Monday, May 26, 2008

இஸ்லாத்தில் பெண்களுக்கு அநீதியா?!

வல்லோனின் திரு நாமம் போற்றி
கடந்த கால சமூகங்களில் பெண்களின் நிலை பற்றி ஒரு மேலோட்டம்:
அ. கிரேக்கர்கள்:
இவர்கள் பெண்களை வியாபாரப் பொருட்களாகவே கருதினர். அவர்களுக்கென எந்த உரிமையும் கிடையாது. சொத்துரிடை, கொடுக்கல், வாங்கள் போன்ற அனைத்தும் நிராகரிக்கப்பட்டிருந்தது. உரிமைகள் அனைத்திற்கும் ஆண்களே சொந்தக் காரர்கள் என்றனர். அவர்களில் பிரபலமான தத்துவஞானியான சாக்ரடீஸ் என்பவன், உலகின் வீழ்ச்சிக்கு பெண்கள்தான் மூல காரணம் எனும் கூற்றை முன்வைத்தவன்! மேலும் பெண்கள் விஷமரத்திற்கு ஒப்பானவர்கள். அம்மரத்தின் புறத் தோற்றம் அழகானது. ஆனால் அதன் கனிகளை சிட்டுக் குருவிகள் தின்றவுடனேயே இறந்து விடுகின்றன என்று கூறினான்! (அவனது தாயும் ஒரு பெண் என்பதையும், அப்பெண் அவனை ஈன்றெடுக்க வில்லை என்றால் இவ்வுலகையே அவனால் கண்டிருக்க முடியாது என்பதையும் மறந்து விட்டான் போலும்).
ஆ. ரோமானியர்கள்:
இவர்கள் பெண்களை உயிரற்ற ஒரு பொருளாகவே கருதி வந்துள்ளனர். அவர்களிடன் பெண்களுக்கு எந்த மதிப்பும் உரிமையும் இருந்ததில்லை. பெண்கள் உயிரற்ற பிண்டமாக கருதப்பட்டதால்தான் அவர்களைக் கொதிக்கும் எண்ணெயை ஊற்றியும், தூண்களில் கட்டியும் வேதனை செய்திருக்கிறார்கள். அதுமட்டுமன்று குற்றமற்ற பெண்களைக் கூட குதிரையின் வால்களில் கட்டி அவர்கள் மரணித்து போகின்ற அளவிற்கு மிக விரைவாக ஓட்டிவிடுவார்கள்!

இ. இந்தியர்கள்:
இந்தியர்களும் பெண்கள் விடயத்தில் கொடூரமான முறையைத்தான் கடைப்பிடித்துள்ளனர். சுடங்கு சம்பிரதாயங்கள் என்று மூடநம்பிக்கையில் மூழ்கியது மட்டுமல்லாமல் பெண்கள் விடயத்தில் ஒருபடி அதிகமாகவும் இருந்துள்ளனர். அதனால் கணவன் இறந்து விட்டால், மனைவியையும் உடன்கட்டை ஏற்றி அவனது சிதையும் அவளையும் எரித்து விடுபவர்களாக இருந்துள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கூட வலுக்கட்டாயமாக ஒரு பெண்னை உடன்கட்டை ஏற்றி இருக்கிறார்கள். இன்றளவிலும் இந்தியாவில் நறை பலி கொடுக்கப்படுபவர்களில் பெண் குழந்தைகள் தான் அதிகமானவர்கள் என்பது கவணத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும்.

. சீனர்கள்:
இவர்கள் பெண்களை நற்பாக்கியத்தையும், செல்வங்களையும் அழித்துவிடக் கூடிய வெள்ளத்திற்கு ஒப்பானவர்கள் எனக் கருதினர். அவர்கள் தம் மனைவியரை உயிரோடு புதைப்பதற்கும், விற்று விடுவதற்கும் தகுதி பெற்றிருந்தனர்.
உ. யூதர்கள்:
பெண்கள் சாபத்திற்கு உரியவர்கள் என இவர்கள் கருதுகின்றனர். ஏனனெனில் அவள் தான் ஆதம் (அலை) அவர்களை வழிகெடுத்து மரக்கனியை சாப்பிடச் செய்தவள் என்பது அவர்களது நம்பிக்கை. மேலும் பெண்ணுக்கு மாதவிடாய் வந்துவிட்டால் அவள் அசுத்தமானவள், வீட்டையும் அவள் தொடும் பொருளையும் அசுத்தப்படுத்தி விடக் கூடியவள் எனவும் கருதினர். பெண்ணுக்கு சகோதரர்கள் இருந்தாள் அவள் தன் தந்தையின் சொத்திலிருந்து சிறிதும் உரிமை பெறத் தகுதியற்றவள் எனக் கருதுகின்றனர்.
ஊ. கிறிஸ்தவர்கள்:
பெண்கள் ஷைத்தான் வாயில்கள் என இவர்கள் கருதுகின்றனர். கிறிஸ்தவ அறிஞர்களில் ஒருவர் பெண் மனித இனத்தைச் சார்ந்தவள் அல்ல எனக் கூறினார். இன்னும் பூனபெஃன்தூரா என்பவன், 'நீங்கள் பெண்களைக் கண்டால் அவளை மனித இனத்தைச் சார்ந்தவள் எனக் கருதிவிடாதீர்கள். அது மட்டுமல்ல அவளை ஒரு உயிருள்ள ஜீவனாகக் கூட கருதாதீர்கள். மாறாக நீங்கள் காண்பது நிச்சயமாக ஷைத்தானின் உருவத்தைத்தான். இன்னும் நீங்கள் செவியேற்கும் அவளது சப்தம் பாம்பின் சீற்றம் போன்றது' எனக் கூறினான்.
எ. ஆங்கிலேயர்கள்:
கடந்த (19 ஆம்) நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஆங்கிலேய பொதுச் சட்டப்படி பெண்கள் பிரஜா உரிமை கொடுக்கப்படாதவர்களாகவே இருந்துள்ளனர். இதேபோல் பெண்களுக்கென எந்த உரிமையும் இருந்ததில்லை. எந்தளவுக் கென்றால் அவள் அணியும் ஆடையைக் கூட சொந்தப்படுத்திக் கொள்ள அவளுக்கு உரிமை இருந்ததில்லை. அதேபோல் எட்டாவது ஹென்றியின் காலத்தில் ஆங்கிலேயப் பாராளுமன்றம் பெண்கள் அசுத்தமானவர்கள் என்பதால் இன்ஜீலைப் படிக்கக் கூடாதென சட்டம் இயற்றியது. 1805 ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயரின் சட்டத்தில் ஒரு கணவன் தனது மனைவியை விற்பது கூடுமென்றே இருந்துள்ளது. மனைவியின் விலை ஆறு பெனி (அரை ஷிலிங்) என நிர்ணயமும் செய்யப்பட்டது. (Pநnலெஇ ளுஉhடைடiபெ என்பது ஆங்கிலேய நாணயத்தின் பெயர்கள்).

. ஸ்காட்லாண்டினர்:
1567 ஆம் ஆண்டு ஸ்காட்லாண்ட் பாராளுமன்றம் பெண்களுக்கு எந்த அதிகாரமும் கொடுக்கப்படக் கூடாதென சட்டம் இயற்றியது.
ஐ. பிரஞ்சுக்காரர்கள்:
பிரஞ்சுக்காரர்கள் 586 ஆம் ஆண்டில் பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்களா? இல்லையா? என அய்வு செய்த முடிவெடக்;க ஒரு சபையை அமைத்தனர். ஆச்சபை பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்கள்தான். எனினும் அவர்கள் ஆண்களுக்குப் பணிவிடை செய்வதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என முடிவு செய்தது!
. அரேபியர்:
இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர், அரேபியரிடத்தில் பெண்கள் இழிபிறவிகளாகவே கருதப்பட்டனர். அவர்களுக்கு சொத்துரிமை முதற் கொண்டு எந்த உரிமையும் வழங்கப்பட்டிருக்கவில்லை. பெண் என்பவள் ஒரு பன்டமாகத்தான் கருதப்பட்டிருக்கிறாள். அதுமட்டுமல்லாது அவர்களில் பெரும்பாலானோர் தமது பெண் மக்களை துர்ச் சகுணமாகக் கருதி உயிருடன் புதைப்பவர்களாக இருந்துள்ளனர்.
இவ்வாறு வரலாற்றை பின்னோக்கினால் ஒவ்வொரு சமூகமும் பெண்கள் விடயத்தில் கீழ்த்தரமான சட்டங்களைத்தான் இயற்றி அவற்றைக் கடைப்பிடித்து வந்துள்ளது. உலக வரலாற்றில் பெண்களுக்கு ஏற்பட்டிருந்த கலங்கத்தைத் துடைத்து, அவர்களுக்கும் ஆண்களைப் போலவே எல்லா விடயங்களிலும் சம அந்தஸ்தும், உரிமையும் இருக்கின்றது என்பதை உலகுக்கு உணர்த்தவே இஸ்லாம் உதித்தது என்றால் அது மிகையாகாது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
- தொகுப்பு/ஆக்கம்: நிர்வாகி

No comments: