Showing posts with label இஸ்லாத்தை நோக்கி.... Show all posts
Showing posts with label இஸ்லாத்தை நோக்கி.... Show all posts

Tuesday, March 15, 2011

குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு அண்ணல் நபியின் அழகிய வழிகாட்டல் (ebook & ibook)



Download Center- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)

இஸ்லாமிய நெறியில் குழந்தை வளர்ப்பு எனும் போது அவர்களது லௌகீக நலன் நாடியஆளுமைகள் மட்டுமன்றி, அவர்களின் ‘ஹிதாயத்’ எனும் ஆன்மிக ஆளுமை விருத்தியும் நோக்கமாகக் கொள்ளப்படும். இந்த வகையில் குழந்தைகளின் ஆன்மிக-லௌகீக முன்னேற்றத்திற்கு நபி(ஸல்) அவர்கள் கொடுத்த முக்கியத்துவம், அதற்காக அவர்கள் காட்டிய வழிமுறைகளை இங்கே சுருக்கமாகத் தொகுத்துத் தர விரும்புகின்றோம்.

மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும்.
Download (PDF) ebook for PC and ipad (http://www.islamkalvi.com/portal/?p=5269)
Download ibook for iphone and ipod (http://www.islamkalvi.com/portal/?p=5269)

பேரழிவுகளும் பாவமன்னிப்பும்

நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள் அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை -நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (திருக்குர்ஆன் 8 : 25)

Photo of evacuation sign


பேரழிவுகள் ஏன்?


அல்லாஹ்வை புறக்கணித்து, அவன் வல்லமையை மறந்து, பல பாவங்களையும் புரியும் நன்றிகெட்ட மனிதர்கள் இப்பூமியில் வாழும்போது, இயற்கை சீற்றங்களான புயல், சூறைக்காற்று, நில நடுக்கம், வெள்ளப் பெருக்கு, சுனாமி, எரிமழை தாக்குதல் போன்றவற்றால் அல்லாஹ்வின் கோபச் சோதனையை எதிர்பாருங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் செய்த முன்னறிவிப்பு

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்

பொதுச் சொத்து தன் சொத்தைப் போல பாவிக்கப்படும் போது,

போரில் கிடைக்கப்படும் அமானிதம் (கனீமத்) தன் பங்குப் பொளாகக் கருதப்படும் போது,

ஜகாத் கடன் கொடுப்பதைப் போன்று கடினமாகக் கருதப்படும் போது,

தீனுடைய நோக்கமின்றி கல்வி கற்பிக்கப்படும் போது,

கணவன் தன் மனைவிக்கு அடிபணிந்து வாழும் போது,

பெற்ற தாய் தன் மக்களால் வேதனை செய்யப்படும் போது,

தனது நண்பனை தனக்கு நெருக்கமாக்கி, பெற்றெடுத்த தந்தையை புறக்கணிக்கும் போது,

அல்லாஹ்வின் பள்ளிவாயில்களில் சப்தங்கள் உயர்த்தப்படும் போது,

ஒரு கூட்டத்தினருக்கு அவர்களில் உள்ள தீயவன் தலைவனாகும் போது,

ஒரு கூட்டத்திலுள்ள இழிவானவன் கண்ணியமானவனாகவும், கண்ணியமானவர் அவர்களில் மிக இழிவானவராகக் கருதப்படும்போது,

ஒரு மனிதனுடைய தீமைக்குப் பயந்து அவனுக்கு கண்ணியமளிக்கப்படும் போது

ஆடல் பாடல்களில் ஈடுபடும் பெண்களும், இசைக்கருவிகளும் அதிகரிக்கும் போது,

மதுபானங்கள் தாராளமாக அருந்தப்படும் போது,

இந்த உம்மத்தில் பின்னால் வருகிறவர் முன் சென்றவர்களைச் சபிக்கும் போது

இத்தகைய காரியங்களெல்லாம் ஏற்படுகிற காலத்தில் சிவந்த நிறமான காற்றையும், நில நடுக்கத்தையும், பூமிக்குள் அழுத்தப்படுவதையும், உருவமாற்றம் நிகழ்வதையும், கல்மாரி பொழிவதையும் நூலருந்த மணிகள்போல் ஒன்றன்பின் ஒன்றாக பல வேதனைகளை எதிர்பாருங்கள். அறிவிப்பவர் : அபூஹூரை (ரழி) நூல் : திர்மிதி

எனினும், இதன்பிறகு (இவர்களில்) எவரேனும் (தம் பாவங்களை உணர்ந்து) மன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொள்வார்களானால், (மன்னிப்புக் கிடைக்கக் கூடும்;) நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், அளப்பெருங் கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 3 : 89)

நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திக் கொண்டும், அவன் மீது நம்பிக்கை (ஈமான்) கொண்டும் இருந்தால், உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 4 : 147)


பாவமன்னிப்பு


தவ்பா (பாவமன்னிப்பு) செய்யும் போது தூய மனதுடன் இனி அத்தகைய பாவங்களில் ஈடுபடமாட்டேன் என்ற உறுதியான எண்ணத்துடன் அல்லாஹ்விடம் மட்டுமே பிராத்திக்க வேண்டும்.

நம் பாவமன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கையுடன் அல்லாஹ்விடம் மன்றாடும் போது நாம் அடையும் சோதனை மற்றும்

வேதனைகளிலிருந்தும் துன்ப துயரங்களிலிருந்தும் நாம் மீட்சி பெற இயலும்.


பாவமன்னிப்பு கோரல் பற்றி திருக்குர்ஆன்


ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழே ஆறகள் (சதா) ஓடிக் கொண்டே இருக்கும்; (தன்) நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான் (திருக்குர்ஆன் 66 : 8)

......''எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்'' என்று கூறினார்கள். (திருக்குர்ஆன் 7 : 23)

''எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! ....'' (திருக்குர்ஆன் 2 : 186)

மேலும், ''எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! ....'' (திருக்குர்ஆன் 3 : 147)

.... ''எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்'' (திருக்குர்ஆன் 23 : 109)


Source : http://www.ottrumai.net/TArticles/34-CalamitiesNSeekingPardon.htm

Wednesday, March 9, 2011

பொருளாதார உலகின் எய்ட்ஸ் - வட்டி


1920 களில் ஒரு பொருளாதார மந்த நிலை தோன்றியது அதன் தாக்கம் 10 வருடங்கள் தொடர்ந்தன, ஆனால் இன்றைய பொருளாதார பாதிப்பானது அதை விட பயங்கரமானதாக இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

2015ம் வருடம் பஞ்சம் தோன்றும் என்றும் அதனால் மிகப்பெரிய அளவில் உலகில் உணவிற்கான பிரச்சினைகள் வரும் என்று UNO என்ற அமைப்பு எச்சரித்துள்ளது.

இது போன்ற பிரச்சினைகள் அனைத்து சமூகங்களையும் பாதித்திருக்கிறது, இதற்கான காரணங்களாக சொல்லப்படுவது "High Risk Investment" என்ற அபாயம் கூடிய முதலீடுகள்.

மனிதன் பொருளாதாரம் தேடும் இயந்திரமாக, ஒரு விலங்காக பொருளாதாரத்தை தீவிரமாக தேடும் போக்கினாலும், வியாபாரத்தை Gambling என்ற நிலைக்கு கொண்டுவந்ததன் காரணத்தால் ஏற்பட்டதுதான் இந்த உலக பொருளாதார மந்த நிலை.

அதாவது வேகமாக பொருள் தேடவேண்டும் உடனடியாக தேடவேண்டும் என்ற நிலை. அதுமட்டுமல்லாமல் அதிக அளவில் கொடுக்கப்பட்ட கடன்கள்,
No income, No job, No Assets, அதாவது வேலை தேவையில்லை, வருமானம் தேவை யில்லை, சொத்துக்களும் தேவையில்லை ஆனால் கடன் கிடைக்கும் என்ற ரீதியில் தாறுமாறாக கொடுக்கப்பட்ட கடன்கள் திரும்பி வரும் வழி தெரியாமல் மாட்டிக் கொண்ட பணம், அதனால் திவாலான நிதி நிறுவனங்களில் தொடங்கி ஆரம்பிக்கிறது இந்த உலக பொருளாதார மந்த நிலை.

அனைத்தும் கடன் மயம், கடனை வாங்கி கடனை விற்பது, கட்டட நிர்மாணத்திற்கு கொடுக்கப்பட்ட வரா கடன்கள் அதாவது கற்பனையை அடிப்படையாக வைத்து கொடுக்கப்பட்ட கடன்கள்.

ஒரு இடத்தில் இந்த வகையான கட்டிடம் வரப்போகிறது இன்ன இன்ன வசதிகள் நிறைந்தது என படங்களை காட்டி பணம் பண்ண ஆரம்பித்து அதற்காக கடன் கொடுக்க ஆரம்பித்து அவைகள் வராக் கடன்களாக போயின.

அமெரிக்காவைப் பொறுத்தவகையில் இந்த home loans எனப்படும் வீட்டுக் கடன்கள் அதிக அளவில் கொடுக்கப்பட்டதும், வீடுகளின் விலை ஏறினாலும் அதிக வட்டியை நோக்காக கடன்கள் வீடு வாங்குபவர்களுக்கு கொடுக்கப்பட ஒரு விதத்தில் அந்த கடன்கள் திரும்பி வராத நிலையில் வங்கிகள் மூழ்கிப்போகின என்கின்றன பத்திரிக்கைகள்.

மற்றொருவகைதான் Low Risk investments, அதாவது லாபத்தை மட்டுமே பார்ப்பது நஷ்டத்தில் பங்கு எடுப்பதில்லை. இந்த வகையான முதலீடுகள், இந்த வகையில் மட்டும் பல டிரில்லியண்கள் நஷ்டமடைந்ததாகவும், இதனால் பல நிதி நிறுவனங்கள் பயங்கர வீழ்ச்சி கண்டதாகவும் சொல்லப்படுகிறது.

இவை அனைத்தும் எதை வைத்து கொடுப்பட்ட கடன்கள்? நிச்சயமாக அதிக வட்டியை எதிர்பார்த்து கொடுக்கப்பட்ட கடன்களே. ஆனால் நிலைமை கைமீறிப் போனது .

அதனால் தான் சொல்லப்படுகிறது ‘பொருளாதார உலகின் எய்ட்ஸ்தான் இந்த வட்டி,

இப்பொழுது உலக அறிஞர்கள் சொல்ல முனைகிறார்கள் வட்டியானது 0% அடையும் வரை இந்த பொருளாதார வீழ்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்குமென்று.

1990களில் கம்யூனிஸ பொருளாதாரக் கொள்கை தோல்வி அடைந்தது, சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து திரும்பி வந்த கியூபாவின் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ அவர்கள் தந்த முதல் பேட்டியில் சொல்கிறார் ‘ கியூபாவிற்க்கு இனி கம்யூனிஸ பொருளாதாரம் உதவாது’ என்று.

அதே போல்தான் வட்டியை அடிப்படையாக வைத்து நடத்தப்படும் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையும் அடியோடு மாற்றப்பட வேண்டும்.

நான் எத்தனை சத்தியங்கள் வேண்டுமானலும் செய்யலாம் உலகில் வட்டியை சார்ந்த பொருளாதாரமானது வறுமையை ஒழிக்க முடியவே முடியாது என்று.

நன்றி: அகார் முகம்மது. இ

__._,_._