Saturday, February 7, 2009

நபிமொழி

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''மறுமை நாளில் தீர்ப்பு கூறப்படும் மனிதர்களில் முதல் நபர், இறைவழியில் உயிரை தியாகம் செய்தவராவார். அவர் கொண்டு வரப்படுவார். தனது அருட்கொடையை அவரிடம் அல்லாஹ் எடுத்துக் கூறுவான். அவரும் அறிந்து கொள்வார். ''இது விஷயமாக நீ (உலகில்) என்ன செய்தாய்?'' என அல்லாஹ் கேட்பான். ''உனக்காகவே போரிட்டேன். இறுதியில் கொல்லப்பட்டேன்'' என்று கூறுவார். ''நீ பொய் கூறுகிறாய். ''பெரும் வீரர்'' என்று கூறப்படவே நீ போரிட்டாய். அவ்வாறே (மக்களால்) கூறப்பட்டது'' என்று அல்லாஹ் கூறுவான்.பின்பு முகம் குப்புற அவரை நரகில் போட கட்டளையிடப்படும். அடுத்தவர், கல்வியைக் கற்று, பிறருக்கும் கற்றுக் கொடுத்து, குர்ஆனை ஓதியவருமாவார். அவர் கொண்டு வரப்படுவார். அவரிடம் தன் அருட்கொடையை அல்லாஹ் எடுத்துக் கூறுவான். அவரும் அறிந்து கொள்வார். ''இது விஷயமாக (உலகில்) எப்படி நடந்து கொண்டாய்?'' என்று கேட்பான். ''நான் கல்வியைக் கற்றேன். பிறருக்கும் கற்றுக் கொடுத்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்'' என்று கூறுவார். ''நீ பொய் கூறுகிறாய். ''அறிஞர்'' என்று கூறப்பட வேண்டும் என்பதற்காக நீ கற்றுக் கொடுத்தாய். ''நன்கு ஓதுபவர்'' என்று கூறப்பட வேண்டும் என்பதற்காக குர்ஆனை நீ ஓதினாய். அவ்வாறே (மக்களால்) கூறப்பட்டது'' என்று அல்லாஹ் கூறுவான். பின்பு, ''அவரை முகம் குப்புற நரகில் போடுங்கள்'' என கட்டளையிடப்படும். அடுத்து, அல்லாஹ்விளனால் அனைத்து செல்வங்கள் பெற்ற வசதியானவரை கொண்டு வரப்படும். தன் அருட்கொடைகளை அவருக்கு அல்லாஹ் அறிவிப்பான். அதை அவரும் அறிந்து கொள்வார். ''இதிலே (உலகில்) எப்படி நடந்து கொண்டாய்?'' என அல்லாஹ் கேட்பான். ''எந்த வழியில் செய்யப்படுவதை நீ விரும்புவாயோ அந்த வழியில் உனக்காக நான் செலவு செய்தேன்!'' என்று கூறுவார். ''நீ பொய் கூறுகிறாhய் ''கொடையாளி'' என்று கூறப்பட வேண்டும் என்பதற்hக நீ இதைச் செய்தாய். இவ்வாறே (மக்களால்) கூறப்பட்டது'' என்று அல்லாஹ் கூறுவான். பின்பு நரகில் முகம் குப்புற அவரைப் போடுங்கள் என கட்டளையிடப்படும் என்று நபி (ஸல்) கூறினார்கள் முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)

No comments: