Sunday, October 26, 2008

பல் துலக்குவதின் சிறப்பு, மற்றும் இயற்கை நடைமுறைகள்

அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்: ''என் சமுதாய – மக்களுக்கு சிரமமாக இருக்கும் என நான் பயப்படவில்லையானால், ஒவ்வொரு தொழுகையின் போதும் பல்துலக்கும் படி அவர்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன் என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்)
ஹுதைஃபா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''நபி (ஸல்) அவர்கள் தூக்கத்திலிருந்து எழுந்தால், பல்துலக்கும் குச்சியால் பல் துலக்குவார்கள். (புகாரி, முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்)

அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''நபி(ஸல்) அவர்களுக்காக அவர்கள் பல் துலக்கவும், அவர்கள் உளுச்செய்யவும் நாங்கள் தண்ணீரை தயாராக எடுத்து வைத்திருப்போம். இரவில் அவர்களை எழுப்பி நல்வணக்கம் புரிய, தான் நாடியபடி அல்லாஹ் அவர்களை எழுப்புவான் (எழுந்தவுடனே) நபி (ஸல்) அவர்கள் பல் துலக்குவார்கள். உளுச் செய்வார்கள். தொழுவார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)

அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''பல் துலக்குவது, வாயை சுத்தப்படுத்தும். இறைவனை திருப்திபடுத்தும்' என்று நபி (ஸல்) கூறினார்கள். (நஸயீ, இப்னு குஸைமா)( ரியாளுஸ்ஸாலிஹீன்)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''இயற்கை செயல்கள் ஐந்தாகும். 1.'கத்னா' செய்தல், 2. மறைவுறுப்பு முடியை நீக்குதல், 3. நகங்களை வெட்டுவது, 4. 'அக்குள்' முடிகளை நீக்குவது, 5. மீசையை குறைப்பது என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்)
Thanks: for Translator

No comments: