Monday, March 2, 2009

நபிமொழி

மூன்றாம் நபரை விடுத்து இருவர் மட்டும் ரகசியம் பேசுவது கூடாது!
அல்லாஹ் கூறுகிறான்: "இரகசியம் பேசுதல் நம்பிக்கை கொண்டோரைக் கவலை கொள்ளச் செய்வதற்காக ஷைத்தானிடமிருந்து ஏற்படுவது". (அல்குர்ஆன்).
இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''மூன்று பேர்கள் இருந்தால், மூன்றாம் நபரை விடுத்து இரண்டு பேர்கள் இரகசியம் பேச வேண்டாம்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்).
இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''நீங்கள் மூவராக இருந்தால் ஒருவரை மட்டும் விட்டு விட்டு, இருவர் ரகசியம் பேச வேண்டாம். ஆனால் மக்களோடு சேர்ந்திருந்தாலே தவிர. இது அவரை கவலைப்படச் செய்யும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்), (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1599)
அல்லாஹ் கூறுகிறான்: "அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன்)
இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''பூனையை அது இறந்து போகும் வரை சிறை வைத்த பெண்ணொருத்தி வேதனை செய்யப்படுகிறாள். இது விஷயமாக நரகிலும் வீழ்கிறாள். அதை அவள் அடைத்து வைத்திருந்த போது அவள் அதற்கு உணவளிக்கவும் இல்லை. அதை நீர் அருந்தச் செய்யவும் இல்லை. மேலும் பூமியின் புழு பூச்சிகளை அது உண்பதற்கும் அவள் அதை வெளியே விடவும் இல்லை என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''கால்நடைகளுக்கு எதுவும் கொடுக்காமல் கட்டிப் போடுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''வசதி உள்ளவர் (கடனை திருப்பி அளிப்பதில்) தாமதம் செய்வது அநீதமாகும். உங்களில் ஒருவர் கடனை நிறைவேற்ற ஒப்படைக்கப்பட்டால், அவர் (அதை) நிறைவேற்றட்டும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''தன் அன்பளிப்பைத் திரும்ப வாங்குபவன், தன் வாந்தியை தானே உண்ணும் நாயைப் போன்றவன்.'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1612 )

No comments: