அரக்கத்தனமான இத்தாக்குதலில் ஊனமானது பாலஸ்தீனம் மட்டுமல்ல.. ஒட்டு மொத்த உலகமும் தான்...
"அற்ப உலகமே நீ என்னத்தெ சொல்ல, நா என்னத்தெ கேட்க" என்று அடம் பிடிக்கும் இஸ்ரேல் அரசே உன் கொட்டம் இன்றில்லா விட்டாலும் ஒரு நாள் ஒழியும்... அத்தினமே உலகம் அமைதி பெறும்.
வானத்திலிருந்து வரும் இறை வேதனையை எந்த சக்தி கொண்டு தடுக்க முடியும்? எந்த ரேடாரில் கணிக்க முடியும்?
இறைவா இத்துடன் வரும் படத்தைக் கூட பார்க்க சக்தி அற்றவர்களாக நாம் இருக்கிறோம்....தீவிரவாதம், தீவிரவாதம் என்று சொல்லி உலகில் தீவிரவாதத்தை பிரபல்யப்படுத்தியது யார்?
அதற்காக அணு,ஆயுத விற்பனையை அகிலமெங்கும் அமோகப்படுத்தியது யார்? சொல் மனமே......
பெற்றவள் மடியில் விளையாட வேண்டியச் சிறுவன், பெற்றவளை மடியில் இட்டு மரணப் படுக்கையில் இட்ட கோரம்...
அந்தோ பாவம்... ஈரமற்ற இதயம்...பாவிகளின் கொடூரம்....
இதையெல்லாம் கண்டும் காணாத உலகம்...
இதனால் ஊமையாகிப் போன ஐ.நா. சபை..
ஊனமாகிப்போன போர்க்கால நியதி.. குருடாகிப் போன உலக நாடுகள்... செவிடாகிப் போன உலக வல்லரசுகள்..
உலக தீவிரவாத தாக்குதலுக்குப் பொங்கியெழும் உலகம் இதில் மட்டும் மங்கிப்போனது ஏனோ?
ஒரு கன்னத்தில் அரைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று யார் சொன்னது?
ஒரு கன்னத்தில் அரைந்தால் நாம் ஒட்டு மொத்த குலத்தையல்லவா அழிப்போம்... அட சண்டாலப்பாவிகளா..சனியன் பிடித்த பைத்தியங்களா...
உன் அடக்குமுறையால் நீ ஒன்றும் பல நூறு ஆண்டுகள் ஆளப்போவதில்லை இவ்வுலகில்.
மரணத்தை ஒவ்வொரு உயிரும் புசித்தே தீர வேண்டியுள்ளதடா மடையா..... உனக்கு சாவு மணி அடிக்க அந்த இறைவனேப் பொறுப்பேற்றாலும் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை...
சுறாக்களை வேட்டையாடுகிறோம் என்று சொல்லி பச்சிளம் குஞ்சுக்களையும் வேட்டையாடி விட்டாயே....பாவி....
இவ்வேசக்கார உலகின் முன் நீ ஒரு செல்லப்பிள்ளை தான். ஆனால் அகிலத்தை படைத்த அந்த இறைவன் முன் நீ ஒரு செல்லாக்காசு தானடா....
அபகரிக்கப்பட்ட உன் நாடு ஒரு நாள் அல்லோலப்படும் பாரு....
பாரபட்ச உலகமே உனக்கு ஒரு நாள் பாடை கட்டப்படும் அதுவே இறுதிநாள்..
அதுபற்றி உனக்கு நன்றாகவேத் தெரியும்...தெரிந்தும்
நீ - சும்மா இருக்கிறாயே இது நியாயமா? தர்மமா? இது தான் உன் வேசமா?
உன் போலி வேசங்கள் களையப்பட்டு, சாயங்கள் வெளுக்கப்பட்டு நிராயுதபாணியாக ஏக இறைவன் முன் நிற்க வேண்டியதை மறந்து விட்டாயடா....
தன் தாயின் கடைசி மூச்சை தன் மடியில் வைத்து பார்க்கும் இப்பாலகன். நாளை மன்னாதி மன்னனாகுவானா?
இல்லை உன்னைக் கொல்ல புறப்படும் கொலைவெறியன் ஆவானா?
யார் அறிவார் அந்த இறைவனைத் தவிர....
பெற்ற அம்மா இல்லாத உலகில் அவன் முன் நீ கோடான கோடியைக் கொண்டு கொட்டினாலும் அவன் அதை ஒரு குப்பையாகத் தானடா மதிப்பான்...
காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது உனக்கு மட்டும் தானா?இறைவா....உலகில் நீயே எல்லா அட்டூழியங்களையும், அனாச்சார களியாட்டங்களையும், அடக்கு முறைகளையும், அத்துமீறல்களையும், உரிமைக்குரல்வளைகள் நெறிக்கப்படுவதையும் அசராது பார்த்துக் கொண்டிருப்பவன்...உன் தீர்ப்பை எவன் மாற்ற முடியும்?
நீ பொறுமையாளர்களுடன் இருக்கிறாய்...
பொறுத்திருக்கிறோம் உன் தீர்ப்பிற்காக...
அழுகிறோம் உன் அரவணைப்பிற்காக...
எங்கள் ஒட்டு மொத்த உள்ளக்கு முறலுக்கு இன்றில்லாவிட்டாலும் ஒருநாள் உன் விடை இருக்கிறது.
நீயே உலக அடக்குமுறைகளை தகர்த்தெறிந்து அமைதி நிலவச் செய்வாய்...
வேசக்கார போலி வல்லரசுகளை மண்ணைக்கவ்வச் செய்ய உனக்கு ஒரு சில மணித்துளிகளே மிகுதியானது...
உலகில் நீதி கிடைக்க வாய்ப்பில்லை நீயே தீர்ப்பு வழங்குவாயாக.. அகிலத்தின் அதிபதியாய்... நீதிக்கெல்லாம் நீதி அரசனாய்....
உன்னிடமே விட்டு விடுகிறோம்..
விடியல் என்ற நம்பிக்கையில்.. நீயேக் காத்தருள்வாயாக உலகின் அப்பாவி மக்களை....
நீர்க்குமிழி போன்று நிலையற்ற இவ்வுலகில் பல்லாண்டு வாழ்வோம் என எண்ணிக் கொண்டிருக்கும் கொடியவர்களின் கொட்டம் அடங்கி, வல்லவர்கள், நல்லவர்கள் பல பெருகி உலகெங்கும் அமைதி நிலவிட நீயே உதவிடுவாய் இறைவா....
இறுதியில் முடிக்க வார்த்தைகள் இன்றி உள்ளக்குமுறலுடன்...அபுஹசன்...
thanks: Br. Muneeb
No comments:
Post a Comment