Monday, March 2, 2009

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள்

எஸ்.எச்.எம் இஸ்மாயில் ஸலபி
ஆசிரியர் உண்மை உதயம் இஸ்லாமிய மாத இதழ்

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள்

அல்குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களுமே இஸ்லாத்தின் மூலாதாரங்களாகும். அல்குர்ஆனில் ஷஅல்லாஹ்வைப் பின்பற்றுங்கள், அவனது தூதரையும் பின்பற்றுங்கள் என அனேக ஆயத்துக்கள் கூறுகின்றன. அவனது தூதரைப் பின்பற்றுங்கள் என்ற கட்டளையைத்தான் ஹதீஸைப் பின்பற்றுதல் என நாம் புரிந்து செயற்பட்டு வருகின்றோம். இந்த வகையில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நம்புவதும் அவற்றை ஏற்று நடப்பதும் நபி(ச) அவர்களது நபித்துவத்தை நம்புவதையும் அதை ஏற்றுக் கொள்வதையும் வெளிப்படையாகக் காட்டும் முக்கிய அம்சங்களாகும்.
இந்த அடிப்படையில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை ஏற்க மறுப்பது நபித்துவத்தின் ஒருபகுதியை மறுப்பது போன்ற முக்கிய பிரச்சினையாக நோக்கப்பட வேண்டிய அம்சமாகும். இந்த அடிப்படையில் நாம் அலசப் போகும் அம்சம் அவசியமானதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும் என்பதை வாசகர்கள் முதலில் கவனத்திற் கொள்ள வேண்டும்.
தனிநபர் ஒருவர் மீது கொள்ளும் பற்றும், பாசமும், அவர் செய்த தியாகத்தின் மீதும், புரட்சியின் மீதும் கொள்ளும் காதலும் கண்ணியமும் நபித்துவத்தில் ஒரு பகுதி மறுக்கப்பட்டாலும் பரவாயில்லை என்கின்ற நிலைக்கு எம்மைக் கொண்டு சென்று விடக்கூடாது என்பதற்காகவும், கருத்து விமர்சனம் செய்வது அக்கருத்துடையவரின் கண்ணியத்தை மறுப்பதாகாது என்பதை தெளிவுபடுத்தவுமே இந்த முன்னுரையை வழங்குகின்றோம்.

ஹதீஸ்களை மறுப்போர்:

இஸ்லாமிய வரலாற்றில் ஹதீஸ்களை மறுப்போர் ஆரம்ப காலந்தொட்டே உருவாகி விட்டனர்.
சிலர் ஹதீஸ்களை முழுமையாக மறுக்கின்றனர். இவர்கள் இன்றுவரை ஷஅஹ்லுல் குர்ஆன் என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். மற்றும் சிலர் குர்ஆனில் இல்லாத புதிய சட்டங்களைத் தரும் ஹதீஸ்களை மறுத்தனர். மற்றும் சிலர் ஷஆஹாத் எனும் வகை சார்ந்த ஹதீஸ்களில் ஹலால், ஹராம், அகீதா பற்றிப் பேசும் ஹதீஸ்களை மறுத்தனர். மற்றும் சிலர் அல்குர்ஆனுக்கு முரண்படுவதாகத் தோன்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுத்தனர். ஹவாரிஜ்கள், முஃதஸிலாக்கள் போன்றோர் இந்த வகையில் பல்வேறு ஹதீஸ்களை மறுத்துவந்தனர். நவீனகால அறிஞர்கள் பலரும் இந்தத் தவறில் வீழ்ந்துள்ளனர். முஹம்மத் அல் கஸ்ஸாலி எனும் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பைச் சேர்ந்த அறிஞர் இவ்வகையில் பல ஹதீஸ்களைப் பகுத்தறிவு ரீதியில் ஆய்வு செய்து மறுத்துள்ளார். பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமியின் ஸ்தாபகர் அபுல் அஃலா மவ்தூதி (ரஹ்) அவர்கள் குறித்தும் இத்தகைய விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவ்வாறே முஹம்மத் அப்துஹு போன்ற அறிஞர்களும் பல அறிவிப்புக்களை மறுத்துள்ளனர்.
இவர்களது ஹதீஸ் துறை சார்ந்த இத்தகைய விமர்சனங்கள் பாமர மக்களிடம் எந்தத்தாக்கத்தையும் எற்படுத்தவில்லை. இவர்களை நேசிக்கும் சகோதரர்களும் இவர்களது இத்தகைய கருத்துக்களை மக்கள் மன்றத்திற்குக் கொண்டுவரவில்லை. இவர்கள் சார்ந்த அமைப்பைச் சேர்ந்த பலரும் இவர்களின் இத்தகைய கருத்துக்களின் தாக்கத்திற்குக் கூட உட்படவில்லை. ஆயினும், தமிழ் உலகில் இத்தகைய கருத்துக்கள் பரவலாக பாமரர்கள் மத்தியிலும் கூட இடம் பிடித்ததற்கு இந்தக் கருத்தை முன்வைத்த அறிஞர் பி. ஜெய்துலாப்தீன் உலவி அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கே காரணமாகும்.
இவர் கடந்த பல ஆண்டுகளாக குர்அன், சுன்னாவை மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்துவருபவர். சமூக எதிர்ப்புக்கள் எதையும் கவனத்திற் கொள்ளாது துணிச்சலாக களப்பணி ஆற்றிவருபவர். சுமார் 20 வருடங்களாகத் தொய்வின்றித் தொடராகப் பணியில் ஈடுபட்டு வருபவர். அல்லாஹ் இவருக்கு வழங்கியிருக்கும் அபரிதமான நாவன்மை, வாதம் செய்யும் வலிமை, எதையும் எவரும் புரியும் வண்ணம் இலகுவாக விளக்கும் ஆற்றல் என்பன பாமர மக்களிடம் இவருக்குப் பெருத்த செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளது.
இதே வேளை வழிகெட்ட காதியானி போன்ற அமைப்புக்களுடன் அவர் விவாதம் செய்தமையும் அவர் நடத்தி வரும் இஸ்லாம் ஓர் இனிய மர்க்கம் நிகழ்ச்சியும் தவ்ஹீத் வட்டாரத்தையும் தாண்டி பெரியதோர் இமேஜை அவருக்கு ஏறங்படுத்தியுள்ளது.

இந்தவகையில் இவரது கருத்துக்கள் உடனுக்குடன் பல்லாயிரம் மக்களைச் சென்றடைகின்றன. இவர் மீது மக்கள் அபரிமிதமான நம்பிக்கை வைத்திருப்பதால் அவர் கூறுவதுதான் சரி என்ற மனநிலைக்குக் கூட பலரும் வந்துள்ளனர். இந்த வகையில் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் பலவற்றை மறுக்கும் இவரது சிந்தனை தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியில் பரவலாகத் தாக்கம் செலுத்தியுள்ளது.
எனவே, இது குறித்த மாற்று விளக்கம் ஒன்றை மக்கள் மன்றத்திற்கு வைக்கும் தேவையுள்ளது. இந்த நோக்கத்தில்தான் இக்கட்டுரை வரையப்படுகின்றது.

அன்பான வேண்டுகோள்:

வாசகர்களிடம் அன்பான ஒரு வேண்டுகோளை முன்வைக்கின்றோம். நீங்கள் இந்தக் கட்டுரை முடியும் வரை நிதானமாக நடுநிலையோடு இதனை வாசிக்க வேண்டும். எவ்வளவோ தியாகங்கள் செய்த நபித்தோழர்கள், அறிஞர்கள், இமாம்களின் தவறான கூற்றுக்களைக் கூட மறுக்கத் துணிந்த நாம் ஒரு தனிநபர் அவர் எவ்வளவுதான் சேவை செய்திருந்தாலும் கூட அவரது கருத்துக்கள் தவறாக இருந்தாலும் மறுக்கக் கூடாது எனக் கருதுவது குராபிகளின் மனநிலையை விட மோசமானதாகும்.
எனவே, அவரது கருத்தை மறுக்கலாமா? இவரது கருத்தை மறுக்கலாமா? என மெளனம் காத்து உண்மையை மறைக்க முடியாது என்பதை வாசகர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே, நடுநிலையோடு முழுமையாக வாசித்து முடிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

புதிய கருத்து

அறிஞர் P.j 20 வருடங்களுக்கு மேலாக பிரச்சாரம் செய்து வந்தாலும் குர்ஆனுக்கு முரண்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்ற அவரது நிலையும் அவரது பிரச்சாரமும் அவரிடம் அண்மையில் ஏற்பட்ட மாற்றமாகும் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆரம்ப காலப் பிரச்சாரத்தில் அவரிடம் இந்த நிலை இருக்கவில்லை.
அவரது கருத்துக்கள் மறுக்கப்படும் போது அப்போது எதிர்க்காதவர்கள் இப்போது எதிர்க்கிறார்கள் என்றால் மார்க்கத்திற்காக அல்ல தனிப்பட்ட கோபத்திற்காக எதிர்க்கிறார்கள் என்று தப்புப் பிரச்சாரம் செய்யப்படுவதுண்டு. அது தவறு, இவரது இந்தக் கருத்து அவரது புதிய நிலைப்பாடு என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
அத்துடன் பல தவ்ஹீத் அழைப்பாளர்கள் கொள்கையில் இருந்து தடம் புரண்டுவிட்டதாகவும் அவர் மட்டுமே அன்றிலிருந்து இன்று வரை கொள்கையில் தடம் புரளாhமல் உறுதியாக இருப்பதாகவும் பேசப்படுகின்றது. இது தவறு. ஹதீஸ் துறையில் அவரிடம்தான் தடம்புரள்வு ஏற்பட்டது என்பதையும் உணர்த்தும் கடமையில் இருப்பதால் இது குறித்து சிறிது விளக்க வேண்டிய அவசியமுள்ளது.

அறிஞர் P.j அவர்கள் காதியானிகளுடன் ஒரு விவாதம் செய்தார்கள். அந்த விவாதத்தின் மூலம் தமிழ் உலகில் காதியானிகளின் கொட்டம் அடக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். இதற்காக அவருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். இந்தக் காதியானிகளுடன் விவாதம் தொடர்பாகக் கடிதப் பரிமாற்றம் நடந்தது. அந்தக் கடிதங்கள். 'காதியானிகளின் கல்லறைப் பயணம்' என்ற தலைப்பில் 1988 அக்டோபர் அல் ஜன்னத் இதழுடன் இணைத்து வெளியிடப்பட்டது.
அப்போது காதியானிகள் இப்போது இவர் இருக்கும் நிலைப்பாட்டில்தான் இருந்தனர். அவர்கள் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்க முடியாது என எழுத அதை மறுத்து P.j அவாகள் பல இடங்களில் எழுதியிருக்கின்றார்கள்.

உதாரணமாக:
ஆதாரபூர்வமான ஸனதுகளுடன் உள்ள ஹதீஸ்கள் என்று ஏற்கப்படும் ஹதீஸ்களை எக்காரணம் கொண்டும் மறுக்கக் கூடாது.
இவ்வாறே
27-05-1988 தேதியிட்ட கடிதத்தில் இரண்டாவது அம்சமாக ஷதிருக்குர்ஆனுக்கு ஹதீஸ் முரண்படும் என்ற உங்கள் கூற்று ஏற்க முடியாது. ஆதாரபூhவமான எந்த ஹதீஸையும் மறுக்கவே கூடாது என்பது எங்களின் நிலை. திருக்குர்ஆனுடன் எந்த ஆதாரபூhவமான ஹதீஸ்களும் முரண்படுகின்றது என்று நீங்கள் கூறினால் முரண்படவில்லை என நாம் நிரூபிப்போம்........... என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அந்தக் காடிதங்களில் பல இடங்களில் குர்ஆனுக்கு ஆதாரபூhவமான ஹதீஸ்கள் முரண்படாது. சுமார் 50 ஹதீஸ்கள் அளவில் முரண்போல் தோன்றும் ஆனால் முரண் இல்லை என்று தான் அன்று கூறிவந்தார்.

இவ்வாறே
2001 ல் Pது அவர்களால் மொழிபெயர்;க்கப்பட்ட சுனன் திர்மதி வெளியிடப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பில் 'அல்குர்ஆனும் ஆதாரபூர்வமான நபிமொழிகளும்' என்ற தலைப்பில் முழுமையாக ஹதீஸ்களை மறுப்பவர்களுக்கு அழகானதொரு மறுப்பை Pது அவர்கள் அளித்துள்ளார்கள்.

அதிலே ஹதீஸை மறுப்பவர்கள் நான்கு பிரதான காரணங்களை முன்வைத்து ஹதீஸ்களை மறுப்பவர்கள் குறிப்பிடுகின்றார்கள். அவையாவன:
1. ஹதீஸ்களில் முரண்பாடுகள் உள்ளன.
2. குர்ஆனுடன் ஹதீஸ்கள் முரண்படுகின்றன.
3. ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டுமென்று கூறுவோர் பல கூறுகளாகப் பிரிந்து விட்டனர்.
4. குர்ஆனைப் போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட வில்லை.

என்றெல்லாம் காரணங்கள் கூறியே ஹதீஸ்களை நிராகரிக்கச் சொல்கின்றனர்.
ஹதீஸ்களைப் புரக்கணிக்க வேண்டும் என்பதற்கு இவர்கள் கூறும் இந்தக் காரணங்களை குர்ஆன் விசயத்திலும் கூற இயலும். இது பற்றி இங்கு விரிவாக அலசுவோம் என்று தொடர்கிறது அவ்விளக்கம்.
(சுனன் திர்மிதி நூல் அறிமுகம் யு25)
மொத்தமாக ஹதீஸ்களை மறுப்பதற்குக் கூறப்பட்ட நான்கு காரணங்களில் மூன்றாவது காரணம் தவிர மற்றைய மூன்று காரணங்களையும் கூறி இன்று P.j அவர்கள் ஆதாரபூhவமான ஹதீஸ்களை மறுக்கின்றார்.

இதில் அச்சப்பட வேண்டிய மற்றுமொரு அம்சமுமுண்டு. இந்த குறைகளைக் குர்ஆன் விசயத்திலும் கூற முடியம் என்று வேறு குறிப்பிட்டுள்ளார்கள். இது ஹதீஸுடன் மட்டும் நிற்குமா? குர்ஆனுக்கும் தாவுமா? என்று அச்சப்பட வேண்டியுள்ளது. இவர் இவ்வளவுடன் நின்று கொண்டாலும் இவருக்குப் பின்னால் இதே அடிப்படையில் வருபவர் குர்ஆன் விசயத்திலும் கூட ஐயம் எழுப்ப வாய்ப்புள்ளதையே இது எடுத்துக் காட்டுகின்றது.

இதுவரை நாம் குறிப்பிட்டதிலிருந்து குர்ஆனுக்கு முரண்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்ற அவரது தவறான நிலைப்பாடு
2002 க்குப் பின்னர்தான் அவரிடம் எற்பட்ட கொள்கைத் தடம்புரள்வே தவிர இருபது வருட பிரச்சாரத்தில் கிடையாது என்பதைப் புரிந்திருப்பீhகள்.
அடுத்தாக ஆரம்பத்தில் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மட்டும் குர்ஆனைப் பாதுகாப்பதற்காக மறுக்க வேண்டும் எனக் கூறியவர்கள் பின்னர் விஞ்ஞானத்திற்கு முரண்படுகிறது என்ற காரணத்தினாலும் ஹதீஸ்களை மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மறுக்கப்படும் ஹதீஸ்

சூனியம்
தமிழ் உலகில் நபி (ச) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஆதாரபூர்வமான ஹதீஸே முதலில் மறுக்கப்பட்டது. பின்னர் அதற்கு விமர்சனம் எழுந்ததால் அதை நியாயப்படுத்த இன்னும் பல ஹதீஸ்கள் மறுக்கப்பட்டன.
ஆரம்பத்தில் P.j அவர்கள் பில்லி சூனியம் என்ற பெயரில்
(2:102) வசனத்திற்கு விளக்கமாக ஒரு கட்டுரையை எழுதினார்கள். பின்னர் அது பில்லி சூனியம் என்ற பெயரில் தனிப் புத்தகமாக வெளிவந்தது.
அப்போது சூனியம் இருக்கின்றது. ஆனால் அதன் மூலம் நினைத்ததையெல்லம் செய்ய முடியாது. அல்லாஹ்வுடைய நாட்டம் இருந்தால் அதன் மூலம் பாதிப்பு ஏற்படும். சூனியத்தின் அதிகபட்ச பாதிப்பு கணவன் - மனைவிக்கிடையில் பிரிவை ஏற்படுத்துவது போன்ற கருத்துக்களை முன்வைத்து நபி (ச) அவாகளுக்கு சூனியம் செய்யப்பட்டதைச் சரிகண்டு எழுதியிருந்தார். நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதால் அவரது தூதுத்துவத்தில் அது எந்தப் பாதிப்பையும் எற்படுத்தவில்லை என்றும் எழுதியிருந்தார்.
பின்னர் நபி (ச) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஹதீஸை பல்வேறு வாதங்களை முன்வைத்து மறுத்து வருகின்றார். அதேவேளை சூனியம் என்று ஒன்றில்லை. சூனியத்திற்கு எந்தத் தாக்கமுமில்லை என்று நேரடியாக குர்ஆனுக்கு முரணாகவே எழுதியும் பேசியும் வருகின்றார். இதைப் பார்க்கும்போது ஹதீஸ்கள் கூட குர்ஆனுக்கு முரண் என்பதற்காக அல்லாமல் தனது பகுத்தறிவிற்கு முரண்படுகிறது என்பதற்காகத்தான் மறுக்கப்பட்டு வருகின்றதோ என்ற ஐயம் எழுகின்றது. எனவே, முதலில் சூனியம் என்றதொன்று இருக்கின்றது. குர்ஆன் கூறும் சூனியம் வெறும் மெஜிக் அல்ல என்பது குறித்து நாம் தெளிவு பெறவேண்டியுள்ளது. அதன் பின்னர் நபி (ச) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸ் சம்பந்தப்பட்ட வாதங்களையும் நோக்கலாம்.

அல்குர்ஆனும் சூனியமும்
அல்குர்ஆனில் சூனியம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட பல பதங்களைக் காணலாம்
"ஸிஹ்ரு" என்ற பதம் சுமார்
12 இடங்களிலும் "அஸ்ஸிஹ்ரு"
6 இடங்களிலும் "அஸ்ஸஹரது" என்பது
8 இடங்களிலும் "ஸாஹிர்" (சூனியக்காரன்) என்பது
7 இடங்களிலும் "அஸ்ஸாஹிர்" என்பது
2 இடங்களிலும் "அஸ்ஸாஹிரூன்" என்பது
1 இடத்திலும் "மஸ்ஹூரா" என்பது
3 இடங்களிலும் "அல்முஸஹ்ஹரீன்" என்பது
2 இடங்களிலும் இடம்பெற்றுள்ளன.
இல்லாத ஒன்றைத்தான் அல்குர்ஆனில் இத்தனை இடங்களில் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளானா?

சூனியம் பற்றி
2:102 வசனம் மிக விரிவாகப் பேசுகின்றது. அந்த வசனத்தின் அடிப்படையான சில அம்சங்களை இங்கே நோக்குவோம்.

'(யூதர்களான) அவர்கள், சுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் ஓதியதைப் பின்பற்றினர். சுலைமான் நிராகரிக்க வில்லை. மாறாக, ஷைத்தான்களே நிராகரித்து, மனிதர்களுக்கு சூனியத்தையும், பாபிலோனில் 'ஹாரூத், மாரூத்' என்ற இரு வானவர்கள் மீது இறக்கப்பட்டதையும் கற்றுக்கொடுத்தனர். 'நாம் சோதனையாக இருக்கின்றோம். (இதனைக் கற்று) நிரா கரிப்பாளனாக நீ ஆகிவிடாதே' என்று அவ்விருவரும் கூறாது எவருக்கும் கற்றுக் கொடுத்ததில்லை. அவ்விருவரிடமிருந்தும் கணவன் மனைவிக்கிடையில் பிரிவினையை உண்டு பண்ணக் கூடியதைக் கற்றுக் கொண்டனர். அவர்கள் இதன் மூலம் அல்லாஹ்வின் அனுமதியின்றி ஒருவருக்கும் தீங்கிழைக்கக் கூடியவர்களாக இல்லை. அவர்கள் தங்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்காத, தங்களுக்குத் தீங்கிழைப்பதையே கற்றுக் கொண்டனர். மாறாக யார் இதை விலைக்கு வாங்குகிறாரோ அவருக்கு மறுமையில் எந்தப் பங்கும் இல்லை என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். அவர்கள் அறிபவர்களாக இருந்தால், எதற்காகத் தம்மை விற்றார்களோ அது மிகவும் கெட்டதாகும்.
(2:102)

1. சூனியத்தைக் கற்றுக்கொடுப்பது நிராகரிப்பை எற்படுத்தும். ஏனெனில் ஷைத்தான் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்ததினால் காபிர்களானதாக இந்த வசனம் கூறுகின்றது.
2. சூனியத்தைக் கற்பதும் குப்ராகும். ஏனெனில், ஹாரூத், மாரூத் இருவரும் தம்மிடம் சூனியத்தைக் கற்க வருபவாகளிடம் நாங்களே சோதனையாக இருக்கின்றோம் நீங்கள் நிராகரித்து விடாதீர்கள் என்று கூறியுள்ளனர்.
3. அதன் மூலம் கணவன்-மனைவிக்கிடையே பிரிவினை உண்டுபண்ண முடியும்.
4. அதில் தீங்கு உண்டு. ஆனால் அல்லாஹ்வின் அனுமதியின்றி அவர்களால் யாருக்கும் எந்தத் தீங்கையும் சூனியத்தின் மூலம் செய்ய முடியாது.
5. சூனியத்தைக் கற்பது நன்மையளிக்காது. தீங்குதான் விளைவிக்கும்.
6. தங்களை விற்று சூனியத்தை வாங்கிக் கொண்டவர்களுக்கு மறுமையில் அழிவே.

இத்தகைய அடிப்படை அம்சங்களை இந்த வசனம் கூறுகின்றது. சூனியத்தின் மூலம் கணவன்-மனைவிக்கிடையே பிரிவினை உண்டுபண்ண முடியும் அல்லாஹ் நாடியால் அதன் மூலம் தீங்கு உண்டாகும் என்று தெளிவாகக் குர்ஆன் கூறும்போது பகுத்தறிவு வாதத்திற்கு குர்ஆனைவிட கூடுதல் முக்கியத்துவமளித்து சூனியத்தை முழுமையாக மறுக்கலாமா?
சூனியத்திற்கு கோல்மூட்டுதல் என்று மொழியாக்கம் சொன்னால் கோல்மூட்டுவதற்காக யாராவது வகுப்பு வைப்பார்களா? அதைப் படிக்க மக்கள் போவர்களா? "ஸிஹ்ரு" என்பதற்கு மெஜிக் என அர்த்தம் செய்தால்
மெஜிக் பார்த்தால் கணவன்-மனைவிக்கிடையே பிளவு வருமா? மெஜிக்கைக் கற்பதும் கற்றுக் கொடுப்பதும் குப்ராகுமா?
மெஜிக் தான் சூனியம் என்றால் உங்களது மாநாடுகளில் மந்திரமா? தந்திரமா நிகழ்ச்சியிலே மெஜிக் கற்றுக் கொடுக்கப்படுகின்றதே இலட்சக் கணக்கில் மக்களைச் சேர்த்து மெஜிக்கைக் கற்றுக் கொடுத்து நீங்களும் காபிராகி அவர்;களையும் காபிராக்கி அனுப்புகின்றீர்களா? சூனியத்தைச் ஷைத்தான் கற்றுக் கொடுத்ததாக குர்ஆன் கூறுகின்றது. சூனியம் என்பது மெஜிக்கைக் குறிக்கும் என்றால் அதைக் கற்றுக் கொடுக்கும் நீங்கள் யார்? ஏழு பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொள்ளுமாறு நபி (ச) அவர்கள் கூறியுள்ளார்களே! அதில் இரண்டாவதாக சூனியத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள். சூனியம் என்றால் மெஜிக் எனில், மெஜிக் பெரும் பாவமா? அந்தப் பெரும்பாவத்தைத்தான் இலட்சக் கணக்கானவர்களைச் சேர்த்து வைத்து நீங்கள் செய்கின்றீர்;களா?

நபி (ச) அவர்கள் தவிர்ந்து விலகிக் கொள்ளுமாறு சொன்ன சூனியத்தை - மெஜிக்கை - நீங்கள் மாநாட்டில் செய்து நபி வழியை மீறுகின்றீhகளா? இவ்வாறெல்லாம் கேள்வி எழுப்பும்போது ஸிஹ்ரு- சூனியத்திற்கு மெஜிக் என புதிய மாற்று விளக்கம் கொடுப்பது ஏற்க முடியாதது என்பது தெளிவாகப் புலனாகும்.
இந்த வசனம் மிகத் தெளிவாக சூனியம் இருப்பதையும் அல்லாஹ் நாடினால் அதற்குத் தாக்கம் உண்டு என்பதையும் வெளிப்படையாகவே கூறுகின்றது. இதில் குர்ஆனையும் ஏற்றுக் கொள்பவாகளுக்கு இரண்டாம் கருத்துக்கு எள்ளளவும் இடமில்லை.
மனோ இச்சையையும் பகுத்தறிவையும் வழிப்பட்ட முஃதஸிலாக்கள் போன்றவர்களே சூனியத்தை மறுத்திருக்கின்றனர். இது தொடர்பாக இன்னும் பல விளக்கங்களை நாம் பெற வேண்டியுள்ளது.

தொடர்...

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் - 2

அன்புள்ள வாசகர்களுக்கு,
இக்கட்டுரையை நிதானமாக நடுநிலையோடு வாசியுங்கள். சத்தியத்தை விட தனிநபரை நேசிக்கும் வழிகேட்டிலிருந்து விடுபட்டு வாசியுங்கள். கட்டுரைத் தொடர் முடியும் வரை முடிவு எடுக்காது உண்மையைத் தேடும் உணர்வுடன் வாசியுங்கள். சூனியம் இருக்கின்றது என்று நாம் கூறுவதை சூனியம் சம்பந்தமாக நடைபெறும் 'ஷிர்க்'குகளையோ மூட நம்பிக்கைகளையோ நாம் ஆதரிக்கிறோம் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளாதீர்கள். இங்கு சூனியம் என்ற அம்சத்தை விட ஹதீஸ் மறுக்கப்படுவது என்ற அம்சமே பிரதானமானது என்பதைக் கவனத்திற் கொள்ளுங்கள். தர்க்கவியல் வாதங்களை விட பகுத்தறிவு கேள்விகளை விட ஹதீஸ் உயர்வானது என்ற இஸ்லாத்தின் அடிப்படையில் நின்று வாசியுங்கள்.
ஆ-ர்
சென்ற இதழில் தமிழ் உலகில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்கும் சிந்தனை பாமர மக்கள் மத்தியிலும் பரவலாகச் செல்வாக்குப் பெற்று வருவது குறித்தும், அதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்த சகோதரர் P.j அவர்களின் ஆற்றல்கள், வாத-வலிமை குறித்தும் பார்த்தோம். அத்துடன் இந்தச் சிந்தனை இவரிடம் அண்மையில் ஏற்பட்ட கொள்கைத் தடுமாற்றம் என்பது குறித்தும் ஆரம்பத்தில் இவர் இக்கருத்துக்கு மாற்றமாக எழுதி வந்ததையும் குறிப்பிட்டோம். அத்துடன்
(2:102) வசனம் சூனியம் இருப்பதை உறுதி செய்கின்றது என்பது குறித்தும் சூனியத்திற்கு அயபiஉ எனப் பொருள் கொள்ள முடியாது என்பது குறித்தும் தெளிவாக நோக்கினோம். இந்த இதழில் அதன் தொடராக சூனியம் இருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் சிலவற்றைப் பார்த்து விட்டு நபி() அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட ஹதீஸை மறுப்பதற்காக வைக்கப்படும் வாதங்களின் போலித்தன்மையை விரிவாக விளங்க முயற்சிப்போம்.
சூனியம் பற்றி விரிவாகப் பேசும்
2:102 வசனத்திற்கு அர்த்தம் செய்யும் போது Pj அவர்கள் மொழிபெயர்ப்பில் மிகப் பெரிய தவறிழைத்துள்ளார் என்பதை அறிந்த பின்னர்தான் இது குறித்து எழுதுவதும், பேசுவதும் மார்க்கக் கடமை என்ற உணர்வைப் பெற்றோம்.
ஷஅல்ஜன்னத் மாத இதழில் Pj அவர்கள் தொடராக குர்ஆன் விளக்கவுரை எழுதி வந்தார்கள். குறிப்பாக குதர்க்கவாதிகளும், குழப்பவாதிகளும், இஸ்லாத்தின் எதிரிகளும் தவறாக விளக்கம் கொள்ளும் பல்வேறுபட்ட வசனங்களுக்குத் தெளிவான விளக்கங்களை வழங்கி வந்தார். அதில்
2:102 வசனமும் ஒன்றாகும். பில்லி-சூனியம் என்ற பெயரில் இக்கட்டுரை இடம்பெற்றது. அதன் பின் அது தனி நூலாகவும் வெளிவந்தது. இதன் பின்னர் 1995 இலும்,
1997 இலும் இக்கட்டுரைகள் ஷதிருக்குர்ஆன் விளக்கம் என்ற பெயரில் தனி நூலாக வெளிவந்தது. அந்த நூலில்
"ஸிஹ்ர்" எனும் சூனியக்கலை பற்றி மூன்று விதமான அபிப்பிராயங்கள் முஸ்லிம் அறிஞரிடையே நிலவுகின்றன.
1-"ஸிஹ்ர்" என்று ஒன்று கிடையாது. அதனால் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது.
2- "ஸிஹ்ர்" என்ற கலை மூலம் எது வேண்டுமானாலும் செய்யமுடியும். எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்த முடியும்.
3- "ஸிஹ்ர்" எனும் ஒரு கலை உண்டுளூ அதன் மூலம் நினைத்ததையெல்லாம் செய்ய முடியாவிட்டாலும் சில பாதிப்புக்களை ஏற்படுத்த முடியும்.

இப்படி மூன்று விதமான அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. அவற்றில் முதலிரண்டு அபிப்பிராயங்களும் தவறானவை. மூன்றாவது அபிப்பிராயம் சரியானது என்பதை இவ்வசனம் விளக்குகின்றது.
கணவன்-மனைவியரிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவ்விருவரிடமிருந்தும் மக்கள் கற்றுக்கொண்டார்கள். "ஸிஹ்ர்" எனும் கலை மூலம் எதுவுமே செய்ய முடியாது என்றிருந்தால், ஷகணவன்-மனைவியரிடையே பிளவை ஏற்படுத்தும் என்று இறைவன் கூறியிருக்க மாட்டான் என்று பில்லி-சூனியம் பற்றி இஸ்லாத்தின் சரியான கண்ணோட்டத்தை விபரித்துச் செல்கிறார்.
(பார்க்க: திருக்குர்ஆன் விளக்கம்
1997,
பக்:
86-87)
இந்த சரியான நிலையில் அவர் இருக்கும் போது, அவர் எழுதிய "அல்ஜன்னத்" மாத இதழ் கட்டுரையிலும், "பில்லி-சூனியம்" என்ற தனி நூலிலும், "திருக்குர்ஆன் விளக்கவுரை" என்ற நூலிலும்
2:102 வசனத்திற்குச் செய்த மொழிபெயர்ப்பு, அவரது பிற்பட்ட தற்போதைய மொழிபெயர்ப்புக்கு முரண்படுகின்றது.
'அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் (இதன் மூலம்) இழைக்க முடியாது.' (திருக்குர்ஆன் விளக்கம் பக்:
71)
இதன் மூலம், அதாவது சூனியத்தின் மூலம் சூனியக்காரர்கள் அல்லாஹ்வின் அனுமதியின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ய முடியாது என்கிறான். சூனியத்தின் மூலம் அல்லாஹ்வின் நாட்டம் இன்றி தீங்கிழைக்க முடியாது எனும் போது, அல்லாஹ் நாடினால் சூனியத்தின் மூலம் பாதிப்பு ஏற்படும் என்பதை இந்த வசனம் தெளிவாகக் கூறுகின்றது. எனினும், சூனியம் குறித்த சரியான நிலைப்பாட்டில் இருக்கும் போது வசனத்தை முழுமையாக மொழியாக்கம் செய்த Pj அவர்கள், தமது அல்குர்ஆன் மொழிபெயர்ப்பில், ஷபிஹி (அதன் மூலம், அதாவது சூனியத்தின் மூலம்) என்ற வார்த்தையையே மொழியாக்கம் செய்யாது விட்டு விட்டார்.
ﭿ ﮀ ﮁ ﮂ ﮃ ﮄ ﮅ ﮆ ﮇﮈ
'அல்லாஹ்வின் விருப்பமின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்யமுடியாது'.
(2:102) - Pj தர்ஜுமா

இது தெரியாமல் நடந்தது என்று கூறலாமா? (அப்படி நடந்திருந்தால் அல்லாஹ் மன்னிக்கட்டும்) ஆரம்பத்தில் பல தடவை இந்த இடத்தைச் சரியாக மொழியாக்கம் செய்தவர் கருத்து மாறிய பின் ஒரு பதத்தையே தவற விடுகின்றார் என்றால்(?) வேண்டுமென்று விட்டிருக்கவே அதிக வாய்ப்புள்ளது.
தனது கருத்துக்கு மாற்றமாக இருக்கின்றது என்பதற்காக ஒரு சொல்லை விட்டு மொழிபெயர்க்கும் அளவுக்குப் பகுத்தறிவுவாதம் எல்லை தாண்டி விட்டதா? என்று சிந்தித்த போதுதான் மாற்றுக் கருத்தை மக்களிடம் வைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தோம்.
இது தெரியாமல் நடந்த மொழி பெயர்ப்புத் தவறு என்றால், இத்தனை பதிப்புக்களிலும் எப்படித் திருத்தப்படாமல் விடப்பட்டது? எதையும் நுணுக்கமாக ஆய்வு செய்யும் Pj அவர்களின் ஆய்வுக் கண்ணுக்கு எப்படி அது தென்படாமல் போனது!? தர்ஜுமா குறித்த விமர்சனங்கள் எழுவதால் Pj தர்ஜுமாவை நுணுக்கமாக மீண்டும் மீண்டும் பார்த்திருக்க வேண்டும்!! அவருக்கோ, அவரது குழு ஆலிம்களுக்கோ இது எப்படித் தென்படாமல் போனது?
இமாம்களினதும், வழிகெட்ட பல பிரிவினர்களினதும் நூற்களை நுணுக்கமாக ஆராய்ந்து அவற்றில் உள்ள தவறுகளை அக்குவேறு-ஆணிவேறாக விபரிக்கும் Pj அவர்கள், தனது தர்ஜுமாவின் தவறு குறித்து கண்டுகொள்ளாதிருப்பது நியாயமா? தர்ஜுமாவில் ஏற்பட்ட தவறுகள் சிலவற்றை Pj திருத்தியுமுள்ளார்.
உதாரணமாக,
38:31 என்ற வசனத்தின் மொழிபெயர்ப்பில் ஆரம்பத்தில் بالعشي "பில் அஷிய்யி" (மாலையில்) என்ற சொல் இடம்பெற்றிருக்கவில்லை. பின்னர் வந்த பதிப்பில் அந்தத் தவறு திருத்தப்பட்டுள்ளது. முந்திய பிரதிகளை எடுத்தவர்கள் குர்ஆன் மொழிபெயர்ப்பில் ஒரு சொல் விடுபட்ட நிலையில்தான் குர்ஆனைப் புரிந்துகொள்வார்கள். இந்தத் தவறு திருத்தப்பட்டது ஊன்றிக் கவனிப்பவர்களைத் தவிர வேறு எவருக்கும் தெரியவராது. அடுத்தவர்களின் நூற்களில் காணப்படும் குறைகளை விளக்க நூற்கள், மாநாடுகள், பொதுக் கூட்டங்கள், தொடர் கட்டுரைகள் எனப் பல ஏற்பாடுகளைச் செய்யும் இவருக்கு இந்த வசனத்தில் விடப்பட்ட தவறு தற்செயலானது அல்ல என்றே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

மூஸாவும், சூனியக்காரர்களும்:
மூஸா() அவர்களுக்கும், சூனியக்காரர் களுக்குமிடையில் பிர்அவ்ன் போட்டி வைக்கின்றான். அந்தப் போட்டி நிகழ்ச்சி சூனியம் என்று ஒரு கலை இருக்கின்றது அதன் மூலம் சில பாதிப்புக்களை அல்லாஹ் நாடினால் ஏற்படுத்த முடியும் என்பதை மிகத் தெளிவாகவே எடுத்துக் காட்டுகின்றது.
அந்த சூனியக்காரர்கள் போட்டிக்கு வந்த போது அவர்களது சூனியத்தின் காரணமாக அவர்கள் போட்ட கயிறுகளும், தடிகளும் ஓடும் பாம்புகள் போன்று போலித் தோற்றமளித்ததாக அல்லாஹ் கூறுகின்றான்.
''நீங்கள் போடுங்கள்' என அவர் கூறினார். அவர்கள் போட்ட போது, மக்களின் கண்களை மயக்கி, அவர்களை அச்சமுறச் செய்தனர். இன்னும், பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.'
(7:116)

அடைப்புக்குறிப் பயன்பாட்டுப் பிழை:
சூனியக்காரர்கள் வித்தைகளைப் போடவில்லை. அவர்கள் கயிறுகளையும், தடிகளையும்தான் போட்டார்கள் என்பது தெளிவாகவே குர்ஆனில் கூறப்படுகின்றது.
'அ(தற்க)வர், 'இல்லை, நீங்கள் போடுங்கள்' என்றார். அப்போது அவர்களது கயிறுகளும், அவர்களது தடிகளும் அவர்களுடைய சூனியத்தின் காரணமாக ஊர்ந்து வருவதைப் போல அவருக்குத் தோற்றமளித்தன.'
(20:66)
''நீங்கள் போடக்கூடியதைப் போடுங்கள்'' என்று மூஸா அவர்களிடம் கூறினார்.
'உடனே அவர்கள் தமது கயிறுகளையும் தமது தடிகளையும் போட்டனர். 'பிர்அவ் னின் கண்ணியத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நாமே வெற்றியாளர்கள்' என்றும் கூறினர்.'
(26:43-44)
எனவே, "அவர்கள் போட்ட போது" என்பதற்கு அடைப்புக்குறி போடவேண்டும் என்றால், "அவர்களது கயிறுகளையும், தடிகளையும் போட்ட போது" என்றே அடைப்புக்குறி போடவேண்டும். அதற்கு மாற்றமாகத் தனது கருத்தின் பக்கம் மக்கள் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் (வித்தைகள்) என P.j. தனது தர்ஜுமாவில் அடைப்புக்குறி போட்டிருப்பது மற்றுமொரு தவறு என்று கூறலாம்.
''நீங்களே போடுங்கள்'' என்று மூஸா கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது, மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள்.
(7:116) - Pj தர்ஜுமா
அல்குர்ஆன் தெளிவாகவே கயிறுகளையும் தடிகளையும் என்று கூறும்போது வித்தைகளைப் போட்டதாக வித்தியாசமான அடைப்புக்குறி எதற்கு?

சூனியம் மெஜிக் அல்ல:
அ(தற்க)வர், ''இல்லை, நீங்கள் போடுங்கள்'' என்றார். அப்போது அவர்களது கயிறுகளும், அவர்களது தடிகளும் அவர்களுடைய சூனியத்தின் காரணமாக ஊர்ந்து வருவதைப் போல அவருக்குத் தோற்றமளித்தன. அப்போது மூஸா தனக்குள் அச்சத்தை உணர்ந்தார்.'
(20:66-67)
சூனியக்காரர்கள் கயிறுகளையும், தடிகளையும்தான் போட்டார்கள்ளூ அவர்கள் ஆயபiஉ செய்யவில்லை. ஆயபiஉ என்பது வெறும் தந்திரமாகும். ஆயபiஉ செய்வதென்றால் கயிற்றையும் வைத்திருக்க வேண்டும்ளூ பாம்பையும் வைத்திருக்க வேண்டும். கயிற்றைக் காட்டி விட்டுப் பாம்பைப் போடவேண்டும். கயிற்றைப் பாம்பாக்கியதாக மக்களை நம்பவைக்க வேண்டும். இவ்வாறுதான் ஆயபiஉ செய்வோர் ஒன்றும் இல்லாத(?) பெட்டிக்குள்ளிருந்து முயல், புறா போன்றவற்றை எடுக்கின்றனர்.
ஆனால் இவர்கள் கயிற்றையும், தடியையும் போட்டனர். அது வெறும் கயிறும், தடியும்தான். எனினும் அவர்களின் சூனியத்தின் காரணமாக மூஸா நபிக்கும், அந்த ஒட்டுமொத்த மக்களுக்கும் ஓடும் பாம்பு போல் போலித் தோற்றத்தை ஏற்படுத்தியது. இது அவர்களின் சூனியத்தின் மூலம் நிகழ்ந்ததாக குர்ஆன் குறிப்பிடுகின்றது.
இந்த நிகழ்ச்சி சூனியத்திற்கு ஒரு தாக்கம் உள்ளது என்பதை மிகத் தெளிவாகவே கூறுகின்றது! குர்ஆனை நம்பும் யாரும் சூனியத்தை இல்லை என்று கூறமுடியாது.
அல்லாஹ் நாடினால் சூனியத்தின் மூலம் இல்லாததை இருப்பது போன்ற போலி தோற்றத்தை ஏற்படுத்தலாம்.
கணவன்-மனைவிக்கிடையே பிளவை உண்டுபண்ணலாம்.
அல்லாஹ் நாடினால் அதன் மூலம் சூனியக்காரர்கள் பிறருக்குச் சில தீங்குகளை ஏற்படுத்தலாம் எனக் குர்ஆன் மிகத் தெளிவாகவே கூறுகின்றது.
குர்ஆனின் இந்த நிலைப்பாடு தனது பகுத்தறிவுக்குச் சரியாகப் படவில்லை அல்லது முறையாகப் புலப்படவில்லை என்பதற்காக சூனியமே இல்லை என்று மறுப்பது குப்ரை ஏற்படுத்தும் என்பதைச் சகோதரர்கள் கவனத்திற்கொண்டு இந்த வழிகேட்டிலிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளனர். இதுவரை நாம் குறிப்பிட்டவை சூனியம் என்று ஒன்று உண்டுளூ அதன்; மூலம் நினைத்ததையெல்லாம் செய்ய முடியாவிட்டால் கூட கணவன்-மனைவிக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தலாம். மனதில் மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முடியும். அல்லாஹ் நாடினால் சில தீங்குகளை ஏற்படுத்த முடியும் எனக் குர்ஆன் கூறுகின்றது. இப்படி இருக்க நபி() அவர்களுக்கு சூனியம் செய்யப் பட்டதாகக் கூறும் ஹதீஸ் எப்படிக் குர்ஆனுக்கு முரண்பட்டதாக இருக்கமுடியும்?
குர்ஆனுக்கு முரண்படுகின்றது என்று போலிக் காரணம் கூறி, பகுத்தறிவுக்கு முரண்படும் காரணத்தால் மறுக்கப்படும் சூனியம் பற்றிய ஹதீஸ் குறித்து செய்யப்படும் வாதங்களுக்கான விரிவான பதில்களைத் தொடர்ந்து நோக்குவோம்.
-இன்ஷா அல்லாஹ்-

பகிரங்க சவாலுக்கு
பகிரங்க பதில்

தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரில் தக்லீத் வளர்க்கப் புதிதாக உருவான ஒரு குழு உண்மை உதயத்தின் 'மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள்' என்ற கட்டுரை தொடர்பாக பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இவர்களது அழைப்புக்கு எமது பதில் இதுதான்.
ﮱ ﯓ ﯔ ﯕ ﯖ ﯗ ﯘ ﯙ ﯚ ﯛ ﯜ ﯝ ﯞ
'அர்ரஹ்மானின் அடியார்கள் பூமியில் பணிவுடன் நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் தர்க்கித்தால், 'ஸலாம்' எனக் கூறுவார்கள்.'
(25:63)
ﭵ ﭶ ﭷ ﭸ ﭹ ﭺ ﭻ ﭼ
'(நபியே!) நீர் மன்னிப்பைக் கடைப்பிடித்து, நன்மையை ஏவி, அறிவீனர்களைப் புறக்கணித்து விடுவீராக!'
(7:199)
இந்த ஆயத்துக்களின் அடிப்படையில் நாம் இவர்களுக்கு ஸலாம் கூறி இவர்களைப் புறக்கணிக்கின்றோம்.

இதுவே இவர்களுக்கு எமது பதில். எனினும், இத்துண்டுப் பிரசுரத்தைப் பார்வையிட்ட ஏனைய சகோதரர்களுக்காக சில குறிப்புகள்:
'உண்மை உதயம் எனும் பெயரில் இருளை உதயமாக்கும்' என்று எழுதியுள்ளனர். உண்மை உதயம் இந்நாட்டில் நீண்ட காலமாக குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையில் வெளிவரும் ஓர் இதழாகும். Pj க்கு மாற்றமாக ஒரு கருத்து எழுதினால் இருளை உதயமாக்கும் என விமர்ச்சிக்கின்றனரே! இதன் அர்த்தம் என்ன? இது வரை நாம் எழுதிய குர்ஆன்-ஹதீஸ் அனைத்தும் இருளாகி விட்டனவா?
இது வரை இருளை உதயமாக்கினால் ஏன் அப்போது இந்தப் பகிரங்க சவால் வெளிவரவில்லை? இவ்வாறு சிந்திக்கும் போது Pj க்கு மாற்றமாக யார் பேசினாலும் அவரின் அனைத்துக் கருத்துக்களும் பிழையானவைளூ Pது சொல்லும் அனைத்துக் கருத்துக்களும் உண்மையானவை என்ற வெறி உணர்வு இவர்களிடம் மேலோங்கி இருப்பதை அறியலாம்.
அல்லது நாம் இது வரை எழுதிய அனைத்தும் பிழையானவை என்பது அவர்களது கருத்தாயின் மார்க்கத்துக்கு முரணாக எழுதினாலும் பரவாயில்லைளூ பொறுத்துக்கொள்வோம். Pj க்கு முரணாக எழுதினால் விட மாட்டோம் என்ற Pj பித்து தான் அவர்களை அப்பொழுது இப்படி சவால் விட வைத்துள்ளதோ?
அடுத்து, 'நபிகள் நாயகம்() அவர்களுக்கு சூனியம் செய்யப்படவில்லைளூ எவராலும் செய்யவும் முடியாது. இதுவே தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆணித்தரமான நிலைப்பாடாகும்' என்று எழுதியுள்ளனர்.
நாமும் தவ்ஹீத் ஜமாஅத்துத்தான்ளூ அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத், IAT, ஸபாப், IIRO போன்ற அனைவரும் தவ்ஹீத்வாதிகள்தாம்ளூ இன்றோ, நேற்றோ சிலர் இணைந்து ஒட்டுமொத்த தவ்ஹீத்வாதிகளும் நாம்தாம் என்ற தோரணையில் எழுதுகின்றார்கள் என்றால் இந்த நாட்டின் தவ்ஹீத் பிரச்சார வரலாற்றையே திருட முனையும் இவர்கள் எப்படி நியாயமானவர்களாக இருப்பார்கள்?
Pj யின் ஒரு கருத்துக்கு முரண்பட்டதால் பொய்களை உதயமாக்கும் என நடுநிலையில்லாது நாகரிகமில்லாது, நியாய உணர்வில்லாது செயல்படும் இத்தகையவர்களைப் புறக்கணிப்பதே வழியாகும்.
தவ்ஹீதின் பெயரில் தக்லீதையும், தனிநபர் வழிபாட்டையும் திணிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தக் குழு குறித்து விழிப்புடன் செயல்படுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

அன்புடன், ஆசிரியர்.
(உண்மை உதயம் இஸ்லாமிய மாத இதழ் )

1 comment:

TAMIL MURABBI said...

அஸ்ஸலாமு அலைக்கும் ......
காதியானியை பற்றி தாங்கள் அறிந்ததுதான் என்ன?