Saturday, January 9, 2010

டா. ஜாகிர் நாய்கின் பதில்

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்?

பதில்: இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டிருக்காமல் இருந்தால் - உலகம் முழுவதிலும் இஸ்லாத்திற்கு ஆதரவாக இத்தனை கோடிக்கணக்கானவர்கள் இருந்திருக்க மாட்டார்கள் என்பது சில மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் பொதுவான குற்றச்சாட்டு. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமல்ல. மாறாக இஸ்லாம் இயற்கையாகவே அறிவுபூர்வமான மார்க்கம். இஸ்லாம் காரணகாரியங்களுடன் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கக்கூடிய மார்க்கம் என்பதால்தான் உலகில் விரைவாக வேறூன்றியது என்பதை நான் மேலும் எடுத்து வைக்க போகும் விபரங்கள் மூலம் நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும்.

1. இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்.
இஸ்லாம் என்ற வார்த்தை 'ஸலாம்' என்ற அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. 'ஸலாம்' என்றால் அமைதி என்று பொருள். ஸலாம் என்ற அரபி வார்த்தைக்கு ஒருவருடைய விருப்பம் அனைத்தையும் இறைவனுக்காகவே விரும்புவது என்ற மற்றொரு பொருளும் உண்டு. இவ்வாறு இஸ்லாமிய மார்க்கம் என்பது அமைதியான மார்க்கமாகும்.

2. சில வேளைகளில் அமைதியை நிலைநாட்ட நிர்ப்பந்தம் அவசியமாகிறது.
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் அமைதியையும் - இணக்கத்தையும் நடைமுறைப் படுத்த ஆதாரவாக இருப்பதில்லை. உலகில் உள்ளவர்களில் சிலர் தங்களது சுயலாபம் கருதி - குழப்பம் விளைவிப்பதையே விரும்புகின்றனர். இது போன்ற வேளைகளில் - உலகில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவேதான் அமைதியை நிலைநாட்டவும் - சமுதாய எதிரிகளை அடக்கவும் - குற்றவாளிகளை தண்டிக்கவும் காவல்துறை என்ற அமைப்பு உலகம் முழுவதும் உள்ளது. இஸ்லாம் அமைதியை விரும்பும் அதே வேளையில் எங்கெல்லாம் அநியாயம் நடக்கின்றதோ - அந்த அநியாயங்களை எதிர்த்து இஸ்லாமியர்களை போராட வலியுறுத்துகிறது. அநியாயத்தை எதிர்த்து போராட வேண்டிய நேரங்களில் - நிர்ப்பந்தம் அவசியமாகிறது. அமைதியையும் - நீதியையும் நிலை நாட்ட மாத்திரமே நிர்ப்பந்திக்கலாம் என இஸ்லாமிய மார்க்கம் அனுமதியளிக்கிறது.

3. வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ.லியரி ( De Lacy O'Leary) யின் கருத்து.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்பது தவறான கருத்து என்பதை நீரூபிக்க -பிரபல வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ'லியரி ( De Lacy O'Leary) எழுதிய 'இஸ்லாம் கடந்து வந்த பாதை' (Islam At The Cross Road) என்ற புத்தகத்தின் 8வது பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ள கருத்து சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

'இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற கருத்து மீண்டும் - மீண்டும் உலகிற்கு தெரிவிக்கப் பட்டுக் கொண்டிருப்பது - வரலாற்று ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டக் கட்டுக்கதையேயன்றி வேறொன்றும் இல்லை என்பதை தெளிவான வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.'

4. ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய ஆட்சி 800 ஆண்டுகளாக இருந்தது.
ஸ்பெயின் நாட்டை இஸ்லாமியர்கள் 800 ஆண்டுகளாக அரசாட்சி செய்தனர். ஸ்பெயின் நாட்டு முஸ்லிம்கள் எவரும் - ஸ்பெயின் நாட்டில் உள்ள மாற்று மதத்தவரை இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறச் சொல்லி வாள் கொண்டு நிர்ப்பந்திக்கவில்லை. ஆனால் பின்னால் வந்த கிறிஸ்தவர்கள் சிலுவைப் போர் என்ற பெயரில் ஸ்பெயினில் உள்ள முஸ்லிம்கள் அனைவரையும் அழித்தனர். இன்றைக்கு ஸ்பெயினில் இறைவனை தொழுவதற்கு அழைக்கவென ஒரு முஸ்லிம் கூட இல்லை.

5. அரேபியர்களில் 1 கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். (Coptic Christians).
கடந்த 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்கள் ஆண்டு வருகின்றனர். இடையில் சில ஆண்டுகள் - பிரிட்டிஷ்காரர்களும் - சில ஆண்டுகள் பிரெஞ்சுகாரர்களும் அரபு தீபகற்பத்தை ஆண்டனர். ஆனால் மொத்தத்தில் 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்களே ஆட்சி செய்து வருகின்றார்கள். இருப்பினும் - இன்று கூட - 1கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். (Coptic Christians). இஸ்லாமியர்கள் வாளைக் கொண்டு நிர்ப்பந்தித்து இருந்தால் - இன்றைக்கு அரபு தீபகற்பத்தில் ஒருவர் கூட கிறிஸ்துவராக இருக்க மாட்டார். அனைவரும் முஸ்லிம்காகத்தான் இருந்திருப்பர்.

6. இந்திய மக்கள் தொகையில் எண்பது சதவீத மக்கள் முஸ்லிம் அல்லாதோர்களே!.
இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர். அவர்கள் விரும்பியிருந்தால் - முஸ்லிம் அல்லாதோர்களை - தங்களது ஆட்சி பலம் மற்றும் படை பலம் கொண்டு இஸ்லாமியர்களாக மாற்றியிருக்க முடியும். ஆனால் இன்றைக்கு இந்தியாவின் மக்கள் தொகையில் எண்பது சதவீதம் பேர் முஸ்லிம் அல்லாதோர்கள்தான். இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் ண்பது சதவீத முஸ்லிம் அல்லாதோர்களே - இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் அல்ல என்பதற்கு சாட்சிகளாவர்.

7. இந்தோனேஷியாவும் - மலேசியாவும்.
இன்றைக்கு உலகில் உள்ள நாடுகளில் இந்தோனேஷியாவும் - மலேசியாவும்தான் அதிகமான முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள். எந்த இஸ்லாமிய படைகள் இந்தோனேஷியாவிற்கும் - மலேசியாவுக்கும் சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.

8. ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகள்.
அதே போன்று ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் இஸ்லாம் துரிதமாக பரவி இருக்கிறது. எந்த இஸ்லாமிய படைகள் ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளுக்கு சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.

9. இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை.
எந்த வாளால் இஸ்லாம் பரப்பப்பட்டது?. அப்படி ஒரு வாள் இருந்தாலும் - இஸ்லாத்தை பரப்புவதற்காக அந்த வாளை இஸ்லாமியர்கள் பயன் படுத்தியிருக்கமுடியாது. ஏனெனில் கீழ்க்காணும் அருள்மறை குர்ஆனின் வசனம் அதனை தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றது.
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமும் இல்லை: வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. (அல்-குர்ஆன் 02வது அத்தியாயம் - 256வது வசனம்)

10. அறிவார்ந்த கொள்கை என்னும் வாள்:
அறிவார்ந்த கொள்கை என்பதுதான் அந்த வாள். மனிதர்களின் எண்ணங்களையும் - உள்ளங்களையும் கொள்ளை கொண்டது அறிவார்ந்த கொள்கை என்ற அந்த வாள். அருள்மறை குர்ஆனின் 16வது அத்தியாயத்தின் 125வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகிறது. '(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக!. அவர்களிடத்தில் மிக அழகிய முறையில் நீர் தர்க்கிப்பீராக!. மெய்யாக உம் இறைவன் அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.'

11. 1934 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டுவரை கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலக மதங்களின் வளர்ச்சி.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் (1934 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை) உலகில் உள்ள முக்கிய மதங்களின் வளர்ச்சி பற்றிய புள்ளிவிபத்தை 1986 ஆம் ஆண்டு ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திக்கையின் ஆண்டு மலரான 'அல்மனாக்' பத்திரிக்கை வெளியிட்டிருந்தது. மேற்படி புள்ளிவிபரத்தை உள்ளடக்கிய கட்டுரை 'தி ப்ளெய்ன் டிரத்' என்ற ஆங்கில பத்திரிக்கையிலும் வெளியாகியிருந்தது. உலக மதங்களில் அதிகமான வளர்ச்சி அடைந்து முதலிடத்தை பிடித்திருப்பது இஸ்லாமிய மார்க்கமே. அதனுடைய வளர்ச்சி கடந்த 50 ஆண்டுகளில் 235 சதவீதமாக இருந்தது. கிறிஸ்துவ மார்க்கம் 47 சதவீத வளர்ச்சி அடைந்திருந்தது. லட்சக் கணக்கானவர்களை இஸ்லாத்தில் மாற்ற வேண்டி இந்த நூற்றாண்டில் எந்த போர் நடந்தது?.

12. அமெரிக்காவிலும் - ஐரோப்பாவிலும் இஸ்லாமிய மார்க்கம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது:
இன்று அமெரிக்காவில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். அதே போல் ஐரோப்பாவிலும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். எந்த வாள் மேற்கத்தியர்களை நிர்ப்பந்தப்படுத்தி மிக அதிக அளவில் இஸ்லாத்தில் இணையச் செய்தது?.

13. டாக்டர் ஜோஸப் ஆடம் பியர்ஸன்
'ஒருநாள் அரபுலகத்தின் கையில் அணுஆயுதம் சென்று சேரும் என்று கவலைப்படுபவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபகத்தில் பிறந்த அன்றே இஸ்லாம் என்ற அணுகுண்டு இந்த உலகத்தில் போடப்பட்டாகி விட்டது என்பதை உணரத் தவறிவிட்டார்கள்.' என்று டாக்டர் ஜோஸப் ஆடம் பியர்ஸன் சரியாகத்தான் சொன்னார்.

கேள்வி:
முஸ்லிம்களில் பலர் அடிப்படைவாதிகளாகவும் - பயங்கரவாதிகளாகவும் இருப்பது ஏன்?.
பதில்உலக விஷயங்கள் பற்றி விவாதிக்கும் பொழுதும் மதங்களை பற்றி விவாதிக்கும் பொழுதும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இஸ்லாமியர்கள் அடிப்படைவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் சுட்டிக்காட்டப் படுகின்றனர். இஸ்லாத்தின் எதிரிகள் உலகத்தில் உள்ள எல்லா ஊடகங்களின் வாயிலாகவும் இஸ்லாமியர்களை அடிப்படைவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் தவறாக அடையாளம் காண்பிப்பதில் உறுதியாக இருக்கிறார்கள். மேற்படி தவறான தகவல் மற்றும் தவறான பிரச்சாரம் - இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதற்கும் தவறாக விமரிசிக்கப்படுவதற்கும் காரணங்களாக அமைந்து விடுகின்றன. உதாரணத்திற்கு அமெரிக்காவின் ஒக்லகாமா நகரில் நடந்த வெடி குண்டு விபத்தின் பின்னனியில் 'மத்திய கிழக்கு நாடுகளின்' கைவரிசை இருக்கிறது என அமெரிக்காவின் அனைத்து ஊடகங்களும் போட்டி போட்டுக்கொண்டு அறிவிப்பு செய்தன. ஆனால் அந்த வெடிகுண்டு வெடிக்க காரணமாயிருந்த குற்றவாளி அமெரிக்காவின் ஆயுதபடையைச் சார்ந்த ஒருவன்தான் என்று பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
அடுத்து இஸ்லாமியர்கள் மீது சுமத்தப்படும்; 'அடிப்படைவாதம்' பற்றியும் - 'தீவிரவாதம்' பற்றியும் நாம் ஆராய்வோம்.

1. அடிப்படைவாதத்திற்கான விளக்கம்:
தான் சார்ந்திருக்கும் கொள்கையை மன உறுதியுடன் பற்றிப் பிடித்து அந்த கொள்கையை தன் வாழ்க்கையில் மிகச் சரியாக நடைமுறைபடுத்துபவனுக்கு அடிப்படைவாதி என்று பெயர். உதாரணத்திற்கு மருத்துவர் ஒருவர் சிறந்த மருத்துவர் என பெயர் பெற வேண்டுமெனில் - அவர் சார்ந்திருக்கும் மருத்துவ கொள்கையின் அடிப்படையை அறிந்து - அறிந்த மருத்துவ கொள்கையை பின்பற்றி - அதை நடைமுறைபடுத்தினால் அவர் ஒரு சிறந்த மருத்துவர் என்று அழைக்கப்படுவார். இதனை வேறு வார்த்தையில் சொல்வதென்றால் - மருத்துவதுறையில் அவர் ஒரு அடிப்படைவாதி.
கணிதத் துறையில் ஒருவர் சிறந்த கணித மேதை என பெயர் பெற வேண்டுமெனில் - அவர் சார்ந்திருக்கும் கணிதக் கொள்கையின் அடிப்படையை அறிந்து - அவர் அறிந்த கணிதக் கொள்கையை பின்பற்றி - அதை நடைமுறைபடுத்தினால் அவர் ஒரு சிறந்த கணித மேதை என்று அழைக்கப்படுவார். இதனை வேறு வார்த்தையில் சொல்வதென்றால் - கணிதத்துறையில் அவர் ஒரு அடிப்படைவாதி. அறிவியல் துறையில் ஒருவர் சிறந்த அறிவியல் மேதை என பெயர் பெற வேண்டுமெனில் - அவர் சார்ந்திருக்கும் அறிவியல் கொள்கையின் அடிப்படையை அறிந்து - அறிந்த அறிவியல் கொள்கையை பின்பற்றி - அதை நடைமுறைபடுத்தினால் அவர் ஒரு சிறந்த அறிவியல் மேதை என்று அழைக்கப்படுவார். இதனை வேறு வார்த்தையில் சொல்வதென்றால் - அறிவியல் துறையில் அவர் ஒரு அடிப்படைவாதி.

2. எல்லா அடிப்படைவாதிகளும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல.
எல்லா அடிப்படைவாதிகளுக்கும் ஒரே வர்ணம் பூசக் கூடாது. எல்லா அடிப்படைவாதிகளும் நல்லவர்கள் என்றோ அல்லது கெட்டவர்கள் என்றோ வகைப்படுத்த முடியாது. அவர்கள் சார்ந்திருக்கும் துறை அல்லது அவர்களால் செய்யப்படும் செயல் ஆகியவற்றைக் கொண்டே அவர்கள் நல்ல அடிப்படைவாதியா அல்லது கெட்ட அடிப்படைவாதியா என்பதை வகைப்படுத்த வேண்டும். கொள்ளையடிக்கும் - சிறந்த கொள்ளைக்காரன் சமுதாயத்திற்கு தீங்கு விளைவிப்பதால் அவனை ஒரு கெட்ட அடிப்படைவாதி என்று கொள்ளலாம். அதே சமயம் ஒரு சிறந்த மருத்துவர் சமுதாயத்திற்கு பயனுள்ளவராக இருப்பதால் அவர் ஒரு நல்ல அடிப்படைவாதி மருத்துவர் என கொள்ளலாம்.

3. நான் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி என்பதில் பெருமை கொள்கிறேன்.:
இறைவனி;ன் மாபெரும் கிருபையினால் - நான் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி. இஸ்லாத்தின் அடிப்படை விதிகளை அறிந்து - அறிந்த விதிகளை பின்பற்றி - அந்த விதிகளை எனது வாழ்க்கையிலும் நடைமுறைபடுத்துகிறேன். ஓரு உண்மையான இஸ்லாமியன் தான் ஒரு அடிப்படைவாதியாக இருப்பதில் ஒருபோதும் வெட்கமுற மாட்டான். நான் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி என்பதில் பெருமை கொள்கிறேன். ஏனெனில் - இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் அனைத்தும் உலகம் முழுவதுமுள்ள மனித குலத்திற்கு பயன் தரக் கூடியவை.
இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் எதுவுமே மனித குலத்திற்கு தீழங்கிழைப்பவையோ அல்லது மனித குலத்திற்கு எதிரானவையோ அல்ல. இஸ்லாத்தின் செயல்பாடுகள் சரியானவை அல்ல. மாறாக தவறானவை என்று ஏராளமானபேர் இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை கொண்டிருக்கின்றனர். இந்த தவறான எண்ணம் ஏனெனில் - இஸ்லாத்தைப் பற்றி அவர்கள் அறைகுறையாக அறிந்து வைத்திருப்பதே காரணமாகும். ஓருவர் இஸ்லாம் கற்றுத் தரும் பாடங்களை திறந்த மனதுடனும் - மிகக் கவனத்தோடும் பகுத்தாய்வார் எனில் இஸ்லாம் தனி மனிதனுக்கும் - மொத்த மனித சமுதாயத்திற்கும் - முழு பயனுள்ளது என்ற உண்மையை அறிவதிலிருந்து தவற முடியாது.

4. 'அடிப்படைவாதத்திற்கு' டிக்ஷ்னரி தரும் விளக்கம்:
அடிப்படைவாதத்திற்கு வெப்ஸ்டர் டிக்ஷ்னரி தரும் விளக்கம் என்னவென்றால் 'பாதுகாக்கும் கொள்கையை' (Protestanism) அடிப்படையாக கொண்டு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் தோன்றிய இயக்கம் என்பதாகும். நவீன நாகரீகத்தை எதிர்த்தும் பைபிளின் கொள்கைகளான - நம்பிக்கை மற்றும் ஒழுக்கங்கள் மட்டுமல்லாது - வரலாற்று உண்மைகளையும் பைபிளிள் உள்ளபடியே நிலை நிறுத்த வேண்டியும் தோன்றிய இயக்கமாகும். 'கடவுளால் எழுத்து வடிவில் அருளப்பட்ட கட்டளைகளே பைபிள்' என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து இயங்கி வரும் இயக்கமாகும். எனவே ஆரம்ப காலங்களில் அடிப்படைவாதம் என்றால் மேற்குறிப்பிட்ட கொள்கைகளை அடிப்படையாக கொண்டு இயங்கி வந்த இயக்கம் என்று பொருள் கொள்ளப்பட்டது.

அடிப்படைவாதத்திற்கு ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரி தரும் விளக்கம் என்னவெனில் 'மதங்களின் தொன்மையான அல்லது அடிப்படையான கோட்பாடுகளை நெறி பிறழாது நடைமுறைபடுத்துவது - குறிப்பாக இஸ்லாமிய மத கோட்பாடுகள்' என்பதாகும்.

இன்றைக்கு ஒரு மனிதன் 'அடிப்படைவாதம்' என்ற வார்த்தையை உபயோகிக்கும்போது உடனே அவனது எண்ணத்தில் இஸ்லாமியன் - ஒரு பயங்கரவாதியாக தோன்றிவிடுகிறான்.

5. ஒவ்வொரு இஸ்லாமியனும் ஒரு பயங்கரவாதியாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு இஸ்லாமியனும் ஒரு பயங்கரவாதியாக இருக்க வேண்டும். பயத்துக்கு காரணமானவன் பயங்கரவாதி. காவல்துறையை பார்த்தவுடன் கொள்ளையடிப்பவர்கள் பயப்படுகின்றனர். எனவே கொள்ளையருக்கு காவல் துறையினர் பயங்கரவாதிகள். அதேபோல திருட்டு கொள்ளை மற்றும் வல்லுறவு போன்ற சமுதாயத்தின் குற்றங்களைச் செய்யும் ஒவ்வொரு குற்றவாளிக்கும் - ஒவ்வொரு இஸ்லாமியனும் ஓர் பயங்கரவாதியாக தோன்ற வேண்டும். சமுதாயக் குற்றவாளிகள் - ஒரு இஸ்லாமியனை காணும்போதெல்லாம் பயப்படவேண்டும். சமுதாயத்தில் உள்ள எல்லா மனிதர்ளுக்கும் மத்தியில் தீங்கு இழைப்பவனுக்கு பயங்கரவாதி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவது உண்மை. ஆனால் ஒரு உண்மையான முஸ்லிம் சமுதாயத்தில் குறிப்பிட்டவர்களுக்கு - அதாவது சமுதாய குற்றவாளிகளுக்கு - மாத்திரம் பயங்கரவாதியாக தோன்ற வேண்டுமே தவிர சமுதாயத்தின் அப்பாவி பொதுமக்களுக்கு அல்ல. மாறாக ஒரு இஸ்லாமியன் - அப்பாவி பொதுமக்களுக்கு மத்தியில் அமைதியை நிலைநாட்டுபவனாக இருக்க வேண்டும்.

6. மனிதர்கள் செய்கிற ஒரே வகையான செயலுக்கு - 'பயங்கரவாதிகள்' என்றும் 'விடுதலைப் போராட்ட வீரர்கள்' என்றும் இரண்டு வகையான முத்திரைகள்.
வெள்ளையர்களால் ஆளப்பட்டுக் கொண்டிருந்த இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் - இந்திய சுதந்திரத்திற்காகப் போராடியவர்களை பயங்கரவாதிகள் என பிரிட்டிஷ் அரசாங்கம் முத்திரை குத்தியது. ஆனால் அதே வீரர்கள் இந்தியர்களால் - சுதந்திர போராட்ட வீரர்கள் என அழைக்கப் பட்டார்கள். இவ்வாறு ஒரே வகையான மனிதர்கள் - அவர்கள் செய்த ஒரே வகையான செயலுக்கு இரண்டு வகையான முத்திரைகள் குத்தப்பட்டார்கள். அவர்கள் 'பயங்கரவாதிகள்' என்று ஒரு தரப்பினராலும் - 'சுதந்திரப் போராட்ட வீரர்கள்' என்று மறு தரப்பினராலும் அழைக்கப்பட்டார்கள். இந்தியாவை ஆள பிரிட்டிஷ்க்கு உரிமை இருக்கிறது என்ற கருத்தைக் கொண்டவர்கள் அவர்களை 'பயங்கரவாதிகள்' என்று அழைத்தனர். இந்தியாவை ஆள பிரிட்டிஷ்க்கு உரிமை இல்லை என்ற கருத்தைக் கொண்டவர்கள் அவர்களை 'சுதந்திரப் போராட்ட வீரர்கள்' என்று அழைத்தனர்.

எனவே ஒரு மனிதனைப் பற்றி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னால் - அவனது கருத்தையும் அறிவது அவசியம். இரண்டு தரப்புகளும் தீர விசாரிக்கப்பட்டு - விசாரணையின் முடிவுகள் அலசி ஆராயப்பட்டு - அதற்கான காரண காரியங்கள் மற்றும் செயலுக்கான நோக்கம் அனைத்தையும் அறிந்த பின்புதான் அந்த மனிதனைப்பற்றி ஒரு நிலையான முடிவு க்கு வரவேண்டும்.

7. இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்.
'இஸ்லாம்' என்ற வார்த்தை 'ஸலாம்' என்ற அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. ஸலாம் என்றால் அமைதி என்று பொருள். இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் - இஸ்லாத்தை பின்பற்றுவோர் அமைதியை கடைபிடிக்குமாறு போதிப்பதுடன் உலகம் முழுவதும் அமைதியை நிலை நாட்டுமாறும் போதிக்கிறது.

இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாம் அமைதியை கடைபிடிப்பதில் ஒவ்வொரு இஸ்லாமியனும் ஒரு அடிப்படைவாதியே. சமுதாயத்தில் அமைதியையும் - நீதியையும் நிலைநாட்டுதல் வேண்டி - ஒவ்வொரு இஸ்லாமியனும் - சமுதாயக் கொடுமைகளுக்கு எதிரான ஒரு தீவிரவாதியாக இருக்க வேண்டும்.

உங்கள் வாழ்க்கைத் துணைவி

هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُن
‘அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (சூரா அல்-பகரா 2:187).

திருமணத்தின் மூலம் நீங்கள் ஒரு பெண்ணை வெறும் மனைவியை மட்டும் பெறுவ தில்லை. அன்றிலிருந்து உங்கள் வாழ்வின் இறுதிவரை அனைத்திலும் அவள்தான் உங்கள் வாழ்க்கைத் துணைவி! இல்லத்தரசி! பங்காளி! வாழ்வின் நீண்ட பயணத்தின் வழித்துணை! எதிலும் எஃகு போன்று நின்று அரவணைத்து நிற்பவள்! நீங்கள் ஏற்றம் பெற உற்ற தோழியாய் நிழலாய் வலம் வருபவள்! .
அன்று முதல் அவள்தான் உங்களுடைய ஒவ்வொரு நொடியையும், நாளையும், வருடத்தையும்;, சுகத்தையும்;, துக்கத்தையும்;, கனவையும், நனவையும மகிழவையும், கவலையையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறவள்.

நீங்கள் நோயுறும்போது, அவள் உங்களை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்வாள். உங்களுக்கு ஏதேனும் தேவை என்றாலும் ஓடோடி வருபவளும் அவள்தான்.

உங்களுடைய ரகசியங்களை அவள் பாதுகாப்பாள். உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்படும்போது அவள்தான் உங்கள் மதி மந்திரி.

உங்கள் மனைவிதான் உங்களுடன் எப்போதும் உடன் இருப்பவள். காலையில் நீங்கள் கண் விழிக்கும்போது உங்கள் கண்கள் பார்க்கும் முதல் காட்சி அவளுடைய கண்களாகத்தான் இருக்கும். அன்றைய தினம் முழுவதும் அவள் உங்களுடன் இருப்பாள்.

சில சந்தர்ப்பங்களில் உடலால் உங்களருகில் அவள் இருக்க முடியாமல் போகும்போது அவளது நினைவுகள் உங்களை சூழ்ந்திருக்கும். காரணம் அவளது ஆன்மா, மனம், இதயம் மூன்றும் இறைவனிடம் உங்களுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்.

ஒவ்வொரு நாளின் முடிவில் நீங்கள் படுக்கைக்கு போகுமுன் நீங்கள் கடைசியாகப் பார்ப்பது அவளது கண்களாகத்தான் இருக்கும். உறங்கிய பிறகும் உங்கள் கனவிலும் அவள் வலம் வருவாள். சுருக்கமாகச் சொன்னால் அவள் தான் உங்கள் உலகம்! நீங்கள்தான் அவளது உலகம்!

கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட சிறப்பாக யார் தான் கூறிவிட முடியும்? அந்த உறவின் இனிமையைப் பற்றி, அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப்பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை பாருங்களேன்!

“அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள்” (சூரா அல்-பகரா 2:187).

எவ்வளவு எதார்த்தமான உவமை! ஆம் உண்மையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடைகளைப் போன்றவர்கள். காரணம் ஆடைகள் மனிதனின் மானத்துக்கும், உடலுக்கும், பாதுகாப்பை அளிக்கின்றன. மரியாதையையும், மாண்பையும் தருகின்றன. அழகையும், கவர்ச்சியையும் வழங்குகின்றன. கடும் பனிப் பிரதேசத்தில் பயணிக்கும் பிரயாணிக்கு அவனது ஆடை எந்த அளவுக்கு சுகத்தையும், பாதுகாப் பையும் தரும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தாலே அதன் அருமை புரியும். அந்த அளவுக்கு நமது வாழ்க்கைப் பாதையில் நமக்கு சுகத்தையும், பாதுகாப்பையும், கண்ணியத்தையும் வழங்குபவள் மனைவி தான்.

இந்த உறவு மனித வாழ்க்கையின் மற்றெல்லா உறவுகளையும் விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். திருமணத்திற்குப் பிறகு திடீரென்று இணைந்த இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல், பிரியம், நெருக்கம், தாம்பத்யம், கருணை, கனிவு, பரிவு, விட்டுக் கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை. அதற்கான காரணம் என்ன என்றும் நாம் அறிய முனைவதில்லை.

இவ்வளவு நிகரற்ற உணர்வலைகள் இருவரது உள்ளங்களிலும் சுரந்து பெருகி பெரு வெள்ளமாய் அவர்களது வாழ்வை வளமாக்க அவர்களது படைப்பாளன் கருணைமிக்க அல்லாஹ்தான் தனது அளப்பரிய அன்பாலும், நிகரற்ற அருட்கொடைகளாலும், தனது பேராற்றல் மிக்க நுண்ணறிவாலும் காரண கர்த்தாவாக இருக்கின்றான். இந்த உண்மையை அல்-குர்ஆன் இந்த வசனத்தில் உணர்த்துகிறதுوَاللّهُ جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا
மேலும்,அல்லாஹ் உங்கள் வாழ்க்கைத் துணைகளை உங்களிலிருந்தே உண்டாக்கினான். (சூரா அல்-நஹ்ல் 16:72)

அல்லாஹ் இதன் மூலம் அவனது அத்தாட்சிகளை இந்த பிரபஞ்சத்தில் தேடுவோருக்கு இந்த உணர்வுகள் அவனது அத்தாட்சிகளில் உள்ளவைதான் என்று உணர்த்தி அவனது வல்லமையை மனிதர்கள் உணர்வதற்காக கீழ்க்கண்ட வசனத்தில் சொல்கின்றான்:
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
மேலும் அவனது அத்தாட்சிகளில் ஒன்று, அதாவது அவன்தான் உங்களுக்கு துணைகளை உங்களிலிருந்தே ஏற்படுத்தினான், நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக, உங்கள் உள்ளங்களில் அன்பையும் கருணையையும் பெருகச் செய்தான். நிச்சயமாக, அறிவுடையோருக்கு இதில் தெளிவான அத்தாட்சி இருக்கிறது’ (சூரா: அல்-ரூம் 30:21).

ஆனால், அல்லாஹ்வுக்கு மனிதனின் மனநிலையைப் பற்றி நன்கு தெரியும். அது நீண்ட காலம் ஒரே நிலையில் இருக்காது, அடிக்கடி அதன் தன்மைகள் மாறும. உணர்வுகள் வேறு வடிவம் பெறும். ஏன்! காலம் ஓட ஓட காதல் கூடக் கசக்கத் துவங்கும். முறையான கவனம் செலுத்தப்படவில்லை என்றால் திருமண பந்தம் தொய்வடையக் கூடும்.
தேங்க்ஸ்: படைப்பாளிக்கு

திருமணம் தேவைதானா?





இஸ்லாதில் திருமணம் அவசியம் செய்ய வேண்டுமா? ஏனெனில் திருமணம் செய்தால்தான் முழு முஸ்லிமாக ஆக முடியும் என்று கூறுகிறார்கள்.
திருமணத்தின் முக்கியத்துவத்தை போதிக்கும் நபிமொழி
'திருமணம் எனது வழிமுறை (சுன்னத்), எவர் எனது வழிமுறையை புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்)
ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியப் பங்கு வகிப்பது திருமணமாகும். திருமணத்தின் மூலமாக ஒரு மனிதனுடைய வாழக்கையில் திருப்பு முனை ஏற்படுகிறது.
  • தனிமனிதனாக வாழந்து வந்த மனிதன் தன் மனம் போன போக்கில் சென்றிருப்பான், ஆனால் திருமனம் என்ற பந்தத்தின் மூலம் அவனுக்கு என்று சில பொறுப்புகள் வந்துவிடுகின்றன அந்த பொறுப்புகளின் மூலம் அவனது வாழ்க்கை நிலை முற்றிலுமாக மாற்றப்படுகிறது.
  • அந்தரங்கமான விஷயங்களை பெற்றோரிடம் பகிர்ந்துக் கொள்ள முடியாது, தொழில் நுணுக்கங்கள் போன்ற இலாபம் தரும் விஷயங்களை நண்பர்களோடு பகிர்ந்துக் கொள்ள முடியாது ஆனால் அனைத்து விஷயங்களையும் மனைவியிடம் பகிர்ந்துக்கொள்ள முடியும் காரணம் அவர் உங்களின் சுகம் துக்கம் அனைத்திலும் பங்கெடுப்பவளாக இருக்கிறாள். எனவேதான் அல்லாஹ் கணவனுக்கு அவனுடைய மனைவியை ஆடையாக வர்ணிக்கிறான்.
  • பெற்றொரின் அரவணைப்பில் வாழ்க்கை முழுவதையும் கழிக்க முடியாது அவர்கள் முதுமையை அடைந்துவிட்டால் அவர்களை கவனிக்க நல்ல மனைவியைப் போன்ற ஒரு செல்வம் வேறு இல்லை!
  • திருமணம் செய்துக்கொள்ளாமல் அல்லது மறுமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்க்கை முழுவதையும் உடன் பிறந்தவர்களுடைய அரவணைப்பில் கழித்துவிடலாம் என்று எண்ணிவிடாதீர்கள் காரணம் உங்கள் உடன்பிறந்தவர்கள் முதுமையை அடைந்து விட்டால் அவர்களை கவனிப்பதே அவர்களின் பெற்ற பிள்ளைகளுக்கு பாரமாக அமைந்து விடும் எனவே உங்கள் உடன்பிறந்தவர்கள் உங்களை இறுதிவரை கவனிக்க முடியாது எனவே திருமணமாகாதவன் காலமெல்லாம் உடன்பிறந்தவர்களை நம்பியிருப்பது முட்டாள்தனமாகும். எதிர்காலத்தில் வரவிருக்கும் அவலநிலையைக் கருத்தில் கொண்டுதான் என்னவோ இஸ்லாம் திருமணத்தை வலியுறுத்துகிறது.
  • ஒரு மனிதனுக்கு பிள்ளைச் செல்வம் கொடுப்பது அல்லாஹ்வின் அருளாகும் இந்த கிடைத்தற்கரிய அருள் மட்டும் மனைவியின் மூலமாக கிடைக்கிறது இதை நலுவ விடலாமா?
  • கணவன் தன் மனைவியின் வாயில் ஊட்டக்கூடிய ஒரு கவள உணவைக்கூட அல்லாஹ் கூலியாக கருதி அதை நிரப்பமாக வழங்குவதாக நபிகளார் (ஸல்) கூறுகிறார்கள் எனவே உங்கள் கூலியை நீங்கள் அறிந்தே இழக்கலாமா?

தரம்கெட்ட மேலை நாட்டு கலாச்சாரம்மேலை நாடுகளில் நீங்கள் காணலாம் இளமைப் பருவத்தில் திருமணமாகாத நிலையில் உறவு கொண்டு வாழ்ந்து வருவார்கள்

  • அவர்களுக்கு கணவன், மனைவி, சகோதர, சகோதரிகள் பெற்றோர் மற்றும் குழந்தைகள் இருக்காது, அப்படியே இருந்தாலும் யாருக்கு பிறந்த அண்ணன், தம்பி, பிள்ளை என்றே கணிக்க முடியாது!
  • காலையில் ஒருவன் மாலையில் ஒருத்தி என்ற கேவளலமான வாழ்க்கையில் அற்ப சுகம் காண்பார்கள் வயோதிக பருவத்தில் தற்கொலை செய்துக்கொள்வார்கள்!
  • குழந்தை பிறந்தாலும் தந்தை யார் என்று தெரியாத அவல நிலைக்கு பிள்ளைகள்.
  • முதுமை அடைந்து விட்டால் அநாதை ஆசிரமங்களுக்கும் ஏன் பிச்சை எடுக்கும் அளவுக்கும் தள்ளப்படுகிறார்கள்.
  • வருடத்தில் ஒருநாள் தாய், தந்தையர் தினம் கடைபிடித்து அன்று மட்டும் யாருக்கோ பிறந்த பிள்ளையாக இருக்கும் அவர்கள் வந்து எட்டிப்பார்த்துவிட்டுப் போகும் அவலநிலை அரங்கேற்றப்பட்டுள்ளது.
  • வயோதிகப் பருவத்தில் விம்மி விம்மி அழுவார்கள் பதில் கூற ஆள் இருக்காது மரணித்தாலும் எடுப்பதற்கு நாதியிருக்காது உடன் பிறந்தவர்கள் என்ற இரத்த பந்தமே பெரும்பாலும் இருக்காது.
  • ஆடம்பரமாக, மல்டி மில்லியனராக வாழந்துவருவார் ஆனால் வயோதிக பருவத்தில் கவனிக்க சொந்த வாரிசு இருக்காது!
  • கஷ்டப்பட்டு சேமித்த சொத்துக்கள் பயணற்று சென்றுவிடும்.

திருமணம் வேண்டாம் என்று துறவரம் மேற்கொள்ள தடைஇன்றைக்கு நீங்கள் கண்கூடாக பார்க்கலாம் மாற்றுமதத் துறவிகள் திருமணம் செய்துக்கொள்ளாமல் துறவிகளாக வாழந்து வருவார்கள் ஆனால் அவர்களால் தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது எனவே பெண் துறவிகளை நியமித்து அவர்களுடன் தவறான உறவுமுறைகளை வளர்த்துக் கொள்வார்கள். இதன் மூலம் என்ன விளங்குகிறது அவர்களின் மதம் போதிக்கும் துறவரம் தவறானது மேலும் அவர்களின் கொள்கையும் தவறானது என்பதுதானே!

'அவர்கள் தாமாகவே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்க வில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்) (அல்குர்ஆன் 57:27)

உங்கள் மன அமைதிக்காகவே திருமணம் ஒரு ஆணோ பெண்ணோ திருமணமாகாத நிலையிலோ அல்லது திருமணமாகியும் திருமண ஒப்பந்த முறிவு ஏற்பட்ட நிலையிலோ மன நிம்மதியுடன் வாழ முடியுமா? திருமணத்தின் மூலமாகத்தான் மனிதனுக்கு மன அமைதி ஏற்படும் என்பதை உங்களைப் படைத்த ரப்புல் ஆலமீன் கூறுகிறான். மாற்றுமதத்தை விட இஸ்லாம் மிக மிக தெளிவாக திருமணத்தை பற்றி வர்ணிக்கிறது இது இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு அத்தாட்சியல்லவா? இந்த அத்தாட்சியை நாம் இழக்கலாமா?

'நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.' (அல்குர்ஆன் 30:21)

அனைத்து நபிமார்களுக்கும் திருமணம் நடந்தது பிள்ளைகள் பிறந்தன!

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும் மக்களையும் ஏற்படுத்தினோம்'. (அல்குர்ஆன் 13:38)

அநாதைகளுக்கும் திருமணம் முடித்துவைக்க வேண்டும் அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் - (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால், அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்;. அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும், வீண் விரையமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும் (அவ்வநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும் - ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும்;. மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - (உண்மையாகக்) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன். (அல்குர்ஆன் 4-6)

அடிமைகளுக்கும் திருமணம் முடித்து வைக்க வேண்டும்! 'உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவர்களுக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லாத) நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும் பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்;! அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றவர்களாக ஆக்குவான்; மேலும் அல்லாஹ் தாராளமானவன்: நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 24:32)

கணவனை இழந்த அல்லது தலாக் பெற்ற பெண்கள் இத்தா முடிந்த நிலையில் மறுமணம் செய்துக்கொள்ள விரும்பினால் அவர்களை தடுக்கக்கூடாது!

இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள். உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது. இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும்; (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள். (அல்குர்ஆன்)

மனைவியர் உங்களுக்கு ஆடைநீங்கள் அணியும் ஆடை உயர்தரமானதாக இருக்க வேண்டும், அழகாக இருக்க வேண்டும், கண்ணியமுள்ளதாக இருக்க வேண்டும் உடலை மறைப்பதாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆடையில் ஒரு பொத்தான் விழுந்துவிட்டாலும் உடனே அதை தைத்து நல்ல முறையில் அணிந்துக்கொள்வீர்கள் ஆனால் மனைவி உங்களுக்கு ஆடையாக இருக்கும் பட்சத்தில் அவளை மட்டும் கவனிக்கத் தவறுவது ஏன்? 'அவர்கள் உங்களுக்கு ஆடை நீங்கள் அவர்களுக்கு ஆடை'. (அல்குர்ஆன் 2:187.)

'பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன'. (அல்குர்ஆன் 2:228)

அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ ஏராளமான நன்மைகளை அமைத் திருப்பான். (அல்குர்ஆன் 4:19)

மனைவி குடும்பத்திற்கு ஏற்ற பெண்ணாக இருக்க வேண்டும்!

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்தார் என்னிடம் இறைத்தூதர்(ஸல்)அவர்கள், 'திருமணம் முடித்துக் கொண்டாயா? ஜாபிரே!" என்று கேட்டார்கள். நான், 'ஆம்" என்று கூறினேன். 'கன்னி கழிந்த பெண்ணையா? கன்னிப் பெண்ணையா?' என்று கேட்டார்கள். நான், '(கன்னிப் பெண்ணை) அல்ல் கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்)" என்று கூறினேன். 'உன்னோடு கொஞ்சிக் குலவும் கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா?' என்று கேட்டார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! என் தந்தை (அப்துல்லாஹ் - ரலி அவர்கள்) ஒன்பது பெண்மக்களைவிட்டுவிட்டு உஹுதுப் போரின்போது (உயிர் தியாகியாகக்) கொல்லப்பட்டார்கள். அவர்கள் (ஒன்பது பேரும்) என் சகோதரிகளாக இருந்தனர். எனவே, பக்குவமில்லாத அவர்களைப் போன்ற இன்னொருத்தியை அவர்களுடன் சேர்த்து விடுவதை நான் வெறுத்தேன். மாறாக, அவர்களுக்குத் தலை வாரிவிட்டு, அவர்களை (கருத்தாகப்) பராமரித்துவரும் ஒரு பெண்ணை (திருமணம் செய்ய நினைத்தே இவ்வாறு தேர்ந்தெடுத்தேன்)" என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'நீ செய்தது சரிதான்" என்று கூறினார்கள். (புகாரி பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4052)

திருமணம் உள் உணர்வுகளை கட்டுப்படுத்தும் கேடயம்!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்""உங்களில், திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்தியுள்ளவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும்." என அப்துல்லாஹ் (ரலி) அறிவித்தார். (புகாரி பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1905)

''இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும், கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு (ஆசையைக்) கட்டுப் படுத்தக் கூடியதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

திருமணத்தால் வறுமை அகலும்.

'உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவர்களுக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லாத) நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும் பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்;! அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றவர்களாக ஆக்குவான்; மேலும் அல்லாஹ் தாராளமானவன்: நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 24:32)

“எவர் அல்லாஹ்வுக்கு பயந்து நடக்கிறாரோ அல்லாஹ் அவருக்குச் சிரமங்களிலிருந்து வெளியேறுவதற்கு ஏதேனும் வழி வகையை ஏற்படுத்துவான். அன்றி, அவர் அறிந்திராத விதத்தில் அவருக்கு வாழ்க்கை வசதிகளை வழங்குவான். (திருக் குர்ஆன் 65: 2-3)

''உன் மனைவியின் வாயில் ஊட்டக் கூடிய ஒரு கவள உணவு உட்பட அல்லாஹ்வின் திருப்தியை நாடி நீ செலவழிப்பதற்குக் கூலி வழங்கப்படாமல் இருக்காது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

அல்ஹம்துலில்லாஹ் மேற்கண்ட பதிலில் தவறு கண்டால் மன்னிக்கவும் சுட்டிக்காட்டவும் திருத்திக்கொள்ளலாம்! (இன்ஷா அல்லாஹ்)

thanks: to auther

Saturday, December 19, 2009

ISLAM THE FASTEST GROWING RELIGION

- By Khadija Watson
In the last 50 years from the year 1950 until the year 2000 Islam has increased by 235 percent!! While at the same time Christianity has grown 57% and Judaism only 5%. (World Almanac and Book of Facts 1992 pg 725, U.S. News and World Report Oct 8, 1990, Encyclopedia Britannica 1989 vol. 22) As you can see these facts are not from Muslim publications where one might expect to find such things. However, they are from other well respected sources as well.
Over 1 in 5 people in the world today are Muslims!! Islam is the second largest religion with Christianity being first followed by Islam and then Judaism.
During the 1991 Gulf War 7000 American soldiers embraced Islam!! Because of the large number of service personal embracing Islam, the United States government was force to incorporate Muslim chaplains or Imams as they are called, as part of their service personal. An Imam is the counterpart of Christian pastors, Catholic priest and Jewish Rabbi. They also had to allow these new Muslim service personal time on Fridays to attend the Jummah Prayer, which is the counter part to Christian Sunday service or the Jewish Sabbath services.
Islam is the fastest growing religion in the United States . Before 911 there was an average of 1000, Americans across the United States embracing Islam every month. From the time of September 11 until November, in just two months more than 35,000 Americans embraced Islam!! (CAIR report 2001). This covers every sector of society, economic backgrounds, professions and races. One would wonder why after 911 the increase was so great, as the natural inclination would be for a decrease not an increase.
What made these people embrace Islam when these are Americans, for the most part born and raised in Christian America not Arab or Muslim emigrants? Islam does not propagate itself through healing crusades, music crusades, street corner evangelism or any of the usual strategies used by Christian and non-Christian organizations and churches. Another interesting aspect is that the women in America embracing Islam are holding more academic degrees then the men who embrace Islam! In other words, more women with Bachelors, Master's and PhD's. Why would such educated women embrace a religion that is suppose to regulate them to the status of a second class citizen? Americans are inquisitive people and when presented with the true facts are capable of coming to their own conclusion and making a rational decision.
The last few years people have started to seek in earnest to understand what Islam teaches, to find out if this a terrorist religion. So they started turning to the only independent sources which were readily available and that was the Internet and Islamic Centers. Much false propaganda has been projected by the media, government and evangelist about what they think Islam is or what they want you to believe Islam is for what ever purpose they have in mind. In the past much of the material on Islam available about the religion of Islam was not written my Muslim but others outside of the religion. Anyone who does research knows that you most authentic sources are the primary not secondary sources. In other words, one looking into the belief and practices of Islam should seek the primary sources written by Muslims themselves.
In spite of the bad press about Islam, with such large number of people embracing Islam and the population of the Muslims growing in the United States, and while it is true that Muslims are still experiencing difficulties in practicing their religion, that there is persecution and prejudices, Islam is making an impact and is slowly being incorporated into mainstream America. Every Ramadan we see Capitol Hill hosting a yearly Iftar (breaking of the daily fast during the month of Ramadan) dinner attended by Congressmen, congressional staffers, elected officials, American Muslim leaders, as well as ambassadors from Islamic nations.
Rep. John Conyers in his welcoming remarks (in 2004) said that they plan to do this on yearly bases. Retailers are also sitting up and taking notice of the ever growing Muslim population. This year IKEA highlighted the month of Ramadan with a month long campaign showing a women wearing hijab and South Asian dress, photos of Mecca, sweet trays used for the end of fast celebrations and a text explaining the religious meaning of the holiday. Although this is not as yet a nationwide mail-out campaign it is on their web site http://www.ikea.ca/. It is a first for IKEA and part of a trend by retailers to acknowledge a minority celebration. In 2004, retailers such as the Hudson's Bay Company included Ramadan greetings in flyers for The Bay, Zellers and Home Outfitters, plus posters and door signs. It will do the same for the Jewish Chanukah, Christmas and other holidays. Hallmark greeting cards is also adding a new line of cards for Ramadan and Eid celebration. For the second year running the U.S. Postal service has produced a stamp commemorating the Eid. Celebration just as they do for Christmas and Chanukah. A handful of Public Schools across the nation which in the past has closed for Christmas and Jewish holidays have now included the Muslim holiday Eid.
Frank Belluscio, a spokesman for the New Jersey School Boards Association said about his district, “We are diversifying and I am sure this is something we'll see other districts doing in the future.” Some Public Schools have even set aside a small room where Muslim high school students can go to pray in keeping with the fulfillment of their religious duty to pray 5 times a day. This is in keeping with Christian students holding prayer meeting and part of the First Amendment of freedom of religion. While these are only small first steps in the acceptance of the Fastest Growing Religion in the United States and the world, we must remember that every minority whether people or religion: German, Irish, Italian, Jews, Spanish speaking people, Japanese, Chinese, Viet Names, Hawaiians, Blacks, Native American Indians, Catholic, Mormons, Hara Krishna's, Christian sects, denominations and Occults have all at one time or another experienced suspicion, hatetred, prejudice, and persecution and yet these have never made the impact on society that Islam is making.
In the very near future Islam and Muslims will be such a part of grassroots America as to hardly be noticed. Islam does not belong to an Arab country, but is a religion that is in every county of the world. The United States is not one race of people but a blending of all nations and religions of the world and is truly a Christian, Islamic, Judeo society.
According to statistics from the U.N., Islam is now the worlds second largest religion after Christianity. The U.N. statistics state that the Islam annual growth rate of Islam is around 6.40% compared to 1.46% during the same time period for Christianity. Also according to these statistics, one in five people on the planet are Muslim (by birth or geographical reference).

Statistics from the U.N.:
Islam in North America since 1989 increased 25%
Islam in Africa since 1989 increased 2.15%
Islam in Asia since 1989 increased 12.57%
Islam in Europe since 1989 increased 142.35%
Islam in Latin America since 1989 decreased -4.73%
and Islam in Australia since 1989 increased 257.01%
Source: Islam.com
Sulthan.org.
தேங்க்ஸ்: டு Mohd.sheriff

நபிமொழி

முஆத் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து, முஆதே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உன்னை நான் பிரியப்படுகிறேன். மேலும் முஆதே! உனக்கு உபதேசம் செய்கிறேன். நீ ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் அல்லாஹும்ம அஇன்னீ அலாஃ திக்ரிக வஷுக்ரிக, வஹுஸ்னி இபாததீக'' என்று கூறுவதை விட்டு விடாதே!' என்று கூறினார்கள். (அபூதாவூது, நஸயீ)

துஆவின் பொருள்: இறைவா! உன்னை நினைவு கூரவும், உனக்கு நன்றி கூறவும், உன்னை அழகிய முறையில் வணங்கவும் எனக்கு உதவி செய்வாயாக! (ரியாளுஸ்ஸாலிஹீன்: 384) அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''அல்லாஹ், தன் அடியான் ஒருவனை விரும்பி விட்டால், ஜிப்ரீல்(அலை) அவர்களை (அழைத்து) நிச்சயமாக அல்லாஹ், இன்ன மனிதரை விரும்புகிறான். அவனை நீயும் விரும்பு!'' என்று கூறுவான். ஜிப்ரீல்(அலை) அவனை விரும்புவார். அவர் வானத்தில் உள்ளோரிடம் ''நிச்சயமாக அல்லாஹ், இன்னாரை விரும்புகிறான். எனவே அவரை நீங்களும் விரும்புங்கள்'' என்று கூறுவார். வானில் உள்ளோரும் அவனை விரும்புவார்கள். பின்பு பூமியில் அவரை (எல்லோரும் விரும்பிட) ஒப்புதல் ஏற்படுத்தப்படும்'' (பூமியில் உள்ளவர்களும் நேசிப்பர்)என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 387)

அபூஅப்துல்லாஹ் என்ற தாரிக் இப்னு உஷைம் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''லாயிலாஹ இல்லல்லாஹ்'' என்று ஒருவர் கூறி, அல்லாஹ் அல்லாதவற்றை வணங்கப்படுவதை வெறுத்தால், அவனது சொத்தும், அவனது ரத்தமும் (உயிரும்) பாதுகாப்புப் பெறும். அவனது கேள்வி கணக்கு, அல்லாஹ்விடம் உள்ளது என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 391)