Wednesday, May 27, 2009

நபிமொழி

இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரான் ஆவான். அவர் மற்றவருக்கு அநீதி இழைக்க வேண்டாம். அவரை ஆதரவற்றவராக விட்டு விட வேண்டாம். தன் சகோதரனின் தேவையை ஒருவன் நிறைவேற்றுபவனாக இருந்தால், அவனது தேவையில் (உதவிட) அல்லாஹ் இருப்பான். ஒரு முஸ்லிமின் கஷ்டத்தை (இவ்வுலகில்) ஒருவன் நீக்கி வைத்தால், மறுமையில் பல கஷ்டங்களில், ஒரு கஷ்டத்தை அவனை விட்டும் அல்லாஹ் நீக்கி வைப்பான். ஒரு முஸ்லிமின் குறையை (இவ்வுலகில்) மறைத்தால், மறுமை நாளில், அல்லாஹ் அவனது குறையை மறைப்பான் ' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்). ( ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபூஹூரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: 'நிச்சயமாக அல்லாஹ், உங்களின் உடல்களையோ, உங்களின் தோற்றங்களையோ பார்க்கமாட்டான். எனினும் உங்களின் இதயங்களையும், உங்களின் செயல்களையும் பார்ப்பான்' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்). ( ரியாளுஸ்ஸாலிஹீன்)

No comments: