம் பெண்களைப் பார்த்து விமர்சன அம்புகளை ஏவி விடுகிறார்கள்.
இஸ்லாத்தையும் அதன் அடிப்படைக் கோட்பாடுகளையும் படித்து, அறிந்து, பெண்களின் நிலவரம் பற்றியும் அவர்களது உரிமைகள் பற்றியும் விமர்சனம் செய்திருந்தால் வரவேற்றிருக்கலாம். மாற்றமாக கருத்துக் குருடர்களாக இருந்து கொண்டு புத்திஜீவிகள் போல் பேசுவதுதான் அசிங்கமாகத் தெரிகிறது.
மீடியாக்களின் பொறுப்பற்ற தன்மையும் கருத்துக் குருடர்களின் நியாயமற்ற போக்கும் முஸ்லிம் பெண்கள் தவறாக சித்தரிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளன.
பொருத்தமான சில கட்டுப்பாடுகளுடன் முஸ்லிம் பெண்கள் வளர்க்கப்படுகிறார்கள் என்பது உண்மை! அதற்காக அவர்களது வாழ்வுரிமை மற்றும் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்பது அபத்தம்.
இஸ்லாத்தில் சில சட்டங்கள் ஆண் பெண் இருபாலாரையும் கட்டுப்படுத்துகிறது. இன்னும் சில சட்டங்கள் ஆண்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறது. வேறு சில சட்டங்களோ பெண்களின் உரிமைகளை உறுதி செய்து ஆண்களை கட்டுப்படுத்துகிறது.
பெண்களின் கற்பு மானம், மரியாதை, கண்ணியம் ஆகியவற்றை இஸ்லாமிய சட்டங்கள் கண்டிப்பாக காப்பாற்றுகின்றன, உத்தரவாதப்படுத்துகின்றன. கற்பு இருபாலாருக்கும் பொதுவானது என்று கூறி அதனை கௌரவப்படுத்தி மதிக்க வேண்டும், மலினப்படுத்தக் கூடாது என கட்டளையிடுகிறது. பெண் என்ற அந்தஸ்தையும் தாய் என்ற கௌரவத்தையும் கொடுத்து குடும்பத்தின் அஸ்திவாரத்தை பலப்படுத்தும் சமபங்காளியாக உயர்த்திக் காட்டுகிறது.
பெண்ணை பாதுகாப்பதும் பராமரிப்பதும் ஆணின் மீதுள்ள கடமை என்று கூறி பொருளாதாரச் சுமைகளை ஆணின் மீது சுமத்துகிறது. இஸ்லாத்திற்கும் மாற்றுமதக் கொள்கைகளுக்கு இடையிலுள்ள அடிப்படை வேறுபாடுகள் இவைதான்.
பெண்:
ஆன்மா இல்லாதவள்,
பிறப்பால் இழிவானவள்,
ஆண்களை வஞ்சிக்கும் குணமுடையவள்,
விவாகரத்து உரிமையற்றவள்,
மறுமணத்திற்கு தகுதியற்றவள்,
வாரிசு சொத்து தடுக்கப்பட்டவள்,
வேதம் படிக்க அருகதையற்றவள்,
மாதத்தீட்டால் பிரசவத்தீட்டால் அசிங்கமானவள்,
ஆணின் அதிகாரங்களுக்குள் அடங்கப்பட்டவள்.
இந்த உலகின் முதன்மை மதம் என்று சொல்லப்படக் கூடிய யூதகிறிஸ்தவ மதத்தின் வேதநூலான பைபிள் பெண்ணை இப்படித்தான் சித்தரிக்கிறது. ஆண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளின் உதிரிகள் தான் பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த உண்மையை எடுத்துக்காட்டுவதே இங்கே முக்கிய நோக்கமாகும். பெண்களின் உரிமைகளைப் பறித்து அடக்கியாளுகின்ற மதம் இஸ்லாமா? யூத கிறிஸ்தவமா? என்பதை வாசகர்கள் இதன்மூலம் புரிந்து கொள்ள முடியும்.
அதுமட்டுமல்லாமல் உலகையே ஆட்சி செய்து கொண்டிருக்கும் யூத கிறிஸ்தவர்களின் பிடியிலுள்ள மீடியாக்களும் ஏனைய மீடியாக்களும் முஸ்லிம் பெண்கள் சம்பந்தமாக விவரணப்படுத்துமுன் அவர்கள் சார்ந்துள்ள மதங்களில் அவர்களுடைய பெண்கள் எப்படி மதிக்கப்படுகின்றனர் எவ்வாறான உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து செயற் படமுடியும்.
ஏனைய மதங்களைச் சார்ந்த பெண்களும் தங்களுடைய உரிமைகளை இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்நூலின் மற்றுமொரு நோக்கமாகும்.
யூத கிறிஸ்தவ மக்களுக்கு அல்லாஹ் தவ்றாத் மற்றும் இன்ஜீல் வேதங்களை கொடுத்துள்ளான். அவைகள் கொடுக்கப்பட்ட அசல் வடிவில் அவர்களிடம் இல்லை. தவ்றாத்தையும் இன்ஜீலையும் உள்ளடக்கியதாகவே பைபிள் உள்ளதாக கூறினாலும் பைபிளை பொறுத்தமட்டில் அது முழுமையான இறை வேதமாக – பாதுகாக்கப்பட்ட வேதமாக இல்லை அதில் கூட்டல் குறைவுகள், திரிபுகள், முரண்பாடுகள், அசிங்கங்கள் மற்றும் அபத்தங்களும் உள்ளன.
இறைவார்த்தைகளுடன் மனித கையூட்டல்களும் கலந்துள்ளன. வேதத்திற்குரிய தரத்தில் பைபிள் இல்லை என்பதை இந்நூலின் ஆய்விலே கண்டுகொள்ள முடியும். இவர்கள் ஏற்படுத்திய முரண்பாடுகளையும் திரிவுகள் மற்றும் மறைவுகளை அல்குர்ஆன் முன்வைக்கிறது.
- M.S.M. இம்தியாஸ் யூசுப் ஸலபி

Saturday, January 12, 2013

கருணையின் தூது நம் வாசல் வரை வந்திருந்தால் நான் ஏன் தூது பிறந்த மண்ணிலேயே தூக்கு மேடை வரை செல்ல வேண்டும்.!

by Inamullah Masihudeen

 
எனக்காக வாடும் அன்பின் உடன் பிறப்புக்களே,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு,

அல்லாஹ்வுடைய நாட்டப் படி நான் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, பலநூறு சமூக அநீதிகளுக்கு ஆட்படும் என்போன்ற ஆயிரமாயிரம் சகோதரிகளில் ஒருத்தியாக நானும் அறியாப் பருவத்தில் கடல் கடந்து பிழைப்புக்காய் புறப்பட்டு வந்தேன், எனது தந்தை காட்டுக்குச் சென்று விறகு வெட்டிக் கொண்டு வந்து விற்று எங்களை வாழ்விக்க நடாத்திய போராட்டம், பசியால் வாடும் தம்பி தங்கைகளின் அவலம் எங்களை எல்லாம் படிப்பித்து ஆளாக்க வேண்டும் என்ற உம்மாவின் ஏக்கம் இவற்றிற்கெல்லாம் ஒரு முடிவாக என்னையும் வெளி நாட்டிற்கு அனுப்பி வையுங்கள் என்று நான் தான் ஒற்றைக் காலில் நின்று வெளி நாடு வந்தேன்.

வயது குறைந்த என்னை ஏன் எப்படி யார் வெளி நாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள் என்றெல்லாம் ஆராய்வதை விட எனது மரணம் உரத்துச் சொல்லும் செய்தியை உள்வாங்கி இன்னும் பல நூறு ரிசானாக்கள் உருவாகுவதை தடுத்து நிறுத்துங்கள். எனது தாய் தந்தையரை நீங்கள் குறை சொல்லாதீர்கள் அவர்களுக்காக பிரார்த்தியுங்கள், அதேவேளை அவர்களைப் போல் அநாதரவான நிலையில் உள்ள பல நூறு தாய் தந்தையர்களுக்கு நீங்கள் கை கொடுத்து உதவுங்கள்.

முஸ்லிம் பெண்கள் மஹ்ரம் இல்லது வெளிநாடு செல்லக் கூடாது என்று என் போன்ற சகோதரிகளுக்கு நல்லுபதேசம் செய்ய பலநூறு அறிஞர் பெருமக்கள் இருந்தார்கள், அமைப்புக்கள் இருந்தன, அனால் ஆண்கள் பெண்களை "கவ்வாமூன்" களாக இருந்து எவ்வாறு வாழ வைத்திருக்க வேண்டும் என்று உரத்துச் சொல்லவும் அமுல் படுத்தவும் அவர்கள் முன் வந்திருந்தால் பல திரைமறைவில் பல ஆயிரம் சமூக அநீதிகளுக்கு என் போன்றவர்கள் அட்பட்டிருக்க மாட்டார்கள்.

மனித குலத்துக்கே கருணையின் வடிவமாக வந்த ரஸூலுல்லாஹ் தூதை சுமந்து அதற்காக உழைக்கும் நல்லவர்கள் எம் போன்ற ஏழைகளின் வாசலுக்கு கருணையின் தூதை சுமந்து வந்திருந்தால் தூது பிறந்த மண்ணிலேயே நான் தூக்குக் கயிறை முத்தமிட்டிருப்பேனா! இஸ்லாத்தின் தூதை பகுதி பகுதியாக அறிமுகப்படுத்தும் நல்லவர்கள் எங்கள் போன்ற ஏழை எளியவர் வாசலுக்கு அதனை ஏன் முழுமையாக கொண்டு வரவில்லை.

எனக்காக கவலைப் படுபவர்களுக்கு எனது விடுதலைக்காக உழைத்தவர்களைப் பார்த்து "நீங்கள் ஏன் இஸ்லாமிய ஷரீஅத்து சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்கின்றீர்கள் " என்றெல்லாம் கேட்டது எனது காதுகளில் விழுந்த போது ஷரீஅத்து நீதிமன்றில் எனது பக்க நியாயங்களை முவைத்து எனக்காக வாதாட சட்டத்தரணிகளை அமர்த்த பாரிய நிதியுதவி தேவைப்பட்ட போது ,அதற்கான சட்ட ஏற்பாடுகளும் ,நிதி ஒதுக்கீடுகளும் இல்லையென தெரிவிக்கப் பட்டப் போது இந்த ஷரீஅத்தின் வழி காட்டல்கள் தெரிந்த சிலராவது குரல் கொடுக்காமை என் போன்ற நாதியற்றவர்களின் துரதிஷ்டமே.

எனது உண்மையான வயதை நிரூபிக்கக் கூடிய எந்த ஆவணமும் ஷரீஅத் நீதிமன்றம் முன் கடைசி நிமிடம் வரை எனது கடவுச்சீட்டும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரமும் போலியானவை என்பதை நிரூபிக்கும் சட்ட வலுவுள்ள ஆவணங்கள் சமர்ப்பிக்கப் படவில்லை, அடிக்கடி எனது பெயரால் சவாரி செய்தவர்களால் முன்வைக்கப் படவில்லையே, அந்நிய நாட்டில் அபலைப் பெண் நான் ஆபத்தில் மாட்டியிருக்க எனக்காக கைகொடுக்க ஒரு முஹ்தசம் பில்லாஹ் கூட இருக்க வில்லையேஇருந்திருந்தால் நீங்கள் சொல்லும் அதே ஷரீஅத் சட்டப் படி நான் விடுதலை ஆயிருப்பேனே!

அரபு மொழி தெரியாத என்னை தமிழ் மொழி நன்கு தெரியாத மலையாளி மொழிபெயர்ப்பாளர் பொலிசாரினதும் எஜமாட்டியினதும் அடி உதைகளுக்கு மத்தியில் ஒப்புதல் வாக்கு மூலம் பெற்ற பொழுது, எனக்காக வாதிட குரல் கொடுக்க நன்கு இஸ்லாமிய ஷரீஆ கற்ற ஒருசில நல்லவர்களாவது ஏன் முன்வரவில்லை, ஏனென்றால் சுகயீன்முற்றிகும் வாப்பவிற்கும் வாடி துவண்டு போயிருக்கும் உம்மாவுக்கும் ஷரீஅத் சட்டம் பேசுமளவு கல்வியோ, அல்லது கற்றவர்களின் சேவைகளை காசு கொடுத்துப் பெரும் தகுதியோ செல்வாக்கோ இல்லாமை தானே.?

எனக்காக வாதாட ஒரு சட்டத்தரணியை அமர்த்த உங்களால் முடியாமல் போயிருக்கலாம் அதற்காக நான் கவலைப் படவில்லை அனால் இந்த நிலை இனிவரும் காலங்களில் எவருக்கும் ஏற்படாதிருக்க கடல் கடந்து உழைப்போருக்கான ஒரு சட்ட நிதியத்தையும், சட்ட உதவி பொறிமுறை ஒன்றையும் இனியாவது என் போன்றவர்களுக்காக ஏற்படுத்திக் கொடுங்கள்.

இஸ்லாத்தின் நிழலில் பெண்கள் கண்களாக மதிக்கப் படுகிறார்கள், அவர்களுக்கு குடும்பத்திலும் சமூகத்திலும் வழங்கப்படும் அந்தஸ்து இது தான், மகரம் இன்றி கடல் கடந்தென்ன கதவு கடந்தும் செல்ல வேண்டிய நிலை ஏற்படமாட்டாது என்று உலகிற்கும் நாட்டிற்கும் பறை சாற்றுங்கள், அன்றுதான் இஸ்லாமிய தூது முழுமை பெரும்,அழைப்புப் பணி அர்த்தம் பெரும்.

நபிலான ஹஜ்ஜுக்காகவும் நபிலான உம்ராவிற்காகவும் பல நூறு இலட்ச்சங்களை வருடா வருடம் செலவிடும் நமது சமூகம் அதற்காக பல இலட்சங்களை அள்ளி வீசி விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் உலமாக்கள் எங்கள் தம்பி தங்கையின் கல்விக்காக கை கொடுத்திருந்தால் சிறுமி எனது கரத்தில் குழந்தையொன்று மூச்சுத் திணறி மரணிக்கும் நிலை வந்திருக்குமா?

இன்று நாட்டில் நமது உடன் பிறப்புக்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் எனது மையித்து செய்தி வந்து சேருகிறது, சமுதாயம் உள்வீட்டில் உள்ள ஆயிரம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல், எங்களை நாங்களே ஒழுங்கு படுத்திக் கொள்ளாமல் எவ்வாறு அடுத்த சமூகங்களுக்கு முகம் கொடுப்பது, எனது வாழ்விலும் மரணத்திலும் எதாவது படிப்பினைகள் இருந்தால் அவற்றை தலைமேல் கொண்டு என் போன்ற பலநூறு சிறுவர் சிறுமியரது ,ஏழை எளியவரது வாழ்விற்கு வழி சொல்லுங்கள்.

இன்று பேசப்படும் ரிசானா நாபிக்குடைய செய்தியை ஒரு எதேச்சையான நிகழ்வாக பார்க்காதீர்கள் எனது பிறப்புக்கு முன்னரே அதற்கொரு பின்புலம் இருந்துள்ளது, பலநூறு சமூகக் கொடுமைகள் அநீதிகள் இருந்திருக்கின்றன,கசப்பான நீண்ட வராலாறு ஒன்று இருக்கிறது, அந்த இருண்ட வரலாற்றுக்குள் ஆயிரமாயிரம் சகோதரிகளின் வாழ்வு, தாய்மார்களின் சோகக் கதைகள் புதைந்து கிடக்கின்றன, இந்த கண்ணீர் நிறைந்த வரலாறு இன்று நேற்று எழுதப் பட்டதல்ல, இதை மாற்றி எழுத நமது தேசத்து நல்லவர்களால் இலட்சிய புருஷர்களால் இதுவரை முடியாமல் போய் விட்டது, இந்த மனிதப் பேரவலத்துக்கு இஸ்லாத்தில் தீர்வு இருக்கிறது என்று துணிந்து சொல்ல நம் முஸ்லிம் சமூகம் அருகதை இழந்து நிற்கிறது.

இந்த நிலை இனியும் தொடருமென்றால் தயவு செய்து எனது சோகக் கதை கேட்டு கண்ணீர் வடிக்காதீர்கள், இது ஒரு திரைக் கதை போல் வந்து போகும் நிகழ்வாக இருந்து விடட்டும்.! இல்லை இதய சுத்தியுடன் நீங்கள் என் மீது அன்பும் பாசமும் கொண்டிருந்தால் உங்கள் உடன் பிறப்பாக கருதியிருந்தால் எனது கதை நீங்கள் படைக்கப் போகும் ஒரு வரலாற்றின் முதல் அத்தியாயமாக இருக்கட்டும்.

இதுவே நான் உங்களிடம் மன்றாட்டமாய் விட்டுச் செல்லும் செய்தியாகும்..!



இவ்வண்ணம்
உங்களை பிரிந்து செல்லும் சகோதரி
ரிஸானா நாபிக்

09/01/20013
KSA


Monday, November 19, 2012

கழுகுத் தாண்டவம்!

கழுகுத் தாண்டவம்!

கொடூர நெஞ்சுடையோரின்
கேர ராக்கெட்டுகள்
கொஞ்சி விளையாடும்
பிஞ்சு உயிகளை 
கோரமாய் தாண்டவமாடிற்று!

சிரிப்பில் கூட 
கிஞ்சிற்றும் கபடம் அறியா
புதிய மலர்களை
இரத்த மழையா 
தொப்பாக்க வேண்டும்!

சிரித்து விளையாடும்
வைர முத்துக்களை
முத்தமிடவேனும் இடமின்றி
துளைத்திருந்தது 
இஸ்ரேலிய ரவைகள்!

எளில் கொஞ்சும் அக்ஸாவில்
கொஞ்சி விளையாடவேணும்
பிஞ்சு மலர்களை விடா
இஸ்ரேலிய கழுகுத் தாண்டவம்!

மனிதத் தோற்றத்தில்
வேட்டை மிருகங்களின் அராஜகம்
காவுகொண்டன - ஈமானியம் தோய்ந்த
இளசு உயிர்களைடா?!

ஏனிந்த இரத்த வேட்டை
எதற்கிந்த கபோதி ரகளை!?

கொள்கை, கோற்பாடு
நெறி, நேர்மை என
வாய்கிழிய மேடைபோடும்
மேற்கத்தேயக் குரல்கள் எங்கே?!

பதாதைகளும், சுலோகங்களும்
பக்குவமாய் ஒதுங்கிக் கொள்ள!
பரபரப்பாய் எழுதித்தள்ளும்
பஞ்சவர்ணப் பத்திரிக்களும்
ஓய்வெடுக்கச் சென்றுவிட்டன!

முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும்
இழிவுபடுத்த மட்டும்
முன்டியடித்துக் கொள்ளும்
மீடியாக்கள் - பலஸ்தீன மண்ணில்
உறையாமல் ஓடிக் கொண்டிருக்கும்
பிஞ்சு இரத்தத்தை 
கண்டுகொள்ளவேயில்லை!
                                      (19.11.12)
 
கொடூர நெஞ்சுடையோரின்
கோர ராக்கெட்டுகள்
கொஞ்சி விளையாடும்
பிஞ்சு உயிகளை
கோரமாய் தாண்டவமாடிற்று!

 சிரிப்பில் கூட
கிஞ்சிற்றும் கபடம் அறியா
புதிய மலர்களை
இரத்த மழையா
தொப்பாக்க வேண்டும்!

சிரித்து விளையாடும்
வைர முத்துக்களை
முத்தமிடவேனும் இடமின்றி
துளைத்திருந்தது
இஸ்ரேலிய ரவைகள்!

எளில் கொஞ்சும் அக்ஸாவில்
கொஞ்சி விளையாடவேணும்
பிஞ்சு மலர்களை விடா
இஸ்ரேலிய கழுகுத் தாண்டவம்!

மனிதத் தோற்றத்தில்
வேட்டை மிருகங்களின் அராஜகம்
காவுகொண்டன - ஈமானியம் தோய்ந்த
இளசு உயிர்களைடா?!

ஏனிந்த இரத்த வேட்டை
எதற்கிந்த கபோதி ரகளை!?

கொள்கை, கோற்பாடு
நெறி, நேர்மை என
வாய்கிழிய மேடைபோடும்
மேற்கத்தேயக் குரல்கள் எங்கே?!

பதாதைகளும், சுலோகங்களும்
பக்குவமாய் ஒதுங்கிக் கொள்ள!
பரபரப்பாய் எழுதித்தள்ளும்
பஞ்சவர்ணப் பத்திரிக்களும்
ஓய்வெடுக்கச் சென்றுவிட்டன!

முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும்
இழிவுபடுத்த மட்டும்
முன்டியடித்துக் கொள்ளும்
மீடியாக்கள் - பலஸ்தீன மண்ணில்
உறையாமல் ஓடிக் கொண்டிருக்கும்
பிஞ்சு இரத்தத்தை
கண்டுகொள்ளவேயில்லை!
 

Saturday, November 17, 2012

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்

Gasa konflict
 
இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் வியாழக்கிழமை நடத்திய வான்வழி தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, கடந்த 2 நாள்களில் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காஸா பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவான எஜடைன் அல்-காஸம் பிரிகேட்ஸ் மீது இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை தாக்குதல் நடத்தியது.

இதில் காஸா சிட்டியில் காரில் சென்று கொண்டிருந்த அந்த அமைப்பின் கமாண்டர் அஹமது ஜாபரி மற்றும் அவரது பாதுகாவலர் முஹமது அல்-ஹம்ஸ் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து நடத்திய தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் சுகாதார அமைச்சர் முஃபுத் முக்காலாலாதி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

புதன்கிழமை மட்டும் 60 முறை தாக்குதல் நடத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என தகவல் வெளியானதால் அங்குள்ள மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதனால் காஸா பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

முன்னதாக, ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள ஜேவிஷ் மாகாணம் மீது 120க்கும் மேற்பட்ட ராக்கெட் தாக்குதல்களை நடத்தினர். இதில் 7 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

காஸா பகுதியைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பை அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது.

ஒபாமா ஆதரவு: காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் எகிப்து அதிபர் முகமது மோர்ஸி ஆகியோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி உள்ளார்.

இந்த உரையாடலின்போது, காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஒபாமா கண்டனம் தெரிவித்ததாகவும், இஸ்ரேல் ராணுவம் தற்காத்துக் கொள்ளும் வகையில், காஸா மீது தாக்குதல் நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. அதேநேரம் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.

ரிசர்வ் படையை அழைக்க ஒப்புதல்: காஸா பகுதியிலிருந்து நடத்தப்படும் தாக்குதலை சமாளிப்பதற்கு தேவைக்கேற்ப ரிசர்வ் படையை அழைத்துக்கொள்ள இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சரவை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

சிரியா கண்டனம்: காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தாக்குதலுக்கு சிரியா அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இத்தகைய தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சர்வதேச சமுதாயம் இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் என்றும் சிரியா கேட்டுக் கொண்டுள்ளது.

தூதரை வாபஸ் பெற்றது எகிப்து :

இஸ்ரேல் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், அந்நாட்டுக்கான தனது தூதரை வாபஸ் பெறுவதாக எகிப்து அதிபர் மோர்ஸி கூறியுள்ளார். மேலும், கெய்ரோவில் உள்ள எகிப்துக்கான இஸ்ரேல் தூதருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்குமாறு வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளார். தவிர, எகிப்தில் உள்ள அரபு ஒன்றியத்தைச் சேர்ந்த தூதர்கள் தங்கள் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டி இதுகுறித்து விவாதிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அமைதியை நிலைநாட்ட ஐ.நா. வேண்டுகோள்: வன்முறையைத் தவிர்த்து அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுக்கு ஐ.நா.சபை பொதுச் செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தி உள்ளார்.

காஸா பகுதியைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதற்கு பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேநேரம், பதிலுக்கு இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அப்பாவி மக்கள் பலியாகக் கூடும் என்பதால், வன்முறையைத் தவிர்க்க வேண்டும் என்று பெஞ்சமினிடம் தெரிவித்ததாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் மார்டின் நெசிர்கி தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்னை குறித்து எகிப்து அதிபர் முகமது மோர்ஸியுடன் பான் பேசி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 22 வருடங்கள்; கொழும்பில் நிகழ்வு

Muslim exil
வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 22 வருடங்கள் நிறைவடைந்துள்ளதை நினைவு கூறும் நிகழ்வொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் ஏற்பாட்டில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அமைப்பின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, பிரதம அதிதியாக கலந்த கொண்டு முக்கிய உரையினையாற்றினார். அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஜவன், பேராசிரியர் டாக்டர் ஹஸ்புள்ளா ஆகியோரும் உரைகளை ஆற்றினர். இடம்பெயர்வு குறித்து மாணவி நஹ்லா அனீஸ் ஆங்கிலத்தில் காத்திரமான உரையினை இங்கு முன்வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள், மாகாண முதலமைச்சர், உறுப்பினர்கள், பன்னாட்டு துாதுவர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானவர்களும் கலந்துகொண்டனர்.

Saturday, November 10, 2012

வடபகுதி முஸ்லிம்கள் எல்.ரீ.ரீ.ஈ யினால் வெளியேற்றப்பட்ட 22வது ஆண்டு நிறைவு (2)

டி.பி.எஸ்.ஜெயராஜ்

தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தும் அதை தவிர்த்து அவாகள் காட்டும் இந்த பெருந்தன்மை தமிழ் சமூகத்தை பெருமளவில் வெட்கித் தலை குனிய வைக்கிறது. ஒரு சில குரல்களைத் தவிர முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட இந்த கொடுமையை கண்டித்து எல்.ரீ.ரீ.ஈ இழைத்த குற்றத்துக்கு எதிராக சக்தி வாய்ந்த கூக்குரல் எழுப்ப படவில்லை. வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களுக்கு முழு நட்டஈடு வழங்கி, அவர்களது பழைய வீடுகளில் மீள்குடியேற்றி, அவர்களது சொத்துக்களை திரும்ப மீட்டுக் கொடுப்பதோடு தேவையான மாற்று ஏற்பாடுகளையும் வழங்க வேண்டும் என்று ஒரு தீவிரமான பெரிய கோரிக்கை தமிழர்களால் முன்வைக்கப்பட வேண்டும்,

Jaffnamuslim returnவவுனியா மாவட்டம் 1981ன் குடிசன மதிப்பீட்டின்படி 6.9 விகிதம் முஸ்லிம்களைக் கொண்டிருந்தது. இவர்களில் பெருந்தொகையானவர்கள் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே இருந்தார்கள். எனினும் எல்.ரீ.ரீ.ஈ கட்டுப்பாட்டு பகுதியில் வாழ்ந்த ஒரு சில முஸ்லிம்களையும் நவம்பர் முதலாம் திகதிக்குள் அங்கிருந்து வெளியேறும்படி கட்டளையிடப்பட்டது.

வன்னியில் வெளியேற்ற நடவடிக்கைகள் நடைபெறும்போதும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் பாதிப்புக்குள்ளாகவில்லை. 1981ன் குடிசன மதிப்பீட்டின்படி யாழ்ப்பாண மாவட்டத்தின் சனத்தொகையின் 1.6 விகிதமானவர்கள் முஸ்லிம்களாவார்கள். அவர்களில் சாவகச்சேரியில் வாழ்ந்த ஒரு பகுதியினர் ஏற்கனவே விரட்டப்பட்டு விட்டனர். ஆனால் யாழ்ப்பாண நகரத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் தங்களுக்கு வரக்கூடிய எந்த ஆபத்தையும் காணவில்லை. இது மற்றவர்களுக்கு பல்வேறு காரணங்களுக்காக நடத்தப்படுகிறது. யாழ்ப்பாண முஸ்லிம்கள் தங்களை யாழ்ப்பாணத்துடன் ஒருங்கிணைத்தே பார்த்தார்கள்.

தங்களின் தமிழ் சகோதரர்களால் தங்களுக்கு எதுவும் நிகழாது. ஹிட்லரின் யுகத்தில்கூட சில யூதர்கள் உருவாகியுள்ள பேரழிவை அலட்சியம் செய்து தங்கள் சாதாரண வாழ்க்கையை தொடர்ந்தது போலவே இதுவும் என அவர்கள் நினைத்தார்கள்.

யாழ்ப்பாணம்

அது முற்றிலும் நேர்மாறாகத் தோன்றியது, மற்றவர்களைவிட யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீது எல்.ரீ.ரீ.ஈ மிகவும் கடுமையாக நடந்து கொண்டது. யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறுவதற்காக நம்பமுடியாத மிகக் குறுகிய காலக்கெடுவே அவர்களுக்கு வழங்கப்பட்டது. இது நவம்பர் மாதத்துக்குள் முஸ்லிம்களை யாழ்ப்பாணத்திலிருந்து சுத்திகரிப்பு செய்துவிட வேண்டும் என எல்.ரீ.ரீ.ஈ முடிவு செய்த காரணத்தால் நடந்திருக்கலாம். ஒப்பீட்டளவில் புலிகள் யாழ்ப்பாண முஸ்லிம்களிடத்தில் கடைசியாக வந்தார்கள். எல்.ரீ.ரீ.ஈ அவர்களுக்கு குறித்த இறுதிக் காலக்கெடு ஒக்ரோபர் 30.jaffna-muslimchool

யாழ்ப்பாண முஸ்லிம்களில் அநேகர் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் மேற்கத்தைய நாடுகளில் தஞ்சம் கோரினார்கள். சிலர் கனடாவுக்கும் வந்தார்கள். இவர்களில் அநேகரை நான் ரொரான்ரோவில் சந்தித்து அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தினேன், மற்றும் அவர்களில் சிலர் இப்போது எனது நெருங்கிய நண்பர்கள். அவர்கள் தொடர்பான அச்சம் தோய்ந்த கதைகளையும் வெளியேற்றத்தின் பின்னர் அவர்களின் பயங்கர அனுபவங்களையும் நான் கேடடுள்ளேன். அவர்களின் அனுபவங்கள் கவலை நிறைந்ததாகவும் என்னை பெருமளவு வருத்தப்பட வைப்பதாகவும் இருந்தன.

காலை 10.30 மணியளவில் ஒலிபெருக்கி பூட்டப்பட்ட எல்.ரீ.ரீ.ஈயின் வாகனங்கள் முஸ்லிம்கள் வாழும் இடங்களிலுள்ள வீதிகள் ஒழுங்கைகள் எங்கும் பாய்ந்து திரிந்தன. முஸ்லிம்களின் குடும்பத்தின் ஒரு பிரிதிநிதி மதியம் 12 மணிக்கு ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்துக்கு வரவேண்டும் என்கிற ஒரு ஒழங்கான அறிவிப்பு தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருந்தது. ஆயுதம் தாங்கிய புலிகள் வீதிகளில் ரோந்து வரத் தொடங்கினார்கள். சிலர் சனநெருக்கம் மிக்க ஒழுங்கைகள் மற்றும் குச்சு ஒழுங்கைகளுக்குள் உள்ள வீடு வீடாகச் சென்று அறிவிக்கத் தொடங்கினார்கள்.

தாங்கள் செய்துகொண்டிருந்த வேலைகளையெல்லாம் அப்படியே போட்டவிட்டு மக்கள் மைதானத்தை நோக்கி விரைந்தார்கள். பி;.ப 12.30 மணியளவில் புலித் தலைவர் ஆஞ்சநேயர் அவர்கள் முன் உரையாற்றினார். ஆஞ்சநேயர் பின்னாளில் இளம்பரிதி என்கிற மற்றொரு பெயரால் அழைக்கப்பட்டார். ஆஞ்சநேயர் அல்லது இளம் பரிதி ஒரு குறுகிய செய்தியையே வெளியிட்டார். பாதுகாப்புக் காரணங்களுக்காக எல்.ரீ.ரீ.ஈ உயர்பீடம் சகல முஸ்லிம்களும் யாழ்ப்பாணத்தை விட்டு இரண்டு மணித்தியாலங்களுக்குள் வெளியெற வேண்டும் எனத் தீர்மானித்துள்ளது. அப்படிச் செய்யத் தவறினால் தண்டனை வழங்கப்படும். என்பதை தவிர வேறு விளக்கம் கொடுபடவில்லை.

மக்கள் கேள்வி அவரிடம் கேள்வி கேட்கத் தொடங்கியதும் இளம்பரிதி தனது அமைதியை இழந்து விட்டார். முஸ்லிம்கள் கட்டளைக்கு வெறுமே கீழ்படிய வேண்டும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அவர் உரத்து சீறிப் பாய்ந்தார். பின்னர் அவர் தனது துப்பாக்pயால் வானத்தை நோக்கி பல தடவைகள் சுடத் தொடங்கினார். அவருடைய மெய் பாதுகாவலர்களில் சிலரும் அவரைப் பின்பற்றிச் சுட்டார்கள். செய்தி வெகு தெளிவாக இருந்தது. ஆரம்பத்தில் மக்கள், இராணுவம் யாழ்ப்பாணத்தை நோக்கி படையெடுக்கப் போகிறது அதனால்தான் எல்.ரீ.ரீ.ஈ எல்லோரையும் வெளியெறும்படி கேட்டுள்ளது என்றுதான் நினைத்தார்கள். ஆனால் முஸ்லிம்களுக்கு மட்டும்தான் வெளியேறும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை தாமதமாகத்தான் அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

மேலும் மேலும் ஆயுதம் தாங்கிய புலிகள் அந்த இடத்தை நோக்கி வரத்தொடங்கவே அமைதியற்ற நிலையிலிருந்த முஸ்லிம்கள் தங்கள் உடமைகளை பொட்டலம் கட்டத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் அவர்கள் எடுத்துச் செல்லவேண்டிய பொருட்களைப்பற்றி எந்த கட்டுப்பாடும் தெரிவிக்கப்படவில்லை. எனவே அவர்கள் துணிமணிகள் மதிப்புள்ள பொருட்கள் நகை என்பனவற்றை பொதி செய்து எடுத்துக் கொண்டார்கள். புலிகளினால் பேருந்துகள் சீருந்துகள் லாரிகள் போன்றவை அவர்களின் போக்குவரத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அநேக முஸ்லிம்கள் தங்கள் சொந்த வாகனங்களை போக்கு வரத்துக்காக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

ஐந்து முச்சந்தி

தங்கள் வீடுகளைவிட்டு வெளியே பாய்ந்து வந்த முஸ்லிம்களுக்கு இப்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஐந்து முச்சந்தி சந்திப்பில் அவர்கள் அனைவரையும் வரிசையாக நிற்கும்படி கேட்கப்பட்டது. மகிழ்ச்சியற்று வாடிப்போயிருந்த அந்த மக்கள் வரிசையாய் நின்றார்கள் அவர்கள் பயங்கர அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார்கள். எல்.ரீ.ரீ.ஈயின் ஆண் மற்றும் பெண் அங்கத்தவர்கள் முஸ்லிம் மக்களிடம் அவர்கள் வைத்திருந்த பணம் உடமைகள் நகைகள் யாவற்றையும் தங்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டார்கள். ஒவ்வொரு நபருக்கும் தலைக்கு 150 ருபாவை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது. ஒவ்வொரு நபருக்கும் ஒரு செட் உடைகளை மட்டும் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

அற்பமான எதிர்ப்புகள் ஆங்காங்கே கிளம்பின. நான்கு பக்கமிருந்தும் நீண்டjaffna-muslim5 நவீன ஆயுதங்களும் மற்றும் அடக்கும் தொனியில் எழுந்த அச்சுறுத்தல்களும் விரைவிலேயே அவர்களை மௌனமாக்கியது. ஆடைகள் நிறைந்த பெட்டிகள் மற்றும் ஏனைய உடமைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. முதலில் அவை திறக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட ஆடைகள் வெளியே எடுக்கப்பட்டன. கால்சட்டை அணிந்த ஒருவருக்கு மேலதிகமாக ஒரு கால்சட்டையும் ஒரு சேட்டும் மட்டும் வழங்கப்பட்டது. சாரம் அணிந்த ஒருவருக்கு மேலதிகமாக மற்றொரு சாரமும் சேட்டும் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. எல்லாப் பணமும் காணி உறுதி மற்றும் அடையாள அட்டை என்பன உட்பட சகலமும் பறிமுதல் செய்யப்பட்டன.

பெண்கள் யுவதிகள் போன்றவர்களிடமிருந்த நகைகள் உருவி எடுக்கப்பட்டன. சில பெண் அங்கத்தவர்கள் மிகவும் கொடூரமான முறையில் காதுத் தோடுகளை காதுத் துளைகளில் இருந்து இரத்தம் வரும்படி இழுத்து எடுத்தார்கள். சிறுவர்களைக்கூட விட்டு வைக்கவில்லை. ஒரு கைக்கடிகாரம் கூட மிஞ்சவில்லை. இந்த முழு நடவடிக்கையையும் மட்டக்களப்பை சேர்ந்த கரிகாலனே மேற்பார்வை செய்ததாக யாழ்ப்பாண முஸ்லிம்கள் பின்னர் தெரிவித்தார்கள்.

கிட்டத்தட்ட 35 வரையான செல்வந்த முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டார்கள். அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ யினால் தடுத்து வைக்கப்பட்டார்கள். சில முஸ்லிம் நகை வியாபாரிகள் மறைத்து வைத்துள்ள தங்கம் பற்றிய விபரங்களை அறிந்து கொள்வதற்காக சித்திரவதை செய்யப்பட்டார்கள். மற்றவர்கள் முன்னால் வைத்து பலமாக அடித்ததில் ஒரு நகை வியாபாரி கொல்லப்பட்டார். பின்னா அவர்களை விடுதலை செய்வதற்காக பெருந்தொகையான பணம் கோரப்பட்டது. சிலர் 30 லட்சம் ரூபா வரை செலுத்தினார்கள். கடத்தப்பட்ட நபர்கள் பின் வந்த வருடங்களில் கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்பட்டார்கள். எனினும் 13 பேர் திரும்பி வரவேயில்லை, மற்றும் அவர்கள் இறந்துவிட்டதாக ஊகிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண முஸ்லிம்களை வெளியேற்றிய பின்னர் எல்.ரீ.ரீ.ஈ அந்த பிரதேசத்தை கயிறுகளினால் சுற்றிக் கட்டியது. 1990 நவம்பர் 2ந்திகதிய வீரகேசரி பத்திரிகை முஸ்லிம்கள் திரும்பி வரும்வரை அவாகள் உடமைகளை பாதுகாப்பதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டது என செய்தி வெளியிட்டது. திகைப்பிலாழ்ந்திருந்த சில முஸ்லிம்கள் கூட தங்கள் வெளியேற்றம் தற்காலிகமான ஒன்று என்றுதான் எண்ணினார்கள். இந்த விவகாரங்களின் உண்மை நிலையை அறிந்து கொள்ள அவர்களுக்கு பல மாதங்கள் பிடித்தன. காலம் செல்லச் செல்ல ஒரு காலத்தில் செல்வச் செழிப்பிலிருந்து இப்போத பரம ஏழையாகிவிட்ட முஸ்லிம்கள் இந்த புதிய சூழலுடன் இணங்கிப்போக முடியாதவர்களாக இருந்தார்கள். அவர்கள் பெரிதும் பின்தங்கிப் போனார்கள்.

குறிப்பாக யாழ்ப்பாண முஸ்லிம்களை பொறுத்த மட்டில் எல்.ரீ.ரீ.ஈ மிகவும் குரூரமாக நடந்து கொண்டது. யாழ்ப்பாண முஸ்லிம்கள், யாழ்ப்பாண மாநகரசபை வட்டாரத்தின் இரண்டு அல்லது மூன்று வட்டாரங்களில் மிகவும் அடர்த்தியாக வசித்து வந்தார்கள் சோனக தெரு, ஓட்டுமடம், மற்றும் பொம்மைவெளி போன்றவைகளே அவர்களது பகுதிகள். யாழ்ப்பாண சமூகத்தின் ஒரு ஒரங்கிணைந்த பகுதியாகவே அவர்கள் வாழ்ந்தார்கள். முன்பு ஒரு காலத்தில் யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா யாழ்ப்பாண புதிய சந்தை கட்டிடத்தை கட்டியபோது, அதில் கிட்டத்தட்ட முஸ்லிம்களின் ஆதிக்கமே நிறைந்திருந்தது. மூன்று கட்டிட தொகுதிகளில் இரண்டு முஸ்லிம்களின் ஏகபோக உரிமையாக இருந்தன. வன்பொருட்கள்,லாரி போக்கு வரத்து நகை வியாபாரம் மற்றும் இறைச்சி வியாபாரம் என்பன யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் ஆதிக்கத்திலேயே இருந்தன.

யாழ்ப்பாண முஸ்லிம்கள், யாழ்ப்பாணத் தமிழர்களைப் போலவே ஒரு பெருமையான கல்விப் பாரம்பரியத்தை கொண்டிருந்தார்கள். முன்னாள் அரச உத்தியோகத்தரும் மற்றும் ஸகிரா கல்லூரி அதிபருமான ஏ.எம்.ஏ அசீஸ், உச்ச நீதிமன்ற நீதியரசர் அப்துல் காதர், மேன்முறையீட்டு நீதிபதி எம்.எம்.ஜமீல், கல்விப் பணிப்பாளர் மன்சூர் போன்றவர்கள் யாழ்ப்பாண முஸ்லிம்களில் சில முன்னணி பிரமுகர்கள். மாநகரசபை அங்கத்தவர்களும் அவர்களில் இடம்பெற்றுள்ளார்கள், இரண்டு மாநகரசபை அங்கத்தவர்களான பசீர் மற்றும் சுல்தான் ஆகியோர்கள் யாழ்ப்பாண உதவி மேயர் மற்றும் பதில் மேயர் ஆகக் கடமையாற்றியுள்ளார்கள். வெளியேற்றத்துக்கு பிந்தைய அபிவிருத்தி முயற்சியாக யாழ்ப்பாண முஸ்லிம் சட்டத்தரணி இமாம் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் நியமிக்கப்பட்டிருந்தார்.

அகதிகள்

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட பெரும்பாலான முஸ்லிம்கள் புத்தளம் மாவட்டத்தில் தற்காலிகமாக குடியமர்ந்தார்கள். அநேகர் வவுனியா, நீர்கொழும்பு,மற்றும் கொழும்பு ஆகிய இடங்களை நாடிச் சென்றார்கள். ஏனையோர் அனுராதபுரம், குருநாகல், கம்பகா, மாத்தளை, மற்றும் கண்டி போன்ற மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்தார்கள். பெருமளவிலான யாழ்ப்பாண முஸ்லிம்கள் வெளிநாடுகளுக்கு அகதிகளாகச் சென்றார்கள்.

வடக்கின் பெருநிலப் பரப்பிலிருந்து இடம் பெயர்ந்த முஸ்லிம்களின் அதிகளவிலான செறிவு கல்பிட்டி மற்றும் புளிச்சகுளம் பிரதேசங்களிலேயே இருந்தது. யாழ்ப்பாண குடாநாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் அதிகளவிலானவர்கள் புத்தளம் தில்லையாடி பகுதியில் இருந்தார்கள்.

அதேவேளை எல்.ரீ.ரீ.ஈ, முஸ்லிம்களின் வீடுகளில் எஞ்சியிருந்த உடமைகளில் அநேகமாக எல்லாவற்றையும் கொள்ளையடித்தது. அநேக வீடுகளின் கூரையில் வேய்ந்திருந்த ஓடுகள், மரச்சட்டங்கள், கதவுகள், யன்னல்கள் போன்றவைகள் கூட உருவப்பட்டன. கொள்ளையடித் தளபாடங்களில் அநேகமானவை மக்கள் கடை எனப்படும் எல்.ரீ.ரீ.ஈ யின் கடைகளின் ஊடாக தமிழர்களுக்கு விற்பனை செய்யப்பட்டன. யுத்த நிறுத்தம் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் வடக்குக்கு திரும்பி வந்த சில முஸ்லிம்கள் தங்கள் உடமைகள் அடுத்த வீடுகளிலும் மற்றும் வியாபார நிலையங்களிலும் இருப்பதை அறிந்தனர். அநேக முஸ்லிம்களின் காணிகள், வீடுகள் மற்றும் வாகனங்கள் என்பன சட்டத்துக்கு புறம்பாக எல்.ரீ.ரீ.ஈ யினால் தமிழர்களுக்கு விற்பனை செய்யப் பட்டிருந்தது.

இராணுவம் 1995 - 96ல் யாழ்ப்பாண குடாநாட்டை திரும்பக் கைப்பற்றியது மற்றும் 2009ல் எல்.ரீ.ரீ.ஈயின் இராணுவத் தோல்விக்குப் பின்னர் வன்னியை கைப்பற்றியது என்பனவற்றின் விளைவுகளால் வட மாகாணத்தில் முஸ்லிம் மீள் குடியேற்றம் நடைபெற வழியுண்டானது. யுத்தம் முடிவடைந்து விட்ட போதிலும் மீள் குடியேற்றத்துக்கான வேகத்தில் இன்னும் அதிக எதிர்பார்ப்புகள் எதிர்பார்க்கப் படுகிறது.

1981ம் அண்டு குடிசன மதிப்பின்படி வட மாகாணத்திலுள்ள முஸ்லிம்களின் மொத்த சனத்தொகை 50,991 அல்லது 4.601 விகிதம் ஆகும். முஸ்லிம் சமூகத் தலைவர்கள் தெரிவிப்பது, 1990ல் இந்த வெளியேற்றம் நடந்தபோது அப்போதிருந்த முஸ்லிம்களின் சனத்தொகை கிட்டத்தட்ட 81,000 என்று. இதில் ஏறக்குறைய யாழ்ப்பாணத்தில் 20,000,மன்னாரில் 45,000, முல்லைத்தீவில் 7000 ,வவுனியாவில் 8000 மற்றும் கிளிநொச்சியில் சுமார் 1000 என்பன உள்ளடங்கும். இவை தவிர வவுனியா மற்றும் நயினாதீவுகளைச் சுமார் 7500; பேர்களும் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இந்த ஒட்டுமொத்த வெளியேற்றம் நடைபெற்ற உடனடியாக 67,000 பேர்கள் தங்களை உள்ளக இடம்பெயர்ந்தவர்கள் முகாம்களில் பதிவு செய்துள்ளார்கள். மீதியுள்ளவர்கள் முகாம்களுக்கு வெளியே உறவினர்களுடனும் மற்றும் நண்பர்களுடனும் தங்கியிருந்தார்கள்.

22 வருடங்களின் பின்னர் இந்த சனத்தொகை இயற்கையான பெருக்கம் காரணமாக இரண்டு மடங்காக உயர்ந்திருக்கும் என நம்பப்படுகிறது. வடபகுதி முஸ்லிம்களில் 75 விகிதமானவர்கள் வடக்குக்கு திரும்பச் சென்று மீள் குடியேறுவதற்கு விருப்பம் தெரிவித்து தங்களை பதிவு செய்துள்ளார்கள். ஆனால் அப்படி செய்வதற்கு விருப்பம் உள்ளபோதிலும், 2012 குடிசன மதிப்பு வெளிப்படுத்துவது, வடபகுதி முஸ்லிம்களில் ஒரு சிறிய அளவினரே தங்கள் தாயகங்களுக்கு நிரந்தரமாகத் திரும்பி வந்துள்ளார்கள் என்று.
மதிப்பீடு

வட மாகாணத்திலுள்ள முஸ்லிம் சனத்தொகை மற்றும் அவற்றின் விகிதாச்சாரம், என்பன முறையே 2012 குடிசன மதிப்பின்படி கீழ் குறிப்பிட்ட மாவட்டங்களில் பின்வருமாறு உள்ளன. மன்னார் 16,087 - 16.2 விகிதம்,வவுனியா 11,700 - 6.8 விகிதம்,யாழ்ப்பாணம் 2139 - 0.4 விகிதம், முல்லைத்தீவு 1760 - 1.9 விகிதம், கிளிநொச்சி 678 - 0.6 விகிதம். 1990 ல் கட்டாய வெளியேற்றம் நடைபெற்ற நேரத்திலிருந்த மதிப்பீடுகளுடன் ஒப்பீடு செய்கையில், அப்போது முற்றாக பாதிக்கப்படாத வவுனியாவை தவிர ஏனைய மாவட்டங்களில் முஸ்லிம்களின் சனத்தொகையில் பாரிய குறைவு என அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. வட மாகாணத்தின் தற்போதைய முஸ்லிம்களின் சனத்தொகை 32,396 அல்லது 3.061 விகிதம் மட்டுமே.

இந்த குறைவான முஸ்லிம் மீள்குடியேற்றத்துக்கு பல்வjaffna muslim6ேறு சமூக, கலாச்சார, பொருளாதார, மற்றும் அரசியல் காரணங்கள் இருக்கலாம். இந்த சிக்கலான காரணங்களை மற்றொரு சந்தர்ப்பத்தில் விரிவாக ஆராய்ந்து விளக்கப்படும். இப்போதைக்கு என்னால் முன்பு எழுதப்பட்ட சில குறிப்புகளை மீண்டும் எழுதி இந்த விடயத்தை முடிக்க விரும்புகிறேன்.

“ வெளியேற்றப் பட்ட சில முஸ்லிம்களின் உயர்ந்த பண்புகளில் ஒன்றாக நான் காண்பது, தமிழர்கள் மீது அவர்களுக்கு வெளிப்படையான காழ்ப்புணர்ச்சி குறைவாக இருப்பதையே. தங்களது இக்கட்டான நிலமைக்கும் அதற்கான காரணத்துக்கும் பொறுப்பானவர்கள் எல்.ரீ.ரீ.ஈ யினரே என அவர்கள் உணர்ந்துள்ளார்கள். சாதாரண தமிழர்களை அவர்கள் அதற்காக பழி சொல்வதில்லை. அரசாங்கத்தினதும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யினதும் கரங்களில் அகப்பட்டு அல்லல் படும் தமிழர்களின் நிலையை கண்டு அவர்களும் தமிழர்களுக்காக பரிதாபப் படுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ,தமிழ் மொழி,அதன் இலக்கியம் மற்றும் ஊடகங்கள் என்பனவற்றின் மீதுள்ள அவர்களது பற்று கொஞ்சமும் குறையவில்லை. இன்னும் சொல்லப்போனால் யாழ்ப்பாணத்தை பற்றிய தங்கள் பழைய நினைவுகளை ஆவலுடன் நினைவுகூர்ந்து வடக்கும் தங்களது தாயகமே என அவர்கள் பெருமையுடன் வலியுறுத்துகிறார்கள்.

தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தும் அதை தவிர்த்து அவாகள் காட்டும் இந்த பெருந்தன்மை தமிழ் சமூகத்தை பெருமளவில் வெட்கித் தலை குனிய வைக்கிறது. ஒரு சில குரல்களைத் தவிர முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட இந்த கொடுமையை கண்டித்து எல்.ரீ.ரீ.ஈ இழைத்த குற்றத்துக்கு எதிராக சக்தி வாய்ந்த கூக்குரல் எழுப்ப படவில்லை. வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களுக்கு முழு நட்டஈடு வழங்கி, அவர்களது பழைய வீடுகளில் மீள்குடியேற்றி,அவர்களது சொத்துக்களை திரும்ப மீட்டுக் கொடுப்பதோடு தேவையான மாற்று ஏற்பாடுகளையும் வழங்க வேண்டும் என்று ஒரு தீவிரமான பெரிய கோரிக்கை தமிழர்களால் முன்வைக்கப்பட வேண்டும்,

நல்லிணக்கம் பற்றி தேசிய அளவிலும் மற்றும் உலக அளவிலும் பேசப்பட்டு வரும் இப்படியான சூழலில், வடக்கிலுள்ள தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய இரு பகுதியினரிடையே நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டியது கண்டிப்பாக அவசியம். ஒரு உறுதியானதும் உண்மையானதுமான நட்புக்கரம் முஸ்லிம்களை நோக்கி நீட்டப்பட வேண்டும். 22 வருடங்களுக்கு முன்னர் எல்.ரீ.ரீ.ஈ யினால் நடத்தப்பட்ட திரளான வெளியேற்றத்துக்காக, நீதியானதும் பணிவானதுமான ஒரு முற்று முழுதான வெகுஜன மன்னிப்பை முஸ்லிம்களிடம் கோரவேண்டும்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

வடபகுதி முஸ்லிம்கள் எல்.ரீ.ரீ.ஈ யினால் வெளியேற்றப்பட்ட 22வது ஆண்டு நிறைவு (1)

 
டி.பி.எஸ்.ஜெயராஜ்

jaffna muslim-1ஸ்ரீலங்காவில் தமிழ் - முஸ்லிம் உறவுகளின் சரித்திரத்தில் இடம்பெற்ற கொடிய மனிதாபிமானமற்ற அத்தியாயத்தின் 22வது ஆண்டு நிறைவை வரலாறு கடந்த வாரம் பதிவு செய்தது.ஒக்டோபர் 1990 ல் தமிழீழ விடுதலைப் புலிகள்( எல்.ரீ.ரீ.ஈ ), தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை வட மாகாணத்தை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றி இனசுத்திகரிப்பு செய்த அட்டூழியமான நடவடிக்கை நடந்தேறியது. சில குறிப்பிட்ட நாட்களுக்குள் முஸ்லிம்கள் தாங்கள் பலப்பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த தங்கள் தாயகத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டார்கள்.

1990 ல் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்ட இந்த நடவடிக்கை ஒரு மனிதாபிமானமற்ற துயரம்தோய்ந்த பேரழிவாகும். துப்பாக்கி முனையில் ஒரு மக்களை, அவர்களின் பணம் மற்றும் நகைகளைப் பறித்துக்கொண்டு,அவர்கள் வாழ்ந்த இடத்தை விட்டு வேரோடு பிடுங்கி எறிந்தசெயல் வெறுக்கத் தக்கதும் மன்னிக்க முடியாததுமாகும். இந்த எழுத்தாளர் தனது முந்தைய எழுத்துக்களில் இந்த ஒட்டுமொத்த வெளியேற்றத்தையும் மற்றும் புலிகளின் சித்தாந்தத்துக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கிக் கொண்டு அதேவேளை தங்களை மனித உரிமைகளின் காலர்கள் என இப்போது காட்ட முயலும் தமிழ் சமூக அங்கத்தவர்களின் அவமானகரமான செயலைப்பற்றி ஓரளவு கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து முஸ்லிம்களின் வெளியேற்றம் ஒக்ரோபர் 15ல் சாவகச்சேரியில் உள்ளவர்களில் ஆரம்பித்து ஒக்ரோபர் 30ல் யாழ்ப்பாண நகரத்திலுள்ளவர்களின் வெளியேற்றத்துடன் முடிவுக்கு வந்தது. வடக்கு பெருநிலப்பரப்பில் முஸ்லிம்களை வெளியேற்றும் நிகழ்வு யாழ்ப்பாண நகரத்தில் ஆரம்பிப்பதற்கு சில நாட்கள் முன்பு ஆரம்பித்து குடாநாட்டிலிருந்து முஸ்லிம்களை சுத்தப்படுத்திய சில நாட்களின் பின்னர் நிறைவெய்தியது.

வடக்கு முஸ்லிம்களில் பெருந்தொகையானவர்கள் அப்போது மன்னாரில் வசித்து வந்தார்கள். அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். யாழ்ப்பாணம் மற்றும் மன்னாருக்கு புறமே முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம்களும்கூட வெளியேற்றப்பட்டார்கள். வவுனியால் வாழ்ந்த முஸ்லிம்கள் அதிர்ஸ்டசாலிகளாக இருந்தார்கள் ஏனெனில் அவர்கள் வாழ்ந்த கிராமங்களில் பெரும்பகுதி அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்தன. எல்.ரீ.ரீ.ஈ யினரால் வடக்கு பெரு நிலப்பரப்பிலிருந்து 50,000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டார்கள். குடாநாட்டிலிலுள்ளவர்களையும் சேர்த்து 1990 ல் வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 75,000 க்கு மேலிருக்கும்.

வடபகுதி முஸ்லிம்கள் அவர்களது சக தமிழர்களுக்குச் சமமான பாதிப்பை அப்போது நடைபெற்ற யுத்தத்தில் அனுபவித்தார்கள். அவர்களும் தமிழ் குடிமக்களைப்போல திவிரமான ஷெல் மற்றும் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றபோது காலத்துக்கு காலம் தங்கள் வீடுகளை விட்டு வெளியெறவேண்டியிருந்தது. அவர்கள் எப்போதும் சில நாட்கள் கழித்து தங்கள் வீடுகளுக்குத் திரும்பிவிடுவார்கள். ஆனால் கிழக்கு மாகாண நிலமை வித்தியாசமான ஒரு திருப்பத்தை அடைந்திருந்தது.

தமிழ் - முஸ்லிம் பகை உணர்ச்சி கிழக்கில் அதிகரித்து வந்தது. எல்.ரீ.ரீ.ஈயின் சில முஸ்லிம் அங்கத்தவர்கள் அதை கைவிடவும்,இராணுவத் தளபதி கருணா மற்றும் அரசியல் பொறுப்பாளர் கரிகாலன் என்பவர்களின் கீழிருந்த வேறு சிலர் எதிரியின் பாசறைக்கு செல்லவும் தொடங்கினார்கள். எல்.ரீ.ரீ.ஈ யிலிருந்த மற்றும் சில முஸ்லிம் அங்கத்தவர்கள் அதன் தலைமையினால் கொல்லப்பட்டார்கள். ஒரு முஸ்லிம் எதிர்ப்பு உணர்வு எல்.ரீ.ரீ.ஈக்குள் தலைதூக்கியிருந்தது.

மறுபக்கத்தில் அப்போதிருந்த ஐதேக அரசு மோசமான இந்த உணர்வுகளைப் பயன்படுத்தி காரியம் சாதிக்கத் தொடங்கியது. அநேக முஸ்லிம் சமூக விரோத சக்திகளை உள்ளுர் பாதுகாப்பு காவலர்களாக அரசாங்கம் நியமனம் செய்தது. இந்த பிரிவினர் பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து தமிழ் எதிர்ப்பு வன்முறைகளை தூண்டிவிடத் தொடங்கினார்கள். சில சந்தர்ப்பங்களில் சில தமிழர்களின் கொலைக்கு இந்த முஸ்லிம் உள்ளுர் பாதுகாப்பு காவலர்கள் பொறுப்பாக இருந்துள்ளார்கள். இவர்கள் தலைமை தாங்கிய கும்பல்கள் பல தமிழ் குக்கிராமங்கள் மற்றும் கிராமங்களை அழித்து நாசமாக்கின. பாதுகாப்பு படைகளின் ஒரு பிரிவினரால் அவர்களுக்கு மறைமுக ஆதரவு வழங்கப்பட்டது.

இதற்குப் பதிலடியாக எல்.ரீ.ரீ.ஈ முஸ்லிம் பொதுமக்கள்மீது கொடூரமும் பயங்கரமுமான படுகொலைகளை நடத்தியது. சம்மாந்துறை மற்றும் காத்தான்குடி பள்ளிவாசல்கள்மீது தாக்குதல் நடத்தி பிராத்தனை செய்து காண்டிருந்த முஸ்லிம்களை கொலை செய்ததும், மற்றும் ஏறாவூரில் உள்ள சதாம் ஹ_சைன் மாதிரிக் கிராமத்தில் பொதுமக்களை படுகொலை செய்ததும் இதற்கான மோசமான உதாரணங்கள்.

தமிழ் - முஸ்லிம் உறவுகள் கிழக்கில் மிகவும் தாழ் நிலையை எட்டியிருந்த போதும்,வடக்கின் நிலைமைகள் அதற்கு முற்றிலும் வித்தியாசமானதாக இருந்தது. அங்கு இரு சமூகத்தினரும் தொடர்ந்தும் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அதற்கான ஒரு காரணம் ஒரு சிறிய அளவான முஸ்லிம்களால் பெரும்பான்மை தமிழர்களுக்கு எதுவித அச்சுறுத்தலும் இல்லாததுதான்.

சாவகச்சேரி

jaffna muslim in puttalam-1கிழக்கில் முறுகல்கள் இடம்பெற்றுவரும் வேளையில் வடக்கில் முஸ்லிம்கள் அமைதியாக வாழ்வதை கிழக்கு புலிகளால் ஏற்றுக்கொள்ள முடியாமலிருந்தது. கிழக்கு அரசியல் பொறுப்பாளர் கரிகாலன் தலைமையிலான தூதுக்குழுவொன்று, முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்கு பிரபாகரனை இணங்கச் செய்வதற்காக வடக்குக்கு வந்தது. முஸ்லிம்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்று கரிகாலன் வெளிப்படையாகவே வரும்பினார். இந்த வகையான அழுத்தங்கள் புலிகளின் உயர் பீடத்துக்கு வழங்கபட்டுக் கொண்டிருந்தவேளை சாவகச்சேரியில் ஒரு சம்பவம்; நடந்தது.

1990 செப்ரம்பர் 4 ல் எல்.ரீ.ரீ.ஈ யின் உதவியாளர்கள் என்றழைக்கப்படும் ஒரு தமிழ் குழுவினர் சாவகச்சேரி மசூதி அருகில் வைத்து சில முஸ்லிம்களுடன் வாய் தர்க்கத்தில் ஈடுபட்டார்கள். சிலர் மசூதியை தாக்கவும்கூட முயற்சித்தார்கள். முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சில இளைஞர்கள் அதில் தொடர்புபட்டிருந்த தமிழர்கள் சிலரைப் பிடித்து எல்.ரீ.ரீ.ஈயிடம் ஒப்படைத்தனர். புலிகள் அவர்களை விடுதலை செய்ததுடன் தமிழ் பெரும்பான்மையினரை கோபமூட்ட வேண்டாம் என முஸ்லிம் சிறுபான்மையினரை எச்சரிக்கையும் செய்தனர். செப்ரம்பர் 25 ந்திகதி குடாநாட்டை விட்டு வெளியேறுவதற்கு எல்.ரீ.ரீ.ஈ தனக்கு பாஸ் வழங்காததையிட்டு ஒரு முஸ்லிம் யுவா எதிர்ப்பு தெரிவித்தபோது அவர் புலி அங்கத்தவர்களால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன்பின் அவர் காணாமல் போய்விட்டார்.

சாவகச்சேரியில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் நகரிலுள்ள டச்சு வீதியிலேயே வசித்து வந்தார்கள். எல்.ரீ.ரீ.ஈ யினர் முஸ்லிம்களின் உள்ளக வன்முறை சம்பவம் ஒன்றை விசாரிக்க வந்தவேளை அங்கு சில வாள்கள் இருப்பதை கண்டு பிடித்தார்கள். புலிகளின் விளக்கங்களின்படி இது எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்தது. முஸ்லிம்களின் வீடுகள் கடைகள் மற்றும் வியாபார நிலையங்கள் என்பனவற்றில் எல்.ரீ.ரீ.ஈ தேடுதல் நடத்தி ஒரு முன்னணி முஸ்லிம் வியாபாரிக்கு சொந்தமான கடையொன்றுக்குள் 75 வாள்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தது. இது ஒரு இரகசிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கப்பட்டது. இந்த விளக்கம் உண்மையானதாக இருந்தாலும்கூட, வெறும் 75 வாட்கள் எல்.ரீ.ரீ.ஈயினரின் துப்பாக்கிகளுக்கு எதிராக ஏதாவது பயன்தருமா?

இந்த வாட்கள் கண்டெடுத்த கடையானது, வியாபாரத்துக்காக அடிக்கடி லாரிகளை கொழும்புக்கு பயணப்படுத்தும் ஒரு முஸ்லிம் வியாபாரிக்கு சொந்தமானது என்று கண்டறியப்பட்டது. அளவுக்கு அதிகமான சித்தப்பிரமை கொண்ட எல்.ரீ.ரீ.ஈயின் புலனாய்வுப் பிரிவினர் இதில் ஏதோ பெரிய சதி இருப்பதாக சந்தேகம் கொண்டனர். இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு உபகரணங்கள்,அடிக்கடி கொழும்புக்கு பயணம் செய்யும் முஸ்லிம் வியாபாரியை நாச வேலைகளில் ஈடுபடவோ அல்லது ஒற்றனாக பணியாற்றவோ தூண்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் என உணரப்பட்டது.

எனவே சாவகச்சேரி முஸ்லிம்கள் பிரதானமாக டச்சு வீதியில் வசிப்பவர்கள் 1990 ஒக்ரோபர் 15ல் வெளியேற்றப் பட்டார்கள். ஏறக்குறைய 1000 மக்கள் துப்பாக்கி முனையில் வெளியேறும்படி வற்புறுத்தப் பட்டார்கள். வடமாகணத்தின் தென்பகுதி எல்லையிலுள்ள பட்டினமான வவுனியாவுக்கு அப்பால் செல்லும்படி அவர்களிடம் கூறப்பட்டது. சாவகச்சேரி முஸ்லிம்கள் ஒக்ரோபர் 18ல் வவுனியாவுக்கு வந்தார்கள். ஒருக்கால் சாவகச்சேரி முஸ்லிம்கள் வெளியெறும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து சங்கிலி தொடர் போன்று அது நீண்டது.

இந்த வெளியேற்றத்தின் சோகம் என்னவென்றால், முஸ்லிம்கள் ஒரு ஆயுதக்குழுவின் கட்டளைக்கு அடிபணிந்து தாங்கள் பரம்பரை பரம்பரையாக குடியிருந்த பிரதேசங்களை விட்டு தப்பியோடவேண்டி இருந்ததுதான். அங்கு கோள்வி இருக்கவில்லை, எதிர்ப்புகள் இருக்கவில்லை, அதுதான் எல்.ரீ.ரீ.ஈயின் அதிகாரம் மற்றும் பயங்கரவாதம் என்பது. தவிரவும் முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவும் இருந்தார்கள்.

ஐந்து வருடங்களின் பின்னர் 1995ல் தமிழர்களும் பெரும் எண்ணிக்கையில் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் இடம்பெற்றது. பின்னர் 2007 - 2009 காலப்பகுதியில் வடக்கு பெரு நிலப்பரப்பான வன்னியிலிருந்த தமிழர்கள் போர் தீவிரமடைந்ததின் காரணமாக இடத்துக்கு இடம் அலைந்து திரியவேண்டி ஏற்றபட்டது. இறுதியில் அவர்கள் முல்லைத்தீவு கடற்கரையோரமாக இருந்த ஒரு பட்டை போன்ற சிறிய துண்டுப் பகுதிக்குள் கட்டுப்படுத்தப் பட்டார்கள். ஒருவேளை இது செய்த பாவத்தின் கர்ம விதி அல்லது தர்மத்தின் கொள்கை என்றும் சிலர் சொல்லலாம்.

கரிகாலன்

எல்.ரீ.ரீ.ஈ யினால் பின்னர் தரப்பட்ட விளக்கத்தின்படி, ஒக்ரோபர் மாதம் வடக்கில் பிரசன்னமாகியிருந்த கரிகாலனின் கீழ் இயங்கிய கிழக்குப் பகுதி படைப்பிரிவே இந்த ஒட்டுமொத்த வெளியேற்றத்தை மேற்கொள்ளும் முடிவுக்கு பெருமளவில் பொறுப்பாக இருந்தனர் என்று தெரியவந்தது. முக்கியமாக இது கிழக்கு வாழ் முஸ்லிம்களுக்கு ஒருவகையில் எச்சரிக்கையாக வழங்கப்பட்ட பதிலடி என்றே சித்தரிக்கப்பட்டது. இந்த முடிவு மிகைப் படுத்தப்பட்ட அச்சுறுத்தலுக்கான கருத்தை உருவாக்குவதில் மேலும் செல்வாக்கு செலுத்தியது. முஸ்லிம்கள், தமிழ் சமூகத்துக்கு குழிபறிக்கும் முக்கிய ஐந்தாம் படையாளர்களாக பார்க்கப்பட்டது அப்பட்டமான ஒரு இனவாத மனோநிலையாகும். இந்தப் பின்னணியை கருத்தில் கொண்டுதான் வெளியேற்ற நடைமுறை இடம்பெற்றது.

1981ம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின்படி மன்னார் மாவட்ட சனத்தொகையின் 26 விகிதமானவர்கள் முஸ்லிம்கள். தள்ளாடி தரைப் பாலத்தினூடாக பெரு நிலப்பரப்பை இணைக்கும் மன்னார் தீவில் அவர்களது சனத்தொகை 46 விகிதமாகும். மன்னார் தீவிலுள்ள முதன்மையானதும் செல்வச் செழிப்பானதுமான முஸ்லிம் கிராமம் எருக்கலம்பிட்டியாகும். கிட்டத்தட்ட 300 வரையான புலி அங்கத்தவர்கள் 1990 ஒக்ரோபர் 21ல் எருக்கலம்பிட்டியை சுற்றி வளைத்து முஸ்லிம்களின் பணம் நகை மற்றும் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் என்பனவற்றை கொள்ளையடித்தனர். ஏறக்குறைய 800 - 850 வீடுகள் இதில் இலக்கு வைக்கப்பட்டன.

ஒக்ரோபர் 22ல் மன்னார் - புத்தளம் எல்லைக்கு அருகிலிருந்த மறிச்சுக்கட்டி எனும் கிராமத்திலிருந்த சில முஸ்லிம்கள்,ஆயுதப் படையினருடன் இரகசிய தொடர்புகளை ஏற்படுத்தினார்கள் என்கிற குற்றச்சாட்டின் பேரில் எல்.ரீ.ரீ.ஈ யினால் கைது செய்யப்பட்டார்கள். ஒக்ரோபர் 23ல் மறிச்சுக்கட்டி கிராமத்தவர்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேறும்படி பணிக்கப் பட்டார்கள். இதைத் தொடர்ந்து ஒக்ரோபர் 24ல் மறிச்சுக்கட்டி அமைந்துள்ள உதவி அரசாங்க அதிபர் பிரிவான முசலியை சேர்ந்த அனைத்து முஸ்லிம்களுக்கும் வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. யதேச்சையாக முசலி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு உதவி அரசாங்க அதிபர் பிரிவாகும்.

இந்த வெளியேற்ற நடவடிக்கை மன்னாரில் தொடர்ந்து இடம்பெற்றது. ஒக்ரோபர் 24ல், எல்.ரீ.ரீ.ஈ ஒலிபெருக்கி வழியாக மன்னார் தீவில் வாழும் அனைத்து முஸ்லிம்களும், ஒக்ரோபர் 28 க்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் வெளியேற்ற நடவடிக்கைகளை இறுதி செய்வதற்காக அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ அலுவலகத்தக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் அறிவிப்புச் செய்தது. நாதியற்ற முஸ்லிம்கள் அவ்வாறு செய்வதற்கு தயாராகி தங்கள் உடமைகளை பொதி செய்யலானார்கள். ஒக்ரோபர் 26ல் எல்.ரீ.ரீ.ஈ மீண்டும் எருக்கலம்பிட்டியை ஆக்கிரமிப்புச் செய்து முஸ்லிம்களின் பொதி செய்யப்பட்ட உடமைகள் யாவற்றையும் கைப்பற்றினார்கள்.

மன்னாரில் வாழ்ந்த கத்தோலிக்க மதகுருமார் உள்ளிட்ட அநேக தமிழர்கள் இந்த வெளியேற்ற உத்தரவுக்கு எதிராக எல்.ரீ.ரீ.ஈ யினரிடம் ஆட்சேபணை தெரிவித்தபோதும் அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. பின்னர் எல்.ரீ.ரீ.ஈ இந்த வெளியேற்றத்துக்கான கடைசி நாளாக நவம்பர் 2 ஆக மாற்றியமைத்தது.

ஒக்ரோபர் 28 மாலையில் மன்னார் தீவிலுள்ள,எருக்கலம்பிட்டி மற்றும் இதர முஸ்லிம் பகுதிகளை எல்.ரீ.ரீ.ஈ மூடியது. மன்னார் தீவிலுள்ள மன்னார் நகரம், மற்றும் எருக்கலம்பிட்டி, தாராபுரம், புதுக்குடியிருப்பு, உப்புக்குளம், கோந்தன்பிட்டி போன்ற பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்கள் யாவரும் கடற்கரையிலுள்ள குறிப்பிட்ட இடங்களுக்கு திரளாகச் சென்று தங்கும்படி வற்புறுத்தப் பட்டார்கள். அங்கு அவர்கள் உணவோ,குடிநீரோ,அல்லது சுய தேவைக்கான முறையான வசதிகளோ இல்லாமல் தனித்து விடப்பட்டார்கள். மன்னாரிலிருந்த கரிசனையுள்ள தமிழ் மக்கள் எல்.ரீ.ரீ.ஈ யினருடன் விவாதம் செய்து கடற்கரையிலிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவும் குடிநீரும் எடுத்துச் சென்று வழங்கினார்கள்.

மன்னார் தீவினை சேர்ந்த முஸ்லிம்கள் கடல்வழியாக 60 மைல்களுக்கு தெற்கிலிருந்த வடமேற்கு மாகாணத்தை சேர்ந்த கற்பிட்டிக்கு கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டனர். மன்னார் மற்றும் புத்தளம் பகுதிகளை சேர்ந்த முஸ்லிம்களின் படகுகள் இந்த நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டன. இந்த முழு நடவடிக்கைகளும் முற்றுப்பெற மூன்று நாட்கள் எடுத்தன. குறைந்தது ஒரு குழந்தையாவது தண்ணீரில் தவறி விழுந்து இறந்தது. சில குழந்தைகளும் மற்றும் வயதானவர்களும் கற்பிட்டியை அடைந்த உடனேயே இறந்து போனார்கள்.

பெருநிலப்பரப்பு

jaffna muslim in puttalamன்னார் தீவில் வாழ்ந்த முஸ்லிம்களின் பரிதாபமான நிலமை அதுவாக இருந்தால், மன்னார் மாவட்டத்தின் பெருநிலப் பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்களின் நிலமையும் அதற்குச் சமமான கேடுகெட்ட நிலையிலிருந்தது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள முசலி உதவி அரசாங்க அதிபர் பிரிவினை சேர்ந்த முஸ்லிம்கள் மற்றும் அதேபோல விடத்தல்தீவு,பெரியமடு, சன்னார், முருங்கன்,வட்டக்கண்டல், பறப்பாங்கண்டல் போன்ற ஏனைய இடங்களில் வாழ்ந்த முஸ்லிம்களையும் அவர்களது உடமைகளான மிதி வண்டிகள்,வாகனங்கள்,எரிபொருள்,மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் என்பனவற்றை உள்ளுர் பாடசாலை அல்லது மசூதியில் கையளிக்குமாறு ஒக்ரோபர் 25ல் எல்.ரீ.ரீ.ஈ கட்டளை பிறப்பித்தது.

ஒக்ரோபர் 26ல் எப்படி மாவட்டத்தை விட்டு வெளியேறுவது என்ற அறிவுறுத்தல்களைப் பெறுவதற்காக உள்ளுர் எல்.ரீ.ரீ.ஈ அலுவலகத்துக்கு சமூகமளிக்குமாறு அவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஒவ்வொரு குடும்பமும் தங்களுடன் ஐந்து பயணப் பைகளையும், பணமாக 2000 ருபாவையும், மற்றும் ஒரு தங்கப் பவுணையும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். மடு,பண்டிவிரிச்சான்,மற்றும் வவுனியாவுக்கு அருகில் உள்ள மற்றொரு இடம் என்பனவற்றில் வைத்து முஸ்லிம்கள் சோதனையிடப்பட்டார்கள். மடு மற்றும் பண்டிவிரிச்சான் பகுதிகளில் அதிக பொருட்களை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டால் அவைகளைப் பறிமுதல் செய்து அதற்கான ரசீதை எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் வழங்கிய பின்பு அவர்களை செல்ல அனுமதித்தார்கள். ஆனால் வவுனியாவுக்கு அருகில் அநேக பொருட்கள்,சுடுநீர் குடுவைகள் போன்றவை, எழுந்தமானத்துக்கு கொள்ளையடிக்கப்பட்டன. இந்தப் பிரிவு மக்கள் கால்நடையாகவே வவுனியாவை வந்தடைந்தார்கள்.

வடக்கு வன்னி பெரு நிலப்பரப்பின் ஏனைய பகுதிகளிலும் இந்த வெளியேற்றம் நடந்தேறியது. ஒக்ரோபர் 22, காலையில்,முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நீராவிப்பிட்டி எனும் இடத்திலிருந்த சில முஸ்லிம்கள் ஆயுதப்படையினருக்கு தகவல்கள் வழங்குகிறார்கள் என்கிற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்கள். அதே நாள் மாலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்ந்த அனைத்த முஸ்லிம்களும் ஒரு வாரத்துக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அடுத்த நாள் ஒக்ரோபர் 23ல் கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்களை ஐந்து நாட்களுக்குள் அங்கிருந்து வெளியேறவேண்டும் என்று கட்டளை வெளியானது. 1981 ன் குடிசன மதிப்பீட்டின்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம்கள் 4.6 விகிதமும் கிளிநொச்சியில் 1.6 விகிதமும் வசித்து வந்தார்கள்.

(தொடரும்)

Sunday, November 4, 2012

தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது தாக்குதல்: பள்ளிவாசல் உடைப்பு, 10க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்

குருநாகலை, தொடங்கஸ்லந்த தேர்தல் தொகுதிக்குட்பட்ட தெலும்புகல்ல பிரதேசத்தில் பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை நடத்தியோர் மீது சுமார் 60 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியதுடன் பள்ளியினையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் ரிதிகம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொகரல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர். பழைமைவாய்ந்த ஜும்ஆப் பள்ளிவாசலுடன் முரண்பட்டுக் கொண்டு பிரிந்த சென்ற அணியினர் புதிய ஜும்ஆப் பள்ளிவாசலை ஆரம்பித்ததுள்ளனர். பின்னர் நீதி மன்றத்தில் இரு சாராருக்கிடையே இது குறித்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்றம் புதிய பள்ளிவாசலைச் சார்ந்த குழுவினருக்கு தொழுகையை மேற்கொள்ளுமாறு தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து புதிய பள்ளியில் இந்த அணியினர் தொழுகையை மேற்கொண்டிருந்த போது அங்கு வந்த மற்றுமொரு குழுவினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கொகரல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில் சில காலமாக இரு மார்க்கக் குழுக்களுக்கிடையே நிலவி வந்த கருத்து வேறுபாடே குறித்த கைகலப்புக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
********************************************************************************************************************
ஏனிந்த அவலம்?!
 
நம் நாட்டில் முஸ்லிம்கள் எதிரிகளால் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாம் முடிந்தவரை நம் ஒற்றுமையை பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, நமக்கிடையேயுள்ள கருத்து முரண்பாடுகளினால் ஏற்படும் இவ்வாரான பாரிய பிளவுகளால், நாம் பசித்த கரடியின் கையில் கிடைத்த இரைச்சித் துண்டாக எம் சமூகத்தை ஆக்கிவிடக் கூடாது.
 
இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும். அல்லாஹ் நம் அனைவரையும் காப்பானாக!

22 வருடங்களாக கொழும்பில் ஒரு அகதிமுகாம்‏

 
(சந்திப்பு: முஹம்மட் பிறவ்ஸ்)

 * கொழும்பில் மறைக்கப்பட்ட வடபுல முஸ்லிம் அகதிகள்
* 5 வருடங்களாக வாக்குரிமை பறிக்கப்பட் ஒரு சமூகம்
* நேரசூசிப்படி ஆண்களும் பெண்களும் குளிக்கும் வினோத நடைமுறை
* 8 கழிப்பறைகளுடன் வாழ்கின்ற 90 குடும்பங்கள்

jaffna muslim_002மனிதனின் அடிப்படை உரிமையான வாக்குரிமை மறுக்கப்பட்ட ஒரு சமூகம் ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாகப்போகும் நாட்டினுடைய தலைநகரத்தில் இருப்பதும் ஒரு ஆச்சரியமான செய்திதான். இவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? இவர்களது பிறப்பிடம் எது? இவர்களுக்கு வீடுகள் உண்டா இல்லையா என்று இன்றுவரை பதியப்படவில்லை.

இவ்வாறான மக்கள் வசிக்கும் "முஹாஜிரீன்' அகதிமுகாம் மட்டக்குளி, காக்கைதீவு பிரதேசத்தில் அமைந்திருப்பது நம்மில் அனேகமானோருக்குத் தெரியாது. அங்கு வசிக்கின்ற மக்களின் நிலமைகளை கண்டறிவதற்காக அண்மையில் நான் அங்கு விஜயம் செய்தேன்.

யார் இவர்கள்?

1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட இவர்கள், வாடகை வீட்டில் வாழ்ந்த காரணத்தினாலும், தமிழர்களிடத்தில் தங்களது பூர்வீக காணிகளை பறிகொடுத்த காரணத்தினாலுமே இன்னும் அகதி நாமத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன், பொதுக் காணிகளில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த குடும்பங்களும் இதற்குள் அடங்குகின்றது.

அகதிமுகாமின் உருவாக்கம்
1990 ஒக்டோபர் 30ஆம் திகதி விடுதலைப் புலிகளினால் உடுத்த உடைகளுடன் விரட்டப்பட்ட வடபுல முஸ்லிம்கள் இலங்கையின் பல பாகங்களிலும் இடம்பெயர்ந்து சென்றனர். அவர்களில் ஒரு பகுதியினர் மட்டக்குளி, காக்கை தீவிலுள்ள ஓரிடத்தில் அவர்களை தற்காலிகமாக தங்கினர்.

காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் வின்சன் பெரேராவின் வேண்டுகோளுக்கமைய முன்னாள் எம்.பி. அபூபக்கர் தலைமையில் இதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுத்தார்.

காக்கைதீவு கடற்கரையின் அருகிலுள்ள மேற்படி அகதிமுகாம் ஒரு சதுப்புநில பிரதேசமாகும். மக்கள் குடியேறுவதற்கு முன்னர் இங்கு பாம்புகளும், மனித எலும்புக் கூடுகளுமே நிறைந்த பற்றைக்காடகவே காணப்பட்டது. இது பாடசாலை ஒன்றைக் கட்டுவதற்கென ஒதுக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட நிலமாகும்.

ஆரம்பத்தில் ஓலையினால் குடிசைகள் அமைக்கப்பட்டது. பின்னர் அரசசார்பற்ற நிறுவனங்களினால் பலகையினால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. தற்போது ஒருசில குடும்பங்கள் பணத்தை சிறுகச் சிறுகச் சேமித்து அதையே கற்களினால் கட்டத் தொடங்கியுள்ளனர்.


குடியிருப்பு

வடக்கில் யுத்தம் முடியும்வரை இந்த அகதிமுகாமில் இருக்குமாறு காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் வின்சன் பெரேரா கூறியுள்ளார். ஆனால், யுத்தம் முடிந்து 5 வருடங்களாகியும் இம்மக்களின் அவலம் தொடர் கதையாகவே உள்ளது. இந்த அகதிமுகாமில் முன்னர் 200 குடும்பங்கள் வாழந்தனர். அவர்களில் அரைவாசிப்பேர் வேறிடங்களுச் சென்றுள்ளனர். தற்போது 100 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றது.

இவர்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி, தங்களது தலைவிதியை நொந்துகொண்டு மிகவும் கஷ்டமான நிலைமையில் வாழ்ந்து வருகிறார்கள். மிகவும் சிறிய குடிசைக்குள் சுருண்டு கொண்டு உறங்குகின்றார்கள்.

மழை பெய்தால் ஒழுகும் குடிசைகள், நிரம்பி வழிகின்ற மலசலகூடம், எந்நேரமும் நீர் ஊறிக்கொண்டிருக்கும் சதுப்புநிலம் என மக்கள் மிகவும் இக்கட்டான ஒரு சூழலில் வாழ்ந்து வருகின்றனர். பெற்றோர்கள், பிள்ளைகள் என தனியாக தூங்குவதற்கான இடவசதிகள் கூட இல்லை. பெண் பிள்ளைகளுக்கு மறைவான அறைகள் கூட இங்கில்லை.

இடப்பற்றாக்குறை காரணமாக ஒவ்வொரு குடிசைகளும் மிகவும் நெருக்கமாகவும், சிறிதாகவும் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளில் விறகுக் கட்டைகள் போல் அடுக்காகத் தூங்குகின்றனர். சிறுவர்கள் படிப்பதற்கோ, விளையாடுவதற்கோ இடங்களில்லை.

நிவாரண உதவிகள்

நான் சென்றபோது கூட, நிவாரணம் கொடுக்கத்தான் வந்திருக்கிறார்களோ என்று ஒருசில குடியிருப்பாளர்கள் நினைத்துக்கொண்டனர். ஆரம்பகாலங்களில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு கொடுக்கப்பட்டன.

பின்னர் பல அரச, அரசார்பற்ற நிறுவனங்கள் அவர்களுக்கு உலருணவு, அத்தியவசியப் பொருட்கள் போன்ற பல நிவாரணங்களை வழங்கி வந்துள்ளது. முன்னாள் எம்.பி. அபூபக்கர் தலைமையில் ஆரம்பகாலங்களில் நிவாரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. அவை மக்களுக்கு நேரடியாக பகிர்ந்தளிக்கப்படாமல், பலரின் வீடுகளுக்குச் சென்றபின், அதில் ஒரு சிறுபகுதியே தங்களுக்கு கிடைத்ததாக மக்கள் எம்மிடம் விமர்சனங்களைத் தெரிவித்தார்கள்.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுவந்த உலருணவுப் பொருட்கள் (றேசன்) 4 வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டுவிட்டது.

சுகாதாரம்

jaffna muslim_007குடிசைகள் மிகவும் நெருக்கமாக இருப்பதினால் சுகாதாரம் மிக மோசமாகக் காணப்படுகின்றது. மழை காலங்களில் மக்கள் அருவறுப்பான சூழலிலேயே வாழ்கின்றனர். மழை வெள்ளத்தில் மலசலகூடம் நிரம்பி வழிகின்றது. அந்தச் சாக்கடைக்குள் மூக்கைப் பொத்திக்கொண்டு, அதே கழிப்பறைகளையே பயன்படுத்தவேண்டிய துர்ப்பாக்கி நிலைக்கு இம்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

90 குடும்பங்களுக்கு 8 கழிவறைகள் மாத்திரமே உள்ளன. இதில் ஆண்களுக்கு நான்கும், பெண்களுக்கு நான்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. 100 குடும்பங்களும் 8 கழிவறைகளை பயன்படுத்துவது என்பது மிகவும் கஷ்டமானதொரு விடமயாகும். அவசரத்துக்கு ஒரேநேரத்தில் பயன்படுத்த முடியாது. அதற்கும் வரிசையில் நிற்கவேண்டும்.

கழிவறைகளுக்கு கதவுகள் இல்லை. முறையாக சுத்தம் செய்யப்படுவதுமில்லை. பெண்கள் குளிக்கும்போது கூட பாதுகாப்பான மறைவிடங்கள் இல்லை. இதனால் நிம்மதியாக குளிக்க முடியாத நிலையில் பெண்கள் உள்ளனர். பெண்கள் 4 கழிப்பறைகளை மட்டும் பயன்படுத்துவது மிகவும் கஷ்டமானது. தங்களது இயற்கைத் தேவைகளுக்காக நேரத்திற்கு செல்லமுடியாது. இரவில் பெண்பிள்ளைகள் (தனியாக) கழிவறைக்குச் செல்லமுடியாது. ஆண் பிள்ளைகளின் நடவடிக்கைகளும் இதற்கு ஒரு காரணமாகும்.

இங்கு குளிப்பதற்கு ஒரேயொரு இடம் மாத்திரமே உள்ளது. இங்கு ஆண்களும், பெண்களும் நேரசூசியின் பிரகாரமே குளிப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். காலை 6 மணி தொடக்கம் 11 மணிவரை ஆண்களும், 11 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை பெண்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவசரத் தேவைக்கு முறைமாறி குளிக்க முடியாது.

கல்வியறிவு

கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றனர். சாதாரணமாக 40%க்கும் குறைவான கல்வியறிவே இங்கு காணப்படுகின்றது. ஏதாவதொரு விண்ணப்பப் படிவம் நிரப்ப வேண்டும் என்றால் கூட, அதற்கு அங்கு ஓரளவு படித்த ஒருவரை நாடிச்செல்லும் நிலமையே காணப்படுகின்றது. அதற்கென குறித்ததொரு தொகைப் பணத்தையும் அவர்கள் செலுத்துகின்றனர். இவ்வாறான நிலைமையில்தான் அங்குள்ளவர்களின் கல்வியறிவு காணப்படுகின்றது.

jaffna muslim_005ஆண் பிள்ளைகளாயின் 1416 வயதுகளில் படிப்பை இடைநிறுத்திவிட்டு குடும்பத்துக்காக வருமான ஈட்டும் வேலைகளைச் செய்கின்றார்கள். பெண்பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைப்பதினால் அவர்களால் அந்தளவுக்குகூட படிக்க முடிவதில்லை.

பிள்ளைகளை படிக்க வைப்பதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டுவதோ, சிரத்தை எடுத்துக்கொள்வதோ இல்லையென்று சொல்லாம். தங்களைப் போல் பிள்ளைகளும் கஷ்டப்படாது, படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என பெற்றோர்கள் நினைப்பதில்லை. தங்களது பிள்ளைகளும் ஏதோ ஒரு வழியில் நாலு பணம் சம்பாதித்தால் போதும் என்ற நிலையில்தான் இருக்கின்றார்கள்.

இங்குள்ள பிள்ளைகள் ராஸிக் பரீட் பாடசாலையிலேயே கல்வி கற்கின்றனர். இவர்களுக்கு வெளியுலகத்துடனான தொடர்புகள் கிடைப்பதில்லை. ஏனைய மாணவர்களுடன் பழக விடுவதில்லை. பாடசாலையில் கூட இவர்கள் "கேம் பிள்ளைகள்' என வேறுபடுத்திப் பார்க்கப்படுகின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது. ஏதாவது தவறுகள் செய்தால் அதை "கேம் பிள்ளைகள்' என்று சொல்லப்படுகின்ற இவர்கள் மீதே குற்றம் சுமத்தப்படுகிறது.

இங்குள்ளவர்களில் 10 பேர் கூட சாதாரணதரம் வரை படித்ததில்லை. 4 மௌலவிகள் இங்கிருந்து வெளியாகி இருக்கிறார்கள். பெண்ணொருவர் வர்த்தகத்துறையில் பட்டம்பெற்று வேறிடத்துக்குச் சென்றுள்ளார். இவர்கள் இங்கிருந்துதான் படித்துச் சென்றார்கள் என்பதை அடையாளப்படுத்த விரும்புவதில்லை.

ஜீவனோபாயம்

இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் கூலித்தொழில்களிலேயே ஈடுபடுகின்றனர். பேக் தைத்தல், ஆட்டோ ரெக்ஸின் தைத்தல், ஆட்டோ ஓட்டுதல் போன்ற வேலைகளைச் செய்துவருகின்றனர்.

ஓரிரு பெண்கள் மாத்திரமே வெளியில் சென்று வேலைசெய்கின்றனர். "அவர்களுக்கு ஏன் இந்த தேவையில்லான வேலை?' என்ற போடுபோக்கான நிலைமைதான் இங்கு காணப்படுகின்றது.

வாக்குரிமை

இங்குள்ள மக்களுக்கு வடக்கில் வாக்குரிமைகள் இருந்தன. அவையனைத்தும் 2007ஆம் ஆண்டுக்குப் பின்னர் முற்றாக அழிக்கப்பட்டு விட்டன. இவர்களுக்கு 5 வருடங்களாக கொழும்பிலோ அல்லது குடாநாட்டிலோ வாக்குரிமை பதியப்படவில்லை. இதற்கு இலங்கை தேர்தல் திணைக்களம் என்ன பதில் சொல்லப்போகிறது?

அகதிமுகாமில் பிறந்தவர்களுக்கு வாக்குரிமைகள் இருக்கும் பட்சத்தில், அகதி நாமம் குத்தப்பட்ட ஒரேயொரு காரணத்துக்காக வடக்கிலிருந்து விரட்டப்பட்டவர்களை ஒரு இலங்கைப் பிரஜையாக அரசாங்கம்கூட மதிக்காமல் இருப்பது வேதனைக்குரிய விடயமே.

தவறு இவர்கள் பக்கமும் இருக்கிறது. நிவாரணம், வீடு மட்டும் தந்தால் போதும் என்கின்ற இவர்களின் மனப்பாங்கினாலும், போதியளவிலான கல்வியறிவு இல்லாமையினாலும் வாக்குரிமையின் மதிப்பு இவர்களுக்கு சரியாகத் தெரியவில்லை.

கொழும்பில் வாக்குரிமைக்காக பதிவு செய்யச் சென்றால், யாழ்ப்பாணத்திற்குத்தான் செல்லவேண்டும் என்று சொல்கிறார்கள். யாழ்ப்பாணத்துக்கு சென்றால் இங்கு இருந்தால் வாக்குரிமை கிடைக்கும் என்று சொல்கிறார்கள். கடைசியில் எங்குமே வாக்குரிமை இல்லை.

பள்ளிவாசல்jaffna muslim_010

இம்மக்கள் தங்களுக்கென ஒரு தனியான ஒரு சிறிய பள்ளிவாசலை அமைத்துள்ளார்கள். மஸ்ஜித்துன்நூர் எனும் இப்பள்ளிவாசலில் சிறுவர்களுக்கான குர்ஆன் மத்ரஷாவும் நடைபெறுகிறது. பள்ளிவாசல் நிர்வாகத்தினர் இம்மக்களை வழிநடாத்தி வருகின்றனர்.

ஆனால், பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் முறைகேடுகள் பற்றிய முறைப்பாடுகளும் தனிப்பட்ட முறையில் கிடைத்தன. எல்லா மக்களும் இப்பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகின்றார்களா என்று பார்த்தால் அதுவும் கேள்விக்குறிதான்.

கலாசாரம்

வீடுகள் நெருக்கமாக இருப்பதினாலும், கூட்டுக் குடும்பங்களாக வாழ்வதினாலும், பாதுகாப்பான கழிவறைகளோ, குளியலறைகளோ இல்லாமையினால் சமுதாய சீரழிவுகள் மலிந்து காணப்படுவதாக பலர் முறையிட்டனர்.
அங்கிருந்து வெளியான மௌலவிகள் கூட இதில் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. இஸ்லாமிய அமைப்புகள்கூட அங்கு சென்று கலாசாரத்தைப் போதிக்க தவறிவிட்டது.

சிறுவயதிலேயே ஆண்கள் தொழிலுக்குச் சென்று சம்பாதிப்பதினால் மனம்போன போக்கில் வாழத் தொடங்கிவிட்டார்கள். போதைவஸ்து பாவனைகூட இங்கு சாதாரணதொரு விடயமாக இருந்ததை என்னால் அவதானிக்கமுடிந்தது.

பெண்களின் உரிமை

பெண் பிள்ளைகள் வெளியில் சென்று படித்தாலோ அல்லது வேலைக்குச் சென்றாலோ அச்சமூகத்திலிருந்து அவர்கள் வேறுகோணத்தில் திரிவுபடுத்தி பார்க்கப்படுகிறார்கள். பொதுவான கூட்டங்களுக்கு கூட பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை. அவர்களின் கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்படுவதுமில்லை.

பெண்களுக்குரிய எந்தவொரு முக்கியத்துவமும் கொடுக்கப்படுவதில்லை. வெளியில் செல்வதுமில்லை. அவர்களின் உலகம் அந்த அகதிமுகாமுக்குள்ளேயே மட்டுப்படுத்தப் பட்டுவிட்டது. அதற்குள்ளேயே பல இடங்களைத் தெரியாத பெண் பிள்ளைகளும் அங்கு வாழ்கிறார்கள் என்றால் ஆச்சரியம்தான்.

பெண்கள் தற்போது ஆண்களுக்கு நிகராக வேலை செய்கின்ற காலகட்டத்தில் இப்படியொரு பெண் அடிமைத்தனம் இருப்பதை அங்குள்ள ஆண்வர்க்கம் உணர மறுக்கின்றது.

அரசியல் பின்னணி

ஆரம்ப காலங்களில் இம்மக்களின் நிவாரணங்கள் மூலம் சுயலாபம் தேடிய அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் குண்டர்களை வைத்துக்கொண்டு அகதிமுகாமை அடக்கியாள முயற்சித்ததன் விளைவாக அங்குள்ள மக்களுக்கிடையில் கலவரம் ஏற்பட்டு அவர்கள் துரத்தப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

தற்போதுள்ள முஸ்லிம் தலைமைத்துவங்கள் கூட இவர்களை கண்டுகொள்வதில்லை என பலர் நொந்துகொண்டனர். அவரவர்கள் தங்களது பிரதேசங்களை மட்டுமே பார்ப்பதாகவும், ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகம் என்ற நிலையில் பார்ப்பதில்லை எனவும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இம்மக்களுக்கு ஓரளவு உதவிகளைச் செய்துள்ளார். அமைச்சர் றிஸாத் பதியுதீன் மின்சார வசதியினைப் பெற்றுக்கொடுத்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக காலஞ்சென்ற தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் மாத்திரம் ஒருதடவை அங்கு விஜயம் செய்துள்ளார்.

இவர்களுக்கு சரியானதொரு முடிவைப் பெற்றுக்கொடுப்பதற்காக இதுவரைக்கும் எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியும் முன்வராதிருப்பது வெட்கக்கேடானது. தலைநகரில் இப்படியொரு சமூகம் அல்லல்பட்டுக் கொண்டிருக்கையில், சொகுசு மாளிகைகளில் ஆடம்பரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் நமது முஸ்லிம் அரசியல் தலைமைகள்.

jaffna muslim_004மக்களின் எதிர்பார்ப்பு

இங்குள்ள மக்கள் 22 வருடங்களாக கொழும்பு நகர வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விட்டனர். இவர்களது பிள்ளைகளின் கல்வியும், எதிர்காலமும் இங்கேயே தங்கியிருக்கின்றது. இந்நிலையில் மீண்டும் குடாநாட்டு அகதிமுகாம்களுக்கு செல்லத் தயாரில்லை என்பதே இவர்களின் ஏகோபித்த முடிவாக உள்ளது.

தற்போதுள்ள (புதிய) அகதிகளுக்கே உரிய முறைப்படி மீள்குடியேற்றம் நடந்து முடிந்த பாடில்லை. இதற்குள் எங்கே எங்களைக் கவனிக்கப் போகிறார்கள் எனக் கேட்கின்றனர்.

இம்மக்களின் வாழ்க்கை கொழும்புடன் ஒன்றிணைந்துவிட்டதால், தற்போதுள்ள இடத்திலோ அல்லது கொழும்பில் வேறிடங்களிலோ நிரந்தரமான வீடுகளை அமைத்துக் கொடுப்பதே இன்றைய கட்டாயத் தேவையாகவுள்ளது.

பொருளாதார உதவிகளுடன் மட்டும் நின்றுவிடாமல் இச்சமூகத்தை கல்வி அறிவுள்ள நல்லதொரு சமூகமாக மாற்றியமைக்க வேண்டிய தேவை சமூகப் பொறுப்புவாய்ந்த அனைத்து நிறுவனங்களுக்கும் உள்ளது.

யார் பொறுப்பு?

அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டு அமைச்சுப் பதவிகளை தக்கவைத்து அழகுபார்க்கின்ற, முஸ்லிம் சமூகத்துக்கு குரல் கொடுக்கின்றோம் என்று வாய்ப்பேச்சில் மட்டும் சொல்லித் திரிகின்ற நமது முஸ்லிம் அரசியல் தலைமைகள் கொஞ்சம் கண்திறந்து இம்மக்களின் அவலங்களைப் பார்க்கவேண்டும். இதற்கு உடனடியானதொரு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.

இது அரசியல்வாதிகளின் பொறுப்புத்தான் என்றுவிட்டு, சமூக நிறுவனங்கள் ஓய்ந்துவிடக் கூடாது. நிவாரணம் மட்டும் கொடுப்பதுடன் மட்டுமல்ல சேவை. இவர்களின் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் முன்வரவேண்டும்.
அறிக்கைளை மட்டும் விட்டுக்கொண்டிருக்காமல் ஜம்இய்யத்துல் உலமா சபையும் இதில் கொஞ்சம் அக்கறை காட்டவேண்டும். சேகரிக்கப்படுகின்ற ஸகாத் நிதியத்தில் குறிப்பிட்டதொரு பணத்தை சேர்த்திருந்தால் கூட, இதுவரை 22 வருடங்களுக்குள் எத்தனை பேருக்கு சொந்த வீடு கட்டிக்கொடுத்திருக்கலாம்.

வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற நமது முஸ்லிம்கள் கூட பராமுகமாகவே இருக்கின்றனர். அங்கு மட்டும் சுகபோக வாழ்வை அனுபவித்தால் போதாது. இங்குள்ள முஸ்லிம் சமூகத்தின் கஷ்டங்களையும் உணரவேண்டும். அவர்களின் கண்ணீரைத் துடைப்பதில் பங்கெடுக்க வேண்டும்.

புலம்பெயர்ந்தவர்கள் ஒரு அமைப்பாகச் சேர்ந்து 10 பேர் சேர்ந்து ஒரு வீட்டையாவது கட்டிக்கொடுக்க முன்வந்தால், அது இம்மக்களுடைய மட்டுமல்ல, முஸ்லிம் உம்மாவின் கண்ணீரையே துடைத்தற்கு ஈடாகும். ஆகக்குறைந்தது இம்மக்களுக்கு விரைவில் விடியல் கிட்டுவதற்காக பிரார்த்தனையாவது செய்வோம்.

மக்கள் கருத்து:

* மிஸ்ரிபா-47, தலைமன்னார்

எங்களுக்கு நிரந்தரம் என்று எதுவுமே சொல்ல முடியாது. இருக்கும் வரைக்கும் இங்கேயே இருப்போம். கடைசி வரைக்கம் என்ன நடக்கிறதென்று பார்ப்போம். எல்லாத்தையும் அல்லாஹ் பார்த்துக்குவான்.

* முஹம்மட் சயீப்-45, யாழ்ப்பாணம்

5 வருடங்களாக எங்களுக்கு வாக்குரிமை பதியப்படவில்லை. இந்த முகாமில் இருப்பவர்கள் இந்த நாட்டுக்குரியவர்களா, இல்ல வெளிநாட்டுக்குரியவர்களா என்று தேர்தல் திணைக்களம் தெரிவிக்கவேண்டும். அப்படியில்லாவிட்டால், எங்களை எந்ததெந்த நாடு என்று பார்த்து அந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

* கமால்தீன் இனூன்-50, யாழ்ப்பாணம்

ஆரம்பகாலத்தில் இம்முகாமைப் பொறுப்பேற்ற அரசியல்வாதிகள் எங்களை அடக்கி கைதிகளாக நடாத்தப் பார்த்தனர். வாசலில் காவலாளிகளை நிறுத்திவிட்டு அவர்களிடம் அனுமதிச் சீட்டுகளை பெற்ற பின்னர்தான் வெளியில் வேலைக்கு செல்ல அனுமதித்தனர். நிவாரணங்களை தங்களது வீடுகளில் வைத்துவிட்டு, அதில் ஒரு சிறுபகுதியையே எங்களுக்கு வழங்கிவந்தார்கள்.

* சுமையா-21, யாழ்ப்பாணம்

சில பெண் பிள்ளைகள் என்னிடம் வெளிப்படையாகச் சொல்வார்கள், "எனக்கு அந்த வக்கும், பாத்வுமும் மட்டும்தான் தெரியும். வேற ஒண்டுமே தெரியாது' என்று. அவர்களுக்கு குளிக்கின்ற இடத்தை தவிர வேறெதுவும் தெரியாது. பெண் பிள்ளைகள் வெளியில் செல்வதே இல்லை. அதை இங்குள்ளவர்கள் விரும்புவதும் இல்லை.

(நன்றி: நவமணி)