Monday, April 23, 2012

தம்புள்ளை பள்ளிவாசலை அகற்றுமாறு பிரதமர் உத்தரவு?

- பி.பி.சி
பள்ளிவாசலை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டதாக பிரதமர் அலுவலக முத்திரையுடன் வெளியான அறிக்கை.


இலங்கையின் மத்திய மாகாணத்தில் தம்புள்ளை நகரில் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் இடிக்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்திய முஸ்லிம் பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுப்பதாக இலங்கையின் பிரதமர் டிஎம் ஜயரத்ன அறிவித்துள்ளதாக அறிக்கையொன்று வெளியாகியுள்ளது.


உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில், குறித்த பகுதியிலிருந்து பள்ளிவாசலை அப்புறப்படுத்தி, அதனை வேறொரு பொருத்தமான இடத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ஜயரத்ன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் அலுவலக முத்திரையுடன் வெளியாகியுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டபட்டுள்ளது.


இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கம்பளையில் நடந்த சிறப்பு கூட்டமொன்றின் பின்னர் பிரதமர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மூத்த அமைச்சரான ஏ.எச்.எம். பௌசி, மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா மற்றும் துணை அமைச்சர்களான அப்துல்காதர், ஹிஸ்புல்லா ஆகியோரும் இஸ்லாமிய மதத்தலைவர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, பிரதமர் அலுவலகத்திலிருந்து இப்படியான அறிக்கையொன்று வெளியாகியிருக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் பெளசி தமிழோசையிடம் கூறினார். அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு கூட்டம் எதுவும் நடக்கவில்லை என்றும் அப்படியான கூட்டத்தில் தானோ மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவோ கலந்துகொள்ளவும் இல்லை என்றும் அமைச்சர் பௌசி சுட்டிக்காட்டினார்.


பல பரம்பரைகளாக தம்புள்ளை நகரில் முஸ்லிம் மக்கள் சென்று வழிபட்டுவரும் பள்ளிவாசலை அகற்றுமாறு கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.


அண்மையில் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணை கொண்டுவந்தபோது, முஸ்லிம் நாடுகளும் இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களும் ஒட்டுமொத்தமாக அரசாங்கத்தை ஆதரித்திருந்த நிலையில், தம்புள்ளை நகரில் நடத்தப்பட்ட போராட்டத்தின் பின்னணியில் ஏதாவது சக்திகள் இருக்கலாம் என்று கருதுவதாகவும் அமைச்சர் பௌசி மேலும் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

தம்புள்ளை பள்ளிவாசல் அதே இடத்திலேயே அமைய வேண்டும்: அரசியல் கட்சிகள்

தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைரிய ஜும்ஆ பள்ளிவாசல் உரிய இடத்திலேயே அமைய வேண்டும் என அரசியற் கட்சிகள் இன்று ஞாயிறுக்கிழமை கோரிக்கவிடுத்தன. குறித்த பள்ளிவாசல் பழைய இடத்திலேயே அமைவதற்கு அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் உழைக்க வேண்டும் என அரசியற் கட்சிகள் தெரிவித்தன.


தம்புள்ளை பள்ளிவாசல் கடந்த வெள்ளிக்கிழமை உடைக்கப்பட்டமை எதிர்ப்பு தெரிவித்து பல அரசியற் கட்சிகள் ஒன்றினைந்து இன்று ஞாயிறுக்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆஸாத் சாலி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொது செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட், ஐக்கிய சோஷலிச கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசிங்க மற்றும் மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர் இங்கு கருத்து தெரிவித்த மாநகர சபை உறுப்பினர் ஆஸாத் சாலி, "அநுராதபுரத்திலுள்ள புனித பூமியில் அமைச்சரொருவருக்கு சொந்தமான மதுபானசாலை உள்ளது. அப்படி அநுராதபுர புனித பூமியில் மதுபானசாலை இருக்க முடியும் என்றால் ஏன் தம்புள்ளை புனித பூமியில் பள்ளிவாசல் இருக்க முடியாது?


இந்த தம்புள்ளை புனித பூமியில் பிரபல ஹோட்டேல் மற்றும் கிரிக்கெட் மைதானம் ஆகியன உள்ளன. இவ்வாறான நிலையில் பள்ளிவாசல் இருப்பதனால் தம்புள்ளை விகாரையிலுள்ள பௌத்த பிக்குகளுக்கு என்ன பிரச்சினை?


இந்த பள்ளிவாசல் பிரச்சினையை பெரிதாக்கிய சமூகங்களிடையே பிரச்சினையை உருவாக்கியது ஒரு பிராந்திய வானொலி சேவை. நாட்டில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் தொலைக்காட்சி மற்றும் வானெலி சேவைகளை கண்கானிக்கு தொலைத்தொடர்புபடுத்தல் ஆணைக்குழு இந்த வானொலி சேவையை ஏன் கண்காணிக்கவில்லை? இப்பள்ளிவாசல் கட்டிடம் சட்டவிரோதமானது என தெரிவிக்கப்பட்டுள உடைக்கப்பட்டால் அதற்கு நான் எதிர்ப்பில்லை. ஆனால் குறித்த கட்டிட உடைப்புக்கான சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை" என்றார்.


இங்கு கருத்து தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், "குறித்த பள்ளிவாசல் உடைக்கப்பட்ட செய்தி கேள்விப்பட்டதும் நான் மிக்க கவலைப்பட்டேன். தேங்காய் பறிப்பதற்க்காகவா முஸ்லிம் மக்கள் தங்களின் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்தனர். நாடாளுமன்றத்திலுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள் பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்டியில் பிறந்து கொழும்பில் வளர்ந்தவன் என்ற வகையில் சிங்கள மக்கள் பற்றி எனக்கு நன்றாக தெரியும். அத்துடன் அவர்களின் கலாசாரங்களை சிறுபான்மையினரான நாங்கள் மதிக்கின்றோம். அவ்வாறான நிலையில் இப்பள்ளிவாசல் உடைக்கப்பட்டதை எந்தவொரு பௌத்த மகனும் ஏற்றுக்கொள்ளமாட்டார். இந்த பள்ளிவாசல் விவகாரத்தினை அரசாங்கம் தலையீட்டு உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அத்துடன் பௌத்த தேரர்கள் இவ்வாறான செயல்களில் ஒருபோதும் ஈடுபட கூடாது. மதம், இனம் மற்றும் சிறுபான்மையினர் இல்லை என்று தெரிவிக்கும் இந்நாட்டில் இந்த சம்பவத்தினால் பாரிய அவமானம் ஏற்பட்டுள்ளது" என்றார்.


இங்கு கருத்து தெரிவித்த புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, "புன்னிய பூமியில் பள்ளிவாசல் அமைக்க முடியாது என்றால் கதிர்காமம் மற்றும் கண்டி ஆகிய புனித பூமிகளில் பள்ளிவாசல் அமைய பெற்றுள்ளது. புனித பூமி என்றால் விகாரைகள், கோயில்கள் மற்றும் பள்ளிவாசல்கள் ஆகியன இணைந்து காணப்படுவதே ஆகும். இதன் மூலம் மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்.


குறித்த பள்ளிவாசல் உடைப்பு தொடர்பில் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தெஹிவளை – கல்கிஸை மேயர் தனசிறி அமரேசகவிடம் தெரிவித்தேன். அதற்கு அவர், "எமது மாநகரத்தில் இவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை விரட்டியத்துள்ளேன். இவ்வாறு யாரும் எதிர்காலத்தில் செயற்பட்டால் விரடியடிக்கப்படுவார்கள்" என்றார்.


இவ்வாறே முஸ்லிம் அமைச்சர்களும் இதற்கு எதிராக செயற்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து 1000க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் வெள்ளை தொப்பியுடன் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பரிசாகவே அரசாங்கத்தினால் இந்த பள்ளிவாசல் உடைக்கப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் தொடருமானல் மற்றுமொரு யுத்தம் வெடிக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை" என்றார்.


இங்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொது செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட், "இந்த பள்ளிவாசல் உடைப்பு விவகாரம் தொடர்பில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் முஸ்லிம் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் அமைதியாக இருக்கவில்லை. இப்பிரச்சினை தீர்ப்பதற்காக இணக்கப்பாட்டு அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.


எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது போன்று அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் இந்த விடயத்தில் அமைதியை கடைப்பிடிக்கவில்லை. இந்த பிரச்சினையை சமாதானமாகவே தீர்க்க முற்படுகின்றோம். சமாதனமாக தீர்க்கு முயற்சி தோல்வியடையுமானால் அதற்கு மாற்றீடான நடவடிக்கையினை முஸ்லிம் கட்சிகள் மேற்கொள்ளும்" என்றார்.


ஐக்கிய சோஷலிச கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசிங்க மற்றும் மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி. இராதாகிருஷ்ணன் ஆகியோரும் இப்பள்ளிவாசல் உடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


இதேவேளை, இப்பள்ளிவாசலை அகற்றுமாறி வேறிடத்தில் பள்ளிவாசலொன்றை அமைக்க உதவுமாறும் புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சரும் பிரதமருமான டி.எம். ஜயரட்ன இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
- தமிழ் மிரர்

உண்மையே ஜெயிக்கும்!Sunday, April 22, 2012

தம்புள்ளையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பதற்ற நிலை தணிந்து வழமைக்குத் திரும்பியது

தம்புள்ளையில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பதற்ற நிலை தணிந்து அப்பிரதேசம் வழமைக்குத் திரும்பியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் இன்று காலை தம்புள்ள கந்தலம பகுதிக்கு விஜயம் செய்த சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச.எம்.பௌசி, கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், முஸ்லிம் அமைப்புக்களின் தலைவர் என்.எம்.அமீன் ஆகியோர் அடங்கிய உயர் மட்டக் குழுவினர், பாதிப்புக்குள்ளான முஸ்லிம்களையும், மற்றும் பிரதேச சிங்கள மக்களையும் சந்தித்து கலந்துரையாடியதையடுத்து இந்த நிலையேற்பட்டுள்ளது.

காலை ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த அமைச்சர்கள் மற்றும் பிரதி நிதிகள் அங்கு விசேட கூட்டமொன்றினை நடத்தினர். பிரதேச செயலாளர் திருமதி. ஹேவகே, பிரதி பொலிஸ் மா அதிபர், பிரதேச சிங்கள முக்கியஸ்தர்கள், மற்றும் பிரதேச முஸ்லிம் பிரதி நிதிகளும் இதி்ல் கலந்து கொண்டனர்.


பள்ளிவாசலின் உட்பகுதியில் உள்ள பிரசங்க மேடை மற்றும் அல்-குர்ஆன் வைக்கும் அலுமாரி உட்பட பல பொருட்கள் இங்கு சேதப்படுத்தப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.நகரப் பகுதியில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் ரோந்து கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், பள்ளி வாசலைச் சூழ பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.


1962 ஆம் ஆண்டு முதல் இந்தப் பள்ளிவாசல் இங்கு மத வழிபாட்டுக்காக முஸ்லிம்களால் பயன்படுத்தப்பட்டுவந்ததாகவும், சிங்களவர்கள் முஸ்லிம்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்துவருவதாகவும், தேவையற்ற இனப் பிரச்சினையொன்றைத் தோற்றுவிக்க சில சிங்கள கடும் போக்கு வாதிகள், வெளிமாவட்டங்களிலிருந்து அடியாட்களையும், மதகுருமார்களையும் கொண்டு வந்து வெள்ளிக்கிழமை முஸ்லிம்களின் மதக் கடமையினைத் தடுத்தமை பெரும் அநியாயம் என பிரதேசத்தை சேர்ந்த வசந்த பண்டார என்பவர் இங்கு குறிப்பிட்டார்.


இந்தப் பள்ளிவாசல் இலங்கை சட்டத்தின் முஸ்லிம் சிறப்புரிமையின் கீழ் முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதொன்று என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களை பள்ளி நிர்வாக சபை இக்குழு முன் சமர்ப்பித்தனர். இதனையடுத்து அமைச்சர் பௌசி, மற்றும் றிசாத் பதியுதீன் ஆகியோர் பிரதேசத்தில் உள்ள பெரும்பான்மை சமூகத்தவர்களின் கடைகள், மற்றும் வீடுகள் சிலவற்றுக்கு விஜயம் செய்து அவர்களது நிலைப்பாடு குறித்துக் கேட்டறிந்து கொண்டனர்.


முஸ்லிம்கள் தமது பள்ளிவாசலை இங்கு அமைப்பதில் அல்லது அதனை புனரமைப்பு செய்வதில் எந்த ஆட்சேபனையும் தங்களுக்கு இல்லையென்பதைத் தெரிவித்தனர். இதனையடுத்து அமைச்சர்கள் பூட்டப்பட்டிருந்த பள்ளிவாசலைத் திறந்து உள்ளே சென்று சிறிய கூட்டமொன்றினையும் நடத்தினர். அப்போது அமைச்சர் கள் இன்று ளுஹர் தொழுகை முதல் அனைத்து தொழுகைகளையும் நடத்துமாறும் , அச்சம் கொள்ளத் தேவையில்லையென்ற உறுதிப்பாட்டை மக்களுக்கு வழங்கினர்.


இந்த மக்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் குறித்த விபரங்களை ஜனாதிபதி , பிரதமர், அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபை தலைமைத்துவம் என்பவற்றுக்கு விளக்கமளிக்கவுள்ளதாகவும் அம்மக்களிடம் தெரிவித்தனர்.


முஸ்லிம்களின் மதக் கடமைகளை அச்சமின்றி செய்வதற்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை பாதுகாப்பு தரப்பினர் அங்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

புத்தரின் புனித பூமியும் புண்ணியமிழக்கும் செயல்களும்

- எஸ்.எம்.எம்.பஷீர்
"அன்பினால் கோபக்காரனை வெல்,நன்மையால் தீய குணத்தோனை வெல்" தம்மபதம் (பௌத்த நீதி நூல்)


சென்ற ஆண்டு பௌத்த மதம் இலங்கையில் காலூன்றியதாக வரலாற்று தொடர்புபடுத்தப் பட்ட நகரான அனுராதபுரத்தில் உள்ள முஸ்லிம்களின் தைக்கா ஒன்று , துட்டகைமுனுவின் அஸ்தி தூவப்பட்ட புனிதப் பிரதேசத்தில் அமைந்துள்ளதாக "கண்டுபிடிக்கப்பட்டு" சிங்கள ராவய எனும் தீவிரவாத இயக்கம் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட பௌத்த மத தீவிரவாதிகளின் அழித்தொழிப்புக்கு உள்ளானது.

அந்த நினைவுகள் மாறாத நிலையில் மீண்டும் சிங்கள மத தீவிரவாத பரப்புரைகளை மேற்கொண்டு வரும் தம்புள்ளை பிரதேசத்தில் இயங்கும் இலங்கையின் முதல் பௌத்த மத பரப்புரை வானொலியான ரங்கிரி வானொலி மூலம் , அவ்வானொலியின் போஷகராக செயற்படும் ரஜ வன. இனமுல்ல சிறி சுமங்கல தேரோ . விதைத்த தம்புள்ள முஸ்லிம் பள்ளிவாசலுக்கெதிரான நச்சுக் கருத்துக்களை உள்வாங்கிய சிங்கள தீவிரவாத சக்திகள் தம்புள்ளையில் சுமார் ஐம்பது தசாப்தமாக இயங்கி வந்த முஸ்லிம்களின் ஒரே ஒரு பள்ளிவாசலான மஸ்ஜிதுல் ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாயல் சித்திரை மாதம் இருபதாம் திகதி வெள்ளிக்கிழமை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இலங்கையின் பௌத்த மத கலாச்சார நகரங்களில் ஒன்றாக திகழும் தம்புள்ளயில் புனிதப் பிரதேசத்தில் இப்பள்ளிவாயல் அமைந்துள்ளது என்பதை " கண்டுபிடித்து " இப்பள்ளிவாசல் அங்கிருந்து அகற்றப்படல் வேண்டும் என்று தீவிர பிரச்சாரங்கள் சில வாரங்களுக்கு முன்னர் முடுக்கிவிடப்பட்டன. அப்பிரச்சாரங்களை முன்னின்று நடத்திய சிறி சுமங்கல தேரர் பள்ளிவாசல் தகர்க்கப்படல் வேண்டும் என்ற ஆர்ப்பாட்டத்துக்கு தனது ஆளுமைக்குட்பட்ட ரஜ மக விகாரையின் பௌத்த குரு குல மாணாக்கர்களையும், தம்புள்ளையின் தனது பிரச்சாரத்தால் தூண்டப்பட்ட கிராமப்புற சிங்கள தீவிரவாத மக்கள் பலரையும் துணைக்கழைத்து பல்லாண்டு தம்புள்ளையில் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் அடிப்படை மத உரிமையை பறித்தெடுக்க முயற்சித்துள்ளார்கள்.


இந்தியாவில் அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் பொற்கோவில் போல் தம்புள்ளை ரஜ மக விகாரையை அதன் மறு பெயரான “பொற்கோயில்” எனும் அடையாளத்தை முதன்மைப்படுத்தும் செயலிலும் சிறி சுமங்கல தேரர் அக்கறைகாட்டி வருவதும் , தம்புள்ள பௌத்த மத ஆதிக்கத்தினை நிலைபெற செய்யும் ஒரு முயற்சியுமாகும்.


பள்ளிவாசலில் ஜும்மா தொழுகை நடத்தப்படாமலே அங்கிருந்து தொழுகைக்கு கூடிய முஸ்லிம் மக்களை பாதுகாப்புக்கு வந்த பொலிசாரும் விஷேட அதிரடிப்படையினரும் பிரதேச செயலாளரும் வெளியேறுமாறு கூறி பள்ளிவாசல் மீதான ஆர்ப்பட்டக்காரர்களின் உக்கிரமான தாக்குதலிலிருந்து பள்ளியை தற்காலிகமாக சிறிய சேதத்துடன் பாதுகாத்துள்ளார்கள். ஆயினும் தொழுகைக்கு வந்திருந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் பொலிசாரும் அதிரடிப்படியினரும் அங்கிருந்த நிலையிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பள்ளிவாசலுள் சென்று அங்குள்ள மின்விளக்குகளை உடைத்துள்ளார்கள் , அங்கிருந்த குர்ரான்கள் அவைகள் இருந்த இடத்திலிருந்து இடம் மாற்றி வேறிடங்களில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அங்கிருந்த பள்ளிவாசலுடன் தொடர்புபட்ட நபர் இன்று மாலை இக்கட்டுரையாளருக்குத் தெரிவித்தார்.

இவ்வார்ப்பாட்டத்துக்கு அழைப்பு வானொலியில் மட்டுமல்ல துண்டுப் பிரசுரம் மூலமும் விடுக்கப்பதுடன் வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட நேரத்துக்கு தம்புள்ளை பஜாரிலுள்ள கடைகளை மூடி வைக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இது சம்பந்தமாக பள்ளிவாசல் நிர்வாகத்தினர் உட்பட ஜமாஅத்தினரும் கூடி ஆலோசனை செய்ததுடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் உட்பட ஜனாதிபதிக்கும் இச்சூழ்நிலை குறித்து அறிவித்ததாகவும் அது தொடர்பில் சில வாக்குறுதிகளும் வழங்கப்பட்டன. எனினும் கடந்த வியாழக்கிழமை மாலையில் அப்பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் ஜமாஅத்தினரும் அது தொடர்பில் தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் நம்பிக்கையினை மெதுமெதுவாக இழக்கத் தொடங்கினர் . ஆனால் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை நடத்த வேண்டுமென்பதில் உறுதியாக இருந்ததுடன் , அது தொடர்பில் தேசிய ஊடகங்கள் யாவும் மவுனமாக இருப்பதையும் , தங்களின் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர், ஜானக பண்டார , இந்த விவகாரம் தொடர்பில் சுமங்கல தேரருடன் கருத்து முரன்பட்டிருந்ததாலும் , தங்களுக்கு ஆதரவாகவிருந்தும் மிக முக்கிய பொவுத்த மதகுருவுக் கெதிராக செயற்படும் திராணி அவரிடமிருக்கவில்லை.


இலங்கையில் பௌத்த குருமாரின் தாள் படியும் சமூக ஒழுங்கு முறையில் சுயாதீனமாக செயற்படும் நிலையில் பல சிங்கள அரசியல்வாதிகள் , ஆட்சியாளர்கள் தயக்கம் காட்டுவது சாதாரண நிகழ்வே.


பௌத்த தரப்பினரை இது தொடர்பில் தொடர்பு கொண்ட பொழுது , அவர்கள் பள்ளிவாயல் அமைந்திருக்கும் இடம் ராஜ மலைக் கோயில் என்றும் “பொற் (பாறைக்) கோயில் “ என்றும் அழைக்கப்படும் ராஜ மகா விகாரையின் புனித கோயில் எல்லைக்குள் இப்பள்ளிவாசல் அமைந்திருப்பதாகவும் , அதனால் அப்பள்ளிவாசல் அதிகாரமற்ற முறையில் , உரித்துடைமை ஆவணமின்றி அங்கிருப்பதாகவும் ,; அங்கிருந்து அகற்றப்படல் வேண்டும் என்றும் , மாறாக பிறிதோரிடத்தில் பள்ளிவாசலை அமைத்துக் கொள்ளலாம், ரஜ மகா விகாரையின் (தங்கக் கோயிலின்) நிலவுடைமையில் சுமார் மூன்ன்று ஏக்கர் காணி இருந்ததென்றும் , அதிலிருந்தே அரசாங்கம் தம்புள்ள கிரிக்கட் மைதானத்துக்கும் மேலும் சில அபிருத்தி செயற்பாடுகளுக்கும் என , கோயில் நிலங்களை , கோயில் சம்மதத்துடன் பெற்றுக் கொண்டதாகவும் சொன்னார்கள். ஆனால் தம்புள்ளை நகரில் அமைந்திருந்த பள்ளிவாசல் அதிக வணிக தொடர்பாடல்கள் காரணமாக அதிகரித்து செல்லும் முஸ்லிம் பயணிகள் வியாபாரிகள் காரணமாக பள்ளிவாசல் மீள் நிர்மாணம் செய்யப்படுவதுடன் , தாங்கள் ஒருபுறம் காணிகளை எதோ ஒருவிதத்தில் (அரசாங்கத்திற்கு வழங்கியிருப்பினும் ) சுமங்கல தேரருக்கும் , அவரால் தூண்டப்பட்ட சிங்கள தீவிரவாத சக்திகளுக்கும் , பாரம்பரிய பௌத்த புனித பூமியில் பள்ளிவாயல் கண்ணுக்குள் விழுந்த கங்குளாய் உறுத்துவதால் ஏற்பட்ட மத விரோத உணர்வின் செயற்பாடுதான் இந்த பள்ளியுடைப்பு முயற்சி.


பள்ளியை உடைக்கச் சென்றவர்கள் இன்று போய் மீண்டும் திங்கட்கிழமை வருவதாக சொல்லியே சென்றிருக்கிறார்கள். செல்லவும் வேண்டப்பட்டிருக்கிரார்கள் . பள்ளிவாசல் இப்போது அதிகாரபூர்வமாக பூட்டப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தேரர் இது "எங்கள் நாடு" என்று கோஷமிட்டு , சகோதர முஸ்லிம் இனத்தினரின் வணக்கத்தலம் மீது தாக்குதல் நடத்த அணிவகுப்பு செய்ததும் தமது தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தை "பௌத்த உறுமய" ( பௌத்த உரிமை ) என்ற தலைப்பில் காணொளியாக்கி ஒளிபரப்பு செய்ததும் , மதிப்புக்குரிய மதகுருவுக்குரிய செயலே அல்ல.


"அன்பினால் கோபக்காரனை வெல்,; நன்மையால் தீய குணத்தோனை வெல்" - தம்மபதம் (பௌத்த நீதி நூல்) என்ற போதனையிலுள்ள உண்மையை யார் யாருக்கு சொல்வது? இந்த இடைவெளியில் இப்பள்ளிப் பிரச்சினை பற்றி ஒரு சமரசப் பேச்சுவார்த்தை இரு தரப்பினருக்கும் இடையில் நடைபெற உள்ளது. ஆயினும் இந்த பள்ளி தொடர்பில் முஸ்லிம் தரப்பினர் தங்களிடம் இப்பல்லிவாசளுக்கான காணியை ஒருவர் ஆரம்பத்தில் வழங்கியதாகவும் , பின்னர் மேலும் இருவர் அப்பள்ளிவாசலை தேவைகருதி விஸ்தரிக்கும் நோக்கத்துடன் பள்ளியை அடுத்தமைந்த இரண்டு காணிகளை வாங்கி பள்ளிவாயலுக்கு நன்கொடை செய்ததாகவும் , அவை முறையே முஸ்லிம் பள்ளிவாசல்கள் நம்பிக்கை சபையில் வக்பு செய்யப்பட்ட நம்பிக்கை ஆதனங்களாக உள்ளதாகவும் கூறுகின்றனர்.


தொண்ணூறாம் ஆண்டில் தம்புள்ளை நகர கண்டி யாழ்ப்பான வீதியில் மறைந்த முஸ்லிம் காங்கிரசின் தலைவர் எம்.எச்,எம்.அஸ்ரபுடனும் இன்னும் சிலருடனும் இக்கட்டுரையாளர் பயணித்த பொழுது அப்பள்ளிவாசலில் வணிகர்களுடன் நட்புடன் கலந்துரையாடிய நினைவுகளை இன்று அப்பள்ளிக் கெதிராக நடைபெறும் மனித உரிமை மீறும் செயற்பாடுகளுடன் ஒப்பிட்டு மீட்டுப் பார்க்கும் போது மனது சங்கடப்படுகிறது. அப்போது தம்புள்ள பள்ளிவாசல் என்று பெரிதாக அறியாமல் செயற்பட்ட ஒரு சிறு பள்ளிவாசல் , புனித பூமியில் நிலைகொண்டதாக உரிமை கோரப்படாத பள்ளிவாசல் இப்போது ஏன் புதிதாக மத விரோதத்துடன் அங்கிருந்து அகற்றப்படல் வேண்டும் என்று கோரப்படுகிறது. இதன் பின்னணியிலுள்ள மத விரோத செயற்பாடுகள் முஸ்லிம் பள்ளிவாசல்கள் தைக்காக்கள் என்பவற்றுக்கு எதிரானது மட்டுமல்ல , கிறிஸ்தவ மத தேவாலயங்களுக்கும் மின்னேரியா போன்ற இடங்களில் இடம்பெற்றதாக அறியமுடிகிறது.


மத சகிப்புத்தன்மை இன்மையே இந்த நடவடிக்கைகளுக்கு காரணமாகும். இவ்வாறான மத விரோத நிகழ்வுகள் இலங்கையில் ஒன்றும் புதிதல்ல, இவை தொடர் கதையாகவே உள்ளன . கிழக்கில் ,. மட்டக்களப்பில் கள்ளியங்காட்டு பள்ளி அபகரிக்கப்பட்டதும் , அதன் மீது பிரும்ம குமாரி தியான நிலையம் கட்டப்பட்டதும் , சென்ற மாதம் பங்குடாவளி தைக்கா தரைமட்டமாக்கப்பட்டு , தைக்கா இருந்த இடம் கபளீகரம் செய்யப்பட்டதும் என மத வழிபாட்டுத்தலங்கள் ஒரு சமூகத்தினரால , தன்னோடு வாழும் பிற சமூகத்தினர் மீதான ஆதிக்க செயற்பாடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இவ்வாறான குற்றச்சாட்டுக்களை ஹிந்துக்கள் பௌத்தர்கள் மீது கொண்டிருப்பதும் மத இன விரோத செயற்பாடுகள் மூலம் இலங்கையில் வாழும் மக்களை துருவப்படுத்த தொடராக நடைபெற்று வருகின்றன. எனினும் இந்த நெருக்கடிகள் , அடிப்படை மத உரிமை மீறல்கள் எல்லாவற்றையும் தாண்டி சகல சமூகங்களும் பயணிக்க இவ்வாறான சம்பவங்களிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ளவேண்டி உள்ளது. மதத்தின் பெயரால் , அதிகாரத்தின் பெயரால் சட்டத்தை தனது கையிலெடுக்கும் சமுதாய முறைமையை தகர்த்தெறிய , இந்த சம்பவத்தை சமரசமாக தீர்ப்போம் அல்லது சட்டத்தின் முன் நிறுத்துவோம்.


உதாரணமாக சில வருடங்களுக்கு முன்பு பள்ளிக் கானிப் பிரச்சினை ஒன்று கொழும்பு வெல்லம்பிட்டிய பகுதியில் சமரச பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்கப்பட்டது , மறுபுறம் மாளிகாவத்தை (சிங்கள-முஸ்லிம்) மையவாடி பிரச்சினை சட்ட மூலமாக தீர்க்கப்பட்டது. இந்த பள்ளிவாயல் பிரச்சினை எப்படி தீர்க்கப்படப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அடக்கு முறையும் உரிமைப் பறிப்பும் தொடர் கதையாகாமல் இருக்க சமூக அரசியல் பலத்தை மட்டுமல்ல சட்டப் பலத்தையும் பரிசோதிப்போம்.
http://www.bazeerlanka.com/2012/04/blog-post_21.html

பள்ளிவாசலை அகற்ற கோரி, வன்முறை ஆர்ப்பாட்டம் செய்வது ஆணவத்தின் உச்சகட்டம்

- தம்புள்ளை சம்பவம் தொடர்பில் மனோ கணேசன்
தம்புள்ளையில் அமைந்துள்ள பள்ளிவாசல் 60 வருட பழமை வாய்ந்ததது என அங்கு வாழும் இஸ்லாமிய மக்கள் கூறுகின்ற வேளையில், அது பற்றி ஆராய்ந்து பார்க்காமல் அந்த மத வழிபாட்டு தலத்தை சட்ட விரோதமானது என்று சொல்வதும், அதை உடைத்து அகற்ற வேண்டும் என ஆயிரக்கணக்கில் மக்களை கூட்டி வன்முறையை தூண்டும் விதமாக ஆர்ப்பாட்டம் செய்வதும், பெளத்த மத தலைவர்கள் செய்யக்கூடிய காரியம் அல்ல. நடைபெற்றுள்ள சம்பவம் பெரும்பான்மை ஆணவத்தின் உச்சகட்டம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.தம்புள்ளை நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல் உட்பட சில கட்டிடங்களை அகற்றக்கோரி ரங்கிரி தம்புள்ள விஹாரையின் பிரதான தேரர் தலைமையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது, தம்புள்ளையிலிருந்து கந்தலம சந்தி வரையில் நடைபெற்றுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தினால், நகரில் பாதுகாப்புக்காக ராணுவம் கொண்டுவரப்பட வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. ஆர்பாட்டக்காரர்கள் சிலர் பள்ளி வாசலுக்கு உள்ளேயும் நுழைந்துள்ளார்கள். இவை அனைத்தும் பெளத்த துறவிகள் தலைமையில் நடந்தேறியுள்ளன. இவை முற்றுமுழுதாக கண்டிக்கப்பட வேண்டியவை ஆகும்.இந்த இஸ்லாமிய பள்ளிவாசல் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக தம்புள்ள பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார். ஆனால் அது 60 வருட பழமை வாய்ந்தது என அங்கு வாழும் இஸ்லாமிய மக்கள் சொல்கிறார்கள். எனவே உண்மை ஆதாரங்கள் நிதானமாக சீர்தூக்கி பார்க்கப்பட வேண்டும்.மறுபக்கத்தில், வடக்கிலும் கிழக்கிலும் பெருந்தொகையான பெளத்த மத விகாரைகள் இரவோடு இரவாக சட்ட விரோதமாக கட்டப்பட்டு வருகின்றன. இவற்றின் சட்ட விரோத தன்மைக்கு எதிராக தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும், இந்து, இஸ்லாமிய மத தலைவர்களும் மக்களை கூட்டி ஆர்ப்பாட்டம் செய்தால் நிலைமை என்னவாகும் என்ற கேள்வி இங்கு எழுகிறது.

அதாவது, பெளத்த மக்கள் வாழாத பல தமிழ், முஸ்லிம் பகுதிகளில் அரசாங்கம் திட்டமிட்டு பெளத்த மத விகாரைகளை கட்டி வருகின்றது. மறுபக்கத்தில் சிங்கள பகுதிகளில் உள்ள பெளத்தம் அற்ற மத நிறுவனங்களுக்கு எதிராக சட்டத்தின் மூலமும், அடாவடிதனத்தின் மூலமும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.


சட்டம் எல்லா மதத்தவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஆனால் இந்நாட்டில் இன்று அனைவருக்கும் பொதுவான சட்டம் இல்லை. ஆட்சியில் இருப்பது தமது இன, மத தலைமை என்ற ஒரே காரணத்தினாலேயே இந்த ஆணவத்துடன் கூடிய அடாவடித்தனகள் அரங்கேற்றப்படுகின்றன.


அரசுக்கு ஆதரவாக கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்குகூட இவற்றை தடுக்க முடியாத அளவிற்கு நிலைமை மோசமாகி விட்டது. ஆட்சியாளர்களுக்கு துணை போய் கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம் தலைவர்களால் இவற்றை கைகட்டிகொண்டு பார்த்துகொண்டு இருப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாத அளவிற்கு நாடு இன்று அதலபாதாளத்தில் விழுந்து விட்டது. இந்த ஆட்சியின் கீழேயே வரலாற்றில் ஒருபோதும் நிகழாத அளவிற்கு சிறுபான்மை மக்கள் கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதற்கு இது இன்னொரு உதாரணம்.

Monday, April 9, 2012

உள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள்!

முற்குறிப்பு:
இது ஒரு மாற்றுமத சகோதரருடைய ஆக்கமென்பதனால் இஸ்லாமிய வரையறைகளுடன் ஆக்கத்தை அனுகுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


1. உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்:.

நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர்.
நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கே பரிபூரணமான லாஜிக் என தமக்குத் தாமே நம்பிக்கொண்டு யாரெல்லாம் நமது சிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ அவர்களெல்லாம் கண்டிப்பாக விமர்சிக்கப்பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என நினைப்பதாலேயே இவ்வாறு நாம் மற்றவர்களின் பிரச்சனைகளில் அதிகப்படியாக மூக்கை நுழைக்கிறோம். இத்தகைய சிந்தனை தனித்துவத்தின் இருப்பை நிராகரிக்கின்றது. இதன் பயன், கடவுளின் இருப்பை மறைமுகமாக நிராகரிக்கிறது. ஏனெனில், கடவுள் ஒவ்வொருவரையும் அவரவருக்கான தனித்துவம்-தனித்தன்மையுடனே படைத்துள்ளார். மிகச் சரியாக ஒன்று போல் சிந்தித்து ஒன்று போல் செயல்படும் எந்த இரு மனிதர்களையும் காண இயலாது. அவ்வாறு ஆக்கவும் முடியாது. எல்லா ஆணும் பெண்ணும் அவரவர்களுக்கான வழிகளிலேயே செயல்படுகின்றனர்; ஏனெனில், ஒவ்வொருவரினுள்ளும் கடவுள் அவரவரின் வழியிலேயே செல்ல தூண்டுகிறார். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்!


2. மன்னியுங்கள்; மறந்து விடுங்கள்!

மன அமைதிக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாகும். சாதாரணமாக யாராவது நம்மை நோகடித்தாலோ அவமானப்படுத்தினாலோ நமக்குத் தீங்கு விளைவித்தாலோ அவர்கள் மீது தவறான எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்கிறோம். நாம் மனக்குறைப்பாட்டுக்கு நம் மனதை நம்மை அறியாமலே பயிற்றுவிக்கிறோம். இது தூக்கமின்மை, வயிற்று அல்சர் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை உருவாக காரணமாகிறது. இத்தகைய அவமானப்படுத்துதல் அல்லது ரணப்படுத்துதல் ஒரு முறை நிகழ்ந்தால், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்வதால் மற்றவர் மீதான மனக்குறைபாடு நிரந்தரமாகிறது. இந்தத் தவறான பழக்கத்துக்கு முடிவு கட்டுவோம். மிகக் குறுகிய இவ்வாழ்வில் எதற்காக இத்தகைய சிறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மறப்போம்; மன்னிப்போம்; முன் செல்வோம். மன்னிப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் அன்பை வளப்படுத்திக் கொள்வோம்.


3. அங்கீகாரத்திற்காக அலையாதீர்!

இவ்வுலகம் முழுக்க சுயநலவாதிகளே நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களின் சொந்தத் தேவைக்காகவே எப்போதாவது மற்றவர்களைப் பாராட்டுகின்றனர்-புகழ்கின்றனர். அவர்கள் ஒருவேளை இன்று உங்களைப் புகழலாம் - அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால். ஆனால், ஒருவேளை வெகு சீக்கிரத்திலேயே நீங்கள் ஒன்றுமில்லாதவராக ஆகலாம்; அப்போது, உங்களின் சாதனைகளை அவர்கள் மறப்பதோடு, உங்களிடம் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆரம்பிப்பார்கள். இத்தகையவர்களின் அங்கீகாரத்திற்காக கடுமையாக முயற்சி செய்து, உங்களை நீங்களே ஏன் சாகடிக்க வேண்டும்? அவர்களின் அங்கீகாரம் கேடு விளைவிப்பதை விட பெறுமதியானதல்ல! நேர்மையாகவும் நன்னோக்கத்தோடும் உங்கள் வேலையைச் செய்து கொண்டிருங்கள்; அதற்கான அங்கீகாரத்திற்காக ஏங்காதீர்கள்.


4. பொறாமை கொள்ளாதீர்!

வயிற்றெரிச்சல்(பொறாமை) கொள்வது நம் அமைதியான மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதில் நாம் அனைவருமே அனுபவம் உள்ளவர் தான்! உங்கள் அலுவலகத்தில் உடன் பணி செய்பவரை விட நீங்கள் கடின உழைப்பாளி என்பது உங்களுக்குத் தெரியும்; ஆனால், சிலவேளைகளில் அவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்; உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிய உங்கள் தொழிலில் உங்களுக்குக் கிடைத்த வெற்றியை விட பல மடங்கு, தொழில் துவங்கி ஒரு ஆண்டே ஆன உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிடைக்கலாம். இது போன்று நம் தினசரி வாழ்வில் பல உதாரணங்களைக் காணமுடியும். இவற்றுக்காக நீங்கள் பொறாமை-வயிற்றெரிச்சல் கொள்ளலாமா? கூடாது! நினைவில் கொள்ளுங்கள்: ஒருவரின் தினசரி வாழ்வு அவரின் விதியால் பரிணாமம் பெறுவதோடு, அதுவே அவரின் இப்போதைய நிஜமாகவும் ஆகிறது. நீங்கள் பணக்காரராக ஆகவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், இந்த உலகில் எதுவுமே அதனைத் தடுக்க முடியாது. நீங்கள் பணக்காரராக ஆவது விதிக்கப்பட்டிருக்கவில்லையேல், அவ்வாறு ஆவதற்கு எதுவுமே உதவவும் செய்யாது. உங்களின் பேறின்மைக்கு மற்றவர்களைப் பழிப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. பொறாமை-வயிற்றெரிச்சல் உங்களை எங்குமே கொண்டு சேர்க்காது; அது உங்களின் மன அமைதியைக் கெடுப்பது அல்லாமல்!


5. சூழலுக்குத் தகுந்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்!

உங்கள் சுற்றுப்புறத்தை நீங்கள் தனியாக மாற்ற முயற்சி செய்தால் நீங்கள் தான் தோற்றுப்போவீர்கள். அதற்கு மாற்றாக, உங்கள் சுற்றுப்புறத்துக்குத் தகுந்தாற் போல் வாழ உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால், உங்களுக்குத் தோழமையாக இல்லாத அந்தச் சுற்றுப்புறத்தில் கூட அதிசயகரமான மாற்றத்தையும் இனிமையான உங்களுக்கு ஒத்துப்போகும் நிலையையும் காண்பீர்கள்.


6. உங்களால் குணமாக்க முடியாததைச் பொறுத்துக் கொள்ளுங்கள்!

இது தீமையை நன்மையாக்குவதற்கான அருமையான வழியாகும். தினசரி நம் கட்டுப்பாட்டில் இல்லாத எண்ணற்ற தொல்லைகள், நோய்கள், எரிச்சல்கள் மற்றும் விபத்துகளை நாம் சந்திக்கின்றோம். நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ அல்லது அவற்றை மாற்ற இயலாமல் போனாலோ அவற்றை எதிர்கொள்வது எவ்வாறு என்று நாம் கண்டிப்பாக பயில வேண்டும். அவற்றை நாம் மலர்ச்சியாக சகித்துக் கொள்வதைப் பயில வேண்டும். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்; அது பொறுமை, உள்சக்தி மற்றும் மன உறுதியை உங்களுக்கு வழங்கும்.


7. சக்திக்கு மீறிய செயலைச் செய்யாதீர்!

இந்த முக்கியமான தேவையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்தல் நன்று. நாம் அடிக்கடி நம்மால் செய்ய இயலும் அளவுக்கு மீறிய அதிகப்படியான பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறோம். இது நமது தன்முனைப்பு-செருக்கைத் திருப்தி படுத்துகிறது. உங்களின் வரம்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதிகப்படியான கவலைகளை அளிக்கவல்ல அதிகச் சுமைகளை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? உங்களின் புறச்செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொள்வதால் மன அமைதியை அடையமாட்டீர்கள். உலகத்துடனான (பொருள்முதல்வாதத்துடனான) தொடர்பைக் குறைத்துக் கொண்டு, வணக்கங்கள், தியானம், தன்னிலை ஆய்வு போன்றவற்றில் அதிக நேரம் செலவழியுங்கள். இது ஓய்வற்ற உங்கள் மன எண்ணங்களைக் குறைக்கும். சுமைகள் குறைந்த மனம், அதிக மன அமைதியை உருவாக்கும்.


8. ஒழுங்காக தியானம் செய்வதைப் பழக்கமாக்குங்கள்

தியானம் - உள்மன ஆய்வு - மனதுக்கு அமைதி தருவதோடு, தொந்தரவு தரும் எண்ணங்களிலிருந்து விடுவிக்கவும் செய்கிறது. இது அமைதியான மனதின் அதிஉயர் நிலையாகும். தியானம் செய்வதற்குத் தன்னைத் தானே முயன்று பழகிக்கொள்ளுங்கள். தினசரி குறைந்தது அரைமணி நேரமாவது உள்ளார்ந்தமாக தியானம் செய்ய முடிந்தால், உங்கள் மனம் அடுத்த இருப்பத்து மூன்றரை மணி நேரத்துக்கு அமைதியடைவதற்கு உத்தரவாதமே வழங்கலாம். அத்தகைய ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், முன்பு உள்ளதைப் போன்று உங்கள் மனம் அவ்வளவு இலகுவாக தொந்தரவு அடையாது.சிறிது சிறிதாக தியானம் செய்வதன் அளவைத் தினசரி அதிகரித்துக் கொண்டால், அதன் பயனை அடைந்துக் கொள்ளலாம். ஒருவேளை இது உங்களின் தினசரி வேலைகளில் தலையிடுவதாக எண்ணலாம். அதற்கு மாறாக, இது உங்களின் திறமையை அதிகரிக்க வைப்பதோடு, மிகக் குறுகிய காலத்தில் நல்ல விளைவுகளை உருவாக்க உங்களால் முடியும்.


9. உள்ளத்தை வெற்றிடமாக ஒருபோதும் விடாதீர்கள்!

வெற்றிடமான மனம் சாத்தானின் பயிற்சிகளம்! எல்லா தீய பழக்கங்களும் வெற்றிடமான மனங்களிலிருந்தே உருவாகின்றன. உங்கள் உள்ளத்தைச் சில நேர்மறை எண்ணங்களாலும் பயனுள்ள விஷயங்களாலும் நிறைத்து வையுங்கள். சுறுசுறுப்பாக உங்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். உங்கள் விருப்பம் சார்ந்த விஷயத்தில் ஏதாவது செய்யுங்கள். பணமா? அல்லது அமைதியான உள்ளமா? இதில் எது உங்களிடம் அதிக பெறுமதியானது என்பதைக் கண்டிப்பாக நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். சமூகப்பணி அல்லது மதப்பணி போன்ற உங்களின் பொழுதுபோக்குகளில் பெரும்பாலும் நீங்கள் அதிகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால், நீங்கள் மனநிறைவையும் சாதித்த திருப்தியையும் அடைய முடியும். உடல் ஓய்வு எடுக்கும் நேரங்களில் கூட, ஆரோக்கியமான வாசிப்பிலும் கடவுளின் பெயரை உளப்பூர்வமாக கண்ணை மூடி உச்சரிப்பதிலும் உங்கள் உள்ளத்தை நிறைத்துக் கொள்ளலாம்.


10. தள்ளிப்போடாதே; எதற்கும் வருந்தாதே!

"இது என்னால் முடியுமா? முடியாதா?" என்று பெரிதாக எண்ணி காலம் கடத்தி நேரத்தை வீணாக்காதீர்கள். இத்தகைய பயனற்ற மனப்போராட்டங்களால் நாட்கள், வாரங்கள், மாதங்கள் சிலவேளை வருடங்கள் கூட வீணாகலாம். உங்களால் போதுமான முழு அளவுக்குத் திட்டமிட்டுக் கொள்ள முடியாது. ஏனெனில், எதிர்காலத்தில் நடப்பதை உங்களால் ஒருபோதும் முன்பே பூரணமாக உணர்ந்து கொள்ள முடியாது. உங்கள் நேரத்தின் மதிப்பை உணர்ந்து, முடிக்க வேண்டியவைகளை யோசித்துக் கொண்டிராமல் உடனடியாக செய்யத் துவங்குங்கள். முதல் முறை நீங்கள் தோல்வியடைவது விஷயமேயில்லை. நீங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் பயின்று அடுத்த முறை நீங்கள் பரிபூரணமான வெற்றியடையலாம். சாய்ந்து உட்கார்ந்து கவலை கொண்டிருப்பது எதற்கும் பயன் தராது - மன அமைதியைக் கெடுப்பதைத் தவிர. உங்களின் தவறுகளிலிருந்து பாடம் பயிலுங்கள்; ஆனால் ஒருபோதும் கடந்து போனதை நினைத்து வருந்தி ஏங்காதீர்கள். எதற்கும் வருத்தமடையாதீர்கள். எது நடந்ததோ அது நடப்பதற்குரிய விதியின் வழியில் நடந்து முடிந்தது. கிடைக்காத பாலுக்கு ஏன் அழ வேண்டும்?


- வாசகர்: இளைய வைகை

நன்றி : இந்நேரம்.காம்

What is Vertigo?

Vertigo is a disease, which occurs due to the patient having problems in the posterior semicircular canals of the inner ear. Medically known as the vestibular labyrinth area of the ear. A patient suffering from vertigo will suffer an abnormal sensation that causes them to feel as thought their surrounding environment is continuously spinning, whirling or moving. As a result of this, the vertigo patient suffer loss of balance or a sensation of nausea that may grow acute.


Common Causes of Vertigo

Due to the free-floating calcium carbonate crystals in the posterior semicircular

Canal An infection in the ear fore example syphilis

Vision problems

Acute head injury

Cardiac conditions

Brain tumors

Thyroid disease

Anemia

Calcium disorders

Motion sickness

Insufficient blood supply to brain

High blood pressure

High cholesterol

Diabetes


Home Remedies for Vertigo
Tip 1:
Soak 2 tbsp wheat grain, 1 tsp poppy seeds (khus-khus), 8 almonds, 8 water melon seeds and make a paste. Heat 1 tsp ghee fry 2 cloves in this add to the paste mix with milk and drink everyday for a week.
Tip 2:
Soak 1 tsp of alma (gooseberry) powder along with 1 tsp coriander seeds. Leave over night. Strain and add 1/2 tsp sugar and drink.

Thanks: Engr.Sulthan

Did you know ? • Did you know the rarest type of diamond is green

 • Did you know MasterCard was originally called MasterCharge

 • Did you know the US flag has 13 stripes (representing the original 13 states)

 • Did you know the first city to reach 1 million was London

 • Did you know men are stuck by lightning 7 times more than women

 • Did you know Tokyo was once known as Edo

 • Did you know women make up 49% of the worlds population

 • Did you know the tea bag was invented in 1908

 • Did you know carrots contain 0% fat

 • Did you know 1 billion snails are served in restaurants each year

 • Did you know plastic bottles were first used for soft drinks in 1970

 • Did you know the $ sign was introduced in 1788

 • Did you know the meaning of 'Blue Chip' comes from blue casino chips which have a high value

 • Did you know DVDs are physically the same size as a CDs but can store 13 times more data

 • Did you know the term 'disc jockey' was first used in 1937

 • Did you know hot water freezes quicker than cold water

 • Did you know sound travels 3 times faster through water than in air

 • Did you know the average soccer ball is made up of 32 leather panels and held together by 642 stitches

 • Did you know soccer is the most followed sport

Thanks: Engr.Sulthan

Friday, April 6, 2012

இலக்கியமற்ற இன்ப கீதம்!

என் செல்லக் குழந்தைகளின்
தெவிட்டாத சிரிப்பொழி
எதுகை மோனையற்ற தேனிசை!

கல்லம் கபடமற்ற
கலைச் சொற்ரொடர்
இலக்கியமற்ற இன்ப கீதம்!

ஒன்றரை வருடக் குழந்தையின்
ஒவ்வொரு வார்த்தைகளும்
அறுந்து விழும் அமுதக் கவிதை!

நளை பற்றிய கவளையற்ற
நகர்வுகள்தான் அவர்கள் வாழ்க்கை- ஆனால்
நாமோ அவதிப்படுவதெல்லாம் நாளைக்காய்த்தான

- அபூ அரீஜ்

Wednesday, April 4, 2012

அராஜகத்தை எதிர்த்து அமெரிக்கப் பல்கலைக்கழக மாணவர்கள் வெளிநடப்பு

நிவ்ஜெர்ஸி: அமெரிக்காவின் மிகப் பிரபலமான ருட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் மாணவர் செயற்பாட்டு மையம் ஒழுங்குசெய்திருந்த ஒரு கருத்தரங்கில், இரண்டு இஸ்ரேலிய இராணுவச் சிப்பாய்கள், காஸா மீதான இஸ்ரேலின் சட்டவிரோத முற்றுகையையும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம் பலஸ்தீன் மக்களுக்கு இழைத்துவரும் வன்கொடுமைகளையும் நியாயப்படுத்தி உரையாற்ற முற்பட்டபோது கோபம் கொண்ட அமெரிக்கப் பல்கலைக்கழக மாணவர்கள் எழுந்து, கருத்தரங்கு மண்டபத்தை விட்டு வெளிநடப்புச் செய்தார்கள். வேறு சிலர், தனது உரையைத் தொடர்ந்த இஸ்ரேலிய இராணுவச் சிப்பாயை நோக்கி, "ஸியோனிசக் கொலை வெறியர்களைக் கொண்ட இராணுவத்தில் சேர்வதை நீர் ஏன் எதிர்த்துப் போராடவில்லை?" என்று சத்தமிட்டுக் கத்தினார்கள்.

தமது வெளிநடப்பைத் தொடர்ந்து எதிர்ப்புப் பேரணியொன்றில் பங்குபற்றிய மேற்படி அமெரிக்க மாணவர்கள், ஸியோனிஸ அரசின் போர்க் குற்றங்களைக் கண்டிக்கும் சுலோகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றார்கள்.

காஸாவிலும் மேற்குக் கரையிலும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர்களும் அவர்களின் வயதும் எழுதப்பட்ட பதாதைகளையும் மாணவர்கள் தமது கைகளில் ஏந்திச் சென்றார்கள். அக்குழந்தைகளின் பெயர்களை அடுத்து "மௌனமாக்கப்பட்டவர்கள்" என்று தடித்த எழுத்தில் பொறிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அமெரிக்கத் தெருக்களின் வழியே சென்ற மாணவப் பேரணியாளர்கள், ஆக்கிரமிப்பு இஸ்ரேலுக்கும் அதன் அராஜகங்களுக்கும் எதிரான சுலோகங்களை முழங்கியதோடு, பலஸ்தீன விடுதலைக்கு ஆதரவாகக் கிளர்ந்து எழ முன்வருமாறு அமெரிக்க மக்களுக்கு அழைப்பு விடுத்துக் கோஷமிட்டனர்.


இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிகாரத் தரப்பு வழங்கிவரும் எத்தகைய நிபந்தனைகளும் அற்ற முழுமைமையான ஆதரவினால், சர்வதேச உலகில் அமெரிக்காவின் நற்பெயருக்குப் பெரும் களங்கம் ஏற்பட்டுள்ளது என்று தற்போது அனேகமான அமெரிக்கர்கள் நம்புகின்றனர்; அத்துடன், அமெரிக்காவின் இளம் தலைமுறையினர் தற்போது இந்த நிலைமை குறித்து அதிக விழிப்புணர்வு பெற்று வருகின்றனர் என்பதையே மேற்படி எதிர்ப்புப் பேரணி நமக்கு உணர்த்துகிறது என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தேங்க்ஸ்: www.inneram.com

குர்ஆன் கூறும் கால்நடைகளும் பால் உற்பத்தியும்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது, அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம். அல்குர்ஆன் 16:66

இந்த இறைவசனத்தின் முதல் பகுதியில் கால்நடைகளிடம் தக்க படிப்பினை உள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். இங்கு படிப்பினை என்பதை ஆராச்சி என்ற கோணத்தில் பார்க்க வேண்டும். இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள அல்லாஹ் ஐந்து விஷயங்களை (குளு) முன்வைக்கிறான் அவைகளாவன.

1) கால்நடைகளின் வயிற்றுப்பகுதி
2) வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்ததிற்கும் இடையில்
3) கலப்பற்ற பால்
4) அருந்துபவர்களுக்கு இனிமை
5) தாராளமாக புகட்டுகிறோம்

மேற்கண்ட ஐந்து ஆராய்ச்சிகளில் முதல் இரண்டை பார்ப்போமா?
1. கால்நடைகளின் வயிற்றுப்பகுதி
2. வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்ததிர்ற்கும் இடையில்

பொதுவாக உயிரினங்களுக்கு வயிற்றுப்பகுதி என்ற அமைப்பு இருக்கும் இங்குதான் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகி அந்த செரிமானமாகிய உணவு புரதச்சத்தாக மாறி இரத்தத்தில் கலநது நமக்கு உடல் வலிமையைத் தருகிறது ஆனால் இந்த வயிற்றுப்பகுதி ஒருசில கால்நடைகளுக்கு அதாவது பசுமாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள் மற்றும் மான்கள் ஆகியவற்றிற்கு மட்டும் தனியாக அமைந்து அவை மனிதனுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது.


உதாரணமாக பசுமாட்டை இங்கு ஆராய்வோம்.

பசுமாடும் அதன் வயிற்றுப் பகுதியும்
பசுமாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள் மற்றும் மான்கள் ஆகிய கால்நடைகளுக்கு அதன் வயிறுப்பகுதி நான்கு தனித்தனி அறைகளாக அமைந்துள்ளன அவைகளாவன
RETICULUM (ரெடிகுழம்)
RUMEN, (ரூமென்)
OMASUM, (ஓமசம்)
ABOMASUM (அபோமசம்)

இங்கு குறிபிடத்தக்க அம்சம் என்னவெனில் மேற்கண்ட கால்நடைகளுக்கு மட்டுமே அமைந்துள்ள இந்த 4 அடுக்கு பகுதிகள் பன்றி முதலான மற்ற மிருகங்களுக்கு கிடையாது என்பதே!.

பசுமாடும் அதன் உணவு உட்கொள்ளும் முறையும்
பசுமாடு புல்வகைகளை உணவாக விழுங்குகிறது அந்த விழுங்கிய உணவு நேரடியாக ரூமென் மற்றும் ரெடிகுழம் பகுதிக்கு சென்று சேமிக்கப்படுகிறது பிறகு பசுமாட்டிற்கு உண்ட கலைப்பு ஏற்பட்டு அமைதியாக அமர்ந்து விடுகிறது.
சேமிக்கப்பட்ட உணவை ரெடிகுழம் என்ற பகுதி அதன் மற்ற இரு பாகங்களான RUMEN, (ரூமென்) OMASUM, (ஓமசம்) என்ற பகுதிகளுக்குள் தள்ளிவிடுகிறது.

அமைதியாக அமர்ந்திருக்கும் பசுமாட்டிற்கு மீண்டும் உணவுப் பசி எடுக்க ஆரம்பிக்கிறது உடனே புல்வெளியை நாடிச் செல்லாமல் தான் வயிற்றில் சேமித்து வைத்த உணவு மீண்டும் வாய்ப் பகுதிக்கு இழுத்து பசுமாடு அசை போட ஆரம்பிக்கிறது. இந்த இயக்கத்திற்கு ரெடிகுழம் பயன்படுகிறது இதன் மூலம் முதல் முறையாக உட்கொண்ட உணவு மீண்டும் பசுமாட்டின் வாய் பகுதிக்கு செலுத்தப்பட்டு நன்றாக மீண்டும் ஒருமுறை அசை போட முடிகிறது.

பசுமாடு உட்கொண்ட உணவை சுத்திகரிக்கும் முறை
பசுமாடு மறுசுழற்சி முறையில் அசைபோட்ட உணவை அதன் வயிற்றுப்பகுதியான ரூமென் என்ற அறைக்குள் தள்ளப்படுகிறது இங்கு பல மில்லியன் மைக்ரோப்ஸ்-கள் அடங்கியுள்ளன இந்த மைக்ரோப்ஸ்கள் அசைபோட்டு நான்றாக அரைத்த உணவில் செரிமானம் செய்ய முடியாத கடினமான பகுதியை கூட மிக எளிதாக செரிமானம் செய்ய பயன்படுகிறது.

பிறகு செரிமானம் ஆன உணவு ஓமசம் என்ற அறைக்கு சென்றடைகிறது. இந்த ஓமசம் பகுதியைப் பற்றி அறிவியல் உலகம் முழுவதுமாக இன்னும் ஆராய்ந்து முடிக்கவில்லை எனினும் தோராயமாக ஆராய்ந்து பார்த்ததில் உட்கொண்ட உணவை சிறு சிறு துகள்களாக ஒரே சீராக மாற்ற இந்த பகுதி பயன்படுகிறது என்று நம்பப்படுகிறது.

செரிக்கப்பட்ட உணவு இரத்தித்தில் எவ்வாறு கலக்கிறது!
பசுமாட்டின் வயிற்றிலுள்ள இறுதிப் பகுதியான அபோமசம் என்பது மற்ற பிராணிகளின் வயிறுகளை ஒத்து அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள ஹைட்ரோகுளோரிக் திரவம் ரூமென் பகுதில் செரிமானத்திற்கு பயன்படுகின்ற மைக்ரோப்ஸ்களை அபோமசம் அறைக்குள் நுழையாமல் தடுப்பதற்கும் அவ்வாறு நுழையும்பட்சத்தில் அவைகளை அழிக்கவும் பயன்படுகிறது.

மேலும் இந்த அபோமசம் பகுதியில் சேகரிக்கப்பட்ட அசைபோட்ட உணவுகள் சிறுகுடல் பகுதிக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள மைக்ரோபியல் எனப்படும் செல் கட்டமைப்புகளால் முழுவதுமாக ஜீரணமான செய்யப்படுகிறது. புரதச் சத்துக்களான அமினோ ஆசிட் மற்றும் விட்டமின்கள் உருவாக இந்த பகுதியே பயன்படுகிறது. பிறகு முழுவதும் ஜீரணமான உணவு நேரடியாக இரத்தில் கலந்துவிடுகிறது!

இரத்தத்திலிருந்து எவ்வாறு பால் உற்பத்தியாகிறது?
பசுமாடுகளின் உடலில் உள்ள செல்கள் இரத்தத்திலிருந்து நீரையும் ஊட்டச் சத்துக்களையும் அகற்றி அகற்றப்பட்ட அந்த நீரையும் ஊட்டச்சத்தையும் பாலாக மாற்றுகிறது. இந்த பால் பசுமாடுகளின் மடிகளின் வாயிலாக வெளியேறுகிறது. அதைத்தான் நாம் இனிமையாக பருகுகிறோம்.

மேற்கண்ட ஐந்து ஆராய்ச்சிகளில் இறுதியான மூன்றை பகுதியை பார்ப்போமா?
3. கலப்பற்ற பால்
4. அருந்துபவர்களுக்கு இனிமை
5. தாராளமாக புகட்டுகிறோம்

கலப்பற்ற பால்
ஒரு மனிதனுக்கு ஊட்டச்சத்துக்களில் புரோட்டீன், கால்சியம் ஆகியவை இன்றியமையாமையாதவையாக உள்ளன. இவைகள் பசும் பாலில் அதிகமாக காணப்படுகின்றது. கால்சியம் எலும்பு நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

பசும்பாலில் விட்டமின் ஏ, பி12, தையாமின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளது.

பசும்பாலில் தயாரிக்கப்படும் வெண்ணெய், நெய் போன்றவைகளில் கால்சியம் உள்ளதால் இது மனிதனின் தற்காப்பு சிஸ்டம் அதாவது IMMUNE SYSTEM-ஐ மேம்படுத்துகிறது.

உறங்குவதற்கு முன் 1 கிளாஸ் பால் அருந்திவிட்டால் அழகிய தூக்கம் கூட வருகிறதாம்.

அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் கலப்பற்ற பால் என்று கூறுவதன் மூலம் அந்த பாலில் எப்படிப்பட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன என்பதை சிந்திக்க வலியுறுத்துகிறான் ஆனால் மனிதன் அந்த பாலில் தண்ணீரை ஊற்றி கலப்படம் செய்து விற்கிறான். இஸ்லாம் கலப்படத்தை வண்மையாக கண்டிக்கிறது!


பால் பற்றி கூறும்போது அல்லாஹ் அதை அருந்துபவருக்கு இனிமை என்று வர்ணிக்கிறான் மேற்படி ஆய்வுகளை பார்த்தால் பால் எவருக்குத்தான் கசக்கும்.

தாராளமாக புகட்டுகிறோம்
இங்கு அல்லாஹ் பால் பற்றி குறிப்பிடும் போது இறுதியாக தாராளமாக புகட்டுகிறோம் என்று கூறுகிறான் காரணம் அவன் படைத்த ரப்புல் ஆலமீன் அவன் கூறுவது எப்போதும் பொய் ஆகாது என்று இந்த கருத்தின் மூலம் நாம் அறிய வேண்டும்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று ஒரு பழமொழி உள்ளது அந்த பழமொழியின் அடிப்படையில் இந்த வார்த்தை உண்மை என்பதை நிருபிக்க இந்தியா நாட்டின் பால் உற்பத்தியை அளவுகோளாக பயன்படுத்தி பார்ப்போமா?


இந்தியாவின் பால் உற்பத்தி
ஆண்டுபால் உற்பத்திமக்கள் தொகை
196821 மில்லியன் டன்கள்குறைவு
200181 மில்லியன் டன்கள்அதிகம்

மக்கள் தொகை பெருக பெருக பாலின் உற்பத்தியும் பெருகி வருகிறது மாறாக பாலின் உற்பத்தி குறைந்தபாடில்லை. இந்தியாவிற்கு அடுத்தபடியாக அமெரிக்க நாடு ஆண்டுக்கு சராசரியாக 71 மில்லியன் டன்கள் பால் உற்பத்தியை மேற்கொள்கிறது.

பாலின் உற்பத்தியை 1998ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி உலக நாடுகள் முழுவதையும் கணக்கிட்டுப் பார்த்தால் ஆண்டுக்கு சராசரியாக 557 மில்லியன் டன்கள் குறைவில்லாமல் பால் உற்பத்தியாகிறது.

சிந்தித்துப்பாருங்கள்
அல்லாஹ்வின் கருணையினால் பால் என்ற இனிமையான பானத்தை நாம் குடிக்கிறோம் ஆனால் இந்த பாலை குடித்துவிட்டு கருணையாளன் அல்லாஹ்வை இணைவைத்து ஒரு சாராரும், அல்லாஹ்வைத் தவிர்த்து பிற வஸ்துக்களை ஒரு சாராரும் வணங்கி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் அல்லாஹ் கோபப்பட்டு பசுமாடுகள் உட்பட பால் கொடுக்கும் கால்நடைகளின் வயிறுகளில் பால் சுரக்காமல் இருக்க கட்டளையிட்டுவிட்டால் நிலைமை என்னவாகும் என்பதை ஒருகனம் சிந்தித்தப்பாருங்கள்! ஆனால் ரஹ்மத்துல் ஆலமீன் மக்கள் மீது கருணையுள்ளம் கொண்டவனாக இருக்கிறான் அதனால்தான் மனிதனை விட்டுப்பிடிக்கிறான். அவன் பிடியிலிருந்து தப்பிக்க எவருக்கேனும் வலிமை உள்ளதா?
சிந்திப்பீர்! செல்படுவீர்!


மறுமை வெற்றிக்காக இணைவைப்பை தவிர்த்திடுங்கள்
அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடும் மூமின்களாக இறை விசுவாசிகளாக மாறிவிடுங்கள்!
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

நன்றி:அல்குரானும் அறிவியலும் Blogspot
Engr.Sulthan