தற்காலம் இவ்வுலகில் உள்ள மீன்களும், முந்தைய காலத்தில் வாழ்ந்த மீன்களும் ஒரே அமைப்பில்தான் இருக்கின்றன என்பதை இந்தப் படங்களிலிருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
தண்ணீரில் வாழும் மீன்கள் விரைவாகவும், சுறுசுறுப்பாகவும் நீந்துவதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். மீன்கள் நீந்துவதற்காக அவைகள் தங்களது வாலை பக்கவாட்டில் அசைப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. இத்தனை எளிதாக மீன்கள் நீந்துவதற்கு படைப்பாளன் அல்லாஹ், மீன்களுக்கு வழங்கியிருக்கும் விரைவாக அசையக்கூடிய முதுகெலும்பிற்காகவும், அவைகளில் உடலில் அவைகள் பெற்றிருக்கும் மற்றுமுள்ள அமைப்புகளுக்காகவும் அவைகள் வல்லோன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
மீன்கள் தண்ணீரில் நீந்தும்போது அதிகமான சக்தியை இழக்கிறது. இவ்வாறு மீன்கள் அதிகமான சக்தியை இழப்பது, நாள் முழுவதும் தண்ணீரில் நீந்துவதால் அல்ல. அவைகள் தண்ணீரில் ஒரே இடத்தில் நிற்காமல் இருக்க வேண்டுமெனில் மிக வேகமாக நீந்தியே ஆக வேண்டும். அத்தோடு மீன்களை உணவாக உட்கொள்ளும் மற்ற நீர்வாழ் உயிரினங்களிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், மீன்கள் மிக வேகமாக நீந்துவது அவசியமாகிறது.
மேலும், அதிகமான நேரங்களில் மீன்கள் எதிர் நீரோட்டத்தில் நீந்துகின்றன. தண்ணீரில் வேகமாக நீந்துவது எத்தனை கடினமானது, அதே வேளையில் தெருவில் நடந்து செல்வது எத்தனை எளிதானது என்று எண்ணிப் பாருங்கள். நிலத்தில் உயிர் வாழ்வதையும், தண்ணீரில் உயிர்வாழ்வதையும் ஒப்பிட்டு பார்த்தால் புரியும் தண்ணீரில் வாழ்வது எத்தனை கடினமானது என்று.
இவ்வாறு மீன்கள் தண்ணீரில் நீந்துவதற்கு உரிய சக்தியை கொடுப்பது, மீன்கள் தங்கள் முதுகெலும்பிலும், தசையிலும் கொண்டிருக்கும் பிரத்யேக அமைப்பாகும். மீனின் முதுகெலும்பில் துடுப்புகளும் தசைகளும் இணைக்கப்பட்டிருப்பதோடு, மீனின் உடலை நேராக வைத்திருக்க பயன்படுவதும் முதுகெலும்பாகும். முதுகெலும்பு இல்லையெனில், மீன்களால் தண்ணீரில் நீந்திச் செல்ல முடியாது. மேலும் மீன்கள் தண்ணீரின் முன்னும், பின்னும் மாத்திரம் நீந்துவதில்லை. மீன்கள் தண்ணீரில் அடிப்பகுதிக்கும், மேற்பரப்பிற்கும் நீந்த வேண்டும். இவ்வாறு மீன்கள் தண்ணீரின் அடிப்பகுதிக்கும், மேற்பகுதிக்கும் நீந்துவதற்கு அவைகளுக்கு முதுகெலும்பின் பிரத்யேக அமைப்பு மாத்திரம் போதாது. இதற்காக அவைகளின் உடலில் வேறொரு அமைப்பும் அவசியமாகிறது. அந்த அமைப்பையும் வல்ல அல்லாஹ் மீன்களுக்கு வழங்கியிருக்கிறான்.
மீன்களின் உடலில் காற்றுப்பைகள் உள்ளன. இந்த காற்றுப்பைகளில் உள்ள காற்றை வெளியேற்றுவதால், மீன்கள் தண்ணீரின் அடிப்பகுதிக்கு செல்லவும், மேலும் காற்றுப்பையை நிரப்பிக் கொள்வதால் மீண்டும் மீன்கள் தண்ணீரின் மேற்பகுதிக்கு வரவும் வசதியாக இருக்கிறது.
மீன்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தண்ணீரிலேயே இருந்தாலும், தண்ணீரால் அவைகள் எப்படி பாதிப்படையாமல் இருக்கின்றன என்பதை நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா?. மனிதர்களாகிய நாம் சில மணி நேரங்கள் தண்ணீரில் இருந்தால் நமது தோல்கள் பாதிப்படைவதை காண்கிறோம். இன்னும் சற்று அதிகமான நேரம் நாம் தண்ணீரில் இருந்தால் நமது தோல்கள் மேலும் பாதிப்புக்குள்ளாவதை நாம் உணர்கிறோம். ஆனால் இந்த நிலை மீன்களுக்கு ஒருபோதும் ஏற்படுவதில்லை. ஏனெனில் மீன்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் கடினமான செதில்கள். இந்த செதில்கள் மீனின் தோல்களின் மேற்பகுதியில் அமைந்துள்ளன. மீன்களின் உடலினுள் தண்ணீர் கசிந்து விடாமல் தடுப்பது இந்த செதில்களின் வேலையாகும். மீன்களுக்கு செதில்கள் இல்லையெனில், மீன்களின் உடலும் தண்ணீரினால் பாதிக்கப்படும். மீன்களின் உடலினுள் தண்ணீர் கசிய ஆரம்பித்தால், மீன்கள் நீந்தமுடியாமல் நிலை தடுமாறும். இதன் காரணமாக மீன்கள் மரணமடையவும் நேரிடலாம். இருப்பினும் மீன்கள் தண்ணீரின் எந்தச் சூழ்நிலையிலும் பாதிக்கப்படாமல், தங்களது வாழ்க்கையை தண்ணீரிலேயே தொடர்கின்றன.
நீரில் வாழும் அனைத்து மீனினங்களும் மேற்குறிப்பிட்ட வசதிகளை கொண்டிருக்கின்றன. நீண்ட காலங்களுக்கு முன்பு வாழ்ந்திருந்த மீனினங்களும் மேற்குறிப்பிட்ட அதே அமைப்பினை கொண்டிருந்தன. லட்சக்கணக்கான வருடங்களான மீன்கள் அதே வடிவமைப்பில்தான் இருக்கின்றன. இத்தனை வருடங்கள் கடந்த பின்னும் அதன் உடலமைப்பில் எந்த பரிணாம மாற்றமும் இல்லை. இதனை லட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்பு வாழ்ந்திருந்த மீன்களின் எஞ்சிய மிச்சங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். உலகம் தோன்றிய நாள் முதலே மீனும் இவ்வுலகில் இருக்கிறது என்பதற்கு இது ஆதாரமாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் மற்ற உயிரினங்களை படைத்தது போல் அல்லாஹ் மீனினங்களையும் இவ்வுலகத்தைப் படைக்கும்போதே படைத்திருக்கிறான். எல்லாம் அறிந்த வல்ல அல்லாஹ்வே அவைகளுக்குத் தேவையான எல்லா அமைப்புகளையும் வழங்கினான். அவனே அனைத்தும் அறிந்தவன். ஏனைய படைப்புகளைப் போன்று மீன்களும் வல்ல அல்லாஹ் இட்ட கட்டளைப்படி - அவனது படைப்பாற்றலை உலகிற்கு எடுத்துக் காட்டுகின்றன.
அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் குறிப்பிடுகிறான்:
'நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும், இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும், மனிதர்களுக்குப் பயன்தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்திலிருந்து அல்லாஹ், தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும், அதன்மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும், வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன. (அத்தியாயம் 2 ஸூரத்துல் பகரா -
164வது வசனம்).
நன்றி: http://www.satyamargam.com/
No comments:
Post a Comment