அபூ மாலிக் அல் அஷ்அரி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: தூய்மை (ஈமான் எனும்) நம்பிக்கையின் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் தராசை நிரப்புகிறது. ஸ{ப்ஹானல்லாஹி வல் ஹம்து லில்லாஹ் வானங்களுக்கும் பூமிக்கும் மத்தியிலுள்ள இடைவெளியை நிரப்புகிறது. தொழுகை ஒளியாகும். தர்மம் ஆதாரமாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உனக்குச் சாதகமான அல்லது பாதகமான ஆதாரமாகத் திகழ்கிறது!. ஒவ்வொரு மனிதரும் காலையில் (தத்தம் பணிக்காகச்) செல்கின்றனர். தமது ஆன்மா தொடர்பான வியாபாரத்தை மேற்கொள்கின்றனர். அதற்கு விடுதலை பெற்றுத் தருகின்றனர் அல்லது அதை அழிவுக்கு உள்ளாக்குகின்றனர்!" (நூல்: முஸ்லிம்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment