Friday, October 10, 2008

கல்வியின் சிறப்பு அல்லாஹ் கூறுகிறான்

இறைவா கல்வியை எனக்கு அதிகமாக்குவாயாக என்று நபியே நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் : 20:114 )

அறிந்தவர்களும், அறியாதவர்களும் சமமாவார்களா? என, (நபியே) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் : 39:9 )

உங்களில் இறை நம்பிக்கையாளர்களுக்கும், அறிவுடையோருக்கும் பல பதவிகளை அல்லாஹ் வழங்குவான். ( அல்குர்ஆன் : 58:11 )

அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே. (அல்குர்ஆன் : 11:85 )

முஆவியா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''அல்லாஹ் ஒருவருக்கு நல்லதை நாடிவிட்டால், மார்க்க விஷயத்தில் அவரை அறிஞராக்குவான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1376 )

இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''இருவர் விஷயத்திலே தவிர பொறாமை கூடாது. 1) அல்லாஹ் செல்வத்தை வழங்கி, அதை உரிய வழியில் செலவு செய்பவர். 2) அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதன் மூலம் தீர்ப்பளித்து, பிறருக்கு கற்றுத் தருபவர்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1377 )

அபூமூஸா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''நேர்வழி மற்றும் கல்வி ஞானம் ஆகியவற்றுடன் என்னை அல்லாஹ் அனுப்பி வைத்ததற்கு உதாரணம் : பூமியை வந்தடைந்த மழையின் உதாரணம் போலாகும். அதில் ஒரு பகுதி தண்ணீரை ஏற்றுக் கொண்டு, செடி-கொடிகளை அதிக அளவில் விளையச் செய்கிறது. தண்ணீரை தேக்கி வைத்து, அதன்மூலம் மக்களுக்கு பயனளித்த கெட்டியான பூமியாக உள்ளது. மக்களும் அதிலிருந்து குடித்தார்கள். (கால் நடைகளுக்கு) குடிக்கக் கொடுத்தார்கள். விவசாயம் செய்தார்கள். அந்த பூமியின் மற்றொரு பகுதி, கட்டாந்தரையாகும். அது தண்ணீரையும் தேக்கி வைக்காது. செடிகளையும் முளைக்கச் செய்யாது. இதில் முதல் உதாரணம், அல்லாஹ்வின் மார்க்கத்தை விளங்கி, அல்லாஹ் என்னை அனுப்பி வைத்த மார்க்கம் மூலம் பயன் அளித்து, (அதாவது) தானும் கற்று, பிறருக்கும் கற்றுக் கொடுத்தவனுக்குரிய உதாரணமாகும். (கட்டாந்தரை உதாரணம்) மார்க்கத்தின் பக்கம் தன் தலையைக் கூட திருப்பாமல், அல்லாஹ் என்னை எதன் மூலம் அனுப்பினானோ அந்த வழியை ஒப்புக் கொள்ளாமல் இருப்பவனுக்கும் உதாரணமாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1378 )

ஸஹ்ல் இப்னு ஸஹ்து (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''நபி(ஸல்) அவர்கள், அலீ(ரலி) அவர்களிடம், ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அல்லாஹ் உம் மூலம் ஒருவனுக்கு நேர்வழி காட்டுவது, சிவப்பு நிற ஒட்டகைகள் உமக்கு இருப்பதை விட சிறந்ததாகும்'' என்று கூறினார்கள்.(புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1379 )

''ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''.
(நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

Thanks: Alaudeen

No comments: