Showing posts with label பிறமதம். Show all posts
Showing posts with label பிறமதம். Show all posts

Saturday, December 15, 2012

த டாவின்ஸி கோட் - நொருங்கியக் கனவுகள்

ARAGO - BLOOD LINE - ROSE LINE
Hides beneath the rose. The Holy Grail 'neath ancient Rosline waits,
Adorned in the masters' loving art, she lies. The Blade and Chalice guarding o'er her gates,
S H E R E S T S A T L A S T B E N E A T H S T A R R Y S K I E S
கடந்த 2003 ஆம் ஆண்டு அமெரிக்க எழுத்தாளர் டான் பிரவ்ன் என்பவரால் எழுதப்பட்ட ஒரு நாவல்தான் த டாவின்சி கோட். 44 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட இந்த புத்தகம் 80 மில்லின் பிரதிகள் விற்று சாதனை படைத்தது. அந்த நாவலை கருப்பொருளாகக் கொண்டு இயேசு கிருஸ்துவுக்கும் மகதலேனா மரியாள் என்ற மேரி மெக்டலினுக்கும் திருமணமாகி ஒரு குழந்தையும் உண்டும் என்று புனைந்து, கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த நாவலின் பெயராலேயே திரைப்படம் தயாரித்து வெளியிட்டனர். கிருஸ்தவக் கோட்பாட்டை தரைமட்டமாக்கும் இந்த ஹாலிவுட் திரைப்படத்திற்கு உலகெங்கிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முஸ்லிம்கள் உயிராக மதிக்கும் சங்கைக்குரிய இறைதூதர் நபி ஈஸா (அலை) அவர்களை த டாவின்சி கோட் திரைப்படம் அவமரியாதை செய்திருப்பதை அறிந்து உலக முஸ்லிம்கள் தங்களின் கண்டனக்குரலை ஆழமாக பதிவுசெய்தனர்.
பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் வழக்கம்போல இத்திரைப்படம் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டுவிட்ட நிலையில் உலகமக்களும் தங்கள் சொந்த வேலைப்பளுவில் டாவின்சி கோடை தற்போது மறந்துவிட்டனர்.
இப்படத்தின் தாயாரிப்பாளர்கள், இயக்குளர்கள் என்று (Ron Howard – Director, Brian Grazer – Producer, John Calley – Producer, Dan Brown - Executive Producer, Book Author, Todd Hallowell - Executive Producer, Second) அனைவரும் இல்லுமனாட்டிகளின் கைப்பாவையாக செயல்பட்டு அவர்களது திட்டத்தை கனகச்சிதமாக நிறைவேற்றினர். நமது இக்கட்டுரையின் நோக்கம் டாவின்சி கோட் படத்திற்கு பின்னால் ஒளிந்து கொண்டுள்ள இலுமனாட்டி ஷைத்தானியக் கூட்டத்தின் திட்டங்களை வெளிக்கொண்டு வருவதே! ஹாலிவுட் திரைப்படம் உள்ளிட்ட மீடியாக்கள் மூலம் இந்த இல்லுமனாட்டி கும்பல்கள் எப்படியெல்லாம் தங்கள் சூழ்ச்சிகளை நிரைவேற்றுகின்றனர் என்பதை இவ்வாக்கத்தை இறுதிவரை படித்தால் புரியும்.

இந்த டாவின்சி கோட் ஹாலிவுட் திரைப்படத்தின் மூலம் 3 முக்கிய விஷயங்கள் பதிவு செய்யப்பட்டன. அவைகள் பின்வருமாறு

1.இயேசுவிற்கும் மகதலேனா மரியாள் என்ற மேரி மெக்டலினுக்கும் திருமணமானது. அந்த திருமணத்தின் மூலம் இயேசுவிற்கு குழந்தையும் பிறந்தது. உலகப்புகழ்பெற்ற ஓவியர் லியொ நார்டோ டாவின்ஸி, தான் வரைந்த இயேசுவின் இறுதி இராப்போசனம் என்ற ஓவியத்தின் மூலம் இச்சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார். எனவே இயேசுவும் மேரிமெக்டலினும் கணவர் மனைவியர்தான்.
2.மிரோவிஞ்ஜியன் என்பது இயேசுவின் இரத்தபந்தம். மேரிமெக்டலின் மூலம் தொடர்ந்த அந்த இரத்தபந்தத்தில் பிறந்த இறுதி நபர் ஃபிரான்ச் நாட்டில் உள்ளார். எனவே இயேசுவின் சந்ததி என்னும் சங்கிலித்தொடரும், இது சம்பந்தமான உண்மைகளும் கடந்த 2000 வருடங்களாகவே பாதுகாக்கப்பட்டு வருகிறது.
3.இத்திரைக்கதையின் மூலம் இவ்வுலகில் தோன்றிய மதங்கள் அனைத்தும் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டவையே என்று சொல்லாமல் சொன்ன அதே வேளையில் ஷைத்தானை வணங்குபோன்ற காட்சிகள், எகிப்த்திய பரமிடுகளிலுள்ள ஷைத்தானிய சித்திரங்கள் மற்றும் இல்லுமனாட்டிகள் தங்கள் லூசிஃபர் கடவுளை சித்தரிப்பதற்காக வரைந்து தள்ளியுள்ள ஓவியங்கள் என்று அனைத்தையும் இப்படத்தில் பதிவுசெய்தனர்.

... அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் இறை நம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்கிறார்களே தவிர வேறில்லை. எனினும் அவர்கள் இதை உணர்ந்து கொள்ளவில்லை. (2:9)

யார் இவ்வேத உண்மைகளை நிராகரிக்கிறார்களோ, இன்னும் நிராகரிக்கும் காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது, அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும். (2:161)

இதில் முதல் விஷயத்திற்கு வருவோம். இயேசுவிற்கு திருமணம் முடிந்தது என்ற விபரத்தை இயேசு சொன்னாரா? அல்லது மேரி மெக்டலினாவது சொன்னாரா? இத்தகவலைக் கூறும் இயேசுவின் உண்மையான சுவிசேஷம் எங்கே? அல்லது இயேசுவிற்குப் பிறகு இயற்றப்பட்ட பைபிளிலாவது இச்சம்பவம் பற்றி குறிப்பேதும் உண்டா? என்றெல்லாம் பலர் கேட்டு முடித்துவிட்டனர். இதில் நாம் சொல்வது என்ன வென்றால், அணுவின் திரணை உலகிற்குச் சொன்ன ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளையே இந்த இலுமனாட்டிகள் தங்கள் வலையில் வீழ்த்தி அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த போது, இந்த லியொ நார்டோ டாவின்ஸி என்ற ஓவியர் எம்மாத்திரம்? ஒருவேளை இயேசுவின் இறுதி இராப்போசனப் படத்தில் மேரிமெக்டலின் உருவத்தை மறைமுகமாக வரைந்துவிடு இல்லாவிட்டால் உன் கையை வெட்டிவிடுவோம் என்று அவரை இக்கொலைகார இல்லுமனாட்டிகள் மிரட்டியிருப்பார்கள். அல்லது லியொ நார்டோ டாவின்ஸியே இந்த ஷைத்தானை வணங்கும் லூசிஃபர் கூட்டத்தைச் சார்ந்தவராக இருந்திருக்கலாம். டாவின்சி கோட் மூலம் இந்த உண்மையை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் அவ்வளவுதான்.

இயேசுவும் மேரிமெக்டலினும் கணவர் மனைவியர் என்ற பொய்யை இவர்கள் எத்தனை ஹாலிவுட் படங்களை வெளியிட்டுக் காட்டினாலும் உலகமக்கள் நம்பத் தயாரில்லை என்பதை இவர்களே விளங்கிக் கொண்டார்கள். இயேசுவைக் கடவுளாகக் கருதும் கிருஸ்தவர்களே இக்கூற்றை நிராகரித்துவிட்டபடியால் டாவின்ஸி கோட் திரைப்படம் மூலம் இவர்கள் பரப்பப நினைத்த இவர்களின் முதற்கனவு தவிடுபொடியானது.

நபியே! இன்னும், சத்தியம் வந்தது. அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும் என்று கூறுவீராக. (17:81)
இரண்டாவதாக மிரோவிஞ்ஜியன் இரத்தபந்தம் என்பது இயேசுவின் இரத்தபந்தம் என்று இத்திரைப்படம் மூலம் சொல்லப்பட்டுள்ளது. நாம் ஆய்வு செய்த வரையில் மிரோவிஞ்ஜியன் வம்சவழி இயேசுவிற்கு முந்திய காலத்தில் வாழ்ந்த யூதர்களின் வம்சவழியாகவோ அல்லது இரண்டாம் ரம்ஈஸஸ் என்று அழைக்கப்பட்ட கொடுங்கோலன் ஃபிர்அவ்னின் சந்ததியாகவோ இருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் மிரோவிஞ்ஜியன் இரத்த பந்தம் என்பது ஏசுவின் வம்சவழியினர் என்றால் மிரோவிஞ்ஜியன் இனம் சம்பந்தப்பட்ட ஆவனங்களில் இயேசுவுடைய கொள்கை கோட்பாடுகள், அவர் சம்பந்தப்பட்ட வரலாறுகள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் கிருஸ்தவர்கள் நம்புவது போல இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்றாவது சித்திரங்கள் இருக்கவேண்டும். ஆனால் மிரோவிஞ்சியன் வம்சவழி ஆவனங்களில் பிரமிடுகளும், ஃபிர்ஆவ்ன் காலத்தில் கடவுளாக வணங்கப்பட்ட சிலைகளும், அன்றைய இஸ்ரவேலர்களின் பழக்கத்தில் இருந்த நாணயங்களுமே காட்டப்படுகின்றன.

எது எப்படி இருந்தாலும் பாதுகாக்கப்பட்ட உண்மை இறைவேதமாம் திருமறை குர்ஆனின் போதனைபடி சங்கைக்குரிய இறைத்தூதர் இயேசு என்ற நபி ஈஸா (அலை) அவர்கள் இறைவனின் கட்டளைபடி தந்தை இல்லாமல் பிறந்தார்களே தவிர எந்த ஆணுடைய இரத்தக்கலப்பினாலும் அவர்கள் உருவாகவில்லை. மேலும் அவர்கள் மேரி மெக்டலினைத் திருமணம் செய்தார்கள் என்ற தகவலை திருமறை குர்ஆனோ, அல்லாஹ்வின் இறதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களோ கூறவில்லை என்பதால் முஸ்லிம்களாகிய நாம் இவ்விஷயத்தில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. இந்த மிரோவிஞ்ஜியன் இரத்தபந்தம் பற்றி இஸ்லாமிய வரலாற்று அறிஞர்கள் ஆய்வு செய்தால் இதில் பொதிந்துள்ள பல மர்மங்கள் மேலும் வெளிச்சத்திற்கு வரலாம்.
ஒரு விவாதத்திற்காக நாம் த டாவின்சி கோட் திரைப்படம் சொல்வது போன்றே மிரோவிஞ்ஜியன் என்பது இயேசுவின் இரத்தபந்தம் என்றே வைத்துக்கொள்வோம், நாம் கேட்பது என்னவென்றால் 2000 ஆண்டுகளாக இயேசுவின் இரத்தபந்தத்தையே பாதுகாக்கத் தெரிந்த மிரோவிஞ்ஜியன் குடும்பத்தினருக்கு, இயேசுவிற்கு கடவுள் வழங்கிய உண்மை சுவிசேஷத்தை பாதுகாக்கத் தெரியாமல் போய்விட்டதா? இயேசுவிற்கு பின்னர் தோன்றிய பவுலும் அவரது வகையறாக்களும் எழுதித்தள்ளிய விஷயங்களை புனித வேதமாக உலக கிருஸ்தவர்கள் நம்பிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், இயேசுவிற்கு கர்த்தர் நேரடியாக வழங்கிய சுவிசேஷமான இன்ஜீல் வேதத்தை பாதுகாத்து அதை இவ்வுலகிற்கு வழங்கியிருந்தால் எவ்வளவு பிரயோஜனமாக இருந்திருக்கும்? இயேசுபிரானின் நேரடிக்கட்டளைகளை பின்பற்றுவது நன்மையைத்தருமா? அல்லது இயேசுவிற்கு பின்னால் வந்தவர்களால் எழுதப்பட்டதை பின்பற்றுவது நன்மையைத் தருமா? இயேசுபிரானின் நேரடிக்கட்டளைகளை பின்பற்றுவது இயேசுவின் அன்பைப் பெற்றுத்தருமா?, அல்லது இரத்தபந்தம் புண்ணாக்குபந்தம் என்று கதையளந்து இயேசுவின் கட்டளைகளை குழிதோண்டி புதைத்துவிட்டு அவர் எச்சரித்த லூசிஃபர் சாத்தானையே கடவுளாக வணங்குவது இயேசுவின் அன்பைப் பெற்றுத்தருமா? என்பதை இந்த இல்லுமனாட்டி போலி மிரோவிஞ்ஜியன்கள் சற்று சிந்திப்பார்களாக. இவர்கள் எங்கே இயேசுவின் சுவிசேஷத்தை பாதுகாத்திருப்பார்கள், இயேசுவிற்கு வழங்கப்பட்ட சுவிசேஷத்தில் கலப்படம் செய்து அதை ஒழித்துக்கட்டும் வேளையில் வேண்டுமென்றால் இவர்களின் முன்னோர்கள் இறங்கியிருப்பார்கள் என்று எண்ணுகிறீர்களா? அதுவும் சரிதான்.

மக்களே! இயேசு, இரத்தபந்தம், மிரோவிஞ்ஜியன் வம்சம் என்பதெல்லாம் இவர்களின் குறிக்கோளில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளங்கும். இல்லுமனாட்டிகளைப் பொருத்தவரையில் லூசிஃபர்தான் மம்மி மற்றவைகள் அனைத்தும் டம்மிகளே!. ஆம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இல்லுமனாட்டிகளின் அடிவருடிகள் கோடைகால ஆன்மீகச் சடங்கு என்ற பெயரால் லூசிஃபர் ஷைத்தானை வெளிப்படையாகவே வணங்கியதையும், ஷைத்தானுடைய பெயரால் மந்திரங்கள் புரிவதற்கு குழந்தைகளுக்கு பயிற்சி கொடுப்பதுபோல திரைப்படங்களில் காட்டப்படுவதையும் கீழுள்ள வீடியோக்கள் மூலம் பார்த்துக் கொள்ளுங்கள்.

இன்னும் சொல்லப்போனால் இயேசுவின் இரத்தபந்தத்தைப் பாதுகாப்பதிலாவது இவர்கள் உண்மையாளர்களாக இருந்தார்களா என்றால் அதுவுமில்லை. ஃபிரான்ஸ் நாட்டின் ஸ்பென்சர் ராஜபரம்பரையில் பிறந்த இளவரசி டயானாவை இயேசுவின் இரத்த பந்தத்தில் இறுதியாக தோன்றியவள், மிரோவிஞ்ஜியன் இனத்தில் இயோசுவின் புனித இரத்தத்தை பாதுகாக்கும் புனிதக்கிண்ணம் என்றுதானே டயானாவை இளவரசர் சார்லஸூக்கு மணமுடித்து வைத்தனர். பிறகு ஏன் இவர்களாகவே டயானாவின் கதையை முடித்தார்கள்? (பார்க்க). இயேசுவின் இரத்தபந்தம் உலகமுடிவு நாள்வரை பாதுகாக்கப்படவேண்டும் என்றல்லவா இவர்கள் எண்ணியிருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் அல்லவா இவர்கள் இறங்கியிருக்க வேண்டும். மிரோவிஞ்ஜியன் வம்சம் பல்கிப் பொருக வேண்டுமெனில் இளவரசி டயானா பல குழந்தைகளைப் பெற்று அவளின் வம்சம் இவ்வுலமுழுவதும் பரவவேண்டும் என்று நினைப்பார்களா அல்லது அவளையே கொலை செய்வார்களா? சற்று யோசித்துப்பாருங்கள். எனவே இளவரசி டயானாவை படுகொலை செய்ததற்குப் பின்னர் இவர்களின் சுயரூபம் மேற்கத்திய சமூகத்திற்கே தெரிந்துவிட்டது. இந்நிலையில 2000 வருடங்களாக இயேசுவின் இரத்த வழியை பாதுகாத்து வருகிறோம் என்ற இவர்களின் பொய்யையும் எத்தனை ஹாலிவுட் திரைப்படம் எடுத்து வெளியிட்டாலும் உலகம் நம்புவதற்குத் தயாரில்லை என்பதை உலகமக்கள் இத்திரைப்படத்திற்கெதிரான தங்கள் எதிர்ப்புகளை பிரதிபலித்ததின் மூலம் டாவின்ஸி கோட் திரைப்படத்தால் இவர்கள் நிறைவேற்ற நினைத்த இரண்டாவது திட்டமும் நொருங்கிப்போனது.

நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம் அதனால், சத்தியம் அசத்தியத்தின் சிரசைச் சிதறடித்துவிடுகிறது. பின்னர் அசத்தியம் அழிந்ததே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் கற்பனையாக இட்டுக்கட்டி வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.
(21:18)

இவர்களின் மூன்றாவது திட்டமான மீடியாக்களில் தங்கள் லூசிஃபர் கடவுளை அறிமுகப்படுத்தி, ஷைத்தானிய, ஃபிர்அவ்னிய சித்திரங்களை பிரபலப்படுத்துவதாகும்.


மேற்காணும் இத்தகைய படங்களை நாம் அன்றாடம் பயன்படுத்தும் வணிகப் பொருட்கள், அழகு சாதனங்கள், ஆடைகள் போன்றவற்றில் பார்வையிடலாம். குறிப்பாக குழந்தைகளின் ஆடைகள் மற்றும் அவர்களின் விளையாட்டு சாதனங்களிலும், கார்ட்டூன்கள் மற்றும் வீடியோகேம்களில் வரும் கதாபாத்திரங்களிலும் இப்படங்களைக் காணலாம். மேலும் பிரமிடுகளைப் பிரதிபலிப்பது போன்று அடுக்கமாடி கட்டிடங்கள் பல கட்டப்படுவதையும், பல கட்டிடங்களின் உள்ளரங்கு அலங்காரங்களில் இத்தகைய படங்கள் பொறிக்கப்பட்டிருப்பதையும் பரவலாகக் காணலாம்.

இன்னும் சொல்லப்போனால் இந்த சித்திரங்களை அறிமுகப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட பல ஹாலிவுட் திரைப்படக் காட்சிகளில் ஒருசிலவற்றை இங்கு தந்துள்ளோம், பதிவிறக்கம் செய்து பார்த்து விழிப்படையுங்கள்.


மேற்காணும் மூன்றாவது திட்டத்தில் இலுமனாட்டிகள் தற்போதைக்கு வெற்றி பெற்றிருப்பது போல தோன்றினாலும் உலக மக்கள் விரைவில் விழிப்படைந்து இதிலும் பெரும் தோல்வியைத்தான் தழுவ இருக்கிறார்கள் - இன்ஷா அல்லாஹ். இதை எப்படி சொல்கிறோமென்றால் இந்த இல்லுமனாட்டி ஷைத்தானியக் கூட்டத்தின் சதித்திட்டங்களை தோலுரிக்கும் கட்டுரைகளை நமது இணையதளத்தின் மூலம் வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம் - அல்ஹம்துலில்லாஹ். சில நாட்களாக வெளிவரும் இந்த கட்டுரைகளுக்கு ஐம்பதாயிரத்திற்கும் (50,000) மேற்பட்ட ஹிட்ஸூகள் பதிவாகியுள்ளது. நாம் எதிர்பார்த்த அளவைவிட பல ஆயிரக்கணக்கானோர் இப்பதிவுளை பார்த்து படித்து பயனடைந்துள்ளனர். மேலும் பலர் தங்களின் மனநிறைவான கருத்துக்களை நமக்கு எழுதிய வண்ணம் உள்ளனர். அல்ஹம்துலில்லாஹ் அனைத்து புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!. மிகக் குறைந்தளவு ஆற்றல் கொண்ட ஒற்றுமை இணையக் குழுவினராலேயே இந்த இலுமனாட்டி ஷைத்தான்களை இவ்வளவு தூரம் அடையாளம் காட்டமுடிகிறது என்றால், ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் விழிப்படைந்து இவர்களின் சூழ்ச்சிக்கெதிராக கிளம்பினால் என்ன ஆகும் என்பதை சிந்தித்துப் பார்க்கிறோம், அந்த காலம் வெகுதூரத்தில் இல்லை.

இவர்களின் மூன்றாவது திட்டத்தின் மற்றொரு பகுதியான மதங்கள் அனைத்தும் மனிதனால் இயற்றப்பட்டவையே என்ற கற்பனையை நிலை நாட்டுவதிலும் பெரும் தோல்வியைத்தான் தழுவியுள்ளார்கள். இத்திரைப்படம் வெளியிடப்பட்டு 4 வருடங்கள் உருண்டோடிய நிலையிலும், இஸ்லாத்திற் கெதிரான இந்த இலுமனாட்டி ஷைத்தான்களின் பொய்ப் பிரச்சாரங்களையும் வெற்றிகொண்டு இவ்வுலகில் இன்றும் வேகமாகப் பரவும் மார்க்கம் இஸ்லாம் என்ற உண்மை மேற்கண்ட இவர்களின் கனவுகளை தவிடுபொடியாக்குகிறது. இவர்களின் ஆதிக்கம் முழுஅளவில் இருக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் கூட நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இஸ்லாம் அசுர வேகத்தில் பரவிவருவதை வைத்து இஸ்லாம் உண்மையான இறைமார்க்கம்தான் என்பதை இவர்களும் நம்பித்தான் ஆகவேண்டிய என்ற கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
நிச்சயமாக தீனுல் இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கமாகும். வேதம் கொடுக்கப்பட்டவர்கள் இதுதான் உண்மையான மார்க்கம் என்னும் அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக இதற்கு மாறுபட்டனர்;. எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் அவர்களுடைய கணக்கைத் துரிதமாக முடிப்பான். (3:19)

இன்னும் இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் அது ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அத்தகையவர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (3:85)

நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது. நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் மரணத்தற்குப் பின்னும் மீள வைக்கிறான். அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன் மிக்க அன்புடையவன். அவனே அர்ஷுக்குடையவன் பெருந்தன்மை மிக்கவன். தான் விரும்பியவற்றைச் செய்கிறவன். (85 :12-16)

Saturday, December 1, 2012

பைபிளில் நபிகள் நாயகம்

அறிமுகம்

உலகில் ஏராளமான மதங்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் பல மதங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து
விட்டன.

ஆயினும், வாழுகின்ற மதங்களில் முக்கியமான இடத்தை, இஸ்லாமும், கிறிஸ்தவமும் பிடித்திருக்கின்றன. இவ்விரு மதங்களும் நுழையாத நாடுகள் இல்லை என்று கூறும் அளவுக்கு முழு உலகையும் இவ்விரு மதங்களும் வசப்படுத்தியுள்ளன.
 
இவ்விரு மதங்களுக்கிடையே முக்கியமான கொள்கை வேறுபாடுகள் இருப்பது போலவே, பல ஒற்றுமைகளும் இவ்விரு மதங்களுக்கிடையே நிலவுகின்றன.

இயேசு தந்தையின்றி அதிசயமான முறையில் பிறந்தார் என்று கிறிஸ்தவ மார்க்கம் கூறுவதை இஸ்லாமும் வழிமொழிகிறது.
 
இயேசுவிற்கு முன்னாள் ஏராளமான தீர்க்கதரிசிகள் தோன்றியதாகவும், அவர்களுக்கு வேதங்கள் வழங்கப்பட்டதாகவும், கிறிஸ்தவ மார்க்கம் கூறுகிறது. இதை இஸ்லாமும் ஒப்புக் கொள்கிறது.

இயேசுவைக் கூட அத்தகைய தீர்க்கதரிசிகளில் ஒருவர் என இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறது.
 
இவ்வுலக வாழ்க்கைக்குப் பின் பரலோக ராஜ்யம் இருக்கிறது. அங்கே, கர்த்தர் நியாயத் தீர்ப்பு வழங்குவார்; எனவே அந்த நாளை அஞ்சி இவ்வுலக வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கிறிஸ்தவ மார்க்கம் கூறுகிறது. இஸ்லாம் அத்தகைய நியாயத் தீர்ப்பு நாள் இருப்பதை அதிகமதிகம் வலியுறுத்துகிறது.

இஸ்லாத்திற்கும், கிறிஸ்தவத்திற்கும் இடையே காணப்படும் ஒற்றுமைகளில் இவை சில :
அதே நேரத்தில், ஒரு சில அடிப்படைக் கொள்கைகளில் இஸ்லாம் கிரிஸ்தவத்துடன் முரண்படுகிறது. ”இயேசு கடவுளின் குமாரர் என்பது கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கொள்கை”.

கடவுளுக்குப் பெற்றோரும், பிள்ளைகளும், மனைவியரும், ஏனைய உற்றார் உறவினரும் இருக்க முடியாது என்று இஸ்லாம் தெளிவாகப் பரகடனம் செய்து, இயேசு கடவுளின் குமாரர் என்பதை அடியோடு மறுக்கிறது

ஆபிரகாம், மோசே போன்ற தீர்க்கதரிசிகளில் இயேசுவும் ஒருவர். அவர் கடவுளின் குமாரர் இல்லை என திட்டவட்டமாக இஸ்லாம் தெரிவித்து விடுகிறது.

முதல் மனிதர் ஆதாம் கர்த்தரின் கட்டளையை மீறி, பாவம் செய்தார். எனவே, அவரது வழித்தோன்றல்களாகிய மனிதர்கள் பிறக்கும் பொழுதே பாவிகளாகப் பிறக்கின்றனர்என்பது கிறிஸ்தவத்தின் முக்கியமான கோட்பாடுகளில் ஒன்றாகும்.

முதல் மனிதர் ஆதாம் பாவம் செய்ததை இஸ்லாம் ஒப்புக் கொண்டாலும், அந்த பாவம் தலைமுறை தலைமுறையாகத் தொடர முடியாது எனவும் ஒருவர் பாவத்தை மற்றவர் சுமக்க முடியாது எனவும், எதையும் புரிந்து கொள்ளாத ஒரு குழந்தை பிறக்கும் போதே பாவியாகப் பிறக்கிறது என்பது பொருத்தமற்ற வாதம் எனவும் இஸ்லாம் கூறுகிறது.

இந்த வகையிலும் கிறிஸ்த்தவத்திலிருந்து இஸ்லாம் வேறுபடுகிறது. மேலும், பாவிகளாக மனிதர்கள் பிறப்பதால் அதற்குப் பரிகாரம் காணும் வகையில் ஒருபலிகொடுத்தாக வேண்டும். இயேசு நாதர் தம்மையேபலிகொடுத்து பாவிகளாகப் பிறக்கும் மனிதர்களின் பாவங்களைச் சுமந்து கொண்டார் எனக் கிறிஸ்தவம் கூறுகிறது.

பைபிளின் கூற்றுப்படி இயேசு தாமாக முன் வந்து பலியாகவில்லை. மாறாக, அவர் விரும்பாத நிலையில் எதிரிகளால் பலியிடப்பட்டார். ”என் கடவுளே ஏன் என்னைக் கைவிட்டீர்என, அங்கலாய்த்திருக்கிறார். எனவே தாமாக முன்வந்து தம்மையே பலியாக்கினார் என்று கூறுவது பைபிளுக்கே முரண் என்று இஸ்லாம் கூறுகிறது.
 
அத்துடன் ஒரு வாதத்திற்காக இயேசு தாமாக முன்வந்த பலியாகி இருந்தாலும், அவரது பாவத்திற்குத் தான் அது பரிகாரமாக முடியுமே தவிர, மற்றவர்களின் பாவத்திற்கு அது பரிகாரமாக ஆகாது என இஸ்லாம் கூறுகிறது.
 
ஒரு தந்தை கொலை செய்துவிட்டால் அதற்காக அவரது மகனை உலகில் எந்த நாட்டுச் சட்டமும் தண்டிப்பதில்லை. சாதாரண மனிதர்களே சம்பந்தமில்லாதவர்களைத் தண்டிக்கக் கூடாது என்பதை உணர்ந்திருக்கும் போது, கர்த்தராகிய கடவுள் ஒருவர் பாவத்திற்காக மற்றவர் பலியாவதை எப்படி ஒப்புக் கொள்வார்? மனிதர்களை விட கடவுளின் அறிவு குறைவானதா? என்று அறிவுப் பூர்வமான கேள்விகளை இஸ்லாம் எழுப்புகிறது.

இவை இஸ்லாத்திற்கும், கிறித்தவத்திற்கும் இடையேயுள்ள முக்கியமான வேறுபாடுகள்.

அது போல், இயேசுவுக்கும், இயேசுவுக்கு முன் வாழ்ந்த தீர்க்கதரிசிகளுக்கும் கர்த்தரிடமிருந்து வேதங்கள் அருளப்பட்டதாக கிறித்தவ மார்க்கம் கூறுவதை இஸ்லாம் ஏற்றுக் கொண்டாலும், அந்த வேதங்களில் மனிதக் கரங்கள் விளையாடியுள்ளன என இஸ்லாம் கூறுகிறது.

ஆயினும், கர்த்தருடைய வார்த்தைகள் முழு அளவுக்கு மாற்றப்பட்டு விட்டன என்று இஸ்லாம் கூறவில்லை. இன்றைக்கு கிறிஸ்தவர்களிடம் வேத நூலாக மதிக்கப்படுகின்ற பைபிளில் கர்த்தருடைய வார்த்தைகள் எஞ்சியிருக்க முடியும் என்பதை இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறது. அந்த வார்த்தைகளில் முஸ்லிம்களால் இறுதித் தீர்க்கதரிசியென நம்பப்படும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி எராளமான முன் அறிவிப்புகள் காணப்படுகின்றன.
 
இயேசுவுக்கு முன்னர் அனுப்பப்பட்ட தீர்க்தரிசிகளுடைய வேத நூல்களின் தொகுப்பாகக் கருதப்படும்பழைய ஏற்பாட்டிலும்இயேசுவின் போதனைகள் மற்றும் அவரது வரலாற்றுத் தொகுப்பானபுதிய ஏற்பாட்டிலும் இத்தகைய முன்னறிவிப்புகளை நாம் காண முடிகிறது.

அந்த முன்னறிவிப்புகளை, கிறிஸ்துவ சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டி, நபிகள் நாயகத்தை அவர்கள் கர்த்தரின் தூதராக ஒப்புக் கொள்வது பைபிளின் கட்டளை என்பதை உணர்த்தவே இந்நூலை நாம் வெளியிடுகிறோம்.

காய்தல், உவத்தல் இன்றி கிறிஸ்தவர்கள் இந்த முன் அறிவிப்புகளை, தீர்க்க தரிசனங்களை சிந்திப்பார்களானால் அவர்கள் இந்த உண்மையை ஒப்புக் கொள்வார்கள் என்பதே நம் நம்பிக்கை அந்த நம்பிக்கை நிறைவேற கர்த்தரைப் பிரார்த்திக்கிறோம்.
 
P. ஜைனுல் ஆபிதீன்.

Sunday, November 11, 2012

பாபர் மசூதி முதல் சார்மினார் வரை தொடரும் அவலங்கள்!

பழைய ஹைதராபாத் நகரில் உள்ள முஸ்லிம்களின் வரலாற்று சின்னமான 400 ஆண்டு பழமையான "சார்மினார்" வளாகத்தை ஆக்கிரமித்து அதில் கோவில் கட்ட ஹிந்துதுவாவினருக்கு உதவியாக இருந்தனர் காவல்துறை காவிகள்.

இதற்க்கு உடந்தையாக இருந்தவர்கள் சாதாரண காவலர்கள் இல்லை, 33 போலீஸ் உயர் அதிகாரிகள். ஹைதராபாத் பகுதியை சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும் போது முஸ்லிம்களுக்கு எதிராக அறிவிக்கப்படாத ஒரு போர் நடத்தப்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் பக்ரீத் திருநாளின் போது "குர்பானி" கொடுக்கும் பிராணிகள் விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ்.,விஷ்வ ஹிந்து பரிஷத், அகில பாரத வித்யாதி பரிஷத், மற்றும் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து கொண்டு போலீசார் செயல்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் "சப்சி மண்டி" பகுதியில் முஸ்லிம் கடைகளை சேதப்படுத்தி கோடிக்கணக்கான சொத்துக்களை சூறையாடிய விஷயத்திலும் போலீசுக்கு பங்குண்டு.

இந்த "சதி" திட்டத்துக்காக திருமண மண்டபம் ஒன்றில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது இதுவெல்லாம் உளவுத்துறைக்கு தெரிந்தே நடந்திருக்கிறது. சார்மினாரை பாதுகாக்க ஹைதராபாத் மாமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள், "ஆக்கிரமிப்பு கோவில்" கட்டுமானத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளனர். .

சிந்திக்கவும்: குறிப்பிட்ட ஒரு மதத்தவரின் வழிபாட்டு தளங்களை ஹிந்துத்துவா குறிவைத்து தாக்குவதும், அதை உரிமை கொண்டாடுவதும் பாபரி மஸ்ஜித் தொடங்கி காசி, மதுரா, இப்போது குதுமினார் வரை நீள்கிறது. ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு நமது முன்னோர்கள் கோவிலுக்கு அருகாமையில் மசூதிகளும், மசூதிகளுக்கு அருகாமையில் கோவில்களையும் கட்டி ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்.

இவர்கள் வீட்டு திருமண வைபவங்களில் அவர்கள் கலந்து கொள்வதும், தீபாவளிக்கு, பொங்கலுக்கு முஸ்லிம்கள் சாமிக்கு படைத்ததை சாப்பிட மாட்டார்கள் என்பதற்காக உணவு பண்டங்களை தயாரித்ததும் சாமிக்கு படைப்பதற்கு முன் தனியாக எடுத்து வைத்து விடுவார்கள் நமது இந்து பெருந்தகை மக்கள்.

பதிலுக்கு முஸ்லிம்கள் ரமலான், பக்ரீத் போன்ற பண்டிகைகளில், விருந்துகளில் மாட்டிறைச்சி முக்கிய உணவாக இருந்தாலும் இந்து பெருமக்கள் கலந்து கொள்வார்கள் அவர்களுக்கு என்று தனியா ஆட்டிறைச்சி சமைத்து அவர்களை உபசரிப்பதும், சைவம் சாப்பிடும் இந்துக்களுக்காக தனியாக சைவ உணவு படைப்பதுமாக ஒருவருக்கொருவர் கொஞ்சி குலாவி மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.

ஒருவரது நம்பிக்கையை மற்றவர்கள் அவமதிக்காது மதிபளித்தார்கள். ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்கபரிவார் இயக்கங்கள் இந்த ஒற்றுமையில் மண்ணை அள்ளி போட்டார்கள். மதத்தை வைத்து அரசியல் நடத்தி ஆட்சியை பிடிக்கும் இவர்களது மலிவான யுக்திக்கு பலியாவது என்னவோ அப்பாவி மக்களே. மதத்தை வைத்து அரசியல், மதத்தை வைத்து வியாபாரம் என்று கிளம்பிய இந்த கூட்டத்தால் மக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர்.
சார்மினார் Sultan Muhammad Quli Qutb Shah மன்னரால் 1591 ல் கட்டப்பட்டது.

ஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றனர்? (Part-10)


சரி. மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு வருவோம். கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதமாற்றம் அதிகமாக உள்ள இந்தியா போன்ற நாடுகளில் அது தேவைதானே?
இந்து மதத்திலிருந்து ஏன் மக்கள் வெளியேற நேர்கிறது என்பதைப் பற்றிச் சிந்திப்பதற்கு இந்துத்துவவாதிகளுக்கு நேர்மையும் தைரியமும் இல்லை. இங்குள்ள சாதிக் கொடுமை,தீண்டாமை ஆகியவற்றின் விளைவாகவே மக்கள் மதம் மாற நேர்கிறது. இன்றுவரை அவற்றை ஒழிப்பதற்கான காத்திரமான முயற்சிகள் எதையும் சங்கராச்சாரியோ யாருமோ மேற்கொள்ள வில்லை. சமீபத்தில் காஞ்சிபுரம் அருகே உள்ள கூத்திரம்பாக்கம் கிராமத்திலுள்ள தலித் மக்கள் தமது வீதிக்குச் சாமி ஊர்வலம் வேண்டும் எனப் போராடிய கதையைப் பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். பலமுறை போராடி,இறுதியில் தமது கோரிக்கைக்குத் தீர்வில்லை எனில் தாம் மதம் மாறப் போவதாக அவர்கள் அறிவித்தனர்.

அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோருடன் சங்கராச்சாரியும் ஓடோடி வந்தார். நீங்கள் சுத்தமாக இல்லை. உங்கள் தெருவுக்கு ஊர்வலம் வராதுஎன்றுதான் சங்கராச்சாரி சொன்னாரே ஒழிய ஊர்வலம் வருவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக மதம் மாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வரவேண்டுமென்றார். மத மாற்றச் சட்டமும் அறிவிக்கப்பட்டது. இன்று அங்கே தலித் மக்கள் தாக்கப்பட்டுள்னர். வன்முறைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். சங்கராச்சாரி இப்போது அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. தம்மிடம் இருந்த ஒரே ஆயுதமாகிய மதமாற்றம்என்பதையும் இழந்ததால் இன்று பேச இயலாமல் அந்த தலித் மக்கள் ஊமையாகிப் போயுள்ளனர். இன்றும் அவர்களின் வீதிக்குச் சாமி வந்தபாடில்லை. ஒரு சோற்றுப் பதமாக இந்த உதாரணம். எல்லா இடங்களிலும் இதே கதைதான்.

இந்திய அளவில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவர ஏற்கனவே இரு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1955ல் கொண்டுவரப்பட்டற மசோதாவைப் பாராளுமன்றம் நிராகரித்தது. 1978 ஜனதா ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற ஒரு மசோதாவை கொண்டுவர ஜனசங்கத்தினர் தீவிரமாக முயற்சித்தனர். அப்போது பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் அதை ஏற்கவில்லை. அரசியல் சட்டம் வழங்கியுள்ள மதம் பரப்பும் உரிமையை நீக்குவதற்கு இதுவரை பாராளுமன்றம் துணியவில்லை.

மதம் மாற்றுவதற்காக முஸ்லிம்களுக்குப் பெரிய அளவில் வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்றொரு பொய்ப் பிரச்சாரத்தை இந்துத்துவவாதிகள் செய்து வருகின்றனர். இது அப்பட்டமான பொய் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்து. மீனாட்சிபுர மதமாற்றத்தின் போதே இப்படிச் சொல்லப்பட்டது. இந்திய அரசின் நேரடி விசாரணையில் இது பொய் என்பது வெளிவந்தது. அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையே இதை ஏற்றுக் கொண்டுள்ளது.

கிறிஸ்தவர்களைப் பொருத்தமட்டில் அவர்களது எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவருவதுதான் உண்மை. இந்தியக் கிறிஸ்தவம் அமெரிக்கக் கிறிஸ்தவத்தைக் காட்டிலும் பழமையானது. கிறிஸ்துவின் சீடர் தாமஸ் மேற்குக் கடற்கரை வழியாக இங்கு வந்தபோது மயிலாப்பூர் பார்ப்பனர்களால் கொல்லப்பட்டார் என்றொரு கதை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இன்றளவும் மயிலாப்பூர் சாந்தோம் மாதா கோயிலில் தாமசுக்கு ஒரு கல்லறை உண்டு. கிறிஸ்தவம் இத்தனை பழமையானதாயினும் இன்றும் கூட அவர்கள் மொத்த இந்திய சனத்தொகையில் இரண்டரை சதத்துக்கும் குறைவாகவே உள்ளனர். அதுவும்கூட படிப்படியாகக் குறைந்து வருவதை மக்கள் தொகைக் கணக்கீடுகள் நிறுவியுள்ளன. 1971ல் 2.60 சதமாக இருந்த கிறிஸ்தவ மக்கள் தொகை 1989ல் 2.45 சதமாகவும் 1991ல் 2.32 சதமாகவும் குறைந்துள்ளது.

இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இந்துத்துவ வாதிகள் வனவாசி கல்யாண் மஞ்ச்போன்ற அமைப்புகள் மூலம் பெரிய அளவில் கிறிஸ்தவப் பழங்குடியினரையும் தலித்துகளையும் இந்துக்களாக மாற்றி வருகின்றனர். இதற்காகப் பல ஆயிரம் கோடி ரூபாய்களை அவர்கள் ஆண்டுதோறும் செலவிடுகின்றனர். கிறிஸ்தவ தலித்துகளுக்கு தலித்கள் என்கிற அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடையாது என்பது அரசியல் சட்டத்தில் இழைக்கப்பட்டுள்ள ஒரு பெரும் அநீதி. இதை வைத்துக் கொண்டு கிறிஸ்தவ தலித்துகளை ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் இந்துவாக மதம் மாற்றி வருகின்றனர்.

கிறிஸ்தவ தலித்துகளுக்கு இடஒதுக்கீடு இல்லை என்பது அரசியல் சட்ட ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மதமாற்றத் தடைச் சட்டமாக உள்ளதை நாம் கவனிக்க வேண்டும். தவிரவும் நமது அரசியல் சட்டத்தில் மதம் பரப்பும் உரிமை என்பது பிற அடிப்படை உரிமைகளைப் போல நிபந்தனையற்ற உரிமையாக இல்லை. பொது அமைதிக்குக் குந்தகம் வராத அளவில்மதம் பரப்பலாம் என்றே உள்ளது. பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுகிறது என்கிற அடிப்படையில்தான் மாநிலங்கள் இத்தகைய சட்டங்களை இயற்றி வருகின்றன. இது போன்ற காரணங்களால்தான் அம்பேத்கரும், பெரியாரும் நமது அரசியல் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தனர்.
மதமாற்றத்திற்குப் பெயர் மாற்றம் ஒரு ஈடாகுமா?
அம்பேத்கரோ, பெரியாரோ அப்படிச் சொல்லவில்லை. மதமாற்றம் என்பது குழந்தை விளையாட்டல்ல. மனித வாழ்வை எவ்வாறு வெற்றிகரமாக்குவது என்பதோடு தொடர்புடையது அது. தீண்டாமை இழிவிலிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழி இந்து மத விலங்குகளை உடைத்தெறிவதே. சாதியத்தையும் தீண்டாமையையும் ஒழிக்க ஒரே வழி மதமாற்றம்என்று அம்பேத்கர் கூறியுள்ளார். பெரியாரும் அதையே வற்புறுத்தியுள்ளார். இன இழிவு நீங்க இஸ்லாம் ஒன்றே நன்மருந்துஎன்பது அவர் கூற்று. இன்று பெரிய அளவில் பெயர் மாற்ற நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் கூட பெயர் மாற்றம் என்பதை மதமாற்றத்திற்கு ஒரு மாற்றாகச் சொல்லவில்லை (பார்க்க சமரசம், சனவரி 2004).இந்து மத எதிர்ப்பின் அடையாளமாகவே அதைச் செய்வதாகச் சொல்கிறார். தவிரவும் மதமாற்றத்தால் விடுதலை உண்டா இல்லையா என்பதல்ல பிரச்சினை. மதமாற்றம் என்பதும் ஒருவரது மதத்திற்கு மற்றொருவரை அழைப்பதும் ஒருவரது பிறப்புரிமை. இதில் தலையிட அரசுக்கு என்ன உரிமை என்பதே நமது கேள்வி.
முஸ்லிம்களுக்குத் தமிழ்ப் பற்று இல்லை. ஓதுவதைக் கூட அவர்கள் அரபியில்தான் செய்கிறார்கள் என்றொரு குற்றச்சாட்டு உள்ளதே?
அபத்தம். நமது தமிழ்ப்பற்றாளர்கள் கூட அப்படி ஏதும் சொல்லியதாகத் தெரியவில்லை. அப்படி சொன்னால் அது அவர்களுக்குள் ஒளிந்துள்ள இந்துத்துவ மனத்தின் வெளிப்பாடாகவே இருக்க முடீயும். குரானைத் தமிழில் பெயர்த்துள்ளது தவிர ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் அது தமிழ் மக்களால் வாங்கி வாசிக்கப்படுகிறது. இஸ்லாமியர் ஆற்றிய தமிழ்த் தொண்டு குறித்து அறிஞர் உவைஸ் எழுதிய நூல் ஆறு தொகுதிகளாக மதுரைக் காமராசர் பல்லைக் கழகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மசூதியில் நடைபெறுகிற தொழுகையில் பெரும்பாலானவைத் தமிழில் தான் நடைபெறுகின்றன. தொழுகை அழைப்பு என்பது உலகிலுள்ள எல்லா முஸ்லிம்களுக்குமான ஒரு பொதுவான அழைப்பு. ஒரு தனித்துவ அடையாளம். அது தவிர அவர்களது அனைத்து நடைமுறைகளும் தமிழில் தான் உள்ளன. திருமண ஒப்பந்தத்திலும் கூடப் பாருங்கள். சபையில் தமிழில்தான் கேள்விகள், சம்மதம் முதலியவை கேட்கப்படுகின்றன. பதிலும் தரப்படுகின்றன. இதை எல்லாம் பார்க்காமல் தொழுகை அழைப்பையும் கூடத் தமிழில்தான் செய்ய வேண்டும் என வற்புறுத்தவது எப்படிச் சரியாக இருக்கும்?

நமது நிகழ்வுகளில் தலித்கள், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோரை எந்த அளவிற்கு இடம் பெறச் செய்திருக்கிறோம் என்கிற கேள்வியை நாம் எல்லோரும் கேட்டுக் கொள்வது நல்லது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் நடைபெற்ற ஒரு தமிழ் வணிகர் மாநாட்டில்ஒரு முஸ்லிம் வணிகர் கூட அழைக்கப்படாதது என் நினைவுக்கு வருகிறது.இத்தகைய போக்குகளை மதச்சார்பற்ற, சனநாயக, இடதுசாரி சக்திகள் தவிர்க்க வேண்டும். சொல்லப்போனால் தலித்துகள், சிறுபான்மையினர் பிரச்சினைகள் குறித்து அக்கறையோடு பிரத்தியோகமாக மாநாடுகள், பொதுக் கூட்டங்கள், கோரிக்கைகள் முதலியவற்றை வைக்க வேண்டும். முஸ்லிம்கள் நடத்தக்கூடிய மாநாடுகள், பத்திரிகைகளில் முழங்குவதோடு நிறுத்திவிடக் கூடாது.
நன்றி :
அ.மார்க்ஸ்
amarx.org

ஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றனர்? (Part-09)


பாபர் மசூதிதான் இடிக்கப்பட்டுவிட்டதே. போனது போகட்டும் என இஸ்லாமியர் இதனை ஏற்றுக் கொண்டால் இனி பிரச்சினை இல்லைதானே?
இனிமேல்தான் பிரச்சினையே. மதுராவில் ‘’இட்காமசூதியை இடித்துவிட்டுக் கிருஷ்ண ஜன்ம பூமிகட்ட வேண்டுமெனவும், அஞ்சனியில் கிறிஸ்தவக் கோயிலை இடித்துவிட்டு ‘’னுமான் ஜன்ம பூமிÕ அமைக்க வேண்டுமெனவும் இந்து வெறியர்கள் பேசத் தொடங்கிவிட்டனர். வருணாசிரம அடிப்படையிலான இந்து ராஜ்யம்தானே அவர்களின் இறுதிக் குறிக்கோள்!
முஸ்லிம்களின் மனநிலை எப்படி இருக்கிறது?
மிகவும் பாதுகாப்பற்ற மனநிலையிலுள்ளனர். இரண்டாம் தரக் குடிமக்களாக உணர்ந்து வெட்கிப் போயுள்ளனர். தங்களின் அடையாளத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற நிலையில் இஸ்லாம் தனிநபர் சட்டம், ருதுமொழிக்கு நியாயம் வழங்குதல்’, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்குச் சிறுபான்மை உரிமை வழஙகுதல், பாடப்புத்தகங்களில் இஸ்லாமியர் பற்றிய பொய்ச் செய்திகளை நீக்குதல் போன்ற கோரிக்கைகளை முன் வைக்கின்றனர். கலவரங்களில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களைப் பேட்டி காணும்போது தங்களது பாதிப்புகளைச் சொல்லக்கூடப் பயந்து சாகின்றனர். (எ.பொ.வீ. 10-11-90). இழந்தது இழந்ததாக இருக்கட்டும். இனி இழப்புகள் தொடராதிருக்கட்டும்.குறைந்தபட்ச அமைதியான வாழ்க்கை போதும் என்பதுதான் அச்சம் கலந்த அவர்களது இன்றைய மனநிலை, எனினும் மசூதி இடிப்புக்குப் பினபு முஸ்லிம்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அரசியல் விழிப்புணர்வு பாராட்டத்தக்கது.
நீங்கள் செல்வதெல்லாம் சரியாகவும் நியாயமாகவுந்தான் தோன்றுகின்றன. எல்லாவற்றையும் நான் யோசித்துப் பார்க்கிறேன். இந்து வகுப்புவாதம் என்பது நம்மை உடனடியாக எதிர்கொண்டுள்ள ஆபத்தான சூழல் என்பது விளங்குகிறது. இந்நிலையில் நம்முடைய பங்கு என்ன?
பெரும்பான்மையினரின் பெயரிலான பாசிசத்திற்கு எதிராகச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது இந்த நாட்டிலுள்ள சனநாயகச் சக்திகளின் கடமை. பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகு இந்து மதவெறியைக் கண்டிப்பதற்கே அரசு அனுமதி வழங்க மறுக்கிறது. கண்டிப்பவர்களும் கூட வெளிப்படையாக இந்துமதப் பாசிசத்தைக் கண்டிக்காமல் சமய ஒற்றமைஎன்கிற பெயரில்தான் கருத்துப் பிரச்சாரம் செய்கின்றனர். ஏதோ இரண்டு சமயங்களுமே முரண்டு பிடித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு நிற்பது போன்ற அர்த்தத்தை இது ஏற்படுத்திவிடுகிறது.

ஆனால் நிலைமை அதுவல்ல. இந்துமத வெறியர்களும் இந்துமயமான அரசும் தாக்குகின்றனர். முஸ்லிம்கள் தாக்கப்படுகின்றனர்; எனவே இந்து மதவெறியைக் கண்டிக்கிறேன் என்று சொல்லாமல் மத ஒற்றுமை பேசுவதெல்லாம் சும்மா பம்மாத்துத்தான். இந்த நிலையில் இந்துமத வெறிக்கு எதிராக மக்களைத் திரட்டுவது சனநாயகச் சக்திகளின் கடமை. அதில் ஓர் அங்கம்தான் முஸ்லிம்கள் பற்றிய கட்டுக்கதைகளைத் தகர்ப்பது. கட்டுக் கதைகள் முன் வைக்கப்படும்போது அவற்றைத் தோலுரிப்பதும், அம்பலப்படுத்துவதும், முன்வைக்கும் சக்திகளை எதிர்த்துப் போராடுவதும் சிறுபான்மையினரின் உயிர், உரிமை, உடைமை எல்லாவற்றையும் பாதுகாப்பதும் நமது கடமை.

அது மட்டுமல்ல. இன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்டுவது என்கிற அடிப்படையில் சங்கராச்சாரி போன்ற இந்துத்துவ மனநிலையிலுள்ள மதத் தலைவர்களும் இந்துத்துவ அரசியல் சக்திகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் மசூதியைத்தான் கட்டிக் கொடுக்கவேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைப்பது நம் கடமையாக உள்ளது. 91ம் ஆண்டு இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி 1947ல் வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்தனவோ அப்படியேதான் இன்றும் இருக்க வேண்டும். அந்தச் சட்டப்படியும், பொதுவான மனித அறங்களின்படியும், மசூதி இடிக்கப்பட்ட அன்று அன்றைய பிரதமர் நரசிம்மராவ் அளித்த வாக்குறுதியின் படியும் பாபர் மசூதி இடிக்கப் பட்ட இடத்தில் மீண்டும் மசூதியே கட்டிக் கொடுக்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கையை நாமும் வைக்க வேண்டும். இதர இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற அரசியல் சக்திகளையும் முன் வைக்குமாறு வலியுறுத்தவுனம் வேண்டும்.
பின்னிணைப்பாய்ச் சில கேள்விகள்
இந்திய முஸ்லிம்களின் நிலைமையில் ஏதேனும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதா?
நிச்சயமாக இல்லை. இன்னும் மோசமாக ஒதுக்கப்படக் கூடிய நிலைக்கே முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக அவர்கள் மீதான வெறுப்புப் பிரச்சாரமும் தாக்குதல்களும் அதிகமாகியயுள்ளன. இந்தப் பத்தாண்டுகளில் மத்தியிலும் பல மாநிலங்களிலும் பா.ஜ.க.,வும் அவர்களது கூட்டணியிரும் ஆட்சிக்கு வந்துள்ளனர். மதச் சார்பற்ற அறிஞர்கள், கல்வியாளர்களை எல்லம் நிறுவனங்களில் இருந்து நீக்கியுள்ளனர். மதச்சார்பற்ற பாட நூற்களை நீக்கிவிட்டு அந்த இடங்களில் முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைக்கும் மோசமான கருத்துக்களைப் பாடங்களாகஎழுதி மாணவர்களுக்குப் புகட்டுகின்றனர். முஸ்லிம்கள் நடத்தக்கூடிய மதரசா பள்ளிகள் தீவிரவாதிகளை உருவாக்கும் மய்யங்கள் என்கிற பிரச்சாரத்தை அத்வானி முதலானோர் தெடார்ந்து செய்து வருகின்றனர். அந்த அடிப்படையில் மதரசாக்கள் மீதும் அலிகார் பல்கலைக்கழகத்தின் மீது பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மதமாற்றத் தடைச் சட்டத்தைத் தமிழக அரசு முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் குறி வைத்து இயற்றியதும் பின்னர் அது முடக்கி வைக்கப் பட்டதும் நினைவிருக்கலாம்.. இன்று பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்துள்ள ம.பி., சட்டிஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இச்சட்டம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் மூலம் முஸ்லிம் கல்வி நிறுவனங்களும் இதர அமைப்புகளும் மிரட்டப்படுகின்றன.

இந்நூல் பத்தாண்டுகளுக்கு முந்தியதாயினும் ஆங்காங்கே தேவையான இடங்களில் சில புதிய குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.

புள்ளி விவரங்களைப் பொறுத்தமட்டில், உதாரணமாக அரசு மற்றும் இராணுவத்தில் இடம் பெற்றுள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை அல்லது அரசு கடன் உதவி பெற்றுள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை என்று பார்த்தால் அவை குறைந்துள்ளன என்பதுதான் உண்மை.

அதே சமயத்தில் முஸலிம்களின் மீதான தாக்குதல்கள், கொலைகள், கொள்ளைகள் பெரிய அளவில் அதிகரித்துள்ன. கோயமுத்தூரும், குஜராத்தும் இதற்கு எடுத்துக்காட்டுகள் பெரிய அளவில் முஸ்லிம்களின் சொத்துக்கள் கோவையில் அழிக்கப் பட்டதை பி.யூ.சி.எல். போன்ற அமைப்புகள் வெளிப்படுத்தியுள்ளன. கோட்டைமேடு போன்ற பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் நிரந்தரக் குற்றவாளிகளாகக் கண்காணிப்புக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர். குஜராத்தில் 2000 பேருக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 1,70,000 முஸ்லிம்கள் அகதிகள் ஆக்கப்பட்டனர். இன்றளவும் முஸ்லிம்களில் பெரும்பான்மையோர் வீடு திரும்ப முடியவில்லை.

குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்படவில்லை. அமைச்சர்களாகவும், சட்டமன்ற உறுப்பினர்களாகவும், அரசுப் பதவிகளில் அமோகமாக உலவுகின்றனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்களோ எவ்வித நியாயமான நிவாரணமும் இன்றி அஞ்சி நிற்கின்றனர். குற்றவாளிகள் தண்டனை இன்றித் திரிதல், பாதிக்கப்பட்டவர்கள் உரிய நீதியும், நிவாரணமும் இன்றி அவதியுறுதல். இது ஒரு சனநாயக நாடா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. உபேந்திர பக்சி போன்ற உலகப் புகழ் பெற்ற சட்டவியல் அறிஞர்கள் இந்த அடிப்படையில் குஜராத்தை ஒரு கிரிமினல் அரசுஎனக் கூட வரையறுத்துள்ளனர்.

மொத்தத்தில் இந்திய முஸ்லிம்களின் நிலைமை மேலும் ஆபத்துக்குள்ளாகியுள்ளது. சீரழிந்துள்ளது என்பதே உண்மை.
ஊடகங்களில் முஸ்லிம்கள் பற்றிய சித்திரிப்புகளில் ஏதும் முன்னேற்றம் தென்படுகிறதா?
எந்த முன்னேற்றமும் இல்லை என்பது மட்டுமல்ல. செப்டம்பர் 11க்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது. முஸ்லிம்கள் அனைவரையும் தீவிரவாதியாக, தேசபக்தியற்றவர்களாக, சந்தேகத்துக்குரியவர்களாக,சித்திரிக்கும் நிலைமை அதிகமாகியுள்ளது. நமது தமிழ் சினிமாக்கள் இந்த அம்சத்தில் ரொம்ப மோசம். மணிரத்னம், கமல்ஹாசன் போன்றோர் இந்த வேலையை நுணுக்கமாகச் செய்கின்றார்கள் என்றால் விஜயகாந்த், அர்ஜூன் ஆகியோர் நடிக்கும் படங்கள் மிகவும் வெளிப்படையாக முஸலிம் வெறுப்பைக் கக்குகின்றன. எடுத்துக்காட்டாக ஒற்றன், நரசிம்மன் போன்ற படங்களைச் சொல்லலாம். குஜராத் படுகொலைகளின் போது ஆங்கில இதழ்கள் அந்தக் கொடுமைகளை வெளிக்கொணர்வதில் முக்கியப் பங்காற்றின என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அதிலும் கூட தேசிய அளவிலான ஆங்கில இதழ்களுக்கும் மாநில அளவிலான மாநில மொழி இதழ்களுக்கும் சில வேறுபாடுகளைச் சுட்ட முடியும். இந்திமொழி இதழ்கள் குஜராத் பிரச்சினையில் மிக மோசமாக முஸ்லிம் வெறுப்பை வெளிப்படுத்தியிருந்ததை பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். தமிழ் இதழ்களும் கூட அதேபோல் நடந்துகொண்டன, நடந்து கொண்டுவருகின்றன. தினமலர்பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. தினமணியைக் கட்டுப்படுத்துவது ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி. சமீபத்தில் வரலாற்றுப் பாடங்களில் பா.ஜ.க. அரசு செய்துள்ள புரட்டுகளை விளக்கி ஒரு முன்னாள் துணைவேந்தர் எழுதிய கட்டுரையொன்றை தமிழ் முனனணி நாளிதழ் ஒன்று வெளியிட மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அப்படியானால் எந்த நம்பிக்கைக் கீற்றையும் உங்களால் காண இயலவில்லையா?
அப்படி நான் கருதவில்லை. குறிப்பாக மசூதி இடிப்பிற்குப் பிறகு முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் ஒரு நல்ல அரசியல் விழிப்புணர்வு வந்துள்ளது. ஊடகங்கள், பத்திரிகைகள் ஆகிய துறைகளில் அவர்களின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கதாக உள்ளன.இத்தகைய அரசியல் விழிப்புணர்வு முஸ்லிம் சமூகத்தில் தற்காப்பை அதிகப்படுத்தும என்று நம்புவதற்கு வாய்ப்பிருக்கிறது.

மதச்சார்பின்மையோர், இடதுசாரிகள் மற்றும் இதர ஜனநாயக சக்திகள் ஆகியோர் சிறுபான்மையோர் பிரச்சினைகளில் காட்டக்கூடிய அக்கறையும் பாராட்டக் கூடியதாகவே உள்ளது. அறிவுத் துறையில் இந்துத்துவ சக்திகள் மேற்கொள்ளும் புரட்டு வேலைகளுக்கு இடதுசாரி அறிவுஜீவிகள் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிற ஆக்கப்பூர்வமான எதிர்ப்புகளும், தோலுரிப்புகளும் பாராட்டக்கூடியதாக உள்ளன.

அதே போல குஜராத்தில் மனித உரிமை அமைப்புகளின் செயற்பாடுகளும் குறிப்பிடத்தக்கதாக இருந்தன.

எனினும் அதிகரித்து வரும் இந்துத்துவ ஆபத்தை எதிர்கொள்ள இத்தகைய நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.பாசிஸ்டுகள் ஒரு செங்கல்லை வைத்து, ஒரு விநாயகர் சிலையை வைத்து, சிலை வணக்கம், பூஜை என்று ஏதோ ஒரு பெயரில் ஆயிரக்கணக்கில், லட்சக் கணக்கில் மக்களை அணி திரட்டுகின்றனர். அடித்தள மக்கள், பெண்கள் முதலியோரைப் பெரிய அளவில் திரட்டுகின்றனர். ஆனால் மதச்சார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி சக்திகளின் எதிர்வினைகள் ரொம்பவும் அடையாளச் செயற்பாடுகளாகவே முடங்கியிருக்கின்றன. ஒரு கண்டனக் கூட்டம், மனிதச் சங்கிலி என்கிற அளவில் முடிந்துவிடுகின்றன. வலதுசாரி மதவாத சக்திகள் மக்களைத் திரட்டுவதும் இடதுசாரி, சனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் அதற்கு ஈடுகொடாமல் இருப்பதும் நாட்டில் பாசிசம் வெற்றி கொள்வதின் அடையாளமாக அமையும்.

அரசியல் பிரச்சினைகளை அரசியற் களத்தில்தான் தீர்க்க வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பு வரட்டும் என்கிற ரீதியில் அரசியல் அமைப்புகள் சொல்லிவிட்டுச் சும்மா இருக்க இயலுமா?
மீபத்தில் ஒரு இதழில் படித்தேன்: ஷாபானு பிரச்சினையில்தான் முஸ்லிம்கள் முதன் முதலில் இந்திய அளவில் திரள ஆரம்பித்தார்களாமே? இது உண்மையா?
நானும் படித்தேன். முஸ்லிம்களிடம் சனநாயகம் இல்லை, சகிப்புத் தன்மை இல்லை என்றெல்லாம் அவ்வப்போது முஸ்லிம்களுக்கு எதிரான கட்டுக் கதைகளைப் பரப்பி வரும் இதழ் அது.ஷாபானு பிரச்சினையில்தான் இந்திய முஸ்லிம்கள் ஒன்றிணைகின்றனர் எனச் சொல்வதன் மூலம் முஸ்லிம்கள் பெண்களை ஒடுக்கியவர்கள், இந்துத்துவத்திற்கு எதிரானவர்கள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்றொரு பிம்பத்தை ஏற்படுத்தும் முயற்சி அது. திரைப்படங்கள், ஊடகங்கள் ஆகியவற்றில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பரப்பப்படும் தீவிரவாதப்பிரச்சாரத்தின் இன்னொரு தந்திரமான வடிவம் இது. ஆனால் உண்மை இதுவன்று. ஷாபானு பிரச்சினை மேலுக்கு வந்தது 1985ல் ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில், அதற்கு முன்பே முஸ்லிம்கள் இந்திய அளவில் திரண்டு தம் குரலை ஒலிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதுதான் உண்மை.

சுதந்திரத்திற்குப் பிந்திய இந்திய முஸ்லிம்களின் வரலாறு மிகவும் பரிதாபமானது. அநீதிகள் நிரம்பியது. பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டி படேல், ராஜேந்திர பிரசாத், சியாமா பிரசாத் முகர்ஜி, மாளவியலா முதலியோர் இங்குள்ள முஸ்லிம்களைப் பிணைக் கைதிகளாகவே கருதி நடத்தினர், முஸ்லிம்களுக்கு இருந்த ஒரே ஆறுதல் காந்தியும் நேருவும்தான். காந்தியையும் இந்துத்துவவாதிகள் சுட்டுக் கொன்றனர். முஸ்லிம் தலைவர்களனைவரும் பாகிஸ்தானுக்குச் சென்றனர். இந்திய அளவிலான ஒரே தலைவராககிய அபுல் கலாம் ஆசாத் முஸ்லிம்களுக்குத் தலைமை கொடுககத் தயாராக இல்லை.

அரசியல் சட்ட அவையில் முஸ்லிம்களுக்கு குறைந்தபட்சம் மூன்று அநீதிகள் இழைக்கப்பட்டன.1. உருது மொழி புறக்கணிக்கப்பட்டமை.
2.
பாராளுமன்றம், சட்டமன்றம், அரசு பதவிகள் ஆகியவற்றில் இடஒதுக்கீடும் இரட்டை வாக்குரிமையும் மறுக்கப்பட்டமை.
3.
பொதுசிவில் சட்டம் பற்றிய குறிப்பை வழிகாட்டு நெறிமுறைகளில் ஏற்றியமை.


இதே காலகட்டத்தில் பாபர் மசூதிக்குள் பாலராமர் சிலையை வைத்து வருங்காலக் கொடுமைகளுக்கு வித்திட்டது இந்துத்துவம்.

தலைமையும் வலுவான இயக்கமும் அற்ற முஸ்லிம் சமுதாயம் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டது. காந்தி முதற்கொண்டு அனைவரும் முஸ்லிம் லீக்கை கலைத்துவிடச் சொன்ன நேரம் அது. எப்படியேனும் இந்திய தேசத்தின் மீதானத் தங்களின் விசுவாசத்தை நிறுவுவதே அடுத்த பத்தாண்டுகளில் முஸ்லிம்களின் பணியாக இருந்தது. இந்நிலையில் 1960 வரை அகில இந்திய அளவில் முஸ்லிம் திரட்சி என்பது ஏற்படவே யில்லை.

1961
ல் தான் முதல் முறையாக டாக்டர் சையத் முகமத், மவுலானா ஹிஸ்புர் ரஹ்மான் ஆகியோரின் முயற்சியில் ஜூன் 10, 11 தேதிகளில் புதுடெல்லியில் இந்திய முஸ்லிம்களின் மாநாடு கூட்டப்பட்டது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி. இதற்குப் பின்புலமாக இருந்தது ஜபல்பூரிலும், பகல்பூரிலும் நடைபெற்ற மிகப் பெரிய வகுப்புக் கலவரங்கள். முஸ்லிம்களின் உயிர்களும் உடைமைகளும் பெருமளவில் அழிக்கப்பட்டன. 1964ல் ஜாம்ஷெட்பூரில் மிகப்பெரிய அளவில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டபோது ஆகஸ்ட் 8, 9 தேதிகளில் லக்னோவில் மவுலானா தயீப், சையத் முகமது ஆகியோரின் முயற்சியால் அகில இந்திய முஸ்லிம் மக்களின் மஜ்லிஸ் ஏ முஷாவரத் மாநாடு கூட்டப்பட்டது. ஜெயப்பிரகாஷ் நாராயணன், நவகிருஷ்ண சவுதரி, ஆனந்த சங்கரராய், சாரு சந்திர பந்தாரி முதலியோர் இந்துத்துவ சக்திகளைக் கடுமையாகக் கண்டித்தனர். 1964ல் தான் விசுவ இந்து பரிசத் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, கடுமையான வன்முறைகளையும் சொத்திழப்பையும் உயிரிழப்புகளையும் எதிர்கொண்ட போதும் எல்லாவற்றி லிருந்தும் தாம் ஒதுக்கப்படுவதாக உணர்ந்த போதும்தான் முஸ்லிம்கள் ஒன்றிணையக் கூடிய நிலை ஏற்பட்டது. 1961க்குப் பிறகு இது நிகழ்ந்தது. இதை மறைத்து ஷாபானு விவகாரத்தை ஒட்டித்தான் (1985) முஸ்லிம்கள் திரண்டதாகச் சொல்வது அப்பட்டமான இந்துத்துவத் தந்திரம். அடிப்படைவாத நோக்குடன்தான் முஸ்லிம்கள் திரண்டனர் என நிறுவ முயலும் குள்ளநரித்தனம்.
எல்லோருக்கும் பொதுவான சிவில் சட்டம் என்பது ஒரு நியாயமான கோரிக்கைதானே! அதை ஏன் முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள்?
மேலோட்டமாகப் பார்த்து இந்தப் பிரச்சினையை அணுக முடியாது. கிரிமினல் சட்டம், தண்டனைச் சட்டம் எல்லாம் இங்கே பொதுவாகத்தான் இருக்கிறது. சிவில் சட்டத்தில் விவாகரத்து, தத்து எடுத்தல்,சொத்துரிமை ஆகியவற்றில் மட்டும் சில வேறுபாடுகள் மத அடிப்படையில் இங்கே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஏதோ இந்திய முஸ்லிம்கள் அனைவருக்கும் அவர்களது ஷரியத் சட்டங்கள் எல்லாம் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளன என்பது போலச் சொல்வதும் தவறு. உதாரணமாக முஸ்லிம் நீதி முறையோ, தண்டனை முறையோ இங்கு நடைமுறையில் இல்லை. குற்றவாளிக்குத் தண்டனை என்பது இங்கே மத ரீதியில் வழங்கப்படுவதும் இல்லை. எல்லோருக்கும் பொதுவாகத்தான் தண்டனை வழங்கப்படுகிறது.

இந்தியா போன்ற பலவிதமான மொழி, பண்பாடு மதம், சாதி என வேறுபட்டு இருக்கும் மக்கள் குழுமங்களிடையே பொது சிவில் சட்டம் சாத்தியமல்ல. இந்துக்களிடையே கூட ஒரு சாதி மக்களின் வழமைகள் மற்றொரு சாதியுடன் முழுமையாக ஒத்துப் போவதில்லை. எடுத்துக்காட்டாக சில சாதியினர் மத்தியில் எளிதில் விவாகரத்தும் மறுமணமும் அனுமதிக்கப்படுகிறது. சில சாதிகளில் அது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்துச் சட்டம் இயற்றும்போது கூட மேற்குப் பஞ்சாபிய உயர்சாதிப் பார்ப்பனப் பண்பாடுகளின் அடிப்படையிலேயே அச்சட்டம் இயற்றப் பட்டது என்றும் அது பல பழங்குடி மக்களின் பண்பாடுகளுக்கு எதிரான வன்முறையாக இருக்கிறது என்றும் ஒரு விமர்சனமுண்டு. இது போன்ற சந்தர்ப்பங்களில் தல வழமைகளையும் கணக்கிலெடுத்துக் கொள்வதற்கும் நமது சட்டத்தில் வழிமுறைகள் உள்ளன.

இப்படி நிறைய உதாரணங்கள் சொல்ல முடியும். சிறீரங்கம் கோயில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா, தென்கலை நாமம் போடுவதா என்றொரு பிரச்சினை பல ஆண்டுகளக்கு முன்பு வந்தது. நீதிமன்றம் வரை சென்ற அந்தப் பிரச்சினையில் இறுதிவரை பொதுவான முடிவு ஏதும் எடுக்க முடியவில்லை. ஒருமாதம் வடகலை நாமம்,இன்னொரு மாதம் தென்கலை நாமம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது நினைவிருக்கலாம். இந்துமதத்திற்குள்ளேயே கூட இது சாத்தியமில்லை என்பதையே இது நிறுவுகிறது. இந்நிலையில் பல்வேறு மதங்களையும் உள்ளடக்கிய பொதுசிவில் சட்டம் என்பது முஸ்லிம்களக் குறிவைத்துச் செய்யப்படும் தாக்குதலின்றி வேறில்லை.

சென்ற ஜுலை 21 (2003) அன்று வழங்கிய தீர்ப்பொன்றில் வழக்கின் வாதங்களுக்கோ,தீர்ப்புகளுக்கோ எவ்விதத் தொடர்பும் இன்றி பொதுசிவில் சட்டம் நிறைவேற்றுமாறு தலைமை நீதிபதி காரே பாராளுமன்றத்திற்கு அறிவுறுத்தியுள்ளார். அதற்கு அவர் சொன்ன காரணம் பொதுசிவில் சட்டம் வந்தால் தேசிய ஒருமைப்பாடு காப்பப்படுமாம். இதற்கு முன்பே நீதிபதி குல்தீப் சிங், சந்திரசூட் போன்றவர்களும் இப்படிச் சொல்லியுள்ளனர். அரசியல் சட்ட அவை விவாதத்தின் போதும் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், எம்.ஆர்.மசானி போன்றோர் இதைச் சொல்லியுள்ளனர். இதில் சிலஅம்சங்களை நாம் கவனிக்க வேண்டும்.

1.
பாராளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் அரசியல் சட்டத்திற்குப் பொருத்தமாக உள்ளதா இல்லையா என ஆய்ந்து தீர்ப்பளிப்பதே நீதிமன்றங்களின் பணி. பாராளுமன்றம் என்ன மாதிரி சட்டங்களை இயற்ற வேண்டும் எனச் சொல்வதற்கோ, கட்டளையிடுவதற்கோ அதற்கு அதிகாரமில்லை.

2.
தேசிய ஒருமைப்பாடு குறித்த கவலையும் கூட நீதிமன்ற எல்லைக்கு அப்பாற்பட்டது. அது குறித்துப் பாராளுமன்றம், அரசியல் சட்டம் ஆகியவை கரிசனம் கொள்வதே பொருத்தம்.

3.
இந்த நாடு என்னுடையது; என்னுடைய அடிப்படையான, மத, பண்பாட்டு, மொழி உரிமைகள் எதுவும் புறக்கணிக்கப்படவில்லை; அந்த உரிமைகள் இந்த நாட்டின் சட்டத்தாலும், அரசாலும், நீதிமன்றங்களாலும் பாதுகாக்கப்படும் என்கிற உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும்/குடிமகளுக்கும் உறுதியாகும்போதே இந்த நாட்டின் மீதும், அதன் ஒருமைப்பாட்டின் மீதும் அவருக்கு நம்பிக்கை வரும். மாறாக பொதுசிவில் சட்டம் போன்றவற்றின் மூலம் அந்த உரிமைகள் மறுக்கப்படும்போது அவருக்கு இது நமது நாடுதானா என்கிற அய்யம்தான் ஏற்படும்.

முஸ்லிம் தனிநபர் சட்டத்தை ஒழிப்பது என்பது அவர்களின் மத உரிமையில் தலையிடுவதுதான். சொல்லப்போனால் தனிநபர்’, ‘சட்டம்என்கிற இரு சொற்களுமே இங்கே பொருத்தமின்றி கையாளப்படுகின்றன. தனிநபர்என்கிற மேலைத்தேய நவீனத்துவக் கருத்தாக்கம் இங்கே பொருந்தாது. முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் இந்தச் சட்டத்தின் கீழ் வருபவை தனிநபர் சார்ந்த உரிமைகள் அல்ல. அது அவர்களது தீனின்ஒரு பகுதி, மதக் கடமை. தவிரவும் தொகுத்துச் சட்ட ஏற்பு வழங்கப்பட்டவைகளையே சட்டம்என்கிறோம். சட்டமாகும்போது நீதிமன்றம் அதை சொல்லுக்குச் சொல் கடைபிடிக்க வேண்டும. மீற முடியாது. முஸ்லிம் தனிநபர் சட்டம்இவ்வாறு பண்ணப்பட்டதல்ல. அதனால்தான் ஷாபானு வழக்கிலும் வேறு பல வழக்குகளிலும் முஸ்லிம் தனிநபர் சட்டத்தையும் மீறித் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய வாய்ப்புகள் இருக்கும் போதும் பொதுசிவில் சட்டம் எனக் கூப்பாடு போடுவதன் அர்த்தமென்ன?

இந்த மாதிரியான பிரச்சினைகளில் சீர்திருத்தங்கள் கூடாது என்பதில்லை. அவை உள்ளிருந்து மேற்கொள்ளப்பட வேண்டும். வெளியிலிருந்து திணிக்கக்கூடாது. கிறிஸ்தவர்கள் தமது சட்டங்களில் சில மாற்றங்கள் வேண்டுமென்கிறார்கள். இதில் கருத்தொருமிப்பு இருந்தால் அதை ஏற்று தேவையான சட்டத் திருத்தம் செய்யலாம். அதே போல முஸ்லிம்கள் மத்தியிலும் ஏதோ ஒரு விசயத்தில் ஒரு கருத்தொருமிப்பு ஏற்பட்டு சட்டத் திருத்தம் என்கிற குரல் மேலுக்கு வந்தால் அது வேறு விஷயம்; அத்தகைய நிலை இல்லாதபோது வெளியிலிருந்து எதையும் திணிக்க முயல்வது எப்படிச் சரியாக இருக்க முடியும்?

சில விடயங்களில் ஒரே பிரச்சினை குறித்து இருவேறு சூழல்களில் இருவேறு கருத்துக்களைக் கூடப் பேச வேண்டி இருக்கலாம். இதுநாள் வரை பெண்களுக்குப் பர்தாவேண்டாமே என்று சொல்லிக் கொண்டிருந்த பெண்ணியவாதிகள் கூட இன்று பிரெஞ்சு அரசாங்கம் பர்தா அணியக் கூடாது என்றொரு நிலையை வன்முறையாகச் செயல்படுத்த முனையும் போது அதற்கெதிராக முஸ்லிம் பெண்களுடன் இணைந்து போராடவில்லையா?