Wednesday, February 11, 2009

நபிமொழி

இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள்: '' கன்னங்களில் அடித்துக் கொள்பவரும், சட்டைகளைக் கிழித்துக் கொள்பவரும், அறியாமைக் கால வார்த்தைகளால் பிரார்த்தனை செய்பவரும் நம்மைச் சேர்ந்தவர் அல்லர்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''மக்களிடம் இரண்டு காரியங்கள் உள்ளன. அந்த இரண்டுமே அவர்களிடம் இறைமறுப்பை ஏற்படுத்தக் கூடியதாகும்.
1) பாரம்பரியத்தை குறை கூறிக் குத்திக் காட்டுவது
2) இறந்தவருக்காக ஒப்பாரி வைப்பது என நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபூதல்ஹா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''எந்த வீட்டில் நாயும், உருவப்படமும் உள்ளதோ, அந்த வீட்டில் வானவர் நுழைய மாட்டார்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
அபுல் ஹய்யாஜ் (என்ற) ஹய்யான் இப்னு ஹுஸைன் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''என்னிடம் அலீ (ரலி) அவர்கள், ''அறிந்து கொள்க! நபி(ஸல்) அவர்கள் என்னை அனுப்பிய பணிக்கே உம்மையும் அனுப்புகிறேன். எந்த உருவச்சிலையையும் அதை அழிக்காமல் விட்டு விடக் கூடாது. அத்துடன் உயரமாகக் கட்டப்பட்ட கப்ரையும் அதை சமப்படுத்தாமல் விடக்கூடாது என்பதே அப்பணியாகும்'' என்று கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)

No comments: