Saturday, December 19, 2009

நபிமொழி

முஆத் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து, முஆதே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உன்னை நான் பிரியப்படுகிறேன். மேலும் முஆதே! உனக்கு உபதேசம் செய்கிறேன். நீ ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் அல்லாஹும்ம அஇன்னீ அலாஃ திக்ரிக வஷுக்ரிக, வஹுஸ்னி இபாததீக'' என்று கூறுவதை விட்டு விடாதே!' என்று கூறினார்கள். (அபூதாவூது, நஸயீ)

துஆவின் பொருள்: இறைவா! உன்னை நினைவு கூரவும், உனக்கு நன்றி கூறவும், உன்னை அழகிய முறையில் வணங்கவும் எனக்கு உதவி செய்வாயாக! (ரியாளுஸ்ஸாலிஹீன்: 384) அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''அல்லாஹ், தன் அடியான் ஒருவனை விரும்பி விட்டால், ஜிப்ரீல்(அலை) அவர்களை (அழைத்து) நிச்சயமாக அல்லாஹ், இன்ன மனிதரை விரும்புகிறான். அவனை நீயும் விரும்பு!'' என்று கூறுவான். ஜிப்ரீல்(அலை) அவனை விரும்புவார். அவர் வானத்தில் உள்ளோரிடம் ''நிச்சயமாக அல்லாஹ், இன்னாரை விரும்புகிறான். எனவே அவரை நீங்களும் விரும்புங்கள்'' என்று கூறுவார். வானில் உள்ளோரும் அவனை விரும்புவார்கள். பின்பு பூமியில் அவரை (எல்லோரும் விரும்பிட) ஒப்புதல் ஏற்படுத்தப்படும்'' (பூமியில் உள்ளவர்களும் நேசிப்பர்)என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 387)

அபூஅப்துல்லாஹ் என்ற தாரிக் இப்னு உஷைம் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''லாயிலாஹ இல்லல்லாஹ்'' என்று ஒருவர் கூறி, அல்லாஹ் அல்லாதவற்றை வணங்கப்படுவதை வெறுத்தால், அவனது சொத்தும், அவனது ரத்தமும் (உயிரும்) பாதுகாப்புப் பெறும். அவனது கேள்வி கணக்கு, அல்லாஹ்விடம் உள்ளது என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 391)

No comments: