வாழ்க்கையின் வசந்தங்களில்
வல்லோன் கொடுத்த வைகரைத் தென்றல் - அவள் வார்த்தைகள்!
மங்கா விளக்காய் என் உள்ளத்தில்
தினம்தினம் ஒளி பாய்ச்சும் - அவள் உபதேசங்கள்!
பாசத்தின் பிறப்பிடத்தை
நேசத்தின் ஊற்றை - நான் அவளிடம்தான் கண்டேன்!
எனக்காய் உழைத்து
ஓடாய் தேய்ந்து போனவள் - என் தாய்!
அவள் வசந்தங்களைப் பிழிந்து
என் துயரங்களைத் துடைத்துவிட்ட தியாகியவள்!
தன் குழந்தை பசியார
தன் பசி மறக்கும் அவளுக்கும் உண்டோ நிகர்!!
தூக்கத்தை இழந்து துடியாத் துடித்து
இரத்தத்தைப் பிழிந்து பாலாய் கொடுத்தவள்!
என் உடல் - அவளின் தியாகம்!
என் பேச்சு - அவளின் மூச்சு!
Saturday, March 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment