Thursday, May 22, 2008

பூமியில்தான் மனிதன் வாழ முடியும்

قال تعالى: ( فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع الى حين) - البقرة
'அவ்விருவரையும் ஷைத்தான் அங்கிருந்து அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். இறங்குங்கள்! உங்களில் சிலர் சிலருக்கு எதிரிகள்! ஊங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன என்று கூறினோம்.'

பூமியில் மட்டும்தான் மனிதன் வாழ முடியும் என அல்-குர்ஆன் அடித்துக் கூறுகின்றது. சில கோள்களில் உயிரினம் வாழ்ந்த தடயம் தென்படுகின்றது என்றெல்லாம் கூறினாலும், அது நிரூபிக்கப்படவில்லை. மனிதன் பூமியில் மட்டும்தான் வாழ முடியும் என்பதனை விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள். மனிதன் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு வெப்பமும், குளிரும் பூமியில் மட்டுமே உள்ளது.
சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனை கரிக்கட்டையாக்கிவிடும். இன்னும் சில கோள்களில் காணப்படும் குளிரானது, மனிதனின் இரத்தத்தை உறைந்து போகச் செய்துவிடும். ஊயிர் வாழ அவசியமான காற்றும் பூமியில்தான் உள்ளது. ஆக்ஸிஜன் துணையுடன் சில நாட்கள் விண்வெளியில் அல்லது சந்திரனில் தங்குவதை வாழ்வது என்று கூறக் கூடாது. அது இயற்கைக்கு மாற்றமானது. அதைவிட முக்கியமாகக் கவணிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனிலிருந்து 23 டிகிரி சாய்வாகச் சுழல்கிறது. இப்படிச் சாய்வாகச் சுழல்வதால்தான் கோடை, குளிர், வசந்தம் மற்றும் இலையுதிர் காலங்கள் ஏற்படுகின்றன. வருடமெல்லாம் ஒரே சீராக வெப்பமோ குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இராது.
எழுதப்படிக்கத் தெறியாத ஒருவரால் 'இதில் தான் வாழ்வீர்கள்' என்று எவ்வாறு அடித்துக் கூற முடியும்? எல்லாக் கேள்களையும் அதன் தன்மைகளையும் படைத்த இறைவனால் மட்டுமே இப்படித் துள்ளியமாகக் கூற முடியும்.
(2:36, 7:10, 7:24, 7:25, 30:25)
- ஆக்கம்/தொகுப்பு: அபூ அரீஜ்

No comments: